Monday, December 28, 2009

ஞாநி, மனுஷ்ய புத்திரனை அவமானப்படுத்திவிட்டாரா?!

வரவர பதிவுலகம் நாறுது. சின்னச் சின்னப் பதிவர்கள்தான் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதி தங்களுக்கு தேவையான அட்டன்ஷன் பெறுகிறார்களெலன்றால், பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படுபவர்களும் இப்படித்தான் எழுதுகிறார்கள்!

இப்போ எல்லாம் என்ன எழவையும் பேசினாலோ எழுதினாலோ பிரச்சினைதான். பேசாமல்/எழுதாமல் இருந்துவிட்டால் கொஞ்சம் மரியாதையைக் காப்பாத்தலாம்.

பஞ்சாயத்து I:

சாரு புலம்புவதுபோல, சாருவை, ஞாநி, "சாநி"னு சொல்லலாமா என்று கேட்டிருந்தால், அது நிச்சயம் ஞாநியின் அநாகரீகமான செயலதான். அதை இல்லை என்று நான் சொல்வதற்கில்லை! இந்த விசயத்தில் சாருவுடைய வருத்தம் அர்த்தமுள்ளதாகத்தான் தோனுது.

ஆனால், மனுஷ்ய புத்திரனை ஒரு ரோல் மாடல்போல் எடுத்துக்கொண்டேன் என்று பாஸிட்டிவாக ஞாநி மேற்கோள் காட்டியதை, சாரு ட்விஸ்ட் பண்றதென்னவோ எனக்கு நல்லாப் படலை . எனக்குத் தெரிய இயற்பியல் பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களை பலர் மேற்கோள் காட்டுவதுண்டு. ஒரு நல்ல உதாரணமாக!

ஸ்டீஃபன் ஹாக்கின்

அதுபோல்தான் ஞாநி இங்கே சொல்ல முயன்றதுபோல இருக்கு. மனுஷ்ய புத்திரனை அவர் நிச்சயமாக அவமானப்படுத்த முயன்றதாக தோனவில்லை! ஆனால் இது ஒரு சென்ஸிடிவ் சப்ஜெக்ட்! குறையுள்ளவர்களைப்பற்றி பேசுவதில் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும். அதனால் ஞாநி, இதை சொல்லாமலே இருந்து இருக்கலாம்தான். ஆனால், அவர் தவறான நோக்கத்துடன் மனுஷ்ய புத்திரனை மேற்கோள் காட்டியதாக சாரு சொல்வது அநியாயம்! எனக்கென்னவோ சாருதான் இதை தேவையில்லாமல் பெருசாக்கி மனுஷ்ய புத்திரன் மற்றும் பலரையும் கஷ்டத்துக்கு உள்ளாக்குகிறார்னு தோனுது. நான் பெரிய ஞாநி விசிறியெல்லாம் இல்லை. நெறைய அவரைப்பற்றி விமர்சித்துவுள்ளேன், தாக்கியும் உள்ளேன்.

இன்னொரு விசயம்!

பஞ்சாயத்து II:

டாக்டர் ருத்ரன் அவர்கள் பெண்கள் நெறைய எழுதனும்ங்கிற மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

பெண் பதிவர்களுக்கு

இந்தப் பதிவு ரொம்ப நல்லாவே இருக்கு. ஆனால் அதில உள்ள் பின்னூட்டங்களில் அஷோக்னு தன்னை சொல்லிக்கொள்ளும் பதிவாளர், -அவருக்கு பின்னூட்டம் கிடைக்கலைனு வருத்ததினாலோ என்னவோ- பெண்கள் என்ன எழுதினாலும் ஆண்கள்தான் ஓடிப்போயி பின்னூட்டமிடுகிறார்கள், தேவையே இல்லாமல் புகழ்றாங்கனு என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். தகுதியில்லாத பதிவெல்லாம் நெறைய பின்னோட்டம் பெறுவதாக அழுது புலம்பியுள்ளார். ஒரு பதிவின் தரத்தை மதிப்பிடுவது அவன் அவன் இஷ்டம்! இவர் யார், தகுதி உள்ளது இல்லாததுனு சொல்ல? மேலும் பின்னூட்டம் இடுவது அவரவர் உரிமை. இவர் யாரு இதை விமர்சிக்கிறதுக்குனு தெரியலை. ஆக, டாக்டர் ருத்ரன் பெண்களை எழுதவைக்க முயன்ற முயற்சிக்கு தன் பின்னூட்டம்மூலம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் இந்த அஷோக்!

என்னைக்கேட்டால், இப்ப பதிவுலகில் வருகிற பதிவுகளைப் பார்க்கும்போது, (என் பதிவையும் சேர்த்துத்தான்) எழுதாமல் இருக்கவங்கதான் புத்திசாலி. அந்த வகையில் பெண்கள்தான் புத்திசாலி.

ஆண்கள், எழுதி எழுதி என்னத்தை கிழிச்சிட்டாங்கனு தெரியலை! பதிவர்களில் பலர் நடிகர்களைப் போல் வியாபாரிகள்தான். விஜய் படத்தை சன் நெட்வொர்க் ரிலீஸ் பண்ணுச்சுன்னா பாராட்டுவார்கள். அதே படத்தை வேற எவனாவது ரிலீஸ் பண்ணினால் அதே படத்துக்கு கேவலமா விமர்சன்ம் எழுதுற ஆட்களெல்லாம் ஆண் பதிவர்கள்ல நெறையவே இருக்காங்க! இது போக, குழாயடி சண்டை மாதிரி, ஞாநி-சாரு சண்டை போடுற மாதிரி சண்டைபோட்டு உடல்குறையுள்ளவர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்குவதற்கு சும்மா வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லதுனு தோனுது!

2 comments:

Dr.Rudhran said...

thank you for understanding my intention.

வருண் said...

Your article is a beautifully written one with a very good intention! Thanks for stopping by, Dr. Rudhran. :)