Friday, July 11, 2008

காதல் கல்வெட்டு - 5

கயல் செல்பேசியை ஆஃப் பண்ணிவிட்டு அதை மார்போடு அணைத்தப்படி படுக்கையில் சாய்ந்தாள். தூக்கம் வரவில்லை, நினைவுகள் மீண்டும் கடந்த காலத்திற்கே அழைத்துச்சென்றது. அப்போது வருணை முதன்முதலில் சந்தித்து ஒரு 10 நாட்கள் இருக்கும். கயல் ஒரு நாள் தோழி ராஜியை ட்ராப் பண்ணியபோது, அவளுக்கு காஃபி போட்டுக்கொடுத்து ஒரு கோரிக்கையையும் வைத்தாள் ராஜி.

"கயல், ராம்ஜி உன்னிடம் ஒரு டின்னர் டேட் கேட்க சொன்னான். பாவம்டி, இதுவரை 2-3 தடவை கேட்டுவிட்டான்!"

"எனக்கு ஒண்ணும் ரொம்ப அப்பீலிங்கா தெரியலையே அவர்"

"போய்த்தான் பாரேன்! நீதான் இப்போ யாரையும் டேட் பண்ணலியே?'

"சரி ராஜி. கால் பண்ணி மெசேஜ் விட சொல்லு. சனிக்கிழமை டின்னெர் என்றால் ஓகே"

"ரொம்ப தேங்க்ஸ்டி"

"சரி உன் பாய்ஃப்ரெண்ட் ப்ரகாஷ் எப்படி இருக்கார்?"

"இருக்கார்"

"என்ன ஒரே சலிப்பு?"

"ஒவ்வொரு சமயம் உன்னைமாதிரி சிங்கிளா இருந்து இருக்கக்கூடாதானு தோனுது"

"யாருக்கு? உனக்கா?"

"ஏன் இருக்கக்கூடாதா?"

"என்னவோ போ!"

"சுடுகாட்டு ஞானோதயம் எல்லாம் அந்த நிமிடம் மட்டும்தான்-னு சொல்றியா?

"நான் உன்னை ஒண்ணு கேக்கட்டுமா ராஜி?"

"Go ahead"

"ஏன் முதல் டேட்டிலேயே இந்த ஆண்கள் நம்ம உடம்பு மீது அத்தனை இண்ட்ரெஸ்ட் காட்டறாங்க?"

"எனக்கு சரியா தெரியாது, ஒருவேளை டேட்னாலே 'அதற்கு' தான் என்று நினைச்சிருக்கலாம்"

"ஒருவரை காதலிக்காமல் ஒருவருடன் நல்லா பழகாமல் எப்படி ஃபிசிகலா க்ளோஸ் ஆவது? எனக்கு புரியலை!"

"உனக்கு எப்போ காதலில் நம்பிக்கை வந்தது?"

" இப்போவும் இல்லைதான். சும்மா தான் கேட்டேன்"

"அதென்னவோ கயல், ப்ரகாஷும் எக்சப்சன் கிடையாது இந்த விசயத்தில்"

" எனக்கு தெரியும்"

"செக்ஸ்தான் எங்க ரிலேஷன்ஷிப்பை ஸ்ட்ரெங்தென் பண்னியதுனுகூட நான் சொல்லுவேன், நான்"

"yeah, you give what he asks for, then everybody is happy right?"

"Well, that is how it works in most cases"

"செக்ஸ் எனக்கு பிடிக்காதென்று சொல்லவரல ராஜி"

"எனக்கு தெரியும் கயல். I understand your point"

"சில சமயம் இந்த விஷயத்தில் அமரிக்கன்ஸை விட நம்ம ஆட்கள் மோசமா இருக்காங்க ராஜி, பெண்களையும் சேர்த்து"

காரில் புறப்பட்டு வீடு போகும்போது, ராம்ஜியை ஞாபகப்படுத்திக்கொண்டாள். ராஜியுடன் வேலை செய்பவர் அவர், வட இந்தியர்.தமிழ் கொஞ்சம் பேசுவார். பார்தால் ஜெண்டில்மேன் மாதிரி தெரிந்தார். ஆள் நல்ல சிகப்பா, உயரமா இருப்பார். ஆனால் கயலுக்கு ஏனோ ராம்ஜி மேல் பிடிப்பு வரவில்லை.

திடீரென, ராஜி அவளை, 'காதலில் எப்போ உனக்கு நம்பிக்கை வந்தது' என்று கேலியாக கேட்டது ஞாபகம் வந்ததும், தனக்குள் சிரித்துக்கொண்டாள், கயல். ஏனோ அவளுக்கு வருண் ஞாபகம் வந்தது. வருண் ஒண்ணும் ரொம்ப அழகு என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் அவரிடம் ஏதோ காந்த சக்தி இருந்தது. நிச்சயம் அவரை மறுபடியும் பார்க்கனும் என்று ரொம்ப ஆவலாக இருந்தது. ஃபோன் நம்பர் கூட கேட்டு வாங்கிக்கொள்ளாமல் போய்விட்டாரே என்று கோபம் வந்தது அவளுக்கு.

"ஃபோன் நம்பர் கேட்டிருந்தால் அவர் மேலே உள்ள மரியாதை குறைந்திருக்குமோ?" ஒரே குழப்பமாக இருந்தது. கயலுக்கு. ஏற்கனவே சில ஆண்களை அவளுக்கு கடந்த காலங்களில் பிடித்திருக்கிறது, பழகி இருக்கிறாள், அளவோடு. ஆனால் அதெல்லாம் காதலென்று அவள் நம்பவில்லை.

அவள் அதை உணர்ந்து அவர்களிடம் இருந்து ஒதுங்கிய போது ஆண்களிடமிருந்து வருகிற ரியாக்ஷனை நினைத்தால் அவளுக்கு கொஞ்சம் பயமாகக்கூட இருக்கும். அவர்களை இன்சல்ட் பண்ணியதாகத்தான் எடுத்துக்கொள்கிறார்கள். ஏன் ஈசியா எடுத்துக்கக்கூடாது? ஆண்கள், அவளுக்கு இன்றுவரை புரியாத புதிர்தான். இப்படியே யோசித்துக்கொண்டு வரும்போது வீடும் வந்துவிட்டது. வீட்டில் வந்தவுடன் மெசேஜெஸ் செக் பண்ணினாள். ஒரு மெசேஜ் ராம்ஜீயிடம் இருந்து வந்து இருந்தது.

அவளை சனிக்கிழமை மாலை 6:45 க்கு வந்து பிக் அப் பண்னிக்கொள்கிறேன் என்றும், தயாராக இருக்க சொல்லியும் மெசேஜ் இருந்தது. மெசேஜ் கோரிக்கை போல இல்லாமல் ஏதோ இவளுக்கு உத்தரவு போடுவது போல இருந்தது. "இவர் யார் எனக்கு ஆர்டர் போட?" கயலுக்கு எரிச்சலாக இருந்தது.


- தொடரும்

31 comments:

  1. //ஆனால் அவரிடம் ஏதோ காந்த சக்தி இருந்தது. நிச்சயம் அவரை மறுபடியும் பார்க்கனும் என்று ரொம்ப ஆவலாக இருந்தது.//

    உங்களையே நீங்க புகழ்ந்துக்க வேண்டியது தான், வேறென்ன செய்யறது? JK

    நல்லா இருக்கு உங்க கல்வெட்டு 5

    ReplyDelete
  2. ஆமாம், இப்படி ஏதாவது கதை எழுதி என்னை நானே புகழ்ந்துக்க வேண்டியதுதான் போல! ;-)

    ReplyDelete
  3. //"ஒவ்வொரு சமயம் உன்னைமாதிரி சிங்கிளா இருந்து இருக்கக்கூடாதானு தோனுது"
    //

    இதுக்கும் என்னோட இன்றைய பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..இருந்தால் தற்செயலானதே..

    :-))

    ReplyDelete
  4. :)))

    நல்லாதான் செதுக்குறீங்க உங்க காதல் கல்வெட்ட :)))

    ReplyDelete
  5. //நல்லாதான் செதுக்குறீங்க உங்க காதல் கல்வெட்ட /

    ரொம்ப நன்றி ஜி. :)

    ReplyDelete
  6. //இதுக்கும் என்னோட இன்றைய பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..இருந்தால் தற்செயலானதே..

    :-))/

    உங்க பதிவு என்ன? பார்த்துட்டு வந்து சொல்றேன்.

    ReplyDelete
  7. //ஆமாம், இப்படி ஏதாவது கதை எழுதி என்னை நானே புகழ்ந்துக்க வேண்டியதுதான் போல! ;-)

    //

    ஐயோ பாவம் :)

    ReplyDelete
  8. நன்றாக இருக்கிறது. அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  9. //ஒரே குழப்பமாக இருந்தது. கயலுக்கு.//

    கயல்..கயல்னு கயல் பத்தி மட்டுமே நிறைய சொல்றீங்க..வருண் பத்தி ஊறுகாய் அளவுக்கு மட்டுமே வருது.

    Atleast ஆண்களுக்கு 33% குடுக்கலாம்ல ???

    என்ன வருண்..
    நீங்க இருக்கிறது அப்பப்போ Posted by பாத்துதான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு.

    :-))

    ReplyDelete
  10. ஆமாம் வருண், உங்களைப்பற்றியும் நீங்க பேலன்ஸ்டா எழுதனும்.

    ReplyDelete
  11. வழிப்போக்கன்& கயல்:

    இந்தக்கதை கயலைச்சுற்றியதே. வருண் ஒரு மாதிரி மிஸ்டரி கேரக்டர்தான். வருணைப்பற்றி இந்த "கயலுக்கு" த்தெரிந்த அளவுதான் வாசகர்களுக்குத் தெரியும.:(

    மற்றபடி கயலைப்பற்றி எழுதும் போதுதான் எனக்கு எழுத வருது. கயல்தான் ரொம்ப இண்டெரெஸ்டிங் ஆன கேரக்டராக ஆசிரியருக்கு தோன்றுவதால்னு நினைக்கிறேன். :)

    இது நிச்சயமாக என் பலவீனம்தான்!

    ReplyDelete
  12. நன்றி, ஜீ, மற்றும் வெண்பூ! :)

    ReplyDelete
  13. வருண், நீங்க என்னை செக்ஸ் அண்ட் த சிட்டி சமந்தா மாதிரி ஒரு கேரக்டர் பில்டப் தர நினைக்கிறீர்கள் போல JK :)

    ReplyDelete
  14. *** கயல்விழி said...

    ஐயோ பாவம் :)***

    உனக்கொண்ணு தெரியுமா? உன்னை ப்ளீஸ் பண்றதுக்குத்தான் என்னை நான் பெருசா புகழ்ந்து எழுதுவது. என்னை மட்டும்தட்டி எழுதினால் நீ பாவம் இல்லையா? :-)

    ReplyDelete
  15. ***கயல்விழி said...
    வருண், நீங்க என்னை செக்ஸ் அண்ட் த சிட்டி சமந்தா மாதிரி ஒரு கேரக்டர் பில்டப் தர நினைக்கிறீர்கள் போல JK :)***

    நீ நீதான் கயல்! கதைகளிலும், கற்பனையிலும், திரைப்படங்களிலும் ஏன் ரியல் வாழ்க்கையிலும் உன்னைப்போல் இன்னொருவரை பார்ப்பது இம்பாஸிபில்.

    You are certainly unique! :)

    ReplyDelete
  16. படத்துக்கு பேரும் காதல் கல்வெட்டுத்தானா??

    ReplyDelete
  17. அஹா என்ன இது புது முயற்சியா? வாழ்துக்கள் வருண் & கயல் :)

    ReplyDelete
  18. //நீ நீதான் கயல்! கதைகளிலும், கற்பனையிலும், திரைப்படங்களிலும் ஏன் ரியல் வாழ்க்கையிலும் உன்னைப்போல் இன்னொருவரை பார்ப்பது இம்பாஸிபில்.

    You are certainly unique! :)//

    தமிழ்நாட்டுல எனக்கு புடிக்காத விசயம் ஹிரோயின் வோர்சிப்தாங்க.
    JK :-))))

    ReplyDelete
  19. *****வழிப்போக்கன் said...


    தமிழ்நாட்டுல எனக்கு புடிக்காத விசயம் ஹிரோயின் வோர்சிப்தாங்க.
    JK :-)))) *****


    வழிப்போக்கன்!

    உங்களூக்கு ஹீரோ வொர்ஷிப்னாத்தான் பிடிக்குமாக்கும்? LOL!

    நீங்கள் கவனித்துப்பார்தால் நாம் எல்லோருமே யுனிக் தான். அதனால் நான் இதில் எதுவும் மிகைப்படுத்தி சொல்லவில்லை! LOL!

    --------------------

    வாங்க ரம்யா ரமணி! :)

    ReplyDelete
  20. நன்றி ரம்யா ரமணி, வழிபோக்கன், வெண்பூ, இவன் மற்றும் ஜி :)

    உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  21. வருண்,

    உங்க ஹீரோயின் வொர்ஷிப்பை அடுத்தமுறை "வருண் டிப்ஸ்"-ல் போடலாம் என்று நினைக்கிறேன், நீங்க என்ன நினைக்கறீங்க?

    ReplyDelete
  22. வழிப்போக்கன்,

    எந்த தமிழ் படத்தில் ஹீரோயின் வொர்ஷிப் இருக்கு? :) :)

    ReplyDelete
  23. //ஆமாம், இப்படி ஏதாவது கதை எழுதி என்னை நானே புகழ்ந்துக்க வேண்டியதுதான் போல//
    ஹ ஹ ஹா, கயல் ப்ரூப் பார்த்து திருத்துவாங்களா?:):):)

    ReplyDelete
  24. ரப்!!!

    எப்படி இதெல்லாம்??!!!

    ஆமாம், கயல்தான் "செண்ஸார்" எடிட்டர் எனக்கு! :-)

    ReplyDelete
  25. வருண் said...
    ****கயல்விழி said...
    வருண்,

    உங்க ஹீரோயின் வொர்ஷிப்பை அடுத்தமுறை "வருண் டிப்ஸ்"-ல் போடலாம் என்று நினைக்கிறேன், நீங்க என்ன நினைக்கறீங்க?****

    நான் என்ன நினைப்பேன்?

    நீ எது செய்தாலும் அது ஒரு அழகா அர்த்தமாத்தான் இருக்கும், கயல்! ;-)
    (இதையும் சேர்த்துக்கோ, கயல்! :-?)

    13 July, 2008 2:06 PM

    ReplyDelete
  26. ஹலோ கவிதானியி ராப்

    ஆமாம், இப்போதெல்லாம் வருணுடைய கல்வெட்டுக்கு நான் தான் சென்சார் அதிகாரி :) :)

    தந்தைகுலங்கள் ரொம்ப ரெக்வெஸ்ட் பண்ணியதால் இந்த நடவடிக்கை.

    ReplyDelete
  27. வருண்

    ஐஸ் கேள்விப்பட்டிருக்கேன், நீங்க ஐஸ் மலையையே வைக்கறீங்க

    ReplyDelete
  28. கூர்ந்து கவனித்துக்கொண்டுஇருக்கிறேன்!

    ReplyDelete
  29. நன்றி லதானந்த சித்தர் :)

    ReplyDelete
  30. ஸாரி.. கயல் மற்றும் ராப்,

    ப்ளாக்குகளில் சில பெரிசுகளும் (ஸாரி.. அண்ணன்மாரும்) ., முட்டையைக்குடித்துவிட்டு எழுதவந்தவர்களும், சோத்துக் கும்மியடிப்பவர்களும்தான் மொக்கைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன். (மைல்ட் பிரிவைச் சார்ந்தவர்களைக் குறிப்பிடவில்லை. நானும் அதில்தான் வருவேன் என்று நம்புகிறேன். மைல்ட் என்பதை புரிந்து கொள்ளாமல் உதைக்க வராதீர்கள்). உங்களின் தீவிர சிந்தனை (குறிப்பாக முந்தைய பதிவு) அனுபவமோ அல்லது கதையோ வரவேற்கத் தகுந்தது. (குறிப்பாக பரபரப்பு தலைப்புக்கள் இடாமலிருப்பது பாராட்டத்தகுந்தது.)
    மனமுவந்த பாராட்டுகள் உங்களுக்கு!

    ReplyDelete
  31. நன்றி தாமிரா.

    முதலில் நீங்க ஸாரி என்றவுடன் பயந்துவிட்டேன், அப்புறம் படிச்சா தான் பாராட்டுவது தெரியுது.

    மைல்ட் என்றால் என்ன?

    ReplyDelete