Wednesday, July 16, 2008

தமிழ்மண அரசியல் : சில விளக்கங்கள் ப்ளீஸ்

டியர் அங்கிள்ஸ், ஆண்டீஸ் மற்றும் ப்ரெண்ட்ஸ்,

கடந்த 2 மாதமாக தமிழ் மணத்தில் சுற்றி சுற்றி சில விஷயம் புரியாமல் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்துவிட்டேன். "முந்தி மட்டும் என்னவாம்?" என்று நீங்கள் கேட்கும் கேள்வி என் காதில் விழுகிறது, அப்படி எல்லாம் சும்மா நடு நடுவே கேள்வி கேட்கக்கூடாது. உங்களுக்கு தெரிந்த டிப்ஸ் ஏதாவது கொடுத்தீர்கள் என்றால் என்னை மாதிரி புதிய பதிவர்கள் பயனடைவோம்.

எனக்கு சில கேள்விகள்:

1. எந்தெந்த வார்த்தை எல்லாம் எழுதினால் தமிழ் மணத்தில் ஸ்டார் வரும்? ஜ்யோவராம் சுந்தர் விவகாரம் என்னாச்சு? ஏனென்றால் 'ஒரு மாதிரியான தலைப்பில்' நிறைய பதிவுகளைப்பார்க்கிறேன். அதுக்கெல்லாம் ஸ்டார் கிடையாதா? ஒரே குழப்பமா இருக்கு, ஏதாவது எழுதும் போது. "இதை எழுதலாமா வேண்டாமா" என்று கவலையா இருக்கு :(

2. ஒரு மாதிரி தலைப்பாக இருந்தால், ஏன் பெண்கள் காமெண்ட் எழுதுவதில்லை? நான் படிச்சு பார்த்து ஏதாவது எழுதலாமா என்று சுற்றிலும் பார்த்தால் ஒரு பெண் பதிவரை கூட காணோம்! நான் மட்டும் எழுதினால் பிரச்சினை வருமோ என்று கமெண்ட் எழுதாமல் அடக்கமான பெண் மாதிரி ஜூட் விடுகிறேன். அதற்காக சவப்பெட்டியில் இருப்பது மாதிரியான படம் போட்டிருக்கிறேன். புரியலையா? சரி விடுங்க, ச்ச்சும்மா ஒரு சில்லி ஜோக்.

3. எனக்கு விவாதமெல்லாம் ரொம்ப பிடிக்கும்,கடுமையாக இருந்தாலும் கூட. கிண்டல்,கலாய்த்தல் எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் சிலர் கொடுக்கும் ரியாக்சனைப்பார்த்தால் கொஞ்சம் பயமா இருக்கு. இங்கே யார் யார் எல்லாம் ரொம்ப சென்சிடிவ்? யார் யாரெல்லாம் ரொம்ப ஜாலி? சொன்னீங்கனா வசதியா இருக்கும்.

4. யாருக்கெல்லாம் நடு ராத்திரி எழுப்பி "அங்கிள், நீங்க வலைப்பூ எழுதறது உங்க மனைவிக்கு தெரியுமா?" இல்லைனா "அங்கிள் நீங்க வெறும் தாஸா இல்லை லார்டு லபக்கு தாஸா?" என்று கேட்டால் கோபம் வரும்?

5. பெயரிலி அங்கிள் யார்? ஏன் எல்லாரும் அவரைப்பற்றியே பேசறாங்க? அவருக்கும் மற்றவர்களுக்கும் என்ன ஃபைட்? அவர் தான் பூகி மேனா(Boogie man)?

6. ஓசை செல்லா என்பது யார்? ஏன் அவர் தொலைந்து போனார், பிறகு கிடைத்தார்? அன்செட்டில்ட் உமனுக்கும் அவருக்கும் என்ன சம்மதம்? ஏதோ தமிழ் மணத்தை ட்ரிக் பண்ணிட்டதா பேசிக்கறாங்களே? என்ன ட்ரிக் அது?

7. இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் பிரச்சினை வருமா?

கடைசியா "இது ஜும்மா சோக்கு, சோக்கு" என்று ஒரு டிஸ்கி போட்டு கூட நகைச்சுவை லேபிளையும் போட்டுடலாமா?

79 comments:

  1. 1. எனக்குத் தெரியல
    2. ஒண்ணுமே புரியல
    2. எல்லாரையும் கேளுலே
    3. நான் இல்லே
    4. அவருதான் தல
    5. தெரிஞ்சா சொல்லுலே
    6. ஒரே சிரிப்புலே

    ச்சும்மா போடுலே...

    ReplyDelete
  2. வாங்க சின்னப்பையன்

    டிப்ஸ் கொடுக்க சொன்னால் என்ன இது? :( கிண்டலா?

    ReplyDelete
  3. எனக்கு தமிழ்மணத்தில் எதுவுமே/யாரையுமே தெரியாது.

    கயல் நீ சொன்னது போல்,

    Ignorance is bliss ;-)

    ReplyDelete
  4. //எனக்கு தமிழ்மணத்தில் எதுவுமே/யாரையுமே தெரியாது.

    கயல் நீ சொன்னது போல்,

    Ignorance is bliss ;-)//

    இந்த டிப்ஸ் எல்லாம் உங்களுக்காகவும் தான் வருண்.

    ReplyDelete
  5. /
    ச்சின்னப் பையன் said...

    1. எனக்குத் தெரியல
    2. ஒண்ணுமே புரியல
    2. எல்லாரையும் கேளுலே
    3. நான் இல்லே
    4. அவருதான் தல
    5. தெரிஞ்சா சொல்லுலே
    6. ஒரே சிரிப்புலே

    ச்சும்மா போடுலே...
    /

    ரிப்பீட்டுலே.........

    :)))))

    ReplyDelete
  6. //ரிப்பீட்டுலே.........

    :)))))//

    எங்க கஸ்டமெல்லாம் உங்களுக்கு சிரிப்பா போச்சு, இருக்கட்டும் இருக்கட்டும், பார்க்கலாம். :)

    ReplyDelete
  7. *** இந்த டிப்ஸ் எல்லாம் உங்களுக்காகவும் தான் வருண். ***

    அப்படியா? சரி, என்னனு நல்லா விசாரித்து ஏதாவது புரிந்ததென்றால் எனக்கும் சொல்லு! :-)

    ReplyDelete
  8. //அப்படியா? சரி, என்னனு நல்லா விசாரித்து ஏதாவது புரிந்ததென்றால் எனக்கும் சொல்லு! :-)//

    ஏன் நீங்க கவனிக்க மாட்டீங்களோ சார்? இதுக்கும் ஒரு அசிஸ்டெண்டா?

    ReplyDelete
  9. எனக்கு புரிந்ததை நான் சொல்லவா?

    உன்னோட கேள்வி

    1) காமக்கதைகள் என்கிற தலைப்பு அவர் கொடுத்ததால்தான் பிரச்சினைனு நினைக்கிறேன். காமம், சொல்லியும் சொல்லாமல் சொல்லப்பாட்டால் இவர்கள் சகித்துக்கொள்வார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் நீயும் நானும் படிப்பதை படிக்கக்கூடாது இல்லையா? அந்த நல்லெண்னம்தான் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  10. 2) அவர்கள் கருத்தை அவர்கள் மனநாக்கிலேயே சொல்லிக்கொள்கிறார்கள். நிச்சயம் அவர்கள் கருத்தை இன்னொரு ஆண் சொல்லும்போது மகிழ்ச்சி அடைக்கிறாகள். எதுக்கு வம்புனுதான்!

    ReplyDelete
  11. கேள்விகள் 5) மற்றும் 6) சுத்தமாக தெரியவில்லை. :-)

    ReplyDelete
  12. //காமக்கதைகள் என்கிற தலைப்பு அவர் கொடுத்ததால்தான் பிரச்சினைனு நினைக்கிறேன். //

    அது சரி, அதே மாதிரி மற்ற தலைப்புகளை சிறுவர் சிறுமியர் பார்க்கலாமா? இப்போது சூடான இடுகைகளில் என்னவெல்லாம் இருக்கு என்று படிச்சுப்பாருங்க.

    ReplyDelete
  13. கயல்விழி, ஏன் நெறைய பெண்கள் காமக் கதைகள் மற்றும் இன்னபிற தலைப்புகள்ல எல்லாம் பின்னூட்டம் போடலைனா, ரெண்டு காரணம். சிலர் சும்மாக்காச்சும் அப்படி தலைப்பு வெச்சுட்டு காமடிங்கர பேர்ல பலதையும் போட்டு, என்னமோ ட்ரை பண்ணி, பெண்களை பயங்கரமா கடுப்பேத்திட்டாங்க:):):) நிஜமாகவே பயங்கர உண்மையா காமக் கதைகள் எழுதறதா சொல்லப்பட்டவர்களின் படைப்புகளும் செம போரடிச்சி, கிக்கே இல்லாம, காமம் என்பதே அழுக்கு சம்பந்தப்பட்ட ஒன்றுங்கர ரேஞ்சுல, ஒரு மெல்லிய காதலுணர்வையும் பிரதிபளிக்காம, நிறைய பெண்களை ஏமாத்திடுச்சின்னு நெனைக்கிறேன்:):):)
    (சும்மா ஜாலியா எல்லாப் பெண்களும்னு போட்டேன், ஆனா என்னை பொறுத்த வரை அப்படித்தான் )

    ReplyDelete
  14. 3) விவாதம்னா பிரச்சினைதான். கருத்துக்களங்களுக்கு நிச்சயம் வலைபூக்கள் ரொம்ப பரவாயில்லைதான். ஏன்னா நாமே நியாயமான முறையில் ஒரு திறந்த மனதுடன் மாடெரேஷன் செய்யலாம்.

    கருத்துக்களங்களில் தன் களத்தை நடத்தினால் போதும்னு ஃபேக் ஐ டி, மற்றும், கருத்துக்கள நிர்வாகிகள் பாலிடிக்ஸ் போல் இந்த மாதிரி எரிச்சல் தரும் தொந்தரவு இல்லாமல் கொஞ்சம் நாகரீகமான முறையில் இங்கு விவாதிக்கலாம்னு நினைக்கிறேன்.

    ஆனால், சில பேர் வருத்தத்துடந்தான் போகப்போகிறார்கள்.

    At some point we have to agree to disagree and let it go! :)

    We can only make it up to them elsewhere :)

    ReplyDelete
  15. *** அது சரி, அதே மாதிரி மற்ற தலைப்புகளை சிறுவர் சிறுமியர் பார்க்கலாமா? இப்போது சூடான இடுகைகளில் என்னவெல்லாம் இருக்கு என்று படிச்சுப்பாருங்க. ***

    உன் அளவுக்கு நான் கூர்ந்து கவனிக்கவில்லை கயல். சுந்தர் கதைகளும் நான் படிக்கவில்லை. ஆனால் அந்த தலைப்பு தமிழ் மணத்தை நிச்சயம் மணக்க வைக்காது என்பது என் எண்ணம். இப்போ யார் எப்படி எழுதுறாங்கனு எனக்கு தெரியாது! :)

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. வருண் said...
    **** நிஜமாகவே பயங்கர உண்மையா காமக் கதைகள் எழுதறதா சொல்லப்பட்டவர்களின் படைப்புகளும் செம போரடிச்சி, கிக்கே இல்லாம, காமம் என்பதே அழுக்கு சம்பந்தப்பட்ட ஒன்றுங்கர ரேஞ்சுல, ஒரு மெல்லிய காதலுணர்வையும் பிரதிபளிக்காம, நிறைய பெண்களை ஏமாத்திடுச்சின்னு நெனைக்கிறேன்:):):) ***

    ராப்: ரொம்ப என்னை சிரிக்க வைக்கிறீங்க! LOL!

    ReplyDelete
  18. //நிஜமாகவே பயங்கர உண்மையா காமக் கதைகள் எழுதறதா சொல்லப்பட்டவர்களின் படைப்புகளும் செம போரடிச்சி, கிக்கே இல்லாம, காமம் என்பதே அழுக்கு சம்பந்தப்பட்ட ஒன்றுங்கர ரேஞ்சுல, ஒரு மெல்லிய காதலுணர்வையும் பிரதிபளிக்காம, நிறைய பெண்களை ஏமாத்திடுச்சின்னு நெனைக்கிறேன்:):):)
    //

    நீங்க சொல்றது நிஜம் தான். தரமான காதல்/காமக்கதைகளை யாரும் எழுதுவதில்லை.

    ReplyDelete
  19. //ராப்: ரொம்ப என்னை சிரிக்க வைக்கிறீங்க! LOL!//

    சிரிங்க சிரிங்க :) :)
    (சம்மந்தப்பட்டவர்களைத்தவிர யாருக்கும் புரியாது).

    ReplyDelete
  20. //சிலர் சும்மாக்காச்சும் அப்படி தலைப்பு வெச்சுட்டு காமடிங்கர பேர்ல பலதையும் போட்டு, என்னமோ ட்ரை பண்ணி, //

    அட்லீஸ்ட் காமெடிக்காவது யாராவது ஏதாவது எழுதலாமில்லையா?:)

    ReplyDelete
  21. கவிதாயினி ராப் மற்றும் வருணைத்தவிர வேறு யாரும் சீரியசா ஏதும் சொல்லக்காணோம்.

    ReplyDelete
  22. ரொம்ப சீரியசாக கேள்வி....

    நீங்க முழுநேர பதிவரா ?

    ReplyDelete
  23. ச்சின்னப்பையன் எது சொன்னாலும் அதுக்கு நான் ரீப்பீட்டு..

    (துணைத்தலைவராச்சே)

    ReplyDelete
  24. முழு நேர பதிவர், பகுதி நேர பதிவர் என்று தனி தனி போஸ்ட் இருக்கா டாக்டர். வழிபோக்கன்?

    ReplyDelete
  25. //ச்சின்னப்பையன் எது சொன்னாலும் அதுக்கு நான் ரீப்பீட்டு..

    (துணைத்தலைவராச்சே)//

    வன்மையாக கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  26. Dear nephews & niecesன்னு கேட்டிருந்தா இன்னமும் உற்சாகமா பதில் சொல்லியிருப்பேன். சரி பரவாயில்ல, எனக்குத் தெரிந்த விடைகளை சொல்லப் பாக்கறேன்:

    1. ஒரு confidential listஇல் உள்ள சொற்கள் வடிகட்டப்படும்ன்னு நினைக்கறேன். "ஒரு மாதிரி' சொற்கள் இப்போது இல்லைன்னாலும் போகப் போக வடிகட்டப்படும்ன்னு நினைக்கறேன் (as the list keeps growing). அதை confidentialஆ வைக்கல்லைன்னா, listஇல் இல்லாத synonyms / misspellings பயன்படுத்தி இந்த வடிகட்டலை bypass செய்யும் முயற்சிகள் நடக்கும். அதை முறியடிக்கவே the list is confidential.

    2. உங்களுக்கு ஒரு பதிவில் பின்னூட்டம் எழுதணும் போல இருந்தா அதை எழுதி விட வேண்டியதுதான். மற்ற பெண்களும் அங்க பின்னூட்டம் எழுதியிருக்கணும்ன்னு நீங்க எதிர்பார்க்கிறதைப் போல் எல்லா பெண்களும் எதிர்பார்க்கிறதினாலயும் ஒரு மாதிரி தலைப்புகளுக்கு பெண்களிடமிருந்து பின்னூட்டம் வராமல் போகலாம்.

    3. எனக்கும் விவாதம் பிடிக்கும். மற்றவர்களென்றால் நீங்கள் ஒரு முறை ரீயாக்ஷனைப் பார்த்து அடுத்த முறை அதற்குத் தகுந்தாற் போல் உரையாடுவது நல்லது. (Holds good online, as well as offline)

    4. மற்றவர்களிடம் இது போன்ற ஒரு சர்வேயை எடுத்தது கிடையாது. என்னை நடுராத்திரியில் எழுப்பி எந்த கேள்வி கேட்டாலும் கோபம்தான் வரும், நீங்க கேட்ட கேள்வியோ, வேற கேள்வியோ. லார்ட் லபக்கு தாஸ் யாரு?

    5. & 6. அவர்களும் உங்களையும் என்னையும் போன்ற பதிவர்கள்தான்.

    7.நான் இப்படியெல்லாம் கேட்டது கிடையாது. ஆகவே, இதுக்கு நீங்கதான் பதில் சொல்லணும். இப்போ இல்ல, இன்னும் சில தினங்களில் உங்களுக்கே தெரிய வரலாம் :)

    நீங்கள் சீரியஸாக கேட்கும் பட்சத்தில் அதுக்கு நகைச்சுவை label, டிஸ்கி எல்லாம் போடத் தேவையில்லை.

    ReplyDelete
  27. //Dear nephews & niecesன்னு கேட்டிருந்தா இன்னமும் உற்சாகமா பதில் சொல்லியிருப்பேன். சரி பரவாயில்ல, எனக்குத் தெரிந்த விடைகளை சொல்லப் பாக்கறேன்:
    //

    சரி உங்களை மாதிரி யங்க்ஸ்ட்ர்ஸ்களுக்காக "ஃப்ரெண்ட்" ஆப்ஷன் வைச்சிருக்கேனே, உங்க கண்ணில் படலியா சாமி?

    ReplyDelete
  28. // ஒரு confidential listஇல் உள்ள சொற்கள் வடிகட்டப்படும்ன்னு நினைக்கறேன். "ஒரு மாதிரி' சொற்கள் இப்போது இல்லைன்னாலும் போகப் போக வடிகட்டப்படும்ன்னு நினைக்கறேன் (as the list keeps growing). அதை confidentialஆ வைக்கல்லைன்னா, listஇல் இல்லாத synonyms / misspellings பயன்படுத்தி இந்த வடிகட்டலை bypass செய்யும் முயற்சிகள் நடக்கும். அதை முறியடிக்கவே the list is confidential.//

    சரி, நன்றி.

    நீங்க இத்தனை விளக்கமா சொல்றதப்பார்த்தா எனக்கு ஒரு சந்தேகம் வருது, ஆனால் சொல்ல மாட்டேன் :(

    ReplyDelete
  29. //உங்களுக்கு ஒரு பதிவில் பின்னூட்டம் எழுதணும் போல இருந்தா அதை எழுதி விட வேண்டியதுதான்.//

    ஈசியா சொல்லிட்டீங்க, செய்வது கடினம்.

    ReplyDelete
  30. // எனக்கும் விவாதம் பிடிக்கும். மற்றவர்களென்றால் நீங்கள் ஒரு முறை ரீயாக்ஷனைப் பார்த்து அடுத்த முறை அதற்குத் தகுந்தாற் போல் உரையாடுவது நல்லது. (Holds good online, as well as offline)
    //
    இதற்கும் நன்றி. :)

    இனிமேல் ரியாக்ஷன்களை உற்று கவனிக்கிறேன்.

    ReplyDelete
  31. ஃஃஎனக்கு விவாதமெல்லாம் ரொம்ப பிடிக்கும்,கடுமையாக இருந்தாலும் கூட. கிண்டல்,கலாய்த்தல் எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஃஃஃ

    விவாதம் --> எனக்கு ஒண்னுமே தெரியாது. ஆள விடுங்க சாமி..

    கிண்டல் --> வேணும்னா எனக்கொரு பேட்டி தர்றீங்களா..பயப்பட வேண்டாம் உங்களிடம் சென்சார் செய்த பிறகே வெளியிடப்படும்..

    (இதுவரை வந்துள்ள இரண்டு "நக்கல் With வழிப்போக்கன்" பேட்டிகள் என்னுடைய திறமைக்கு சான்று)

    ReplyDelete
  32. //லார்ட் லபக்கு தாஸ்//

    இது தெரியாமல் இருப்பது பெரிய குற்றம்.

    //5. & 6. அவர்களும் உங்களையும் என்னையும் போன்ற பதிவர்கள்தான்//
    ஆனால் உலகம் வேற மாதிரி பேசிக்குதே? (ஐ மீன் வலையுலகம்). அதைப்பற்றி கவலைப்படக்கூடாது என்கிறீர்களா? சரி விடுங்க கவலைப்படவில்லை. சும்மா ஒரு க்யூரியாசிட்டி

    ReplyDelete
  33. // இப்போ இல்ல, இன்னும் சில தினங்களில் உங்களுக்கே தெரிய வரலாம் :)//

    பயமுறுத்தறீங்களே? :(

    பாதி நகைச்சுவை, சில கேள்விகள் சீரியஸ். :)

    விளக்கங்களுக்கு ரொம்ப நன்றி வாய்ஸ் ஆன் விங்க்ஸ்

    ReplyDelete
  34. //எனக்கு ஒண்னுமே தெரியாது. ஆள விடுங்க சாமி..// சரி விட்டுட்டோம்.
    //வேணும்னா எனக்கொரு பேட்டி தர்றீங்களா..பயப்பட வேண்டாம் //

    பேட்டியா?? நிச்சயமா!!

    நான் பேட்டி எடுக்கும் அளவுக்கு புகழ்பெற்ற இணைய ஜர்னலிஸ்ட் ஆனதை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்குங்க.

    ReplyDelete
  35. //நீங்க இத்தனை விளக்கமா சொல்றதப்பார்த்தா எனக்கு ஒரு சந்தேகம் வருது, ஆனால் சொல்ல மாட்டேன் :(//

    அது என்ன சந்தேகம்ன்னு என்னுடைய ஆர்வத்தைத் தூண்டி விட்டுட்டீங்க :)

    ReplyDelete
  36. //அது என்ன சந்தேகம்ன்னு என்னுடைய ஆர்வத்தைத் தூண்டி விட்டுட்டீங்க :)//

    அதை தான் நாங்க சொல்ல மாட்டோமே!! :) :)

    ReplyDelete
  37. அப்பல இருந்து இருக்கிறவங்களுக்கே புரிய மாட்டேங்கது அவுங்களையெல்லாம், மற்றும் இதையெல்லாம் புரிஞ்சுக்கணும்னா ரொம்ப படிக்கணும் எல்லாமே ஒரு மொழி விளையாட்டுன்னு சொன்னாலும் இதில் எழுத்தரசியல், நுண்ணரசியல்னு பல இருக்கு என்னைப்பொறுத்த வரையில் நானொரு வாசகன்...

    ReplyDelete
  38. King,

    நானும் நின்னு படிச்சேன், உட்கார்ந்து படிச்சேன், படுத்துக்கிட்டே படிச்சிட்டேன். ஒன்னும் புரியல. நானும் எத்தனையோ கஷ்டமான சப்ஜெக்ட் படிச்சாச்சு, இதை போல பார்த்ததில்லை.

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  39. ///ஓசை செல்லா என்பது யார்? ஏன் அவர் தொலைந்து போனார், பிறகு கிடைத்தார்? அன்செட்டில்ட் உமனுக்கும் அவருக்கும் என்ன சம்மதம்? ஏதோ தமிழ் மணத்தை ட்ரிக் பண்ணிட்டதா பேசிக்கறாங்களே? என்ன ட்ரிக் அது?///

    நல்லா கேட்டிங்க கேள்வி பதிவுலகின் மூத்த குடிமகன் அவர்...
    படிச்சுப்பாருங்க அவரை ஓஷோவின் தீவிர சீடன் (நானும்) சுவாரஸ்யம் நிறைந்தவர் நிறைய செய்திருப்பவர்...;)

    ReplyDelete
  40. ///எனக்கு விவாதமெல்லாம் ரொம்ப பிடிக்கும்,கடுமையாக இருந்தாலும் கூட. கிண்டல்,கலாய்த்தல் எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் சிலர் கொடுக்கும் ரியாக்சனைப்பார்த்தால் கொஞ்சம் பயமா இருக்கு. இங்கே யார் யார் எல்லாம் ரொம்ப சென்சிடிவ்? யார் யாரெல்லாம் ரொம்ப ஜாலி? சொன்னீங்கனா வசதியா இருக்கும்///

    நானும் விவாதங்களை விரும்புபவன் எழுதுவதை விட நிறையப்பேசுபவன்.

    ReplyDelete
  41. கிங்

    ஓசை செல்லாவின் பதிவு ஏதும் தமிழ் மணத்தில் சமீபத்தில் வருவதில்லை சரியா? எனவே அவருடைய பதிவுகளை படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    //நானும் விவாதங்களை விரும்புபவன் எழுதுவதை விட நிறையப்பேசுபவன்.//

    தெரிவித்தமைக்கு நன்றி :)

    ReplyDelete
  42. நீங்க ' நகைச்சுவை / நையாண்டி'ன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை வகைப்படுத்தியிருக்கீங்க... அதனால்தான் அப்படி நக்கலடிச்சேன்... தப்பாயிருந்தா மன்னிச்சிடுங்க..

    ReplyDelete
  43. //நீங்க ' நகைச்சுவை / நையாண்டி'ன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை வகைப்படுத்தியிருக்கீங்க... அதனால்தான் அப்படி நக்கலடிச்சேன்... தப்பாயிருந்தா மன்னிச்சிடுங்க...//
    அதெல்லாம் மன்னிக்கவே முடியாது. JK :) :)
    சும்மா விளையாட்டுக்கு தான் எழுதினேன் ச்சின்னப்பையன்.

    ReplyDelete
  44. *** சரி, நன்றி.

    நீங்க இத்தனை விளக்கமா சொல்றதப்பார்த்தா எனக்கு ஒரு சந்தேகம் வருது, ஆனால் சொல்ல மாட்டேன் :(

    16 July, 2008 1:22 PM ***

    ஆமா, அவர்தான் போல தோணுது. இல்லைனா 'காண்ஃபிடென்ஷியல்' மேட்டரெல்லாம் எப்படி சொல்றாரு?
    :-)

    ReplyDelete
  45. உங்க பின்னூட்டங்களை படிச்சி முடிக்கவே தொண்டை தண்ணி வத்தி போச்சுங்க... பதிவை விட பெரிதாய் இருக்கிறது.. :)))

    நானும் புதியவான இருக்கையில் உங்கள் கேள்விகள் நியாமான கேள்விகளாகேவே தெரிகிறது..

    ReplyDelete
  46. காமம் என்பது மனித உணர்வை பிரதிபலிக்கும் ஒரு சொல் தானே... அதற்கு மட்டும் மக்கள் அதீத முக்கியதுவம் கொடுத்து அதை கொச்சை வார்த்தையென காண வைத்துவிட்டார்கள். காமம் என்ற சொல் இருந்தால் பதிவு சூடாகும் என எதிர் பார்க்கிறார்கள்.

    ReplyDelete
  47. வள்ளுவரின் கடைசித் திருக்குறள் என் நினைவிற்கு வருகிறது.

    ஊடல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெரின்.

    திருக்குறள் சூடான இடுகைகளில் வர வேண்டும் என நினைத்திருந்தால் இதை திருவள்ளுவர் இதை முதல் திருக்குறளாக எழுதி இருக்க மாட்டாரா...

    அன்றய மக்களின் பக்குவ சிந்தனை நமக்கில்லை என்பேன். எனக்கும் தான்.

    ReplyDelete
  48. விக்னேஷ்வரன்

    தொண்டை தண்ணி வத்திப்போச்சா? :) நீங்க என்ன ஒவ்வொரு காமெண்டையும் வாய் விட்டு படிச்சீங்களா? கண் பூத்து போச்சென்று சொல்லி இருக்கனும்(மாட்டிக்கிட்டீங்க) :) :)

    பெண் அடிமையும், நிற வெறியும், காமத்தை பற்றிய அறிவில் தெளிவின்மையும் ஆங்கிலேயர் ஆட்சியால் விளைந்த வினைக்கள் என்று நினைக்கிறேன்.

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  49. 3. ஐ ஏம நோ சென்சிடிவ் லைக் ரெயின் போரிங் ஆன் எ பபல்லோ :-)

    ReplyDelete
  50. 4.கண்டிப்பா வரும் அங்கிள்னு கூப்பிட்டா :-)

    ReplyDelete
  51. //ஓசை செல்லா என்பது யார்? ஏன் அவர் தொலைந்து போனார், பிறகு கிடைத்தார்? அன்செட்டில்ட் உமனுக்கும் அவருக்கும் என்ன சம்மதம்?//

    ரெண்டுமே ஒருத்தர் தான்...

    ReplyDelete
  52. /6. ஓசை செல்லா என்பது யார்? ஏன் அவர் தொலைந்து போனார், பிறகு கிடைத்தார்? அன்செட்டில்ட் உமனுக்கும் அவருக்கும் என்ன சம்மதம்? ஏதோ தமிழ் மணத்தை ட்ரிக் பண்ணிட்டதா பேசிக்கறாங்களே? என்ன ட்ரிக் அது?//

    இரண்டு பேருமே விளம்பர பதிவர்கள்... ஆனா ரெண்டு பேரும் ஓரே ஆளா'ன்னு எனக்கு தெரியாது, ஓசை செல்லாவே நேரா பார்த்து பேசி இருக்கேன்.... :)

    ReplyDelete
  53. / கயல்விழி said...

    கவிதாயினி ராப் மற்றும் //

    அலோ... அவங்க கவிதாயினி இல்லை.. கவுஜாயினி...:)

    ReplyDelete
  54. //சரி விடுங்க, ச்ச்சும்மா ஒரு சில்லி ஜோக்.
    தெரிஞ்சா சரி

    //கடைசியா "இது ஜும்மா சோக்கு, சோக்கு" என்று ஒரு டிஸ்கி போட்டு கூட நகைச்சுவை லேபிளையும் போட்டுடலாமா?//

    தாராளமா

    ReplyDelete
  55. //3. எனக்கு விவாதமெல்லாம் ரொம்ப பிடிக்கும்,கடுமையாக இருந்தாலும் கூட. கிண்டல்,கலாய்த்தல் எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் சிலர் கொடுக்கும் ரியாக்சனைப்பார்த்தால் கொஞ்சம் பயமா இருக்கு. இங்கே யார் யார் எல்லாம் ரொம்ப சென்சிடிவ்? யார் யாரெல்லாம் ரொம்ப ஜாலி? சொன்னீங்கனா வசதியா இருக்கும். //

    1)ரொம்ப சென்சிடிவ் யார்?
    ட்ஜ்சிட்ச்
    ட்ச்ஜிடிட்ட்ர்
    ஜ்ஃப்
    ஜ்ஃபெஇஎ


    2)யாரெல்லாம் ரொம்ப ஜாலி?
    நாமக்கல் சிபி
    தேவ்
    ராம்
    கைப்புள்ள
    நாகை சிவா
    ஆசிப்
    கவுஜாயினி காயத்ரி
    G3
    மங்களூர் சிவா
    அபி அப்பா
    நந்து
    பொடியன் (அ) சஞ்சய்
    கப்பி பய
    ஜொள்ளு பாண்டி
    சென்ஷி
    கோபி

    இன்னும் பலர்....

    ReplyDelete
  56. :)

    //ஒரு மாதிரி தலைப்பாக இருந்தால், ஏன் பெண்கள் காமெண்ட் எழுதுவதில்லை//

    யாருமே கமெண்டு போடுவதில்லை என்பதே உண்மை.

    ஆமா, நீங்க மெய்யாலுமே "பெண் பதிவர்" கயல்விழிதானா?
    இப்பெல்லாம் ஒண்ணுமே நம்ப முடியரதுல்ல ;)

    ReplyDelete
  57. ஷ்யாம்

    என்ன தான் நீங்க நேர்மையானவரா இருந்தாலும் "எருமை" என்ற உண்மையை மட்டும் மறைச்சிருக்கலாம், ரொம்ப தப்பு பண்றீங்க :)

    ReplyDelete
  58. ராம், வருகைக்கு நன்றி.

    சாரி கவுஜாயினி ராப் :) :)(ராப் அடிக்க வராமல் இருந்தால் சரி)

    ReplyDelete
  59. வாங்க குசும்பன்

    சென்சிடிவ் என்று யார் யாரையோ போட்டிருங்கீங்களே, கொஞ்சம் எனக்கும் புரியறமாதிரி ஒழுங்கா சொல்றது?

    ReplyDelete
  60. வணக்கம் "சர்வே"சன்

    ஏன் நான் காண்டர்வர்ஷியல் சப்ஜெக்டுகள் எழுதுவதால் என் மேல் மட்டும் சந்தேகமா? பெண் பதிவராக இருந்தால் ஏதாவது ஸ்பெஷல் கன்செஷன் தரப்போறாங்களா?

    எனக்கு இந்த ஜெண்டர் ஸ்டீரியோ டைப்ஸ் பிடிப்பதில்லை. இருந்தாலும் இது உங்கள் கருத்து எனவே நான் சொல்லவேண்டியது ஒன்றே ஒன்று தான். கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் போகப்போக நீங்களே தெரிந்துக்கொள்வீர்கள். கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  61. 1. தெரியலை
    2. நீங்கள் கமெண்ட் போடுவதென்றால் போடுங்கள் ஏன் அடுத்தவரைப் பார்க்கிறீர்கள். அப்படியெல்லாம் பார்த்தால் மங்களூர் சிவா எப்படி "மீ த பஷ்டு" கமெண்ட் மூலம் பாப்புலராகியிருக்க முடியும்?
    3. நான் ரொம்ப ஜாலி.. ஆனால் தனிமனித தாக்குதல் நிகழ்த்தப்பட்டால், அது நகைச்சுவைக்காக இல்லாத பட்சத்தில், அதை கண்டுகொள்ளவே மாட்டேன், பதில் சொல்லவும் மாட்டேன்.
    4. ஹி..ஹி.. எனக்கு வராது (ஆனா போன் நெம்பர் குடுக்க மாட்டேன், ஏன்னா தங்கமணிக்கு கன்னா பின்னான்னு கோவம் வரும்)
    5. வேணாம் விட்டுடுங்க (3வது கேள்விக்கான பதில படிச்சிகோங்க)
    6. ஓசை செல்லா ஒரு பிரபல பதிவர். ஏற்கனவே தமிழ்மணத்துடுடன் சண்டை போட்டுகிட்டு வெளியே சென்றவர், அவர்களின் முகத்திரையை கிழிப்பேன் என்ற சபதத்துடன் அணுப்பாவையாக திரும்பியுள்ளார் (என்று நினைக்கிறேன்) :)
    7. கன்னா பின்னான்னு வரும். ம்ம்ம்ம்ம்ம்... என்னை கூட ரெண்டு பேரு கெட்ட வார்த்தையில திட்டிட்டாங்க.

    கடைசியா கேள்விக்கு... தாராளமா போடுங்க, இது மொக்கைன்னு எல்லாருக்கும் தெரியட்டும்.

    ReplyDelete
  62. //என் மேல் மட்டும் சந்தேகமா///

    சமீபத்திய நிகழ்வுகளால் வந்த சந்தேகம் இது ;)

    //கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் போகப்போக நீங்களே தெரிந்துக்கொள்வீர்கள்//

    அப்பா, கண்டிப்பா ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கங்கரமாதிரி இருக்கு.
    எதுக்கும் உஷார் நிலையிலேயே இருக்கேன் ;)

    ReplyDelete
  63. //அப்படியெல்லாம் பார்த்தால் மங்களூர் சிவா எப்படி "மீ த பஷ்டு" கமெண்ட் மூலம் பாப்புலராகியிருக்க முடியும்?/


    திருத்தம்... அதை ஆரம்பிச்சு வைச்சது, மைபிரண்ட்... :)

    ReplyDelete
  64. சர்வேஸ்,எனக்கும் பயமா இருக்கு....
    அன்செட்டில் திடீர்னு செட்டிலாவுது..கயல் இப்போ கூர்ந்து பாக்க சொலறாங்க...

    நாம எல்லாம் ஆட்டத்த ஓரமா நின்னு வேடிக்கை பாக்கற ஆளு...ஆட்டத்துல நுழைஞ்சா சேறு படிஞ்சுதான் வரனும் போல இருக்கே நிலவரம்?????

    கயல்,அப்புறம்..நம்ம பக்கம் நல்லாதான் வேலை செய்யுதுன்னு மக்கள்ஸ் சொல்றாங்க...திரும்ப பாத்து சொல்லுங்க..

    ReplyDelete
  65. கயல்!
    கனிவுகூர்ந்து அந்த சவப்பெட்டிப் பெண் படத்தை நீக்க முடியுமா?
    I feel sad. It affects me.

    இதை என் வேண்டுகோளாக நினைத்தாலும் சரி.... இல்லையெனில் ..... நினைத்தாலும் சரி

    ReplyDelete
  66. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. சந்திரமதி என்ற பெயரில் வந்திருக்கும் அனானி கமெண்டை தயவுசெய்து நீக்கவும்..உங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது..வேரெதுவும் சொல்வதற்கில்லை...

    ReplyDelete
  69. //3. எனக்கு விவாதமெல்லாம் ரொம்ப பிடிக்கும்,கடுமையாக இருந்தாலும் கூட. கிண்டல்,கலாய்த்தல் எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் சிலர் கொடுக்கும் ரியாக்சனைப்பார்த்தால் கொஞ்சம் பயமா இருக்கு. இங்கே யார் யார் எல்லாம் ரொம்ப சென்சிடிவ்? யார் யாரெல்லாம் ரொம்ப ஜாலி? சொன்னீங்கனா வசதியா இருக்கும். //

    1)ரொம்ப சென்சிடிவ் யார்?
    ட்ஜ்சிட்ச்
    ட்ச்ஜிடிட்ட்ர்
    ஜ்ஃப்
    ஜ்ஃபெஇஎ


    2)யாரெல்லாம் ரொம்ப ஜாலி?
    நாமக்கல் சிபி
    தேவ்
    ராம்
    கைப்புள்ள
    நாகை சிவா
    ஆசிப்
    கவுஜாயினி காயத்ரி
    G3
    மங்களூர் சிவா
    அபி அப்பா
    நந்து
    பொடியன் (அ) சஞ்சய்
    கப்பி பய
    ஜொள்ளு பாண்டி
    சென்ஷி
    கோபி

    இன்னும் பலர்....//


    ரெண்டாவது லிஸ்டுல ஏண்ணே என் பெயரை விட்டுடீங்க?

    ReplyDelete
  70. நேரமெடுத்து பதில் சொல்லியதற்கு ரொம்ப நன்றி வெண்பூ :)

    //கன்னா பின்னான்னு வரும். ம்ம்ம்ம்ம்ம்... என்னை கூட ரெண்டு பேரு கெட்ட வார்த்தையில திட்டிட்டாங்க.//

    வெண்பூ,

    உங்களுக்கு ஜோசியம் எல்லாம் தெரியுமா? அதெப்படி சரியா சொன்னீங்க?

    ReplyDelete
  71. //அப்பா, கண்டிப்பா ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கங்கரமாதிரி இருக்கு.
    எதுக்கும் உஷார் நிலையிலேயே இருக்கேன்//

    நீங்கள் எதிர்ப்பார்க்கும் பரபரப்பு ஏதும் இருக்காது. உங்களை Disappoint செய்யப்போவதற்காக மன்னிக்கவும்.

    ReplyDelete
  72. //சர்வேஸ்,எனக்கும் பயமா இருக்கு....
    அன்செட்டில் திடீர்னு செட்டிலாவுது..கயல் இப்போ கூர்ந்து பாக்க சொலறாங்க...
    //

    உங்களையும் Disappoint பண்ணப்போவதற்காக மன்னிக்கவும்.

    ReplyDelete
  73. லதானந்த் சார்

    நிச்சயம் அந்த சவப்பெட்டி பெண் படத்தை நீக்கிவிடுகிறேன். உங்களை வருத்தப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  74. //ஏறத்தாழ இந்த ரீதியில் சென்றது (கயல் மற்றும் வெட்டியாப்பீசரை இவர்கள் தமிழச்சியோ என்ற கிண்டல் + கேலியுடன்). ஒருவேளை அவர்கள் காயப்படக்கூடும் என்பதாலும், இரு நல்ல வலை நண்பர்களை இழக்க மனமில்லாததாலும், அதை வெளியிடவில்லை.

    இப்போது பார்த்தால் தமிழச்சி அவர்களின் பின்னூட்டமே இங்கே. அவர் நம்மைப் போன்ற மொக்கைப் பதிவர்களின் (கோபிக்க வேண்டாம்) பக்கத்தில் பின்னூட்டமிடுவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன். அவரை இழுத்து வந்துவிட்டது உங்கள் எழுத்துகள். வாழ்த்துக்கள்.//

    வெண்பூ
    அந்த பின்னூட்டத்தை நீக்கி விட்டேன். அதிலிருப்பது ஒன்றும் புரியவில்லை என்பதோடு அனானிமஸாக வந்திருந்தது.

    இங்கே வெறும் மொக்கை போடுவதோடு மட்டுமில்லாமல், உருப்படியாக ஏதாவது எழுதலாம் என்று பார்க்கிறேன். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  75. //சந்திரமதி என்ற பெயரில் வந்திருக்கும் அனானி கமெண்டை தயவுசெய்து நீக்கவும்..உங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது..வேரெதுவும் சொல்வதற்கில்லை...//

    ஐயனார்,

    அந்த பின்னூட்டத்தையும் நீக்கிவிட்டேன். வருகைக்கு நன்றி. :)

    ReplyDelete
  76. //ரெண்டாவது லிஸ்டுல ஏண்ணே என் பெயரை விட்டுடீங்க?//
    நீங்க நப்ப மாதிரி என்பதை இனிமேல் நினைவில் வைத்திருக்கிறேன் அப்துல்லா. வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  77. //வெண்பூ
    அந்த பின்னூட்டத்தை நீக்கி விட்டேன். அதிலிருப்பது ஒன்றும் புரியவில்லை என்பதோடு அனானிமஸாக வந்திருந்தது.
    //

    அது சம்பந்தப்பட்ட என் பின்னூட்டத்தையும் நீக்கிவிட்டேன் கயல். நன்றி.

    ReplyDelete
  78. நான் எங்க போனாலும் இந்த ச்சின்னப் பையன் முந்திகிட்டு துப்பாக்கிய வச்சுகிட்டு மிரட்டுறாரு.

    இந்தப் பின்னூட்டம் முன்பே ஒரு பதிவில் இட்டது.இருந்தாலும் பின்னூட்டத்துக்குள் வந்தவுடன் அவர் படம் இருந்ததால் மீண்டும் ஒரு முறை.

    டிப்ஸ்: பெயரிலி யாருன்னு எனக்கும் தெரியாது.செல்லா முன்னாள் அதிரடி ஆட்டக்காரர்.கோவிச்சுகிட்டு போயிட்டாரு போல இருக்குது.

    மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்குறதுக்கு முன்பே முந்திரிக்கொட்டை வேலை எனக்கு.

    ReplyDelete
  79. பின்னூட்டங்களையெல்லாம் படித்துவிட்டுப் பார்த்தால் என்னை மாதிரியே மற்ற பதிவர்களும் மக்குகள் என்பதில் எனக்கு ரொம்ப சந்தோசம்:))குசும்பன் சொன்ன சீரியஸ் பதிவர்கள் மட்டும் எனக்குப் புரியவில்லை.

    ReplyDelete