Wednesday, July 30, 2008

என்னுடைய முதன் முதல்...- 5

முதலில் என்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொண்ட பரிசல்காரருக்கு மிக்க நன்றி :). முதன் முதலாக என்று எழுத நிறைய இருந்தாலும், முக்கியமான மூன்று அனுபவங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

என்னுடைய முதல் நில நடுக்கம்: இன்று எழுத தொடங்கிய உடனே,'முதன்முதலாக' என்று சேர்த்துக்கொள்ள புதிதாக ஒன்று கிடைத்தது, என்னுடைய முதல் நில நடுக்க அனுபவம். காலை 11.45 அளவில், திடீரென என் கம்ப்யூட்டர், டெஸ்க், சேர் எல்லாம் குலுங்குவது போல ஒரு உணர்வு. என்னுடைய அலுவலக கட்டடம் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது(Earth Quake safe).அதாவது,நிலநடுக்கத்தால் ஏற்படும் பக்கவாட்டு அதிர்ச்சிகளையும் தாங்கும்.கட்டட சுவர்களின் எடை குறைவாக இருக்க மரத்தால் கட்டி இருப்பார்கள், இதனால் யாராவது 'வெயிட் பார்ட்டிகள்' நடந்து போனால் கூட அந்த பகுதியே கொஞ்சம் ஆடுவதை உணரலாம். அது போல ஏதாவது வெயிட் பார்ட்டி ஓடி இருக்கும் என்று நினைத்துக்கொண்டே இருந்த வேளையில் ஸ்பீக்கரில் திடீர் அறிவிப்பு. நில நடுக்கம், Magnitude : 5.9 ஏற்பட்டிருக்கிறது என்றும், யாரும் பதட்டமடையவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது. பிறகென்ன, அறிவிப்பை கேட்டவுடன் நான் ரொம்ப பதட்டமடைந்தேன். :)இது நான் உணர்ந்த முதல் நிலநடுக்க அனுபவம்!


முதல்வாகனம்: நான் முதன் முதலாக வேலைக்கு சேர்ந்தவுடன் வாங்கிய முதல் வாகனம் டொயோட்டா கொரோலா 2004. ஒரு புகழ்பெற்ற கார் டீலர் ஷிப் கடைக்கு போய் ஒரு பத்து நிமிடத்திலேயே அந்த பேஜ்/கோல்ட் கலர் கொரோலா என் கண்ணில் பட்டது. பார்க்க காம்பேக்டாக, அழகாக இருப்பதோடு, மைலேஜும் அதிகமாக தந்தது.எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ரொம்ப விரும்பிய 6 CD சேஞ்சர் இருந்தது.வீட்டுக்கு வாங்கி வந்தவுடன் முதலில் என் பெற்றோருக்கு கார் பற்றி தெரிவித்தேன். அப்பா ரொம்ப ஆர்வமாக கேட்டுக்கொண்டார். அம்மா அசுவாரஸ்யமாய், "பொம்பளைப்பிள்ளை ஒரு புடவையோ, நகையோ வாங்கிக்கக்கூடாதா? கார் எதுக்கு?" என்று சலித்துக்கொண்டார்.

கார் ரொம்ப நன்றாகவே ஓடியது, ஆனால் ஒரு பிரச்சினை. ஃப்ரீவேயில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு போகும் போது, சில சமயம் இந்த வீணாப்போன எதிர்காத்து 'ஒருத்தி ஓட்டுகிறாளே' என்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் கொரோலாவை என் லேனை விட்டு மற்றொரு லேனுக்கு தள்ளியது, சமாளித்து 2 வருடம் ஓட்டினேன். ஒரு நாள் கொஞ்சம் பலமாகவே காற்றடிக்க, கொரொலோ ஒரு நிமிடம் கட்டுப்பாட்டை இழந்த மாதிரி ஏறக்குறைய பக்கத்து லேனுக்கே சென்றுவிட்டது. நல்ல வேளையாக பக்கத்து லேனில் அந்த சமயம் வாகனம் ஏதும் வரவில்லை. அடுத்தநாளே கொரோலாவை திரும்பக்கொடுத்துவிட்டு ஹாண்டா அக்யூரா மாற்றினேன். ஆனால் பேஜ் நிறக்காதல் மட்டும் மாறவில்லை, அடுத்து வாங்கிய வாகனமும் பேஜ் நிறம்!

முதல் காதல்: வலைப்பூவின் பெயரிலேயே காதலை வைத்துக்கொண்டு காதலைப்பற்றி எழுதாமல் இருக்க முடியாது இல்லையா? நான் இளங்கலை பொறியியல் படிக்கும் காலத்தில் கூட படிக்கும் மாணவர் மேல் இனக்கவர்ச்சி மாதிரியான ஒரு குழப்பமான காதல் வந்தது. என்னுடைய டான்ஸ் டீமில் அவரும் இருந்தார். எனக்கு எதிர்மறையான குணம் அந்த பையனுக்கு. நான் யார் வம்பிலும் தலையிடாமல் நானுண்டு என் படிப்புண்டு என்று இருக்க, அவருக்கு அப்போதே அரசியலில் ஆர்வம் அதிகம். மாணவர் தேர்தலில் கலந்துக்கொள்வார், கல்லூரியில் யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும் வலியப்போய் இன்வால்வ் பண்ணிக்கொள்வார். அப்போதெல்லாம் எனக்கு அதிகமாக யோசிக்க தெரிந்திருக்கவில்லை. ரஃப் அன்ட் டஃப்பாக அலைபவர்கள் தான் ஹீரோ என்ற தவறான எண்ணம் எனக்கிருந்தது, நிறைய தமிழ் சினிமா பார்த்ததின் விளைவாக இருக்கலாம். ஒரு நாள் ஸ்பென்சர் ப்ளேசாவில் இருக்கும் காஃபி டேவில் தோழிகளோடு உட்கார்ந்திருந்தபோது, அவர் தன் நண்பர்களுடன் உள்ளே நுழைய, லேசாக சிரித்து வைத்தேன். அந்த என்கரேஜ்மெண்டே அவருக்கு போதுமாக இருந்தது, கூட இருந்த நண்பர்களும் ஏற்றிவிட்டார்கள். அன்றிலிருந்து அவர் டிசைனர் உடை, தலை வலி வரும் அளவுக்கு கொலோன், மற்றும் கவனமாக ஸ்டைல் செய்யப்பட்ட தலைமுடியுடன் மட்டுமே கல்லூரிக்கு வந்தார். அஜீத் மாதிரி வேகமாக பைக் ஓட்டினார், மாதவன் மாதிரி தமிழை கடித்து துப்பினார். "எனக்காக ஒருவர் இத்தனை செய்வார்களா?" என்று எனக்கு ரொம்ப வியப்பாகவும், பெருமையாகவும் இருந்தது. செமஸ்டர் எக்ஸாம் முடிவில் ஒரு நாள் ரொம்ப தயங்கி காதலை சொல்லியேவிட்டார். எதிர்ப்பார்த்தது என்றாலும் ரொம்ப பதட்டமாக இருந்தது. ஏதோ பெரிய தவறு செய்கிற எக்ஸைட்மெண்ட்!. படிப்பு முடிந்தவுடன் பார்க்கலாம் என்ற ம்யூச்சுவல் அக்ரீமெண்டுடன் அதுவரை நண்பர்களாகவே இருப்பதாக முடிவு செய்தோம். சாதாரண பேச்சு, சிரிப்பு என்றே நட்பு தொடர்ந்தது. சில நாட்களிலேயே, அவரிடம் எனக்கு பிடித்தது என்று எதை எல்லாம் நினைத்தேனோ, அதெல்லாம் எனக்கு உண்மையிலேயே பிடித்தவை அல்ல என்று தெரிந்துக்கொண்டேன். மேலும் இருவரும் வேறு வேறு மதம்(அவர் முஸ்லிம், நான் இந்து). எனக்கு தனிப்பட்ட முறையில் ஜாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் இருவீட்டு பெற்றோரும் நிச்சயம் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்பது புரிந்தது. இதை அவரிடம் ஒரு நாள் விளக்கமாக எடுத்துச்சொன்னவுடன், அவரும் அதிலிருந்த நியாயத்தை உணர்ந்து "பிரிந்துவிடலாம்" என்ற முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் கூட இருந்த அவரின் நண்பர்கள் அவரை வேண்டுமென்றே தூண்டிவிட்டு ஈகோ பிரச்சினையாக்கினர், அவரும் ரொம்ப சில்லியாக ஏதோ காதல் தோல்வியடைந்தது போல நடந்துக்கொண்டார். ஒரு நாள் வீட்டுக்கே வந்து அப்பாவிடம் வம்பு பண்ணினார். நட்பு எல்லாம் சுத்தமாக விட்டுப்போனது. சில மாதங்களுக்கு முன் பழைய தோழி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அந்த குறிப்பிட்ட மாணவர் தற்சமயம் அரசியலில் நன்றாக வளர்ச்சியடைந்து தீவிர அரசியல்வாதியாகிவிட்டதாக அறிந்தேன்.

பின்குறிப்பு : பரிசலுடைய வரிசைப்படி நான் ஐந்தாவதாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தலைப்பில் 5 என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

Tuesday, July 29, 2008

இன்றைய விமர்சகர்களின் பரிதாப நிலை!

அன்று, வலைபூக்களும் கருத்துக்களங்களும் இல்லாத காலத்தில் விமர்சகர்கள் எல்லாம் என்ன வேண்டுமானால் பேசலாம்,எழுதலாம். அவர்கள் எழுதுவதே வேதவாக்குபோல் இருந்தது –உண்மைக்கு புறம்பானதை எழுதினாலும் கூட. அவர்கள் கருத்தில் உள்ள தவறுகளை படித்துவிட்டு ஒரு சிலர் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சொல்லி புலம்புவதுதான் வழக்கம். அவர்கள் தவறை அந்த பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினால் அதை கண்டுகொள்வதும் இல்லை, அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவது அந்த பத்திரிக்கை நிர்வாகத்தின் வழக்கம். இது அந்த காலத்து “பத்திரிக்கைச் சுதந்திரம்” என்றும் கொள்ளலாம்!

ஆனால் இன்று இதெல்லாம் மலையேறி போய்விட்டது. விமர்சகர்களை விமர்சிக்க வந்துவிட்டார்கள் பொதுமக்களும், வம்பு பேசுபவர்களும், மற்றும் விமர்சகர்கள் விமர்சித்த சப்ஜெக்ட்டில் உள்ள எக்ஸ்பர்ட்களும்! அதனால், இன்றைய விமர்சகர்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியதாகிவிட்டது. தன்னை “ஞாநி” என்று சொல்லிகொள்பவர்கள் ஞாநியும் அல்ல. “பைத்தியக்காரன்” என்று சொல்லிக்கொள்பவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம். உண்மையே வெல்லும் என்பதே இன்றைய பேச்சுச் சுதந்திர உலகம்!

• சமீபத்தில் திரு ஞாநி அவர்கள் எழுதிய “அணு ஆயுதம் தேவை இல்லை” பற்றி பலவிதமான expert களும், சாதாரண குடிமக்களும், அவரையும், அவர் கட்டுரையில் உள்ள குறைபாடுகளையும் இஷ்டத்துக்கு விமர்சித்து உள்ளார்கள். அது மட்டுமல்லாமல், அணு சக்தி பற்றி தீவிர ஆராய்ச்சி செய்பவர்களும், பல விஞ்ஞானிகளும் வந்து குறை நிறைகளை சொல்கிறார்கள். இதுபோல் வரும் விமர்சனங்களை பொது மக்கள் படிக்கிறார்களோ இல்லையோ, இதை திரு. ஞாநி அவர்கள், மற்றும் அவரைப்போல் விமர்சகர்கள் படிப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம். அவர்கள் மனம் நிச்சயம் புண்படும் என்பது உண்மைதான். என்ன செய்வது? இதுவும் பேச்சு சுதந்திரம்தான்!

• ஒரு வம்பு பேசுகிறவர் சொல்கிறார், திரு மதன் அவர்களின் மதன் திரைப்பார்வையில், தசாவதாரம் படத்திற்கு மதன் விமர்சனம் பண்ணவில்லை, காசு வாங்கிக்கொண்டு ஒரு “கமர்சியல்” பண்ணுகிறார் என்று. பல படங்களுக்கு திரு மதன் விமர்சனம் செய்யும்போது குறைகளையும், நிறைகளையும் அழகாக விமர்சித்தார், ஆனால் இது என்ன ஒருபக்கமான விமர்சனமாக இருக்கிறது என்று பலர் வியக்கிறார்கள் இன்று. மேலும் “ஹாய் மதனில்” இவர் கொடுக்கிற பலவிதமான பதில்கள் முட்டாள்தனமாக இருக்கிறது என்று சொல்லி பலரும் நகையாடுகிறார்கள்! கருத்துக்களங்களிலும் மற்றும் வலை பூக்களிலும் இன்று இவர் தலை உருளுகிறது என்னவோ உண்மைதான்.

• சமீபத்திய, திரு. சாரு நிவேதிதாவின் ஒரு விமர்சனத்தில், ஒர் பாடல் பழைய “எங்கவிட்டுப்பிள்ளை” படத்தில் இடம் பெற்றதாக இவர் தவறுதலாக எழுதியதும், ஒரு கமல் ரசிகர் சொல்கிறார், “இவர் இன்னும் இந்திய, தமிழ் சினிமாக்களே சரியாக இன்னும் பார்க்கவில்லை, உலகத்தரம் அது இதுனு எதுக்கு பேசுகிறார்?” என்கிறார்.

• இதில் பரிதாபத்திற்குரியது என்னவென்றால், இப்படி விமர்சகர்களை தாக்குபவர்கள் அந்த அந்த துறையில் உள்ள மேதாவிகள் என்பது. நிறைய நேரங்களில் உண்மையையேதான் இவர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு விமர்சனத்தையும் விமர்சிக்கும் பொதுஜனங்களும் வேறு வேறு நபர்கள் என்பதும் உண்மை. அதேபோல் விமர்சக்ர்கள் விமர்சிக்கும் எல்லா விசயத்திலும் “ஞாநி களாக” இருக்க முடியாது என்பதை நாம் மனதில் கொள்ளுவோம்! அவர்களுடய “லிமிடேஷன்ஸை” நாம் மனதில் கொள்ள வேண்டும்! அதே சமயத்தில் விமர்சகர்களுக்கு ஒரு திறந்த மனப்பான்மை வந்தே ஆக வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது இன்று என்பதும் உண்மைதான்!

Monday, July 28, 2008

காதல் கல்வெட்டு-8


"என்ன கயல், ரொம்ப நேரமாக காத்திருக்கீங்களா? நான் ஒண்ணும் லேட் இல்லையே?" என்று மணி பார்த்தான் வருண்.

"இல்லை வருண், நீங்க ரொம்ப பங்க்சுவல்தான் வருண். நான் வந்து ஒரு 5 நிமிடம் இருக்கும்"

"உட்கார்ந்து என்ன நினைத்துக்கொண்டிருந்தீர்கள் கயல்?"

"அதெல்லாம் சொல்ல முடியாது. நீங்களே முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்"

"எனக்கு நல்லாவே தெரியும்."

"என்ன தெரியும்?"

"நீங்க என்ன இவ்வளவு நேரம் யோசிச்சீங்கனு தெரியும்"

"எப்படி வருண் அது?"

" எப்படி எது?"

"ஒண்ணுமே விசயமும் இல்லாமல், ஒரு விசயத்தையும் விடாமல் பேசிக்கிட்டே இருக்கீங்க?"

"என்ன கிண்டலா? சரி கயல், நான் சீரியஸா பேசுறேன்! இந்த அவுட் ஃபிட்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!"

கயலின் முகம் சிவந்தது.

"நீங்களும்தான் இந்த சாட்ஸ்லயும் டி-ஷிர்ட்லயும் ரொம்ப நல்லாயிருக்கீங்க, வருண்"

"என்ன casual-ஆக வந்து இருக்கிறேன் என்று கேலியா?"

"ஆமாம், என்னைப்பாருங்க! ஒரு 2 மணி நேரம் மேக்-அப் பண்ணி வந்து இருக்கேன். ஆனால் நீங்க.."

"அழகா இருக்கவங்கதான் மேக்-அப் போட்டால் இன்னும் கொஞ்சம் அழகா ஆவாங்க , கயல். சரி, நான் சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்க இல்ல கயல்?"

"சொல்லுங்க!"

"உங்களுக்கு ரொம்ப அழகான பெரிய உதடுகள், கயல்!"

இரண்டாவது முறையாக அவள் முகம் சிவந்தது. அதை சமாளிக்க,

"இப்போ எதுக்கு இந்த ஐஸ், நான் காஃபி வாங்கி தரனுமா, வருண்?"

"இல்லை Let me be the host today. Shall we go get the coffee? சரி, கயல், நீங்க என்ன சாப்பிடுவீங்கனு கெஸ் பண்ணி நானே ஆர்டெர் பண்ணுறேன், சரியா?"

"டீல், வருண்"

"இருவரும் நடந்து lineக்கு நடந்து சென்றார்கள். கயல் முன்னால் சென்று நின்றாள், வருண் அவள் அருகில் பின்னால் அவள் முதுகைப்பார்த்து நின்றான். கயல், என்ன நினைத்தாளோ என்னவோ, புன்னகையுடன் அவனை நோக்கி திரும்பி நின்றாள்.

"Line பெருசா இருக்கு, வருண்" என்றாள் புன்னகையுடன்

"The longer the line, the better for me, Kayal" வருண் ஒரு மாதிரியாக சிரித்தான்.

"ஏன்?"

"I can check you out as I promised, you see!"

"இதெல்லாம் அதிகமா இல்லை, வருண்?" என்று சிரித்தாள் கயல்.

"எனக்கு இல்லையே. ஆமா, ஏன் தமிழ் தடவி தடவி பேசுறீங்க, கயல்?"

"நானா?" உங்க தமிழ் ரொம்ப நல்லா இருக்காக்கும்?"

"என்னது கொஞ்ச்ம் கலோகியல் தமிழ் தான், ஆனால் என்னால் சரளமா தமிழ்ல பேசமுடியும் உங்களைப்போல் 75% ஆங்கிலம், பிறகு கொஞ்சம் தமிழ்ல பேசலையே, நான்"

"படித்தெதெல்லாம் காண்வெண்ட், அதனாலதானோ என்னவோ? அது சரி, வருண், எனக்கு என்ன காஃபி பிடிக்கும்னு எப்படி தெரியும் உங்களுக்கு?"

"எனக்கு கொஞ்சம் ஜோசியம் தெரியும்"

"கை பார்த்து ஜோசியம் சொல்வீங்களா?"

"இல்லை உதடு பார்த்து சொல்லுவேன்" அவள் உதடுகளை ஒரு வினாடி பார்த்தான் வருண். அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது அவன் அப்படிப்பார்ப்பது. இருந்தாலும் பிடித்து இருந்தது.

"அப்படி கேள்விப்பட்டதே இல்லையே?"

"நான் சொல்லித்தர்றேன் கவலைப்படாதீங்க"

"இதுலயும் டுயூட்டரிங்கா, வருண்?"

"உங்களுக்கு இந்த பாடத்துக்கு charge கிடையாது, கயல்!"

"எனக்கு ஏதாவது ஆச்சுனா நஷ்ட ஈடு கொடுப்பீங்களா?"

"உதடுக்கு ஏதாவது டேமேஜ் ஆச்சுனா கொடுப்பேன். ஆனால் மனசு டேமேஜ் ஆச்சுனா நான் பொறுப்பல்ல"

"என் மனசுக்கு என்ன ஆகுதுனு உங்களுக்கு எப்படி தெரியும்?"

"எனக்கு உங்க மனசு தெரியும் கயல்!"

கயல் ஒரு நிமிடம் அமைதியானாள். அவனுக்கு உண்மையிலேயே அவள் மனது தெரியுமா? இல்லை, வெறும் வார்த்தை ஜாலமா? என்று யோசித்தாள். வருண் அமைதியை கலைத்தான்.

"ஆண்ட்டி, அங்கிள் எப்படி இருக்காங்க, கயல்?"

"ஓ, என் அம்மா, அப்பாவா? அவங்களுக்கென்ன? நல்லாத்தான் இருக்காங்க"

"உங்களை ரொம்ப "மிஸ்" பண்ணுறாங்களா?"

"ஆமாம், அவங்க ரெண்டு பேருக்கும் இந்த ஊர் "விசிட்" பண்ணும்போது இங்கே எதுவுமே பிடிக்கவே இல்லை, வருண்"

"எனக்கும்தான் வந்த புதிதில் பிடிக்கவில்லை, இப்போ ரொம்ப பிடிக்குதே"

"ஏன்?"

"உங்களை பார்த்ததில் இருந்து பிடிக்குது"

"நான் நம்பிட்டேன், வருண். Thanks Varun for saying that whether you mean it or not" என்று சொல்லி புன்னகைத்தாள், கயல்.

அதற்குள், அவர்கள் கவுண்டர் பக்கத்தில் போய்விட்டார்கள். "டெல்லரி"டம். ஒரு cappuccino Tall, caramel macchiato grande ஆர்டர் பண்ணி, அவளிடம் தன் பெயரை சொல்லிவிட்டு, தன் visa வில் பே பண்ணினான், வருண்.

"உங்களுக்கு "caramel macchiato" பிடிக்கும்தானே?"

"ஆமாம் வருண். பரவாயில்லை உங்க ஜோஸ்யம் ஓரளவு fluke-ல work out ஆகுது"

"You deserve part of the credit, Kayal! More beautiful the lips are, the better results I will get from my "analysis"!"

" I can't believe, myself, Varun" Never mind!"

கயல், வருணுக்கு சற்று முன்னால் side- ல நடந்து போய் காஃபி pick up பண்ணும் இடத்திற்கு நடந்தாள். கயல், ஹை ஹீல்ஸ் போட்டிருந்ததால் தீடீரென்று பாலன்ஸ் தவறி பக்கத்தில் இருந்த வருண் மீது விழுந்தாள். அதன் பின் கையை ஊன்றி சமாளித்து உடனே எழுந்துவிட்டாள்.

அவளை தாங்கிப்பிடித்த வருண், அன்பாக அவளிடம் "Are you all right, sweetheart?" என்று கேட்டான்.

"எப்படி பேலன்ஸ் தவறியதென்றே தெரியல வருண்"

"சரி வா, இந்த டேபிளில் உட்காரலாம். நான் உன் காஃபியை எடுத்து வர்றேன்"

கயல் போய் அமர்ந்தாள். வருண் காஃபி இரண்டையும் பிக அப் பண்ணி வந்து அவளிடம் "caramel macchiato" கொடுத்து விட்டு அவள் எதிரில் அமராமல் அவள் அருகிலேயே அமர்ந்தான்.

"கையில ஏதாவது அடிப்பட்டதா கயல்?"

அவள் வலது கையை தன் கையில் எடுத்து வைத்து பார்த்தான். விழப்போனபோது அவள் கை தரையில் ஊன்றியிருக்க வேண்டும். அவள் உள்ளங்கை சிவந்து இருந்தது. அவள் உள்ளங்கையை தன் விரல்களால் மெதுவாக தடவிவிட்டான், வருண்.

"ரொம்ப வலிக்குதாடா, கயல்?"

"இல்லை வருண், வலியெல்லாம் ரொம்ப இல்லை .கொஞ்சம் எம்பாரசிங்கா ஆயிட்டது"

"It is not a big deal, darling. Accidents happen"

"I am all right now Varun. Thanks for the care"

வருண் அவளை இத்தனை அன்பாக கவனித்தது. ரொம்ப இண்டிமேட்டாக அவளை அழைத்தது அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது.

"நீ நல்ல உயரமா தானே இருக்கே? அப்புறம் ஏன் ஸ்டூல் மேல ஏறி நிக்கனும், கயல்?"

"ஸ்டூலா?"

"ஆமாம், உன் ஹீல்ஸ்"

கயலால் ரொம்ப நேரம் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. சிரித்ததில் பேலன்ஸ் தவறியதை சுத்தமாக மறந்துவிட்டாள். வ்ருணுடைய அன்பும், அக்கறையும், குறும்பும் அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது.

அப்போது உள்ளே நுழைந்த ஒருவர், கயலின் அருகில் வந்து,

"Hi Kayal! How is it going?" என்றார்.

"Fine" என முடித்தாள், கயல்.

வந்தவர், காஃபி லைனை நோக்கி போனார். வந்தவரை பார்த்தவுடன் கயல் முகத்தில் இருந்த சிரிப்பு மாறிவிட்டதை கவனித்தான் வருண்.

-தொடரும்

Friday, July 25, 2008

ப்ராஜெக்ட் மீட்டிங் : தூங்காமல்/தூங்கினாலும் தப்பிப்பது எப்படி?

சாப்ட்வேர் AKA பொட்டி தட்டும் வேலையில் காலை நேரம் பரவாயில்லை எப்படியோ ஓடிவிடும். கம்பனி உணவகத்துக்கு சென்று, ஒரு காஞ்சிப்போன பர்கரையோ அல்லது தீஞ்சிப்போன பீட்சாவையோ சாப்பிட்டு திரும்ப க்யூபிகல் வரும் போது தான் பிரச்சினையே! அடுத்து கொஞ்ச நேரத்தில் ப்ராஜெக்ட் மீட்டிங் என்ற 2 மணி நேர ப்ளேடு ஆரம்பிக்கும். முதல் அரைமணி நேரம் ஏதாவது உற்சாகமா கவனிச்சாலும் அப்புறம்? நம்ம டேமேஜர் அடிக்குரலில், ஒரே தொனியில் ஏற்ற இறக்கம் இல்லாமல் பேசிக்கொண்டேஏஏஏ இருக்கும் போது, நமக்கு நம் அம்மா தொட்டிலில் போட்டு தாலாட்டிய பூர்வ ஜென்ம ஞாபகம் எல்லாம் வந்து தொலைக்கும்!

அந்த சோதனையான நேரத்தில் புத்திசாலியாகவும் தெரியனும், அதே சமயம் தூக்க கலகத்தில் இருந்தும் தப்பிக்கனும். வலைப்பதிவர்களுக்கு ஏதோ என்னால் முடிந்த சிறு உதவிகள். இதை எல்லாம் செய்து டேமேஜர்களிடம் நல்ல பெயர் வாங்கவும். அரையாண்டு ரிவ்யூ வேறு அருகில் வருகிறது.

1. தூக்கம் வருவதை தவிர்க்கவே முடியாத பார்ட்டி என்றால் கண்ணில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு தூங்கலாம். படத்தில் இருக்கும் மனிதர் செய்வதைப்போல
இதை நான் இன்னும் ட்ரை பண்ணிப்பார்த்தது இல்லை. உங்களில் யாரையாவது சோதனை எலியாக பயன்படுத்த ஆவல். எனி வீரத்தமிழ் வாலண்டியர்ஸ்?

2. தூக்கத்தை விரட்ட என்ன பண்ணலாம்? டேமேஜர் அனுப்பிய பவர் பாயிண்ட் ப்ரெசெண்டேஷனை பார்ப்பது மாதிரி மற்றொரு விண்டோவில் சைலண்டாக தமிழ் மணம் படிக்கலாம். யாராவது புது பதிவு போட்டிருப்பார்களா?

வழக்கமாக என் பிற்பகல் நேரத்தில் புது பதிவு போடும் அப்பாவி துளசி டீச்சர். அவர்கள் அறிமுகப்படுத்தும் அறிவியல் தொழில்நுட்ப கருவிகளான பூண்டு உரிக்கும் கருவி, காய்கறி நறுக்கும் கருவி போன்றவற்றை பார்த்து புளங்காகிதமடையலாம், இல்லைனா ஃபிஜி பயணக்கட்டுரை படித்து மகிழலாம், அதுவும் இல்லைனா சமையல் ரெசிபி பார்க்கலாம். ஒரு முறை டீச்சர் போட்டிருந்த பர்பிள் நிற உருளைக்கிழங்கை(மொய் மொய்) பார்த்து அலறிட்டேன். அப்புறம் தூக்கம் எல்லாம் போயே போச்!

அப்புறம் லதானந்த் சித்தருடைய வலைப்பூ போய் அவர் அறிமுகப்படுத்தும் இலக்கியச்சொற்களான ஒரம்பரை, ஓரியாட்டத்துக்கு எல்லாம் என்ன மீனிங் இருக்கும் என்று உட்கார்ந்து சிந்திக்கலாம். முடிந்தால் கூகிளாண்டவரிடம் கேட்டுப்பார்க்கலாம்.

3. மீட்டிங் போறத்துக்கு முன்னால் அந்த ப்ராஜெக்ட் பற்றிய டாக்யுமெண்டோ அல்லது பவர் பாயிண்ட் ஸ்லைடுகளோ, எது கிடைத்தாலும் ஒவ்வொரு பத்தியின் முதல்வரியும், கடைசி வரியும் மட்டும் படிச்சீங்கனா விஷயம் புலப்பட்டுப்போகும். அப்புறம் மீட்டிங்கில் கண்ணை திறந்து வச்சுட்டே கனவு காணலாம்(கலாம் அங்கிள் இதை தான் சொல்லி இருப்பாரோ?). திடீர் திடீர்னு கனவு கலையும் போதெல்லாம்,"போன ப்ராஜெக்டில் so and so bugs இருந்ததே, அதே bug இந்த ப்ராஜெக்டிலும் வருமா?", "இது எத்தனையாவது வர்ஷன்? எவ்வளவு டைம் ஸ்லாட்ல முடிக்கனும்?" போன்ற டெக்னிகல் கேள்வியாக்கேட்டு அனைவருக்கும் பீதியை கிளப்பி விட்டுட்டு(முக்கியமா நம்ம டேமேஜருக்கு) நாம கனவை விட்ட இடத்தில் இருந்து கண்டின்யூ பண்ணலாம்.

4. ப்ரேக் அல்லது டிஸ்கஷன் நேரத்தில் போரடிக்குமே, என்ன செய்யறது? பொழுதுபோக்குக்காக கண்ணுக்கெட்டிய தூரம் வரை தேடி பாருங்க, ஏதாவது ஆன் சைட் வொர்க்கர் இந்தியாவில் இருந்து வந்திருக்காரா? கிடைப்பது கஷ்டமே இல்லை, ஆளை அடிக்கிற நியான் கலரில் ஒரு ஷர்டுடன், முகத்தில் கேலன் கேலனா(லிட்டர் லிட்டரா?) அசடு வழிய, சீட் நுனியில் அசெளகரியமா உட்கார்ந்திருப்பார், அவரிடம் க்ளைமேட் பற்றி ஏதாவது கேட்டு கடலைப்போடவும். நமக்கு ஜான் ஆபிரகாம், மாதவன் அல்லது ஒரு குறைந்த பட்சம் அஜீத் மாதிரியான குட் லுக்கிங் பார்ட்டிகளிடம் மட்டுமே கடலைப்போட விருப்பம், இருந்தாலும் என்ன பண்றது? ஜெகே ரித்தீஷ் போன்ற பார்ட்டிகள் தான் கிடைக்கும்!

ஆண்களாக இருந்தால்: சம்கி வைத்த சுடித்தார், தங்க நகைகளோடு, குனிந்த தலை நிமிராமல் கம்ப்யூட்டரையோ அல்லது டேமேஜரையோ அக்கறையோடு உற்று நோக்கியவாறே இருந்தால் அது ஆன்சைட் பார்ட்டி(உங்களுக்கு சொல்லியா தரனும்?)
இந்தியாவில் பொட்டி தட்டுபவராக இருந்தால் sky is the limit, நிறைய சாய்ஸ் கிடைக்கும்.
மீட்டிங் திரும்ப ஆரம்பிக்கும் போது, மறக்காமல் கடலையை நிறுத்தவும்.

4. மண்ணு மாதிரி இருக்கும் ஆபீஸ் காஃபியை குடிக்கவும், ஓரளவுக்கு தூக்கம் போகும்.

உங்களுக்கு தெரிந்த ஐடியாக்களை நீங்களும் பகிர்ந்துக்கொள்ளவும்.
மொக்கை

Thursday, July 24, 2008

காதல் கல்வெட்டு-7

வருண், ஃபோனை வைத்தவுடன், தனக்குள் சிரித்துக்கொண்டான். கயலை அவனுக்கு ரொம்ப ரொம்பப் பிடித்தது. "பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" போன்ற திருக்குறளை abuse பண்ணாத ஒரு அற்புதமான பெண்ணாகத்தோன்றினாள் கயல். ஜென்னிஃபர் மேல் அவள் படும் பொறாமைகூட ஒரு அழகாகத்தான் தோன்றியது அவனுக்கு. அவள் நிச்சயம் கால் பண்ணுவாள் என எதிர்பார்த்துதான் இருந்தான் வருண். அவளிடம் அவன் ஃபோன் நம்பர் கேட்காததற்கு அவள் அவனிடம் உரிமையாக கோபித்துக்கொண்டது அவனுக்கு ரொம்பவே பிடித்தது. அவள் நினைவாகவே இருந்த போது மறுபடியும் ஃபோன் ரிங் பண்ணியது. வருண் கனவுலகில் இருந்ததால் எடுக்கவில்லை.

"Pick up the f***ing phone, வருண்!" என்று அவன் நண்பன் ஸ்டீவன், ஆன்சரிங் மெஷினில் கத்தினான்.

வருண் சிரித்துக்கொண்டே ஃபோனை எடுத்து, "What the f*** you want now?" என்றான் புன்னகையுடன்!

"I want a hot blond chick to get laid tonight"

"What? You think I am your pimp or what?"

"It is you who asked what I want, right?

"OK, Cut the crap! What's up Steven? How is Diane?"

"We are doing great, வருண். Hey! I was mentioning about an Indian colleague of mine, right? He went to India and got married and came back with his wife. I don't understand how your arranged marriage works!"

"Don't even try, Steven! How did you know I was here, anyway?"

"I could figure because I was trying to reach you for a while and your phone was busy. Who was that?"

"Oh that? It is a தமிழ் girl, and her name is Kayal."

"What did she want?"

"Nothing."

"Then there is something, Varun. Tell me!"

"I met her in a local coffee-shop and she is nice. She speaks my language as well."

"Well, well, well, then?"

"Hey, it is nothing!"

"OK, if you say so, Varun. Hi! I called you because I need to discuss something about my project and need some suggestions. Can we talk about it tomorrow at 11 a m?"

"No way. I have something very important at that time. You can call me in the night, we can discuss."

"You are going to meet with this thamizh chick again, tomorrow, right?"

"How the heck you figure that out?"

"It was not hard at all. Does she have nice ***?"

"She does. Would you shut the f*** up now?"

"OK, I will call you tomorrow evening. You better be here and have fun with Kayal."

"I will. I cant believe you could pronounce her name correctly! Bye, Steven!"

சரியாக காலை 10:50 வருண் அந்த காஃபி ஷாப்பில் நுழைந்தான். அங்கே கயல் அவனுக்கு முன்னே வந்து காத்திருந்தாள். வருண் அவள் அமர்ந்திருக்கும் டேபிளை நோக்கி புன்னகையுடன் சென்றான். கயல் ஒரு க்ரீன் கலரில் ஸ்கேர்ட்டும் அதற்கு மேட்சிங்காக டாப்ஸும் போட்டிருந்தாள். மிகவும் கவனமாக மேக்-அப் போட்டிருந்தாள். அவள் உதடுகளில் சற்றே நல்ல சிவப்பில் உதட்டு சாயம் பூசியிருந்தாள். அவளின் பெரிய உதடுகள் மிகவும் அழகாக இருந்தன.


-தொடரும்

disclaimer: இந்த கல்வெட்டில் ஆங்கிலம் அதிகமாக கலந்ததற்காக என்னை மன்னிக்கவும். ஒரு அமெரிக்கன் நண்பனோடு பேசுவதுபோல் எதார்த்தமாக இருக்கவேண்டும் என்கிற முயற்சியால்தான் ஆங்கிலத்திலும் "பொன்மொழியிலும்" அப்படி எழுதியிருக்கிறேன். அடுத்த கல்வெட்டில் தமிழிலேயே நிறைய எழுதுறேன்- பொன்மொழிகள் இல்லாமல் ! :-)

Tuesday, July 22, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 4

போன பதிவில் ஒருவர் கேட்டிருந்தார், "இதை எல்லாம் மறக்க முடியாதா" என்று. என்னிடம் மட்டும் ஒரு மேஜிக் இரேசர் கிடைத்தால் சர சரவென்று இந்த மோசமான நினைவுகளை அழித்துவிட ஆசை. இந்த நினைவுகளை அகற்ற 15 வயதில் இருந்து பல முறை முயன்று தோற்றிருக்கிறேன். என் தோழிக்கு புதிதாக பிறந்த பெண் குழந்தையின் மயக்கும் சிரிப்பு, வீட்டில் வளர்க்கும் மல்லிப்பூ செடியில் புதிதாக மலர்ந்த மலர்கள், சமீபத்தில் விடுமுறைக்காக சென்று வந்த கரீபியன் கடற்கரைகள் என்று எனக்கு மிகவும் பிடித்த நல்ல நினைவுகளை வலுக்கட்டாயமாக முன்னிறுத்தி இதை மறக்க முயன்றாலும் மூளையின் ஒரு ஒரத்தில் நெருஞ்சி முள்ளாய் உறுத்திக்கொண்டே இருக்கிறது. அன்று அம்மா கட்டி இருந்த சேலை நிறத்தில் இருந்து அவர் அழுத அழுகை, புலம்பிய வார்த்தைகள், அவருடைய கண்ணீர் துளிகள் என் சுடிதார் டாப்ஸில் உருவாக்கிய நீர் பேட்டர்ன் அனைத்துமே நினைவில் இருக்கிறது. வேலையில் வருடா வருடம் நடைபெறும் 'Work performance Review'வில் "very Smart and pays attention to small details" என்று என்னுடைய மேனேஜர் எழுதித்தந்த பாசிடிவ் கமெண்டுகளைப்படிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. அதுவே என் வரமும், சாபமும்.

நடந்த இந்த நிகழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்டவர் சந்தேகமில்லாமல் அம்மா தான். பிறகு தொடர்ந்து அழுவதும், சத்தம் போட்டு சண்டை போடுவதும், தற்கொலை மிரட்டல்களும் வீட்டில் வழக்கமாயின. சண்டை வரும்போதெல்லாம் யாருக்கும் கேட்காமல் இருக்க, ஜன்னல்-கதவுகளை எல்லாம் அடைப்பது என்னுடைய வேலையானது. அப்பா சலவைக்கு போடும் துணிகளையும், அவர் பர்ஸ் மற்றும் பர்சனல் ஐட்டங்களையும் பைத்தியம் பிடித்தது மாதிரி அம்மா செக் பண்ண ஆரம்பித்தார். அப்பா போனில் பேசினால் சந்தேகத்துடன் கவனிப்பது மட்டுமில்லாமல் அடிக்கடி வேலையில் இருந்து சீக்கிரமே வீட்டுக்கு வரும் வழக்கம்('சர்ப்ரைஸ் விசிட்') அதிகரித்தது.அப்படி வரும்போதெல்லாம் நேராக பாத்ரூம் சென்று எதையோ தேடினார். ஒரு முறை பாத்ரூமில் அகப்பட்டால் தொடர்ந்து பாத்ரூமிலா அகப்படுவார்கள்?

அப்பாவை தண்டிக்கவோ, கண்டிக்கவோ அல்லது பிரிந்துவிடவோ அம்மாவுக்கு தைரியமும் இல்லை, மனமும் இல்லை. அவர் எந்த கட்டுப்பாடுகளுக்கும் சுலபமாக அடங்கும் மனிதரும் இல்லை.எனவே தன்னைத்தானே தண்டித்துக்கொண்டார். மனச்சோர்வினால்(அவருக்கு மனசோர்வு வந்திருந்தது எனக்கு இப்போது தான் தெரியும், அந்த வயதில் புரியவில்லை)அம்மாவுக்கு நேரமற்ற நேரத்தில் நிறைய சாப்பிடும் பழக்கம் வந்தது, எடையும் ஒரே வருடத்தில் 10 கிலோ அதிகரித்தது. "இனிமேல் என்னை யார்டி பார்க்கப்போறா, எப்படியோ போறேன் போ" - நான் கேட்கும் கேள்விகளுக்கு அம்மாவின் வெறுப்பான பதில். படுக்கையும் வழக்கம் போல என்னுடைய ரூமிலேயே தொடர்ந்தது. பொதுவாக இந்தியப்பெண்கள் மட்டும் ஏன் 'கல்லானாலும் கணவன்' கான்செப்டை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறார்கள்? உண்மையாவே அத்தனை நல்ல மனமா அல்லது தனியே வாழ தைரியம் இல்லாததா? வெகுநாட்களாக என் மனதில் இருந்து வரும் கேள்வி.

நிம்மி(அப்பாவின் காதலி?) பற்றிய விவரங்களை அப்சசிவாக சேகரிக்கத்துவங்கினார். நிம்மியின் மற்ற தொடர்புகளைப்பற்றி மற்றவர்களிடம் சலிக்காமல் வம்பு பேசினார். அந்த பெண்ணுக்கு அம்மா வைத்திருந்த பெயர் "மேனா மினுக்கி". எனக்கு தெரிந்து நிம்மி பழைய சாயம் போன புடவையுடனும், ப்ளாஸ்டிக் அணிகலன்களுடனும் பரிதாபமாக வலம் வருவார், மேனா மினுக்கி என்ற பட்டத்துக்கு கொஞ்சமும் தகுதி இல்லாத பெண். இருந்தாலும், அம்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிம்மியை திட்டுவது ரொம்ப பிடித்திருந்தது. 2 வாரத்துக்கு முன் நான் அவரிடம் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது கூட, "கயல், அந்த நிம்மி இருக்காளே, அவளை கடை வீதில பார்த்தேண்டி. அவளை மாதிரியே கருப்பா ரெண்டு கொழந்தைகளை கையில் புடிச்சிட்டு இருந்தா. பக்கத்தில உயரமா ஒரு ஆள், கல்யாணமாகிருச்சி போல. பாவம் யார் வீட்டுப்பிள்ளை ஏமாந்தானோ?" என்றார். "போம்மா, உனக்கு வேற வேலையே இல்லை" என்று சலிப்பாக சொல்லி சப்ஜெக்ட் மாற்றினேன், இன்றுவரை அப்பாவின் காதலியைப்பற்றி என்னால் சகஜமாக உரையாட முடிவதில்லை. இதில் காமெடி என்னவென்றால் அப்பாவை விட பல மடங்கு அதிகமாக அம்மா நிம்மியைப்பற்றி நினைத்திருப்பார், பேசி இருப்பார். நிம்மி கஷ்டப்பட்டு "உழைத்து" சேமித்த பணம் அவருடைய வரதட்சணைக்கும், திருமண செலவுகளுக்கும் உதவியிருக்கும் என நம்புகிறேன்!

- நினைவுகள் தொடரும்

Thursday, July 17, 2008

அறிவியலில் நாம் ஏன் வளரவில்லை?

அறிவியலில் நாம் வளராததற்கு காரணம் என்ன?


ஃ இந்தியா ஒரு ஏழை நாடு என்பதாலா?

ஃ நம் ஊரில் உள்ள பெரியவர்கள், நல்ல சிந்தனை மற்றும் போராடக்கூடிய திறமைமிக்க சின்னவர்களை, தன்னை மதிக்கவில்லை என்கிற சுயநலத்தால் வளர விடக்கூடாது என்று நினைப்பதாலா?

ஃ நம்மிடம் திறந்த மனப்பான்மை இல்லாததாலா?

ஃ நம்மிடம் ப்ரொஃபசனலிஸம் இல்லாததாலா?

ஃ இல்லை நமக்கு அறிவு இயற்கையிலேயே கம்மியா?


* அறிவியலில் சிறந்து விளங்குவதற்கு பணம் கட்டாயம் வேணும். நாம் ஏழை நாடுதான். அதற்கு ஜனத்தொகை ஒரு பெரிய காரணம். அறிவியலில் நாம் மின்னாததற்கு இது ஒரு மிகப்பெரிய காரணம்.

* வசந்த மாளிகையில் சிவாஜி ஒரு வசனம் சொல்வார்: இந்த வீட்டில் பெரியவங்க சின்னவங்களை பெரியவர்கள் ஆகவிடுவதில்லை. சினிமாவில் மட்டுமல்ல. அது நம் அறிவியல் கம்யுனிட்டியிலும் இது உண்மைதான்.

ஒரு “ஆமாம் சார்” போடாமல், எதையும் தனியாக யோசித்து மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் நேர்மையாக இருக்கிற இளம் (மாணவன்/மாணவி) விஞ்ஞானிகளை நம் பெரிய விஞ்ஞானிகள் வளரவே விடுவதில்லை. அவர்களை ஒரு வழி பண்ணிவிட்டு, தனக்கு போட்டியாக யார் வரமுடியாதோ, யார் எது சொன்னாலும் சரி சரி என்று சொல்கிறார்களோ, அவர்களைத்தான் மேலே கொண்டு போகிறார்களென்பது உண்மை. அவர்கள் சுயநலம் நாட்டுக்கு செய்யும் துரோகம் என்பதை அவர்கள் உணராத முட்டாள்கள்! திறமைமிக்க மாணவ மாணவிகள் இந்த தேசதுரோகிகளால், மேலே போக முடியாமல், எதையும் சாதிக்க வாய்ப்பு கிடைக்காமல் ஃப்ரெஸ்ட்ரேட் ஆகி “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை”னு தத்துவப்பாடல்பாடிக்கொண்டு அறிவியலைவிட்டு ஒதுங்கி விடுகிறார்கள். நம்ம “ஆமாம் சாமிகள்” எதையோ நாமும் பண்ணுவோம்னு மீடியாக்கர் அறிவியல் செய்து குப்பையை கூட்டுகிற்றார்கள். “ஆமாம் சாமிகள்” எதுவும் பெரிதாக சாதிக்க முடியவே முடியாது.

* நிச்சயம் நம்மில் 95% மக்களிடம் திறந்த மனப்பான்மையோ, தன் தவறை ஒத்துக்கொள்ளும் பெரிய மனப்பாங்கோ கிடையாது. தெரியாததை தெரியாதுனு சொன்னால் அன்றாவது தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. தெரிந்ததுபோல் நடித்தால், வாழ்நாள் முழுவதும் தெரிந்துகொள்ளாமல் சாக வேண்டியதுதான். அப்படித்தான் நம்மில் நிறையப்பேர் வாழ்ந்து சாகிறோம். இதில் வயதில் மூத்தவர்கள் ரொம்ப மோசம்!

* அறிவியலை திரிக்கமட்டும் கூடவே கூடாது. நமக்கு வரும் முடிவுகள் முன்பு அதே பரிசோதனையை செய்தவர்களின் முடிவுகளை விட சம்மந்தமே இல்லாமல் வந்தாலும், அவர்கள் விளைவுகள்போல் வந்ததாக திரிக்க கூடாது. நம்ம எல்லாம் பிறந்த தேதியை கூட மிகச்சாதாரணமாக திரிப்பவர்கள்!
ஒருவருக்கு “ரெக்கமண்டேஷன்” எழுதும்போது பொதுவாக மேலை நாட்டை சேர்ந்தவர்கள், அவர்கள் தொழில் திறமையை வைத்தே எழுதுவார்கள். தனிப்பட்ட முறையில் தன்னிடம் நல்லா நடக்கவில்லை என்பதை மனதில் வைத்து கீழ்தரமாக அவர்களைப்பற்றி குறைத்து பொய் சொல்ல மாட்டார்கள்!

* அறிவு நமக்கு இயற்கையில் கொஞ்சம் குறைவா என்னனு எனக்கு தெரியவில்லை! நம்மில் தேவையில்லாத வரட்டு கெளரவம், அகம்பாவம், நம்மை முட்டாளாக்குவது உண்மைதான்.

சில கேள்விகள்...

என்ன திரும்பவும் கேள்விகளா? என்று யாரும் பயந்து ஓட வேண்டாம். இந்த தலைப்பை 'தமிழ் மணத்தில் சில கேள்விகள்' என்று வைக்கட்டுமா என்று தீவிரமாக சிந்தித்து கடைசி நேரத்தில் மாற்றிக்கொண்டேன்(முறைக்காதீங்க, சும்மா ஜோக். கொஞ்சம் சிரிங்க தாய்/தந்தை குலங்களே. ரிலாக்ஸ் ப்ளீஸ்! :):)). இது நேற்று கேட்ட கேள்விகள் போல இல்லை.

நேற்று என்னுடைய இரவு நேரத்தில் நிறைய அனானிகள் வாய்க்கு(கைக்கு) வந்தமாதிரி எதேதோ கிறுக்கி வைக்க, காலையில் பார்த்தால் என்னுடைய பதிவு சூடான இடுகையில் முதல் இடத்தில் இருந்தது. மற்றவர்களின் பதிவுகள் சூடான இடுகையிலும், வாசகர் பரிந்துரையிலும் வரும் போது நம்முடைய பதிவும் அப்படி வராதா என்று நினைத்திருக்கிறேன். இன்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

காலையில் பார்த்ததும் சர்ச்சையான அனானி பின்னூட்டங்களை நீக்கியும், என்னை வேறு ஒரு பதிவர் என்று சந்தேகப்பட்டு எழுதி இருந்த பதிவர்களுக்கு "நீங்கள் நினைக்கிற மாதிரி ஏதும் இல்லை, உங்களை Disappoint செய்யப்போவதற்காக மன்னியுங்கள்" என்று எழுதியவுடன் ஒரு அதிசயம் நடந்தது. என்ன தெரியுமா? என் பதிவு சூடான இடுகையில் இருந்து 1 மணி நேரத்தில் மறைந்தது. அதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நான் ஏதாவது உருப்படியான, சமுதாயத்துக்கு உதவுகிற மாதிரி(டாக்டர் புரூனோ எழுதுகிறாரே, அது போல) பதிவெழுதி அது சூடான இடுகையில் வந்திருக்குமானால் மிகவும் மகிழ்ந்திருப்பேன். ஆனால் இந்த நெகடிவ் அட்டென்ஷன், எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

உடனே "கமெண்ட் மாடரேஷன்", "அனானி ஆப்ஷன் டிஸேபிளிங்" போன்றவற்றை பரிந்துரைக்கும் முன், சில கேள்விகள். நமக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் செய்கிறோம்? அனைவரும் படித்தவர்கள் இல்லையா? ஒருவர் ஆண் பதிவராக இருந்தால் என்ன, பெண் பதிவராக இருந்தால் என்ன? அவர்கள் எழுதும் விஷயம் தான் முக்கியமே தவிர, அவரின் பாலினம் அல்ல. மேலும், ஆபாசமாகவோ அல்லது ஆபாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலோ அல்லது ஒருவரை சிறுமைப்படுத்தும் வகையிலும், பழி போடும் வகையிலும் ஏதாவது பின்னுட்டமோ அல்லது பதிவோ இருந்தால் தான் அடிக்கடி படிப்போமா?(சூடான இடுகைக்கு அது தான் அர்த்தம் இல்லையா?).

நேற்று ஒரு அனானி பெண்மணியின் கமெண்டுக்கு முழுக்க முழுக்க எதிர்பதமாக எழுதினேன். இன்று அவர் சொல்வதிலும் சில உண்மைகள் இருப்பது புரிகிறது. தெரிந்தோ, தெரியாமலோ பெண் வலைப்பதிவர்கள் டிஸ்க்ரிமினேட் செய்யப்படுகிறார்கள். வருண் ஒரு முற்போக்கு சிந்தனையாளராக இருப்பதால் பரவாயில்லை. "தான் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, மனைவி/காதலி மட்டும் பத்தினி தெய்வமாக இருக்க வேண்டும், யாரும் எதுவும் சொல்லிவிடக்கூடாது" என்று எதிர்ப்பார்க்கும் சராசரி ஆண்களுக்கு முன்னால் இந்த பெண் பதிவர்கள் தங்கள் வலைப்பூ கமெண்டுகளை, எப்படி தைரியமாக திறக்க முடியும்? Scary situation! மற்ற நாடுகளில் இருக்கும் பாப்பராசி கலாச்சாரத்துக்கு தமிழர்களும் முற்றிலுமாக மாறிவிட்டனர் என்பதையே இது உணர்த்துகிறது. அப்புறம் என்ன 'தமிழ் கலாச்சாரம்' எல்லாம்? இப்போதெல்லாம் தமிழ் கலாச்சாரம் கூட சர்ச்சைக்கு மட்டும் தான் பயன்படுகிறது என்பது வேதனையான உண்மை!

பின்குறிப்பு : இவர்கள்(அனானிகள்) இன்று செய்வது நாளைக்கு இவர்களுக்கே தொல்லையாக முடியும். சாபமெல்லாம் இல்லை, எனக்கு அந்த மூட நம்பிக்கையில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இணையதளமும் நம்முடைய சுற்றுச்சூழல் மாதிரி. நம்மவர்கள் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருப்பார்கள், ஆனால் வெளியே மாசுப்படுத்துவதைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். வெளியே கிருமிகள் பெருகினால், காற்று மூலமாகவும், தண்ணீர் மூலமாகவும் திரும்ப அவர்களையே பாதிக்கும் என்ற தொலைநோக்கு சிந்தனை இல்லாதவர்கள். இங்கேயும் ஏறக்குறைய அது தான் நடக்கிறது, இன்று இவர்கள் பரப்பும் இந்த மோசமான இணையத்தள ட்ரெண்ட் நாளை அவர்கள் வாரிசுகளையும், குடும்பத்தினரையும் பாதிக்காதா? What Goes Around Always Comes Back Around. Always!

Wednesday, July 16, 2008

காதல் கல்வெட்டு - 6

சனிக்கிழமை சரியாக 6:40க்கும் ராம்ஜி அவருடைய டொயோட்டாவில் கயலின் பார்கிங் லாட்டுக்கு வந்தார். கயலும அவரை வாசலிலேயே சந்திக்க முடிவு செய்து வெளியில் வந்து பார்க்கிங் லாட்டில் ரெடியாக இருந்தாள். ராம்ஜி காரிலிருந்து இறங்கி ஒரு புன்னகையுடன் முறைப்படி முன் கார் கதவை திறந்துவிட்டார், கயல் காரில் ஏறியவுடன்தானும் அமர்ந்து காரை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டே,

"How are you doing today, Kayal?"

"Fine, Ramji. How about you?"

"I was really excited all day to see you, Kayal."

"You were?! Here you are now!", புன்னகைத்தாள் கயல்.

"எந்த ரெஸ்டாரெண்ட் போறது முடிவு பண்ணியாச்சா கயல்?"

"ஆலிவ் கார்டன் போகலாமா ராம்ஜி?"

"எனக்கும் பிடிச்ச ரெஸ்டாரெண்ட் அது கயல், பக்கத்திலும் இருக்கு" என்று சொல்லியபடியே
Free-way யில் நுழைந்து சுமார் 7 மைல்கள் போனவுடனேயே ஆலிவ் கார்டென் ரெஸ்டாரண்ட் இருக்கின்ற எக்ஸிட் எடுத்தார் ராம்ஜி. ஒரு ரைட் டேர்ன் எடுத்து அடுத்த சிக்னலில் ரெஸ்டாரண்ட் பார்க்கிங் லாட்டுக்குள் நுழைந்து காரைப்் பார்க் பண்ணியதும், இருவரும் ஆலிவ் கார்டெனுள் நுழைந்தார்கள். ஒரு கால் மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு ஒரு அட்டெண்டெண்ட் இவர்களை அழைத்து சென்றான். நடந்துபோகும்போது, சீட்டில் உட்காரப்போகும்போது மட்டும் இவள் கையுடன் தன் கையை கோர்த்து அழைத்துச்சென்றான். அட்டெண்டெண்ட் காட்டிய ஒரு நான்ஸ்மோகிங் டேபிலில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள் இருவரும்- எதிர் எதிராக.

"How about some red wine, Kayal?"

"Oh No! Neither of us are going to have, Ramji, unless you want me to take a cab while getting back home?"

"OK, Kayal, not at this time"

"Salad and soft drinks கொண்டுவந்தார் டேபில் அட்டண்டெண்ட். டின்னர் ஆர்டெர் பண்னும்போதும், இவள் chicken alfredo ஆர்டெர் பண்ணினாள்.

"I thought you are a vegetarian, Kayal?"

"Really?"

"You know most of the South Indians I met are vegetarian?"

"I am not, Ramji. How about you?"

"I am a Vegetarian. So let me get some cheese pizza!"

இருவரும் அமெரிக்க வாழ்க்கைபற்றி பேசினார்கள். ராம்ஜி மிகவும் நாகரீகமாக நடந்து கொண்டார். ராஜி எதுவும் சொல்லி வார்ன் பண்ணினாளோ என்னவோ. பொதுவாக, என்ன படம் பார்த்தீங்க, கொஞ்சம் ஃபேமிலி பற்றி இப்படியே போனது பேச்சு. அடிக்கடி வருணுடன் வந்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தாள், கயல். ரொம்ப அதிகமாக மேக்-அப் போடவில்லை இன்று, ஒரு சுமாரான ஸ்கேர்ட் அண்ட் டாப்ஸ் அணிந்து வந்திருந்தாள். வருண் நினைவு வரும்போதெல்லாம் ஒரு கில்ட்டி காண்ஸியச்னெஸ் வந்தது அவளுக்கு. ஒரு வேளை யாரையும் டேட் பண்ணும் மனநிலையில் நான் இல்லையோ என்கிற சந்தேகம் வந்தது அவளுக்கு. ராம்ஜியுடன் தமிழில் எதுவும் பேச முடியவில்லை, மேலும் அவர் இவளைவிட நேர்வசாக இருந்தார். இவள் கண்களைப்பார்த்து பேசுவதை தவிர்த்தார். சாப்பிட்டுமுடித்த பிறகு "செக்" கொண்டுவந்து வைத்தார் அட்டெண்டெண்ட். ராம்ஜி அவருடைய மாஸ்டர் கார்டில் பே பண்ணினார்.

"Ramji! I will have to get back home at 9" என்றாள் கயல்.

"Not a problem" என்று 10 நிமிடத்தில் கயலை வீட்டில் ட்ராப் பண்ணிவிட்டு. "I had a nice time" என்று சொன்னார் ராம்ஜி.

"Same here" என்று ஒரு புன்னகையுடன் சொல்லிவிட்டு, அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்தாள், கயல்.

ரொம்ப சுமாரான டேட் அது. வீட்டிற்குள் வந்த கயல் பாத்ரூமபோய் முகம் கழுவிவிட்டு நைட் ட்ரெஸ் மாற்றிக்கொண்டுவந்து பெட்ல படுத்தாள். மறுபடியும் வருண் நினைவு வந்தது. திடீரென எழுந்துபோய் தன் பர்ஸில் இருந்த செல்ஃபோனை எடுத்து வருணுக்கு கால் பண்ணினாள். சில ரிங்குகளுக்கு பிறகு ஆன்ஸ்வெரிங் மெஷினுக்கு போனது.

"Please leave a short message, I will call you back as soon as I can". அது வருணின் குரல்தான்.
உடனே கயல் ஒரு மெசேஜ் விடப்போனாள், "Hi I am Kayal. I hope you remember me. I just called to let you..."

"ஹாய் கயல்!" வருண் குரல்!

"இருக்கீங்களா வருண்? வாய்ஸ் மெசேஜ் விடப்பார்த்தேன்"

"யார் கால் பண்ணுவது என்று பார்த்து பிறகு எடுத்தேன் கயல், என்ன விஷயம்?"

"ஒரு தோழிக்கு ட்யூட்டர் வேண்டும் என்று சொன்னேனே? அவளுக்கு தற்சமயம் தேவை இல்லையாம் வருண்"

"அப்படியா? பரவாயில்லை கயல்"

"How is your current student doing?"

"Jenny??? She is doing great. You know what?"

"What?"

"I have been thinking of calling you, Kayal"

"என்ன விஷயம் வருண், ஏதாவது குட் நியூஸ்?"

" சும்மா தான் ஏன் பண்ணக்கூடாதா?"

"பண்ணலாம், ஆனால் உங்களுக்கு என் நம்பர் வேணுமே?"

"சர்காஸ்டிக்கா சொல்றியா கயல்? ஜென்னியோட இன்று காலையில் கூட உன்னை பத்தி தான் பேசிட்டு இருந்தேன்"

"அதெப்படி வருண்? என்னை அவள் மீட் பண்ணவே இல்லை இல்லையா?"

"Well், அது ஒரு பெரிய கதை. கேக்க நேரம் இருக்கா?"

"சொல்லுங்க, ஃப்ரீயாதான் இருக்கிறேன். இப்போதான் ஒரு டேட் போயிட்டு வந்தேன்."

"No kidding! Who is that lucky guy?"

"உங்க கதையை சொல்லுங்க முதலில். உங்க ஜென்னிக்கு எப்படி என்னைத்தெரியும்?"

"உங்களை சந்தித்த பிறகு அடுத்த நாள், ஜென்னி திடீரென்று போனதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, Did you have coffee at all ? னு கேட்டாள். என்னை உன்னை மாதிரி அழகான இந்தியப்பெண்ணிடம் தனியா விட்டுட்டு போனத்துக்கு அவளை நான் கிண்டலா தேங்க் பண்ணினேன்"

"என்ன சொன்னாள்?"

"She flipped her middle finger again!"

"நான் நினைத்தேன்!! You are cracking me up, Varun. I am laughing out loudly here!

"எனக்கு கேட்கிறது உங்க சிரிப்பு கயல். உங்க குரல் சிரிக்கும்போது இனிமையாக இருக்கிறது"

"நீங்க ரொம்ப மோசம் வருண். பயங்கரமா ஐஸ் வைக்கிறீங்க"

"இல்லையே, உண்மையைத்தான் சொன்னேன், கயல். Anyway, she thinks you are a different kind of Indian girl, Kayal"

"She does?! So you were gossiping about me, with a white chick, Varun? OK, How different?"

"She thinks you visit 24 hour fitness center regularly unlike normal Indian girls"

"She does? That is very interesting, varun"

"Well she must have looked at you carefully when you were in the line".

"What do you think Varun, about her opinion?"

" I know what you think now, kayal"

"சொல்லுங்க பார்ப்போம்்?"

"You think I am trying to "g i y p" by complimenting you?!"

"இல்லையா பின்னே?"

"இல்லவே இல்லை. நான் அந்த மாதிரி டைப் இல்லை கயல்"

"ஏன் வருண்? You don't find me attractive or what?"

"நான் அப்படி சொல்லவில்லை! உங்களுக்கே தெரியும்."

"I know, Varun. You are certainly different. You know something, I was sort of missing you, Varun."

"Really? உங்களுக்கு என்னைப்பற்றி எதுவுமே தெரியாதே, கயல்."

"Very true, but உங்க கம்பெனி ரொம்ப பிடித்தது, வருண்."

"கொஞ்ச நேரம் பேசியதால் அப்படி தோ ணும். இன்னும் ஒரு 2 மணி நேரம் பேசியிருந்தால், சரியான அறுவை இந்த வருண் நு நினைத்து இருக்கலாம்."

"அப்படியா நினைக்கிறீங்க? OK, let us test that"

"Deal. நாளைக்கு அதே காஃபி ஷாப்பில் பார்ப்போமா?"

"எந்த நேரம்?"

"நீங்களே சொல்லுங்களேன், கயல்"

"11 AM ஓகே வா?"

"OK, kayal. May I have your #?"

"நிச்சயமா, எழுதிக்கோங்க. This is my cell #, சரி, ஜென்னி சொன்னதுக்கு நீங்க என்ன சொன்னீங்க, I mean the exact phrase you said?

"You really want to know?"

"ஆமாம்.சொல்லுங்க, ப்ளீஸ்"

I said, "I agree with you jenny, she does have a very sexy ****"

"அவள் அதுக்கு என்ன சொன்னாள்?"

"I think she became jealous"

"Really?! ஏன்?"

"ஏன் என்றால், she is also a girl்!

"As if guys don't get jealous? Anyway, Tell me something honestly, you really think so?"

"Yes, if you dont mind I can double check that tomorrow!"

"நீங்க ரொம்ப "naughty" வருண். but thanks!

"For what?"

"For the compliment about my 'you know what', O K நாளை பார்க்கலாம். Good night, Varun"

-தொடரும்

தமிழ்மண அரசியல் : சில விளக்கங்கள் ப்ளீஸ்

டியர் அங்கிள்ஸ், ஆண்டீஸ் மற்றும் ப்ரெண்ட்ஸ்,

கடந்த 2 மாதமாக தமிழ் மணத்தில் சுற்றி சுற்றி சில விஷயம் புரியாமல் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்துவிட்டேன். "முந்தி மட்டும் என்னவாம்?" என்று நீங்கள் கேட்கும் கேள்வி என் காதில் விழுகிறது, அப்படி எல்லாம் சும்மா நடு நடுவே கேள்வி கேட்கக்கூடாது. உங்களுக்கு தெரிந்த டிப்ஸ் ஏதாவது கொடுத்தீர்கள் என்றால் என்னை மாதிரி புதிய பதிவர்கள் பயனடைவோம்.

எனக்கு சில கேள்விகள்:

1. எந்தெந்த வார்த்தை எல்லாம் எழுதினால் தமிழ் மணத்தில் ஸ்டார் வரும்? ஜ்யோவராம் சுந்தர் விவகாரம் என்னாச்சு? ஏனென்றால் 'ஒரு மாதிரியான தலைப்பில்' நிறைய பதிவுகளைப்பார்க்கிறேன். அதுக்கெல்லாம் ஸ்டார் கிடையாதா? ஒரே குழப்பமா இருக்கு, ஏதாவது எழுதும் போது. "இதை எழுதலாமா வேண்டாமா" என்று கவலையா இருக்கு :(

2. ஒரு மாதிரி தலைப்பாக இருந்தால், ஏன் பெண்கள் காமெண்ட் எழுதுவதில்லை? நான் படிச்சு பார்த்து ஏதாவது எழுதலாமா என்று சுற்றிலும் பார்த்தால் ஒரு பெண் பதிவரை கூட காணோம்! நான் மட்டும் எழுதினால் பிரச்சினை வருமோ என்று கமெண்ட் எழுதாமல் அடக்கமான பெண் மாதிரி ஜூட் விடுகிறேன். அதற்காக சவப்பெட்டியில் இருப்பது மாதிரியான படம் போட்டிருக்கிறேன். புரியலையா? சரி விடுங்க, ச்ச்சும்மா ஒரு சில்லி ஜோக்.

3. எனக்கு விவாதமெல்லாம் ரொம்ப பிடிக்கும்,கடுமையாக இருந்தாலும் கூட. கிண்டல்,கலாய்த்தல் எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் சிலர் கொடுக்கும் ரியாக்சனைப்பார்த்தால் கொஞ்சம் பயமா இருக்கு. இங்கே யார் யார் எல்லாம் ரொம்ப சென்சிடிவ்? யார் யாரெல்லாம் ரொம்ப ஜாலி? சொன்னீங்கனா வசதியா இருக்கும்.

4. யாருக்கெல்லாம் நடு ராத்திரி எழுப்பி "அங்கிள், நீங்க வலைப்பூ எழுதறது உங்க மனைவிக்கு தெரியுமா?" இல்லைனா "அங்கிள் நீங்க வெறும் தாஸா இல்லை லார்டு லபக்கு தாஸா?" என்று கேட்டால் கோபம் வரும்?

5. பெயரிலி அங்கிள் யார்? ஏன் எல்லாரும் அவரைப்பற்றியே பேசறாங்க? அவருக்கும் மற்றவர்களுக்கும் என்ன ஃபைட்? அவர் தான் பூகி மேனா(Boogie man)?

6. ஓசை செல்லா என்பது யார்? ஏன் அவர் தொலைந்து போனார், பிறகு கிடைத்தார்? அன்செட்டில்ட் உமனுக்கும் அவருக்கும் என்ன சம்மதம்? ஏதோ தமிழ் மணத்தை ட்ரிக் பண்ணிட்டதா பேசிக்கறாங்களே? என்ன ட்ரிக் அது?

7. இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் பிரச்சினை வருமா?

கடைசியா "இது ஜும்மா சோக்கு, சோக்கு" என்று ஒரு டிஸ்கி போட்டு கூட நகைச்சுவை லேபிளையும் போட்டுடலாமா?

Tuesday, July 15, 2008

அணு சக்தி, ஒரு மாறுபட்ட பார்வை

நண்பர் வழிப்போக்கனின் கோரிக்கையை ஏற்று இந்த புது பதிவு. வழக்கமாக அணு சக்திக்கு எதிராக எழுதுவது தான் பாப்புலர் வியூ என்றாலும், அணு சக்திக்கு ஆதரவாக எழுதப்போகிறேன். கடந்த இரண்டு நாட்களாக என்னால் இயன்ற ஆராய்ச்சி செய்துப்பார்த்ததில் அணு சக்திக்கு ஆதரவாகவே முடிவெடுக்க வேண்டி இருக்கிறது.

அணு சக்தி என்பது தேவைக்கு அதிகமாக over exaggerate செய்யப்படுவது முதல் பிரச்சினை. நான் உபயோகிக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளில், பல பொருட்களுக்கு நன்மைகள் இருப்பது போலவே தீமைகளும் இருக்கிறது. அணு சக்தியும் அப்படியே. இந்தியாவுக்கு அணு சக்தி தேவை இல்லை, குறைவான மின்சாரத்தை வைத்து சமாளிக்கலாம் என்று கருதுவோமானால், தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளை விட பின் தங்குவது உறுதி. ஏற்கெனெவே இந்தியாவின் அரசியலைப்பு துஷ்பிரயோகத்தால் தொழில் நுட்பத்திலும், வளர்ச்சியிலும் மற்ற ஆசிய நாடுகளை விட மிகவும் பின் தங்கி விட்டோம். தற்போது இருக்கும் அவுட் சோர்சிங்கும் போய்விட்டது என்றால் இந்திய பொருளாதாரத்தின் நிலை என்னவாகும் என்று கவனமாக சிந்தித்துப்பார்க்கவேண்டும். இது போன்ற sensational விஷயங்களில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல், அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க வேண்டும்.

அணு சக்தியால் ஏற்படும் தீமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் காரணம், கடந்த காலங்களில் அணு ஆயுதங்களினால் ஏற்பட்ட பாதிப்புகளும், அதன் விளைவுகளும், அணு கழிவுகளைப்பற்றிய பயங்களும். இன்றைய காலக்கட்டத்தில், அணு சக்தியை பற்றி இந்த அளவு கவலைக்கொள்ள தேவை இல்லை. அணு ஆயுதம் என்பது வேறு, அணு சக்தி என்பது வேறு. இரண்டையும் கான்ஷியசாக இல்லாவிட்டாலும் சப்-கான்ஷியசாக குழப்பிக்கொள்வதே பல பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. விமர்சகர் திரு. ஞானி எழுதுவதை அப்படியே எடுத்துக்கொள்ளத்தேவை இல்லை. திருவிளையாடல் படத்தில் நாகேஷ் சொல்லுவாரே, "பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள், குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்". அது போல, திரு. ஞானி எந்த விஷயமாகட்டும், எதிர்மறையாகவே விமர்சனம் எழுதி பிரபலமாக நினைப்பவர். போதாத குறைக்கு திமுக அரசை வேறு அவருக்கு பிடிக்காமல் போய்விட்டது, இனி சொல்லவா வேண்டும்?

பலரது மனதை நெருடும் அணு கழிவுகளைப்பற்றி முதலில் பார்க்கலாம். அணு கழிவுகளாக கருதப்படும் பொருட்களில், 95% மூலப்பொருட்கள் அப்படியே இருக்கிறது. எனவே, அணு கழிவுகளை திரும்ப உபயோகிப்பதின்(Re-cycle) பிரச்சினையை பெருமளவு குறைக்கலாம். உபயோகித்தது போக மீதமிருக்கும் அணு கழிவுகளை பூமிக்கடியில் புதைத்து வைக்கும் போது 100,000 ஆண்டு காலத்துக்கு லீக் ஆக முடியாத டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 100,000 ஆண்டு காலத்துக்கு பிறகு மனித இனமே இருக்குமா என்பது சந்தேகமே. எலக்ரோட் பேரல் முறையும் பாதுகாப்பான அணு கழிவகற்றும் முறையே. இதை பற்றி எல்லாம் டெக்னிகலாக விளக்கி போரடிக்க விருப்பமில்லை. சிம்பிளாக சொல்வதென்றால், அணு கழிவுகளை கட்டிப்பிடித்துக்கொண்டு யாரும் தூங்க நினைக்காத வரையில் பாதிப்பில்லை.

அணு ஆலைகளால் கதிர்வீச்சு பிரச்சினை இருக்கப்போவது உண்மை, அது நமக்கு தெரியும். ஆனால், நாம் மிகச்சாதாரணமாக பயன்படுத்தும் பெட்ரோலியம்(க்ரூட் ஆயில்), நிலக்கரி போன்ற எரிபொருட்களை பயன்படுத்தும் போதும், வெளிவரும் கதிர்வீச்சும், நச்சுப்பொருட்களும் அணு ஆலையில் இருந்து வெளி வரும் கதிர்வீச்சை ஒப்பிட்டால் பல மடங்கு வீரியமானது, ஆபத்தானது என்று நமக்கு தெரியுமா? நிலக்கரி எரிபொருளில் பொட்டாஷியம்,பேரியம், தோரியம் போன்ற ரேடியோ ஆக்டிவ் கதிர்களும், பெட்ரோலியத்தில் ரேடியம் மற்றும் அதன் சகோதர கதிர் வீச்சுகளும் விளைகின்றன(நன்றி:திரு. கையேடு). அது மட்டுமில்லாமல் பூமியிலேயே இயற்கையாக தென்படும் ரேடியோ ஆக்டிவ் யூரேனியமும், தோரியமும், மனித உடலின் மூலப்பொருளான பொட்டாஷியமும் ரேடியோ ஆக்டிவ் பொருட்களே. இவை எல்லாம் கண்டுக்கொள்ளப்படாமல் பயன்படுத்தப்படும் போது(இந்தியாவில் வாகனங்களுக்கு ஸ்மாக் டெஸ்ட் கிடையாது என்பது நாம் அறிந்ததே), அணு சக்திக்கு மட்டும் ஏன் இத்தனை கொந்தளிப்பு? மற்ற எரிபொருட்களை ஒப்பிடும் போது அணு சக்தி சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானது என்பது உண்மை. மக்காத கழிவுகளான அலுமினியம், ப்ளாஸ்டிக் போன்ற கழிவுகளைப்பற்றி நாம் ஏன் இத்தனை கவலைப்படுவதில்லை? நம் உணவுப்பொருட்களில் சட்டரீதியாகவே உபயோகிக்கப்படும் நச்சு ஹார்மோன்களினால் தினம் தினம் நம் உடல் நிலை பாதிக்கப்படுகிறதே, அதை பற்றி கவலைப்பட்டிருக்கிறோமா? என்றாவது ஒரிரண்டு நச்சு ஹார்மோன் கட்டுரைகளை அலட்சியமாக படிப்பதோடு சரி. அதை விடுங்கள், தொழிற்சாலை கழிவுப்பொருட்களை நிலத்தடி நீரிலும், கடலிலும் கலப்பது பற்றி? அதற்காக தொழிற்சாலையே வேண்டாமா? ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததால் சூரியக்கதிர்களால் வரும் கதிர்வீச்சு உலகின் அனைத்து அணு உலைகளால் விளையும் கதிர்வீச்சை விட அதிகமாம், எனவே சூரிய ஒளியை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா?

அணு சக்தியால் கிடைக்கும் மிகப்பெரிய நன்மை, இதனால் கிடைக்கும் மின்சாரத்தின் விலை ரொம்ப மலிவு + அதிக அளவில் மின்சாரம் தயாரிக்கலாம் என்பதே. தற்போது வளர்ந்து வரும் டெக்னாலஜிக்கு இந்த மின்சார சக்தி மிக முக்கியம். அணு சக்திக்கு மாற்றாக சொல்லப்படும் சோலார் பேட்டரிகளை தயாரிக்கும் செலவு, அது உருவாக்கும் மின்சாரத்தை விட அதிகம். ஹைட்ரொஜென் பேட்டரிகளை ட்ரான்ஸ்போர்ட் பண்ணுவதும், உபயோகிப்பதும் கடினம் என்பதோடு விலையும் அதிகம். காற்றாலைகளில் உருவாக்கப்படும் மின்சாரம் ரொம்ப குறைவு, மின்சாரம் உருவாக்க தேவைப்படும் நேரமும் அதிகம். எப்படிப்பார்தாலும் இன்றைய காலக்கட்டத்தில் அணு சக்தியே சிறந்த தேர்வாக எனக்கு தோன்றுகிறது.

இந்த நன்மைகளை கருத்தில் கொண்டு, ஃப்ரான்ஸ்(கவிதாயினி ராப் கோபம் கொள்ள வேண்டாம், உங்களையும், ஜேகே ரித்தீஷையும் புகழ்ந்து வேறு கட்டுரையில் எழுதி விடுகிறேன்) தனது 80% எனர்ஜி தேவைகளை அணு சக்தியைக்கொண்டே பூர்த்தி செய்கிறது, மற்ற நாடுகளுக்கும் விற்கிறது. சீனாவிலும், மற்ற ஆசிய நாடுகளிலும் மேலும் புதிய அணு ஆலைகளை கட்டும் வேலைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. மற்ற அமரிக்க, ஐரோப்பிய நாடுகளைப்பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவும் அணு சக்தியை சாமர்த்தியமாக உபயோகித்துக்கொள்வது தான் புத்திசாலிதனம்.

Friday, July 11, 2008

காதல் கல்வெட்டு - 5

கயல் செல்பேசியை ஆஃப் பண்ணிவிட்டு அதை மார்போடு அணைத்தப்படி படுக்கையில் சாய்ந்தாள். தூக்கம் வரவில்லை, நினைவுகள் மீண்டும் கடந்த காலத்திற்கே அழைத்துச்சென்றது. அப்போது வருணை முதன்முதலில் சந்தித்து ஒரு 10 நாட்கள் இருக்கும். கயல் ஒரு நாள் தோழி ராஜியை ட்ராப் பண்ணியபோது, அவளுக்கு காஃபி போட்டுக்கொடுத்து ஒரு கோரிக்கையையும் வைத்தாள் ராஜி.

"கயல், ராம்ஜி உன்னிடம் ஒரு டின்னர் டேட் கேட்க சொன்னான். பாவம்டி, இதுவரை 2-3 தடவை கேட்டுவிட்டான்!"

"எனக்கு ஒண்ணும் ரொம்ப அப்பீலிங்கா தெரியலையே அவர்"

"போய்த்தான் பாரேன்! நீதான் இப்போ யாரையும் டேட் பண்ணலியே?'

"சரி ராஜி. கால் பண்ணி மெசேஜ் விட சொல்லு. சனிக்கிழமை டின்னெர் என்றால் ஓகே"

"ரொம்ப தேங்க்ஸ்டி"

"சரி உன் பாய்ஃப்ரெண்ட் ப்ரகாஷ் எப்படி இருக்கார்?"

"இருக்கார்"

"என்ன ஒரே சலிப்பு?"

"ஒவ்வொரு சமயம் உன்னைமாதிரி சிங்கிளா இருந்து இருக்கக்கூடாதானு தோனுது"

"யாருக்கு? உனக்கா?"

"ஏன் இருக்கக்கூடாதா?"

"என்னவோ போ!"

"சுடுகாட்டு ஞானோதயம் எல்லாம் அந்த நிமிடம் மட்டும்தான்-னு சொல்றியா?

"நான் உன்னை ஒண்ணு கேக்கட்டுமா ராஜி?"

"Go ahead"

"ஏன் முதல் டேட்டிலேயே இந்த ஆண்கள் நம்ம உடம்பு மீது அத்தனை இண்ட்ரெஸ்ட் காட்டறாங்க?"

"எனக்கு சரியா தெரியாது, ஒருவேளை டேட்னாலே 'அதற்கு' தான் என்று நினைச்சிருக்கலாம்"

"ஒருவரை காதலிக்காமல் ஒருவருடன் நல்லா பழகாமல் எப்படி ஃபிசிகலா க்ளோஸ் ஆவது? எனக்கு புரியலை!"

"உனக்கு எப்போ காதலில் நம்பிக்கை வந்தது?"

" இப்போவும் இல்லைதான். சும்மா தான் கேட்டேன்"

"அதென்னவோ கயல், ப்ரகாஷும் எக்சப்சன் கிடையாது இந்த விசயத்தில்"

" எனக்கு தெரியும்"

"செக்ஸ்தான் எங்க ரிலேஷன்ஷிப்பை ஸ்ட்ரெங்தென் பண்னியதுனுகூட நான் சொல்லுவேன், நான்"

"yeah, you give what he asks for, then everybody is happy right?"

"Well, that is how it works in most cases"

"செக்ஸ் எனக்கு பிடிக்காதென்று சொல்லவரல ராஜி"

"எனக்கு தெரியும் கயல். I understand your point"

"சில சமயம் இந்த விஷயத்தில் அமரிக்கன்ஸை விட நம்ம ஆட்கள் மோசமா இருக்காங்க ராஜி, பெண்களையும் சேர்த்து"

காரில் புறப்பட்டு வீடு போகும்போது, ராம்ஜியை ஞாபகப்படுத்திக்கொண்டாள். ராஜியுடன் வேலை செய்பவர் அவர், வட இந்தியர்.தமிழ் கொஞ்சம் பேசுவார். பார்தால் ஜெண்டில்மேன் மாதிரி தெரிந்தார். ஆள் நல்ல சிகப்பா, உயரமா இருப்பார். ஆனால் கயலுக்கு ஏனோ ராம்ஜி மேல் பிடிப்பு வரவில்லை.

திடீரென, ராஜி அவளை, 'காதலில் எப்போ உனக்கு நம்பிக்கை வந்தது' என்று கேலியாக கேட்டது ஞாபகம் வந்ததும், தனக்குள் சிரித்துக்கொண்டாள், கயல். ஏனோ அவளுக்கு வருண் ஞாபகம் வந்தது. வருண் ஒண்ணும் ரொம்ப அழகு என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் அவரிடம் ஏதோ காந்த சக்தி இருந்தது. நிச்சயம் அவரை மறுபடியும் பார்க்கனும் என்று ரொம்ப ஆவலாக இருந்தது. ஃபோன் நம்பர் கூட கேட்டு வாங்கிக்கொள்ளாமல் போய்விட்டாரே என்று கோபம் வந்தது அவளுக்கு.

"ஃபோன் நம்பர் கேட்டிருந்தால் அவர் மேலே உள்ள மரியாதை குறைந்திருக்குமோ?" ஒரே குழப்பமாக இருந்தது. கயலுக்கு. ஏற்கனவே சில ஆண்களை அவளுக்கு கடந்த காலங்களில் பிடித்திருக்கிறது, பழகி இருக்கிறாள், அளவோடு. ஆனால் அதெல்லாம் காதலென்று அவள் நம்பவில்லை.

அவள் அதை உணர்ந்து அவர்களிடம் இருந்து ஒதுங்கிய போது ஆண்களிடமிருந்து வருகிற ரியாக்ஷனை நினைத்தால் அவளுக்கு கொஞ்சம் பயமாகக்கூட இருக்கும். அவர்களை இன்சல்ட் பண்ணியதாகத்தான் எடுத்துக்கொள்கிறார்கள். ஏன் ஈசியா எடுத்துக்கக்கூடாது? ஆண்கள், அவளுக்கு இன்றுவரை புரியாத புதிர்தான். இப்படியே யோசித்துக்கொண்டு வரும்போது வீடும் வந்துவிட்டது. வீட்டில் வந்தவுடன் மெசேஜெஸ் செக் பண்ணினாள். ஒரு மெசேஜ் ராம்ஜீயிடம் இருந்து வந்து இருந்தது.

அவளை சனிக்கிழமை மாலை 6:45 க்கு வந்து பிக் அப் பண்னிக்கொள்கிறேன் என்றும், தயாராக இருக்க சொல்லியும் மெசேஜ் இருந்தது. மெசேஜ் கோரிக்கை போல இல்லாமல் ஏதோ இவளுக்கு உத்தரவு போடுவது போல இருந்தது. "இவர் யார் எனக்கு ஆர்டர் போட?" கயலுக்கு எரிச்சலாக இருந்தது.


- தொடரும்

Wednesday, July 9, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 3

வீட்டில் நுழைந்தவுடனே படபடக்கும் இதயத்தோடு அம்மாவை என் கண்கள் தேடியது. தலைவிரி கோலமாக, அலுவலகத்துக்கு அணிந்து சென்ற சேலை கூட மாற்றாமல் ஹாலின் ஒரு மூலையில் முகம் எல்லாம் வீங்கிப்போய் உட்கார்ந்திருந்தார். அம்மாவின் கை இயந்திரத்தனமாக காஃபிக்கோப்பையை பிடித்திருந்தது.

"அம்மாவுக்கு என்னாச்சு??" என்று கேட்டபடியே வேகமாக அம்மாவை நோக்கி சென்ற என்னை அப்பாவின் குரல் தடுத்து நிறுத்தியது. இந்த முறை சற்று கடுமையாக. "ரூமுக்கு போ என்று சொன்னேன் இல்லையா? அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை, அதான் காஃபி வாங்கித்தந்தேன். கொஞ்ச நேரத்தில் சரியாயிடுவா". கொஞ்சம் தயக்கத்தோடு என் அறைக்கு சென்று புத்தகத்தை பிரித்து வைத்து படிப்பது போல பாவனை பண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் கவனம் எல்லாம் ஹாலிலேயே இருந்தது. ஆனால் அதற்கு பிறகு டிவி ஓடும் சத்தத்தை தவிர வேறெதுவும் கேட்கவில்லை. பக்கத்து அறையில் அண்ணா இருக்கிறானா என்று எட்டிப்பார்த்தேன். "எனக்கும் வீட்டில் நடப்பதற்கும் ஏதும் சம்மந்தமில்லை" என்பது மாதிரி சுவாரஸ்யமாக வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான். அண்ணா எப்போதும் இப்படித்தான், வீட்டில் பிரச்சினை என்று வந்தால் அதில் இன்வால்வ் ஆகவே மாட்டான். ஒரு குடும்பத்தில் பிரச்சினைகள் என்றால், பெண் பிள்ளைகள் தான் அதிகம் உள்வாங்குகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள். இரவு அன்று யாரும் சாப்பிடவில்லை.

இரவு நேரம்- பசி மற்றும் குழப்பத்தால் தூங்காமல் சும்மா படுத்துக்கொண்டிருந்தேன். அம்மா என் அறைக்குள் வரும் சத்தம் கேட்டது. "கயல் தூங்கிட்டியாமா?"

"இல்லைமா இன்னும் தூங்கல, என்னாச்சு உனக்கு?"

கேட்டது தான் தாமதம், பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார்.

"நான் மோசம் போயிட்டேண்டி, என் வாழ்க்கையே பாழாப்போச்சு"

அம்மா அப்படி அழுது நான் பார்த்ததே இல்லை. அம்மாவுக்கும் எனக்கும் அந்த காலக்கட்டத்தில் தான் அம்மா-மகள் உறவு நெகிழ்ந்து தோழிகள் போல பேச ஆரம்பித்திருந்தோம். Did mom take our "friendship" too far? நான் பொறுமை இழந்து, "என்னாச்சு சீக்கிரம் சொல்லுமா!"

அம்மாவே தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். "இன்னைக்கு ஆஃபீஸில் ரொம்ப தலைவலி. பர்மிஷன் போட்டுட்டு 3 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்தேன். வாசலில் அப்பா பைக் நிக்குது, ஏன் சீக்கிரம் வந்தார்னு நினைச்சிட்டே கதவை திறந்து வீட்டுக்குள் வந்தால், பாத்ரூமில் ஏதோ சிரிப்புச்சத்தம்".

அடுத்த பகுதிகளை மன உறுதி இருப்பவர்கள் மட்டும் படிக்கவும். மற்றவர்கள் தயவு செய்து இதோடு நிறுத்திக்கொள்ளவும்.

"சந்தேகப்பட்டு பாத்ரூம் கதவை திறந்துப்பார்த்தால், அப்பாவும் ஒரு பொம்பளையும் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் அம்மணமா.." மீண்டும் பெருங்குரலெடுத்து அழுத்தார்.

"நான் பார்த்த அதிர்ச்சில அப்பா அப்படியே நிக்கறார், அந்த பொம்பளை தான் சுதாரிச்சிட்டு அவசர அவசரமா பாவாடையக்கட்டினாள். நீ சொன்னா நம்ப மாட்டே கயல், அந்த பொம்பளை சரியான சேரி பொம்பளை மாதிரி இருக்கா. அவ கருப்புகலரும், பல்லும் சே! அவலட்சணமா இருக்கா. அவளோட போய் எப்படி-டி உங்கப்பா இப்படி எல்லாம்" (மீண்டும் அழுகை). அம்மா நல்ல சிவந்த நிறம் என்பதால் கருப்பானவர்கள் அனைவருமே பொதுவாக அவருடைய அகராதியில் அழகில்லாதவர்கள்.

'உலகம் சுற்றுவது ஒரு நிமிடம் நின்றுவிட்டது' போன்ற அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? எனக்கு அன்று அப்படித்தான் இருந்தது. உடம்பின் இரத்தமெல்லாம் உறைந்தது போல இருந்தது. செக்ஸ் பற்றி எதுவும் தெரியாத அந்த வயதில் என்னுடைய முதல் Rude awakening. அம்மா சொல்லுவதை கேட்கவே விருப்பம் இல்லை. அதற்கு பிறகு மெளனத்தையே பதிலாக அளித்துக்கொண்டிருந்தேன்.

"அந்த பொம்பளை பெரிய ரவுடியா இருக்கா கயல். ஏண்டி இப்படி பண்ணினேனு அவளை உலுக்கினா என்ன சொல்றா தெரியுமா?

"......"

"உன் புருசனை காப்பாத்திக்க வக்கில்ல எங்கிட்ட ஏன் வந்து எகிற்ற?-ன்றா. இதை எல்லாம் பார்த்தும் அந்த மனுஷன் அமைதியா இருக்கார். இவர் பண்ணிய காரியத்துக்கு நான் யார்யார்டலாம் பேச்சு வாங்கவேண்டி இருக்கு பார்த்தியாடி?"

"......"

அம்மா மீண்டும் என் மடியில் படுத்து அழ ஆரம்பித்தார், என் யூனிபார்ம் டாப்ஸ் நனையும் வரை. எனக்கு அந்த initial shock-க்கு பிறகு உடனடியாக வந்த உணர்வு, சகிக்க முடியாத அருவருப்பு. வயிற்றை புரட்டுவது போல குமட்டிக்கொண்டு வந்தது. அடுத்ததாக, அப்பா மீது கடுமையான வெறுப்பு! வெறுப்பு! வெறுப்பு!

தவறு செய்ததாக சொல்லப்படும் பெண்ணைப்பற்றி விசாரித்ததில், அவள் அடுத்த தெருவில் தான் இருந்தாள், ஏழை குடும்பத்துப்பெண், ஒரு 20-25 வயதிருக்கும். திருமணத்துக்காக அவள் வீட்டில் மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருந்தார்கள். அவள் கல்யாணத்துக்கு நகை, பணம் சேர்க்க தான் சில தவறான உறவுகளில் சிக்கிக்கொண்டாள் என்று பின்னாட்களில் கேள்விப்பட்டேன்.

பிறகு என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பெரிய இடைவெளி விழுந்தது. இருவருக்கும் படுக்கை தனித்தனியானது, பேச்சு வார்த்தை சுத்தமாக நின்றுப்போய் ஒரு வரி கேள்வி-பதில்களானது, அதுவும் முழுக்க முழுக்க குழந்தைகள் சம்மந்தமாக மட்டும். இரவானால் அம்மா என் ரூமுக்கு வந்து படுத்துக்கொள்வார். "இனிமேல் உயிரோட இருக்க வரைக்கும் அவரோடு படுக்கமாட்டேன் கயல்".

அந்த காலக்கட்டத்திலெல்லாம் சரியாக இரவு நேரத்தில் கரண்ட் கட்டாகும். அப்பா மொழியில் சொல்லுவதென்றால், "ப்ளடி எலெக்ட்ரிசிட்டி போர்ட் பாஸ்டர்ட்ஸ்"(அவருக்கு இருக்கும் தீவிர ஆங்கில மோகத்தினால் திட்டும் போது கூட ஆங்கிலத்தில் தான் திட்டுவார்). மின்சாரத்தால் இயங்கும் ப்ரிட்ஜ், டிவி, தடதடக்கும் மின்விசிறி எல்லாம் நின்றுவிட்டால் நம்மை சுற்றியுள்ள மற்ற சிறு சிறு ஓசைகளை கவனிக்க ஆரம்பிப்போம் இல்லையா?

அப்படி மின்சாரம் இல்லாத நிசப்தமான இரவு நேரங்களில் நான் கவனிக்க நேர்ந்த ஓசைகள் நன்றாக நினைவிருக்கிறது. ஜன்னல் காற்றினால் படபடக்கும் ஓசை, பாத்ரூம் குழாயில் தண்ணீர் சொட்டு சொட்டாக பக்கெட்டில் விழும் ஓசை, கொசுக்களின் ரீங்காரம், கூடவே என் அம்மாவின் மெல்லிய விசும்பல்!.

பி.கு: இந்த நிகழ்வின் இண்டென்சிட்டியில் பாதியை தான் என்னால் எழுத்தில் கொண்டுவர முடிந்தது.

-நினைவுகள் தொடரும்.

Tuesday, July 8, 2008

காதலியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது எப்படி? :வருணிடம் இருந்து டிப்ஸ்.வலையுலக ஆண் பதிவர்களுக்கு ஏதோ என்னாலான சிறு உதவியாக இந்த பதிவு. இதை ஏன் வருணே பதிக்கவில்லை என்ற கேள்வியெல்லாம் யாரும் கேட்கக்கூடாது. ஏனென்றால் என்னைப்போன்ற பெண்களுக்கு இருக்கும் நல்லெண்ணம் ஆண்களுக்கு இருப்பதில்லை(அடிக்க வராதீங்க). வருண் ஒரு கலியுலக கிருஷ்ணன்(லேடீஸ் மேன்) என்பதை உணர்த்த சிம்பாலிக்காக படமும் போட்டிருக்கிறேன்.

டிப் 1

கயல்: "உங்களுக்கு என்ன நடிகை பிடிக்கும் வருண்?"

வருண்: "உன்னைத்தவிர யாரையுமே பிடிக்காது"

கயல்: "நான் நடிகை இல்லையே, பரவாயில்லை சொல்லுங்க"

வருண் : "நடிகை எல்லாம் உன்னை போல இண்டெலிஜெண்டா இருப்பாங்களா?"

டிப் 2

இவன்(ஒரு பதிவர்) :"இந்த குஷ்புவ நீங்க இன்னமும் விடல்லையாய்யா?? பாவம் அவங்க தெரியாம பேசிட்டாங்க விடுங்க"

கயல்:"நீங்க சொல்லி இருப்பது ஆயிரத்தில் ஒரு வார்த்தை. நானும் இதையே தான் வருணிடம் சொல்லி வருகிறேன், இருந்தும் அவர் குஷ்புவை விடறதா இல்லை.
ஒருவேளை குஷ்புவிடம் வருணுக்கு சீக்ரெட் க்ரஷ்ஷோ என்னவோ?"

வருண்(பாய்ந்து வந்து): "குஷ்பு மேலேயா? எனக்கு க்ரஷ்ஷா? நீ வேற, நடிகைகள்னா எனக்கு உண்மையிலேயே அவ்வளவு பிடிக்காது. ஆனால் ஒரு நடிகை மேலே எனக்கு க்ரஷ் வர ஒரு பாஸிபிலிட்டி இருக்கு, கயல்! அது என்னனா, ஒருவேளை எதிர் காலத்தில் நீ நடிக்க போனால், உன் மேலே நிச்சயம் க்ரஷ் வரும்!"

கயல்(அதிர்ச்சியில்): "அதெப்படிங்க இதெல்லாம் முடியுது உங்களால? நான் நடித்தால் அந்த படத்தின் மொத்த டிக்கட்டையும் நீங்க தான் வாங்கி தனியே உட்கார்ந்து பார்க்கனும்(சாரி, என் படத்தை எனக்கே பார்க்கும் தைரியம் இல்லாததால், இதில் உங்களுக்கு நான் கம்பனி தரமுடியாது)"

வருண்: "To tell you the honest truth, I will love to watch your movie alone, kayal :)"

கயல்: "என்ன கொடுமை வருண் இது?"

டிப் 3

கயல்: "ப்ளாக் ஆரம்பித்து கொஞ்ச நாள் ஆனாலும் ரெஸ்பான்ஸ் நல்லா இருக்கு நம்ம ப்ளாகுக்கு"

வருண்: "எல்லாம் உன் முகராசி தான் கயல்"

கயல்: "ஏன் நீங்களும் தான் நல்லா எழுதறீங்க காதல் கல்வெட்டு எல்லாம்"

வருண்: "இருந்தாலும் உன்னை மாதிரி வருமா? உன்னை தான் நிறையபேருக்கு பிடிக்கும்"

கயல்(மனதுக்குள்): "தாங்கமுடியலியே சாமி!!"


நினைவுக்கு வரும்போதெல்லாம் அடிக்கடி வருணுடைய ட்ரிக்குகளை தொடர்ந்து எழுதுகிறேன். இந்த டிப்ஸுக்களுக்கு நடுநடுவே கொஞ்சம் டெக்கரேட்டிவா இருக்க "மானே,தேனே, பொன்மானே" எல்லாம் போட்டுக்கோங்க. முக்கியமா, கயல் என்ற பெயரை மாற்றி உபயோகிக்கவும், அப்படியே உபயோகித்தால் உங்கள் வீட்டில் பிரச்சினை வரப்போவது உறுதி(டேமேஜ்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல). இதை படித்து சக பதிவர்களான நீங்களும் அடி வாங்காமல் தப்பிக்க வாழ்த்துக்கள்.

Monday, July 7, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 2முன்பே ஒரு விஷயம் தெளிவாக எழுதிவிடுகிறேன், தமிழ்ப்பெண்கள் என்றால் சில விஷயங்களைப்பற்றியே பேசக்கூடாது, எழுதக்கூடாது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 1.அரசியல் 2.பாலியல்(அந்தப்பெண் அரசியல்வாரிசாகவோ அல்லது மருத்துவராகவோ இல்லாதபட்சத்தில்). தமிழ்சினிமாவில் கூட பொதுவாக பெண்களை ஏதோ அரை லூசுகள் ரேஞ்சுக்கு காட்டுகிறார்கள். உதாரணமாக மனிஷா கொய்ராலா(முதல்வன்), லைலா(ஏறக்குறைய எல்லா படத்திலும்), சமீபத்தில் ஜெனிலியா(சந்தோஷ் சுப்பிரமணியம்) போன்றவர்களை குறிப்பிடலாம். கதாநாயகி வாயாடியாக இருந்தாலும் பரவாயில்லை, விஷயம் தெரிந்த அறிவாளியாக மட்டும் இருக்கவே கூடாது(சில விதிவிலக்குகளைத்தவிர).

தமிழ்பெண்கள் என்ன அரைலூசுகள் என எண்ணும் அளவுக்கு அப்பாவிகளா? இல்லவே இல்லை, சினிமா பெண்களுக்கும் நிஜ உலக பெண்களுக்கும் சம்மந்தமில்லை. தமிழ்ப்பெண்களுக்கு காம உணர்வு இருக்காதா? நிச்சயம் உண்டு. காமத்தைப்பற்றி படிக்கவும், எழுதவும், பார்க்கவும் பிடிக்கும். அரசியலைப்பற்றி திறனாயவும் பிடிக்கும். ஆனால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள தயக்கம். சமுதாயம் நம்மைப்பற்றி என்ன நினைக்குமோ என்ற பயம். நான் அந்த வட்டத்தை எல்லாம் தாண்டி பாலியல் பற்றியும், அரசியல் பற்றியும் முடிந்தவரை எழுதப்போகிறேன். என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை, ஏனெனில் நான் யார் என்பது எனக்கு மிகத்தெளிவாக தெரியும். I don't need reassurance, even though I don't mind having some.

கற்பு பற்றிய என் முதல் நினைவுக்கு சில வருடங்கள் முன்னால் பயணிக்க வேண்டும். அப்போது எனக்கு ஒரு 15 வயதிருக்கும். எதிர்பாலினரால் முதன்முறையாக கவனிக்கப்பட்டு வந்த காலமது, எனக்கும் அப்படி சில க்ரஷ்கள் இருந்தது. பாய்ஸ் என்றால் எதிரிகளாக கருதிவந்தது கொஞ்சம் கொஞ்சமாக மறையத்தொடங்கிய பருவம். இதில் குறிப்பாக விக்கி என்ற கூடப்படித்த மாணவன் என் கருத்தை கவர்ந்தான், எனென்றால் அவன் தான் என்னில் மற்றவர்களை விட அதிக கவனம் செலுத்தினான். அந்த பரவச தினங்களில் அன்றொருநாள், ட்யூஷன் விட்டு வந்த என்னை பிக்கப் பண்ண வந்த அப்பாவின் முகத்தில் என்றும் காணாத இறுக்கம். எப்போதும் "ஏதாவது வாங்கித்தரட்டுமா, சாப்படறியாமா" என்றெல்லாம் அன்பாக கேட்கும் அப்பாவின் முகத்தில் சிந்தனையுடன் கலந்த கவலை ரேகைகள். சாலைவிதிகளை மீறாத அப்பா அன்று வாகனம் ஓட்டுவதில் நிறையவே தப்பு செய்தார். "வூட்ல சொல்லிட்டு வந்தியா" போகிற போக்கில் ஒரு ஆட்டோக்காரன் திட்டினான்.

எனக்கு ஏதோ ஒன்று ரொம்ப சரி இல்லை என்பது மட்டும் தெரிந்தது, ஆனால் அது என்னவென்று கேட்டு தெரிந்துக்கொள்ள பயம். அப்பா என்பவர் என்னைப்பொறுத்தவரையில் ரொம்ப மரியாதைக்குரிய மற்றும் அன்புக்குரிய ஜீவன். "உடம்புக்கு ஏதும் சரி இல்லையோ, ஒருவேளை ஹேமாவுடைய அப்பா மாதிரி ஹார்ட் அட்டாக் ஏதும்.." நினைப்பே என்னை கலக்கியது. "அப்பாவுக்கு ஏதும் ஆகக்கூடாது கடவுளே!"

"இன்று பெப்சி உங்கள் சாய்ஸ் வரும் டேடி" அவர் கவனத்தை கலைக்க ஏதோ என்னாலான முயற்சி செய்து பார்த்தேன். செய்திகளுக்குப்பிறகு அப்பா கொஞ்சமும் மிஸ் பண்ணாமல் பார்க்கும் நிகழ்ச்சி இந்த பெப்சி உங்கள் சாய்ஸ். எங்களுடைய படிப்பு கெடும் என்பதற்காக வீட்டில் கேபிள் டிவி கனெக்ஷன் போடவில்லை. ஒரு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு போயிருந்த போது தான் முதன்முதலில் பெப்சி உங்கள் சாய்ஸ் பார்க்க நேர்ந்தது.

"ஹலோ நான் தான் பெப்சி உமா பேஷ்றேன், பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ஷிக்காக. நீங்க யார் பேஷறது?" - பட்டுப்புடவையும், விரித்துப்போட்ட ஹேர்ஸ்டைலும், நல்ல குரல்வளமும், அழுத்தமான மேக்கப்புமாக இருந்த பெப்சி உமாவை அப்பாவுக்கு பார்த்தவுடனே பிடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். "யார் இந்த பொண்ணு, நல்லா பேசறாளே?" என்று கேட்டு விசாரித்து தெரிந்துக்கொண்டார். வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக வீட்டுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுக்கப்பட்டது. பிறகு பெப்சி உமாவின் நிகழ்ச்சியாக இருந்தால் வாரம் தவறாது எங்களுடைய மறைமுக கிண்டல்களையும் பொருட்படுத்தாது ஏதோ தெய்வத்தைப்பார்ப்பது மாதிரி ஒருவித பரவச நிலையில் பார்ப்பார். பார்ப்பாரே தவிர எங்களுக்கு முன்னால் பெப்சி உமாவுக்கு ஃபோன் பண்ணி பேச முயற்சி பண்ணியதில்லை. ஒருவேளை நாங்கள் பார்க்காதபோது செய்திருக்கலாம். பெப்சி உமாவுக்கு கல்யாணம் ஆனபோது வருத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களில் என் அப்பாவும் ஒருவர்.

ஆனால் அன்று, பெப்சி உமாவும் அவருடைய கவனத்தை ஈர்க்கவில்லை. வீடு வந்தவுடன் அவர் மெளனம் கலைந்தது, "அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை, தொந்தரவு பண்ணாதே. நீயே டேபிள் மேல் இருக்கிறதை சாப்பிட்டு உன் ரூமுக்கு போய் நல்ல பிள்ளையா ஹோம்வொர்க் பண்ணு, சரியா?". எனக்கு எதோ புரிந்தது மாதிரி இருந்தது. "இந்த பிரச்சினை அம்மாவுடன் சம்மந்தப்பட்டதா?". முன்பு இருந்ததை விட கலக்கம் பலமடங்கு அதிகரித்தது.

- நினைவுகள் தொடரும்

Friday, July 4, 2008

கற்பு, குஷ்பு, நாம்

“என்னடா ரொம்ப "டல்"லா இருக்க, வசந்த்?

"ஒண்ணுமில்லடா நேத்து ஒரு விவாதம்!"

“யாரோட?”

“சந்தியாவோடதான்”

“எதுவும் ஈகோ க்ளாஷா?”

“இல்லைடா, குஷ்பு, கற்பு, நம்மைப் பற்றி”

“குஷ்பு சொன்னதில் தப்பில்லை, இப்போலாம் எல்லோரும் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வச்சிக்கிறாங்கனு சொல்லியிருப்பாள்?”

“ஆமடா!”

“இந்தக்காலத்து படித்த பெண்கள் அப்படித்தான் ஃபீல் பண்ணுறாங்கடா”

“நீயும் இதை நம்புறியா?”

“பெண்கள் பத்தி நமக்கென்ன தெரியும், வசந்த்?”

“ரொம்ப கொஞ்சம்தான், அப்போ அவங்க சொல்றதைத்தான் நாம் நம்பனும்னு சொல்றியா?”

“நிச்சயமா!”

“இல்லைடா, எனக்குத்தெரிய நிறைய பசங்ககூட திருமணத்துக்கு முன் வெர்ஜினா இருந்ததா கேள்விப்பட்டு இருக்கிறேன்”

“பசங்க பற்றி நமக்கு நிச்சயம் தெரியும். அப்படி இருந்தால் என்ன? அதைப்பற்றியெல்லாம் அவங்க பெருமைப்படலை! அந்த மாதிரி ஆண்களைப்பார்த்து பரிதாபப்பட்டாலும் படுவாங்க! இந்தக்காலத்து பெண்கள்ல கூட சிலர்/பலர் வேர்ஜினாக இருக்கத்தான் செய்வாங்க. ஆனால் இங்கே பிரச்சினை அதில்லை”

“என்ன சொல்றடா?”

“நாங்க ஏன் வேர்ஜினா இருக்கனும்னு நீங்க எதிர்பார்க்கிறங்க? உங்களில் எத்தனை பேர் அப்படி இருக்கீங்கனு கேக்கிறாங்க?”

“கல்யாணத்துக்கு முன் வெர்ஜினா இருப்பதில் அவங்க பெருமையடையறாங்களா? நான் நிச்சயம் பெருமையடைவேன்”

“இப்போதெல்லாம் பெருமையடைவதில்லை என்று நினைக்கிறேன், ஏன் பெருமையடையனும்?”

“எனக்கு சரியா தெரியல, இருந்தாலும் ஒரு சின்ன உறுத்தல் இந்த விஷயத்தில் எனக்கு”

“ஏன்?”

“சரியா தெரியாது”

“ஏன் தெரியுமா?”

“ஏன்?”

“இன்னும் நம்ம கலாச்சாரத்தில் >70% arranged marriage தான் பண்ணுறோம். ஆனால், சந்தியா, குஷ்பு, நீ, நான் எல்லாம் பார்க்கிற, இருக்கிற சொசையிட்டியில் arranged marriage, ரொம்ப அரிது. arranged marriage பண்ணுகிற பெண் வேர்ஜினா இல்லைனா, அவள் வரப்போகிற கணவனிடம் இல்லாமல் யாரிடமோ செக்ஸ் பற்றி பழகி இருக்காள்னு ஆகுது. அது சரியல்ல.. ஏன் காதலித்த அவனையே கல்யாணம் செய்து இருக்கலாம் இல்லையா?..இவங்க எல்லோரும் தனக்குப்பிடித்தவருடன் பழகி, காதல் மற்றும் காமத்தில் கலந்து பின்பு அவர்களையே கல்யாணம் பண்ணிக்கொண்டால் நல்லா இருக்குமே.. எதுக்கு செக்ஸ் பழக ஒரு ஆள், வாழ இன்னொரு ஆள்? இப்படியெல்லாம் யோசிக்கிறயா”

“Exactly”

“சரி, இதைவிடுடா, ரெண்டு டிக்கட்ஸ் இருக்கு, தசாவதாரம் பார்க்கப்போகலாம், வாறியா?

Wednesday, July 2, 2008

காதல் கல்வெட்டு-4

வால்மார்ட் சென்ற வருண் ஷாப்பிங் எல்லாம் முடித்தான்.கடைசியில் கயலின் அருகாமை இன்று அவனை மயக்கியது ஞாபகம் வந்தது. "செல்ஃப் செக் அவுட்"டிலேயே செக் அவுட்பண்ணியதும் தன் டிஸ்கவரில் பே பண்ணிவிட்டு காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தான். அவன் கயலை பின்னால் இருந்து தழுவிய இடத்தை மறுபடியும் கடக்கும்போது மல்லிகை வாடை அடித்தது. அவனுக்கு கயலின் கழுத்து மற்றும் அவள் உடல் தன் மேல் உரசியது ஞாபகம் வந்தது. இந்த நினைவிலிருந்து தப்பிக்க இந்தியாவில் அப்பா அம்மாவிற்கு கால் பண்ணினான். அவன் வாரமொருமுறை சனிக்கிழமை அப்பா அம்மாவுடன் பேசுவதுவழக்கம்.

அம்மா பேசும்போது, வழக்கம்போல் அவனுக்கு நல்ல வரன்கள் வருவதாக சொன்னார்கள். மேலும் அப்பா வழக்கம்போல் பி பி இருப்பதைமறந்து, ஊறுகாய் வற்றல் எல்லாம் நிறைய சேர்த்துக்கொள்கிறார். நான் சொல்வதை கேட்பதே இல்லை. நீ சொன்னால்தான் கேட்பார் நீதான் அவரை திட்ட வேண்டும் என்று அம்மா புகார் பண்ணினார்கள்.

சிறுவயதில் இருந்து அப்பா- அம்மா இது போல் சண்டை போடுவதைப்பார்த்து வருகிறான், வருண். அப்பா ரொம்ப நல்ல மனிதர்தான், ஆனால் சாப்பாடு விசயத்தில் அவரால் கட்டுப்பாடாக இருக்க முடியாது. நல்லவேளையாக அவருக்கு டயபட்டிஸ், கொலஸ்டிரால் எதுவும் இல்லை. அவரின் ஹைப்பர் டென்ஷனும் அவர் 55 வது வயதில் தெரிய வந்தது. ஒருநாள் திடீரென்ன அப்பாவிற்கு மூக்கிலிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. அவசர சிகிச்சைக்கு சென்று என்னவென்று பார்க்கும்போது அவர் இரத்த அழுத்தம் 180/120 இருந்தது. அன்றிலிருந்துதான் அவருக்கு பி பி இருந்ததும் தெரிய வந்தது. பி பி அதிகமானதால், ஒரு வீக்கான நரம்பு உடைந்து அது மூலம் ப்லீடிங் ஆகி இருக்கு என்றார் டாக்டர். டாக்டரிடம் ரெகுலர் செக்-அப் பண்ணி இருந்தால் இது போல் கவனக்குறைவாக விட்டிருக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். மேலும் டாக்டர் சொன்னார், இதே நரம்புமூளையில் வெடித்து இருந்தால், அவருக்கு ஸ்ட்ரோக் வந்து கோமா ஸ்டேஜ்க்கு போயிருக்கும் பயங்கரம் இருந்தது என்றார் டாக்டர். கொஞ்சநாள் பத்தியமாகவும், ரெகுலர் செக்கப்பும் செய்து கொண்டிருந்தார் அப்பா. மாத்திரை ரெகுலராக சாப்பிடுவதால், பி பி கண்ட்ரோலில் இருந்தது. ஹைப்பர் டென்ஷன் கண்ட்ரோலுக்கு வந்தவுடன் இவர் கண்ட்ரோலிழந்தார். தன் சாப்பாட்டில் மறுபடியும் உப்பு காரம் அதிகமாக்கிக்கொண்டார். அம்மா அவருடன் எவ்வளவு சண்டை போட்டாலும், அவரை திருத்த முடியவில்லை. உப்பு காரம் குறைத்து சமைத்தால், வந்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு அப்படியே சாப்பாடை வைத்துவிட்டு எழுந்துவிடுவார். வெளியில்போய் ஏதாவது ஹோட்டலில் போய் வாய்க்கு ருசியாக ஸ்னாக்ஸ் சாப்பிட்டு சமாளிப்பார். இந்த விசயத்தில் அப்பா அம்மாவிடம் கூசாமல் பொய் சொல்லுவதும் உண்டு. ஆனால் அமெரிக்காவிலிருந்து வருண் அவர் டயட்டை கண்ட்ரோல் பண்ணுவது சாத்தியமே இல்லை என்று அம்மாவுக்குப்புரியாது. அவர் என்ன பச்சைக்குழந்தையா? படித்தவர். அவருக்கே இதெல்லாம் தெரியனும் என்று நம்பினான் வருண்.

அம்மாவிடம் பேசி முடித்தபிறகு, “அப்பாவிடம் ஃபோனைக்கொடுங்கம்மா!” என்றான்.

‘சரிப்பா வருண், உன் உடம்பை நல்லாப்பார்த்துக்கோ. அம்மாவுக்கு எந்நேரமும் உன் நினைவுதான்' என்று சொல்லி வழக்கம்போல் குரல் தழுதழுக்க முடித்தார்கள் அம்மா.

‘சரிம்மா! நீங்கள் அப்பாவிடம் சண்டைபோடாமல் தன்மையாக சொல்லுங்கள். இதெல்லாம் அவருக்கே தெரியனும் அம்மா!”

“வருண், எனக்கு பி பி எல்லாம் நார்மலாயிருக்குப்பா!” என்றார் அப்பா, டிஃபென்ஸிவாக.

“சரிப்பா, உடம்பைப்பார்த்துக்கொங்க! ரெகுலரா மாத்திரை சாப்பிடுங்கள். அந்த பி பி மிஷின் வைத்து ரெகுலர் ஆக வீட்டிலேயே செக் பண்ணுங்க!

“ரெகுலரா செக் பண்ணூறேன், வருண்! இப்போலாம் நார்மலாத்தான் இருக்குப்பா!”

“சரி, நான் வச்சுடுறேன்ப்பா. அடுத்த வாரம் பேசுறேன்” என்று முடித்தான் வருண்.

ஃபோன் வைத்தவுடனே மறுபடியும் ரிங் வந்தது.

“ஹல்லோ”

“என்ன ஃபோன் ரொம்ப நேரம் பிஸியா இருந்தது வருண்?”

“ஆமாம், கயல், அப்பா-அம்மாவிடம் பேசினேன்”

“எப்படி இருக்காங்க வருண்? என்ன சொன்னாங்க ஆண்ட்டி அங்கிள்?”

“எல்லாம் பழைய பல்லவிதான், கயல். நிறைய வரன் வருதாம், அப்பா உப்பு காரம் குறைக்கவே மாட்டேன்கிறாராம்”

“யாருக்கு வரன்?”

“எனக்குத்தான். வேற யாருக்கு?”

“உங்களுக்கு பொண்ணு பார்க்கிறார்களா, வருண்?”

“ஆமாம். அதுதான் 2 வருடமா பார்க்கிறாங்களே!”

“ஏன் உங்களை யாரும் கட்டிக்க மாட்டேன்கிறாங்களா, வருண்?”

“ஆமாம். என் ஃபோட்டோவைப்பார்த்து எல்லோரும் பயந்து விடுகிறார்களாம். ஆனால், அதை சொல்லாமல் வேறு ஏதோ காரணம் சொல்லி தட்டிக்கழிக்கிறாங்களாம்.”

“அதெல்லாம் இருக்காது”

'உனக்கெப்படித்தெரியும்?”

“இப்படி எல்லாம் பேசினால் எனக்குப்பிடிக்காது, வருண்”

“சரி, அப்பா, அம்மாவை கஷ்டப்படுத்தக்கூடாதுனு பேசாமல் இருக்கிறேன், கயல்!”

“ஏன் வாழ்நாள் முழுவதும், பிரம்மச்சாரியா இருக்கப்போறீங்களா?”

“தெரியவில்லையே, கயல். டு யு மைண்ட்?”

“ஆஃப் கோர்ஸ் ஐ டு. சரி, என் வீட்டு கதை கேக்குறீங்களா?”

“என்ன சொல்றாங்க ஆண்ட்டி?”

“போனவாரம் ஒரு அழையா விருந்தாளி வந்தாங்க! உங்க ஆண்ட்டியோட க்ளாஸ் மேட்டாம்! இந்தப்பக்கம் கடந்து போவதால், தோழி மகளைப்பார்க்க வருவாங்கனு உங்க ஆண்ட்டி சொன்னாங்க. அவங்க பேரு லக்ஷ்மி”

“எப்படிப் பேசினாங்க ஆண்ட்டியின் அன்புத்தோழி? போரா? ”

“அவங்க மகன் ஒரு ஃபிஸிஷியனாம். அவரைப்பற்றி நிறைய சொன்னாங்க. அப்போத்தான் புரிந்தது எனக்கு அவங்க விஜயம் எதுக்குனு”

“எதுக்கு, கயல்?”

“உங்க ஆண்ட்டி பேய் இருக்கே, அது உண்மையை மறைத்து இவர்களை அனுப்பி வைத்துள்ளது என்னை பெண் பார்க்க”

“பாவம் ஆண்ட்டி, உனக்கு நல்ல படித்த மாப்பிள்ளைதானே பார்த்து இருக்காங்க?”

“என்னிடம் உண்மையை சொல்லாமல் ஏன் மறைத்தது, உங்க ஆண்ட்டி?”

“சொன்னால், நீ வேணாம்னு சொல்லி இருப்ப, இல்லையா?”

“ஆமாம், அதுக்காக?”

“மாப்பிள்ளை ஃபோட்டோ பார்த்தியா?”

“பார்த்து வச்சேன், பேருக்கு”

“பிடிச்சதா?”

“இதென்ன கேள்வி வருண்? ஒருவர் டாக்டரா இருக்கிறார், அதிகம் சம்பாதிக்கிறார் என்பதற்காக மட்டும் ஒருவரை கல்யாணம் பண்ணிக்க முடியுமா?"

“சரி, அப்புறம் ஆண்ட்டியை கால் பண்ணி பேசினயா?”

“இதுவே கடைசித்தடவையா இருக்கட்டும்னு சொன்னேன்”

“ஆண்ட்டி என்ன சொன்னாங்க?”

“அது ஏதோ புரிந்த மாதிரி நடிச்சது”

“சரி, "பெட்" லயா இருக்க?”

“ஆமாம்”

“என்ன போட்டிருக்கே?”

மெளனம்

"என்ன போட்டு இருக்கனு கேட்டேன்"

“நைட் ட்ரெஸ்தான்”

“பொய் சொல்லாதே!, யு ஆர் நாட் எ குட் லையர், கயல்”

“சரி, தூக்கம் வரலையா உங்களுக்கு, வருண்?”

“இன்னைக்கு வராது, கயல்”

“ஏன்?”

“இன்னைக்கு மனது ஒரு மாதிரியா இருக்கு”

“எனக்கும்தான், வருண்”

“சரி ட்ரை டு ஸ்லீப், கயல்! குட் நைட்”

“குட் நைட், வருண்”

வருண் அவளிடம் ஏதோ ஒண்ணு சொல்லத்துடித்தான். கயலும் அதை கேட்கத்துடித்தாள். ஆனால் அது அவனுடைய மனநாக்கோடு நின்றுவிட்டது.


-தொடரும்

நீங்க பார்க்க யார் மாதிரி இருப்பீங்க?
80-பதுகளில் நான் சிறுமியாக இருந்த காலக்கட்டத்தில் பேபி ஷாலினிக்கு பயங்கர க்ரேஸ் இருந்தது. எனக்கு ரோல் மாடல் பேபி ஷாலினி தான்.ஷாலினி 80களின் டோரா என்றால் மிகையில்லை. ஷாலினி மாதிரியே ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று அம்மாவிடம் அழுது அடம் பிடித்திருக்கிறேன். என் அடம் பொறுக்க முடியாமல் ப்யூட்டி பார்லர் அழைத்து போய் பேபி ஷாலினி மாதிரியே முடி வெட்டி விட்டார்கள். தாங்க முடியாத மகிழ்ச்சி எனக்கு. ஷாலினி மாதிரியே ஒரு ஃப்ராக் போட்டு, அவரை மாதிரியே வீடெல்லாம் வேண்டுமென்றே ஒரு துள்ளலுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து என் சகோதரரை எரிச்சல்ப்பட வைத்திருக்கிறேன். "மம்மி, டேடி! இவளை ஏன் பெத்தீங்க? என்னோட நிறுத்தி இருக்க கூடாதா? பாருங்க மானத்தை வாங்கறா!"

வளர்ந்த பிறகு டீன் ஏஜில் பல நடிகைகளுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறேன். யாராவது, "நீ இந்த நடிகை மாதிரியே இருக்கே" என்றால் போதும். அந்த நடிகை மாதிரியே உடை அணிந்து, அவருடைய மேனரிசம்களை காப்பி பண்ண ட்ரை பண்ணி இருக்கிறேன். என் அண்ணன் தலையில் அடித்துக்கொள்வான், ஆனால் "ஏன் பெத்தீங்க" என்ற கேள்வியை விட்டுவிட்டான்(ஐயா வளர்ந்துவிட்டாராம்!). அந்த சமயத்தில் அழகு என்பதும், அழகா இருப்பதும் எனக்கு ரொம்ப முக்கியமாகப்பட்டது.

அண்டர் க்ராஜுவேஷன் முடித்து மேல் படிப்புக்காக அமரிக்கா வந்த பிறகு நிறைய கற்றுக்கொண்டேன். அதில் முக்கியமானது, "அழகென்பது தோலில் அல்ல, குணத்தில்,புத்திசாலிதனத்தில், நடந்துக்கொள்ளும் விதத்தில் இருக்கிறது". மேலும் அழகென்பது காலத்தால் அழியக்கூடியது இல்லையா? எனவே என் மனம் காலத்தால் அழியாத அறிவை தேடியது. விதம் விதமான புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன், என் சப்ஜெக்டுக்கு துளியும் சம்மந்தமில்லாத புத்தகங்களைக்கூட! கம்யூனிசம், பெரியாரிசம்,அமரிக்க வரலாறு, நாத்தீகம், ஆத்தீகம், செக்ஸ் எஜுகேஷன் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. உலகத்தை நான் பார்க்கும் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.

இப்போதெல்லாம் "நீ அந்த நடிகை மாதிரி இருக்கே" என்றால் மகிழ்ச்சியடைவதில்லை- ஒரு புன்சிரிப்போடு மறந்துவிடுவேன். புத்திசாலிப்பெண், நல்ல மனதுடைய பெண் போன்ற காம்ப்ளிமெண்டுகளுக்கு பூரித்துப்போகிறேன். ஒரு நாள் என் தோழியுடைய அப்பா கூட "அந்த மல்லு நடிகை, அவள் பேரென்னமா? புல்புல்தாராவா? அவளை மாதிரியே இருக்க"

"அது நயன்தாரா அங்கிள்"

என்னுடைய நல்ல நண்பரொருவர் ஒருநாள், "என் மனைவி நீங்க சில்க் சுமிதா மாதிரியே இருப்பதா சொல்றாங்க" என்று சொன்னதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

சமீபத்தில் எனக்கும் வருணுக்கும் இடையே ஒரு உரையாடல்.

"உங்களுக்கு எந்த நடிகை பிடிக்கும் வருண்?"

"ஏன் கேட்கற?"(பெண்கள் என்றால் மனிதர் உஷாராகி ரொம்ப கவனமாக தான் பதில் சொல்லுவார். அவர் மூளையில் அடிக்கும் வார்னிங் சிக்னல் எனக்கு வரைக்கும் கேட்கும். எங்கேயோ நல்ல அனுபவம் போல!!)

"இல்லை சும்மா தான் சொல்லுங்க"

"எனக்கு உன்னை தான் பிடிக்கும். நீ தான் உலகத்திலேயே ரொம்ப அழக்.."(இந்த ஹைதர் அலி காலத்து டயலாக்கை விடவே மாட்டீங்களா?)

"சரி சரி போதும், அப்படியே நம்பிட்டோம். நடிகைகளில் எந்த நடிகை பிடிக்கும் சொல்லுங்க"

"அப்படி ஏதும் பர்டிகுலரா கிடையாது"(எஸ்கேப், எஸ்கேப்!!)

"சும்மா சொல்லுங்க! நான் கோச்சுக்கமாட்டேன்"

"நிஜமாவே தான். எந்த நடிகையையும் குறிப்பிட்டு பிடிக்காது. நடிகைகள் எல்லாம் உன்னை மாதிரி இண்டெலிஜெண்டா பேசுவாங்களா, பதில் சொல்லுவாங்களா? உன்னிடம் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம்"

"சரி பொழைச்சுப்போங்க"


P.S: இதை படிப்பவர்கள் நீங்கள் பார்க்க யாரை மாதிரி இருப்பீர்கள்(நடிகை, நடிகன், அரசியல்வாதி வேறெதாவது பிரபலம்?) என்று தெரிவிக்கவும்.