Tuesday, January 25, 2011

டாக்டர் ஷாலினியின் கிளர்ச்சி ஸ்விட்ச் -விமர்சனங்கள்

டாக்டர் ஷாலினி எழுதும் தொடர் ஆணைமட்டும் ஏதோ கொடூரமான ஜந்து போலவே தொடர்ந்து சித்தரிக்கிறது ஏன் என்று புரியலை. ஆண்கள் எல்லாம் யோக்கியன் கெடையாதுதான். இந்தத் தொடரால இவர் என்ன சொல்ல வர்றார்னு எனக்கு சுத்தமாப் புரியலை? இது பெண்களுக்கு மட்டும் இவர் எழுதும் தொடரா? பெண்களை குழப்பு குழப்புனு குழப்பி நிம்மதியா வாழவிடமாட்டாரா இவர்? வரிக்கு வரி இதை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியவில்லை!
-----------------

***ஆனால் இயற்கையின் லாஜிக் இது தான்:

* ஒருவனுக்கு ஆண் குறி மிக நீளமாய் இருந்தும் விரைப்புறவே இல்லை என்றால்? அல்லது விரைப்பேற்பட்டும் அவனுக்கு பெண் ஆசையே இல்லை என்றால்?

* அல்லது ஆசை இருந்தும் சுயநலமாய் தன் சுகமே முக்கியம் என்று பெண்களை அவன் துஷ்பிரயோகம் செய்தால்?

* விந்தணுக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும் கருவுற முடியாத பாகத்தில் இவற்றை முதலீடு செய்யும் தன்மை அவனுக்கு இருந்தால்?

இப்படிப்பட்ட ஆண்களை தேர்ந்தெடுப்பது சமூகத்திற்கு உபயோகமில்லாத செயலாகி விடுமே!***

என்ன அது?? இதுபோல் ஆண்களால் சமூகத்திற்கு உபயோகம் இல்லையா? ஒரு பெண் ஒரு ஆண் துணையைத் தேர்ந்தெடுப்பது, சமூகத்திற்காகவா? இல்லைனா குழந்தை பெற்றுக்க மட்டுமா? ஒரு பெண் ஒரு ஆணை தேர்ந்தெடுப்பதில் சமூகம் என்ன எழவுக்கு வருது?? ஒருவர் தனக்கு துணை தேடுவது சமூகத்தை நல்வழியில் கொண்டு சொல்லவா?

--------------------------

***உதாரணத்திற்கு இவர்: அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவழியினர். அமெரிக்கராய் இருப்பதென்பதே ஏதோ ஓர் அரும் பெரும் சாதனை என்று நினைக்கும் அலட்டல் ஆசாமி. இவருக்கு திருமணமானது. முதலிரவன்றின் போது தலைவர் மனைவியை இழுத்து தன் எதிரில் மண்டி இட வைத்து, “வாயை திற” என்று அதட்ட, அவன் என்ன செய்ய முற்படுகிறான் என்று புரிந்து அதிர்ச்சியாகி மனைவி மறுத்து அழ, ஏகக்களேபரமாகி விட்டது.***

இங்கே இந்த இருவருக்கும் இடையில் செக்ஸ் சம்மந்தப்பட்ட மேட்டர்ல ஒரு "மிஸ்மேட்ச்" அவ்வளவுதான்.

ரெண்டு பேரும் விவாகரத்து செய்துகொண்டு தனக்கு உகந்த பார்ட்னரை பார்க்க வேண்டியதுதான்.

What if the wife is just like Monica Lewinsky? Then there is NO problem or not? நமக்கு நாலு சுவருக்குள் நடந்த விசயம் நமக்கு வந்தே இருக்காது!
------------------

***“இப்படி எல்லாம் செய்தா குழந்தை பிறக்காது” என்றாள் மனைவி.***

உண்மைதான்.

-------------------------------------

*** “அதற்கு ஏன் கவலை படுகிறாய்? நான் ரொம்ப பெரிய சர்ஜனாக்கும், ஒரே ஒரு ஆப்பரேஷன் செய்து, உன் வாயிலிருந்து கர்பபைக்கும் நேரடியாக ஒரு கனெக்‌ஷன் கொடுத்து விடுகிறேன்” என்று அவன் தன்னம்பிக்கையோடு சொல்ல, “அயோ இப்படி ஒரு மட்டமான ஆளையா கட்டிக்கொண்டோம்?” என்று நொந்து போனாலும் தாலி செண்டிமெண்ட் தடுக்க, அவனை திருத்தி நல்வழி படுத்த அவள் அரும்பாடு பட, ஊகூம் கடைசி வரை அவனால் நார்மலாய் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட முடியவே இல்லை. இந்த ஒரு ஆணை திருத்துவதிலேயே தன் ஒட்டு மொத்த வாழ்வை வீணடிக்க முடியாது என்று உணர்ந்து விவாகரத்து பெற்றூக்கொண்டு அவனிடமிருந்து தப்பினாள் மனைவி. ****

சிவப்பில் சொல்லியிருக்கது "கட்டுகதை"யா? இல்லைனா இந்த ஆளு (டாக்டர்) ஒரு வியாதியஸ்தனானு தெரியலை. இதை ஒரு லூசு டாக்டர் தன்னம்பிக்கையோடு சொன்னானாம்!!!. ஏங்க சும்மா சேர்த்துவிடுறீங்க?

நல்லவேளை விவாகரத்து செய்து அந்தப் பொண்ணு தப்பிச்சாள். நல்லாயிருக்கட்டும்.

-------------------------------

***இந்த பெண்ணாவது பரவாயில்லை, இன்னொரு பெண், முழுதாய் நான்கு ஆண்டுகள் இப்படி ஒரு ஆசாமியுடன் வாழ்ந்து, கடைசியில் பிள்ளை பிறக்கவில்லை என்று டாக்டரிடம் போனாள். டாக்டர் சொல்லி தான் அவளுக்கு தெரியும், அது வரை அவள் கணவன் அவளை செய்வித்தது நார்மல் செக்ஸே இல்லை என்று!***

நாலு வருடம்!!!?

அந்தப்பெண்ணின் அறியாமையைப் பத்தி ஒரு வரிகூட எழுதலை!

அந்தப் பெண் முட்டாளா இருந்தது யாரு தப்பு?

இது உண்மையா இல்லை இன்னொரு "கதையா" னு தெரிய்லை!

----------------------------------

***இப்படிப்படிப்பட்ட அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாதென்றால் பெண்கள் படு உஷாராக அல்லவா ஆண்களை பதம் பார்த்து தரம் பிரித்தாக வேண்டும். வெறும், நீளம், நிமிர்வு, விந்தணு எண்ணிக்கையை வைத்து ஏதோ ஒரு பர்வர்ட்டுக்கு பிள்ளைகளை பெற்று விட்டு, இதனால் சமூக அமைதிக்கே கேடு ஏற்பட்டு விட்டால்? ***

மறுபடியும் மறுபடியும் சமூகக்கேடு.

இதுபோல் செக்ஸ் ம்யூச்சுவலாக, கணவனும் மனைவியும் விரும்பி, வைத்துக்கொண்டால் இதில் என்ன பிரச்சினைனு எனக்குத் தெரியலை?

அப்படி ஒரு பாஸிபிலிட்டி இல்லையா?

பெண்களில் பலவகை இருக்காங்க. ஒரு சிலர் ஆணிடம் எதிர்பார்ப்பது வேறங்க! இதைப் பத்தியெல்லாம் பேச எனக்கு "மன நலமருத்துவர்" சான்றிதழ் இல்லை!

------------------------

***மோசமான ஆண் என்று தெரிந்த பிறகும் அவனுக்கு பிள்ளைகள் பெற்று தருவது தான் ஒரு பெண் செய்ய கூடியதிலியே மிகவும் பாவகரமான செயல் என்று எப்போதும் பெண்களை மட்டம் தட்டும், மனு ஸ்மிருத்தியே சொல்கிறதே. அது சரி, இவன் மனிதனா, மிருகமா, அல்லது ராஷ்சனா என்பதை ஒரு பெண் எப்படி தான் கண்டு பிடிப்பாளாம்?***

மிருகம் இதெல்லாம் செய்யாதுங்க. ஆறறிவு கொண்ட மனுஷந்தான் செய்வான். பாவம் மிருகத்தையெல்லாம் எதுக்கு இங்கே இழுக்குறீங்க?

--------------------------

***வெரி சிம்பிள். நாம் ஏற்கனவே இந்த தொடரில் தெரிந்துக்கொண்டது தான். இந்த உலகிலேயே முகம் பார்த்து காமுறூம் மிருகங்கள் இரண்டே இரண்டு தான், ஒன்று பொனோபோ, இன்னொன்று மானுடம். பொனோபோக்களை இப்போதைக்கு விட்டுவிட்டு, கலவிக்கொள்ளும் மனிதர்களை, குறிப்பாக அவர்களது முகங்களை மட்டும் கவனிப்போம். ***

பொனோபோவை ஏன் விட்டுவிட்டீங்க? உங்க தியரியை ஸ்ட்ரெங்தென் பண்ண முடியாமல்ப் போகுதா?

-----------------------
***கலவியின் போது மனித பெண், பெரும்பாலும் மதி மயங்கி கண்களை மூடிக்கொண்டே தான் இருப்பாள். எத்தனை சினிமாவில் பார்த்திருப்போம்! ஏன் நிஜ வாழ்விலும் நீங்கள் உங்கள் துணைவரோடு இருக்கும் தருணங்களை நினைத்து பாருங்கள்…. முத்தமிடும் போதுமே பெண்கள் கண்களை மூடிக்கொண்டு தான் இருப்பார்கள்.***

நல்லது. இதில் யாருக்கும் பிரச்சினை இல்லை!

-----------------------------

***ஆனால் ஆண்கள்? இரண்டு கண்களையும் அகல விரித்து வைத்து அவள் முகத்தை கூர்ந்து பார்த்துக்கொண்டே தான் இருப்பான்.***

உலகத்தில் உள்ள எல்லா ஆண்களுமா?

எல்லா ஆணும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் என்னனு தெரியலை.


--------------------------

***அது சரி, பெண் கண்ணை மூடுகிறாள், அப்போது தான் அவளால் ஸ்பரிசத்தை இன்னும் துல்லியமாய் உணர்ந்து மகிழமுடியும்.***

நல்லது.
------------

**இந்த ஆண் ஏன் இப்படி கண் மூடாமல், வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்? மற்ற மிருகங்கள் இப்படி செய்வதில்லையே, ***

மனிதன்போல செய்யும் பொனோபோவையும் கழட்டிவிட்டாச்சு.

சரி, இப்போ ஒரு கண் தெரியாத ஆண் உடலுறவு செய்றான். அப்போ என்ன செய்வான்?

---------------------

***இந்த மனித ஆண் மட்டும் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறான்? ஆண்கள் அதிகம் பார்க்கும் பல பார்னோகிராபிக் (நீல) படங்களை அலசி ஓர் ஆராய்ச்சி நடை பெற்றது. இம்மாதிரி படங்களில் பெண் உடலின் எந்த பாகம் மிக அதிக நேரத்திற்கு சித்தரிக்க படுகிறது என்று ஆராய்ந்ததில், மற்ற எல்லா கிளர்ச்சி பாகங்களையும் விட பெண்ணின் முகமே மிக அதிகமாய் திரையில் காட்ட படுகிறது என்று கண்டு பிடிக்க பட்டது! போயும் போயும் பெண்ணின் முகத்தை இவ்வளவு உன்னிப்பாய் பார்க்கிறானே இந்த மனித ஆண்! அதுவும் கலவியின் போது துணைவி முகபாவத்தில் சந்தோஷத்தை தெரிவிக்கவில்லை என்றால், ஆண்களுக்கு கண் மண் தெரியாத கோபமும் ஏமாற்றமும் வருவதுண்டு, “இப்படி ஜடமாட்டம் இருக்கியே!” என்று அலுத்துக்கொள்கிறார்கள்.****

பயங்கராமான அநியாயமான மிகைப்படுத்தல். ஒரு சாதாரண ஆணின் இயற்கையான செய்கையை "போர்னை" கொண்டுவந்து கதைவிடுறாங்க!!

போர்னோக்ராஃபி வருவதுக்கு முன்னால் உடலுறவு கொள்கிற ஆண்களும் கண்ணை மூடிக்கொள்ளுவாங்களா?

இதிலே என்ன பெரிய தப்பு? தன் பார்ட்னர் முகபாவங்களை ரசிப்பது என்ன அப்படி என்னங்க கொலைக்குற்றம் போல சொல்லப்படுது?

----------------------

***ஏன் தெரியுமா? காரணம், மனித ஆணின் மூளை மற்ற மிருகங்களின் மூளையை போல செயல் படுவதில்லை.***

பெண்ணின் மூளையும் அப்படித்தானே? இல்லையா?

*** பிற மிருகங்கள் பெண்ணின் முகத்தை பாராமல் அவள் சுகிக்கிறாளா இல்லையா என்பதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல், யந்திரகதியில் புணரும். ***

மிருகங்கள் முகம் பார்த்துப் புணருவதில்லை! You left out the one it does do like human beings! Now there is no way you can correlate with animals who does not have a chance to see "his" partner's face!

***ஆனால் மனித ஆணின் மூளையில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பாட்டிருந்தது. கலவியின் போது பெண் சுகப்படும் காட்சியை தன் கண்களால் கண்டாலே ஒழிய அவனால் தன்னிறைவு பெறமுடியாது. ***

இதிலென்ன பெரிய தப்பு? ஒரு பெண் உடலுறிவின் போது ஆர்கஸம் அடையவில்லைனா தன்னிறைவு பெருவதில்லை. அதை ஆண்கள் தப்புனு சொல்ல முடியுமா? சொன்னால் அவன் முட்டாள்!

-------------------

***இப்படி பெண் கிளர்ச்சியடையும் காட்சியை உற்று பார்ப்பதே ஆணுக்கு பெரிய சந்தோஷத்தை தருகிறது.***

நல்லது. இதில் தப்பு எதுவும் இருக்கதா தெரியலை.
-----------

***காரணம் பெண்ணின் கலவியல் தேர்வு விதி: நீ எவ்வளவு பெரிய கொம்பனா வேண்ணா இருந்துக்க, ஆனா எனக்கு சுகம் தர தெரியலன்னா, நீ சுத்த வேஸ்டுடா, என்பதாகவே இருந்தது.***

தப்பே இல்லை!

பெண்ணை (மனைவி/துணைவியை) மதிப்பவனுக்கு இது நல்லாவே புரியும்!

-----------------

***இப்படி அவள் ரசனைகளை மதித்து, அவளை மகிழ்விக்க தெரிந்தவனையே அவள் மீண்டும் மீண்டும் நாடி கூடுவதால், அவளை நாசுக்காக கையாள தெரிந்த ஆணின் மரபணுக்கள் மட்டுமே பரவுகின்றன. இது தான் சூட்சமம் என்று ஆனபின் ஆணீன் மரபணுக்கள் சும்மா இருக்குமா? பெண்ணை லாவகமாக கையாளும் விசையை ஆணின் மூளையில் புதிதாய் உருவாக்கின. பெண்ணை மகிழ்வித்தால் இந்த மூளை மையம் இன்ப ரசாயணங்களை சுரக்க ஆரம்பித்துவிடும், இதனால் ஆணுக்கு ஊக்கமும், கிளர்ச்சியும், தன் ஆண்மையின் மேல் கர்வமும் ஏற்படுகிறது. இவை அவனுக்கு பெரும் நிறைவை தர, ஒலிம்பிக்ஸில் முதலிடம் பிடித்தவனுக்கு ஏற்படும் வெற்றி களிப்பை இவன் ஒவ்வொரு முறை புணரும் போதும் பெறுகிறான். பெண் முகத்தில் சுகத்தின் சுவடி தெரிந்தால் மட்டும்.***

இத ஏன் ஏதோ பெரிய தப்பா சொல்றீங்கனு தெரியலை. ஒரு பெண் தான் உடலுறவு கொள்ளும்போது அழுகனும்னு எதிர்பார்த்தால் அது மிருகத்தனம். ஒரு பெண் சந்தோஷமாக தன்னை மறக்கனும்னு எதிர்பார்ப்பதில் எந்தத்தவறும் இல்லையே?

-----------------------

**அதனால் தான் பெரும்பாலான ஆண்கள் கலவி கொண்ட உடனே, பெண்ணிடம், “உனக்கு பிடிச்சதா? டிட் யூ என்ஜாய் இட்?” என்று கேட்கிறார்கள்.***


இன்னைக்கு நான் வச்ச குழம்பு எப்படி? னு ஒப்பீனியன் கேட்பதில்லையா? அது மாதிரித்தான். இதை ஏன் போட்டு பெருசு படுத்துறீங்க?

----------

***அது கூலிக்காக கூட இருந்த விலைமாதுவாக இருந்தாலும் சரி. அவள் என்ஜாய் செய்தால் இவனுக்கு என்ன, செய்யவிட்டால் இவனுக்கு என்ன? ***

விலைமாதிடம் சென்றதில்லை. அதனால் இது பற்றித் தெரியாது.

-----------------

**சிம்பிள்: அவள் என்ஜாய் செய்யாவிட்டால் இவன் மூளைக்கு போதை கிடைப்பதில்லை. மாறாக, “எவ்வளவு மெனக்கெட்டும் மரக்கட்டை மாதிரி கிடக்கிறாளே” என்கிற இயலாமை தரும் ஆத்திரத்தை தான் தூண்டும்.**

Yeah, then he can buy a sex toy. Why should he sleep with a woman with feelings??? LOL

--------------------

பின்குறிப்பு: டாக்டர் ஷாலினி சொல்லிட்டா சரிதான் என்று தலையை ஆட்டும் ஆண்கள் பலர் இருக்கலாம். ஆனால் ஒரு சிலர் அப்படியல்ல! பெண்களை தவறான பக்கத்திற்கு அழைத்துச்செல்லும் இவங்க கட்டுரையை ஆண்கள் நிச்சயம் விமர்சிக்கனும் என்கிற நம்பிக்கையில் இந்த விமர்சனம்! நன்றி

20 comments:

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

பாஸ்!
ரெம்ப உ.வ பட்டுட்டிங்க போல. அந்த மாராஜி எழுதறது அத்தனையும் அட்சர சத்தியம். ஆனால் நாலு புஸ்தவம் படிச்சுட்டு எழுதறாய்ங்களா அ ஆராய்ச்சியா தெரியலை.

ஆராய்ச்சியா இருந்தா மட்டும் ஷி ஈஸ் கிரேட் . உண்மை கொஞ்சம் கசப்பாதான் இருக்கும். விழுங்கி வைங்க.

இயற்கையோட அஜெண்டாவை செயல்படுத்தற கருவிகள் தான் ஆண் பெண். இயற்கையோட அஜெண்டா உயிர்கள் பெருகுதல்,பரவுதல் தேன்.

நம்ம பேட்டை பக்கம் கொஞ்சம் ஒதுங்கினா தேறிடுவிங்க..வாங்க நேரம் கிடைச்சா

குடுகுடுப்பை said...

முருகேசன்னன் கூப்பிடுறார் அவரு டவுசரை ஒரு வழிபண்ணுங்க.

குடுகுடுப்பை said...

டாக்டர் ஷாலினியின் கருத்துக்களில் பலவற்றில் எனக்கும் உடன்பாடில்லை.

வருண் said...

***Blogger குடுகுடுப்பை said...

டாக்டர் ஷாலினியின் கருத்துக்களில் பலவற்றில் எனக்கும் உடன்பாடில்லை.

25 January 2011 3:04 PM***

நம்மள மாதிரி ஆட்கள் எடுக்க வேண்டியதை எடுத்துக்கிட்டு, எறியவேண்டியதை எறிந்துவிடுவோம்.

ஆனந்தவிகடன் வாசகிகள்தான் பாவம்! :(

வருண் said...

***சித்தூர்.எஸ்.முருகேசன் said...

பாஸ்!
ரெம்ப உ.வ பட்டுட்டிங்க போல. அந்த மாராஜி எழுதறது அத்தனையும் அட்சர சத்தியம்.***

நல்லதுங்க :)


**ஆனால் நாலு புஸ்தவம் படிச்சுட்டு எழுதறாய்ங்களா அ ஆராய்ச்சியா தெரியலை.***

யாரி இவர் ஆராச்சிய ரிவியூ பண்ணுறது?

**ஆராய்ச்சியா இருந்தா மட்டும் ஷி ஈஸ் கிரேட் . உண்மை கொஞ்சம் கசப்பாதான் இருக்கும். விழுங்கி வைங்க.***

உண்மையா? அவர் சொல்றதெல்லாம் உண்மையா? அவர் எழுதியதை இன்னும் 20 வருடம் கழிச்சு அவரே படிச்சா அவரே அவர் கருத்தை ஏற்றுக்க மாட்டார், தல!

**நம்ம பேட்டை பக்கம் கொஞ்சம் ஒதுங்கினா தேறிடுவிங்க..வாங்க நேரம் கிடைச்சா**

கட்டாயம் வர்றேன் :)

guna said...

டாக்டர் ஷாலினியின் கருத்துக்களில் பலவற்றில் எனக்கும் உடன்பாடில்லை

Philosophy Prabhakaran said...

தலைவரே... நானும் அவங்கோட பதிவை படிச்சேன்... அவங்க சொல்றது சரிதான்... நீங்க அதை வேற பார்வையில் பாக்குறீங்க... இன்னும் நிறைய சொல்லலாம்...

ஆனால் இதையெல்லாம் நான் சொன்னால் தம்பி உனக்கு வயசு பத்தாது ஓரமாப் போய் உக்காந்து சுட்டி டிவி பாருன்னு சொன்னாலும் சொல்லுவீங்க... அதனால நான் கிளம்பிக்கிறேன்...

பயணமும் எண்ணங்களும் said...

உங்க பக்க நியாயம் புரியுது..

ஆண் அவர்கள் சொல்வது போலவே இருந்துட்டு போகட்டுமே.. அதை ஏற்பது பெண்கள் ( துணை )பாடு..

பெண்ணுக்கும் ஆண் தேவைதானே..?..

பெண்ணை உயர்த்தி வைக்க சொல்வதாய் தெரிகிறதுதான்... ஆனால் தேவையில்லை..ஆணுக்கும் இப்படி யாராவது எழுதலாம்...உங்க ஆதங்கப்படி..:)

பயணமும் எண்ணங்களும் said...

//சிம்பிள்: அவள் என்ஜாய் செய்யாவிட்டால் இவன் மூளைக்கு போதை கிடைப்பதில்லை.//


எல்லா நேரமும் அவனுக்கு போதை தேவையுமில்லை.. சளி பிடிச்சா சீந்தி தொலைக்கணும் என்ற முனைப்பே பல சமயம்...இதுதான் நிதர்சனம்... இதனால்தான் வன்புணர்வுகளும்...

சி.பி.செந்தில்குமார் said...

ஒவ்வொரு அழகான படைப்பிலும் திருஷ்டி உண்டு.. ஆனந்த விகடனுக்கு ஷாலினி

சி.பி.செந்தில்குமார் said...

ஒவ்வொரு அழகான படைப்பிலும் திருஷ்டி உண்டு.. ஆனந்த விகடனுக்கு ஷாலினி

வருண் said...

***guna said...

டாக்டர் ஷாலினியின் கருத்துக்களில் பலவற்றில் எனக்கும் உடன்பாடில்லை
25 January 2011 5:10 PM ***

வாங்க, குணா!

அவங்க தியரைஸ் செய்றதை செய்யட்டும். நமக்குத் தப்புனு தோனுவதை நம்ம சொல்லுவோம்!

வருண் said...

***Philosophy Prabhakaran said...

தலைவரே... நானும் அவங்கோட பதிவை படிச்சேன்... அவங்க சொல்றது சரிதான்... நீங்க அதை வேற பார்வையில் பாக்குறீங்க... இன்னும் நிறைய சொல்லலாம்...

ஆனால் இதையெல்லாம் நான் சொன்னால் தம்பி உனக்கு வயசு பத்தாது ஓரமாப் போய் உக்காந்து சுட்டி டிவி பாருன்னு சொன்னாலும் சொல்லுவீங்க... அதனால நான் கிளம்பிக்கிறேன்***

ஃபிளா: உங்களுக்கு சரினு தோன்றதிலே தப்பு இல்லைங்க. அதை விமர்சனம் செய்யவும் வேண்டியதில்லை.

எனக்கு சரியில்லைனு தோனுவதை நான் சொல்லாமல் விடுறது தப்பு!

வருண் said...

***பயணமும் எண்ணங்களும் said...

உங்க பக்க நியாயம் புரியுது..

ஆண் அவர்கள் சொல்வது போலவே இருந்துட்டு போகட்டுமே.. அதை ஏற்பது பெண்கள் ( துணை )பாடு..***

ஆண்களில் பலவிதம் இருக்காங்கனு நம்புறேன். ஒரு எக்ஸ்ட்ரீம் கேஸும் அவருக்கு தகுந்த அவரைப்போலவே நம்பிக்கை கொண்ட இன்னொரு பெண்னை தேர்ந்தெடுத்தால் பிரச்சினை இல்லை. பெண்கள் எல்லாமே ஒரு வகைனு நான் நம்பவில்லை

**பெண்ணுக்கும் ஆண் தேவைதானே..?..**

அதை வைத்து ஆண் பெண்ணை அப்யூஸ் பண்ன வேண்டியதில்லை. ஆனால், தனக்கு சரியான பார்ட்னெரை தேடுவதில் தவறில்லையே! அப்படி யாரும் இல்லைனு நாம சொல்ல முடியாது.

***பெண்ணை உயர்த்தி வைக்க சொல்வதாய் தெரிகிறதுதான்... ஆனால் தேவையில்லை..**

I agree that male dominated and controlled women because of insecurity and possessiveness. Nobody denies that. Today, they (at least) some realize what they did was not correct and they think about what they should do in the future to get a healthy relationship. But Dr. Shanini's approach is not going to help women or men to strengthen their relationship. It will only make it worse! I am sure taht is not her intention or vikatan's intention!


***ஆணுக்கும் இப்படி யாராவது எழுதலாம்...உங்க ஆதங்கப்படி..:)**

It is not tit for tat ங்க. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பழி வாங்குவதால் யாருக்கும் நன்மை இல்லையே?

வருண் said...

***பயணமும் எண்ணங்களும் said...

//சிம்பிள்: அவள் என்ஜாய் செய்யாவிட்டால் இவன் மூளைக்கு போதை கிடைப்பதில்லை.//


எல்லா நேரமும் அவனுக்கு போதை தேவையுமில்லை.. சளி பிடிச்சா சீந்தி தொலைக்கணும் என்ற முனைப்பே பல சமயம்...இதுதான் நிதர்சனம்... இதனால்தான் வன்புணர்வுகளும்...***

உண்மைதான். அவரும் இதை மறுக்க மாட்டார்.

என்னைப்பொறுத்தவரையில், தன் பார்னெர் சந்தோஷம் அடையனும், அல்லது தன்னல் சந்தொச்ஷப்படுத்தனும்னு நினைக்கும் ஆண் மேல் பரிதாப்படனுமே ஒழிய அந்த எதிர்பார்ப்பை "போதை" என்பதே தவறு.

See, only a woman has the strength to decide and conclude how good a man is. he cant judge himself. I believe women have the final word and more power than men when it comes to issue. Men are powerless if you carefully look at. You should rather feel sorry for him than getting mad at him for his "silly" questions!

வருண் said...

***சி.பி.செந்தில்குமார் said...

ஒவ்வொரு அழகான படைப்பிலும் திருஷ்டி உண்டு.. ஆனந்த விகடனுக்கு ஷாலினி

25 January 2011 9:43 PM***

என்னவோ போங்க!

அவர் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பதுதாங்க இங்கே பிரச்சினை. மற்றபடி தனிப்பட்ட முறையில் அவர் யாருனே எனக்குத் தெரியாது. அவர் ஒரு நல்ல தொடர் எழுதி மக்களின் பாலியல் அறியாமையை போக்கினால் நல்லதுதான். மாறாக குழப்பிவிடுவாரானு பயம்மாயிருக்கு! :(

பயணமும் எண்ணங்களும் said...

See, only a woman has the strength to decide and conclude how good a man is. he cant judge himself. I believe women have the final word and more power than men when it comes to issue. Men are powerless if you carefully look at. You should rather feel sorry for him than getting mad at him for his "silly" questions!//

Well said Varun..& True

பழமைபேசி said...

அதான் குகு வந்துட்டு போய்ட்டாரே?

Vinoth said...

முருகேசன் ஆண்ணா,
இந்த விஷயத்தில் உங்களுடன் மாறுபடரேன்.

ஷாலினின் ஆராய்ச்சி எல்லான் 100% சரியாக இருக்கும்னு எப்படி சொல்லுறது...

பறக்கும் கருவியை உண்டாக்க பல ஆராயிச்சிகளை பண்ணீனங்க...
1600 ல , ராயல் இன்ஸ்ட்டியூட் ஆப் லண்டன், தலைவர் காற்றைவிட கனமான பறக்கும் கருவியை உண்டக்குதல் சத்தியமானது இல்லைன்னு சொல்லிட்டர்.

ஆனா விமானம் கண்டுபிடிச்சங்களா இல்லையா ?

ஷாலினி சொல்லியிருக்கும்ப்டி நீல படங்களை பார்த்து ஆரய்ச்சி செய்வது சரியான்னு தெரியலை.

என்னை பொறுத்தவரை ...நீலபடங்களில் இயற்கையான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பங்களா?

நீல படத்தை பார்த்து காமம் இப்படித்தான்னு முடிவு பண்றதும், சினிமாவை பார்த்து மக்கள் இப்படித்தான் முடிவு பண்ற மாதிரி தான்.

தமிழ் சினிமாவில் கட்டுறபடி, பெண்னா லவ் பண்ணணும் ,டுயிட் பாடணும், அதுவும் கீழ விழுந்த புக்கை எடுத்து குடுத்தா லவ் வந்த்ருமும்ன்னு நினைக்கிற மாதிரி தான் இதுவும்னு நினைக்கிறேன்.

எனவே நீல பட ஆராயிச்சை என்னல எத்துக முடியல

ChezhiaN said...

அட......
விடுங்க பாஸ் இவுங்க எப்பயுமே
இப்படி தான்
இப்படி தான்
எப்பயுமே