இது ஒரு நகைச்சுவைப் பதிவு! டென்ஷன் எல்லாம் வேணாம்!
* பால் குடிக்கலாமா?
ஊஹூம் கூடாது! காஃபி இல்லைனா டியா போட்டு பாலைக் குடிங்க! அப்போ ப்ரவுனாயிடுது இல்ல?
காஃபிக்கு சீனி போடலாமா? வெல்லம் இல்லைனா கருப்பட்டிதான் போடணும்!
* அப்போ தயிர்? மோர் எல்லாம்?
அதெல்லாம் சாண்ஸே இல்லை!
* சாதம்? வெள்ளைச் சாதம்?!
கூடவே கூடாது! ஒண்ணு பண்ணுங்க, சாம்பார், குழம்பு எதையாவது சாதத்தோட கலந்து கலரை மாத்தி சாப்பிட்டால் ஓ கே!
* சர்க்கரை? வெள்ளை சர்க்கரை, அதான் சீனினு சொல்லுவாங்களே?
அதை மொலாஸெஸ் எல்லாம் பிரிக்காமல் கலந்து சாப்பிட்டால் நல்லது. நீங்க நூறாண்டு வாழலாம்!
* இட்லி, இடியாப்பம், ஆப்பம், வெண்பொங்கல் இதெல்லாம்?
அதான் சொன்னேன் இல்லை, ஏதாவது குழம்பு, அல்லது சாம்பாரை கலந்து, கலரை மாத்தி ஒரு பிடி பிடிங்க!
Anyway, enough BS!
நண்பர் ஜெயதேவ், சர்க்கரையை ரிஃபைன் பண்ணாமல் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதுனு ஏதோ சொல்றாரு..
ஆனால் இப்போலாம் காலரிகள்தான் கணக்கு செய்றாங்க! இதை சாப்பிடக்கூடாது இதை சாப்பிடலாம் என்பதெல்லாம் யாரும் ரொம்ப பெருசு படுத்துவதில்லை!
சப்போஸ் உங்களுக்கு கொலெஸ்டிரால் அதிகமா இருந்தால் எதை குறைப்பீங்க?
ஆயில், மாமிசம் அது இதுனு சொல்லுவீங்க! அப்படித்தானே?
உங்க டோட்டல் கொலெஸ்டிரால் எப்படி கணக்கு பண்ணுவாங்க என்றால், உங்க ரத்தத்தில் இருக்க எல் டி எல் கொலெஸ்டிரால், எச் டி எல் கொலெஸ்டிரால் வி எல் டி எல் கொலெஸ்டிரால் அப்புறம் உங்க ட்ரைக்ளிசரைட் எல்லாத்தையும் போட்டு கூட்டித்தான் தருவாங்க.
அரிசியை எல்லா நேரமும் சாப்பிடுறவங்க உங்க ரத்தத்தில் உள்ள ட்ரைக்ளிசரைடை குறைத்தாலே கொலஸ்டிராலை குறைத்துவிடலாம்.
அதுக்கு என்ன செய்யணும்?
கார்போஹைட்ரேட் இன் டேக், அதாவது மெயினா அதிகமாக சாதம் சாப்பிடுவதை, பொட்டட்டோ சாப்பிடுவதை குறைக்கணும்! ஆயில், மாமிசம் சாப்பிடுவதை அல்ல! மாமிசம், ஆயிலை எல்லாம் குறைத்துவிட்டு சாதம் அதிகம் சாப்பிடுவது உங்க கொலெஸ்டிராலை கூட்டும்! :)
அதோட ரெகுளராக "வொர்க் அவ்ட்" டும் பண்ணணும்! :)
******************
சரி, நம்ம வெல்லம் (மண்ட வெல்லம்? அச்சு வெல்லம்? ) அப்புறம் கருப்பட்டி எல்லாம் எப்படி தயாரிக்கிறாங்கனு போய் தேடிப் பார்த்தால்... நண்பர் ஒருவர் கருப்பட்டி எப்படி தயாரிக்கிறதுனு சிரத்தையுடன் ஒரு குறும்படம் எடுத்துப் போட்டு இருக்காரு.
ராம்நாட் மாவட்டத்தில் சாயல்குடியில் பனைத்தொழில் செய்றவங்க, எப்படி கருப்பட்டி த யாரிக்கிறாங்கணு விவரித்து இருக்காரு.
I thought it was interesting!
Please check out this youtube link!
இந்த குறும்படம் தயாரித்ததின் நோக்கமும் இங்கே கொடுத்துள்ளார்.
Published on Oct 17, 2012
This documentary describes the day-in-life of a person who makes Karuppatti (Palmyra Sugar) from Pathaneer (Palmyra sap).
பதநீரில் இருந்து கருப்பட்டி (பனைவெல்லம்) செய்யும் ஒரு குடும்பத்தின், வாழ்க்கையின் ஒரு நாளைப் படம் பிடித்துக்காட்ட முயற்சி செய்திருக்கிறேன்.
தனக்குக் கடன் கொடுத்த வியாபாரி அல்லது இடைத்தரகர்களுக்கே நியாயமற்ற விலையில் விற்கவேண்டிய கட்டுப்பாடு. தாங்கள் உண்டாக்கிய பொருளைத் தன்னால் விலை நிர்ணயிக்க முடியாத ஒரு சூழலில், கிட்டத்தட்ட ஒரு அடிமைத்தொழிலாளி போல, அபாயங்களின் விளிம்பிலும், அரைநிர்வாண ஆடையிலும், கொட்டும் மழையிலும், கொழுத்தும் வெய்யிலிலும், அனல் பறக்கும் இராச்சச அடுப்பின் வெப்பத்திலும் உழைக்கும் வர்க்கத்தின் நிலையை, ஒரு துளியளவு மாதிரி என ஒரு குடும்பத்தை எடுத்து மக்களுக்குக் காட்டும் முயற்சி... தங்களோடு பிண்ணிப்பிணைந்த இந்தத் தொழிலை விட்டு இவர்களால் வெளி வர முடியுமா? அவர்களின் அடுத்த தலைமுறை இதிலிருந்து வெளிவர வேண்டாமா? இவர்களை மீட்க நாம் என்ன செய்ய முடியும்? இல்லை, இவர்கள் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டுமெனில், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமெனில் என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டும்? சற்றே யோசிப்போம்.
அன்புடன்
ஆறுமுகம் பேச்சிமுத்து
_________________________
அவ்ளோதான்! :)