Thursday, September 24, 2015

சண்டியர்கரன் என்னும் பைத்தியக்காரப்பய!

இந்தப் பதிவை ஒண்ணும் விளக்கமாக எழுத வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பைத்தியக்காரப்பயலோட ட்விட்டர் சிலவற்றை வாசிச்சாலே போதும். ஒரு ந டி க னை மதிப்பதும், இன்னொரு ந டி க னை வெறுப்பதிலும் தவறில்லை! ஆனால், டிவிட்டர் போன்ற தளங்களில்  இவன் உளறும் உளறல்கள் இவனுக்கு நேரம் சரியில்லை என்று தெளிவுபடுத்துகிறது.


Sep 20
குஷ்பு இட்லிக்கு தான் மதுரை பேமஸ் என்று நினைத்திருப்பான் குமுற குமுற அடிப்பதுக்கும் தான் என்று இன்னைக்கு புரிஞ்சிருப்பான்

  1. கோச்சா நஷ்டத்துக்கு லுங்கா... லுங்கா நஷ்டத்துக்கு குபாலி... இது தான் குஜினியின் மார்க்கெட்!!!
  2. உலகத்திலேயே நஷ்ட ஈடு கேட்டு முதன் முறையாக உண்ணாவிரதம் இருந்தது குஜினி படத்தை வெளியிட்டவர்களும் திரையிட்டவர்களும் தான்...
  3. ஆமை குமாருக்கு கூட ஹிட் படம் கொடுத்தவரை... பலூன் குமாராக்கி வீட்டு அனுப்பியவர் குஜினி!!!
  4. குஜினியே தயவு செஞ்சு உன் ரசிகர்களுக்கு ஆமையை வச்சாவது பிரியாணி செஞ்சு போடு.... சி.கா கிட்டே போயி சில்லரை கேட்குது....அவனுக்கு கூஜா தூக்கி

    பெத்து விட்டுருக்காங்க பாருங்க! இந்தப் பைத்தியக்காரப்பயலுக்கு ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் அப்புறம் ஒரு ப்ளாகர் அக்கவுண்ட். இவனோட நலவிரும்பிகள் எல்லாம் இவனைப் பார்த்துக்கோங்கப்பா! காலம் கெட்டுக் கெடக்கு,  எவனாவது போட்டுத் தள்ளப்போறான்!

    சண்டியர் அண்ணா! உங்களுக்கு அப்பனையெல்லாம் பார்த்தாச்சு. கவனமா இருங்க! ஒரு நேரம்போல ஒரு நேரம் இருக்காது!

Tuesday, September 22, 2015

முகமூடிப் பதிவர்களை ஒரேயடியா ஒதுக்கிடலாமே?

பதிவுலகில் ஒரு சிலர் தங்கள் கருத்தைப் பரிமாறிகொள்வதுடன் சரி, தன் முகவரி, தன் புகைப்படம், தன் தொழில், தன் சாதி, தன் மதம் போன்றவற்றை சொல்லாமலே காலத்தைக் கடத்துகின்றனர். இது தனிப்பட்ட ஒருவருடைய விருப்பம். அதை மதிக்கத் தெரியாத இன்றைய பதிவுலக ஜாம்பவான்கள் சிலர், இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம் முகமூடிப் பதிவர்கள்.  இது வெளிக்கு!  மனதுக்குள் நினைப்பது "இவனுக எல்லாம் எதுக்கு பதிவுலகில் பதிவெழுதுகிறானுக, முதுகெலும்பில்லாதவனுக" என்பது.

இங்கிதம் தெரிந்த ஒரு சிலர், இது அவர்களின் சொந்தப் பிரச்சினை, இதை கூகுலே அனுமதிக்கிறது. இது சட்டவிரோதமானதல்ல! என்றெல்லாம் பல முறை எடுத்துச் சொன்னாலும் ஒரு சிலர் இதை விடுவதே இல்லை. மறுபடியும் மறுபடியும், ஏன் இப்படி இருக்காங்க?னு மூனு மாத்திற்கு ஒரு முறை இவர்களை மிகுந்த "அக்கறை"யுடன் விமர்சிக்காமல் விடுவதில்லை!  இந்த முகமூடிப் பதிவர்கள் இவர்கள் மனநிலையை ரொம்பதான் பாதிக்க வச்சுட்டாங்கப்பா.

உங்களுக்கு என்ன பிரச்சினை? பதிவர் கூட்டமா? முகம் காட்ட விருப்பப்பட்டவங்க ஒண்ணா சேருங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுங்க. தமிழை இன்னும் மேலே கொண்டு போங்க! உங்கள் தமிழ்ப் பணியை எல்லாரும் மெச்சி விருது  கொடுக்கட்டும். அது ஏன் சும்மா முகம் காட்ட விரும்பாதவர்களும்  எல்லாரும் அவங்க முகத்தை காட்டியே ஆகணும்னு திரும்பத் திரும்ப அடம் பிடிக்கிறீங்கனு விளங்கவில்லை!

முக்காடு போட்டு இருக்கும் ஒரு இஸ்லாமியப் பெண்ணை, "முகத்தைக் காட்டினால் என்ன?" என்பீர்களா? ஏன் அப்படி செய்வதில்லை? அது அவருடைய விருப்பம். அவரை முகம் காட்டச் சொல்லி விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை! என்பதை உணர்ந்துதானே?

இந்த உலகில் பலதரப்பட்ட மனிதர்கள் பிறந்து வாழத்தான் செய்றாங்க. அவங்க எல்லாம் தமிழ் தெரிஞ்சவங்களா இருந்தால் அவங்க எல்லாம் உங்க உறவு என்று யாரும் சொல்லிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி எதுவும் அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை!

முகம் தெரிந்த பதிவர்கள்தான் உங்களுக்குப் பிடிக்குமா? அவங்க மேலேதான் உங்களுக்கு மரியாதையா? அவர்களோட மட்டும் உறவாடுங்க. உங்களுக்குப் பிடிக்காத முகமூடிப் பதிவர்கள் பதிவுகளை புறக்கணியுங்கள்! முகமூடி அணிந்தவர் உங்க தளத்தில் கருத்துச் சொல்ல வந்தால் உங்க தரத்துக்கு அவர்கள் தரம் குறைந்த தென்றால், அவர்கள் பின்னூட்டங்களை ஒரு போதும் வெளியிடாதீங்க! அவர்களை அறவே புறக்கணியுங்கள்! இதெல்லாம் உங்க உரிமைகள்!

அதை விட்டுப்புட்டு எதுக்கெடுத்தாலும் முகமூடிப் பதிவர்கள் ஏன் தங்கள் அழகு முகத்தை காட்ட மாட்டேன்றாங்க? அவங்க பொறந்த ஊர் என்ன? என்ன சாதி? என்ன மதம்? அவர்களுக்கு  என்ன சம்பளம்? என்கிற கவலையெல்லாம் உங்களுக்கு எதற்கு?

"கார்பன்"க்கு வாலென்ஸி என்ன? ஏன் ரெண்டு இல்லை? நாலு?

டையமண்ட் ஏன் கடினமானதாக இருக்கிறது?

தங்கம் மட்டும் ஏன் மஞ்சளாக மிளிருகிறது?

வைரஸுக்கு உயிரில்லையாமே? நெஜம்மாவா?

என்கிற கேள்விகளுக்கெல்லாம் இந்த வெர்ச்சுவல் உலகில் முகம் காட்டாத, முகம் தெரியாத, தமிழ் தெரியாத  ஒருவர் வந்து வலையுலகில் சரியான பதில் சொல்வதில்லையா? அந்த பதில் உங்களுக்கு உபயோகம் ஆவதில்லையா? முகம் தெரிந்தவர்  "தவறுதலான" பதிலாக சொன்னாலும் அந்த பதிலைத்தான் நான் எடுத்துக்குவேன்னு அடம் பிடிப்பீர்களா?

நீங்க நல்லா வாழுங்கள்- உங்கள் இஷ்டப்படி!

மற்றவர்களை வாழவிடுங்கள்- அவர்கள் விருப்பப்படி!


Wednesday, September 16, 2015

கபாலியும் தூங்காவனமும்- ரிலாக்ஸ் ப்ளீஸ்!

தூங்காவனம் டரைலர் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்புதுனா கபாலியின் ஸ்டில் இன்னொரு பக்கம் ரிலீஸ் ஆகியிருக்கு!

அறுபது வயதுக்கு மேலேதான்  இவங்க ரெண்டுபேரும் இன்னும் புத்துணர்ச்சியுடன் நடிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. இதில் இன்னும் விசேஷம் என்னனா இருவரும் இளம் இயக்குனர்களை இயக்க வைத்து நடிக்கிறார்கள்.கபாலி

தூங்காவனம்
ரெண்டு படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆச்சுனா எப்படி இருக்கும்? நீங்க ஆசைப்பட்டாலும் அதெல்லாம் மலையேறிப்போன காலம் இது!
கபாலி

Tuesday, September 15, 2015

ஒரு காலத்தில் இவ்ளோ மோசமா நான் கதை எழுதி இருக்கேனா!!

சில வருடங்கள் முன்னால போயி (இந்த தள ஆர்கைவ் லதான்) நான் எழுதிய ஒரு கதையின் ஒரு எபிசோடை  எடுத்துப் படிச்சுப் பார்த்தேன். 

என்ன ஆச்சர்யம்!! நானா இப்படியெல்லாம் கதை எழுதினேன்னு எனக்கே ஆச்சர்யமா இருக்குப்பா!

 அப்படி என்னத்தை எழுதிப்புட்டீங்கப்பூ? னு கேட்பீங்களே!

நான் ஒரு மாதிரியா உங்களை "warn" பண்ணிட்டேன்.. இனிமேல் தொடர்ந்தால் உங்க  துணிச்சலை நான் பாராட்டுறேன்.  

மற்றபடி விளைவுகளுக்கு  நான் பொறுப்பில்லை!  உங்க பாடு, அன்றைய வருண் பாடு!

--------------------------

 

ரொம்ப செக்ஸியா இருக்கு! கடலை கார்னர் 62

"இந்த போர்டை தூக்கி வர இவ்ளோ நேரமா, கண்ணன்?"

"கொஞ்சம் கவனமா தூக்கி வந்தேன். ஏதாவது டேபிள் இருக்கா இதை அதுமேலே வச்சு விளையாட?"

"இந்த டீ டேபில் சரியா வருமா?"

"தட் வில் பி பெர்ஃபெக்ட்!"

"சரி கேர்ரம் போர்டை வச்சுட்டு வந்து காஃபியக் குடிங்க, கண்ணன்."

"நெஜம்மாவே உனக்கு விளையாடத் தெரியுமா?"

"நெஜம்மாத்தான். இதோட பத்துத்தர கேட்டுட்டுட்டீங்க, இதே கேள்வியை!!காஃபி நல்லாயிருக்கா?"

"யு டேஸ்ட் பெட்டெர் தான் யுவர் காஃபி!"

"அப்படியா? நான் எல்லா இடத்திலும் ஒரே டேஸ்டா? இல்லைனா வேற வேறயா?"

"அதெப்படி ஒரே டேஸ்டா இருப்ப?"

"காஃபி நல்லாயில்லையா?"

"ரொம்ப நல்லாயிருக்குடா!சரி வெளையாடுவோமா? எந்த ஸ்ட்ரைக்கர் வேணும் உனக்கு? ப்ளாஸ்டிக்கா? இல்லைனா ஐவெரி ஸ்ட்ரைக்கரா? பிக் ஒன்!"

"ப்ளாஸ்டிக்லதான் நான் வெளையாண்டு இருக்கேன். இதென்ன இத்தனை ஹெவியா இருக்கு?'

"இது ஐவெரி ஸ்ட்ரைக்கர்னு சொல்லுவாங்க. உண்மையிலேயே ஐவெரியானு தெரியலை."

"ஆமா, ரெண்டு பேரு வெளையாட ஒரு ஸ்ட்ரைக்கர் போதாதா?"

"டோர்னமெண்ட்ல எல்லாம், யு வில் ஜுஸ்ட் ப்ளே வித் யுவர் ஸ்ட்ரைக்கர். அவன் அவன் ஸ்டரைக்கரை அடுத்தவனை தொடக்கூட விடமாட்டானுக!"

"என்ன டோர்னமெண்ட் அது இதுனு சொல்றீங்க? நீங்க என்ன பெரிய சேம்பியனா?"

"நான் இல்லைடா. ஒரு சிலர் ஆடும்போது பார்த்து இருக்கேன். நான் இந்த ஐவெரி ஸ்ட்ரைக்கர்ல நான் வெளையாடுறேன்."

"சரி, அடுக்குங்க! இதெதுக்கு இவ்ளோ பவ்டெர் போடுறீங்க?"

"அப்போத்தான் ஃப்ரிக்ஷன் இல்லாம ஸ்மூத்தா இருக்கும்."

"சரி அடுத்து எப்போ பெட் ரூம், கண்ணன்? ரொம்ப நாளாச்சு தெரியுமா?"

"ஏன் மறந்தா போயிடப்போது?"

"ஹா ஹா ஹா. நீங்க மறந்தாலும் அதிசயப்பட ஒண்னுமில்லை!"

"எப்போப் பார்த்தாலும் இதானா?"

"எப்போப் பார்த்தாலுமா? ஆமா ஒரு நாளைக்கு அஞ்சுதர என்னை சொர்க்கத்து அழச்சுண்டு போறீங்களாக்கும்? எவ்ளோ நாளாச்சு!!"

"யு ஜஸ்ட் ஹாட் யுவர் பீரியேட்ஸ்?"

"சோ வாட்?"

"வாட்!!!"

"ஹா ஹா ஹா!"

"சரி, கேரம் வெளையாடலாமா?!"

"சரி, ரூல்ஸ் என்னனு சொல்லுங்க?"

"ரெண்டு விதமா ஆடலாம். ஒண்ணு நம்ம பக்கத்தில் உள்ள ஆர்ரோல உள்ளதெல்லாம் டைரெக்ட் டச் பண்ணக்கூடாது. பக்கத்தில் உள்ள பாக்கட்ல உள்ளதை ரிவேர்ஸ்ல வெளையாடி "சிங்க்" பண்ணனும்"

"அதானே யுஸுவல் ரூல்ஸ்?"

"இப்போ எல்லாம் ரூல்ஸ் மாத்தீட்டாங்கடா. ஆர்ரோ ல உள்ளதையும் எல்லாம் அடிக்கலாம். அப்புறம் உன் பக்கத்தில் உள்ள "பாக்கட்"லயும் காயினை உன் தம்ப் வச்சு இப்படி, இங்கே பாரு, இப்படி ஆடி "சிங்க்" பண்ணலாம்!"

"தம்ப் லயா? அதெல்லாம் கெடையாது. பழைய ரூல்ஸ்தான் எனக்குத் தெரியும்!"

"இல்லைடா! இப்போ எல்லாம் தம்ப்ஸ்னு வேற மாதிரி ஆடுவாங்க!'

"அதெல்லாம் எனக்குத் தெரியாது! உங்க பக்கத்தில் உள்ள ஆர்ரோவிலே உள்ளதை டைரெக்ட்டா அடிக்கக்கூடாது! ஆர் யு "ச்சீட்டிங்" மி, கண்ணன்?"

"ஏமாத்தலாம் இல்லடா! போய் ஆண்லைன்ல லேட்டெஸ்ட் ரூல்ஸ் படிச்சுப்பாரு!"

"எனக்கு தம்ப் ல ஆடத்தெரியாது!'

"சரி, ஓல்ட் ஃபேஷன்ட் கேம் ஆடுவோம்!"

"நான் ஸ்டார்ட் பண்ணவா?"

"யாரு மைனஸ் போடுறாங்களோ அவங்கதான் ஆரம்பிக்கனும்."

----

----

"யு மிஸ்ட் இட்..இந்தாங்க "மைனெஸ்" போட்டாச்சு!"

"யு ஹாவ் குட் கண்ட்ரோல்டா! சரி, ஆடு!"

"நீங்களே ஆரம்பிங்க!"

"சரி! எனக்கு வைட் தான் பிடிக்கும்"

---

---

"என்ன இது கண்ணன்!! முதல் அடியிலேயே நாலு வைட் காணோம்?"

"அதான் இந்த ஐவெர்ரி ஸ்ட்ரைக்கர் ஸ்பெஷாலிட்டி! சரி. ஆடு!"

"இருங்க. கொஞ்சம் யோசிக்க வேணாமா?"

"இதென்ன செஸ்ஸா யோசிக்க?"

"ஸ்ஸ்ஸ்! கொஞ்சம் சும்மா இருங்க, கண்ணன்!"

"உதட்டை அப்ப்டிக் குவிக்காதே!"

"ஏன்?"

"ரொம்ப செக்ஸியா இருக்கு. என்னால கேரம் வெளையாட முடியாது"

"ரியல்லி? இப்படி பண்ணினால், கிஸ் பண்ணனும் போல இருக்கா?"

"ஆமா! ரொம்ப செக்ஸியா இருக்கு! சரி வெளையாடுடா!"

"சரி, முகத்தை சிடு சிடுனு வச்சு ஆடுறேன்"

"இப்போவும் அழகாத்தான் இருக்க!"

"சரி, வெளையாட விடுங்க!"

"சரி, ஆடு!"

-----
------

"ஏய் நெஜம்மவே நல்லா ஆடுறடா!"

"சரி யார் வின் பண்ணுறானு பார்ப்போம்!"

---

--

"இதென்ன என் காய்ன் எல்லாம் இப்படி உங்க காய்னை முன்னால வச்சு ப்ளாக் பண்ணுறீங்க?'

"கஷ்டமா இருந்தா, நீ போட்டுத்தா!"

"கொழுப்பா? இருங்க நான் என்ன பண்ணுறேன் பாருங்க!"

"என்ன பண்ணுவ?"

"வெய்ட், வெளையாடுங்க!'

---

---

"வெளையாண்டாச்சு!'

"ரெண்டு வைட் தான் மிச்சமா? எனக்கு இன்னும் 4 காய்ன் இருக்கு"

"திறமையைக் காட்டு!'

---

----

"சரி, ஆடுங்க! இங்கே பாருங்க!"

"ஏய் ஏன் எழுந்துரிக்கிற?! என்ன பண்ணுறடா?"

"தெரியலையா? டாண்ஸ்! உங்கள காண்ஸெண்ட்ரேஷனை டிஸ்ட்ராக்ட் பண்ண!"

"இதெல்லாம் அநியாயம்!'

"இஸ் தட் செக்ஸி?"

"ஓ மை காட்!"

"சரி, ஆடுங்க!"

"ஐ வில் மிஸ், நவ்!'

---

--

"சீ, ஐ மிஸ்ட் இட். இட் இஸ் ஆல் பிகாஸ் ஆப் யுவர் ****! "

"ஹா ஹா ஹா. ஸ்ட்ரைட்டா உள்ள காயின்கூட போக மாட்டேங்கிது!"

"வை டு யு ஷேக் யுவர் பட் லைக் தட்? இட் டேர்ன்ஸ் மி ஆண்!'

"இதுதான் பூட்டி டாண்ஸ்!'

"ஜீசஸ்!'

"லைக்ட் இட்?'

"லவ்ட் இட் டார்லிங்!'

"சரி சரி வெளையாடுங்க!"

-தொடரும்

---------------------

இதில் சோகம் என்னனா, இது மாதிரி ஒரு கதையெல்லாம் இன்னைக்குத் தலைகீழா நின்னாலும் எழுத முடியாது! :(

Thursday, September 10, 2015

சாமி என்னும் கற்சிலைக்கு எதுக்குப் பாலாபிஷேகம்?

ஏழைகள் நிறைந்த நாடு இந்தியா. நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது அபத்தம். ப்ரோட்டீன் ரிச் உணவான பாலை மாட்டை ஏமாத்தி அதிடம் இருந்து பறித்து, மனிதன் தன் தேவைக்கு பயன்படுத்துகிறான். சரி, போகட்டும். ஏழ்மை நாடான இந்தியாவில் சினிமா நடிகர் களின்  'கட் அவ்ட்'க்கு பாலை  ஊற்றுவதைவிட  அந்தப் பாலை ஏழைக்குழந்தைகளுக்குத் தரலாம். இதில் மாற்றுக்கருத்து சிந்திக்கத் தெரிந்த மூளை உள்ள யாருக்கும் இருக்காது. அப்படி சிலைக்கு பாலாபிஷேகம் செய்பவன் ஒரு அடிமுட்டாள்!

  Image result for பாலாபிஷேகம்சரி, கடவுள் என  ராமன், இலக்குவன், முருகன், கணேசன், ஐய்யப்பன், சரஸ்வதி, லட்சுமி, காளியாத்தா, மாரியாத்தா னு உள்ள உருவச் சிலைகளை வடித்து மனிதன் தன் மனவியாதிக்கு மருந்தாக பயன்படுத்துகிறான்.

தான் செய்யும் அயோக்கியத்தனத்தால் தனக்கு ஏற்படும் மனப் பிராந்தியை சரி செய்ய இதுபோல் கடவுள்ணு சொல்லிப் பல கற்பனை கேரக்டர்களை உருவாக்கி தன் மனவியாதிக்கு மருந்தாக பயன்படுத்துகிறான். சரி போகட்டும், எப்படியோ அவன் மனம் நன்னிலை அடைந்தால் சரி.

 


அதோட நின்றானா? அதுமட்டுமல்லாமல் அதே சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்கிறான். இது மட்டும் அபத்தம் இல்லையா? எனக்கு விளங்கவில்லை!

 உடனே நம்ம பக்தசிகாமணிகள் எல்லாம் நம்மளை வில்லனைப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள்.

மனிதர்களின் முக்கியமாக, பக்தகோடிகளின் மூளை வினோதமானது. தனக்கு விருப்பமுள்ள அபத்தத்தை எல்லாம் கண்டு கொள்ளாது. தனக்குப் பிடிக்காத அபத்தத்தை பூதக்கண்ணாடி இட்டுப் பார்க்கும். வேடிக்கையான உலகம் இது!