Monday, November 30, 2009

அமீரின் யோகி, TSOTSI படத்தின் "காப்பி"யா?


என் அபிமான இயக்குனர் அமீர் ஹீரோவாக அறிமுகமாகும் யோகி வெற்றிநடைபோடுகிறது. ஆனால் இது ஒரு அயல்நாட்டுப்படமான "TSOTSI " யின் காப்பி என்கிறது உலக சினிமா அறிந்த உலகம்! :(

ஸோட்ஸி படத்தின் Plot

அவன் அம்மா கொடியவியாதியால் சாகிறாள். அவனுடைய அப்பா அவனை அப்யூஸ் பண்ணுகிறார். சிறுவயதிலேயே டேவிட் அப்பாவிடம் இருந்து தப்பி ஓடி, மற்ற அனாதைக்குழந்தைகளுடன் பெரிய காங்க்ரீட் குழாய்களில் வாழ்கிறான். பிறகு அவன் பெயர் ஸோட்ஸி ஆகிறது. பிறகு அவன் தன் சகாக்களின் (3-4 பேர்) தலைவனாகிறான். தன் சகாக்களில் ஒருவன் திருடும்போது ஒரு கொலை செய்தவுடன் , இவனும் இவ்ன் இன்னொரு நண்பனும் ஒரு சண்டை போடுறாங்க, அதில் அவன் நண்பன் காயமடைகிறான்.

பிறகு ஒரு காரை திருடும்போது ஒரு இளம்பெண்ணை சுட்டுக்கொல்ல முயல்கிறான். அவளை தாக்கிவிட்டு காரை எடுத்துக்கொண்டு போகிறான். காரில் அந்த மூன்று மாத கைக்குழந்தை இருக்கிறது. அதையும் கடத்திக்கொண்டு போகிறான் தன் இடத்திற்கு. அந்தப்பெண் அவன் முகஅடையாளத்தை போலிஸிடம் சொல்கிறாள், அதைவைத்து இவன் படம் தினசரியில் வருகின்றது. பிறகு தன்னால் அந்த கைக்குழந்தையை வளர்க்கமுடியாதுனு ஒரு இளம்பெண்ணை மிரட்டி அதை வைத்து குழந்தையை பார்க்கச்சொல்லுகிறான். நண்பர்கள் துரோகியாகிறார்கள். ஒரு நண்பனையே கொல்லுறான். கடைசியில் குழந்தையை திருப்பிக்கொடுக்கிறான். இதுதான் அந்த ஃபாரின் ஸோட்ஸி படத்தின் கதை.

இது "பெஸ்ட் ஃபாரின் படம்" ஆஸ்கர் வின்னர் என்பது குறிப்பிடதக்கது.

யோகி படத்தின் Plot

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் வலைதளங்களில் படித்த விமர்சனத்துப்படி, ஸோட்ஸி போல் யோகி ஒரு அனாதை, அதேபோல் ஒரு gang-related ஹீரோ. ஸோட்ஸி படத்தின் ப்ளாட் போலவே ஒரு குழந்தையைச்சுற்றி கதை என்று சொல்லப்படுகிறது.

அமீரிடம் இதைப்பற்றி கேட்டதற்கு, அவர் இதை காப்பி என்றோ, இல்லை இண்ஸ்பிரேஷன் என்றோ ஒத்துக்கொண்டதாக தோனவில்லை. ஆனால் ரெண்டு படத்தின் கதையைக்கேட்டால் ஏதோ நெருடுகிறது.


Wednesday, November 25, 2009

நீயும் கன்னியா! பொய்தானே? -கடலை கார்னர் (32)

பிருந்தா, கண்ணன் விரல்களூடன் தன் விரல்களை பின்னிக்கொண்டே அவனை இழுத்துக்கொண்டு அருகில் இருந்த சோஃபாவில் வந்து அமர்ந்தாள். ஏதோ இண்டெரெஸ்டா ஆண்ட்டி பேச ஆரம்பித்துவிட்டார்கள். கண்ணனுக்கு கொஞ்சம் போர் அடிச்சது , மெதுவாக பிருந்தா மடியில் தலையை வைத்துப் படுத்துக்கொண்டான். அவள் பேசும் அழகை பார்த்து ரசித்தான். பிருந்தா பேசிக்கொண்டே அவன் தலைமுடியை கோதிவிட்டாள். ஆண்ட்டி, அடுத்த எண்ட்ல இருந்து பேசியது எல்லாம் ஒரே ஊர்ப்பொறணி! "அவ இப்படி சொன்னா" , "உங்க அப்பா அப்படி சொன்னாரு" , "கல்யாண வீட்டுக்கு இந்த பட்டுச்சேலை கட்டிப்போனேன்" னு அள்ளி விட்டுக்கொண்டு இருந்தாங்க. "இவளை விட்டா அவங்க அம்மாவோட நாள்க்கணக்கா பேசிக்கிட்டே இருப்பாள் போல" னு கடைசியில் பிருந்தா பேசுவதை எப்படி நிறுத்த வைப்பதென்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான், கண்ணன். அதை உடனே செயல்ப்படுத்தினான்.

"சரிம்மா அடுத்த வாரம் பேசுறேன்... கெஸ்ட்டைக் கவனிக்கனும்மா" என்று ஒரு வழியாக அவசரமாகப் பேசி முடித்தாள்.

"எழுந்திரிங்க, கண்ணன்! இப்படியெல்லாம் மடியில் படுக்கக்கூடாது! "

"என்ன திடீர்னு?"

"மக்கு! திடீர்னு இப்படியெல்லாம் மடியில்முகத்தை வைத்துப் படுக்கக்கூடாது. அதுவும் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது"

"ஏன், பிருந்தா? இப்படி மடியில் படுத்தால் என்ன தப்பு?" என்றான் இன்னொசண்டா.

"ஏனா? இதெல்லாம் ஒரு கேள்வியா?"

"ஆமா என்ன ஆயிடும் பிருந்தா? ஏன் தப்புனு சொல்ற?"

" ஏன்னா, நான் கல்யாணம் ஆகாத கன்னிப்பொண்ணு இல்லையா? அதனாலதான்"

"நீயும் கன்னியா!! பொய்தானே?" அவன் சிரித்த்தான்.

"உங்களுக்கு ரொம்ப ரொம்ப கொழுப்பு! உங்களைமாதிரி ஊரைக்கூட்டி நான் வெர்ஜின் னு சிகாகோமுழுவதும் சொல்லிக்கொண்டு திரிவதில்லை அழகு."

"ஐயோ என்ன ஒரு அடக்கும்! எப்படி பிருந்தா இதெல்லாம்?'

"உங்ககிட்ட இருந்து கற்றதுதான்"

"உன்னை மாதிரி அடக்கம் எல்லாம் இல்லையே நான்."

"உங்களை மாதிரி இருக்கக்கூடாதுனு உங்ககிட்டயிருந்து கற்றுக்கொண்டது." அவள் அழகா சிரித்தாள்.

"ஏய் நீ ரொம்ப அழகா சிரிக்கிற, பிருந்த். உன் உடம்பெல்லாம் மணக்குது தெரியுமா? " என்று அவள் அருகில் நெருங்கி உட்கார்ந்தான்.

"மணக்கிறேனா? இது வேறயா? பானு சொன்னது சரிதான். நீங்க என்னை ஐஸ் வச்சே ஒரு வழி பண்ணிடுவீங்க போல."

"நெஜம்மாத்தான்டா சொன்னேன்" என்று ரகசியமாக அவள் காதில் சொல்வதுபோல காது மடலை வருடினான்.

"நெஜம்மாவா? சரி.. என் காதிலே இப்படி கை வைக்காதீங்க. கூச்சமா இருக்கு"

"கூச்சமா இருக்கா? இல்லை வேறென்னவும் வேறெங்கவும் நடக்குதா?'

"வேறெதுவும்னா?'

"ஏதாவது கெமிக்கல் ரியாக்ஷன் நடக்குதா? ஆமா, நீ என்ன ரொம்ப மூடா இருக்கியா?"

"அதெப்படி இது மட்டும் உங்களுக்கு நல்லாப் புரியுது, மிஸ்டர் ட்யூப் லைட்?"

"எது?'

"இந்த மாதிரி விசயம் மட்டும் நல்லாப் புரியுது. மற்றதுல எல்லாம் ட்யூப் லைட்டா இருக்கீங்க. இதுலமட்டும் பெரிய ஆளா இருக்கீங்க, எப்படி அது?'

"நான் கேட்கிற கேள்விக்கெல்லாம் நீ பதில் சொல்ற விதமே தனி அழகுதான் பிருந்த்."

"நீங்க ரொம்ப ரொம்ப மோசம் கண்ணன்."

"ஏய் உன் உதடு என்ன இவ்வளவு ட்ரையா இருக்கு? நான் வெட் பண்ணி விடவா?"

"அதெல்லாம் வேண்டாம்." என்று சொல்லிக்கொண்டே அவன் முகத்து அருகில் முகத்தை கொண்டு சென்றாள்

"ஒரு சின்ன உதவிகூட செய்யக்கூடாதா, பிருந்த்? நீ எனக்காக கஷ்டப்பட்டு சமைத்து இருக்க இல்லையா?"

"உதட்டை வெட் ஆக்கி விடுவது நன்றியா?"

"மாட்டினேனா? அப்படி சொல்லல"

"நல்லா மாட்டினீங்க!"

"சரி சரி, ஏன் சும்மா உங்கம்மாவோட பேசிக்கிட்டே இருந்த? நான் நல்லாயிருக்கேன்னு சொல்லி முடிக்க வேண்டியதுதானே?"

"திடீர்னு எப்படி வைக்க முடியும்? நான் ஒழுங்கா பேசலைனா மறுபடியும் 20 முறை கூப்பிடுவாங்க. நல்லா சந்தோஷமா இருக்க மாதிரி நடிக்கனும்."

"அதெல்லாம் உண்மையான காரணம் இல்லை.."

"இல்லையா? வேறென்ன காரணம்? நீங்களே சொல்லுங்க!"

"அது வந்து, உன் மனசைக் கேட்டுப்பார்."

"சும்மா நீங்களே கேட்டு சொல்லுங்க!"

"இது நல்லா ஐடியா பிருந்த்! காதை இதயத்தில் வச்சு கேக்கவா?" அவள் மார்பில் தன் முகத்தை சாய்த்து காதை வைத்தான்.

"உடனே இங்கே காதை வச்சுட்டீங்களா?"

"வேற எப்படி உன் இதயம் என்ன சொல்லுதுனு கேக்கிறது?"

"இதயம் பேசுதா?"

"ஸ்ஸ் இதைக்கேளு! உன் இதயம் என்ன சொல்லுதுனா, "டேய் மக்கு! டோண்ட் யு நோ, ஐ டாக்ட் மோர் அண்ட் மோர் பர்ப்பஸ்லி ?"

"அப்படியா சொல்லுச்சு என் இதயம், ஜீனியஸ்? நீங்க காதை வச்சு எதையும் கேக்கிற மாதிரி இல்லை"

"இதெல்லாம் அநியாயமான குற்றச்சாட்டு! இப்போ உன்னை கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணினால் என்ன பண்ணுவ?"

"சும்மா சொல்லிண்டே இருங்க"

"அப்ப சரி! வித் யுவர் பெர்மிஷன்" என்று அவளுக்கு முத்தம் கொடுத்தான்.

"இப்போமட்டும் நல்லா வெட் ஆயிருச்சா என்ன? இன்னும் ட்ரையாத்தான் இருக்கு" என்றாள் இன்பமான குரலில்.

"யாருக்கு கொழுப்பு? உனக்கா எனக்கா??"

"ஸ்ஸ்ஸ் அங்கே எல்லாம் கிள்ளக்கூடாது"

"வலிக்குதாடா?'

"இதை சாக்கு வச்சு மறுபடியும் கை வைக்கிறீங்க? சரி, சும்மா சொல்லுங்களேன், ப்ளீஸ்?"

"எதைச் சொல்ல?"

"அம்மாட்ட நான் ஏன் வளவளனு பேசிண்டே இருந்தேனாம்?"

"நீ பேசிக்கொண்டு இருக்கும்போது எனக்கு கொஞ்சம் போராடிக்குதா? நீ ரொம்ப ரொம்ப அழகா கவர்ச்சியா ஒரு மாதிரியா வேற இருக்கியா? அதனால எனக்கு போர் அடிக்காமல் இருக்க நான் உன்னை அங்கே இங்கே பார்த்து உன் அழகை ரசிக்க ஆரம்பிச்சுடுறேனா?.."

"அதனால?"

"உன்னிடம் ஏதாவது சேஷ்டை பண்ணனும்னு தோனுது. உன்னை அங்கே இங்கே தொட்டு ஏதாவது சில்மிஷம் பண்ணுறேன். ஆனால் அது மாதிரி லேசா சிமிஷம் உனக்கு ரொம்பப் பிடிக்குதுதா.. அதான் நீ சும்மா ஆண்ட்டியோட பேசிக்கிட்டே இருக்கயாம்.. எப்படி இருக்கு என் தியரி?"

"ரொம்ப நல்லா இருக்கு, கண்ணன், உங்க தியரி."

"இதையும் ஏதாவது ஜேர்னல்ல பப்ளிஷ் பண்ணிடுவோமா?"

"லவ் ஜேர்னல்லயா?"

"ஆமா"

"யாரு எடிட்டர்?"

"நீ தான்"

"நீங்க எழுதிஅனுப்புவீங்களாக்கும். நான் ரிவியூ பண்ணி, பப்ளிஷ் பண்ணனுமாக்கும்?

"ஆமா உனக்குத்தானே என் தியரி சரியானு தெரியும்? காதல்ல கதைலாம் விடக்கூடாது. உண்மையைத்தான் எழுதனும். நாலு பேர் பண்ணிப் பார்க்கனும் இல்லையா?"

"அது சரி"

"இங்கே பக்கத்தில் வா, பிருந்த்"

"வந்துட்டேன்"

"பயம்மா இல்லையா உனக்கு?"

"ஹுஹூம்... ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு"

"எனக்கு பயம்மா இருக்கு"

"ஐயோ பாவம்!"

"என்ன சமச்சு இருக்க?"

"இதை கேக்கத்தான் பக்கத்தில் வரச்சொன்னீங்களா?"

"ஆமா"

"அப்போ ஏன் கடைசில பேசுவவதை நிறுத்தினேனாம்?"

"லேசா சில்மிஷம் பண்ணினால் நீ பேசிக்கிட்டே இருக்கயா? அதனால கொஞ்சம் அளவுக்கு மீறிப் பார்த்தேன்.. நான் நெனச்சது மாதிரி உன்னால தொடர்ந்து பேச முடியலை. அதான்.."

"அளவுக்கு மிஞ்சுதுனு தெரிந்தே செய்தீங்களா?'

"எனக்கு ரிசல்ட் தெரியாது. சும்மா எக்ஸ்பெரிமெண்ட்தான். ஆனால் ஒரு மாதிரி நெனச்ச ரிசல்ட்தான் வந்தது"

"எனக்கு உதடு மறுபடியும் ரொம்ப ட்ரையா இருக்கா, கண்ணன்?"

"இரு கொஞ்சம் நல்லா கவனிக்கிறேன் இப்போ" அவள் உதட்டில் தன் இதழ்களை பதித்தான். அவள் அவனை கட்டி அணைத்துக்கொண்டாள்.

"இப்போ வெட் ஆயிடுத்து" என்று இதழ்களைப் பிரித்துவிட்டு சொன்னான், கண்ணன்.

கதவை யாரோ தட்டினார்கள்.

"இந்த பானுவை என்ன செய்யலாம்?" என்று எரிச்சலாக எழுந்தாள் பிருந்தா.

- தொடரும்

Saturday, November 21, 2009

கமல்-பாலசந்தர் உறவு!


கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா படத்துல அறிமுகமானார்னு உலகத்துக்கே தெரியும். கமல், படித்துக்கொண்டே பகுதி நேரம் ல தொடர்ந்து நடித்ததாக தெரியவில்லை. இளவயதிலேயே படிப்பை ஒரேயடியாக தலைமுழுகிட்டு சினிமாவைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்.

குழந்தை நட்சத்திரத்திலிருந்து வளர்ந்த ஹீரோவாக வயது வேணுமில்லையா? பெரிய நட்சத்திரமாகுமுன்னர் பதின்ம வயதிலே அவர் டான்ஸ் மாஸ்டராகவும் இருந்து இருக்கிறார். காதல் இளவரசனாகுமுன்னே "நான் ஏன் பிறந்தேன்" போன்ற படங்கள் ல எல்லாம் டான்ஸ் மாஸ்டராக வேலை செய்து இருக்கிறார் கமலஹாசன்.

பிறகு, பாலச்சந்தர்தான் கமலுக்கு நிறையப்படங்களில் சரியான வாய்ப்புக் கொடுத்து கமல் திறமையை வெளிக்கொண்டு வந்தார். முதலில், அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற பாலசந்தர் படங்களில் சின்ன சின்ன ரோலில் நடிக்க ஆரம்பித்தார், கமல். அந்த சமயத்தில் பாலசந்தர் படத்தில் பொதுவா பல முக்கிய பாத்திரங்களைச் சுற்றி கதை இருக்கும். அதில் கமல் திறமையை வெளிக்கொண்டு வரும் ஒரு சில நல்ல ரோல்கள் இவருக்கு கொடுக்கப்பட்டதால் கமலுக்கு நிறைய புகழை அள்ளித்தந்தது.
கமல், பாலசந்தர் இயக்கத்தில் நடித்த தமிழ்ப் படங்கள். (ஒரு சில படங்களை விடுபட்டு இருக்கலாம்! )

* சொல்லத்தான் நினைக்கிறேன் (1973)

* அரங்கேற்றம் (1973)

* அபூர்வ ராகங்கள் (1975)

* மூன்றுமுடிச்சு (1976)

* மன்மதலீலை (1976)

* அவர்கள் (1977)

* அவள் ஒரு தொடர்கதை (1978)

* நிழல் நிஜமாகிறது (1978)

* நினைத்தாலே இனிக்கும் (1979)

* வறுமையின் நிறம் சிகப்பு (1980)

* புன்னகை மன்னன் (1986)

* உன்னால் முடியும் தம்பி (1988)பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்த பிற மொழிப்படங்களில் சூப்பர் ஹிட் ஆன படங்கள் இரண்டை கட்டாயம் சொல்லியாகனும்.

* மரோச்சரித்ரா (தெலுகு, 1978)

* ஏக் துஜே கே லியே (ஹிந்தி, 1981)


இயக்குனர்கள் எல்லாம் பள்ளி வாத்தியார்கள் போலதான். இன்று கமலுக்கு உள்ள பெயர், ஸ்டார் வால்யூ எல்லாம் இவரை மேலே கொண்டுவந்த பாலசந்தர் பாரதிராஜாவுக்கு கிடையாது என்பது கசப்பான உண்மை. இன்று பாலசந்தருக்கு வய்து 79 ஆகிவிட்டதாம். தமிழ் திரையுலகில் பாலசந்தர் ஏற்படுத்திய மாற்றம் கமல் மற்றும் ரஜினியின் பங்கைவிட பன்மடங்கு உயர்ந்தது. வாழ்க அவர் இன்னும் நூறு ஆண்டுகள்!

Thursday, November 19, 2009

ஏன்டி அவரைப்போட்டுப் படுத்துற? -கடலை கார்னர் (31)

"என்னங்க பானு நீங்க! நீங்களே கேள்விகேட்டு அதற்கு சரியான பதிலும் சொல்லிக்கிறீங்க?" என்று சமாளித்தான் கண்ணன்

"இங்க கேளுடி பிருந்தா!"

"என்ன சொன்னாரு?"

"உன்னை ரொம்பப் பிடிக்குமாம்! இவர்ட்ட நீ கவனமாவே இரு! ஐஸ் வச்சே உன்னை காலி பண்ணிடுவாரு போல!"

"ஏன்டி அவரைப்போட்டுப் படுத்துற? பிடிக்குமானு கேட்டா அபப்டித்தான் சொல்லுவாரு"

"நானா படுத்துறேன்!!"

"ஆமா, நீதான்"

"எல்லாம் என் நேரம்தான், போ!"

"ஆமா நீங்க எந்த ஊருங்க பானு?"

"நான் சென்னைதான், கண்ணன்."

"யாரோ ஃபோன்ல கூப்பிடுறாங்க உன்னை, பானு!"

"ஹாய்! கேன் யு ஹோல்ட் ஆண் ஃபார் எ மினுட்? பிருந்தா!

இது முக்கியமான கால்டி. நான் உன் டீ கப்போட அப்படியே புறப்படுகிறேன். தேங்க்ஸ்! ஹேவ் ஃபன் கண்ணன்."

"பார்க்கலாம்ங்க, பானு."

**************

"பக்கத்திலேயே பானு இருக்கிறது உனக்கு நல்ல கம்பெணிதான், பிருந்தா"

"இதுபோல் பானு ஜாலியாப்பேசி ரொம்ப நாளாச்சு, கண்ணன்"

"ஏன் அவங்க ரொம்ப சீரியஸ் டைப்பா?"

"லாஸ்ட் மந்த் இந்தியாவில் அவ கல்யாணம் நடக்க வேண்டியது, நின்னுபோயிடுத்து."

"என்ன ஆச்சு?"

"மாட்ரிமோனில பார்த்து பேசி, இங்கே அவர் இருக்கிற மினியாப்போலிஸ் போய் ஒருவரை ஒருவர் சந்திச்சு, பேசி, இந்தியாவில் ரெண்டுபேருடைய ஃபேரண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ணித்தான், கல்யாணமும் ஃபிக்ஸ் பண்ணினாங்க. போன மாசம் ஹைதராபாத் போய் கல்யாணம் செய்வதா எல்லாம் முடிவாயிருந்தது. கல்யாணத்தேதிக்கு ஒரு வாரம் முன்பு, திடீர்னு, அஷோக், அதாவது இவளோட எக்ஸ் ஃபியாண்ஸே, கால்ப் பண்ணி கொஞ்சம் வெடிங்கை போஸ்ட்போன் பண்ணனும்னு சொல்லி இருக்கான்."

"ஏனாம்?"

"அவன் ஏன் னு காரணம் சொல்ல மாட்டானாம். எவ்வளவு நாள் போஸ்ட்போன் பண்ணனும் அல்லது டேட் எதுவும் சொல்ல மாட்டானாம். என்ன விசயம்னு இவ கேட்டால், ரொம்ப பர்சனலான மேட்டராம்!"

"காரணம் சொல்லமாட்டானா?"

"ஆனா, இவள் அவனை நம்பனுமாம்."

"அவன இவளுக்கு கொஞ்ச நாளாத்தான தெரியும்? அப்புறம் என்ன ஆச்சு?"

"இவளுக்கு பல வகையில் சந்தேகம். வேற வழியே இல்லாமல் இந்தியா டிக்கட் கேன்சல் பண்ணிட்டு, பேரண்ட்ஸ்ட்ட என்ன சொல்றதுனு தெரியலை. ஒரே குழப்பம் இவளுக்கு. கடைசியில் இவளே இது சரிப்பட்டு வராதுனு முடிவுக்கு வந்துவிட்டாள், ஒரே அடியா எல்லாத்தையும் கேன்சல் பண்ணிவிட்டாள்"

"பர்சனல்னு சொல்லிட்டான். எப்படி ஃபோர்ஸ் பண்ணிக்கேப்ப? என்ன் பிரச்சினையோ"

"தட் வாஸ் வியேர்ட், கண்ணன்."

"ஸோ எல்லாம் ஓவெரா இப்போ? கல்யாணம் நின்றுச்சு. காரணம் என்னனு தெரியலை?"

"ஆமாம்."

"நமக்குத் தெரியாமல் நெறைய விசயம் இருக்கலாம், பிருந்தா. For some people life can be complicated, Brindha"

"கண்ணன்! இவ லைஃப் பார்ட்னெர் ஆகப்போறவ? சொன்னால்தான் என்ன?"

"மே பி இட் ஹாஸ் நத்திங் டு டு வித் தெம், பிருந்தா."

"எனிவே, இட் இஸ் ஆல் ஓவெர் நவ். பட் பானு வாஸ் வெர்ரி வெர்ரி அப்ஸெட், கண்ணன். அவளுக்கு ஏற்கனவே ஒருமுறை இது மாதிரி நடந்து இருக்காம்"

"ஏற்கனவே என்ன பிரச்சினை?"

"அவ காலேஜ்ல ஒருத்தனோட க்ளோஸாப் பழகி இருக்காள். ஆனா கடைசியில் அவனும் சும்மா ஃப்ரெண்டா பழகினேன்னு சொல்லிக் ஒதுங்கிட்டான் போல."

"ஒருதலைக்காதலா? இவளா கற்பனை பண்ணிக்கிட்டாளோ என்னவோ?"

"அப்படித்தானோ என்னவோ, தெரியலை. ஆனால் அவன் ஒரு ப்ராமினாம். இவ ப்ராமின் இல்லை. அதனாலதான் அவனோட பேரெண்ட்ஸ் ஒத்துக்கலை, அதான் திடீர்னு ஒதுங்கிட்டானு இவ சொல்றா. அதுவும் பாஸிபிள் கண்ணன், சம் ப்ராமிண்ஸ் ஆர் சீப். ஈவன் டுடே தே கேர் எபவ்ட் கேஸ்ட் அண்ட் ஆல்"

"ஷி டிட் நாட் கோ டூ ஃபார் வித் ஹிம், ரைட்? யு நோ வாட் ஐ மீன்? "

"புரியுது. அதான் ஃப்ரெண்டா பழகினேன்னு ஈஸியா ஒதுங்கி இருக்கான்."

"ஸோ, இது ரெண்டாவது தோல்வியா? "பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்"னு சொல்லுவாங்க தெரியுமா?"

"என்னவோ போங்க. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமா காண்பிடண்ஸ் போகுது."

"அவசரமாக் கல்யாணம் பண்ணி என்ன சாதிக்கப் போறா? Let me tell you this. There are some good guys certainly out there, Brindha. She just has to wait till she meets a good guy."

"எப்படிச் சொல்றீங்க?" அவள் ஒரு மாதிரியா சிரித்தாள்.

"எனக்குத் தெரிய என் ஃப்ரெண்ஸே அது போல் முதல்ல ஃபெயிலாகி, கடைசியில் தே செட்ல்ட் வித் எ வொண்டர்ஃபுள் கை. தே டோண்ட் லுக் பேக். நவ் த கப்புள் இஸ் வெர்ரி வெர்ரி ஹாப்பி. அது மாதிரி, பானு ஹாஸ் டு மூவ் ஆண். தேர் ஆர் வொர்ஸ்ட் திங்ஸ் இன் த வோர்ல்ட், பிருந்தா"

"இட் இஸ் ஈஸி வென் வீ ஆர் தேர்ட் பேர்சன். அவ நிலைமையில் இருந்தால் கஷ்டம், கண்ணன். ஷி இஸ் ரியல்லி ஸ்கேர்ட்."

"ஆஃப் வாட்?"

"வில் ஷி எவெர் கெட் மேரிட் அண்ட் சச்"

"வெல் ஷி இஸ் ஸ்டில் யங். ஸ்டில் ஹாஸ் லாட்ஸ் ஆஃப் டைம். சரி என்ன சமைச்சு இருக்க, பிருந்த்?"

"பசிக்கிதா உங்களுக்கு, கண்ணன்?"

"பசிக்கிதாவா? என்ன நீ இப்படி கதைசொல்லியே நேரத்தை ஓட்டி அனுப்பிடாதே."

"உங்களை யார் அனுப்பப்போறா? இங்கேயே ஒரு வாரம் தங்கிட்டு போங்க!"

"ஏன் ஒரு வாரம்? பேசாமல் நான் இங்கேயே மூவ் இன் பண்ணிடுறேனே? நம்ம ரெண்டு பேரும் ஒண்ணாவே இருக்கலாம். வி கேன் சேவ் சம் மணி" அவன் சிரித்தான்.

"நல்ல ஐடியா. இப்படி ஏதாவது உருப்படியான ஐடியாலாம் எப்படி வருது உங்களுக்கு?'

பிருந்தாவின் செல் ஃபோன் பாடியது.

"யாரு அது? ஆண்ட்டியா?"

"ஆமா. இருங்க கொஞ்சம் பேசிக்கிறேன், ப்ளீஸ்?"

"ஹல்லோ"

" ... "

"ஃப்ரெண்டா? வந்து விட்டாள். இங்கேதான் இருக்காள்.. பேசுறியா?"

".... "

"சரி, இன்னொரு நாள் அவளிடம் பேசு"

" ஏய் யார் அவள்? நானா?" என்றான் கண்ணன் அவள் இன்னொரு காதில். அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே லேசா அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவன் செய்கையால் அவள் இடது கை விரல்கள் அவன் வலது கை விரல்களுக்குள் போய் பின்னிக்கொண்டது. அவளால் அம்மா பேசுவதை கவனித்து கேட்கமுடியவில்லை.

"என்னம்மா சொன்ன?"

".... "

"இல்லை எனக்கு லைன் க்ளியரா இல்லை.. அதான்" என்று அம்மாவிடம் கூசாமல் பொய் சொன்னாள், பிருந்தா.

-தொடரும்

Wednesday, November 18, 2009

பாலசந்தர்-ரஜினி (குரு-சிஷ்யன்) படங்கள்!


அபூர்வ ராகங்களில் ரஜினியை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர் அவர்கள்தான். இன்றும் ரஜினி, அவரை தன் குருநாதர் என்றுதான் அழைக்கிறார். ஆனால் தமிழில் ரஜினியை வைத்து கே பி இயக்கிய படங்கள் ஆறே ஆறுதான்.

* அபூர்வ ராகங்கள் (1975)

* மூன்று முடிச்சு (1976)

* அவர்கள் (1977)

* தப்புத்தாளங்கள் (1978)

* நினைத்தாலே இனிக்கும் (1979)

* தில்லு முல்லு (1981)

இதில் முழுக்க முழுக்க ரஜினியை ஹீரோவாக வைத்து எடுத்த படங்கள் இரண்டே இரண்டு. * தப்புத்தாளங்கள், * தில்லு முல்லு இரண்டிலும்தான் ஹீரோ. ஒரு 6 வருடகாலத்தில், 1981 லயே குரு சிஷ்யன் "எரா" முடிந்தது.

பிறகு, கவிதாலயா தயாரிப்பில் ரஜினியை ஹீரோவாக வைத்து மற்றவர்களை வைத்து இயக்க வைத்தார் கே பி. இதில் முக்கியமானவர் எஸ் பி எம். இவர் கவிதாலயா ரஜினியை வைத்து தயாரித்த படங்களில் 4 அவுட் ஆஃப் 8 படங்களை இயக்கியுள்ளார். அமீர்ஜான், சுரேஷ் கிருஷ்ணா, கே எஸ் ரவிக்குமார், பி வாசு தலா ஒரு படம் இயக்கியுள்ளார்கள்.

கே பி தயாரிப்பில் ரஜினி நடித்த படங்கள்

* நெற்றிக்கண் (எஸ் பி எம், 1981)

* புதுக்கவிதை (எஸ் பி எம், 1982)

* நான் மஹான் அல்ல (எஸ் பி எம், 1984)

* வேலைக்காரன் (எஸ் பி எம், 1987)

* சிவா (அமீர்ஜான், 1989)

* அண்ணாமலை (சுரேஷ் கிருஷ்ணா, 1992)

* முத்து (கே எஸ் ரவிக்குமார், 1995)

* குசேலன் (பி வாசு, 2008).

எந்திரன் குழுவில் இரண்டு ஆஸ்கர் நாயகர்கள்!


ரஜினிகாந்த்- ஐஸ்வர்யா ராய் நடிக்க சங்கர் இயக்கும் பிரம்மாண்டமான படம் எந்திரன். அகில உலக பொருளாதார சீர்குழைவினால், இதை தயாரித்த ஐங்கரன் பாதியிலேயே எடுத்த பாதிப்படத்தை சன் டி வியிடம் பேரம் பேசி விற்றுவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். இப்போது சன் க்ரூப் இதை தயாரித்து வருகிறது. 2010 ஏப்ரல் அல்லது ஜூன் மாதம் இது வெளிவரும் என்று எதிரபார்க்கப்படுகிறது.

ஆஸ்கர் வின்னர் ஏ ஆர் ரகுமான் தான் இதில் இசையமைக்கிறார் என்பது பழைய செய்தி.

ஆஸ்கர் வின்னர் ரஷூல் பூக்குட்டி (ஸ்லம்டாக்மில்லியனர்) என்பவரும் இந்தக்குழுவில் சேர்ந்து உள்ளார் என்பது புதுச்செயதி!

இந்தப்படத்திற்கு "ஆடியோக்ராஃபி" செய்பவர் ரஷூல் பூக்குட்டிதான் என்று சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்தியிருக்கிறது இவருடைய சமீபத்து நேர்காணல்!

Tuesday, November 17, 2009

ஆத்திகர்கள்தான் கடவுளை திட்டுறாங்க!

நாத்திகனை பொறுத்தவரையில் கடவுள் இல்லை. அவரை விட்டுட்டு வேற வேலையைப்பாருங்கனுதான் சொல்றாங்க! ஆனா, கடவுளை வச்சு பொழைப்பு நடத்திய மனிதர்களையும், கடவுளுக்கு நாங்கதான் ரொம்ப க்ளோஸ்னு சொல்லிக்கொண்டு திரிந்த சில பார்ப்பனர்களையும்தான் நாத்திகர்கள் திட்டினார்கள்.

அப்படி திட்டலைனா பார்ப்பனர்கள் தானாவே திருந்தி இருப்பார்களா என்ன? கடவுளே கனவுல வந்து திருந்தச்சொன்னாலும் திருந்தி இருக்க மாட்டார்கள் இவர்கள்! இவர்களுக்கு சொந்தப்புத்தி இருந்து இருந்தால் கண்டவனும் ஏன் வந்து திட்டுறான்? தன் சாதியையும், தன்னையும் மற்றவர்களைவிட பெரிதாக ஏன் நினைத்தார்கள்? இவர்கள் கூடவே பிறந்து வாழ்ந்த பாரதிக்கே இவர்கள் அட்டகாசம் தாங்கமுடியலை. மற்றவர்கள் என்ன செய்வார்கள்?

ஆத்திகர்கள் பொதுவா கடவுளை நல்லா துதிபாடி, புகழ்ந்து நீதான் எங்களை காப்பாத்தனும். நாங்க என்ன அயோக்கியத்தன்ம் செய்தாலும் எங்களை மன்னித்து அருள்புரியனும்னு கடவுளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்து ஐஸ் வைப்பார்கள்.

ஆனால், திடீர்னு, வாழ்வில் தாங்கவே முடியாத துயரம் ஏற்படும்போது உணர்ச்சிவசப்பட்டு கடவுளை, "இரக்கமில்லாதவன்" "கொடுமைக்காரன்" என்று திட்டுபவர்களும் ஆத்திகர்கள்தான்! அப்புறம் உணர்ச்சி வேகத்தில் திட்டிவிட்டு என்ன இப்படி செய்துவிட்டோம்னு, பின்னால போயி அதுக்கும் ஏதாவது சாக்குச்சொல்லி கடவுள்ட்ட மன்னிப்பு கேட்டுக்கொள்வார்கள்.

கடவுள் என்னைக்கு மன்னிக்க மாட்டேன்னு வாய் திறந்து சொன்னாரு? இவங்க சொல்றதை எல்லாம் கேட்டுக்கிட்டு கல்லாத்தானே இருக்காரு?

Monday, November 16, 2009

ரஜினி- எஸ் பி முத்துராமன்! வெற்றிக்கூட்டணி!


எஸ் பி முத்துராமன் அவர்கள், *கனிமுத்துப்பாப்பா படத்தில் இயக்குனர் தகுதியை அடைந்தார். பிறகு *துணிவே துணை போன்ற படங்களை ஜெய்சங்கர் வைத்து இயக்கியுள்ளார். ஆனால் பாலச்சந்தரின் கண்டுபிடிப்பான ரஜினி என்கிற நடிகனை முழுமையாக பயன்படுத்தி வியாபார ரீதியில் ரஜினி படங்களை வெற்றியடையவைத்த இயக்குனர் என்றால் இவர்தான்.

1992 வில் இவர் இயக்கிய * பாண்டியன் வரை 24 படங்கள் இயக்கி இருக்கார் ரஜினியை வைத்து! எ வி எம்-ரஜினியை வைத்து இயக்கிய படங்களில் *எஜமான், *சிவாஜியைத்தவிர அனைத்துப் படங்களுமே இவர் இயக்கியதுதான்!

மேலும் பஞ்சு அருணாச்சலத்தின் பி ஏ ஆர்ட் ப்ரடக்ஷன்ஸ் மற்றும் பாலசந்தரின் கவிதாலயாவும் ரஜினியை ஹீரோவாக வைத்து எடுக்கும் படங்களில் எஸ் பி முத்த்ராமன் க்கு இயக்குனர் பதவி தவறாமல் கொடுக்கப்பட்டது!

* 1) புவனா ஒரு கேள்விக்குறி

* 2) ஆடு புலி ஆட்டம்

* 3) ப்ரியா

* 4) 6 லிருந்து 60 வரை

* 5) முரட்டுக்காளை

* 6) கழுகு

* 7) நெற்றிக்கண்

* 8) ரானுவ வீரன்

* 9) போக்கிரிராஜா

* 10) புதுக்கவிதை

* 11) எங்கேயோ கேட்ட குரல்

* 12) பாயும் புலி

* 13) அடுத்த வாரிசு

* 14) நான் மஹான் அல்ல

* 15) நல்லவனுக்கு நல்லவன்

* 16) ஸ்ரீ ராகவேந்திரா

* 17) மிஸ்டர் பாரத்

* 18) வேலைக்காரன்

* 19) மனிதன்

* 20) குரு சிஷ்யன்

* 21) தர்மத்தின் தலைவன்

* 22) ராஜா சின்ன ரோஜா

* 23) அதிசயப்பிறவி

* 24) பாண்டியன்.

மேலே கொடுக்கப்பட்ட படங்களில் பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்கள். கமர்ஷியலாக எந்தப்படமும் விழுந்ததாக பெரிய குற்றச்சாட்டு எதுவுமே இல்லை. எஸ் பி எம் ரஜினி ஒரு மிகப்பெரிய வெற்றிக்கூட்டணியானதற்கு காரணம், படம் பூஜை போட்டமா, எடுத்து முடித்தோமா, 4 சண்டை, 5 பாட்டுனு சிம்ப்பிள் ஃபார்ம்ளா! 4 வார ஓட்டத்திலேயே போட்ட காசை எடுத்தார்கள் தயாரிப்பாளர்கள்! படம் வெற்றியடையவில்லையென்றாலும் கமர்ஷியலாக போட்ட காசை எடுத்தார்கள் என்பதை, விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் உங்களுக்கு சொல்வார்கள்!

Sunday, November 15, 2009

நடிகை ஸ்ரீதேவி- அன்றும் இன்றும்!கமல்-50 கொண்டாடும் கமலுக்கு இணையான ஒரே ஒரு நடிகைனா, அது நடிகை ஸ்ரீதேவிதான். இவரும் கமலைவிட இளவயதில், 4 வயதிலேயே நடிக்க வந்துட்டார். இவர் இன்றைய பாலிவுட் இறக்குமதிகள் போலில்லாமல் தமிழ்நாட்டில் பிறந்தவர்.

தமிழில் கந்தன் கருணையில் நடிக்க ஆரம்பித்து, குழந்தை நட்சத்திரமாக நம் நாடு, வசந்தமாளிகை போன்ற படங்களிலும் நடித்தார். பிறகு தெலுங்கு மலையாளப்படங்களில் நடித்தார். கமல்-ரஜினிக்கு மாதிரியே தமிழில் இவருக்கும் பெரிய ப்ரேக்த்ரு பாலச்சந்தரின் மூன்று முடிச்சு தான். பிறகு 16 வயதினிலே மயிலு கேரக்டர் ரொம்ப பாப்புளர். அதன்பிறகு தமிழில் #1 ஆயிட்டார். பிறகு தெலுகு, பிறகு ஹிந்திக்கு போனவர் திரும்பி இந்தப்பக்கம் வரவில்லை.

தமிழில் கமல் ஜோடியாக நடித்த படங்கள்

* மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், தாயில்லாமல் நானில்லை, சங்கர்லால், மீண்டும் கோகிலா, கல்யாண ராமன், குரு, மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு. இவைகளில் தாயில்லாமல் நானில்லை, சங்கர்லால், மீண்டும் கோகிலா தவிர அனைத்துப்படங்களும் மிகப்பெரிய வெற்றி. கமல்-ஸ்ரிதேவி ஜோடிப்பொருத்தம் மட்டுமல்லாமல், கமர்ஸியல் வெற்றி காம்பினேஷன்!

ரஜினியுடன் இணைந்து நடித்த படங்கள்

வணக்கத்துக்குரிய காதலியே, காயத்ரி, தர்ம யுத்தம், ஜானி, ப்ரியா, போக்கிரிராஜா, தனிக்காட்டு ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை. இதில் தர்மயுத்தம், ப்ரியா, போக்கிரி ராஜா போன்றவை வெற்றிப் படங்கள். ரஜினி- ஸ்ரிதேவி ஜோடி, கமல்-ஸ்ரிதேவி அளவுக்கு அப்படி ஒண்ணும் பெரிய வெற்றிக் கூட்டணி இல்லை.

ஸ்ரீதேவி தமிழ் நடிகைகளில் முதன்முதலில் “நோஸ் ஜாப்” பண்ணியவர். பதினாறு வயதினிலே, மூன்றுமுடிச்சு, குரு, சிகப்பு ரோஜாக்கள், போக்கிரி ராஜா போன்ற படங்களில் உள்ள மூக்கு அழகா பெரிதா லட்சணமா இருக்கும்.திடீர்னு மூக்கை காசுகொடுத்து வெட்டிட்டு வந்துட்டார். அடுத்த வாரிசு, நான் அடிமை அல்ல போன்றவையில் இருக்கும் மூக்கு மாற்றப்பட்ட மூக்கு.ஆனால் இந்த மாற்றப்பட்ட மூக்குதான் பொதுவாக எல்லோரையும் கவர்ந்தது. முக்கியமாக ஹிந்தியில் இவர் சூப்பர் ஸ்டார் ஆக உதவியது. கமல், ரஜினியால் சாதிக்கமுடியாததை ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி சாதித்தார். ஹிந்தியில் கொடிகட்டி பறந்தவர் இவர்!

ஸ்ரீதேவி, இப்போ சினிமா உலகில் இருந்து ஒதுங்கி பானி கப்பூரை மணந்து கொண்டு (1996) இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இப்போது குடும்ப வாழ்வில், தன் கணவர், மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார்.

Friday, November 13, 2009

உங்களுக்கு என்ன பிடிக்கும்?-கடலை கார்னர்(30)

சனிக்கிழமை ஐந்து மணிக்கு யாரோ கதவை தட்டினார்கள். ஆவலுடன் கதவை திறந்தாள், பிருந்தா.

"நீயா? என்னடி வேணும் உனக்கு?"

"ஏன்டி வெறட்டுற? என்றாள் பக்கத்தில் வசிக்கும் தோழி பானு.

பானுவை இங்கே சந்தித்து இருக்கோம்

"ஒண்ணும் இல்லை, ஒரு கெஸ்ட் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்"

"யார் அது?"

"நீ ஒரு தர பார்த்து இருக்கயே? கண்ணன் தான்"

"ஓ அவரா? வந்துட்டு உடனே போயிடுவாரா?" அவள் சிரித்தாள்.

"எனக்கெப்படித் தெரியும்? எப்போ போறீங்க? னா அவர்ட்ட கேக்க முடியும்? சரி, சரி உள்ளே வா"

"ரொம்பதான் சலிச்சுக்கிற? கம கமனு வாசனை அடிக்குது! என்ன நெறையா சமச்சு இருக்கியா? நானும் இங்கேயே டின்னர் சாப்பிடவாடி, பிருந்தா?"

"அவர் ஓ கேனு சொன்னா எனக்கு ஓ கே தான்"

"உனக்கு ஓ கே இல்லைனு சொல்றியா? அவர் வரட்டும் நான் கேக்கிறேன்."

"இல்லடி, அப்படி சொல்லலை. அவருக்கு ப்ரைவஸி வேணும்னா என்ன பண்றது?"

"உனக்கு ப்ரைவஸி வேணுமா? ஆமா, என்ன பண்ணப்போறீங்க ரெண்டு பேரும்?"

"ஏன்டி போட்டு கொல்ற என்னை?"

"இல்ல டின்னர் சாப்பிட எதுக்கு ப்ரைவஸி?"

"இப்போ உன்னைப்பத்தி ஏதாவது பொறணி பேசனும்னு வச்சுக்கோவேன்? உன்னை வச்சுண்டு எப்படி பேசுறது? அதான் யோசிக்கிறேன்.."

பிருந்தாவின் ஃபோன் பாடியது

-------------------

"ஹாய் கண்ணன்!"

" "

"என்ன இன்னும் ஆளையே காணோம்? ட்ராஃபிக்ல மாட்டீட்டீங்களா? என்ன ஆச்சு?"

" "

"ஆக்ஸிடெண்டா? இருக்கும்னு நெனைக்கிறீங்களா?"

" "

"சரி சரி எக்ஸிட் எடுத்து மெதுவா வந்து சேருங்க, கண்ணன்"

" "

"ஓ கே"

-----------

"ஆமா, எதுக்குடி ஓ கே சொன்ன கடைசியில?"

"எதுக்குனா?"

"இல்லை, கடைசிலே "ஐ லவ் யு" னு சொன்னாரா?"

"நீ வேற! சொன்னால் நல்லாத்தான் இருக்கும். ஆனால் சொல்லலயே"

"அப்போ எதுக்கு ஓ கே சொன்ன?"

"போடி லூசு! ஐ லவ் யு சொன்னால், ஐ ல யு டூ ஸ்வீட் ஹார்ட்னு சொல்லாமல், எதுக்கு "ஓ கே" சொல்றேன்? நான் என்ன லூசா?"

"ஓ அப்படிப்போகுதா, கதை?"

"வாயை கிளறி அள்ளிட்டயா? ஏன்டி வந்து உயிரை வாங்கிற?"

"எப்போ வருவாராம் கண்ணன்?"

"ஃப்ரீவேல ஸ்டக் ஆயிட்ட்டாரம். எக்ஸிட் எடுத்து வர்றேன்னு சொன்னாரு"

"எவ்ளோ நேரம் ஆகுமாம்?"

"இன்னும் ஐந்து நிமிஷத்தில் வந்திடுவேன்னு சொன்னாரு"

"சரி, டின்னர் வேணாம்! எனக்கு ஒரு மைரோவேவ் டீயாவது போட்டுத்தாடி"

"உட்காரு, வர்ரேன். யூ ஆர் சச் எ பெய்ன் இன் த பட், பானு!"

காலிங் பெல் அடிச்சது..

"யாருனு பாருடி, பானு!"

"ஹல்லோ கண்ணன்! உள்ளே வாங்க"

"நீங்க பானுதானே?"

"கரெக்டா ஞாபகம் வச்சிருக்கீங்க?"

"நீங்க பிருந்தா ரூம் மேட்டா ஆயிட்டீங்களா, பானு?"

"கிண்டல்தானே இது? இப்போ எதுக்கு இங்கே வந்தனு கேக்குறீங்களா?"

"சே சே. அதெல்லாம் இல்லைங்க"

"கவலைப்படாதீங்க! ஒரு டீயை குடிச்சுட்டு போயிடுவேன். அப்புறம் நீங்க ரெண்டு பேரும் நல்லா.. சாப்பிடுங்க"

"வாங்க கண்ணன்! இந்தாடி டீ, பானு!"

"ஏங்க பானு! உங்களுக்கு பிருந்தா டீ தான் பிடிக்குமா?" என்றான் கண்ணன்

"ஆமா! உங்களுக்கு என்ன பிடிக்கும், கண்ணன்? பிருந்தாவா? " சத்தமாகச் சிரித்தாள் பானு.

-தொடரும்

Thursday, November 12, 2009

இந்திய பேராசிரியர்களின் அயோக்கியத்தனம்!

“நம்ம சேர்மன் புதுசா ஒரு மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் வாங்குறாரு. இன்னும் 6 மாதத்தில் வந்துவிடும்னு சொல்றாங்க! அதனுடைய விலை மூனு கோடியே ஐம்பது லட்சமாம்”

“அவருக்கு எத்தனை பர்சண்ட் கமிஷன் தர்றானாம் அந்த ஃபாரின் கம்பெனி?”

“கமிஷனா? என்னடா சொல்ற?”

“நிச்சயம் 15-20% வாங்கி அவர் பைக்குள்ளே போட்டுக்குவாரு! இந்தியாவில் மட்டும்தான் இதுபோல் நடக்குது. அமெரிக்காவில் நடந்தால் அந்த பேராசிரியரை உடனே ஃபயர் பண்ணிடுவாங்க. You should not get some money and put it in your pocket for buying an instrument for an Institution. போஃபோர்ஸ் லகூட இதுபோல்தான் நடந்தது இல்லையா?”

“ஏன் நம்ம நாட்டிலேமட்டும் லஞ்சத்தையும் ஊழலையும் வெள்ளைக்காரர்கள் இப்படி விதைக்கிறார்கள்?”

“தெரிலைப்பா. நான் இதைப்பத்தி ஒரு சில அமெரிக்கர்களிடம் சொன்னேன். அவர்கள் நம்மள கேவலமா பார்க்கிறார்கள்!”

“யாருடைய பணம் இவர்கள் பைக்குள்ள போகுது?”

“இவங்க அப்பன்வீட்டுப் பணமா என்ன? சாதாரண ஏழை மக்களின் “வரிப் பணம்” தான் இவர்கள் பாக்கட்டில் போகுது. படிச்சவன், பெரிய பேராசிரியர்தான் நாட்டுக்கும் மக்களுக்கும் முதல் துரோகியா இருக்கான். என்னத்தை சொல்லச் சொல்ற போ!”

Wednesday, November 11, 2009

ஜீனியஸால் எப்படி காப்பியடிக்க முடியும்?


அந்தக்காலத்தில் இசையோ, சினிமா கதையோ காப்பியடித்தால் பலருக்கு தெரியாமலே போயிடும். ஆனால் இப்போ இணையதளம் வந்ததிலிருந்து காப்பியடிப்பவர்களுக்கு கெட்ட நேரம்தான். காப்பியடிப்பவர்களை கண்ணா பின்னானு விமர்சனம் பண்ணுறாங்க. காப்பியடிக்காதவர்களையும் அடித்ததா சொல்லிக்கொண்டும் திரிகிதுகள் பல அரைவேக்காடுகள்!

இசையில், காப்பி என்பது சர்வ சாதாரணம்

* ஹரிஸ் ஜெயராஜ் நெறைய வெஸ்டெர்ன் ட்யூன்களை திருடுகிறார்னு பலருக்குத் தெரியும்.

* ஆஸ்கர் வின்னர் ஏ ஆர் ரகுமானும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சில ட்யூன்ஸ் வெஸ்ட் மற்றும் பழைய பாடல்களையும் நினைவு படுத்துகிறது.

* தேவாட்ட ஒரு நல்ல பழக்கம் என்னனா, தன்னை பெரிய க்ரியேட்டரா ஒரு போதும் சொல்லிக்கொள்வதில்லை.

* ஏன் இசைஞானி இளையராஜாவும் இதற்கு விதிவிலக்கெல்லாம் இல்லை. இவருடைய ஒரு சில பாடல்கள் வெஸ்ட்ல இருந்து அடிச்சது என்பதை யாரும் மறுக்கமுடியாது. ப்ரியா படத்தில் வரும் டார்லிங் டார்லிங் டார்லிங் ட்யூன் எங்கே இருந்தோ சுருட்டியது.

இப்போ படங்களைப்பார்ப்போம்

* கமலஹாசன் நடித்த ஒளவை ஷண்முகி, தெனாலி, மற்றும் அவர் தயாரித்த மகளிர்மட்டும் போன்றவைகளின் கதைகள் ஹாலிவுட் படங்களின் இருந்து திருடியவைதான். இதில் கதைக்கு க்ரிடிட் போவது பொதுவாக க்ரேசி மோஹன் அவர்களுக்கு. அவர் ஒர் பலிகடாவா என்னனு தெரியலை! பலர் இதைப்பத்தி விமர்சித்ததால் இப்போ இவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பதுபோல் இருக்கு.

* தெனாலி கதைக்கு க்ரிடிட் பெற்றவர் க்ரேஷி மோஹன் அவர்கள். இந்த லின்க்ல இதை காப்பினு பச்சையாவே சொல்லீட்டாங்க! http://en.wikipedia.org/wiki/Thenali

* ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தின் கதையும் ஹாலிவுட் படத்தில் இருந்து திருடியதுதான். இதுக்கும் க்ரிடிட் போவது க்ரேஷி மோஹனுக்கு.

அடுத்தவர் க்ரியேஷனை திருடுபவர்களுக்கு சட்டப்படி தண்டனை இருக்கத்தான் செய்கிறது. சட்டத்தையும் தண்டனையையும் விட்டுவிடுவோம்.

இதுபோல் காப்பியடிப்பவர் பலரை நம்ம ஜீனியஸ்னு சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அதுதான் பிரச்சினினை எனக்கு.

என்னுள் தோன்றும் சில கேள்விகள்...

* க்ரியேட்டிவிட்டி என்பது ஓரளவுக்கு ஒரிஜினலா இருக்க வேண்டாமா?

* இதுபோல் காப்பியடிச்சு பெரிய ஆளாகனுமா என்ன?

* காப்பியடிக்காமல் க்ரியேட்டிவா இருப்பது ரொம்ப ரொம்ப கஷ்டமா?

* ஜீனியஸால் எப்படி காப்பியடிக்க முடியும்?

* ஜீனியஸ்னாலே சுயமாக சிந்தனை செய்பவன் என்றுதானே அர்த்தம்?

எந்த க்ரியேட்டருக்கும் ஓரளவுக்கு இன்ஸ்பிரேஷன் இருக்கத்தான் செய்யும். அதை யாருமே தவிர்க்க முடியாது. நான் சொல்வது அப்பட்டமான காப்பியை! நான் மேற்கூறியபடங்கள் அப்பட்டமான காப்பிகள்!

Tuesday, November 10, 2009

கடலை கார்னர் (29)

"What's up Kannan?"

"You tell me, Stacy! Hi Brindh!"

" Kannan! You want to hear some gossip? Someone is complaining that you are not publishing that person's completed work"

"Who? Xin?"

"Yeah, she wants to get that work published, Kannan. Why dont you publish her work if you are not writing any patent on that?"

"Trust me, Stacy, her work has some serious problems. The data she has got are not clean enough. A publication is just a start, not an end. She does not understand that."

"I dont know, only Brindha told me about that. Xin talked only with her"

"I know, Xin will go and complain to another Indian but the fact is, her work is not worth publishing. If she wants, she can publish it on her own without my name in it"

"Why is that?"

"I don't want to get into trouble. I dont want some white guy commenting on my paper "an Indian namely Kannan f'ked up "

"You are such a racist, Kannan!"

"Yeah, race is playing a role everywhere even in Science, Stacy. I have to be very careful because I have an Indian name"

"OK, So what else is new, Kannan?"

" Someone is going to talk to me after a long break. And she has invited me for dinner to break the silence" he was looking at Brindha.

"Who? Oh Brindha! So, what do you guys going to do, Brindha?"

"Just dinner" Brindha smiled.

"Are you going to eat Brindha for dinnar, Kannan?, LOL!"

"Why not? if it was in the menu! LOL! Hey, Why dont you join us too? Brindha, Why dont you invite Stacy too?"

"Can you make it for the dinner on Saturday, Stacy?"

"Probably not! I wish I could"

"Why? You like watching us, Stacy?"

"What do you mean, Kannan?" Brindha screamed.

"Why is she screaming, Stacy? I only meant when we are eating dinner"

"I don't know. May be Brindha thought something else, Kannan. LOL"

"Why is she always thinking dirty, Stacy?"

"LOL"

"SHUT UP Kannan! You are the worst of all in every way!"

"OK, I dont say a word anymore"

"Kannan! if you have any plans of marrying her, please don't do it! Just make love and dump her! Otherwise she will make you as her "slave"!"

"Yeah, Why don't you marry Stacy! She has whatever you want"

"Yeah, let us get married Kannan! LOL"

"Let me take the "rain check" at this time, Stacy! By the way, Why?"

"Why what?"

"Why do you want to marry an indian? Oh I know, Is that because if you marry an Indian, you will get lots of attention, Stacy?"

"LOL"

"Cut the crap, Kannan"

"OK, I was only teasing you girls. Let me stop here, Stacy. Otherwise she wont talk to me ever again!"

"It is fun watching you two fight! I need to go now. You guys settle down! Have a nice weekend you both!" Stacy left.

"ஆமா, உனக்கு எதுக்கு சும்மா சும்மா கோபம் வருது, பிருந்தா?"

"சும்மாவா? அநியாயத்துக்கு பேசுறீங்க, நீங்க!"

"சும்மா விளையாட்டுக்குத்தானே உன்னை டீஸ் பண்ணினேன்?"

"சரி, அவளை எதுக்கு இன்வைட் பண்ண சொல்றீங்க? இன்வைட் பண்ணினீங்க?"

"அவ வந்தா உனக்கும் நல்லாயிருக்கும்னுதான்"

"எனக்கு நல்லா இருக்காது"

"தனியா நமக்கு போர் அடிக்கும் இல்லையா, பிருந்தா?"

"அதெல்லாம் எனக்கு போர் அடிக்காது"

"போர் அடிச்சா?'

"நீங்க என் கெஸ்ட் இல்லையா? உங்களுக்கு போர் அடிக்காம நான் நல்லா பார்த்துக்குறேன்"

"எப்படி?"

"அதெல்லாம் இங்கே சொல்ல முடியாது. நான் போர் அடிக்காமல் கவனிச்சுக்கிறேன்"

"எதாவது நாட்டியா பண்ணுவியா?"

"ஆமா" அவள் சிரித்தாள்.

"என்ன பண்ணி எனக்கு போர் அடிக்காம ஆக்குவ? டாண்ஸ் கீண்ஸ் ஆடுவியா? உனக்கு பரதநாட்டியம், சல்சாலாம் தெரியும் இல்லையா?"

"பரதநாட்டியமெல்லாம் ஆடி ரொம்பக் காலமாச்சு!"

"அரங்கேற்றம்லாம் பண்ணினயா?"

"ஆமா"

"சே நான் பார்க்க முடியாமல் போச்சே உன் டாண்ஸை. அப்போ சின்ன பொண்ணா ரொம்ப அழகா இருந்து இருப்ப"

"இப்போ அழகா இல்லைனு சொல்றீங்களா?"

"இல்லை, எத்தனை வயசுல அரங்கேற்றம் பண்ணின?"

"ஒரு 17 வயது இருக்கும்"

"அதான் சொன்னேன். சின்னப்பொண்ணா களளங்கபடமில்லாமல் க்யூடா இருந்து இருப்பனு.."

"இப்போவும் நான் சின்னப்பொண்ணுதான்"

"ஆனா இப்போ அப்படி தெரியலையே?"

"அப்படியெல்லாம் பார்க்கக்கூடாது, கண்ணன்"

"எல்லாம் பெருசு பெருசா இருக்கு?"

"எது?"

"உன் கண்கள்தான்"

"வயதாக ஆக கண்ணு பெருசாகும்னு எங்கே படிச்சீங்க?"

"வேற என்ன பெருசாகும்? உன் உதடா?"

"சரி இதோட மரியாதையா நிறுத்திக்கோங்க! ஆமா, அவளை வச்சுண்டு கண்டபடிபேசுறீங்க! உங்களுக்கு என்னிடம் பயமே இல்லையா, கண்ணன்?"

"ஸ்டெய்ஸி இருக்கும்போதா? உன்னிடம் எந்த மாதிரி பயம் இருக்கனும்ங்கிற?"

"நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்டுக்குவேன்னு ஏன் நினைக்கிறீங்க?"

"மே பி, இட் இஸ் பிகாஸ்..ஐ ஃபீல் சோ க்ளோஸ் டு யு, பிருந்தா. ஐ டோண்ட் சீ எனி பேர்ரியர்ஸ் ஆர் வாட்ஸோ எவெர் பிட்வீன் அஸ்"

"இப்படி சொல்லி சொல்லி என்னை ஒரு வழி ஆக்கி வச்சுருக்கீங்க!"

"ஏன் நீ நல்லாத்தானே இருக்க, கிழங்கு மாதிரி? எனிவே யு டோண்ட் ஃபீல் லைக் ஹவ் ஐ ஃபீல்?"

"நான் இதுக்கு பதில் சொல்ல மாட்டேன்"

"ஏன்?"

"எப்பொழுதும் சொல்றதுதான். நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப என்னை ஏமாத்துறீங்க!"

"அதெல்லாம் இல்லை. இட் ஃபீல்ஸ் குட் டு சே தட்"

"சே வாட்?"

"வாட்டவர் ஐ டோல்ட். ஹவ் ஐ ஃபீல் அபவ்ட் யு"

"கண்ணன்! யு நெவெர் போர் மி"

"காலம் பூராம் இப்படியே டயலாக் பேசியே ஓட்டிருவோமா, பிருந்தா?"

"அதெல்லாம் என்ட்ட நடக்காது"

"ஏன்? என்ன பண்ணப்போற?"

"எல்லாம்தான்"

"டின்னருக்கு நீ கிடைப்பியா?"

"நான் என்னைக்கு மாட்டேன்னு சொன்னேன்?"

"எதுக்கு?"

"எதுக்கும்தான்"

"சரி, நல்லா சமச்சு வை. சனிக்கிழமை எந்நேரம் வர?"

"சீக்கிரமே வாங்க!"

"நான் சீக்கிரமே வந்தால் நீ குக் பண்ண முடியாது"

"ஏன் நீங்க குக் பண்ணி தருவீங்களாக்கும்?"

"நான் ரெடிதான். நீதான் பாவம் என் சமையல் சாப்பிடனும்னா.."

"அடுத்தமுறை உங்கவீட்டில் நீங்களே சமைத்து, நீங்களே எனக்கு ஊட்டிவிடனும்!"

"அப்புறம்?"

"என்னை நல்லா கவனிக்கனும்"

"டின்னர் சாப்பிட்டதும் போக மாட்டியா?"

"நீங்க டெஸ்ஸேர்ட்லாம் தர மாட்டீங்களா?"

"சரி, டெஸ்ஸேர்ட் சாப்பிட்டதும் உன் வீட்டுக்கு போவியா?"

"தூக்கம் வந்துச்சுனா? அங்கேயே படுத்துடுவேன்"

"அப்போ ரொம்ப சாப்பிடாதே! வம்பான விருந்தாளியா இருப்ப போல"

"சரி சரி, மொதல்ல சனிக்கிழமை என் வீட்டுக்கு வாங்க. எப்படி உபசரிக்கிறதுனு ஒரு லெஸ்ஸன் எடுக்கிறேன். அத் மாதிரி செய்ங்க. சரியா?"

"ஓ கே. வேலை கிடக்கு நான் போயிட்டு வர்றேன், பிருந்த்"

"ஓ கே, கண்ணன்!"

-தொடரும்


Saturday, November 7, 2009

கிரிக்கெட் இந்தியாவுக்கு ஒரு சாபக்கேடா?

"அமெரிக்கா வந்தும் ஏன்ப்பா கிரிக்கட் கிரிக்கட்னு இந்த வெள்ளைக்காரன் விளையாட்டை கட்டி இன்னும் அழறானுக? உலகத்தில் வேற விளையாட்டே இல்லையா இந்த பாழாப்போன கிரிக்கட்டைத் தவிர?"

"ஏன் பேஸ்பால் பார்க்கனும்னு சொல்றியா?"

"நான் அப்படி சொல்லல கிரிக்கட்டை இங்கே வந்தும் கட்டி அழறவனுகளைப் பார்த்தால் பரிதாபமா இருக்கு"

"அப்போ அமெரிக்கா வந்தும் ஏன் இன்னும் தமிழ்ப்படம் பார்க்கிற?"

"அது தமிழ் சம்மந்தப்பட்டது. கிரிக்கட்க்கு மொழி கிடையாது!"

"கலாச்சாரக் காவலர் ராமதாஸோட சேர்ந்துட்டியா நீ?'

"இல்லையே. நான் கபடி வெளையாட சொல்லல"

"கிரிக்கட்ல என்ன பிரச்சினை?"

"எனக்கென்னவோ கிரிக்கட்டை ஒழிச்சா நம்ம நாடு ஓரளவுக்கு முன்னேறும்னு தோனுது. கிரிக்கட் பார்த்துப் பார்த்து அவன் அவனுக்கு புத்தி மழுங்கிப்போச்சு. ஒரு டென்னிஸ் விளையாடலாம், கால்ப்பந்து, கூடைப்பந்து, பாட்மிண்டன் இதெல்லாம் அழிஞ்சே போயிருச்சு இந்த வீணாப்போன கிரிக்கட்டாலே. நம்ம ஆளு ஒண்ண பிடிச்சா உடும்புப்பிடிதான்! இது ஒரு சாபம்!"

"மேலை நாடுகளிலும் அப்படித்தானே?"

"இல்லையே, இங்கிலாந்துலகூட கால்ப்பந்துதான் முதன்மையான விளையாட்டுனு நெனைக்கிறேன். கிரிக்கட் அல்ல!"

"யு எஸ்ல எப்படி?"

"இங்கேயும், அமெரிக்கன் ஃபுட்பால், பேஸ் பால், பாஸ்கட் பால், கால்பந்து, ஐஸ் ஹாக்கி, டென்னிஸ், எல்லா ஸ்போர்ட்ஸ்க்கும் ஒவ்வொரு சீஸன் இருக்கு. நம்ம கிரிக்கட்டை மட்டும் கட்டி அழற மாதிரி இவர்கள் ஒரு விளையாட்டை மட்டும் காலம்பூராம் கட்டி அழல"

"இதை வச்சு நீ என்ன சொல்ல வர்ற?"

"நம்மட்ட ஏதோ ஒரு பெரிய குறை இருக்கு. அதனால்தான் நம்மளலால எதிலையுமே சாதிக்க முடியலை. நம்மகிட்ட ஒரு மாதிரியான மழுங்கிய புத்தி இருக்கு. ஏதோ மூளைவளர்ச்சியில்லாதவர்கள் போல ஒண்ண பிடிச்சா நம்ம விடுறதே இல்லை. The way we obsessed with ONLY CRICKET clearly shows lots of things about us. It shows our weakness. It shows our inability or incapability for having diversity or creativity or broader view"

"உனக்கே இதெல்லாம் அதிகமா இல்லையா?"

"இல்லை, நம்ம கிரிக்கட்டை மட்டும் கட்டி அழறதுதான் அதிகம்!"

Friday, November 6, 2009

வேட்டைக்காரன் கிருஸ்த்மஸ்க்காம்!தீபாவளிக்கு வெள்ளித்திரையில் வரவேண்டிய வேட்டைக்காரன் கிருஸ்த்மஸ்க்கு உலகமெங்கும் ரிலீஸ் ஆகுறானாம். சன் பிக்ச்சர்ஸ் டிஸ்ட்ரிப்யூட் பண்ணும் எ வி எம் மின் வேட்டைக்காரனை, சன் ஃபேமிலியைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலினுடைய சொந்தப்படமான ஆதவனுடன் மோதவிடாமல் டிலே பண்ணியது. இப்போ ஆதவன் ஆடி அடங்கியவுடன் வேட்டைக்காரனை கிருஸ்த்மஸ்க்கு வெளியிடுறாங்க.

இன்றைய நிலையில் போறபோக்கப் பார்த்தா தமிழ் டிவி மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவும் "சன் ஃபேமிலி" யின் முழு கண்ட்ரோலுக்கு போயிடும்போல இருக்கு! எந்திரனும் இவர்கள் தயாரிப்புத்தான் என்பதால் ரஜினியும் சங்கரும் எதைப்பற்றியும் கவலைப் படவேண்டியதில்லை. நிமிசத்துக்கு ஒரு அட்வர்டைஸ்மெண்ட் பண்ணி சன் நெட்வொர்க் படத்தை எப்படியோ ஓட்டிடுவாங்க போல.

காயத்ரியின் பகல்கனவு! (18 + ONLY)

காயத்ரிக்கு கல்யாணம் ஆகி பத்து வருடம்தான் ஆகுது. வருடங்கள் போனதே தெரியலை. இப்போ எல்லாம் ஹரி அவளை சரியாக் கண்டுக்கிறதே கிடையாது.

"ஆமா, நல்லா டி வி பாருங்க, ஸ்போர்ட்ஸ் பாருங்க, "எல்லாம்" பாருங்க! என்னையும் கொஞ்சம் கண்டுக்கிறதுதானே?" னு மனதுக்குள்ளே புலம்பிக்கொண்டு கவர்ச்சியா மினி ஸ்கேர்ட் டுடன், ஒரு ரிவீலிங்கா டாப்ஸும் போட்டுக்கொண்டு வந்து டி வி பார்த்துக் கொண்டிருந்த கணவன் ஹரி அருகில் அமர்ந்தாள் காயத்ரி.

"ஏன்டி இந்த வயசுல இப்படி அலையிற?" ங்கிறமாதிரி ஏதோ வினோதமாக அவளைப்பார்த்தான் ஹரி. பக்கத்தில் உக்காந்ததால் பேருக்கு அவள் கன்னத்தில் ஒரு முத்தம். அதைக் கொடுக்காமல் இருந்தாலே பரவாயில்லைனு தோனுச்சு அவளுக்கு. இந்த ஊரில் உள்ள அமரிக்கர்கள் மனைவியிடம் ஃபோன் பேசிட்டு மறக்காமல் "ஐ லவ் யு" சொல்லிட்டு வைக்கிற மாதிரி.

இந்தியாவில் இருக்கயிலே நல்லாத்தானே இருந்தாரு, ஒரே ரொமாண்டிக்கா! அமெரிக்கா வந்து ஒரு நாலு வருஷம்தான் ஆகுது. அதிலிருந்து வேலை அதிகம், பையனா பார்த்துக்கனும்னு போனதுனாலேயே என்னவோ தெரியல, ஒண்ணும் பெருசா ரொமான்ஸே இல்லை. ஒரே ஒரு பையன்தான், அவனும் இப்போ வீட்டில் இல்லை, ஸ்கூல்ல ஏதோ கேம்ப்க்கு போயிட்டான். அவன் திரும்பி வீட்டுக்கு வர நாலு நாள் ஆகும். இப்போதைக்கு ப்ரைவஸிக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை, நெறையாவே இருக்கு. ஆனால் இவர்மட்டும் ஏன் இப்படி ஜடமா இருக்கிறார்? ஒருவேளை டெஸ்டாஸ்டீரோன் லெவெல் கொறைஞ்சிருச்சா என்னனு தெரியலை. ஒருவேளை இந்தியாவிலே மாதிரி இவருக்கு ஆளும் பேருமா கூட்டமா இருந்தாத்தான் பிடிக்குமா? அப்போத்தான் மூடு வருமா? இதையெல்லாம் அவரிடம் வெளிப்படையாக் கேட்டு டிஸ்கஸ் பண்றதெல்லாம் அவளுக்குப் பிடிக்காது. அவளா அவரைப் புரிஞ்சுக்கனும்! இந்த நாலு நாள்ல இவரை ஏதாவது ஒரு வழி பண்ணீயே ஆகனும்.

"நான் இந்த அவ்ட்ஃபிட்ல செக்ஸியா இருக்கேனா?" என்று கடைசியில் அவளே அடக்கமுடியாமல் கேட்டுவிட்டாள். அப்படிச் சொல்லி அவன் அருகில் நல்லா உரசுராப்பில உக்காந்து கணவனை செட்யூஸ் பண்ண ட்ரை பண்ணினாள், காயத்ரி. ஹரிக்கு என்னமோ அந்த அரைகுறை ட்ரெஸ்ல அவளைப்பார்த்து ஒண்ணும் உணர்ச்சியெல்லாம் பொங்கி வரலை, ஆனால் அவள் தேவையை புரிந்துகொண்டு, ஏதோ கடமையைச் செய்வதுபோல போனது அன்று இரவு.

காயத்ரிக்கு கடமைக்காக காதலோ, காமமோ சுத்தமாக பிடிக்காது. வாரம் ஒருமுறையானாலும், ஏன் மாதம் ஒரு முறைனாலும் பரவாயில்லை, ஆனால் ஹரி அவகிட்ட வந்து நல்லா வழியனும், அவளையும் அவள் அழகையும் அப்படி இப்படி அனுபவிச்சு பார்த்து ரசிக்கனும், அவன் பார்க்கும் பார்வையிலே அவளுக்கு உடம்பில் நெறைய கெமிக்கல் ரியாக்ஷன் நடக்கனும். அப்புறம் அவளை திடீர்னு கட்டி அணைச்சு அவ இடுப்பில், உதட்டில், மார்பில், கழுத்தில் எல்லா எடத்துலயும் கிஸ் பண்ணி அவளை அவன் மெய் மறக்க வைத்து, ஒரு சின்ன ஆர்கஸம் அவளுக்கு வருமளவுக்கு முத்தம் கொடுத்து அவ மூடை ஏத்தி அவளை ரெடியாக்கனும்! அது மாதிரி அன்புதான் காய்த்ரிக்கு வேணும். அதுதான் அவளுக்குப் பிடிக்கும். அதெல்லாம் அமெரிக்கா வந்தபிறகு நடந்தமாதிரியே இல்லை. இப்போ அந்த ஆசையெல்லாம் அவளுடைய பகல்கனவு மாதிரி ஆயிடுத்து. அவள் கனவை நனவாக்காமல் ஏதோ இதுவும் ஒரு வேலை போல் அவன் செய்வதால் ஹரிமேலே எரிச்சலும் கோபமுமாத்தான் வந்தது அவளுக்கு.

அடுத்தநாள் ஃப்ரெண்ஸ்ட்ட லேடீஸ் நைட் அவுட் ல இதைப்பத்தி பட்டும் படாமலும் நாசூக்காக பேசினாள். "நீ ஒண்ணும் கவலைப்படாதே! இங்கேயும் அதே கதைதான்" என்று சிரித்தாள்கள் தோழிகலெல்லாம். அப்போத்தான் புரிந்தது, வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போலனு. அவ்ளோதானா? காதல், காம வாழ்க்கை எல்லாம் அதுக்குள்ள முடிஞ்சதுபோல என்று ஒரே கவலை அவளுக்கு. ஆனால், அவள் தன்னைத்தானே அவள் பாத்ரூமில் கண்ணாடியில் பார்க்கும்போது இன்னும் அழகா எடுப்பா, கவர்ச்சியாத்தான் இருந்தாள். அதை உறுதிப்படுத்துவதுபோல வொர்க்ல, ஷாப்பிங் போகயிலே எல்லாம் நெறையவே அட்டன்ஷன் கெடச்சது, காயத்ரிக்கு. நேத்துக்கூட ஒரு கடையில் உள்ள செக் அவுட்ல உள்ள டெல்லர் அவளை அப்படி ஒரு பார்வை பார்த்தான். தேவையே இல்லாமல் அவளிடம் வழிஞ்சான். காயத்ரிக்கு எரிச்சல்தான் வரும் கண்டவனும் தன்னை அளவுக்கதிகமா பார்க்கிறது, தன்னுடன் தேவையே பேசுவது இதெல்லாம். கல்யாணம் ஆனவள்னு இதுகளிடம் சொல்ல "ரிங்"கா போட்டுக்கொண்டு அலையமுடியும்? என்று தனக்குள்ளே திட்டிக்கொள்வாள்.

ஃப்ரெண்டு ஒருத்தி ஏதோ ஐடியா கொடுதாள்னு ஒருமாதிரி விக்டோரியா சீக்ரட்ஸ் போயி, புதுசா ஒரு ஸ்பெஷல் பேண்டிஸ் ஒரு பேரை வாங்கி வந்திருந்தாள் காயத்ரி. அன்று சனிக்கிழமை, கீழே பேஸ்மெண்ட்ல லாண்ட்ரி போடும்போது அரைகுறையா ஒரு சின்ன ஸ்கேர்ட் மட்டும் போட்டுக்கொண்டு உள்ளே அந்த புது பேண்டிஸை போட்டு இருந்தாள். வேணும்னே பழைய க்ளோத்ஸை ட்ராப் பன்ணிட்டு எடுப்பதுபோல் உட்கார்ந்தாள். அவளுக்கு உதவ எதிர்புறமாக உட்கார்ந்து துணிகளை எடுத்த ஹரி, அவளையும், அவள் உள் ஆடையையும் நல்லாவே கவனித்தான்.

"என்ன காய்த்ரி பேண்டிஸ் கிழிஞ்சி இருக்கு? நல்லது எதுவும் இல்லையா? இதிலேகூட சிக்கனமா? நாளைக்கு போய் ஒரு டசன் எடுத்துண்டு வரலாம்" என்றான் விபரம் புரியாமல்.

"உங்களை என்ன பண்றது?", னு நினைத்துக் கொண்டாள் மனசுக்குள்ளேயே. "இது புது பேண்டிஸ்தான்யா மக்கு" னு ஹரியிடம் விளக்கம் சொல்ல அவளுக்கு இஷ்டமில்லை.

அடுத்த நாள் எரிச்சலும் கோபமுமா இருந்தாள். வாஷிங் மெஷினில் ஏதோ கோளாறுன்னு அவள் போட்டுக்க ஒண்ணும் மாட்டாமல் ஷூட்கேஸ்ல தேடி ஒரு பழைய சேலையையும், அதுக்கு மேட்சிங் ப்ளவ்ஸையும் மாட்டிக்கொண்டு இருந்தாள். நல்லவேளை ப்ளவ்ஸ் சைஸ் இன்னும் அவளுக்கு ஃபிட் ஆவதுபோல சரியா இருந்தது. அமெரிக்கா வந்ததிலிருந்து மாடர்ன் ட்ரெஸ்தான் இப்போலாம் காயத்ரிக்குப் பிடிக்கும். சேலையெல்லாம் இந்தியாவிலே கட்டியதுதான். அந்த சேலையை உடம்பெல்லாம் மாட்டிக்கொண்டு திரியிறது சுத்தமா பிடிக்காது, காயத்ரிக்கு.

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்ல உக்காந்து முக்கியமான ப்ராஜக்ட் ஒண்ணுல சீரியஸா வேலை செய்துகொண்டிருந்த ஹரிட்ட அவசரமாக காஃபியை கொண்டுவந்து கொடுத்தாள்.

"என்ன காலையிலே வேற அவுட்ஃபிட் போட்டிருந்த, திடீர்னு சேலையில் இருக்க?" னு விசாரித்தான் ஹரி.

"ஆமா, புது வாஷிங் மெஷின் வாங்கனும் போல. இது அவ்வளவுதான். கரெக்ட்டா என் ட்ரெஸ் எல்லாத்தையும் போடும்போது மெஷின் போயிடுத்து. வாரண்ட்டி இருக்குனு கால் பண்ணினால் சர்விஸ்க்கு ஆட்கள் நாளைக்குத்தான் வருவார்களாம்! அதான் இந்த சேலையை உடம்புமுழுவதும் சுத்திக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு" என்றாள் எரிச்சலாக.

"இங்கே வா உன்னிடம் முக்கியமான ஒண்ணு கேக்கனும்" னு அவளை கையைப்பிடிச்சு பக்கத்தில் இழுத்தான் ஹரி.

"அடுப்புல பால் இருக்கு, விடுங்க" என்று ஓடிப்போயி அடுப்பில் இருந்ததை கவனித்தாள். அவளுக்கு இன்னும் புரியலை.

"ஹேய் காயத்ரி! இழுத்துப்போத்தினால்தான்டி நீ பயங்கர செக்ஸியா இருக்க !" னு அவள் காதருகில் முனுமுனுத்தான். அவள் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்து பின்னால் இருந்து கட்டி அணைத்தான். அவள் கழுத்தில் அவன் இதழ்கள் பதிந்தது. என்றும் போலில்லாமல் வித்தியாசமாக அவனுடைய முத்தங்கள் சத்தமாகவும் அவள் உடம்பில் ஏதோ செய்வதுபோல இருந்தது. அவன் கைகள் அவள் உடம்பில் தெரிந்த எல்லா "கேப்" களிலும் ஊர்ந்தது, பிறகு கைகளை அவன் உதடுகளும் ஃபாளோ பண்ணின. காய்த்ரி ஸ்ட்வை ஆஃப் பண்ணினாள் . ஸ்டவ்வில் உள்ள நெருப்பு அணைந்தது, ஆனால் அவன் கொடுக்கும் முத்தத்தால் அவள் உடல் கொதித்தது, பொங்கியது. அதன்பிறகு அவள் எதுவும் பெருசா பேசவில்லை. இன்று என்னவோ புதுமாதிரியாக அவளுக்கு வழங்கும் அன்புடன் அவன் அவளை ஹீரோயினாக வைத்து ஒரு கதையும் சேர்த்துச் சொன்னான். ரொம்ப ரொம்ப மோசமான கதை அது. ஆனால், அதுதான் அவளை எளிதாக அவனுக்கு முன்னால் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது . எவ்வளவு நாளாச்சு இப்படி இவர் "அன்பா" இருந்து!

ஷவரில் குளித்துக்கொண்டிருக்கும்போது இன்பத்தில் ஆழ்த்திய ஹரியை நினைத்தாள், "யாரையும் கேட்டால், இவர் ஒர் பக்கா ஜெண்டில்மேன் னு சொல்வாங்க. இவர் வண்டவாளம் எல்லாம் எனக்குத்தானே தெரியும்? வர வர ரொம்ப ரொம்ப மோசம் இவர்" என்று எண்ணி வெட்கப்பட்டாள். அங்கே பாத்ரூம் ஓரத்தில் இவ்வளவுக்கும் காரணமான, தன் கனவை நனவாக்கிய அந்த பழைய புடவையைப் பார்த்து தனக்குள் சிரித்தாள்.

குளித்துவிட்டு வெளியே வந்தவள், அப்போது பாத்ரூமில் நுழைந்த ஹரியிடம் , "ப்ராஜெக்ட் டெட் லைன், நாளைக்குனு சொன்னீங்க! ரெண்டு மணி நேரம் வேஸ்டாயிடுச்சே? பாவம் நீங்க!" என்றாள் கிண்டலாக.

"நீதான் சதி பண்ணிட்டடி! ஏன் எனக்கு ப்ரமோஷன் கெடைக்கிறது பிடிக்கலையா? உன்னைவிட ரொம்ப அதிக சாலரி வாங்கிடுவேன்னு இப்படி செக்ஸியா சேலையைக் கட்டி வந்து கவுத்தீட்டயேடி" என்று அவள் பின்புறம் தட்டிவிட்டு அவள் கன்னத்தில் லேசா முத்தமிட்டு உள்ளே சென்றான்.

அவனுக்கு "அரைகுறை" காயத்ரியைவிட, உடம்பெல்லாம் மறைத்து சேலையில் இருக்கும் "பத்தினி" காயத்ரிதான் கவர்ச்சியாக இருக்கிறாள் என்பது இப்போதாவது தெளிவாகப் புரிந்ததே. "நல்ல வேளை வாஷிங் மெஷின் "ரிப்பேர்" ஆச்சு" னு தனக்குள் சொல்லி சிரித்துக்கொண்டாள். ஒருவழியாக அவள் பகல்கனவு நனவானது.

Monday, November 2, 2009

வளர்ந்து "மறைந்த" நடிகர்கள்!


தமிழ் சினிமால சிவாஜி,எம் ஜி ஆர்,கமல், ரஜினி எல்லாம் ஏன் மிகப்பெரிய ஆட்கள் என்றால், இவர்கள் வளர்ந்தபிறகு, வயதான பிறகும், இவர்கள் காலத்தில்,

* இவர்களை கதாநாயகர்களாக வைத்துப்படம் எடுக்க எல்லா நேரங்களிலும் தயாரிப்பாளர்கள் ரெடி.

* இவர்களுடன் ஹீரோயினா நடிக்க இளம் (பேத்தி போன்ற) கதானாயகிகள் எப்போதும் ரெடி.

* இவர்களை வைத்து இயக்க இயக்குனர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

அதனால்தான் இந்த நால்வருக்கு மட்டும் தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு. மற்றவர்கள் பலர், வந்து, வளர்ந்து கொடிகட்டிப்பறந்து இப்போ மறைந்தும் விட்டார்கள்.

சில மறைந்த நடிகர்களை பார்ப்போம்

* மோஹன்:

இவர் ஒரு கன்னட நடிகர். தமிழில் முதல்ப்படம், நெஞ்சத்தை கிள்ளாதே. இவர் நடித்த படங்கள் பல வெள்ளிவிழா கொண்டாடியுள்ளது. இவருக்குனே இளையராஜா ஒரு தனி இசை அமைப்பார். மைக் மோஹன் னு சொல்லுவாங்க இவரை. மைக்க புடிச்சு பாடினார்னா படம் ஹிட் தான் போங்க!!!

இவரை வச்சு கோவைத்தம்பி ஆர் சுந்தர் ராஜனை இயக்குனராகப் போட்டு நெறையப்பாங்கள் எடுத்தார். * பயணங்கள் முடிவதில்லை, * நான் பாடும் பாடல், *உதய கீதம், * இதயக் கோயில் (மணி ரத்னம் இயக்கம்) எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.

முக்கியமாக மணிரத்னத்தில் மெளனராகத்தில் எல்லோரையும் கவர்ந்தார். அமலா, ராதாவுடன் செய்த மெல்லத் திறந்தது கதவு இன்னொரு சூப்பர் ஹிட் படம், இவருக்கு.

இவர் சொந்தக்குரல் நல்லா இருக்காதாம். சுரேந்தர் குரல்தான் இவரை பெரியாளாக்கியதுனு சொன்னால் இவருக்கு பிடிக்காதாம். :)

இவர் ஒரு 70-80 படம் ஹீரோவாக நடித்துள்ளார். திடீர்னு ஒரு நாள் இவரை அனுப்பிட்டாங்க! உங்களை வச்சு யாரும் ஹீரோவா எல்லாம் படம் எடுக்க முடியாதுனு சொல்லி :(

இப்போ என்ன பண்றாரு நம்ம வெள்ளிவிழா ஹீரோ? ஒரு 10 வருசம் தமிழ்ல நடிக்காம இருந்துட்டு கடைசியில் சுட்டபழம்னு வந்து ஏதோ பண்ணினார். அதுவும் சொல்லிக்கிறாப்புல போகலை.

* கார்த்திக்:1981 ல அலைகள் ஓய்வதில்லையில் பாரதிராஜாவால் அறிமுகமானார். படம் சூப்பர் ஹிட். பிறகு இளஞ்சோடிகள் அது இதுனு ஒரு 10-20 காதல் படம் நடித்தார். பாரதிராஜாவின் நாடோடித்தென்றல் சொல்லிக்கிறாப்புல போகலை.

மறுபடியும் மணிரத்னம் இயக்கிய மெளனராகத்தினால் இன்னொரு லெவெல் மேலே போனார். அப்புறம், அக்னி நட்சத்திரம், வருசம் பதினாரு, உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் போன்ற வெற்றிப்படங்களையும் தந்தார். பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இவருக்கு பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

இவரும் ஒரு 80 படங்களில் ஹீரோவாக நடித்து உளளார். அப்புறம் அப்படியே ஹீரோ ஸ்தானத்தில் இருந்து "மறைந்து" விட்டார். இப்போ இவருக்கு ஸ்டார் வால்யூ கிடையாது. மேலும் கார்த்திக் எதுவும் பெருசா சம்பாரித்து சேர்த்ததாக தெரியலை. இன்னைக்கு யாரும் இவரை ஹீரோவாக வைத்து படம் எடுப்பாங்களானு தெரியலை. தன் பணத்தைப்போட்டு ஹீரோவாக நடிக்கும் அளவுக்கும் பணம் சேர்த்ததாகவும் தெரியலை. அரசியல்ல எவ்வளவு விட்டார்னு தெரியலை, பாவம்.

* அர்விந்த்சாமிதளபதியில் அறிமுகமானார், ரஜினிக்கு தம்பியாக. எல்லோர் மனதையும் இந்த கலெக்ட்டர் அர்ஜூன் கவர்ந்தார். பிறகு, ரோஜா, பாம்பே போன்ற வெற்றிப்படங்களை தந்தார். அந்த நேரத்தில் இவர் ஒரு பெரிய ஸ்டாராகத்தான் மிளிர்ந்தார். பிறகு எ வி எம் மின் மின்சாரக்கனவு ஓரளவுக்கு போச்சு. அந்த என் சுவாசக்காற்று னு ஒரு படம் வந்தது, அது பெரிய ஃப்ளாப் ஆச்சு. அதோட இவர் நிறுத்திக்கிட்டார் ஹீரோவாக நடிப்பதை.

இவர் படித்தவர், மற்றும் பெரிய பணக்காரர் என்பதால் ஒதுங்கிக்கொண்டார்னு சொல்றாங்க. அலைபாயுதேல ஒரு சின்ன கெள்ரவ ரோல் பண்ணினார். சாசனம்னு ஒரு சமீபத்துப்படம் வந்தது. இயக்குனர் மஹேந்திரன் இயக்கத்தில். படம் ஃப்ளாப்!

Sunday, November 1, 2009

கருத்துச்சுதந்திரமும் உண்மைப் படுகொலைகளும்!

இன்றைய வலையுலகில் ஒரு தனிமனிதனுக்கு கிடைத்த சுதந்திரமும், அதனால் கிடைத்த நன்மைகளையும் பற்றி என் கருத்துக்களை பரிமாறினேன். தன் இஷ்டப்படி என்ன வேணுமானாலும் அநியாயமாக எழுதிக்கொண்டு பிழைப்பை ஓட்டிய பத்திரிக்கைகளையும் அதில் எழுதும் பிரபல எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும், அவர்கள் பொய்யை எழுதும்போது இப்போதெல்லாம் நாம் ஒரு வழி பண்ணிவிடலாம் என்றும், பத்திரிக்கை தொழிலில் இல்லாதவர்கள், ஆனால் விபரம் அறிந்தவர்கள் இதுபோல் பத்திரிக்கைகளில் வரும் உண்மைக்கு புறம்பானதை எழுதுபவர்களை நார் நாராக கிழித்து எடுக்கலாம் என்றும் எழுதினேன் நான்.

ஒரு பக்கம் இதுபோல் நமக்குக்கிடைத்த சுதந்திரம் சந்தோஷப்பட வேண்டிய விசயமென்றாலும், தனிமனித கருத்துச் சுதந்திரத்தால் இன்று பொய்மூட்டைகளை வலைபதிவுகளில் எழுதி பல உண்மைகளை படுகொலை செய்கிறார்கள் பல இளம் வலைபதிவர்கள். இது ஒரு மிக மிகவும் வருந்தத்தக்க விசயம். ஒரு பொய்யை எழுதி, அதற்கு சில பொய்யர்கள் நடத்தும் பொய் வலைபதிவுப் பதிவுகளை மேற்கோள் காட்டி, சில பொய்யர்களை பின்னூட்டமிட வைத்து, பொய்யை மெய்யாக்கிக் கொண்டு வருகிறது இந்த அரைவேக்காடுகள் நிறைந்த வலையுலகம்!

இதைப்போல் எழுதப்படும் பொய்மூட்டைகளை பார்த்து, வாசித்து வரும் சில விசயம் அறிந்த பெரியவர்களும், வாசகர்களும் இவ்வலைபதிவர்கள் படுகஷ்டத்துக்கு ஆளாக்குகிறார்கள். எதனால் இந்த நிலைமை என்று பார்த்தால் இந்த “வலையுலக கருத்துச் சுதந்திரம்”தான் காரணம். வெறும் வாசகர்களாக இருக்கும் பல விபரமறிந்தவர்களுக்கு அந்தக்காலத்து ஆட்கள் நினப்பது என்னவென்றால் பத்திரிக்கைகள் பரவாயில்லை இந்த இன்றைய வலையுலகத்துக்கு என்று. வலையுலகம் என்றாலே ஏதோ அரை டவுசர்கள் எழுதும் அர்த்தமில்லாத உளறல்கள் என்று பலர் நம்பும்படி ஆகிவிட்டது இப்போது.

தவறு நடக்காத இடமே இல்லை. தவறாக எழுதுவதும் மனித இயல்புதான். ஆனால் தன் சுயநலத்திற்காக உண்மைபோல் ஜோடிக்கப்பட்ட பொய்களை எழுதுபவர்கள் சில கீழ்த்தரமான வலைபதிவர்கள். இவர்கள் எழுதும் பொய்களைக்காட்டி இவர்களை தண்டிக்க இன்று சட்டத்தில் இடமில்லை! இவர்களை மேற்கோள் காட்டி விமர்சித்தாலும் அது தனி நபர் தாக்குதல் என்றாகும் அபாயமும் இருக்கிறது.

இன்று ஒரு வலைபதி(வரின்)வின் நிலைமை, அந்தப் பதிவரின் பிழையில்லாமல் எழுதும் சுத்தமான தமிழினாலும், அரசியல் ஞானத்தினாலும், உயரத்தான் செய்கிறது என்றாலும் அந்தப்பதிவர் உண்மைக்குப் புறம்பானதை எழுதுகிறார் என்றால் காலப்போக்கில் அவர் பாதாளத்தில் விழப்போவதென்னவோ உண்மை!