Monday, May 12, 2014

நம்பள்கியின் ஆன்மீக உலா முடக்கப்பட்டதா?

இக்பால் செல்வன் என்கிற கோடங்கிச் செல்வன், தமிழ்மணத்தை புதிய தமிழ்தளங்களை திரட்டச் சொல்லி வேண்டிக் கேட்டுக்கொண்ட பதிவில், நம்பள்கியின் தளம் முடக்கப்பட்டு இருக்கலாம் என்பதுபோல் டிஸ்கஸ்ஸன் செய்யப்பட்டுள்ளது.

நாத்திக பதிவு எழுதி வந்த நம்பள்கி வலைப்பக்கம் சில நாட்களாக காணவில்லை.கடைசியாக கடுமையாக கடவுளை மறுத்தும் விமர்சித்தும் எழுதியிருன்(வந்)தார். அந்த பதிவுடன் அவரது வலைப்பக்கமும் காணக்கிடைக்கவில்லை. இது பற்றி ஏதேனும் விபரம் யாருக்காவது தெரியுமா? www.nambalki.com பக்கத்தை யாராவது களவாடி (hack செய்து) விட்டார்களா?

பூபதி துபைநாத்திக பதிவுகளுக்கு நடக்கும் வழமையான துன்பம் இந்த இணைய களவாணித் தனம் ( Hacking ) . எனது கொடுக்கி என்ற பெயரில் இயங்கிய தளமும் Hack செய்யப்பட்டு நூற்றுக்கும் அதிகமான பதிவுகளை இழந்தேன். தற்சமயம் Backup செய்து பாதுகாப்பை அதிகரித்துள்ளேன். நம்பள்கியின் தளம் இருமுறை சூறையாடப்பட்டுள்ளது. தற்சமயம் அவரது டொமைன் சிக்கலோ என தோன்றுகின்றது. Blogspot முகவரி ஊடாக போய் பாருங்கள். அவரே வந்து பதிலளித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.

இது உண்மையா?

உங்கள் தளம் முடக்கப் பட்டால் உங்களுக்கு மட்டுமே அவ்வலி தெரியும். நம்பள்கி, ஆத்திகரோ, நாத்திகரோ, தரமாக எழுதுகிறாரோ இல்லையோ என்பதெல்லாம் வேறு விடயம். ஆனால் திடீரென வாசகர்களை எட்டிப் பார்க்க வைப்பதுபோல் கவர்ச்சியான் தலைப்புகள் கொடுத்து பல வாசகர்களையும் சில வாசக நண்பர்களை சமீபத்தில் பெற்றார்.

அவர் தளம் முடக்கப் பட்டு இருந்தால், அது மிகவும் கண்டிக்கத் தக்க செயல். இன்று நம்பள்கி நாளை நீங்கள்! என்பதை நினைவில் கொள்ளவும்.

இது உண்மையா? என்பதை அவரே வந்து பின்னூட்டத்தில் சொல்ல வேண்டும். அதற்காகவே இப்பதிவு.

நன்றி.

13 comments:

ராவணன் said...

அவரு லீவில் போவதாக எழுதியிருந்தாரே... அதைப் படிக்கவில்லையா?

…கருணாநிதி அல்லது கனிமொழி ..யாரையாவது பிரதமராக உட்காரவைக்காமல் திரும்ப மாட்டார்.

…எடுத்த சபதம் முடிப்பார்.

வருண் said...

ராவணன்: நான் அவருடைய பதிவின் ரெகுலர் வாசகர் அல்ல! :) அவர் லீவ் போனால், தளத்தையே அடைத்துவிட்டுப் போகணுமா என்ன?

I typed nambalki.com and googled. Seems like not much posts exist! That was not the case before! :)

வருண் said...

Here is my google search:

https://www.google.com/search?q=nambalki.com&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a&channel=np&source=hp#channel=np&q=nambalki.com&rls=org.mozilla:en-US:official&start=10

Vacation for him or for his blog?? :))) J K @ Ravanan.

Anyway, it is also possible that he shut down his blog while going on vacation. He may be paranoid about "hacking or whatever" while he is away. I dont know for sure! :)

ராவணன் said...

///Vacation for him or for his blog?? :))) J K @ றவனன்.///

வெளியில் செல்லும்போது வீட்டைப் பூட்டிவிட்டு செல்வதில்லையா..?

…கடைசியில் சொன்னது எனக்குப் புரியவில்லை.

…யார் அந்த J K ?

வருண் said...

ரா: நீங்க சொல்வதை நம்பி, நான் விளக்கம் தருகிறேன்ன். ஜே கே அப்படினா, ஆங்கிலத்தில், ஜஸ்ட் கிடிங். அதாவது சும்மா "விளையாட்டா, ஜோக்" கலந்து சொல்வதுனு அர்த்தப்படுத்திக்கணும். :)

திண்டுக்கல் தனபாலன் said...

எந்தப் பிரச்சனையானாலும் இருக்கட்டும்... யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்... சக பதிவர் எனும் முறையில் மிகவும் வருத்தப்படுகிறேன்...

Something wrong...!

திண்டுக்கல் தனபாலன் said...

எந்தப் பிரச்சனையானாலும் இருக்கட்டும்... யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்... சக பதிவர் எனும் முறையில் மிகவும் வருத்தப்படுகிறேன்...

Something wrong...!

வருண் said...

தனபாலன்: கருத்து வேறுபாடு, அடி தடி என்பதெல்லாம் வேறு. அது சரி என்று வாதிடவில்லை. ஆனால் இதுபோல் இன்னொருவர் தளத்தை அபகரிப்பெதென்பது மிகவும் இழிவான ஒரு செயல். தமிழனைத் தவிர வேறு யாருக்கும் நம்பள்கியையோ, உண்மைத் தமிழனையோ தெரியாது. மற்ரவர் தளத்தை முடக்கும் இவர்களும் தமிழர்கள்தான்! நம் உடன் பிறந்தவர்தான். இல்லை இல்லை தொப்புள் கொடி உறவு! :))

திண்டுக்கல் தனபாலன் said...

சமீபத்தில் சிறு கவனக் குறைவால் ஆரூர் மூனா செந்தில் அவர்கள் சொந்த தளத்தை (domain) இழந்தார்... அப்படி ஏதேனும் ஆகி இருக்கக்கூடாது....

மற்றும் ஒருவர் கடைசி நாளில் பணம் செலுத்தி (நண்பர் உதவியோடு) தப்பித்தார்...

இருந்தாலும் பதிவு செய்கிறேன்... ஒரே ஒரு டிக் --->Automatically Renew...

விவரம் இங்கே --->http://www.bloggernanban.com/2013/11/renew-blogger-domain.html

வருண் said...

தனபாலன்: ஆரூர் மூனா செந்தில் தளம் முடக்கப்பட்டதா!!! ஏதோ டொமைன் மாற்றிவிட்டேன்னு ஒரு பதிவில் சொன்னார். நான் என்னனு போய்ப் பார்க்கவில்லை!

நான் எல்லாம் சும்மா "ஓ சி" ப்ளாக்தான்.

ஆனால் கூகிளில் செல் நம்பர் எல்லாம் கேட்டு வாங்கி வச்சிருக்கிறாங்களே. ஹேக் பண்னினால் மீட்கனு சொல்லி. :)

-------

தனபாலன்: இன்னும் ஒண்ணூ! நம்பள்கி ப்ளாக் ஹேக் ஆகி இருக்குனு அவரே வந்து சொன்னாலொழிய நம்ம எதுவும் முடிவா சொல்ல முடியாது. இது ஒரு "கற்பனையாக"க் கூட முடியலாம். பார்க்கலாம். :)

Bagawanjee KA said...

நம்பள்கி அவர்களுக்கு மெயில் அனுப்பினாலும் பதில் இல்லை !யாராவது ஒருவரின் தளத்திற்கு கூடவா அவரால் முடியாமல் போகும் ?

வருண் said...

பகவான் ஜி: உங்க மெயில் ஹாக்கரின் கையில் சிக்குகிறதோ என்னவோ, தெரியவில்லை. உண்மையிலேயே எனக்கு என்ன நடக்குதுனு தெரியவில்லை. ஒண்ணும் மட்டும் நிச்சயம், அவர் தளத்தைக் காணோம்! அவ்ரே மறைச்சு வச்சிருக்காரோ இல்லைனா யாரும் ஹாக் பண்னிட்டாங்களானு அவரா வந்துதான் சொல்லணும்.

பொதுவாக, இதுபோல் ஆகும்போது தளத்தை மீட்டுவிட்டுத்தான் வந்து "நடந்த கதை" சொல்லுவாங்க. அதுவரை கையும் ஓடாது காலும் ஒடாது. You would not know what you had until you lose it, னு சொல்லுவாங்க.

முட்டா நைனா said...

இன்னாபா படா பேஜாரா கீது...? நம்பிள்கியானாந்தா மடத்தை இஸ்துகினு பூட்டானுவலா...? இல்ல மெய்யாலுமே அவரு சாமியாரா பூட்டாரா...?
குவிக்கா கண்டுபுடிங்க மக்கா...