Tuesday, July 15, 2008

அணு சக்தி, ஒரு மாறுபட்ட பார்வை

நண்பர் வழிப்போக்கனின் கோரிக்கையை ஏற்று இந்த புது பதிவு. வழக்கமாக அணு சக்திக்கு எதிராக எழுதுவது தான் பாப்புலர் வியூ என்றாலும், அணு சக்திக்கு ஆதரவாக எழுதப்போகிறேன். கடந்த இரண்டு நாட்களாக என்னால் இயன்ற ஆராய்ச்சி செய்துப்பார்த்ததில் அணு சக்திக்கு ஆதரவாகவே முடிவெடுக்க வேண்டி இருக்கிறது.

அணு சக்தி என்பது தேவைக்கு அதிகமாக over exaggerate செய்யப்படுவது முதல் பிரச்சினை. நான் உபயோகிக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளில், பல பொருட்களுக்கு நன்மைகள் இருப்பது போலவே தீமைகளும் இருக்கிறது. அணு சக்தியும் அப்படியே. இந்தியாவுக்கு அணு சக்தி தேவை இல்லை, குறைவான மின்சாரத்தை வைத்து சமாளிக்கலாம் என்று கருதுவோமானால், தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளை விட பின் தங்குவது உறுதி. ஏற்கெனெவே இந்தியாவின் அரசியலைப்பு துஷ்பிரயோகத்தால் தொழில் நுட்பத்திலும், வளர்ச்சியிலும் மற்ற ஆசிய நாடுகளை விட மிகவும் பின் தங்கி விட்டோம். தற்போது இருக்கும் அவுட் சோர்சிங்கும் போய்விட்டது என்றால் இந்திய பொருளாதாரத்தின் நிலை என்னவாகும் என்று கவனமாக சிந்தித்துப்பார்க்கவேண்டும். இது போன்ற sensational விஷயங்களில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல், அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க வேண்டும்.

அணு சக்தியால் ஏற்படும் தீமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் காரணம், கடந்த காலங்களில் அணு ஆயுதங்களினால் ஏற்பட்ட பாதிப்புகளும், அதன் விளைவுகளும், அணு கழிவுகளைப்பற்றிய பயங்களும். இன்றைய காலக்கட்டத்தில், அணு சக்தியை பற்றி இந்த அளவு கவலைக்கொள்ள தேவை இல்லை. அணு ஆயுதம் என்பது வேறு, அணு சக்தி என்பது வேறு. இரண்டையும் கான்ஷியசாக இல்லாவிட்டாலும் சப்-கான்ஷியசாக குழப்பிக்கொள்வதே பல பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. விமர்சகர் திரு. ஞானி எழுதுவதை அப்படியே எடுத்துக்கொள்ளத்தேவை இல்லை. திருவிளையாடல் படத்தில் நாகேஷ் சொல்லுவாரே, "பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள், குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்". அது போல, திரு. ஞானி எந்த விஷயமாகட்டும், எதிர்மறையாகவே விமர்சனம் எழுதி பிரபலமாக நினைப்பவர். போதாத குறைக்கு திமுக அரசை வேறு அவருக்கு பிடிக்காமல் போய்விட்டது, இனி சொல்லவா வேண்டும்?

பலரது மனதை நெருடும் அணு கழிவுகளைப்பற்றி முதலில் பார்க்கலாம். அணு கழிவுகளாக கருதப்படும் பொருட்களில், 95% மூலப்பொருட்கள் அப்படியே இருக்கிறது. எனவே, அணு கழிவுகளை திரும்ப உபயோகிப்பதின்(Re-cycle) பிரச்சினையை பெருமளவு குறைக்கலாம். உபயோகித்தது போக மீதமிருக்கும் அணு கழிவுகளை பூமிக்கடியில் புதைத்து வைக்கும் போது 100,000 ஆண்டு காலத்துக்கு லீக் ஆக முடியாத டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 100,000 ஆண்டு காலத்துக்கு பிறகு மனித இனமே இருக்குமா என்பது சந்தேகமே. எலக்ரோட் பேரல் முறையும் பாதுகாப்பான அணு கழிவகற்றும் முறையே. இதை பற்றி எல்லாம் டெக்னிகலாக விளக்கி போரடிக்க விருப்பமில்லை. சிம்பிளாக சொல்வதென்றால், அணு கழிவுகளை கட்டிப்பிடித்துக்கொண்டு யாரும் தூங்க நினைக்காத வரையில் பாதிப்பில்லை.

அணு ஆலைகளால் கதிர்வீச்சு பிரச்சினை இருக்கப்போவது உண்மை, அது நமக்கு தெரியும். ஆனால், நாம் மிகச்சாதாரணமாக பயன்படுத்தும் பெட்ரோலியம்(க்ரூட் ஆயில்), நிலக்கரி போன்ற எரிபொருட்களை பயன்படுத்தும் போதும், வெளிவரும் கதிர்வீச்சும், நச்சுப்பொருட்களும் அணு ஆலையில் இருந்து வெளி வரும் கதிர்வீச்சை ஒப்பிட்டால் பல மடங்கு வீரியமானது, ஆபத்தானது என்று நமக்கு தெரியுமா? நிலக்கரி எரிபொருளில் பொட்டாஷியம்,பேரியம், தோரியம் போன்ற ரேடியோ ஆக்டிவ் கதிர்களும், பெட்ரோலியத்தில் ரேடியம் மற்றும் அதன் சகோதர கதிர் வீச்சுகளும் விளைகின்றன(நன்றி:திரு. கையேடு). அது மட்டுமில்லாமல் பூமியிலேயே இயற்கையாக தென்படும் ரேடியோ ஆக்டிவ் யூரேனியமும், தோரியமும், மனித உடலின் மூலப்பொருளான பொட்டாஷியமும் ரேடியோ ஆக்டிவ் பொருட்களே. இவை எல்லாம் கண்டுக்கொள்ளப்படாமல் பயன்படுத்தப்படும் போது(இந்தியாவில் வாகனங்களுக்கு ஸ்மாக் டெஸ்ட் கிடையாது என்பது நாம் அறிந்ததே), அணு சக்திக்கு மட்டும் ஏன் இத்தனை கொந்தளிப்பு? மற்ற எரிபொருட்களை ஒப்பிடும் போது அணு சக்தி சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானது என்பது உண்மை. மக்காத கழிவுகளான அலுமினியம், ப்ளாஸ்டிக் போன்ற கழிவுகளைப்பற்றி நாம் ஏன் இத்தனை கவலைப்படுவதில்லை? நம் உணவுப்பொருட்களில் சட்டரீதியாகவே உபயோகிக்கப்படும் நச்சு ஹார்மோன்களினால் தினம் தினம் நம் உடல் நிலை பாதிக்கப்படுகிறதே, அதை பற்றி கவலைப்பட்டிருக்கிறோமா? என்றாவது ஒரிரண்டு நச்சு ஹார்மோன் கட்டுரைகளை அலட்சியமாக படிப்பதோடு சரி. அதை விடுங்கள், தொழிற்சாலை கழிவுப்பொருட்களை நிலத்தடி நீரிலும், கடலிலும் கலப்பது பற்றி? அதற்காக தொழிற்சாலையே வேண்டாமா? ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததால் சூரியக்கதிர்களால் வரும் கதிர்வீச்சு உலகின் அனைத்து அணு உலைகளால் விளையும் கதிர்வீச்சை விட அதிகமாம், எனவே சூரிய ஒளியை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா?

அணு சக்தியால் கிடைக்கும் மிகப்பெரிய நன்மை, இதனால் கிடைக்கும் மின்சாரத்தின் விலை ரொம்ப மலிவு + அதிக அளவில் மின்சாரம் தயாரிக்கலாம் என்பதே. தற்போது வளர்ந்து வரும் டெக்னாலஜிக்கு இந்த மின்சார சக்தி மிக முக்கியம். அணு சக்திக்கு மாற்றாக சொல்லப்படும் சோலார் பேட்டரிகளை தயாரிக்கும் செலவு, அது உருவாக்கும் மின்சாரத்தை விட அதிகம். ஹைட்ரொஜென் பேட்டரிகளை ட்ரான்ஸ்போர்ட் பண்ணுவதும், உபயோகிப்பதும் கடினம் என்பதோடு விலையும் அதிகம். காற்றாலைகளில் உருவாக்கப்படும் மின்சாரம் ரொம்ப குறைவு, மின்சாரம் உருவாக்க தேவைப்படும் நேரமும் அதிகம். எப்படிப்பார்தாலும் இன்றைய காலக்கட்டத்தில் அணு சக்தியே சிறந்த தேர்வாக எனக்கு தோன்றுகிறது.

இந்த நன்மைகளை கருத்தில் கொண்டு, ஃப்ரான்ஸ்(கவிதாயினி ராப் கோபம் கொள்ள வேண்டாம், உங்களையும், ஜேகே ரித்தீஷையும் புகழ்ந்து வேறு கட்டுரையில் எழுதி விடுகிறேன்) தனது 80% எனர்ஜி தேவைகளை அணு சக்தியைக்கொண்டே பூர்த்தி செய்கிறது, மற்ற நாடுகளுக்கும் விற்கிறது. சீனாவிலும், மற்ற ஆசிய நாடுகளிலும் மேலும் புதிய அணு ஆலைகளை கட்டும் வேலைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. மற்ற அமரிக்க, ஐரோப்பிய நாடுகளைப்பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவும் அணு சக்தியை சாமர்த்தியமாக உபயோகித்துக்கொள்வது தான் புத்திசாலிதனம்.

162 comments:

  1. /
    பலரது மனதை நெருடும் அணு கழிவுகளைப்பற்றி முதலில் பார்க்கலாம். அணு கழிவுகளாக கருதப்படும் பொருட்களில், 95% மூலப்பொருட்கள் அப்படியே இருக்கிறது. எனவே, அணு கழிவுகளை திரும்ப உபயோகிப்பதின்(Re-cycle) பிரச்சினையை பெருமளவு குறைக்கலாம். உபயோகித்தது போக மீதமிருக்கும் அணு கழிவுகளை பூமிக்கடியில் புதைத்து வைக்கும் போது 100,000 ஆண்டு காலங்களில் லீக் ஆக முடியாத டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    /

    அந்த டெக்னாலஜிய பத்தி விளக்கமாக கொஞ்சம் சொல்லுங்களேன் கயல்விழி

    ReplyDelete
  2. கதிரியக்கம், அணுக்கழிவுகளால் அபாயம் பற்றி திரு ஜெயபாரதன் அவர்கள் வலைப்பூவில் இன்னும் மிக மிக விவரமாக அறியலாம்

    http://jayabarathan.wordpress.com/

    அணு ஆராய்சி விஞ்ஞானி இவர்.

    ReplyDelete
  3. >>http://vettiaapiser.blogspot.com/2008/07/blog-post_13.html<<<

    >>> பிரான்ஸில் மற்றும் ஜப்பானில்(பிரான்சின் உதவியால் கட்டப்பட்டது) உள்ள அணுக்கழிவு ரீசைக்கிளிங் ஆலைகள்தான் இதற்கென வடிவமைக்கப் பட்டவை. ஆனால் இவ்விரண்டில் ஒன்று முற்றிலும் செயலிழந்து விட்டதென்றும், மற்றொன்றில் குவியும் கழிவுகளை ரீசைக்கிளிங் செய்து மாளாமல் அவ்வாலையிலேயே தேக்கி வைத்துள்ளனர் என்றும் படிக்கின்றோமே, நம் நாட்டில் என்ன செய்யப் போகிறோம்? அணுக்கழிவுகளை எவ்வாறு அகற்றப் போகிறோம்? <<<

    >>>> ஓரளவிற்கு சட்டத்தை ஞாயமாக செயல்படுத்தும் நாடான பிரான்சிலயே அனைத்து பாதுகாப்புகளும் செய்த பின்னரும் நிறைய நீர் வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவே, சாயப் பட்டறைகளின் அத்துமீறலை கூட சரியாக தட்டிக் கேட்காத நம் நாட்டின் நிலை என்னவாகும் <<<<

    >>>> பிரான்ஸில் பல ஆறுகளை பயன்படுத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி, அதற்கு மாற்றையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது, நம் நாட்டில் அது கொஞ்சமாவது சாத்தியமா? நிலத்தடி நீரிலிருந்து அவ்வளவும் பாதிப்புள்ளாகி மோசமான நிலை ஏற்படாதா, அதற்கு மாற்று ஏற்பாடு செய்வது சாத்தியப்படுமா? <<<

    ReplyDelete
  4. //அந்த டெக்னாலஜிய பத்தி விளக்கமாக கொஞ்சம் சொல்லுங்களேன் கயல்விழி//

    நிவேடா லாஸ் வேகசில் 100,000 ஆண்டு காலத்துக்கு லீக் ஆக முடியாத பேரல்களில் கழிவுபொருட்கள் புதைக்கப்பட போகிறது. எஃபீஷியண்ட் ரியாக்டர்களை கண்டுபிடிக்கும் வேலைகள் முடிந்தவுடன், அந்த கழிவுகள் தோண்டியெடுக்கப்பட்டு ரீசைக்கிள் செய்யப்படும். வருகைக்கு நன்றி திரு. மங்களூர் சிவா.

    ReplyDelete
  5. //அணு ஆராய்சி விஞ்ஞானி இவர்//

    நானும் அமரிக்க அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் புத்தகங்களையும், கருத்துக்களையும் கடந்த இரண்டு நாட்களாக படித்துவிட்டு தான் இதை எழுதினேன்.

    ReplyDelete
  6. //கழிவுகளை ரீசைக்கிளிங் செய்து மாளாமல் //

    கழிவு ரீசைக்கிளிங் பற்றி தெளிவாக எழுதி இருக்கிறேனே??

    ரீசைக்கிளிங் பெரிய பிரச்சினை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தீர்க்க முடியாத பிரச்சினை எல்லாம் இல்லை.

    ReplyDelete
  7. //நம் நாட்டில் என்ன செய்யப் போகிறோம்? அணுக்கழிவுகளை எவ்வாறு அகற்றப் போகிறோம்? //

    நம் நாட்டு விஞ்ஞானிகள் ரொம்ப புத்திசாலிகள். வளர்ந்த நாடுகளில் உபயோகிக்கப்படும் ரீசைக்கிளிங் முறைகளை பின்பற்றினாலே போதுமானது. அல்லது சவாலாக எடுத்துக்கொண்டு இன்னும் பெட்டரான மாற்று முறைகளை பின் பற்றலாமே?

    ReplyDelete
  8. //பிரான்ஸில் பல ஆறுகளை பயன்படுத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி, அதற்கு மாற்றையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது, நம் நாட்டில் அது கொஞ்சமாவது சாத்தியமா? நிலத்தடி நீரிலிருந்து அவ்வளவும் பாதிப்புள்ளாகி மோசமான நிலை ஏற்படாதா, அதற்கு மாற்று ஏற்பாடு செய்வது சாத்தியப்படுமா? //

    நம் நாட்டு நிலத்தடி நீரை மாசுப்படுத்த அணு ஆலைகள் தேவை இல்லை, தொழிற்சாலைகளே போதும். ஆறுகளில் அணு கழிவுகளை எப்படி கலந்தார்கள் என்ரு தெரியவில்லை, ஆனால் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

    மற்ற நாடுகள் செய்யும் தவறுகளை மனதில் கொண்டு நாம் அமைக்கும் அணு ஆலைகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்றலாம்.

    ReplyDelete
  9. கயல்விழி, இவ்விஷயத்தில் நீங்க சொல்வது கொஞ்சம் மேம்போக்கான கருத்துன்னு எனக்குப் படுகிறது, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் கொள்கை எப்பொழுதோ மாறிவிட்டது, நீங்க தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதால், என் பதிவில் போட்ட சில பின்னூட்டங்களை இங்கும் காப்பி செய்து பதிவிடுகிறேன். எனக்கும் நம் நாடு எல்லாத் துறையிலும் முன்னேற வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் நிறையப் பேர் நினைப்பதை போல இவ்விஷயத்தில் (அணு உலைகள்)அதன் பாதிப்புகள் சிறியதில்லைங்கறது நான் பார்க்கும் கேட்கும் அனைத்து விஞ்ஞானிகளின் கருத்து(நான் ஏன் போய் அவங்கள பார்த்தேன்னு எழுதினா இது பர்சனல் பதிவாகிடும், அதாலதான் எழுதவில்லை)

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி யாத்ரீகன். கவிதாயினியின் கட்டுரையை ஏற்கெனெவே படித்துவிட்டேன். அவர் கருத்து என்னவென்று அறிந்திருக்கிறேன்.

    இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  11. **** நம் நாட்டு விஞ்ஞானிகள் ரொம்ப புத்திசாலிகள். வளர்ந்த நாடுகளில் உபயோகிக்கப்படும் ரீசைக்கிளிங் முறைகளை பின்பற்றினாலே போதுமானது. அல்லது சவாலாக எடுத்துக்கொண்டு இன்னும் பெட்டரான மாற்று முறைகளை பின் பற்றலாமே?****

    நானும் அதைத்தான் நினைத்தேன் கயல்! இது யுனிவேர்ஷல் ப்ராபிளம்! நாமாக மட்டும் போராட வேண்டியதில்லை! உலக நன்மைக்காக இந்த முறையை வல்லரசுகள் நமக்கும் மனமுவந்து தரலாம்! :)

    ReplyDelete
  12. இனி பிறர் இட்ட பின்னூட்டங்களுக்கு நான் அளித்த பதிகள் இங்கே:
    //இன்றைய அரசியல் கட்சிகளிடையே அணுசக்தியினை நாட்டு வளப்பணிகளுக்கு பயன்படுத்துவது பற்றி இணக்கம் நிலவுவதாகவே தெரிகிறது. இந்திய அணுசக்தி நிறுவனத்தினால் ஏற்கெனவே அணுமின்நிலயங்கள் இயக்கப்பட்டு வருகின்றன//

    அப்படி முழுசா யாரும் செய்யறதில்லைங்க. ஒரு உதாரணத்துக்கு பாருங்க தோரியத்திலிருந்து கிடைக்கும் யுரேனியம்-233ஐ வெறும் ஆக்கப்பூர்வமா மட்டுமா பயன்படுத்துகிறார்கள்? உலகத்தில் அவ்வளவு நல்ல தூய நாடே இல்லைங்களே:):):)
    அதுமட்டுமில்லாம அணுசக்தி உற்பத்தியினாலயே எக்கச்சக்க தீர்வில்லா நோய்களும், பிரச்சினைகளும் ஏராளம் ஏராளம். அப்படி இருக்கும்போது அதனை உபயோகப்படுத்துவதை குறைத்துக் கொள்வதுதானே உலகிலுள்ள அனைத்து நாடுகளின் கடமை.
    சந்ததி சந்ததியாக பாதிப்பு ஏற்படும், கழிவுகளை முழுமையாக அழிக்கவும் முடியாது, ரீசைக்க்ளிங்கும் செய்ய முடியாது, குறைந்தபட்சம் அடுத்த பத்தாண்டுகளுக்காவது இவற்றுக்கு தீர்வும் கிடையாது. சரி நாம் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு பத்தாண்டுகளுக்கு மேலாகும், அதனால் பொறுக்கலாம் என்றால், ஒருவேளை அப்பொழுதும் தீர்வு கண்டுப்பிடிக்கவில்லை என்றால் அதன் பாதிப்பு எந்த வகையிலும் பரிகாரம் தேட முடியாத ஒன்றாகும் இல்லைங்களா:):):)
    பாதிப்பு கழிவினால் மட்டுமென்றால் சரி, ஆனால் பாதிப்பு அனைத்து பரிமாணங்களிலும் இருக்கும்போது படிப்படியாக அதிலிருந்து விடுபடுவதுதானே சிறந்தது:):):)

    ReplyDelete
  13. //இன்றைய சூழ்நிலையில் அணுசக்தி என்பது ஒரு ஆப்சன். நாளை வேறு கண்டுபிடித்தால் இதை விட்டுவிடலாம் பிரான்சு போல//
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
    பிரான்ஸில் விட்டுட்டாங்களா? நான் அப்படி சொல்லலைங்க. இங்க இன்னமும் முழுசா பயன்படுத்திக்கொண்டுதான் இருக்காங்க

    //பிரான்சு சிலதை நிறுத்திவிட்டார்கள் என்று சொன்னிர்கள், அதற்கான மாற்று மின்சாரம் எங்கே இருந்து வருகிறது இப்போது ??//
    இரண்டாம் உலகப்போருக்கும் அப்புறமும் கோல்ட் வாரின்போதும் முன்னேறிய நாடுகள் அனைத்தும் தங்களோட பலத்தை நிரூபிக்க நெறைய விஷயங்களை அதோட சாதக பாதகம் பார்க்காம வீம்புக்கும், எப்படியாவது நம்பர் ஒன்னாகனும்னும் செஞ்சுட்டாங்க. இப்போ ஆப்பசைத்த குரங்கு கதை கேள்விப்பட்டிருக்கீங்களா, அதேப் போல முழிக்கிறாங்க. இப்போ பிரான்ஸில் சில உலைகளை மூடினாலும்(போன வாரம் கூட மிக மிகச் சிறு அணுக கசிவு இண்டெர்ணலாக ஏற்பட்டுச்சுன்னு ஒரு உலையை மூடிட்டாங்க) இன்னும் செயல்பட்டுகிட்டு இருக்க உலைகளை வெச்சு ரொம்ப காலம் ஓட்டலாம். பிரான்சோட பெரிய வருமானங்கள்ள ஒன்னு இந்த மின்சாரத்தை பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கிரதுதான். மேலோட்டமா பார்க்க ஆஹா எவ்வளவு பயன்கள்னு தோணினாலும், நிஜத்தில் பல அணு உலைகள் உள்ள பிரான்சின் தெற்குப் பகுதியில் சென்று பாருங்கள், இதோட நிஜ பாதிப்பென்னன்னு தெரியும். அங்குள்ள புள் பூண்டை சாப்பிடற ஆடு மாடுக்குக் கூட பாதிப்பிருக்குமொன்னு பயப்படுகிறார்கள். அங்கு விளையும் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில்லை. இப்போ பிரான்சு அரசாங்கம் மாற்று செய்யனும்னு நினைத்தாலும் ஒன்னுமே செய்ய முடியல, உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் விட இந்த அரசாங்கம் இதுக்கு எக்கச்சக்க ஆராய்ச்சியில் ஈடுபடறதுக்கு இதுவும் மிக முக்கிய காரணம். ஆனா குறைந்தபட்சம் இன்னும் இருபத்து ஆண்டுகளுக்காவது இதோட பாதகங்களில் இருந்து மீள்வதற்கு வழி கண்டுபிடிக்கப்பட இயலாதுங்கறாங்க. அது வரைக்கும் காத்துகிட்டு இருக்க முடியாத அளவு பாதிப்புகள் எக்கச்சக்கம்.

    ReplyDelete
  14. //இப்போதுள்ள கிட்டதட்ட அனைத்து மின்ஆலையுமே கடலோரத்திலேயே உள்ளது..இனிமேலும் அவ்வாறே நடக்கும்//
    பிரான்சிலும் பல உலைகள் கடலோரத்தில் உள்ளன, நான் கூறுவது மேம்போக்காக பார்க்க வேண்டுமானால், விவசாயத்தை பாதிக்காது போல் இருக்கலாம். ஆனால் நம் நாட்டில் பெரும்பான்மையாக விவசாயம் நிலத்தடி நீர், சிறு சிறு நதிகள், நீராதாரங்களை நம்பித்தான் உள்ளது, ஆனால் எங்கு அணு உலைகள் அமைந்தாலும் அது முதலில் அங்குள்ள இம்மூன்றயும்தான் பாதிக்கும். ஒரு உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால், கன்யாகுமரி மாவட்டம் கடற்கரை மாவட்டம் தான். ஆனால் அங்கு எக்கச்சக்க விவசாயப் பொருட்கள் விளைகின்றன, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு ஏற்கனவே ஒரு அணு உலை சம்பந்தமான சின்ன ஆலை இருக்கிறது. ஆனால் அது ஒரு சிறிய ஆலை. சரி விஷயத்துக்கு வருவோம், இங்கு ஒரு மிகப் பெரிய அணு உலையை அமைக்கிறோம்னு வெச்சுக்கங்க, அப்போ அங்கு விவசாயத்தின் நிலை என்னாகும் என கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அதேப் போல நமக்கு பிரான்சை விட கடலோர பாதுகாப்பு மிக மிக மிக அத்தியாவசியமாகிறது, ஏன்னா நமக்கு அண்டை நாடுகள்ல நிலவற அரசியல் குழப்ப நிலையினால்தான். அப்படி இருக்கையில் நாம் இப்படி அமைக்கும் அணு உலைகளுக்கு எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவேண்டி வரும். அதற்கு ஆகும் செலவு யோசித்துப் பாருங்கள். அதோடு இன்னொன்று, பிரான்ஸில் ஒரு சின்ன, கொஞ்சம் கூட பெரிய பாதிப்பு ஏற்படுத்தாத கசிவுக்கே, மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து ஒரு உலையை மூடிட்டாங்க. ஆனா நம்ம ஊரில் போபால் விஷ வாயு கசிவுக்கு காரணமான ஆட்களுக்கு மறுபடியும் லைசன்ஸ் கொடுக்க முயற்சி பண்ணாங்க. அதோட இன்று வரைக்கும் அதில் பாதிக்கப்பட்டவங்களுக்கு உரிய இழப்பீடு கூட தரவில்லை.

    ReplyDelete
  15. ராப்!

    விஞ்ஞானத்தில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. அனுசக்தியில் மட்டுமல்ல! எல்லாவிதமான கண்டுபிடிப்புகளிலும்!

    எயிட்ஸ்னு ஒரு வியாதி வரப்போகுதுனு நாம பிரிடிகட் பண்ணினோமா?

    இன்றைக்கு அதை எதிர்த்து போராடுகிறோம்.வெற்றி அடைகிறோம் இல்லையா?

    We have to face the problem to solve it! We cant run away from that!

    ReplyDelete
  16. //ரீசைக்கிளிங் பெரிய பிரச்சினை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தீர்க்க முடியாத பிரச்சினை எல்லாம் இல்லை.நம் நாட்டு விஞ்ஞானிகள் ரொம்ப புத்திசாலிகள். வளர்ந்த நாடுகளில் உபயோகிக்கப்படும் ரீசைக்கிளிங் முறைகளை பின்பற்றினாலே போதுமானது. அல்லது சவாலாக எடுத்துக்கொண்டு இன்னும் பெட்டரான மாற்று முறைகளை பின் பற்றலாமே//
    ரீசைக்கிளிங் பத்தி பல புத்தகங்களில் கூறியுள்ள தகவல்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்ங்க, உண்மையான நிலையே வேற:):):)

    ReplyDelete
  17. //கயல்விழி, இவ்விஷயத்தில் நீங்க சொல்வது கொஞ்சம் மேம்போக்கான கருத்துன்னு எனக்குப் படுகிறது, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் கொள்கை எப்பொழுதோ மாறிவிட்டது, //

    கவிதாயினி ராப்,

    நிச்சயம் தவறாக நினைக்க மாட்டேன். இன்னும் சொல்லப்போனால் நான் எதிர்பார்க்கும் அளவுக்கு யாருமே என்னுடன் வாதிடுவதில்லை. மாற்றுக்கருத்துக்களை எதிர்கொள்ளும் மெச்சூரிட்டி எனக்கு இருக்கிறது. உங்களுக்கும் இருக்கிறது என்று நன்றாக தெரிந்து தான் இந்த கட்டுரையையே எழுதினேன்.

    அமரிக்க மக்களின் கருத்து தற்போது மாறி வருகிறது. முன்பு இவர்களுக்கு பெட்ரோல் தாராளமாக கிடைத்து வந்ததால் மாற்று சக்திகளைப்பற்றி அமரிக்கர்கள் அதிகம் கவலைப்படவில்லை. ஆனால் தற்சமயம் நிலை அப்படி இல்லாததால் அமரிக்காவும் அணு சக்திக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.

    ReplyDelete
  18. //நானும் அதைத்தான் நினைத்தேன் கயல்! இது யுனிவேர்ஷல் ப்ராபிளம்!//

    நீங்கள் சொல்வது மாதிரியே இது ஒரு உலக பிரச்சினை வருண். அதனால் நாம் மட்டும் அதிகம் கவலைப்படுவது தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  19. நீங்க எய்ட்சையும் இந்தப் பிரச்சினையையும் கம்பேர் பண்ணி வாதம் பண்றது சரின்னு எனக்குத் தோணலைங்க. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சரி நீங்க உங்க வாதங்களை தெரிவிக்கறீங்க:):):) வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. //அணுசக்தி உற்பத்தியினாலயே எக்கச்சக்க தீர்வில்லா நோய்களும், பிரச்சினைகளும் ஏராளம் //

    இதை விட அதிகமாக மற்ற கண்டுபிடிப்புகளால் நமக்கு தீமை விளைகிறது.

    ஒரு சின்ன உதாரணத்துக்கு: பால் அதிகம் சுரப்பதற்காக மாடுகளுக்கு கொடுக்கப்படும் ஹார்மோன் ஊசிகளால் மனித உடலுக்கு எத்தனை பாதிப்பு தெரியுமா? சிறுமிகள் சீக்கிரமே வயதுக்கு வர இந்த ஹார்மோன்கள் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக அந்த ஹார்மோன் பயன்பாடு நிறுத்தப்பட்டதா? அது தான் இல்லை

    ReplyDelete
  21. //கழிவுகளை முழுமையாக அழிக்கவும் முடியாது, ரீசைக்க்ளிங்கும் செய்ய முடியாது, குறைந்தபட்சம் அடுத்த பத்தாண்டுகளுக்காவது//

    இதில் தான் எனக்கும் உங்களுக்கும் முக்கியமான கருத்து வேறுபாடு வருகிறது என்று நினைக்கிறேன். கழிவுகளை முழுமையாக அழிக்கத்தேவை இல்லை. திரும்ப திரும்ப அதையே பயன்படுத்தலாம். பயன்படுத்தபடாத கழிவுகளை பாதுகாப்பாக பூமியில் புதைத்து வைக்கலாம், அடுத்த பத்தாண்டுகளில் அணு கழிவுகளை முற்றிலும் அழிக்கக்கூடிய ரியாக்டர்கள் வந்து விடும். அதற்கு பிறகு பாதுகாப்பாக அந்த கழிவுகளை அகற்றலாம்.

    ReplyDelete
  22. //இரண்டாம் உலகப்போருக்கும் அப்புறமும் கோல்ட் வாரின்போதும் முன்னேறிய நாடுகள் அனைத்தும் தங்களோட பலத்தை நிரூபிக்க நெறைய விஷயங்களை அதோட சாதக பாதகம் பார்க்காம வீம்புக்கும், எப்படியாவது நம்பர் ஒன்னாகனும்னும் செஞ்சுட்டாங்க. இப்போ ஆப்பசைத்த குரங்கு கதை //

    இதில் தான் நமக்கும் மற்ற நாடுகளுக்கும் பெரிய வித்யாசம் வருகிறது.

    இந்தியா யாருக்கும் ஷோ ஆஃப் பண்ணவோ அல்லது வீம்புக்காகவோ அணு உலைகள் அமைக்கப்போவதில்லை. நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யவே உபயோகிக்கப்போகிறோம் என்பதால் சிந்தித்து செயல்படுவோம். மற்ற நாடுகள் செய்த தவறுகளை நாமும் திரும்பி செய்ய அவசியமில்லை.

    ReplyDelete
  23. //தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.//

    கவிதாயினி ராப்,

    நீங்க்ள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் தயவு செய்து "தவறாக நினைக்கப்போகிறோம்" என்று பயப்பட வேண்டாம். :) :) :)

    நீங்கள் தைரியமாக கடுமையாகவே வாதாடலாம்.

    ReplyDelete
  24. //ரீசைக்கிளிங் பத்தி பல புத்தகங்களில் கூறியுள்ள தகவல்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்ங்க, உண்மையான நிலையே வேற:):):)
    //

    ஒரு வேளை ப்ரான்சில் சரியான ரீசைக்கிளிங் முறையை பயன்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் சரியான முறையில் பயன்படுத்தினால் பாதுகாப்பான ரீசைக்கிளிங் ரொம்ப சாத்தியம்.

    ReplyDelete
  25. ராப்

    உங்கள் கருத்து ஒன்றில் எனக்கு பலமான நம்பிக்கை இருக்கிறது, அது அரசியல்வாதிகளின் நம்பிக்கை துரோகம். ஏன் நம்பிக்கை துரோகம் என்கிறேன் தெரியுமா? நம்பி ஓட்டுப்போடும் மக்களின் உயிருக்கும், உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் முடிவுகளையும், காம்பிரமைஸ்களையும் லஞ்சம் வாங்கிக்கொண்டு செய்வதற்கு வேறென்ன பெயர்?

    இதிலும் மக்கள் தான் விழிப்புணர்வோடு செயல்படவேண்டும்.

    ReplyDelete
  26. உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி திருமதி. ராப்.

    நீங்கள் அஃபெண்ட் ஆகி இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  27. *** rapp said...
    நீங்க எய்ட்சையும் இந்தப் பிரச்சினையையும் கம்பேர் பண்ணி வாதம் பண்றது சரின்னு எனக்குத் தோணலைங்க. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சரி நீங்க உங்க வாதங்களை தெரிவிக்கறீங்க:):):) வாழ்த்துக்கள் ***

    உண்மைதான். That is not a fair comparison! I agree! :)

    நான் என்ன சொல்றேன்னா எந்த பிரச்சினையுமே, விளைவுகளை எப்படி சமாளிப்பது என்று யோசித்து அதை சால்வ் பண்ணிவிட்டு, அந்த பிரச்சினையை அனுக முடியாது என்று சொல்ல வந்தேன்! :)

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. யாரு பாப்பா நீ? கலக்கற போ!

    ReplyDelete
  30. //யாரு பாப்பா நீ? கலக்கற போ!//

    நன்றி அனானி.

    சொந்த பெயரிலேயே போட்டு இருக்கலாம்.

    ReplyDelete
  31. ///நண்பர் வழிப்போக்கனின் கோரிக்கையை ஏற்று இந்த புது பதிவு.//

    ரொம்ப..ரொம்ப..ரொம்ப..ரொம்ப..
    நன்றிங்க..

    லேட்டா வந்துட்டனோ ??..சாரிங்க.

    ஒரு மெயில் போட்டுருந்தீங்கனா அப்பவே வந்திருப்பேன்..

    ReplyDelete
  32. நான் ஏதாவது கருத்து சொல்லாம்னு பாத்தேன், ஆனா பாருங்க அத்தனையும் நீங்களே கவர் பண்ணீட்டீங்க.

    இதுக்கு இன்னொரு ஸ்பெசல் நன்றிங்க..:))

    ReplyDelete
  33. //நிச்சயம் தவறாக நினைக்க மாட்டேன். இன்னும் சொல்லப்போனால் நான் எதிர்பார்க்கும் அளவுக்கு யாருமே என்னுடன் வாதிடுவதில்லை.//

    ராப் Vs கயல் .
    Topic : Nuclear Energy.

    இது நல்லா இருக்கு..

    ReplyDelete
  34. //லேட்டா வந்துட்டனோ ??..சாரிங்க.//

    பரவாயில்லை, நீங்க வந்ததே மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி வழிபோக்கன்.

    ReplyDelete
  35. //நான் ஏதாவது கருத்து சொல்லாம்னு பாத்தேன், ஆனா பாருங்க அத்தனையும் நீங்களே கவர் பண்ணீட்டீங்க. //

    கவர் பண்ணாதது ஏதாவது இருக்கும், கொஞ்சம் உட்கார்ந்து யோசிக்கவும்
    :)

    ReplyDelete
  36. //ராப் Vs கயல் .
    Topic : Nuclear Energy.//

    இப்போ அதை தானே செய்யறோம்? :)

    ReplyDelete
  37. இக்கட்டுரையில் உரையாட பல விசயங்கள் இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகத்தை மட்டும் கேட்டுவிட்டுப் போகிறேன்.

    //ஆனால், நாம் மிகச்சாதாரணமாக பயன்படுத்தும் பெட்ரோலியம்(க்ரூட் ஆயில்), நிலக்கரி போன்ற எரிபொருட்களை பயன்படுத்தும் போதும், வெளிவரும் கதிர்வீச்சும், நச்சுப்பொருட்களும் அணு ஆலையில் இருந்து வெளி வரும் கதிர்வீச்சை ஒப்பிட்டால் பல மடங்கு வீரியமானது, ஆபத்தானது என்று நமக்கு தெரியுமா? //


    இதில் பெட்ரோலியப் பொருட்களிலிருந்து வரும் கதிர்வீச்சுன்னு சொல்லிருக்கீங்களே, அதைப் பத்தி கொஞ்சம் விளக்க முடியுமா. பெட்ரோலியப் பொருட்களிலிருந்து நச்சுப் பொருட்கள் வரும்னு கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த கதிர்வீச்சு புதிதாயிருக்கிறது..!!??

    உங்களுக்கு நேரமிருந்தால்..

    http://kaiyedu.blogspot.com/2007/10/blog-post.html

    ReplyDelete
  38. ராப் Vs கயல்
    = மனசாட்சி Vs அறிவு.

    இரண்டுமே அறிவுப்புர்வமாக வெற்றி பெற வேண்டும்.

    ReplyDelete
  39. //இதில் பெட்ரோலியப் பொருட்களிலிருந்து வரும் கதிர்வீச்சுன்னு சொல்லிருக்கீங்களே, அதைப் பத்தி கொஞ்சம் விளக்க முடியுமா. பெட்ரோலியப் பொருட்களிலிருந்து நச்சுப் பொருட்கள் வரும்னு கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த கதிர்வீச்சு புதிதாயிருக்கிறது..!!??

    உங்களுக்கு நேரமிருந்தால்..
    //

    முதல் முறையா ஒரு வந்திருக்கீங்க, வாங்க கையேடு. :)

    பெட்ரோலியப்பொருட்களோ, நிலக்கரியோ எரிந்து சக்தியாக மாறும் போது நச்சுப்புகைகளோடு நச்சுக்கதிர்களையும் வெளியிடுகிறது. அதை தான் குறிப்பிட்டேன், எனக்கும் சில காலம் வரை இந்த கதிர்வீச்சைப்பற்றிய நாலட்ஜ் இல்லாமல் இருந்தது.

    அது மட்டுமல்ல, இயற்கையிலேயே தாவரங்களிலும், விலங்குகளில் இருக்கும் பொட்டாஷியத்தில் கூட கதிர் வீச்சு உண்டாம். ஏன் நாம உபயோகிக்கும் செல்பேசியில் கூட கதிர் வீச்சு இருக்கிறது, ஆண்மை குறைப்பாட்டை விளைவிக்கிறது என்று கேள்விப்படவில்லையா?

    ReplyDelete
  40. //கவர் பண்ணாதது ஏதாவது இருக்கும், கொஞ்சம் உட்கார்ந்து யோசிக்கவும்
    :)
    //

    நிச்சயமா..நிச்சயமா..ட்ரை பண்றேன்.

    நீங்க வேற இரண்டு நாள் படிச்சுட்டு எழுதுனேன்னு சொல்லீட்டிங்க..

    :))

    ReplyDelete
  41. மனமகிழ்ந்து வரவேற்கிறீர்கள் மிக்க நன்றி..

    //பெட்ரோலியப்பொருட்களோ, நிலக்கரியோ எரிந்து சக்தியாக மாறும் போது நச்சுப்புகைகளோடு நச்சுக்கதிர்களையும் வெளியிடுகிறது. //

    நீங்கள் குறிப்பிடும் இக்கதிர் கதிரியக்க கதிர்களா..

    // ஏன் நாம உபயோகிக்கும் செல்பேசியில் கூட கதிர் வீச்சு இருக்கிறது, ஆண்மை குறைப்பாட்டை விளைவிக்கிறது என்று கேள்விப்படவில்லையா?//

    இது என்னால் நம்பவும் முடியவில்லை ஏற்றுக்கொள்ளவும் முடியல. கைபேசியிலிருந்து கதிரியக்கக் கதிர்கள் வருகிறதா?? இதற்கு ஏதேனும் சுட்டி இருக்கிறதா..

    ReplyDelete
  42. //நீங்க வேற இரண்டு நாள் படிச்சுட்டு எழுதுனேன்னு சொல்லீட்டிங்க

    இதில் எனக்கு உணர்வுபூர்வமான கட்டுரை எழுதுவது சரி என்று தோன்றவில்லை வழிபோக்கன்.

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. //இதில் எனக்கு உணர்வுபூர்வமான கட்டுரை எழுதுவது சரி என்று தோன்றவில்லை வழிபோக்கன்.//

    அதற்காக திருமதி ராப் உணர்வுப்பூர்வமான கட்டுரை எழுதினார் என்று சொல்லவரவில்லை, அவரும் அறிவுப்பூர்வமான கட்டுரையையே எழுதி இருக்கிறார்.

    ReplyDelete
  45. //இதில் எனக்கு உணர்வுபூர்வமான கட்டுரை எழுதுவது சரி என்று தோன்றவில்லை வழிபோக்கன்.//

    அதற்காக திருமதி ராப் உணர்வுப்பூர்வமான கட்டுரை எழுதினார் என்று சொல்லவரவில்லை, அவரும் அறிவுப்பூர்வமான கட்டுரையையே எழுதி இருக்கிறார்.

    ReplyDelete
  46. ஆஹ்ஹா..நீங்க குடுத்துருக்குற சுட்டியில இருக்கிற செய்தி ஏற்கனவே அறிந்ததுதாங்க.. ஆனால், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கதிர்கள் கதிரியக்கத்தன்மை கொண்ட கதிர்கள் கிடையாதுங்க. அவை கைபேசிகளின் தொடர்புக்கான மின்காந்தக் கதிர்கள்.

    அவை கதிரியக்கத் தன்மை கொண்டவை இல்லங்க, அதிலிருந்து வரும் கதிர்களும், அணுக்கருக்களிலிருந்து வரும் கதிரியக்கத் தன்மை கொண்ட கதிர்வீச்சும் ஒன்றல்ல.. இப்படி பயமுருத்துறீங்களே. நியாயமா..

    எல்லாமே radiation தான், ஆனால், எல்லா radiation ம் radio-active ஆக இருக்கணும்னு அவசியமில்லைங்க.

    ReplyDelete
  47. //எல்லாமே radiation தான், ஆனால், எல்லா radiation ம் radio-active ஆக இருக்கணும்னு அவசியமில்லைங்க.//

    கையேடு, தமிழ் புலமை இல்லாததால் வந்த விளைவு இது, தவறுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  48. உங்க அறிவியல் தமிழ்மேல கொஞ்சம் சந்தேகம் வந்துதான், கடைசியில் ஆங்கிலத்திலும் சேர்த்தேன். பொறுமையாக உரையாடியதற்கு நன்றி.
    தொடருங்கள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  49. //உங்க அறிவியல் தமிழ்மேல கொஞ்சம் சந்தேகம் வந்துதான்//

    நிறையவே சந்தேகப்படுங்கள். ஆங்கில வழிப்பள்ளியில் படித்த காரணம் என்று எக்ஸ்க்யூஸ் கொடுக்க விரும்பவில்லை. தமிழர்களுக்கு தமிழ் தெரியாமல் இருப்பது ரொம்ப தவறு தான்.

    ReplyDelete
  50. //http://www.world-nuclear.org/info/inf05.htm//

    கையேடு,

    விருப்பம் இருந்தால் இந்த சுட்டியையும் பாருங்கள், மனித உடலும் ரேடியோ ஆக்டிவ் என்று குறிப்பிடுகிறார்கள்.
    http://www.world-nuclear.org/info/inf05.htm

    ReplyDelete
  51. Conservative discussions... But still I'm sliding towards Rapps viewpoint.. :)))

    Reason ketturaatheenga.. After reading both the posts and comments, I felt like that... :))

    நம்மளால முடிஞ்சது... அட்லீஸ்ட் நம்ம சுற்றுப்புறத்தக் சுத்தமா வச்சி பேணிக் காப்பாத்தனும்...

    ReplyDelete
  52. //Reason ketturaatheenga.. After reading both the posts and comments, I felt like that... :))
    //

    நீங்கள் சரியான ரீசன் சொல்லாதவரையிலும் ஒரு உணர்வுப்பூர்வமான டிசிஷன் என்றே கருதுவேன். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க மொத்த தொழிற்சாலைகளையும் மூடிவிட்டு தாலிபான்கள் மாதிரி அறிவியல் முன்னேற்றம் அனைத்தயும் மறுத்து பழைய காலத்துக்கு திரும்ப வேண்டும். :)

    Anyways, அது உங்கள் கருத்து.

    வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி ஜி. கதையில் கலக்கிட்டீங்க!

    ReplyDelete
  53. நிச்சயமா.. இப்பிரபஞ்சத்தில் பல விதமான கதிர்வீச்சு மூலங்களும், அக்கதிர்வீச்சுக்களை நாம் அனுதினமும் எதிர்கொண்டுமிருக்கிறோம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது.

    எனது கேள்வி எழுந்ததற்கான காரணம்: கதிர்வீச்சுகள் என்று பொதுவாக இரண்டு வேறுபட்ட கதிர்வீச்சுகளை ஒப்பீடு செய்திருக்கிறீர்கள். அதன் வேறுபாட்டை இன்னும் நுணுக்கமாக விளக்க வேண்டியதான் அவசியத்தினால் கேட்டேன்.

    ஏனெனில், விளைவுகளும், உயிரிகளின் தாங்குதிறனும், எதிர்கொள்ளும் திறனும் இரண்டு கதிர்வீச்சுகளுக்கும் ஒன்றல்ல என்பதால் ஒப்பீட்டின் போது இணைத்தே குறிப்பிடவேண்டியதும் அவசியம் என்று கருதினேன்.

    ReplyDelete
  54. //ஏனெனில், விளைவுகளும், உயிரிகளின் தாங்குதிறனும், எதிர்கொள்ளும் திறனும் இரண்டு கதிர்வீச்சுகளுக்கும் ஒன்றல்ல என்பதால் ஒப்பீட்டின் போது இணைத்தே குறிப்பிடவேண்டியதும் அவசியம் என்று கருதினேன்.//

    கையேடு, உண்மை தான். Point taken.

    எனது கட்டுரையில் புதிதாக இணைக்கிறேன்.

    ReplyDelete
  55. //உண்மை தான். Point taken.

    எனது கட்டுரையில் புதிதாக இணைக்கிறேன்.//

    உங்களுக்கு எனது கேள்வியில் முழுமையான உடன்பாடும், கட்டுரையில் இணைக்க வேண்டியது அவசியம், என்றும் கருதினால் இணையுங்கள்.

    நன்றி. மீண்டும் வேறுபுள்ளியில் சந்திப்போம்.. :)

    ReplyDelete
  56. //உங்களுக்கு எனது கேள்வியில் முழுமையான உடன்பாடும், கட்டுரையில் இணைக்க வேண்டியது அவசியம், என்றும் கருதினால் இணையுங்கள்.
    //

    கையேடு,

    முழுமையான ஒப்புதல் இல்லாமல் நான் இணைக்க மாட்டேன். நீங்கள் குறிப்பிட்டது எனது கட்டுரையில் இருந்த மிகப்பெரிய Flaw. சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  57. கையேடு:

    கதிரியக்கத்தன்மை கதிர்கள் = Radioactive கதிர்கள்? (low-wavelength radiation?)

    சரி அப்போ, 35P, 14C, இதிலிருந்து வரும், கதிர்கள் எல்லாம் கதிரியக்கத்தன்மை உள்ளவைகள் தானே??!!!

    Are they less-dangerous?!! Please educate me.

    ReplyDelete
  58. ஜி: சுற்றுப்புறத்தை இல்லைனா நாம் பேணிக்காக்கிறோமா?

    இல்லை ஜி! இல்லைனா யுனியன் கார்பைட் Me-N=C=O வாயுவை லீக் பண்ணும்போது நாம் என்ன செய்து கொண்டிருந்தோம்?

    எனக்குத்தெரிய எந்த கெமிக்கலையுமே நாம் ஒழுங்கா டிஸ்போஸ் பண்ணுவது கிடையாது.

    எவ்வளவு ப்ளாஸ்டிக், பாலிமெர் "லாண்ட்ஃபில்" ல வருது தெரியுமா?

    So many pharmaceutical companies making their strating materials in India. Chemical companies like Aldrich have contracts with small companies in India. The get them made there and put an "Aldrich" label.

    Because they want to protect their environment and so they get them made in India!

    Do you think the environment is not getting polluted with thosee by-products and wastes? We dont dispose them properly either.

    Plese dont tell me that we care about the environmnet and we dont pollute the environment in issues other than this particular one! :)

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. கையேடு said...

    ****நீங்கள் குறிப்பிடும் இக்கதிர் கதிரியக்க கதிர்களா..***

    Carbon-14 இதில் கொஞ்சம்கூட இருக்காதா, என்ன?

    அது இருக்குமாயின், அது கதிரியக்க கதிர்களை விடாதா?

    ஏன விடாது???!

    ReplyDelete
  61. இந்தப் பின்னூட்ட நெரிசல்ல என்னோட பின்னூட்டமும் உங் கண்ணுல படுமா கண்ணு?

    என்னமோ போ ஆத்தா! எங்கியோ போயிட்டே!. எதாவது கருத்த்ச் சொல்லணும்னு தோணுது. என்ன சொல்றதுன்னு தெரியல. ஆக மொத்தத்தில எல்லாரும் ரொம்பப் பெரிய விசயம்எதையோ பேசுறீங்கணு புரியுது.
    நானு என்ற தகுதிக் கேத்தாப்பிடி- ஸ்னேகா பழய படம் எங்கூரு முருகன் கொட்டாயில போட்ருக்காங்க- பாக்காப் போறேன்.

    ReplyDelete
  62. நேத்து அதிமுக்கிய பதிவுல பிசியா இருந்ததால இதப்பத்தி ரொம்ப யோசிக்க முடியல....

    2 more points in favour of Nuclear Power

    ReplyDelete
  63. 1) Load Management (தமிழ் வார்த்தை தெரியல...மன்னிச்சுருங்க..ஆனா முடிஞ்சவரை எளிமையா சொல்றேன்.)

    மரபுசாரா எரிசக்தில மிகவும் பயன்படுத்தபடுவது Hydro & Wind

    (Solar/BioGas பத்தி நீங்க கேட்கறது புரியுது, அதெல்லாம் இன்னிக்கு இருக்கிற லெவல்ல தெருவிளக்கு போடறதுக்கோ இல்ல உங்க வீட்டுல

    லைட் போடறதுக்கோ மட்டும்தான் ஆகும்.)

    ஒவ்வாரு விநாடியும் மின் தேவைகள் மாறுபட்டு கொண்டே இருக்கும்.

    நீங்க லைட் சுவிட்சு போட்டா கரண்டு வேணும் ஆப்பு பண்ணீட்டா கரண்டு வேண்டாம்.

    கொஞ்சம் கண்ணை மூடி இன்னிக்கு மட்டும் எத்தனைமுறை உங்க வீட்ல இருக்கிற சுவிட்சுகளை தட்டுனீங்கனு யோசிச்சு பாருங்க.

    பகல்/இரவு
    வெய்யில் காலம்/குளிர் காலம்/மழை காலம்
    வைலைநாள்/விடுமுறைநாள்

    இதெல்லாம் சேத்தி யோசிங்க.

    இதுவே தொழிற்சாலைகளிலும் நடக்கும்.

    அப்போ Power Demand varies every second/minute/day/month/season என்று நான் சொல்ல வந்ததை எற்க முடிகிறாதா ?

    இல்லை என்றால் மேற்கொண்டு இதை படிக்க தேவையில்லை.

    இப்ப பாருங்க..Hydro & Wind --> இது இரண்டும் இயற்கையை நம்பி உள்ளது. ஏற்க முடிகிறதா ?

    மழை பேஞ்சாத்தான் Hydro. 4-5 வருசம் முன்னாடி மேட்டூர் காஞ்சு போச்சு. அப்ப மேட்டுருக்கே எங்கயாவது இருந்து கரண்டு போய்ட்டு

    இருந்தது. இதே மாதிரி Future ல நடக்காதுன்னு நீங்க கேரண்டி கொடுக்க முடியுமா ??

    காத்து சரியா..சரியா அடிச்சாத்தான் Wind. வருசத்துல 6 மாசம் (Example: Denmark)நல்லா ஒடுனாலே பெரிய விசயம். மீதி நாள் ஒட்டுனா

    லாஸ்தான். (Power and Money).

    சமீபத்துல கயத்தாறுல தாறுமாறான காத்துனால, பல கோடி லாஸ் ஆகியிருக்கு. ஒரு ஆலைல Major பழுதாச்சுனா சரி செய்ய குறைந்தது ஒரு

    மாசம் ஆகும். அதோட "சைஸ்" அப்படி. அப்ப நம்ம கதி ???

    இப்ப நிலக்கரி தான் இந்த லோட் Managementக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கு.

    லோட் Management இல்லாம Normal Life வாழ முடியுமானு ஒரு நிமிசம் யோசிங்க ப்ளீஸ்..ப்ளீஸ்..

    அணுசக்தியோட மிகப்பெரிய பாசிட்டிவ் என்னன்னா விநாடிக்கு விநாடி நீங்க உற்பத்திய மாற்ற முடியும்.


    மிகச்சரியான வாதம்னா --> We are replacing Coal/Oil/Gas based power generation with Nuclear.

    We need as many "Successfull" Wind & Hydro as possible. - No one in the world can deny that. But we also need a Human Controllable

    Power Source to balance these sources.

    Hydrocarbon Vs Nuclear --> Which is better over long term ? Which is Sustainable?. இதப்பத்தி விவாதிக்க நான் தயார்.

    அத விட்டுட்டு Hydro + Wind Vs Nuclear என்று வாதம் செய்வது சரியல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  64. ஒரு Point டைப் பண்றதுக்குள்ளயே டைம் ஆகிருச்சு..

    அடுத்தது சாயங்காலம் எழுதறேன்.

    பொருத்தாள்க.....

    ReplyDelete
  65. \\Because they want to protect their environment and so they get them made in India!

    Do you think the environment is not getting polluted with thosee by-products and wastes? We dont dispose them properly either.

    Plese dont tell me that we care about the environmnet and we dont pollute the environment in issues other than this particular one! :)//

    சின்னசின்ன விசயங்களிலேயே தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரிந்து வைத்திருக்கிறீர்கள் இருவரும்..நம் நாடு மற்ற நாடுகள் செய்கிற தவறுகளை செய்யாமல் சிந்தித்து செயல்படும் என்று உறுதிவேறு கூறுகிறீர்கள்..இதுவரை செய்துகொண்டிருக்கும் தவறுகளையே சிந்தித்து திருத்தாத நிலையில்..:)

    மேலும் ஏற்கனவே நாம் நிறைய பாதிப்புகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறோம் என்பதாலேயே பெரியபாதிப்பு வரும் இதனையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா?



    எப்போதுமே வெளிநாட்டுக்காரர்கள் எதயாவது கண்டுபிடிப்பது வழக்கம் கண்டுபிடித்தபின் அது நல்லது இல்லை என்று உணர்வார்கள் பின்னர் தங்கள் நாட்டில் அதை தடை செய்வார்கள். பின்னர் அதை நம்மைப்போல ஆட்களிடம் தள்ளிவிடுவார்கள்.. இல்லையென்றால் நாமே போய் விழுவோம்..(இங்கே நாமே நம் தேவைக்கு அணு உலை வைப்பதாக சொல்லி இருக்கீங்க இல்லையா)

    பாலிதீனை விட்டு பேப்பருக்கு மாறிட்டாங்க மேல் நாட்டில்.. நாம் கெட்டியா பிடிச்சிக்கிட்டோம்..

    ReplyDelete
  66. //சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க மொத்த தொழிற்சாலைகளையும் மூடிவிட்டு தாலிபான்கள் மாதிரி அறிவியல் முன்னேற்றம் அனைத்தயும் மறுத்து பழைய காலத்துக்கு திரும்ப வேண்டும். :)
    //

    ரொம்ப சரியா சொன்னீங்க...அணு கதிர் வீச்சு மட்டுமே நமக்கு பாதிப்பு கொடுக்காது, இன்னைக்கு நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு விஞ்ஞான கண்டுபிடுப்பும் ஏதாவது ஒரு வகையில் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கிறது, தலிபான் மாதிரி இருக்கலாம் அல்லது Amish community மாதிரி வாழலாம்

    ReplyDelete
  67. really useful topic and discussion.. im learning a lot.. thanks to kayal and varun., rapp,vazipokkan,kaiyedu, mangalore **siva ,yathrigan,ka.vi.mu.la thanks to all

    ReplyDelete
  68. லதானந்த சித்தர்,
    நாங்க ப்ளாக் ஆரம்பிக்க முக்கிய காரணமான உங்க கமெண்டை எப்படி படிக்காமல் இருப்பேன்?

    உங்களுக்கு ஒரு சவால், எதினால் பாதிப்பு அதிகம்? சினேகாவினாலா அல்லது அணு சக்தியினாலா என்ற விவாதம் பண்ணலாமா? :)

    ReplyDelete
  69. அருமையான கருத்துக்கள் வழிப்போக்கன், மிக்க நன்றி :)

    ReplyDelete
  70. வணக்கம் கயல்விழி முத்துலட்சுமி மேடம்,

    1. பிற நாடுகள் செய்யும் சின்ன தவறுகளை நாம் திருத்தி விடலாம் என்று உறுதி கொடுக்கவில்லை. திருத்திவிட முடியும் என சஜஸ்ட் பண்ணுகிறேன். இரண்டுக்கும் பெரிய வித்யாசம் இருக்கிறது.

    2. மேலும் நம்முடைய அரசியலலைப்பு பற்றிய பிரச்சினைகளையும், மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்துவதைப்பற்றியும் என்னுடைய பின்னூடங்களில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

    3.ப்ளாஸ்டிக் வகை பொருட்களை மேலை நாடுகளீல் உபயோகிப்பதை விடவில்லை. இன்றளவும் அதிகமாக பயன்படுத்தப்படுவது ப்ளாஸ்டிக்.

    4. மற்றவை போலில்லாமல், அணு சக்தி நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது, அதனால் தான் முழுக்க ஒதுக்ககூடாது என்ற் நினைக்கிறன். உதாரணமாக ப்ளாஸ்டிக்குக்கு பதில் பேப்பரையோ அல்லது மெட்டலையோ உபயோகப்படுத்தலாம். ஆனால் அது போல அணுசக்திக்கு மாற்று இருக்கிறதா?

    உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  71. வருக ஷ்யாம், கருத்துக்கு நன்றி.ஆமிஷ் கம்யூனிட்டி பற்றி கூட ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  72. வருக ஓவியர் தமிழ்ப்பறவை,

    இது சம்மந்தமான உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவல்.

    ReplyDelete
  73. கயல் எதோ லவ்வர்ஸ் ஜாலியா கலாய்த்துக்கொள்ள ஆரம்பிச்ச பதிவுன்னு ஆரம்பத்துல நினைத்தேன்.

    இப்போ பிரமிப்பா இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா ஸ்பீடெடுத்து டாப்கியரில் போறீங்க.ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

    வாழ்த்துக்கள் கயல்

    ReplyDelete
  74. வாங்க நிலா அப்பா :)

    காதல் வாழ்க்கையில் ஒரு பகுதியே தவிர வாழ்கையே காதலாகிவிடாதே? :)

    ReplyDelete
  75. //ஆமிஷ் கம்யூனிட்டி பற்றி கூட ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைக்கிறேன்//

    it would be really interesting..

    ReplyDelete
  76. //வழிப்போக்கன் said...
    அத விட்டுட்டு Hydro + Wind Vs Nuclear என்று வாதம் செய்வது சரியல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.//

    வழிப்போக்கன் கலக்கீட்டீங்க...

    ReplyDelete
  77. வழிப்போக்கன்:

    ஹைட்ட்ரோகார்பன் பொல்லுஷன் வேர்சஸ் ரேடியோ ஆக்டிவிட்டி என்று நான் விவாதிக்க வரவில்லை.

    ஜி சொன்னார், நாம் என்விராண்மெண்டை பேணி காக்கவேண்டும் என்று.


    பேணி காக்கப்படவில்லை என்பதற்காக அது சொல்லப்பட்டது. :-)

    BTW, methylisocyanate is not just a hydrocarbon. We all know how cheap our lives are from the "compensation" we got for the tragedy.

    Moreover, serious issues always paid g8 attention and solved as we are more care about accute effect and "small issues" can have a disasterous effect in a long term!

    The issue which was addressed there is "Are we really careful about the environment?" Not that chemical pollution is worse than more serious radiactive pollution! :-)

    ReplyDelete
  78. திருமதி கயல்விழி முத்துலக்ஷ்மி:

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான்!

    ஆனால் நான் வெள்ளைக்காரர்களை பலிபோட மாட்டேன்.

    ஏன்னா, அவங்க நம்மைத்தான் கரப்ட் பண்ணி வாழ்வார்கள். நாம்தான் நம்மையே நாம் கரப்ட் பண்ணி அழித்துக்கொள்வது.

    கார் 100 மடங்கு பெருகும். ஆனால் ரோடு 2 மடங்கு கூட அதிகரிக்காது. அவ்வலவு அழகான் ப்ளானிங் நம்மிடம் இருக்கு

    குக்கிங் கியாஸை காரில் போட்டு பயன்படுத்துவோம்.

    மண்ணெண்ணையை லாரிக்கும் எரிபொருளாக பயன் படுத்துவோம்.

    எதை அப்யூஸ் பண்ணாமல் விட்டு இருக்கோம் சொல்லுங்க??

    ReplyDelete
  79. Kayalvizhi Muththulakshmi!

    The irony here is that Americans will be so happy if we shut down the "atomic energy" project. They certainly suggest us not to go in that direction!

    Now the question comes,

    Do they really care about us and our environment?

    If we are digging our own grave by concentrating this, they should rather be happy or NOT?

    Dont you smell rat here?!

    ReplyDelete
  80. //காதல் வாழ்க்கையில் ஒரு பகுதியே தவிர வாழ்கையே காதலாகிவிடாதே?//

    காதல்னு ஒண்ணே கெடையாதுங்கிறேன் நானு!
    தமிழில ரொம்பாத் தப்பாப் புரிஞ்சிகிட்ட சொல் காதல்!

    ReplyDelete
  81. //காதல்னு ஒண்ணே கெடையாதுங்கிறேன் நானு!
    தமிழில ரொம்பாத் தப்பாப் புரிஞ்சிகிட்ட சொல் காதல்!//

    ஆஹா என்ன இது லதானந்த் சித்தர்? ஏன் இந்த மன மாற்றம்?

    ReplyDelete
  82. காதல் என்றால் என்ன என்று புது பதிவு போடுங்க லதானந்த சித்தர்.

    ReplyDelete
  83. வருண்,

    நீங்களும் என்னை மாதிரியே அறிவியல் தமிழில் தடுமாறுகிறீர்கள். :) :)

    ReplyDelete
  84. //வழிப்போக்கன் கலக்கீட்டீங்க...//

    ஆமாம். வழிப்போக்கன் சொன்னத்ஹற்காக தான் இந்த திரியையே ஆரம்பித்தேன். கலக்க வேண்டியது அவர் கடமையாகிறது :)

    ReplyDelete
  85. ஃஃஃநீங்களும் என்னை மாதிரியே அறிவியல் தமிழில் தடுமாறுகிறீர்கள். :) :)

    ஃஃ


    ரெண்டு பேருமே ஒண்ணுதானே. I mean உயிருக்குயிரான காதலர்கள் என்றேன். வேறு எந்த உள்குத்தும் இல்லை.

    ReplyDelete
  86. ஃஃஆமாம். வழிப்போக்கன் சொன்னத்ஹற்காக தான் இந்த திரியையே ஆரம்பித்தேன். கலக்க வேண்டியது அவர் கடமையாகிறது :)
    ஃஃ

    புல்லரிக்குதுங்க....


    அதுசரி 2 பாயின்ட் பத்தி யாருமே கேட்கலயே எழுதட்டுமா வேண்டாமா ?

    ReplyDelete
  87. //ரெண்டு பேருமே ஒண்ணுதானே. I mean உயிருக்குயிரான காதலர்கள் என்றேன். வேறு எந்த உள்குத்தும் இல்லை.
    //

    சரி உள்குத்து இல்லை என்பதை நம்பிட்டோம்.

    ReplyDelete
  88. //அதுசரி 2 பாயின்ட் பத்தி யாருமே கேட்கலயே எழுதட்டுமா வேண்டாமா ?
    //

    ஏதோ வேலை இருக்கிறதா சொன்னீங்களே அதுக்கு தான் கேட்கவில்லை.

    நேரமிருக்கும் போது மற்ற இரண்டு பாயிண்டுகளையும் தயவு செய்து எழுதவும்.

    ReplyDelete
  89. Mr. Varun and kayal. I will share the little informations i know about about 14C and others by tumm.
    sorry for english..

    ReplyDelete
  90. ஹலோ, மொத்தமே இரண்டுதான்.



    ஒன்னு அப்பவே முடிஞ்சுது. இரண்டாவது இங்கே..

    ReplyDelete
  91. இரண்டாவது பாயின்ட்: இதுக்குபேரு Scalability (தமிழில் தெரிந்தவர்கள் சொல்லவும்:(( )

    நிறைய பேரு வீடு இருட்டா இருந்தா பராவாயில்லை எனக்கு அணுசக்தி தேவையில்லைனு சொல்றாங்க. சில "ஞாநி"கள் கூட "Distributed
    Power Generation" பத்தி பேசி மக்கள குழப்பறாங்க. ("Distributed Power Generation" பத்தி விரிவா 'வேணும்னா தனியா பாப்போம்)

    DPG is to meet domestic enerygy demands, in a clean way, not for Industrial Power Generation.

    அம்மா/ஐய்யா அணுசக்தி வேணும்னு நான் சொல்றது உங்க வீட்டுக்கு வெளக்கு வைக்கிறதுக்கு நிச்சயம் இல்லங்க.அதக்கெள்ளாம் இப்ப
    இருக்கிறதே போதுங்க. சோலார் செல்ஸ் வெச்சு கூட ஓட்டிறலாம்.

    அப்ப எதுக்குதான்யா வேணும்னு கேட்கறீங்களா?. இந்தியா முன்னேறனும்னா இரண்டுதுறைகள் நிச்சயம் முன்னேறனும்

    1). தொழிற்சாலைகள் --> (Manufacturing Industries) சைனாவுடன் நாம் போட்டியிட்டுத்தான் ஆகணும். வேறு வழியேயில்லை.
    2). விவசாயம் --> முன்னேற நிறைய -After Harvest Processing வேண்டியிருக்கிறது.

    பல புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான முயற்சிகள் ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கிறது. இவையனைத்தும் Enery Intensive.
    புதிய தொழிற்சாலைகள் உருவாக்குவது மட்டுமல்ல அவைகள் வளர்ச்சியடைய Cheap Electricity தேவைப்படுகிறது.

    எப்பவுமே ஒரே தியரிங்க --> Mass production gives cheap products.

    இது மின்சார உற்பத்திக்கும் பொருந்தும். சின்ன Statistics

    இன்றைய மின்சார உற்பத்தி : 1.44 Lakh Megawatts
    2012ல் (அட அமாங்க 2012 தான் - 4 வருசம்தான் இருக்கு) தேவை : 2.50 Lakh Megawatts.

    சோ, நமக்கு தேவை இன்னும் 1 Lakh MW. இத நம்ம ஞாநி சொல்றபடி Wind & Hydroல உற்பத்தி பண்ணணும்னா என்ன பண்ணணும்னு நான் சொல்றேன். நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

    Total number of Wind Mills Required : Atleast 50,000 (சராசரியாக ஒரு லேட்டஸ்ட் காற்றாலை 2 மெகாவாட் உற்பத்தி செய்யும்)இப்ப நம்மகிட்ட Wind Power Capacity 9000 MW (Approx). அப்ப 10 மடங்கு அதிகமா Install பணணணும். முடியுமா ?

    ஏன் முடியாது? அரசாங்கம் சரியில்லைங்கறீங்களா. இந்த விசயத்துல அப்படிச் சொல்ல முடியாது. Wind Mills are now private Business. ஐஸ்வர்யாராய் பச்சன் (நிஜமாத்தான்!!) கூட 10-15 வைச்சிருக்காங்க. அப்புறம் ஏன் Multiply பண்ண முடியாது ?. ஏன்னா Technical Difficulty. எங்க போடணும்னாலும் ஒரு 4-5 வருசம் Wind Speed, Humidity, Direction,Storms, Maximum Velocity..etc...இப்படி பாத்துத்தான் போட முடியும். இது வரை கண்டுபிடித்த இடங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட HouseFull. வேற நிறைய ஏரியா இருக்கு.. .கண்டுபிடிச்சுட்டே இருக்காங்க..

    தலைகீழா நடந்தாலும் 9000MW ஒரு 25000MW வேணும்னா ஆகலாம். மீதி 84000MWக்கு என்ன பண்றதுங்க ??


    Hydroல 1 Lakh MW --- 4 வருசத்துல வேணும்னா உடனடியா எதாவது ஒரு மாநிலத்த புடிச்சு முழ்கடிக்கணும் (தமிழ்நாட்ட வேணும்னா
    பண்ணீரலாமா ??) இல்லனா கன்னாபின்னானு ஆயிரக்கணக்கான Impact analysis study பண்ணி டேம் கட்ட ஆரம்பிச்சு..பல போராட்டங்கள

    சந்திச்சு..அப்ப்பா. 4-5 வருசத்துல நிச்சயமா முடியாது.

    அப்ப என்னதான் பன்றதுன்றீங்களா ?

    (அடுத்த பின்னூட்டம் பார்க்க. பின்னூட்டமே பெரிய தொடராயிரும் போல.பராவாயில்லை.எல்லா இங்கே டெஸ்ட் பண்ணிட்டு "எந்தன் வானம்"ல காப்பி பண்ணி பதிவா போட்டுட்டா போகுது)

    ReplyDelete
  92. //ஒன்னு அப்பவே முடிஞ்சுது. இரண்டாவது இங்கே..//

    எங்கே?

    ReplyDelete
  93. நன்றி வழிப்போக்கன். நல்ல தகவல்கள். நீங்கள் இதை நிச்சயம் தனி பதிவாக போடவேண்டும். வெறும் பின்னூட்டமாக இருக்கவேண்டிய தகவல் அல்ல இது.

    ReplyDelete
  94. நண்பர்களே,

    சீனாவின் தொழில்வளர்ச்சி பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அமரிக்க மார்கெட்டில் இப்போதெல்லாம் சீனத்தயாரிப்புகள் தான் அதிகம். ஆனால் இந்தியத்தயாரிப்பு? மிகவும் குறைவு.

    சீனா, இந்தியாவை தன் மிகப்பெரிய போட்டி நாடாக கருதும் வேளையில் சீனாவின் இத்தகைய வளர்ச்சியில் நாம் போட்டி இடாமல் இருப்பது நல்லதல்ல.

    ReplyDelete
  95. *****லதானந்த் said...
    காதல்னு ஒண்ணே கெடையாதுங்கிறேன் நானு!****

    என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்?!!!

    சரி, வேறு ஒரு இடத்தில்/தருணத்தில் இதைப்பற்றி பேசலாம்! :-)

    ReplyDelete
  96. //வழிப்போக்கன் said...
    அப்ப 10 மடங்கு அதிகமா Install பணணணும். முடியுமா ?
    //

    முடியும், சீனா கிட்ட கரண்ட் கடன் வாங்கி ராட்சச மின்விசிறிகள் வெச்சு இந்த காற்றாலைகளை இயக்கினால்.... :-)

    ReplyDelete
  97. //வழிப்போக்கன் said...
    மீதி 84000MWக்கு என்ன பண்றதுங்க ??
    //

    அணுசக்தி வேண்டாம்னு சொல்றவங்க லைட், மின்விசிறி, குளிர்சாதனம் எல்லாம் ஆப் பண்ணிட்டு இருந்துக்குவாங்க...அப்போ சரியா போகும் தான...

    ReplyDelete
  98. சரி ஆச்சு...

    ReplyDelete
  99. ஒரு சென்ச்சுரி போட்டுடோம்ல... :-)

    ReplyDelete
  100. வருண் திரும்ப திரும்ப நீங்க அதே தான் சொல்றீங்க..என்னன்னா நாம எதையும் ஒழுங்கா செய்யமாட்டோம்ன்னு .. அதான் என் பயமே..:)

    ReplyDelete
  101. ஷ்யாம்
    சீனாவிடமிருந்து கடன் வாங்க சொல்லும் உங்க ஐடியா சூப்பரோ சூப்பர் :) :)

    ReplyDelete
  102. வருண்,
    கயல்விழி முத்துலட்சுமி மேடம் கேட்பதற்க்கு ஒழுங்கான பதிலாக சொல்லவும்.

    ReplyDelete
  103. //Ph.D. in physics said... //

    ன்னா உங்க பேரே Ph.D. in physics ங்களா இல்ல....

    ReplyDelete
  104. திரு. வருண் மற்றும் கயல்விழி அவர்களுக்கு, தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

    //கதிரியக்கத்தன்மை கதிர்கள் = Radioactive கதிர்கள்? (low-wavelength radiation?)//

    இதிலே ஒரு சிக்கல் இருக்கிறது. கதிரியக்கக் கதிர்கள் என்பது ஒரு கலவை, அதிலே நேர்மின்சுமையுடைய ஆல்பா, எதிர்மின் சுமையுடைய பீட்டா, மின்சுமையற்ற நியூட்ரான், X-கதிர்கள் மற்றும் காமாக் கதிர்கள் என ஒரு கலவையாக வெளிவரும் (மேலேயொரு இயற்பியல் முனைவர் கூறியிருப்பது போல). ஆனாலும், அவருடைய கூற்றில் ஒரு நுட்பமான தவறு இருக்கிறது.

    காமாக் கதிர்களும் மின்காந்தக் கதிர்களே. அவையும் அவற்றின் செறிவைப் பொறுத்து நிச்சயம் தீங்கு விளைவிக்கக் கூடியவைதான். மின்காந்தக் கதிர்களிலும் குறை அலைநீலம் உடையவை உயிர்களுக்கு (மனிதனுக்கும்) தீங்கு விளைவிக்கக் கூடியவையே.

    //சரி அப்போ, 35P, 14C, இதிலிருந்து வரும், கதிர்கள் எல்லாம் கதிரியக்கத்தன்மை உள்ளவைகள் தானே??!!!//

    நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளதில் 35P என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். பாஸ்பரஸ் தனிமத்தில் 35 அணு நிறை கொண்ட கதிரியக்க ஐசோடோப் இருக்கிறதா? இல்லை என்று நினைக்கிறேன் (சரிபார்க்கவும்.நானும் தேடிப்பார்க்கிறேன்)

    //Are they less-dangerous?!! Please educate me.//

    மற்றபடி கதிரியக்கக் கதிர்கள் ஆபத்தானவையா என்ற கேள்வியை விட மனிதனோ அல்லது மற்ற உயிரிகளோ தாங்கும் அளவிற்குள் (அல்லது பாதிப்பில்லா அளவிற்குள்) இருக்கிறதா என்பதே முக்கியம். ஏனெனில், இப்பிரபஞ்சத்தின் பல்வேறு மூலங்களிலிருந்து நாம் தொடர்ந்து கலவையான பல கதிர்வீச்சுக்களுக்கு உட்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

    ஆனால், இயற்கையிலேயே கதிரியக்க தனிமங்களாக அறியப்பட்ட அணு எண் 84 கிற்கு மேலுள்ள தனிமங்களின் கதிர்வீச்சில் அயனியாக்கும் ஆற்றல் கொண்ட ஆல்பா கதிர்களும், மின் சுமையுடைய பீட்டா கதிர்களும் அபரிமிதமாகயிருக்கும். அதோடல்லாமல், அணு எண் அதிகமாகயுள்ள இயற்கைக் கதிரியக்கத் தனிமங்கள் (eg. U) அணுக்கருப்பிளவிற்குப் (nuclear fission) பின் மேலும் கதிரியக்கத் தன்மை கொண்ட கதிரியக்க ஐசோடோப்புகளாக மாறுவதோடல்லாமல், மிகவும் அதிகமான அரையாயுட்காலம் உடையவை. (half life - உங்களது கேள்விகளின் ஆழத்தை கருத்தில் கொண்டு இதை விளக்க வில்லை) அதனாலேயே, அணுஆலைக்கழிவுகள் நீடித்த கதிரியக்கத் தன்மை கொண்ட தனிமங்களின் கலவையாயிருக்கிறது. அவற்றைப் பாதுகாத்தல் அல்லது மனிதனுக்கு பாதிப்பில்லாமல் சேமித்தல் என்பது மிகப்பெரிய சவாலாகயிருக்கிறது.

    //Carbon-14 இதில் கொஞ்சம்கூட இருக்காதா, என்ன?

    அது இருக்குமாயின், அது கதிரியக்க கதிர்களை விடாதா?

    ஏன விடாது???!//

    இது ஒரு தத்துவார்த்தமான கேள்வி? இதற்கு இல்லை என்று பதில் சொல்லவே முடியாது.

    எரிபொருளின் கரும்புகையில் 14C இருக்கிறதா அல்லது அப்படியே இருந்தாலும் எவ்வளவு இருக்கிறது அதிலிருந்து வரும் கதிரியக்கத்தின் அளவு என்ன? என்ற கேள்விகளின் விடையைவிட அக்கரும்புகையினால் மனிதனுக்கும் மற்ற உயிரிகளுக்கும் இருக்கும் வேறுவிதமான பாதிப்புகள் அதிகம், மற்றும் உடனடியாக நேரடியாகப் பாதிக்ககூடியவை.

    பின்னூட்டம் கொஞ்சம் நீண்டுவிட்டது மன்னிக்கவும்.

    தொடர்ந்து உரையாடியதற்கு நன்றி.. :)

    ReplyDelete
  105. உங்கள் கருத்து மாறுபட்ட கருத்தே அல்ல...மாறுபட்ட கருத்து என்பது பொதுப்புத்திக்கு எதிரான கருத்தைத்தான் மாறுபட்ட கருத்து என்று சொல்ல முடியும்.அணு ஒப்பந்த ஆதரவென்பது இன்று பொதுக்கருத்தாகவும் எதிர்ப்பு என்பது மாற்றுக்கருத்தாகவும் உள்ள சூழலில்.ஏதோ அதிகாரத்துக்கு எதிராக எழுதுவதைப் போல நினைத்து அதன் உச்சத்தில் நின்று கொண்டு பொய்களை நம்பகத்தனமை அற்ற கருத்தையும் எழுதியிருக்கிறீர்கள் என்பதுதான் என் கருத்து.மற்றபடி இந்த கருத்துக்களைப் பற்றி விவாதிக்க ஏதுமில்லை.காரணம் இது பொதுப்புத்தியில் பலராலும் பல முறை கேட்டுச் சலித்துப் போன எழுத்துக்கள்தான்.

    ReplyDelete
  106. ****Ph.D. in physics said...
    //அணு ஆராய்சி விஞ்ஞானி இவர்//

    நானும் அமரிக்க அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் புத்தகங்களையும், கருத்துக்களையும் கடந்த இரண்டு நாட்களாக படித்துவிட்டு தான் இதை எழுதினேன்.//

    What did you read?

    Firstly, Electromagnetic radiation and nuclear radiation are very different.****

    PhD Sir!!

    Thanks for stopping by here. I dont think anybody needs a PhD to know the this difference you are lecturing.

    I am not saying the article is written flawlessly and that neither your criticism is unwarranted but can't you be little bit polite as you are a doctor of Philosophy?

    Please understand that we are dealing with spectrum of audience ranging from people who hardly know anything about science and some are with an earned PhD, and moreover writing physics article in thamizh is more complicated than understanding quantum mechanics!

    And this article is NOT sent out to PRL or Nature or Science. So please criticise the "author" little more politely. There is certainly some confusion here but I dont think the author is incapable of understanding some trivial issues you are lecturing here.

    Please try writing what you said in thamizh. Then you will realize that a PhD is not just enough to write a flawless article in thamiz!

    ReplyDelete
  107. கையேடு!

    இங்கே ஒரு ஆர்டிகிள் இருக்கு பாருங்க!35P டீகே பற்றி சொல்கிறது.

    மாலிகுலர் பயாலஜி, பையோகெமிஸ்ட்ரி ஆயவகங்களில், இதை பயன்படுத்துவாங்கனு நினைக்கிறேன்.

    ஏன்னா, நம் உடம்பில் உள்ள நியூக்ளிக் ஆசிட் ல பாஸ்பரஸ் இருக்கு இல்லையா. அதை லேபல் பண்ணி ஸ்டடி பண்ணுவார்கள்!

    When I first read some issues kayal was saying, I felt the same but then I tried to interpret in a different way.

    14C, 35P are there everywhere. 14C is certainly there in our body and it is decaying but the HALF LIFE is way high and so, the radioactivity is TINIEST. I was thinking perhaps what they were talking about as radioactivity in some materials including human body is the tiniest radioactivity or of that sort! :)



    ****K. E. Apt and J. D. Knight
    University of California, Los Alamos Scientific Laboratory, Los Alamos, New Mexico 87544

    Received 5 June 1972

    The β decay of 35P to levels of 35S has been studied with a large-volume Ge(Li) detector and a gas-flow proportional counter. The 35P was produced via the 37Cl(t,αp)35P reaction by bombardment of NaCl and LiCl targets with 16-MeV tritons, and was chemically separated by conversion to phosphate ion and adsorption on a selective polyvalent anion exchanger. The half-life was measured to be 47.4 ± 0.8 sec. Only one γ transition was observed, at 1572.2 ± 0.4 keV. The 35P decays 99-7+10% (logft=4.1±0.1) to the 1572-keV 1 / 2+ first excited level of 35S and <9% (logft>6.1) to the 3 / 2+ ground state, whence its spin-parity is deduced to be 1 / 2+. Less than 0.45% of the β transitions proceed to any of the other known 35S levels. The results are compared with the predictions of a recent shell-model treatment.



    ©1972 The American Physical Society****

    ReplyDelete
  108. நல்ல வாதப் பிரதிவாதங்கள்.
    நீர் நம்மிடம் அதிகமாக இல்லை;அதிகம் ஹைட்ரோ ஆலைகள் அமைக்கும் அளவுக்கு இல்லை என்வே நினைக்கிறேன்.
    காற்றாலை அமைப்பதில் டெக்னிகல் அம்சங்கள் பார்க்க வேண்டியதிருக்கிறது என்பது ஒரு குறையா என்ன? அது தனியார் துறைக்கு வேண்டுமானால் பெரிய காரியமாக இருக்கலாம்.ஆனால் அரசுக்கு?
    எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் சக்தி உற்பத்தி செய்ய இயலும் போது முயற்சிக்கலாதானே?

    மேலும் தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறு அளவில் காற்றாலை மின்சக்தி உற்பத்தி செய்ய மிகவும் ஊக்கப்படுத்துகிறார்கள்;சிறு சிறி நிறுவனங்கள் அதிகம் காற்றாலைகளை உப்யோகித்து தங்களுக்கு வேண்டிய மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்வதாக செய்தியில் பார்த்தேன்.
    இவ்வகை முயற்சிகள் அதிகரிக்கும் போது பொது விநியோகத்திற்கான் மின்சக்தி பெருமளவு மிச்சப்படும் இல்லையா?
    இதை தொழிற்சாலைகளுக்குத் திருப்பி விடலாமே..
    அணுசக்திக்கழிவுகள் த்லைமுறைகள் தாண்டி வேத்னைப் படுத்தும் என்பதை நன்றாக அறிந்து கொண்டே ஏன அதில் விழ வேண்டும்?
    அதற்கான கண்டுபிடிப்புகள் சில ஆண்டுகளில் வந்துவிடும் என்று நம்புவதால் அதில் இறங்க முடியாதே..
    அமெரிக்கர்களைப் பொறுத்தவரை அவர்கள் தேசம் என்றால் அதற்கு தனி சட்டமும் கொள்கைகளும்,மற்ற உலக நாடுகளுக்கு தனி சட்டங்கள் கொள்கைகள் என்ற இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள்;அவர்கள் சொல்கிறார்கள் என்பதால் அது நமக்கு நன்மை அளிக்கும் என நம்புவது அறியாமையே;நாம் ஆய்ந்து பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
    நமது சிங்கோ பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு கூட வைக்க மாட்டேன் என்கிறாரே??????

    கயல்-முக்கியமாக உங்கள் டெம்ப்ளேடை மாற்றுங்கள்,மறுமொழியில் பெயர்கள் தெரியாமல் யார் என்ன சொல்கிறார்கள் என்பதே புரியவில்லை...

    ReplyDelete
  109. 35P பற்றிய தகவலுக்கு நன்றி.

    //14C is certainly there in our body and it is decaying but the HALF LIFE is way high and so, the radioactivity is TINIEST.//

    14 C குறித்து உங்களது கருத்தில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.எனது ஐயம் முழுவதும் 35P பற்றியதே.

    //மாலிகுலர் பயாலஜி, பையோகெமிஸ்ட்ரி ஆயவகங்களில், இதை பயன்படுத்துவாங்கனு நினைக்கிறேன்.//

    மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்வேதியல் ஆய்வகங்களில் இந்த 35P பயன்படுத்துகிறார்களா?

    வெறும் 47.4 விநாடிகள் அரையாயுட்காலம் உடைய 35P ஐ பயன்படுத்துகிறார்கள் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது. பொதுவாக 32P பயன்படுத்துவார்கள், ஆனால், 35Pன் பயன்பாடு எனக்குப் புதிய செய்தி.

    இப்போதும் ஒரு தவறை சுட்டிக் காட்டி பின்னூட்டமிடுவது கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது. இவன் என்ன குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவனா என்று கோபப்படாதீர்கள்.

    //14C, 35P are there everywhere. //

    இவ்வரி மிகவும் பொதுமைப் படுத்துகிறது இது சாத்தியமில்லை.

    ReplyDelete
  110. கையேடு:

    நீங்கள் சொல்வது சரிதான். ஹால்ஃப் லைப் 35P ரொம்ப கம்மிதான். நான் மீன் பண்ணியது 32P தான்! 35P என்று நான் எழுதியது தவறுதான் !

    நன்றி! :)

    ReplyDelete
  111. கையேடு: 35P நாட்சுரல் அபண்டன்ஸ் இருக்கிறதா என்றே எனக்கு தெரிஒயவில்லை. As you can see, I meant 32P, you are correct, my statement might be wrong! :)

    ReplyDelete
  112. சமூகப் பார்வையோடு நடந்து கொண்டிருந்த விவாதத்தை இடையில் புகுந்து தொழில்நுட்ப திசையில் திருப்பியதற்கு மன்னிக்கவும்.

    ஆனாலும் தொடர்ந்து உரையாடியதற்கும், உரையாடவாய்ப்பு கொடுத்தற்கும் நன்றிகள் பல.. :)

    ReplyDelete
  113. நன்றி கையேடு! உங்கள் விவாதம் "educational" ஆக இருந்தது! Also we understand each other a bit or not? ;-)

    ReplyDelete
  114. ****கயல்விழி முத்துலெட்சுமி said...
    வருண் திரும்ப திரும்ப நீங்க அதே தான் சொல்றீங்க..என்னன்னா நாம எதையும் ஒழுங்கா செய்யமாட்டோம்ன்னு .. அதான் என் பயமே..:)

    16 July, 2008 11:11 PM***


    ஓஹோ, நீங்கள் அப்படி வர்றீங்களா?!

    நிச்சயம் கவனமாகத்தான் செயல்படனும்ங்க "நியூக்ளியர் எனெர்ஜி ப்ராஜெக்ட்" ல. சாதராண வேதிப்பொருள்கள் வேஸ்டைவிட மிகக்கவனமாகத்தான் செயல்படனும்.

    அதற்காக, நம்மால் எதையும் ஒழுங்காக செய்ய முடியாது அதனால் இதிலிருந்து ஒதுங்கி இருப்போம் என்று விடமுடியாது. மற்ற விசயங்களைவிட இதில் அதிக கவனமாகத்தான் இருக்கனும். அமெரிக்க கூட்டு ஓரளவுக்கு உதவும். அதாவது, அவர்களின் ஆராச்சியில் கிடைக்கிற "மெதெடாலஜி" நாம் கொஞ்சம் பணம் செலவழித்தாவது பாரோ பண்ணி "லாங் டேர்ம் ஸ்டோரேஜ்" மற்றும் "ரிசைக்ளிங்" போன்றவற்றை கவனமாகவே செய்யனும்.

    * "If they can do, why cant we?" என்கிற ஆட்டிடூட் உடன் ஈடுபட்டு வேலை செய்து வெற்றியடையனும்.

    * கோழை போல விட்டுவிட்டு, நாங்களும் மனுஷந்தான் எங்களுக்கும் மூளையிருக்கு, ஆனால் எங்களால் நீங்க செய்ற அளவுக்கு செய்யமுடியாது என்று ஒதுங்க முடியாதுனு நினைக்கிறேன்!

    ReplyDelete
  115. This comment has been removed by the author.

    ReplyDelete
  116. *****கயல்விழி said...
    வருண்,
    கயல்விழி முத்துலட்சுமி மேடம் கேட்பதற்க்கு ஒழுங்கான பதிலாக சொல்லவும்.

    17 July, 2008 12:14 AM***

    ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு பதில் அளித்துள்ளேன்,
    கயல் மேடம்! ;-)

    ReplyDelete
  117. //ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு பதில் அளித்துள்ளேன்,
    கயல் மேடம்! ;-)
    //

    I am convinced!!

    ReplyDelete
  118. அறிவன் --> உங்க கருத்துகனை அப்படியே எத்துக்கறனுங்க. நான் கேட்கறது எனான்னா அடுத்த 4 வருசத்துல என்ன பண்ண வேண்டும் என்பதே. என்ன பண்ண முடியும் என்பதே ?

    //மேலும் தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறு அளவில் காற்றாலை மின்சக்தி உற்பத்தி செய்ய மிகவும் ஊக்கப்படுத்துகிறார்கள்//

    நீங்க DPG பத்தி சொல்றீங்க. நான் மேல அதுபத்தி கூட சொல்லிருக்கேன்.

    //அணுசக்திக்கழிவுகள் த்லைமுறைகள் தாண்டி வேத்னைப் படுத்தும் என்பதை நன்றாக அறிந்து கொண்டே ஏன அதில் விழ வேண்டும்?
    //

    நிலக்கரி இந்த தலைமுறைகளை அழிக்கவல்லது தெரியுமா ??


    //நமது சிங்கோ பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு கூட வைக்க மாட்டேன் என்கிறாரே??????//

    இதுவரை பாராளுமன்றத்தில் எத்ததை விசயங்கள் விவாதித்து முடிவெடுக்கப்பட்டது. எப்படியும் கூச்சல் வெளிநடப்புதானே..Pre-planned reactions.

    ReplyDelete
  119. //சமூகப் பார்வையோடு நடந்து கொண்டிருந்த விவாதத்தை இடையில் புகுந்து தொழில்நுட்ப திசையில் திருப்பியதற்கு மன்னிக்கவும்.
    //

    இல்லை கையேடு, சமூகப்பார்வையில் மட்டுமில்லாது, தொழில்நுட்ப திசையிலும் விவாதம் நடத்தவே நினைத்தேன்.

    உங்களுடைய informative and educational விவாதங்களுக்கு ரொம்ப நன்றி. :)

    ReplyDelete
  120. அழகாக நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள் வழிபோக்கன் நன்றி.

    இதை தனி பதிவாக போடுவதாக சொன்னீர்களே? என்ன ஆனது?

    உங்களுடைய வேல்யுபிள் கருத்துக்கள் வெறும் பின்னூட்டமாக இருப்பது சரி இல்லை என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  121. //உங்கள் கருத்து மாறுபட்ட கருத்தே அல்ல...மாறுபட்ட கருத்து என்பது பொதுப்புத்திக்கு எதிரான கருத்தைத்தான் மாறுபட்ட கருத்து என்று சொல்ல முடியும்.அணு ஒப்பந்த ஆதரவென்பது இன்று பொதுக்கருத்தாகவும் எதிர்ப்பு என்பது மாற்றுக்கருத்தாகவும் உள்ள சூழலில்.ஏதோ அதிகாரத்துக்கு எதிராக எழுதுவதைப் போல நினைத்து அதன் உச்சத்தில் நின்று கொண்டு பொய்களை நம்பகத்தனமை அற்ற கருத்தையும் எழுதியிருக்கிறீர்கள் என்பதுதான் என் கருத்து.மற்றபடி இந்த கருத்துக்களைப் பற்றி விவாதிக்க ஏதுமில்லை.காரணம் இது பொதுப்புத்தியில் பலராலும் பல முறை கேட்டுச் சலித்துப் போன எழுத்துக்கள்தான்.
    //

    உங்கள் கருத்துக்கு நன்றி, ஆனால் அதை நான் ஒப்புக்கொள்ளவில்லை.

    1. அணு சக்தி எதிர்ப்பு என்பது நல்ல வியூவாகவும், ஆதரவு என்பது மோசமான வியூவாகவும் நீங்கள் சொல்லும் அதே பொது புத்தியால் கருதப்படுகிறது

    2. என்னுடைய கருத்துக்கள் பொய் அல்லது நம்பகத்தன்மை அற்றது என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? அல்லது போகிற போக்கில் சேற்றை வாரி வீசுவது தான் உங்க ஸ்டைலா?

    3. உங்களுக்கு விவாதம் செய்ய விருப்பமில்லை என்றால் பரவாயில்லை, நிறைய பேர் விவாதம் செய்ய ஆவலாக இருக்கிறார்கள் என்பது பின்னூட்டங்களையும், மின்னஞ்சல்களையும் பார்த்தாலே தெரிகிறது.

    ReplyDelete
  122. அடுத்த 4 வருசத்துல இதுதாங்க நடக்க போகுது.

    இப்போ நம்ம அரசு புது Concept கொண்டு வந்திருக்காங்ன.

    UMPP - அப்படீனா Ultra Mega Power Project.

    சாதரணமான Power plantனா அதிகபட்சம் 1000MW வரைக்கும் இருக்கும். நெய்வேலி கூட ----
    ஆனா UMPPனா 4000-5000MW வரை இருக்கும். அப்போ 1 lakh MWக்கு எத்தனை UMPP - 20-25.

    ஏற்கெனவே ஒரு 50000 MW கட்டிட்டிருக்காங்க.. யாரு கட்றாங்க --> கவலபடாதீங்க 100% corporates, ஆரசாங்க உதவியுடன்.
    அதனால கரெக்டா கட்டி முடிச்சுருவாங்கனு நம்பலாம்.

    அதிமுக்கிய நன்மை : 2Rs/Unit (ஆதாவது இப்ப இருக்கிற ரேட்ல பாதி - Mass Production)

    ஆனா ஒரே பிரச்சனை இவை அனைத்தும் நிலக்கரியில் இயங்குபவை.

    இதுவரை இவைகளை யாருமே எதிர்க்கவில்லை :(((


    நம்ம நாட்டுல இருக்கிற நிலக்கரி பத்தாதுனு
    மலை மலையா இறக்குமதி பண்ண போறோம்.

    இவ்வளவு நிலக்கரி பயன்னடுத்துனா வர்ற பின்விளைவுகள் பத்தி நான் சொல்ல வேண்டியதே இல்ல..

    அப்ப அணுமின்சாரம் மீதி 50000 தருமா?? இல்லவே இல்லை...4 வருசத்தில் நடக்கவே நடக்காது.

    அபபுறம் ஏன் சிங் & கலாம் இப்படி அடம் புடிக்கிறாங்க. பயம்....பயம்....பயம்.


    இப்ப பயன்படுத்துற நிலக்கரி அளவே ரொம்ப அதிகம், அது இரண்டு - மூன்று மடங்காச்சுனா என்ன நடக்கும் ??

    அது போக அதிகரிக்கும் வருங்கால தேவையை எப்படி நிறைவேத்துவது என்ற பயம் மட்டுமே காரணம்.

    ஒருவேளை மலிவா கிடைக்கிற நிலக்கரி நின்னு போச்சுனா? என்ன செய்வது ? என்ற பயம்.

    நிலக்கரிக்கு பிறகு அதிக அளவில் மின்சாரம் அணுசக்தியால் மட்டுமே தரமுடியும். அதுக்குதான் இந்த முயற்சி.

    உண்மையா 123 ஒப்பந்தம் என்ன செய்ய போகுதுன்னா

    1) Opens the door to have interaction with worldwide Nuclear Energy Producers.
    2) Helps in Research & Development
    3) Power Generation

    சொல்ல போனா அடுத்த 5 வருசத்துக்கு புதுசா அணுசக்தி ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பு கூட எரிய வைக்க போறதில்லை.


    ஆனா நம்மால் 5 வருசத்தில் சிறந்த தொழில்நுட்பம் உருவாக்க முடியும். அது மிகவும் பாதுகாப்பானதாக கூட இருக்கலாம்!!!.

    ReplyDelete
  123. ஃஃஇதை தனி பதிவாக போடுவதாக சொன்னீர்களே? என்ன ஆனது?
    ஃஃஃ

    அடுத்த 2-3 நாள் பிசி. out of Station. பிறகு நிச்சயம் செய்கிறேன்..

    ReplyDelete
  124. ஃஃஃஃ
    அறிவன் --> உங்க கருத்துகனை அப்படியே எத்துக்கறனுங்க. நான் கேட்கறது எனான்னா அடுத்த 4 வருசத்துல என்ன பண்ண வேண்டும் என்பதே. என்ன பண்ண முடியும் என்பதே ?
    ஃஃஃஃ
    நான்கு வருடங்களில் நடைபெற வேண்டிய விதயங்களைப் பார்த்து 40 வருடங்கள் கஷ்டப் பட்டால் பரவாயில்லை என்கிறீர்களா?

    ReplyDelete
  125. கீழ்வருவன போன்ற வரிகளைத்தவிர்த்து உங்கள் கருத்துக்களை மட்டும் எழுதிச்சென்றால் நாகரிமாக இருக்கும்.

    //திரு. ஞானி எந்த விஷயமாகட்டும், எதிர்மறையாகவே விமர்சனம் எழுதி பிரபலமாக நினைப்பவர்.//

    ReplyDelete
  126. //கீழ்வருவன போன்ற வரிகளைத்தவிர்த்து உங்கள் கருத்துக்களை மட்டும் எழுதிச்சென்றால் நாகரிமாக இருக்கும்.//

    சரிங்க வாசகன். இவரை நாகரீகமாக தானே விமர்சித்திருக்கிறேன்? விமர்சிக்கவே கூடாது என்கிறீர்களா?

    ReplyDelete
  127. ஆமாம், ஞாநி என்ன வேணா எழுதலாம். நம்ம அவரைப்பற்றி ஒரு வரி எழுதக்கூடாது. ஞாநி யார் தலையில்னாலும் குட்டுவார். அது அவர் பிறப்புரிமை! அப்படினு அனானி வாசகன் சொல்றார்.

    அடுத்தமுறை நீ எதுவும் எழுதி பதிவு செய்யும் முன்னால், இந்த அனானி வாசனிடம் பர்மிஷன் கேட்டுக்கோ!

    ஞாநி பத்திரிக்கைகளில் மற்றவர்களை தாறுமாறாக பேச, சம்பளம் வாங்குகிறார். He is a professional basher! He is getting paid for bashing others! நாம் நம் உள்ளகுமுறல்களை சொல்ல பணமோ காசோ எதிர்பார்ப்பதில்லை!

    அனானி வாசகன் ஞாநியை கோயில் கட்டி கும்பிடலாம். தப்பே இல்லை! யார் எப்படி பேசனும்னு/பதிவு செய்யனும்னு சொல்ல இவருக்கு என்ன தகுதி இல்லை உரிமை இருக்குனு தெரியலை! அதுவும் அனானியாக வந்து இதைச்சொல்லுமளவுக்கு ஒரு பெரியமனிதர் இவர்!

    ReplyDelete
  128. //professional basher!//

    இது நல்லா இருக்கே :) :) :)

    ReplyDelete
  129. //professional basher!//

    ரீப்பீட்டேய்..


    இதுவும் குறிப்பாக தனிமனித தாக்குதல். இன்று வந்த குமுதத்தில் கூட 60% M.K.நாராயணன் பற்றி மீதி 40% ஒரு புது குழப்பத்தை தொடங்கி வைக்கிறார்..




    //இங்கேதான் என் முதல் சந்தேகம். நம்மிடம் உள்ள யுரேனியம் போதவில்லை என்பதே உண்மைதானா? மின்சார உலைகளுக்கு அமெரிக்கா, இதர நாடுகளிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்துவிட்டு, நம் வசம் உள்ள யுரேனியத்தை முழுக்கவும் அணு ஆயுத தயாரிப்புக்குத் திருப்பி விடுவதுதான் அசல் நோக்கமா?
    //


    இதுதான் ஐய்யா ஞாநியோட புது கவலை.

    இதெல்லாம் கேட்க ஆளே இல்லையா ???

    ReplyDelete
  130. ////
    //இங்கேதான் என் முதல் சந்தேகம். நம்மிடம் உள்ள யுரேனியம் போதவில்லை என்பதே உண்மைதானா? மின்சார உலைகளுக்கு அமெரிக்கா, இதர நாடுகளிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்துவிட்டு, நம் வசம் உள்ள யுரேனியத்தை முழுக்கவும் அணு ஆயுத தயாரிப்புக்குத் திருப்பி விடுவதுதான் அசல் நோக்கமா?
    //

    இதுதான் ஐய்யா ஞாநியோட புது கவலை.
    ////

    Yes, it is true.
    It is a strategic decision.
    Gnani may have an issue in that, but I'm okay.

    Moreover, there will be a segregation of strategic assets* vs civilian assets.

    *assets == nuclear reactors.

    ReplyDelete
  131. //சரிங்க வாசகன். இவரை நாகரீகமாக தானே விமர்சித்திருக்கிறேன்? விமர்சிக்கவே கூடாது என்கிறீர்களா?//

    அவரது கருத்துக்களை மட்டும் விமர்சியுங்கள். 'பிரபலமாவதற்காக' எதிர்மறையாக எழுதுகிறார் என கூறுவதுதான் நாகரிகமா? எப்படி அந்த உண்மையை அறிந்தீர்கள்?

    நீங்கள் அவரை எதிர்த்து இப்படி எழுதுவதும் 'பிரபலமாவதற்கு'தான் என்றால் ஒத்துக்கொள்வீர்களா?

    ReplyDelete
  132. //ஆமாம், ஞாநி என்ன வேணா எழுதலாம். நம்ம அவரைப்பற்றி ஒரு வரி எழுதக்கூடாது. ஞாநி யார் தலையில்னாலும் குட்டுவார். அது அவர் பிறப்புரிமை! அப்படினு அனானி வாசகன் சொல்றார்//

    உங்களுக்கு விசயம் புரியவில்லை என நினைக்கிறேன். மேலே கயல்விழிக்கு சொன்ன பதில்தான்.

    //யார் எப்படி பேசனும்னு/பதிவு செய்யனும்னு சொல்ல இவருக்கு என்ன தகுதி இல்லை உரிமை இருக்குனு தெரியலை!//

    பதிவை படித்தபின் எனக்கு பட்டதை நாகரிமாகத்தான் எழுதுதியிருக்கிறேன். ஆலோசனைகளை எடுத்துக்கொள்வதும் தவிர்ப்பதும் உங்கள் உரிமை. இதைச்சொல்ல என்ன தகுதியை எதிர்பார்க்கிறீர்கள்?

    //அதுவும் அனானியாக வந்து இதைச்சொல்லுமளவுக்கு ஒரு பெரியமனிதர் இவர்!//

    தமிழ்மணவாசகன் மட்டும் தான். அனானி ஆப்சன் வசதிப்படுகிறது.

    விருப்பமில்லையென்றால் அனானி ஆப்பசனை எடுத்துவிட வேண்டியதுதானே! (எதை வைக்க வேண்டும் எடுக்கவேண்டும் என சொல்ல இவருக்கு என்ன தகுதி இல்லை உரிமை இருக்கு என பழையசங்கை ஊதவேண்டாமே)

    ReplyDelete
  133. வாசகன் சார்:

    நீங்க அனானியா வருவது தவறில்லை. ஆனால் அனானியாக வருபவர்கள் பொதுவாக "ஹிட் அண்ட் ரன்" கேஸா இருப்பாங்க.

    நீங்க பேசுவது ஞானி பேசுவதுபோல் உள்ளது.

    சரி, அந்த வரி கொஞ்சம் அதிகம்தான்.
    மன்னித்துவிடுங்கள். இனிமேல் கவனமாக எழுதுகிறோம் ;-)

    Take it easy!

    ReplyDelete
  134. ////சரிங்க வாசகன். இவரை நாகரீகமாக தானே விமர்சித்திருக்கிறேன்? விமர்சிக்கவே கூடாது என்கிறீர்களா?//

    அவரது கருத்துக்களை மட்டும் விமர்சியுங்கள். 'பிரபலமாவதற்காக' எதிர்மறையாக எழுதுகிறார் என கூறுவதுதான் நாகரிகமா? எப்படி அந்த உண்மையை அறிந்தீர்கள்?

    நீங்கள் அவரை எதிர்த்து இப்படி எழுதுவதும் 'பிரபலமாவதற்கு'தான் என்றால் ஒத்துக்கொள்வீர்களா?

    //

    This is a pattern.இது மாதிரி எதிர்மறையான விமர்சனம் அவர் எழுதியது முதன் முறையல்ல, இப்படி தொடர்ந்து எழுதுவதால் இவர் எழுதிய எதையும் நம்ப முடிவதில்லை.
    இதுவும் என்னுடைய கருத்து தான், இதை யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே? நான் விகடனில் எல்லாம் எழுதுவதில்லை என்பதால் என் எழுத்தையும் ஞானியின் எழுத்தையும் ஒப்பிட முடியாது. ஞானி போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு என்னை விட சமூகப்பொறூப்பு அதிகம்.

    உதாரணத்துக்கு, கருணாநிதியை விமர்சிப்பதில் இவர் கொஞ்சம் அல்ல, ரொம்பவே ஓவர்(அதற்காக நான் திமுக அபிமானி அல்ல)

    ReplyDelete
  135. மன்னிக்கவும் வருண். என்னுடைய அந்த கருத்தில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. என் கருத்தை கேட்டு தமிழ் நாட்டில் எந்த முக்கியமான முடிவும் எடுக்கப்படுவதில்லை. இதை நான் எழுதவில்லை என்றாலும் மனதில் நினைக்கத்தான் போகிறேன்.

    ஒருவேளை இதை எழுதியதால் திரு.வாசகனை புண்படுத்தி இருந்தால் அதற்கு மட்டும் மன்னிக்கவும்.

    ReplyDelete
  136. நல்ல பதிவு, சிறந்த கருத்துக்கள்.

    நான் என் பதிவில் http://maraneri.blogspot.com/2008/07/blog-post_21.html கேட்டுள்ள கேள்விகளுள் ஒன்று ,
    இந்தியாவில் மனித உயிர்களை மதிப்பதில்லையே ? சாதாரன திட்டங்களிலேயே இவர்கள் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதில் அணுசக்தி திட்டத்தில் அப்படி இருந்துவிட்டால் என்னாவது என்பதுதான்.

    ஓரத்துப்பாளையம் அணையைப்பற்றி உங்களுக்கு தெரியும்தானே? சாயப்பட்டறை கழிவுகளால் நிரம்பி, அதன் பாசனப்பகுதிகள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டன. இன்றளவும் அதை சரிசெய்ய முடியவில்லை. நம் அரசாங்கம் அதில் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. நீதிமன்றத்தின் தலையீட்டால்தான் ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது.

    இது போன்ற செயல்கள்தான் பயத்தை அதிகப்படுத்துகின்றன.

    ReplyDelete
  137. அரசியலை பொறுத்தவரை இப்பொழுது விவாதிக்கபடுவது அமெரிக்காவுடன் இந்தியாவின் 123 ஒப்பந்தமே தவிர அணுமின்-சக்தி அல்ல. அணுமின்சக்தி தான் பிரச்சனை என்றால், ந்மது அரசியல் கட்சிகள் அணுமின் நிலையங்களில் போராட்டம் நடத்தி இருபபர், பேசப்டுவது யுரேனிய சப்ளை சம்ந்தமானது மட்டுமே. அதுவும் குறிப்பாக அமெரிக்காவுடன் யுரேனிய சப்ளை சம்ந்தமானது மட்டுமே. சீனாவுடன் ஒப்பந்தம் செய்து இருந்தல் கம்யுனிஸ்டுகள் எதிர்த்து இருக்க மாட்டார்கள்.... அமெரிக்க எதிர்ப்பு அவர்களின் அரசியல் தேவை அவ்வளவே.

    அமெரிக்காவுக்கு யுரேனியம் ஒரு வியாபர பொருள். லாபம் ஈட்டும் வாய்ப்பு.

    ஆனால் பொது மக்களூக்கு இது வாழ்வதர பிரசன்னை. இப்பொதல்ல எதிர்காலத்தில் இன்னும் மின் பற்றக்குறை அதிகரிக்கும் போது .( இப்பொதே தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட 2 மணி நேர மின் வெட்டும் அறிவ்விக்கபடாத பல மணி நேர மின் வெட்டும் நடைமுறையில் உள்ளது.
    இதை தவிர்க்க அணுமின் சக்தி சக்தியை பயன்படுத்தலாம்.

    ஆனால் என்னை பொருத்தவரை சூரிய சக்தி அணுமின் சக்தி மட்டுமல்ல மற்ற எல்ல மின் சக்திக்கும் மாற்றாக பயன் படுத்தலாம்.

    தேவை சரியான திட்டமிடுதல் மட்டுமே.

    அணுமின் சக்தி ந்லையங்களை நிறுவதற்கும் , பயன் படுத்துவதற்கும் ஆகும் செலவை விட சூர்ய சக்தி மிகவும் குறைவு.

    ஆனால் அரசாங்கங்கள் இந்த திசையில் முயற்சி மேற்கோள்ள வேண்டும்.

    ReplyDelete
  138. உலகின் 360 டிகிரியில் 180 டிகிரி எப்பொழுதும் பகல்தான் ஆகவெ, உலக முழுவதும் பெரும் அளவில் சூரிய சக்தி நிலைங்களை அமைத்தால் 24 மணிநேரம் தடையில்லாத மின்சார உற்பத்தி நிச்சயம் செய்யலாம்.

    இதற்கு உலக வர்த்தக அமைப்பு, உலக சுகாதார அமைப்பு போல உலக மின் அமைப்பை உருவாக்க வேண்டும். மின் தேவையை ஒட்டி உலகம் முழுமையும் சீரான மின் பகிர்மானமும் செய்யலாம்.

    எதிர் காலத்தில் மின்சாரத்தல் / காற்றால் இயங்கும் வாகனஙகள் வரத்துவங்கினால எற்படும் மின் தேவையை இப்போது உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையஙகளாலும் திர்த்து வைக்க முடியாது.

    ReplyDelete
  139. மிகவும் முக்கியமாக சூரிய சக்தி மின் நியங்கட்கு எரிபொருள் செலவு கிடையாது, எரிபொருளூக்கு யரையும் சார்ந்து இருக்க வேண்டியது இல்லை.

    ஆனால் அணுச்க்தியில் இந்த்யா எரிபொருளுக்கு வெளிநாடுகளை சர்ந்து இருக்க வேண்டி உள்ளது ஒரு பெருங்குறையே.

    உலக தேரியம் உற்பத்தியில் இந்தியா வின் பங்கு மிகப்பெரியது ஆனால் அதை அணுமின் உற்பத்தியில் பயன்படுதத எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இது மிக வருந்த தக்கது -- வினேத்

    ReplyDelete
  140. அரசியலை பொறுத்தவரை இப்பொழுது விவாதிக்கபடுவது அமெரிக்காவுடன் இந்தியாவின் 123 ஒப்பந்தமே தவிர அணுமின்-சக்தி அல்ல. அணுமின்சக்தி தான் பிரச்சனை என்றால், ந்மது அரசியல் கட்சிகள் அணுமின் நிலையங்களில் போராட்டம் நடத்தி இருபபர், பேசப்டுவது யுரேனிய சப்ளை சம்ந்தமானது மட்டுமே. அதுவும் குறிப்பாக அமெரிக்காவுடன் யுரேனிய சப்ளை சம்ந்தமானது மட்டுமே. சீனாவுடன் ஒப்பந்தம் செய்து இருந்தல் கம்யுனிஸ்டுகள் எதிர்த்து இருக்க மாட்டார்கள்.... அமெரிக்க எதிர்ப்பு அவர்களின் அரசியல் தேவை அவ்வளவே.

    அமெரிக்காவுக்கு யுரேனியம் ஒரு வியாபர பொருள். லாபம் ஈட்டும் வாய்ப்பு.

    ஆனால் பொது மக்களூக்கு இது வாழ்வதர பிரசன்னை. இப்பொதல்ல எதிர்காலத்தில் இன்னும் மின் பற்றக்குறை அதிகரிக்கும் போது .( இப்பொதே தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட 2 மணி நேர மின் வெட்டும் அறிவ்விக்கபடாத பல மணி நேர மின் வெட்டும் நடைமுறையில் உள்ளது.
    இதை தவிர்க்க அணுமின் சக்தி சக்தியை பயன்படுத்தலாம்.

    ஆனால் என்னை பொருத்தவரை சூரிய சக்தி அணுமின் சக்தி மட்டுமல்ல மற்ற எல்ல மின் சக்திக்கும் மாற்றாக பயன் படுத்தலாம்.

    தேவை சரியான திட்டமிடுதல் மட்டுமே.

    அணுமின் சக்தி ந்லையங்களை நிறுவதற்கும் , பயன் படுத்துவதற்கும் ஆகும் செலவை விட சூர்ய சக்தி மிகவும் குறைவு.

    ஆனால் அரசாங்கங்கள் இந்த திசையில் முயற்சி மேற்கோள்ள வேண்டும்.

    ReplyDelete
  141. //ஆனால் என்னை பொருத்தவரை சூரிய சக்தி அணுமின் சக்தி மட்டுமல்ல மற்ற எல்ல மின் சக்திக்கும் மாற்றாக பயன் படுத்தலாம்.
    //

    Glomo,

    உங்கள் விளக்கமான கருத்துக்களுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி.

    சோலார் பேட்டரிகள் தயாரிக்க அதிக செலவாகும், மேலும் சூரிய ஒளியால் கிடைக்கும் மின்சக்தி அளவில் ரொம்ப குறைவு என்ற எதிர் விவாதங்களைப்பற்றி உங்களது கருத்து என்ன?

    ReplyDelete
  142. //அமெரிக்காவுக்கு யுரேனியம் ஒரு வியாபர பொருள். லாபம் ஈட்டும் வாய்ப்பு.
    //

    மற்ற நாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் வாங்கும் அளவுக்கு உண்மையாகவே இந்தியாவுக்கு மூலப்பொருட்களில் பற்றாக்குறை என்பதை நம்பவே கடினமாக இருக்கிறது. இதுவும் ஒரு வகை அரசியலோ?

    ReplyDelete
  143. Kayal, Varun, Vazhipokkan and others,

    Very nice and valid arguments. Even I thought of writing something, but before something I have to read carefully already posted comments. Hopefully I will try to read it by this weekend.

    I am planning to make a document with all the posts. Kayal and Varun, if like, please let me know i will send you the same. As you are telling, i liked to maintain the points from kaiyedu and vazhipokkan. Thanks.

    ReplyDelete
  144. திரு glomo, அவர்களுக்கு,

    மிகச் சரியானதொரு புள்ளியைத் தொட்டிருக்கிறீர்கள். பெரிதும் பேசப்படாத மற்றும் மிகவும் அவசியமான ஒரு ஆற்றல் வழிமுறையைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.

    இந்தியாவில் பொதுவாகவே சூரிய ஆற்றல் குறைத்து மதிப்பிடப்படுகிறது மற்றும் வீணடிக்கப்படுகிறது. ஆனால், இது குறித்து தனியாக உரையாட வேண்டும்.

    இது குறித்து ஒரு தனிப்பதிவெழுதலாம் என்றேண்ணியபோது நீங்கள் சரியாகத் தொட்டுவிட்டீர்கள்.. :))

    //சோலார் பேட்டரிகள் தயாரிக்க அதிக செலவாகும், மேலும் சூரிய ஒளியால் கிடைக்கும் மின்சக்தி அளவில் ரொம்ப குறைவு என்ற எதிர் விவாதங்களைப்பற்றி உங்களது கருத்து என்ன?//

    இது குறித்து உங்களது மேலதிக கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  145. //சோலார் பேட்டரிகள் தயாரிக்க அதிக செலவாகும், மேலும் சூரிய ஒளியால் கிடைக்கும் மின்சக்தி அளவில் ரொம்ப குறைவு என்ற எதிர் விவாதங்களைப்பற்றி உங்களது கருத்து என்ன?//

    நீங்கள் சொலவது தற்போதுள்ள சூழ்நிலையை மட்டும் கருத்தில் கொண்டு பார்ததால் உண்மையே.

    ஆனால் திரு வழிப்போக்கன் கூறுவது போல ....
    //எப்பவுமே ஒரே தியரிங்க --> Mass production gives cheap products.//

    செல்போன், கம்பியூட்டர், டிவி...பல பொருட்கள் Mass production ல் விலை குறைந்துள்ளதை அனைவரும் அறிவர்.

    மற்றும் ஒரு விசயம்...
    சூரிய ஒளி மின்சக்தி என்றாலே சோலர் செல் தகடுகள சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து அதிலிருது வரும் மின்சாரத்தை பட்டரியில் சேமித்து பயன் படுத்தும் முறைதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் அதை பல முறைகளில் பயன் படுத்தலாம்.

    சூரிய ஓளியை குவி ஆடியில் காகிதத்தில் குவித்து காகிதத்தை எரிக்கும் விளையட்டை மறந்து இருக்க் மாட்டிர்கள் என நினைக்கிறேன்.

    அதே முறையில் சூரிய ஒளிய குவித்தல் சாதாரணமாக 27000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை பெறலாம்.

    தண்ணீர் கொதிக்க 100 டிகிரி போதுமானது. கொதித்து வரும் நீராவியை டர்பைனில் செலுத்தி சுழற்ற செய்து மின்சர்ரம் தயாரிப்பது மிக சுலபம்.

    அணுமின் சக்தியோ, புணல் அனல் காற்று எதுவயினும், அதன் பணி டர்பைனை சுழற்றுவதே, மின்சாரம் தயரிப்பது டர்பைனுடன் இணைந்த டைனமோ தான்.

    எனவே எரிபொருள் செலவு எதுமின்றி சூரிய ஒளி மின்சாரம் சாத்தியமே..


    அனல் மின் நிலைத்திலேய நிலக்கரியை விலைக்கு வாங்கி
    Rs 2/unit வரும் என்றால் சூரிய் சக்தி மின்சரம் வெறும் 2 பைசா/ unit தர இயலும்.

    இதன் ஒரே பிரச்சனை பகிர்வுதான்.
    கம்பியில்லமல் மினசாரத்தை கடத்தும் ஆராயிச்சிகள் இப்போது துவக்க நிலையில் உள்ளன... அவை
    வெற்றி பெற்றால்... 2 பைசா/ unit என்பதை நுகர்வோருக்கே தர இயலும்.

    மற்ற எல்ல முறைகளூம் வால்வு ரேடியோ போல வழக்கொழிந்து போகும். சுற்றுசுழலுக்கு எள் முனையளவும் தீங்கற்றது என்பது இதன் கூடுதல் சிறப்பு.

    ReplyDelete
  146. திரு.glomo அவர்களுக்கு,
    மிகச் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.

    //அதே முறையில் சூரிய ஒளிய குவித்தல் சாதாரணமாக 27000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை பெறலாம்.
    //

    இதே ஒளிக்குவிய அடிப்படையில், தற்போது சூரியக் கலத் தகடுகளின் செயல்திறனையும் சில மடங்குகள் அதிகரிக்கச் செய்திருக்கின்றனர்.

    கம்பிகளின் வழியே எடுத்துச் செல்வது என்பது ஆற்றலைப் பெருமளவு தயாரிப்பிற்கான குறைபாடாகயிருக்கலாம்.

    ஆனால், சில இடங்களில் அதுவே அதன் சாதகமும் கூட. ஏனெனில், மற்ற வழிமுறைகளில் மின்விநியோக இழப்புகள் (transmission losses)அதிகம், இதனை சாதகமாக எடுத்துக்கொண்டும் செயல்படலாம் தேவையான இடங்களில்.

    மேலும், ஒற்றைவிளக்கு இலவசமின்சாரத் திட்டங்களுக்கு பதிலாக, இரண்டுவிளக்கு மற்றும் ஒரு மின்விசிறியைச் சுழலச்செய்யும் சூரியமின்கலத் தகடுகளை இலவசமாகக் கொடுத்தால் (பெருமளவு உற்பத்தி நமக்கு இலாபகரமாகவே இருக்கும்), நிச்சயம் அரசாங்கத்திற்கு லாபமே. இதன்மூலம் பெரிய அளவில் தேவையற்ற மின்விநியோக இழப்புகளையும் தடுக்கலாம். இதிலும் சிக்கல்கள் இருக்கும், ஆனால், நிச்சயம் தீர்வுகாணமுடியாத அளவிற்கு இருக்காது.

    ReplyDelete
  147. *** I am planning to make a document with all the posts. Kayal and Varun, if like, please let me know i will send you the same. As you are telling, i liked to maintain the points from kaiyedu and vazhipokkan. Thanks.***

    Glad to know that SK. Please let us know when your document is ready and, if at all you need any assistance! Thank you! :-)

    ReplyDelete
  148. Glomo,

    ரொம்ப நன்றாக விளக்கி இருக்கிறீர்கள் நன்றி.

    தற்போதைய தொழில் நுட்பத்தை வைத்து தயாரிக்கப்படும் சூரிய மின்சக்தி நம்முடைய மொத்த தேவைகளுக்கு போதுமானதாக இருக்காது, புது தொழில்நுட்பம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

    அணுமின் சக்தி ஒரு existing technology என்பதால் மட்டுமே நான் அணுமின் சக்திக்கு ஆதரவளிக்கிறேன். மாற்று முறையில் அணு மின்சாரத்துக்கு ஒப்பான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால் என்னுடைய ஆதரவு நிச்சயம் மாற்று வழிக்கு தான். மாற்று சக்தி கண்டுபிடிக்கப்படும் போது, க்ராஜுவலாக மாறிவிடலாம் இல்லையா?

    இந்தியா மின்சாரம் இல்லாததால் மற்ற நாடுகளை விட பின் தங்குவதைப்பற்றி மட்டும் தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  149. அணுமின் திட்டத்தை நான் எதிர்க்கவில்லை, ஆனால் அதைவிட மலிவான சுற்றூச்சூழலுக்கு பாதுகாப்பன வழிமுறைகள் உள்ளன, அவற்றை நடைமுறையில் பயன்படுத்தவேண்டும் என்றால் நிறைய ஆராய்ச்சிகள் தேவை.
    இவற்றை நாம் முன்னமே செய்து இருந்தால், மிக நன்றாக் இருந்து இருக்கும். இப்பொதாவது செய்ய வேண்டும் என்பதே என் ஆவல்.

    அது மட்டுமல்ல எல்லா தயாரிப்புகளிலும் துணை பொருகள், கழிவு பொருட்கள் இருப்பதை போல சூரியஒளி ஆலையிலும் இருக்கலாம், ஆனால் அது டர்பைனை இயக்கய நீராவியும் தான். அதை குளிர்வித்தால் மிகத்தூய்மையான குடிநீர் கிடைக்கும்.

    கடல் நீரை டர்பைனை இயக்க பயன்படுத்தினால் நிர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சுத்தமான குடிநீர் இலவசமாக கிடைக்கும். மேலும் நீர் ஆவியான உடன் சுத்தமான உப்பும் கிடைக்கும்.

    நீர் வள நிபுணர்கள் அடுத்த உலகபோர் எற்பட்டல் அது குடிநீருக்காகத்தன் இருக்கும் அந்த அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு வரும் 2020ல் எற்படும் என்கிறார்கள்.
    சன் டிவி செய்தியில் இப்பொது ராமநாதபுரம் திருவாடனையில் ஒரு குடம் குடிநிர் 8-10 ருபாய்க்கு விற்கபடுகின்றது.

    மினரல் வாட்டர் இதை விட விலை அதிகம் இல்லையா என கேடகலாம். ஆனால அங்கே இந்த 10 ரு/குடம் இல்லைஎன்றால் வேறு எந்த நீரும் இல்லை. இந்த விலை கொடுத்து வாங்குவது மிகவும் வறிய மக்களே.

    திரு கையெடு சொல்வது போல மிக சிறிய அளவில் பல்புகட்கும் ,மின் விசிறிக்கும் தேவையன மின்சாரத்துக்கு நாமே மின்கலம் தயரிக்கலாம், ஆனால் பல பயன் விளவிக்கும் சூரிய மின் ஆலை நாம் அமைப்பது சத்தியம் அல்ல, அரசாங்கம்/பொரிய தனியார் நிருமங்கள் ,இந்த திசையில் ஆராய வேண்டும். அதற்க்கு பல கோடிகள் முதலீடு தேவைப்படும்.

    சாத்தியம் என்றால் இதன் ஆங்கில / குஜரத்தி மொழியக்கத்தை குஜராத் முதல்வர் திரு நரேந்திர மோடி அவர்கட்கு அனுப்பலாம். தற்போதய இந்திய அரசில் மக்களூக்காக நீண்ட கால அளவில் சிந்தித்து செயல்படும் முதலவர், அவர் ஒருவேளை இதை குறித்து ஆரய உத்திரவிடலாம். எனெனில் மின்சாரம் மாநில அரசாங்கத்தின் அதிகார வரம்ப்புக்கு உட்பட்டதுதான்.

    ReplyDelete
  150. ரொம்ப நன்றி Glomo.

    நானும் அணு சக்திக்கு ஆதரவு அளிக்க ஒரே காரணம், சரியான மாற்று வழி இல்லாததினால் இந்தியா தொழில்நுட்பத்தில் பின் தங்கி விடக்கூடாது என்ற பயத்தில் தான்ன்.

    மற்றபடி, மாற்று வழி கண்டுபிடிக்க நிதி ஒதுக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உங்களின் கருத்துல் 100% ஒப்புதல் உண்டு.

    ReplyDelete
  151. பதிவின் துவக்க நாட்களில் பின்னூட்டங்களில் அனைவரும் அடிச்சு ஆடிகிட்டிருந்த காரணத்தால் எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்று மட்டுமே கவனித்து விட்டுப் போய்விட்டேன்.

    இந்திய அமெரிக்க ஒப்பந்தம் அணு தவிர பாதுகாப்பு,நட்புறவு,கல்வி என்று அதன் வீச்சு இன்னும் நீளும்.அகன்ற பார்வையில் இரு நாடுகளின் நலன்களுக்காக இந்த ஒப்பந்தம் தேவையானது.

    ReplyDelete
  152. வணக்கம் ராஜ நடராஜன்

    அணுசக்தி எதிர்ப்பு முக்கியமாக அமரிக்கா எதிர்ப்பாக கருதப்படுகிறது என்று நினைக்கிறேன். அமரிக்கா என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது தேவை இல்லாதது.

    ReplyDelete
  153. //நானும் அணு சக்திக்கு ஆதரவு அளிக்க ஒரே காரணம், சரியான மாற்று வழி இல்லாததினால் இந்தியா தொழில்நுட்பத்தில் பின் தங்கி விடக்கூடாது என்ற பயத்தில் தான்ன்.//

    என்னுடைய எண்ணமும் இதுவே..

    ReplyDelete
  154. //நானும் அணு சக்திக்கு ஆதரவு அளிக்க ஒரே காரணம், சரியான மாற்று வழி இல்லாததினால் இந்தியா தொழில்நுட்பத்தில் பின் தங்கி விடக்கூடாது என்ற பயத்தில் தான்ன்.//

    என்னுடைய எண்ணமும் இதுவே..

    நன்றி கயல்விழி, வழிப்போக்கன்,

    தற்போதய நிலையில் மாற்று எரிசக்தி இல்லை என்பது நிஜமே, ஆனால் அந்த திசையில் தற்போதாவது ஆய்வுகளை துவங்கினால்தான் குறைந்தது 5 ஆண்டுகளில் நம்பிகையான
    (Reliable and stable) மின் உற்பத்தி வழிமுறையை உருவாக்க இயலும்.

    ReplyDelete
  155. //தற்போதய நிலையில் மாற்று எரிசக்தி இல்லை என்பது நிஜமே, ஆனால் அந்த திசையில் தற்போதாவது ஆய்வுகளை துவங்கினால்தான் குறைந்தது 5 ஆண்டுகளில் நம்பிகையான
    (Reliable and stable) மின் உற்பத்தி வழிமுறையை உருவாக்க இயலும்.
    //

    Glomo,

    இதில் தான் எனக்கு ரொம்ப சந்தேகம் இருக்கிறது. சமீபத்தில் ஒரு அமரிக்க போர்ட் டிஸ்கஷன் படித்துக்கொண்டிருந்தபோது அணு சக்தி விவாதம் வந்தது. அங்கிருந்த பலர் "அமரிக்கா தேவை இல்லாத வம்பு சண்டைகளுக்கு செலவிடும் பகுதியில் ஒரு மிகச்சிறிய பகுதியைக்கூட மாற்று எரிபொருள் ஆராய்ச்சிக்கு ஒதுக்குவதில்லை" என்று வருத்ததுடன் குறிப்பிட்டார்கள்.

    இந்திய அரசியலை கொஞ்சம் நினைத்துப்பார்க்கவும். எத்தனை நலத்திட்டங்கள் வெறும் அரசியல் காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன? மாற்று எரிபொருள் ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்குவார்களா? அப்படியே ஒதுக்கினாலும் அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவார்களா? ரொம்ப சந்தேகம்!

    ReplyDelete
  156. பின்னூட்டம் 200க்கும் மேல் தாண்டுவதற்காக வேண்டி மீண்டும் எனது சின்ன வரிகள்.

    ReplyDelete
  157. //பின்னூட்டம் 200க்கும் மேல் தாண்டுவதற்காக வேண்டி மீண்டும் எனது சின்ன வரிகள்.
    //

    நானே அனானியா வந்து நாலைஞ்சு பின்னூட்டம் போடட்டுமா? :) :) ;)

    ReplyDelete
  158. //நானே அனானியா வந்து நாலைஞ்சு பின்னூட்டம் போடட்டுமா? :) :) ;)//

    அது சரி!அப்படியும் ஒரு டெக்னிக் இருக்குதா?யாரும் சொல்லவேயில்லை:)

    ReplyDelete
  159. //அது சரி!அப்படியும் ஒரு டெக்னிக் இருக்குதா?யாரும் சொல்லவேயில்லை:)
    //

    டெக்னிக் நம்பர் 2: இப்படி ரீசனே இல்லாமல் பதில் எழுதி கூட நம்ம பதிவை நாமே பாப்புலராக்கலாம் ;)

    ReplyDelete
  160. //இந்திய அரசியலை கொஞ்சம் நினைத்துப்பார்க்கவும். எத்தனை நலத்திட்டங்கள் வெறும் அரசியல் காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன? மாற்று எரிபொருள் ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்குவார்களா? அப்படியே ஒதுக்கினாலும் அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவார்களா? ரொம்ப சந்தேகம்!//

    1) இந்திய அளவில் செயல்படுத்தும் திட்டமல்ல சூரிய ஒளித்திட்டம், இது உலக அளவில் செயல்படுத்த பட வேண்டியது. எனெனில், இந்திய அளவில் செயல்படுத்தபட்டால் கலகத்தா -கன்யாகுமரி - மும்பை வழியில் பல மின் உலைகள் அமைக்கலாம். ஆனால் அதனால் அதிகபட்சம் 9~10 மணிநேரம் மட்டுமே மின் உற்பத்தி செய்ய இயலும். பகல் பொழுதில் தேவைக்கு அதிகமான மின் சக்தி கிடைக்கும் ஆனால் இரவுக்கு அதை சேமிக்க மிகப்பெரிய மின்கலன்கள்(Battires)தேவை. எவ்வளவு சிறப்பான (Battires)ஆனாலும் அதன் ஆயுள் 2~3 ஆண்டுகளே. அதனால் இது செலவு பிடிப்பதாக இருக்கும்.

    உலக அளவில் செயல் படுத்தப்பட்டால், இந்தியாவில் பகலில் கிடைக்கும் தேவைக்கு அதிகமான மின் ஆற்றல் இரவாக இருக்கும் வட, தென் அமெரிக்க நாடுகட்கு அனுப்பி பகிர்வு செய்ய முடியும் இவ்வாறே உலகம் முழுமையும் செய்தால் பற்றாக்குறை இல்லாத தொழில் வளம் படைத்த, சுற்றுப்புற சூழல் மாசற்ற உலகை உருவாக்கலாம்._

    ReplyDelete
  161. கூடங்குளம் அணு உலை குறித்த எமது நிலைபாடு



    அணுசக்தியை அழிவு சக்தியாகக்கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் அணு ஆயுதங்களைச் செய்து குவித்து உலக மக்களைஅச்சுறுத்துவதை எதிர்த்தும், உலகெங்கிலும் உள்ள அணு ஆயுதங்களை முற்றாக ஒழித்து அணுஆயுதமற்ற உலகத்திற்காகவும் போராடுவது; அதே நேரத்தில், ஒடுக்கப்பட்ட நாடுகள்ஏகாதிபத்தியத்தின் இராணுவத் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அணுஆயுதம் வைத்துக்கொள்வதை ஆதரிப்பது.



    அணுசக்தி காலாவதியாகிவிட்டது என்ற பிற்போக்குசக்திகளின் வாதத்தை முற்றாக நிராகரித்து, அணுசக்தியை அமைதிவழியில் (மின் உற்பத்திபோன்ற) பயன்படுத்துவது அவசியமானது என்றும்; அவ்வாறு பயன்படுத்தும்போதுஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் தாசர்களான உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவவர்க்கங்களின் இலாபவெறிக்காகக் காலவதியாகிப்போன அணு உலைகள், தொழில்நுட்பங்களைப்பயன்படுத்தி அணு மின் உற்பத்தி செய்யும் அணு உலைகளை மூடவேண்டும்; பாதுகாப்பான,புதிய தொழில் நுட்பத்திலான அணு உலைகளைத் திறக்க வேண்டும் என்று போராடுவது;

    இந்தியாவிலுள்ள ஜெய்டாபூர், கைகா,இரத்னஹள்ளி உள்ளிட்ட அனைத்து அணு உலைகளையும் இதனடிப்படையில் ஆய்வு செய்து, இயக்கக்கோருவதுடன் கூடங்குளம் அணு உலையை இதனடிப்படையில் துவங்குவதை ஆதரிப்பது;’



    அதே நேரத்தில், கூடங்குளம்அணுமின் நிலையம் அமைப்பதால் பாதிக்கப்படும் மக்களுக்கு நட்ட ஈடு மற்றும் மறுவாழ்வுதிட்டங்களைச் செயல்படுத்தல்; மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்குத்தீர்வுகாணுதல்; அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள 30 கி.மீ தூரத்தில் வசிக்கும்மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புபணிகளுக்குப் பயிற்சி அளித்தல் போன்ற மக்களின் உடனடிக் கோரிக்கைகளையும், பாதுகாப்புஏற்பாடுகளையும் நிறைவேற்றி அணு உலையைத் துவங்கப் போராடுவது என்பதே எமதுநிலைபாடாகும்.



    அணுசக்தி, மனிதகுல ஆற்றல் பற்றாக்குறை எனும்இருளைப் போக்கும் அற்புத விளக்காக, இயற்கை உயிரியல் துறையில் சாகசங்கள் புரியும்உயிர் சக்தியாக, கடவுள் படைப்பு எனும் மாயையைக் கட்டுடைத்து இயற்கை உண்மையைஉலகுக்குக் காட்டும் மாபெரும் சக்தியாக திகழ்கிறது. அந்த அற்புத சக்தியை மனிதகுலம்தம்வசப்படுத்தி வளம் பெற்றிட கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள்வோம்.



    * இந்திய அமெரிக்க இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களை ரத்துசெய்!



    * ஏகாதிபத்தியங்கள்,உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளின் இலாப வெறிக்காக இயங்கும் பழைய காலாவதியான அணு உலைகளை மூடு,



    புதிய தொழில்நுட்ப ரீதியிலான, பாதுகாப்பான அணு உலைகளை அனுமதி!



    * மக்களுக்கு உரியபாதுகாப்பு வழங்கி கூடங்குளம் அணு உலையைத் திற!



    * அணுசக்தி “காலாவதியாகிவிட்டது” என்று கூறி , அணு உலையை மூடு என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்!



    * அனல், புனல், காற்று,சூரிய ஒளி, அணுசக்தி உள்ளிட்ட தேசிய மின் திட்டத்திற்காகப் போராடுவோம்!



    மக்கள் ஜனநாயக இளைஞர்கழகம், தமிழ்நாடு



    ======================================================================================

    வெளியீடு : சமரன் வெளியீட்டகம் எண்:28/141, மாதவரம் நெடுஞ்சாலை,பெரம்பூர், சென்னை - 600 samaranpublisher@gmail.com

    http://samaveli.tripod.com/

    ReplyDelete