Tuesday, March 20, 2018

ஸ்டீஃபென் ஹாக்கிங்க்கு ஆளாளுக்கு இரங்கல்?!

அவர் ஒரு நாத்திக அறிவியலாளன் இறந்துட்டார். உடனே இரங்கல் தெரிவிச்சு நானும் மேதை தனக்கும்  சொந்தம்னு காட்டிக்கணும். இதுதான் இன்றைய "உலகம்". "மக்கள் நீதி". "மய்யக் கருத்து".

 இவர் யாரு? பிறப்பால் ஆங்கிலேயர். ஆக்ஸ்ஃபோர்ட் பலகலைகழகத்தில் பேராசிரியர். தியரிடிகல் ஃபிசிஸிஸ்ட்!  முக்கியமாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இது ஒண்ணும் அபூர்வமெல்லாம் இல்லை. நான் பார்த்தவரையில் பொதுவாக அறிவியல்த்துறையில் உள்ளவர்களில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் அதிகம்.

அறிவியல் சாதனைகளுக்குப் பெரிய பரிசுனா.. நோபல் பரிசு எதுவும் பெறவில்லை.  அதனால் இவர் குறைந்தவர் இல்லை.  இவர் ஒரு பெரிய தியரிடிகல் ஃபிசிசிஸ்ட்தான். அப்படி என்னதான் ஆராய்ச்சி பண்ணினார்? "ப்ளாக் ஹோல்ஸ்" னு சொல்றாங்க. அப்படினா? அதைப்பற்றி நான் கவனமாக இன்னும் படிக்கவில்லை!

இப்போலாம் ஜெயமோகன்தான் பிரபஞ்சம் பத்தி ரொம்ப எழுதுறார். இன்னொரு பக்கம் நம்ம ஹார்வேட் மேதை கமலஹாசன். விஞ்ஞானத் துறையில் உள்ளவன் எல்லாம் ஏதாவது ஒரு சின்ன மூலையில் ஆராய்ச்சி பண்ணி சின்ன சின்ன விசயங்களைப் புரிந்துகொள்ள போராடிக்கொண்டு இருக்கார்கள். ஆனால் ஜெயமோஹனும், கமலஹாசனும்தான் எல்லாம் தெரிந்ததுபோல் உளறித் தள்ளுகிறார்கள்.

 "Credit hog" னு சொல்வார்கள். என்ன எழவைனாலும் பேசி பெரிய ஆள்னு காட்டிக்கணும். உளறுவது புரியவில்லை என்றால். உளறுபவந்தான் ஊனன். கேட்பவனல்ல என்கிற உண்மை விளங்காத மடமை நிறைந்த "உலகம்" இது.

மனிதன் சின்னச் சின்னப் பிரச்சினைகளை என்றுமே அனுகுவதில்லை. ஏனென்றால் அவனால் அதற்கு சின்ன சின்ன தன் கட்டுப்பாட்டில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிவதில்லை. பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு தான் தீர்வு காண்பதுபோல் நடிக்கிறது. இதுதான் இன்றைய "உலகம்"! எலி வேட்டையை விட புலி வேட்டைக்குச் என்று அது கடித்து சாவதுதான் பெருமை.

சரி நம்ம  ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி வேற ஒருகோணத்தில்  அனுகுவோம்.

ஸ்டீஃபென் ஹாக்கிங்க்கு என்ன நோய்?

ஏன் அவர் வாதம் வந்ததுபோல் ஆனார்?

எ எல் எஸ் என்கிறார்கள் இவருக்கு வந்த வியாதி. இதுவும் ஒரு  neurodegenerative disease என்பார்கள். அவ்வகையை சேர்ந்த வியாதி. Huntington disease. Alzheimer's disease  போல "நியூரான்" பாதிக்கப் படுவது. ஏதாவது ம்யூட்டேட்டட் ஜீன் வீரியமற்ற ஒரு ப்ரோட்டீனை உருவாக்குவதால் ஏற்படும் செல் சிதைவுகள் அல்லது டெப்பாஸிட்கள்தான் இதற்குக் காரணம்.

நியுரான் என்றால் என்ன? நேர்வ் செல்லுக்குப் பெயர் நியூரான்.

எ எல் எஸ் வியாதி வந்தவர்களுக்கு மூளை பாதிக்காது! இந்த வியாதி மூளையை பாதிக்காது என்பதால்தான் ஸ்டிஃபென் ஹாக்கிங் உடைய சிந்தனைகள் பாதிக்கப் படவில்லை. அவர் அறிவியற்பணியை கடைசிவரை தொடர முடிந்தது.

நம்முடைய தசைகள் ஒழுங்காக இயங்க ஒரு சில நியூரான்கள், தசை செல்களோடு கம்யுனிகேட் செய்தால்தான் மூளை,  நியூரான் மூலம்  சொல்லும் விசயத்தை, தசைகள் செய்ய இயலும். இப்போ ஒரு காஃபி கப்பை எடுத்து அதிலுள்ள காஃபியை பருக வேண்டுமென்கிற சிந்தனை. மூளையில் தோன்றி, அது நியூரான்கள் மூலம் உங்க தசைகளுக்கு "எலெக்ட்ரிகல் சிக்னல்" ஆக கம்யுனிகேட் செய்யப் படும். அந்த தகவலை எடுத்து செல்வது "மோட்டார் நியூரான் கள்". அந்த மோட்டார் நியுரான்கள் தசைக்கு சொல்லி, தசை, எ டி பி, கால்சியம் போன்ற வேதிப்பொருள்களை பயன்படுத்தி, ஆக்டின், மயோசின், ட்ரோப்போமைசின், ட்ரோப்பனின் என்று பல ப்ரோட்டின்களை பயன்படுத்தி செயல்படுத்தணும். நீங்க ஒரு சிப் காஃபி குடிப்பதற்கு எத்தனை ப்ரோட்டின்கள் வேலை செய்யணும்தெரியுமா? :) மலைத்துப் போய்விடுவீர்கள் அதையெல்லாம் கேட்டால்.

இந்த வியாதி வந்தவர்கள் உடலில் உள்ள மோட்டார் நியூரான்களில் குறைபாடு உண்டாகி, அது தசை செல்களிடம் ஒழுங்காக கம்யுனிகேட் பண்ண இயலாது. அதனால் உண்டாகும் விளைவே இந்நோயாளிகள் படும் கஷ்டங்கள்!

சரி, இந்த மோட்டார் நியுரான் செயல்திறன் இழந்ததால் ஏற்படும் வியாதிதான் எ எல் எஸ்?

இந்த நியூரான்கள் ஏன் செயல் திறன் இழக்குது?

ஜெனடிக்ஸ்.

நம்முடைய ஜீன்களில் ஏற்படும் சில "இடம் பெயர்தல்" கோளாறு. அதாவது ஜீனில் உள்ள கோளாறு, ப்ரோட்டீன்களில் கோளாறாகி, ப்ரோட்டீன்கள் செய்ய வேண்டியதை சரியாக செய்ய முடியாமல்ப் போய்விடுவதால்.

ஏன் இதுபோல் ம்யூட்டேசன் நடக்குது? இதில் வேடிக்கை என்னவென்றால் இயற்கையில் ம்யூட்டேசன் நடக்கவில்லை என்றால் நாமே உருவாகி இருக்க மாட்டோம். அதனால் ம்யூட்டேசனை ஒரேயடியாக குறை சொல்லிவிட முடியாது. இதுபோல் சில ம்யூட்டேசன்களால் ஒரு சிலர் பாதிக்கப்படுறாங்க. அவ்வளவே! Image result for motor neuron


மேலே உள்ள படத்தில் சரியாக வேலை செய்யும் மோட்டார் நியுரானும், நம்முடைய தசைகளும் எப்படி கம்யுனிக்கேட் பண்ணுகிறது என்கிறது காட்டப்பட்டுள்ளது.


Wednesday, March 14, 2018

பாம்பும் மநீம தலையும் ஒண்ணுதான்!

நான் தெரியாமல்த்தான் கேக்கிறேன் உனக்கு விஸ்வரூபம் பிரச்சினை வந்ததும்தான் நீ  பொலம்ப ஆரம்பிச்ச. உன் சுயநலத்துக்காக, -அதுவும் தேவையே இல்லாமல் இஸ்லாமியர்களை தாக்கியதற்காக உன் படம் சில தடைகளை சந்திச்சது. உடனே குய்யோ முறையோனு ஒப்பாரி வச்ச! எல்லாம் உன் சுயநலத்திற்காக. ஆத்தாட்ட ஒண்ணும் கிழிக்க முடியலை.

சரி, அதன் பிறகு குன்கா தீர்ப்பு வந்ததும். அதை பாராட்டுகிறேன்னு ஒரு வரி கூட சொல்ல வக்கில்லை உன்னிடம். ஏன் பொத்திக்கிட்டு இருந்த?

இப்போ, மூனு வாழ்க்கை துணைவிகளை டம்ப்  பண்ணிட்டு மகளிர் தினம் கொண்டாடுற? இப்போக் கூட கவுதமி நீ காசு சரியா செட்டில் பண்ணலைனு சொல்லிக்கிட்டு இருக்கார்.

 உன் கூட வாழ்ந்த பெண்களை மதிக்கத் தெரியலை. ஆனால் ஊரில் உள்ள பெண்களை எல்லாம் காப்பாத்துறாப்பில நடிப்பு?

சரி சபாஷ் நாய்டு, விஸ்வரூபம் ரெண்டு எதையும் முடிக்க வழியில்லை. வேற வழியே இல்லாமல் அரசியலில் குதிச்சு, ஜல்லிக்கட்டு, ஊழல்னு ட்விட்டரில் ஓட்டி, அரசியல்வாதியாகிவிட்ட, சரி. உனக்கும் நாலு திராவிட கைக்கூலிகள் அடி வருட இருக்காணுக சரி.

சரி கட்சிக்கொடியே இன்னொருத்தன்ட்ட இருந்து திருடி, பிறகு அவனுக்கு ஏதோ ஒரு தொகையைக் கொடுத்து செட்டில் பண்ணீட்ட போல. இதுமாதிரி திருடித்தான் கட்சி சின்னம்னு ஒண்ணு ஆரம்பிச்சு இருக்க!

சரி, பொழைப்புக்கு வழியில்லைனு அரசியல்ல இறங்கிட்ட சரி.

ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் போயி ரஜினிகாந்த் பத்தி விமர்சிச்ச!

இப்போ, நீ எதுக்கெடுத்தாலும் உளறினால் உடனே எல்லாரும் உளறணுமா என்ன?

மறுபடியும் நான் கருத்துச் சொல்லீட்டேன் ரஜினிகாந்த் சொல்லவில்லைனு சொல்ல ஆரம்பிச்சுட்ட?

இப்போ உனக்கென்ன பயம்?

எம் ஜி ஆர் சிலை திறப்பின்போது உனக்கு மதுரையில் வந்ததைவிட அதிகம் கூட்டம் வந்துவிட்டதுனு பயமா?

தேவையே இல்லாமல் உனக்கு ஏன் ரஜினிகாந்த் மேலே காண்டு?

உனக்கு கருத்துச் சொல்லணுமா சொல்லு! அவன் சொல்லலை நான் சொல்லீட்டேன் என்பதெல்லாம் தேவையே இல்லாததது.


தேவையே இல்லாமல் வை கோ பத்தி விமர்சிச்சு, "மைண்ட்யுவர் பிசினெஸ்"னு செருப்படி  வாங்கின.

ஶ்ரீதேவியை தோழினு சொல்லியிருக்கலாம். ஏன் தங்கைனு சொல்லணும்னு தெரியலை. சரி உன் இஷ்டம்!


நீ ஜிஎஸ்டி பத்தி சொன்னதுக்கு உனக்கு வந்த காமெண்ட்ஸ் பாரு.
 

Madhu Kumar
6329
-
What does he know about GST? Nothing!
Reply 42 2 Flag
Rajeev Desai
11490
- -
Kejribai kuttta kaataa hai usko. Nahi sudharegaa.
Reply 32 3 Flag

Harsha Juneja
3673
-
by the time he dies, he would have lost all the respect he earned for himself as an actor.
Reply 32 2 Flag

Swaminath Giri
You were good in Tamil Film Industry, People respect you as a famous hero . Do not get into controversies by making wrong political statements on GST ...
Reply
Vijayakumar Nair
stupid fellow with a big ego
Reply
Ganesh K
one more economist is born
Reply

Thursday, March 8, 2018

மைண்ட் யுவர் பிஸ்னெஸ்!!- வைகோ!

மநீம தலைவர் தன்னை உயர வைத்துக்கொண்டு வைக்கோவுக்கு அறிவுரை சொல்லப் போனதும், கடுப்பாகிவிட்டார் போல வை கோபால்சாமி. இவன் என்ன நேத்து வந்தவன், நான் என்ன பேசணும்னு சொல்றதுனு நம்ம மநீம தலைவருக்கு ஒரு அறை கொடுத்துள்ளார்.

பேசாமல் உங்க கருத்தை சொல்லீட்டுப் போறதை விட்டுவிட்டு, காலங்காலமாக அரசியல் செய்பவனை எல்லாம் பெயரைச் சொல்லி கீழிறக்கி நீர் மேலே உக்காந்து கொண்டு அறிவுரை வழங்குவதெல்லாம் வேலைக்கு ஆகாது என்பதை வை கோ தெளிவாக சொல்லியுள்ளார்.

கமல்ஹாசன்! மைண்ட் யுவர் பிஸினெஸ்!! -வை கோ!