Showing posts with label பழமொழி. Show all posts
Showing posts with label பழமொழி. Show all posts

Monday, January 26, 2015

பச்சையாக எழுதுவதுதான் செழுமையான எழுத்தா?

பலமுறை நான் கதை எழுதும்போது ஒரு சில நடப்பு வார்த்தைகளை நான் பேசிக்கேட்ட விதமாக அப்படியே எழுதியபோதும்... இங்கே வந்து பதினெட்டு பிளஸ் போடுங்க, இல்லைனா உங்கள் வார்த்தைகள் எங்களை முகம் சுளிக்க வைக்கின்றன, நீங்க கவனமாக எழுதணும். தமிழ்மணம் இதுபோல் எழுத்துக்களை விரும்பாது என்றெல்லாம் அறிவுரை செய்தவர்கள் ஆயிரம்.

அதே கருத்தைக்கொண்டவர்கள், மற்றொரு ஆசிரியர் அதையே தைரியமாக செய்யும்போது அதை சரி என்கிறார்கள்.

நான் எங்க ஊரில் கேள்விப்பட்டப் பழமொழிகளை கேள்விப்பட்டவாரே இங்கே எழுத முடியாது. அது என் எழுத்துக்கு நானே செய்யும் துரோகம்.

அப்படி என்ன பழமொழி என்கிறீர்களா?.

1) கே ஆர் விஜயா சம்மந்தப்பட்டது

2) கடவுள், பூசாரி சம்மந்தப்பட்டது.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்க்கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்த எல்லா கிழ்த்தரமான ஆண்களுக்கும் இப்பழமொழிகள் நன்கே பரிச்சயம். இங்கே பெரிய மனுஷன் வேடத்தில் அவர்கள் திரிவதால் அதை அப்படியே சொல்லாமல் திரித்துச் சொல்லிக்கொண்டு அலைவதும் எனக்குத் தெரியும்.

ஆமாம், அர்த்தம்  நிறைந்ததாகத்தான் இருக்கும் அசிங்கப் பழமொழிகள் பல. நான் என் நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்ட விதத்தில் இங்கே சொன்னேன் என்றால் என் மேல் சாணியை கரைத்து ஊற்றாமல் செல்ல மாட்டார்கள் இங்கே உள்ள இலக்கிய மேதைகள் பலர்.

ஆனால் அதே பழமொழியை பெ முருகன் என்கிற மேதாவி கதையில் காளி சொல்லுவதாக எழுதினால், இதே மேதைகளால் அது நல்லிலக்கியம் என்று பாராட்டப்படும்.

ஆக, உலகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தராசு வைத்துள்ளது. ஒரே   பொருள், யார் வைத்துள்ளார்கள் என்பதை பொறுத்து, அது கமலஹாசனா, இல்லை ரஜினிகாந்தா, இல்லைனா பெ முருகனா என்பதைப் பொறுத்து அதன் நிறை மாறுபடுகிறது.

என்ன ஒரு கேவலமானவன் மனிதன் என்பவன்!! என்ன நடிப்பு!! என்ன பாசாங்கு!