Thursday, November 29, 2012

ரெண்டு பெண்கள் முத்தம் கொடுப்பதை ஆண்கள் ரசிப்பதேன்?

இந்தக்காலத்தில் காமம் பற்றி பலவிதமான ஆராச்சி எல்லாம் பண்ணிண்டு இருக்காங்க. அதாவது மிகவும் சீரியஸான ஆராய்ச்சி. இண்டர்னெட் போர்னாக்ராஃபி சாதாரணமாக கிடைக்கும் இந்தக்காலத்தில். காமத்தில் ஆண்கள் எப்படி தூண்டிவிடப்படுகிறார்கள்? அதேபோல் பெண்கள் எப்படி தூண்டிவிடப்படுகிறார்கள்?னு ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பிரவேசிக்கும் தளங்களை கண்டு, ஆராய்ச்சி பண்ணி ஒரு சில விசயங்களை இங்கே சொல்லியிருக்காங்க. Time magazine ல படிச்ச ஒரு ஆர்ட்டிக்கிள்.

பொதுவாக காமம்னு எடுத்துக்கிட்டா..

* பெண்கள் எப்போதுமே ஸ்லோ அண்ட் ஸ்டெடி தான். இது பெண்களின் பலம்னு கூட சொல்லலாம்! அதேபோல் உணர்ச்சி தூண்டுதல்களுக்கும் பெண்களுக்கு "ரொமாண்டிக் கதைகள்" அல்லது "மாம்மி போர்ன்" போன்ற பலமணி நேரங்கள் படிக்கும் "எராடிக்" புத்தகங்கள்தான் அவர்கள் உணர்ச்சிகளை கொஞ்சம் கொஞ்சமாகத் தூண்டிவிடுகிறதாம். e.g. Fifty shades of Grey. விஷுவல் நீலப் படங்கள் பொதுவாக பெண்கள் உணர்ச்சியை அவ்வளவு எளிதாகத் தூண்டி விடுவதில்லை! ஒரு சில விதிவிலக்கு நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.

* காமத்தில் ஆண்கள் எப்போவுமே வேகம், அவசரம்தான். காமத்தை ஆரம்பிக்கும் முன்னாலேயே முடிச்சிருவான் நம்மாளுகள்ல பலர். காமத்தில் இது ஆண்களின் மிகப் பெரிய பலவீனம்னு சொல்லலாம். பெண்கள் ஆண்களை பலவாறு "கிண்டல் அடிப்பது" இந்த "அதி வேக"த்தால் பெண்கள் திருப்தியடையாத  விசயத்தில்தான். நேரடியாக இல்லாவிட்டாலும், தங்களுக்குள் பேசும்போது இதுபோல் ஆண்களை "டீஸ்" பண்ணுவது இயற்கை. பொதுவாக ஒரு 1-2 நிமிடங்கள் ஓடும் நீல வீடியோ க்ளிப்கள்தான் ஆண்கள் உணர்ச்சிகளை எளிதாக தூண்டி விடுகிறதாம். ரெண்டு மணி நேரம் கதை படிக்க எல்லாம் நம்மாளுக்கு பொறுமை இருக்கிறதில்லை!

ஆண்கள், பொதுவாக உடலுறவின்போது பெண்கள் இன்பம் அனுபவிப்பதை, அவர்கள் காட்டும் எக்ஸ்ப்ரெஷனை ரசிப்பது எல்லாருக்கும் தெரியும். நம்ம மனோதத்துவ டாக்டர் ஷாலினி கூட இதைப் பத்தி கோபமாக விமர்சிச்சு இருப்பார். 

 டாக்டர் ஷாலினி சொல்வது..
***ஆனால் ஆண்கள்? இரண்டு கண்களையும் அகல விரித்து வைத்து அவள் முகத்தை கூர்ந்து பார்த்துக்கொண்டே தான் இருப்பான். அது சரி, பெண் கண்ணை மூடுகிறாள், அப்போது தான் அவளால் ஸ்பரிசத்தை இன்னும் துல்லியமாய் உணர்ந்து மகிழமுடியும். இந்த ஆண் ஏன் இப்படி கண் மூடாமல், வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்? மற்ற மிருகங்கள் இப்படி செய்வதில்லையே, ***

 ***இந்த மனித ஆண் மட்டும் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறான்? ஆண்கள் அதிகம் பார்க்கும் பல பார்னோகிராபிக் (நீல) படங்களை அலசி ஓர் ஆராய்ச்சி நடை பெற்றது. இம்மாதிரி படங்களில் பெண் உடலின் எந்த பாகம் மிக அதிக நேரத்திற்கு சித்தரிக்க படுகிறது என்று ஆராய்ந்ததில், மற்ற எல்லா கிளர்ச்சி பாகங்களையும் விட பெண்ணின் முகமே மிக அதிகமாய் திரையில் காட்ட படுகிறது என்று கண்டு பிடிக்க பட்டது! போயும் போயும் பெண்ணின் முகத்தை இவ்வளவு உன்னிப்பாய் பார்க்கிறானே இந்த மனித ஆண்! அதுவும் கலவியின் போது துணைவி முகபாவத்தில் சந்தோஷத்தை தெரிவிக்கவில்லை என்றால், ஆண்களுக்கு கண் மண் தெரியாத கோபமும் ஏமாற்றமும் வருவதுண்டு, “இப்படி ஜடமாட்டம் இருக்கியே!” என்று அலுத்துக்கொள்கிறார்கள்.****


டாக்டர் ஷாலினி எழுதிய "கிளர்ச்சி ஸ்விட்ச்" படிக்காதவங்க இந்த ஒரிஜினல் தொடுப்பையும் பாருங்க!

இதை எல்லாம் ஏற்கனவே விமர்சிச்சுப் பதிவு போட்டாச்சு. டாக்டர் ஷாலினிக்கு ஆண்கள் இப்படி நடந்துகொள்வது எரிச்சல் கொடுக்கிறது என்பது ஒருபுறமிருக்கட்டும், அதுதான் உண்மை, ஆம்பளைனா இப்படித்தான்!.

சரி இந்த டைம் பத்திரிக்கை ஆர்ட்டிக்கிளில்,

* ஆணும் பெண்ணும் எப்படி வேறுனு ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் பார்ப்போம்!
How else does male and female sexuality differ?
Another fundamental difference between men and women — perhaps the most important defining difference — is that in the male brain, physical and psychological arousal are united. If a man is physically turned on, he’s mentally turned on too.
 
With women, physical arousal and mental arousal are separate. [Research finds that women get physically aroused sometimes even when they find the situation disgusting.] The female brain is designed to be cautious, most likely because historically the woman who slept with the first guy she met might have a harder time raising children; he might not stick around. Women are designed to be cautious and gather more information.
ஆண்களுக்கு உடல்ரீதியான மற்றும் மனரீதியான "arousal" ரெண்டும் ஒன்றோட ஒன்று இணைந்தவை. அதாவது ஒரு ஆண் உடல்ரீதியாக உணர்ச்சிதூண்டிய நிலைக்கு ஆளானால், அவன் மனரீதியாக அதே நிலைக்கு ஆளாகி இருப்பான்.
 பெண்களுக்கு உடல்ரீதியான மற்றும் மனரீதியான "arousal" ரெண்டும் வேறு வேறானவை! ஒர் பெண் உடல்ரீதியாக "arousal" ஆகி மனரீதியாக அதை விரும்பாமல் இருக்கலாம் என்கிறது ஆராய்ச்சி. இதனால்தான் பெண்களை ஆண்கள் என்றுமே சரியாகப் புரிந்துகொள்வதில்லை! பெண்களுக்கு "மனதளவில்" பிடிக்காததை ஆண்கள் செய்துவிட்டு, அவர்கள் "ஏற்றுக்கொண்டதாகவும்"  "விரும்புகிறார்கள்" என்றும் பல "மரமண்டைகள்" தவறுதலாக நினைத்துக் கொள்வதுண்டு.

That’s why fan fiction is all about exploring the emotions and character of the hero. In romance novels, the heroine learns about the secret inner life of the hero. That’s especially true in slash: that’s doubling up. There are two men — two masculine, strong alpha males who reveal their tender side. The emotional process of revealing true character is what’s so appealing to women.  

* பெண்கள் அவர்களுக்குள் உறவு வைத்துக்கொள்வதை அதிகமாக ஆண்கள் ரசிக்கிறார்கள் என்று கண்டுபிடிச்சு இருக்காங்க.

ரெண்டு பெண்கள் உதட்டில் முத்தம் கொடுத்துக்கொள்வதை ஆண்கள் ரசிக்கிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை.

ஆண்கள் ஏன் இரண்டு பெண்கள் முத்தம் கொடுப்பதை விரும்பிப் பார்க்கிறார்கள்? எப்படி அவர்களால் இதை ரசிக்க முடியுது? என்கிற ஒரு கேள்வியை விளக்கி இருக்காங்க.

LA9776-001
ஹைஸ்கூல் ப்ராம் டாண்ஸில் இரண்டு மாணவிகள் (இதெல்லாம் பள்ளி மாணவிகளிடம் அமெரிக்காவில் இப்போ சாதாரணம்.)
Why would straight men want to watch lesbians, and why would women write stories about gay men?

Straight guys are turn on by lesbians because it’s a doubling of visual cues. And one psychological cue for arousal in men is female sexual pleasure. Seeing lesbians kissing doubles that too.For women in slash fiction, it’s the psychological cues of a man’s character, stature, passion and emotional communication — slash doubles those.
ஒரு பெண்ணுக்குப் பதிலா ரெண்டு பெண்கள் இன்புருவதை பார்ப்பது ஆண்களுக்கு இரண்டு மடங்கு ப்ளஷர் கொடுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்கப்பா.

19 comments:

  1. \\இந்த ஆண் ஏன் இப்படி கண் மூடாமல், வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்? மற்ற மிருகங்கள் இப்படி செய்வதில்லையே,\\

    வருண், இப்பேற்பட்ட ஆராய்ச்சி பண்ணி ஒரு கட்டுரைய போட்டிருக்கீங்க, ஆனா டெக்னிகல் மேட்டரில் இப்படி கோட்டை விட்டுட்டீங்களே? மனுஷ இனம் மட்டும் தான் 'அந்த' நேரத்துல ஒருத்தர் முகத்தை இன்னொருத்தர் பார்க்க முடியும், மற்றதெல்லாம் 'அந்த' சமயத்தில் ஒரே திசையை பார்த்த வண்ணம் இருப்பதால், ஒன்றின் முகத்தை இன்னொன்னு பார்க்கவே முடியாது, அதுங்க பார்க்க நினைச்சாலும் அந்த பொசிஷனால் பார்க்க முடியாது. எப்பவும் கம்பியூட்டர் மாதிரியே யோசிக்காதீங்க ராசா, விட்டுட்டு பிராக்டிகல் aspects ஐயும் பாருங்க கண்ணுங்களா!!

    ReplyDelete
  2. jeyadev: அது (மேற்கோள்) அந்தம்மா டாக்டர் ஷாலினி சொன்னதுங்க, தல! அந்தம்மாவுக்கு ஒரு இ-மெயில் அனுப்பி உங்க பின்னூட்டத்தை வாசிக்கச் சொல்றேன். :)))

    ReplyDelete
  3. தப்பான தகவல் இருந்தா அடைப்புக்குள் உங்க சரியான விளக்கத்தையும் குடுத்தாதானே நல்லாயிருக்கும், இப்ப பாருங்க கன்பியூஷன் ஆவுது.

    ReplyDelete
  4. இல்லங்க. நான் பிறர் இதை "quote" செய்யும்போது, அந்த டெக்ஸ்ட் மார்ஜின் உள்ள போயிடும். நீங்க கவனிச்சுப் பார்த்தால், பிறர் சொன்ன கருத்துடைய மார்ஜின் கொஞ்சம் உள்ளே இருக்கும்.

    அவர் பதிவுக்கு நான் எழுதிய எதிர் பதிவு நீங்க படிக்கலை போல. அவர் கருத்தோட நம்ம கர்த்து சுத்தமா ஒத்துப் போக்லை. காரணம்: அவர் அறிவுப்பூர்வமான பெண்! நம்மலாம் அசிங்கமான ஆம்பளைங்க! :)))

    எனிவே, உங்க குழப்பத்துக்கு நானும் காரணம்தான். :)

    ReplyDelete
  5. நல்லதொரு பதிவு சகோ.. ஷாலியின் அந்த பதிலை ஏற்கனவே வாசித்துள்ளேன் ... ! மற்ற விடயங்கள் ஆச்சர்யமூட்டுகின்றன..

    ReplyDelete
  6. வருண் சார். உங்க வாசகர் மருத்துவருக்கே க்ளாஸ் எடுக்கிறாரு.. பெரிய ஆள் தான் போல அவரு .. ! :P

    ReplyDelete
  7. அறிவியல் என்றால் எதை வேண்டுமானாலும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு என்று ஊர் முழுக்க மைக் போட்டு பேசிவிட்டு, இப்போது அதெப்படி எங்களையே நீ கேள்வி கேட்கலாம் என்று கேட்பது போலித் தனம், கயமை. "நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்வீர்கள், அதை நாங்கள் கேள்வி கேட்காமல் ஏற்க வேண்டுமா?" என்று தினமும் முன்னூறு கேள்விகளை இறை நம்பிக்கையாளர்களிடம் கேட்கும் அறிவாளி, தற்போது கேள்வியே கேட்காமல் கைகட்டி வாய் பொத்தி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வது விந்தையிலும் விந்தை. மருத்துவர் என்றால் என்ன வானத்தில் இருந்து குதித்து விட்டாரா என்ன? அல்லது கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவரா? கேட்ட கேள்வியில் தவறு என்றால் சுட்டிக் காட்டலாமேயோழிய, இந்த கப்சா எல்லாம் விடக் கூடாது.

    ReplyDelete
  8. நண்பர்கள் இக்பால் செல்வனுக்கும், ஜெயவேல் தாசுக்கும் ஏழாம் பொருத்தம்தான் போங்க! :)

    ReplyDelete
  9. வணக்கம் வருண்,
    சிறந்த ஆய்வுக் கட்டுரை. எனினும் நம்ம தாசு சொல்வது சரியில்லை. என்ன சொல்ராரு???
    //மனுஷ இனம் மட்டும் தான் 'அந்த' நேரத்துல ஒருத்தர் முகத்தை இன்னொருத்தர் பார்க்க முடியும், மற்றதெல்லாம் 'அந்த' சமயத்தில் ஒரே திசையை பார்த்த வண்ணம் இருப்பதால், ஒன்றின் முகத்தை இன்னொன்னு பார்க்கவே முடியாது, அதுங்க பார்க்க நினைச்சாலும் அந்த பொசிஷனால் பார்க்க முடியாது. எப்பவும் கம்பியூட்டர் மாதிரியே யோசிக்காதீங்க ராசா, விட்டுட்டு பிராக்டிகல் aspects ஐயும் பாருங்க கண்ணுங்களா!!//
    தவறு.
    மனிதனின் நெருங்கிய பரிணாம் சகோக்கள் கொரில்லா,பானபோ ஆகியவையும் மிசனரி பொசிசனில் உறவு கொள்ளும்.
    http://en.wikipedia.org/wiki/Missionary_position

    In addition to humans, the missionary position is also used by certain other species including bonobos,[73] gorillas,[74] and armadillos.[75]

    விக்கி பாருங்கள்!!!

    hi hi Youtube there are some videos!! If Das wantt to verify he can have a look !!!

    பதிவின் தலைப்பில் 18+ போட வேண்டுகிறேன்.

    நன்றி!!!

    ReplyDelete
  10. Charcoal Wagon,

    \\ missionary position\\ இது எதுவானாலும் இருக்கட்டும் அது பண்ணும்போது அதுங்க ஒன்றையொன்று முகத்தைப் பார்த்துக் கொள்ளுமா, இல்லையா? இதற்க்கு பதில் என்ன என்று மட்டும் தெளிவு படுத்தவும்.

    ReplyDelete
  11. வாங்க சார்வாகன் மச்சான்!

    தாசு உங்க விளக்கத்தைப் பார்த்துப் படிச்சு தெரிஞ்சிக்குவாரு. நன்றி.

    18+ போடுற அளவுக்கு ஒண்ணும் செக்ஸ் பத்தி ரொம்ப பேசலைனு விட்டுவிட்டேன். இது கொஞ்சம் educational ஆக் இருப்பதுபோல எனக்குத் தோணுச்சு.

    இல்ல, நீ 18+ போட்டே ஆகனும்னா போட்டுடுறேன். :)))

    ReplyDelete
  12. **** Jayadev Das said...

    Charcoal Wagon,

    \\ missionary position\\ இது எதுவானாலும் இருக்கட்டும் அது பண்ணும்போது அதுங்க ஒன்றையொன்று முகத்தைப் பார்த்துக் கொள்ளுமா, இல்லையா? இதற்க்கு பதில் என்ன என்று மட்டும் தெளிவு படுத்தவும்.****

    ஜெயதேவ்: டாக்டர் ஷாலினியிம் முயற்சி, ஆண்களை காமப் பித்துப் பிடித்த ஜந்துகளாகக் காட்டுவதே. அதைத்தான் கிளர்ச்சி ஸ்விட்ச் ல அவர் செய்தார். அவர் கருத்தில் ஏகப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும், ஆண் பெண் போல் கண்னை மூடாமல் பெண் இன்புருவதை ரசிக்கிறான் என்பதென்னவோ ஓரளவுக்கு உண்மைதான். அதுக்காகத்தான் அவர் கருத்தை இங்கே கொடுத்தேன்.

    மற்றபடி, ஷாலினியின் கருத்தை நீங்க விமர்சிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

    ஆனால், இ செ மற்றும் சார் விவாதிக்கிறாங்க.. :)))

    ReplyDelete
  13. \\ டாக்டர் ஷாலினியிம் முயற்சி, ஆண்களை காமப் பித்துப் பிடித்த ஜந்துகளாகக் காட்டுவதே. அதைத்தான் கிளர்ச்சி ஸ்விட்ச் ல அவர் செய்தார். அவர் கருத்தில் ஏகப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. \\ அய்யய்யோ என்னது, ஒரு மருத்துவருக்கே பாடமெடுக்க ஆரம்பிச்சிட்டியா என்று உலகத்திலேயே அறிவியலுக்கு என்றே நேர்ந்து விட்ட ஒரே ஒருத்தர் ஓடி வருவாரே?

    \\இருந்தாலும், ஆண் பெண் போல் கண்னை மூடாமல் பெண் இன்புருவதை ரசிக்கிறான் என்பதென்னவோ ஓரளவுக்கு உண்மைதான். அதுக்காகத்தான் அவர் கருத்தை இங்கே கொடுத்தேன்.\\ கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியா இருந்தா சரி என்பதற்க்கா அவனவனும் அழகா இருக்கும் பெண்களை துரத்தி துரத்தி லைன் போட்டு லவ் பண்றான். கண்ணை மூடிக்கிறதுக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமே?

    சிந்திக்க மாட்டீர்களா? [Charcoal Wagon Trademark Dialogue இது!!]

    ReplyDelete
  14. //அதுங்க பார்க்க நினைச்சாலும் அந்த பொசிஷனால் பார்க்க முடியாது. எப்பவும் கம்பியூட்டர் மாதிரியே யோசிக்காதீங்க ராசா, விட்டுட்டு பிராக்டிகல் aspects ஐயும் பாருங்க கண்ணுங்களா!!//

    ராசா ... இங்க மூஞ்ச பாக்குறதில்ல முக்கியம். கண்ண மூடிகிட்டு அனுபவிக்க வேண்டியதுதான ? ஏன் கண்ணா தொறந்துகிட்டு இருக்குற ... அப்படிங்கறது தான் பாயிண்ட்.

    ReplyDelete
  15. \\ இங்க மூஞ்ச பாக்குறதில்ல முக்கியம். கண்ண மூடிகிட்டு அனுபவிக்க வேண்டியதுதான ? ஏன் கண்ணா தொறந்துகிட்டு இருக்குற ... அப்படிங்கறது தான் பாயிண்ட்.\\ மிருகங்கள் ரோட்டிலேயே எல்லோரும் பார்க்கும் இடத்தில் பண்ணுது, மிருங்கங்கள் சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கும். நீ ஏன்டா ரூம் கதவை சாத்திகிட்டு பண்றே என்று கேட்பது போல உள்ளது. வெட்ட வெளியில் எல்லோரும் வெடிக்கை பார்க்க பண்ணுடான்னு சொல்வீங்க போலிருக்கு. குழந்தை பிறப்பதற்காக எத்தனை பேரு மேட்டர் பண்றான்? 99.99% பண்றதே அஜால் குஜால். அதை அவனவன் டேஸ்டுக்கு பண்றான், பார்த்தாலும் அவனுடைய ஃ பிகரைத் தானே பார்க்கிறான்? அதில போயி என்னைய்யா குத்தம் குறை கண்டுபுடிச்சிகிட்டு இருக்கீங்க? முகத்தை அந்த நேரத்தில் பார்க்கும் மிருங்கங்கள் படங்களும் இருக்கு, வேணுமின்னா கூகுலார்கிட்ட கேட்டு பார்த்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  16. சகோ தாசு,
    சரியான ட்யூப் லைட்டையா நீர்.உமக்கு மிசனரி பொசிசன் என்றால் என்னவென்று தெரியாதா?.அதுக்குத்தான் விக்கி இணைப்பு கொடுத்தேனே. படம் எல்லாம் போட்டுக் காட்டி இருக்கான். முகத்தில் முகம் பார்கலாம் என்பது அதைப் பார்த்தால் புரியும்.
    // முகத்தை அந்த நேரத்தில் பார்க்கும் மிருங்கங்கள் படங்களும் இருக்கு, வேணுமின்னா கூகுலார்கிட்ட கேட்டு பார்த்துக் கொள்ளவும்.//
    சரி ஒருவழியா சில விலங்குகளும் முகத்தில் முகம் பார்க்கும் என [படம் பார்த்து]அறிந்தமைக்கு நன்றி.
    **********
    //குழந்தை பிறப்பதற்காக எத்தனை பேரு மேட்டர் பண்றான்? 99.99% பண்றதே அஜால் குஜால். அதை அவனவன் டேஸ்டுக்கு பண்றான், பார்த்தாலும் அவனுடைய ஃ பிகரைத் தானே பார்க்கிறான்? அதில போயி என்னைய்யா குத்தம் குறை கண்டுபுடிச்சிகிட்டு இருக்கீங்க? //
    வருண் இது [உறவின் போது ஆண் பெண் முகம் நோக்கல்]பொதுவான இயல்பு எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.இது எவ்வள்வு பேருக்கு பொருந்தும் என்பதே கேள்வி?.நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா??
    வேறு எதையோ சொல்கிறீர்கள்? ஆண் அழகிய பெண்ணைத் தேடுவதும்,பெண் தன்னை, தன் குழந்தையை பாதுகாக்கும் ஆணை தேடுவதும் பரிணாமம் சொல்லும் விள்க்கம். இதன் பெயர் செக்சுவல் செலக்சன்(பாலியல் தேர்வு)
    http://en.wikipedia.org/wiki/Sexual_selection
    ஆழ்வார்க்கடியான, இஸ்கானின் குலக் கொழுந்து செயதேவு தாசு இப்படி சொல்லலாமா?? இஸ்க்கான் செக்ஸ் பற்றி சொல்வது என்ன?
    http://www.radhanath-swami.net/lust-a-deadly-enemy/lust-deadly-enemy
    Radhanath Swami once said that lust is when we see the opposite sex not as a person but as a thing. Most people untrained in spiritual principles never learn what love is, but spend the rest of their lives under the dominion of lust.
    ஆகவே காமத்தை யோகம் கொண்டு அடக்க தாசு [ராதாநாத் சாமி போல்]முயற்சி செய்து வெற்றி கண்ட கதை சீக்கிரம் பதிவு எழுதுவார் என தாசு இரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    தாசும் இப்படி ஒரு சாமான்ய நாத்திகன் போல் காமம் குறித்து குஜால் பின்னூட்டம் இடுவது சரியா???
    இஸ்கான், கவுடிய வைணவத்தில் எதிர்கால்மே தாசின் கையில் இருப்பதால் கவனம்!!!.

    [இஸ்கான் ஆதரவாளர்கள்] சிந்திக்க மாட்டார்களா!!!

    நன்றி!!!

    ReplyDelete
  17. \\சரி ஒருவழியா சில விலங்குகளும் முகத்தில் முகம் பார்க்கும் என [படம் பார்த்து]அறிந்தமைக்கு நன்றி.\\ உம்ம மூஞ்சி. நீர் கொடுத்த கருமாந்திரத்தை நான் பார்க்கவில்லை. கூகுளார் கமிச்சதில சிலது 'அந்த' சமயத்தில திரும்பி முகத்தை பாக்குது, அது எதுக்கு பாக்குதோ யாருக்குத் தெரியும்?

    \\இது எவ்வள்வு பேருக்கு பொருந்தும் என்பதே கேள்வி?.நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா??\\ எதுக்கு கண்ட கடத்தை போட்டு குழப்பிக்கணும், அந்தாம்மா .... அய்யய்யோ.... தப்பு.......தப்பு.......... இந்த பதிவில காட்டிய மேற்கோளில் ஆண் மட்டும் தான் 'அந்த' நேரத்தில் பெண்ணின் முகத்தை பார்க்கிறான் என்பது குற்றச் சாட்டு, இல்லை மிருகங்களும் பார்க்கும், முடிஞ்சது மேட்டர். அது இல்லைன்னா அடுத்ததைப் பேசலாம்.

    \\ஆண் அழகிய பெண்ணைத் தேடுவதும்,பெண் தன்னை, தன் குழந்தையை பாதுகாக்கும் ஆணை தேடுவதும் பரிணாமம் சொல்லும் விள்க்கம். இதன் பெயர் செக்சுவல் செலக்சன்(பாலியல் தேர்வு).\\ ஏன் அழகாயில்லாத பிகரை ஒருத்தர் இணைந்தால் குழந்தை உண்டாகாதா? எதுக்கு அழகா இருப்பதைப் பார்த்து ஈர்க்கப்பட வேண்டும்? இதுதான் அழகு என்பதை வரையறுத்தது யாரு?

    \\ஆழ்வார்க்கடியான, இஸ்கானின் குலக் கொழுந்து செயதேவு தாசு இப்படி சொல்லலாமா?? இஸ்க்கான் செக்ஸ் பற்றி சொல்வது என்ன?\\ இதெல்லாம் Charcoal Wagon களுக்காகச் சொல்லப் பட்டது. குஸ்கான் பிஸ்கான் பத்தி ஐ டோன்ட் நோ.


    \\சிந்திக்க மாட்டார்களா!!!\\ அய்யய்யோ வந்துட்டாரைய்யா ..............வந்துட்டாரு........... காதில இரத்தம் வருது...........


    ReplyDelete
  18. சகோ தாசு,
    //உம்ம மூஞ்சி. நீர் கொடுத்த கருமாந்திரத்தை நான் பார்க்கவில்லை. கூகுளார் கமிச்சதில சிலது 'அந்த' சமயத்தில திரும்பி முகத்தை பாக்குது, அது எதுக்கு பாக்குதோ யாருக்குத் தெரியும்?//
    மாற்றுக் கருத்தாளர்கள் கொடுக்கும் சான்றுகளை பார்க்கவோ,கேட்கவோ மாட்டேன் என்பதை அழகாக உரைக்கிறீரே.இத்னால்தான் உம்மை நம்க்கு ரொம்ப பிடிக்கும்.ஆனாலும் எதையோ பார்த்து ஒத்துக் கொண்டால் சரிதான். நமக்கு காரியம்தான் பெரிசு.வீரியம் அல்ல.மிக்க நன்றிகள்.
    ****
    //எதுக்கு கண்ட கடத்தை போட்டு குழப்பிக்கணும், அந்தாம்மா .... அய்யய்யோ.... தப்பு.......தப்பு.......... இந்த பதிவில காட்டிய மேற்கோளில் ஆண் மட்டும் தான் 'அந்த' நேரத்தில் பெண்ணின் முகத்தை பார்க்கிறான் என்பது குற்றச் சாட்டு, இல்லை மிருகங்களும் பார்க்கும், முடிஞ்சது மேட்டர். அது இல்லைன்னா அடுத்ததைப் பேசலாம்.//
    ஆமாம் மனிதன் மட்டும் அல்ல, இன்னும் சில விலங்குகளும் உறவின் போது முகத்தில் முகம் பார்க்கும்.அடுத்தது என்ன? நீங்க சொன்னால் அதையும் பரிசோதிக்க்லாம்.
    ****
    //ஏன் அழகாயில்லாத பிகரை ஒருத்தர் இணைந்தால் குழந்தை உண்டாகாதா? எதுக்கு அழகா இருப்பதைப் பார்த்து ஈர்க்கப்பட வேண்டும்? இதுதான் அழகு என்பதை வரையறுத்தது யாரு?//
    பிறக்கும். ஆண்களின் விருப்ப்ம் என்ன என்பதே கேள்வி.நல்ல கேள்வி. அழகு என்பது ஆணுக்கு ஆண் வித்தியாசப்படும். எனினும் பெண்களின் மார்பு, இடுப்பின் அகலம் ஆண்களை அதிகம் ஈர்க்கும் என்பது அறிவியல் சார்ந்த கருத்து. உலக் அழகிகளில் இருந்து நடிகைகள் வரை இதை உணர முடியும்.
    http://en.wikipedia.org/wiki/Sexual_attraction
    Sexual attraction is attraction on the basis of sexual desire or the quality of arousing such interest.[1][2] Sexual attractiveness or sex appeal refers to an individual's ability to attract the sexual or erotic interest of another person, and is a factor in sexual selection or mate choice. The attraction can be to the physical or other qualities or traits of a person, or to such qualities in the context in which they appear.
    பட்டினத்தார் பாடுகிறார்.
    " கறந்த இடத்தை காணுதே கயமை நெஞ்சம்
    பிறந்த இடத்தை பார்க்குதே பேதை நெஞ்சம்"
    *****
    //இதெல்லாம் Charcoal Wagon களுக்காகச் சொல்லப் பட்டது. குஸ்கான் பிஸ்கான் பத்தி ஐ டோன்ட் நோ.//
    இஸ்கானை கழட்டி விட்டீரா, ராதாநாத் சாமி சொன்னதைத்தானே சொன்னேன். சரி அதை விட்டு விடலாம். பிரம்ம்ச்சாரியாக ஒருவர் இருக்க முடியும் என்பது சாத்தியமா??
    நீங்கள் சிந்திக்க மறுப்பதால்தானே "சிந்த்க்க மாட்டீர்களா என வினவுகிறேன்.

    நன்றி

    ReplyDelete
  19. \\மாற்றுக் கருத்தாளர்கள் கொடுக்கும் சான்றுகளை பார்க்கவோ,கேட்கவோ மாட்டேன் என்பதை அழகாக உரைக்கிறீரே.இத்னால்தான் உம்மை நம்க்கு ரொம்ப பிடிக்கும்.ஆனாலும் எதையோ பார்த்து ஒத்துக் கொண்டால் சரிதான். நமக்கு காரியம்தான் பெரிசு.வீரியம் அல்ல.மிக்க நன்றிகள்.\\ பார்க்கக் கூடாதுன்னு எதுவும் இல்லை. அதான் கூகுலார்கிட்டாயே பதில் தெரிஞ்சு போச்சேன்னு விட்டுட்டேன்.

    \\ஆமாம் மனிதன் மட்டும் அல்ல, இன்னும் சில விலங்குகளும் உறவின் போது முகத்தில் முகம் பார்க்கும்.அடுத்தது என்ன? நீங்க சொன்னால் அதையும் பரிசோதிக்க்லாம்.\\ அவ்வளவுதான், அப்போ அந்த மேற்கோள் காட்டப் பட்ட அந்த தியரி புருடன்னு ஆயிடிச்சு. முதல் முறையா ஒரு conclusion ஐ அடைஞ்சிட்டோம், கொண்டாடுவோம். வேற ஒன்னும் வேணாம்.

    \\ஆண்களின் விருப்ப்ம் என்ன என்பதே கேள்வி.நல்ல கேள்வி. அழகு என்பது ஆணுக்கு ஆண் வித்தியாசப்படும். எனினும் பெண்களின் மார்பு, இடுப்பின் அகலம் ஆண்களை அதிகம் ஈர்க்கும் என்பது அறிவியல் சார்ந்த கருத்து. உலக் அழகிகளில் இருந்து நடிகைகள் வரை இதை உணர முடியும்.\\ அதெப்படி அறிவியல் சார்ந்தது ஆளாளுக்கு வித்தியாசப் படும்? பொதுவாகவே பெண்களைப் பார்த்தால் சிலரை அழகு என்றும் சிலரை கன்றாவியான பிகர் என்றும் சொல்கிறோம். எல்லோருக்கும் மார்பு, இடுப்பின் அகலம் இருக்கத்தான் செய்கிறது. சிலது மட்டும் ஈர்க்குது? எது ஈர்க்கும்னு யார் முடிவு பண்றது?

    \\இஸ்கானை கழட்டி விட்டீரா, ராதாநாத் சாமி சொன்னதைத்தானே சொன்னேன். சரி அதை விட்டு விடலாம். பிரம்ம்ச்சாரியாக ஒருவர் இருக்க முடியும் என்பது சாத்தியமா??\\ Charcoal Wagon, ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சிக்கணும், உங்களால முடியலை என்பதற்காக அது யாராலும் முடியாது எனபது சரியான சிந்தனை இல்லை. செக்ஸ் தூண்டுதல் இருக்கத்தான் செய்யும், அதே சமயத்தில் பல தருணங்களில், அதை நாம் பொருட்படுத்தாமல் ஒதுக்குவதும் உண்டு. உதாரணத்துக்கு வீட்டில் யாரோ விபத்தில் உயிருக்கு போராடிகிட்டு இருக்காங்கன்னு வச்சிக்கோங்க அப்போ இந்த ஆசை தலை தூக்குவதில்லை. இதே மாதிரி நாளைக்கு ஐ.எ.எஸ். இறுதித் தேர்வுன்னு வச்சிக்கோங்க, அதில கவனம் செளுத்துரவனுக்கு முதல் நாள் எதாச்சும் கில்மா கிடைக்குமான்னு தேடிகிட்டு இருக்க மாட்டான். தொழில் ரீதியாகவும் முக்கியமா எதாச்சும் வருதுன்னு வையுங்க சில சமயம் இதை புறக்கணிக்க முடியும். வாழ்க்கையில் எப்பப்பவேல்லாம் ஒரு பெரிய கோல் வருதோ அப்பவெல்லாம் இந்த கன்றாவி காணாம போயிடுது. அதே மாதிரி கடவுளை அடையனும்டா என்ற வைராக்கியம் மனதில் வச்சவனுக்கு இந்த கருமாந்திரம் தலை காட்டாது. சிலருக்கு சிறுவயதில் இருந்தே இந்த வைராக்கியம் இருக்கிறது, அவர்களால் அவ்வாறு இருக்க முடியும். செக்ஸ் பண்ணியத்ர்க்கப்புரம் தானே அதில ஒரு கருமாந்திரமும் இல்லைன்னு தெரிய வருது? அதை முன்னாடியே தெரிஞ்சுகிட்டவன் ஞானிதான், it is to be appreciated.


    \\நீங்கள் சிந்திக்க மறுப்பதால்தானே "சிந்த்க்க மாட்டீர்களா என வினவுகிறேன்.\\ ஹா...... ஹா....... ஹா........ தாராளமா சொல்லுங்க, வேண்டாம்னு சொல்லவில்லை. உங்களை கலாய்த்தேன், That's all!!

    ReplyDelete