Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts
Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts

Monday, August 12, 2013

ஈரோட்டில் ஜெயமோகனுக்கு அவமானம்?!

அவமானம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒண்ணு. எதிரிகள் மட்டுமல்லாமல், கள உறவுகள், பதிவர்கள், நம்மை நன்கு அறிந்தவர்கள் நம்மை அவமானப் படுத்துவதை யாராலும் தவிர்க்க முடியாது. நம்ம வேணா யாரையும் அவமானப்படுத்தாமல் பக்குவமாக வாழலாம். ஆனால் உலகமே அப்படி இருக்கணும்னு எதிர்பார்த்தால் அது அபத்தமான ஒரு சிந்தனை. இதற்கு ஜெயமோகன் மட்டும் விதிவிலக்கு அல்ல!

எழுத்தாளர்னா கொஞ்சம் பரந்த எண்ணங்கள் இருக்கும். அவர்களுக்கு  மனோதத்துவம் தெரியும். வாழ்க்கையின் தத்துவங்கள் தெரியும். பலருடைய பார்வைகளை புரிந்து கொள்வார்கள். பலரின் பலவிதமான கண்ணோட்டங்கள்  எல்லாம் புரிந்துகொள்ளும் சகிப்புத்தன்மை உள்ளவர்கள். என்றெல்லாம் எண்ணிக்கொண்டு இருந்த என் எண்ணத்தில், நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுபவர்களில் முதன்மையானவர் நம்ம ஜெயமோஹன் தான். என்னதான் குடித்தாளும், குட்டிகளுடன் அலைந்தாலும், நட்பு பாராட்டத் தெரியாதவராக இருந்தாலும், அப்பப்போ பிச்சை எடுத்தாலுமகூட சாரு நிவேதிதா, ஜெயமோகனை விட பலமடங்கு உயர்ந்தவர்னு சொல்லுவேன். சாருக்கு கொஞ்சமாவது பொதுஜனத்தின் சைக்காலஜி, மேலும் மற்றவர்கள் மனநிலை பற்றிய ஒரு நல்ல புரிதல் உண்டு. தான் பட்ட அவமானத்திக்கூட பிறர் ரசிக்கத்தக்க நகைச்சுவை கலந்து விமர்சிக்கவும் தெரியும். அதுபோல் ஒரு திறமையோ,  சகிப்புத்தன்மையோ நிச்சயம் ஜெயமோகனுக்கு இல்லவே இல்லை.

இலக்கிய வட்டத்தில் ஜால்ராப் பசங்களோடயே குப்பை கொட்டும் ஜெயமோகனுக்கு இவர்மேல் பலவிதமான மனிதர்கள் இடும் கண்ணோட்டங்களோ, இலக்கியவட்டமல்லாத சாதாரண மனிதன் தன்னை எப்படி எடை போடுவான்? என்பது  பற்றி எந்தவிதமான புரிதலோ, அளவுகோலோ இல்லாமல் அடிமுட்டாளாவே வாழ்கிறார் மனுஷன்.

ஈரோட்டில் பேசப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கே போய் பேசி இருக்கிறார். என்ன காரணத்தாலோ இவர் பேசும்போது நெறையப்பேர் எழுந்து போய்விட்டார்கள் போலும்.  சரி போறான், அவன் கொடுத்து வைத்தது அவ்ளோதான்னு விட்டுட்டுப் போகாமல்..நம்ம சிக்கல் சண்முக சுந்தரம் நாதஸ்வர்த்தை கேட்காமல் வான வேடிக்கையைப் பார்க்கப்போன மக்களை திட்டுறதுபோல் இதை விமர்சிச்சு தன் சிறுபுத்தியை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

இவரு, தியானம் பண்ணுறது, யோகா பண்ணுறது, பகவத் கீதை படிக்கிறது போன்ற நல்ல காரியங்கள் எதுவும் செய்றது இல்லைபோல இருக்கு! யாராவது அவரோட ஜால்ராப் பசங்க, அவருக்கு உதவுங்கப்பா!

Wednesday, August 7, 2013

சாரு நிவேதிதா நல்லா காமெடியா எழுதுகிறார்..

உண்மையைச் சொல்லனும்னா நான் இப்போலாம் சாரு எழுத்தை வாசிச்சுட்டு கோபமடைவது இல்லை! ரொம்ப சீரியஸாகவும் எடுத்துக்கொள்வதில்லை! ஒவ்வொரு வரியையும் வாசித்து சிரிப்பது! அது அவர் வைக்கிற ஒப்பாரியாக இருந்தாலும் சரி, ஏதாவது எழவு பத்தி பேசினாலும் சரி, எனக்கு சிரிப்புத்தான் வருது .

* அசோக மித்ரன் னு ஒரு பழைய காலத்து எழுத்தாளர், தனக்குப் பிடித்த நவீன எழுத்தாளர் என்று நம்ம "ஜெயமோகனை"ச் சொல்லியிருக்கிறார்.

* உடனே எழுத எதுவும் சரக்கில்லாத சாரு. "சாகப் போற நேரத்திலே சங்கரா"னு அவரைப்பற்றி கட்டுரை மேலே கட்டுரையா எழுதி, தன் பின் நவீன எழுத்தைப்  புரிந்துகொள்ளுமளவுக்கு அசோக மித்ரனுக்கு போதுமான அளவுக்கு  அறிவு கெடையாதுனு ஒரே ஒப்பாரி!

இதோ சாருவின் காமெடி! வாசிச்சு சிரிங்கப்பா!

தற்கால தமிழ்ப் படைப்புலகத்தில் உங்களைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளராக யாரைக் குறிப்பிடுவீர்கள்?
“ஜெயமோகன். இந்தத் தலைமுறையில் என்னைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளர் இவர்தான். சில விஷயங்களில் இவரது ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை. இவருக்கு முன்னால் ஆய்வு என்கிற விஷயத்தில் இவரைப் போன்ற தேர்ச்சியை கொண்டிருந்தவர் க.நா.சுப்பிரமணியன்தான்.
இதுதவிர ஜெயமோகன் படைப்புகளில் சில இடங்கள் மிகவும் அபாரமாக இருக்கின்றன. அவரது குறுநாவல்கள் தொகுப்பு ஒன்று படித்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. இந்தத் தலைமுறையில் சிறந்த எழுத்தாளர் என்று சொல்லக் கூடிய எல்லாத் தகுதியும் ஜெயமோகனிடம் இருக்கிறது.”

அசோகமித்திரனின் மேற்கண்ட அபிப்பிராயம் பற்றி என்னுடைய கடுமையான கண்டனத்தை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 

”இந்தத் தலைமுறையில் என்னைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் தான்” என்று சொல்வதற்கு அசோகமித்திரனுக்கு எல்லா உரிமையும் உண்டு.  நகுலனும் இந்தத் தலைமுறையில் என்னைக் கவர்ந்த தமிழ்க் கவிஞர் அழகிய சிங்கர் என்று சொல்லி இருக்கிறார்.  சுஜாதாவும் எனக்குப் பிடித்த கவிஞர் பழமலய் என்று சொல்லி இருக்கிறார்.  முட்டாளாக வாழ்வதற்கும் உளறுவதற்கும் சராசரித் தமிழனுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறதா?  நாங்களும் சராசரிகள் மாதிரி உளறுவோம் என்று தமிழ் எழுத்தாளர்களும் அவ்வப்போது கிளம்புவார்கள்.  அதை நாம் கண்டு கொள்ளக் கூடாது. 

ஆனால்  அசோகமித்திரனின் அடுத்தடுத்த அபிப்பிராயங்கள் தான் படு விஷமத்தனமாக இருக்கின்றன.  ”சில விஷயங்களில் இவரது ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை… இந்தத் தலைமுறையில் சிறந்த எழுத்தாளர் என்று சொல்லக் கூடிய எல்லாத் தகுதியும் ஜெயமோகனிடம் இருக்கிறது” என்றும் விஷத்தைக் கக்கியிருக்கிறார் அ.மி.  இது வெறுமனே ஜெயமோகனைப் பற்றிய அபிப்பிராயம் இல்லை.  மற்றவர்கள் பற்றிய அபிப்பிராயமும் கூட.  ஜெ.வின் ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை என்றால் நாங்களெல்லாம் என்ன இத்தனை காலமாக புடுங்கிக் கொண்டிருக்கிறோமா?  இப்படிச் சொல்வது அயோக்கியத்தனம்.  கயவாளித்தனம்.  ஏனென்றால், அ.மி. வேறு யாருடைய எழுத்தையும் படித்தது இல்லை.  உதாரணமாக, ராஸ லீலா என்ற என்னுடைய நாவலை அவர் படித்திருக்க மாட்டார்.  ஏனென்றால், நான் அவருடைய வீட்டைத் தேடிக் கொண்டு போய் ராஸ லீலாவைக் கொடுத்து அவருக்கு சொம்பு தூக்கவில்லை.
ஆனால் இந்தத் தலைமுறையின் சிறந்த எழுத்தாளரோ ஒவ்வொரு முறை சென்னை வரும் போதும் அ.மி.யைப் பார்க்கிறார்.  ஜெயகாந்தனைத் தேடிப் போய் பார்க்கிறார்.  அந்த இசை அமைப்பாளரைத் தேடிப் போய்ப் பார்க்கிறார்.  அது மட்டும் அல்லாமல், தான் ஆசிரியராக இருந்த ஒரு பத்திரிகையில் (அது அளவில் குமுதத்தைப் போல் நான்கு மடங்கு அகலமும் நீளமும் கொண்டது) பளபளப்பான அட்டையில் (அந்தக் கால debonair ஐ ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்) அசோகமித்திரன், வெங்கட் சாமிநாதன், ஜெயகாந்தன் என்று இங்கே உள்ள இலக்கிய தெய்வங்களையெல்லாம் புகைப்படமாகப் போட்டு அவர்கள் தங்கள் வாழ்நாளில் கண்டிராத கௌரவத்தைக் கொடுத்தவர் ஜெ. அந்தப் பத்திரிகையை தலைமுறை எழுத்தாளரின் ஒருசில நண்பர்கள் மட்டுமே படித்தார்கள் என்ற விஷயமெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.  வெறும் நடிகைகளின் அரைகுறை ஆடை படங்களையே பார்த்து வெறுத்துப் போயிருந்த அந்த எழுத்தாளர்களுக்குத் தங்களின் போட்டோவை இப்படி முறம் சைஸ் பத்திரிகையின் அட்டையில் பார்த்ததும் எப்படி இருந்திருக்கும்?
இப்படி ஒரே ஒரு எழுத்தாளரின் எழுத்தை மட்டுமே படித்து விட்டு அ.மி. அன்னார் தான் தலைமுறையின் சிறந்த எழுத்தாளர், அவர் அளவுக்கு ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை என்று சொல்வது கயவாளித்தனம் இல்லையா? 

நான் எழுதிய எந்தப் புத்தகத்தை அ.மி. வாசித்திருக்கிறார்?  உலக இசை பற்றி கலகம் காதல் இசை என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.  அதில் Iannis Xenakis இன் பின்நவீனத்துவ இசை பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறேன்.  இப்போது ரஹ்மான் பாணிக்கு ஆதாரமாக இருக்கும் rai music பற்றியும் அதில் கட்டுரைகள் உண்டு.  இதையெல்லாம் பற்றி அரிச்சுவடு அறிவாவது அ.மி.க்கு உண்டா?  உலக சினிமா பற்றி ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். Bergman, Pasolini, Antonioni பற்றியெல்லாம் அ.மி. கேள்வியாவது பட்டிருப்பாரா?  அந்தோனியோனி என்றதும் அ.மி.க்கு வேறு ஞாபகம் தான் வரும்.  ஏனென்றால், அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். 

ஒருமுறை என்னுடைய சிறுகதைத் தொகுதிக்கு அவரிடம் முன்னுரை கேட்ட போது ” எனக்கு இந்தக் கதைகள் புரியவில்லை” என்று எழுதிக் கொடுத்தவர் அ.மி.  அவர் சொன்னது உண்மைதான்.  ஏனென்றால், அவருக்கு metafiction என்றால் என்னவென்று தெரியவில்லை.  Non linear writing பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை.  அதனால் என் கதைகள் அவருக்குப் புரியவில்லை.  அது மட்டுமல்லாமல் நவீன எழுத்தின் எந்தப் பாணி பற்றியும், நவீன எழுத்தின் புதிய போக்குகள் பற்றியும் அவர் எதுவும் அறியாதவர்.  அவர் ஒரு பழைய மனிதர்.  பழைய எழுத்தாளர்.  இந்தக் காலகட்டத்துக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாதவர் அவர்.  அவருடைய எழுத்தும் படிப்பும் காஃப்காவோடும் கம்யுவோடும் முடிந்து விட்டது.  இப்படி இந்தக் கால கட்டத்தின் எழுத்துப் போக்கு, இந்தக் கால கட்டத்தின் வாழ்வியல் மற்றும் தத்துவ நெருக்கடிகள் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாதவர் – அதையும் தன் வாயாலேயே “புரியவில்லை” என்று ஒப்புக் கொண்டவர் – மற்றவர்களிடம் ஆழம் இல்லை என்றால் இவர் எந்த ஆழத்தைச் சொல்கிறார்?  சின்ன வயதில் கேட்ட “go deep Thiag” என்ற வார்த்தைகளின் ஆழமா?  எந்த ஆழம் மிஸ்டர் அசோகமித்திரன்?
 ஆக, அசோக மித்ரன், ஜெயமோகனை உயர்த்தி சாருவை மதிக்கவில்லைனதும், அசோக மித்ரனுக்கு என்ன தெரியும், நாந்தான் பெரிய எழுத்தாளன், மேதை, அறிவாளினு வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொள்ள யாரால் முடியும்?

சாருவால் மட்டும்தான் இதெல்லாம் முடியும்!

தொடர்புள்ள பதிவுகள்:

சாரு இல்லாத எஸ் ரா வின் நூறு சிறந்த புத்தகங்கள்!

ஞாநி, மனுஷ்ய புத்திரனை அவமானப்படுத்திவிட்டாரா?!

சீரியஸா கேக்கிறேன்! சாருநிவேதிதா தமிழனில்லையா?

Monday, November 12, 2012

பெண்கள் கவர்ச்சி உடைகள் அணியக்கூடாது- சாரு நிவேதிதா!

நம்ம கோபியண்ணனோட நீயா நானா? வில் இந்த நாகரிக காலத்தில் வட இந்திய மற்றும் தென் இந்திய இளம் பெண்கள் உடைபற்றி ஒரு உப்புச் சப்பு இல்லாத, சுவையில்லாத ஒரு விவாதம் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக நம்ம சாருவையும், ஆரோகனம்  பட இயக்குனர் மற்றும் நடிகை, லக்ஷ்மி ராமகிருஷ்ணனையும் அழச்சுண்டு வந்திருந்தா!

வட இந்திய, தென் இந்திய இளவட்டங்கள், இளம்பெண்கள் (தமிழே தெரியாதவாகூட) எல்லாம் இதைப் பத்தி பேசினா. இவங்க எல்லாருமா  விவாதிச்சு ஒரு முடிவுக்கு வந்து இவங்க சொன்ன கருத்து  இதுதான்..

* வட இந்தியப் பெண்கள் அதிகக் கவர்ச்சியாக உடை அணிவதாகவும், அவங்களுக்கு உடை அலங்காரம் பற்றி தென் இந்தியப் பெண்களைவிட நல்லாத் தெரியுது என்பதுபோல் சொல்றாங்க..

* வட இந்தியப் பெண்கள்னு இவங்க சொல்றது டெல்லி, மும்பை, புனே போன்ற பெரிய ஊர்களில் வாழ்ற கல்லூரியில் படிக்கும் பெண்கள் பத்தி சொல்றமாரித் தெரியுது. மேலும் பாலிவுட் ஹீரோயின்களையும் சேர்த்துக்குவாங்கனு நெனைக்கிறேன்.

* இவங்கள பொருத்தவரையில் தென் இந்தியானா சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத், போன்ற ஊர்களை சேர்த்துச் சொன்ன மாரித் தெரியலை. பொதுவா சென்னையைத்தான் எடுத்துக்கொண்டு பேசினாங்கனு சொல்லலாம்.

சிறப்பு விருந்தினாராக அழைத்து வந்திருந்த நம்ம சாரு என்னத்தையோ உளறித் தள்ளினார்னுதான் சொல்லனும்..அவரோட எழுத்தில் உள்ள கூர்மையோ, "ஃப்ளோவோ" அவர் பேச்சில் இல்லை! ஏதோ பல்லைப் புடுங்கிய பாம்புபோல ரொம்ப கவனமாகப் பேசியதால் இவர் பேசுவதெல்லாம் ஒரே உளறல் போலதான் இருந்துச்சு எனக்கு..

இணையத்தில் இருந்து.. சாரு சட்டை எப்படி இருக்கு?

* அந்தக் காலத்தில் பெண்கள் மேலாடைகூட அணியாமல் இருந்தாங்க. போராடித்தான்  அந்த உரிமையை பெற்றார்கள் என்று சாரு பெண்களுக்கு ஞாபகப்படுத்துகிறார்..அதையெல்லாம் இன்றைய பெண்கள் மார்பகங்களை மறைத்து உடை அணியும்போது மனதில் கொண்டு வரணும்னு சொல்றாரா??

இதைச் சொல்லி என்ன எழவைச் சொல்ல வர்றாரு இந்த மனுஷன்னு யாருக்கும் வெளங்கவில்லை! இவர் கணக்குப் படிப் பார்த்தால் அதுக்கும் முன்னால ஆம்பளைகளும் பொம்பளைகளும் அம்மனமாத்தான் திரிஞ்சிருப்பாங்க! கீழேயும் மறைக்காமல்.. அதையும் ஆம்பளைங்க எல்லாரும் ஆடை அணியும்போது நெனச்சுப் பார்க்கலாமே, சாரு? எதுக்கு இதை மட்டும் சொல்லிக்கிட்டு? 

*  அப்புறம் இவரு வெளிநாடு போயிருந்தப்போ..தாய்லாந்துலயோ எங்கயோ ஒரு நம்மூரு ஆளை பார்த்தாராம். அவனைப் பார்த்ததும் அவன் நம்ம ஊர்க்காரன்னு சாருவுக்குப்  உடனே புரிஞ்சிருச்சாம்.. எப்படினா? அவன் "அசிங்கமா" ஒரு ட்ரெஸ் செண்ஸே இல்லாமல் ஒரு கட்டம்போட்ட சட்டை போட்டிருந்தானாம்! கட்டம் போட்ட சட்டை போடாமல் வேற டிசைன் சட்டை போட்டவனுக  லட்சம் பேரு இவரு கண்ணுல மாட்டாமல் போயிருப்பானுக. இந்த ஒரு ஆள் போட்ட  கட்டம்போட்ட சட்டையவச்சு இவரு அங்கே எல்லாத் தமிழனும் கட்டம்போட்ட சட்டை போட்டுக்கிட்டு ட்ரெஸ் சென்ஸே இல்லாமல் அலையிறான்னு ஏதோ தியரி விட்டு இன்னொரு ஒளறல்..

இணையத்தில் இருந்து.. சாரு கட்டம்போட்ட சட்டைலயா இருக்காரு?
* அப்புறம் டெல்லில இளம் பெண்கள் எல்லாம், சின்ன "ஷாட்ஸ்" இல்லைனா "மிடி" போட்டுக்கொண்டு தொடை தெரிகிறார்ப்போல, பேண்டிஸ் தெரிகிறார்போல, மார்பகம் க்ளிவேஜ் தெரியுறாப்பிலே உடை அணியுறாங்களாம்.. அது எல்லாம் வரம்பு மீறல்னு நம்ம சாரு சொல்றாருப்பா!!! சாரு ரொம்ப கன்செர்வேட்டிவா எப்ப ஆனாருனு எனக்குத் தெரியலை. பின் நவீன எழுத்தாளர் சாரு, பெண்கள் நல்லா  உடம்பை மறைத்து உடை அணியனும்னு சொல்றதென்னவோ எனக்குக் காமெடியாத்தான் தெரிஞ்சது.

***************************

* இன்னொரு சிறப்பு விருந்தினர் இந்தம்மா லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கொஞ்சம் பரவாயில்லை.. இவர் பேசும்போது எதையும் அடித்து சரி, தவறுனு சொல்லாமல் ஒரு மாதிரி நடுநிலைமையுடன் உண்மையா, எதார்த்தமா வட மற்றும் தென் இந்தியப் பெண்கள் உடையலக்க்காரம் பத்தி  பேசுறாப்பிலே இருந்தது.

சரி, இவருக்கு என்னமாரி "ட்ரெஸ் செண்ஸ்" இருக்குனு அவர் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!

இணையத்திலிருந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் படம் 1




இணையத்திலிருந்து எடுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் படம்2


இணையத்திலிருந்து எடுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் படம் 3


ஆக மொத்தத்தில் இந்த நீயா நானா? எப்பிசோட் படு மொக்கை! ஏதோ தீபாவளி சமயத்தில் சேலை விக்கிற வியாபாரிகளுக்கு ஒரு "கமர்ஷில்" கொடுத்தமாரி இருந்துச்சு! Better luck next time Gopinath!

Monday, September 17, 2012

சாருவுக்கும், ஜெயமோகனுக்கும் மறுபடியும் கருத்து வேறுபாடு?!

தமிழைக் காப்பாத்த வேண்டுமென்றே தமிழ்த் தொண்டு செய்ய வந்த மலையாளிதான் நம்ம திருவாளர் ஜெயமோகன் அவர்கள். சமீபத்தில் எதையாவது மேதாவித்தனமாகச் சொல்லி ஊருப்பயலுக  வாயில விழாதனால அவர் தளத்துக்கு ரொம்ப ஹிட்ஸ் குறைந்து அலக்ஸா ரேட்டிங்ல கீழ போயிடுச்சாம், பாவம்.

அதை இப்போச் சரிக்கட்ட தமிழர்களையும், தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை குறைவையும், நகைச்சுவை இல்லாத தமிழர்களையும் ரொம்ப கவனமாக, அவர்கள் மனது புண்படுறமாதிரி விமர்சிச்சியிருக்காரு. 

தமிழந்தான் உணர்ச்சிவசப்படுபவர்களாச்சே!

அவர் தளத்துக்கு ஹிட்ஸ் அதிகமாயிடுச்சு!

வென்றுவிட்டார் ஜெயமோகன்!

மலையாளப் படங்களிலும், ஆங்கிலப்படங்ளிலும் வரும் நகைச்சுவைக் காட்சிகள்தான் அவரை சிரிக்க வைக்குதாம்.
* என்னுடைய மனதுக்குகந்த நகைச்சுவைக் காட்சிகளில் அனேகமாக எல்லாமே மலையாள சினிமா அல்லது ஆங்கில சினிமா சம்பந்தமானவை. மிகமிகக்குறைவாகவே நான் தமிழ் நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்கிறேன். என்னுடைய அவதானிப்பில் பொதுவாகத் தமிழ்நாட்டில் நகைச்சுவை உணர்ச்சி மிகமிகக் குறைவு.
* என் சொந்தப் புரிதலைவைத்து இந்தியாவிலேயே தமிழ்மக்கள்தான் நகைச்சுவையற்றவர்கள் என நான் மதிப்பிட்டிருக்கிறேன்.இது ஒரு பொது அவதானிப்பாகவே என் மனதில் இருந்தது. ஆனால் சினிமாவுக்குச் சென்றபின் அது உறுதிப்பட்டது.
 தமிழ்ப் படங்களில் வருகிற நகைச்சுவையை நகைச்சுவையே இல்லை என்கிறார், ஜெயமோகன். ரொம்ப நாளைக்கு முன்னால எம் ஜி ஆரையும், சிவாஜியையும் ரொம்ப கீழ்த்தரமா இவர் விமர்சிச்சி இருக்காரு. அது பெரிய பிரச்சினை ஆகி முடிந்தது. இவருக்கு பழைய தமிழ் சினிமாப்படங்கள் பத்தியோ, அவைகள் தரம் பத்தியோ  எந்த அளவுக்குத் தெரியும்னு தெரியவில்லை!

ஜெயமோகன் ஒரு தவறு செய்துவிட்டார்..

* மலையாளப் படங்களிலும், ஆங்கிலப் படங்களிலும் இவர் ரசித்த நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் இவர் ரசித்த நகைச்சுவைப் படங்களையும் ஒரு லிஸ்ட் போட்டுக் கொடுத்து இருக்கனும்!

* ஆனால் வேண்டுமென்றே அப்படிக் கொடுக்காமல், பொதுவாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு போய்விட்டார். அப்படி லிஸ்ட் கொடுத்திருந்தால் அதில் என்ன பிரச்சினையினா, இவரோட நகைச்சுவை ரசனை எள்வோ மட்டமானதுனு எல்லாருக்கும் தெரிஞ்சிரும் பாருங்க!

நம்ம சாருநிவேதிதா தமிழர்களில் நகைச்சுவை உணர்வு பத்தி என்ன சொல்றார்னு பார்ப்போம்!

சாரு தமிழர் நகைச்சுவை உணர்வைப் பத்திச் சொன்னது இது..

* 3) வெளியே வழக்கம் போல் புத்தக விழாவுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தமிழில் இல்லாதது எதுவுமே இல்லை; உலகில் தோன்றிய முதல் மனித இனமே தமிழ் இனம்தான் என்று ஒருவர் கரகர குரலில் பேசிக் கொண்டிருந்தார். பார்வையாளர்களும் உற்சாகமாகக் கைதட்டி மகிழ்ந்தனர். தமிழர்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.
எனக்கு உணமையிலேயே புரியலை..சாரு, என்ன சொல்றாரு? ஜெயமோகன் சொல்றது சரினு சொல்றாரா? இல்லைனா தவறுனு சொல்றாரா?

நான் சாருவுடைய இந்த  எழுத்தை வாசிச்சுப்புட்டு நகைச்சுவையா இருக்குனு விழுந்து விழுந்து சிரிச்சேன். ஜெயமோகன் இதற்கு என்ன சொல்றாருனு தெரியலை! அதான் நான் சிரிச்சதுக்கு..இவனுக்கு எதுக்கு சிரிக்கிறதுனே தெரியலைனு சொன்னாலும் சொல்லுவார்? ஆமா, எல்லாமே அவருக்குதானே தெரியும்! அதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லையே?? அதான், "எல்லாம் தெரிந்த மேதாவி ஜெயமோகன்" என்ற கருத்தில்!

"தமிழர்களிடம் மறைந்து இருக்கும் நகைச்சுவை உணர்வை அறியாமல் அறியாமையில் வாழ்கிறார் ஜெயமோகன்" னு  ஒரு உண்மையை நான் சொன்னால், அதை குதற்கம் என்று சொல்லும் மலையாளிகளை கட்டி அழும் இந்த வீணாப்போன தமிழுலகம்!