Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

Friday, September 18, 2009

உன்னைப்போல் ஒருவன் ( * * * *)- க்ரிடிக்ஸ் லவ் திஸ் ஒன்!


விகடன், கமல் படங்களுக்கு இப்பொதெல்லாம் சரியான மதிப்பெண்கள் கொடுப்பதில்லை. 50 மதிப்பெண்களுக்கு மேல் விகடனில் பெற்ற கமல் படம் சமீபத்தில் இல்லை. "கமல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறார். விகடந்தான் கீழே போகிறது" என்று குற்றச்சாட்டுக்கள் விகடன் மேல் உண்டு. அது ஓரளவுக்கு நம்பும்படியாகவும் உள்ளது.

இப்போ விகடன் விமர்சனத்தை "சேலன்ச்" செய்ய கமலின் உன்னைப்போல் ஒருவன் வந்திருக்கிறது.

sify and Rediff விமர்சனங்கள் (****) மேலே கொடுத்துள்ளன. க்ரிடிக்ஸ் இந்தப்படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள். கட்டாயம் பார்க்கவேண்டியபடம் என்கிறார்கள்! இதேபோல்தான் அனேகமாக எல்லா விமர்சனங்களும் வரப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த முறை ஆனந்த விகடன் எத்தனை மதிப்பெண்கள் கொடுக்கப்போகிறது? என்பது மில்லியன் டாலர் கேள்வி!

ஆனந்த விகடனுக்கு சரியான விமர்சனம் செய்து தங்கள் உயர்தரத்தை காப்பாற்றிக்கொள்ள அரிய வாய்ப்பு!

இல்லையென்றால் கமல் ரசிகர்களின் குற்றச்சாட்டு மெய்யாகிவிடும்!

விகடன் விமர்சனக்குழு!!! கவனம்! கவனம்!