பதிவர் இக்பால் செல்வன் மட்டுமல்ல எவனாயிருந்தாலும் சரி, பதிவுலக பொழைப்பை ஓட்டுவதற்காக தமிழனை இழிவுபடுத்தி மலையாளியை தடவிவிட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும். சரி, அப்படி ஒரு பதிவு வரும்போது அதை தமிழனாகிய நான் இழிவு படுத்த ஒரே ஒரு வழி அந்தப்பதிவுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கொடுப்பது. அதுபோல் பிடிக்காத பதிவுக்கு மைனஸ் மதிப்பெண் கொடுப்பது ஒவ்வொரு வாசகனின் உரிமை. ஆனால் அந்த உரிமை கோடங்கியில் எனக்கு மறுக்கப்படுகிறது!
இக்பால் செல்வனின் கோடங்கி தளத்தில் தமிழ்மணப்பதிவுப்பட்டையில் நான் கொடுக்கும் மைனஸ் மதிப்பெண் add ஆகமாட்டேன் என்கிறது. இது எனக்கு ரெண்டாவது முறையாக நடக்கிறது! சரி ஏதோ தவறு செய்துவிட்டேனோ என்று மறுபடியும் "மதிப்பிடல்" செய்தால், "நீ ஏற்கனவே ஓட்டு போட்டுட்டா முண்டம்!"னு சொல்லுது! சரி, தமிழ்மண பதிவுப்பட்டை "ஓட்டுரிமையில்" ஏதோ மாற்றம் நடந்து இருக்கலாம், நமக்கு தெரியாமல் இருக்கலாம் என்று அதை "டெஸ்ட்" செய்ய, அதேபோல் மைனஸ் மதிப்பெண் என் தளத்தில் என் பதிவுக்கு கொடுத்தால் அது சரியாக add ஆகிறது!!! இதெப்படி சாத்தியம்?
தமிழ்மணப் பதிவுப்பட்டை எல்லாத்தளங்களிலும் ஒரே மாதிரித்தான் வேலை செய்யணும். அதுதான் ஜனநாயக முறைப்படி சரி. ஒவ்வொரு தளங்களிலும் (கோடங்கியில் ஒரு மாதிரியும் ரிலாக்ஸ் ப்ளீஸில் இன்னொரு மாதிரியும்) வேறு வேறு மாதிரி வேலை செய்வது எப்படி நியாயம்?
மறுபடியும் கேட்கிறேன்! தமிழ்மணப் பதிவுப் பட்டை எல்லாத் தளத்திலும் ஒரே மாதிரித்தானே செயல்படணும்?
யாராவது விளக்கம் கொடுங்க! என் அறியாமையையும், அதனால் வந்த கோபத்தையும் போக்குக! நன்றி!