மன்னிக்கவும்! இக்கட்டுரை பக்குவமடைந்த, மனதால் (வயதால் அல்ல!) முதிர்ச்சியடைந்த வாசகர்களுக்கு மட்டுமே!
நம் இலக்கியங்களில் கற்பு, கற்புக்கரசி என்றெல்லாம் படிச்சு இருக்கோம். சமீபகாலமாக இந்தியாவில் ப்ரி மாரிட்டல் செ க் ஸ் எல்லாம் தப்பில்லை. லிவ் இன் டுகெதர் தப்பில்லை. என்னைக்காவது ஒரு நாள் இன்னொருவருடன் உறவு வைத்துக் கொண்டால் தப்பில்ல மேலை நாட்டு மனப்போக்கு இளைய, பணக்கார சமுதாயத்திடம் வளருகிறது. இதை ஒரு வகையில் முன்னேற்றம் எனலாம். இல்லைனா பின்னோட்டம்னு சொல்லலாம். அது பார்ப்பவர் கோணத்தைப் பொறுத்து.
அந்தக் காலத்தில், வைப்பாட்டி வைத்துக்கொள்ளுதல், வேஷியிடம் போவது என்று இருந்தது. விகிதாச்சாரப்படிப் பார்த்தால் இதெல்லாம் கம்மிதான். ஆனால் இன்று, திருமணம் ஆனவாங்க, ஸ்வாப்பிங் அல்லது ஸ்விங்கிங் தப்பில்லை. த்ரீசம், ஃபோர்சம், க்ரூப் செக்ஸும் தப்பில்லைனு ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கு. விகிதாச்சாரத்தின் படி பார்த்தால் இதுவும் ரொம்ப கம்மிதான். அதனால் பயப்பட வேண்டியதில்லை? ஆனால், குடிக்கிற ஆண்கள் பெண்கள் விகிதாச்சாரம் அன்று (20 வருடங்கள் முன்பு) குறைந்து இருந்தது. இன்று என்ன? குடிக்கிறதெல்லாம் தப்பில்லை! இதில். ஆணென்ன பெண்ணென்ன?னுதான் ஆகிவிட்டது இல்லையா? அப்போ இன்னும் 20-30 ஆண்டுகளில் இதுபோல் காமக் கலாச்சாரமும் இன்றைய குடிகாரக் கலாச்சாரம்போல் மாறிவிடாதா? மாறத்தான் செய்யும்.
இதில் வேடிக்கை அல்லது பரிதாபம் என்னவென்றால் இதெல்லாம் செய்தும் இதுபோல் காமுறும் தம்பதிகள் முழு திருப்தி அடையப்போறாங்களா? என்கிற கேள்விக்கு பதில் "இல்லை" என்பதே. காமம், மற்றும் காமம் பற்றிய சிந்தனைகளுக்கு அவ்வளவு எளிதாக தீர்வு கண்டுவிட முடியாது என்பதே காலங்காலமாக நாமும் கற்றுக்கொண்டு வரும் உண்மை.சரி இன்றைய போர்னோகிராஃபி உலகில் வாழும் ஒருத்தியையும், அந்தக்காத்தில் வாழ்ந்த ஒரு செக்ஸ் அறிவில்லாத பெண்ணையும் எடுத்துக்குவோம்.
இன்னைக்கு உள்ள லிபெரல் பெண்மணி காமத்தில் திருப்தி அடைந்தவளாக வாழ்கிறாளா? ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொருமுறையும் இவள் கணவன் இவளை உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறானா? இல்லைனா பாதிக்கிண்றுதான் பலநாள் தாண்டுகிறாளா? இல்லை இவளும் இத்தனை ஆடிய பிறகும அந்தக் காலத்தில் வாழ்ந்த கட்டுப்பட்டிபோல்தான், இன்னும் திருப்தி அடையாமல் இருக்காளா? னு கவனித்துப் பார்த்தால்...
இருவருமே காமத்தில் முழு திருப்தி அடையவில்லை, அடைவதில்லை. இன்னும் குறை சொல்ல ஆயிரம் இருக்கு. ஆக, காமத்தில் எல்லையை அடைவது, திருப்தி அடைவதென்பதெல்லாம் இல்லவே இல்லை என்பதே உண்மை. அதனால்தான் காமம் சிற்றின்பம் என்கிறார்கள்.
அப்போ கற்புனா என்ன? குடும்பப் பெண், பத்தினி, எல்லாருக்குமே காம இச்சை உண்டு. கற்புடன் இருக்கணும்னா காம இச்சையே இருக்கக் கூடாது என்பது தவறான புரிதல். ஒருவர் தன் காம உணர்வை எப்படி கையாளுகிறார்? என்பதைப் பொறுத்துதான் நாம் "கற்புள்ளவள்" என்கிற முத்திரையை வழங்குகிறோம். கற்புகரசிக்கு காம உணர்வு இல்லை என்பது மிகவும் தவறான புரிதல். நம் கலாச்சாரத்தில் நீங்க பார்க்கலாம் கல்யாணத்திற்கு முன்னால் ஒருவரை காதலிப்பாங்க. பிறகு வேறொருவரை மணந்து கொள்வார்கள். அந்த வேறொருவன் தரமான ஆளாக, நம்பத்தகுந்தவனாகவும், தன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும் இருக்கும் பட்சத்தில் பழைய காதலனை மனதில் இருந்து தூக்கி எறிந்துவிடுவார்கள். இதுபோல் நம்மைச் சுற்றி வாழும் உலக நடப்பிலும் பார்க்கலாம். சினிமாவிலும் (ஆலயமணி) பார்க்கலாம். கற்பு என்பதென்னவென்றால் ஒரு பெண் தன் காம உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்ப வாழக்கையை பறிகொடுக்காமல் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு வாழ்வது. அவ்வளவே!