Showing posts with label பறவைகள். Show all posts
Showing posts with label பறவைகள். Show all posts

Friday, August 8, 2014

வருணின் சுமாரான உளறல்கள் (1)

* நண்பர் கிரி, நரேந்திர மோடிக்கு ஓட்டுப் போடச் சொல்லி சிபாரிசு செய்த ஞாபகம் இன்னும் இருக்கு. தற்போது மோடி மேல் பல விமர்சனங்கள் வர ஆரம்பித்துவிட்டதும், அதை "சமாளிக்க" பொறுப்பாக ஒருபதிவு போட்டு இருந்தார். என்னடா சொல்றார் நண்பர் கிரினு னு போயிப் பார்த்தால்..

பொதுமக்கள் எவரும் தான் கெட்டுப் போக வேண்டும் என்று நினைத்து வாக்களிப்பதில்லை. அனைத்து மக்களின் எண்ணமும் நாடு முன்னேற வேண்டும், மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும், அனைத்து மக்களும் அடிப்படை வசதிகளைப் பெற வேண்டும் என்பது மட்டுமே!

 கடந்த எலக்சன் நடந்து முடிந்த போது என் தந்தையிடம்  தொலைபேசியில் பேசும்போது ஓட்டுப் போடும் பொது மக்கள் மனநிலை பத்தி விசாரித்தேன். "வீட்டிற்கு வந்து ரூ 1000 கொடுத்து ஏழைகள் ஓட்டை வாங்கி விடுகிறார்கள்" என்றார். சரி, பணத்தை "வாங்கிட்டு வேற யாருக்காவது ஓட்டுப் போட்டால் எப்படித் தெரியும்?" னு நான் குதற்கமாகக் கேட்டேன். அதற்கு அவர், "அந்தமாதிரி காசு வாங்கியவர்கள் யாரும் வஞ்சகம் செய்வதில்லை! "என்றார். ஏழைகள் ஓட்டு இப்படித்தான்அவர்கள் சம்மதத்துடன் ஒரு விலை கொடுத்து  வாங்கப் படுகிறது.. இப்போ மேலே போயி கிரி சொல்றதை வாசிச்சுப் பாருங்க!

ஆமா நண்பர் கிரி, பொதுமக்கள் னு யாரைப்பற்றிச் சொல்லுகிறார்??? :))) 1000 ரூபாய் வாங்கிவிட்டு அதை வைத்து  யார் நல்லவர்கள்னு பகுத்தறிந்துதான் ஓட்டுப் போடுறாங்களே இவர்களையா??!!! :)))

BTW, I am not judging, Mr. Giri from this.  ஒரு சில விசயத்தை நியாயப்படுத்த முற்படும்போது, ஒரு சில முக்கியமான காரணிகளை "ஓவர் லுக்" செய்வதுதான் மனித இயல்பு போலும். அதைத்தான் கிரி இங்கே செய்கிறார்.

********************

* இது சொந்தக்கதை..எங்க வீட்டில் "பேக் யாட்"ல ஒரு "பறவைகளுக்கு இரை வைக்கும்"  bird feeder  ஒண்ணு வைத்து இருக்கோம். உடனே "உங்க அட்ரஸ் என்ன, வருண்? பசியால் வாடும் பறவைகளை அனுப்பி வைக்கிறேன்" னு சொல்லாதீங்க! :) மேலே படிங்க!

 




 


These photos are from the WEB!! Not mine!!!

மொதல்ல அதில் தானியங்களை போட்டு வைத்தால் ஒண்ணு ரெண்டு குருவிகள், ராபின், கார்டினல்ஸ் போன்றவை  வந்தன. பறவைகள் எங்கவீட்டு விருந்தினராக வந்து சாப்பிட்டுவிட்டு சென்றன. வாரம் ஒரு முறை சுமார் ஒரு 500 கிராம் எடையுள்ள தானியங்கள் நிறைத்து வைத்தால், வருகிற விருந்தினருக்கு  சரியா வருவது போலிருந்தது. எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு.

இப்போ திடீர்னு என்னடானா, இவைகள் போக, புதிதாக மணிப்புறாக்கள், மேலும் பல பலப் பறவைகளும் வருகின்றன. அழகழகான பறவைகளாக பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்.

இதற்கு இடையில், அணில்கள் எப்படியாவது ஏறிப் போயி அந்த "bird feeder" வைத்திருக்கும் தானியங்களை கொட்டிவிட்டு, கொட்டிக்கிடக்கும் தானியங்களை  அவைகளின் பங்குக்கு, சாப்பிடும். அப்படி கொட்டியதை முயல்கள் மற்றும்  புறாக்கள் போன்ற "பெரியவர்கள்" சாப்பிடுவாங்க.

இப்படியே ஒரே அணில், முயல், புறா, குருவினு ஒரே கூட்டம் கூடிடுது!

கூட்டம் அதிகமாகிவிட்டதால் இப்போ ஒரு நாளைக்கு ஒரு கிலோ தானியம் வைத்தாலும் அவர்களுக்கு போதவில்லை! நெஜம்மாத்தான் சொல்றேங்க! :)
 


மேலே உள்ளது  தானியம் உள்ள பாக்கட்தான். $ 8 க்கு வாங்கலாம். (20 பவுண்ட்ஸ்)! இந்த "பேக்" ஒரு வாரத்துக்கு வர மாட்டேன்கிறது!! போற போக்கைப் பார்த்தால் இனிமேல் இந்த "பாக்"  ரெண்டு நாளைக்குக்கூட வராதோ என்னவோனு பயம்மா இருக்கு!

ஆக இந்த பறவைகளுக்கு இரை போட்டு "பேங்க்ரப்ட்" ஆன முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்னு நினைக்கிறேன். :=))))

இதிலே ஒரு நல்ல விசயம் என்னனா.

எங்க தக்காளி தோட்டத்தில் (ஏதோ நாலு ஏக்கர்ல தோட்டம் இருக்குனு நெஅன்ச்சுக்காதீங்க! சும்மா தொட்டியிலேதான் இருக்கும்) வருகிற தக்காளிகளை நம்ம அணிகள் எப்போவுமே விட்டு வைப்பதில்லை. இப்போ இந்த தானியங்களை சாப்பிட்டுவிடுவதால் எங்க வீட்டருகில் உள்ள அணில்கள் தக்காளிப் பழங்களை நாங்க பறிக்கிறதுக்கு முன்னாலயே தட்டிப் பறிப்பதில்லை!


 



 

 

 These photos are also from the WEB!! Not mine!!!


 எங்க வீட்டில் திரியும் அணில்கள் எல்லாம் இந்த பறவைகளுக்கு இடும் தானியங்களை சாப்பிட்டுவிட்டு  வயிறு ரொம்பி, தக்காளியை தொடாமல் விட்டு விட்டு போய் விடுகின்றன!!

Now, accidentally we have found a solution for protecting the tomatoes from our Squirrels!! :))) 

ஆக,  "வயிறு நெறைய எனக்கு சாப்பாடு போட்டால், நான் ஏன் உன் தக்காளியை திருடுறேன்?"  என்கிறார், அணிலார்! :))