Sunday, August 30, 2009

நீங்க ஒரு சரியான மக்கு! -கடலை கார்னர் (15)

“இந்தாங்க காஃபி கண்ணன்”

“தேங்க்ஸ், பிருந்தா”

“என் காஃபி எப்படி இருக்கு, கண்ணன்?”

“உன்னை மாதிரியே ரொம்ப டேஸ்ட்டா இருக்கு”

“பொய்! என்னை எப்போ நீங்க டேஸ்ட் பண்ணினீங்க, கண்ணன்?”

“எல்லாம் ஒரு யூகம்தான்!”

“நான் இனிப்பா தித்திப்பா இருக்கேனா உங்க யூகத்தின்படி?”

“ஏய்! இப்போத்தான் நீ பழைய பிருந்தாவாகி இருக்க தெரியுமா?”

“நீங்க வந்ததும் மூடு பெட்டரானது என்னவோ உண்மைதான்”

“ஐ ஆம் நாட் கோயிங் டு ஆஸ்க் வாட் பாதர்ட் யு, பிருந்தா”

“ஓ கே, தேங்க்ஸ்”

“ஏய் உன் ஃபோன் மறுபடியும் பாடுது!”

“இது அம்மா! ஒரு நிமிஷம் கண்ணன்”

*******************************************

“என்னம்மா?”

“----”

“இப்போ ஜுரம் எல்லாம் விட்டுடுத்தும்மா. சும்மா என்னையே நெனச்சு கவலைப்படாதே! நான் நன்னா ஷேமமா இருக்கேன்”

“----”

“இங்கே ஒரு ஃப்ரெண்டு என்னை நல்லா பார்த்துக்கிட்டார்”

“---”

“ஆமா. உன்னைவிட ரெண்டு மடங்கு பார்த்துக்கிட்டார்”

“----”

“ஆமா, அதனாலென்ன? பயப்படாதே! அவர் ரொம்ப நல்ல டைப்”

“----”

“நீ சொன்னதா அவர்ட்ட சொல்றேன். சரி வச்சிடவா?”

*********************************************

“கண்ணன்! அம்மா உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லச்சொன்னாங்க”

“எதுக்கு, பிருந்தா?”

“அவங்க செல்லமகளை அவளுக்கு ஃபீவர் அடிக்கும்போது ரொம்ப அக்கறையா, பொறுப்பா கவனிச்சுக்கிட்டதுக்குத்தான்”

“வேறென்ன சொன்னாங்க?”

“உங்ககிட்ட கொஞ்சம் கவனமா இருக்கவாம்”

“ஏன்?”

“தெரியலை, நீங்க என்னை ஏதாவது செஞ்சிடுவீங்கனு பயம் போல, கண்ணன்” அவள் சிரித்தாள்.

“ஏதாவதுனா? என்ன செஞ்சிடுவேனாம்?”

“என்னை செட்யூஸ் பண்ணி, என்னை மயக்கி ஏதாவது செஞ்சிருவீங்களோனு பயம் போல. நீங்க ரொம்ப மோசமான ஆளா, கண்ணன்?”

“தன் மகள் ஒரு பேரழகி! அவளைப்பார்த்து நான் மயங்கி ஏதாவது செய்து விடுவேன்னு பயம் போல, ஆண்ட்டிக்கு?”

“ஏன் நான் அழகா இல்லையா, கண்ணன்?”

“நீ கொள்ளை அழகுடா”

“அப்போ அம்மா பயந்தது சரிதான்”

“ஏன்?”

“நீங்க என்னை மயக்கத்தான் செய்றீங்க. இப்படியெல்லாம் பேசினால் ஏதோ வயிற்றிலிருந்து பட்டர்ஃப்ளை பறக்கிற மாதிரி இருக்கு தெரியுமா?”

“நீதான கேட்ட?”

“அதுக்காக?”

“எனக்கு தெரிந்ததை சொன்னேன்”

“அதை இப்படியா சொல்லுவாங்க?”

“எப்படி சொன்னேன்?”

“யு டோண்ட் நோ ஹவ் யு மேக் மி ஃபீல், கண்ணன்”

“ஹவ்?”

“என் மேலே ரொம்ப அன்பா இருக்காதீங்க, ப்ளீஸ்?”

“சரி உன்னை கண்டுக்காமல் ஒதுங்கிப்போயிடவா?”

“அதெல்லாம் உங்களால முடியாது”

“எப்படி சொல்ற?”

“உங்களால முடியாது!”

“சரி ட்ரைப் பண்ணியாவது பார்க்கிறேன்”

“ஏன் நான் போர் அடிச்சுட்டேனா உங்களுக்கு, கண்ணன்?”

“சே சே அப்படியெல்லாம் இல்லடா”

“கண்ணன்!”

“என்ன?”

“நீங்க வீட்டுக்குப் போகனுமா?”

“இது என்ன கேள்வி?”

“இல்ல. இங்கேயே இன்னைக்கு தங்கிட்டு போங்களேன்?”

“நாளைக்கு வேலைக்குப் போகனும்”

“ஏன் இங்கே இருந்தே போங்களேன்?”

“உன் சல்வார் காமிஸ் போட்டுக்கிட்டா?”

“ஓ நீங்க ட்ரெஸ் எடுத்து வரலையோ?”

“உன் மனசு சரியில்லைனு அதை சரி பண்ணத்தான் வந்தேன்”

“ஆமா இப்போ இன்னொரு எக்ஸ்ட்ரீம்க்கு கொண்டு போய் விட்டுட்டுப் போறீங்க. இட் வாஸ் பெட்டர் தான் ஹவ் இட் இஸ் நவ். நீங்க ஒண்ணும் பெருசா உதவலை”

“அட் லீஸ்ட் இப்போ அழுமூஞ்சா இல்லாமல் இருக்க இல்ல?”

“இதுபோல் இனம் புரியாமல் சந்தோஷமா இருக்கிறதைவிட அழுவது பெட்டர்”

“என்ன ஆச்சு உனக்கு? என்னதான் சொல்ல வர்ற இப்போ, பிருந்தா?”

“நீங்க ஒரு சரியான மக்கு, கண்ணன்!”

“அறிவை வளர்த்துக்கத்தான் உன்ன மாதிரி அறிவாளியோட வலுக்கட்டாயமாக பழகுறேன்”

“என்னையும் மக்காக்கிடாதீங்க!”

“ஏய் இங்கே வா!”

"வந்துட்டேன்"

"இன்னும் பக்கத்தில்"

“இத்தனை பக்கத்திலேயா?”

“சரி, கண்ணை மூடிக்கோ”

“ம்ம்”

-தொடரும்

Friday, August 28, 2009

உங்க கேர்ள் ஃப்ரண்டுதான்! - கடலை கார்னர் (14)

“பிருந்தா! என்ன ஒரு மாதிரியா இருக்க?”

“ஒண்ணும் இல்ல கண்ணன்”

“காலையில் நல்லாத்தானே இருந்த?”

“ஒண்ணும் இல்லைனு சொல்றேன் இல்லை, கண்ணன்?”

“சரி ஒரு சின்ன ஸ்மைல் பண்ணு!”

“சும்மா இருங்க கண்ணன்”

“என்ன ஆச்சு சொல்லு!”

“எனக்கு தலை வலிக்குது”

“சரி, காஃபியைக் குடி. தலைவலி சரியாயிடும்!”

பேசாமல் காஃபியை குடித்தாள் பிருந்தா.

“சரி, நான் போகனும் அப்புறம் பார்ப்போம், கண்ணன்”

********************************************

அன்று ஈவனிங்...

“ஹேய்”

“சொல்லுங்க கண்ணன். என்ன திடீர்னு ஃபோன்?”

“ஒண்ணும் இல்லை சும்மாதான்”

“சும்மாவா?'

“இப்போ மூடு எப்படி இருக்கு?”

“பரவாயில்லை”

“நான் உன் வீட்டுக்கு வரவா?”

“இப்போவா?. சரி வாங்க!”

******************************************

ஒரு ஒரு மணி நேரம் சென்றதும்..

“வாங்க கண்ணன்”

“என்னடா ஆச்சு? எதுவும் வொர்க்ல பிரச்சினையா? இல்ல இந்தியாவிலிருந்து எதுவும் கெட்ட செய்தியா?”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, கண்ணன்”

“இங்கே வா! என் பக்கத்தில் வந்து உட்காரு, ப்ளீஸ்”

அவன் அருகில் வந்து அமர்ந்தாள் பிருந்தா. அவள் கையை எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டான் கண்ணன்.

“ஏன் உன் உதடுலாம் ட்ரை ஆகி இருக்கு. லிப் க்ளாஸ் போடலயா?”

“காய்ச்சல் அடிச்சதாலயா இருக்கும்”

“இங்கே பாரு! நீ இப்படி இருந்தால் கஷ்டமா இருக்கு, பிருந்தா”

“ஏன்?”

“தெரியலை. ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கு”

“ஏன் உங்களுக்கு கஷ்டமா இருக்கு?”

“எப்போவும் சிரிச்சுப் பேசுற நீ திடீர்னு இப்படி அமைதியா இருந்தால் கஷ்டமா இருக்காதா?”

“அதுக்கு நான் என்ன செய்யனும்?”

“ஒரு வேளை பி எம் எஸ் ஸா?”

“அதெல்லாம் இல்லை, கண்ணன்”

“எனக்கு ஏதாவது தர்றியா?”

“எதாவதுனா? என்ன வேணும்?”

“காஃபிதான், வேறென்ன கொடுப்ப?”

“வேறென்ன வேணும்?”

“கொஞ்சம் சிரியேன்”

“சரி, காஃபி போட்டுட்டு வரவா?” அவள் புன்னகை புரிந்தாள்.

“சரி”

“கையை விடுங்க! அப்போத்தானே போக முடியும்?”

“சரி போய் காஃபி போட்டுட்டு வா!”

“என்ன? என் பின்னாலயே நீங்களும் வர்றீங்க?”

“இல்ல..பின்னால எத்தனை அழகா நீ இருக்கனு பார்க்கத்தான்..!'

“என்ன என்ன?”

“ஒண்ணும் இல்லை. கிச்சனுக்குத்தானே வர்ரேன்? நீ பாத் ரூமுக்கு போகும்போதா வரேன்?”

“அப்படி வேற ஒரு ஆசையா, உங்களுக்கு?”

“ஏன் அது ரொம்பத் தப்பா, பிருந்தா?”

“கேள்வியைப்பாரு! உங்களுக்கு எதுதான் தப்பில்லை? கொஞ்சம் பேசாமல் இருக்கீங்களா?”

“பேசலைனாத்தான் ஆபத்து”

“அதென்ன பேசலைனா ஆபத்து?”

“பேசினால் வேற எதையும் கண் பார்க்காது. பார்த்தாலும் ஒண்ணும் தோனாது. பேசாமல் பக்கத்தில் இருந்தால் நீ அசையும்போது உன்னை அங்கே இங்க பார்க்க தோனும். நீ ரொம்ப ஒரு மாதிரியா கவர்ச்சியா இருக்கியா? அதில்தான் ஆபத்து”

“அங்கே இங்கேனா?”

“சரி பேசினால் என்ன இப்போ?”

“சும்மா தொனத் தொனனு பேசினால், என் கான்சண்ட்ரேசன் போயிடும். அப்புறம் காஃபி நல்லா வராது!”

“எப்படி இதெல்லாம், பிருந்தா?”

“எப்படி எதெல்லாம்?”

“உன் காஃபி டேஸ்டா இல்லைனாலும் அதுவும் என் தப்புதானா?”

“எல்லாமே உங்க தப்புதான், கண்ணன்”

“சரி நான் லிவிங் ரூம்லயே இருக்கேன்”

“பரவாயில்லை இங்கேயே இருங்க”

“ஏன் நான் பக்கத்தில் இருந்தால் நல்லா இருக்கா?”

“உங்களுக்கு என்ன ஆச்சு?”

ஏய் உன் செல்ஃபோன் கத்துது!

“இருங்க யாருனு பார்க்கிறேன்.. ஓ இவளா! நான் பிக் அப் பண்ணல!”

“யார் அது?”

“உங்க கேர்ள் ஃப்ரெண்டுதான்”

“யாருனு சொல்லு”

“ஸ்டேஸி”

“அவ என் கேர்ள் ஃப்ரெண்டா?”

“ஆமா, அவளுக்கு பெட்டிக்கோட் அளவுகூட சரியா சொன்னீங்களாமே?”

“உன்னை வம்பு பண்ண அவ ஏதாவது ரீல் விடுவா. நம்பாதே!”

“யார் ரீல் விடுறா? உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா?”

“அங்கே அடுப்பிலே பால் பொங்குது பாரு!”

“உடனே ஏன் பேச்சை மாத்துறீங்க, இப்போ?”

“இப்போ நீதான் என் கேர்ள் ஃப்ரெண்டு மாதிரி ரொம்ப உரிமையா பேசுற?”

“மெளனம்”

“ஏய் என்ன கோபமா?”

“இல்லையே. இதுக்கெல்லாம் எனக்குக் கோபம் வராது. சரி லிவிங் ரூம் போங்க நான் சுகர் போட்டு எடுத்துண்டு வரேன்”

-தொடரும்

Thursday, August 27, 2009

எந்திரன் ரஜினியின் கடைசிப் படமா?


படையப்பாவுடன் ரஜினி நடிப்பதை நிறுத்திவிடுவது போல ரஜினி-25 கொண்டாடினார். ஆனால், ரெண்டாவது இன்னிங்ஸ் "பாபா"வில் ஆரம்பிச்சு, பிறகு சந்திரமுகி, சிவாஜி, குசேலன் னு போய் கடைசியிலே எந்திரனில் வந்து நிக்குது இப்போ.

சிவாஜி எம்ஜிஆரை விடக்கூட ரஜினி ஒரு படி மேலேதான் நிற்கிறார். ஏன்னா சிவாஜி, எம் ஜி ஆரின் கடைசிப்படங்கள் இவ்வளவு பிரமாண்டமாக எடுக்கப்படவில்லை! ஏராளமான பொருட்செலவில் எடுக்கப்பட்டு சிவாஜிபோல் பெரியவெற்றிவாகை சூடவில்லை!

இந்த வயதில், ரஜினி, சங்கர் போல ஒரு இயக்குனருடன் இணைந்து அவரை மதித்து அவர் சொல்வதுபோல கேட்டு நடிப்பதென்னவோ ரஜினியின் ப்ரஃபஸனலினத்தை காட்டுகிறது.

ரஜினியின் எந்திரன் அவர் கடைசிப்படமா இருக்குமா?

ஆர் யு இன் லவ் வித் ஹிம்? -கடலை கார்னர் (13)

"So what's up, Stacy?"

"How are you feeling now, Brindha?"

"I think I am fully recovered"

"OK, I have to return some calls. I will let you girls gossip freely!"

"As if you dont gossip Kannan? You are the worst of all!"

"OK, OK, OK, I am the worst of everything, Brindha. See you later, Stacy"

"OK Kannan!"

"Hey! It was lot of fun past friday, shopping with Kannan in Devon street"

"Just shopping only, right?"

"Yeah, we had dinner too in an Indian restaurant"

"You did! Where else did you guys go?"

"Just bought a Saree and blouse cloth and a petticoat too. The blouse is being stitched now. Will you help me, Brindha, when I want to wear the Saree? "

"Of course. Why did not you ask Kannan to help you with that too?"

"I asked him but he says he does not know how. LOL! But, he said he can help me with other stuff"

"Other stuff? Like what?"

"He said he can help me with stuff like how to wear my underwears and petticoat but just can't help only with saree"

"He really told that to you THAT?"

"LOL. It was just a joke, Brindha"

"I dont believe you!"

"Then DONT"

"I dont see why should not you ask him to help you wearing your petticoat?"

"OK, if you insist I will ask him to help me with that. But only you can help me with Saree"

"OK deal!"

"Hey! when I was buying the petticoat, they made the measurements in my front. From my hip to toes. When they were going to get that size, Kannan suggested me to get 2 inches longer than what they measured. I asked him why. He murmurmered "the reason" in my ear and that cracked me up, I was laughing out loudly, the shopkeepers were stairing at us"

"What did he say?"

"He said your length in the back would be longer and so you should go for 2 inches more. LOL"

"hmm that.."

"Hey! Prasad asked me out?"

"Really?!"

"Yeah, but I said, No"

"WHY?"

"He is such a moron. You know what he did?"

"What?"

"He was struggling in one of the projects. He came to Kannan for a discussion as he was stuck. Kannan broguht him over to me and asked me to give him a correct reference to resolve his problem since I have done similar thing. I did give him. Using that procedure he tried, it worked all great. But in the group meeting he did not even say a word about me or Kannan who guided him! He talks as if he himself resolved it. What a bone-head he is!"

"He is smart"

"Nope he is not. He is a moron!"

"Why?"

"If he is smart, he would have acknowledged us properly. He would lose nothing by doing that. We all learn from each other. Now he gets all the "dick-head certificates" because of his "filthy ethics"!"

"Is that why Kannan hates him?"

"Nope, there must be much more for his hatred"

"May be he does not like him flirting with you, Stacy"

"You think so? I like this better, Brindha! LOL"

"Why did you take Kannan to your apartment, anyway?"

"What! You are double-checking everything he tokd you or what?"

"Tell me why"

"You know why. LOL!"

"I dont know"

"Why would a girl do such a thing?"

"Why would she?"

"Because I trust him. He is a gentleman. Hey, it is funny, he claims that he is still a virgin! LOL"

"He bragged you about that too?"

"Why are you getting so jealous and nosey now? I just made up lot of stuff just to tease you"

"Which one you made up?"

"Are you in love with him, Brindha?"

"oh NO!"

-to be continued

Wednesday, August 26, 2009

படிக்காதமேதை- விமர்சனம்


சிவாஜி கணேசனை ஏன் நடிப்பில் திலகம்னு சொல்றாங்கனு தெரியுனும்னா நீங்க இந்தப் படம் பார்க்கனும். இவர் நடித்துள்ள "ரங்கன்" என்கிற இந்தக்கேரக்டர் உண்மையாகவே நம் வாழ்வில் சந்திக்கும் ஒரு கேரக்டர்தான். வெகுளியாகவும். நல்லவனாகவும், அதே சமயத்தில் செய்வதெல்லாம் காமெடியாகவும் இருக்கும் ஒரு கேரக்டர். சிவாஜி, அந்த கேரக்டராகவே ஆகிவிடுவார் . இந்தப்படத்தில் அவர் நடிப்பது போலவே தோனாது. அப்படியே ஒரு வெகுளி ரங்கனை பார்ப்பதுபோல இருக்கும்.

ரங்காராவும், கண்ணாம்பாவும் அன்போடும் பாசத்தோடும், உரிமையோடும் ரங்கனை எடுத்து வளர்க்கும் மாமா, அத்தையாக நடித்துள்ளனர்.

ரங்காராவ் நடிப்பில் சிவாஜியையும் ஒரு படி மிஞ்சி இருப்பார் என்றுகூட சொல்லலாம்.

சவுகார் ஜானகி சிவாஜியின் மனைவியாக அழகா, கச்சிதமாக, அருமையாக நடித்து இருப்பார்.

முத்துராமன், அசோகன், டி ஆர் ராமச்சந்திரன், டி பி முத்துலட்சுமி, அப்புறம் நம்ம ஜெ ஜெயின் அம்மா சந்தியா, குட்டி பத்மினி இவர்கள் எல்லாம் சின்ன சின்ன ரோல்ல நடிச்சு இருக்காங்க

இயக்கம்: பீம்சிங்

இசை: கே வி மஹாதேவன்

பாடல்கள் எழுதியது: கண்ணதாசன் மற்றும் பாரதியார்

பாடியது: டி எம் எஸ் (சிவாஜிக்கு)

* உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது

* படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

* சீவி முடிச்சு சிங்காரிச்சு செவந்த நெத்தியில் பொட்டும் வச்சு

* பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

* ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா....

இந்தப்பாட்டில் "நன்றிகெட்ட மகனைவிட நாய்கள் மேலடா" னு ஒரு வரி வரும்!!!

* எங்கிருந்தோ வந்தான் இடை சாதி என்றான்

போன்ற நல்ல கருத்துள்ள பாடல்கள் உள்ள படம் இது.

படம் ஆரம்பமும் சரி, கதையோட்டமும் சரி, முடிவும் சரி ரொம்ப நல்லா இருக்கும். ஜாலியா ஆரம்பிச்சு, சீரியஸா ஆகி கடைசியில் சுமூகமாக முடியும். நிம்மதியா தியேட்டரைவிட்டு வெளியே வரலாம்.

விக்ரமின் கந்தசாமியும் ஃப்ளாப்பா!!


அந்நியனுக்கு அப்புறம் விக்ரம் இன்னும் வெற்றியை தேடி அலைகிறார். அந்நியனுக்கு அப்புறம் வந்த "மஜா" படம் காமெடி, பாட்டெல்லாம் ஓரளவுக்கு நல்லாயிருந்தும் கமர்ஷியல்லா ஃப்ளாப் ஆனது.

அதுக்கப்புறம், ஒரு ரெண்டு வருசமா இழு இழுனு இழுத்து கடைசியில் திரிஷாவுடன் வெளிய வந்த அந்த பீமா, என்ன ஆச்சு? அதுவும் ஃப்ளாப் ஆச்சு. அதோட அந்த லிங்குசாமிக்கும் அழிவுகாலம் ஆரம்பிச்சுடுச்சு

இப்போ நம்ம கந்தசாமியும் ஃப்ளாப்! அதென்னவோ தெரியலை சிவாஜிக்கப்புறம் ஸ்ரேயா யாரோட நடிச்சாலும் அந்தப் படம் ஃப்ளாப் ஆயிடுது.

மணிரதனம் படத்தில் நடிக்கிறார், ஏதோ ராவணனோ என்னவோனு சொல்றீங்களா? மணிரத்னம் தமிழ்ல ஹிட் கொடுத்து ரொம்ப நாளாச்சு. மணிரத்னம் படமும் ஃப்ளாப் ஆக வாய்ப்பில்லைனு சொல்ல முடியாது.

விக்ரம்க்கு நெனைப்பு அதிகமாகி பெரிய ஹாலிவுட் ஹீரோனு தன்னை நினைத்துக்கொள்கிறாரானு என்னனு தெரிய்லை.

இப்போ ரெண்டு வருசத்துக்கு ஒரு படம் வருது அதுவும் தவறாமல் ஃப்ளாப் ஆயிடுது! இப்படிப்போனா எங்கே தேற?

நம்ம விமர்சகர்கள் ஒரு சில ந்டிகர்களை பெரிய ஆளுனு ஏத்திவிட்டே கவிழ்த்தி, மண்ணைக்கவ்வ வைத்ததுல விக்ரம் ரெண்டாவது ஆள்! முதல் ஆளு யாருனு நான் சொல்லபோவதில்லை!

விக்ரம் அவர்களே!

* கொஞ்சம் இளமையா இருக்கும்போதுதான் ஹீரோவாக எல்லாம் நடிக்க முடியும். வயசாயிடுச்சுனா, வில்லனா நடிக்கிறயானு உங்களைக் கேப்பார்கள்!

* உங்களை ஒரு சாதாரண நடிகன் என்று விளங்கிக்கொண்டு, புரிந்துகொண்டு, கொஞ்சம் கீழே இறங்கி வாங்க!

* ஒரு 40, 50 லட்சமோ, அல்லது கொடுக்கிறதை வாங்கிகிட்டு ஒரு வருசத்துக்கு 2 படமாவது வெளியே விடவும்!

அதை விட்டுவிட்டு நான் பெரிய இவன், தமிழ் சினிமாவைக் கிழிக்கப் போறேன் னு இப்படியே போச்சுனா, சீக்கிரம் உங்களுக்கு வில்லனாக நடிக்கத்தான் வாய்ப்பு கிடைக்கும்.

இப்போ எல்லாம் நம்ம ஸ்டார்கள் மின்னுவதுக்கு ஆரம்பிக்க முன்பே, மங்க ஆரம்பிச்சுறாங்க!

விஷால், விக்ரம் இப்படியே போகுது இந்த மின்னாத ஸ்டார்கள்!

ஆமா, நம்ம சத்யராஜின் அடுத்த படம் என்ன?

Tuesday, August 25, 2009

யு டோண்ட் நோ ஹிந்தி? -கடலை கார்னர் (12)

"ஹாய் பிருந்தா! ஹவ் டு யு ஃபீல் நவ்?"

"மச் பெட்டெர், கண்ணன்! டிட் யு மிஸ் மி?"

"ஆமா, ரொம்ப மிஸ் பண்ணினேன்"

"நெஜம்மா?"

"உன் தலையில் அடிக்கவா? இல்லைனா உன் ப்ரஸியஸ்.."

"வர வர உங்களுக்கு ஒரு வரம்பு தெரியலை, கண்ணன். என்னிடம் அடி வாங்கப் போறீங்க"

"என்ன வரம்பு மீறி என்ன சொன்னேன்?"

"அதை நான் சொல்லனுமா?"

"சொன்னால்த்தானே என்னை திருத்திக்க முடியும்?"

"நீங்க திருந்துற கேஸா என்ன?"

"அவ்வளவு மோசமா?"

"ஆமா. அழாதீங்க! உங்களுக்கு வர்றவதான் பாவம்!"

"உனக்கு வர்றவன் ஏழேழு ஜென்மத்துக்கும் புண்ணியம் செஞ்சவன்னு நெனப்பா?"

"சரி, சரி, அந்த டெவான் ஸ்ட்ரீட் ஷாப்பிங்லாம் எப்படிப் போச்சு?"

"அதை ஏன் கேக்கிற? அங்கே போய் ஒரு ஜவுளிக்கடைக்காரரோட பெரிய சண்டை!"

"என்ன ஆச்சு? இது உங்க ஊர் இல்லை கண்ணன்! ஜாக்கிரதை"

"ஒரு கடையில் போய் சேலை பார்த்தோம். வெள்ளைக்காரியைப் பாத்ததும் எல்லாம் யானை வெலை, குதிரை வெலையா சொல்றான். உடனே அங்கே வாங்கிறதில்லைனு முடிவு செஞ்சாச்சு. இடத்தை காலி பண்ணலாம்னு பார்த்தா அங்கே வேலை பார்க்கிற ஒரு அம்மா விடமாட்டேன்கிது. அதை எடு, இதை எடுனு போட்டு கொல்ல ஆரம்பிச்சிருச்சு. ஒண்ண வாங்கிட்டுத்தான் போகனும்ங்கிற மாதிரி பேசுது"

"அப்புறம்?"

"நீங்க போய் இன்னொரு கஸ்டமரைப்பாருங்க நாங்க செலக்ட் பண்ணிட்டு வருகிறோம்னு பொலைட்டா இங்லிஷ்ல சொன்னேன்"

"ஐ ஹெல்ப் யு, யு நோ... யு டோண்ட் நோ ஹிந்தி?" னா அவள்.

"நோ, ஐ கேன் ஸ்பீக் இன் இங்லிஷ்! டு யு நோ தமிழ்? ஐ கேன் ஸ்பீக் இன் தமிழ் டூ" னு சொன்னேன் நான்.

"தமிலா?"னு முழிச்சா அவள்.

"யா தமிழ்" னு சிரிச்சேன்.

"தமில் நோ" என்றாள்.

"ஓ கே ப்ளீஸ் கோ வெயிட் தேர் வி வில் கெட் டு யு வென் வி ஆர் ரெடி" னு சொன்னேன்

"அவ போனாளா, கண்ணன்?"

"நல்லாப்போனா போ! சும்மா மறுபடியும் போட்டு உயிரை வாங்கினாள். நான் ஸ்டெய்ஸியை கூப்பிட்டு வெளியே வந்துட்டேன். அவ ஏதோ ஹிந்தில கத்தினா"

"அப்புறம்?"

"அப்புறம் இன்னொரு கடையில் போய் சும்மா ஒரு சாதாரண காட்டன் சாரி எடுத்துக்கொண்டு, அதுக்கு ப்ளவ்ஸ் அங்கேயே தைக்க கொடுத்துட்டு வந்தோம். அப்புறம் போய் இண்டியா பாலஸ்ல போய் சாப்பிட்டு திரும்பி வந்தோம்"

"சாப்பாடு நல்லா இருந்ததா?"

"ஸ்டெய்ஸிக்குப் "நான்" பிடிச்சது. அப்புறம் அவ அப்பார்ட்மெண்ட்க்கு போயி கொஞ்ச நேரம் இருந்துட்டு வீட்டுக்கு வந்தாச்சு"

"அவ அப்பார்ட்மெண்ட்க்கா? அங்கே எதுக்கு? அவ அப்பார்ட்மெண்ட்ல என்ன செய்தீங்க? ப்ளவ்ஸ் போட்டு பார்த்தாளா?"

"ஆமா, அவளுக்கு நாந்தான் ப்ளவ்ஸ் மாட்டிவிட்டு சேலை கட்டி விட்டேன். நீ வேற!"

"வேற என்ன செஞ்ச்சீங்க?"

"அம்மா தாயே! ப்ளவ்ஸ் இன்னும் தச்சுக் கொடுக்கலை. ஒரு மணி நேரம் ஆகும்னான். ஒரு மணி நேரம் சென்று போனால், இன்னும் தச்சு முடிக்கலை. நான் அடுத்த வாரம் போய் வாங்கிக்கிறேன் னு சொன்னா ஸ்டெய்ஸி. நீதான் போய் அவளுக்கு ஹெல்ப் பண்ணனும்!"

"அப்போ அவ அப்பார்ட்மெண்ட்க்கு எதுக்கு?"

"சும்மாதான். அவ ஏதோ எடுக்கனும்னு சொன்னாள். 5 நிமிடம் அவ சோஃபா உக்காந்து இருந்தேன், வந்துட்டா. உடனே வந்தாச்சு வீட்டுக்கு"

"நெஜம்மா?"

"சரியான மக்கு பிருந்தா நீ"

"ஏன்?'

"அவளை எனக்கு ரொம்ப எல்லாம் தெரியாது"

"இல்லை சும்மாதான் கேட்டேன். அவ அப்பார்ட்மெண்ட்க்கு எதுக்கு தேவையில்லாமல்னு"

"நீ அவகிட்டயே கேட்டுக்கோ! அவசரமா எதுவும் பாத்ரூம் போக வேண்டியது இருந்ததோ என்னவோ. சரி அடுத்த வாரம் நீதான் போய் அவளுக்கு ஹெல்ப் பண்ணனும். நீ அவளுக்கு பளவ்ஸ் மாட்டி விடும்போது அவளை எதுவும் செஞ்சிறாத!"

"நானா?!! அவளையா?"

"இந்தக்காலத்தில் யாரை நம்ப முடியுது? அவளும் பாய்ஃப்ரெண்ட் இல்லாமல் இருக்காள்"

"உங்களை என்ன பண்ணுறேன் பாருங்க! அவகிட்ட சொல்லுறேன், நீங்க சொன்னதை அப்படியே"

"ஷி வில் டேக் இட் ஈஸி. உன்னை மாதிரி அடிக்க வரமாட்டாள்"

"ஒரு நாளில் அத்தனை இண்ட்டிமேட் ஆயாச்சா அவளோட?'

"இண்ட்டிமேட் எல்லாம் இல்லை. நான் சும்மாதான் கேலிக்கு சொன்னேன்னு அவளுக்குப் புரியும்"

"ஆமா, அந்த ப்ரஸாத் கூட உங்களுக்கு என்ன பிரச்சினை?"

"He is a cheap bastard, a low-life"

"That much hatred!!"

"Yeah, let us leave those cheap people. It is not worth spending our time even in gossip!"

"OK, உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது?!"

"என்னைக் கேட்டா? உன் கடவுளைக் கேளு!"

"எந்தக் கடவுளை?"

"எந்தக் கடவுளை கேக்கலாம்னு ஒரு கடவுளைக்கேளு! அப்புறம் அடுத்த ஸ்டெப் போகலாம்!"

"கடவுளுக்கு என்னை பிடிக்கலையே"

"ஏன்?"

"ஏன் னா? நான் கண்ணன் ஃப்ரெண்டா இருப்பதால்தான்"

"ஐ லவ் வென் யு டால்க் லைக் திஸ், பிருந்தா!"

"ஹாய் பிருந்தா! ஹாய் கண்ணான்!"

"ஹாய் ஸ்டெய்ஸி"

-தொடரும்

Saturday, August 22, 2009

அடுத்தவீட்டுப்பெண்-விமர்சனம்தமிழ் சினிமாவில் காதல்ப்படங்கள் இன்றைய தேதிக்கு என்ன நிலைமையில் இருக்கு? வசந்த மாளிகை, ஒருதலை ராகம், வாழ்வே மாயம், முதல் மரியாதை என்று வந்து இன்னைக்கு அரை டவுசர் எஸ் ஜே சூரியாவும், சைக்கோ செல்வராகவனும், அல்லது அவங்க அப்பா மரைகழண்ட கஸ்தூரி ராஜாவும் கழிவுபட்ட படங்களை எடுத்துவிட்டு அதை காதல்ப் படங்கள்னு சொல்லிப்பிழைப்பு நடத்துற நிலைமைனு சொல்றீங்களா?!

இருந்தாலும் கல்லூரி, ஏப்ரல் மாதத்தில், உன்னை நினைத்து போன்றவை பரவாயில்லைதான்

சரி நம்ம இப்போ ஒரு 40 வருடங்கள் முன்னால போவோம். போய் அழகான வசீகரமான அடுத்த வீட்டுப்பெண்ணைக் கொஞ்சம் கவனிப்போம். சரியா?

ஐயோ ப்ளாக் & வைட் படம்லாம் எனக்குப் பிடிக்காதுங்கனா தயவுசெய்து இடத்தை காலி பண்ணுங்க சார்/மேடம்! உங்களுக்கு இல்லை இந்தப்பட விமர்சனம்!

இது 60 ஸ்ல வந்த ஒரு அழகான காதல் கலந்த காமடிப் படம். இன்றும் இதை ரசித்துப்பார்க்க முடியும் - என்னைப் போல ஒரு சிலரால் மட்டுமே.

அந்தக்காலத்தில் காதலை வலியுறுத்தி ஒரு படம் இவ்வளவு விரசம் இல்லாமல் எடுக்கவும் முடிஞ்சிருக்கு என்பது நம்ம ரொம்ப பெருமைப்படவேண்டிய விசயம்தான்.

இந்தப்படத்தில் தடுக்கி விழுந்தால் பாடல்கள்! எல்லாம் தேனா இருக்கும்! அஞ்சலிதேவியின் கணவர்தான் இசையமைப்பு, டைரக்ஷன், தயாரிப்பு எல்லாமே!


* 1. கன்னித்தமிழ் மணம் வீசுதடி காவியத்தென்றலுடன் பேசுதடி

* 2. பிரேமையின் ஜோதியினால்

* 3. சங்கம் இது! கற்றார் நிறைந்த சங்கம் இது

* 4. மலர்க்கொடி நானே மகிழ்ந்திடுவேனே கவிக்குயில் போலே இன்ப கானம்
பாடுவேனே

* 5. கையும் ஓடல காலும் ஓடல கண்ணே உன் ஆசையினாலே

* 6. மன்னவா வா வா மாசில்லா வா

* 7. வாடாத புஷ்பமே! வற்றாத செல்வமே! தறி நாடாவைப் போல் ஆடும் இதயத்திலே தினமும் உந்தன் தாபமே!

* 8. கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே! காதாலே கேட்டுக் கேட்டு செல்லாதே! காதல்
தெய்வீகராணி! போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனசைவிட்டுத் துள்ளாதே!

* 9. எனக்கு ராஜா நீயே

* 10. கண்களும் கவி பாடுதே! கண்ணே உன் கண்களும் கவி பாடுதே! (இது ஒரு போட்டிப்பாட்டு)

* மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே! (கடைசிப்பாட்டு)


சிரிப்பு நடிகர் டி ஆர் ராமச்சந்திரன் தான் ஹீரோ. ஆனால் உண்மையில் இதில் ஹீரோயின் அஞ்சலிதேவியும் (இவர் சொந்தப்படம்) , தங்கவேலும்தான் முக்கிய ஹீரோ பாத்திரங்கள்.

கதை: மன்னார் (டி ஆர் ஆர்) பண்புள்ள இளைஞன். தன் வயதான மாமாவுடன் (60 வயதில் இன்னொரு கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார்) என்று கோபித்துக்கொண்டு அவருடன் சண்டை போட்டுவிட்டு தன் அத்தையிடம் (டி பி முத்துலட்சுமி) வந்து சேர்கிறார். அத்தையும், அவளுக்கு உதவிக்கு ஒரு வேலைக்காரப் பையன் தனியாக வாழும் வீட்டில் மன்னாரும் வசிக்க வருகிறான். மன்னார் ரொம்ப நல்ல இளைஞன். அவனுக்கென்று மாடியில் ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குவருகிறான். ஆள் இல்லாமல் இருந்த பக்கத்துவீட்டில் ஆட்கள் இருக்கும் அரவம் கேட்கிறது. அது ஒரு அழகான இளம்பெண் இருப்பதுபோல இருக்கு. அவனுக்கு க்யூரியாஸிட்டி!

"காலியா இருந்த பக்கத்துவீட்டில் யாரு குடிவந்து இருக்கிறார்கள், அத்தை?" என்று
கேட்கிறான்.

"நல்ல குடும்பம். அந்த குடுப்பத்தில் அப்பா அம்மா ஒரு பொண்ணு.அப்பாவும் அம்மாவும் குணத்தில் தங்ககம்பி, ஆனால் அந்தப்பொண்ணு இருக்கே அது ஒரு குரங்கு!" என்கிறாள் அத்தை.

"ஏன் அத்தை அப்படி சொல்றீங்க?'

"பொண்ணா அது! எந்நேரமும் ஒரே ஆட்டமும் பாட்டும், வயசுப்பொண்ணு ஒழுங்கா அடக்கமா இருக்க வேணாம்? எனக்கு சுத்தமாக பிடிக்கலை" என்கிறாள் அத்தை.

அத்தை மருமகனை சாப்பிட சொல்லிவிட்டு கீழே போவாள்.

இந்த ஒரு சூழ்நிலையில் பக்கத்துவீட்டில் உள்ள "அழகான குரங்கு" லீலா (அஞ்சலிதேவி) ஒரு அமுதகீதம் பாடுகிறாள்.

அதுதான் இரண்டாவது பாடல் பிரேமையின் ஜோதியினால்னு ஆரமிக்கும். ஒரு அழகான அர்த்தமான க்ளாசிக் பாடல் (பி சுஷீலா) இது!

பிரேமையின் ஜோதியினால்...
பேரின்பம் எங்கும் பொங்கும்
இவ்வையம் தங்கும் மெய்யன்பினால்
பேதமெல்லாம் அழியும் - இப்புவிமேல்
அன்பு மழை பொழியும்.

பாரில் பிரேமை ஒன்றில்லையானால்
சீருலாவிடுமோ.. ஓ...
ஜீவன் வாழ்ந்திடுமோ.... - மெய்யன்பினால்
துன்பம் மறைந்தொழியும் - இப்புவிமேல்
இன்ப மழை பொழியும்.. ஓ..

மனத்தாலே நினைத்தாலும்
இனிப்பாகும் எண்ணம்
மாறாது வளர் காதல் கொண்டாலே திண்ணம்..ஓ..
ஆணும் பெண்ணும் அன்பாலே இணைந்தால்
அமர வாழ்வல்லவோ.. மெய்யன்பினால்
ஜாதி மறைந்தொழியும் - இப்புவிமேல்
நீதி மழை பொழியும் .. ஓ


இது ரொம்ப ரொம்ப நல்ல பாடல்! பாடல் வரிகளும் குரலும் இசையும் பிரம்மாதமாக இருக்கும் நம்ம மன்னார் ரொம்பவே ரசிப்பார். மயங்கிவிடுவார் அஞ்சலிதேவியைப்பார்த்து. காதலும் கலப்புத் திருமணமும்தான் ஜாதியை ஒழிக்கமுடியும் என்பதை அழகா சொல்லி இருப்பாள் அந்த அருமையான பாடலில்.

எப்போ? 40 வருசத்துக்கு முன்னாலே! நம்ம திருந்திவிடுவோமா என்ன?

மன்னார் மட்டுமல்ல, அவன் அத்தையும் பாட்டை ரொம்பவே ரசித்துத்தான் கேட்பார்கள்.
ஆனால், பாட்டு முடிஞ்சதும், அத்தை மறுபடியும் மேலே வருவார்.

"பாட்டு ரொம்ப பிரமாதம் இல்லையா, அத்தை?" என்பார் மன்னார்

"பாட்டா இது? ஒரு ராமாயணம், பாரதம் பாடாமல், இப்படி ஒரு வயசுப்பொண்ணு காதல் பாட்டா பாடுவாங்க! பொண்ணா அது! பொண்ணுனா அடக்கம் வேணும்" னு சான்றிதழ் கொடுப்பாள்.

இதை பக்கத்துவீட்டிலிருந்து ஒட்டுக்கேட்ட லீலா (அஞ்சலிதேவி), ஒரு சவுக்கு,
துடைப்பத்துடன் வந்து, ஜன்னல் வழியாக மன்னாரை அழைப்பாள்

"ஏய் மிஸ்டர்!"

"ஏன்"

"அந்த கெழவி என் பாட்டைப்பத்தி கேவலமா பேசும்போது ரொம்ப ரசிச்சீங்களே?'

"பே பே"

"இனிமேல் நீயோ, அந்த கிழவியோ என் பாட்டை பத்தி ஏதாவது சொன்னீங்கனா, இந்த சவுக்கையும் விளக்குமாறையும் வச்சு விளாசு விளாசுனு விளாசிவிடுவேன்! இடியட்! ஸ்டுப்பிட்!" என்று கொடுப்பாள்.

மன்னார் லீலாவின் அழகையும், மிரட்டலையும் பார்த்து அரண்டு போய் தன் நண்பர்களிடம் ஓடுவார்.

யாரு நண்பர்கள்?

தங்கவேலு, கருணாநிதி, மற்றும் இரு காமடி நடிகர்கள்! இவர்கள் ஒரு சங்கம் நடத்துவார்கள்.

"கற்றார் நிறைந்த சங்கம் இது! காரியம் கைகூடும் சங்கம் இது! என்று ஒரு பாடல்.

அவர்களிடம் போய் மன்னார் தன் காதலை கைகூட உதவி செய்யச்சொல்லிக் கேட்ப்பார். அவர்கள் எல்லோரும் மான்னார் வீட்டு மாடிக்கு வருவார்கள்.

அப்போ, மலர்க்கொடி நானே பாடல் காட்சி. நண்பர்கள் அனைவரும் மயங்கிவிடுவார்கள்! நல்ல செலக்ஷன் என்று மன்னாரை பாராட்டுவாங்க!

இதிலே என்ன பிரச்சினை என்றால், மன்னாருக்கு சுட்டுப்போட்டாலும் பாட்டுப்பாட வராது. ஆனால், லீலாவை அடைய ஒரே வழி, நல்ல பாடகனாக இருக்கனும்.

இதற்கிடையில் ஒரு பாட்டு வாத்தியார், "புலவர் பூவரசன்" (நடிகர் பக்கிரிசாமி?) லீலாவுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பார். பாதி பாட்டு பாதி ஜொள்ளு. அவனையும் சமாளிச்சு அவளை வெல்லனும்.

"யார்டா இவன் புதுசா?" என்பான் மன்னார்

"இவந்தான் உன் சகலை! இவனைத் தெரியாதாடா மன்னாரு? பழைய பாட்டுப்புத்தகம் ப்ளாட்ஃபார்ம்ல வித்துக்கிட்டு இருந்தான்டா இவன். இப்போ புலவர் பூவரசன் னு பேரை மாத்திக்கிட்டு பாட்டு வாத்தியார் ஆகிவிட்டான்" என்பான் நண்பன் தங்கவேலு.

அந்த நேரத்தில அழகான பி பி எஸ் பாடல் வரும்,

லீலாவைப்பார்த்து "புலவர் பூவரசர்" வர்ணித்து ஜாடையாக பாடுவான்!

"வாடாத புஷ்பமே!
வற்றாத செல்வமே!
தேடாத தெய்வீக பிம்பமே!
தறி நாடாவைப்போல் ஆடும் இதயத்திலே தினமும் உந்தன் தாபமே!கோபமேன்?
வனிதாமணியே! நீ வாராய் அமுத கனியே!

இதைப் பக்கத்துவீட்டிலுருந்து மன்னார் கோஷ்டி பார்த்து வயிறு எரியும்! இப்போ லீலாவை இம்ப்ரெஸ் பண்ண ஒரே வழி, நல்லா பாடுவது! மன்னாருக்கு பாட்டுப்பாட ட்ரயினிங் கொடுப்பாங்க, நண்பர்கள். ஆனா மன்னாருக்கு பாட்டு வராது!

மன்னாரை வாயசைக்க வைத்து தங்கவேலு பின்னால் இருந்து பாடுவார்.

என்ன பாடல்?

கண்ணாலே பேசிப் பேசிக்கொல்லாதே!
காதாலே கேட்டுக்கேட்டு செல்லாதே!
காதல்தெய்வீகராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனசைவிட்டுத் துள்ளாதே!

இந்த முதல் பாடல்லயே, மன்னார் மேலே மதிப்பும், மரியாதையும் காதலும் வந்துவிடும் லீலாவுக்கு. படம் இப்படியே ரொம்ப ஜாலியாப் போகும், கடைசிவரை.

கடைசியில் ரொம்ப நல்ல முடிவு!

இதுவரை அடுத்தவீட்டுப்பெண் லீலாவை பார்க்கவில்லைனா கட்டாயம் பாருங்க! ரசிக்கத்தக்க இருப்பாள்!

Friday, August 21, 2009

Are you punctual? -கடலை கார்னர் (11)

“Dr. KannAn! You want to go out with me friday for some shopping?”

“Are you serious, Stacy?”

“Yes, I want to get a Saree and I really want to get to know about you more too”

"Really?" The more you know more trouble will start"

"Come on kannAn"

"Hey! You should call me Kannan. Not KannaaaN”

“OK, Kannan! I will pick you up in your home on friday, at 7:00 pm sharp"

"Fine, Stacy. Are you punctual?"

"I am not an Indian, Kannan!"

"LOL"

*********************************************

“You drive an Infiniti, Stacy? It is an expensive car! I cant afford one”

“Sure you can!"

“Nope, I cant"

"I know why you can not? You want to save all your money and die rich”

"That is not it, I have lots of commitments. There is so much need back home in my family. No matter how much I support, it is never enough for them. OK, Where are we going?”

“I told you, right? I want to go to Devon street. I want to buy a Saree and matching blouse for that”

“WHY Saree!!!”

“Why not?”

"Oh those Indian shopkeepers are going to kill you"

"What do you mean?"

"They will irritate you and force you to buy some crap and they will cheat you. I hate them. We should deport them all back to Gujarat and Rajasthaan"

"That is why I am going with you. See I am smart"

"Probably not. I dont bargain well either"

"That is OK. HEY! What do you have in your mind? You think I dont have a good figure to wear saree or what?"

"You do have good figure. In fact you will look really sexier in Saree. Every man in Chicago is going to come after you, Stacy. Just watch your butt"

"LOL"

"I am serious"

"So, how is Brindha doing, now? Fully recovered? I heard that you really took care of her, Kannan?"

"I hear you talk to her everyday. I am sure you are updated. Anyway, just spent some time with her. She is doing great now. She will be back to work on Monday"

"Kannan is your first name or last?” she smiled.

“We have only one name! It is first and last!”

“Really? Why?”

“I don’t know why. That is the way it is. We just have a single name”

"Who is we here? Is "we" Indians?"

"No, Tamils"

“Then you cant get your family history and track the ancestors easily”

“Why is that so important? Does it really matter what my ancestors were and what they did?”

“You can be proud of your own history”

“Good thought. But,”

“But what?”

“What if one of my great grandpas was a murderer and rapist, and a great grandma was a promiscuous woman? I can not be proud of my last name or history, right? I don’t think every ancestor of mine are good”

“Ha ha ha! You are funny. You think differently though. Do you mind going to an Indian restaurant in Devon street for dinner after the shopping?”

“Honestly, I don’t want to go to an Indian restaurant, but if you really wish to go, I am fine”

“OK, I WANT to go to Indian restaurant. Tell me about you, Kannan?”

“About me? OK. I was born and brought up in Tamilnadu, South India in a middle-class family in a small town. Actually middle-class means poor class with a decent family background.Like everybody else I love my mom and dad. I am really lucky to have such a wonderful parents. I speak thamizh as it is my mother tongue. I am living in this country for almost a decade now. I love living here. Of course I am a single”

“Brindha speaks tamil too?”

“Yes, she does. You noticed us speaking in thamizh several times, right?”

“Is that why you are too close to her?”

“May be so. We speak same language and so, we understand each other better. Right?”

“I am not sure, speaking same language can unite two people. It is a personality match, which matters”

“You think so?”

“I know so, Kannan”

“Hey! Brindha and I are just friends that is all. OK?”

“I know. Brindha told me about it but you never know. You respect friendship a lot?”

“Nope, I had been unlucky when it comes to friendship, Stacy. Lots of bitter experiences”

“Really? Why?”

“I don’t know, it starts well but never ended well. May be I am a complex personality. My expectations are too much and so nobody can fulfill that I suppose”

“Any specific friend you can tell me about?”

“I knew a guy, Raj, we used to hang out together a lot. Now, I don’t even know whether he is alive or dead. That is how our friendship is now. Is that not sad?”

“That is sad but you dont know what is going on in the other end. He may be dead. No offense"

"Yes, I dont but in any case when it comes to friendship it sucks!"

"Here is one more question to you. Why you Indians still do arranged marriage?”

“I don’t know. For us it works our really well. There are quite a few cases I know of. Once we are married we learn to appreciate our partners and really love them. I am not joking. BTW, even love marriages fail, right? I don’t think love lasts long enough to hold a marriage for ever. Love is a short time thing and it has a short half-life. May be there is no love, it is all infatuations. Just emotions. By the way, I might end up doing an arranged marriage too”

“Yeah, love does not last for ever. My parents are divorced too. But I will find my life partner. Not my parents”

"These days, people come here choose their partners and educated people in India choose their own partners too. However arranged marriage is still the big contributor. Almost 90% people still do arranged marriage. It really works for lots of people. They really find a caring, loving, partner in this set up too"

"I believe you"

"May be for a change you should do an arranged marriage, Stacy. It will be thrilling"

"Even if I wish, my parents will say, "that is not their job to find a partner for me". So it is impossible, Kannan"

“When did your parents get their divorce?"

“When I was 18 and my sister was 16”

“What happened?”

“I don’t know. It did not work out after a while for them. How about your parents?”

“They are still together. Theirs was arranged”

“Interesting”

“But they fight with each other almost every day”

“Verbally?”

“Yes. No physical abuse or whatsoever”

“That is good”

“Today, we have a very confused culture than what we have in US”

“Really?”

“Yeah, today our youth mostly engage in pornography and appreciating low-class writers who educates them how to screw around in the name freedom of speech and what not?”

“Are you serious?”

“They think this is what the real freedom”

“Was it not the case before?”

“It was better then, I believe"

"Yeah but you Indians only came up with Kamasuthra"

"So what? There is nothing wrong with sex as long as it is happening between the walls with the "right people" and not exposed to minors and children"

“Let me ask you this first. When did you have sex for the first time, Kannan?”

“Hey I am still a virgin!”

“That is hilarious, Kannan!” (she laughed out loudly)

“It is true”

"So you admit that you are skill-less in this part?"

"May be. I will learn when it is time"

"You are not going to live for ever, kannan"

"So what are you saying? You are going to educate me? Just kidding, Stacy"

“What I am saying is I am more experienced than you. I kissed a boy when I was 13 yr old and I had sex for the first time when I was eighteen”

“Was a boy or girl?”

"Who?"

"The first lover of yours?"

“Ha ha ha, he was my boyfriend”

“How about girls?”

‘WHAT GIRLS?! I am not a gay!”

“OK”

“You have any boyfriend now, Stacy?”

“For a while, NO”

“Why?”

“I don’t know, I don’t want a relationship just for sex. Most of the men are like that. They dont want any commitments. They just want to use innocent girls for their advantage”

"I agree. Most of the men are bastards"

"Are you including yourself too?"

"May be, I dont know. I dont want to judge myself since I will be biased"

"You talk as if you are a very nice, wise guy. But I suspect whether you are a real crook"

"You sound like Brindha now!"

-to be continued

Wednesday, August 19, 2009

எனக்கு ரெண்டு மனசு இருக்கு-கடலை கார்னர் (10)

"என்ன சாப்பிட்ட, பிருந்தா?"

"காய்ச்சல் அடிப்பதாலே ரொம்ப பசிக்கலை, கண்ணன். அப்பப்போ கொஞ்சம் ஆரஞ்ச் ஜூஸ் குடிச்சேன்"

"கீப் ட்ரின்க்கிங் சம் வாட்டர் அல்லது கேட்டரேட். இல்லைனா டீஹைட்ரேட் ஆயிடும் பிருந்தா"

"சரிங்க சார்"

"உனக்கு எதுவும் கடையில் போய் வாங்கிட்டு வரவா?"

"ஒண்ணும் வேணாம்"

"அப்புறம் ஏதாவது வேணும்னா ஃபோன்ல கூப்பிடு, சரியா?"

"ஏதாவது வேணும்னு கூப்பிட்டுக்கேட்டால் கிடைக்குமா?" அவள் ஒரு மாதிரியாக பார்த்தாள்.

"ஆமா, என்ன பண்றது? காய்ச்சல்க்காரியா இருக்க இல்லையா?. கேக்கிறதை செய்யத்தான் செய்யனும் பாவம்"

"என் மேலே ஒரு பரிதாபத்தினாலயா?"

"அதனாலயும்தான்"

"வேற என்ன?'

"நம்ம பிருந்தாவாச்சேனு ஒரு அன்புதான்"

"உங்க பிருந்தாவா நான்?"

"ஏன் உனக்கு யாரும் ஆத்துக்காரர் இருக்காரா என்ன? என்னோட சண்டைக்கு வர?"

"என்ன கொழுப்பா?"

"நீங்கதான் வம்பு இழுத்தது மஹாராணி"

"நீங்க அதுக்குள்ள புறப்படுறீங்களா, கண்ணன்?"

"அதுக்குள்ளவா? வொர்க்ப்ளேஸ் போய் ஒண்ணு செக் பண்ணிட்டு வீட்டுக்கு போகனும். ஏன் உன் கூடவே நைட் படுத்துக்கவா?"

"பெரிய பெட் தானே? நல்ல பிள்ளையா இருக்கிறதுனா பக்கத்தில் படுத்துக்கோங்க கண்ணன்"

"உன் காய்ச்சலை எப்படியாவது ஒட்டிவிடலாம்னு ஆசையா?"

"அதில்ல. நீங்க இருந்தா நல்லாயிருக்கும்னு பார்த்தேன்"

"பக்கத்தில் தெரிஞ்சவங்க இருக்காங்களா?"

"இருக்காங்க, தமிழ்க்காரிகளே இருக்காங்க"

"என்ன ரொம்ப சலிச்சுக்கிற?"

"ரொம்ப க்ளோஸ்லாம் இல்லை, கண்ணன். I don't know, we came to this country, we sort of lost our family back home. It is very hard to find very good friends here too. I wonder what have we achieved?"

"அப்படியெல்லாம் ரொம்ப யோசிக்காதே, Just live!"

"ஏன்?"

"ஜஸ்ட் ட்ரஸ்ட் ஒன்லி யுவர்செல்ஃப். நோபடி எல்ஸ்"

"உங்களைக்கூடவா?"

"லைஃப் இஸ் காம்ப்ளீக்கேட்டெட். People change. It is not their fault. Of course including me"

"Why?"

"I dont know, but they do"

"என்ன சொல்ல வர்றீங்க?"

"ரெஸ்ட் எடுத்துக்கோடா. இன்னொரு நாள் பேசுவோம்"

"நீங்க போகனுமா, இப்போ?"

"இங்கே இருக்க ஆசையாத்தான் இருக்கு. ஆனால் போகனுமே"

"பொய்"

"எது பொய்?"

"இங்கே என்னோட இருக்க ஆசையா இருக்குனு சொன்னது"

"ஏன் நீ கடிச்சு தின்றுடுவனு எனக்கு பயமா என்ன?"

"உங்களை திண்ணுட்டா எனக்கு ஒரு நல்ல கம்பெணி இல்லாமல் போயிடுமே? அதனால உங்களை உயிரோட விடுறேன்"

"செத்துட்டா நிம்மதியா போயிடலாம், பிருந்தா! ஏன் வாழனும்னு துடிக்கிறோம்னு தெரியலை. அதே மக்கள், அதே வாழக்கை, எல்லோரும் கேவலம் நானும் சாதாரண மனுஷந்தான்னு ஒரு நாள் இல்லை இன்னொரு நாள் காட்டிடுவாங்க"

"ஒவ்வொரு சமயம் அப்படித்தான் தோனும்"

"எனக்கு ரெண்டு மனசு இருக்கு தெரியுமா?"

"ரெண்டு இதயமா? எங்கே திருடினீங்க இன்னொன்னு?"

"இதயம் இல்லை! மனசு. ரெண்டும் வேற வேற"

"ரெண்டா?"

"ஆமா"

"எப்படித்தெரியும்?"

"இங்கே பாரு! ஒரே விசயத்தை, ஒரு தரப்பார்க்கும்போது எதுவுமே தப்பாவே தோன மாட்டேன்கிது. எல்லாமே ரீசனபுளாத்தான் தோனுது. அதே விசயத்தை இன்னொரு சமயம் பார்க்கும்போது எல்லாமே தப்பா தோனுது"

"ஆனா ஒரே மனசுதான அப்படி வேற வேற மாதிரி யோசிக்கிது"

"இல்லை ரெண்டு வேற வேற மனசு"

"உங்களுக்கு ரெண்டு மனசா?" அவள் சிரித்தாள்.

"என்ன சிரிப்பு?"

"நீங்க உளறினாலும் அதில் ஏதோ அர்த்தம் இருக்க மாதிரி இருக்கு"

"ஆமா, நீ தெளிவா பேசுவதும் பின்னால ஒரு நாள் பார்த்தால் உளறல் மாதிரி தெரியும்"

"சரி சரி, இன்னொரு டீ போட்டுத்தாங்க! அப்புறம் புறப்படலாம்"

-தொடரும்

Monday, August 17, 2009

பிருந்தாவுக்கு காய்ச்சல் - கடலை கார்னர் (9)

"Where is Brindha today, Stacy?"

"oh, you did not know? she is sick!"

"What is wrong?"

"She has a flu"

"Really? I will check her out"

**********************************
பிருந்தாவின் அப்பார்ட்மெண்ட்டில்!

"Hey!"

"வாங்க, கண்ணன்!"

"சரி நீ போய் படுத்துக்கோ, பிருந்தா!"

"என்ன டெம்பெரேச்சர் இருக்கு?"

"தெரியலை. அங்கே தெர்மாமீட்டர் இருக்கு பாருங்க!"

"இரு நான் உன் நெத்தியை தொட்டு பார்க்கிறேன். ரொம்ப உடம்பு சுடுது பிருந்தா! என்ன மாத்திரை சாப்பிட்ட?"

"டைலீனால்தான் எடுக்கிறேன்"

"சரி, வாயை திற, நான் டெம்ப்பரேச்சர் பார்க்கிறேன்"

"ஆ"

"ஏய் 104 டிகிரி இருக்கு!"

"போய் சேர்ந்திடுவேனா? இனிமேல் நீங்க நிம்மதியா இருக்கலாம்" அவள் சிரிக்க முயற்சித்தாள்.

"ஏய் சும்மா ஃப்ளுதான். ஒண்ணும் ஆகாது! பயப்படாதே! உன் உடம்பு கிருமிகளோட சண்டை போடுது"

"பயம் எல்லாம் இல்லை. உயிரோட இருக்கேனானு பார்க்க வந்ததுக்கு தேங்க்ஸ் கண்ணன்"

"ஸ்டெய்ஸிதான் சொன்னாள் உனக்கு காய்ச்சல்னு. நான் வந்து தொந்தரவு பண்ணீட்டேனா?"

"சே சே. வேலைக்கு போகலையா நீங்கள்? இன்னைக்கு நீங்களும் ஆஃபா?"

"ஒண்ணும் பெருசா வேலை இல்லை. அதான் ஆஃப் எடுத்துடலாம்னு பார்க்கிறேன்"

"உடம்புக்கு சரியில்லைனா ரொம்ப ஹோம் சிக்கா இருக்கு, கண்ணன்"

"அப்போ கல்யாணம் பண்ணிக்கோ! உனக்கு ஹோம் சிக்கா இருக்காது"

"பெரிய ஐடியாதான் போங்க! ஸ்டெய்ஸி எப்படி இருக்கா?'

"என்னை டெவான் ஸ்ட்ரீட்க்கு கூப்பிடுறாள். அவளுக்கு ஒரு புடவை வாங்கனுமாம்! நீ தான் அவளுக்கு இந்த புடவை வாங்கிற ஐடியா கொடுத்தியா?"

"அவளுக்கு புடவை கட்ட ஆசையா இருக்குனு சொன்னாள். சாரிஸ் டெவான் ஸ்ட்ரீட்ல கிடைக்கும்னு சொன்னேன். உங்களை கூப்பிட்டாளா செலகஷனுக்கு? அவளை வச்சுக்கிறேன்"

"நீ காய்ச்சலோட இருக்கதாலே என்னை கூப்பிட்டு இருப்பாள்"

"அதெல்லாம் இல்லை"

"வேறென்ன?"

"எப்போ டெவான் போறீங்க?'

"இந்த வெள்ளிக்கிழமை ஈவனிங்னு சொன்னாள். அவளே வந்து என்னை பிக் அப் பண்ணிக்கிறாளாம்"

"அவளுக்கு சேலை கட்டிவிடப்போறீங்களா? இல்லை சொல்லிக் கொடுக்கப்போறிங்களா?"

"நீ வேற. சேலையா? ஐ விஷ் ஐ நோ தட்! எனக்கு டை மட்டும்தான் கட்டத்தெரியும்"

"ப்ளவ்ஸ்க்கு கொக்கி மாட்டிவிட, கழட்டத்தெரியுமா?"

"உனக்கு ரொம்ப கொழுப்புடா! ஏய் என்ன காய்ச்சல் விட்டுடுச்சா?" மறுபடியும் தெர்மாமீட்டர் வச்சு செக் பண்ணினான் கண்ணன்.

"இப்போ 100 தான் இருக்கு. இது நிச்ச்சயம் ஏதோ வைரஸ்தான் கவலைப்படாதே'

" நீங்க வந்ததும் உடம்பு குளிர்ந்துவிட்டது போல இருக்கு! எனக்கு ஏதாவது குடிக்க சூடா வேணுமே?'

"காபி அல்லது டீ குடிக்கிறயா? நான் போட்டு தரேன்"

"சரி போட்டுத் தாங்க"

கண்ணன் மைக்ரோவேவ்ல ஹாட் வாட்டர் சுட வச்சு, அதில் ரெண்டு ஃப்ளோ த்ரு Earl Grey, டீ bags போட்டு கொண்டுவந்தான்.

"சர்க்கரை எவ்வளவு போடனும்?"

"ஒரு அரை ஸ்பூன் போதும். உங்களுக்கு டீ?'

"எனக்கு இதே மாதிரி இன்னொண்ணு போட்டுக்கொண்டு வரேன்"

"OK"

"இந்தா பிருந்தா டீ! நீ எழுந்து கொஞ்சம் உட்காரு. அப்படியே பில்லோவை அங்கே வச்சு பெட் ஃப்ரேம்ல சாஞ்சிக்கோ"

"காய்ச்சல் ஒட்டிக்கப்போகுது உங்களுக்கும்"

"நான் ஃப்ளூ ஷாட் எடுத்து இருக்கேன். அதனால் ஒட்டாது"

"பரவாயில்லை, என்னை நல்லா கவனிச்சுக்கிறீங்களே கண்ணன்?" அவள் ஒரு மாதிரியாக அன்பா பார்த்தாள் பிருந்தா.

"கவலைப் படாதே! பின்னாலே நமக்குள்ள சண்டை வரும்போது நல்லாச் சொல்லிக் காட்டுவேன். அதானே நம்ம கலாச்சாரம்?"

"எப்படியோ என்னோட வந்து சண்டைபோட்டா சரிதான். நானும் நல்லா நாலு கொடுப்பேன். சரி, எனக்கு இப்போ சுடுதானு பாருங்க, கண்ணன்"

"மறுபடியுமா? தெர்மாமிட்டர் எடுத்துட்டு வரேன்"

"இல்லை நெத்தியிலே உங்க கை வச்சு பாருங்க! அப்படிப் பார்த்தால்தான் நீங்க எனக்காக கேர் பண்ணுற மாதிரி இருக்கு"

"சரிடா"

"கண்ணன்"

"என்ன சொல்லு?"

"இல்லை ஒண்ணுமில்லை"

"சும்மா சொல்லு"

"காய்ச்சல் கொண்டுவந்து கொடுத்த வைரஸுக்கு தேங்க்ஸ்"

"எதுக்கு?"

"அதனால்தானே உங்க கரிசனம் கிடச்சது எனக்கு"

"சரி, படுத்துக்கோ!"

"உங்க கையை தாங்க இங்கே! என் கைல வைங்க"

"சரி நான் இங்கேதான் இருக்கேன் நீ தூங்கு. இன்னும் ரெண்டு டைலினால் வேணா போட்டுக்கிறியா?"

"சரி"

"தூங்குடா"

"தூக்கம் வரலை"

"சரி, சைக்ளோப் அமைன் பத்தி பேசுவோமா?"

"ஐயோ வேணாம்"

"சரி சரி, சும்மா ஜோக்தான். படுத்துக்கோ!"

-தொடரும்

Friday, August 14, 2009

ஒற்றைக்கண் செம்மரி ஆடு- கடலை கார்னர் (8)

"பிறவிக்குறைகள் எல்லாம் கடவுள் செய்ற அநியாயமா, கண்ணன்?"

"இங்கே கடவுளை விட்டுருவோம் பிருந்தா! உனக்கு சைக்ளாப்ஸ் ஆடு, அதாவது ஒற்றைக்கண ஆடு பற்றி தெரியுமா? இது பழைய கதைதான். படிச்சிருக்கியா?"

"இல்லையே கண்ணன். அதுவும் பிறவிக்குறையா?"

"யு எஸ் ல ஐடஹோ (Idaho) என்கிற மாநிலத்திலே சுமார் ஒரு 60 வருடம் முன்னால நெறையவே ஒற்றைக்கண் ஆடு பிறந்து இருக்கு, பிருந்தா"

"எப்படி இருக்கும் அந்த ஒற்றைக்கண் ஆடு, கண்ணன் ?"

"இங்கே கீழே ஒரு படம் இருக்கு பாரு. இது ஆடு இல்லை. இது ஒரு kitten, இது மாதிரி இருக்கும்"
"ஏன் ஒற்றைக்கண ஆடு படம் கிடைக்கலையா, உங்களுக்கு?"

"காப்பி ரைட் பிரச்சினை ஏதாவது இருக்குமானு பயம். அதான் இந்த பூனைப் படம்"

"ஏன் சைக்ளாப்னு சொல்றாங்களாம், கண்ணன் ?"

"சைக்ளாப் ஒரு க்ரேக்க மித்தாலஜி கேரக்டர். இங்கே ஒரு படம் தரேன் பாரு! ஒரு கண்தான் இருக்கும் இந்த கேரக்டருக்கும், நெற்றி நடுவிலே! அதான் சைக்ளாப் ஷீப்னு சொன்னாங்க! இந்த ஆடு இப்படிப்பிறப்பதற்கு என்ன காரணம்? இல்லை கடவுள் தப்பா? னு ஒரு 10-15 ஆராய்ச்சி பண்ணி, அதுக்கு காரணம் என்ன? யாரு அந்த "கல்ப்ரிட்" னு கண்டுபிடிச்சு இருக்காங்க!""ஆமா, கண்ணன், They called that as "Cyclops Sheep" right? I have heard of that morning sickness medication which gave some serious birth defects"

"Yeah, scientists screwed up there. Not God, at least in தலிடோமிட் case"

"what went wrong there, Kannnan? மார்னிங் சிக்னெஸ்க்கு மருந்து சாப்பிட்டு, பிறவிக்குறையுடன் குழந்தை பெறுவது ரொம்ப சோகம் இல்லை, கண்ணன்?"

"ரொம்பக் கொடுமை. அதுவும் அந்தக்காலத்தில் இந்த ultrasound scanning எல்லாம் வேற கிடையாது, பிருந்தா. let us discuss that later. Now we get back to this cyclops sheep"

"ஆமா, எப்படி இந்த சைக்ளாப்ஸ் ஆடு பிறந்ததுனு சொல்றீங்க? யார் அந்த "கல்ப்ரிட்"?"

"அது மேயும்போது, "சைக்ளாப்-அமைன்" என்கிற ஒரு தாவிர அல்க்களாயிடை (ஒரு வேதிப்பொருள்) உள்ள தாவரத்தை சாப்பிட்டு இருக்கு. அந்த "அமைன்"தான் அந்த ஆட்டின் குட்டிகளுக்கு ஒரு கண் வருவதற்கு காரணமாம். இப்போ அதே "சைக்ளாப் அமைனை" வச்சு கேன்சர் மருந்து தயாரிக்கிறாங்க"

""சைக்ளாப் அமைன்" தான் இந்த ஒற்றைக்கண் உண்டானதற்கு காரணம்னு நிச்சயமா கண்டுபிடிச்சுட்டாங்களா?'

"சந்தேகமே இல்லை, பிருந்தா!"


-தொடரும்

Wednesday, August 12, 2009

There is no gentleman- கடலை கார்னர் (7)

"வாங்க பிருந்தா மஹாராணி!"

"என்ன கண்ணன், என்னை ரொம்ப மேலே தூக்கி வைக்கிறீங்க! கவுத்தீடாதீங்க ரொம்ப உயரத்திலே வச்சு! மேலே இருந்து விழுந்தா எழுந்திரிக்க முடியாது"

"நான் அப்படியெல்லாம் கவுத்த மாட்டேன். நாளைக்கு நீ பெரியாளாயிட்டேனா, பொறாமையில் நான் உன்னை மதிக்க மாட்டேன். அதான் இப்போவே அந்த மரியாதையை கொடுத்துக்கிறேன்"

"ஆஹாஹா! You get jealous too? Thanks for admitting that your ego is bigger than mine"

"Yours what?"

"Ha ha ha, you know what. I like when you are honest"

"I don't want you to like me, let me be dishonest. Anyway, நான் என்ன கடவுளா? மனுஷன் தானே?"

"நீங்க பெரிய ஜெண்டிமேன் னு நெனச்சேன். நல்லா ஏமாந்துட்டேன்"

"நல்லவேளை இப்போவே சொன்ன! நான் அப்படியெல்லாம் இல்லம்மா! நான் ரொம்ப மூடி டைப். ஜெண்டில்மேனா!! நீ வேற! There is no gentleman in this world"

"மூடினா என்ன? "லிட்" ஆ?"

"அய்யோ அறுக்காதே! மூடினா moody! Let me spell it out, m o o d y!"

"ஓ அதுவா?'

"வர வர உனக்கு கொழுப்பு அதிகமாடுச்சு, பிருந்தா"

"ரெகுலரா வொர்க் அவுட் பண்ணுறேனே?"

"அப்படியா? எங்கே கொஞ்சம் திரும்பி நில்லு பார்ப்போம் உன் வொர்க் அவுட் எஃபக்ட்ட?"

"உதை வேணுமா உங்களுக்கு?'

"சரி சரி, உன் வம்புக்கு வரலை. என்னை விடு!"

"ஆமா, அந்த பிரேமா வை, ஏன் உங்க ஃப்ரெண்டு டிவிஷன் மாத்தினார்?"

"யாரு?'

"அவர்தான் கணேஷன்"

"ஏய், அவன் ப்ரேமா பத்தி என்னோட பேசினான். அவளுக்கு அந்த வேலை செய்ய எந்த விதமான ஸ்கில்ஸும் இல்லையாம். பாவம், அவளை என்ன பண்றதுனு ஒரே குழப்பம் அவனுக்கு"

"நீங்கதான் அவளை ஃபயர் பண்ண அட்வைஸ் பண்ணியதா?'

"அவளை ஃபயர்லாம் பண்ணல, டிவிஷன் மாற்றியிருக்கு. There will be a salary cut. That is the best he could do"

"We are all Indians. How can we do such a thing to another Indian?'

"No Brindha, if I am incompetent for my job, I will be fired too. This is America! Nobody cares here"

"Have you ever been fired like that?"

"Of course, once, but it was a different scenario"

"என்ன சிச்சுவேஷனோ?"

"My boss was an idiot!. I could not put up with his bullshit. That is the only way out! For your kind information, he was Indian too. An idiotic Indian"

"If I ask him, he will say something else. உங்களைத்தான் ப்லேம் பண்ணுவார்னு நெனைக்கிறேன்"

"Of course! He will say that I should learn to bark like a dog if he asks me to. I don't want to talk about it, please"

"Why? Talking will help"

"Not always. Bad memories hurt, Brindha. It is best not to think about such completely"

"Are you OK, Kannan?"

"I am fine as long as I keep off from some memories"

"OK OK, men and women are so different"

"Yes, you could take some things easy but I cant. And vice versa"

"Are we not responsible for our own mistakes and that too being an adult?"

"Of course, we are and I am. But if you keep blaming yourself for everything, then you will lose yourself. So, one needs to be careful when he/she wants to take ALL the blame"

"என்ன சொல்ல வர்றீங்க"

"அந்த ப்ரேமாவை இங்கே ஏன் இழுத்துவந்த? உன்னை உதைக்கனும்"

"இப்போ எல்லாமே என் தப்பா?'

"என் தப்புதான்"

"மிஸ்டிக் ரிவெர் பார்த்து இருக்கீங்களா?'

"எனக்கு அந்தப் படம் பிடிக்கலை"

"ஏன்?"

"I dont like innocent people getting punished in the movies and stories"

"Life is not fair, Kannan"

"I agree. it is not but we all want to live long anyhow"


-தொடரும்

Sunday, August 9, 2009

செக்ஸியஸ்ட் மேன் அலைவ்! -கடலை கார்னர் (6)

“வாங்க கண்ணன்!”

“அன்னைக்கு என்னைப் பத்தி என்ன பொறணி பேசின உன் ஃப்ரெண்டோட?”

“உங்களோட பெரிய தொந்தரவா போச்சு. அவளுக்கு நீங்களும் நானும் நல்ல ஃப்ரெண்டுனு தெரியும். அதனால் உங்களைப் பத்தி எதுவும் சொல்லல, பேசல, போதுமா?”

“வேற என்ன பேசுவீங்க?"

“நாங்களா? செக்ஸியெஸ்ட் மேன் அலைவ் பத்தி”

"மேட் டாமன், ப்ராட் பிட், ஜார்ஜ் க்லூனி பத்தியா?"

"ஆமா, They have also been listed as 100 most influential people”

“ரியல்லி? They influenced what? Anyway, ஷான் கானெரி, மெல் கிப்ஷன், ஹாரிஷன் ஃபோர்ட், ரிச்செர்ட் கியர் பத்தியுமா பேசினீங்க?”

“ஹா ஹா ஹா! அவங்க எல்லாம் எந்தக்காலத்தில் செக்ஸியெஸ்ட் மேனா இருந்தாங்களாம்?”

“மெல் தான் முதன்முதலில் அந்த டைட்டிலுக்கு தகுதி பெற்றது, தெரியுமா? ஷான் கானெரி, 59 வயதில். ஹாரிஷன் ஃபோர்ட் 56 வயதில்! குட்டியில் கழுதைகூடதான் அழகா இருக்கும்னு சொல்லுவாங்க”

“ஜாக்கிரதை கண்ணன்! அப்போ ப்ராட் பிட்டை கழுதைனா சொல்றீங்க?! என்னிடம் அடி வாங்க போறீங்க! ப்ராட் பிட்டும், ஜார்ஜ் க்லூனியும் ரெண்டு தர வின் பண்ணி இருக்காங்க. தெரிஞ்சுக்கோங்க!”

“ரிச்சேர்ட் கியரும்தான், விக்கில கொடுத்திருக்கிற ( http://en.wikipedia.org/wiki/People_(magazine) லிஸ்ட்டப் பாரு"

“ஜேம்ஸ் பாண்ட்ல ஏன் ஷான் கானெரி மட்டும்? ரோஜர் மூர் எல்லாம் வின் பண்ணலையா?”

“தெரியலை, அவருக்கு அந்த செக்ஸ் அப்பீல் இல்லையோ என்னவோ?"

"நம்ம ஊர் கமலஹாசனிடம் கேட்டால் "இது ஒண்ணும் ஒலிம்பிக்ஸ் இல்லை" என்பார்"

"ஆமா நம்ம கமலு, சாரு நிவேதிதாதான் செக்ஸியஸ்ட் மேன் அலைவ் னு சொன்னாலும் சொல்லுவார்"

"ஹா ஹா ஹா, ஜோக் ஆஃப் த மில்லின்னியம். ரொம்ப சிரிப்பு வருது, கண்ணன்"

"எனிவே, இதெல்லாம் ரொம்ப ரொம்ப அவசியம் பாரு. இதெல்லாம் பொண்ணுங்க சமாச்சாரம். எனக்கென்ன தெரியும்?"

"அப்போ செக்ஸியஸ்ட் கேர்ள் னா புரியுமா உங்களுக்கு?”

“எனக்கு எதுவும் புரியாது!”

“அதெப்படி இவ்வளவு நல்லா நடிக்கிறீங்க, கண்ணன்?”

“நானா? ஏய் பிருந்தா! இந்த இஸ்ஸுல அந்தப் பாகிஸ்தானி பொண்ணு படம் போட்டு இருக்காங்க!”

“யாரு?”
“அதான் அந்த யு சி எல் எ ல “டெர்ஷியரி ப்யூட்டில் லித்தியம்” யூஸ் பண்ணும்போது தீப் பிடிச்சு இறந்தாளே?” இந்தா பாரு! எவ்வளவு அழகா இருக்கா பாரு!”

“பாவம், கண்ணன்”

“இது யாரு தெரியுமா?”

“யாரு?”“அவளோட பாஸ். இந்த அறிவாளிதான் அவளை தனியா வேலை செய்ய விட்டது”

“சரியான ஸ்லேவ் ட்ரைவரா இருப்பான் போல. ஹாலிடேஸ், வீக் எண்ட் எல்லாம் வேலை செய்ய வைக்கிறது. அப்புறம் ஏன் தனியா வேலை செய்யமாட்டாள்?”

“அப்படித்தான் தோனுது. But accidents can happen anywhere, Brindha”

“அந்தப் பொண்ணு அக்ரிலிக் ஸ்வெட்டர் போட்டிருந்தாளாம். காட்டன் போட்டிருந்தாள்னா பொழைச்சிருப்பாளா?'

"சீரியஸா சொல்லுறேன், நெருப்பு பற்ற ஆரம்பித்தவுடன், ட்ரஸை கழட்டி எறிஞ்சுட்டு நிர்வாணமா ஓடி இருக்கனும். இவ கண்சர்வேடிவா இருந்திருப்பாளோ என்னவோ?”

“தெரியலை. It is unbelievable! We all use t-butyl lithium. Are we not?”

“உண்மைதான். என்ன சொல்றாங்கனா, தீப்பிடிக்கும்னு யோசித்து முன் ஜாக்கிரதையா அவ இருந்திருக்கனும். There is always a possibility for dropping the syringe. If that happens, glass will break and there will be fire”

“I am not sure, she knew the dangerous nature of that reagent. She was just an undergraduate”

“That guy Prof. Harran is so unprofessional! He should have given special instructions to this kid. It is not uncommon these kinds of clowns are becoming scientists and professors and what not?”

“It is really sad to die like this, Kannan. Are they filing a law suit against, UCLA?”

“தெரியலை, நிச்சயம் அட் லீஸ்ட் ஒரு மில்லியன் டாலராவது வாங்கலாம். வாங்கி என்ன செய்ய?”

“போன உயிர் திரும்பி வராதுதான்”

-தொடரும்

எம் எஸ் விஸ்வநாதனும் மலையாளியா?!!

தமிழ் சினிமாவில் பிறப்பில் மலையாளிகளின் ஆக்கிரமிப்பு நம்ப முடியாத அளவு இருக்கிறது. எம் ஜி ராமச்சந்திர மேனன் மலையாளி என்று உலகமறியும்.

அந்தக்காலத்து நடிகைகளில் 90% மலையாளிகள்தான். பத்மினி, கே ஆர் விஜயா, ஸ்ரீவித்யா, ராதா, அம்பிகா, நதியா, ரேவதி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில்தான் காலம் சென்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கே.பாலாஜி ஒரு மலையாளி என்றறிந்தேன். இப்போ, எம் எஸ் விஸ்வநாதனும் மலையாளி என்று பாலச்சந்தரின் இந்த “ஸ்டேட்மெண்ட்” ல இருந்து அறிகிறேன்! மன்னிக்கவும் எனக்கு இப்போத்தான் தெரியும்!

M S Viswanathan is the biggest gift, Kerala has given us!


It is really unbelievable, the Keralites' domination in Tamil Cinema!

http://en.wikipedia.org/wiki/M._S._Viswanathan

Thursday, August 6, 2009

நீங்க ஒரு செக்ஸிஸ்ட் தெரியுமா? -கடலை கார்னர் (5)

"அவளுக்கு ஒண்ணுமில்லை. அவளைப்பத்தி ஒரு விசயம்"

"அதான் என்னனு கேட்டேன்"

"அப்படியா?"

"சரியான ட்யூப் லைட் நீங்க, கண்ணன்"

"நீ மட்டும் என்ன? சோடியம் வேப்பர் லாம்ப்"

"அப்படினா?"

"அப்படித்தான். நான் என்ன சொன்னாலும் தப்பா புரிஞ்சுக்கவ. இப்போ அவ என்னிடம்தான் வொர்க் பண்ணுறா. தெரியுமா?”

“நல்லாவே தெரியும். அவதான் டெய்லி வந்து கம்ப்ளய்ன் பண்ணுறாளே”

“என்ன சொன்னாள்?”

“நீங்க ஒரு மோசமான பாஸுன்னு. சரி சரி சொல்லுங்க ஸ்டெய்ஸிக்கு என்ன? ஒழுங்கா வேலை செய்றாளா? ரொம்ப விரட்டுறீங்களா அவளை? இப்போ வந்தாலும் வருவா இங்கே"

"ஆமா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாட்டாலும் ஈகோ மட்டும் உங்க "பட்" டைவிட பெருசா இருக்கும். அது ஏன்?"

"எனக்கா?! என்ன கொழுப்பா? நான் என்றுமே என் ஈகோவை காட்டியதில்லை. காட்டினால் நீங்க தாங்கமாட்டீங்க! பாவம் நீங்கனு அட்ஜஸ்ட் பண்ணிப் போறேன்"

"ஆமா, அப்பபோ உன்னை நீயே உன் புகழ் பாடிக்குவ? அதெப்படி?"

"நானா? நீங்கதான் தற்பெருமை பாடுவதில் மன்னன்"

"நான் உங்களுக்குனு பொதுவாத்தானே சொன்னேன்? உன்னையா சொன்னேன், ட்யூப் லைட்?"

"பொதுவனா? நான் இல்லையா அதிலே?"

"உன்னைப் பத்தி உன்னிடமே குறை சொல்லுவேனா? நீ ரொம்ப நல்ல பொண்ணு இல்லையா?"

"சொன்னா கோவிச்சுக்காதீங்க! நீங்க ஒரு செக்ஸிஸ்ட் தெரியுமா? அதிலேயும் ரொம்ப மோசமான கேஸ்"

"செக்ஸிஸ்ட்டா? அப்படித்தான் தோனுது. நம்ம கல்ச்சர்ல இருந்து வந்து செக்ஸிஸ்ட்டா இருப்பதுதான் நார்மல். அப்போ நான் நார்மலாத்தான் இருக்கேன் போல"

"ஆனா நீங்க கொஞ்சம் லூசாச்சே! அதுவும் நம்ம கல்ச்சர்ல நார்மல்தானோ?!"

"உனக்கு உண்மையிலேயே கொழுப்பு அதிகம்தான்"

"என்ன என்ன?"

"கொழுப்பு அதிகம்னேன்"

"அது சரி, எங்கேயோ பார்த்துண்டு சொன்னீங்களே அதான் கேட்டேன்"

"நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கோ. அதுக்கு நானா பொறுப்பு?”

“சரி சரி சண்டையை விடுங்க. ஐ நோ யு ஆர் எ க்ரூக்”

“ என்ன வேணா சொல்லிக்கோ, நெனச்சுக்கோ போ! சரி உன் ஃப்ரெண்டு பத்தி கேளு. போன வாரம் ஒரு ரீக்ரிஸ்டலைசேஷன் பண்ணினாள். ஈதர் வச்சு. ஹீட் கன் வச்சு பண்ணுறா”

“ஹாட் ஏர் ப்ளோவர் வச்சா?”

“ஆமா. அவகிட்ட நான் போய் மெனக்கட்டுச் சொன்னேன். “Stacy! Please don't heat using heat gun. Ether is highly inflammable! It has a very low flash point. It will catch fire. Use hot water for crystallization” நு பொறுமையா சொன்னேன்".

“உங்களுக்கு ஏன் அத்தனை அக்கறை?”

“அப்புறம் எல்லோரும் ஒண்ணாப் போய் சேர்ந்துடுவோம்! சொல்றதக் கேளு. அதுக்கு அவ சொன்னா, “No, Dr.kannAn. This heat gun is specially designed and it is not that dangerous blah blah” னு ஆர்க்யூ பண்ணுறா! “சரி, என்னனு தொலைடி” நு சொல்லீட்டு நான் போயிட்டேன். ஷி ஹாஸ் எ பிக் ஈகோ”

“அவகிட்ட எதுக்கு தேவையே இல்லாமல் ஜொள்ளு? நல்லா வாங்கி கட்டி இருக்கீங்க! நல்ல மூக்கு உடை!”

“சத்தியமா இது ஜொள்ளு இல்லை. இட் இஸ் டேஞ்சரஸ், பிருந்தா!”

“சரி சொல்லுங்க”

“ஒரு 30 மினுட்ஸ் இருக்கும், திடீர்னு அவ பக்கம் இருந்து ஒரு சத்தம் கேட்டுச்சு. அங்கே போய் பார்த்தா, அவ ஃப்ளாஸ்க் தீப்பிடிச்சு எரியுது! ஓ மை காட்! னு கத்துறா. தீயை அணைக்கவும் தெரியலை. அப்படியே ஷாக் ஆகி முழிக்கிறா. அப்புறம் நான் போய் ஒரு டவளை தூக்கிப் போட்டு தீயை அணைச்சேன்”

“அவ என்ன பண்ணுறானு பார்த்துண்டே இருப்பீங்களா, கண்ணன், பின்னால இருந்து?”

“yeah I watch her butt!”

“Did you? Really?”

“நீ சும்மா வம்பு பேசாமல் இருக்க மாட்டியா? சொல்றதைக் கேளு! தீயை அணைச்சப்பிறகு சொல்லுறா “You warned me, Kannan. I should have listened to you! I am sorry” நு வழிஞ்சா”

“பாவம்”

“என்ன பாவம்? Experienced people சொன்னா கேக்கனும். எதுக்கு இந்த விதண்டாவாதம்?”

“நீங்க சும்மா ஜொள்ளுவிட சொன்னீங்கனு அவள் நெனச்சிருக்கலாம்”

“எங்களுக்கு வேற வேலையே இல்லை பாரு! Anyway, I just said, “please use hot water at least next time” னு நொல்லீட்டு வந்துட்டேன்.

“Why cant you just do your business, Kannan. Why do you watch her from behind?”

“That is my business. I need to watch her ass. It is my responsibility to watch the inexperienced coworkers so that they don't screw up anything badly. That is part of my job, madame”

“Does it have to be a beautiful girl with a sexy butt?”

“Ha ha ha. I did not think she is beautiful until now. இஸ் ஷி பியூட்டிஃபுல்?”

“ரியல்லி? சரி அப்போ நான் அவ கிட்ட சொல்லுறேன்”

“என்ன சொல்லப்போற?”

“அவ ரொம்ப சுமாரா இருக்காள்னு நீங்க சொன்னதா?”

“I don't think she would care what I think of her. But why do you have to do that?”

“Just to cause some trouble to you”

“Well, she will get a wrong message”

“What message?”

“That you have a crush on me?”

“உங்களுக்கு நெனப்புத்தான்”

“சரி ஆஃபிஸ் ஸ்பேஸ் பார்த்தியா?”

“சொல்ல மறந்துட்டேனே. நான் உங்களுக்கு லன்ச் வாங்கி தந்துடுறேன்”

“படம் பிடிச்சதா?”

“நல்லா இருந்துச்சு, கண்ணன். கொஞ்சம் அடல்ட் content லாம் இருந்தாலும் பரவாயில்லை”

“Anyway, nothing like a free lunch! But I earned it this time”

“எங்கே, எப்போனு யோசிச்சு சொல்லுங்க, போகலாம்”

“ஏய் உன் ஃப்ரெண்டு ஸ்டெய்ஸி வர்ரா”

“Hi Stacy!”

“Hi Bridndaa! Hi Dr. KannAn”

“How is it going, Stacy?”

“It is a hectic day, Brindha. I am working my ass off to finish this project”

“Sounds like somebody is having a case of Monday” Kannan laughed at her.

“That is from Office space! You watched “Office Space” ? That is a hilarious movie”

“He also suggested me to watch it. I watched it too past weekend, Stacy”

“Stacy! You should not wear shorts in the lab”

“Kannan! You are not her boss in the canteen”

“Don't be mean to him, Brindaa! I know, Kannan. I just changed it now, and I will go back with jeans when I go to the lab and setting up the lab in fire!”

“Ha ha ha. You are not messing with ether anymore! You are a quick learner, Stacy”

“Thanks”

“OK Kannan. See you later. We girls have some girls stuff to talk”

“You want me to get lost? Now that you have got a better company, huh?”

“Yeah. Could you please?”

“உன்னை கவனிச்சுக்கிறேன் இரு, பிருந்தா! See you later Stacy”

-தொடரும்

Tuesday, August 4, 2009

கடவுளுக்கு உணர்ச்சிகள் உண்டா? -கடலை கார்னர் (4)

"கடவுள் இருக்காரா கண்ணன்?”

“ஏன் பிருந்தா, இன்னைக்கு வேற யாரும் கிடைக்கலையா உனக்கு?”

“ஆமா, நீங்கதான் மாட்டினீங்க! சொல்லுங்க!”

“என்னைக்கேட்டா இதெல்லாம் ஒவ்வொருவருடைய நம்பிக்கைதான்னு சொல்லுவேன். கடவுள் அவர் பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும். விடு அவரை பாவம். எனக்கு எதிலுமே நம்பிக்கை இல்லை”

“எதுலையுமேவா?”

“எதுலையுமே”

“உங்க மேலே?”

“அதையும் சேர்த்துத்தான்”

“சரியா போச்சு! சரியான லூசா நீங்க? சரி, கடவுள் நம்பிக்கை தப்பா, கண்ணன்?”

“நம்ம யாரு இன்னொருவர் நம்பிக்கையை சரி, தப்புனு சொல்ல? It is very personal. It does not help me much. But it does help some people a lot. So, I cant say, it is right or wrong. As long as someone does not come and tell me to believe or not to believe, I care less”

“நம்பனும்னு சொன்னால்?”

“அது தப்புதான். மனிதர்கள் ஒவ்வொரு மாதிரி. அவர்கள் மனதும் வேற வேற மாதிரி”

“சரி, உங்கம்மா உங்களை நம்பனும்னு சொல்ல மாட்டாங்களா?”

“நம்பிக்கை இருக்கனும்னு நினைப்பாங்க. ஆனால் ஃபோர்ஸ் பண்ண மாட்டாங்க!”

“They never preached you religion!!!”

“இல்லையே, பிருந்தா”

“நீங்க ப்ராமினா, கண்ணன்?”

“ஏன் கேக்கிற?”

“சும்மா சொல்லுங்க. நீங்க ப்ராமினா?”

“இந்தக்காலத்தில் அதெல்லாம் எதுக்கு? அதெல்லாம் சொல்ல மாட்டேன். நீ ப்ராமின் தான் எனக்குத்தெரியும், பிருந்தா”

“எப்படி?”

“தெரியும்!”

“எப்படி? நான் நான்வெஜ் எல்லாம் சாப்பிடுவேனே?”

“அப்போ நீ ஒருவேளை பெங்காளி ப்ராமினோ?”

“ஹா ஹா ஹா! நான் சுத்தமான தமிழச்சிதான், கண்ணன்”

“அப்போ உங்க ஆத்துல உனக்கு ரிலிஜன் ப்ரீச் பண்ணினாளா?”

“பொதுவா ப்ராமின்ஸ்ல அப்படித்தானே? ஹிந்துக்களிலேயே ப்ராமின்ஸ்தான் ரிலிஜன் ரிலிஜன் நு கட்டி அழறா, இல்லையா? ஹிந்துயிஸத்தில் உள்ள எல்லா கண்றாவி, நான்சென்ஸ் எல்லாத்தையும் டிஃபெண்ட் பண்ணுறது பொதுவா ப்ராமின்ஸ்தான். எனக்கு ரிலிஜன் டீச் பண்ணாம விடுவாளா? பண்ணினா.”

“ஆனால் நீ அப்படியெல்லாம் ஒண்ணும் ரிலிஜியஸா ஆகலையே, பிருந்தா. அதெப்படி?”

“அதென்னவோ ரிலிஜன் மேலே எல்லாம் ஒண்ணும் பெரிய பற்று வரலை, கண்ணன். நான் அதையெல்லாம் இந்தக்காதில் வாங்கி இந்தக்காதில் விட்டாச்சு. சரி, என்னைப்பற்றி பேசுவதை கொஞ்சம் விட்டுறலாமா, ப்ளீஸ்?”

“எந்தக்காதில் வாங்கின?”

“இந்தக்காதில்!"

" எங்கே காட்டு பார்க்கலாம்?”

“இந்தக் காதில்தான்”

“உன் காது மடல்கள் அழகா இருக்கு”

“ஆரம்பிச்சுட்டீங்களா?”

“சரி, இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேனே, ப்ளீஸ்?”

“சொல்லித்தொலைங்க”

“நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க, பிருந்தா”

“ஏன், நேத்து அழகா இல்லையா?”

“நேத்து சண்டே இல்லையா? உன்னை பார்க்கலை. என்ன ட்ரெஸ் போட்டு இருந்த?”

“அதெல்லாம் எதுக்கு?”

“ஏன் வீட்டில் ரொம்ப அரைகுறையா இருந்தியா?”

“நீங்க ரொம்ப மோசம் கண்ணன். பெரிய மனோதத்துவ ஞானினு நெனப்பு உங்களுக்கு! இப்போ எதுக்கு இந்த ஐஸ்?”

“ஏய்! நாந்தான் அழகா இல்லை. அழகா உள்ளவர்களை கொஞ்சம் காம்ப்ளிமெண்ட் பண்ணுவதும் தப்பா?”

“நான் தப்புனு சொல்லலையே”

“மோசம் னா என்ன அர்த்தம்?”

“சும்மா தேவையே இல்லாமல் ஐஸ் வைக்கிறது. சரி, அதைவிட்டுட்டு வாங்க! இப்போ கடவுளை கொஞ்சம் கவனிப்போம்”

“சரி, நான் கேக்கிறேன். கடவுளுக்கு உணர்ச்சிகள் உண்டா, பிருந்தா?”

“அப்படினா?”

“அவருக்கு சிரிப்பு, அழுகை, கோபம், எரிச்சல், நகைப்பு இதுபோல் உணர்ச்சிகள் வருமா?”

“தெரியலையே. அதெல்லாம் வராதுனு நினைக்கிறேன்”

“அப்போ காமம், காதல் போன்ற கெட்ட பழக்கம்லாம்”

“அதெல்லாம் கெட்ட பழக்கமா?”

“இல்லையா பின்னே?”

“சரி, தெரியலை. அதெல்லாம் சிற்றின்பம், இல்லையா? அதெல்லாம் வராதுனு நெனைக்கிறேன்”

“அப்போ கடவுள் என்ன உணர்ச்சியே இல்லாத ஒரு ஜடமா?”

“என்னைக் கேட்டால்? நானா டெய்லி எனக்கு அதைக்கொடு இதைக்கொடுனு கேக்கிறேன்?”

“உனக்கு என்னதான் நல்லாத் தெரியும்? நல்லா மேக் அப் போடுவியா?”

“ஏன் மேக் அப் போட்டா என்ன? அதுவும் தப்பா?”

“ஒண்ணுமில்லை”

“ஏன் அப்படி ஒரு மாதிரியா பார்க்குறீங்க?”

“எப்படி பார்த்தேன்?”

“---”

“ஏய், உன் ஃப்ரெண்டு ஸ்டெய்ஸி இருக்கா இல்லை?”

“ஆமா, இருக்கா.. அவளுக்கென்ன இப்போ?”

-தொடரும்