Sunday, June 23, 2019

யாருனா என்ன?! காரிகன்

முன்பெல்லாம் அவரு தப்பா நெனச்சுக்குவாரு. இவரு கோவிச்சுக்குவாரே. இதுபோல் ஊர்ல உள்ளவனையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து வாழனும்னு மெனக்கெடுவதுண்டு..இப்போலாம் யாருனா என்ன? னு தோனுது.

 நம்ம தமிழ் காரர்த்தான். அவர் டாக்டர்.ஓட்டுறகார் மெர்சிடெஸ் பெண்ஸ். மில்லியன் டாலர் வீடு வச்சிருக்கார்.  வருடம் ஒரு மில்லியன் சம்பாரிக்கிறார்னு வச்சுக்குவோம்.

இன்னொருவர் சாதாரண வேலை பார்க்கிறார். இவரும் தமிழ்தான். வருடம் 40 ஆயிரம்தான் சம்பாரிக்கிறார்.  ஏதோ அவர் தகுதிக்கு ஒரு வீடு, காருனு வாழக்கையை நடத்துகிறார்.

இப்போ பொதுவாக டாக்டருக்கு ஒரு மரியாதை. சாதாரண வேலை பார்ப்பவருக்கு இன்னொரு மரியாதை. ஏன்னா அவரு பெரிய படிப்பு படிச்சவர். பணக்காரர். அதனாலதான். இதுதான் உலக வழக்கம்.

நீங்க ஒரு மூனாமவர். நீங்க ரொம்ப எழையும் இல்லை. பணக்காரரும் இல்லை. இவர்கள் இருவருக்கும் இடைப் பட்ட நிலையில் இருக்கீங்க.ரெண்டு பேரையுமே தமிழ் சங்கத்தில் சந்திக்கிறீங்க. யாரோட விரும்பிப் பழகுவீங்க?

இந்த மூனாமவர் மூனு வகையா இருக்கலாம். முதல் வகை.. டாக்டரோட பழகுறதை பெருமையா நினைக்கலாம். தன்னைவிட ஏழையை மட்டமா நினைக்கலாம்.

ரெண்டாம் வகை.. டாக்டர் வீடு காரை எல்லாம் பார்த்துவிட்டு தன்னை விட கீழே உள்ளவர்கள்தான் தமக்கு ஒத்து வரும். மேலும் தன்னைவிட கீழதானே இருக்கான்னு ஒரு அற்ப சந்தோசம் இருக்கலாம்.

மூனாவது வகை, பணக்காரன் நம்மை மதிக்க மாட்டாம். ஏழையின் பிரச்சினை நெறையா இருக்கும். அதையெல்லாம் கேட்குமளவுக்கு நமுக்கு நேரமில்லை. நம் தகுதியில் உள்ளவர்களோட பழகிட்டுப் போயிடலாம்னு

 ஆனால் ஒண்ணு..

அமெரிக்காவைப் பொருத்தவரையில், அவரவர் சம்பாரிப்பது அவரவர்க்கே. யாருக்கும் யாரும் அரை பைசா கொடுக்க மாட்டாங்க. கடன் வேனும்னா க்ரிடிட் கார்ட். அப்படியே யாரும் கொடுத்தாலும், யாரிடமும் பிச்சை வாங்க சுய மரியாதை உள்ள யாருக்கும் பிடிக்காது. அதனால் ஒருவர் மில்லியனராக இருந்தாலும், அன்னாடம் காய்ச்சியாக இருந்தாலும் நம் பிரச்சினைக்கு நாம்தான் தீர்வு காண வேண்டும். ஆக, டாக்டர் தமிழரோ அல்லது சாதாரண தமிழரோ, ரெண்டுமே உங்கள்க்கு ஒண்ணுதான். அவங்களால சுயமரியாதையுடன் வாழ ஆசைப்படும் உங்களுக்கு எந்தவகையில் ஃபைனான்சியலாக நன்மையும் பயக்கப் போவதில்லை. ஆக, இந்த ஸ்டேட்டஸ் வித்தியாசம் உங்களூக்கு அவசியமில்லாத ஒரு காரணி.

ஒரு பிரச்சினைனு வந்தால்? புளிச்ச மாவுப் பிரச்சினை. அல்லது அழுகிய பழப் பிரச்சினை. எதுவாக இருந்தாலும். பாகுபாடின்றி யாரு செய்தது தப்பு? யாரு செய்தது சரி என்று பார்ப்பதுதான் முறை, அழகு.

இருவருக்கும் ஒரு பிரச்சினை என்றால், யாரு பக்கம் நியாயம் இருக்கிறதோ அவர் பக்கம்தான் நீங்க நிக்கனூம். அதுதான் சரியான நிலைப்பாடு. அவர்கள் தகுதி, தராதரம் என்பதெல்லாம் அர்த்தமற்ற விசயங்கள்.

அபிலாஷ் ஆர் என்பவர் என்ன சொல்றார்னா.. மாவு விக்கிறவன் பண்ற தொழில் சாதாரணமானது. எழுத்தாளர் என்றால் நாட்டுக்கு அவசியமானவன். அதனால எழுத்தாளனுக்கு கொஞ்சம் சாதகமாக நாம் நடந்து கொள்ளனும் என்பதுபோல் ஒரு கருத்து. அதாவது எழுத்தாளன் செய்த அதே காரியத்தை ஒரு கூலி வேலை செய்தவன் செய்திருந்தால்..அவன் தகுதிக்கு அவன் அப்படி செய்யக் கூடாது. இதுபோல் கருத்துகள் மிக மிக அபாயகரமானவைனு பலருக்குப் புரிவதில்லை.

ஒருவர் பெரிய எழுத்தாளர், தமிழருக்காகவே புடுங்குறாரு. இன்னொருவர் மாவு விக்கிறவர் என்பதால அவரு மட்டம்னு சொல்றவனை எல்லாம் செருப்பால அடிக்கணும். அவன் எந்த காலேஜ் பேராசிரியராக இருந்தாலும் சரி! என்ன படித்து இருந்தாலும், எத்தனை பெரிய மேதையாக இருந்தாலும் செருப்பால அடிக்கணும்.

ஏன் இதுக்குப் போயி இத்தனை கோவம்? என்று நீங்க சிந்தித்தால் நீங்களும் ஒரு முட்டாள்!

இதுபோல் செய்துதான், இவனுக இவன் ஆத்தா அக்கா மனைவி எல்லாம் சேலை போட்டு மார்பகத்தை மறைக்கலாம். ஆனால் கூலி வேலை பார்ப்பவன் மனைவி மகளெல்லாம் சேலை ஜாக்கட் போடக்கூடாது என்னும் நிலையில் நம் ஈனத் தமிழர் வரலாறு போயி நின்றது. அதேபோல் இன்னைக்கும் ஒரு சிலர் ஏதோ இவனுகளுக்கு அடிமையாக வாழவே வந்துபோல் ஆக்கிவிட்டு. தாம் செய்வது மகா தப்பு உணரமுடியாத அளவுக்கு மூளை மழுங்கிய நிலையில் இருக்காணுக.

**********************

காரிகன்னு ஒரு பதிவருக்கு வருவோம். என்னுடைய கடந்த பதிவில். அபிலாஷ் என்னும் அரைவேக்காடை விமர்சிச்சதும்  ஒரு நாளும் இல்லாத திருநாளா வந்து.

 Where are you? Living in abroad?

நீ எங்க இருக்க?

இவர் என்னவோ தன்னைப்ப்த்தி தானே உயர் தரம், நாகரிகமானவன், மேதைனு நெனச்சுக்குவார் போல இருக்கு. பொதுவாக இதுபோல் மேதைகள் அனானியாக வந்துதான்  இதுபோல் ஒருமையில் விளிப்பார்கள். ஒரிஜினல் ஐடில வரும்போது. அப்படி சொல்கிறீர்கள், இப்படி சொல்கிறீர்கள் என்று "றீர்கள்" போட்டுதான் பேசுவாங்க.

இந்தத்தளத்தில் நான் அனானியை அனுமதிக்காததால், தன்நாகரிக ஐ டிலயே  நீ எங்க இருக்க?னு இவர் லோ லெவலுக்கு வந்து விட்டார்.

இவர் என்ன சொல்ல வர்ரார்னா.. நீ அமெரிக்காவில் குப்பை கொட்டுற, அதனால் எங்க ஊரு பிரச்சினையைப் பேச உனக்கு தகுதி இல்லை என்கிறார்

 First of all, What the fuck you know about me? You know NOTHING about me. NEVER EVER JUDGE ME with your half-baked knowledge! This is my blog, I will write whatever I feel like in MY OWN WAY. I am not looking forward to making any friendship or relationship here with anyone. I have had all kind of fucking relationships already . I certainly know what human being are. I know, I am one of the same fucking human being. I am not trying to claim I am better than anyone. 

So, if you think, you are Mr. decent, Get the fuck out of here! Maintain your fucking decency by keeping away from this blog!

And STOP asking others, 

* Where you are living?

* Whom are you fucking? and such personal bullshit!

Because you have not given your address or original name or your caste and what you are doing for your living in your profile either. I am sure you would not like to share that either.





Tuesday, June 18, 2019

10 வருடம் ஓல்ட் இ-மெயில்கள்! அபிலாஷ் என்னும்..

நான் பொதுவாக இ-மெயில்கள் எதையும் டெலீட் செய்வதில்லை. 10 வருடம் அல்லது அதற்கு மேல் காலம் ஆன இ-மெயில்கள் இன்னும் என் பர்சனல்  இன் பாக்ஸில் இருக்கு. எதையும் அவ்வளவு எளிதில் குப்பையில் போடுவதில்லை.

நமக்குத்தான் வயதாகிக்கொண்டே போகிறது. ஆனால் இதுபோல் சேமித்து வைத்த இ-மெயில்கள் இன்னும் அதே இளமையுடன்தான் இருக்கின்றன.

காலம் மாற மாற நாமும் மாறிக்கொண்டு, அல்லது வாழ்க்கையை மாற்றிக் கொண்டே போகிறோம். பழைய நண்பர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். நாம் அதிக சுயநலமாக மாறிக்கொண்டே போகிறோம். நம்முடைய வாழ்க்கையும் மாறிக்கொண்டு வருகிறது. அதற்கேற்ப நம் இண்டெரெஸ்ட், நட்பு வட்டம் எல்லாமே மாறுகிறது.

வாழ்க்கையை இண்டெரெஸ்டிங்காக, அல்லது போர் அடிக்காமல் வைத்திருப்பது ஒரு கலை. பணமோ, நண்பர்களோ அதைத் தரமுடியாது. எல்லாமே நம் கையில் நம் மனதில்தான் உள்ளது.

இங்கே டாக்டரிடம் போனால், ஒரு கேள்வி கேட்பார்கள்..

 Are you depressed?

நான் சிரித்துக்கொண்டே சொல்லுவேன். எனக்கு அப்ஸ் அன்ட் டவ்ன்ஸ் வரத்தான் செய்யும். ஆனால், I know how to get over with it னு. டாக்டர் ஏதோ நான் திமிரா பதில் சொல்வதுபோல் பார்ப்பார்கள். மே பி டாக்டர் இஸ் டிப்ரஸ்ஸெட் ஆக இருக்கலாம்னு நான் நினைத்துக் கொள்வேன்.

இன்னும் ஒண்ணு... ஒரு வேளை என் வாழ்வில் எதுவும் பேரிழப்பு இன்னும் வரவில்லையோ என்னவோ? நான் ஒரு வகையில் லக்கியாக இருக்கலாம். இப்போதைக்குத்தான். நாளை என்னனு தெரியவில்லை.

We are alone in this world. People come and go. We just need to know how to deal with OUR OWN ISSUES!  வாழ்க்கையில் யாருமே நிரந்தரம் இல்லை. நம்மையும் சேர்த்துத் தான்.

------------------------

கொசுறு:

அபிலாஷ் னு ஒரு பதிவர்..  

ஜெயமோகன் பிரச்சினை சம்மந்தமாக ஒரு கருத்தை இப்பதிவர் முன் வைத்துள்ளார்.  For some reason I really got annoyed..இந்தாளு  யாருனு எனக்குத் தெரியாது. யாராயிருந்தால் எனக்கென்ன? சொல்ற கருத்தைப் பார்க்கலாம்.

* முன்பொருமுறை லீனா மணிமேகலைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு.. சுசி கணேசனை செருப்பால் அடிப்பேன் என்று ஒரு பதிவில் சொல்லி இருந்தார். சுசிகணேசனை, தன்னிடம் தவறா நடந்து இருந்தால், லீனா மணிமேகலை என்ன வேணா செய்யட்டும். இவன் என்ன பெரிய புடுங்கியாட்டம் "செருப்பால அடிக்கிறது" னு தோனுச்சு!

* இன்னொரு முறை  மேதை சாரு நிவேதிதா பத்தி என்னவோ பீத்தி எழுத.. அதைப் பார்த்து எரிச்சலடைந்து நான் எழுதிய பின்னூட்டம் அந்தத் தளத்தில் வரவில்லை. ஆமா, அது அவர் தளம்..அதெல்லாம் தப்பே இல்லை!

அதேபோல் இது என் தளம்! வந்து வாசித்துவிட்டு பொத்திக்கிட்டு போயிடனும்!

இப்போ, ஜெயமோகனுக்கு வக்காலத்து வாங்கி ஒரு பதிவு..

இங்கே உள்ள அந்தாளூ கருத்தை வாசிங்க!
இது ஒரு வாடிக்கையாளருக்கும் வியாபாரிக்குமான கைகலப்பு, இதில் எழுத்தாளர் எங்கே வந்தார் என முகநூலில் சிலர் கேட்பதை கவனித்தேன். புறமே பார்க்க அப்படித் தெரியலாம்,
ஆனால் எழுத்தாளன் நுட்பமானவன், மென்மையானவன், போற்றி பாதுகாக்க வேண்டியவன், இதை நுண்ணுணர்வு கொண்ட சமூகங்கள் அறிந்திருக்கும். அவனது குழந்தைத்தனங்களை அது பொறுத்துக் கொள்ளும். அவனால் கிடைக்கும் பெருமையும் கலாச்சார பங்களிப்பும் குமரி மண்ணின் வாசனை இலக்கிய அந்தஸ்து பெறுவதும் இதற்கான பெறுமதியாக இருக்கும். இன்றும் நான் நாகர்கோயிலைப் பற்றி குறிப்பிடுகயில் வாசிப்பு பழக்கம் கொண்டவர்கள் சு.ரா, ஜெ.மோ, இன்னும் சில படைப்பாளிகளின் பெயரைப் பற்றி கேட்டு எப்படி இத்தனை எழுத்தாளர்கள் ஒரே மண்ணில் இருந்து என வியப்பார்கள். இந்த மாதிரியான பெருமை தோசை மாவு விற்பவர்களால் வராது. பணத்துக்காக மட்டும் வேலை செய்பவர்களால் வராது.(REALLY?!!)

அதென்ன குமரி மண் பெருமை?? அங்கே இருந்து எத்தனை பேரு நோபல் பரிசு வாங்கி இருக்கான்?!!! எதைனாலும் பீத்துறானுகப்பா வெத்து வேட்டுக்கள்!

ஆக, குமரி மண்ல இருந்து புடுங்க வந்த இவன் என்ன சொல்ல வர்ரான்னா..

மாவு விக்கிறவனுக்குனு ஒரு தகுதியிருக்காம்.. அவன் படிக்காதவன்! அதனால் பண்பு இருக்காது??! 

இதுதான் இவன் குமரி மண்ல கத்தது!

ஒரு வேள அவன் பக்கம் நியாயமே இருந்தாலும், அவன் மாவு விக்கிறவன் தானே? எழுத்தாளன்னு சொல்லிக்கொண்டு எதையாவது  உளறும் "புடுங்கி" களுக்குத்தான் உயர் தகுதினு சொல்றான். 

இதிலிருந்தே இவன் பெரிய புடுங்கினு நினைப்பு உள்ள முட்டாள்ணு தெரிகிறதா?

இதில் லீனா மணிமேகலை, சாரு நிவேதிதா, இந்த மேதை, அப்புறம் ஜெயமோகன் போன்ற புடுங்கிகள் அடங்குவார்களாம்!

ஒரு மாவு விக்கிறவனுக்கும், எழுத்தாளன் என்னும் புடுங்கிக்கும் ஒரு பிரச்சினைனு வந்தால், மாவு விக்கிறவன் நியாயத்தை எல்லாம் பார்க்க  வேண்டியதில்லையாம்! குமரி மண்ல இவன் ஆத்தா அப்பன் இவனுக்கு சொல்லிக் கொடுத்தது இதுதான்!

எழுத்தாளனுக்குத்தான் உருவி விடணும் (விடுவேன்)னு சொல்றான். ஏன் னா, எழுத்தாளன்னா பெரிய புடுங்கியாம்!  நியாயம் யாரு பக்கம் இருந்தாலும்!

என்னைக்கேட்டால் மாவு விக்கிறவன், ஆடு மேய்க்கிறவன்லாம் எத்தனையோ பெட்டர். அவனுக யாரையும் கெடுப்பதில்லை!  இந்த நாட்டில் தன்னாலான உதவிகள மத்தவனுகளூக்கு செய்றாங்க. இவன் வக்காலத்து வாங்கும் எழுத்தாளன்னு சொல்லிக்கொண்டு அலையும்  புடுங்கிகள்தான் நாட்டை நாசம் பண்ணுறானுக.

 நானே ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்றோரின் அரை வேக்காட்டுத்தனமான உளறல்களை பலமுறை பார்த்து, எழுதி இருக்கேன்.

குமரில இருந்து புடுங்க வந்த இவனை மாதிரி புடுங்கிகளால்தான் நம் நாட்டில் சாதி உருவாகி இருக்கு. உன் தகுதி இதுதான்னு "லேபல்" பண்ணி மனுஷனை மனுஷனாக, சமமாக மதிக்காமல், நியாயம் என்னனு பார்க்காமல் "தகுதியானவனுக்கு" ஏற்ப "நியாயம்" சொல்றது.. everything got fucked up in INDIA, I think.



Monday, June 17, 2019

ஜெயமோகனும் சாதாரண மனுஷந்தான்!

மாவு, புளிச்சமாவுனு தெரிந்தவுடன் திருப்பிக் கொடுக்கப் போயிருக்கிறார். "தோசை மாவுனா புளிக்கத்தான் செய்யும்"னு விற்றவர் சொல்ல, கோபம் வந்து கதையில் ஹீரோக்கள் செய்வதுபோல் நீயே  வைத்துக்கொள்னு  "தூக்கி எறிந்து" இருக்கிறார். இது ஒரு மாதிரி அவமானப் படுத்தல்தான். அதனால் கோவம் அடைந்த அந்தம்மா (அழக்கூட செய்து இருக்கலாம்) புருசனிடம் சொல்ல, அந்தம்மா புருசன்  போயி ஜெயமோகனை அடித்து விட்டான். இது யாருக்கு வேணா நடக்கலாம்.

இப்போ, ஹாஸ்பிடல்ல போயி ட்ரீட்மெண்ட் எடுப்பதுபோல் பெட்ல அமர்ந்து இருக்கிறார். இங்கே ஜெயமோகன் கொஞ்சம் "அரசியல் செய்கிறார்". அதாவது கேஸை ஸ்ட்ராங் ஆக்க, ஹாஸ்பிட்டல்ல இருந்து ரத்த காயம் அடைந்துவிட்டேன்னு சொன்னால்த்தான் அடிச்சவனைப் பிடிச்சு உள்ள போடுவாங்க. காந்தீயம் பேசும் பெரிய மனுஷன் இவரு, பேசாமல் மன்னித்து விட்டுப் போயிருந்தால் இன்னும் பெரிய மனுஷன் கெத்துடன் வாழ்ந்து இருக்கலாம்..

பொதுவாக இதுபோல் புளிச்ச மாவுப் பிரச்சினை பலருக்கும் பழகிப் போனதாக இருக்கும். கடைக்காரன் மாவு புளிச்சிருச்சுனு எல்லா மாவையும் குப்பையில் போடுமளவுக்கு நல்ல மாவுக்கு அதிக விலை வைத்து விற்பதில்லை. அதனால் புளிச்ச மாவையும் எப்படியோ விற்றுவிடனும்னு முயல்கிறான். அவன் நிலைமை ஒரு கோணத்தில் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கு.

தோசை மாவு புளிச்சாத்தான் தோசை தோசையா இருக்கும். எவ்வளவு புளிக்கணும்னு அளவுகோல் எதுவும் இருக்கா?

ஜெயமோகன் இதுபோல் விளைவை எதிர்பார்க்காமல், இமோஷனலாகி நிதானம் இழந்ததாகத் தோணுகிறது.

என்னதான் பெரிய எழுத்தாளன் என்றாலும் நானும் சாதாரண மனுஷ்ந்தான் என்பதுபோல் ஜெயமோகன் தன்னை காட்டும் தருணம் இது.

அந்தம்மா காசைத் திருப்பிக் கொடுத்து இருக்கலாம்..
அந்த அம்மா திருப்பி கொடுக்கலை என்றவுடன் இவர் கொஞ்சம் நிதானமாக நடந்து இருக்கலாம். வரும் வழியில் குப்பையில் போட்டுவிட்டு வேற புளிக்காத மாவு வேற கடையில் வாங்கி இருக்கலாம்..

Wednesday, June 12, 2019

ராஜ ராஜ சோழன் பற்றி ரஞ்சித்!

பல விவாதங்களில் நான் சொல்லி இருக்கேன். தமிழன் என்கிற அடையாளமே சுத்தமான ஏமாற்று. ஜாதி அடிப்படையில்தான் தமிழ் கலாச்சாரம் இருக்கு. தலித் களை காலங்காலமாக அப்யூஸ் பண்ணி இருக்காங்க. இதனால் பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தில் இருந்து வந்த ரஞ்சித் பொங்குகிறார். நாம் மட்டும் ஏன் இப்படி கஷ்டப்படுகிறோம்? நம்மை மட்டும் ஏன் இப்படி சேரிக்கு அனுப்பி இப்படி ஆக்கிவிட்டார்கள்? தமிழன் என்கிற அடையாளம் தலித் களுக்கு தேவையா? எங்கோ வடக்கே பிறந்த தமிழ் தெரியாத அம்பேத்கார்தான் என்னை இந்தளவுக்காவது மனுஷனாக மதித்துள்ளார். என்னைப் பத்தி சிந்திச்சு இருக்கிறார்.தமிழர் பெருமையெல்லாம் உயர்சாதிக்காரர் களுக்குத்தான் நமக்கில்லை! ஆக கடைசியில் இவருக்காவது புரிய ஆரம்பிச்சு இருக்கு. தமிழர்  பெருமை, தமிழ் பெருமை, நாம் தமிழர் பிர்ச்சினை எல்லாம் சேரியில் வாழும் நம் இனத்துக்கு அவசியமே இல்லைனுதலித்கள் தமிழ்/தமிழன் பெருமை பேசுமளவுக்கு அவர்களை இந்த சமுதாயம் அவர்களை வைக்கவில்லை. தமிழன் அடையாளம் எல்லாம் அவர்களுக்குத் தேவையுமில்லை. இதுபோல் ஒரு உணர்வு ரஞ்சித்க்கு வந்ததே பாராட்டத் தக்கது..

அப்புறம் என்ன சொல்றார்னா.. ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தலித்களை     மிகவும் மோசமாக ஆக்கியிருக்கிறார்கள், ஒதுக்கி இருக்கிறார்கள் என்கிறார். அவர்கள் நிலம் பறிக்கப் பட்டது என்கிறார். இதெல்லாம் எங்கே படிச்சார்னு எனக்குத் தெரியவில்லை. வரலாறே பிரச்சினையான ஒண்ணு.  சோழர்கள் பூர்வீகம் என்ன? அவர்கள் தமிழர்களா? இல்லை நமக்கு வடக்கே இருந்து வந்து தமிழ்நாட்டை ஆண்டு தமிழரானவங்களானு தெரியவில்லை. நாயக்கர்கள் ஆந்திராவிலிருந்து வந்து தமிழ் நாட்டை ஆண்டு இருக்காங்க. திருமலை நாயக்கர். இதுபோல் வடக்கே இருந்து வந்து ராஜ்யம் அமைத்து இங்கே செட்டில் ஆனவர்களும் இருக்காங்க. நாயக்கர்கள், ரெட்டியார்கள், சக்கிலியர்கள் எல்லாம் தெலுங்குதான் பேசுறாங்க. இப்போ தமிழ் தாய்மொழியாகிவிட்டது இவர்களுக்கு. அவர்கள் வடக்கே இருந்து வந்தவர்கள்தானே? மேலும் மதுரையில் ஏகப்பட்ட சவுராஸ்ட்ரர்கள் வந்து செட்டில் ஆகி தமிழராகி இருக்காங்க.

சரி, ராஜராஜ சோழன் பெரிய சாதனையாளனாகவே இருக்கட்டும். அவரை தலித்கள் வணங்கனுமா? தேவை இல்லைதான். விமர்சிக்கலாமா? பாதிக்கப்பட்டவர்கள் வரும் கோபத்தில் யாரை வேணா விமர்சிக்கலாம். அந்த பேச்சுரிமை ஒரு தனி மனிதனுக்கு உண்டு. ராஜ ராஜ சோழன்  விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல.

இப்போ என்னப்பா எதுகெடுத்தாலும் கேஸ் போட்டுக்கிட்டு இருக்கானுக? வக்கீல்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு இல்லாததால்தான் வயித்துப் பொழைப்புக்காக இப்படியா?

அப்புறம் ஏதோ நிலம் நிலம்னு சொல்றார்? இவர்களிடம் இருந்து பறித்த நிலத்தைத் திரும்ப கொடுக்கணும்னு சொல்றாரா? இது மட்டும் எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. சினிமாலதான் ஏதோ சொல்றார்னு நினைத்தேன், நெஜம்மாவே சொல்லுகிறார். இது எனக்குப் புரியாத அரசியல். பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் பறிக்கப் பட்டே இருந்தாலும், அதை எப்படி திருப்பி வாங்க முடியும்?  ராமர் கோயில் பாபர் மசூதியை இடித்து விட்டு கட்டணும். தாஜ் மஹாலை இடிக்கணும்னு சொல்ற மாதிரி இருக்கு எனக்கு.

பிரச்சினையைப் புரிந்து கொண்டார். ஆனால் தீர்வு என்ன? என்ன செய்யணும் இப்போனு ரஞ்சித்க்கு தெளிவான புரிதல் இருக்கமாதிரி தெரியலை.


Monday, June 10, 2019

ஜானகிராமன் கதை விமர்சனம்-4

ஜானகிராமனின் மரப்பசு.  இந்தக் கதை பத்தி ஏகப்பட்ட தடவை எழுதியாச்சு. விமர்சித்தாகிவிட்டது. அம்பைனு ஒருவர் எழுதிய விமர்சனம் பத்தியும் பேசியாச்சு. மீள் பதிவும் போட்டாச்சு.

 மரப்பசு பற்றி அம்பையின் குதர்க்க விமர்சனம்! இல்லை குதர்க்கசனம்!


என் விமர்சனங்களை படிக்கும் பலருக்கு ஒரு ஒப்பீனியன் உண்டு. ஜானகிராமன் மிகப் பெரிய எழுத்தாளர். அதாவது எழுத்தாளர்களின் எழுத்தாளர் (சாவி சொல்வார்னு அமுதவன் சார் ). அப்படிப்பட்ட அவரை விமர்சிக்கும்போது கவனமாக இருக்கனும்.  இதுதான் பொதுவாகப் பலருடைய எண்ணம்.

இன்னும் சிலருக்கு என்ன ஆதங்கம்னா.. ஜானகிராமனை விமர்சிக்க இவனுக்கு என்ன தகுதி இருக்கு? நாலு வரி தமிழில் பிழை இல்லாமல் எழுதத் தெரியாது உனக்கு. நீ எப்படி எழுத்தாளரின் எழுத்தாளர் ஜானகிராமனை இஷ்டத்துக்கு விமர்சிக்கலாம்? என்பதுதான் பலருடைய கருத்து. அவரவர் கருத்து அவரவருக்கு இருந்துட்டுப் போகட்டும். எல்லோரையும் திருப்திப் படுத்தணும் என்பது நமக்கு அவசியம் இல்லாத ஒண்ணு.   உலகிலே உயர்வானவர் னு சொல்ற கற்பனைக் கடவுளயே நாம் விமர்சிக்கப் பயப்படுவதில்லையே? சாதாரண மனுஷந்தானே ஜானகிராமன்? இப்படி எல்லோரையும் மேலே தூக்கி வைத்தே நாசமாக போனவர்கள்தானே நாம்?

சரி, மரப்பசு பத்தி பார்ப்போம்..

அதாவது ஒருத்தி இளம் பெண் (அம்மணி)  ஆக இருக்கும்போது இளமை, அழகு, கரை புரண்டு ஓடும் காமம் இதெல்லாம் வைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு இளமையில் பயமறியாது ஆடுகிறாள். இவள் உடலுறவு கொண்டவர்களில் சிலர்.. கோபாலி, ப்ரூஸ்னு ஒரு ப்ரிடிஷ் சோல்ஜர், பட்டாபி இப்படி பலர். நூற்றுக்கணக்கில். ஆனால் அவள் வேசியல்ல! காமம் பற்றி ப்ராக்டிக்லாக கற்றுக் கொள்கிறாள்.

 ஆனால் அவளுக்கு நடுவயதைத் தொட்டு நரை விழ ஆரபிக்கும்போது ஒரு சின்ன பயம் வருகிறது (அப்படினு ஜானகிராமன் சொல்றார்). முதுமை வந்த பிறகு எல்லாமே போய் விடுமே? அழகு இளமை  போன அந்நிலையில் தன்னைக் கரிசனமாக பார்த்துகொள்ள யாராவது ஒரு பெரியமனதுள்ள ஜீவன் தேவை . அப்படி இல்லை என்றால் வயதான உடன் தன்னை மதிக்க, கவனிக்க யாருமில்லாமல் வாழ்க்கையில் டிப்ரெஸன் மேலோங்கி நிற்கும்னு பயம் வந்து விடுகிறதுனு சொல்லுகிறார்.

அம்மணியை உருவாக்கி ஊர் மேயவிட்டது ஜானகிராமன்தான். வெள்ளைக்காரனிடம் படுக்க விட்டதும் ஜானகிராமந்தான். எல்லாம் செய்துவிட்டு திடீர்னு அம்மணிக்கு வயதானால் என்ன ஆகும்? னு யோசித்து அவளுக்கு ஞானோதயம் ஏற்பட வைக்கிறார்.

 பசு பால் கொடுக்கும் வரைதான் மரியாதை. கடைசிகாலத்தில் அதை தனக்கு பால் கொடுத்த நன்றிக்காக அதிடம் பால் பெற்றவன் கொஞ்சம் கவனிப்பான். அதே கோவில் மாடு அல்லது தெரு மாடாகத் திறிந்தால் அனாதைப் பிணம்தான். ஆனால் மாட்டை வளர்த்து கோமாதானு சொல்லிக் கொண்டு அதிடம் இருந்து பாலைத் திருடினவன் அது இறந்த பிறகு அனாதைப் பிணமாக விடாமல் எடுத்துக் கொண்டு போய் அடக்கம் செய்வான். ஒரு வேளை மரப்பசுவாக இருந்து இருந்தால்? ஆடுறதெல்லாம் ஆடிட்டு வயதான காலத்தில் ஏதாவது தத்துவம் பேசுவாங்க இல்லையா? அதுபோல்தான். 

பசுவை விடுங்க, அம்மணியை விடுங்க. நம்ம நடிகைகள எடுத்துக் கோங்க. பத்மினி, கே ஆர் விஜயால இருந்து நயந்தாரா, கீர்த்தி சுரேஷ் வரைக்கும். யாருங்க பத்மினி. இந்தக் கிழவியா? இதே நிலைதான் இன்னும் 30 வருடத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்றோர்க்கும்.

பசு, நடிகையை விடுங்க. பெற்ற அப்பா அம்மாவையே வயதான பிறகு பெற்ற பிள்ளைகள் சுமையாகத்தான் நினைக்கிறாங்க. நம்மைச் சுத்திப் பார்க்கிறோம் இல்லையா? அவர்களுக்கு சொத்து அல்லது பெரிய தொகையாக ஏதாவது பென்ஷன் வந்தால் ஓரளவுக்கு தப்பிப்பாங்க. உலகம் இவ்ளோதான். உங்களுக்கும் எனக்கும் நாளை இதே நிலைதான்.

இதயெல்லாம் வயதான பிறகு நம்ம வியட்நாம் வீடு பிரஸ்டிஜ் பத்மநாபன் போல் புரிஞ்சுக்க வேண்டியதில்லை. இன்று நீ நாளை நான் என்று இன்றே உணர்ந்து வாழலாம்தான். கதை இவ்ளோதான். இதில் வழக்கம்போல் பல விசயங்கள புகுத்தி இருப்பார்.

கோபாலி,

இளம் பெண் அம்மணியை ஊர் உலகிற்கு வளர்ப்பு மகள்ணு சொல்லிக்கொண்டு அவள வைத்து இருப்பார். அம்மணியின் சம்மதத்துடந்தான்.

வயதான காலத்தில், மரகதம் என்னும் வேலைக்கார பெண்னிடமும் தன் காமத்தேவைக்காக தவறாக நடந்து கொள்ள முயல்வார்.

திறமைனு பார்த்தால் கோபாலி மிகவும் டாலெண்டட் ஆள்தான்.
சபலம், காமம் யாரை விட்டது?

ஆம்பளனா இப்படித்தான்.பர்வேட்ஸ்! ஆம்பளைங்களுக்கு என்ன வேணும்? அம்மணிக்கு 36 ஆச்சுனா , 20 வயது பெண், மரகதம் மேல் காதல் வந்து விட்டது நம்ம கோபாலிக்கு!

அம்மணி,

மேலே சொல்லியாச்சு இவள் பத்தி. இவதான் மரப்பசு. ஒருவனுக்கு ஒருத்தினு வாழும்போது, ஒரு பெண் ஒரு ஆணுடன்தான் உறவு கொள்ளுகிறாள்- காலம் முழுதும். ஆண்கள் பலவிதம். ஒரே ஆளுடன் காலங்காலமாக உறவு கொள்வதால் பொதுவாக காமம் பற்றி ஓரளவுக்கு இக்னொரண்ட் ஆகத்தான் வாழ்ந்து சாகிறாள். அதே நேரத்தில் ஒரு வேசி யை எடுத்துக் கொண்டால், காமம் சம்மந்தமான அனுபவம் அவளுக்கு அதிகம்தான். எஸ் டி டி அனுபவமும்தான். அதேபோல்தான் ஊர் மேயும் ஆண்களுக்கும். However you need to understand about sex. No matter how many people you sleep with you are never going to be satisfied when it comes to sex. There is going to be some nice pieces of asses BEYOND or out of  your reach always.

-தொடரும்



Thursday, June 6, 2019

ஜானகிராமன் கதை விமர்சனம்-3 தொடர்ச்சி

சரி சாப்பாடு போட்டு 40 ரூபாய் கதை படிச்சாச்சா?  ஒரு வரியில் இந்தக் கதைய சொல்லிவிடலாம்.  அரக்காசு வேலைனாலும் அரசாங்க வேலை பண்ணினால் கடைசிக் காலத்தில் பென்சன் அது இதுனு கொஞ்சமாவது கஷ்டப்படாம சாகலாம். ஆனால் அதுபோல் இல்லாமல் வியாபாரம் அல்லது சிறு தொழில் பண்ணினால் வயதான காலத்தில் வருமானம் இல்லாமல் நோய்கள், தேவைகள சமாளிக்க பணம் இல்லாமல். ஆமா பணம்தான். அது இல்லைனா கஷ்டப்பட்டு சாகனும். முதல்வகையில் உள்ளவர்களும் பென்ஷன் பத்தவில்லைனு புலம்பத்தான் செய்றாங்க. ஆனால் இந்த ரெண்டாவது வகை மிகவும் மோசம்.

பிள்ளைகள் சமர்த்தா இருந்து படிச்சு ஆளாகிவிட்டால்? அவர்கள் ஓரளவுக்கு வயதான ஏழை தாய் தந்தையருக்கு உதவலாம். ஒரே பிள்ளை,  அதுவும் அவ்வளவு  சுதாரிப்பா இல்லை என்கிற நிலைப்பாடுதான் இங்கே சொல்லப்படும் "முத்து" விற்கு ஏற்படும் நிலை. பிள்ளயாண்டான், சாம்ப மூர்த்தி  இயற்கையிலேயே கொஞ்சம் சுதாரிப்பாகப் பிறக்கவில்லை. ஏதோ ஒரு சில சின்னக் குறைபாடுகள். அதனால் பொறுப்பு இல்லை. வெள்ளந்தியாகப் பிறந்து விட்டான்.

நமது கலாச்சாரத்தில் பணம், அழகு இத்துடன் கொஞச்ம் சம்ர்த்தாக பிறக்கவில்லை என்றால் பெற்றவர்க்கு வாழ்க்கை நரகம்தான். ஒருவர் பிள்ளை குறைபாடுவுடன் பிறந்தால் பாதிக்கப் படுவது அவர்கள் தாய் தந்தையர்தான். ஆனால் குறையுடன் பிறந்த குழந்தையும் ஊர் உலகம் செய்யும் கேலிகளும்,  பரிதாபப்படுவதும், ஏளனமாகப் பார்ப்பதும் நமது கலாச்சாரத்தில்தான் அதிகம். "என்ன பாவம் செய்தானோ?" னு சொல்றது. நொண்டி என்பதும, முடவன் என்பது, ஊமை என்பது, செகிடன் என்பது, மழடி என்பது சப்பாணி என்பது. இதுபோல் அப்பிள்ளையை பெற்ற பெற்றவர்கள் மனதை புண் படுத்துவோர்கள் மிக மிக அதிகம்.

ஜானகி ராமனும் இதே கலாச்சாரத்தில் பிறந்த இன்னொரு கழிவு தான்

இந்தாளுக்கு எந்த விதமான ஈவு இரக்கம், ஈரம் எதுவுமே கிடையாது என்பதை இதுபோல் கேரக்டர்களை இவர் ரசித்து ரசித்து வர்ணிக்கும்போது புத்திசாலி வாசகர்களுக்குத் தெளிவாகப் புரியும். என்ன ஒரு கேவலமான ஆள் இந்தாளு னு எனக்குப் பல முறை தோன்றியிருக்கிறது. 

சரி குறைபாடுள்ளவர்கள்தான் இப்படினா, வயதானவர்களை விமர்சிப்பது அதே போல்தான். எத்தனை தூரம் ஒருவர் முதுமை அடைவதை அசிங்கமா வர்ணிக்க முடியுமோ அந்தளவுக்கு வர்ணிப்பாரு இந்தாள். 

What? You got a problem with my description about this guy?  I am not talking about writer Janaki Raman. I am talking about TJR as a person! He is certainly a cold-hearted bastard! You never feel anything like that?  May be you are blind and stupid. You may be different than I am. I am compassionate, caring person. May be you are NOT. Let me say how I feel. You better keep your fucking mouth shut and listen! Will you?

ஏழை முத்துவிற்கு பணம்தான் தேவை. சேமிப்பு கெடையாது. பென்சஹ்ன் கெடையாது.  மகன் தகுதிக்கேற்ற ஏதாவது வேலை கிடைக்குமா?னு "செட்டியாரி"டம் கேட்க, அவர் அவருக்குத் தெரிந்த ஒர் "பெரிய இடத்தில் வேலை". பரவாயில்லை, ஏதோ எடுபிடி வேலை என அனுப்பி வைக்க. சூதானமில்லாத மகன் மாதம் 40 ரூ சம்பாரித்து அனுப்புகிறான் என்கிற சந்தோசத்தில் மகனை பார்க்கப் போகிறார்.

அங்கே போனதும் புரிகிறது. எடுபிடி வேலையுடன் மகனுக்கு முக்கிய வேலை என்னனா ஒரு தொழுநோயால் கஷ்டப்படும் நல்லா வாழ்ந்து இப்போது இந்நோயால் கஷ்டப்படும் வயதானவருக்கு அருகில் இருந்து உதவுவது.

ஒருவனுக்கு தொழுநோய் வந்துவிட்டால், அவன் படிப்பு, அந்தஸ்து, தகுதி எல்லாம் பறந்து போய்விடும். ஏதோ ஜந்து போலவும் மிருகம் போலவும்தான் இன்னும் அந்நோய் வராதவர் அவர்களைப் பார்ப்பதுண்டு. கோயில் களிலும், பஸ் ஸ்டாண்ட் களிலும் பிச்சைக்காரர்கள் போல வாழும் இவர்களும் அழகாகப் பிறந்து நன்றாக வாழ்ந்தவர்கள்தாம். இந்நோய் வருமுன் உன்னைப்போல் என்னைப்போல் திமிருடனும்,ஈகோவுனும் வாழ்ந்தவர்கள்தாம் என்பதையெல்லாம் எத்தனை பேர் யோசிக்கிறோம்? அவர்களை அருவருப்பாகப் பார்ப்பதால்தானே ஓடி ஒளியிறாங்க? எங்கேயோ வாழும் வெள்ளைக் காரர்கள் வந்து அவர்களையும் தன்னைப் போல் நினைத்து உதவுறாங்க?  வெக்கமே இல்லாமல் நாம்தான் உலகிலேயே உயர்ந்த பண்பாளர்கள் என பீத்த மட்டும்தான் தெரிகிறது இந்த முட்டாள்களுக்கு! கண்ணைத் திறந்து உலகையும் பார்ப்பதிலை. மனதைத் திறந்து தான் யார் என்பதையும் பார்ப்பதில்லை!

நம்ம ஊரில் சிட்டில வாழப் போன பலர், கிராமத்தில் இருந்து ஒரு 10 வயது கொண்ட ஏழைப்பெண்ணை கொண்டு வந்து, தம்பதிகள் வேலைக்கு போனதும் சமையல் செய்ய வீடை சுத்தம் செய்யனு சொல்லி  "abuse" பண்றீங்க இல்லையா? அதேபோல்தான் இதுவும் ஒருவகை "abuse"!

இதே வேலையை ஒரு நர்ஸ் செய்தால், அது புனிதத் தொழில். ஆனால் சாம்ப மூர்த்தி செய்வது இழுக்கு. இதுதான் நம் கலாச்சாரம். இல்லையா?

-------------- 

IMPORTANT information!

 When I read little bit more about Leprosy, few things I learned. It is important to share that here. Leprosy is a contagious disease. The bacteria can spread one person to another by contact (through fluids). However, MOST of US are IMMUNE to LEPROSY bacteria. Only very few percentage of people are NOT IMMUNE to those bacteria. If you are working close to the leprosy patients, it is better to see whether you carry a "gene" which is IMMUNE to leprosy bacteria. Suppose your chromosome  has a gene with "loss of function", then you will be susceptible for leprosy infection. You just have to keep off from people who have been infected by leprosy. Mother Teresa must have had a normal "gene" which is IMMUNE to leprosy. Also they say, if you had been infected by TB bacteria and your body fought off TB bacteria, your body develops IMMUNITY towards leprosy bacteria as well. They say, people who have had BCG vaccination or  who have been infected with TB bacteria and treated, will have less chance of getting "leprosy" infection!

-----------

தொடரும்




Wednesday, June 5, 2019

ஜானகிராமன் கதை விமர்சனம்-3

என்னடா இவன் ஜானகிராமனை மட்டம் தட்டணும்னு நோக்கத்திலேயே இந்த விமர்சனம் எழுதுறான்? னு நீங்க எல்லாரும் அடிச்சிக்கிறது தெரியுது. நான் எனக்குத் தெரிய என் விமர்சனத்தில் பொய் எதுவும் சொல்லவில்லை.

எந்த ஒரு எழுத்தாளன் எழுதினாலும், கதையில் வர்ர கேரக்டர்கள் வாயிலாக பல விதமாகப் பேசினாலும், எல்லாமே எழுத்தாளன் சிந்தனைகள்தான். அவன் நடை, அவன் எழுதும் அழகுனு வர்ணிக்க பலர் இருக்கிறார்கள். ஜானகிராமனைப் புகழ கோடிப்பேர் இருக்காங்க. கோடியில் ஒருத்தனாக நானும் ஆகலாம்தான், அது ஒரு மாதிரியா 'போர்' அடிக்கும் எனக்கு.

எழுத்தாளனை நாம் கவனிக்கவும் செய்யலாம். அவன் எப்படி சிந்திக்கிறான்? அவனுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது ? அவனுக்குத் தெரிந்த நியாய தர்மங்கள் என்ன? அவனின் குறைபாடுகள் அல்லது வீக்னெஸ்கள் என்ன? என்பதையும் நாம் பார்க்கலாம். அப்படி அவனை அனலைஸ் பண்ணுவது எந்த ஒரு எழுத்தாளனுக்கும் பிடிக்காது என்பது வேற விடயம்.

ஜானகிராமன் சிறுகதைகள்தான் அவர் நாவல்களைவிட சிறப்பாக வந்து இருக்கும்.  அதனால்தானோ என்னவோ பெரிய எழுத்தாளர்கள், சுஜாதா போன்றோர் முதல்க் கொண்டு ஜானகிராமனை தன் ரோல் மாடல்னு சொல்லாம சொல்லுவாங்க.

ஜானகி ராமன் அந்தக்காலத்து எழுத்தாளர். அதுவும் பார்ப்பனரை சுத்தியே அவர் கதைகள் அனைத்தும் இருக்கும். அவங்க பேசுற பேச்சு வழக்கிலேயே இருக்கும்னு ஒரு சிலர் குறை சொல்லுவாங்க. நான் அவர் கதைகள் படித்ததில்லைனு பலர் சொல்லுவாங்க. உங்களுக்காக நீங்க படிப்பதற்காக, அவர் எழுதிய  ஒரு சிறு கதையை அழியாச்சுடர்கள் தளத்திலிருந்து வெட்டி ஒட்டுறேன்.

படிச்சுப் பாருங்க!


சாப்பாடு போட்டு 40 ரூபாய்- னு ஒரு சிறூகதை.

*******************

சாப்பாடு போட்டு 40 ரூபாய்


‘மணியார்டரா ‘ எனக்கா ‘ ‘

‘ஆமா ஸ்வாமி ‘ உங்களுக்கேதான் ‘ ‘

‘உத்ராபதி, உனக்கு வயசு நாப்பதாயிருக்கும், சாளேசரம் போட்டுக்கற வயசு ‘ நல்லா பாத்துச் சொல்லு. நான் வாணா கண்ணாடி தரட்டுமா ? ‘ என்று துருப்பிடித்த வினோலியா ரோஸ் சோப் tjanakiraman பெட்டியைத் திறந்து, வெற்றிலைக்கும் வெட்டுப் பாக்குக்கும் மேல் படுத்துக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடியைத் தொட்டார் முத்து.


‘கண்ணாடியும் வாணாம், சீப்பும் வாணாம். உங்களுக்குத்தான் வந்திருக்கு. நீங்களே அந்தக் கண்ணாடியை மாட்டிக்கிட்டுப் பாருங்க…எம். சாம்பமூர்த்தி யாரு ? ‘

‘அக்கணாக்குட்டியா ? நம்ம புள்ளையா ? இப்ப மெட்ராஸிலேயா இருக்கு அது ? ‘

முத்து அவசர அவசரமாக மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டி, இடது காதில் நூலைச் சுற்றிக் கொண்டார்.

‘ஆமா, வேலைக்குப் போயிட்டானே அக்கணாக்குட்டி ஒரு மாசத்துக்கு முன்னால, உனக்குத் தெரியாது ? ‘

‘தெரியாதே. எங்க வேலையோ ? ‘ என்று மணியார்டர் பாரத்தில் இரண்டு இடத்தில் இண்ட்டு போட்டுக் கொடுத்தார் உத்ராபதி. கையெழுத்தானதும் அடிக் கடிதத்தைக் கிழித்து முப்பதொன்பது ரூபாய்க்கு நோட்டும் ஒரு ரூபாய்க்கு சில்லறையுமாகப் பையிலிருந்து எடுத்து நீட்டினார்.

‘சில்லறையும் மாத்திப்ட்டு நாற்பது ரூபாயைக் கொடுப்பானேன் ? அரை ருபாயைக் குறைச்சுண்டு கொடுக்கப் படாதோ ? ‘ என்று அரை ரூபாயை நீட்டினார் முத்து.

‘நாலணாப் போதும் சாமி. உங்ககிட்ட அதுக்கு மேலே வாங்கறது பாவம் ‘ என்று பாதியைத் திரும்பிக் கொடுத்து விட்டார் உத்ராபதி.
‘முதல் சம்பளம் வாங்கி அனுப்பிச்சிருக்கான் அக்கணாக்குட்டி. எட்டணாவாத்தான் இருக்கட்டுமேன்னு நினைச்சேன் ‘ என்று நாலணாவைத் திரும்பி வாங்கிக் கொண்டார் முத்து.

‘பிறத்தியார் பணம் அனுப்பிச்சா, ரண்டுகையாலும் வீசி வீசி தருமம் பண்ணுவாங்க சாமி ‘ என்று சொல்லிக் கொண்டே குறட்டில் இறங்கி வந்தாள் அவர் மனைவி.

‘ஏழைக்குதாம்மா தெரியும் ஏழை கஷ்டம். நீங்க சொல்றீங்களே, மாசம் நானூறு ரூபா அனுப்பறாரு ரட்டைத் தெரு மகாலிங்கய்யரு மகன், மிலிட்டரியிலே கர்னலா இருக்குறாராமே. மகாலிங்கய்யரு அப்படியே வாங்கிட்டு குந்தினாப்பல உள்ளே போயிடுவாரு. ஒரு பத்துகாசு டாத்தண்ணிக்கு ? மூச்சுப் பிரியப்படாது… முகத்தைப் பார்த்தாத்தானே ?… அக்கணாக்குட்டி என்ன வேலையாயிருக்கு ? ‘

‘என்ன வேலையோ ? நம்ம எம். கே. ஆர். கிட்ட போய் புலம்பினேன் ஒரு நாளைக்கு, நம்ம பையனுக்கு ஒரு வழி பண்ணப்படாதா செட்டியார்வாள் ‘ இப்படி உதவாக்கரையாத் திரியறானேன்னு நின்னேன். ஒரு மாசம் கழிச்சு சொல்லியனுப்பிச்சார். போனேன். உம்ம பையனை அனுப்புரீராய்யா மெட்ராஸஉக்கு ? ஒரு பெரியமனுஷன் வீட்டிலே கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம். ஒரு பையன் இருந்தாத் தேவலைன்னு சொல்றாங்க. பெரிய இடம், புள்ளீங்க பள்ளிக்கூடத்துக்குப் போகும். கொண்டு விடணும், கடை கண்ணிக்குப் போகணும். இப்படி சில்லரை வேலையா இருக்கும் போலிருக்கு. நல்லா கவனிச்சிப்பாங்க. வீட்டோடு சாப்பாடு போட்டு வைச்சிப்பாங்கன்னார் எம். கே. ஆர்.

‘அனுப்புறீமான்னு கேக்கணுமா ? நான்தான் கஞ்சிவரதப்பான்னு தவிச்சுண்டு கிடக்கேன். இன்னிக்கே அனுப்பிக்கறேன்னேன். நாலு நாக்கழிச்சு அவர் காரியஸ்தர் மெட்ராஸ் போனார். அக்கணாக்குட்டியை அழச்சிண்டு போயிட்டார். சரியா ஒண்ணரை மாசம் ஆச்சு. பணம் வந்திருக்கு. ‘

‘என்னமோ சாமி கண்ணைத் திறந்தாரு. நீங்க முன்னாலே, இந்த மூக்கு கண்ணாடிக்கு அந்த நூலை எடுத்திட்டு ஒரு காது வாங்கிப் போடுங்க. அப்புறம் ஒரு உறையிலே போட்டு வச்சுக்குங்க. இப்படியே சீவல் மேலேயும் பாங்கு மேலேயும் வச்சிட்டிருந்தா பழங்கோலி மாதிரி கீறல் விளாம என்ன பண்ணுமாம் ‘ ‘ என்று சொல்லிக்கொண்டே உத்திராபதி நகர்ந்தார்.

சம்சாரம் முத்துவைப் பார்த்தாள்.
‘இப்படிக் கொடுத்திட்டு நேரே உள்ள வரட்டும். பற மோளம் மாதிரி ஊரெல்லாம் போய் தம்பட்டம் கொட்டிண்டு நிக்கவேண்டாம் ‘ என்று பல்லோடு பல்லாகச் சொல்லி வெற்றிலைப் பெட்டி மேலிருந்த நோட்டுகளை பெட்டிக்குள் போட்டு மூடி, பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்ளே போனாள்.

வெற்றிலைப் பெட்டி கையை விட்டுப் போனதும் கூடவே விரைந்தார் முத்து. அவர் உள்ளே வந்ததும் கதவைத் தாழிட்டாள் சம்சாரம்.
முத்து தோளிலிருந்த மூன்று முழம் ஈரிழையை இடுப்பில் கட்டி, அவள் கையிலிருந்த பெட்டியை வாங்கித் திறந்து நோட்டுகளை எடுத்து, பறையிலிருந்த பரமேச்வரனின் படத்தின் அடியில் வைத்து, நெடுங்கிடையாக விழுந்து மூன்று தடவை நமஸ்காரம் செய்தார்.

‘ஏன் நிக்கறே ‘ நீயும் பண்ணேன் ‘ ‘

‘எல்லாம் பண்றேன் ‘ என்றுதான் அவள் வழக்கமாகச் சொல்லிவிட்டு நின்றிருப்பாள். ஆனால் மனசு பாகாகிக் கிடந்ததால் அவரே சம்பாதித்து விட்டாற்போல, பதில் பேசாமல் கீழே குனிந்து மூன்று முறை வணங்கி எழுந்தாள். அவளுக்கு, அந்தக் காலத்து முத்துவின் ஞாபகம் வந்தது. ஏழு வருடங்களுக்கு முன்னால் முத்து இப்படிக் கிழம் சென்று போகவில்லை. மயிர் கருகருவென்றிருக்கும், அள்ளிக்கட்ட வேண்டிய கூந்தலாக இருக்கும். மூக்கிலிருந்து இரண்டு கோடுகள் இந்த மாதிரி விழவில்லை. மார்பும் இரு பிளவாக அடித்தென்னை மட்டை மாதிரி வைரமாக இருக்கும். இப்படிச் சரியவில்லை. தோள்பட்டை இப்படிச் சூம்பவும் இல்லை. ஆடு சதை, துடைச் சதை எல்லாம் இப்படி கழளவுமில்லை. அப்போது வெற்றிலைப் பெட்டி பித்தளைப் பெட்டி. இப்பொழுது குப்பைத் தொட்டிபோல ஒரு வயதானத் தகரப் பெட்டி. அப்பொழுது வெள்ளிச் சுண்ணாம்புக் கரண்டான். இப்பொழுது பிரம்மோத்சவத்தில் தெருவோரக் கடைப்பரப்பில் வாங்கின தகரக் குழாய். அதுவும் துரு. கழுத்துக் குழியை தங்க ருத்ராட்சக் கொட்டை மறைத்ததுபோய், இப்பொழுது குழிதான் தெரிகிறது. மேனிபோய், தெம்பு போய் கங்காளி மாதிரி நிற்கறதைப் பார்த்துதான் ‘ரண்டாம் தாரமாம்மா ‘ ‘ என்று போன வருஷம் அமர்த்தின புதுத் தயிர்க்காரி கேட்டாள் போலிருக்கிறது. இப்படியா விசுக்கென்று இந்த பிராமணன் கிழண்டு போகும் ‘ மருந்துக்குக்கூட மயிரில் கறுப்பில்லாமல், கூந்தல் கொட்டைப் பாக்காகி….பல் விழவில்லை, ஆனால் கோணவும் பழுப்பேறவும் ஆரம்பித்து விட்டது.
ஆனால் இது ஒன்றும் அவள் கண்ணை இந்தக் கணம் உறுத்தவில்லை. ‘என்ன இருந்தாலும் இதுக்கு இருக்கிற சாமர்த்தியம் சாமர்த்தியம்தான் ‘ என்று உவந்தாள்.
அவளுக்குச் சற்று சிரிப்பாகக்கூட இருந்தது. நம் பிள்ளையைப் பார்த்து நாற்பது ரூபாய் சம்பளம் போட்டு சாப்பாடும் போடத் தோன்றிற்றே ஒருவனுக்கு ‘ இந்த உலகத்தில் எத்தனை அசடுகள் இருக்கமுடியும் ‘

இல்லை….அண்ணாக்குட்டி நிஜமாகவே சமர்த்துதானோ ‘ நமக்கு ஒரு பிள்ளை. செல்லப்பிள்ளை. அசட்டுத்தனமேதான் கண்ணில்பட்டது. வெளியே போனதும் மறைந்திருந்த சமர்த்து வெளி வந்துவிட்டதோ என்னவோ.….இல்லை….பணத்தையே தின்று, பணத்தையே உடுத்தி, பணத்திலேயே படுத்துப் புரளுகிற கொழுப்பு ஜன்மங்களால் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கிக் கொடுத்து நாற்பது ரூபாய் கொடுக்கவாவது ‘…கொழுப்போ டம்பமோ, மனது நல்ல மனது. இந்தப் பாச்சைக்கு, பேச்சைக்காலும் பேச்சைக்கையும் கொன்னல் பேச்சுமாக இது கிடக்கிற லட்சணத்துக்கு இப்படி ஆதரிக்க வேண்டும் என்று தோன்றிற்றே.

‘தட்சிணாமூர்த்தே, வைதீச்வரா, லோகமாதா ‘ நீங்கள்ளாம்தான் காப்பாத்தணும் ‘ என்று பயந்துபோய் நின்றாள் அவள்.
‘சரி, காவேரியிலே போய் ஸானம் பண்ணிட்டு வந்துடறேன்…சில்லறை ஏதாவது கொடேன். கீரைத்தண்டு பாற்காய்னு ஏதாவது வாய்ண்டுவரேன் ‘ என்று முடுக்கினார் முத்து. ‘இன்னிக்கு கூடவா வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும் ? ‘, என்று சொல்லாமல் பிணங்குகிற முறுக்கு அது. நாலணாவை எடுத்துக் கொடுத்தாள். கன்னத்தில் அவளை செல்லமாக நிமிண்டிவிட்டு அவர் வெளியே போகிறார். பணம் வந்தால் இந்த நிமிண்டல், குழையல் எல்லாம் இரண்டு பேருக்கும் சகஜம்.

அவர் குளிக்கப் போனது நடந்து போகிற மாதிரி இல்லை. குதி போடுகிறது போலிருந்தது. அவனை — அதை, ரூபாய் அனுப்பும்படி யாரும் சொல்லவில்லை. அது அது வேலை என்று போனால் போதும் என்றிருந்தது. அது போய் நாற்பது ரூபாய் அனுப்பவாவது ‘ ‘நீ உருப்படமாட்டே, நீ உருப்படவே மாட்டே ‘ என்று அவனைச் சபித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது, வயிற்றில் பிறந்த பிள்ளையை இப்படியா சபிப்பார்கள் ‘ நம்ம புத்தி இவ்வளவு கட்டையாக ஏன் போயிற்று ? இப்பொழுது பணத்தை அனுப்பி நம்ம புத்தியில் கரியை பூசிவிட்டதே ‘ இந்தப் பிள்ளை ‘ அக்கணாக்குட்டி, இனி மேல் உன்னை அதட்டக் கூடமாட்டேண்டா என்று தன்னைத் திட்டிக்கொண்டு நடந்தார் முத்து ஒரு பிள்ளை ‘
பிள்ளைகளெல்லாம் தாயையும் தகப்பனையும் கொள்ளாமல் பாட்டனையும் பாட்டியையும் கொள்ளுமாமே, –அதுபோல் அக்கணாக்குட்டியைப் பற்றிய வரையில் மெய்தான். அவன் முத்துவின் மாமாவைக் கொண்டு விட்டான். முத்துவைக் கொண்டிருந்தால் அண்டா, தவலைகளை அலட்சியமாக உருட்டுகிற வலுவு வந்திருக்கும். ஆயிரம் பேருக்கானாலும் ஒரு கல் உப்போ, புளியோ ஏறாமல் குறையாமல் சமைத்துப் போடுகிற நளபாகம் கை வந்திருக்கும். முத்துவின் சம்சாரத்தைக் கொண்டிருந்தால் பார்க்கவாவது லட்சணமாக வளர்ந்திருக்கலாம்.
மீனாட்சி லட்சணம் தான். சமையற்கார முத்து பெண்டாட்டி என்று யார் சொல்ல முடியும் ? நூத்தம்பது வேலி பண்ணைவீட்டு எஜமானி எண்ணெய் ஸ்நானத்துக்காக நகைநட்டுகளைக் கழற்றி வைத்தாற் போலிருக்கும் …..ஸ்நானம் செய்துவிட்டுத் திரும்பி உள்ளே நுழைந்த கையோடு ஈர வேட்டியோடேயே அவளை அப்படியே அம்மென்று திணறத் திணறக் கட்டிக் கொள்ள வேண்டும். ம்க்கும்…ம்க்கும் இதுவேறயாக்கும் என்று சொன்னாலும் சொல்லுவாள். கட்டிண்டு தொலை என்று சொல்வது போல மரம் மாதிரி நின்றாலும் நிற்பாள். அவளுக்குப் பிறந்த பிள்ளை அந்த மாதிரி மூக்கும் முழியுமா இருக்கக் கூடாதோ ? மூக்கில் வற்றாத ஜலதோஷம். ஹ் ஹ் என்று நிமிஷத்துக்கு ஒரு உறிஞ்சல். முட்டிக்கால், முட்டிக் கை. குதிகால் கீழே படாமல் இரண்டு குதியிலும் முள்குத்தினாற் போன்ற விந்து நடை, வாயைச் சற்று திறந்தாலே ஓட்டுக் கூரை மாதிரி பல் வரிசை — வரிசை இல்லை கோணல் — ஓடு மாற்றி நாலு வருடமானாற் போல. அந்த பல்லுக்கு ஏற்ற சொல், எச்சிலில் குளித்துக் குளித்து வரும் ஒவ்வொரு பேச்சும். எப்ப வந்தேல் மாமா சேக்யமா ? நாலானன் சேக்யமார்க்கானா, (நாலானன் என்றால் நாராயணன்) செலுப்பு பிஞ்சு போச்சுப்பா இன்னிக்கி காவேரி ரண்டால் ஆலம்…. வயசு பதினைந்து முடிந்தும் இதே பேச்சுதான். படிப்பு வரவில்லை. எலிமெண்டரிக்கு மேல் ஏறவில்லை. ஐந்து வருஷம் வீட்டோடு கிடந்ததும் போன வருஷம் ஒரு மளிகைக் கடையில் இழுத்துவிட்டார். அங்கே ஒரு நாள் எண்ணெயைக் கொட்டி ரகளை. வேலை போய்விட்டது. சைக்கிள் பழுது பார்க்கிற கடையில் கொண்டுவிட்டார். நாலு நாளைக்குப் போய்விட்டு வந்து ஜஉரமாகப் படுத்துக் கொண்டு விட்டது. நான் மாட்டேன்; சைக்கிலுக்குப் பம்பு அடிக்கச் சொல்றான். கண்டு கண்டா மார் வலிக்குது. நான் மாட்டேன் போ என்று திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டது. முத்து அலையாத இடமில்லை. பையனை அழைத்துக் கொண்டு வர்ச் சொல்லுவார்கள். போவார், பையனைப் பார்த்ததும் சொல்லியனுப்புகிறேன் என்று அனுப்பி விடுவார்கள். விறகு கடையில்கூட வேலைக்கு வைத்துப் பார்த்தாயிற்று. ஒரு கட்டையைத் தூக்க நூறு முக்கல். தினமும் நகத்திலும் விரல் இடுக்கிலும் சிலாம்பு. வீட்டுக்கு வந்து போகமாட்டேன் என்று அடம். நீ உருப்படவே மாட்டே என்று அப்பா அம்மா பாட்டு ‘ ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டான் அவன். பேசாமல் போய் திண்ணையில் உட்கார்ந்து வாசலில் போகிற வெள்ளாட்டையும் குட்டியையும் முக்கை உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்துக் கொண்டிருப்பான். இல்லாவிட்டால் வீட்டுக்கார வாத்தியார் பெண்ணோடு ‘நேத்திக்கி ரிசவாகனம் பாக்கலியே நீ தூங்கிப் போயிட்டியே ‘ என்று திருநாள் சேதிகளைப் பேசிக் கொண்டிருப்பான்.
ஸ்வாமி நினைத்தால் என்ன செய்யமாட்டார் ‘ ஊமைக்கும் அசடுகளுக்கும் அவர் தானே கண். என்னப்பா ‘ வைத்தீச்சுவரா ‘ இந்த மட்டுமாவது பாதை காட்டினியே ‘

முதல் தடவை பணம் வந்து ஆச்சரியத்தில் கழிந்தது. இரண்டாம் தடவைகூட அந்த ஆச்சரியம் குறையவில்லை. மூன்றாம் தடவை இரண்டு மூன்று நாள் தாமதமாயிற்று. வேதனையாயிருந்தது. பயமாக இருந்தது. ஐந்தாவது தடவை ஒரு வாரம் தாமதம். கோபம் வந்தது. கோபத்தை சமாளித்துக்கொண்டு என்ன கஷ்டமோ இடைஞ்சலோ என்று சமாதானம் செய்து கொண்டு சாந்தமான சமயத்தில் பணம் வந்து குதித்துவிட்டது. ‘இது சம்பாதிச்சு நான் சாப்பிடணுங்கறது இல்லை ஸ்வாமி. என்னமோ முன்ன மாதிரி கண் சரியாகத் தெரியலை. கை நடுங்கறது. என்னமோ குழப்பம். மொளகாப் புளியெல்லாம் முன்ன மாதிரி திட்டமா விழமாட்டேங்கிறது. இல்லாட்டா என்ன விட்டுட்டு ஆனந்தம் பயலைக் கூப்பிடுவாளோ ஏலாவூர் பண்ணையிலே ‘ எத்தனை கலியாணத்துக்கு அங்கே டின்னரும் டிபனுமா பண்ணிப்போட்டிருக்கேன் ? இந்தப் பய இப்படி பிள்ளையா பிறந்து இப்படி நிக்கறதேங்கிற கவலையிலே எனக்கு கையி, தீர்மானம், தைரியம் எல்லாம் ஆடிப்போச்சு ஸ்வாமி. இப்ப அது நிமிர்ந்துட்டுது. என் குழப்பம் நிமிரலே, என்ன பண்றது ‘ இல்லாட்டா இது சம்பாரிச்சா நான் சாப்பிடணும் தலையெழுத்து ‘ என்று மணியார்டர் வாங்கும்போது வந்து, விசாரிக்கிற பார்வையாகப் பார்த்த வீட்டுக்கார வாத்தியாரிடம் உருகினார் முத்து.
அந்தச் சமயத்தில்தான் வண்டிக்காரத் தெருவிலிருந்து வக்கீல் குமாஸ்தாவின் காரியஸ்தன் வைத்தியநாதய்யன் வந்து செய்தி சொல்லிவிட்டுப் போனான். மத்தியானம் முடிந்தால் வீட்டுப்பக்கம் வந்துவிட்டுப் போகச் சொன்னாராம் அண்ணாவையர்.
வக்கீலுக்குக் குமாஸ்தா. அந்த குமாஸ்தாவுக்கு ஒரு காரியஸ்தனா ? இது உலகத்தில் இல்லாத ஆச்சரியம் இல்லையோ ? ஆனால் நடக்கிறதே. அண்ணாவையனுக்கு காரியஸ்தன் ஒருவன் இல்லை, இரண்டு மூன்று பேர் உண்டு. இந்தா என்றால் ஏன் எங்கேயென்று ஓடக் காத்திருக்கிற எடுபிடி ஆட்கள் மூன்று பேர் –அண்ணாவையன் முத்துவுக்குக்கீழ் சமையலாக இருந்தவன்தான். திடாரென்று ஒரு நாளைக்கு வக்கீல் ஜகதுவுக்கு குமாஸ்தாவாக ஆனான். மூன்று வருஷத்தில் ஜகதுவையே உட்கார்த்தி வைத்துவிட்டான். தானே வக்கீல் மாதிரி தொழில் நடத்தத் தொடங்கிவிட்டான். முதலிமார் கேஸ்கள், செட்டி நாட்டுக் கேஸஉகள் –பாகப் பிரிவினைகள் வியாஜ்யங்கள் என்று பிரளயமாடுகிறான். கோர்ட்டு ஏறாமலே எத்தனை மத்தியஸ்தங்கள் ‘ பல மத்தியஸ்தங்கள் வாசல் திண்ணையில் நீட்டின கால்களை முடக்காமலே நடக்கும். மலையாளத்து இரட்டைத் தாழம் பாயில் திண்டுமீது சாய்ந்து….ஏ அப்பா ‘ என்ன கார்வார் ‘ என்ன மோக்ளா ‘
முத்து கீரைத்தண்டு சாம்பார் சாதத்தைச் சாப்பிட்டு வினோலியா டப்பாவுடன் வண்டிக்காரத் தெருவுக்குப் போனார். போகாமல் எப்படி இருக்க முடியும் ‘ விறகு கடையிலும் சைக்கிள் கடையிலும் அக்கணாக் குட்டியை வேலைக்கு வைத்தது அண்ணாவையன் தானே. இது வேலையை விட்டால் அவன் என்ன செய்வான் ?
வழக்கம் போல நீட்டின காலை மடக்காமலே ‘வா முத்து, உட்காரு ‘ என்று அண்ணாவையன் திண்ணையில் தாழம் பாயில் சாய்ந்தவாறே அழைத்தான்.

‘வைத்தா வந்து சொன்னான், அய்யர்வாள் கூப்பிட்டார்னு ‘

‘ஆமா. முத்து ‘ என்று எழுந்து புகையிலையை உமிழ்ந்துவிட்டு வந்து, ‘ராத்திரி மெட்ராஸ் போறேன். இந்த தடவை யாராவது கூட இருந்தா தேவலை போலிருக்கு. ஒரு வாரமா ஜஉரம். முந்தாநாத்தான் ஜலம் விட்டுண்டேன். நாளைக்கு அர்ஜண்டா கேஸஉ ஹைக்கோர்ட்டிலே. பத்தியச் சாப்பாடு. ஹோட்டல்ல தங்கப்போறதில்லெ. தம்முடு கலியாண மண்டபத்திலே தங்கப் போறேன். நீகூட வந்து ஒரு ரசம் சாதமோ தொகையலோ பண்ணிப் போட்டா தேவலைன்னு தோணறது. அதான் கூப்பிட்டனுப்பிச்சேன் ‘

‘அதுக்கென்ன செஞ்சுபிடறது. ‘

‘நீ தீர்க்காயுசா இருக்கணும், நாலாநாள் திரும்பி விடலாம். நீ போறதுக்கு ரெடி பண்ணிக்கோ. நாளை நாளன்னிக்கி ஒண்ணும் அச்சாரம் வாங்கலியே ‘

‘இப்ப என்ன ஆடி மாசத்திலே அச்சாரம் ? ‘

‘ரொம்ப நல்லது போ. அப்ப ரண்டு நாள் கூடத் தங்கினாலும் பாதமில்லேன்னு சொல்லு. ‘

‘ஒரு மாசமாத்தான் இருக்கட்டுமே. நீங்க கூப்பிடறச்சே நான் வெட்டி முறிக்கப் போறேனோன்னேன். என்ன பேச்சு இது ? ‘

‘சரி, இந்தா–இதோ இருவது ரூவா இருக்கு. மீனாட்சி கிட்ட கொடு. செலவுக்கு வேணுமே அவளுக்கு… ‘ ராத்திரி ஏழு மணிக்கு வந்துடு. இங்கேயே சாப்பிட்டுப் புறப்படலாம்.

‘சாப்பிடறேன். இது என்னத்துக்கு ? ‘ என்று உபசாரமாக பணத்தை மறுத்தார் முத்து.

‘எது என்னத்துக்கு ? –கொடுத்தா பேசாம வாங்கிவச்சுக்கோயேன். நீதான் மகாப் பிரபுன்னு தெரியுமே எனக்கு. ‘

‘சரி ‘ என்று புன்சிரிப்புடன் இரண்டு நோட்டையும் வினோலியாப் பெட்டிக்குள் வைத்து மூடி ‘நானே போகணும் போகணும்னு நெனச்சிண்டிருந்தேன். நீங்க கூப்பிட்டுது பால்லெ பழம் விழுந்தாப்பல ஆயிட்டுது ‘ என்றார் முத்து.

‘என்ன ? ‘

‘நம்ம அண்ணாக்குட்டி அங்கதானே இருக்கான்… போறபோது அவனையும் ஒரு நடை பார்த்துட்டு வந்துடலாமே ‘

‘ஒஹோஹொ. ரண்டு மாசம் முன்னாலேயே சொன்னியே– யாராத்திலெயோ இருக்கான்னு. எனக்கு மறந்தே போயிடுத்து பாரேன். பலசரக்குக் கடைக்காரனுக்கு பைத்தியம் புடிச்சாப்பல ஆயிடுத்து என் புத்தி… பேஷ்– ‘

பட்டணத்துக்கு வந்த நாலாம் நாள்தான் முத்துவுக்கு ஒழிந்தது. அண்ணாவையருக்கு சமைத்துப்போட்டு விட்டு அவரோடும் சுற்ற வேண்டியிருந்தது. மூன்று நாளுக்குப் பிறகுதான் அண்ணாவையருக்குத் தைரியம் வந்தது. தனியாக நடமாடலாம் என்று. அன்று சனிக்கிழமை. வேங்கடாசலபதி பெயரைச் சொல்லி ஒரு சர்க்கரைப் பொங்கல் பண்ணச் சொன்னார் அண்ணாவையர். அவருக்குச் சாப்பாடு போடுவதற்கு முன்னமே சொல்லி விட்டார் அவர். ‘முத்து, நான் சாப்பிட்டுக் கோர்ட்டுக்குப் போறேன். நீ அக்கணாக் குட்டியைப் பார்த்துட்டு சாயங்காலத்துக்குள்ள வந்துரு. ராத்திரி வண்டிக்கே கிளம்பும்படியா இருக்கும். முடிஞ்சா அந்தப் பயலையும் அழச்சிண்டு வா. நானும் பார்க்கறேன் ‘ என்ரு அவர் சொன்னதும் அவிழ்த்துவிட்ட கழுதை மாதிரி ஓட வேண்டும் போலிருந்தது முத்துவுக்கு. நெஞ்சுக்குள் குதியாகக் குதித்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவருக்குச் சாதத்தைப் போட்டார். டாக்சி பிடித்துக் கொண்டு அவரை ஏற்றி வழியனுப்பி விட்டு, ஒரு எவர்சில்வர் டப்பாவில் சர்க்கரைப் பொங்கலைப் போட்டுக்கொண்டு மாம்பலம் பஸ்ஸில் ஏறினார்.
வீடு கண்டு பிடிப்பது சிரமமாக இல்லை. வீடா அது பங்களா. பங்களாகூட இல்லை. சின்ன அரண்மனை. ஒரு மாஞ்சோலைக்கு நடுவில் இருந்தது. கேட்டைக் கடந்து நுழைந்ததும் நடுவில் ஒரு நாகலிங்க மரம். இப்பாலும் அப்பாலும் இரண்டிரண்டு மாமரங்கள். ஒரே நிழலாக இருந்தது. தள்ளிப்போனால் கார் நிற்கும் முகப்பு. காரும் இருந்தது. நாகலிங்க மரத்துக்குப் பக்கத்தில் சிமண்டு சோபா இரண்டு திண்ணைபோல கட்டியிருந்தன, அங்கே நான்கு பையன்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
‘அம்பி ‘ ‘ என்று இரண்டு தடவை கூப்பிட்டார் முத்து. அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. மாமரத்தில் ஒரு குயில் கத்திற்று. கீழே நாகணவாய் இரண்டு மஞ்சள் மூக்கும் குழைந்த கூவலுமாக ஆடி ஆடி நடந்து கொண்டிருந்தன.

‘நான் டபிள்ஸ் எத்தனையோ தடவை போயிருக்கேண்டா இதே சைக்கிள்ளே என்ன செஞ்சிடுவாங்க ? எங்க தாத்தா ஹைகோர்ட் ஜட்ஜஉ கான்ஸ்டபிள் என்னைப் பிடிச்சிடுவானா ? ‘

‘ம்க்ம்…நீ யார் க்ராண்ட்ஸன்னாயிருந்தா போலீஸ்காரனுக்கு என்னடா ? அவன் டூட்டி செய்யத்தான் செய்வான். ‘

‘பெட்டு ? –நான் டபுள்ஸ் போறேன், மணியோட….. பிடிக்கிறானா பார்ப்பமா ? அஞ்சு ரூபா பெட்டு ‘ இந்தா ‘ என்று சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து வைத்தான் அந்தப் பையன்.

பன்னிரண்டு வயதுக் குழந்தையின் பையிலிருந்து ‘பெட்டு ‘க் கட்ட ஐந்து ரூபாய் பணம் வருவதைப் பார்த்து முத்து பயந்து போய்விட்டார். இந்தப் பையன்களைத்தான் அக்கணாக்குட்டி பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு விடுகிறானா ‘ அவருக்குப் பயமாகவும் இருந்தது. பெருமையாகவும் இருந்தது.

‘அம்பி ‘ ‘ என்று மறுபடியும் கூப்பிட்டார். பதிலில்லை. அன்று சனிக்கிழமை, பள்ளிக்கூடம் இல்லை போலிருக்கிறது.
மறுபடியும் கூப்பிட்டார்.

‘யாரு ? ‘

‘சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் கும்மாணத்திலிருந்து வந்திருக்கானே அவன் இஞ்சதானே இருக்கான்.

 ‘‘தெரியாது ‘ 

‘இதுதானே குப்புசாமி அய்யர் பங்களா ‘ ‘

‘யார்றா குப்புசாமி அய்யர் ? ‘

‘போடா ‘ நம்ம மோகன் தாத்தா தாண்டா. அவர் வீடுதான் ‘

‘நீங்க இந்த வீடு இல்லையா ? ‘

‘இல்லை. நாங்க எங்க ப்ரண்டு மோகனைப் பார்க்க வந்திருக்கோம். மோகன் உள்ளே சாப்பிடப் போயிருக்கான். ‘

முத்து மெதுவாக நகர்ந்து வீட்டின் முகப்புக்குப் போனார். அங்கு யாருமில்லை. உள்ளே ஹாலுக்குப் போனார். பாதி இருட்டு. அங்கே பெரிய மைசூர் மகாராஜா ராணியோடு நிற்கிறபடம், கொம்பு, மான்தலைகள், யாரோ தலைப்பாகை நீளக்கோட்டு கால்சட்டை போட்ட மனிதரின் படம் எல்லாம் மாட்டியிருந்தன. அங்கும் யாருமில்லை. அதையும் தாண்டினார். ஒரு கிழவன் அந்தண்டை நடையில் ஒரு ஸ்டூல்மீது உட்கார்ந்திருந்தான்.

‘யாரு ? ‘

‘ஏம்பா சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் இங்க இருக்கானே தெரியுமோ ? ‘

‘பையன்னா ? எந்தப் பையன் ? ‘

‘இங்கே வேலைக்கிருக்கான்பா ஒரு பையன் — கும்மாணத்திலிருந்து வந்திருக்கான். ‘

‘அப்படிச் சொன்னால் தெரியும் ? சாம்புவைத்தானே கேக்கறீங்க —பெரிய அய்யரோட இருக்கே அந்தப் பையன்தானே ? ‘

‘அது என்னமோ, இங்க வேலையா யிருக்கான் அந்தப் பையன் ? ‘
‘கும்பகோணத்துப் பையன்தானே ? ‘

‘ஆமாம். ‘

‘அப்ப இப்படி இறங்கி அதோ அங்கே போங்க — காட்டேஜஉக்கு, அங்கதான் இருப்பான் பையன், இப்பதான் அய்யரோட வெளியே போய் வந்தான். ‘

‘இங்கே ? ‘ என்று நடை முடிவில் இருந்த வாசற் படியைக் காட்டினார் முத்து.

‘இங்க சின்ன ஐயா ரண்டுபேரும் இருக்குறாங்க… பெரியய்யா இருக்கிற இடம் அதுதான். அங்கதான் அந்தப் பையன் இருக்கான்… நீங்க யாரு ? ‘

‘நான் அந்தப் பையனோட தோப்பனார். ‘

‘அப்படியா ‘ சரி சரி, போங்க. ‘

முத்து நடையிலிருந்து இறங்கி தோட்டத்தோடு போனார். ஏ அப்பா எத்தனை பெரிய வீடு ‘ எத்தனை மரங்கள் ஒரு ஆளைக் காணவில்லை. வாசலை இப்படி ஹோவென்று போட்டுவிட்டு உள்ளே எங்கேயோ இருக்கிறார்களாம். ஒரு ஈ காக்கையைக் காணோம் ‘ முந்நெற்றி மயிரைப் பிடித்தாலும் தெரியாது போலிருக்கிறது.

ஒரே நிசப்தமாக இருந்தது. தோட்டப் பாதையில் நடந்து அங்கே காட்டேஜின்படி ஏறினார் முத்து.

தாழ்வாரத்தில் வந்து ‘சார் ‘ என்றார்.

‘யாரு ? ‘

‘நான்தான் ‘ என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
அங்கே ஒரு பெரிய மேஜை, அதன்மேல் தடிதடியாகக் கணக்குப் புத்தகங்கள். அதன் பின்னால் நாற்காலியில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் கறுப்பாக மூக்குக் கண்ணாடி, மேஜையில் ஒரு நீலக்கடுதாசி. அதன் மேல் வரைபடம். அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் பக்கத்தில் நின்று அவருடைய தலையை, கிராப்புத் தலையை வரக்கு வரக்கு என்று சொரிந்து கொண்டிருக்கிறான்.

கறுப்பு கண்ணாடியின் உடலும் லேசாகக் கறுப்புத்தான். முத்து உள்ளே நுழைந்ததும் அவர் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றாமலே நிமிர்ந்து பார்க்கிறார்.

‘யப்பா ‘ என்று ஒரு குரல்.

அக்கணாக்குட்டியின் குரல்தான், மேஜை மீதிருந்த மங்கிய விளக்கின் கறுப்பு மறைவுக்குப் பின்னால் அக்கணாக்குட்டியின் முகம் தெரிந்தது.

‘எப்பப்பா வந்தே ? ‘ என்று ஹ் என்று உறிஞ்சிக் கொண்டே சிரிக்கிறான் அவன்.

‘யார்றா சாம்பு ? ‘

‘எங்கப்பா மாமா ‘ என்று அவர் தலையைச் சொறிந்து கொண்டே அக்கணாக்குட்டி ‘எப்பப்பா வந்தே ? ‘ என்று சிரித்தான்.

‘நமஸ்காரம் ‘ என்றார் முத்து.

‘நமஸ்காரம். சாம்பு அப்பாவா — வாங்கோ ‘ ‘

‘வந்தேன் ‘

‘உட்காருங்கோ ‘

ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார் முத்து. வெய்யிலிருந்து உள்ளே வந்ததும் கண்ணை மறைத்த இருள் மெதுவாக விலகிற்று. கண் நன்றாகத் தெரியத் தொடங்கிற்று.

‘செளக்கியமா ? ‘ என்றார் கறுப்புக் கண்ணாடி.

‘செளக்யம் ‘

முகத்தை நன்றாகப் பார்த்தார் முத்து. உதடு அறுந்தது மாதிரி அதைத்துத் தொங்கிற்று. கன்ன எலும்பில் இரண்டு அதைப்பு. காது வளையமெல்லாம் அதைப்பு. மேஜை மீது படிந்திருந்த கைகளை பார்த்தார். கைகள் படியவில்லை. கட்டைவிரல் மற்ற விரல்களெல்லாம் மடங்கியிருந்தன. நீட்ட முடியாத விரல்கள் என்று பார்த்தாலே தெரிந்தது.

‘எப்பப்பா வந்தே…ஹ் ? ‘ என்று பல் வரிசையைக் காட்டிக் கொண்டே கேட்டான். அக்கணாக்குட்டி. அவருடைய தலையைச் சொறிவதை மட்டும் நிறுத்தவில்லை.

‘இப்ப தாண்டா வரேன் ‘

‘இப்ப ஏதுப்பா வண்டி….ஹ் ? ‘

‘வண்டி முன்னூறு நிமிஷம் லேட்டு. தெரிஞ்சவா வீட்டிலே வந்து இறங்கினேன். சாப்பிட்டேன், உடனே புறப்பட்டு வரேன் ‘ என்று தன்னறியாமல் பொய் சொன்னார் முத்து.

அப்பொழுது கறுப்புக் கண்ணாடிப் பெரியவர் கன்னத்தை சொரிந்து கொண்டார். எல்லாரும் விரல் நுனியால் நகத்தால் சொறிந்துகொள்வார்கள். அவர் மடக்கின விரலின் பின்பக்கத்தால் சொறிந்து கொண்டார். முத்துவுக்கு பகீர் என்றது. இரண்டு மூன்று விரலில் நகமே இல்லை.

முத்துவுக்கு உட்கார முடியவில்லை. மேலெல்லாம் அரிப்பது போலிருந்தது. அந்த அறையில் காலைப்பாவவிட்டாலே உள்ளங்கால் அரிக்கும்போலிருந்தது. முள்மேல் உட்கார்வது போல குறுகிக்கொண்டார்.

பெரியவர் என்னென்னமோ வெல்லாம் கேட்டார். தப்பும் தவறுமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் முத்து. காதில் ஒன்றையும் சரியாக வாங்கிக் கொள்ளவில்லை. அவருக்கு உள்ளே பூஞ்சதை நரம்பெல்லாம் அழுவதுபோல் ஒரு கசிவு.

‘போரும்டா சாம்பு ‘ என்றார் பெரியவர்.

அக்கணாக்குட்டி சொறிவதை நிறுத்தினான்.

‘பையன் ரொம்ப சமர்த்தாயிருக்கான். அவன் இருக்கிறது எனக்கு ஆயிரம் பேர்கூட நிற்கிறாப்போல இருக்கு ‘ என்றார் பெரியவர். சொல்லிவிட்டு ‘சித்தே இருங்கோ, இதோ வந்துடறேன் —சாம்பு இப்படி வாயேன் ‘ என்றார்.

அக்கணாக்குட்டி அருகில் வந்து நின்றான். பெரியவர் எழுந்து அவன் தோளில் கையைப் போட்டுக்கொண்டார். அக்கணா நடந்தான். அவரும் விந்தி விந்தி துணி பூட்ஸ் காலால் நடந்தார். அவரை ஹாலின் ஒரு கோடியில் உள்ள கதவைத் திறந்து உள்ளே விட்டு வெளியே காத்து நின்றான்.

‘உங்க மாதிரி யார் இருப்பா ? விளக்கேத்தி வச்சேளே என் குடும்பத்துக்கு. நிஜமாகச் சொல்றேன். அக்கணாக்குட்டி அனுப்பிக்கிறானே மாசாமாசம் அதிலே தான் வயிறு ரொம்பறது. யார் செய்வா இந்த மாதிரி இந்தக் காலத்திலே ? அவனையும் ஒரு ஆளாக்கி….அவன் ஒரு கால் காசைக் கண்ணாலே காணப்போறானோன்னு ஒடிஞ்சு போய்விட்டேன். ஸ்வாமிதான் உங்க ரூபத்திலே வந்து அவன் கண்ணைத் திறந்துவிட்டார்…. ‘ அக்கணாக்குட்டியைப் பார்க்கபோகும் போது அவனுடைய எஜமானரைப் பார்த்தால் இப்படி என்னென்னவெல்லாமோ சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வந்திருந்தார் முத்து.
இப்போது வாயைத் திறக்கவில்லை. முடியவில்லை அந்த நினைவெல்லாம் தோன்றிய சுவடே இல்லை. மனதில் ஒரு பீதி. ஒரு குமைச்சல். குமட்டல். ஒரு கோபம். ‘பாவி ‘ நீ நன்னாயிருப்பியா ? ‘ என்று அடிவயிற்றிலிருந்து கதற வேண்டும் போலிருந்தது. அக்கணாக்குட்டி ஹால் ஓரத்தில் பெரியவர் வருவதற்காகக் காத்து நின்றவன் அப்பாவைப் பார்த்துப் புன்சிரிப்பு சிரித்தான். ஹ் என்று உறிஞ்சினான்.

முத்துவுக்கு நெஞ்சில் கட்டி புறப்பட்டாற்போல் வலித்தது. இவனையும் தாண்டி கதவைப் பார்த்தது அவர் கண். வெளியே நெளியப் போகும் நல்ல பாம்பைப் பார்ப்பது போல் ஒரு கிலி வேறு சூழ்ந்துகொண்டது.

‘இந்தண்ட வாடா ‘ என்று வாயால் தலையை அசைத்தார் — அவசரமாக, சுளிப்பாக.

அவன் புரிந்து கொள்ளவில்லை. புன்சிரிப்புடனேயே சாத்தியிருந்த கதவைக் கையால் காண்பித்து சைகை காட்டினான்.
பெரியவர் காவி பூட்ஸஉம் காலுமாக வந்தார். சுவரில் பதிந்த ஒரு பளபள கம்பியிலிருந்த ஒரு துண்டை எடுத்து அவரிடம் நீட்டினான் அக்கணா. அவர் கையைத் துடைத்துக் கொண்டதும், தோளைக் கொடுத்தான். பிடித்துக் கொண்டு வாத்து நடை நடந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

முத்து ஆரம்பித்தார். ‘சம்சாரத்துக்கு ஊரிலே உடம்பு ரொம்ப மோசமாயிருக்கு. பதினஞ்சு நாளா படுத்த படுக்கையாயிருக்கா. பிள்ளையைப் பார்க்கணும் பார்க்கணும்னு புலம்பறா, ஜஉரம் இறங்கவே இல்லை…. ‘

‘அடடா….நீங்க ஒரு வார்த்தை எழுதப்படாதோ ? ‘

என்னமோ சாதாரண ஜுரம்னு நெனச்சிண்டிருந்தேன். அது என்னடான்னா இறங்கற வழியாயில்லெ. அப்புறம் அவ தங்கைக்கு லெட்டர் போட்டு வரவழச்சேன், கிராமத்திலேர்ந்து. இவளானா புலம்பறா. உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லி பயலை அழச்சிண்டு போகலாம்னு வந்திருக்கேன் ‘ என்று அடுக்கிக் கொண்டே போனார் முத்து.

பெரியவர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். கறுப்புத்தான் கண்ணை மறைத்திருக்கிறதே என்ன தெரியும் ? அந்த முகத்தில்தான் என்ன தெரியும் ? தடிப்புத்தான் தெரிந்தது.

முத்துவுக்கு மட்டும் தான் சொன்னதை அவர் நம்பவில்லையோ என்று வயிற்றில் கனத்தது.

பெரியவர் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘ஊர்லெ சிநேகிதர் ஒருத்தர் காரிலே வந்திருக்கார். சேர்ந்து போயிடுவமேன்னார். ரயில்காரனுக்கு கொடுக்கறதையாவது மிச்சம் பண்ணலாம்னு நினைச்சேன். ‘

பெரியவர் வாய்தடிப்பு ஒரு புன்னகையாக மலர்ந்தது. சிரித்தால் அழகாகத்தான் இருக்கிறது. யார் சிரித்தால் என்ன என்று தோன்றிற்று முத்துவுக்கு.

‘பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும் ‘ என்றார் முத்து.

‘பாதகமில்லை ‘ என்று ஒரு புத்தானை அழுத்தினார் பெரியவர்.

‘சாம்பு, அப்பா கூப்பிடறாரேடா போறியா ? ‘ என்று கேட்டார்.

‘அம்மா ரொம்ப ஜஉரமாக கிடக்காடா. உன்னைப் பார்க்கணும்னு பேத்திண்டேயிருக்கா– ராவில்லே பகலில்லே ‘ என்றார் முத்து.

‘சரிடா சாம்பு. வேட்டி சட்டையெல்லாம் எடுத்து வச்சுக்கோ ‘ என்றார் பெரியவர். ‘பையன் ரொம்ப ஒத்தாசையாயிருந்தான் ஸ்வாமி. சுருக்கக் கொண்டு விட்டு விடுங்கோ. ‘

‘ம் ‘ உடம்பு சரியாயிருந்தா, அங்கே என்ன வேலை ? ‘ என்றார் முத்து.
அக்கணா பின்னாலிருந்த இன்னொரு அறைக்குப் போனான்.
வாசலிலிருந்து ஒரு தட்டில் டிபன் காபி எல்லாம் பரிசாகரன் கொண்டு வந்தான். அதற்குத்தான் புத்தானை அழுத்தினார் போலிருக்கிறது பெரியவர்.

‘சாபிடுங்கோ. ‘

‘நான் இப்பத்தானே சாப்பிட்டேன். ‘

‘இங்கே வந்து வெறும் வயத்தோட போகலாமா ? ‘

முத்துவுக்குச் சொல்ல மெல்ல முடியவில்லை. ‘பாலாம்பிகேச வைத்யேச ‘ என்று மனத்துக்குள் சுலோகம் சொல்லிக் கொண்டே காபியை மட்டும் எடுத்து கண்ணை மூடி மளமளவென்று விழுங்கினார். பரிசாரகன் பாத்திரங்களை எடுத்துப் போனான்.
அக்கணாக்குட்டி பையும் கையுமாக வந்தான். வெளிச்சத்தில் நன்றாகப் பார்க்கும்போது அவன் எவ்வளவு மாறிவிட்டிருக்கிறான் என்று தெரிந்தது. தலையை வழவழவென்று சீவி விட்டிருந்தான், வெள்ளை வெளெரென்ற சட்டை, வெள்ளை வேட்டி, முகத்தில் ஊட்டத்தின் பொலிவு, சட்டைக்கு வெளியே தெரிந்த முன்னங்கைகூட பளபளவென்று நிறம் ஏறியிருந்தது.

‘என்னை ரொம்ப மன்னிச்சிக்கணும் ‘ என்று எழுந்து கும்பிட்டார் முத்து.

‘எதுக்காக ? ரொம்ப நன்னாருக்கே. ‘

‘நமஸ்காரம் பண்ணிட்டு போய்ட்டு வரேன்னு சொல்லிக்கோடா ‘ என்றார் முத்து.

அக்கணா விழுந்து வணங்கி எழுந்து ‘போய்ட்ரேன் மாமா ‘ என்றான்.
‘போய்ட்டுவா. போய் லெட்டர் போடு, அம்மாவுக்கு உடம்பு எப்படியிருக்குன்னு. எப்ப வரேன்னும் எழுதணும். ‘

‘சரி மாமா. ‘

இருவரும் வெளியே நடந்தார்கள்.

இவ்வளவு சீக்கிரம் காரியம் நடக்கும் என்று நினைக்கவில்லை, சிங்கத்தின் குகையிலிருந்து வருவது போல, திரும்பிப் பார்க்காமல் வேகமாக வெளியே வந்து தோட்டத்தை தாண்டி தெருவுக்கு வந்து சாலைக்கு வந்தார் முத்து. ‘மெதுவாப் போப்பா ‘ என்று கூடவே விரலால் நடந்து சிறு ஓட்டமாக ஓடிவந்தான்.

சாலைக்கு வந்து பஸ் ஏறினதும்தான் வாயைத் திறந்தார் முத்து.

 ‘ஏண்டா மக்கு ‘ இந்த மாதிரி உடம்பு அந்த மாமாவுக்குன்னு நீ சொல்லவே இல்லியே ‘ என்றார். 

‘என்ன உடம்பு ? ‘

‘உனக்குத் தெரியலியா ? ரொம்ப கரிசனமா தலையைச் சொறிஞ்சு விட்டியே, புத்திதான் இல்லை, கண்ணுகூடவா அவிஞ்சு போச்சு ? ‘

‘அது ஒட்டிக்காதாம்பா ? ‘

‘ஒட்டிக்காதா ‘ யார் சொன்னா ? ‘

‘அவாத்து மாமி, மாமா, மோகன் எல்லோரும் சொல்வாலே. ‘
‘பின்னே அந்த மோகன், மாமி, மாமா எல்லோரும் வந்து அவர் தலையைச் சொறியப்படாதோ ? ‘

‘அவாலுக்கெல்லாம் வேலையில்லியாக்கும் ? மோகன் பல்லிக்கூடம் போறான். மாமா என்ஜீனியர், மாமி பூ நூல்லே பை பனியன்லாம் போடறா. அவாலுக்கு டயம் ஏது ? அவா சொறியப்படாதோங்கிறீயே. ‘
‘உன்னை ஏமாத்தியிருக்காடா எல்லாரும், அசட்டுப் பொணமே ‘

‘ஒண்ணும் இல்லே. இத பாரு பேப்பர்லேயே போட்டிருக்கு ‘ என்று பையின் பிடியை அகட்டி உள்ளேயிருந்து நாலு சினிமாப் பாட்டு புத்தகங்களை எடுத்தான் அக்கணா. ஒரு புத்தகத்தைப் பிரித்து அதிலிருந்துஒரு தினசரிதாள் பக்கம் ஒன்றை எடுத்தான். அதிலெ ஒரு வெள்ளைக்காரப் பெண் யாரோ ஒரு ஆணின் கையைப் பிடித்துத் தடவிக் கொண்டு நிற்கிறாள். கருப்புக் கண்ணாடிகாரருக்கு இருந்த மாதிரியே கை, மூக்கு எல்லாம்…. ‘இது யாரு தெரியுமா ? வெல்லைக்கார தேசத்திலே ரானி. போன மாசம் மெட்ராசுக்கு வந்தா — ராஜாவோட. இந்த ஊருக்கு வந்து சினிமா, டிராமால்லாம் பார்க்கலியாம், காரை எடுத்துண்டு ஒரு கிராமத்துக்குப் போனாலாம். மாமா மாதிரி அங்கே முப்பது நாப்பதுபேர் இருக்கலாம். மருந்து சாப்பிடறாலாம். அவால்லாரையும் பார்த்து, கையெல்லாம் தடவிக் கொடுத்தா வெல்லைக்கார ரானி, போட்டோ போட்டிருக்கா பாரு தடவிக் கொடுக்கறாப்பல, ஒட்டிக்கும்னா ரானி தடவிக்கொடுப்பாலா, பேத்தியம் மாதிரி பேசறியே ? ‘

‘பேத்யம் மாதிரியா ? நானா பைத்தியம் ? ‘ என்று படத்தைப் பார்க்க ஆரம்பித்தார் முத்து.

‘படத்தை மட்டும் பாக்கறியே. கீலே எலுதியிருக்கு பாரு. ‘ என்று விரலை அந்த வரிகள் மீது ஒட்டிக் காண்பித்தான் அக்கணா.

‘பாலாம்பிகேச வைத்யேச ‘ என்று சுலோகம் சொல்லிக் கொண்டே வினோலியா பெட்டியைத் திறந்து கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு படிக்க ஆரம்பித்தார் முத்து.

நன்றி: திண்ணை

 *************************

ஜானகிராமன் சிறு கதை படிச்சாச்சா? என் விமர்சனம் அடுத்த பதிவில். நீங்களும் ஏதாவது சொல்லனும்னா சொல்லலாம்.

-தொடரும்

Tuesday, June 4, 2019

ஜானகிராமன் கதை விமர்சனம்-2

நளபாகம்!  தஞ்சாவூர் பிராமண வாழக்கை பற்றி எழுதியிருக்கிறார் என்பதெல்லாம் ரெண்டாவதுதான். ஜானகிராமன் எந்தளவுக்கு தான் ஒரு கீழ்த்தரமான ஒரு ஆம்பளை என்பதை இக்கதையில் காட்டிவிடுவார்.

இது ஒரு  இளம் பெண், அதாவது ஒருவனின் மனைவி, இன்னொரு ஆண் நினைவில் "ஃபேண்ட்சசைஸ்" செய்கிற மாதிரி கதை எழுதி இருக்கிறார் என்பதே உண்மை.

அப்பட்டமான போர்னோக்ராஃபி கதையை ஆச்சாரமாக பூஜை, கடவுள் எல்லாவற்றயும் கலந்து எழுதி இருப்பார். ஆனால் ஜானகிராமன் பர்வேர்சனை தெளிவாகக் காணலாம்.

கதை?

நாயகி ரங்கமணிக்கு குழந்தைப் பைத்தியம்.

வீட்டில் ஒரு குழந்தை வேணும்! இப்போது விதவை. மாமியார் ஸ்தானத்தில் ரங்கமணி. இருந்தாலும் நடுவயதுப் பெண்தான். இவளுக்கு குழந்தை இல்லைனு தத்தடுத்து துரைனு ஒரு வளர்ப்பு மகன் இருப்பான். அவனுக்கு மனைவி, பங்கஜம், ரங்கமணியின் ஆசை மருமகள். மாட்டுப்பெண்., பங்கஜதத்துக்கும் குழந்தை இல்லை. இதனால் ஒரு மாதிரி மனநோயாளி ஆகி விடுவாள், ரங்கமணி. எப்படியோ அந்த வீட்டில் ஒரு குழந்தை வேணும்.

வர வர வளர்ப்புமகன் ஆண்மை வீரியத்தில் ரங்கமணிக்கு சந்தேகம் வந்துவிடும். அவன் பங்கஜத்துடன் நல்லா உறவு கொண்டு அவளை உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறானா? இல்லை அவனுக்கும் ஆண்மை குறைவு இருக்கிறதா? ஒரு வேளை அவன் நல்ல ஆண்மகனா இல்லைனா? வீட்டில் குழந்தை சத்தம் கேட்காதே? என்கிற பயம் வந்துவிடும் ரங்கமணிக்கு.

எப்படியோ தன் மாட்டுப்பெண் பங்கஜத்திற்கு ஒரு குழந்தை பிறக்கனும். அது மகன் துரையால் பிறக்குதோ அல்லது இன்னொரு ஆணூடன் பங்கஜம் உறவு கொண்டு பிறக்கிறதோ. அதைப் பத்தி எல்லாம் ரங்கமணிக்கு கவலை இல்லை. வீட்டில் ஒரு குழந்தை தவழனும். இந்த அளவுக்கு மனநோய் வந்துவிடும்.

வீட்டிற்கு சமையல், பூஜை எல்லாம் செய்ய "காமேஸ்வரன்"ணு ஒரு பிரம்மச்சாரியை அழைத்து வருவாள். சமையல் பூஜை எல்லாம் ஒரு காரணம். ஊருக்காக. அவளுக்கு இன்னொரு எண்ணம் உண்டு. அது என்னவென்றால் பங்கஜமும், காமேசுவரனும் உறவு கொண்டு பங்கஜம் ஒரு குழந்தையை பெற வாய்ப்பு உண்டு என்கிற எண்ணம். ரங்கமணி, காமேசுவரனை தேர்ந்தெடுக்கக் காரணம்? அவளுக்கே அவன் மேல் ஓர் ஈர்ப்பு உண்டாகும். பங்கஜத்திற்கு அதே ஈர்ப்பு வரத்தான் செய்யும் என்றெல்லாம் ஒரு கால்க்குலேசன்.

பங்கஜமும், காமேஸ்வரனும் ஒருவருக்கு ஒருவர் ஈர்ப்பு இருந்தாலும். அதுபோல் தவறான உறவு கொள்ள மாட்டார்கள். ரங்கமணி தன்னால் முடிந்த அளவு பங்கஜத்தை அவனிடம் தள்ளிப் பார்ப்பாள். ஒருமுறை பங்கஜத்திடம் ரங்கமணி சொல்லுவாள்.  நீ இப்படி ஏனோ தானோனு பட்டும் படாமலும் இருந்தால், எனக்கு இன்னும் வயசாகவில்லை, நானே காமேஸ்வரனிடம்  உறவு கொண்டு குழந்தை பெறத் தயங்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லி மிரட்டிப் பார்ப்பாள். பங்கஜம் ஃபிசிக்கல்லாக காமேஸ்வரனுடன் உறவு கொள்ள மாட்டாள். ஆனால் ரங்கமணியின் ஐடியா ஒர்க் அவ்ட் ஆகிவிடும். அவள் காமேஸ்வரனைப் பார்த்து ஃபேண்டசைஸ் செய்வாள். அது ஒரு "கேட்டலிஸ்ட்" போல அவள் கர்ப்பம் தரிக்க உதவும்.

ஒரு நாள் அப்படி காமம் தலைக்கேறி இருக்கும்போது, காமேஸ்வரன் சட்டையில்லாமல் பூஜை செய்வதைப் பார்த்து, அவனை நினைத்து உணர்வுகள் காம மேலோங்கி நிற்கும் பங்கஜத்திற்கு. அன்றிரவு கணவன் துரையுடன் உறவு கொள்ளுவாள். ஒரு நாளுமில்லாத திருநாளாக எட்டு (not sure about the # but it is multiple.. unusual orgasms she will have) முறை ஆர்கசம் அடைவாள், பங்கஜம். அதனால்தானோ என்னவோ கர்ப்பம் தரித்து விடுவாள், பங்கஜம்.

ரங்கமணிக்கு வெற்றி.

இதுதான் கதை. இந்தக் கதையை சும்மா பூசி மொழுகி விமர்சனம் எழுதுவதெல்லாம் வேடம்.

ஜானகிராமன் யார் என்று நான் உணர்ந்தது இந்த கதையின் வாயிலாகத்தான்.

மனநோயாளி ரங்கமணி இல்லை. சாட்சாத் ஜானகிராமன்தான் னு கூட சொல்லல்லாம். தப்பே இல்லை.

தொடரும்

Sunday, June 2, 2019

ஜானகிராமன் கதைகள் விமர்சனம்-1

அம்மா வந்தாள்!  நாயகி பெயர் அலங்காரம். கவனமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு பெயர். லக்‌ஷ்மி, சரஸ்வதி, கமலா என்கிற பெயரெல்லாம் விட்டு விட்டு அலங்காரம். அப்படினா லக்‌ஷ்மி, சரசுவதினு வச்சா காமம் அல்லது காதல்ல விழமாட்டாங்கனு சொல்ல வரவில்லை. ஜானகி ராமன் ஒரு ஆச்சாரமான பார்ப்பனர்தானே? அதான் கடவுள் பெயரெல்லாம் கவனமாக விட்டுவிட்டு இந்த "அலங்காரத்தை" தேர்ந்தெடுத்து தேவடியாள் னு கணவன் தண்டபாணி மூலமாக வர்ணீப்பார்.

கதை? ஒண்ணும் பெருசா இல்லை. அலங்காரத்திற்கு ஒரு எக்ஸ்ட்ரா மாரிட்டல் அஃபயர்.. சிவசு னு ஒரு பணக்கார ஆள் இடம்.  இது கணவன் தண்டபாணிக்கும் தெரியும். ஒண்ணும் செய்ய முடியவில்லை. விட்டு விட்டார் "என்னனு போ" னு. பெருந்தன்மை எல்லாம் இல்லை. வேற வழியில்லை! ஒரு வேளை தன்னால் அவள் தேவைகள் (காமம், பணம், அவள் வைக்கும் ஒப்பாரி களை எல்லாம், ஹூம் ஹூம்னு சகித்துக்கொண்டு கேட்பது போன்ற) அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியவில்லையோ? என்கிற கில்ட்டி உணர்வாக்கூட இருக்கலாம்.

ஆமா, ஆம்பளைங்களால் பெண்களை என்ன செய்ய முடியும்? ஒரு பெண் இன்னொருவரை விரும்பினாள்? அதுவும் மனைவி? காதலோ இல்லை காமமோ? இல்லை பணமோ? காரணம் எதுவாக இருந்தாலும்? உண்மை என்னனா ஒண்ணும் செய்ய முடியாது. சும்மா "பெரிய மனுஷன்" போல மூடிக்கிட்டுத்தான் இருக்கனும். ஒரு பெண் தான் எளிதாக ஒரு ஆணை அவமானப் படுத்த முடியும். நீ ஒரு உதவாக்கற னு செகிட்டில் அறைவதுபோல் சொல்ல முடியும். அதனால்தான் காலங்காலமாக பெண்களை கவனமாக அடக்கி வாழ்றாங்க இந்த "வீரர்கள்"? இல்லையா?

அலங்காரத்தின் இந்த அஃபயர் சொந்த பந்தமெல்லாம் அறிந்து கடைசியில் பெற்ற மகள் மகன்களுக்கும் தெரிய வருகிறது.  அவர்களும் எதுவும் செய்ய முடியவில்லை. யார் மனதையும் யாரும் கட்டுப்படுத்த முடியாதுனு ஒரு சின்ன உண்மையை புரிந்து கொள்ளனும். பொதுவாக அஃபயரில் இன்வால்வ் ஆகி யிருக்கவர்களூக்கு அவர்கள் செய்யும் தவறை உணர முடியாது. இதை பலர் புரிந்து கொள்வதில்லை.

அலங்காரத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை. தன் மனதை கட்டுப் படுத்த முடியவில்லை. பழகிப்போயிடுச்சா என்னனு தெரியல. செய்த தவறத் திரும்பத் திரும்ப செய்கிறாள். தொடர்கிறாள். அந்த உறவிலிருந்து வெளியே வரமுடியாத பரிதாபம். காலை சுத்துன பாம்பு போல அவ்வஉறவுனு சப்பை கட்டுகிறாள். ஆனால் அவளூக்காக அழத்தான் யாருமில்லை!

நாம் பார்க்கிறோம் இல்லையா? சிகரட் குடிப்பவர்கள், அல்கஹால் குடிக்கிறவங்க, போர்னோ கிராஃபி பார்க்கிறவர்கள் எல்லாம் அடிக்டாவதை? ஏன் சாப்பாட்டை கட்டுப் படுத்த முடியாமல் இருப்பவர்கள் கூட இருக்காங்க! செய்றது தப்புனு தெரியும்,  இருந்தாலும் விடமுடியாது. அதேபோல்தான் அலங்காரம் நிலைமை. அவளை மட்டும் தனிமைப் படுத்த முயல வேணாம். புரிந்து கொள்ளவும்.

தப்பை சரி செய்ய முடியவில்லை. தொடர்ந்து செய்துவிட்டு காசிக்குப் போயி முழுகி சரி செய்து விடலாம்னு காசி நோக்கி பயணம் செய்து எல்லாத்தையும் கழுவி விடலாம் என்று தன் மனதையும், உடலையும், தேவைகளையும் கட்டுப் படுத்த முடியாமல் தொடர்கிறாள்..இப்படித்தானே மனிதன் வாழ்கிறான்? செய்றதை எல்லாம் செஞ்சுட்டு பகவானிடம் மன்னிப்பு கேக்கிறது- ரகசியமாக. இல்லைனா பரிகாரம்னு எதையாவது செய்றது.

இவ்வளவுதான் "அம்மா வந்தாள்" கதை.

இதுபோல் பெண்கள் நூற்றில் அல்லது ஆயிரத்தில் ஒருவர் இருக்கத்தான் செய்றாங்க. பொதுவாக பெண்கள், காதல் வாழ்க்கையை எளிதில் தூக்கி எறிந்துவிட்டு கணவனிடம் ஐக்கியமாகி விடுவார்கள். அவர்களுக்கு அந்த ஸ்கில்ஸ் ரொம்பவே அதிகம். அலங்காரத்தால் அது முடியவில்லை. இயலாமை . ஊர் உலகம்போல் நாம் இல்லை என்றால் பிரச்சினைதான்.

ஜானகிராமன் ஒரு ஆம்பளைதானே? ஆதனால்தானோ என்னவோ அலங்காரத்தை ஒரு மாதிரி புரியாத புதிராகவே முடித்து விடுவார். அவர் உருவாக்கிய கேரக்டரை அவரே புரிந்து கொள்ள முடியாதது போல்.

சரி, என்னதான் சொல்ல வருகிறார்?

அலங்காரத்தைப் போல் பெண்கள் இருந்தால் எல்லோருக்கும் அவமானம். அதுபோல் இருக்காதே என்றா?

இல்லைனா, நீயும் அலங்காரம்போல்தான் வாழ்றியா? இருக்கவே இருக்கு காசி. கவலையே படாமல் தொடரு. கடைசியில் ஆடி அடங்கிய பிறகு காசில போயி கழுவி விடலாம் என்றா?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

நீ மட்டுமல்ல, நான்கூட ஒண்ணும் கிழிக்க முடியாது! னு தன் இயலாமையை ஒத்துக் கொள்கிறார் ஜானகி ராமன்னு கூட சொல்லலாம்.


 தொடரும்.