Monday, January 31, 2011

பதிவுலக ஞாநி உண்மைத்தமிழன் அண்ணன்!

ஓ பக்கங்கள் ஞாநி ஓஹோனு இருந்து ஒண்ணுமில்லாமப் போனது உலகம் அறியும்! இவர், தேவையே இல்லாமல் வயதான கலைஞர் கருணாநிதியை அளவுக்கு மீறி தாக்கித் தாக்கி எழுதி எல்லோருக்கும் எரிச்சலைக் கிளப்பி
, பார்ப்பணர்களையும் கருணாநிதிக்காக வக்காலத்து வாங்க வச்சு வீணாப்போனார்னுகூட சொல்லாம்.!

இப்போபதிவுலகில் நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி எதுனாலும் கலைஞரை திட்ட வேண்டியதுனு ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

சரி, மற்ற பிரச்சினைகளாவது பரவாயில்லை, சமீபத்தில் கலைமாமணி விருது ஆர்யா, அனுஷ்கா, தமன்னானு கண்ட நடிகைகளுக்கும் கொடுத்து என்னவோ காமெடி பண்ணி இருக்காங்க தமிழக அரசு. சரி, ஏதோ காமெடினு விட்டுட்டுப் போகாமல், ஏதோ கலைமாமணி கொடுத்து ஆட்சியை பிடிக்கப்போறாராம், கலைஞர்! இது எப்படி இருக்கு?

மீனவர்கள் படுகொலை செய்யப்படும் இந்த சூழலில் தமன்னா, ஆர்யா, அனுஷ்காவுக்கு க மா ம கொடுப்பதே எல்லோருக்கும் எரிச்சலைதான் கிளப்புது.

அதைபோயி ஏதோ “அஸ்திரம்” அரசியல் தந்திரம் அது இதுனு நம்ம அண்ணே சொல்றது, டூ இல்லை த்ரீ மச்சா இல்லை? அண்ணனுக்கு பதிவுலக ஞாநி பட்டத்தைக் கொடுப்பதைத் தவிர வேற வழியே இல்லை!

வாழ்க பதிவுலக ஞாநி உண்மைத்தமிழன் அண்ணா!

தலை தப்பியது ரஜினியாலே! சில உண்மைகள்!

* சிவாஜியும், தசாவதாரமும் 70 கோடி பட்ஜெட் படங்கள். நிச்சயம் வெற்றியடைந்தன. தயாரிப்பாளர்கள் எவ்ளோ வருமானம் அடஞ்சாங்கனு யாருக்கும் தெரியாது. 135 கோடி செலவில் தயாரான எந்திரன் தலை தப்புமா? என்ற கேள்விக்கு சன் நெட்வொர்க் பதில் தந்துள்ளார்கள். சுமார் 45 கோடி இவர்களுக்கு வருமானம் வந்ததாக! இதில் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்கள் அடைந்த இலாப-நஷ்டங்கள் அடங்காது.

* ரஜினியின் அடுத்தபடம் ராணா வாம். கே எஸ் ஆர் இயக்கம். ஏ ஆர் ரகுமான் இசை. அனுக்ஷாமற்றும் தீபிகா படகோன் நாயகிகளாம். இது ஒரு சரித்திர படமாம்! இந்தப் படத்திற்கும் சுல்தான் த வாரியர்/ ஹாரா என்கிற அனிமேஷன் படத்துக்கும் சம்மந்தமே இல்லையாம்!

* கமலஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் மகள்அனுஹாசன் ஒரு இங்கிலாந்து நாட்டுக்காரரை (க்ரஹாம் ஜே) ரெண்டாம் முறையாக திருமணம் செய்துகொண்டாராம். முதல் கணவர் பெயர் விகாஷ் ஆம். 10 ஆண்டுகளுக்கு முன் மணந்த இவருக்கும் அனுவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாம்.

* பொங்கல் படங்களில் வசூலில் வெற்றி பெற்ற படங்களின் வரிசை! படம் வெளியாகி ரெண்டு வாரங்களுக்குப்பிறகு தெரிந்த உண்மை நிலவரம் இதுதான்!

#1 சிறுத்தை

#2 ஆடுகளம்

#3 காவலன்

முக்கியமாக பி அண்ட் சி செண்டர்களில் சிறுத்தை அளவுக்கு காவலன் எடுபடவில்லை என்பது நிதர்சனம்! கார்த்தியின் வெற்றி தொடருது! காவலனுக்கு ஜெயா டி வி ல விளம்பரம், விஜய்- அசின் பேட்டினு போட்டு ப்ரமோட் செய்ததால் தப்பிச்சது.

* மன்மதன் அம்பு ஒண்ணும் எந்திரன் அல்ல என்று மாதவன் சொன்ன ப்ரஸ் ஸ்டேட்மெண்ட் கமலுக்குப் பிடிக்கலையாம்! நான் கமல் நிலைமையில் இருந்தால் எனக்கும் பிடிக்காதுதான்!Friday, January 28, 2011

சாரு இல்லாத எஸ் ரா வின் நூறு சிறந்த புத்தகங்கள்!

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள், தமிழில் சிறந்த 100 புத்தகங்கள்னு ஒரு லிஸ்ட் வெளியிட்டு உள்ளார். இதில் சாரு புத்தகம் ஒண்ணுகூட இடம்பெறவில்லை! எஸ் ரா, ஜெ மோ, மனுஷ்ய புத்ரன் புத்தங்கள் எல்லாம் இதைல் இடம் பெற்றுள்ளன!

இங்கே இருக்கு அவர் கொடுத்த லிஸ்ட்! இது தரவரிசைப்படுத்தப்படாத லிஸ்ட்னு சொல்லியிருக்கார்.

----------
••
1)அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார்
2) மகாபாரதம் – கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்
3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு
4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்
5) கம்பராமாயணம்– மர்ரே ராஜம் பதிப்பு
6) திருக்குறள் – மூலமும் உரையும்

7) திருஅருட்பா – மூலமும் உரையும்

8)சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு
9) மணிமேகலை – மூலமும் உரையும்
10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்
11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள்
12) தமிழக வரலாறு – தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்
13)பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு
14)பாரதிதாசன் கவிதைகள்.
15)ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – 12 தொகுதிகள்
16)பெரியார் சிந்தனைகள் – ஆனைமுத்து தொகுத்தவை.
17)திருப்பாவை – மூலமும் உரையும்
18)திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும்
19)சித்தர் பாடல்கள்– மூலமும் உரையும்
20)தனிப்பாடல் திரட்டு.
21)பௌத்தமும் தமிழும்– மயிலை சீனி வெங்கடசாமி
22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
23)கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
24)மௌனி கதைகள்
25)சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
26)ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
29)வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு
30)பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு
31)அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு
32)ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
33)லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு
34)தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு
35)ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி
36)விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள்
37)ராஜேந்திரசோழன் சிறுகதைகள்
38)நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்
39)சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்
40)பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
41)சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு
42)பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்
43)முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு
44)கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு
45)சுயம்புலிங்கம் சிறுகதைகள்
46)மதினிமார்கள் கதை – கோணங்கி
47)வெயிலோடு போயி – தமிழ்செல்வன்
48)இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம்
49)கடவு – திலீப்குமார் சிறுகதைகள்
50)நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு
51)புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
52)புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
53)கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன்
54)மோகமுள் – தி.ஜானகிராமன்
55)பிறகு – .பூமணி
56)நாய்கள் நகுலன்
57)நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்
58)இடைவெளி – சம்பத்
59)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
60)வாசவேஸ்வரம் – கிருத்திகா
61)பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு
62)கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன்
63)தலைமுறைகள் – நீல பத்மநாபன்
64)பொன்னியின் செல்வன்– கல்கி
65)கடல்புரத்தில் – வண்ணநிலவன்
66)நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்
67)சாயாவனம் சா.கந்தசாமி
68)கிருஷ்ணபருந்து – ஆ.மாதவன்
69)காகித மலர்கள் ஆதவன்
70)புத்தம்வீடு. – ஹெப்சிபா யேசுநாதன்
71)வாடிவாசல் -சி.சு.செல்லப்பா
72)விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
73)உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
74)கூகை – சோ.தர்மன்
75)ஆழிசூழ்உலகு– ஜோசப் டி குரூஸ்
76)ம் – ஷோபாசக்தி
77)கூளமாதாரி – பெருமாள் முருகன்
78)சமகால உலகக் கவிதைகள் – தொகுப்பு பிரம்மராஜன்
79)ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு
80)பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு
81)கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு
82)கல்யாண்ஜி கவிதைகள்
83)விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு
84)நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு
85)ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு
86)தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு
87)தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு
88)ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு
89)பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு
90)சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு
91)கோடைகால குறிப்புகள் சுகுமாரன்
92)என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் – மனுஷ்யபுத்திரன்
93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்
94) ரத்த உறவு– . யூமா வாசுகி
95)மரணத்துள் வாழ்வோம் – கவிதை தொகுப்பு
96)சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.
97)தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு.– கி.ராஜநாராயணன்
98)தமிழக நாட்டுபுறபாடலகள் – நா.வானமாமலை
99)பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவம் கட்டுரைகள்
100)கண்மணி கமலாவிற்கு – புதுமைபித்தன் கடிதங்கள்

------------------------------------
* ஜானகி ராமனின் மோகமுள் இடம்பெற்றிருக்கிறது

* கல்கியின் பொன்னியின் செல்வன்

* ஜெயமோஹனின் விஷ்ணுபுரம்

* எஸ் ராவின் உபபாண்டவம்

போன்ற நாவல்கள் இடம் பெற்றிருக்கின்றன!


ஆனா, சாரு, இதைப்பத்தி கவலைப்பட வேண்டியதில்லை! ஏன் என்றால் சாருவின் புத்தகங்கள் மட்டுமன்றி தமிழில் நல்ல ஆசிரியர்கள் பலருடைய தரமான நாவல்கள், புத்தகங்கள் இந்த லிஸ்டில் இடம் பெறவில்லை!


* பாரதியஞான பீடம் பரிசுபெற்ற அகிலனின் எந்த நாவல்களும் (சித்திரப்பாவை, பாவை விளக்கு போன்றவை) இடம் பெறவில்லை!


* சாண்டில்யன் எழுதிய எந்த சரித்திர நாவல்களும் (யவனராணி, கடல் புறா, மன்னன் மகள், கன்னி மாடம்) இடம் பெறவில்லை!


அதனால எஸ் ராமகிருஷ்ணனின் இந்த லிஸ்ட் ஒண்ணும் உலகத்தரம் வாய்ந்த வரிசப்படுத்தல் இல்லை என்பது என் எண்ணம்! ஃப்ரியா விடுங்க சாரு! :)

Thursday, January 27, 2011

மறுபடியும் விஜய் 3-இடியட்ஸ்ல நடிக்கிறாராம்!

ஆமா, நாந்தான் சொன்னேன், இப்போ சூர்யா நடிக்கிறார்னு! இப்போவும் நாந்தான் இந்த நியூஸையும் சொல்றேன். நாளைக்கு மறுபடியும் சூர்யா தான் ஹீரோனு சொல்ல மாட்டேன்னு எதுவும் ப்ராமிஸ் பண்ணமாட்டேன்!

அப்படியே பிஹைண்ட்வுட்ஸ்ல்
வந்த மேட்டரை காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கேன். தொரைநாட்டு மொழியில் இருக்கு! மன்னிச்சுக்கோங்கப்பா!

Suriya out, Vijay in for ‘3 Idiots’
vijay-suriya-27-01-11


Jan 27, 2011Vijay had previously walked out of Shankar’s academy of Idiots due to some creative differences and now he is back as confirmed by the confidential sources. There was some surprising news on airs that Suriya is replacing Vijay and the shoot was to begin by first week of March after the completion of ‘Ezham Arivu’.

But again, the creative difference between Shankar and Suriya seems to have popped up resulting in abrupt conclusion. Vijay is busy now shooting for the film ‘Velayudham’ and will soon schedule dates for the project.

Meanwhile, Shankar is planning to shoot the portions involving Jiiva, Srikanth, Ileana and Sathyaraj in Ooty by next week followed by a long schedule in Dehradun.
நம்புறவங்க நம்பிக்கோங்க! இல்லைனா விட்டுடுங்க!

Tuesday, January 25, 2011

டாக்டர் ஷாலினியின் கிளர்ச்சி ஸ்விட்ச் -விமர்சனங்கள்

டாக்டர் ஷாலினி எழுதும் தொடர் ஆணைமட்டும் ஏதோ கொடூரமான ஜந்து போலவே தொடர்ந்து சித்தரிக்கிறது ஏன் என்று புரியலை. ஆண்கள் எல்லாம் யோக்கியன் கெடையாதுதான். இந்தத் தொடரால இவர் என்ன சொல்ல வர்றார்னு எனக்கு சுத்தமாப் புரியலை? இது பெண்களுக்கு மட்டும் இவர் எழுதும் தொடரா? பெண்களை குழப்பு குழப்புனு குழப்பி நிம்மதியா வாழவிடமாட்டாரா இவர்? வரிக்கு வரி இதை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியவில்லை!
-----------------

***ஆனால் இயற்கையின் லாஜிக் இது தான்:

* ஒருவனுக்கு ஆண் குறி மிக நீளமாய் இருந்தும் விரைப்புறவே இல்லை என்றால்? அல்லது விரைப்பேற்பட்டும் அவனுக்கு பெண் ஆசையே இல்லை என்றால்?

* அல்லது ஆசை இருந்தும் சுயநலமாய் தன் சுகமே முக்கியம் என்று பெண்களை அவன் துஷ்பிரயோகம் செய்தால்?

* விந்தணுக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும் கருவுற முடியாத பாகத்தில் இவற்றை முதலீடு செய்யும் தன்மை அவனுக்கு இருந்தால்?

இப்படிப்பட்ட ஆண்களை தேர்ந்தெடுப்பது சமூகத்திற்கு உபயோகமில்லாத செயலாகி விடுமே!***

என்ன அது?? இதுபோல் ஆண்களால் சமூகத்திற்கு உபயோகம் இல்லையா? ஒரு பெண் ஒரு ஆண் துணையைத் தேர்ந்தெடுப்பது, சமூகத்திற்காகவா? இல்லைனா குழந்தை பெற்றுக்க மட்டுமா? ஒரு பெண் ஒரு ஆணை தேர்ந்தெடுப்பதில் சமூகம் என்ன எழவுக்கு வருது?? ஒருவர் தனக்கு துணை தேடுவது சமூகத்தை நல்வழியில் கொண்டு சொல்லவா?

--------------------------

***உதாரணத்திற்கு இவர்: அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவழியினர். அமெரிக்கராய் இருப்பதென்பதே ஏதோ ஓர் அரும் பெரும் சாதனை என்று நினைக்கும் அலட்டல் ஆசாமி. இவருக்கு திருமணமானது. முதலிரவன்றின் போது தலைவர் மனைவியை இழுத்து தன் எதிரில் மண்டி இட வைத்து, “வாயை திற” என்று அதட்ட, அவன் என்ன செய்ய முற்படுகிறான் என்று புரிந்து அதிர்ச்சியாகி மனைவி மறுத்து அழ, ஏகக்களேபரமாகி விட்டது.***

இங்கே இந்த இருவருக்கும் இடையில் செக்ஸ் சம்மந்தப்பட்ட மேட்டர்ல ஒரு "மிஸ்மேட்ச்" அவ்வளவுதான்.

ரெண்டு பேரும் விவாகரத்து செய்துகொண்டு தனக்கு உகந்த பார்ட்னரை பார்க்க வேண்டியதுதான்.

What if the wife is just like Monica Lewinsky? Then there is NO problem or not? நமக்கு நாலு சுவருக்குள் நடந்த விசயம் நமக்கு வந்தே இருக்காது!
------------------

***“இப்படி எல்லாம் செய்தா குழந்தை பிறக்காது” என்றாள் மனைவி.***

உண்மைதான்.

-------------------------------------

*** “அதற்கு ஏன் கவலை படுகிறாய்? நான் ரொம்ப பெரிய சர்ஜனாக்கும், ஒரே ஒரு ஆப்பரேஷன் செய்து, உன் வாயிலிருந்து கர்பபைக்கும் நேரடியாக ஒரு கனெக்‌ஷன் கொடுத்து விடுகிறேன்” என்று அவன் தன்னம்பிக்கையோடு சொல்ல, “அயோ இப்படி ஒரு மட்டமான ஆளையா கட்டிக்கொண்டோம்?” என்று நொந்து போனாலும் தாலி செண்டிமெண்ட் தடுக்க, அவனை திருத்தி நல்வழி படுத்த அவள் அரும்பாடு பட, ஊகூம் கடைசி வரை அவனால் நார்மலாய் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட முடியவே இல்லை. இந்த ஒரு ஆணை திருத்துவதிலேயே தன் ஒட்டு மொத்த வாழ்வை வீணடிக்க முடியாது என்று உணர்ந்து விவாகரத்து பெற்றூக்கொண்டு அவனிடமிருந்து தப்பினாள் மனைவி. ****

சிவப்பில் சொல்லியிருக்கது "கட்டுகதை"யா? இல்லைனா இந்த ஆளு (டாக்டர்) ஒரு வியாதியஸ்தனானு தெரியலை. இதை ஒரு லூசு டாக்டர் தன்னம்பிக்கையோடு சொன்னானாம்!!!. ஏங்க சும்மா சேர்த்துவிடுறீங்க?

நல்லவேளை விவாகரத்து செய்து அந்தப் பொண்ணு தப்பிச்சாள். நல்லாயிருக்கட்டும்.

-------------------------------

***இந்த பெண்ணாவது பரவாயில்லை, இன்னொரு பெண், முழுதாய் நான்கு ஆண்டுகள் இப்படி ஒரு ஆசாமியுடன் வாழ்ந்து, கடைசியில் பிள்ளை பிறக்கவில்லை என்று டாக்டரிடம் போனாள். டாக்டர் சொல்லி தான் அவளுக்கு தெரியும், அது வரை அவள் கணவன் அவளை செய்வித்தது நார்மல் செக்ஸே இல்லை என்று!***

நாலு வருடம்!!!?

அந்தப்பெண்ணின் அறியாமையைப் பத்தி ஒரு வரிகூட எழுதலை!

அந்தப் பெண் முட்டாளா இருந்தது யாரு தப்பு?

இது உண்மையா இல்லை இன்னொரு "கதையா" னு தெரிய்லை!

----------------------------------

***இப்படிப்படிப்பட்ட அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாதென்றால் பெண்கள் படு உஷாராக அல்லவா ஆண்களை பதம் பார்த்து தரம் பிரித்தாக வேண்டும். வெறும், நீளம், நிமிர்வு, விந்தணு எண்ணிக்கையை வைத்து ஏதோ ஒரு பர்வர்ட்டுக்கு பிள்ளைகளை பெற்று விட்டு, இதனால் சமூக அமைதிக்கே கேடு ஏற்பட்டு விட்டால்? ***

மறுபடியும் மறுபடியும் சமூகக்கேடு.

இதுபோல் செக்ஸ் ம்யூச்சுவலாக, கணவனும் மனைவியும் விரும்பி, வைத்துக்கொண்டால் இதில் என்ன பிரச்சினைனு எனக்குத் தெரியலை?

அப்படி ஒரு பாஸிபிலிட்டி இல்லையா?

பெண்களில் பலவகை இருக்காங்க. ஒரு சிலர் ஆணிடம் எதிர்பார்ப்பது வேறங்க! இதைப் பத்தியெல்லாம் பேச எனக்கு "மன நலமருத்துவர்" சான்றிதழ் இல்லை!

------------------------

***மோசமான ஆண் என்று தெரிந்த பிறகும் அவனுக்கு பிள்ளைகள் பெற்று தருவது தான் ஒரு பெண் செய்ய கூடியதிலியே மிகவும் பாவகரமான செயல் என்று எப்போதும் பெண்களை மட்டம் தட்டும், மனு ஸ்மிருத்தியே சொல்கிறதே. அது சரி, இவன் மனிதனா, மிருகமா, அல்லது ராஷ்சனா என்பதை ஒரு பெண் எப்படி தான் கண்டு பிடிப்பாளாம்?***

மிருகம் இதெல்லாம் செய்யாதுங்க. ஆறறிவு கொண்ட மனுஷந்தான் செய்வான். பாவம் மிருகத்தையெல்லாம் எதுக்கு இங்கே இழுக்குறீங்க?

--------------------------

***வெரி சிம்பிள். நாம் ஏற்கனவே இந்த தொடரில் தெரிந்துக்கொண்டது தான். இந்த உலகிலேயே முகம் பார்த்து காமுறூம் மிருகங்கள் இரண்டே இரண்டு தான், ஒன்று பொனோபோ, இன்னொன்று மானுடம். பொனோபோக்களை இப்போதைக்கு விட்டுவிட்டு, கலவிக்கொள்ளும் மனிதர்களை, குறிப்பாக அவர்களது முகங்களை மட்டும் கவனிப்போம். ***

பொனோபோவை ஏன் விட்டுவிட்டீங்க? உங்க தியரியை ஸ்ட்ரெங்தென் பண்ண முடியாமல்ப் போகுதா?

-----------------------
***கலவியின் போது மனித பெண், பெரும்பாலும் மதி மயங்கி கண்களை மூடிக்கொண்டே தான் இருப்பாள். எத்தனை சினிமாவில் பார்த்திருப்போம்! ஏன் நிஜ வாழ்விலும் நீங்கள் உங்கள் துணைவரோடு இருக்கும் தருணங்களை நினைத்து பாருங்கள்…. முத்தமிடும் போதுமே பெண்கள் கண்களை மூடிக்கொண்டு தான் இருப்பார்கள்.***

நல்லது. இதில் யாருக்கும் பிரச்சினை இல்லை!

-----------------------------

***ஆனால் ஆண்கள்? இரண்டு கண்களையும் அகல விரித்து வைத்து அவள் முகத்தை கூர்ந்து பார்த்துக்கொண்டே தான் இருப்பான்.***

உலகத்தில் உள்ள எல்லா ஆண்களுமா?

எல்லா ஆணும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் என்னனு தெரியலை.


--------------------------

***அது சரி, பெண் கண்ணை மூடுகிறாள், அப்போது தான் அவளால் ஸ்பரிசத்தை இன்னும் துல்லியமாய் உணர்ந்து மகிழமுடியும்.***

நல்லது.
------------

**இந்த ஆண் ஏன் இப்படி கண் மூடாமல், வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்? மற்ற மிருகங்கள் இப்படி செய்வதில்லையே, ***

மனிதன்போல செய்யும் பொனோபோவையும் கழட்டிவிட்டாச்சு.

சரி, இப்போ ஒரு கண் தெரியாத ஆண் உடலுறவு செய்றான். அப்போ என்ன செய்வான்?

---------------------

***இந்த மனித ஆண் மட்டும் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறான்? ஆண்கள் அதிகம் பார்க்கும் பல பார்னோகிராபிக் (நீல) படங்களை அலசி ஓர் ஆராய்ச்சி நடை பெற்றது. இம்மாதிரி படங்களில் பெண் உடலின் எந்த பாகம் மிக அதிக நேரத்திற்கு சித்தரிக்க படுகிறது என்று ஆராய்ந்ததில், மற்ற எல்லா கிளர்ச்சி பாகங்களையும் விட பெண்ணின் முகமே மிக அதிகமாய் திரையில் காட்ட படுகிறது என்று கண்டு பிடிக்க பட்டது! போயும் போயும் பெண்ணின் முகத்தை இவ்வளவு உன்னிப்பாய் பார்க்கிறானே இந்த மனித ஆண்! அதுவும் கலவியின் போது துணைவி முகபாவத்தில் சந்தோஷத்தை தெரிவிக்கவில்லை என்றால், ஆண்களுக்கு கண் மண் தெரியாத கோபமும் ஏமாற்றமும் வருவதுண்டு, “இப்படி ஜடமாட்டம் இருக்கியே!” என்று அலுத்துக்கொள்கிறார்கள்.****

பயங்கராமான அநியாயமான மிகைப்படுத்தல். ஒரு சாதாரண ஆணின் இயற்கையான செய்கையை "போர்னை" கொண்டுவந்து கதைவிடுறாங்க!!

போர்னோக்ராஃபி வருவதுக்கு முன்னால் உடலுறவு கொள்கிற ஆண்களும் கண்ணை மூடிக்கொள்ளுவாங்களா?

இதிலே என்ன பெரிய தப்பு? தன் பார்ட்னர் முகபாவங்களை ரசிப்பது என்ன அப்படி என்னங்க கொலைக்குற்றம் போல சொல்லப்படுது?

----------------------

***ஏன் தெரியுமா? காரணம், மனித ஆணின் மூளை மற்ற மிருகங்களின் மூளையை போல செயல் படுவதில்லை.***

பெண்ணின் மூளையும் அப்படித்தானே? இல்லையா?

*** பிற மிருகங்கள் பெண்ணின் முகத்தை பாராமல் அவள் சுகிக்கிறாளா இல்லையா என்பதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல், யந்திரகதியில் புணரும். ***

மிருகங்கள் முகம் பார்த்துப் புணருவதில்லை! You left out the one it does do like human beings! Now there is no way you can correlate with animals who does not have a chance to see "his" partner's face!

***ஆனால் மனித ஆணின் மூளையில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பாட்டிருந்தது. கலவியின் போது பெண் சுகப்படும் காட்சியை தன் கண்களால் கண்டாலே ஒழிய அவனால் தன்னிறைவு பெறமுடியாது. ***

இதிலென்ன பெரிய தப்பு? ஒரு பெண் உடலுறிவின் போது ஆர்கஸம் அடையவில்லைனா தன்னிறைவு பெருவதில்லை. அதை ஆண்கள் தப்புனு சொல்ல முடியுமா? சொன்னால் அவன் முட்டாள்!

-------------------

***இப்படி பெண் கிளர்ச்சியடையும் காட்சியை உற்று பார்ப்பதே ஆணுக்கு பெரிய சந்தோஷத்தை தருகிறது.***

நல்லது. இதில் தப்பு எதுவும் இருக்கதா தெரியலை.
-----------

***காரணம் பெண்ணின் கலவியல் தேர்வு விதி: நீ எவ்வளவு பெரிய கொம்பனா வேண்ணா இருந்துக்க, ஆனா எனக்கு சுகம் தர தெரியலன்னா, நீ சுத்த வேஸ்டுடா, என்பதாகவே இருந்தது.***

தப்பே இல்லை!

பெண்ணை (மனைவி/துணைவியை) மதிப்பவனுக்கு இது நல்லாவே புரியும்!

-----------------

***இப்படி அவள் ரசனைகளை மதித்து, அவளை மகிழ்விக்க தெரிந்தவனையே அவள் மீண்டும் மீண்டும் நாடி கூடுவதால், அவளை நாசுக்காக கையாள தெரிந்த ஆணின் மரபணுக்கள் மட்டுமே பரவுகின்றன. இது தான் சூட்சமம் என்று ஆனபின் ஆணீன் மரபணுக்கள் சும்மா இருக்குமா? பெண்ணை லாவகமாக கையாளும் விசையை ஆணின் மூளையில் புதிதாய் உருவாக்கின. பெண்ணை மகிழ்வித்தால் இந்த மூளை மையம் இன்ப ரசாயணங்களை சுரக்க ஆரம்பித்துவிடும், இதனால் ஆணுக்கு ஊக்கமும், கிளர்ச்சியும், தன் ஆண்மையின் மேல் கர்வமும் ஏற்படுகிறது. இவை அவனுக்கு பெரும் நிறைவை தர, ஒலிம்பிக்ஸில் முதலிடம் பிடித்தவனுக்கு ஏற்படும் வெற்றி களிப்பை இவன் ஒவ்வொரு முறை புணரும் போதும் பெறுகிறான். பெண் முகத்தில் சுகத்தின் சுவடி தெரிந்தால் மட்டும்.***

இத ஏன் ஏதோ பெரிய தப்பா சொல்றீங்கனு தெரியலை. ஒரு பெண் தான் உடலுறவு கொள்ளும்போது அழுகனும்னு எதிர்பார்த்தால் அது மிருகத்தனம். ஒரு பெண் சந்தோஷமாக தன்னை மறக்கனும்னு எதிர்பார்ப்பதில் எந்தத்தவறும் இல்லையே?

-----------------------

**அதனால் தான் பெரும்பாலான ஆண்கள் கலவி கொண்ட உடனே, பெண்ணிடம், “உனக்கு பிடிச்சதா? டிட் யூ என்ஜாய் இட்?” என்று கேட்கிறார்கள்.***


இன்னைக்கு நான் வச்ச குழம்பு எப்படி? னு ஒப்பீனியன் கேட்பதில்லையா? அது மாதிரித்தான். இதை ஏன் போட்டு பெருசு படுத்துறீங்க?

----------

***அது கூலிக்காக கூட இருந்த விலைமாதுவாக இருந்தாலும் சரி. அவள் என்ஜாய் செய்தால் இவனுக்கு என்ன, செய்யவிட்டால் இவனுக்கு என்ன? ***

விலைமாதிடம் சென்றதில்லை. அதனால் இது பற்றித் தெரியாது.

-----------------

**சிம்பிள்: அவள் என்ஜாய் செய்யாவிட்டால் இவன் மூளைக்கு போதை கிடைப்பதில்லை. மாறாக, “எவ்வளவு மெனக்கெட்டும் மரக்கட்டை மாதிரி கிடக்கிறாளே” என்கிற இயலாமை தரும் ஆத்திரத்தை தான் தூண்டும்.**

Yeah, then he can buy a sex toy. Why should he sleep with a woman with feelings??? LOL

--------------------

பின்குறிப்பு: டாக்டர் ஷாலினி சொல்லிட்டா சரிதான் என்று தலையை ஆட்டும் ஆண்கள் பலர் இருக்கலாம். ஆனால் ஒரு சிலர் அப்படியல்ல! பெண்களை தவறான பக்கத்திற்கு அழைத்துச்செல்லும் இவங்க கட்டுரையை ஆண்கள் நிச்சயம் விமர்சிக்கனும் என்கிற நம்பிக்கையில் இந்த விமர்சனம்! நன்றி

Monday, January 24, 2011

ஆனந்தவிகடனில் அதிசயம்- சி பி செந்தில்குமாரின் கணிப்பு!

அந்தக்காலத்தில் ஆனந்தவிகடன் விமர்சனமும், அவர்கள் கொடுக்கும் மதிப்பெண்களும்தான் தமிழ் சினிமாவின் தரத்தை நிர்ணயம் செய்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக விகடன் விமர்சனக்குழு பெரிய காமெடிக்குழுவாகிவிட்டது. ஏதாவது லூசுத்தனமா மார்க்குப்போட்டு எதையாவது உளறுவார்கள் என்று பேர் எடுத்தவர்கள் விகடன் விமர்சனக்குழு!

சமீபத்தில் "எந்திரன்" மற்றும் "மன்மதன் அம்பு" மதிப்பெண்களை கவனிக்கும்போது, மறுபடியும் இப்போ பரவாயில்லாமல் மாறிக்கொண்டு வர்ற மாதிரி தோன்றியது.

இப்போது பொங்கலுக்கு வெளியான படங்களை விகடன் மதிப்பிட்டு இருக்கும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் உள்ளது என்பது அதிசயம்!

விகடன் கொடுத்த மதிப்பெண்கள்


சிறுத்தை - 39

காவலன் - 42

ஆடுகளம் - 44

நம் பதிவர் செந்திகுமார் அவர்கள், "தில்"லாக அவர் எதிர்பாக்கிற விகடன் மதிப்பெண்களையும் தன் விமர்சனத்தில் கொடுத்தார். யாருக்கு இந்த தைரியம் வரும்?

சி பி செந்தில்குமாரின் எதிர்பார்ப்புகள்!


சிறுத்தை- எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43

ஆடுகளம்- எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44

காவலன் -எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45செந்திகுமார், சிறுத்தையையும், காவலனையும் ஓவெர் எஸ்டிமேட் பண்ணிவிட்டார். ஆடுகளம் மதிப்பெண்கள் பர்ஃபெக்ட்!

ஆனால் என் பார்வையில் சி பி கணிப்பு கொஞ்சம் ஏற்றுக்கொள்ளமுடியாததுதான். ஏன் என்றால் ரிலேட்டிவாக அவர் கணிப்பு தவறாகிவிட்டது,

காவலன் > ஆடுகளம் > சிறுத்தை என்பதை யாருமே ஏற்றுக்கொள்ளமுடியாது.

விகடன் மற்றும் உலகமே ஏற்றுக்கொண்டது ஆடுகளம்> காவலன் > சிறுத்தை என்பதுதான்!

ஆடுகளம் விகடன் மதிப்பெண்களை சரியாக ப்ரிடிக்ட் செய்ததுக்கும் (44, அட்ரா சக்க!!), இவ்ளோ தைரியமாக ஆனந்தவிகடன் மதிப்பெண்களை எஸ்டிமேட் செய்ததுக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்!

Saturday, January 22, 2011

விஜயை எம் ஜி ஆர் ஆக்கும் அவர் அப்பா!

விஜய்க்கு என்னப்பா வயசு? அவர் அரசியலில் நுழையப்போவதை அவரால் வாயைத் திறந்து சொல்ல முடியாதா? ஏன் அவர் அப்பாவே விஜய் வாயா செயல் படுகிறார். ஒரு வேளை விஜய் இன்னும் மைனரா? இன்னும் வயசுக்கு வரலையா?

காவலன் பிரச்சினைக்கு யார் யார் காரணமோ? என்று யாரும் குழம்பாதீங்க! ஆளுங்கட்சிதான் காவலன் ரிலீஸ்க்கு தடங்கள் கொடுத்ததாக தெளிவாக இந்த ஹிந்துப் பேட்டியில் சொல்லி இருக்காரு அவரு அப்பா!

“Vijay certain to enter politics”
CHENNAI, January 21, 2011
B. Kolappan

While not ruling out the entry of actor Vijay into politics at some point in the future, his director-father S.A. Chandrasekar said stumbling blocks were being created in the actor's career by a section that is opposed to film stars entering politics.

“It is not just Vijay. The section does not want anyone from the film world emerge as a powerful hero and take a plunge into politics. They fear that such a move will upset their future in politics. People know who they are,” Mr. Chandrasekar told The Hindu on Friday.

“I could understand if they target a story with a political theme. Why ‘Kavalan,' a love story? There are no punch dialogues packed with political messages. This clearly shows that they want to ensure he does not have a successful film career,” he said, explaining that even after the release of the film, fans were not allowed to erect cut-outs and posters.

“A channel went one step further and runs a scroll saying that the film was not released. I could understand fears about the growth of MGR. Why Vijay? He is no match for MGR. But are you taking Vijay to the heights MGR?” he asked.

Mr. Chandrasekar, who had made films with strong political messages such as ‘Paalaivana Cholai,' ‘Sattam Oru Iruttarai' and ‘Naan Sikappu Manithan,' said though Mr. Vijay did not have immediate plans about entering politics, he would certainly take a plunge when he reached forty.

“There is no wavering on our political plans. He is very eager to serve society that stands by him. He can fulfil his aspirations not by remaining just a film personality. A political career is a must,” he said.

Mr. Chandrasekar said though he and Mr. Vijay were resisting the pressure from fans to launch a political party and were advising them to concentrate on building a dynamic organisation in the next four years, they were being pushed into the fray.

“Vijay remains an onlooker. But I fear that they are pushing him into the ring,” he added. Denying reports that he met AIADMK general secretary Jayalalithaa to seek her support for the release of ‘Kaavalan,' Mr. Chandrasekar said it was his concern for society rampant with poverty and violence that led to his meeting with the AIADMK leader.

“I fear that a situation will come that you will be targeted if you have Rs. 1000 in your pocket. The newspapers are full of news about violent incidents and murders. We must put an end to this,” he said.

He also said that he would campaign in the election along with the Ilaya Thalapathi Makkal Iyakkam, a movement launched as a spring board for the actor's political career. Asked whether his next film ‘Sattapadi Kuttram' would have a message about the actor's political plunge, he said, “I am only trying to reach out to the people.”


இந்த பேட்டியை கவனமா வாசிச்சா சில விசயங்கள் தெளிவாத் தெரியும். முக்கியமா எஸ் எ சந்திரசேகரா செய்யும் அரசியல் மற்றும் அரசியல் கனவுகள்!


* காவலன் படம் ரிலீஸ் ஆன பிறகும் விஜயும் அவர் அப்பாவும் இன்னும் நிம்மதியடையவில்லை. படம் சரியாப் போகலையா?

* தன் பெரிய வாயை வச்சு எஸ் ஏ சந்திரசேகரா, தன் மகன் விஜயை எம் ஜி ஆர் அளவுக்கு உயர்த்தி அழகு பார்க்குறார். இது இவரோட அரசியல் தந்திரம்!

* இந்த ஆர்ட்டிக்கிள் எழுதிய கோலப்பனுக்கு பாலைவனச்சோலைக்கும், எஸ் ஏ சி க்கும் சம்மந்தம் இல்லைனு தெரியாது போல.

* 30 வயதுக்கு மேலான விஜய், தன் கருத்தை சொல்லமுடியாத அளவுக்கு ஒரு வீணாப்போனவர். என்ன எழவுக்கு விஜயின் அரசியல் கனவை அவங்க அப்பாவே சொல்லிக்கிட்டு திரிகிறார்? இவர் அரசியல் வந்து என்னத்தை கிழிக்கப்போறாரோ தெரியலை!

* இவரு காவலன் ரிலீஸ் சம்மந்தமா ஜெ ஜெ யை மீட் பண்ணலையாம். ஏழைகளுக்கு எப்படி உதவுறது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை எப்படி அமல்ப்படுத்துறதுனு பேசப் போனாராம்! என்னப்பா இப்படி புளுகிறாரு இந்த ஆளு! அல்ரெடி அரசியல்வாதியா ஆயிட்டாரா !!!

* என் கணக்குப்படி, ஜெ ஜெ க்கு இவர் தன் மகனை எம் ஜி ஆர் லெவெலுக்கு உயர்த்தும் பாலிட்டிக்ஸ் எரிச்சலைக் கிளப்பும்! ஜெ ஜெயும் விஜயை நிச்சயம் இந்த ஒரு வரிக்காகவே வளரவிடப்போவதில்லை!

Friday, January 21, 2011

ரோட் டு சூப்பர் பவ்ல்!

இதுவரைக்கும் என்னுடைய ப்ரிடிக்ஷன் எல்லாம் 50% மேலே சரியாயில்லை! நியூ இங்லெண்ட் தோற்பார்கள்னு நெனைக்கவே இல்லை! ஸ்டீலர்ஸ் "கம்பேக்" கும் எதிர்பார்க்கவில்லை! சரி, இந்த வாரம் என்னுடைய பிக்,

NFC championship game!


Packers @ BearsI pick Packers as Winners!


-----------------------

AFC championship game!


Jets @ Steelers
I pick Steelers as Winners!ரெண்டு "கேம்" களுமே ஞாயிறு அன்றுதான். அதனால் திங்களன்று என்ன நடந்து இருக்குனு பார்க்கலாம்.

யாராவது என் எஃப் எல் தொடர்ந்து ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தால், உங்க ப்ரிடிக்ஷ்னை இங்கே பகிர்ந்துகொள்ளவும்! நன்றி!

Thursday, January 20, 2011

சோ ராமசாமிக்கு அப்புறம் துக்ளக் அழியுமா?

துக்ளக் பத்திரிக்கையை ஆரம்பிச்சு, 41 வருடமாக நடத்தி வருவது நம்ம சோ ராமசாமி அவர்கள்! இந்த பத்திரிக்கை இப்போ, 77,000 வீக்லி சர்க்குளேசன் இருக்கதா சொல்லப்படுகிறது. இன்னைக்கு வரை இந்தப் பத்திரிக்கைக்கு எடிட்டர் நம்ம "சோ"தான்னு நெனைக்கிறேன்.

தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியல்ல கரப்ஸன் இல்லாமல் என்னைக்குமே இல்லை! ஸ்பெக்ட்ரம், ஃபோஃபோர்ஸ், சொத்துவழக்கு அது இதுனு காலங்காலமா வந்துகொண்டேதான் இருக்கு. மெயினா ஆளுங்கச்சி செய்யும் ஊழல்களை வச்சும், பார்ப்பணர்கள் மற்றும் இந்துக்கள் பெருமை பேசியும் இந்தப் பத்திரிக்கை "துக்ளக்" காலங்காலமா 'பிழைப்பு" நடத்துகிறது.

கலைஞருக்கு அப்புறம் தி மு க என்ன ஆகும்? னு கேள்விகள் எழுகின்றன. பலரும் பலவிதமாக பேசுறாங்க எழுதுறாங்க. அதேபோல் சிந்தனையில், "சோ"க்கு பிறகு யாரு துக்ளக் எடிட்டராவாங்க? துகளக் மேலும் வளருமா? இல்லை சறுக்கி கடைசியில் அழியுமா? என்கிற கேள்வி என்னுள் எழுந்தது.

துக்ளக்னா சோ தான் என்றுதான் பலரும் நம்புறாங்க. அப்போ "சோ" க்கு அப்புறம் துக்ளக் என்ன ஆகும்? இதைவிட நல்லா நடத்தப்படுமா? யார் அந்த எடிட்டரா வரப்போறவர்? யாருக்காவது இதுக்கு பதில் தெரியுமா? புதுசா வர்ற எடிட்டரும் ஒரு பார்ப்பணராகத்தான் இருப்பாரா? "எங்கே பிராமணன்"னு தொடர்ந்து அவரும் தேடுவாரா? இல்லைனா ஏதாவது அப்துல் காதர், ஜான் அல்லது, கருணாநிதி, குப்பன், சுப்பன் னு பேர் வச்ச யாரும் எடிட்டராக வர வாய்ப்பிருக்கா?

கல்கி ஒரு காலத்தில் நல்ல சர்க்குலேசன் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னைக்கு? கல்கி கிருஷ்ண மூர்த்தி காலத்துக்குப் பிறகு மிகப்பெரிய சறுக்கல், சர்குலேசன் பாதிப்பு அது இதுனு ஆனதாக சொல்றாங்க.

துக்ளக் கின் அடுத்த எடிட்டர் யாருனு சொன்னா நல்லாயிருக்கும். யாருக்காவது தெரியுமா சார்/மேடம்? நன்றி.

Wednesday, January 19, 2011

விஜய்யும் ஜெயாவை வணங்கி வழிபடப்போறாராம்!

காவலன கலக்ஷனில் வரலாறு படைக்கிதோ இல்லையோ, "இந்தப் பிரச்சினையில் கடைசியில் தன் ப்ரெஸ்டிஜ் அது இதுனு பொலம்பி தன் பணத்தைப்போட்டு ரிலீஸ்ப்பண்ணி விஜய் ஒரு வரலாறு படைத்துள்ளார்!" என்பதென்னவோ உண்மைதான். கடைசியில் எப்படியோ படம் வெளியே வந்தது எல்லாருக்கும் சந்தோசம்தான். படம் பயங்கர வெற்றியடைந்தால்தான் இந்த சாதனை பெருசாகப் பேசப்படும்! இல்லைனா.. கஷ்டம்தான்! எப்படியோ காவலன் நல்லா ஓடி வெற்றிபெற்றால் சரிதான்!

இதற்கிடையில் விஜய் இன்று அம்மையாரை சந்திக்கப் போறாராம்!

கொஞ்சநாள் முன்னால அம்மாவை, இவரோட அப்பா போய் தரிசனம் பண்ணிவந்தார். அதுக்கப்புறம் காவலனுக்கு இருந்த பிரச்சினை பல மடங்காக பெருசாகி பொங்கலுக்காவது வெளிவருமா? னு கேள்விக்குறில வந்து நின்னது.

இப்போ மகன் அம்மவை தர்சிக்கப் போறாரு போல! இதன் விளைவு என்ன ஆகப்போகுதோ! நேத்து அம்மாவுக்கு ஆதரவுனு சொன்ன சீமான் இப்போ என்னென்னவோ உளறுகிறார். அம்மாவால எல்லாம் இப்போ விஜய்க்கு ஒண்ணும் பண்ண முடியாது. இவர் அம்மாவுக்கு ஆதரவுனு இந்த சூழ்நிலையில் சொன்னாலும் இவர் அரசியல் கனவு அம்புட்டுத்தான்!

விஜய், என்னவோ சினிமால வில்லன்களை காலி பண்றதுபோல தற்போது உள்ள பிரச்சினைகளை அனுகுறார்போல மனுஷன். இப்படி அவசரப்படாமல் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது.

இதற்கிடையில், இவர் முடியாதுனு சொன்ன 3-இடியட்ஸ் படத்துல இப்போ சூர்யாவை புக் பண்ணியிர்க்கார் ஷங்கர்னு சொல்றாங்க!

விஜய்க்கு இப்போ தேவை பொறுமை. காவலன், நல்லமுறையில் வெற்றியடைய இவர் எல்லாக் கடவுள்களையும் கும்பிட்டுக்கொண்டு இருப்பதுதான் அவருக்கு நல்லது.

அம்மா தரிசனம் தேவையே இல்லாத ஒண்ணு! அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.

அவருக்கு ரொம்ப டென்ஷனாயிருக்குனா, ஏதாவது யோகா அல்லது மெடிட்டேஷன் பண்ணச்சொல்லுங்கப்பா அவரோட நலம்விரும்பிகள்!

Tuesday, January 18, 2011

பொங்கல் படங்கள்-எதிர்பார்த்ததும் நடந்ததும்!

என்னுடைய கணிப்பின்படி பொங்கல் படங்களில் நான் எதிர் பார்த்தது,

சிறுத்தை > காவலன்> ஆடுகளம் > இளைஞன்.

----------------

ஆனால் உண்மையில் நடந்தது என்னனா..விமர்சகர்கள் மற்றும் க்ரிடிக்ஸ் பார்வையில்,

ஆடுகளம் (****) > காவலன் (***) > சிறுத்தை (**) > இளைஞன் (*)

விமர்சகர்களின் பார்வையில் ஆடுகளம்தான் வின்னர்! சன் டி வி ப்ரமோசன் என்பதால் இது கிடையாது. பொதுவாக எல்லா க்ரிடிக்கும் இப்படித்தான் உணருகிறார்கள். இதை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்!

-------------------------------------

பாக்ஸ் ஆபிஸை (வசூல்) பொறுத்தவரையில் நடந்தது இதுதான்..

காவலன் > or = ஆடுகளம் > சிறுத்தை >இளைஞன்

நல்ல விசயம் என்னானா ஆடுகளம், காவலன், சிறுத்தை மூன்று படங்களுமே நிச்சயம் தோல்வியைத் தழுவாது. ஆனால் இளைஞன் தேறுவது கஷ்டம்தான் என்று தோன்றுகிறது.

இதில் ஆடுகளம் நிச்சயம் இரண்டாவது இடத்தையாவது கட்டாயம் அடைந்துவிடும்! அப்போ முதல் இடம், காவலனா? இருக்கலாம்.

சிறுத்தை படத்தில் உள்ள மசாலா மக்களைக்கவர்ந்தால், சி செண்டர்களில் சிறுத்தை முதலிடத்தைப் பெற வாய்ப்பிருக்கு!

காவலன் ஒரு ரொமாண்டிக் ஸ்டோரி என்பதால் சி செண்டர்களில் எப்படிப்போகும்னு தெரியலை. நிச்சயம் எல்லா செண்டர்களிலும் ஓரளவுக்கு வெற்றிப்படம்தான் காவலன்.

ஆனால், காவலன், இமாலய வெற்றியடையுமா? னு கேட்டால்.. அதெல்லாம் சந்தேகம்தான்.

ஆடுகளம் எல்லா செண்டர்களிலும் ஆவெரேஜுக்கு மேலே போகும் என்பதால் தனுஸுக்கு பெரிய வெற்றிப்படம்தான். இப்போத்தான் உத்தம புத்திரன் வந்து ஓரளவுக்கு வெற்றியடைந்ததால் தனுஸுக்கு இந்த வெற்றி பெரிய வெற்றி!

காவலன், ஆடுகளம், சிறுத்தை மூன்றுமே விஜய், தனுஷ் மற்றும் கார்த்திக்கு ஓரளவுக்கு நல்ல முடிவைத்தான் தந்து இருக்கு!
கலைஞரின் இளைஞன் எதிர்பார்த்தபடியே விமர்சகர்களையோ மக்களையோ கவரவில்லை என்பதுதான் நிதர்சனம்!

Sunday, January 16, 2011

சீமான் அண்ணாச்சியாம்ப்பா?!

சமீபத்தில் சீமான் ஜெயா பின்னால போக ஆரம்பிச்சதும், மாவீரர் சீமான் காமெடியானாகிவிட்டார்னு ஒரு பதிவு போட்டேன்.

பதிவுலகில் வினவு எழுதிய ஒரு பழய பதிவுப்படி சீமானுக்கு “முக்குலத்தோர்” பட்டம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக பதிவுலகில் சீமான் ராமநாதபுரம் ஏரியால இருந்துவந்த முக்குலத்தோர், அதேன் அவரு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை தொழுகிறார் என்றெல்லாம் பலரும் பலவிதமாக ஒரு யூகத்தில் ஓட்டிக்கிட்டு இருக்கும் இந்த நேரத்தில், அண்ணன் ராவணன் ஒரு வில்லங்கமான பின்னூட்டத்தில், சீமான், கனிமொழிநாடாருக்கு சொந்தமா? நு கொளுத்திப்போட்டாரு. நான் என்னமோ அண்ணன் ராவணன் ஏதோ தெரியாமல் சொல்றாருனு நெனச்சு, ஜெஜெ -ஜால்ரா சீமான் வழக்கம்போல அதிமுக விரும்பிகளான முக்குலத்தோர் வகைதான் என்று நினைத்தாலும், சரி கொஞ்சம் ஆராய்ந்து சீமான் கம்யுனிட்டி சான்றிதழை இணையதளக் குப்பையில் தேடுவோமேனு தேடிப்பார்தால்..

மாவீரராயிருந்து சமீபத்தில் அரசியல் காமெடியானாக மாறியிருக்கும் சீமான் “அண்ணாச்சி” என்று சொல்கிறது ஒரு website இந்த ஆதாரமில்லாத “சாதிச் சான்றிதழை” பதிவுலகில் பகிர்ந்து கொள்ளனும்னுதான் இந்தப்பதிவு!

“வினவு” மற்றும் பலர் கணக்குப்படி, ப பொன் மு தேவரை எவன் ஒருவன் முன்னோடியா நெனைக்கிறனோ அவன் “முக்குலத்தோர்” சமூகத்தை சேர்ந்தவன்.

ஆனால் நம்ம “நடிகர்” சீமான், ப பொன் தேவரை வணங்கி வினவு மற்றும் பலர் கணக்கை தப்புக்கணக்காகிவிட்டாரு போல இருக்கு! அம்புட்டுத்தேன்!

Friday, January 14, 2011

தமிழ்ல சொல்லவா? கடலை கார்னர் 67 (18+ ஒன்லி)

கடலைக்கார்னர்-66 (இங்கே க்ளிக் செய்யவும்)

"பிருந்த்!"

"என்ன வீட்டுக்கு வந்த உடனே கால் பண்ணுறீங்களா?"

"எதிர்பார்த்தியா? ஏன் ஒரு மாதிரி "மூடி"யா இருக்க?"

"ஒண்ணும் இல்லையே? சும்மாதான்.. "

"காலையிலே காண்டீன்ல வச்சு என்னை திட்டல?"

"ஆமா. அதுக்கென்ன?"

"அதுக்கென்னவா?"

"உங்களைத் திட்டனும்போல இருந்துச்சு, திட்டினேன்.

"எதுக்குடித் திட்டின?"

"ஆமா, அவகிட்ட எதுக்கு நம்ம பெட்ரூம் விசயம் எல்லாம் சொல்றீங்க?"

"நீ அவட்ட ஒண்ணுமே சொல்லவேயில்லையா?"

"இல்லையே."

"ஒண்ணுமே?"

"சும்மா, வீக் எண்ட் நல்லாப் போச்சுனு சொன்னேன். அவ்ளோதான்."

"ரியல்லி?"

"ஆமா."

"நான் மட்டும் என்னத்த பெருசா சொல்லீட்டேன்?"

"என்ன சொன்னீங்கனு சொல்லுங்க"

"வீக் எண்ட் உன்னோட கேரம் ஆடினேன்னு சொன்னேன். அவ தப்பா புரிஞ்சிக்கிட்டா.. என்னை என்ன பண்ணச்சொல்ற?"

"தப்பானா? சரியாவா?"

"அப்படினா?"

"அதான் நெஜம்மாவே என்ன செய்தோம்னு புரிஞ்சுக்கிட்டாளா?"

"அவளுக்கு இதைத்தவிர வேற என்ன யோசிக்க முடியும்? இந்த சப்ஜெக்ட்லதான் அவ செம ஸ்ட்ராங் ஆச்சே. டக்குனு பிடிச்சிக்கிட்டாள்"

"அப்புறம்?"

"அவகிட்ட பேசின எல்லாத்தையும் ஒரு வரிவிடாமல் இப்போ உன்னிடம் சொல்லனுமா?"

"ஆமா."

"சொல்ல முடியாதுன்னா? என்ன பண்ணுவ?"

"சொல்லுங்க டார்லிங், ப்ளீஸ்?"

"திடீர்னு என்ன டார்லிங்?"

"நீங்க என் டார்லிங் இல்லையா?"

"காலையிலே "பாஸ்டட்"னு திட்டின. இப்போ ஈவனிங் ஃபோன்ல "டார்லிங்"? ஏய் நீ அதே பிருந்தாதானே?"

"இல்லை ஸ்டெய்ஸி இது!"

"ஆமா, நான் வரும்போது ஏன் எழுந்து ஓடின? அப்புறம் திரும்ப வந்த?"

"உங்களைப் பார்க்க ஒரு மாதிரி இருந்தது?"

"சரி, அப்புறம் எதுக்கு மறுபடியும் திரும்பி வந்த?"

"அவகிட்ட வீக் எண்ட் செஞ்ச எல்லாத்தையும் சொல்லிடுவீங்களோனு பயம் வந்துருச்சு. அவட்ட என்ன பேசுறீங்கனு கேக்கனும்போல இருந்துச்சு. ஒண்ணும் ஓடல.. அதான்.."

"அவகிட்ட சொல்லி?"

"அவளையும் செட்யூஸ்ப் பண்ணி..?"

"ஆமா, நான் இருக்க அழகுக்கு அழகான பொண்ணுங்க எல்லாம் என்னைப் பார்த்து மயங்கி மயங்கி விழுறாங்க பாரு! ஏண்டி நீ வேற!"

"அவளுக்கு உங்களை ரொம்பப்பிடிக்கும்னு எனக்குத் தெரியும்."

"அதனால, என்னை இப்போவே பெட்ரூம் கூட்டிப்போங்க னு நிப்பாளாக்கும்?"

"அப்படி வேற ஒரு ஆசையா?"

"நீதானே சொன்ன அவளுக்கு என்னைப் பிடிக்கும்னு?"

"சரி என்ன பேசினீங்கனு சொல்லுங்க."

"உன்னோட வீக் எண்ட்ல டைம் ஸ்பெண்ட் பண்ணினேன்னு சொன்னேன்.. உடனே" டிட் யு ஸ்லீப் வித் பிருந்தா?" னு கேக்கிறாள். என்ன சொல்லச் சொல்ற?"

"என்ன சொன்னீங்கனு சொல்லுங்க?"

"இல்லைனு பொய் சொல்லி இருக்கலாம்தான். ஆனால் ஒரு நன்மையைக் கருதி ஆமாங்கிற மாதிரி சொன்னேன்."

"அதோட விட்டாளா?"

"இல்லையே. நான் பூசி மொளுகுறதைப்பார்த்து பச்சையா கேக்கிறா! என்ன செஞ்ச அவளைனு!"

"பச்சையானா? எப்படி?"

"தமிழ்ல சொல்லவா?"

"சொல்லுங்க.."

"பச்சையா, தமிழ்ல சொன்னா ரொம்ப மோசமா இருக்கும்.."

"சரி என்னனு இங்லீஸ்லயே சொல்லுங்க. எனக்கு அதைக் கேக்க ஆசையா இருக்கு."

"டிட் யு ஃபக் ஹெர்?"னு கேட்டாள். போதுமா?"

"ஹா ஹா ஹா. நெஜம்மாவா!!"

"ஆமா"

"ஐ லவ் டு ஹியர் திஸ் டார்லிங்!"

"ஏன்?"

"ரொம்ப "கிக்"கா இருக்கு!"

"ஜீசஸ்! உனக்கு வெட்கம் அது இதுனு சொல்லுவாங்களே அதெல்லாம் இல்லையா?"

"உங்ககிட்ட எனக்கென்ன வெட்கம், டார்லிங்? சரி, என்னை என்ன, எப்படிச் செஞ்சீங்கனு சொன்னீங்களா?"

"சொல்லலாம்னுதான் நெனச்சேன். ஆனா அவளே இப்போ பாய்ஃப்ரெண்டு இல்லாமல் இருக்கா.. எதுக்குனு விட்டுட்டேன்."

"சரி, என்ன கேட்டாள்னு சொல்லுங்க."

"அதா..பிருந்தா "பெட்"ல எப்படினு கேக்கிறா?"

"ஹா ஹா ஹா, என்ன சொன்னீங்க?"

"அவகிட்டயே கேட்டுக்கோனு சொல்லீட்டேன்."

"அவளுக்கு எதுக்காம் இதெல்லாம்?"

"எனக்கு பொண்ணுங்க மனசு பத்தியெல்லாம் தெரியாதுப்பா."

"வேற என்ன கேட்டாள்?"

"அவ்ளோதான்."

"சரி என்னதான் சொன்னீங்க?"

"எதுக்கு?"

"நான் "பெட்"ல எப்படினு சொன்னீங்க?"

"அதுகெல்லாம் ஒண்ணும் பதில் சொல்லல.."

"கொஞ்சம் நல்லா சொல்ல வேண்டியதுதானே?"

"நல்லானா?"

"அதான்.. எப்படி நல்லானு."

"காட் ஃபாதர் பார்த்து இருக்கியா?"

"ஏன்?"

"அதுல ஒரு சீன் வரும்.."

"இழுக்காமல் சொல்லுங்க."

"ரொம்ப மோசமா இருக்கும்.."

"சொல்லுங்க டார்லிங்."

"பிருந்த்! ஐ மிஸ் யு!"

"மீ டூ!"

"இப்படி மிஸ் பண்றது நல்லாயில்லையா?"

"இல்லை!"

"ஐ லவ் மிஸ்ஸிங் யு டூ!"

"அபப்டினா?"

"இப்போ ஃபோன்ல பேசினதை நேரிடையாப் பேச முடியாது!'

"ஏன்?"

"பிகாஸ் யு ஆர் எக்ஸ்ட்ரீம்லி செக்ஸி! இட் இஸ் ஹார்ட் வென் யு ஆர் அரவ்ண்ட் மி"

"சம்டைம்ஸ் ஐ ஃபைண்ட் ஹார்ட் டு அண்டெர்ஸ்டாண்ட் யு டார்லிங்!"

"லவ் யு ஸ்வீட் ஹார்ட்!"

"யு மேக் மி க்ரை!"

"சாரிடா"

-தொடரும்

Thursday, January 13, 2011

மாவீரன் சீமான் காமெடியன் ஆனார்!

ஈழத்தமிழர்களுக்காக உயிரையே துச்சமாக மதித்துப் போராடிய மறத்தமிழன் சீமான் இன்னைக்கு ஜெயலலிதாவைத் தலைவியாக ஏற்றுக்கொண்டார்! "கருணாநிதி, ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்ததெல்லாம் பெருசு இல்லை, இப்போ புலி சீமான் எலியானது தமிழர்களுக்கெல்லாம் செய்த பெருந்துரோகம்!" என்கிறார்கள் திராவிடக் கண்மணிகள் பலர்!

கருணாநிதியை எதிர்க்கனுமா? தப்பே இல்லை!

தனிக் கட்சி ஆரம்பிச்சு போராடனுமா? தப்பே இல்லை!

ஆனால் ஜெயலலிதா முந்தானைக்கு பின்னால நின்னுக்கிட்டுத்தான் அதை செய்யனுமா? அதுக்கு அவசியமே இல்லையே?!

ஆமா இவருக்கு இனிமேல் வீரன் பட்டம்லாம் எதுக்கு? காமெடியன் பட்டம்தான் சரி!

மாவீரன் சீமான், மறத்தமிழன் சீமான் என்கிற பட்டத்தை எல்லாம் தூக்கி எறிங்கப்பா! இனிமேல் நம்ம சீமான் இன்னொரு அரசியல் காமெடியன்தான்.

தினக்குரல்ல இருந்து வெட்டி ஒட்டியது இது!

நான் சிறையில் இருந்தபோது விடுதலையாக வேண்டும் என்று மனப்பூர்வமாக வைகோ அறிக்கை வெளியிட்டார். அதைப்போல நான் விடுதலை செய்யப்பட்டேன். அவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவன். வருகிற தேர்தலில் காங்கிரஸையும் அதன் கூட்டணிக் கட்சியையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற இலட்சிய வெறியோடு பணியாற்றுவோம்.

வைகோ தேசிய அரசியலில் பல வருடங்கள் இருந்துவிட்டார். மாநில அரசியலுக்கு அவர் வர வேண்டும். எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் செல்ல வேண்டும். அங்கு தமிழர்கள் ஆதரவுக்குரல் ஒலிக்க வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தினேன். யோசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். யோசிப்பதற்கு எதுவுமில்லை. இந்த முறை எப்படியாவது அவர் எம்.எல்.ஏ.தொகுதியில் போட்டியிட வேண்டும்.

கடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்குப்போடச் சொன்னீர்கள். இந்தத் தேர்தலிலும் அவ்வாறு கேட்பீர்களா என்ற கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில்;

இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கடந்த தேர்தலில் சொன்னேன். காங்கிரஸுக்கு எதிராக களத்தில் நிற்கும் பெரிய கட்சி அ.தி.மு.க. காங்கிரஸை வீழ்த்த இரட்டை இலைக்கு ஆதரவு அளியுங்கள் என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்வேன். இதைக்கூடச் சொல்வதற்கு தைரியம் இல்லை என்றால் நான் எப்படி போராளியாக முடியும். யாருக்கு வேண்டுமானாலும் வாக்குப் போடுங்கள் என்று குடு குடுப்பக்காரன் போல் நான் ஜோசியம் சொல்லமாட்டேன். யார் வர வேண்டும் என்பதல்ல. யார் வரக்கூடாது என்பதுதான் எங்கள் குறி என்றார் அவர்.

முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டு உங்களால் வெற்றிபெற முடியுமா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்;

காமராஜரை சீனிவாசன் தோற்கடிக்கவில்லையா? அதேபோல் சீமானால் தோற்கடிக்க முடியாதா? அது வரலாற்றில் தவறு. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்போது பார்ப்போம் என்றார் சீமான்.

விருதுநகரல காமராசரை பெ. சீனிவாசன் தோற்கடித்தாராம், நம்ம காமெடியன் சீமான் கலைஞர் கருணாநிதியை சென்னையிலே தோற்க்கடிக்கப்போறாராம்! LOL

என்னைப்பொறுத்தவரையில், Seeman has committed "political suicide" by kissing the bottom of JJ! இதுக்குமேலே என்னத்தை வள வளனு சொல்லிக்கிட்டு..

Wednesday, January 12, 2011

பொங்கலுக்கு காவலன்! இல்லை, சந்தேகமாயிருக்கு!


என்னப்பா நடக்குது விஜய் படங்களுக்கு? நல்லா ஓடிக்கிட்டு இருந்த சுறா வை பாதியில் சிங்கத்தைவிட்டு காலிபண்ணியதா பல குற்றச்சாட்டுகள் வந்தது. அதைத் தொடர்ந்து சன் குழுமத்துக்கும் விஜய்க்கும் பல பிரச்சினைகள் இருப்பதா சொல்றாங்க. அது உண்மையாகும் வகையில் இடையில் எஸ் எ சந்திரசேகரா "அம்மா"வைப்போயி சந்திச்சு ஆசிர்வாதம் வாங்கி வந்து இருக்கார். அதனாலயோ என்னவோ இப்போ காவலன் ரிலீஸுக்கு ஏகப்பட்ட பிரச்சினையா இருக்கு போல.

அம்மா ஆட்சிக்கு வந்தாலும் அதுக்குள்ள காவலன் தலையெழுத்து முடிஞ்சிரும். இந்த எழவெல்லாம் விஜய் அப்பாவுடைய அரசியல் கனவால் (இல்லை பகல் கனவால்) வந்தவைதான் என்பது என் தியரி. சில வருடங்கள் முன்னால் ரஜினிக்கடுத்து விஜய்தான்னு சினிமாவில் கொடிகட்டி பறந்த விஜய்க்கு இன்னைக்கு சோதனை மேல் சோதனையா இருக்கு! இவரே வம்பை விலை கொடுத்து வாங்கிவந்து வச்சு அழகு பார்க்கிறாரா? இல்லை விஜய் உப்பு விக்கபோனால் மழை பெய்யுதா?

ஆமா, என்னவோ அம்மாவுக்கு விஜய் முதல்வராகனும்னு ரொம்ப ஆசைங்கிற மாதிரி எஸ் எ சந்திரசேகரா பகல்க்கனவு காண்கிறது இருக்கு. சினிமாவும் அரசியலும் ப்ளண்ட் ஆகியிருக்க இந்த சூழலில் இளம் நடிகர் விஜய் பேசாமல் நடிப்புத் தொழிலை மட்டும் கொஞ்சம் கவனாமாகப் பார்ப்பது நல்லது- இதை நான் ஏற்கனவே 10 முறை சொல்லியாச்சு!

பொங்கல் படங்களைப் பார்ப்போம்

1) காவலன் (ரிலீஸ் சந்தேகம் என்கிறார்கள் இந்த நிமிடம் வரை)

விஜய்-அசின் ஜோடி எனக்கு கொஞ்சம் போர் அடிச்சு விட்டது. அதனால அது ஒண்ணும் எனக்கு ரொம்ப அட்ராக்டிவா தெரியலை. இசை: வித்யாசாகர். பாடல்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. விஜயுடைய ஸ்க்ரீன் ப்ரெசெண்ஸ் என்னைக்குமே ஒரு பெரிய ப்ளஸ்தான். தான் இயக்கிய "பாடிகாட்"னு ஒரு மலையாள வெற்றிப்படத்தை இயக்குனர் சித்திக் ரிமேக் செய்வதால், காவலன் நிச்சயம் ஒரு கமர்ஷியல் ஹிட் தான். பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா பாக்ஸ் ஆஃபிஸில் #1 ஆக நிற்கும் . எப்படியாவது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்னு நம்புவோம்.

2) சிறுத்தை (பொங்கல் ரிலீஸ்)

தனுஷின் ஆடுகளம்தான் #2 ஆக எல்லாரும் ப்ரஜெக்ட் செய்றாங்க! ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஆடுகளம் என் மனதைக்கவரவில்லை! "சிறுத்தை"தான் #2! கார்த்தியோட முதல் டபுள் ஆக்ட் படம்! அதனால் நான் இதை ரொம்ப எதிர்பார்க்கிறேன். டபுள் ஆக்ட் மூவி பொதுவா தோல்வியடைவது அரிது. இதுவும் ஒரு ரிமேக் படம்தான். தெலுகுல ரவிதேஜா நடிச்ச வெற்றிப்படம்தான் இது(te: vikramakudu) . தமன்னா ஹீரோயின். எனக்குப் பிடிக்காத ஒரு ஹீரோயின்தான். இசை: வித்யாசாகர், பாடல்கள் எல்லாம் ஓ கே ரகம். இந்தப்படம் ஸ்லோவாக பிக் அப் ஆகும். அதாவது பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் 3 வதாக வரும். பின்னால் பிக் ஆகும் என்பது என் நம்பிக்கை. நிச்சயம் க்ரிடிக்ஸ் கையில் இந்தப்படத்தின் வெற்றி இருக்கு. விமர்சனங்கள் மோசமா வந்தா கார்த்தி கதி அதோ கதிதான்.

3) ஆடுகளம்

இந்தப்படத்தை தலையில் தூக்கிவச்சுக்கிட்டு ஆடுற இந்த சன் பிக்ச்சர்ஸை என்ன பண்ணலாம்னு எரிச்சலா இருக்கு. இதுல மெட்ராஸ்க்கார தனுஷ் மதுரைக்காரனாகிறாராம். "பொல்லாதவன்" புகழ் வெற்றிமாறன் இயக்கம். இசை: ஜி வி ப்ரகாஷ். ட்ரைலெர்ல "கொண்ணேப்புடுவேன்"னு சொல்றாரு நம்ம மருதை பாஷையிலே! எனக்கு என்னவோ இந்தப்பட ட்ரைலெர் அப்புறம் இந்தக் கோழிச்சண்டையெல்லாம் ரொம்ப இம்ப்ரெஸிவா தெரியலை! ஆனா சன் டிவி கமர்ஷிலை வச்சு எதை வேணா சாதிக்க முடியும்னு நெனச்சுட்டு இருக்காங்க. மக்கள் அந்த நெனப்பிலே மண் அள்ளிப்போட்டா சரிதான். ஆடுகளம் என்னோட ஃபேவரைட் இல்லை. ஆனால் ஹூ நோஸ்? லெட் அஸ் வெயிட் அண்ட் சி!

4) இளைஞன் (கலைஞரின்)

பா விஜய் நல்லாப் பாட்டு எழுதுவாரு. இவர் ஹீரோவா நடிக்கிற இரண்டாவது (?) படம். இன்னைக்கு திரைக்கதை எழுதுவதில் கொடிகட்டிப்பறந்த பாலச்சந்தர், பாக்யராஜ், பாரதிராஜாக்கூட ஒண்ணுமில்லைனு ஆயிட்டாங்க. அந்தக்காலத்தில் பராசக்தில திரைக்கதை வசனத்துல மக்கள் மனதை அள்ளினார் கலைஞர். 70-80ல கொடிகட்டிப் பறந்த பா இயக்குனர்களால் சாதிக்க முடியாதது கலைஞரால் இப்போ முடியுமா? இன்னொரு பெரிய மேட்டர் இதில் என்னனா நம்ம கமெர்ஷியல் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கம்! இசை: இதிலும் வித்யாசாகர்தான்! நான் எதுவும் பெருசா எதிர்பார்க்கவில்லை. ஒரு சுமாரான படமா வந்தாலே அதிசயம்தான்.

என்னுடைய எதிர்பார்ப்பு!

சிறுத்தை > காவலன்> ஆடுகளம் > இளைஞன்.

இது நாலும் ரிலீஸ் ஆவதால் நம்ம மன்மதன் அம்பு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் பயங்கரமா பாதிக்கப்படும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை! :)

Tuesday, January 11, 2011

தொரைநாட்டு மொழியில் கடலை கார்னர் -66 (18 + ஒன்லி)

இது ஆங்கிலத்தில்தான் முழுவதும் இருக்கும். ஆங்கிலம் ஆகாதுனா என்னை எதுவும் திட்டாமல் தயவு செய்து தள்ளிப்போயிடுங்க. ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறதென்பதை முகப்பிலேயே வாசிக்க முடியும்!

முன்னுரை: ஸ்டேஸி (Stacy) ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு கேரக்டரை விட்டு வந்து ரொம்பக்காலம் ஆயிடுச்சு போல! மறுபடியும் அவளை இந்த கடலை கார்னரில் (66) பார்க்கப்போறீங்க! நமம ஸ்டேஸி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை! நீங்க 48 வது கடலைக்கார்னர் போனா பார்க்கலாம்!

ஸ்டெய்ஸியை கடைசியாப் பாத்த கடலைக்கார்னர் பதிவு இதுனு நெனைக்கிறேன் (18+ ஒன்லி)

அமா பாக்கிலாம்! -கடலை கார்னர் (48)


இந்த அத்தியாயத்திற்கு (66) முந்திய கடலைக்கார்னர் பதிவு !

கடலை கார்னர் 65 (18+ ஒன்லி)----------------

"Hi Stacy! What' up?"

"Hi! How was your weekend, Brindha?"

"Oh my God!"

"That good?"

"Yeah! It was SO f'cking good!"

"WHAT?!"

"It was good!" Brindha smiled.

"Since when you talk like this?"

"I dont know. Did I sound too bad?"

"You dont usually talk like this, Brindha, right? It sounded so natural, though"

"Stacy! I have to go now."

"Wait! Kannan is getting here!"

"That is why I have to go! See you later, Stacy! I have to run."

-----------------
"Hi, Kannan!"

"How are you Stacy?"

"Great!"

"Why is she running away from me?"

"Who?"

"Look at her sexy butt when she walks away! That is so sexy or not?"

"Ha ha!! I dont know but she is in a good mood though. How was your weekend, Kannan?"

"It was good. Hey! I spent some time with Brindha! "

"SPENT time?"

"Yeah?"

" Is that an Indian way of saying "you know what"?"

"What you are talking about, Stacy?"

"You slept with Brindha!"

"What do you mean ?"

"Did you f*** her? THAT is what I meant!"

"Jeez!"

"You made me to spell it out for you."

"Are you sexually frustrated these days, Stacy?"

"Yeah. You want to help me out?" LOL. Anyway, How was the sex with Brindha?"

"It was BEAUTIFUL!"

"Really? How is Brindha like? She likes giving or getting?"

"You should ask her!"

"I will."

"I dont remember all those..But I like giving.."

"It was just sex, you know, Kannan?"

"No, it was not just sex! It was BEAUTIFUL sex"

"Are you trying to make me jealous or what?"

"Not really. How can I say? Sex is not a big deal for you guys, right?"

"Yeah but I am a catholic and I believe premarital sex is wrong. LOL"

"Really? Since when?"

"I dont have a boyfriend now. You know that, right?"

"How is it like?"

"What?"

"Just being yourself after having several boyfriends?"

"It is hard but there are some advantages. I dont have to put up with lots of bullshit!"

-----------------------

"Here she is! You are back, Brindha!"

"Yeah."

"Did you know? Brindha's ancestors invented Kamasutra."

"Really?"

"Yeah, She taught me few lessons!"

"Can you teach me too?"

"I did not teach him anything, Stacy!"

"Yes, you did."

"Like what?"

"How to seduce poor men like me"

"I seduced YOU?!"

"How did she do that Kannan?"

"Why dont you tell Stacy?"

"I told her that you are such a selfish bastard! And good at only one thing.."

"She did not tell me anything, Kannan. She just said she had a good time with you!"

"Good at what, Brindha?"

"Cheating poor little girls like me. Seduce them and take advantage of them.."

"Why are you being so gullible? Is that not your fault, little girl?"

"SHUT UP, Kannan!"

"OK"

"Why are you fighting with him, Brindha?"

"I dont know. He is being mean to me for no reason."

"OK, let me go back to work! See you later girls!"

"See you later Kannan!"

"Bye"

- தொடரும்

Monday, January 10, 2011

2010 ஐ எனக்குத் திரும்பிப் பார்க்க இஷ்டமில்லை!

2011 வந்ததும் எல்லாரும் 2010 ஐ திரும்பிப் பார்க்கிறாங்க! எனக்கு 2010 ஐ திரும்பிப் பார்க்க இஷ்டமில்லை! என்னத்தை திரும்பிப் பார்த்து என்னத்தை நெனச்சு பெருமையடைய? அப்படி எதுவும் 2010ல பெருசா சாதிக்கலை! 2011 ல சும்மா முன்னோக்கிப் பார்த்து நடக்க வேண்டியதுதான்.

எத்தனை பாடங்கள்தான் கற்றாலும் சாகிறவரை யாரையாவது நம்பி ஏமாறத்தான் போறோம்! இவன் இப்படினு நெனைக்கலையே? நு ஆச்சர்யப்படப்போறோம். சில நண்பர்களை இழக்கப்போறோம்! சில துரோகிகளை பார்க்கப்போறோம்! தகுயில்லாதவன் வெற்றியடையிறதையும், தகுதியுள்ளவன் தோல்வியைத் தழுவுவதையும் பார்க்கத்தான் போறோம்! எதுக்கு வம்புனு பல முறை வம்பிலிருந்து ஒதுங்கினாலும் ஒரு சில நேரம் வம்பிலே மாட்டத்தான் போறோம்.

சிலர் வயித்தெரிச்சல்ல விழப்போறோம்! நீ என்ன பெரிய இவனா? உன்னைப்பார்த்து வயிறெரிய என்ன இருக்கு? நு கேட்டுப்புடாதீங்க! இந்தப் பாழாப்போன உலகத்திலே பிச்சைக்காரனை பார்த்து வயிறெரியக்கூட பல பிச்சைக்காரனுக இருக்காங்க! நீங்க யாராயிருந்தாலும் உங்க தகுதி எதாயிருந்தாலும் என்னைக்குமே உங்களுக்கு மேலே பல கோடிப்பேரு இருப்பார்கள் உங்களுக்குக்கீழேயும் கோடிப்பேர் இருப்பாங்க! புரியுதா? நீங்க சாதாரணமானவர் மட்டுமில்லை! அசாதாரணமானவரும் கூட!

முன்னால் பார்த்து நடந்து போகையிலேயும் யாருமேலேயாவது மோதத்தான் போறீங்க! கண்ணெல்லாம் நல்லாத் தெரியும்! மனசு பின்னால அலல்து சைட்ல பிராக்குப் பார்க்கும்! மோதினால் என்ன இப்போ? மன்னிப்புக் கேட்டுட்டுப் போயிடலாமா? மன்னிக்க முடியாதுனு அவரு சொன்னா? அபராதம் கட்டிடலாமா? உங்களால கொடுக்க முடியாத அபராதம் கேட்டா? என்னவோ செய்ங்க!

ஆமா நம்ம சரத்குமாரு இந்த 40 வருட டைரக்டர் விழாவில் ரொம்ப சோகமா இருக்க மாதிரி இருந்தாரே ஏன்? உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்னு பாட்டு வேற! என்ன காடாத்தை போராடி என்னத்தை கிழிச்சாரு நு தெரியலை! அந்தம்மா ஏன்ப்பா இப்படி? என்ன பெண் முன்னேற்றம்னா இதுதானா? சரி, எது எப்படியோ, என்னுடைய அறிவுரை என்னனா, அவங்க, தம்பதிகள் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே மேடை ஒரே விழாவில் கலந்துகொள்ளாமல் இருப்பது ரெண்டுபேருக்குமே நல்லது. அவரு அவரை அறிஞ்ச மாதிரி தெரியலை! அதான் சொல்லுறேன். It was really awful to see them embarrassing each other! ரஜினி-லதா, செல்வமணி-ரோஜா எல்லாம் எப்படி நடந்துக்கிட்டாங்க? உனக்கென்னவா? ஆமா எனக்கென்ன?

Saturday, January 8, 2011

பாலா அவர்களே! இதெல்லாம் நல்லாவாயிருக்கு?!

ஊருக்கு உபதேசம் என்பதுதான் உலகம்னு ஆயிப்போச்சு. "நான் கடவுள்" படத்தை ரசிக்க முடியாத சராசரி மனிதர்களில் நானும் ஒருவன். என்னனு தெரியலை இயக்குனர் பாலா மேலே என்றுமே பெரிய மரியாதை இருந்ததில்லை! சரி என்னை விடுங்க, ஹூ கேர்ஸ் வாட் ஐ திங்க்?

ஊனமுற்ற பிச்சைக்காரர்களை வைத்து கலைத்தொண்டு செய்ததாக பலரும் விமர்சிச்சாங்க. பாலாவுக்கு நேஷனல் அவார்ட் ம் கொடுக்கப்பட்டது. அதை வாங்கிக்கொண்டு, பாலாவும் இப்போது அடுத்த படத்திற்காக "கலைத்தொண்டு" செய்ய ஆயத்தமாகிவிட்டார்.

ஆனால், நான் கடவுள் படத்தில் ஊனமுற்றவராக நடித்த, உண்மையிலேயே உடல் ஊனமுற்ற ஒரு கலைஞர் "கிருஷ்ண மூர்த்தி" க்கு கொடுக்க வேண்டிய ரூ 85 ஆயிரம் இன்னும் அவருக்குப் போய்ச் சேரவில்லையாம்!

கீழே வாசிங்க!

‘‘நீங்கள் பாலாவிடம் கேட்டீர்களா?’’ என்று கேட்டோம்.

‘‘பலமுறை இயக்குநர் பாலாவை தொடர்புகொண்டேன். ஆனால், அவருடைய உதவியாளர்கள் மட்டும்தான் என்னிடம் பேசினார்கள். கேட்கும் போதெல்லாம், இன்று தந்துவிடுவோம், நாளை தந்துவிடுவோம் என்ற பதில்தான். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை.

படத்தின் கருவே, என்னை போன்றவர்களும் மனநலம் குன்றியவர்களும் தீய சக்திகளிடம் சிக்கி, படும் அவஸ்தை என்ன என்பதுதான். இதுபோன்ற படம் எடுத்த பாலாவே இப்படி செய்தால், என்ன சொல்வது? ஏற்கெனவே உடலால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்றவர்களின், உள்ளமும் பாதிக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள்’’ என்று கண்ணீர் மல்கினார் கிருஷ்ணமூர்த்தி.

இதுபற்றி ‘நான் கடவுள்’ படத்தின் தயாரிப்பாளர் சிவ சீனிவாசனிடம் பேசினோம். ‘‘நான் ஃபர்ஸ்ட் காப்பி புரட்யூசர்தான். சம்பள விஷயத்தை எல்லாம் பாலாதான் கவனித்துக்கொண்டார்...’’ என்று சொல்லி, பாலாவை நோக்கி கைகாட்டினார்.

பாலாவைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் முடியாததால்... நான் கடவுள் படத்தின் புரொடக்ஷன் மேனேஜரும், இப்போது பாலா இயக்கும், ‘அவன் இவன்’ படத்தின் புரொடக்ஷன் மேனேஜருமான வெங்கட் மாணிக்கத்தைத் தொடர்பு கொண்டோம்.

விவரங்களைக் கேட்டுக்கொண்ட பின்... ‘பிரச்னையை நான் நன்கு அறிவேன். இப்போது நான் மருத்துவமனையில் இருக்கிறேன். பிறகு பேசுங்கள்’ என்றார். பிறகு அவரோடு பேசியபோது, ‘‘இது பற்றியெல்லாம் விளக்கமாக பேச முடியாது’’ என்று முடித்துக் கொண்டார்.

இயக்குனர்கள், நடிகர்கள் எல்லாம் கோடிகளில் சம்பளத்தைக் கேட்டு வாங்கும் இன்றைய திரையுலகில்... கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் சம்பளப் போராட்டத்துக்கு பாலா என்ன பதில் சொல்லப் போகிறார்?

இந்த செய்தியை வாசிக்கும்போது ரொம்ப மனசுக்கு கஷ்டமாயிருந்தது. இந்த மாதிரி ஒரு பிறவியில் ஊனமாகப்பிறந்த ஒரு மனிதருக்கு, மனிதாபிமானம் உள்ள ஒரு மனுஷன் எப்படி கொடுக்கவேண்டிய தொகையை கொடுக்காமல் இருக்க முடியும்?

பாலாவும் ஜெயமோஹனும்தான் இவர்கள் வாழ்க்கையைப்பற்றி சிரத்தையுடன் கவலைப்பட்டு உலகிற்கு எடுத்துக்காட்டியதாக சொல்லப் பட்டது.

ஆனால் இதிலிருந்து என்ன தெரியுது? ஊனமுற்றோர் உணர்ச்சியை எல்லாம் மதிக்கத் தெரிந்தவர் இல்லை பாலா! நான் ஏற்கனவே சொன்னதுபோல் "பிச்சைக்காரர்களை" வைத்து தான் புகழும் பேரும் எப்படி சம்பாரிக்கலாம் என்பது ஒன்றே இவர்கள் குறிக்கோள்!

என்ன ஒரு கேவலமான ஜென்மங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

இதுதான் என்னுடைய கேள்வி!


If you cant afford to pay, why the HELL are you promising this poor guy that you would pay 1 lakh as a salary?

So Rs. 15 000 is not advance? It is the whole salary?

The movie won a national award!!! We are all proud of you!

What a f*cking achievement, Mr. Bala, using a poor guy like Mr. Krishnamoorthy!!!

NOW, Have a GOOD LOOK at Mr. Krishnamoorthy!
‘‘என் அப்பா, அம்மாவுக்கு ஐந்தாவதாக பிறந்தவன் நான். பிறக்கும்போதே இரண்டு கைகளும், இடுப்புக்கு கீழ் உடல் உறுப்புகளும் இல்லாமலே பிறந்தேன். சிறு வயதில் இருந்தே என் அண்ணன் ராஜகோபால்தான் என்னை கரிசனத்துடன் பார்த்துக் கொண்டார். இன்றும் அவருடன்தான் வாழ்ந்து வருகிறேன்.

என் பெற்றோரும் சகோதர, சகோதரிகளும் என்னை தன்னம்பிக்கையுடன் வளர்த்தனர். பள்ளிக்குச் செல்ல முடியாததால், வீட்டில் இருந்தபடியே பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன். சின்ன வயதிலிருந்தே பாட்டு மேல் ஈர்ப்பு... அதனால் பாட்டு கற்றேன். அதன்பிறகு பல கச்சேரிகளில் கலந்துகொண்டு பாடல்கள் பாடி, எனது வருமானத்தை நானே தேடிக்கொண்டேன்.

இப்படிப்பட்ட ஒரு ஆளை ஏமாற்றுகிற கலைத்தொண்டு செய்யும் மேதைகளை எல்லாம் உடனே புடிச்சு உள்ள போடனும்!

இந்த தொடுப்பைப் பாருங்கள்(ORIGINAL SOURCE): கிருஷ்ணமூர்த்தி

Friday, January 7, 2011

திருட்டு வி சி டியின் அமோக வளர்ச்சி! எந்திரனால் நஷ்டமடைந்தவர்கள்!

பதிவுலகில் டிவிடி ல படம் பாருங்கனு ஒருத்தர் சொல்றாரு. திருட்டு டிவிடி/விசிடிதான் படம் வந்து கொஞ்ச நாள்ல கெடைக்குது. அப்போ டி வி டி ல படம் பாருங்கனா அதுக்கு அர்த்தம்? திருட்டு டி வி டி திருட்டு வி சி டி பார்க்கசொல்றாரா? னு அசிங்கமா ஒரு கேள்வி கேட்கத் தோனுது. ஃபிளாப்பாப்போன படத்துக்கு மட்டும்தான் நல்ல டி வி டி உடனே கெடைக்குது.

இன்றைய சூழலில் திருட்டு வி சி டி மக்கள் பார்ப்பதற்கு காரணம் என்ன? "குறைந்த செலவில் பார்க்க முடியுது. சினிமாவுக்காக மக்கள் முட்டாள்த்தனமாக காசு செலவழிக்காமல் திருட்டு வி சி டியில் படம் பார்க்கிறாங்க. " என்று சொல்லலாம். ஆனால் அது முற்றிலும் உண்மை அல்ல!

யு எஸ்ல ஹிந்திப்படங்களுக்கு திருட்டு வி சி டி உடனே கெடைக்கிறது. எஃப் பி ஐ வார்னிங் உடன் தான்! தமிழ்ப்படங்களும் இப்போ எல்லாம் ஒரிஜினல் எல்லாம் கிடைப்பதில்லை! இந்தியா பஸார்லயே காப்பி பண்ணி 2-3 டாலருக்கு விக்கிறாங்க. இதைப்பத்தி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கடைக்காரனிடம் போயி எனக்கு ஒரிஜினல் ரெண்ட் பண்ணுனு சொன்னால் ஒரு மாதிரியாப் பார்க்கிறான். என்னமோ லூசைப் பார்ப்பதுபோல சிரிக்கிறான்.

சிவாஜி, எந்திரன் போன்ற ரஜினி படங்களை மக்கள் திருட்டு வி சி டி யில் பார்ப்பதற்கு காரணம் என்னனு திருட்டு வி சி டியை ஒழிக்கனும்னு அழுகிற ரஜினிக்குத் தெரியுமா? தெரியாதுனா இந்தப் பதிவை அவருக்கு அனுப்புங்கப்பூ!

தென் தமிழ்நாட்ல ரஜினி படம் ரிலீஸ் ஆகும் முதல் நாள் டிக்கட் விலை ரூ 200! கவுண்டர் டிக்கட் விலை ரூ 35 கூட இருக்குமானு தெரியலை. சென்னையிலே சத்யம் திரையரங்கில் விற்கிற விலையைவிட அதிகம்! படப்பெட்டி ரூ 40 லட்சத்திற்கு வாங்கி வந்து போட்ட காசை நான் எடுக்கனும்னு ரூ 200 க்கு ஒரு டிக்கட் விக்க ஆரம்பிக்கும்போது இப்போ எல்லாம் ரஜினி படம் பார்க்கவே மக்கள் யோசிக்கிறாங்க. நிச்சயம் ஒரு குடும்பத்திற்கு ரூ 1000 கொடுத்து படம்பார்க்க எல்லோரும் முன்வருவதில்லை! எனக்குத் தெரிய நெறையப்பேர் திருட்டு வி சி டி லதான் ரஜினி படங்களைப் பார்க்கிறாங்க!

படப்பொட்டி எடுத்தவனும் ரூ 200 ல இருந்து ரூ 100 அப்புறம் ரூ 80 னு 5-6 வாரங்களில் ஆக்கினாலும், அதுக்குள்ள நம்ம ஆளு திருட்டு வி சி டி ல பார்த்து முடிச்சுடுறான். கடைசியில் எந்திரன் படம் எடுத்தவனுக்கும் 10-20 லட்ச ரூபாய் நஷ்டம் என்பதுதான் நிதர்சனம்! எந்திரன் ப்ளாக் பஸ்டர்தான்! ஆனால் நெறையா திரையரங்கு ஓனர்கள் போட்ட காசை எடுக்கவில்லை என்பதுதான் நான் கேள்விப்பட்டது!

அந்தக்காலத்தில் ரஜினி படத்தை வச்சு சம்பாரிச்ச திரையரஙங்கு ஓனர்கள், இப்போ சிவாஜி, எந்திரன் படத்தை எடுத்து நஷ்டமடைந்ததுக்கு யார் காரணம்? அவங்களுடைய பேராசையா? அப்படியும் சொல்லலாம்! மக்களை தியேட்டர் பக்கம் வரவிடாமல் துரத்தியவர்கள் இவர்களே!

* ரூ 30 டிக்க்ட்டை ரூ 200 க்கு ஒரு டிக்கட் என்று விற்ற தியேட்டர் ஓனர்கள்தான் மக்களை திருட்டு விசிடியில் பார்க்க ஊக்குவிக்கிறது !னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு?

ஆக மொத்தத்தில் இப்போலாம் ரஜினி படத்தை வச்சு சம்பாரிச்ச தியேட்டர் முதலாளிகள், இன்றைக்கு வெற்றி பெற்றதாக சொல்லப்படும் ரஜினி படத்தால் நஷ்டமடைகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்!

பாபாவில் கூட நஷ்டமடைந்ததாக பொய் சொல்லி ரஜினியிடம் காசு வாங்கி சம்பாரித்த பலர், இப்போ வெளியே சொல்லாமல் இருக்காங்க! அவங்க கையொப்பமிட்ட அக்ரிமெண்ட் அப்படி!

ஆக, 30 ரூபாய் டிக்கட்டை 200 ரூபாய்க்கு விற்கும் தியேட்டர் ஓனர்களை நஷ்டமடைய செய்யும் திருட்டு வி சி டி பார்க்கிற நம்ம ஏழை மக்களை திட்டனுமா இல்லை பாராட்டனுமா? என்னனு எனக்குத் தெரியலை.

Thursday, January 6, 2011

கதைத்திருட்டு வழக்கு! வெற்றி யாருக்கு சாத்தியம்?

சுஜாதாவின் என் இனிய இயந்திரா தான் இன்று எந்திரனாகி உள்ளது என்றுதான் பலரும் நம்பினோம். எந்திரனில் நிச்சயம் அங்கங்கே சில ஆங்கிலப்படங்களின் தழுவல்களும் இருந்தன என்பதையும் மறுக்கமுடியாது.

இப்போ எந்திரன் திரையிட்டு 100 நாட்களை கடக்கப்போகும் சூழ்நிலையில் "எந்திரன் கதை என்னுடையது" என்று எத்தனை பேர் சொல்லியிகிறார்கள், யாருக்கு வெற்றிவாய்ப்பு சாத்தியம் என்று இன்னொரு முறை பார்ப்போம்!

--------------------------------

1) எழுத்தாளர் தமிழ்நாடன்...


* “”ஜூகிபா” என்ற தனது சிறுகதையை மூலக்கதையாக வைத்து ரஜினி நடித்த ‘எந்திரன்’ படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான ஆரூர் தமிழ்நாடன் புகார் அளித்துள்ளார்.

இந்திய பத்திரிகை பதிவாளர் முன்பு பதிவு செய்யப்பட்டு பதிவு எண் 49612/1990 கொண்ட “”இனிய உதயம்” இதழில் வெளியான காப்புரிமை கொண்ட எனது “”ஜூகிபா” கதையை என்னிடமோ, இனிய உதயம் வெளியீட்டாளரிடமோ எந்த முன் அனுமதியும் பெறாமல் மோசடி செய்து லாபம் சம்பாதிக்கும் கெட்ட உள்நோக்கத்துடன் திரைப்பட இயக்குநர் சங்கர் 1997-98-ல் தான் கற்பனை செய்தது என்று பொய்யாகக் கூறி “”எந்திரன்” திரைப்படத்தை உருவாக்கி அவரே அதன் இயக்குநராகவும் செயல்பட்டு, சன் பிக்சர்ஸும் அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு கூட்டு சதி செய்து “”எந்திரன்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியிட்டு எனது காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர்.


2) தெலுகு எழுத்தாளர் ஒருவர்...

* தெலுகு எழுத்தாளர் மைனாம்பட்டி பாஸ்கர் என்பவர், அவருடைய 1984 ல எழுதிய "புத்தி ஜீவி" என்கிற கதையின் காப்பிதான் இந்த எந்திரன் (ரோபோ) கதை என்கிறாராம். அவரும் சட்டப்படி அனுகுவதாக சொல்லப்பட்டது.


////HYDERABAD: A Telugu writer on Saturday claimed to have served legal notices to `ROBO' film producers for allegedly lifting the story idea from his novel `Buddhi Jeevi'.

According to a release issued here, writer Mynampati Bhaskar claimed that the story of `ROBO' was lifted from his novel, `Buddhi Jeevi', which was written in 1984.

"I have issued legal notices on writer-director Shankar, producer Kalanidhi Maran and production house M/s Sun pictures," Bhaskar added. He also claimed that his novel won the first prize in the science fiction novels' competition conducted by a Telugu weekly.////

source: Times of India

-------------------
எழுத்தாளர்கள் கேட்கும் நஷ்ட ஈடுகள்...


* 1984 ல எழுதிய "புத்தி ஜீவி"யின் காப்பி ரைட்ஸ் வயலேஷனுக்காக நஷ்ட ஈடாக, ஆசிரியர் மைனாம்பட்டி பாஸ்கர் கேட்பது ரூ. 50 லட்சம்

* 1990 ல் வந்த "ஜுகிபா" வின் ஆசிரியர் தமிழ்நாடன் கேட்கும் நஷ்ட ஈடு ரூ. 1 கோடி.

என்னுள் எழும் சில கேள்விகள்...


* இப்போ ஷங்கர் காப்பி அடிச்சார்னே வச்சுக்கிட்டா, யாருடைய கதையைக் காப்பியடிச்சார்?

* ரெண்டு ஆசிரியர்களும் வெற்றிபெற வாய்ப்பிருக்கா?

* "ஜூகிபா" என்கிற கதை, என் கதை "புத்தி ஜீவி" யின் தழுவல்னு மைனாம்பட்டி பாஸ்கர் ஏன் சொல்ல மாட்டேன்கிறார்?

* "ஜூகிபா" வுக்கும் "புத்தி ஜீவி"க்கும் சம்மந்தமே இல்லையா? "ஜூகிபா"வும் "புத்தி ஜீவி" யும் இந்த எழுத்தாளர்கள் இருவருடைய ஒரிஜினல் ஐடியானு இருவரும் ஒத்துக்கிறார்களா? அதெப்படி சாத்தியம்?

*"என் இனிய இயந்திரா" வுக்கும் எந்திரன் கதைக்கும் சம்மந்தமே இல்லையா? படத்தில் சுஜாதாவுக்கு ஷங்கர் க்ரிடிட் கொடுக்காதது இப்போ பெரிய தவறாகிவிட்டதோ?

* ஆமா எந்திரனில் அப்படி என்னப்பா கதை இருக்கு? இத்தனை புத்தகங்கள், சினிமாக்களில் இருந்து திருட?

வெற்றி யாருக்குக்கிடைக்கும்?* சரி, இதில் ஷங்கர் பணபலத்தை வைத்து (சன் நெட் வொர்க் உதவியுடன்) எளிதாக வெல்லலாம். அது நிச்சய்ம சாத்தியம். நீதி, நேர்மை, நியாயம் எனப்தையெல்லாம் கொஞ்சம் ஓரமாவச்சுட்டு , யோசிங்கப்பா.. பணபலம் வைத்து நல்ல வக்கீலை யாரால் வாங்க முடியும்? நிச்சய்ம் சன் டிவி மற்றும் ஷங்கரால் முடியும்..


* அடுத்து, 1984 ல எழுதிய எழுத்தாளர் மைனாம்பட்டி பாஸ்கருக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். தமிழ்நாடன் 1990 லதான் பிரசுரிச்சதால, 1984 லயே எழுதிய பாஸ்கருக்கு இந்த கேஸ் சாதகமாக அமையலாம். மேலும் அவர் கேட்கிற நஷ்ட ஈடு ரூ. 50 லட்சம் தான்.


* "ஜூகிபா" கதையை நான் பார்த்தேன், படித்தேன். நிச்சயம் ஓரளவுக்கு எந்திரன் கதை மாதிரித்தான் இருக்கு. ஆனால்.. 1984 ல தான் எழுதிய கதை என்று சொல்கிற பாஸ்கராலேயே இவருடைய கதையின் ஒரிஜினாலிட்டி கேள்விக் குறியாகிறது . அதனால் தமிழ்நாடன் அவர்களுக்கு வெற்றி வாய்ப்புக் கம்மிதான் என்பது என் எண்ணம்.

நான் இதில் யாரையும் நல்லவர் கெட்டவர்னு சொல்றாப்பிலே இல்லை. என் மேலே கேஸ் இல்லை! அதனால சும்மா தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறேன். அவ்வளவுதான்...

Wednesday, January 5, 2011

கடவுளுக்கு ஹார்ட் அட்டாக் வருமா?

நம்ம கடவுள் சத்ய சாய்பாபா அவர்களைப் பத்தி அப்பப்போ யோசிப்பேன். இவர் மேலே பல குற்றச்சாட்டுக்கள் (நிரூபிக்கப்படாதவைகள்தான்) இருந்தாலும் இன்னும் இவரை வணங்குபவர்கள் கோடிக்கணக்கில் இருக்காங்கனு சொல்றாங்க. எனக்குத் தெரிய நெறையப் படித்தவர்கள் பலர் இவரை கடவுளா வணங்குகிறார்கள். இதில் பல லட்சக்கணக்கான பெண்களும் இவரை கடவுளாக வணங்குகிறாங்க என்பது குறிப்பிடத்தக்கது. என்னிடம் வந்து சில நண்பர்கள் இவரை "தர்ஷிக்க" வர்ச் சொல்லும்போது, "எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை" என்று நழுவிவிடுவது வழக்கம்.

மனுஷனுக்கு பிரச்சினைனு வரும்போது கடவுள் இல்லைனா கஷ்டம்தான். பேசாத கடவுள் எல்லாம் நம்ம மக்களுக்குப் பிடிக்கலை போல இருக்கு. அதான் இப்படி பேசுற, தான் கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லுகிற "கடவுள்" களை உருவாக்கிக்கொண்டு இருக்காங்க நம்ம மக்கள்.

சரி, நம்ம சாய்பாபாவைக் கடவுளுக்கு இணையா சொல்றாங்களே, இவருக்கும் மனிதருக்கு மாதிரி சாதாரண வியாதியெல்லாம் வருமா? னு ஒரு பெரிய கேள்வி என்னுள்எழுந்தது.

கொஞ்சம் ஆராய்ச்சி செய்து தேடி எடுத்தேன்.

* 1963 ல இவருக்கு 4 முறை ஹார்ட் அட்டாக வந்ததாம்.

என்ன இவரெல்லாம் பிறந்ததிலிருந்து ஏதோ ஒரு டயட்டில் இருப்பவர். இவருக்கு ஏன்ப்பா ஹார்ட் அட்டாக்லாம் வருது?

* 1988 - 2003 ல இவருக்கு 3 விபத்துக்கள் நடந்து உள்ளனவாம். இதில் ஏதோ கண் பார்வையும் பாதிக்கப்பட்டதாக சொல்றாங்க.


வயதாகும்போது மனித உடல் பழுதாவது இயற்கை. வயதாக ஆக சிறுநீரகம் வேலை செய்வது குறைய ஆரம்பிக்கும். கொலெஸ்டிரால், சுகர், பி பி எல்லாம் ஒண்ணு பின்னால ஒண்ணு தொத்திக்கிட்டு வரும். இதயத்தில் "க்லாக்" ஆகி, ஹார்ட் அட்டாக் வரும். இதுதான் மனித வாழ்க்கை.

இது எல்லாமே நம்ம "கடவுள்" சாய்பாபாவுக்கும் வந்துகொண்டுதான் இருக்கு.

ஆக மனிதர்களுக்குப் பிறந்து, மனிதனாகவே வாழ்ந்து இறக்கப்போகும் ஒரு சாதாரண மனிதன் தான் இந்த சாய்பாபா! ஆனால் கோடிக்கணக்கான மக்களால் இவர் வாழ்ந்த போது கடவுளாகப் பார்க்கப் பட்டுக்கொண்டுயிருக்கிறார். இன்னும் ஒரு 100 ஆண்டுகள் பிறகு "இந்த நம்பிக்கை" (இவர் கடவுளாக வாழ்ந்த வரலாறு) என்ன ஆகும்னு யோசிக்கவே பயம்மா இருக்கு!

போதாக்குறைக்கு, மக்கள்தான் அறியாமையில் இருக்கானுகனு இவராவது, "நான் கடவுள் எல்லாம் இல்லை, எனக்கும் டெய்லி பசிக்குது. எல்லாம் தேவைப்படுது, வியாதி வருது, நானும் உங்களைப்போல ஒருவந்தான்" னு உண்மையைச் சொல்லலாம். அப்படி உண்மையைச் சொல்லாமல் "தாந்தான் கடவுள் அவதாராம்" அது இதுனு சொல்லி ஊரை ஏமாற்றி வாழும் இவரை எப்படி உண்மையான கடவுளுக்குப் பிடிக்கும்னு தெரியலை. ஒரு வேளை இவர் செத்ததும் நம்ம நிஜக்கடவுள் "சாய்பாபா அவர்கள் தாந்தான் கடவுள் என்று மனிதர்களை நம்பவைத்து ஏமாற்றியதற்காக" இவரை நரகத்துக்கு அனுப்புவாரோ? அனுப்பனும் இல்லையா?

சரி, சாய்பாபா கடவுளா இருந்தால் ஏன்ப்பா ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக்லாம் வருது? ஏன் கண் பார்வையெல்லாம் போகுது? திருந்துங்கப்பா இந்த 2011 வருடத்திலாவது!

Tuesday, January 4, 2011

ஆத்திரம் ஏன் உலகநாயகன் அவர்களே? -அறிவுமதி

ஈழத்தமிழரை காட்டும்போது கமல் கவனமாக இருந்து இருக்கனுமா என்னனு தெரியலை. ஹிந்துத்தவாக்கள் மன்மதன் அம்பு எதிர்ப்பு தெரிவித்தது எல்லாம் பெரிய விசயமில்லை. இப்போ கவிஞர் அறிவுமதி, கமலை கவிதையால் ஒரு கேள்வி கேக்கிறார்.


இரவு.. சத்யம் திரையரங்குஞ்

இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..

கமல் படம்.

மன்மதன் அம்பு.

மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு

வந்து விட்டோ‌மோ‌
என்கிற அளவிற்கு

ஒரே கமலஹாஸன் களும்!

கமல ஹாஸிகளும்!
அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்

பதுங்கிக் கொண்டு

நூல்தனம் காட்டும் அவரை

பரமக்குடி பையன் என்றும்

பெரியாரின் பிள்ளை என்றும்

பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்

இந்த

அம்புஞ்

இராம பக்தர்களின் கைகளிலிருந்து

இராவண திசை நோக்கி

குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று

என்பதை

உணர்ந்து திருந்துதல் நல்லது.

கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்

பெரும்பகுதித் தமிழர்களுக்கு

அறிமுகமானவர்,

நவராத்திரித் தமிழனை

தசாவதாரத்தால்

முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.
இந்த மன்மத அம்புவின்

வாயிலாகஞ்

தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,

தாய்த் தமிழை

இழிவு செய்வதில்

உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை

புகழ் சுஜாதா ஆகியோரைத்

தாண்ட முயற்சி

செய்திருக்கிறார்.
"தமிழ் சாகுமாம்ஞ்

தமிழ் தெருப் பொறுக்குமாம்.
வீடிழந்து, நாடிழந்து,

அக்காள் தங்கைகளின்

வாழ்விழந்துஞ்

ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்றுஞ்

கொத்துக் கொத்தாய்

தம்

சொந்தங்களை

மொத்தமாய்ப் பலியெடுத்த

கொடுமைகளுக்கு

இன்னும் அழுதே முடிக்காத

அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்

இடத்திற்கே போய்..

பனையேறி விழுந்தவரை

மாடு

மிதித்ததைப் போலஞ்

வாடகை வண்டி ஓட்டுகிறவராக

ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..

பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..

கதா பாத்திரமாக்கி..

ஒரு செருப்பாக அன்று..

இரு செருப்பாகவும்

என்று

கெஞ்ச வைத்து..
இறுதியில்

அந்த எங்கள்

ஈழத் தமிழரை

செருப்பால் அடிக்கவும்

ஆசைப்பட்டு ஏதோவோர்

ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள

முயன்றிருக்கிறீர்களே

கமல்!

அது என்ன ஆத்திரம்!
போர்க்குற்றவாளியாகிய அந்தக்

கயவனின் தானோடு ஆடுகிற

சதைதானா உங்களுடையதும்! ஆம்..

சதைதானே உங்களுடையதும்!
அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.

அங்குள்ள கோயில்களில்

கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய

தங்க நகைகளாய்த் தொங்க விட்டு

உங்களவர்களை அர்ச்சகர்களாக

அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!
தங்கள் பிள்ளைகளுக்கான

பரதநாட்டிய பயிற்சிக்காவும்,

அரங்கேற்றத்திற்காகவும்

இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்

கொடுத்து அழைத்து, வரவேற்று,

சுற்றிக் காட்டி, கண்கலங்க

வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!

இந்தப் படம் எடுக்கப்போன

இடங்களில் கூடஞ் நீங்கள்

பெரிய்ய நடிகர் என்பதற்காக

உங்களுக்காக

தங்கள் நேரத்தை வீணாக்கி

தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,

எவ்வளவோ உதவியிருப்பார்களே!
அத்தகைய பண்பாடு மிக்க

எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு

நீங்கள் காட்டுகிற

நன்றி இதுதானா கமல்!

செருப்புதானா கமல்!

ஈழத் தமிழ் என்றால்

எங்களுக் கெல்லாம்

கண்ணீர்த்

தமிழ்!

குருதித்

தமிழ்!

இசைப்பிரியா என்கிற

ஊடகத் தமிழ்த்தங்கை

உச்சரித்த

வலிசுமந்த

தமிழ்!

ஆனால்.. உங்களுக்கு மட்டும்

எப்படி கமல்ஞ்

அது

எப்போதும்

நகைச் சுவைத்

தமிழாக மட்டுமே

மாறிவிடுகிறது!
பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.

தாங்கள் நடித்த

படத்திற்குக் கோடிகோடியாய்ஞ்

குவிக்க.. தமிழனின் பணம்

வேண்டும்.
ஆனால்

"அவன் தமிழ்

சாக வேவண்டும்

அவன் தமிழ்

தெருப் பொறுக்க

வேண்டும்."
தெருப் பொறுக்குதல்

கேவலமன்று.. கமல்.

அது

தெருவைத் தூய்மை

செய்தல்!
தோட்டி என்பவர்

தூய்மையின் தாய்..

தெருவை மட்டும் தூய்மை

செய்தவர்கள் இல்லை..

நாங்கள்

உலகையே

தூய்மை செய்தவர்கள்..
"யாதும் ஊரே யாவரும்

கேளிர்' என்று

உலகையே பெருக்கியவர்கள்

உங்கள்.

எங்களைப் பார்த்து

செருப்பைத் தூக்கிக்

காட்டிய

கமல் அவர்களே..

உங்களை

தமிழ்தான்

காப்பாற்றியது.

பசி நீக்கியது. நீங்கள்

வாழ்கிற வீடு, நீங்கள் போகிற

மகிழ்வுந்து,

நீங்கள் உடுத்துகிற உடை

அனைத்திலும்..

உங்கள்

பிள்ளைகள் படிக்கிற

படிப்பில்.. புன்னகையில்

எல்லாம்

எல்லாம்ஞ்!

கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட

எங்கள்

ஈழத் தமிழ் உறவுகளின்

சதைப் பிசிறுகள்ஞ்

இரத்தக் கவுச்சிகள்

அப்பிக் கிடக்கின்றன.

அப்பிக் கிடக்கின்றன.
மோந்து பாருங்கள்.

எங்கள் இரத்த வாடையை

மோந்து பாருங்கள்

மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி

உங்கள்

படத்தில் வருகிற கைபேசியின் மேல்

வருகிற

மூத்திர வாடைதானே உங்களுக்கு

அதிகமாய் வரும்.
கமல்..

நகைச் சுவை என்பது

கேட்கும் போது

சிரிக்க வைப்பது!

நினைக்கும் போது

அழ வைப்பது!

ஆனால் உங்கள்

நகைச்சுவை

செருப்பால் அடித்து

எங்களைச்

சிரிக்கச் சொல்கிறதே!

இதில் வேறுஞ் வீரம்..

அகிம்சைக்கான

வியாக்யானங்கள்!
அன்பான கமல்..

கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்

கையெழுத்து மரபிற்கு

அய்யாவும் அண்ணலும்

கரையேற்றி விட்டார்கள்.

இனியும் உங்கள்

சூழ்ச்சி செருப்புகளை

அரியணையில் வைத்து ஆளவிட்டு

அழகு பார்க்க மாட்டோம்.
சீதையைப் பார்த்து

"உயிரே போகுதே'

பாட மாட்டோம்.

சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட

வன்மம் அள்ளித்தான்

"உயிரே போகுதே'

பாடுவோம்.

ஆம்.. கமல்

தாங்கள் சொல்லியபடி..

எம்

தமிழ்

தெரு பொறுக்கும்!

எவன்

தெருவில்

எவன் வந்து

வாழ்வது

என்று

தெரு பொறுக்கும்!
அப்புறம்

எவன் நாட்டை

எவன்

ஆள்வது

என்ற

விழிப்பில்

நாடும்

பொறுக்கும்.
அதற்கு

வருவான்

வருவான்

வருவான்

"தலைவன்

வருவான்!'

இந்தத் தலைப்பையாவது

கொச்சை செய்யாமல்

விட்டுவிடுவது நல்லது கமல்.

நீங்கள் பிறந்த இனத்திற்கு

நீங்கள்

உண்மையாக

இருக்கிறீர்கள் கமல்!

நாங்கள்

பிறந்த

இனத்திற்கு

நாங்கள்

உண்மையாக இருக்க வே‌ண்‌டா‌மா‌?

அன்புடன்

-அறி‌வு‌மதி


என்னத்தைச் சொல்ல? கமல் நிச்சயம் ஈழத்தமிழர்களை இறக்க இப்படி செய்து இருக்கமாட்டார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் கொஞ்சம் கவன்மா இருந்து இருக்கலாம்னு தோனுது.

இந்தக் கவிதைக்கு சோர்ஸ்: Tamilcinema.com

Monday, January 3, 2011

இதுதான் என்னோட புத்தாண்டு ரெசொலூஷன்கள்!

* கற்பனைக் கதையில்கூட "ஃபாட்ஸ்" (facts) (உண்மைகள்)க்கு புறம்பானதை எதுவும் எழுதுவதில்லை!

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கடவுளையே மிரட்டிய தமிழன் நக்கீரன் வழிநடந்து உண்மைக்கும், நல்லவர்களுக்கும் குரல் கொடுத்து தளத்தின் ட்ராஃபிக்கைவிட பதிவின் தரத்தை உயர்த்த முயலனும்!

* பின்னூட்டங்கள் தற்போதையதைவிட அதிகமாக இட்டு நல்ல பதிவர்களை ஊக்குவிக்கனும்! என் பதிவுகளைவிட என் பின்னூட்டங்கள் பலரையும் ஊக்குவிப்பதாக "பக்ஷி" சொல்லுச்சு. அதான்..

* தப்பில்லாமல் தமிழ்ல ஓரளவுக்கு எழுத முயற்சிக்கனும். எழுத எழுதத்தான் தமிழ் பரவாயில்லாமல் எழுத்துப்பிழை இல்லாமல் வருது. என்ன இருந்தாலும் நம்ம மணியண்ணா தரத்துக்கு உயர முடியாதுதான்.

* கவிதை எழுத முயற்சிக்கவே போவதில்லை! எல்லாராலையும் எல்லாம் செய்ய முடியும் என்று நம்புகிறவன் இல்லை நான்.

* "யாரோடையும் வம்பு பண்ணப்போவதில்லை! விவாதம் செய்யப்போவதில்லை!" னு நான் பொய்சொல்லப்போவதில்லை. விவாதம், சர்ச்சையில் நிச்சயம் இடம் பெறுவேன். அதுதான் உண்மையான தமிழனின் (அண்ணன் உண்மைத்தமிழனை சொல்லல :) ) அடையாளம் என நம்புகிறேன்.

* மற்றபடி, எதையும் தாங்கும் இதயத்துடன், மறப்போம் மன்னிப்போம் என்கிற பாலிஸிதான் இந்த வருடமும்!

வாழ்க தமிழ்!

வாழ்க தமிழ்மணம்!

வாழ்க இண்ட்லி!

வாழ்க திரட்டி!

வளர்க தமிழ் வலைதளங்கள்! நன்றி வணக்கம்! :)

பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணனும் எந்திரனும்!

பதிவுலகில் சுரேஷ் கண்ணன் அவர்கள் திரைவிமர்சனம், திரைப்படம் பற்றி அலசுவதில் மேதை பட்டம் வாங்கியவர். இப்போ ஆஸ்கர் விருது வழங்குவது போல 2010ல் வெளிவந்த தமிழ்ப்படங்களை பல பிரிவுகளில் எவை சிறந்த தொழில் நுட்பங்கள் கொண்டிருக்கின்றன என்று ஒளிப்பதிவு, இசை, திரைக்கதை அது இதுனு அவர் தளத்தில் அவார்ட் வழங்கியுள்ளார்.

அதாவது இவர் 2010 ஆண்டு வெளிவந்த படங்களைப் பார்த்து ரசித்து அந்தத்தமிழ்ப் படங்களின் தரங்களை மட்டுமல்லாமல் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை போன்றவற்றை எடுத்து தரங்களை அலசியுள்ளார். நல்ல விசயம்தான். ஆனால் இவர் பார்க்காத படங்களை இந்த அலசலில் இருந்து "எக்ஸ்க்ளூட்" பண்ணியிருக்கலாம். அதாவது 2010ல் ஏராளமான பொருட்செலவில், மிகச்சிறந்த கலைஞர்களை வைத்து தயாரித்து வெளி வந்த எந்திரன் நான் பார்க்கவில்லை, அதனால் அதில் ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்ற தொழில்நுட்பங்கள் பற்றி எனக்குத் தெரியாது. நான் பார்த்த படங்களை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன் என்று இவர் சொல்லி இருக்கலாம்.

ஒருவேளை எந்திரனை பார்த்துவிட்டாரோ? பார்த்துவிட்டு அதை வெளியே சொல்ல வெட்கப்படுகிறாரா? என்பது எனக்குத் தெரியவில்லை! சொன்னால்த் தானே தெரியும்?

சன் டி வி மீடியாவை தன் கையில் வைத்துக்கொண்டு எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி எந்திரனை மக்களிடம் விற்க முயன்றார்களோ, அதைவிட ஒரு படி கீழே இறங்கி ரஜினிமேல் தனக்குள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டி, எந்திரனை ஒழிக்க முயன்றவர் நம்ம "மேதை" சுரேஷ் கண்ணன்! அதெல்லாம் தப்புனு நான் சொல்ல வரலை அது அவருடைய உரிமை! அவருடைய சுதந்திரம்! அதை நம்ம யாரு தட்டிப் பறிக்க?

சுரேஷ் கண்ணனின் சாதனைகள் சில..

* எந்திரன் இசை வந்த புதிதில், அதன் இசையை இம்சை என்றார்.

* எனக்குத்தெரிய எந்திரன் படம் பார்த்ததாக காட்டிக்கொள்ளவில்லை! அந்தப் படத்தின் மேல் தனக்குள்ள காழ்ப்புணர்ச்சியை அப்படித்தான் அவர் எல்லோருக்கும் உணர்த்தினார்.

* எந்திரன் என்கிற ஏகாபத்தியன் என்று தினமணியில் வந்த ஒரு கட்டுரையை காப்பி பேஸ்ட் பண்ணிப் போட்டு தன் தளத்தின் தரத்தை வளர்த்தார்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

அவரும் பாவம் இமசைனு சொல்லிப்பார்த்தார், பலியாடுகளைக் கொன்றவர்கள் ரஜினி ரசிகர்னு பலிபோட்டு எந்திரனை கேவலப்படுத்திப் பார்த்தார். தினமணியில் வந்த கட்டுரையை வெட்டி ஒட்டிப் பார்த்தார். எந்திரன் வெளிவந்த நாள் முதாலாக தூக்கமிழந்து பாக்ஸ்ஆஃபிஸில் எந்திரன் படுத்திறாதா, விமர்சகர்களிடம் அடி வாங்கிவிடாதானு தூங்காமல் கஷ்டப்பட்டார். பாவம் அவர் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை! அதைவிடக் கொடுமை என்னனா இவரைத்தவிர்த்து உலகத்தில் உள்ள அனைத்து விமர்சகர்களும் இந்தப்படத்தை பாராட்டிவிட்டார்கள். ஆக நிக்கலில் செய்த எந்திரனிடம் மோதி பிச்சைப் பாத்திரம் நொறுங்கியதுதான் மிச்சம்!

இப்போ 2010 படங்களை தரவரிசைப் படுத்தவும்..

தான் பார்க்காத எந்திரனைப் பற்றித்தான் முதன் முதலாக விமர்சிச்சுள்ளார். அதைவிடுங்க, அதாவது 2010ல் வந்த படம்! 2002 ல் வெளிவந்த பாபாவையும் இங்கே கொண்டு வந்து எந்திரனையும் பாபாவையும் இணைத்த ஒரே மேதை நம்ம சுரேஷ் கண்ணன் அவர்கள்தான்.

எந்திரனுக்கு நிகரான பரபரப்பை சென்ற வருடங்களில் ஏற்படுத்தியது இதே நடிகரின் 'பாபா'. ஆனால் அதில் முன்வைக்கப்பட்ட போலித்தனமான ஆன்மீகம் காரணமாகவும் நம்பகத்தன்மையின்மை மற்றும் சுவாரசியமின்மை காரணமாகவும் 'பாபா' படுதோல்வியைத் தழுவியது.

என்னதான் எந்திரனை திட்டினாலும் அந்தப்படம் க்ரிட்டிகலாவும் கமர்சியலாகவும் வெற்றிவாகை சூடிவிட்டது! அதனால் ஒரு 8 வருடங்கள் முன்னால் சென்று சம்மந்தமே இல்லாத ஒரு தோல்விப்படத்தை எடுத்து 2010க்கு கொண்டு வந்து அவர் ஆசையைத் தீர்த்துக்கொண்டார்!

சன் டி வியின் தான் என்கிற அகம்பாவம் மோசமா இல்லை பதிவுலகில் சுரேஷ் கண்னனுடைய அகம்பாவம், திறந்த மனதில்லாத குணம் மோசமானு கேட்டால் அது பெரிய விதாத்துக்குரியது.

சரி, 2010 போய்விட்டது! மறப்போம் மன்னிப்போம்! 2011 லாவது தன் அனுகுமுறையை மாற்றி, தனிப்பட்ட தன் காழ்ப்புணர்ச்சியைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு ஒரு "ப்ரஃபெஷனலாக"ஒரு திறந்த கண்ணோட்டத்துடன் இவர் படங்களை விமர்சிப்பார் என்று நம்புவோம்!

வாழ்க சுரேஷ் கண்ணனின் கலைத்தொண்டு! அவருக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!