இப்போ திடீர்னு இவர் தளம், ஆன்மீக உலா உயிர்ப்பித்துவிட்டது! அவரும் உயிரோட வந்து நிக்கிறார்!
இவர் பதிவுலகில் காணாமல்ப்போனபோது பதிவு ஒண்ணு எழுதினேன். அது இங்கே கீழே கொடுக்கப் பட்டுள்ளது!..2014 மே மாதம் அவரும் அவர் தளமும் காணாமல்ப் போனபோது எழுதிய பதிவு இது!
********************
நம்பள்கியின் ஆன்மீக உலா முடக்கப்பட்டதா?
இக்பால் செல்வன் என்கிற கோடங்கிச் செல்வன், தமிழ்மணத்தை புதிய தமிழ்தளங்களை திரட்டச் சொல்லி வேண்டிக் கேட்டுக்கொண்ட பதிவில், நம்பள்கியின் தளம் முடக்கப்பட்டு இருக்கலாம் என்பதுபோல் டிஸ்கஸ்ஸன் செய்யப்பட்டுள்ளது.
நாத்திக பதிவு எழுதி வந்த நம்பள்கி வலைப்பக்கம் சில நாட்களாக காணவில்லை.கடைசியாக கடுமையாக கடவுளை மறுத்தும் விமர்சித்தும் எழுதியிருன்(வந்)தார். அந்த பதிவுடன் அவரது வலைப்பக்கமும் காணக்கிடைக்கவில்லை. இது பற்றி ஏதேனும் விபரம் யாருக்காவது தெரியுமா? www.nambalki.com பக்கத்தை யாராவது களவாடி (hack செய்து) விட்டார்களா?
பூபதி துபை
நாத்திக பதிவுகளுக்கு நடக்கும் வழமையான துன்பம் இந்த இணைய களவாணித் தனம் ( Hacking ) . எனது கொடுக்கி என்ற பெயரில் இயங்கிய தளமும் Hack செய்யப்பட்டு நூற்றுக்கும் அதிகமான பதிவுகளை இழந்தேன். தற்சமயம் Backup செய்து பாதுகாப்பை அதிகரித்துள்ளேன். நம்பள்கியின் தளம் இருமுறை சூறையாடப்பட்டுள்ளது. தற்சமயம் அவரது டொமைன் சிக்கலோ என தோன்றுகின்றது. Blogspot முகவரி ஊடாக போய் பாருங்கள். அவரே வந்து பதிலளித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.
இது உண்மையா?
உங்கள் தளம் முடக்கப் பட்டால் உங்களுக்கு மட்டுமே அவ்வலி தெரியும். நம்பள்கி, ஆத்திகரோ, நாத்திகரோ, தரமாக எழுதுகிறாரோ இல்லையோ என்பதெல்லாம் வேறு விடயம். ஆனால் திடீரென வாசகர்களை எட்டிப் பார்க்க வைப்பதுபோல் கவர்ச்சியான் தலைப்புகள் கொடுத்து பல வாசகர்களையும் சில வாசக நண்பர்களை சமீபத்தில் பெற்றார்.
அவர் தளம் முடக்கப் பட்டு இருந்தால், அது மிகவும் கண்டிக்கத் தக்க செயல். இன்று நம்பள்கி நாளை நீங்கள்! என்பதை நினைவில் கொள்ளவும்.
இது உண்மையா? என்பதை அவரே வந்து பின்னூட்டத்தில் சொல்ல வேண்டும். அதற்காகவே இப்பதிவு.
நன்றி.
************************
2014 மே மாதம் எழுதிய அந்தப் பதிவில் வந்த பின்னூட்டங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்!
நம்பள்கியின் ஆன்மீக உலா முடக்கப்பட்டதா?
ஒ!
ReplyDeleteநம்பள்கியின் பதிவுகள் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சிதான்! நன்றி!
ReplyDeleteமீண்டும் உயிர் பெற்றதில் மகிழ்ச்சி...
ReplyDelete***Mythily kasthuri rengan said...
ReplyDeleteஒ!
November 14, 2014 at 9:10 PM***
வாங்க மைதிலி. ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு மாதிரி..இவருடைய "டைப்" என்னனு புரியாமல் ஆளாளாளுக்கு இவர் தளம் முடக்கப்பட்டுவிட்டதாக எண்ணிவிட்டார்கள். :)
*** ‘தளிர்’ சுரேஷ் said...
ReplyDeleteநம்பள்கியின் பதிவுகள் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சிதான்! நன்றி!***
அடுத்த முறை இவரும், இவர் தளமும் காணாமல்ப் போகும் வரைக்கும் இவர் பதிவுகள் வரும்னு நினைக்கிறேன், சுரேஷ். :)
***Blogger -'பரிவை' சே.குமார் said...
ReplyDeleteமீண்டும் உயிர் பெற்றதில் மகிழ்ச்சி..***
இனிமேல் இவர் தளமோ இவரோ காணாமல்ப் போனால், "போங்கப்பா இவருக்கு இதே வேலையாப் போச்சு"னு இவருக்காக ஒப்பாரி வைக்காமல் அவன் அவன் பொழைப்பை பார்ப்பார்கள் :)