Tuesday, February 27, 2018

ஶ்ரீதேவி, ஜெயேந்திரர், மநீம சின்னம்!

நடிகைகள் எல்லாம் கொஞ்ச வயதிலேயே நிம்மதியாகப் போயி சேர்ந்து விடுகிறார்கள்.

ஶ்ரீவித்யா, சுஜாதா இப்போ ஶ்ரீதேவி. பாவம் இரண்டு பதின்மவயதில் இருக்கும் மகள்கள்.

ரஜினியுடன் நடித்தப் படங்களில், தர்ம யுத்தம், ப்ரியா  இரண்டும் நான் ரசித்து பார்த்தவை. வில்லனாக நடித்த படங்களீல் 16 வயதினிலே, மூன்று முடிச்சு, குறிப்பிடத்தக்கது.

என்னைக் கேட்டால் இவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யுமுன் இருந்த இவர் மூக்கு நல்லாயிருந்தது.

ஆனால் ஒன்னு ரஜினியின் இரங்கல் ட்வீட் உண்மையான ஒரு தோழியின் இழப்பு என்பது போல் உருக்கமாகவே இருந்தது.

-----------------------

பெரியவா ஜெயேந்திரர்  மரணத்தை தழுவிவிட்டாராம். சங்கர் ராமனை இந்நேரத்தில் சந்தித்து இருப்பா!

 kanchi-shankaracharya-jayendra-saraswathi-died


-----------------------

கவுதமியிடமிருந்து கமல் மேல் இப்படி ஒரு தாக்கு நான் எதிர்பார்க்கவில்லை! இது அரசியல் என்பதை எல்லாம் நான் நம்பப் போவதில்லை.

வாணி, சரிகா இப்போ இவர்.

 கமலஹாசன் இன்கம் டாக்ஸ் மட்டும்தான் ஒழுங்கா கட்டுவார் போல இருக்கு. பாவம் இவருக்குக் கூட சம்பள பாக்கியை கொடுக்கலை ராஜ் கமல் கம்பெனி என்பது பரிதாபம்.

என்னைப் பொருத்தவரையில் உடல் தானம், ரத்த தானம், இன்கம் டாக்ஸ் சரியா கட்டுறது இதெல்லாம் விட இதுபோல் கடன்களை திருப்பி கொடுக்க வேண்டியது "பெரிய மனுஷனுக்கு" ரொம்ப முக்கியம்.

------------------------------

சினிமாவைத் தான் ஹாலிவுட்ல இருந்து திருடினார் . இப்போ என்னடானா, கட்சி சின்னம் கூடவா திருட்டு?

இதுபோல் திருடிப் பழகிவிட்டால் "க்ரியேட்டிவிட்டி" சுத்தமாக இல்லாமல்ப் போய்விடும் என்பதற்கு இந்தாளூ நல்ல உதாரணம்.
makkal neethi mayyam logo---------------------------

உச்ச நீதிமன்றம் லதா ரஜினிகாந்தை 6 கோடிபோல கடனைத் திருப்பிக் கொடுக்கணும்னு தீர்ப்பு வந்ததா பத்திரிக்கையில் படிச்சேன்.

எனக்கு என்ன புரியலைனா 6 கோடியெல்லாம் பெரிய விசயமா என்ன?  ஏன் இப்படி இருக்காங்க இந்தம்மா?!!!

-----------------------------------Wednesday, February 21, 2018

திராவிட கைக் கூலிகளுக்கு புதிய பார்ப்பனத் தலைவர்!


அடிமையாக வாழ்வதையே பெருமையாக நினைப்பவன் திராவிடன். அதுவும் பார்ப்பன அடிமையாக வாழ்வதில் இவனுக்கு இன்னும் பெருமை . ஜெயலலிதா போனதுக்கப்புறம் அழுதழுது புலம்பிய திராவிட கைக்கூலிகளை திருப்திப் படுத்த இன்னொரு பார்ப்பன தலிவர் வந்துவிட்டார்!


அதென்ன கட்சி மநீம?ஆங்கிலத்தில் எம் என் எம்?

அது ஏன் மையம், மய்யமாக நிக்கிதுனு தெரியலை?!

கட்சி பெயர்: மக்கள் நீதி மய்யம்

கட்சித் தலைவர்: பார்ப்பனர் கமலஹாசன்

தொண்டர் படை: திராவிட கைக்கூலிகள்!


Image result for kamal hassan brahminImage result for dravidian slaves
Thursday, February 1, 2018

ஹார்வேட் தமிழ் இருக்கை, டொனேசன்!

ஒரு சில சமயம் நாந்தான் தமிழின துரோகி நம்பர் 1 னோ னு எனக்கு சந்தேகம் வருவதுண்டு. இன்றைய சூழலில் ஹார்வேட் தமிழிருக்கைக்காக லட்சமும் கோடியுமா தமிழர்கள் பணத்தை அள்ளி எறிந்து எப்படியோ அந்த தமிழ் இருக்கையை பெற்றுவிட வேண்டும் என்று நிக்கிறார்கள். அப்படி பெற்றுவிட்டால் தமிழ் காலங்காலமாக் அழியாத ஒரு மொழியாகிவிடுமோ என்னனு தெரியவில்லை!

என்னைப் பொருத்தவரையில் இதெல்லாம் தேவையற்ற ஒன்னு. காசு ரொம்ப இருந்தால் தமிழ்நாட்டில் தமிழ் பிச்சைக்காரர்கள் இல்லாமல்ப் போக ஏதாவது வழி பண்ணுங்க. மும்பையில் போய் கொத்தடிமையாக வாழும் தமிழர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். இல்லைனா ரஜினி செய்யாத காவிரி நதி நீர் இணைப்புக்கு இந்தப் பணத்தைக் கொடுத்து நதிகளை இணைக்க உதவுங்கள்.

அமெரிக்காவைப் பொருத்தவரையில் படிப்பு என்பது வியாபாரம். ஹார்வேட் ஒரு பணம் சம்பாரிக்கும் தொழில் நிறுவனம். தமிழ் வளர்க்கிறேன்னு பணத்தை அள்ளி எறிந்து சொல்லிக்கிட்டு ஏன் இப்படி தமிழ் மானத்தை காசு கொடுத்து விக்கிறீங்க?

உடனே தமிழ் மேதைகள் எல்லாம் வந்து,

"உனக்கு புரியலை?'

"இது ரொம்ப ரொம்ப தேவையான, அவசியமான ஒண்ணு. தமிழன் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை, தமிழ் வாழணும்னு உனக்குப் புரியலை"

"இன்றைய சூழலில் காசு கொடுத்துத்தான் தமிழ் வளர்க்கணும். இதுகூட தெரியாதா உனக்கு?" னு ஏதாவது உளறிக்கொண்டு என்னை முட்டாளாகப் பார்ப்பார்கள்.

இதெல்லாம் தேவையா?

நான் ஹார்வேட் தமிழ் இருக்கைக்கு ஒரு பைசாக் கூட டொனேட் பண்ணவில்லை!  I would rather use that money for something worthy! என்பது உங்களுக்கு கூடுதல் செய்தி!