Wednesday, July 27, 2011
ஒரு காலத்துல நண்பன்! கடலைகார்னர் (71)
"Hi Kannan!"
"Stacy!!!So, how was your vacation?"
"Well, it was OK."
"How was your new boyfriend? Keeping you busy in the bed all the time!"
"Ha ha ha! He is not that good."
"How is it going with him, anyway?"
"Well, it is OK."
"Look! who is coming!"
"Hi, Stacy! Hello Kannan!"
"Hi, Brindha! Check this out! Kannan is very curious to know HOW GOOD my new boyfriend is in the BED!"
"Really!"
"இவ சொல்றத நம்பாத பிருந்த்!"
"What "nambatha"? Didn't you ask how he is f'cking me?"
"Jeez! Why do you do this, Stacy?"
"May be I am trying hard to make Brindha break up with you so that I can hook up with you!"
"You are such a sadistic bitch, Stacy!"
"Ha ha ha!"
"Kannan! Did you happen to know Praveen, the guy who is working in the "process"?"
"Why do you ask, Brindh?"
"Because he was telling Stacy that you and him were good friends. I never seen you were talking to him or mentioning about him ever! I am just curious."
"It was many years ago. Yeah, we used to be. I dont talk to him anymore!"
"So, you KNEW HIM as a FRIEND? You dont even say a "hi" to him these days?!"
"Nope! I mean YES! I avoid him completely"
"What happened? "
"I guess there was a misunderstanding. Then I did not want to deal with him anymore!"
"But now he is in the same city, same company..?"
"So what?"
"I dont understand!'
"He called me and left couple of messages. I did not return the calls!"
"That is rude, Kannan!"
"Of course, I dont want to deal with him Stacy. That is how I can make him understand!"
"Did he give up?'
"Nope, he called me again and I picked up and said "hi" and "how is he doing" blah blah but you know I was not excited or anything."
"Then?"
"He invited me to his house. He introduced his wife on the phone. I could not accept his invitation. That is it!"
"What did he do to you, Kannan? Did he steal your girl friend or something? Ha ha ha!"
"Honestly, nothing that serious, Stacy. Somehow the relationship got cracked. I just dont feel like "rebuilding" the "cracked relationship". It is good for both of us. There is a very big world out there. He can find new friends. So can I."
"Well, I have got to go now! Forgot to ask you, did you ask Victoria to look for another job or something?"
"Yeah, I dont think she fits in well here in our group!"
"Whatever. As long as my ass is not in trouble I am fine with it! See you guys later."
---------------------------------
"ரொம்ப நாள் பழகிய ஒரு நண்பரிடம் அதெப்படி இப்படி கண்டுக்காம இருக்கீங்க?"
"Honestly, Brindh, if some strain developed in "friendship" it is better to break it completely! I dont think there is anything like "make up" in friendship! At least for me!"
"Why is that?"
"என் அனுபவத்தில் சொல்லுறேன் பிருந்த். அதை ஒருபோதிலும் சரி செய்யவே முடியாது!"
"அப்போ ப்ரவீன் மட்டும் இல்லையா?"
"நான் முன்னால ஒரு சில நண்பர்களிடம் பழைய மாதிரி ஆக முயற்சி செஞ்சிருக்கேன். ஆனால் அதில் வெற்றியடைய முடியலை. மறுபடியும் மறுபடியும் அதே மாதிரி ஏதாவது வரும்.. வந்துட்டே இருக்கும். மரியாதையா ஒதுங்கிப் போயிருறதுதான் நல்லது."
"நல்ல அனுபவம் போங்க! அப்போ "மறப்போம் மன்னிப்போம்" , "மனிதர்கள் எல்லாருமே தவறு செய்வது இயற்கைதானே?" னு பேசுறதெல்லாம் சும்மா ஏட்டுச் சுரைக்காயா?"
"என்னை பொறுத்தவரையில் "நட்பு" ல "மறப்போம்- மன்னிப்போம்" என்பதெல்லாம் கெடயாது. There should not be anything to forgive or forget! May be "coworkers", "boss-employee", "husband-wife", "lovers" போன்றவர்கள் இடையில் வரும் "misunderstandings" எல்லாம் சரிபடுத்தலாம். அதே இது "friendship"க்குள்ள வந்தால் அது வேற!"
"எல்லாருக்குமே அப்படியா? உங்களுக்கு மட்டுமா?"
"எனக்கு மட்டும்தான். ஆனால் எல்லாரும் இப்படித்தான் உணரனும்னு நான் நெனைக்கிறேன்! "ஒரு காலத்தில் நண்பர்" னு விட்டுட்டு போயிட்டே இருக்கனும்"
-தொடரும்
Tuesday, July 26, 2011
டியர் ஃப்ரெண்ட்! முதல் உலகப்போர் ஹீரோ!
படத்தில் உள்ள நம்ம டியர் ஃப்ரெண்டு தான் முதல் உலகப்போரில் தன் உயிரை பணயம் வைத்து இருநூறு வீரர்கள் உயிரை காப்பாற்றினாராம்!"Cher Ami" என்பதுதான் இந்தப் புறாவின் பெயர். ஃப்ரென்ச்சு ல அப்படினா "டியர் ஃப்ரெண்டு"னு அர்த்தமாம்!
முதல் உலகப்போர் நடந்துகொண்டு இருக்கும்போது பிராண்சுக்கு உதவிக்கு சென்ற சுமார் 500 அமெரிக்க வீரர்கள் ஜெர்மன் படைகளால் சுற்றி சூழப்பட்டு மாட்டிக்கொண்டார்களாம். இரண்டே நாட்களில் பலவிதமாக தாக்கப்பட்ட இவர்களில் பலர் உயிரிழந்து 200 பேர்களானார்களாம். சுற்றி ஜெர்மன் படைகள் இருப்பதால் ஒரு இடத்தில் இவர்கள் 200 பேரும் மறைந்து இருந்தார்களாம். உணவோ, போதுமான இயந்திரங்களோ இல்லாததால் இவர்களுக்கு மற்ற படைகளின் உதவி தேவையான ஒரு நிலை.
ஆனால் இவங்க இருக்கிற இடம் தெரியாமல் அமெரிக்க போர் விமானங்கள் ஜெர்மன் காரனைத் தாக்குவதாக எண்ணி இவர்கள் மேலேயே குண்டு வீசும் அபாயமான சூழ்நிலையில் இருந்தார்களாம்.
இதுபோல் சூழ்நிலையில் "அந்தக்காலத்தில் (1918?) தகவல் அனுப்புவது நன்கு பழக்கப்பட்ட புறாக்கள் மூலம்தானாம். இங்கிலாந்து நாட்டில் பழக்கப்பட்ட 400 புறாக்கள் அமெரிக்கப் படைக்கு கொடுக்கப்பட்டு இருந்தனவாம்! இந்த ஒரு சூழ்நிலையில் படைத்தலைவரால்,
* "உதவி தேவை" என்று அனுப்பபட்ட முதல் புறா ஜெர்மன் படையால் சுட்டுக்கொல்லப்பட்டது.
* "உதவி தேவை" என்று இரண்டாவது அனுப்பட்ட புறாவும் ஜெர்மன்ஸால் சுட்டுக்கொல்லப்பட்டதாம்!
* மூன்றாவதாக, நம்ம "டியர் ஃப்ரெண்டை" (Cher Ami) அனுப்பினார்களாம்! கீழே கொடுக்கப்பட்டுள்ளதுதான் அதன் இடது காலில் கட்டியிருந்த "message"
"We are along the road parallel to 276.4.
"Our own artillery is dropping a barrage directly on us.
"For heaven's sake, stop it."
இதையும் ஜெர்மன் படைகள் விட்டு வைக்கவில்லையாம்! சுட்டுத்தள்ளினார்களாம்! ஒரு குண்டு மார்புவழியாக பாய்ந்ததாம்! இன்னொன்னு வலது காலை காலிபண்ணிடுச்சாம். இதுவும் காலி என்று நினைத்தார்களாம் அமெரிக்க வீரர்கள். ஆனால் இந்தப்புறா இவ்வளவு குண்டு அடிகளை வாங்கிக்கொண்டு உயரே பறந்து சென்று, 25 மைல்கள் 25 நிமிடத்தில் பறந்து சென்று மெசேஜை கொண்டு சேர்த்ததாம்! உடனே உதவிக்கு வந்து இவர்கள் 200 பேரை உயிரையும் காப்பாற்றினார்களாம்!
தொடுப்பு 1
தொடுப்பு 2
Wednesday, July 20, 2011
சிறுத்தை 11 பேரை காயப்படுத்தி இறந்தது! படங்கள்!
உயிரோட பிடிக்க முயற்சி செஞ்சாங்களா என்னனு தெரியலை? இதனுடைய ஒரிஜினல் தொடுப்பு இங்கே!
ஜோஸியர்களால் இந்தியாவுக்கு, தமிழனுக்கு ஆபத்து!
இன்னைக்கு "தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமானு ஜோஸ்யத்தில் கணிப்பதாக" ஒரு பதிவைப்போட்டு எழவைக்கூட்டுது அண்ணன் சதீஷ்குமார். இதுமாதிரி ஏதாவது ஓரளவுக்கு யூகிக்கிற ஒரு சப்ஜெக்ட்டை எடுத்து ஜோஸ்ய ஆராச்சினு சும்மா எதையாவது கதை விடவேண்டியது! எனக்கென்னவோ அண்ணன் மாதிரி ஜோஸ்யர்களால் தமிழர்கள் எல்லாம் முட்டாள்களா மாறிக்கிட்டு போகிற மாதிரி இருக்கு! சனிப்பெயர்ச்சி, ஞாயிறுப் பெயர்ச்சி, வெள்ளிப்பெயர்ச்சி, ரஜினிகாந்தின் உடல்நிலைனு எதை எதையோ எழுதி எழவைக்கூட்டியது பத்தாதுனு இப்போ அண்ணன் சதீஷ் தீவிரவாதத்தை ஜோஸ்யத்தால் கணிக்கிறாராம்! இதுபோல் கேவலமான ஜோஸ்யப்பதிவுகள் எழுதி எல்லாரையும் அரைலூஸாக்குவதுக்காக அண்ணனை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்!
ஆமா அண்ணா சதீஷ்குமாரு, சாருவுடைய தேகம் படிக்காமலே அதுக்கு ஒரு பெரிய "ரெக்கமெண்டேஷன்" கொடுத்துப்புட்டு, அதை படிச்சு கிழிச்சுப்புட்டு மறுபடியும் விமர்சிக்கிறேன்னு சொல்லுச்சே? விமர்சிருச்சா? எங்கே தொடுப்பு?
Tuesday, July 19, 2011
ஜெயா ஆட்சியில் மதுரையில் ரெளடியிஸம் ஒழிக்கப்படுகிறதா?
--------------------------
பொட்டு சுரேஷ் - தளபதி கைது
மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷும், திமுக மதுரை மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் திருமங்களம் யூனியன் சேர்மன் கொடி சந்திரசேகர், திமுக முக்கிய பிரமுகர் தாய்முகாம்பிகை சேதுராமன் ஆகிய நான்கு பேர் 10 மணி நேர விசாரணைக்கு பிறகு இன்று (19.7.2011) இரவு 8.30 மணிக்கு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள், ஜே.எம் -1 நீதிபதி முத்துக்குமரன் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
மதுரை திருமங்களத்தை சேர்ந்த சிவனாண்டி அவரது மனைவி பாப்பா ஆகியோர் மதுரை எஸ். பி. அஸ்ராஹாக்கியிடம் கொடுத்த புகாரில், தங்களது 5 ஏக்கர் நிலத்தை இந்த 4 பேரும் மிரட்டி வாங்கியதாக தெரிவித்திருந்தனர்.
<இந்தப்புகாரின் அடிப்படையில் நான்கு பேருக்கும் சம்மன் அனுப்பியிருந்தார் எஸ்.பி.
இன்று காலை நான்கு பேரும் எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜார் ஆனார்கள். இவர்களிடம் தொடர்ந்து 10மணி நேரமாக விசாரணை நடைபெற்று வந்தது.
எஸ்.பி.ஐ பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணை
நடைபெற்றுக்கொண்டிந்த நிலையில் இவர்கள் மீது மேலும் பல புகார்கள் குவிந்த வணணம் இருந்தது.
இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனால் மதுரையில் பரபரப்பு நிலவுகிறது. பதட்டம் நிலவுவதால் மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-----------------மதுரையில் பிரபல சினிமா பைனான்ஷியர் அன்பு கைது
பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளருமான, விநியோகஸ்தருமான மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் கைது செய்யப்பட்டார்.
‘’கோபுரம் பிலிம்ஸ்’’ சார்பில் இவர் திரைத்துறையில் மிக பிரபலமாக இருந்து வந்தார். பல படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்ததன் மூலம் தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் மிரட்டியதாக அவ்வப்போது இவர் மீது சர்ச்சை எழுந்தது. பிரபல இயக்குநர் மணிரத்னம் அண்ணன் ஜி.வி. தற்கொலை விவகாரத்திலும் இவர் மீது சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் நில அபரிப்பு வழக்கில் இவர் இன்று இரவு மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் நான்கு புகார்கள் உள்ளன என்று போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.
திமுகவின் மதுரை முக்கிய பிரமுகர்கள் பொட்டு சுரேஷ், தளபதி இன்று இரவு கைது செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து அன்பு கைது செய்யப்பட்டிருப்பதால் மதுரையில் மிகவும் பதட்டம் நிலவுகிறது.
------------------------
சமச்சீர் கல்வியை விட்டுத்தொலைச்சுட்டு இது மாதிரி பொறம்போக்குகளையும், மொள்ளமாரிகளையும் பிடிச்சு உள்ள போட்டு தண்டனை வாங்கி கொடு ஆத்தா! ஏன் ஆத்தா இப்படி "சமச்சீர்" கலவியப் புடிச்சுக்கிட்டு எழவைக்கூட்டுற?!
Monday, July 18, 2011
மெக்ஸிக்கோ வழியாக அமெரிக்கா வரும் இந்தியர்கள்!
-------------------------
LOS FRESNOS, Texas – Police wearing berets and bulletproof vests broke down the door of a Guatemala City apartment in February hunting for illegal drugs. Instead, they found a different kind of illicit shipment: 27 immigrants from India packed into two locked rooms.
The Indians, whose hiding space was furnished only with soiled mattresses, claimed to be on vacation. But authorities quickly concluded they were waiting to be smuggled into the United States via an 11,000-mile (17,700-kilometer) pipeline of human cargo -- the same network that has transported thousands of illegal immigrants from India, through Central America and Mexico and over the sandy banks of the Rio Grande during the past two years.
Indians have arrived in droves even as the overall number of illegal immigrants entering the U.S. has dropped dramatically, in large part because of the sluggish American economy. And with fewer Mexicans and Central Americans crossing the border, smugglers are eager for more "high-value cargo" like Indians, some of whom are willing to pay more than $20,000 for the journey.
"Being the businessmen they are, they need to start looking for ways to supplement that work," said Rosendo Hinojosa, chief of the U.S. Border Patrol's Rio Grande Valley Sector, at the southernmost tip of Texas, which is the most active nationwide for apprehending Indian nationals.
Between October 2009 and March 2011, the Border Patrol detained at least 2,600 illegal immigrants from India, a dramatic rise over the typical 150 to 300 arrests per year.
The influx has been so pronounced that in May, Homeland Security Secretary Janet Napolitano told a Senate committee that at some point this year, Indians will account for about 1 in 3 non-Mexican illegal immigrants caught in Texas.
Most of the border-jumpers are seeking jobs, even though India's economy is growing at about 9 percent per year. Once safely inside the U.S., they fan out across the country, often relying on relatives who are already here to arrange jobs and housing.
Indians have flooded into Texas in part because U.S. authorities have cracked down on the traditional ways they used to come here, such as entering through airports with student or work visas. The tougher enforcement has made it harder for immigrants to use visas listing non-existent universities or phantom companies.
Also contributing to the spike was a quiet change in travel requirements in Guatemala, El Salvador, Nicaragua and Honduras. Beginning in 2009, those nations sought to attract investors by allowing visitors from India to enter without visas.
Mexican authorities have been unable to stop smugglers from moving illegal Indian immigrants over their country's southern border, then north to Texas. Instead, Mexico asked neighboring Guatemala to restore the visa requirement for Indians, which it did June 6.
Still, the lack of a visa requirement allowed at least 8,300 Indians to enter Guatemala and fewer than 28 percent of them exited legally, according to Enrique Degenhart, director of Guatemalan immigration. The others disappeared to continue heading north.
Indeed, the group of Indians police discovered in Guatemala City eventually went free because, at the time, they were in Guatemala legally.
Meanwhile, El Salvador, Nicaragua and Honduras still don't require visas for Indians, meaning smugglers can shift routes and use those countries as alternate jumping-off points for the journey north.
El Salvador's director of immigration, Ruben Alvarado, said officials have begun quizzing arriving Indians about what Salvadoran tourist sites they intend to visit in an attempt to spot those entering the country simply to head north.
Indians caught by U.S. authorities often claim they fled their homeland because of religious persecution. Then they wait for months in federal detention centers like Port Isabel, in the town of Los Fresnos, about an hour's drive from the Texas-Mexico border.
On a recent morning at Port Isabel, young Indian men wearing navy blue detention uniforms filled the benches in Immigration Judge Keith Hunsucker's courtroom. Sixteen of the 32 cases on the docket were Indian immigrants, including Salimbhai Mansiya, from the state of Gujarat, who had been detained more than a month earlier.
Through an interpreter, Mansiya told the judge that he needed more time to find an English speaker who could help him fill out an application for asylum. The judge ordered his case delayed.
The Justice Department's Executive Office for Immigration Review received 951 requests for asylum from Indian nationals between October and March -- a six-month tally nearly equal to 1,002 asylum requests received from Indians in all of fiscal 2010.
Some seeking asylum can arrange to have their bond paid and are set free. Then they melt into American society and skip subsequent court dates. Immigration courts eventually order them deported, but only in absentia.
Many of those detained in Texas hail from Indian states such as Punjab and Gujarat, places that are relatively prosperous and where it's common for people to seek greater fortunes abroad even if they are financially secure at home.
Pramod Kumar, a political scientist at the Institute for Development and Communication in the Punjab capital of Chandigarh, said immigrating to other countries is an important regional tradition that's even reflected in folk songs.
If people face dire economic straits, "you try and sell your land and go abroad," Kumar said. "If you're prosperous, still you go abroad because, culturally, it gives you a higher status."
Many immigrants take jobs driving trucks or taxis or working on farms. Initially, the pay is not substantially greater than they would make back home, but simply living in the West elevates their social standing in India. And over time, their earnings increase, Kumar said.
Smugglers often move their cargo from India to Mexico via intermediate stops such as Hong Kong and Macao and other parts of China, as well as Singapore, Amsterdam, Ecuador, Brazil, Belize and Panama.
The pipeline shuffles Indians north using the same "plazas," or corridors, preferred by cartels moving drugs into the U.S., Hinojosa said.
"It's very organized," he said. "They're pushing narcotics through those plazas. They're pushing aliens through those plazas. And it's almost like the mob where they're paying for the right to use that land at a certain time at a certain point."
By the time they reach American soil, Indians are mingled with groups of Mexicans and Central Americans. They are often captured after swimming the Rio Grande or traversing it in rafts. Almost none carry identification or speak English or Spanish, Hinojosa said.
Many of the Indians apprehended are Sikhs, followers of India's fourth-largest religion, who tell authorities they face persecution back home and want asylum. Applicants need to convince officials that they have a credible fear of persecution in India. If so, the case is referred to an immigration judge.
Such persecution was common in the mid-1980s, when the state battled a Sikh secessionist movement, Kumar said. But today the ruling party in Punjab is Akali Dal, a Sikh party, and Indian Prime Minister Manmohan Singh is also Sikh.
"It's all nonsense," Kumar said of asylum claims.
-----------------------------இதெல்லாம் உண்மையா!!!
Friday, July 15, 2011
பாலா என்கிற மனநோயாளி! மூன்றாவது உலகம்..
இந்தியா இன்னும் மூன்றாவது உலகம்தான்!
* இந்தியா முன்னேறலைனு யார் சார் சொன்னா? கார், டி வி, இண்டெர்னெட் னு மட்டும் இல்லாமல் இன்று பெண்களுக்கும் நெறையவே சுதந்திரம் கெடச்சிருக்கு! ஹாண்டா, டொயோட்டா, பி எம் டபுள்யு, பெண்ஸ்னு பல லட்சக்கணக்கான கார்கள் இன்னைக்கு புதுப்பணக்காரர்களால் வாங்கப்பட்டு மட்டமான் ரோடுகளில் ஓடிக்கிட்டு இருக்கு!
அப்படியா? அப்போ ஏன்ப்பா இன்னும் நம்மள வெள்ளைக்காரங்க "third world country" னு சொல்லி அசிங்கப் படுத்துறாங்க? இன்னும் நம்ம மக்கள்ல பாதிப்பேருக்கு தலையில் பேன் இருக்கு! இன்னும் நம்ம ரோட்டில் காறித் துப்புவதை நிறுத்தலை! சிறுவர் சிறிமியர் பல கோடிப்பேருக்கு நாடாப் புழு வயித்தில் இருக்கு! பிச்சைக்காரங்களுக்கு இன்னும் பஞ்சமில்லை! புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கிறது பிறகு அதை சொந்தமாக்கிக்கிறது! இதுமாதிரி ஈனத்தனமா வாழ்றவங்க "ஏழைகள்"னு சொல்லிக்கிட்டு நாட்டை நாறடிக்கிறார்கள்! ஓட்டுக்காக இதுபோல் சேரிகளை அரசியல்வாதிகள் கண்டுக்கிறதில்லைனாலும் வெள்ளைக்காரன் கண்டுக்கிட்டு நம்மள "third world country" னு சொல்றாங்களாம். க்ரீமி லேயர்ல உள்ள சில விழுக்காடுகள் கார் பங்களானு வாழ்ந்தாலும் ஏழைகள் இன்னும் குறையவில்லை! "சுகாதாரம், சுத்தம்" எல்லாம் எந்த வகையிலும் கூடவில்லையாம்! ஆத்தா ஆட்சியிலும் பவர்கட் இருக்கத்தான் செய்யுது. இப்போ முன்பைவிட மோசம்னு கூட சொல்றாங்க! ஆத்தா ஏதாவது புதுசா நியூக்லியர் ப்ளாண்ட் ஆரம்பிச்சாத்தான் எதுவும் செய்ய முடியும்!
மற்றபடி பெண்கள் சுதந்திரம்? படிச்சவங்க படிக்காதவங்க எல்லாரும் வேலைக்குப் போகிறாங்க! கல்யாணம் ஆகாதவங்க காதலர்களுடனும், கல்யாணம் ஆனவர்கள் "பாய் ஃப்ரண்டு" களுடனும் செல் ஃபோன், இண்டெர்னெட் அது இதுனு உறவு வைத்துக்கொள்வது, தேவைனா "அடுத்த ஸ்டெப்" போவதெல்லாம் இன்னைக்கு நம்ம ஊரில் ரொம்ப சாதாரணமாயிடுச்சு. இது நிச்சயம் முன்னேற்றம்தான்! இன்னும் சில ஆண்டுகளில் கலாச்சாரக்காவலர்கள் எல்லாம் தலையில் துண்டைபோட்டுக்கிட்டு ஒண்ணாக்கூடி ஒப்பாரி வைக்க வேண்டியதுதான் போங்க! சுனாமி போல மக்கள் எல்லாம் மாறிக்கொண்டு "முன்னேறிக்கொண்டு" போகும்போது கலாச்சாரக்காவலர்கள் எல்லாம் ஒரு மயிரையும் புடுங்கமுடியாது!
சித்தாள் வேலை செய்றவங்க மொதல்கொண்டு தினக்கூலிக்கு வேலை செய்றவங்க, மூட்டை தூக்குறவங்க (லோட்மேன்) வாங்கிற கூலி அந்தக்காலத்தைவிட பலமடங்கு அதிகமாயிடுச்சு. அவங்க வாழ்க்கைத்தரம் உயர்ந்தததோ இல்லையோ, உழைப்பவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஓரளவு ஊதியம் கெடைக்குது என்பது ரொம்ப நல்ல விசயம்தான்!
இன்னொரு விசயம் சுத்தம் சுகாதாரம் இருக்கோ இல்லையோ எப்படினு தெரியலை மக்கள் எல்லார்ட்டயும் நெறையாவேப் பணம் இருக்கு. ஆயிரம் ரூபாய், ஐனூறு ரூபாய்த் தாள்களை KFC, PIZZA HUT ல போய் அள்ளி எறிகிறார்கள்! வெளிநாட்டில் போய் அடிமையாக இருந்தோ அல்லது கந்துவட்டிக்கு வாங்கியோ பணம் வச்சிருக்காங்க!
இன்னைக்கு நம்ம ஊரில் மருத்துவ வசதிகள் நெறையவே இருக்கு. இதன் விளைவாக லைஃப் எக்ஸ்பெக்டெண்ஸி ரொம்பவே அதிகமாகி இருக்கு! தாய்மை அடைவதில் குறையுள்ளவர்கள் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கிற வைத்தியம் நெறையவே இருக்கு. இந்த விசயத்தில் மேலை நாடுகளைவிட இதில் நம்ம ஒரு படி மேலே இருக்கோமாம்! ஆனால் அப்படியும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதிகள் இன்னும் தெரியாத ஒரு குழந்தையை "அடாப்ஷன்" செய்ய இன்னும் சரியாக முன்வரவில்லை என்பதை குறிப்பிடவேண்டும்!
பெரிய குறைனு சொல்லப்போனா ட்ராஃபிக், மக்கள் தொகை ரெண்டு விசயமும் மிகப்பெரிய பிரச்சினைகள். கார்கள் இருக்கு போதுமான சாலைகள் இல்லை! ஆனால் புறநகர்ப் பகுதியில் இருந்து பல ஊர்களுக்கு போடப்பட்டிருக்கும் "டோல் வே" என்னவோ பெரிய முன்னேற்றம்தான். சிட்டிக்கு உள்ளே உள்ள ட்ராஃபிக்தான் பெரிய பிரச்சினையாயிருக்கு! இதைப்பத்தி யாராவது கவலைப்படுறாங்களா? னு தெரியலை! இந்த ட்ராஃபிக்ல ஒரு சினிமாப் பார்க்கப் போக எவ்வளவு மெனக்கட வேண்டியிருக்கு? அதனால்தானோ என்னவோ எல்லாரும் டி வி லயே உக்காந்துறாங்க!
வெள்ளைக்காரனுக்கும் நமக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னனா இதுபோல் சிட்டியில் உள்ள ட்ராஃபிக் பிரச்சினைகளை அவங்க கொஞ்சம் புத்திசாலித்தனமாக சமாளிக்கிறாங்க. பெரிய நகரங்களில் வாழும் பெரிய பெரிய பேராசிரியர்கள், டாக்டர்கள் எல்லாம் "பஸ் அல்லது ரயிலில்" டெய்லி வேலைக்கு கம்யூட் பண்ணுறாங்க. சென்னை "மெட்ரோ ரயில்" வந்தால் ட்ராஃபிக் பிரச்சினைகள் எல்லாம் சரியாகிடுமா?எல்லாரும் காரை ஓரமாவிட்டுப்புட்டு ரயில்ல பயணம் செய்வாங்களா?
Thursday, July 14, 2011
ஜானகிராமன் பற்றி இலக்கிய மேதை ஜெயமோவன் விமர்சனம்!
ஜானகிராமன் மறைந்த சமயத்தில், அவரை நாம் இழந்த நேரத்தில் அஞ்சலி கட்டுரை ஒண்ணு எழுதி வெளியிட்டு இருக்கார் வெங்கட் சுவாமிநாதன்! அது இங்கே கீழே இருக்கு!
[ வெங்கட் சாமிநாதன் தி.ஜானகிராமன் மறைவின்போது எழுதிய அஞ்சலிக்கட்டுரை]
ஒரு சிறந்த கலைஞர் மறைந்துவிட்டார். அவர் ஒரு சிறந்த மனிதராகவும், ரசிகராகவும் இருந்தார். இன்றைய தமிழ் எழுத்துலகில், இது குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய விஷயம். பண்புகளும், மனிதாபிமானமும் சாதாரண மனிதர்களிடமே காணப்படும் நிலை இன்றைய தமிழக நிலை. தி.ஜானகிராமன் மறைவு, இந்த அர்த்தத்திலும்கூட, தமிழ் கலை இலக்கிய உலகுக்குப் பெரும் இழப்பு.
இரு பெரும் இழப்புகளைப் பற்றிப் பேசினோம். அது அச்சகத்திற்குப் போய்விட்ட பிறகு மூன்றாவது பெரும் இழப்புக்கு நாம் இரையாகி நிற்கிறோம்.
நாம் இழந்த மற்ற இருவரைப்போல தி.ஜானகிராமன் கவனிக்கப்படாமல் போகவில்லை. பத்திரிகைகளும் அவர் எழுத்தின் வசீகரமும் இனிமையும் ஓரளவு பிராபல்யத்தை அவருக்குக் கொடுத்தன. ஆனால் கலைஞராக அவரைக்கண்டு கொண்டதா என்பது சந்தேகம். Jeanne Moreauவுக்கும் பரத நாட்டிய கலைஞர்களுக்கும் ஏற்படும் விபத்து இது.
சரியாக இனம் கண்டுகொள்ளப்பட்டிருந்தால் தமிழ் இலக்கியச் சூழலில் தீர்க்கமான கலையுணர்வு இருந்திருக்குமானால் ‘மோகமுள்’ எழுதிய கைகளுக்கு முதல் ஞானபீடப் பரிசு கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில், இன்றைய தமிழ்நாட்டில் அது அமிழ்ந்திருக்கும் ரக அறிவார்த்த கலைச்சூழலில் எந்த ஒரு கலைஞனும் அறிவாளியும் சிலுவை சுமக்கப் பிறந்தவன்தான். தி.ஜானகிராமன் அதிர்ஷ்டவசமாக, அல்லது அவருக்கிருந்த அவர் எழுத்துக்கிருந்த இனிமை, கவர்ச்சி காரணமாக அவருக்கிருந்த அடங்கிப்போகும் சுபாவம் காரணமாக சிலுவை சுமக்க நேர்ந்ததில்லை.
இன்னமும் ஒரு ஆரோக்கியமான கலையுணர்வுள்ள சூழலில் தி.ஜானகிராமன் தந்திருக்ககூடிய அளவு, அவர் தரவும் இல்லை. அவரது திறன்கள் ஒரு பூரணத்துவத்துடன் மலர, இலக்கிய சமூகம் இடம் தந்ததில்லை. சமூகத்துடன் முரட்டுத்தனமாக முரண்படும், போரிடும் சுபாவம் அவரதல்ல. இயல்பிலேயே அடங்கிப்போகும் ‘சரிதான்’ என்று ஒதுங்கிப் போகும் சுபாவம் கொண்டவர்.
அவர் எழுத்து, அவரது ரசனை, அவரது விருப்பு வெறுப்புகள் எல்லாம் - அவரது கிண்டலும், நமட்டுச் சிரிப்பும்கூட - எல்லாமே அவர் பிறந்த தஞ்சை மண்ணின் குணங்கள். அவர் தொட்டது, செய்தது எல்லாமே தஞ்சை மண்ணின் குணம் கொண்டவை.
அவர் காலத்திய அவருக்குச் சற்று மூத்த எழுத்தாளர் பலர், தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர்கள்தாம். ஏன், ஒரு சில பத்துக்கள் முந்திய எழுத்தாளர் பெரும்பாலோர் தஞ்சை மண்ணின் பிரபுக்கள்தாம்.
ஆனால் தஞ்சை மண்ணின் விசேஷ குணமான சங்கீதம், தி.ஜானகிராமனின் எழுத்துக்களில் மலர்ந்தது போல பரப்பிலும் ஆழத்திலும் வியாபகம் பெற்றது போல வேறு எவர் எழுத்திலும் பெற்றதில்லை.
அவரது சாத்வீகம் அவரது குணத்தில் காணப்பட்ட பெண்மை, குழந்தைமை கவர்ச்சியும்தான் (’ஜிலுஜிலுப்பு’ என்று சொல்பவர்கள்தான் சொல்லக்கூடும்.) பாத்திரங்கள் எழுப்பும் ஓசை, வெங்கலத்தாம்பாளம் தரையில் வீழ்ந்தால் எழுந்து பரவி ஓயும் டங்காரம், சங்கீதத்தின் விகசிப்புதான். அன்றாடம் கேட்கும் சுற்றியுள்ள உலகத்தில் கேட்கும் ஒவ்வொரு க்ஷண சப்தமும், ஸ்வர அபஸ்வர ரூபங்களில்தான் அவர் காதில் ஒலிக்கும். அதே போல்தான் சக மனிதர்கள் அவருடன் கொள்ளும் உறவாடல் பேச்சு எல்லாம் சங்கீத ரூபமான ஸ்வர, அபஸ்வரங்களாகத்தான் அவருக்கு ஒலித்தன.
அதனால்தான் உலக வியாபகமே சங்கீதரூபம், பெண்மையும் குழந்தையும் சங்கீத ரூபங்கள் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டபொழுது, அதை உடன் உணர்ந்து சுவீகரிக்க முடிந்தது. வெகு உற்சாகத்துடன் வரவேற்க முடிந்தது அவரால்.
சங்கீத ஈடுபாடும் குழந்தைகளிடமும் பெண்மையுடனும் அவர் கொண்ட பிரேமையும், வெவ்வேறு குணங்கள் அல்ல. ஒரே குணத்தில் பல்வேறு ரூப மலர்ச்சிகள், பல்வேறு ஸ்தாயிகள், சஞ்சாரங்கள்.
————–
தமிழ் இலக்கிய உலகம் இவ்வகையில் அவரை உணர்ந்ததில்லை. இனங்கண்டு கொண்டதில்லை. தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் ஒரு காலத்திய (அறுபதுக்கும் முந்திய) ஸ்வாரஸ்யமாக காதல் கதைகள் எழுதும் தொடர்கதை எழுத்தாளர்.
தமிழின் இன்றைய உலகுக்கு இதையும்விட பன்மடங்கு அதிகம் கொச்சைப்படுத்தும் திறன் உண்டு. என்னவோ ஜானகிராமனை ஏதோ ஓரளவுக்குத்தான், தான் புரிந்து கொண்டதைக் கொச்சைப்படுத்தியது. அதன் வெறுப்பை அவர் அதிகம் சம்பாதித்துக் கொண்டதில்லை. அவரது இயல்பான சாத்வீக, அடங்கிப்போகும் குணத்தின் காரணமாக.
தஞ்சை மண்ணைவிட்டு நகர்ந்து வெகு காலமாகி விட்டது ஜானகிராமனுக்கு. ஆனால் அவர் மனமும், ஈடுபாடுகளும் தஞ்சை மண்ணைவிட்டு என்றும் அகன்றதில்லை. சென்னையில் இருந்த காலத்திலாவது தஞ்சை அவ்வளவு எட்டாத் தொலைவில் இல்லை. ஆனால் டெல்லி வந்த பிறகு டெல்லி அவரது வெறுப்புக்குத்தான் ஆளாயிற்று. என்றுமே டெல்லியில் அவர் மனம் ஒட்டியதில்லை. டெல்லியின் snobberyயும் ஓட்டாத்தன்மையும், விலகி ஒதுங்கிச் செல்லும் போக்கும் காரியார்த்த உறவாடலும் அவரில் வெறுப்பையே பிறப்பித்தது.
ஜப்பான், அமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஜெர்மனி என்று பல இடங்களுக்குச் சென்றுள்ளார். அவற்றில் எல்லாம் சிறந்தது ஜப்பான் அனுபவம் பற்றி அவர் எழுதிய “உதய சூரியன்.” இலக்கியத் தரத்திற்கு உயர்ந்துள்ள ஒரே பிரயாண நூல். அதற்கு முன்னும் பின்னும் இன்றுவரை அதைப்போன்ற ஒரு பிரயாண அனுபவம் தமிழில் இல்லை. ஒரு கலாபூர்வமான சமூகத்துடன் ஒரு கலைஞனின் உரையாடலாக அந்த பிரயாணம் சந்திப்பு இருந்த காரணத்தால் தான் தஞ்சை மண்ணின் குணங்கள் அனைத்தும் எவ்வாறு அவர் எழுத்திலும் வாழ்விலும் இயல்பிலும் பிரகாசித்தனவோ, அவ்வாறான ஓர் ஒன்றியைவுதான் ஜப்பானிய கலையுணர்வும் அதன் ஒவ்வொரு வாழ்வுக் கணத்திலும் பிரகாசித்திருந்தது. இல்லை, அவர்கள் இரண்டும் ஸ்ருதி சேர்ந்த நிகழ்வு, அனுபவம் அது.
எப்போது தமிழ்நாடு திரும்பப் போகிறோம் ஏன்று ஆர்வமாகக் காத்திருந்து டெல்லியில் நாட்களைக் கடத்தியவர் அவர். தஞ்சை கிராமம் ஒன்றிற்குத் திரும்பியிருந்தால், தன் திரும்பல், அந்த எதிர்நோக்கல் சென்னைக்கு அல்ல, தஞ்சை கிராமத்திற்கு என்று புரிந்திருந்தால் அவர் மகிழ்ச்சியடைந்திருப்பார். டெல்லி வருமுன், சென்னையில் இருந்துகொண்டே, ஆத்மார்த்தமாக தஞ்சையில் வாழும் பிரமை பெற்றது அன்று சாத்தியமானது போல (அறுபதுகளில்), இப்போது எண்பதுக்களில் சாத்தியமாகவில்லை. காலம் மாறிவிட்டதை அவர் உணரவில்லை.
எதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி சென்னை திரும்பினாரோ, அது அவ்வாறாக நிகழவில்லை. அனுபவங்கள் கசப்பாகி விட்டன என்று எங்கள் காதில் விழுகிறது இப்போது. காலம் மாறிவிட்டது. சென்னை மாறிவிட்டது.. சென்னையில் இருந்துகொண்டே தஞ்சையில் வாழ்வதானது ஐம்பதுக்களில் சாத்தியமாகியிருக்கலாம். எண்பதுகளில் அல்ல.
சென்னை எழுத்தாளர்கள் (நட்சத்திரங்கள் பிரபலங்கள்) குழாம் அவருக்கு உவப்பாகவில்லை. அவர்கள் அவரிடம் தோழமை பாராட்டவில்லை என்று தெரிகிறது. எழுத்தாளர்கள், அதிலும் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி அவருக்கு நன்கு தெரியும். இன்றைக்கு மட்டுமல்ல, அன்றைக்கே அவருக்குத் தெரியும். “எழுத்தாளர்களோடு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? அதை விட ஒரு கறிகாய்க் கடைக்காரியுடன் பேசுவதுதான் எனக்கு விருப்பம், பாந்தமாக இருக்கிறது” என்பார் அடிக்கடி.. வாஸ்தவம். முழுக்கமுழுக்க உண்மை. கறிகாய்க்கடைக்காரி இன்னமும் தன் மனித குணங்களை இழந்தவள் இல்லை. முற்றிலும் அவள் ஒரு மனித ஜீவன். வியாபாரம் தான் செய்கிறாள் என்றாலும் வியாபாரம் செய்ய வந்த இடத்திலும் அவளிடம் மனித தோழமையை இன்னொரு சக மனித ஜீவனைக் கண்ட இயல்பான ஆதுரம் காணக் கிடைக்கும். பகட்டு இல்லை. இதற்கு நேர் எதிரானவன் தமிழ் எழுத்தாளன். மனிதாபிமானம் என்பான் இது என்பான் அது என்பான். உண்மையில் அவன் வெறும் வெறும் வியாபாரி. தன் புகழுக்காக, வெற்றிக்காக, பணத்துக்காக எதையும் செய்வான். ஆனால் பேச்சுக்கள் வேஷங்கள் எல்லாம் பெரிதாக இருக்கும். மனித குணங்களை இழந்த தொழில்காரன், வியாபாரி அவன்.
சக எழுத்தாளர் பலரின் பொறாமைக்கும் பகைமைக்கும் ஆளாகிவிட்டார், சென்னைக்குத் திரும்பிய ஜானகிராமன். உண்மையில் தனக்குக்கிட்ட வேண்டியது கிடைக்காத ஜானகிராமன், தனக்குத் தகுதியில்லாததெல்லாம் மலையாக வாய்க்கப் பெற்ற சக எழுத்தாளரின் பொறாமைக்கும் எரிச்சலுக்கும் இரையானார் என்று கேள்விப்படுகிறோம். இவர்களை மன்னித்து விடு என்று ஒரு இயேசு நாதர் சொல்லக்கூடும். நாங்கள் இயேசுவல்ல. சாதாரண மனிதர்கள். “தமிழ்த்தாயே இந்த இழிதகைகளை மன்னித்துவிடு” என்று கேட்க, தமிழ்த்தாயும் இல்லை. எங்களுக்கு விருப்பமும் இல்லை. இந்த இழிதகைகளை, பிராபல்யங்களாக்கும், நட்சத்திரங்களாக்கும் தமிழ்ச்சமூகம்தான் எங்கள் கண்முன் நிதர்ஸனமாயிருக்கிறது. தமிழ்த்தாய் அல்ல.
இன்றைய தமிழ் தாய் அவளுக்கு உயிரூட்டி, அழகூட்டியவர்களை என்றுமே ரட்சித்ததில்லை. “எனக்கு” “உனக்கு” என்றுஒரு ஆபாச அலங்கோலக்குழு, சாகித்ய அகாதெமி பரிசுகளைத் தமக்குள் பங்கு போட்டுக்கொண்டது. இருபது வருடங்கள், இருபத்து ஐந்து வருடங்களாக தமிழ்த்தாயை அசிங்கப்படுத்தியவர்கள் அவர்கள். தமிழ்த்தாய் இதைக்கண்டு முகம் சுளித்ததாகக்கூட எங்களுக்குக் கேள்வியில்லை. தமிழத்தாய் கண்டு கொள்ளாததைக் கன்னடம் கண்டுகொண்டது, அதுவும் எந்தக் கன்னட சமூகம்?
தனது அரசியல் பலத்தை வெளியுலகுக்குக் காட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் விளையாட்டுத்தான், டெல்லியில் 6-8 வருடங்களுக்கு முன் நடந்த கன்னட இலக்கிய சம்மேளனம். ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அது உண்மையான இலக்கிய கலை சம்மேளனம். ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அது உண்மையான இலக்கிய கலை விழா. அது அரசியல் காரணங்களுக்கு என்றே நடத்தப்பட்ட ஒன்று என்ற போதிலும் (கலைக்கு என்றே இலக்கியத்திற்கு என்றே சொல்லி நடத்தப்படும் கலை இலக்கிய விழா எதுவும் தமிழ்நாட்டில் ஆபாசமும் அரசியலுமாக இருக்கும்) அந்த விழாதான் இரண்டு எழுத்தாளர்களைக் கௌரவித்தது. ஒருவர் தகழி சிவசங்கரன் பிள்ளை. மற்றொருவர் தி.ஜானகிராமன். தமிழ்த்தாய் செய்யத் தவறிய ஒன்றைக் கன்னடத்துச் சித்தியம்மாள்தான் செய்தாள். எப்படி நிகழ்ந்தது இது?
இதற்குச் சில வருடங்கள் பின்தான் பங்கு போட்டுக்கொள்ள வேறு ஆள், தன் ஆள் இல்லாமல் போகவே தன் ஆபாசச் செயல்களின் நாற்றம் கூவத்தை மிஞ்சவே சாகித்ய அகாடமி தன் பரிசை ஜானகிராமனுக்கு அளித்தது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பார்கள். பல நாறுகள் மணந்தன. தன்னை அலட்சியப்படுத்திய தமிழ்த்தாய்க்கு கௌரவம் கொடுத்தார் ஜானகிராமன்.
அவர் பணியாற்றிய டெல்லி ரேடியோ டெலிவிஷன் நிலையம் Emeritus Producer ஆக்கியது ஜானகிராமனை. தமிழ் இலக்கியம் செய்யத் தவறியதைச் சம்பளத்திற்காகப் பணியாற்றிய ஸ்தாபனம் அவரை இனங்கண்டு கொண்டது. காரணம் தன் ஆபாசத்தைப் பரப்ப அங்கு ஒரு தமிழன் இல்லை.
தி.ஜானகிராமன் தமிழுக்குக் கொடுத்தது அவர் தமிழ் இலக்கிய சமூகத்திடமிருந்து பெற்றதைவிட மிக அதிகம் என்று சொன்னோம். ஆனால் அதே சமயம் அவர் தமிழுக்குத் தந்தது அவர் தரத் தகுதி கொண்டதைவிட குறைவு. அவரது திறன்கள் அவரது செயல்பாட்டுக்களைவிட அதிகம். ஏன் கொடுக்கவில்லை என்று கேட்க (தமிழ் சமூகம் அவருக்குத் தந்ததை நினைவில் கொண்டால்) நமக்கு அருகதை இல்லை.
தஞ்சை மண்ணின் பிறப்பு என்பதற்கும் மேலாக, சங்கீதம், பண்பட்ட வாழ்வியல் நோக்குகள், சம்ஸ்கிருத புலமை, இதிகாசங்களில் ஆழ்ந்த ஈடுபாடு, எல்லாம் வாய்க்கப்பெற்ற குடும்பத்தில் வந்தவர். இவற்றையெல்லாம் பிதிரார்ஜிதமாகப் பெற்றவர். ஆனால் இவை அவ்வளவும் ஜானகிராமனிடம் தமிழ் இலக்கியமாகக் கால்வாய் பிரிந்தது. அவர் எழுத்தில் இவை அத்தனையின் குணங்களையும் காணலாம். இலக்கியத்தில் கால் வைக்காதிருந்தால் சங்கீதத்துறையில் கால் வைத்திருக்கக்கூடும். அதற்கான பயிற்சியைப் பெற்றவர் அவர். சங்கீதவித்வானாகத்தான் ஆகவில்லை. இன்றைய சங்கீத நிலை பற்றியாவது எழுதியிருக்கலாம். அவ்வபோது அபூர்வமாக அவர் எழுதியதும் உண்டு. இலக்கிய வட்டத்தில் க்.நா.சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் எழுதியுள்ளார். யாத்ராவில் எழுதும்படி அவரைக் கேட்டோம். ஒரு சில முறைகள் எழுதுகிறேன் என்று சொன்னாரே அல்லாது ஏனோ எழுதவில்லை. இந்நாட்களில் அவர் எழுதுவதே மிகவும் குறைந்துவிட்டது. 1968லேயே “போறுமே நிறைய எழுதியாச்சு. எழுதிண்டே இருக்கணுமா?” என்பார்.
சங்கீதம் ப்ற்றி எழுதியிருக்கக் கூடுமானால் அது மிகுந்த பலன் அளிக்கும் குணம் கொண்டதாக இருந்திருக்கும். எந்த நல்ல எழுத்து பற்றியும் இன்றையத் தமிழ்ச் சமூகத்தில், “பலன் அளிக்கும் குணம் கொண்டது” என்றுதான் சொல்ல முடியுமே தவிர, “பலன் அளிக்கும்” என்று சொல்ல முடியாது. இன்றைய தமிழ் சமூகத்தில் சொரணை அப்படிப்பட்டது.
இந்நிலையில் எதைச் செய்துதான் என்ன? ஓர் இடத்தில் (மலர் மஞ்சம்) “இந்த இரண்டு காக்கைகள் உட்காரத்தானா இந்த பிரம்மாண்ட கோபுரத்தை எழுப்பினான்?” என்று ஒரு வாசகம் வருகிறது. தஞ்சை கோபுரத்தைக் குறிப்பிடும் வார்த்தைகள் அவை. நாவலிலேயே மிக முக்கியமான கட்டத்தில் சொல்லப்படும் வார்த்தைகள். வாழ்க்கையில் ஒரு தீவிர கட்டத்தில் ஒரு திருப்பத்தை நிகழ்விக்கும் வார்த்தைகள் அவை.
இதுதான் இன்றைய தமிழ் சமூக யதார்த்தம், வானுயர்ந்த பிரம்மாண்ட கோபுரங்களின் உச்சியில் காக்கைகள்தான் உட்கார்ந்து கொண்டு விடுகின்றன. சொல்லப்படும் அர்த்தத்தில் இது ஒரு அவலம். தொடர்ந்து நிகழும் அவலம்.
ஆனால் சட்டென ஒரு பலவீன சமாதானமும் மனம் கொள்கிறது. இக்காக்கைகள் ஆபாசப்படுத்தும் காக்கைகள். கோபுரத்தின் மீது உட்கார்ந்து தம்மை உயர்த்திக் கொள்ளும் காக்கைகள் அதனை உயர்த்திய அக்கோபுரத்தை ஆபாசப்படுத்தும் காக்கைகள் போலும்.
ஆனால் கோபுரம் இன்னமும் வானுயர்ந்து நிற்கும் தன் பிரம்மாண்டத்துடன், வானைத் தொட்டுக் கொண்டு பல நூற்றாண்டுகளாக நின்று கொண்டிருக்கும். நமது பார்வைகளை லட்சியங்களை வானுக்குச் செலுத்த கட்டாயப்படுத்தும். நமது சிறுமைகளை, ஆனால் நம் பார்வைகளின், லட்சியங்களின் பெருமையை, நீட்சியை உணர்த்தும்.
மனம் சமாதானம் கொள்கிறது.
சற்று கழித்து மறுபடியும் வேறு சில காக்கைகள் அதன் உச்சியில். கோபுரம், அதன் பிரமாண்டம் நம் பார்வைகளைத் தன்னுள் அணைத்துக் கொள்ளட்டும். நம் லட்சியங்களை உயர்த்தட்டும், முடிந்தால் காக்கைகளை மறப்போம்.
யாத்ரா (38-39), 1983.
-----------------------------------------
நம்ம மேதாவி ஜெயமோஹன் அவர் தளத்தில் இந்தக்கட்டுரையை விமர்சிப்பதுபோல ஜானகிராமன் எழுத்தை விமர்சிக்கிறார்! என்ன சொல்றார்னு பார்ப்போம்!
ஜானகிராமனைப் பற்றிய அஞ்சலி கட்டுரையில் வெ.சா சற்று மிகையாகவே சொல்கிறார். தி.ஜானகிராமன் அவரது மோகமுள் சுதேசமித்திரனில் வெளி வந்த நாள் முதலே தமிழின் இலக்கியச் சூழலில் ஓரு நட்சத்திரமாகவே இருந்தார். கடைசிவரை அந்த இடம் அழியவும் இல்லை. எப்போதும் அவரைப் பற்றி விவாதிக்கப் பட்டு, போற்றப் பட்டுக் கட்டுரைகள் வந்தபடியே இருந்தன. ஐயமிருந்தால் அக்கால சிற்றிதழ்களைப் பாருங்கள்.
ஆனால் தமிழின் தீவிர இலக்கியச் சூழலில் அன்றைய வாசகர்கள் இரண்டாயிரம் பேர்தான். அவர்களுக்குத்தான் அவர் ஒரு முதன்மையான படைப்பாளியாக இருந்தார். அவரது தீவிரமான பாதிப்பு வண்ணதாசன், வண்ணநிலவன் என அடுத்த தலைமுறையிலும் தொடர்ந்தது. அவருக்குப்பின் வந்த பலருக்கும் அவரே ஆதர்சம்.
பிற இலக்கியவாதிகளைப் போலன்றி தி.ஜானகிராமனுக்கு வெகுஜன தளத்திலும் வாசகர்கள் இருந்தார்கள்.அவரது முக்கியத்துவத்தைக் கவனித்தே விகடன் போன்ற இதழ்கள் அவரை எழுத அழைத்தன. அவ்விதழ்களில் அவர் ஓரளவு சமரசம் செய்து கொண்டே எழுதினார். செம்பருத்தி, மலர்மஞ்சம், அன்பே ஆரமுதே போன்ற நாவல்களை அவ்வாறு எழுதப் பட்டவை என்றுதான் சொல்வேன்.
எனது இன்றைய வாசிப்பில் அவை பெரும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. அவரது மேதமைக்கான தடயங்கள் ஆங்காங்கே இருந்தாலும் அவை அடிப்படையில் அவரது நிரந்தரமான வாய்ப்பாடை ஆதாரமாகக் கொண்டு அந்தந்த வாரம் மனதுக்குத் தோன்றுவது போல நீட்டி, நீட்டி எழுதப் பட்டவை. நடுத்தர வர்க்க வாசகர்களை அதிகம் சீண்டாமல், ஒழுக்கவியல் சார்ந்த கலவரம் அடையச் செய்து கவனம் பெறுவதற்கான முயற்சிகள் மட்டுமே அவை.
மகத்தான வங்க, கன்னட, இந்தி, உருது நாவலாசிரியர்களுடன் ஜானகிராமனை ஒப்பிடவே முடியாது. ஒரு நாவல் உருவாக்கியாக வேண்டிய ஆழமான அக நெருக்கடியை உருவாக்காமல் எளிய கிளர்ச்சியையும், சரளமான வாசக ருசியையும் மட்டுமே ஜானகிராமனின் நாவல்கள் அளிக்கின்றன. நாவல் என்ற சவாலை அவர் சந்திக்கவே இல்லை. அதை அவர் அறிந்திருந்தாரா என்பதே தெரியவில்லை.
ஜானகிராமனின் சாதனை,அவரது சிறுகதைகளில்தான். பல கதைகள் இந்திய இலக்கியத்திலேயே சிறந்தவை என்று சொல்லத் தக்கவை.
ஒருவர் இறக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு அவரை மொத்த தமிழ்ச் சூழலே புறக்கணித்து விட்டது என்று சொல்வது அக்காலத்தில் இருந்த ஒரு சிற்றிதழ் வழக்கம். அது அன்றைய சூழலுக்கு எதிரான ஒரு எதிர்ப்புக் குரல் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஜானகிராமன் அப்படி எப்போதுமே புறக்கணிக்கப் பட்டவரல்ல. அவர்தான் சிற்றிதழ்ச் சூழலை முழுமையாக புறக்கணித்தார். விகடனின் நட்சத்திரமாக ஆக முயன்றார். அவ்வாசகர்கள் சிலர் அவரைக் ’காதல் கதாசிரியர்’ என நினைத்திருந்தால் அவர்கள் அளவில் அது பிழையும் அல்ல.
--------------------------------------
எனக்கு உண்மையிலேயே புரியலை! நாவல் எழுதுவதில் இந்த ஜெவமோவன், ஜானகிராமன் கால் தூசிக்கு சமமாவாரா?
ஜானகிராமன் புறக்கணிக்கப்பட்டதாக வெ சா சொன்னதுக்கு காரணம் , அவருடைய தரமான எந்த நாவலுக்குமே "பாரதீய ஞான பீடம்" பரிசு கொடுக்கப்படவில்லை! என்கிற ஆதங்கம் ஜெ மோஹனுக்கு புரியலையா?. அதாவது சிவாஜிக்கு நேஷனல் அவார்ட் கொடுக்கப்படாதது போல!
சந்தடி சாக்குல, ஜானகிராமனுக்கு "நாவல்" எழுதவே தெரியாது, நாவல்னா என்னனே தெரியுமோ என்னவோ என்பது போலவும், இவரு ஏதோ நாவல் எழுதியே பெரிய நோபல் பரிசு பெற்ற மேதை போலவும் விமர்சிக்கிறார்!!
"ஜானகிராமனை வங்க, ஹிந்தி எழுத்தாளர்களுடன் ஒப்பிடவே முடியாது" என்று இஷ்டத்துக்கு போட்டு கவுத்துறாரு இந்த மேதாவி ஜெ மோ! எல்லாம் நேரம்தான் போங்க!
Wednesday, July 13, 2011
மும்பையில் பயங்ரவாதம்! 3 இடங்களில் குண்டுவெடிப்பு!
Thursday, July 7, 2011
இவளும் பத்தினிதான்!
"தேவடியா!"னு காந்திமதியை மனதுக்குள்ளேயே சத்தமாகத் திட்டினார்அவளுடைய அன்புக்கணவர் சுப்பிரமணி. எழுபது வயதைத் தொட்டத் தன் "தர்மபத்தினி" காந்திமதியின் வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் சுப்பிரமணிக்குத்தான் தெரியும்! "இந்தக்கிழம் சீக்கிரம் செத்துத் தொலையனும்" "இந்த 75 வயதில் இத்தனை வியாதிகளை வச்சுக்கிட்டு ஏன் இன்னும் உயிரோட இருக்குனு தெரியலை"னு சொல்கிறாள் என்று அவளுடன் உடலும் உயிராக இத்தனை காலம் வாழ்ந்த சுப்பிரமணிக்குப் புரியாதா என்ன?
35 வருடங்கள் முன்னால சுப்பிரமணி தன் அண்ணன் தம்பிகளுடன் கூட்டு வியாபாரம் செய்யும்போது கோடிகோடியாக சம்பாரிச்சு, அண்ணன் தம்பிகளுக்குத் தெரியாமல் லட்சலட்சமாக பணத்தை கடையில் இருந்து சுரண்டி அள்ளிக்கொடுத்த போதும், குறைந்த பட்சம் 400 பவுன்களுக்கு மேலே விதவிதமான நகைகள் செய்துபோட்டு அழகுபார்த்தபோதும், காந்திமதி அவர்மேலே உயிருக்கு உயிராகத்தான் இருந்தாள். அன்பு, பாசம், வாயிக்கு சுவையா சமச்சுப் போடுவதில் இருந்து நெனச்ச நேரம் முந்தானை விரிப்பதிலேயோ எதிலும் எந்தக்குறையும் குறையும் அப்போதெல்லாம் வைக்கவில்லை! அன்று சுப்பிரமணி தினமும் பால் கொடுக்கும் பசு மாடு! இல்லை பொன் முட்டையிடும் வாத்து! ஆனால் இன்று? ஆமா காந்திமதியும் குஷ்புக்கு தெரியாத கற்புடன் வாழும் ஒரு பெண்தான்! வாழ்நாளில் காந்திமதி, சுப்பிரமணி தவிர யாரோடையும் படுத்ததில்லைனு சுப்பிரமணிக்கு தெரியுதோ இல்லையோ, கடவுளுக்குத் தெரியும்!
வரப்போற சாவை நெனச்சு பயந்து நடுங்கிக்கொண்டு ஒரு அழுக்கு மெத்தையில் படுத்துக்கிடக்கும் சுப்பிரமணிக்கு வாழனும்னு ஆசை எல்லாம் கெடையாது! ஆனால் பாவம், சாகவும் ஆசையில்லை! சுப்பிரமணி சம்பாரிச்சு உருவாக்கிய தினமும் லட்சக்கணக்கில் வருமானம் வரும் ஸ்தாபனத்தில் இருந்து 15 வருடங்கள் முன்பே அவருக்கு "வி ஆர்" கொடுத்து அனுப்பிவிட்டு, தாங்கள் கல்லாவில் உட்கார்ந்துகொண்டு இன்னைக்கு கோடிகோடியா சம்பாரிக்கும் மகன்கள் ரெண்டு பேரும் அப்பா எப்போ "போய் சேருவாரு"னு அந்த "நன்னாளை" எதிர்பார்த்துக் கொடிருந்தார்கள்.
அவர்களிடம் உள்ள பணத்திற்கு சுப்பிரமணியை கவனிக்க ஒரு நர்ஸ், மற்றதுக்கு இன்னும் ரெண்டு அல்லது நாலு வேலையாள்னு, முழுநேர வேலைக்கு வச்சுப் பார்த்தக்கலாம்தான்! பணமா இல்லை? ஆனால் "அப்பா இனிமேல் எதுக்கு?" னு லாபக்கணக்குப் போட்டார்கள் அந்த தேவடியா மகன்கள்! சுப்பிரமணி டெய்லி வேலைக்காரி முனியம்மா போடும் ஊசியில் ஏற்றும் இண்சுலினுடன் மேலும் பி பி கொலெஸ்டெரால், கிட்னி ட்ரபுள்னு எல்லாத்துக்கும் ஒரு 10 மாத்திரைகள் எடுத்துக்கொண்டு, நல்லா வாயிக்கு ருசியா சாப்பிடனும்னு மட்டும் தான் ஆசைப்பட்டார். அப்படி அவர் ஆசைப்படுவதென்ன அவ்வளவு பெரிய தப்பா?னு அவர் உள் மனதில் தோன்றியதை சத்தமாக வெளியே சொல்லமுடியாத ஒரு கோழை அவரு! சுப்பிரமணிக்கு இப்போலாம் காந்திமதியின் அறிவுரைப்படி இன்சுலின் ஊசிபோடுற "டாக்டர் முனியம்மா" என்னவோ டாக்டர் சொல்லிய கொடுக்க வேண்டிய அளவுக்கு கம்மியாக கொடுப்பதுபோல தோனுச்சு. அதனால் சரியாக பசிக்கவும் இல்லை போலவும் தோனியது. மேலும் பல நேரங்களில் மாத்திரை அளவுக்கு அதிகமாகக் கொடுப்பது போலவும் தோன்றியது. ஒருவேளை டாக்டருடைய ப்ரிஸ்க்ரிப்ஷ்னை இந்தத் தேவடியா மாற்றிவிட்டாளோ? "ஓவர் டோஸ்" கொடுத்து என்னை சீக்கிரம் அனுப்பி விட வழிபண்ணுகிறாளோ? என்ற பீதியில் செத்து செத்து இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தது ஏற்கனவே செத்துப் பிணமான மாஜி தொழிலதிபரான கோடீஸ்வரர் சுப்பிரமணி!