Showing posts with label சுதந்திரம். Show all posts
Showing posts with label சுதந்திரம். Show all posts

Thursday, April 16, 2015

கொம்பு முளைத்த சுகாசினியின் கருத்துச் சுதந்திரத்தை மதிப்போம்?

மேதாவி சுகாசினி என்ன சொல்கிறார்? தமிழனுக்கு மட்டும் என்ன கொம்பு முளைத்துள்ளதா? என்று கேட்டவர் இவர்!  இப்போ இவருக்கு மட்டும்தான் கொம்பு முளைத்துள்ளது என்று காட்டுகிறாரா? ஆமா, படம் வெளிவருமுன்னே ஏன் இந்தத் "தற்காப்பு"?

பொதுவாக தமிழ்ப்பட இயக்குனர்கள் 10-20 வருட்ங்கள் பிராகாசமாக இருந்துவிட்டு  பிறகு மங்குவதுதான் காலங்காலமாக நடந்துகொண்டு வருகிறது.  பாலசந்தர், பாரதிராஜா போலவே மிகவும் உச்சத்தில் இருந்த இன்னொரு இயக்குனரான மணிரத்னம் தற்போது மங்க ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் வந்த இவர் படங்களை  3 மணி நேரம் அமர்ந்து மக்களால் பார்த்து ரசிக்கமுடியவில்லை! இருந்தபோதிலும் அவர்மேல் கொண்ட நல்ல அபிமானத்தால் இணையதள க்ரிட்டிகள் எல்லாம் அவரைப் புகழ முயன்றும் முடியாமல் தோல்வி யடைகிறார்கள். இதுதான் நிதர்சனம்!

 ஆனால் கொம்பு முளைத்த சுகாசினி  அவர்கள், தன் கணவனின் இன்றைய இயலாமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் உளற ஆரம்பித்துவிட்டார்!

இணையதளப் பொதுமக்கள் எல்லாம்  "என்றும் மேதை" என் கணவரின் உன்னதப் படத்தை விமர்சிக்கத் தகுதியற்றவர்கள் என்றும், பொதுஜனப் பத்திரிக்கை விமர்சகர்கள்தான் அதற்குத் தகுதியுள்ளவர்கள் என்றும் உளறுகிறார். அதாவது அதற்கு அர்த்தமென்னவென்றால் இணையதளத்தில் பிரவேசிக்கும் பொதுஜனங்கள் எல்லாம் அவர் கணவரின் உன்னதப்படைப்பைப் பார்க்கத் தகுதியற்றவர்கள்! "தயவு செய்து என் கணவரின் உன்னதப் படைப்பை நீங்கள் பார்க்கவே வேண்டாம், உங்களுக்கு அத்தகுதி இல்லை!"  என்று சொல்லாமல் சொல்கிறார்.

 ஆக, கொம்பு முளைத்த சுகாசினியின் வேண்டுகோளை மதித்து இணையதளத்தில் பிரவேசிக்கும் அனைத்துப் பாமரர்களும் மணிரத்னத்தின் வரப்போகும் அடுத்த உன்னத குப்பையை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 Honestly, "his"  latest movies are boring. Thanks, Suhashini, you saved me from seeing another worthless movie! :)