* மும்பைக் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்த சினிமா நடிகை குஷ்பு வந்து தானறியாத தமிழ்க் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்த தமிழர் தமிழச்சிகள் கற்பு பத்தி பேசியது.
* சுஹாஷினினு இன்னொரு மேட்டுக்குடியில் பிறந்து வளர்ந்த நடிகை, மேலும் தமிழனுக்கு மட்டும் கொம்பு முளைத்துள்ளதா? என்றெல்லாம் விமர்சித்த நடிகை, பெண்ணுரிமை பற்றி பேசுறேன்னு உளறியது.
* மனோதத்துவம் படித்த டாக்டர் ஷாலினி அவர்தளத்தில் ஏதோ பெண்கள் மனநிலையை திடப்படுத்துவதாகச் சொல்லி கட்டுரை எழுதுறேன்னு எழுதி நல்ல மனநிலையில் உள்ள எல்லோரையும் ஏர்வாடிக்கு அனுப்ப முயல்வது.
* கல கலப் பிரியானு ஐரோப்பாவில் குடிபுகுந்த ஜீன்ஸ் போட்ட தமிழ் கவிதாயினி இதுதாண்டா கலாச்சாரம்னு தொடர்ந்து பல "எபிசோட்"கள் எழுதி பெண்ணியம் பேசிக் கிழிச்சது
இதை எல்லாம் நாம் பார்த்து இருக்கிறோம். பார்த்துவிட்டு பொதுவாக தமிழ் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்த ஆண்களுக்கு என்ன தோனும்னா "இவங்க எல்லாம் பெண்ணியம் பேசாமல் இருந்தால் பெண்களை ஆண்கள் பல மடங்கு மதிப்பார்கள், அவ்ர்கள் பிரச்சினைகளை புரிந்து நடந்து கொள்வார்கள்" என்று தோன்றும்.
ஆனால், மொழிவது அறம் நிகழ்ச்சியில் பெண்கள் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடும் எழில் அவர்களும் மற்றும் அவர்கள் தோழிகளும் விவாதிப்பது , மற்றும் கலந்துரையாடுவதைக் காணும்போது, உண்மையிலேயே யாரு பெண்கள் பிரச்சினைகளை பேசத் தகுதி பெற்றவர்ளோ அவர்களே சிரத்தையுடன் இப்பிரச்சினைகளை முன் வைத்துப் பேசுவது போலிருக்கிறது. மேலும் பேசவேண்டிய பிரச்சினைகளை முன் வைத்து அழகாக கலந்துரையாடல் செய்ததுபோல் எனக்குத் தோன்றியது.
எழில் அவர்கள் இந்த காணொளியை அவர் தளத்தில் தந்திருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் அந்தக் காணொளியைப் பார்த்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி பார்க்காதவர்கள் பலர் இதைக் காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இந்த காணொளி நாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக எனக்குத் தோன்றியது. உங்களுக்கு நேரம் கிடைகும்போது தயவு செய்து இந்தக் காணொளியைக் கண்டு மகிழுங்கள். உங்கள் விமர்ச்னத்தையும் இங்கு வைக்கலாம் அல்லது எழில் அவர்கள் தளத்தில் போயி நேரிடையாக அவர்களை வாழ்த்தலாம். நன்றி.
நல்வாழ்த்துகள், எழில் அவர்களே!