அணு உலைகளால் நாம் பெரும் மின்சாரம் 3% மட்டுமே என்கிறார்கள். 97% மின்சாரம் அணுவுலைகளால் நாம் அடைவதில்லை!
As of 2011, India had 4.8 GW of installed electricity generation capacity using nuclear fuels. India's Nuclear plants generated 32455 million units or 3.75% of total electricity produced in India.[55]அந்த 3% மின்சாரத்தை நாம் பலவகையில் ஈட்டலாம்!
எப்படி ஈட்டுவடா? னு கேக்குறீங்களா?
சரி படிப்பறிவில்லாதவனாக இதை அனலைஸ் பண்ணி சொல்லுறேன்.
* எரிபொருள், பெட்ரோல் எல்லாம் இறக்குமதி செய்கிற நாம் மின்சாரத்தையும் இன்னொரு நாட்டிலிருந்து வாங்க முடியுமா? அவன் அதை எப்படி வேணா தயாரிக்கட்டும், நாம் அதற்கு ஒரு விலை கொடுத்து வாங்கினால் என்ன?
* நாம் தயாரிக்கும் மின்சாரம் பலவ்கையில் விரயமாகிறது என்கிறார்கள். அதை விரயமாகாமல், புது வயர்கள் மற்றும் சாதங்களை மாற்றி அமைத்தால் பல விழுக்காடுகள் மின்சாரத்தை "பெற"முடியும்
* கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பாருங்கள்!
India and U.S. Share Energy Woes: Stealing Electricity
One of the problems that helped cause the blackout in India is relatively unknown: About a third of the people there get their electricity for free and many by stealing it.
kaushik
* அதாவது என்ன சொல்றாங்கன்னா நம்ம தயாரிக்கும் மின்சாரத்தில் 33% நம் மக்களால் திருடப்படுகிறதாம்!! அதாவது நாம் திருட்டை குறைத்தால் பல விழுக்காடுகள் மின்சாரம் சேமிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அதாவது 3% மின்சாரம் அணு உலையில் இருந்து தயாரிக்கிறோம். 33% மின்சாரம் களவு போகிறதாம்.
உடனே களவு போச்சுனா, அதுவும் "ஏழை மக்களுக்குத்தான்" போகிறது என்ற வியாக்யாணம் வேண்டாம் ! திருடுறவன் ஏழையாக இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. பெரிய பெரிய பணக்கார முதலைகளும் இதை செய்யலாம்! பொதுவாக அவனுகதான் இதெல்லாம் செய்வானுக!
* கூடங்குளம் அணு வுலை இல்லாமல் வாழவே முடியாது என்பதுபோல் பேசுவது அறியாமை!
* அணு உலைகளை முழுவதுமாக மூடினாலே நமக்கு இழப்பு, 3% மின்சாரம்தான்!
* 33% மின்சாரம் நம்மில் நம்மால் திருடப்படுகிறது. அந்தத் திருட்டை மட்டுறுத்தினால், அந்தப் பணத்தை வைத்து மின்சாரம் வாங்கலாம், இல்லையென்றால் வேறு வழிகளில் (97% தயாரிப்பதுபோல) அதை தயாரிக்கலாம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!
சரி, சண்டைக்கு வர்ரீங்களா?
பேசலாம் வாங்க! என் அறியாமையை போக்கும் மேதைகள் வரலாம்!
---------------------
பின்னால் சேர்த்தது பதிவில் இந்தப் பகுதி!
2008 ல veteran பதிவர் கயல்விழி இதே தளத்தில் எழுதியது!
யாராவது போயி தோண்டி எடுக்கும் முன்னே.. நானே இங்கே பதிவைக் கொடுத்துடுறேன்.இந்தத் தொடுப்பைப் பாருங்கள்!
அணு சக்தி, ஒரு மாறுபட்ட பார்வை
ஆனால்..இந்தப் பதிவில், அணு உலைகள் சரி என்பதுபோல பின்னூட்டங்களில் வாதிட்டுள்ளேன்!
ஜப்பானில் நடந்த சமீபத்திய விபத்து எல்லாருடைய வியூவையும் மாற்றியமைத்துள்ளதா??? அதனால்தான் இன்று எல்லோருமே கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கருத்து தெரிவிக்கிறோம் போல!