Friday, March 27, 2015

கோடங்கி தளம் நடத்திய இக்பால் செல்வனுக்கு அழைப்பு!

கோடங்கி தளம் நடத்திய இக்பால் செல்வனை வழக்கம்போல மறுபடியும் பதிவுலகில் காணவில்லை. இதுபோல் அவர் மறைவது இது மூனு அல்லது நாலாவது முறை! பொதுவாக இவர் தளமும் இவரோட சேர்ந்து மறைந்து போகும். அதே நிலைதான் இப்போதும்! நண்பர் இக்பால் செல்வன் நடத்திய கோடங்கித் தளமும் முடக்கப் பட்டதாகத் தெரிகிறது. அவருடைய ட்விட்டர் அக்கவுண்டும் வேலை செய்யவில்லை!

இக்பால் செல்வனுடன் அதிகமாக விவாதம் செய்தவன், அவருடன் அதிகம் சண்டை போட்ட ஆட்களில்  நானும் ஒருவன் னு சொல்லலாம். இருந்தாலும் இக்பால் செல்வன் மேல் ஒரு தனி தமிழன்பு உண்டு எனக்குனு உங்களுக்குத் தெரியுமா என்னனு தெரியவில்லை!
.
என்னடா இக்பாலை ஆளையே காணோமே? னு நினைத்துக் கொண்டு இருக்கையில் அனானியாக ஒரு ஆள் வந்து இக்பால் செல்வன் பற்றி மிகவும் அதிர்ச்சியான செய்தியைச் (ஒரு புரளியைப் பரப்பிக்கொண்டு) சொல்லிக் கொண்டு அலைகிறார். எப்பொழுதுமே பதிவுலகில் இக்பாலின் எதிரிகளுக்குப் பஞ்சமில்லை! அதனால் இந்த  அனானி சொல்வதையெல்லாம் நான் நம்புவதாக இல்லை.

தயவு செய்து சகோ இக்பால் செல்வன் எங்கிருந்தாலும் வந்து ஒரு பின்னூட்டம் இடவும். ஒருவேளை அவர் பதிவுலகில் இருந்து நிரந்தர ஓய்வு எடுத்துவிட்டாரென்றால்  அவருடன்  தொடர்பில் இருக்கும் நண்பர்கள் , நலம் விரும்பிகள், தயவு செய்து  அவரை இங்கே அனுப்பி வைக்கவும்.

நன்றி, வணக்கம்! :)

Wednesday, March 25, 2015

வருணின் உளறல்கள்! உளறி ரொம்ப நாளாச்சு இல்ல? (7)

பதிவெழுதி பல நாட்களாகிவிட்டது. மாதங்களாகிவிட்டதோ? என்ன காரணம்? வேலைப்பளு அதிகமாகிவிட்டது! ஆமா, பதிவுலகில் எல்லாருக்கும் நல்ல காலம் பொறந்திருச்சு! ஒழிஞ்சான் அடாவடி வருண்! கடைசியா பகவான் அருளிட்டான்னு நிம்மதியா இருந்தீங்களா? :-)

என்ன பண்ணுறது? ஆமாங்க உள்ள வேலைகளைப் பார்க்கவே நேரம் இல்லை என்கிறபோது "பொழுது போகாமல்" வந்து பதிவெழுதுவது எப்படி சாத்தியம்? "அடேங்கப்பா! ஆமா, அப்படி என்ன வெட்டி முறிக்கிறீர்? " னு கேட்டால் என் சொந்தக் கதை சோகக் கதை எல்லாம் சொல்லி ஒப்பாரி வைக்கப் போவதில்லை. என் வேலை/என் பிரச்சினை அது என்னோட போகட்டுமே? :)

 சமீபத்தில் என் பி ஆர் ல ஒரு இண்டெர்வியூ கேட்டேன். நான் கேட்கும் பொழுது அந்த செலிப்ரிட்டி இந்தப் பாடலைப் பாடினார்.

This world is not my home I'm just a passing through
இது ஒரு தேவாலயத்தில் பாடும் க்ரிஷ்டியன் பாடல்னு நினைக்கிறேன். இதுக்கு முன்னால இந்தப் பாடலைக் கேட்டு இருக்கேனா என்னனு தெரியலை. இந்த முதல் வரி நல்லாயிருந்தது

 பதிவுலகமும் அப்படித்தானே? இது நமக்கு நிலையான ஒரு "வீடு" கெடையாது. சும்மா நாம் கடந்து போகிறோம். ஏகப்பட்டபேர் கடந்து போயிட்டாங்க. நாம் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம். சரியா?

*  என்ன வருண்? இது ஒரு கிருஷ்டியன் பாட்டா?  ஏன் இந்து மதத்திலும் இதே கருத்தை சொல்லியிருக்காங்களே? தெரியாதா உங்களுக்கு? கீதைலகூட கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருக்காரே?

*  வருண்! தமிழ் இலக்கியத்திலே இதே கருத்தைச் சொல்லியிருக்காங்களே? நீங்க இது படிச்சது இல்லையா?

ஒரு நல்ல விசயத்தைக் கேட்டதாக சொல்ல வந்தால், இதுமாதிரி பிரச்சினையைக் கிளப்பும் அற்பர்கள் நிறைந்ததுதான் இவ்வுலகம்?  இல்லையா?

ஒரு முறை ஒரு கிருஷ்டியன் நண்பன் ஆக்ஸிடெண்ட்ல இறந்துவிட்டான். அவன் உடலை சென்னைக்கு எடுத்துச் செல்லும்போது நாங்களும் போனோம். அப்போ அவங்க அடக்கம் செய்யுமுன்னே ப்ரேயர் எல்லாம் பண்ணினாங்க. அதாவது கொஞ்ச வயதிலேயே அவனை ஜீசஸ் அழைத்துக்கொண்டார். காரணம்? அவன் வாழ்க்கை முழுமையடைந்துவிட்டது. ஜீசஸ் அவனைப் பார்த்துக்குவார். இப்படி ஒரு கோணத்தில் இருந்தது அவன் கலந்துகொண்ட அவனுடைய அந்த கடைசி ப்ரேயர்..எனக்கு இந்தவிதமான "மன ஆறுதல்" அடைந்துகொள்ளல் பிடிச்சிருந்ததுனுதான் சொல்லணும்..

இதைப்பற்றி ரெண்டு ஆத்துப் பசங்க (நண்பர்களிடம்) நல்லவிதமாக ரெண்டு வார்த்தை  சொல்லிப் பகிரும்போது (அதாவது, எப்படியோ அவ்வளவு பெரிய இழப்பை இதுபோல் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லி ஆறுதல் அடைகிறார்களே.. பரவாயில்லை..).. உடனே  அவனுகளுக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிச்சதே பார்க்கலாம். அதாவது இஸ்லாம், கிருத்தவம், புத்தமதம் போன்றவற்றில் உள்ள நல்ல விடயங்களை இதுபோல் சிலரால், முக்கியமாக பார்ப்பனர்களால் பாராட்ட முடியாதுபோல என்பது தெளிவானது. ஏன் இவனுக இப்படி இருக்கானுக? Why are they rejecting it immediately? Something wrong with these guys? Hindu fanatics?  How do their parents bring these guys up? As closed-minded as they are?

 எதையோ சொல்ல வந்தேன்... இந்த சனியன் பிடிச்ச மதவெறிபிடிச்ச பார்ப்பானுக ஞாபகத்துக்கு வந்துட்டானுக!
-------------------------------------

ஒரு முறை ஒரு மிடில் ஈஸ்ட்ல இருந்து வந்து  அமெரிக்காவில் செட்டில் ஆன ஒரு இஸ்லாமிய கோவொர்க்கரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அந்தாளைப் பற்றி பலவிதமான புரளிகள் அவரிடம் வேலை பார்த்த அமெரிக்க கலீக் (பெண்கள்) சொல்லியிருக்காங்க. அது ஒரு பக்கம் இருக்கட்டும். அவரிடம் சாவைப்பற்றி பேசும்போது அவர் சொன்னார்..அவர் செத்ததும் அவர் உடலை அவர் நாட்டில்தான் புதைக்கணுமாம். அதுவும்  எந்த இடத்தில் தன்னைப் புதைக்கணும், எப்படிப் புதைக்கணும்னு என்று அதற்கான  ஏற்பாடெல்லாம் பண்ணி இருக்கிறாராம். பிறந்த மண் ஒரு சிலருக்கு செத்தபிறகுகூட  அத்தனை முக்கியமாக இருக்கிறது என்று ஆச்சர்யமாக இருந்தது. இதுபோல் உங்களில் பலரும்கூட விரும்பலாம்.  எனக்கெல்லாம் அப்படி எல்லாம் தோன்றியதே இல்லை. மதப்பற்று, நாட்டுப்பற்று, பிறந்த மண் பற்று இதெல்லாம் இல்லாத "நவீன புத்தர்" தான் நான்னு சொல்ல வரலை. அப்படி ஏதாவது தவறாப் புரிஞ்சுக்காதீங்கப்பா. எங்கே என் சடலம் புதைக்கப்படணும்னுகூட ஆசைப்படத் தெரியாமல் நான் இருப்பதை என்னுடைய ஒரு குறைபாடாகத்தான் நான் பார்க்கிறேன்.

-----------------------------------------

 அமெரிக்காவில் வாழும் வெள்ளையர்கள் ஓய்வு பெற்றபிறகு எப்படி வாழணும்? என்பதை இப்போவே யோசித்து, வயதான காலத்தில் ஓரளவுக்கு பணக்கஷ்டப்படாமல் வாழணும்னா அதற்கு ஒரு மில்லியன் அல்லது அரை மில்லியன் டாலராவது சேர்த்து வைக்க வேண்டும் என்று கணக்கிட்டு,  சம்பாரிப்பதில் ஒரு பகுதியை ஓய்வு காலத்திற்காக இப்போவே சேமித்து வருகிறார்கள். ஆனால் இவர்களே அடிக்கடி  "ஐ காண்ட் அஃப்போட்" என்பார்கள். உடனே அவர்கள் சொல்லும் அப்பொருளை வாங்க இவர்கள் வசதியற்றவர்கள் போல என்று நாம் நினைத்துவிடக்கூடாது! It's about prioritizing . அவர்கள், பின்னாளில் சிரமம் இல்லாமல் வாழணும் என்று இதுபோல் அனாவிசய செலவைக் குறைத்துக் கொள்ளுகிறார்கள் என்பதே அதற்கு அர்த்தம்.  நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப்பொறுத்து நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுகிறோம்.  இன்னொரு கோணத்தில் பார்ப்போமானால்  நாமே விரும்பி அதிகமாக்கிக் கொண்ட நம் வேலைப் பளுதான் நம்முடைய பதிவுலக உலாவைக் குறைக்கக் காரணமாகவும் இருக்கிறது என்பதும் உண்மைதான்,

------------------------------

ஒரு சிலர் உலகம் முழுவதும் சுத்தி வரணும்னு ஆசைப்படுறாங்க. அந்த நாட்டுக்குப் போகணும். ஹவாயி போகணும், ஐரோப்பா போகணும்! அன்றாட வாழ்க்கையில் கஞ்சமாக இருந்துவிட்டு, இப்படி ஊர் சுற்றும்போது ஏரோப்ளேன் டிக்கட், ஹோட்டல் ரூம்னு பத்துமடங்கு செலவழிப்பாங்க.
எனக்கெல்லாம்  routine தான் வாழ்க்கையில் பிடிச்ச ஒண்ணு. வேலைக்குப்  போகணும், வரணும்,. முடிந்தால் சாகிறவரைக்கும் வேலை பார்த்துக் கொண்டே இருக்கணும்! உலகம் சுத்திப் பார்க்கணும், அந்த நாட்டுக்குப் போகணும், இந்தக் காட்டுக்குப் போகணும், கப்பலில் ஏறி உலகம் சுத்தி வரணும், செவ்வாய் ல போயி ஹைட்ரஜன் ஒரு பலூன்ல நிறைத்துக் கொண்டு வரணும்  என்கிற ஆசை எல்லாம் கெடையாது.

உண்மையச் சொன்னால் அமெரிக்காவையே நான் சுத்திப் பார்த்தது இல்லை? உண்மைதான். அமெரிக்கா, நான் வாழும் நாடுனு ஆகிவிட்டது. அதை என்னத்த சுத்திப் பார்க்க? இன்னொன்னு தெரியுமா? நான்  நம்ம நாட்டிலேயே தாஜ்மஹால்கூட பார்த்தது இல்லை.  இங்கே நயாகராவும் பார்த்ததில்லை.. இந்தியா விசிட் பண்ணும்போதுகூட தாஜ்மஹால் பார்க்கணும், ஆக்ரா போகணும்' டெல்லில எப்படி பஸ்ல பெண்ணை கற்பழிப்பாங்கனு போய்ப் பார்க்கணும்னு தோனாது. வந்தோமா அம்மா அப்பாவிடம் பேசி, திட்டி சண்டை போட்டு நேரம் செலவழிச்சோமா.. நாலு நண்பர்களைப் பார்த்தோமா னுதான் பொழுது போகும். அப்புறம் கொஞ்ச நாள்ல எப்போடா திரும்ப "நாம் ஊர்" வந்து சேருவோம்னுதான் இருக்கும். ஒரு சிலர் இந்தியா போனா அழுது கொண்டேதான் திரும்பி வருவார்கள். பொறந்த நாட்டு மேலே அம்பூட்டுப் பற்று! எதுக்கு இங்கே வந்து கஷ்டப்பட்டுக்கிட்டு இங்கேயே இருக்காங்கனு தெரியலை, பாவம்.
------------------------------

 எனக்கு ஞாபக சக்தி கொஞ்சம் அதிகம். அதாவது "எண்" எல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியாது. நடந்த நிகழ்வு போன்றவைகள் எளிதாக மறக்காது. இதனால் பெரிய வம்பும் இருக்கிறது. நான்  புதிதாக எதிர்கொள்ளும் ஒவ்வொரு சின்னச் சின்னப் பிரச்சினைகள் எல்லாமே நான் ஏற்கனவே எதிர்கொண்டதாகவே தோன்றுகிறது. நான் சிந்திக்கும் சிந்தனைத் தொடர்களே  ஏற்கனவே சிந்தித்ததாக எனக்குத் தோன்றுது. அதைவிடக் கொடுமை என்னனா கண்ட கனவுகூட திரும்ப வருவதுபோல் இருக்கு. :)
ஒரு சிலர் வாசிப்பதில், பெருசா ஏதாவது சாதிப்பதில் கவனம் செலுத்துவார்கள்.என்னைப் போல் "அற்பர்கள்" எதை எடுத்தாலும் சிந்தித்து சிந்தித்து, "சிந்ந்தித்து வீண் போனவர்கள்"  என்று சொல்லலாம். இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால், நாம் சிந்தித்த அதே பிரச்சினையை சிந்தித்து இன்னொருவர் பகிரும்போது, நான் இதைப்பத்தி ஏற்கனவே யோசித்துப் பார்த்து இருக்கிறேன் என்கிற உண்மையைச் சொல்ல வேண்டி வருகிறது. அப்படிச்  சொன்னால் அதைக் கேட்பவர்களுக்கும் பிடிக்காது. நாகரீகம் கருதி அவர்கள் சொல்லுவதைப் புதிதாகக் கேட்பதுபோல் ஆவலுடன் கேட்பதுபோல் நடிப்பதுவும் எனக்குப் பிடிக்காது. :)

-------------------------------

எங்கே பார்த்தாலும் கேன்சரா இருக்கு.

கலாநிதிணு ஒரு டாக்டர்  ஸ்டான் ஃபோர்ட்ல லங் கேன்சரில் இறந்ததாக முகுந்த் அம்மா எழுதி இருந்தாங்க..அதில் பின்னூட்டத்தில் சொன்ன விசயங்கள் போக சில விசயங்களைச் சொல்கிறேன்.

நான் ரொம்ப க்ளோசாப் பழகுறவங்கனு பார்த்தால் ரொம்ப கம்மியான ஆட்கள்தான். பார்ப்பவர்களையெல்லாம் நண்பர்களாக்கிக் கொள்ளும் ஆள் இல்லை நான். சில ஆண்டுகளுக்கு முன்னால ஒரு நல்ல நண்பர், (அமெரிக்கர்தான்) தனக்கு ஸ்கின் கேன்சர் இருப்பதாக உறுதியாகச் சொல்லீட்டாங்கனு சொன்னார். நல்லவேளை, ரொம்ப சீக்கிரமே கண்டு பிடித்துவிட்டதால், கண்ட்ரோல் பண்ணிடலாம் . இருந்தாலும் அதற்குத் தேவையான மெடிக்கல் ப்ரசுஜரை செய்யணும் என்றார். இப்போ அதைப்பற்றி அவரிடம் நான் எதுவும் கேட்பதில்லை. இதுவரைக்கும் நல்லா ஹெல்த்தியாகத்தான் இருக்கிறார். ஒவ்வொரு சமயம் அவர் அப்படி தனக்கு ஒரு நோய் இருப்பதாகச் சொன்னாரா? இல்லை நானே கற்பனை பண்ணிக்கொண்டேனா? என்று சந்தேகம் வருமளவுக்கு அவர் ஹெல்த்தியா இருக்கார்னா  பார்த்துக்கோங்க.

இன்னொரு அம்மா. குடும்ப நண்பிதான். (இவரும் அமெரிக்கர்) இவருடைய மகனுக்கு ஏதோ கேன்சர் இருப்பதாகவும் ட்ரீட்மெண்ட்  எடுத்துக்கொண்டு இருப்பதாகவும்  சில வருடங்கள் முன்னால சொன்னார்..  இன்றுவரை அவருடைய மகனும் தொடர் சிகிச்சை பலனளித்து நல்லாத்தான் இருக்கிறார்.

இது போதாதுனு கடந்த வாரம் எனக்கு நல்லாத் தெரிந்த இன்னொரு அம்மா, (இவரும் அமெரிக்கர்தான்) அவுங்களுக்கு ப்ரெஸ்ட் கேன்சர் இருக்கதாக  annual mammogram check up செய்யும்போது கண்டுபிடிச்சு இருக்காங்கனு சொல்றாங்க. இதுவும் "ஏர்லி ஸ்டேஜ்"லேயே கண்டு பிடித்துவிட்டதாகவும், இருந்தாலும் அதற்கான, ரேடியேஷன், சர்ஜரி எல்லாம் செய்யணும்னு சொல்றாங்க.

உண்மையிலேயே குழப்பமாக இருக்கிறது. நான் க்ளோஸா பழகுறவங்களே ரொம்ப ரொம்ப கம்மியானவர்கள். அவர்களுக்குள் இத்தனை  பேருக்கு கேன்சரா?!!! யு எஸ்ல தான் இப்படியா? இல்லைனா உலகம் முழுவதும் இப்படித்தானா??