Showing posts with label சமுகம். Show all posts
Showing posts with label சமுகம். Show all posts

Thursday, May 17, 2018

ஐயா நல்லகண்ணுக்கு புரிந்துவிட்டது குள்ளநரித்தனம்?!

எனக்கு இப்போதைக்கு வேலை எதுவுமில்ல. பி க் பாசு 2 ல ஒரு பெரிய தொகை வரும். அப்போ ட்விட்டர்ல கிழி கிழினு கிழிப்பேன். அதுவரைக்கும் எங்கே எழவு விழுந்தாலும் நான் கண்ணீர் விட்டு அழுவேன்.

மேலும் நான் காவேரி பிரச்சினைக்கு நான் தீர்வு காணப் போறேன். காவிரி தண்ணீரில் எல்லா ட்ராப்பும் நமக்குத்தேன்னு நாட்டு உணர்த்தப் போறேன்.

நல்லகண்ணு! ஸ்டாலின்!   ரசினி!  எல்லாரும் வந்து தலைமை தாங்குங்க. 

அப்போ நீ யாரு?  நாந்தேன் தலைவன். நீங்க எல்லாம் என் எடுபிடிகள்! ஹா ஹா ஹா!

மூள மழுங்கிவிட்ட திராவிடக் கைக்கூலிகளூக்கு புரியாதது நல்லகண்ணூக்கு புரிந்துவிட்டது போலும்.

 கமல்ஹாசன் கூட்டத்தில் நானா? - ஆதங்கப்பட்ட ஆர்.நல்லகண்ணு- விகடன்

நாங்க காலங்காலமா போராட்டிக்கிட்டு இருக்கோம். நீ முந்தாள் பெய்த மழையில் நேத்து மொளச்ச காளான்.

என்னவோ நான் உனக்கு எடுபிடிங்கிற மாதிரி நீ என்னத்த உளறல்?? போய் பிக் பாசுல தமிழர்களூக்கு தொண்டு செய்து கிழி! நாங்க எங்க அரசியலை பார்த்துக்கிறோம்.



Saturday, September 1, 2012

எடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு?

எடக்கு மடக்குனு  ஒரு அனானிமஸ் தளம் நடத்தி  வரும் "தமிழ்சேட்டுப் பையனும்" இன்னொரு "முட்டாளுப் பையனும்" யாருங்க?  அப்புறம் அந்தத் தளத்தில் மட்டும்  பின்னூட்டங்கள் இடுவதற்கென்றே ஒரு "பாவாடை சாமி", ஒரு "உடும்பன்" , அப்புறம் ஒரு "ப்ளாக் பக்கிரி" இப்படி பல அனானிமஸ் ஐ டி கள் உலவுது. எவனையாவது போட்டு தாக்கனும்னா இந்த முகமூடிகளை மாட்டிக்கிட்டு இந்த அனானிமஸ் தளத்தில் ஒரு பதிவைப் போட்டுட்டு வந்திடுவானுக பின்னூட்டமிட!

 இந்த அரை டவுசர்கள் ஐந்தும் (இன்னும் சிலவும் இருக்கலாம்) யாருக்கு கூலி வேலை பண்ணுதுகள்னு தெரியலை. ஆனால் அடிக்கடி எவனையாவது, எவனுக்கோ பிடிக்காதவனை  இஷ்டத்துக்கு விமர்சிக்க வேண்டியது. ஒரு கவர்ச்சியான தலைப்பு கொடுத்துப்புட்டு, இந்த மாதிரி ஒரு 5-6 அனானிமஸ் ஐ டி வச்சுக்கிட்டு,  ஆளாளுக்கு பின்னூட்டம்னு எதையாவது ஒளறிக்கிட்டு மாத்தி மாத்தி  இவனுகளுக்குள்ளேயே பேசிக்கிட்டு பதிவை சூடாக்குறது.

தமிழ்மணம்  திரட்டியில் இந்தப்பதிவுகளை திரட்டலைனா இவனுகள நான் கண்டுக்கவே மாட்டேன். 

ஆமா, யாருக்கு கூலிப்படை இந்த அரை டவுசர்கள்? சிங்களவர்களுக்கா? பார்ப்பணர்களுக்கா? எவனாவது தமிழின துரோகிக்கா? இல்லைனா யாருக்கு?   இந்த ஐ டிக்கள் அனைத்துமே போலிகளா? இதுபோக இவர்களுக்கு இன்னும் பல ஐடி க்கள் இருக்கா? என்ற கேள்விகள் எழுகின்றன

ஆமா, இவனுகள அடியாளா பயன்படுத்திக்கிற அந்த  "முழு டவுசர்" யாருனு பலர் யூகிச்சு வச்சிருந்தாலும், நம்ம யாரையும் "இவரா இருக்குமோ?" னு கைகாட்டுவது அநாகரிகம்!

நீங்களும் யூகம் செய்ய  இவனுகளோட சாம்பிள் பதிவு ஒண்ணு

தமிழ் புத்தாண்டு சித்திரையில் கொண்டாடினால் ஆபாசமா?


பல வருடங்களாக தமிழ் புத்தாண்டை சித்திரையில் சித்திரைக்கனி என்னும் பெயரில் நான் சிறுவனாக இருந்த போதிருந்து கொண்டாடி வருகிறேன். ஆரஞ்சு, திராச்சை, ஆப்பிள், மாங்கனி என கிடைக்கு பழங்களையெல்லாம் ஒரு வட்ட தட்டில் வைத்து கொஞ்சம் பணம், நகை வைத்து காலை எழுந்தவுடன் அதில் விழித்து அன்றைய வருடம் சீரோடும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு கோவில்களுக்கு செல்வதும், பொங்கல் வைத்து கொண்டாடுவதும் இந்து தமிழர்களின் மரபு. நாளை மலையாளிகள் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள் அவர்களும் அதே முறையை பின்பற்றுகிறார்கள்.


மஞ்சள் துண்டு மைனர் பகுத்தறிவு பசு கலைஞர் தான் புலியல்ல என நிருபிக்க கொண்டு வந்ததுதான் இந்த தமிழ் புத்தாண்டு மாற்றம். ஆனா ஒரு பய மதிக்கலை மேல் கூறிய சம்பவங்கள் அனைத்து இந்து குடும்பத்திலும் நடந்தது. பிராமணர்கள் அல்லாதவர்களும் கொண்டாடினார்கள், 


நானும் பார்க்கிறேன் ஒரு இந்துவுக்கு தெரியாத பாசுரங்களையும், புராணங்களையும் கரைத்து குடித்து மனப்பாடம் செய்துவிட்டு இது இப்படி அது அப்படி என்று சும்மா விடுறதுல பகுத்தறிவு முட்டாள்களுக்கு இணை வேறு யாரும் இல்லை. விநாயகர் தும்பிக்கைய பிறப்பு உறுப்புல வைத்து மறைத்தார் ஆபாசம் அப்படிங்கறாங்க...இந்து மதமே வெறும் ஆபாசம் அறுவருப்பு என்று சொல்லுகிறார்கள், அப்படி சொல்லுகிற நீ வானத்தில் இருந்து குதித்தாயா? அதே ஆபாச பிறப்பு உறுப்பில் இருந்துதானே பிறந்தாய்! அறுவருப்பு என்று நீ எதை சொல்கிறாய், ஒரு பூ இறைவனால் படைக்கப்பட்டது அதில் மகரந்த சேர்க்கை அறுவருப்பா? உங்கள் மனைவியோடு நீங்கள் கலவியில் ஈடுபடுவதில்லையா? அப்புறம் எதற்கு பகுத்தறிவு பகலவனுக்கு இரண்டு பொண்டாட்டி. 

இந்துமத கோயில்களில் இருக்கும் சிற்பங்களை இன்று உன்னால் உருவாக்க முடியுமா? கங்கை கொண்ட சோழபுர கட்டிட அமைப்பை ஆராய்ந்து பார்த்த அமெரிக்க பொறியாளர்கள் வியந்து அதே முறையில் லாக்கிங் சிஸ்டம் முறையில் கட்டிடங்களை கட்டுவதை தொடங்கியிருக்கிறார்கள் பூகம்பத்தை தாங்கும் மிக திறமையான 
கட்டிட தொழில் நுட்பத்தை வியக்கிறார்கள்.


உங்களுக்கு பிராமினை எதிர்க்க அவர்களை கேவலப்படுத்த எடுக்கும் ஒரே ஆயுதம் இந்துமதம். உண்மையில் எனக்கு தெரிந்து மிகச்சாதுவான மக்கள் அவர்கள், ஒரு முட்டாள் கஜுரஹோ கோவில்களை இடிக்க வேண்டும் என்கிறான்.  ஒரு கலையை ரசிக்கமுடியாதவன் சைக்கேவாகத்தான் இருப்பான், கலைகளின் தேசம் பிரான்ஸ்ல் இருக்கும் அற்புத நிர்வாணசிலைகளை அங்கு அகற்றவேண்டும் என்று கூறிப்பார் அடித்தே கொன்றுவிடுவார்கள் உன்னை. 
இந்திய ஓவியங்கள் சிற்பங்கள் கலைகள் எல்லாவற்றிலும் பாலியல் சார்ந்து இருப்பதுக்கு காரணம், ஏன் அனைத்து கோவில்களில் உறவுகாட்சிகள் இருப்பதின் காரணம் அவை ஆபாசம் அல்ல இறைவனின் படைப்பில் அதுவும் ஒரு அங்கம் என்பதுதான். அன்றைய பெண்கள் ஆண்கள் உடலுறவு பற்றி எதையும் அறியாமல் இருந்தார்கள், இன்றைய காலகட்டத்தில் செல்போன்ல எல்லாம் பார்க்கிறார்கள், அப்பொழுது இது ஒரு மருத்துவமாக இருந்தது, இந்த சிலைகளை பார்க்கும் பெண்கள் கிளர்ச்சியடைந்து வம்சவிருத்திக்கு தயாராக வைக்கப்பட்ட சிலைகளே இவை.


உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஒரு சங்கம் மாதிரி யாராலோ தொடங்கப்பட்டது ஆனால் இந்து மதம் யாராலும் தோற்றுவிக்கப்பட்டது அல்ல தானே வளர்ந்தது இதில் உள்ள யோகா, தியானம், மருத்துவம் விஞ்ஞாணம், எந்த மதத்திலும் இல்லை. அதே அளவு மூடநம்பிக்கையும் கொண்டது இன்றைய காலகட்டத்தில் அவை எழுபது சதவீதம் ஒழிக்கப்பட்டது, இனி வரும் காலத்தில் சாதி மூடநம்பிக்கை ஒழிக்கப்பட்டு ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் காரணிகள் இதில் நிறைந்து உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை


வேப்பிலை துளசி போன்ற மருத்துவ மூலிகைள் பல நோய்களை குணப்படுத்தக் கூடியது. நெற்றியில் வைக்கும் சந்தனம் குளிர்ச்சியானது இந்து கோவில்கள் வான் சக்தியை நமக்கு அளிக்கும் ஏரியல்கள் இது போன்ற பல நல்ல விசயங்கள் உள்ளது இந்து மதம். அதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். 


கனிகள் கிடைக்கும் இந்த மாதத்தில்தான் சித்திரைகனி எனும் தமிழ்புத்தாண்டை கொண்டாட வேண்டும், அறுவடைகாலத்தில் அறுவடை திருநாளாம் தைதிருநாளை விவசாயிகளின் புனிதநாள், இரண்டையும் சைக்கோகளின் சூழ்ச்சியால் குழப்பிக்கொள்ளாமல் இன்றைய நாளை தமிழ் புத்தாண்டை இனிமையாக கொண்டாடுவோம்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்தப்பதிவில் இருந்து இவனோட பின்புலம் என்னவாயிருக்கும்னு யோசிச்சுக்கோங்க.

இவனுக ப்ரஃபைல்  படங்களையும் ப்ரஃபைலையும் பாருங்க!!!

அனானி 1)

* தமிழ்சேட்டுப்பையன்

My Photo

My blogs


அனானி 2)

* முட்டாப் பையன்


 My Photo

My blogs


அனானி 3)

* பாவாடை சாமி

 My Photo

My blogs


அனானி 4)

* உடும்பன்

 My Photo

My blogs


அனானி 5)

* ப்ளாக் பக்கிரி

 My Photo

My blogs


தமிழ்வலைதளம் நடத்துற மொகறைக்கட்டைகளைப் பார்த்தீங்களா? இவனுகளால பாதிக்கப் பட்ட பதிவர்கள் யார் யாருனு பாருங்க!


* சி பி செந்தில் குமார்  (இவர் பிரபல பதிவராக இருந்ததால வயிரெரிஞ்சவனுக இவனுக)

* இளா

* ராஜன் (சி பி சப்போர்ட் பண்ணி இந்தப்பதிவு! :) )

* மோகன் குமார்

* ஜாக்கி சேகர்

* பொதுப்படையா இஸ்லாமியப் பதிவர்கள்!

பிரபலப் பார்ப்பனர்கள் எவனையும் இன்னும் விமர்சிக்லைனு தெரியுதா???

அனானியாத் திரியும் அரை டவுசர்களான இவனுக ஏதோ பெரிய இவனுக மாதிரி யாரையாவது வம்பு இழுக்கிறது.  அறிவியல்னா என்னனே தெரியாமல் அறிவியல் பேசுறேன்னு ஏதோ அறிவுகெட்டதனமா ஒளறுறது.  இதே வேலைக் கழுதையாப் போச்சு இதுகளுக்கு.

இவனுகளுக்கு இன்னொரு வாழ்க்கை இருக்கானு கேட்டால், நிச்சயம் இருக்கும்.  அதான் நல்லவனா, வல்லவனா உயர்தரப் பதிவனா இன்னொரு வலைதளம் (பெரியவீடு) நடத்திக்கிட்டு.அப்புறம் இந்தமாரி எடக்கு மடக்குனு ஒரு தளத்தையும் வச்சுக்கிட்டு (சின்னவீடுமாரி) ஒரு 5-6 ஐ டிகளை இந்தத்தளத்துக்குனே வச்சுக்கிட்டு மொள்ளமாரித்தனம் எல்லாம் செஞ்சு பொழைப்பை ஓட்டும் பெரிய மனுஷனுகளாக்கூட இருக்கலாம்.

விசயத்துக்கு வர்ரேன்..

வெள்ளைக்காரன் நம்மள எப்படி ஆண்டான்னா, பிரித்தாளும் கொள்கைனு சொல்லுவாங்க. நமக்குள்ள, எப்போவுமே சண்டை சச்சரவு, கருத்து வேறுபாடு இருப்பது தமிழர்களின் அடையாளம்.  நமக்குப் பிடிக்காத பதிவர்கள்,  நம்மைப் பிடிக்காத பதிவர்கள் இதுபோல் தமிழர்களுக்குள் பதிவுலக வாழ்வில் இருப்பதும் ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை. ஆனால் நம்ம என்ன சண்டை போட்டாளும் பதிவர்களுக்கு ஒரு ஐடெண்டிடி இருக்கு. நாம் பல மோசமான பதிவுகள் எழுதினாலும் ஒரு சில நல்ல பதிவுகள் எழுத முயற்சிக்கிறோம், அதில் சிறிதளவாவது வெற்றியடைகிறோம்.

நம்மை விமர்சிக்க ஒரு வலைதளம்தானே! அதனால் தப்பே இல்லை? நம்மை ஏன் இன்னொருவர் விமர்சிக்கக் கூடாது? நாமும் பதிவுலக "பிரபலம்"தான் நம்மை, நம் எழுத்தை நம் கருத்தை  நிச்சயம் பலர் விமர்சிக்கலாம். ஆனால், நம்மை விமர்சிப்பவர்கள் தகுதி என்ன? இன்னொரு சகபதிவரா? இல்லை ஒரு அனானித்தளம் வச்சு நடத்தும் நாலு அரை டவுசர்களா?? என்பதை யோசிக்கனும்.

என்னை விமர்சிப்பது,  கோவிகண்ணனா? இக்பால் செல்வனா? பெரியவர் தருமியா? தெகாவா?  இளாவா? இல்லை ஆசிக் அஹமதா? இல்லைனா சிராஜுதீனா? இல்லைனா ராபினா? சித்ராவா? இல்லைனா ஜாக்கி சேகரா? பழமை பேசியா?  குடுகுடுப்பையா?  இவர்கள் யார் வேணா விமர்சிக்கலாம். ஏன் என்றால் இவர்கள் யாவருக்கும் ஒரு தரம் இருக்கு. இவர்களுக்கு நம்மைப் பிடிக்காமல் போக, நம்மை விமர்சிக்க நிச்சயம் உரிமை இருக்கு.

ஆனால் விமர்சிப்பது அனானித் தளம் நடத்திவரும் அனானி அரை டவுசர்கள் முட்டாள் பையனும், சேட்டுப் பையனும்!  அப்புறம் ஒரு பாவாட சாமியும்!
அப்புறம் ஒரு "ப்ளாக் பக்கிரி" அப்புறம் ஒரு "உடும்பன்"!! இவனுக யாருங்க? சேட்டா? இல்லைனா சிங்களவனா? இல்லைனா கேரளாக்காரனா? ஆந்திராக்காரனா? கன்னடிகாவா? யாருப்பா இவனுக?

மேலும் அந்த எடக்கு மடக்குத்தளத்தில் உங்களுடியை ஐ பி அறியப்படும். அதை வைத்து நீங்க மிரட்டவும் படுவீங்க!  இந்த நாகரிக உலகத்தில் எடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வருகிறார்கள் ரெண்டு மூனு கூமுட்டைகள். இவனுகள, ஏன் கூமுட்டைனு சொல்றேன்னா இவர்கள் (முட்டாப்பையன், தமிழ்சேட்டுப்பையன் அப்புறம் பாவாடை சாமி, இன்னும் என்னனென்ன கூமுட்டைகளோ) ஒரே நிமிடத்தில் எழுதும் 10 அல்லது 15 பின்னூட்டங்கள் உங்களை கிறுக்குப் பிடிக்க வைக்குமளவுக்கு உளறலா இருக்கும். சுத்தமான கேணப்பயலுக, படிப்பறிவில்லாத பாமரனுக எதையோ ஒளறுவது போல இருக்கும் பின்னூட்டங்கள் எல்லாமே. ஒழுங்கா மேற்கோள் காட்டத்தெரியாது! எவன் சொன்னதையோ எவனோ சொன்னதுபோல வெட்டி ஒட்டி எழவைக் கூட்டுறது.

வேணும்னா சாம்பிள் தர்ரேன்.

இந்த அரை டவுசர்கள், ஏதோ பதிவுலக பெரியார்கள் போலவும், அனானிகளான இவனுக  பதிவர்கள் பலரையும் இஷ்டத்துக்கு விமர்சிக்க வேண்டியது. நாங்க யாரை  வேணா என்ன வேணா கேப்போம், எங்க தளம் சீர்திருத்தத்தளம்னு எதையாவது வீண் ஜம்பத்தோட ஒளற வேண்டியது.

 சரி, இவர்களிடம் போய் விவாதிக்கலாம்னு சின்சியராப் போனா, சுத்தமான கூறுகெட்ட தனமா இருக்கும் பின்னூட்டங்கள் எல்லாம். ஒரு எழவையும் ஒழுங்கா பேச முடியாது இவனுகளால. ஏதோ மெண்டல் ஹாஸ்பிடல் உள்ள போன மாரி இருக்கும் இவனுக இடுகிற பின்னூட்டங்கள்!.

இவனுகளை வளரவிடுவது தமிழ் பதிவுலகத்துக்கே இழுக்கு! தமிழ்மணத்திலிருந்து இந்த அனானிமஸ் பதிவர்கள் நடத்தும் அனானிமஸ் தளமான "எடக்கு மடக்கை" அகற்றனும்.

 தமிழ்மணமே! இந்த எடக்கு மடக்கு தளத்தை தமிழ்மணம் திரட்டியிலிருந்து அகற்றுங்களேன்! னு தாழ்மையுடன் கேட்டுக்கிறேன்.


குறிப்பு:  பின்னூட்டம்னு எடக்கு மடக்கு அரை டவுசர்கள் எதையாவது உளறினால் உடனுக்கு உடன் அகற்றப்படும்!  

தமிழ்சேட்டுப்பையனா? என்ன பார்க்கிற?  ஊருப்பயலை எல்லாம் விமர்சிக்கிற? உன்னையும் உன் அரை டவுசர் கோஷ்டியையும் விமர்சிக்க எங்களுக்குத் தெரியாதா என்ன?

----- 
This post is edited after 24 hrs in order to remove one person name! Thanks, Sep3, 2012, 6:38 am, CDT.