சேஷாச்சலமாகப் பிறந்த இவர், பெரியார்தாசனாக மாறி, பிறகு அப்துல்லாவாக மாறி, இப்போ நம்மை எல்லாம் விட்டு பிரிந்துபோய்விட்டார். அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
ஓசைனு ஒரு தளம் நடத்திவரும் ஆத்திகர் ஒருவர், பெரியார் தாசன், நாத்திகத்தை துறந்து, அப்துல்லா ஆனதை சில அரசியல்வாதிகள் மறைத்துவிட்டார்கள் என்பதுபோல் பதிவைப்போட்டு ஆத்திகர்களிடன் பெரு மதிப்பெண்ணை பெற்றுள்ளார்..
அவர் பதிவில் இட்ட என் பின்னூட்டம் வெளிவருமா? என்று தெரியவில்லை. ஏன் என்றால் நான் என் மனதுக்கு உகந்த பின்னூட்டங்கள்தான் எழுதுவதுண்டு.. ஓசையை திருப்திபடுத்தணும்னு என் கருத்தை பவ்வியமாக எழுதினால் என்னால் நான் சொல்ல வந்ததை சொல்ல இயலாது.
Anyway, here is a COPY of my response in his blog post
பெரியார்தாசன் "பகுத்தறிவு உண்மையை மறைக்கலாமோ..."
about late Abdulla aka periyaar dasan!..
எனக்கென்னவோ அவர் நிதானமாக யோசித்து "பெரியார் தாசன்"னு தன் பெயரை மாற்றி இருக்கணும்ணு தோனுது. எதுக்கு இப்படி அவசரப்பட்டாரு?? பெரியார் மற்றும் நாத்திகம், நாத்திகவாதிகள் யோக்கியதனை என்ன? என்று கொஞ்சம்கூட பகுத்தறியாமல் "பெரியார் தாசன்" மண்ணாங்கட்டினு பேரை மாத்திக்கிட்டாரு போல.
நல்லவேளை அப்துல்லாவாகவே கடைசிவரையில் இருந்து மறைந்தார். ஒரு ஆல்பர்ட்டாக அப்புறமாக மாறாமல்.
மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை எல்லாம் ஒருவர் மனம் சம்மந்தப்பட்ட விசயம். கட்சி மாறுவதுபோல ஆத்திகம் நாத்திகம் ஆத்திகம்னு தாவினால் அப்துல்லா அவர்கள் எதையும் தெளிவாகப் பகுத்தறியத் தெரியாதவர் என்றுதான் அர்த்தம்..
ஆமா வருண், அவர் எழவு வீட்டில் ஏன் இப்படி ஒரு "ஒப்பாரி"னு கேட்கலாம்தான்? இந்தப் பதிவே ஒரு ஒப்பாரிதானே? இல்லையா? ஆத்திகம்தான் உயர்வானதுனு வைக்கிற ஒப்பாரிதான் இது.
ஆனால் உண்மை என்ன? அப்துல்லா ஒரு திடமான முடிவு எடுக்கத் தெரியாதவர், தன் மனத்தையே சரியாக அறியாமல் குழப்பத்தில் வாழ்ந்தவர் என்பதே. இவர் இன்னும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், "ஐ லவ் ஜீசஸ் "னுகூட சொன்னாலும் சொல்லியிருப்பார்!
உடனே இஸ்லாமியர்கள் எல்லாம் வந்து "அதெல்லாம் அப்துல்லா அப்படி சொல்லி இருக்க மாட்டார்"னு அடித்துச் சொல்வார்கள். அவர்களால், தன் மனதையே தெளிவாக அறிந்துகொள்ளாத அண்ணன் அப்துல்லா மனதை எப்படிப் பகுத்தறிய முடியும், பாவம்??