Wednesday, January 28, 2015

“நான்” என்னும் அகந்தை!

“நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” என்கிற கண்ணதாசன் (இல்லை, வாலியின் வரிகள்!! நன்றி மலரன்பன்!!! corrected later) வரிகள் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் வந்துள்ளது. ஆனால் மனிதனுக்கு இந்த “நான்” என்னும் அகந்தை ஒரு சில சின்ன வெற்றிக்குப்பிறகு வந்துவிடுகிறது. “நெனைப்பு” அதிகமாயிடுது. அது வந்துவிட்டால் அந்த இடத்தில் ஒருவன் முட்டாளாகிறான்.

“எப்படி?”

* நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!

* நீங்கள் விளையாட்டில் பெரிய “மைக்கேல் ஜார்டன்” ஆக இருந்தாலும், உங்கடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.

* நீங்கள்தான் பெரிய எழுத்தாளர், க்ரிட்டிக் நு உங்களை நினைத்தால், கொஞ்சம் "அகன்ற பார்வையில்" பார்த்தால் நீங்கள் ஒரு கிணற்றுத்தவளை ஒரு சின்ன வட்டத்தில் இருக்கீங்கனு தெரியும்.

* எனக்குத்தெரிய எங்க ஊரில், என் தெருவில் ஒரு பெரிய தாதா/சண்டியர் இருந்தார். அவரைப்பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள். அவருக்கு ஒரு 4 மனைவிகள், மொத்தம் 30 பசங்க. அவரைப்பார்த்தால் அந்த தெருவே பயப்படும். சாராய வியாபாரம், கள்ளக்கடத்தல் இப்படினு தொழில். அமோகமாக வாழ்ந்துகொண்டிருந்தார்.  நான் வெளியூரிலிருந்து படிக்கும்போது, ஒருமுறை லீவுக்கு ஊருக்குப் போனேன்.

அப்போ, அந்த சண்டியர் இறந்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள்.
  “என்ன ஆச்சுடா?” னு நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரு நாள் எதோ வழக்கம்போல் தண்ணியைப்போட்டுட்டு  சலம்பல் பண்ணினாராம். யாரோ ஒரு ஆளை கெட்டவார்த்தைசொல்லி கண்டமேனிக்குத் திட்டினாராம். அப்போ  ஒரு 18 வயது பையன், சிறுவன், அப்பாவை திட்டியதை கேட்டவன், தாங்க முடியாமல், உணர்ச்சிவசப்பட்டு "என் அப்பாவை இவன் இஷ்டத்து திட்டிவிட்டானே?" னு ஒரு  கத்தியை வைத்து ஒரே குத்தா குத்தக்கூடாத இடத்தில் குத்தி அந்த சண்டியரை கொன்றுவிட்டான் என்றார்கள்!

என்னங்க,  "சண்டைக்கோழித் திரைப்படம்" கதை மாதிரி இருக்கா? இது நிஜக்கதை! என் நண்பர்கள் எல்லாம் "ரொம்ப கேவலமா போச்சுடா.. ஒரு சின்னப்பையன் இவ்ளோ பெரிய சண்டியரை கொன்னுபுட்டான்" னு சொல்லிச் சிரித்தார்கள்.

“நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது.

ஆனால் முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி ?

இது ஒரு மீளாத...இது ஒரு மீள்பதிவு!

Monday, January 26, 2015

பச்சையாக எழுதுவதுதான் செழுமையான எழுத்தா?

பலமுறை நான் கதை எழுதும்போது ஒரு சில நடப்பு வார்த்தைகளை நான் பேசிக்கேட்ட விதமாக அப்படியே எழுதியபோதும்... இங்கே வந்து பதினெட்டு பிளஸ் போடுங்க, இல்லைனா உங்கள் வார்த்தைகள் எங்களை முகம் சுளிக்க வைக்கின்றன, நீங்க கவனமாக எழுதணும். தமிழ்மணம் இதுபோல் எழுத்துக்களை விரும்பாது என்றெல்லாம் அறிவுரை செய்தவர்கள் ஆயிரம்.

அதே கருத்தைக்கொண்டவர்கள், மற்றொரு ஆசிரியர் அதையே தைரியமாக செய்யும்போது அதை சரி என்கிறார்கள்.

நான் எங்க ஊரில் கேள்விப்பட்டப் பழமொழிகளை கேள்விப்பட்டவாரே இங்கே எழுத முடியாது. அது என் எழுத்துக்கு நானே செய்யும் துரோகம்.

அப்படி என்ன பழமொழி என்கிறீர்களா?.

1) கே ஆர் விஜயா சம்மந்தப்பட்டது

2) கடவுள், பூசாரி சம்மந்தப்பட்டது.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்க்கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்த எல்லா கிழ்த்தரமான ஆண்களுக்கும் இப்பழமொழிகள் நன்கே பரிச்சயம். இங்கே பெரிய மனுஷன் வேடத்தில் அவர்கள் திரிவதால் அதை அப்படியே சொல்லாமல் திரித்துச் சொல்லிக்கொண்டு அலைவதும் எனக்குத் தெரியும்.

ஆமாம், அர்த்தம்  நிறைந்ததாகத்தான் இருக்கும் அசிங்கப் பழமொழிகள் பல. நான் என் நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்ட விதத்தில் இங்கே சொன்னேன் என்றால் என் மேல் சாணியை கரைத்து ஊற்றாமல் செல்ல மாட்டார்கள் இங்கே உள்ள இலக்கிய மேதைகள் பலர்.

ஆனால் அதே பழமொழியை பெ முருகன் என்கிற மேதாவி கதையில் காளி சொல்லுவதாக எழுதினால், இதே மேதைகளால் அது நல்லிலக்கியம் என்று பாராட்டப்படும்.

ஆக, உலகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தராசு வைத்துள்ளது. ஒரே   பொருள், யார் வைத்துள்ளார்கள் என்பதை பொறுத்து, அது கமலஹாசனா, இல்லை ரஜினிகாந்தா, இல்லைனா பெ முருகனா என்பதைப் பொறுத்து அதன் நிறை மாறுபடுகிறது.

என்ன ஒரு கேவலமானவன் மனிதன் என்பவன்!! என்ன நடிப்பு!! என்ன பாசாங்கு!

Saturday, January 17, 2015

பெருமாள் முருகனின் கருத்துச் சுதந்திரம் பற்றி என் கருத்து..

பெருமாள் முருகன்னா யாருனே எனக்கு இப்போவரை தெரியாது. இப்போ அவர் ரொம்ப "நொட்டோரியஸாக" ஆனவுடன் போயி என்னடா பிரச்சினைனு நுனிப்புல் மேய்ந்தேன்.

யுவகிருஷ்ணா தளத்தில் அந்த பிரச்சினைக்குரிய இரண்டு பக்கங்களும் இருக்கு. அதை வாசித்துவிட்டு என் கருத்தை இங்கே வைக்கிறேன்.

மதுவின் மலர்த்தரு தளத்தில் பின்னூட்டமாக எழுதியது இது. என்னுடைய ஸ்டைலில் எழுதியுள்ளதால், தரமான தளம் நடத்தும் மதுவின் தளத்தில் என் பின்னூட்டம் அழுக்கை ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதனால் என் வரம்பு மீறிய பின்னூட்டங்களை மது மட்டுறுத்தவும் வாய்ப்புண்டு.

அதனால் நான் அதே கருத்தை இங்கே எழுதுகிறேன்.

I think I am very liberal guy. That's how I rate myself. I read those two pages where PerumaaL Murugan talked about some sort of "sex swap" or "free sex" or “orgy” or whatever you would like to call happening in thiruchengode (read those pages from one of the websites).

Suppose I am from that town or if the town he mentioned were my hometown (I grew up in a very rough neighborhood in TN), I am sure my town people will NOT leave that writer "alive". I am very honest here.

I am an agnostic or an atheist guy. This issue has NOTHING to do with RELIGION as they project. Whatever this author described is nothing but garbage I would call. Already our community is so screwed up these days. This guy is trying to make it worse by writing some "trash" like this.

Yeah, people should condemn this kind of writing because those people are seriously offended by his "BS". A guy with some good morals will dare to write like this. I wonder how this author grew up? What kind of parents he had? He seems like a SICK SOB if you ask me. His mind is so f***ed up I would say.

Yeah we have freedom of speech. It is a fiction. Right. But the town he names does exist. There are mothers living there. How would they feel when they read this garbage? It is not a town namely "jupiter" or something. The way he has written does not look that "imagination" either.


The following is a response by a guy who lives in that town. I got this from luckylookonline.com  website.

http://www.luckylookonline.com/2014/12/blog-post_29.html

யுவகிருஷ்ணா தளத்தில் வந்த பின்னூட்டம் இங்கே..

இங்கே பிரச்சினை புத்தகத்தை எரிப்பது பற்றி அல்ல. கருத்து சுதந்திரம் பற்றியதும் அல்ல. பெருமாள் முருகன் எழுதிய நாவலில், திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் அனைவரும், திருச்செங்கோட்டு கோயில் விழாவில், தனக்கு பிடித்த ஆணோடு கூடி குழந்தை பேறு பெற்றுக்கொள்வதாக சித்தரித்து, அதை நியாயப்படுத்தியும் வருகிறார். மேலும், இப்படி பிறந்த குழதையைத்தான் “சாமி கொடுத்த குழந்தை” போன்ற பேச்சு வழக்குகள் குறிப்பதாகவும் எழுதியுள்ளார். இதைப் படித்த எங்கள் பகுதி பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். இங்கே விரதமிருந்து, கோயில் கோயிலாக சுற்றி, குழந்தை பெற்ற அத்தனை பெண்களையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. தங்கள் பகுதி பெண்களை இவ்வலவு கீழ்தரமாக சித்தரிக்கும் ஒரு நாவலை எரிப்பது அவர்களது எதிர்ப்பின் / கோபத்தின் அடையாளமே. இதை பெரிது படுத்துவது முக்கிய பிரச்சினையை திசை திருப்பும் ஒரு தந்திரமாகவே படுகிரது. தங்கள் குலப்பெண்களை கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டதை பார்த்துக்கொண்டு கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, சிலர் உணர்சிவசப்படத்தான் செய்வார்கள்.. இதை உளவியல் ரீதியாக, அவர்கள் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும்.

* திருசெங்கோட்டைப் பற்றிய ஏராளமான இலக்கியங்கள், குறிப்புரைகள், திருசெங்கோட்டைப் பற்றி விளாவாரியாக எழுதப்பட்ட வெள்ளையர் ஆவணங்கள், ஏன், (பெருமாள் முருகன் தொகுத்த) நாவலில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த திரு.முத்துசாமி கோனார் அவர்களின் கொங்குநாடு புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி விலாவாரியாக கூறப்பட்டுள்ளது, அதிலும் இல்லை. இந்த கோயில் மண்டப கட்டளைதாரர்கள் (பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்), முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் எவருமே இதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர். நிலை இப்படி இருக்க பெருமாள் முருகனின் ஆதாரமற்ற கூற்றை நீங்கள் ஆதரிக்கிரீர்களா?

*நாவல் நடந்த காலகட்டமாக சொல்லியிருப்பது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தீயாக பரவிய காலம். இப்படியொரு சம்பவம் (மனதளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டு) நடந்திருக்குமெனில் திராவிட இயக்கத்தவர்கள் கூட இதை விட்டு வைத்திருப்பார்களா? இதைப்பற்றி இதுவரை வந்த எந்தவொரு சமூக வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடாதது ஏன்?

* மாதொருபாகன் நூலை மட்டுமல்லாது பெருமாள் முருகனின் அனைத்து படைப்புக்களையும் வாசித்துள்ளேன். வாசித்தவர்களுக்கு அவரது சித்தாந்த-எண்ண ஓட்டம் பற்றி உணர முடியும். மாதொருபாகன் நூலை வாசித்தபோது எனக்கு முதலில் தோன்றியது நீங்கள் எழுதிய ஆய்வுலகின் அன்னியகரங்கள் கட்டுரைதான். இந்த புத்தகத்தை எழுதியதன் பின்னணி குறித்து பெருமாள் முருகனே அவரது முகவுரையில் தெரிவித்துள்ளார். டாடா மற்றும் ரோஜா முத்தையா நூலகம் போன்ற அமைப்புகள் உள்ளன. போர்டு பவுண்டேசனின் மறைமுக செயல்பாடுகளின் வெளிப்பாடு இது.

புனைவின் எல்லையில் இருந்து பார்க்கவேண்டிய இலக்கியப் படைப்பு என்று கூறியிருந்தீர்கள். இது வெறும் புனைவு என்றால் யாரும் வருந்தமாட்டார்கள். நாவலின் முன்னுரையில் இவர் களத்தில் கண்டுபிடித்த விஷயத்தை கருவாக கொண்டு எழுதிய புனைவு என்று உண்மைச்சாயம் பூச முயல்கிறார். ஒரு நாவலில் கற்பனையாக எழுதியிருந்தால் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நிஜ அடையாளத்தை கொண்டு எழுதுவது, அந்த வட்டார மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயமாகத்தான் பார்க்க வேண்டும். கருத்துக்கு சுதந்திரம் இருப்பது போல எல்லைகளும் உள்ளது.****

சும்மா ஆளாளுக்கு கருத்துச் சுதந்திரம் மண்ணாங்கட்டினு பேசக்கூடாது. உங்க கருத்துச் சுதந்திரத்தை வைத்து உங்க அம்மா, அக்காவை பத்தி எழுதுங்க, அல்லது உங்க மனைவி பத்தி  அல்லது கொழுந்தியா பத்தி தாறுமாறா எழுதுங்க. அதை விடுத்து  ஒரு ஊரில் வாழும் பெண்கள் இப்படி வாழ்கிறார்கள்/வாழ்ந்தார்கள் என்று எழுதினால், அவர்கள் உங்களை செருப்பை கழட்டித்தான் அடிக்க வருவார்கள்..

கருத்துச் சுதந்திரத்திற்கும் வரையறை அல்லது லிமிட் இருக்கு. அந்த கோடு எங்கே வரையணும்னு எந்த கொம்பனுக்கும் தெரியாது, அது தெரியாமல் "இது கருத்துச் சுதந்திரம்"னு கொடி பிடிக்கக்கூடாது!  

Friday, January 16, 2015

தீபிகா, கட்ரீனா யார் அழகு? ரான்பின் தான் சொல்லணும்!

ரிசிகபூர் பையன்,  ரான்பின் கபூரும், தீபிகா படுகோனே வும் ஒரு வருடம் போல (2009?) "டேட்" பண்ணினார்களாம். காதலுக்கு எப்போவுமே "half life" கம்மிதானே? ஒரு வருடத்துக்குப் பிறகு ரெண்டு பேரும் "break up" பண்ணிக் கொண்டார்கள்.

காரணம் என்ன?

 Ranbir Kapoor and Deepika Padkuone pose for the camera

ரான்பின் கபூர், தீபிகா போக வேறு அழகான் பெண்களிடமும் ரொம்ப நெருங்கிப் பழகினார் என்கிறார்கள். அது தீபிகாவுக்குப் பிடிக்கவில்லை. வழக்கம்போல இவன் காதலிக்க மட்டும்தான் லாயக்கு, கல்யாணத்துக்கு லாயக்கில்லைனு தீபிகா ஒதுங்கிவிட்டதாக சொல்லிக்கிறாங்க.

இதெல்லாம் ரொம்ப சாதாரணமான விடயம்தான். அதுவும் இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில்!

இதன் பிறகு ரான்பின் கட்ரீனா கயிஃப் பை "டேட்" பண்ணியதாகவும் அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் நெருக்கமான ஒரு உறவு இன்னும் இருக்கு என்கிறார்கள். ரான்பினும், கட்ரீனாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக இன்னும் அறிவிக்கவில்லை!

 Ranbir Kapoor and Katrina Kaif (Photo: DC archives)

இந்த ஒரு சூழலில்..

தீபிகா விடம் நிருபர் ஒருவர் கேள்வி..

நிருபர்: சப்போஸ் நீங்க கட்ரீனாவாக இருந்தால்?

திபிகா: நான் ரான்பின் கபூரை மணப்பேன்!

இதை எல்லாப் பத்திரிக்கையிலும் தீபிகாவின் இந்த "காமெண்ட்"டை பெருசா பேசிக்கிறாங்க!

சரி, நீங்க என்ன நினைக்கிறீங்க?

* தீபிகா, தன்னுடைய எக்ஸைப் பற்றி இப்படி விமர்சிப்பது சரியா? இல்லைனா தவறா?

* நீங்க கட்ரீனா இடத்தில் இருந்தால் இதை எப்படி எடுத்துக்குவீங்க?

சரி, இதுக்கெல்லாம் பதில் தெரியலைனா, ஈஸியா ஒருகேள்வி..அதுக்காவது பதில் சொல்லீட்டுப் போங்க!

இவர்கள் இருவரில் யாரு ரொம்ப அழகா இருக்காங்க?!
 
 


என்ன என்ன?

அழகா முக்கியமா?

வேறென்ன இவர்களைப் பத்தி நமக்குத் தெரியும்?

Friday, January 9, 2015

கந்தசாமி ஐயாவின் பதிவும் நான் கற்ற பாடமும்!

பதிவுலகில் எங்கே சறுக்கும், எங்கே வழுக்கும் என்று யாரும் அடித்துச் சொல்லிவிட முடியாது. ஒரு சில நேரங்களில் நம்மை அறியாமலே நாம் வம்பில் மாட்டிக்கொள்வோம். ஆமாம் சில தருணங்களில் நாம் யோசிக்காத, சிந்திக்காத  ஒரு கோணத்தில் வாசகர் யோசித்து, நாம் சாதாரணமாக சொன்னதை அந்த வாசகர் சீரியஸாக எடுத்துப் பின்னூட்டமிட்டுவிடுவார். இப்படி ஒரு சூழல் எல்லோருக்குமே உருவாவதுதான். இதுபோல் சறுக்கல்களால்  நாம் நஷ்டம்டைவதைவிட இலாபமடைவதும் உண்டு.

கந்தசாமி ஐயாவின் பதிவுகளை நான் சமீபகாலமாக வாசிக்கவில்லை. நேற்றுத்தான் அவர் வலைபதிவை எட்டிப் பார்த்தேன். சில மாற்றுக் கருத்துப் பின்னூட்டங்கள் எழுதினேன். பொதுவாக பதிவுலகில் நாம் நம் கருத்தைச் சொல்லும்போது, நம் கருத்தால் ஒரு சிலர் பாதிக்கப் படுகிறார்கள். அப்படி பாதிக்கப் பட்டவர்கள் அவர்கள் நிலையை  வந்து எடுத்துச் சொல்வதில்லை. நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை, இழப்புகளை எதற்காக உலகத்துக்கு திறந்து காட்ட வேண்டும்? என்று பொதுவாக யாரும் அதைச் சொல்வதில்லை. இருந்தாலும் ஒரு சிலர் பின்னூட்டங்களில் தன் தனிப்பட்ட வாழ்க்கையைச் சொல்லாமல், தன்னை பாதித்த  அக்கருத்துத்  தனக்குப் பிடிக்கவில்லை என்று நேரிடையாகவோ, கோடிட்டு காட்டிவிட்டோ செல்வார்கள்.

கந்தசாமி ஐயா, "குடும்பப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?" என்று ஒரு பதிவை எழுதியிருக்கிறார். இப்பதிவை தமிழ்மணத்தில் பார்த்த நான்  ஒரு  நகைச்சுவைப் பதிவாக அல்லது மொக்கைப் பதிவாக ஏதோ அவருடைய ஸ்டைலில் எழுதியிருப்பார் என்றுதான் நான் பதிவை வாசிக்காமலே அனுமானித்துக் கொண்டேன். ஆனால் நான் நினைத்தது போலில்லாமல்  அவர் கருத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டு பின்னூட்டங்களில் அக்கருத்தை ஏற்றுக்கொண்டு பலரும், ஏற்காமல் மாற்றுக்கருத்தையும் எதிர் கருத்தையும் ஒரு சிலர் முன் வைத்துள்ளார்கள். நானும் சற்று தாமதமாக என் கருத்தைப் பகிர்ந்தேன். இது சாதாரணமாக பதிவுலகில் நடப்பதுதான்.

சாதாரண பழமொழிகள்..

"முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டதுபோல"  என்கிற பழமொழியை பதிவுலகில் சொல்வதுகூட "பொலிட்டிக்கல்லி இன்கரக்ட்" என்று சொல்லலாம். வாசகர்களில் ஒரு physically challenged ஆன நம் சகோதர் அல்லது சகோதரிகள் இதை வாசிக்கும்போது அவர்கள் மனது கடுமையாக பாதிக்கப் படத்தான் செய்யும். அதனால் இதுபோல் பழமொழியைக்கூட  பொதுவில் சொல்லும்போது நாம் யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிற காலகட்டம் இது. It offends some of my brothers and sisters or friends. அதை நான் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோல் பழமொழிகளை தவிர்த்துவிட்டு வேறு அதற்கு ஈடான பழமொழியை சொல்ல வேண்டிய சூழல் இது. "கடவுள் இல்லை" னு நான் ஒரு பதிவெழுதினால், ஆத்திகர்கள் என் கருத்தை ஏற்காமல், மாற்றுக் கருத்தைத்தான் முன் வைப்பார்கள். எரிச்சலடைவார்கள். இதுதான் இயல்பு.

அதேபோல் "குடும்பப் பெண்கள் இப்படி வாழவேண்டும்?" என்று பெண்கள் பற்றி பொத்தாம் பொதுவாக விமர்சித்தால்.. அதையும் அதில் சொல்லப்பட்ட கருத்துக்களால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர்  எதிர்த்துக் கருத்துச் சொல்லத்தான் செய்வார்கள். இந்நிலை எந்தப் பதிவருக்கு வேண்டுமானாலும் வரலாம். பதிவுலகில் ஏதாவது கருத்தை சொன்னால் நீங்கள் இதுபோல் சூழலுக்கு தயாராகத்தான்  இருக்க வேண்டும். எந்தக்கருத்து நம்மை எங்கே கொண்டு செல்லும் என்று யாருக்கும் தெரியாது.

அதேபோல் கந்தசாமி ஐயா கருத்தை   ஏற்றுக்கொள்ள முடியாத கார்த்திகேயன் அம்மா, கலா அவர்கள், ஒரு எதிர் கருத்தை முன் வைத்துள்ளார்கள். அதற்கு காரணம் தனிப்பட்ட முறையில் அவர்களை அப்பதிவில் சொன்ன கருத்துக்கள் பாதித்து உள்ளது.

நிற்க.. அவர்கள் நிலைமை தெரிந்து இருந்தால், அவர்களுடைய இந்த பின்னூட்டத்திற்கு கந்தசாமி ஐயா அவர் கருத்தை அனுசரித்து பதில் சொல்லியிருப்பார். ஆனால் கார்த்திக் அம்மாவை சரியாகத் தெரியாத அவர், கொஞ்சம் எதிர்வினையாக  இன்னொரு கருத்தை பின்னூட்டத்தில் சொல்லியுள்ளார். Sometimes we do react quickly and counter our argument or defend the point we brought up. அப்படி ஒரு சூழல்தான் இது. இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.  பிறகு நிலைமை தெரிந்தவுடன் வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுவிட்டார். கார்த்திக் அம்மா அதை புரிந்து கொண்டார். எல்லாம் சுமூகமாக முடிந்தது.

இந்த சின்ன தர்ம சங்கடத்தில் நாம் கற்றதென்ன?

கார்திக் அம்மா என்கிறபதிவரின் மிகப்பெரிய இழப்பு, அவர்கள் மனநிலை, அதனால் இன்று அவரிடம்  இருக்கும் அவர்களுடைய முற்போக்கு சிந்தனைகள் எல்லாம் என்னைப்போல் பாமரனுக்கும் தெரிய வந்துள்ளது. பதிவர்கள், வாசகர்கள் பலர் வருகிறார்கள். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்வும் நமக்குத் தெரிவதில்லை. இப்போது கந்தசாமி ஐயாவின் பதிவால், கார்த்திக் அம்மாவின் சிந்தனைகளையும், அவர் மகன் கார்திகேயன் ஆரம்பித்த பொன்னியின் செல்வன் தளத்தை பற்றியும் நான் தெரிந்து கொண்டேன். ஒரு சில சின்ன தவறுகளால்தான் நாம் ஒரு சில பதிவர்கள் மனநிலையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும், அவர்கள பட்ட இன்னல்களையும் கற்றுக்கொள்ள முடிகிறது. அதனால் நாம் செய்யும் சிறு தவறுகளும் நாம் வாழ்க்கைப் பாடங்கள் கற்றுக்கொள்ள உதவுகின்றன என்று எடுத்துக் கொண்டு தொடருவோம் நம் பதிவுலகப் பயணத்தை.Monday, January 5, 2015

இரண்டாயிரத்து பதினைந்து- 2015!

புது வருடம்!  போன வருடம் முதல்ப் பதிவு என்ன எழுதினேன்னு போயி பார்த்தால் அப்படி ஒன்னும் பெரிதாக.. ஆஹா  புதுவருடம் பொறந்துருச்சு, இனிமேல் எல்லாமே நல்லபடியாத்தான் நடக்கும்! னு என்னை நானே ஏமாற்றிக்கவில்லை! அதுக்கு முந்திய வருடமும் அதே தான். ஆக வாழ்க்கையில் ஒரு நிதானத்துக்கு வந்தாச்சு போல இருக்கு!

நிதானமடைந்து போதி மரத்துக்கு போன புத்தரையே திட்டுறாணுக நம்மாளுக! பெண்டாட்டி பிள்ளைகுட்டிகளை தவிக்கவிட்டு ஓடிட்டாருணு! நம்மள எல்லாம் விட்டு வைப்பாணுகளா? அதானால புத்தர் செஞ்ச தப்பையே நம்மளும் எதுக்கு செய்யணும்? :)

இந்த வருடம் அப்படி நடக்கும், இப்படி நடக்கும் னு கனவுகளுடனோ, இப்படி நடக்கணும், அப்படி நடக்கணும்னு எதிர்பார்ப்புடனோ புதிய வருடத்தை ஆரம்பிக்கவில்லை! நடப்பதுதானே நடக்கும்? என்கிற எண்ணம்தான் வருகிறது. இனிமேல் எல்லாப் புது வருடமும் இதேபோல்தான் போகும்போல இருக்கு.

ஏதாவது எழுதுவோமேனு எழுத  ஆரம்பித்தால் கடந்த இரண்டு வருடப் புத்தாண்டு ஆரம்பத்தில் வந்த அதே சிந்தனைகள்தான் திரும்பவும் வருகிறது.

பேசாமல் அதையே வெட்டி ஒட்டிடுவோமே? எதுக்கு அதே எண்ணங்களை வேறு வார்த்தைகளைப் போட்டு புது வாக்கிய்ங்கள அமைத்து...


*************************
 Flash back 1...

2013 முடிந்து 2014 ஆரம்பம்!

2013 ல பதிவுலகில் பதிவர் டோண்டு ராகவனையும், பதிவர் பட்டாபட்டியையும் இழந்து இருக்கிறோம்! எனக்கு அவர்கள் பகிர்ந்த கருத்துக்களில் எவ்வளவு கருத்து ஒற்றுமை இருந்தது, அவர்களை எனக்கு எவ்ளோ பிடித்தது என்பது முக்கியம் அல்ல! இரண்டு தமிழ்ப் பதிவர்கள் மறைந்துவிட்டார்கள். இருவருமே தங்கள் கருத்துக்களில் நம்பிக்கை வைத்து கருத்துக்களை தைரியமாக முன்வைத்தார்கள். தமிழ் வலையுலகில் அவர்களை நாம் இழந்தது மாபெரும் இழப்புதான் என்பதை யாரும் மறுக்க முடியாது!

இப்படி வருடா வருடம் சில பதிவர்களையும், ஒரு சிலர் உறவினர்களையும் ( நண்பர், காதலர், மனைவி, கணவன், மகன், மகள், அண்ணா, தங்கை, அப்பா அல்லது அம்மா என்று ) யாரையாவது ஒரு சிலர் இழந்து தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். இன்று அவர்கள், நாளை நாம்  அவர்கள் நிலையில் இருக்கத்தான் போகிறோம். அப்படி உறவினரை  இழந்து நிற்பவர்களையும், அவர்கள் நண்பர்கள், உறவினர்கள்  போன வருடம் "ஹாப்பி நியு இயர்" "இந்தாண்டு உங்களுக்கு எல்லாமே நல்லதாக அமையட்டும்" என்றுதான் வாழ்த்தினோம். நீங்க எப்படி மனதாற வாழ்த்தினாலும்  இறப்பு, இழப்பு, தோல்வி எல்லாம் வருடா வருடம் எல்லாருக்கும் நடக்கத்தான் போகுது. எதுக்கு இதெல்லாம்? இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,  எல்லாம் நல்லபடியாக இந்தாண்டு உங்களுக்கு அமையட்டும்,  மண்ணாங்கட்டினு அர்த்தமில்லாத வாழ்த்துக்கள்!

இந்த வருடம் இனிமையாகப் போயிருந்தால் அடுத்த வருடம் சோகமாகப் போக வாய்ப்பு அதிகம். ஒவ்வொரு வருடமும் கடந்த வருடத்தைவிட நல்ல வருடமாக அமையாது என்பதே உண்மை. அடுத்த வருடம் சோகமாகப் போனால் அதற்கடுத்த வருடம் அந்த அளவுக்கு சோகமாக இல்லாமல் பரவாயில்லாமல்த்தான் போகும். கீழே போனால் மேலேதான வரணும்? நம்ம ஸ்டாக் மார்க்கட் மாதிரி. ஒவ்வொரு வருடமும் இழப்புகள், நண்பனா நம்பியவனிடம் கற்கிற பாடங்கள், கோ வொர்க்கர்களின் சுயநலம் பற்றி அறிதல்,  இப்படி புதுப் புது வடிவில் முன்னால் கற்ற பாடங்களே ஏதாவது மறுபடியும் வேறொரு உருவில் வந்துகொண்டேதான் இருக்கு. ஒரு சில நல்லவைகள்,  கெட்டது எல்லாமே ஒவ்வொரு ஆண்டும் நடக்கத்தான் செய்யுது. என்ன புது வருடம் ஆரம்பிச்சா கவனமா 2014 னு மட்டும் மாற்றி எழுதணும் அவ்ளோதான். எல்லா எழவும் அதேமாரித்தான் போகப்போகுது.

வாழ்க்கை என்பதே நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்வதுதான் போலும். வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் அதுதான் உண்மை. அறியாமையில் வாழ்வதுதான் சந்தோஷமான வாழ்க்கை என்கிற கூற்றுதான் எப்படிப் பார்த்தாலும் உண்மையாகத் தோன்றுகிறது.

என்னை பொறுத்தவரையில் வாழ்க்கையில் "போர்" அடிக்காமல் வாழக் கற்றுக்கொண்டு வருகிறேன். Personally, I get busy with my life. In that way I get tired because of hard-work and sleep well. I dont have enough time to finish what I want to do most of the time. Because of that, the time passes faster than you would imagine. That means a week goes like a day. A year goes like a month. Time flies. That's how I always feel.

நான் ஹெல்த்தியாக நல்ல மனநிலையில் உள்ளதால் என்னால் இதுபோல் பாஸிட்டிவாக எழுத முடிகிறதென்பதையும் மறுக்கவில்லை. உண்மை என்னவென்றால் நேற்று உங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பனோ நண்பியோ நாளை இருக்கப் போவதில்லை. போன வருடம் உயிருக்கு உயிரா இருந்தவங்க ரெண்டு வருடத்தில் சம்மந்தமே இல்லாத ஆட்களாக பிரிந்து விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் நீங்கள் குப்பைக்கு சமமாகிவிடுவீர்கள்.  These days I don't respect anybody who disrespects me. I usually forgive their ignorance and respect them for what they are. But not any more! I feel it is mere foolishness to appreciate anybody who looks down on you and who thinks you are a "trash". It is a very big world. "Just move on and ignore such people" is what I tell myself. Never forget I am the most important person to myself whether I say it explicitly or not, it is a fact. :)

I am seeing how people are treating even their own parents when they get older. They were like King and Queen when they brought them up. They had control over everything. Once they get older, they are treated like "you don't want to know how" by their own children! That's what life is all about. Unless you are "meaningless God" you wont be treated same way as time passes. நேற்று தேவையான நீங்கள் இன்னைக்கு அதே நபருக்கு குப்பைதான். உங்கள் மனது புண்படக்கூடாது என்பதற்காக குப்பைனு சொல்லாமல் உங்களை கோவில் என்பார்கள். அதையெல்லாம் நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.

மனிதன் மாறக்கூடியவன். சுயநலமானவன். அவனவன் தேவைகளுக்கேற்ப வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பான். யாரையும்-அது யாராயிருந்தாலும் சரி, உங்களைத் தவிர- நம்பி ஏமாறாதீர்கள்.  
உங்களுக்கு என்ன முக்கியம் என்றால் உங்கள் மனநிலை. எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களோட இருந்து போராடப்போவது நீங்கள் மட்டும்தான். அதற்கு உங்கள் தன்னம்பிக்கைதான் முக்கியமானது. உங்களை மட்டும் நீங்கள் நம்புங்கள்.  ரொம்பவும் சாதாரணமான மக்கள் நிறைந்த உலகம்தான் இது. அந்த மக்களில் உங்க எல்லா உறவுகளும் அடங்கும்! அப்படி இல்லை, உங்க உறவுகள் உலகிலே உயர்ந்தவர்கள்னு சொல்லிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றி சந்தோஷமாக வாழலாம்தான்.  ஆனால் எதை இழந்தாலும், யாரை இழந்தாலும், நம் வாழ்க்கையை அதற்கேற்ப  மாற்றியமைத்து வாழக் கற்றுக்க வேண்டும். அதற்கேற்ற மனநிலையை நீங்க பெறவேண்டுமென்றால் உங்களைத்தவிர யாரும் எப்படி வேணா மாறுவார்கள் என்கிற உண்மையை உணர வேண்டும். அந்த உண்மையை உணர்ந்து வாழும் கலையை நீங்க கற்றுக்கொண்டால் சாகிற வரைக்கும் உங்களுக்கு வெற்றிதான். மற்றவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புதான் உங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும் விரக்தியையும் தரும்.

உங்க தகுதி என்னவாயிருந்தாலும், நீங்க என்ன சம்பாரித்தாலும், உங்களை ஊர் உலகம் எப்படியெல்லாம் விமர்சிச்சாலும் நீங்க வாழ்ந்து காட்டணும்னா அது உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒன்றுதான் உங்களுக்குப் பிரதானமானது. இது மிகப்பெரிய உலகம். ஒரு நண்பன் போனால் இன்னொருவன். ஒரு காதலி போனால் இன்னொருத்தி! ஒரு வேலை போனால் இன்னொன்னு, பணம் போனால், நாளைக்கு சம்பாரிக்கலாம், இல்லைனா தகுதிக்கேற்ப ஏழையா வாழக் கற்றுக்கலாம்.

நல்ல ஹெப்த்தியானவங்க அநியாயமாக சாவதையும் நம் கண் முன்னால்  பார்க்கத்தான் செய்றோம். பெரிய பணக்காரன் தெருவுக்கு வர்ரதையும் பார்க்கிறோம். இன்னைக்கு சூப்பர் ஸ்டாராக உள்ள ஒரு விளையாட்டு வீரன் சில வருடங்களில் சாதாரணவனாவதையும் பார்க்கிறோம். இதையெல்லாம் பார்த்தும் நாம் வாழக் னு கற்றுக்கொள்ளனும்.  எந்த ஒரு சூழலிலும். பழசை நினைத்து அழுது, பொலம்பி எதுவும் ஆகப்போவதில்லை.

சொல்ல மறந்துட்டேனே, இறைவன்னு ஒருவர் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்னு உங்களை நீங்க ஏமாற்றிக்கலாம்! :)  ஆனால் நீங்கள் இழக்கும்  உயிரையோ, உறவையோ அவர் திருப்பி கொண்டு வந்து கொடுக்கப் போவதில்லை! Again, you can brainwash yourself thinking that "God did a bad thing to me to teach me a lesson or whatever". இங்கேயும் கடவுள் என்கிற ஒரு கற்பனைப் பாத்திரத்தை வைத்துக்கொண்டு உங்க மனசை நீங்க திடப்படுத்த்க்கிறீங்க அவ்ளோதான் என்னைப் பொருத்தவரையில். :)

கலைஞர் டி வி துணைச்சேனல், சிரிப்பொலி சேனல் னு ஒண்ணு இருக்குல அதுல ஒரு சில அக்காக்கள்,  இல்லைனா எங்கேயோ பிடிச்சுட்டு வந்த மாரி இருக்க அண்ணாக்கள் எல்லாம் நேரலையில் வருவாங்க. சரி, வந்தா, உங்க பேரென்ன, எங்கேயிருந்து பேசுறீங்க, ஜோக் சொல்லுங்கனு ஏதாவது கேட்டால் பரவாயில்லை. தொலைபேசியில் அவங்களிடம்  பேசுபவர்களிடம் ரொம்ப அக்கறையா குசலம் விசாரிப்பாங்க. "எப்படி இருக்கீங்க?" "எப்படி படிக்கிறீங்க?" "எத்னையாவது ராங்க் வாங்குறீங்க?" "வேலை எல்லாம் எப்படிப் போகுது?" னு ஒரு கேள்வியை கேட்டு, அவர்கள் பதிலுக்கேத்தாற்போல அக்கறையா ஒரு பதிலையும் சொல்வதைப் பார்த்தால் சிரிக்கிறதா அழுகிறதானு தெரியலை. அவர்கள் ஏன் அங்கே வர்ராங்க? அது அவர்கள் தொழில்! இவர்கள் தன் வாழ்வில் அன்றாடம்  பார்த்துப் பழகும் அருகில் உள்ள நண்பர்கள், உறவினர்கள், ஏழைகள், தேவை உள்ளவர்கள் யாரைப்ப்பற்றியும் இதுபோல் விசாரிப்பார்களா? அவர்கள் நலன் கருதி  கவலைப்படுவார்களா? இல்லை யாருக்கும்  உதவுவார்களா? என்பது சந்தேகமே! விலைமாது செக்ஸை அவள்  கஸ்டமரிடம் எஞ்ஞாய் பண்ணுவாளா?  அது அவளுக்குத் தொழில்! நிச்சயம் காமம் அங்கே ப்ளெஷர் கெடையாது. அதேபோல்தான் இவர்கள் அக்கறைகளும்! சும்மா தொழில்! வயித்துப் பொழைப்பு!

புத்தாண்டுனா என்ன விசேஷம்? லைசண்ஸ் டு ட்ரிங்க் னு சொல்லலாம்.  காலம் மாறிப் போயிடுச்சு. நம்ம ஊரில் இப்போலாம் பெண்கள் மட்டும் புகை பிடிப்பது, தண்ணியடிப்பது இல்லை. மற்றபடி ஆண்கள் எல்லாருக்கும் புத்தாண்டுனா குடிக்கணும். புத்தாண்டுக்கு குடிக்கக்கூடாதுனு சொல்லீட்டா அது "ஹாப்பி" நியு இயராக ஒருபோதும் இருக்காது. வெள்ளைக்காரந்தான் இதெல்லாம் ஆரம்பிச்சு வச்சது. இது அவனோட புத்தாண்டுதானே? நாடுவிட்டு நாடு போயி அடுத்தவன்  நாட்டைக்கவர்ந்து, கொள்ளையடிச்சு பொழைப்பை ஓட்டுறவன்ந்தான் இதுமாரி ஹாப்பி நியு இயர்னு வாழ்த்தவும், குடிக்கவும்  கத்துக் கொடுத்துட்டுப் போயிருக்காணுக. வருட ஆரம்பத்தையே போதையில்தான் ஆரம்பிக்கிறார்கள். BTW, I did not consume alcohol on the "new year eve-to-new year" time. :-) ஊருக்கு மட்டும் உபதேசம் இல்லை! ஊரில் வாழும் எனக்கும்தான். :)

 ***************************

flash back 2...

2013! பதிவுலகிற்கு நல்ல காலம் பொறந்திருச்சு!

2013 பொறந்துருச்சு! பிரகாஷுக்கு ஒரே கில்ட்டி ஃபீலிங்!  அவன் அவன்  நியு இயர் ரெசொலுஷன்னு "நான் சிகரட்டை விட்டுறப் போறேன்", "நான் நான்வெஜ் சாப்பிடப்போறதில்லை", "நான் தினமும் 5 மைல் ஓடப்போறேன்" னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனால் பிரகாஷுக்குமட்டும்  இந்த வருடம் அந்தமாரி எதுவும் ஐடியாவே இல்லை.
அதற்கு காரணம் இருந்தது. கடந்த வருடங்களில் அவன் எடுத்த நியூ இயர் ரெரொலுஷன் படி எதையும் அவனால்  சில மாதங்களுக்கு மேலே ஒழுங்கா செயல்படுத்த முடியவில்லை! இந்த வருடம் பிரகாஷ்  ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். எப்படியாவது நம்மளால செயல்படுத்த முடிந்த ஒரு நியு இயர் ரெசொலுஷன் தான் இந்த வருடம் கவனமாக எடுக்கணும் என்று. இல்லைனா "உனக்கெல்லாம் எதுக்குய்யா ரெசொலுஷன் மண்ணாங்கட்டி?" னு அவன் மனசாட்சியே அவனை அறையும்!


அப்படி என்ன ஒரு ஈஸியான/உருப்படியான  ரெசொலுஷன் எடுக்கலாம்? னு யோசித்து யோசித்து  கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். "பிரகாஷு கார்னர்" என்று அவன் ஒரு தளம் வைத்திருந்தான், நம்ம பிரகாஷ். அவன் வலைதளத்தில் எழுதும் பதிவு எவனுக்கும் பிடிக்கிதோ இல்லையோ, பதிவெழுதுவதுமட்டும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். உண்மையைச் சொன்னால் பிரகாஷ், பதிவுகள்னு எதுவும் பெருசா  எழுதி நாட்டைத் திருத்தவில்லை! அவனுடைய எழுத்த்துக்குணு அவன் ஒண்ணும் பல விசிறிகளைப் பெறவில்லை! ஏதோ ஏனோ தானோனு தனக்கு தோணுகிற என்னத்தையாவது ஒரு பதிவை எழுதுவான். ஒவ்வொரு சமயம் நம்ம எதுக்கு இப்படி மாஞ்சிக்கிட்டு பதிவெழுதனும்? னு அவனே நினைப்பதுண்டு. இருந்தாலும் பதிவெழுதுறேன்னு எதையாவது தொடர்ந்து கிறுக்காமல் அவனால இருக்க முடியாது. பிரகாஷ், எதையாவது கட்டுரை, கதைனு எழுதிட்டு அதையும் தமிழ் மணம் அது இதுனு எல்லாத் திரட்டியிலும் சேர்த்து விடுவான்.  அவன் எழுதுறதை ஒரு நாளைக்கு எவனாவது தெரியாமல் அவன் தளத்திற்கு வந்துவிட்ட ஒரு பத்து இருபது  பேர் படிப்பார்கள். அப்படிப் படிக்கிறவங்களும் படிச்சுட்டு கருத்துனு எதுவும் பெருசா சொல்ல மாட்டாங்க! ஒவ்வொரு சமயம், உண்மையிலேயே தப்பித் தவறி நல்லா எழுதி இருந்தாலும்கூட இவன் பதிவை  வாசிச்சுட்டு  எதுவுமே  சொல்ல மாட்டாங்க, அவன் வாசகர்கள்! ஆனால் ஏதாவது சொற்குற்றம், பொருள் குற்றம், எழுத்துப் பிழைனு அவன் பதிவில் தப்பு விட்டு இருந்தால், அந்தக் குறையை மட்டும் பொறுப்பா வந்து சொல்லிட்டுப் போயிடுவாங்க. அதுபோல் குறை சொல்லும்போதுதான்  "இவங்க எல்லாம்கூட நம்ம பதிவை வாசிக்கிறாங்க போல?" னு பிரகாஷ் தெரிந்து கொள்வான்.

சரி, இதுதான் சரியான முடிவு!ஒரு வருடம் ஒரு பதிவுமே எழுதாமல் இருப்பதென்பது பெரிய தியாகம்தான். நமக்கும் நல்லது. நம்ம எழுத்தை  அமைதியாக வாசிச்சு ரசிக்கும் விசிறிகளையும் ஒரு மாதிரி எழுத்துத் தீணி போடாமல் பழி வாங்கியதுபோல் இருக்கும்னு தன் முடிவைத் தானே மெச்சிக்கொண்டான். ஆனால் இந்த நியு இயர் ரெசொலுஷனை பதிவுலகில் சொல்லியே ஆகணுமே? இதை சொல்லலைனா எப்படி எல்லாருக்கும் நம்ம  ரெசொலுஷன் இதுதான்னு  தெரியும்? சரினு வேற வழியில்லாமல் "உங்க நலன் கருதி, 2013 ல் நான் பதிவெழுதப் போவதில்லை! உங்களுக்கெல்லாம் நல்ல காலம் பொறந்திருச்சு" னு ஒரு தலைப்பைப் போட்டு உருக்கமாக தன் முடிவை/நியு இயர் ரெசொலுஷனைத் தெளிவாகச் சொல்லி ஒரு பதிவு எழுதி வெளியிட்டுவிட்டான்! தமிழ்மணத்தில் அதை இணைத்தும் விட்டான், பிரகாஷ்.ஆனால் என்னைக்கும் இல்லாமல் அவனோட அந்தப் பதிவை வாசகர்கள் ஒரு 100 பேர் வாசகர் பரிந்துரைவில் பரிந்துரை செய்து, தமிழ் மணம் மகுடத்தில் வேற ஏற்றி விட்டு விட்டார்கள்!. ஏன்னு தெரியலை அந்தப் பதிவுக்கு அர்த்தமான பின்னூட்டங்களும் ஒரு 100க்கு மேலே வந்து இருந்தன!


"என்ன பிரகாஷ்  இப்படி செஞ்சுட்டீங்க?"னு ஒரு சில இளம் யுவதிகள்

"நீங்க கட்டாயம் தொடர்ந்து எழுதணும்!"னு மதிக்கத்தக்க பல பதிவர்கள்.

"என்ன பிரகாஷ், இப்போத்தான் உங்களுக்கு நல்லா கோர்வையா எழுத வருது! இப்போ நீங்க நிறுத்தக்கூடாது!" னு உரிமையுடன் சிலர்.

"உங்க எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்கு, பிரகாஷ்! நான் ரெகுலரா உங்க தளம் வாசிப்பேன். ஆனால் பின்னூட்டமிடுவதில்லை"னு ஒரு இருபது பேர்.


அப்படி இப்படினு ஆளாளுக்கு பின்னூட்டத்தில் புகழ்ந்ததும், பிரகாஷாக்கு நிலை கொள்ளவில்லை! எப்படியும் அவர்களுக்கு தன் நிலைமையை விளக்கி நன்றி சொல்லணும்னு இன்னொரு பதிவை எழுதினான். :))) ஆக, கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் அவன் நியு இயர் ரெசொலுஷன் நாசமாப் போனது! :-)


பாவம் பிரகாஷ், "நம்ம மக்கள், யாரையும் ஒழுங்கா வாழவும் விடமாட்டானுக, நிம்மதியா சாகவும் விடமாட்டானுக" என்கிற உண்மை இப்போக்கூட அவனுக்கு விளங்கவில்லை என்பதுதான் அதைவிட சோகம்! 


****************************