Showing posts with label பா.ம.க. Show all posts
Showing posts with label பா.ம.க. Show all posts

Thursday, April 2, 2009

இந்த முறை ரஜினி ரசிகர்கள் ஓட்டு யாருக்காம்?

டாக்டர் ராமதாஸின் "ரஜினி அட்டாக்" கினால் சென்ற பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ரசிகர்கள் பா. ம. க வுக்கு எதிராக ஓட்டுப்போட்டார்கள். கடந்த முறை காங்கிரஸுடன் கூட்டணியா இருந்ததால் ஒரு பெரிய இழப்பும் டாக்டர் ராமதாசுக்கு ஏற்படவில்லை. ஆனால் இந்த முறை பா.ம.க நிலைமை கொஞ்சம் வேறு என்று சொல்லலாம்.

ரஜினி ரசிகர்களின் ஓட்டு பா.ம.க - அ.இ.அ.தி,மு,க வை கொஞ்சம் பாதிக்கலாம். ஏன்னா ரஜினி ரசிகர்கள் பா ம க கூட்டணியான அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் ஓட்டு போடமாட்டார்கள் என்று தோன்றுகிறது. பொதுவாக விஜய்காந்துக்கு ரஜினி ரசிகர்கள் ஓட்டுப் போடுவதில்லை. அதனால் ரஜினி அபிமானிகளால் இந்த முறை பயன்பெறப்போவது காங்கிரஸ்-திமுக கூட்டணியாகத்தான் இருக்கும்.

ரஜினி ரசிகரகளுக்கு டாக்டர் ராமதாஸினால் ஏற்பட்ட நாவினாற் சுட்ட வடு இன்னும் ஆறி இருக்க வாய்ப்பில்லை. எத்தனை ரஜினி ரசிகர்கள், அபிமானிகள் ராமதாஸின் தாக்குதலை யெல்லாம் மறந்து இருப்பார்கள்? ரஜினி ரசிகர்களுக்கு டாக்டர் ராமதாஸ் என்றாலே ஒரு வெறுப்பு உண்டாகும் அளவுக்கு ஆகிவிட்டது என்றுகூட சொல்லலாம்.

நான் சொன்னதுபோல என்னுடைய கணக்குப்படி பார்த்தால் இந்த முறை ரஜினி ரசிகர்கள் ஓட்டு காங்கிரஸ்-தி.மு.க கூட்டணிக்குத்தான் போகும். ரஜினி ரசிகர்கள் ஓட்டு எந்தவிதமான பெரிய விளைவையோ, தேர்தல் முடிவை மாற்றம் செய்யும் ஃபேக்டர் இல்லை என்று விவாதிக்கலாம். அது ஒருபுறமிருக்க, யாருக்கு இவர்கள் ஓட்டுக்கள் போகும் என்றால் பெரும்பாலும் அவைகளைப் பெறப்போவது தி.மு.க- காங்கிரஸ் கூட்டணிதான்!

இல்லைனு சொல்றீங்களா? ஏன்? :-)