Wednesday, April 30, 2014

வா ம வின் வேலைக்குப் போற பொம்பளையா? விமர்சிப்பது எப்படி?

வா மணிகண்டனின் வேலைக்குப் போற பொம்பளையா? கதை படிச்சு இருப்பீங்க. படிக்கலைனா விடுங்க!  இந்தக் கதையைப் பற்றி பலர் பின்னூட்டங்களில் விமர்சிச்சு இருக்காங்க! இதற்கு ஒரு விமர்சனம் எழுதணும்னா எப்படி எழுதலாம்!

* த ம 1- இது ஒரு வகை

 * நல்லா எழுதி இருக்கீங்க!- மேலோட்டமாக சொல்வது- இது ஒரு வகை!

* நாளுக்கு நாள் ஜொளிக்கிறீங்க! தொடர்ந்து எழுதுங்கள்!- உண்மையான வார்த்தைகளா? இல்லை பொய் உண்மை வேடம் போடுதா?

* இன்னொரு கிரீடம்!- வெல் விஷரிடம் இருந்து வருவதுண்டு.  இல்லைனா ஒரு மாதிரியான வயித்தெரிச்சல் பேர்வழியாக்கூட இருக்கலாம்.

* என்னதான் உருகினாலும், நீங்க ஒரு ஆணியவாதிபோலதான், உங்க எழுத்து இருக்கு!- எழுத்தாளனை ஒழிக்கவே எழுதும் பின்னூட்டம் இது! Sounds like me? :)

* Are you not empathetic? I dont see that in your writing! Sounds like me? :)

* What will you do if you have a child like that? Will you stay home? Or your wife will? Can you wisely deal with such a situation? May be not! Sounds like me? :)

இப்படிப் பலவிதமாக பாராட்டலாம், திட்டலாம், வயித்தெரிச்சலைக் காட்டலாம், கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால் இதுபோல் கடுமையாக எழுதும் பின்னூட்டங்கள் அவரைத் தாண்டி வருவது சந்தேகம்தான்!

************************

வேறெப்படி விமர்சிக்கலாம்?

இவர் தலைப்பு பொதுவாக "இப்படித்தான்" இருக்கும். இது கதையா இல்லை கட்டுரையா இல்லை உண்மையில் நடந்ததா? என்பது தெளிவுபடுத்தப் படாது.
 கதைனு சொல்லவும் முடியாது, கட்டுரைனும் சொல்ல முடியாது! ஒருவேளை "உண்மையும் கற்பனையும்" கலந்த கலவையா? எது எத்தனை விழுக்காடுகள்?

 சில சமயம் பிறர் அனுபவத்தை தன் அனுபவம்போல் ஊதி எழுதுறாரா? அப்படித்தான் இருக்கவேண்டும்! இல்லை ஒரு சாதாரண, கேள்விப்பட்ட விசயத்தை, செய்தியை, தன்  அனுபவம்போல் எழுதுகிறாரா?   இவர் எழுத்தில் உள்ள "ஹீரோ" இவர்தானா? இல்லை "ஹீரோ" ஒரு கற்பனை பாத்திரமா? இதுபோல் கேள்விகள் பலவற்றை எப்போவுமே இவர் எழுத்தைப் படித்துவிட்டு முன் வைக்கலாம். இவர் எழுதும் எல்லாக் கதை (கட்டுரை)களிலுமே இவர் "இப்படித்தான்" எழுதுவார் . இவர் கதைகள் பலவற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும் நான் "இப்படித்தான்" என்பது என்னவென்று.

இவர் எழுதும் ஹீரோக்கள், ஹீரோயின்கள் எல்லாரும்  கற்பனையா? இல்லை அனுபவத்தில் இவர் சந்தித்தவர்களா? இவர் எழுதுவது கதையா? இல்லை  உண்மைக்கதையா? இல்லை அனுபவக் கட்டுரையா? என்று யோசித்தால் குழப்பமே மிஞ்சும்...ஒருவேளை இப்படியெல்லாம் குழப்ப வைக்கும் திறன்தான் இவரின் தனித்திறமையோ?

இப்படியானா இல்ல அப்படின்பார். அப்படியானா இல்ல இப்படின்பார்!

வா.மணிகண்டன் said...

அன்புள்ள வருண்,

கடிதத்தையும், புனைகதையையும் குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இரண்டும் வெவ்வேறு உலகம் என்றுதான் நம்புகிறேன்.

புனைகதை என்பது ஒரு சித்திரத்தை உருவாக்குவது. வாசகனுக்குள் ஒரு சலனத்தை உருவாக்குவதுதான் அதன் அடிப்படையான வேலை என்று நினைக்கிறேன்.

புனைகதை புரட்சி பேசத்தேவையில்லை என்பதால்
அதில் வரும் நாயகன் வீரனாகவும், முதுகெலும்புள்ளவனாகவும் வர வேண்டும் என்பது ‘ஹீரோயிசக்’ கதைகளுக்கும், மிகை யதார்த்தக் கதைகளுக்கும் பொருந்தலாம்.

நான் அந்தக் கதையில் பதிவு செய்ய விரும்பியது யதார்த்தமான ஒரு ஆதிக்க சாதியைச் சார்ந்த ஒருவனின் மனநிலையை.

நன்றி.

வா.மணிகண்டன்


சரி, இந்தக்கதையில் என்ன சொல்லியிருக்கார்?

21 நூற்றாண்டில் ஒரு பெண் ஆண்களைவிட நிர்வாகத்திறமை உள்ளவளாக, படித்தவளாக இருக்கிறாள். வேகமாக முன்னேறி இருக்கிறாள்.

பெப்ஸி கோலாவுடைய சி இ ஒ கூட ஒரு பெண்மணிதான். அதுவும் இந்தியர்தான். எதுக்கு இது இந்தமாதிரித் தலைப்பு?? 

அவளுக்குத் திடீர் என வாழ்க்கையில் விழுகிறது ஒரு "பெரிய அடி"! "

ஏன்? Why me???அதெல்லாம் முன் ஜென்மத்தில்" செய்த பாவம்! "இல்லை இறைவன் சோதிக்கிறான்" யாரை? மணிகண்டனையா? இல்லைனா அந்த ஹீரோயினையா? இருவரையும்தான். இறைவனை யாரு சோதிக்கிறது? நாத்திகர்களா?

அவளுக்குப்  பிறந்த குழந்தைக்கு ஏதோ வைட்டமின் குறைவு என்பது "ஜோடிக்கப்பட்ட பொய்". பொதுவாக வைட்டமின் குறைவெல்லாம் எளிதாக சரிப்படுத்திவிடலாம். இக்குழந்தையின் பிரச்சினை எதோ புரதச் சத்து குறைவு என்றுதான் நான் சொல்லுவேன். ஒரு சில குழந்தைகளுக்கு ஒரு சில தேவையான ப்ரோட்டீன்கள் இருக்காது, இல்லைனா அதிகமாக இருக்கும். ப்ரோட்டீன் டிஸ்ஆர்டெர் என்பது பெரிய பிரச்சினை. அதாவது நமக்குத் தேவையான ஒரு சில ப்ரோட்டீங்கள் தயாரிக்கும் ஜீன்கள் நம் உடம்பில் இல்லாமல் போவது ஒரு பெரிய ஜெனட்டிக்கல் குறைபாடு. இது மாதிரி ஜெனட்டிக் டிஸ் ஆர்டருடன் மிகவும் குறைபாடுள்ள  குழந்தைகள் பல  இப்போது பிறக்கின்றன. சாதாரண உணவு என்பதே மருந்து சாப்பிடுவதுபோல் ஆகிவிடும். அந்தக்குழந்தைக்குப் பார்த்துப் பார்த்து நிறுத்துத்தான் கொடுக்க வேண்டும் எந்த வேளை உணவும். பெற்றோரின் அட்டன்ஷன் 12 மணி நேரம் தேவைப்படும் குழந்தைகள் இவைகள். இச்சூழ்நிலையில் வேறு வழியில்லை! வேலையை விடுகிறாள். அதுதான் அவளுக்கு சரி என்று தோன்றுகிறது. குழந்தையிடம் நேரத்தை செலவழிக்கச் செல்லுகிறாள். அவ்ளோதான்.

ஆனால் வாழ்நாள் பூராம் இப்படியே இருந்துவிடுவாளா? என்பது தொடர்கதைக்கான கேள்வி. கொஞ்ச நாளில் அல்லது விரைவிலேயே வீட்டிலிருக்க முடியாமல், அவள் குழந்தையை ஒரு பொறுப்பான ஆளிடம் ஒப்படைத்துவிட்டு  மறுபடியும் வேலைக்கும் போகலாம். அதுபோல் குறைகள் நிறைந்த குழதைகளை பெற்ற பெண்களை நீங்கள் உங்களைச் சுத்தியே பார்க்கலாம். கூர்ந்து கவனித்தால்மட்டுமே!

இதில் நாம் கற்றது என்ன?

வாழ்க்கை யாருக்கு வேணா இதுபோல் திடீர்னு தலைகீழாக மாறலாம். அதனால? அதனால் நிதானமாக இருங்கள்!

போதுமா விமர்சனம்? :)

Monday, April 28, 2014

நாந்தான் ஸ்பெஷல்! இல்லை நாந்தான்! போடாங்!

"நாந்தான் ஸ்பெஷல்!"

"இல்லை! நாந்தான்!"

"ஆமா, நீ யாரு?"

"நான் ஹைட்ரஜன்! நீ யாரு?"

"நான் ஆக்ஸிஜன்!"

"ஆக்ஸிஜனா? ஆமா நீ ஏன் ஸ்பெஷல்?"

"நான் இல்லைனா இவ்வுலகில் எந்த உயிரினமும் வாழமுடியாது! எல்லோருடைய உயிரோட்டமும் என்னால்தானே ஓடுது. இதுகூடத் தெரியாதா?"

"நான் இல்லைனா வாழ்ந்திடுமாக்கும்?  தண்ணீரில் ரெண்டு மடங்கு நாந்தான். நீ ஒரு மடங்குதான்!  தெரியுமில்ல? பூமியைவிடு!  இந்த பிரபஞ்சத்திலேயே நாந்தான் அதிக அளவு இருக்கேன் தெரியுமா?"

"எதாவது ஒளறாதே! ஆக்ஸிஜன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழமுடியாதுனுதான் சொல்லுவாங்க. ஹைட்ரஜன் இல்லாமல்னு யாராவது சொல்லுவாங்களா?"

"யாரு சொல்றாங்க?  மனிதர்களா?"

"ஆமா."

"அதுகளுக்கு ஆறு அறிவுதான். எனக்கு உடம்பெல்லாம் அறிவு!"

"அது சரி."

 "கீழே பாரு!"



இரண்டு ஹைட்ரஜன் அனுக்கள் சேந்து நியூக்ளியர் ஃப்யூஷன் ரியாக்சன்


"என்ன இது? ஏதோ ரியாக்சன் மாதிரி இருக்கு"

"நீ  அந்த ரியாக்ஷன் சீக்வென்ஸில் இல்லாதனால இதெல்லாம் புரியாது உனக்கு! சரிதானே? "

"நான் இல்லைங்கிறது இருக்கட்டும். என்ன நடக்குதுனு சொல்லு!"

"சூரிய ஒளி உயிரினங்களுக்கு அவசியமா?"

"ஆமா"

"அது எப்படி உருவாகுது?"

"சூரியன்ல இருந்து"


The Sun by the Atmospheric Imaging Assembly of NASA's Solar Dynamics Observatory - 20100819.jpg
சூரியன்: இதில் உண்டாகும் ஒளிக்கு மூலகாரணம், ஹைட்ரஜன்கள் இணைந்ஹ்டு உண்டாகும் நியுக்ளியர் ஃப்யூசன் ரியாக்சன்


"சூரியன்ல இருந்து எப்படி ஒளி உண்டாகுது?"

"ஏதோ நியூக்ளியர் ஃபிஷ்ஷன், நியூக்ளியர் ஃப்பியூஷன்னு சொல்றாங்க!"

"அது யாரு யாரு "சேர்ந்து"  "ஒளி சக்தி" உருவாகுது தெரியுமா?"

"யாரு யாரு?"


" நாந்தான் ஹைட்ரஜன். என்னை அழித்துக்கொண்டுதான் நான் ஒளி உருவாக்குறேன். ஒளியில்லைனா இந்த உயிரினங்கள் வாழ முடியாது. நான் இல்லைனா உயிரிங்கங்கள் இல்லை! இனிமேலாவது சும்மா நான் ஆக்ஸிஜன் க்ரேட், மண்ணாங்கட்டினு ஒளறாதே!"

"நீங்க ரெண்டு பேரும் லூசா? ஹைட்ரஜனாம், ஆக்ஸிஜனாம்!  மனிதனால் மதிக்கப்படுவது நாந்தான்!"

"ஐயா யாரு?"

"நாந்தான் "கோல்ட்" என்னை "தங்கம்" என்பார்கள் தமிழில்! பார்க்க அழகா இருப்பேன்"

பொற்காசுகள் (உயிரினங்கள் வாழ அவசியமே இல்லாதது)



தங்கம்! மனிதனால் மதிக்கப்படும் விலை உயர்ந்த பொருள்


"அது சரி, ரொம்ப அழகுதான் நீ! நீ யாருக்கு வேணும்?"

திராவிடர்கள் மட்டுமல்ல பொதுவாக மனிதன் என்றுமே அறியாமையில்தான் வாழ்கிறான். அவன் வாழும் அற்ப வாழ்வு, சுமார் 30 ஆயிரம் நாட்கள்தான். இந்த குறுகிய காலத்தில் அவன் அதிக முக்கியத்துவம் கொடுப்பவை, மதிப்புக் கொடுப்பவைகள், போற்றிப் புகழ்பவைகள்  எல்லாம் அவன் உயிர் வாழ எந்தவகையில் உதவாத தங்கம் போன்றவைகள்தான்.

இப்படிப் பட்ட மனித முட்டாள்கள் நிறைந்ததுதான் நம் தமிழ் பதிவுலகமும் கூட! அதனால் இவர்கள் வழங்கும் சான்றிதழ்களை வைத்து உங்களை  நீங்க எடை போடாதீங்க! தாழ்வாவோ, உயர்வாவோ நினைக்காதீங்க!



தொடர்புள்ள பதிவுகள்:


Friday, April 25, 2014

எக்ஸிட் போல்! அஇஅதிமுக 41 தொகுதிகளிலும் வெல்லும்!

உங்களுக்கும் எனக்கும் யாரைப் பிடிக்கிது? யாரு ஆட்சிக்கு வந்தால் நல்லதுனு நான் நினைக்கிறேன்?  நீங்க என்ன நெனைக்கிறீங்க? இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். பெருவாரியான மக்கள் யாருக்கு ஓட்டுப்போட்டார்கள் என்பதை,  அதில் ஒரு சிலரிடம் விசாரித்து, எடைபோட்டு  வெளியிடுறாங்க. அதான்  இந்த ஒப்பீனியன்/ எக்ஸிட் போல் ரிசல்ட்ஸ்!


இந்த தேர்தலில் exit poll படி இப்படி சேகரித்து எடுக்கப்பட்ட முடிவு எப்படி இருக்கும்? என்று நான் மக்களிடம் கேட்காமலே, ஓட்டுப் போடாமலே சொல்ல முடியும்! எப்படி? எனக்கு  அதற்காக "ஸ்பெஷல் பவர்" பகவான் அருளியுள்ளார்! இதை நான் சொன்னால் நம்ப மாட்டீங்க.  இருந்தாலும் நானே அந்த உண்மையை உங்களிடம்  சொல்றேன்.
 



மாநிலத்தில் ஆட்சி மாற்றம் அவசியம் என்ற முடிவுக்கும் நம் மக்கள் வந்தது, 2 ஜி ஊழல் சம்மந்தமாக ஊதப்பட்டதுதான். அதே 2 ஜி அலை இன்னும் வீசுகிறது. அதே இந்த தேர்தல் வெற்றியையும் நிர்னயம் செய்யுது. யார் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் காசு கொடுத்தெல்லாம் எல்லா ஓட்டையும் வாங்க முடியாது. இப்போ இருக்கிற சூழலில் ரெண்டு பெரிய கட்சிகளுமே பணபலம் படைத்ததுதான். இவன் 100 ஓட்டை வாங்கினால் அவனும் 100 ஓட்டை வாங்கிவிடுவான். இந்த சூழலில் இது இரண்டும் அடிபட்டுப் போகும்.

நான் விசாரித்தவரைக்கும், மக்களுக்கு இன்னும் 2ஜி ஸ்கேம் தான் மனதில் நிற்கிறது என்பதுதான் உண்மை. தமிழ் நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக இருண்ட தமிழகத்தில் தடவித் தடவி ஜெயலலிதா எதுவும் பெருசாக சாதிக்கவில்லை என்றாலும் திமுக தன்னை உயர்த்திக்கொள்ள திமுக விற்கு பெரிய வாய்ப்பெதுவும்  கொடுக்கவில்லை என்பது ஒருபுறம். திமுக அடிதடிகள், அதாவது அழகிரி வெளியேற்றம் போன்றவை திமுக மேல்  மக்களுக்கு மேலும் நம்பிக்கை இழக்க வைத்துள்ளது. அதனால் இந்தேர்தல் முடிவு திமுகவுக்கு பாதகமாகத்தான் அமையும். இது திமுக வின் சரிவுகாலம் என்றுதான் தோன்றுகிறது.

நான் விசாரித்தவரைக்கும் ஜெயலலிதாவை தலைமையாகக் கொண்டு போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் குறைந்தது 30 தொகுதிகளிலாவது அமோக வெற்றியடைவார்கள். அதுவும் 70 விழுக்காடுகளுக்கு மேல் வாக்குப் பதிவு நடந்துள்ளது என்பதால் நிச்சயம் முடிவு  அ இஅதிமுகவுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என தோணுது. 41 தொகுதிகளிலும் அஇஅதிமுக வே வெல்லும் என்பதே நான் கேட்டறிந்த உண்மை!

அப்புறம் ஒண்ணு... சொல்ல மறந்துட்டேன். எலக்சன் முடிந்த பிறகுதான் இந்தமாதிரி பதிவெல்லாம் எழுதணும். அதுக்கு முன்னால் எழுதினால், இவன் பதிவுதான் நம்முடைய இந்த நிலைக்குக் காரணம்னு அரசியல்வாதிகள் எல்லாம் காண்டுடன் பொலம்புவார்கள்!  அப்படி எதுவும் பொலம்ப வேண்டாமே னு ஒரு நல்லெண்ணத்தில்தான்  இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்துவிட்டு இப்போ இந்த ஜோஸியம் சொல்றேன். :)

ஒருவேளை என்னுடைய ப்ரிடிக்ஷன் தவறானதென்று ஆகிவிட்டால்? ஒரு வேளை அப்படி  எதுவும் ஆகிவிட்டால்..என்னைத் திட்டாதீங்கப்பா! எல்லாம் பகவான் செயல். அவன்தான் வருணை இப்படி யோசிக்கச்சொல்லி வருண் பதிவு போட வைத்தான்னு என்னைவிட உங்களுக்கு நல்லாவே தெரியும். இல்லையா?!

என்ன முறைப்பு?  "பகவான் இல்லை"னு நான் சொன்னால் முறைப்பீங்கனு இப்படி "பகவான் இருக்கிறார்"னு நம்பி,  பகதன் நான், அவர் மேல்  என் பாரத்தை போட்டாலும் நீங்க முறைக்கிறது நல்லாயில்லை, சொல்லிப்புட்டேன்! :)

Tuesday, April 22, 2014

இரண்டு பலூன் இதயங்களுடன் பவித்ரா!

காதலிக்கும்போது இனிமையாக இருந்த அவனை திருமணம் செய்தபிறகு? அவனும் சாதாரண "ஆம்பளை"தான்னு தோணுச்சு. பவித்ராவுக்குத் திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆறு மற்றும்  நாலு வயசுல  ரெண்டு பசங்க வேற! திருமண வாழ்க்கை இன்று கசந்தது. கணவன் வினோத் மேல் இருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிச்சு இப்போ அன்பு, காதல் எல்லாம் மிச்சம் மீதி எதுவும் இருக்க மாரி தெரியலை.
பவித்ராவின்  வாழ்க்கை ஏதோ எந்திர கணவன் மனைவி வாழ்க்கைபோல் போனது. இருவரும் சேர்ந்து சிரிக்கவோ பேசவோ எதுவுமே இல்லை. ஒரே வெறுமையாக தோன்றியது . இதில் வேடிக்கை என்னவென்றால் அவள் கணவனின் நண்பன்,  சுரேஷ், திருமணமாகுமுன்பு  அவளிடம் அநாகரிகமாகவெல்லாம்   நடந்து கொண்டவன்.   இப்போது அவன் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது, அவன்கூட  தன் கணவனைவிட எத்தனையோ பரவாயில்லை என்று தோன்றியது.

பவித்ராவுக்கு  ஒரே குழப்பம். என்ன இது? இது உண்மையா? இல்லை என் மனப்பிராந்தியா?

He is boring!

பவித்ரா என்றுமே அவளை ஒரு மனநோயாளியாக நினைக்கமாட்டாள். மனநலமருத்துவம் என்பதே ஏமாற்று,   வெறும்  வியாபாரமாகி விட்டது என்று நம்புபவள் அவள். டாக்டராம் டாக்டர்! பாவம் சிறு குழந்தைகளுக்குக் கூட ப்ரோஸாக்கைக் கொடுத்து வாழ்நாள் முழுவதும் மனநோயாளியாகவும்  ட்ரக் அடிக்டாகவும் ஆக்கிவிடும் முட்டாள் மனநல மருந்த்துவர்கள் நிறைந்த உலகம் இது என்று தன் தோழிகளிடம் வாதிடுவாள்.

ஒரு பதின்ம வயதினர்  "எனக்கு டிப்ரெஷன்!  தற்கொலை செய்யணும் போல இருக்கு" னு   பொய் சொன்னால்கூட  "மருத்துவ கஞ்சாவைக்கூட" எளிதாக மனநல டாக்டர் அனுமதியுடன் பெறலாம், புகைக்கலாம். இன்றைய முன்னேறிய சமுதாயத்தில் நடப்பது இதுதான். இப்படித்தான் இன்றைய மனோதத்துவ டாக்டர்களின் அநாகரிகப் பிழைப்பு நடக்கிறது என்று நம்புபவள்  அவள்.

இப்போதுள்ள பெற்றோருக்கும் குழந்தையைப் பெற்று  வளர்க்கத் தெரியவில்லை. இவர்களுக்கு குழந்தையை வளர்க்க நேரம் இல்லை!  நேரமின்மையால்  யார் தலையிலாவது கட்டிவிட்டு, குழந்தைகளிடம் இருந்து தப்பித்து ஓடி, வேலைக்குப் போயி நாசமாப் போனவர்கள் இவர்கள்.  இங்கு வந்தேறி வாழ்கிற இந்தியர்கள் பொதுவாக இவ்வகைதான். வளர்ந்த மேற்கத்திய மக்கள் எல்லாம் குழந்தை பெத்துக்க யப்படுவாங்களாம்! வேலை, சந்தோஷம் ரெண்டுக்குமே குழந்தைகள் தடையாக நிற்குமென்று புரிந்து அந்தத் தவறை இவர்களில் பலர் செய்வதில்லையாம்.  நம்ம இந்தியர்கள் மட்டும்தான்  இந்த விசயத்தில் என்றுமே  திருந்துவதுபோல் தோனலை. ஒருவேளை இந்தப் புதுப் பணக்காரர்கள்  காலங்காலமாக கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தவர்கள் என்பதால் தனியாக குழந்தை வளர்ப்பு  எப்படி என்றே அறியாமலே போய்விட்டார்கள் போலும். குயிலுக்கு தன் குழந்தையை வளர்க்கத் தெரியாதாம். அதனால் திருட்டுத்தனமாக காக்கா தலையில் கட்டிவிட்டு வளர்க்க வைக்குமாம்! நம் நாட்டு நவநாகரிகத் தாய்கள் எல்லாம் "குயில்கள்" தானோ என்னவோ?


கடைசியாக, வினோத்தைப் பற்றி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள், பவித்ரா.


நீ ஃபோனையே கட்டி அழு!
தன்னுடைய தோழி ஒருத்தியுடைய டாக்டரை அவளிடமே சொல்லாமல் அனுகி ஒரு அப்பாய்ண்மெண்ட் வாங்கினாள். ஒரு நாள் வேலையிலிருந்து மதியம் போல அப்படியே போய் சந்தித்தாள். ஆமாம், அவள் கணவனுக்குத் தெரியாமல்த்தான்.

 அங்கே போனவள், அந்த கொஞ்ச வயது  லேடி டாக்டரை பேசவே விடவில்லை! "எனக்கு எதுவும் வியாதி எல்லாம் இல்லை, மருந்தோ மருத்துவமோ தனக்குத் தேவையில்லை, நான் சும்மாதான் ஒரு சில சந்தேகங்கள் கேட்க வந்தேன்" என்கிற பெரிய முன்னுரையுடன் ஆரம்பித்தாள். அந்த டாக்டர் கொஞ்ச வயதுதான், இருந்தாலும் இவளை அழகாகப் புரிந்து கொண்டாள்.

"சரி சும்மா சொல்லுங்க! எதைப்பத்திப் பேசணும்?" என்றாள் அவள்.

"இல்லை முக்கியமா என் கணவர் பற்றி.."

போர் அடித்துப் போன தம்பதிகளின் படுக்கை அறை


"உங்க கணவர் பற்றி யாரிடமாவது பேசுவது நல்லது.  நீங்களே அவர் குறைளைப் பார்த்து குற்றம் சொல்லுபவராகவும், ஒரு நீதிபதியாக இருப்பதை விட. ஆமா உங்களுக்கு அரேன்ஞிட் மேரேஜா?"

"இல்லை இல்லை லவ் மேரேஜ்தான்"

"பழைய காதலரும், இன்றைய  பழகிய கணவனும் வேற வேற மாதிரி இருக்காங்களா?"  என்றாள் புன்னகையுடன்

"இல்ல வினோத்  சந்தேகமே இல்லாமல் முந்திமாதிரி இல்லை.."

"உங்க மேலே அன்பா இருக்க மாட்டேன்கிறாரா?"

"அன்பா இல்லைனாலும் பரவாயில்லை., என் அருகில் இருக்கவே பயப்படுகிறார். "

"ஒரே படுக்கையில்தானே தூங்குறீங்க?'

"ஆமா, ஐ மீன் உண்மையான அன்பு இல்லாமல் சும்மா பேருக்கு எல்லாம் செய்வதுபோல எனக்கும் என் குழந்தைகளுக்கும் தேவையானதை எல்லாவற்றையும் செய்கிறார்."

"அப்படினா?. கொஞ்சம் விபரமாக சொல்ல முடியுமா?'

Tell me one reason! நாம் ஏன் சேர்ந்து வாழணும்?


"அவர் வேலையை, அவர் செய்ய வேண்டிய கடமையை சரியாகச் செய்துவிடுவார். அதில் குறை சொல்ல எதுவும் இடம் இல்லை. ஆனால்.."

"ஆனால்?"

"அதில் இன்வால்வ்மெண்ட் இல்லவே இல்லை. ஒரு ஈடுபாடு இல்லை..அவர் செய்ய வேண்டியதை செய்தாலும் அதில்  ஏதோ பெரிய குறை இருக்கமாதிரி தெரியுது"

"இல்ல, உங்களிடம் இதை கேட்டே ஆகணும்.  உங்களுக்குள் செக்ஸுவலா எதுவும் பிரச்சினைகளா?"

"இல்லை, அதில் ஒண்ணுலதான் பிரச்சினையே இல்லை!"

"தட்ஸ் க்ரேட்!'

"தாங்க் யு!"

"இந்தா பாருங்க பவித்ரா!  நம் அனைவருக்குமே இரண்டு மனம் அல்லது இதயங்கள் உண்டு. அவைகள் பலூன்போல, பெரிதாகும், சுருங்கும்!"

"புரியவில்லை?"

"கவனிங்க! ஒன்று இரண்டாவது மனிதரின் குறைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும். அதாவது இரண்டாமவர் என்பது, கணவன், காதலன், நண்பர், எஜமானி, அம்மா, அப்பா, மகன், மகள்,  ஏன் நான்கூட அப்படிதான், யாராவேணா இருக்கலாம். இன்னொரு இதயம் அவர்களிடம் உள்ள நிறைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளும். உங்க கணவரை காதலிக்கும்போது அவரிடம் இருக்கிற நற்குண்ங்களை மட்டும் கணக்கில் எடுக்கும் இதயம்தான் உங்களுக்கு "ஆக்டிவாக" வேலை செய்தது. அவருடைய குறைகள் எல்லாம் சேமிக்கப்பட்ட இதயம் "இன்னாக்டிவ்"ஆக இருந்தது. இருந்தாலும் அவரிடம் உள்ள குறைகள் எல்லாம் அதில்தான் நீங்க அவைகள் பற்றி அசட்டையாக இருந்தபோதிலும் சேமிக்கப் பட்டது. திருமணமாகி எட்டு வருடங்கள் ஆனபிறகு ஆக்டிவான இதயம் இப்போது இன்னாக்டிவாக ரெஸ்ட் எடுக்கிறது. இன்னாக்டிவா இருந்த இதயம் இப்போது ஆக்டிவாகி அவரிடம் உள்ள குறைகளை எல்லாம் பெரிது பெரிதாக் என்லார்ஜ் செய்து படம் போட்டுக் காட்டுது"

"இதென்ன இதயம், பலூன்னு கதை சொல்றீங்க? "

"மனிதர்கள் அனைவருமே குறையும் நிறையும் உள்ளவர்கள்தாம், பவித்ரா. அது யாராயிருந்தாலும் சரி. உங்க கணவரும் அப்படித்தான்."

"நீங்கள் எப்படி?"

"நானும் குறையும் நிறையும் உள்ளவள்தான். "

"இப்போ என்ன சொல்றீங்க?"

"எனக்கு ஒரு தோழி உண்டு. அவள் ரெண்டு வருடங்கள் முன்பு திருமணம் செய்தாள். அவள் கணவர் இவளைவிட அதிகம் சம்பாரிப்பவர். கல்யாணம் செய்யும்போதே இருவரும் ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டார்கள். அதாவது இருவரும் அவரவர் சம்பளத்தை தனியே தனித்தனி அக்கவுண்ட்ல வைத்துக் கொள்வது என்பது அது. நல்ல புரிதலுடந்தான் மணந்தார்கள். அவள் கணவனுக்கு இவளை மணக்கும் முன்பே ஒரு வீடு இருந்தது. கல்யாணம் ஆன பிறகு அதை அவளுக்குப் பங்கு கொடுக்காமல் அவர் பெயரிலேயே வைத்துக் கொண்டார். இவளுக்கு அவர் வீட்டில் உரிமை இல்லை ஆனால் அந்த வீட்டில்தான் இருவரும் வாழ்ந்தார்கள். இருவருக்கும் தனி தனிக் கார். குழந்தைகள் இல்லை."

"அப்போ இவள் ரெண்ட் செலுத்துவாளா? வீடு அவருடையது இல்லையா?"

"இல்லை. ரெண்டுக்கு பதிலா இவள் "யுட்டிலிட்டிஸ் பில்" மற்றும் "க்ராஸரி பில்" இதெல்லாம் இவள் பொறுப்பு. எல்லாம் ஒழுங்காத்தான் போயிட்டு இருந்தது. கணவன் நாணயமானவன், பெண்கள் விசயத்தில் அவனை 100% நம்பலாம் அது இதுனு அவனோடை  ப்ளஸ் பாயிண்ட் சேகரித்த பலூனை ஊதுவாள். அவனிடம் உள்ள குறைகள் அடங்கிய பலூனை ரெஸ்ட் எடுக்க விட்டு விட்டாள். நாட்கள் கடந்தன. அவன் ஒரு சாதாரண ஆம்பளையாகத் தெரிய ஆரம்பித்தான். குறைந்கள் நிறைந்த பலூன் பெரியதாக ஆரம்பித்தது. ஒரு 18 மாதங்கள் கடந்ததும் குறைகள் உள்ள பலூன் பெருசாகி, நிறைகள் உள்ள பலூன் சுருங்கிடுச்சு.."

"அப்புறம்?"

"என்ன என்னவெல்லாம் அவனுடைய ப்ளஸ் பாயிண்ட்ஸோ அதையெல்லாம் விட்டுவிட்டு அவனுடைய குறைகள பெருசா என்னிடம் ஊத ஆரம்பிதாள். அவனுடைய ப்ளஸ் பாயிண்ட்ஸ் எல்லாமே சாதாரணமாகி விட்டது. கடைசியில் \3 மாதத்தில் டைவோர்ஸ் பண்ணிவிட்டாள். இப்போ அவளிடம் உள்ளது அவனைப்பற்றிய ஒரே பலூந்தான். அவன் குறைகள் அடங்கியது. அது மட்டும்தான் ஆக்டிவா, பெரிதாக இருக்கு"

"என்ன சொல்ல வர்ரீங்கனு புரியவில்லை?"

"உறவுகள் எல்லாமே இப்படித்தான். There is nothing as perfect couple. Relationships get weakened over time. இதற்கு நீங்களும் நானும் விதிவிலக்கு கெடையாது. அவர்களுக்குள் குழந்தை எதுவும் கெடையாது. அதனால் டைவோர்ஸால பெருசா பாதிப்பு இல்லாமல்ப் போய்விட்டது."

I dont want to get involved! உன் பிரச்னை உன்னது. என் பிரச்சினை என்னது!
 

"நான் டைவோர்ஸ் பண்ணுவதாக இல்லை!"

"அப்போ குறைகள் உள்ள பலூனை ஊதுவைதை நிறுத்துங்கள்."

"சரி, முயலுகிறேன். "

"அது அவ்வளவு எளிதல்ல! நீங்க உங்க மனதைப் பண்படுத்தணும்!'

"அதான் எப்படினு தெரியலை. ஐ வாண்ட் டு ஃபாளோ அப் வித் யு. அடுத்த அப்பாய்ண்மெண்ட் ஒரு மாதத்தில் தர்ரீங்களா?"

"நிச்சயமா!"

"தாங்க்ஸ்"

-----------------------

Sunday, April 20, 2014

ஏன்டி சுபத்ரா! உன் ஆத்துக்காரர் எப்படி?




"ஏண்டியம்மா வர்ஷா! உன் ஆத்துக்காரன்தான் கை நெறையா சம்பாரிக்கிறானே, ஏண்டி டெய்லி அவனோட சண்டை போட்டுண்டே இருக்க?"

"விடுங்கோ மாமி! அதெல்லாம் வெளிய சொல்ல முடியாது! "

"கேக்கிறேன்னு கோவிச்சுக்காதடிம்மா..."

"கேளுங்கோ! கேக்கவேணாம்னா விடவா போறேள்?"

"அவனுக்கு  குடிப்பழக்கம் எதுவும் இல்லையே?"

"குடிச்சாக்கூட பரவாயில்லையே, மாமி!"

"அதான், கோயில் கோயிலாப்போயி பகவானை  தரிசனம் பண்றானே.. அதெல்லாம் குடிக்கமாட்டான்னு நேக்குத் தெரியும்."

"ஆமா, உங்களுக்குத்தான் அவரைப் பத்தி எல்லாமே நன்னாத் தெரியுது, மாமி!"

"ஏண்டிம்மா, நான் இப்போ தப்பா என்னடி சொல்லிட்டேன்? நேக்கு எல்லாம் தெரியும்னு குதற்கமா சொல்ற?"

"நீங்கதானே சொன்னீங்க, மாமி?"

 "இதென்னடி கொடுமை? நாலு சுவத்துக்குள்ள என்ன நடக்கிதுனு நேக்கென்னடி தெரியும்?!"

"ஏன் மாமி? சுவத்துக்குள்ள என்ன நடக்கும்னு நோக்குத் தெரியாதா?! நோக்கில்லாத அனுபவமா?"

"என்னடி இப்படி அசடாட்டம்? நேக்கெப்படி உன் ஆம்படையானத் தெரியும்?"

"அப்போ ஒரு நாள் வந்துதான் பாருங்களேன்! நாலு சுவத்துக்குள்ள எப்படினு"

"நானா? இதென்னடி வெக்கக்கேடு?"

"ஓ நீங்க அத நெனசுண்டேளா?"

"ஏண்டி, நீதான்  எதுக்கு சண்டை போடுறேள் னு சொல்லப்படாதோ? அப்படி என்னடி பெரிய தப்பு செய்றான் உன் ஆம்படையான்?"

"அவருக்கு ஏதோ மன வியாதி போல இருக்கு மாமி! பித்துப் பிடிச்சு இருக்கு"

"அவனைப் பார்த்தா பித்துப் பிடிச்ச பிள்ளையாண்டான் மாதிரியா இருக்கான்?"

"அதெல்லாம் நாலு சுவத்துக்குள்ள நடக்கிறது! நேக்குத்தான் தெரியும் மாமி!"

"என்னடியம்மா சொல்ற?"

"சரி, ஊரெல்லாம் போயி என் ஆத்துக்காரர் பித்துப்பிடிச்சு அலையிறாருனு சொல்லிடாதீங்கோ, மாமி! நான் வரேன்"

-------------------------------

"நம்ம ருக்மணி மாமி நேத்து நமகுள்ள என்ன சண்டைனு நொழச்சி நொழச்சிக் கேக்கிறா.  சொல்லிடவா?"

"என்னடி சொல்லப் போறங்கிற?"

"நீங்க நேத்து சொன்னதை சொல்லவா?"

"நான் உன் புருஷன்டி! சும்மா குடிச்சுட்டு வந்து அடிக்கிறான்னு வேணாச் சொல்லு!"

"எதுக்குப் பொய் சொல்ல? இல்ல நீங்க சொன்னதையே  சொல்லிடுறேன்."

"அதெல்லாம் படுக்கையறையிலே சொல்றதுடி. தூங்கி எழுந்ததும் மறந்துடனும்!"

"அதெப்படி மறக்க முடியும்? உள்ள மூடையும் இப்படி ஏதாவது சொல்லி கெடுத்துடுறேள் ..!  அந்த மாமியை பார்க்கும்போது எனக்கு நீங்க சொன்னதுதான் ஞாபகம் வருது! அது ஒரு அசடு..எதையோ ஒளறிக்கிட்டு இருக்கு"

"சரி, எனக்கு ஒரு ப்ராஜெக்ட் முடிக்கனும். ஈவனிங் லேட்டாத்தான் வருவேன். நீ?"

"நான் எப்போவும் போலதான்."

-----------------------------------------

"ஏண்டி சுபத்ரா! எல்லா ஆம்பளைகளுமே என் புருசன் மாதிரித்தானா?"

"உன் புருசன் என்ன நல்லாத்தானே இருக்காரு? அழகா, நெறையா சம்பாரிக்கிறாரு."

"நான் அதை சொல்லலடி.."

"வேறென்ன?"

"சொல்லவே அருவருப்பா இருக்கு!"

"அப்போ சொல்லாதே!"

"உனக்குப் புரியலையா?"

"என்ன எந்நேரமும் போர்ன் பார்க்கிறாரா? உன்னையும் பார்த்து ரசிக்கச் சொல்றாரா?"

"அடிப் பாவி!"

"அதைத்தானே சொல்ற? இந்தக்காலத்து ஆம்பளைங்க எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்!"

"என்னடி சொல்ற?"

"இன்னைக்கு எல்லா ஆம்பளைகளுமே ஆண்மை இல்லாதவனுகதான்! இது மாதிரி ஏதாவது எவளோட தூண்டுதலையோ வச்சுத்தான் ஒரு பத்து நிமிசம் தாக்குப் பிடிக்கிறானுக!"

"இல்லைனா?"

"அதான் சொன்னேன் இல்ல?"

"என்ன சொன்ன?"

" இன்னைக்கு புருசனோட சந்தோஷமா ஒருத்தி இருக்கேன்னு சொன்னாள்னு வச்சுக்கோ.. அது பச்சைப் பொய்! இல்லைனா நைட்டு, அவள், அவனோட "ஏதோ பண்ணிட்டுப்போ"னு குடிச்சுட்டு போதையிலே அவள் படுத்து இருக்கனும்."

"இது வேறயா செய்ற?"

"ரெட் வைன் இதயத்துக்கு  நல்லது! எஸ்பெஷல்லி உன்னை, என்னை மாதிரி மிருகங்களுடன் வாழும் பெண்கள் இதயத்துக்கு!"

"அல்கஹால் நல்லதா? என்னடி இது புதுக்கதை!"

"மொதல்ல, உயிரோட வாழ, நம்ம  இதயம் வெடிக்காம இருக்கனும் இல்ல? அல்கஹால் ஒண்ணும் உன் ரத்தக் குழாயை அடச்சிடாது. ஆனா இந்த ஆம்பளைங்க செய்றதெல்லாம் பார்த்துக்கொண்டு சுயநினைவோட இருந்தால் நம்ம இதயம் சுக்கு நூறா வெடிக்க வச்சிடும்!"

 

-நிறைவடைகிறது

ஆமா, இதுவும் மீள்பதிவுதான். 

ஆனால் கொஞ்சம் எடிட் பண்ணி, சில படங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

Friday, April 18, 2014

நான் ஏன் ஒரு நாய் வளர்க்கிறேன் தெரியுமா?

“நீங்க பெரிய தப்பு பண்றீங்கப்பா! பணத்தோட மதிப்பு ஒவ்வொரு நாளும் கொறையுது. இந்த நிலத்தை இன்னைக்கு 25 லட்சத்துக்கு விக்கிறதும், ரெண்டு வருசம் சென்று 30 லட்சத்துக்கு விக்கிறதும் ஒண்ணுதான். வித்துத் தொலைங்க!”னு ஃபோன்ல கோபமா கத்தினான், ரவி.

“ஏன்ப்பா ரவி, இப்படி கோபமா பேசுற? அப்பா உனக்கு நல்லதுதானே செய்வேன்?”

“அப்ப வித்துத் தொலைங்க! வித்த அந்தப் பணத்தை எனக்கு அனுப்ப வேணாம்! பேங்க்ல போட்டு வைங்க! திடீர்னு ஏதாவது பெரிய மருத்துவசெலவு உங்களுக்கோ, அம்மாவுக்கோ வரலாம், அப்போ நீங்க அதை எடுத்து செலவழிக்கலாம்னுதான் சொல்லுறேன். இல்லைனா யாருக்கும் உபயோகப்படாம வீணாப் போயிடும்ப்பா!”

“நீ என்னப்பா இந்தியா திரும்பி வரப்போறதே இல்லையா?”

“நான் என்னைப்பத்தி பேசலை. உங்க நன்மைக்குத்தான் விக்கச் சொல்றேன். அமெரிக்கால எல்லாம் அப்படித்தான்ப்பா எல்லோரும் செய்றாங்க! அதனாலதான் 100 வயதுவரை இருக்காங்க!”

“சரி, உன் அம்மாட்ட பேசுறியா?”

“ஆக, இதை விக்க மாட்டீங்க?”

“நல்ல வெலைக்கு வந்தா விக்கிறேன்ப்பா. நல்ல வெலை வரும்னு சொல்றாங்க!”

“எப்போ? நீங்க போய் சேர்ந்தப்புறமா? உங்க பணம் எனக்கெதுக்குப்பா? என்னை நான் பார்த்துக்குவேன். உங்களுக்குத்தான் உங்க பணம் பயன்படனும்! அதான் படிச்சுப்படிச்சு சொல்றேன். கேட்டுத் தொலைங்களேன்”

“அம்மாட்ட பேசுப்பா!”

"எப்படிப்பா இருக்க, ரவி?"

“ஏன்ம்மா வயசானகாலத்திலே ரெண்டு பேரும் உயிரை வாங்குறீங்க? சொல்ற எதையுமே கேக்க மாட்டீங்களா?”

“அந்த வயக்காட்டை அடிமாட்டு வெலைக்கு கேக்கிறானுகப்பா. நீதான் ஒழுங்கா எங்களுக்கு பணம் அனுப்புற இல்ல. அப்புறம் என்னப்பா இப்போ அவசரம்?”

“அடிமாட்டு வெலையெல்லாம் இல்லம்மா. 25 லட்சத்துக்கு கேக்கிறதா என் ·ப்ரெண்டு சொல்றான். விக்க மாட்டீங்க? நான் சொல்றதை எதயுமே கேக்க மாட்டீங்க? ஏன்னா நீங்க பெரியவங்க, இல்ல?”

“ஏன்ப்பா இப்படி கோபமா பேசுற?”

“இந்த மாதிரி அறிவுகெட்ட அம்மா அப்பா இருக்கதாலதான்ம்மா?”

ரவியோட அம்மா அழ ரம்பிச்சுட்டாங்க.

“சரி ஃபோனை வச்சிறவாம்மா?”

“நீங்க எல்லாரும் நல்லாயிருக்கீங்களா?”

“நல்லா உயிரோடதான் இருக்கோம்.”

“ ”

“சரிம்மா, உடம்பை நல்லாப் பார்த்துக்கோங்க. அடுத்த வாரம் கூப்பிடுறேன்.”

“சரிப்பா, ரவி.”

************

“How do I look, dad?”

“You look beautiful, Swathy! Going out?”

“Yeah, I need to get my nails done. Can I ask you something?"

"Sure."

"Why do you always fight with grandpa and grandma? Yelling at them ALWAYS?”

“Bcos they dont listen anything I say, just like you!”

“You are very rude to them, dad. I am sorry but you dont know how to talk politely!”

“Yeah right. But I know how to make money to support you and them!”

“I will certainly make more money than you do now! I get straight "A" s”

“Good for you! My problem is nobody listens to me”

“I dont listen because you don’t understand anything, dad!”

“Yeah, right. How old are you? A teenager judging me!”

“You don’t let me date. All my classmates date, dad!”

“You are too young to go on a date, Swathy. That is why.”

“My classmates are all younger than me. They are all allowed to date.”

“They are Americans!”

“So am I.”

“But, REMEMBER! unfortunately you are born to stupid Indian parents!”

“That is correct!”

“What if you get pregnant when you go out with a boy and get carried away?”

“You don’t understand, what dating means, dad. And you never dated anybody. Right?  You did do a stupid arranged marriage!”

“Let me ask you this! Are you going to marry the guy you would date now?”

“Of course not!”

“Why cant you wait till you find a dependable guy?”

“How long? OK fine. You think I don’t know about birth control?”

“I don’t want to discuss about this, Swathy!”

“Neither do I. Bye! Love you, dad. I have got to go now”

"Bye!"

************************

“So, How was your weekend, Raavi?”

“Don’t ask me, Bob!”

“That bad? Watched any football?”

“The Cowboys suck!”

“Yes, they do! You should become a Giants fan now!”

“Yeah, if I were a Giants fan, and if I had parents and daughter who would listen to me, I would have been happy.”

“Dont you know? Nobody listens to anybody, Raavi. Why do you think I have a dog? He is the only one who listens to me!”

“Let me at least enjoy working. I love Mondays!”

-நிறைவடைகிறது
-----------------

இதுவும் ஒரு மீள்பதிவுதான்.

ஏற்கனவே நெறையா எழுதியாச்சு போல. மீள்பதிவாப் போட்டு ஓட்ட வேண்டியதுதான். :)))

Wednesday, April 16, 2014

செய் செயதேவ்! ஆன்மீகமடம் முடமானது!

பதிவுலகில் பின்னூட்டமிட்டுவிட்டு போயிடுவது எளிது. ஒரு ஒரிஜினல் ஐ டி அப்புறம்  ஒண்ணு இல்லனா ரெண்டு இல்ல நாலு பொய் ஐ டிக்களை வச்சிக்கிட்டு வந்து எதையாவது வீரமா விவாதிச்சுட்டுப் போயிடலாம். ஆனால் நானும் குடும்ப சகிதமாக வந்து ஒரு தளம் ஆரம்பிச்சு கிழிச்சுடுப்போறேன், ஆன்மீகம் பேசப்போறேன்னு பேச வந்தா என்ன ஆகும் தெரியுமா?

ஆமா என்ன ஆகும்?

இந்தக் கதையைக் கேளு! அட அப்படித்தான்ப்பா ஒரு பண்டாரம் வந்தான். "நான் யோக்கியன், கடவுளுக்கு சொந்தக்காரன், பகவான் அருளால்" நான் ஒரே புடுங்கா புடுங்கப் போறேன்னு ஒரு தளம் ஆரமிச்சான்.

அப்புறம்?

அப்புறம் என்ன?  பகவான் அருள் இருந்து என்ன பிரயோசனம்? நாள் ஆக ஆக ஈனப்பொழைப்பு நடத்த ஆரம்ம்பிச்சுட்டான்!

அப்படி என்ன ஈனப்பொழைப்பு நடத்தினான்?

ஆரம்பம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனால் போகப் போக, தான் பெரிய பதிவராகி சாதிக்கணும்னு   "களவாணி" "பரதேசி" னு ஆரம்பிச்சு இப்போ "பலான தொழில்" "பாழாப்போன தொழில்னு" தலைப்புக் கொடுத்து எதையாவது எழுதி ஈனப் பொழைப்பு நடத்துற அளவுக்கு ஆயிப்போயிடுச்சு அந்தப் பண்டாரத்தின் பொழைப்பு!

என்னப்பா சொல்ற!!! நவீன புத்தர் மாரி பேசிட்டு இருந்தான், அந்தப் பண்டாரம்? அவனா  இப்படியெல்லாம் வேசித்தனம் பண்ணுறான்?

புத்தர் ஆன்மீகவாதியாக ஆனபோது..

"என்னப்பா சித்தார்த்தன் இப்படி பொண்டாட்டி பிள்ளைய எல்லாம் தவிக்க விட்டுப்புட்டு  போயிட்டான்!  இவன்லாம் என்ன ஒரு மனுஷனா?" னு ஹிந்துக்கள் எல்லாம் திட்டாமலா இருந்து இருப்பாங்க?

இல்லைனா..

"சித்தார்த்தனுக்கு என்ன பிரச்சினையோ, ராஜாவாக வாழாமல் போயி போதிமரத்தில் உக்காந்துட்டான் முண்டம்" னு பல ஆத்திக பண்டாரங்கள் எல்லாம் பேசித்தான் இருக்கும். 

ஆனால் பகவானின் அருள் இல்லாத புத்தர்  இதையெல்லாம் கண்டுகொள்ளாமல்  எப்படி வெற்றியடைந்தார்?

இந்த இந்து  நாய்கள் என்ன வேணா கொரச்சுட்டுப் போகட்டும், குரைக்கிற நாய் கடிக்காதுனு அவர் பாட்டுக்குப் போயிக்கிட்டே இருந்து  இருப்பார். அவர் உண்மையான ஆன்மீகவாதி!

ஆனால் ஆன்மீக வேடதாரிகள் எல்லாரும் புத்தனாகிடமுடியுமா?

அதுவும் பதிவுலகில் ஆன்மீகவாதி வேடம் போடுகிற பண்டாரத்தின் வேசமெல்லாம் நாலு நாளைக்குத்தான். மக்கள்ஸ்! "களவாணி" "பரதேசி"னு ஆரம்பிச்சு, இப்போ  "பலான தொழில்"னு தலைப்புக் கொடுத்து ஈனப்பொழைப்பு நடத்துறான் பதிவுலக ஆன்மீகவாதி!

அப்போ அடுத்த தலைப்பு என்னவா இருக்கும்?

என்ன "ஆன்மீகவாதி மாமாவான கதை! னு இருக்கும்! என்ன வேணா கொடுப்பான் இனிமேல். அதான் உதிர்த்துட்டான் இல்ல எல்லாத்தையும்?! இனிமேல் என்ன இருக்கு?

என்னப்பா சொல்ற?

என்னத்தைச் சொல்ல போ.  எல்லாம் பகவான் செயல்தான்! போலி ஆன்மீகவாதியை  இப்போ பதிவுலக மாமாவாக்கி விட்டார் பகவான். அவருக்கு என்ன கோவமோ? ஒருவேளை இவனோட பகவானுக்கு இந்தப் பண்டாரத்தின் போலி ஆன்மீகம் பிடிக்கலையோ என்னவோ! உண்மையிலேயே இவன் ஒரு ஈனச் சிந்தனைகள் உள்ள போலி ஆன்மீகவாதினு "இப்படி" உலகுக்கு காட்டுறாரோ என்னவோ! :)

Tuesday, April 15, 2014

பார்ப்பனர்கள், மைனாரிட்டி மதத்தவர் மற்றும் நரேந்திர மோடி!

இந்துக்கள் மத வெறியர்கள் எல்லாம் கெடையாது! ஏன் அவங்களையே விமர்சிக்கிற? மதத்தைத் தூக்கி ஓரமா வை! மனுஷாளை மனுஷாளாப் பாரு! னு எல்லாம் நல்லாவே வியாக்யானம் பேசலாம்.

ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள். ஒரு மதத்தில் மத வெறியர்கள் அதாவது எக்ஸ்ட்ரீமிஸ்ட் என்னைக்குமே மைனாரிட்டிதான்! இந்துக்கள் மெஜாரிட்டியாக வாழும் இந்தியாவில், வட இந்தியர்கள், மற்றும் பார்ப்பனர்களில் உள்ள இந்து மதவெறியர்களே போதும், மைனாரிட்டிகளை கதிகலங்க வைக்க!  இந்துக்களை மத வெறியர்கள் என "லேபல்" செய்ய இவர்களே போதும்! ஒரே ஒரு கோட்சேதான் தேவைப்பட்டான் ஒரு காந்தியை அகற்ற! மறக்க வேண்டாம்!

எங்களுக்கெல்லாம் திறந்த மனது! நாங்க புத்தனை வழிபடுவோம்! வேளாங்கன்னி மாதாவை வணங்குவோம். நாகூர் தர்ஹாவுக்குப் போவோம். ஏற்வாடி தர்ஹா போயி எங்கவீட்டில் உள்ள பைத்தியத்தைக் கட்டிப் போடுவோம்! என்றெல்லாம் எல்லாரும் யோக்கியர்கள் பட்டம் நமக்கு நாமே கொடுத்துக்கலாம்தான். ஆனால் இதேபோல்தான் மெஜாரிட்டி கிருத்தவர்களும், இஸ்லாமியர்களும்கூட  சொல்லுவாங்க. அவர்களிலும் எல்லோருமே மத வெறியர்கள் அல்ல என்பதே உண்மை!

சங்கர் ராமன் கொலை வழக்கில் யாருமே தண்டிக்கப்படாமல் இந்து மத குருக்கள் காப்பாத்தப் படும்போது இந்துக்களுக்கு பெரிதாக எதுவும் தோணாதுதான். அதுலயும் இந்தப் பார்ப்பானுக கண்டுக்கவே மாட்டாணுக! ஊருக்காக வேணா அப்பப்போ நீலிக்கண்னீர் வடிப்பானுக! ஆனால் இதுபோல் செயல்கள் இந்தியாவில் வாழும் மைனாரிட்டிகளை இந்திய ஜனநாயகத்தின் மேல் உள்ள நம்பிக்கையை இன்னும் இழக்க வைக்கும் என்பதை உங்க மரமண்டையில் ஏற்றுங்கள்!

வரும் தேர்தலில் இன்றைய தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன?

தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் அனைவருமே மோடியிடம் உள்ள நல்லவைகளை மட்டுமே மிகைப்படுத்தி அவரே பிரதமராக வரவேண்டும் என்கிறார்கள். அது ஏன்? மோடியைப் பார்த்தால் ஏன் இவர்களுக்கு மட்டும் அருவருப்பாக பயமாகத் தோண மாட்டேன் என்கிறது? மோடி என்ன காந்தியா இல்லைனா அன்னா ஹாசரேயா? இல்லையே? ஒண்ணு புரிந்துகொள்ளுங்கள் பார்ப்பனர்கள் ஜெனட்டிக்கலாவே ஹிந்து மதவெறியர்கள் என்பதை அவர்களே உணர்வதில்லை! அவாள் மூளை இந்த விசயத்தில் கொஞ்சம் மழுங்கியேதான் இருக்கும்!

சரி,  மைனாரிட்டிகளான இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் அரசியல் நிலைப்பாடென்ன? மோடியைப் பார்த்தாலே தங்களை ஒழித்துவிடும் எமன் என்பதுபோல்தான் அவர்கள் உணருகிறார்கள்.  பார்ப்பனர்கள் சிந்தனைக்கு எக்ஸாக்ட் ஆப்போசிட்! ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து தீங்கிழைத்த காங்கிரஸ் அரசியல்வாதிகள்கூட இவர்களுக்கு மோடியைப் பார்க்கும்போது எவ்வளவோ நல்லவர்களாகத் தோன்றுகிறார்கள். காங்கிரசுக்குத்தான்  மைனாரிட்டி மதத்தவர்  ஓட்டு விழும் என்று அடித்துச் சொல்லலாம்.

இதற்கிடையில் நம்ம திராவிட காமெடியன்கள்..

சீமான், ராம்தாசு, வை கோ, விசயகாந்துனு இதுகளும் இதுக அடிவருடிகளும், அப்புறம் திமுக ஆதரவாளர்கள், அதிமுக ஆதரவாளர்கள் எல்லாம் ஒரே குழப்பநிலையில் எப்படி அரசியல் பொழைப்பு நடத்துறதுனு தெரியாமல் என்ன எழவையோ அரசியல்னு பண்ணிக்கிட்டு திரிகிதுகள். இவர்கள் என்னைக்குமே எதையும் செய்ய லாயக்கில்லாதவர்கள் என்பதால்தான் தமிழ்நாட்டை ஆள ஒரு திராவிடன்கூட இல்லாமல் போய்விட்டது.

அரசியலைப் பொருத்தவரையில் பார்ப்பனர்களும், மைனாரிட்டி மதத்தவரும்தான் என்னைக்குமே ஒரு தெளிவான முடிவுடன் இருக்காங்க. இவர்களில் மெஜாரிட்டிக்கு நல்லவனாகத் தோன்றுபவன், மைனாரிட்டிக்கு எமனாகத் தோணுகிறான். உண்மை நிலவரம் இப்படி இருக்க, "வாங்க! நம்ம ஆத்திகன் எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து கடவுளைக் கட்டி அழுவோம்" னு ஒரு உலகத்துக்குகே ஒவ்வாத தத்துவத்தை சொல்லிக்கிட்டுத் திரியுது மூளை மழுங்கிய ஓரு ஆத்திகப் பண்டாரம்!

மதநம்பிக்கை இல்லாத இந்து திராவிடர்கள்  மற்றும் தமிழ்ப் பற்றாளர்கள் நிலைப்பாடு என்றுமே உறுதியில்லாததுதான். ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன? என்பதே. ஒரு வேளை இதுதான் பெரிய மனிதச் சிந்தனையோ என்னவோ?

Sunday, April 13, 2014

பெண்பதிவர்களை மிரட்டும் பதிவுலக மாஃபியாக்கள்!

"என்னைக்கேட்டால் பெண் நாட்டை ஆளனும், ஆண் வீட்டை ஆளனும்னு " மன்னன் படத்துல நம்ம விசயசாந்தி அக்கா சொல்வாங்க! இப்படி ஏதாவது திரைப்படத்துல அல்லது கதைகள்ல சொல்லி நம்ம ஆறுதலடஞ்சிக்க வேண்டியதுதான்! ஏன் நம்ம அம்மையாருதான் ஆண்டுட்டுட்டாங்களே? ஆண்டுக்கிட்டே இருக்காங்களே.. அது போதாதாங்கிறீங்களா? அதெல்லாம் சும்மா சினிமா மோகத்துல அலையிற தேசத்துல நடக்கிற சில அதிசயங்கள்! அதாவது நம்ம ராமன் நோபல் பரிசு வாங்கியது போல. நம்ம ராமானுசனை ஜீனியஸுனு உலகத்திலே எல்லாரும் ஒத்துக்கிட்டதுபோல. நம்ம ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் வென்றதுபோல. இதெல்லாம் சாதனைகள் அல்ல! அதிசயங்கள்!

நம்ம சாதனைகளையும் அதிசயங்களையும் பிரித்துப்பார்க்க கத்துக்கனும். அதிசயங்களை சாதனைகள் கணக்கில் எடுக்கக்கூடாது! ராமனை மாதிரி இன்னும் ஒரு பத்து நோபல் பரிசாவது நம்ம வாங்கினால் நம்ம கொஞ்சம் அறிவியலில் சாதிச்சதா சொல்லிக்கலாம். அதெல்லாம் எங்கே நடக்க? ராமானுசம் போல பல கணித மேதைகள் வந்துகொண்டே இருந்தால் நம்ம மக்களின் சாதனைகளை/அறிவை மெச்சி பெருமையடையலாம்! ஏ ஆர் ரகுமான் போல பல இந்திய ஆஸ்கர் நாயகர்கள் உருவானால்? அப்போ அது அதிசயமில்லை. திறமைதான்! அப்போத்தான் நம்ம சாதிக்கிறோம்னு சொல்லலாம்.

தலைப்புக்கு வருவோம்!

 பெண்பதிவர்கள் நெறையா எழுதனும்னு டாக்டர் ருத்ரன் சொல்லிட்டாருனு, பெண் பதிவர் யாரும், எனக்கு எழுத வரும், நானும் எழுதுறேன் பாருங்கணு வாயை திறந்திடாதீங்க! இன்னொரு பெண் பதிவரைக்கூட தைரியமாக விமர்சனம் செய்திடாதீங்க! அதெல்லாம் சும்மா அவர் சொல்லிட்டுப் போராருனு ஃப்ரியா விடுங்க!

என்ன என்ன? அழகா சர்க்காஸ்டிக்கா எழுதுற எழுத்துத் திறமை இருக்கா? நீங்களே எழுதிப் படிச்சுக்கோங்க! இல்லைனா உங்க பதிவை எழுதி ஒரு சில தோழிகளுக்கு அனுப்புங்கள்! பதிவுலகில் நீங்க என்ன செய்யனும்னா,... ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பா, கஷ்டப்பட்டாங்க, ஒரு தேவதை வந்து உதவுச்சு அப்புறம் சந்தோஷமாக வாழ்ந்தாங்கனு ஏதாவது கதை எழுதுங்க. ..

பின்னூட்டம்? சும்மா அட்டண்டன்ஸ் மட்டும் கொடுங்க! :-) "நல்லா எழுதுறீங்க!" "வாழ்த்துக்கள்" னு சொல்லுங்க! உங்களுக்கு அந்தப் பதிவரின் கருத்தில் நம்பிக்கை இல்லையா? அப்போ கஷ்டம்தான்! மனசுக்குள்ளேயே ஒரு பின்னூட்டமெழுதி நீங்களே வாசிச்சுக்கோங்க! அப்பறம் மறக்காம அதை கிழிச்சுப் போட்டுடுங்க!  அப்போத்தானே பல பதிவுலக சண்டியர்கள்ட்ட இருந்து நீங்க தப்பிக்க முடியும்?

என்ன இது அநியாயம்? இன்னொரு பெண் பதிவரைக்கூட நாங்கள் விமர்சிக்ககூடாதா? அதெல்லாம் செய்யக்கூடாதுங்க! அதெல்லாம் ஆண் பதிவுலக சண்டியர்கள் கண்ணுக்கு பட்டுச்சுனா? உங்களை மிரட்டுவார்கள்! எப்படி? ஏன் அந்த பதிவருடைய படத்தை போட்டீங்க? சட்டப்படி தப்பு தெரியுமா? அப்படி இப்படினு உங்களை மிரட்டி பதிவுபோட்டு பொழைப்பு நடத்துவார்கள்! ஏன் அந்தப் பதிவர் பின்னூட்டத்தில் அவங்க படத்தை எடுக்கச்சொல்லி உங்ககிட்ட கேட்டால் நீங்க ஒரு மன்னிப்புடன் அந்தப் படத்தில் ரிமூவ்ப்பண்ண மாட்டீங்கனு நம்புவானுக! ஆனால் இவனுக மட்டும் ரசினி ரசிகரா இருந்தாலும் கமலு ரசிகரான இன்னொரு சண்டியருடன் ஜால்ரா அடிப்பார்கள். இவனுக ஜெ ஜெ ஜால்ராவாக இருந்தாலும் இன்னொரு மு க விசிறியிடம் அனுசரிச்சுப்போவானுக! இவனுக யாருனு கேக்குறீங்களா? பதிவுலக மாஃபியாக்கள்!

அதனால பெண் பதிவர்கள் யாரும் இனிமேல் எந்தவிதமான மாற்றுக் கருத்தையும் சொல்லக்கூடாது. ஒண்ணுமட்டும் ஞாபகத்தில் வச்சுக்கோங்க! உங்களுக்கு துரோகிகள் ஆண்கள் மட்டுமில்லை! முதுகெலும்பில்லாத பல பெண் பதிவர்களும்கூட! இந்த சண்டியர்கள் மிரட்டல்களுக்கு ஜால்ரா அடிச்சு உங்களை உண்டு இல்லனு பண்ணிடுவாங்க!

அப்புறம் இன்னொண்ணு! நீங்க என்ன எழுதுறீங்க, உங்க தமிழின் அழகை, இலக்கணத்தை, கருத்தை எல்லாம் பார்க்க மாட்டார்கள்! உங்க சாதி என்னவாயிருக்கும்னு உங்க எழுத்தை வச்சு ஆராய்வார்கள்.

ஆக, இதுபோல ஆராச்சியில் கைதேர்ந்த இந்த பதிவுலக மாஃபியாக்கள் வாங்கி கொடுத்தாதான் நமக்கு அடுத்த நோபல் பரிசு கிடைக்கும்!

பின் குறிப்பு:

பதிவுகளும் எண்ணங்களும் காலத்தால் அழியாதவையா?

4 வருடங்களில் பதிவுலக சூழல்கள், பதிவரின் எண்ணங்கள் எப்படியெல்லாம் மாறுகிறது?  என்பதைப் புரிந்து கொள்ள இன்றைய பதிவுலக சூழலுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு மீள்பதிவு இது!

காலத்திற்கேற்ப என் சிந்தனைகள்/பதிவுலக சூழ்நிலை/பதிவர்கள் எப்படியெல்லாம் மாறுகிறது/மாறுகிறார்கள் என்று எனக்கே நான் காட்டிக் கொள்ள முயலும் ஒரு சிறு முயற்சி!

இதை எழுத வேண்டிய சூழலை உருவாக்கிய பின்னூட்டம் ஒண்ணு இங்கே!

*******************************

 ///***On Feb 13, 2010 9:15:00 PM , கிருபாநந்தினி said...
+ இந்தப் பதிவை ஆதரிச்சும் எதிர்த்தும் பின்னூட்டம் இட்டிருந்தவங்களோட அத்தனை பேரின் கருத்துக்களையும் இங்கே நான் பதிவு செஞ்சிருக்கேன். என்னை ‘முட்டாள்’னு சொன்ன ரோஷ்மாவின் பின்னூட்டத்தைக்கூட இங்கே பதிவிட்டிருக்கேன். ஆனா, பத்துப் பன்னிரண்டு பேரோட பின்னூட்டங்களை மட்டும் பதிவு செய்யாம ஒதுக்கிட்டேன். அதுக்குக் காரணம், அவங்க என்னைத் தாக்கி ரொம்பக் கடுமையா எழுதியிருந்தது இல்லே; ரொம்ப ஆபாசமா, ரொம்ப வக்கிரமா தங்களோட எதிர்ப்பைத் தெரிவிச்சிருந்ததுதான். இதுவரைக்கும் நான், கெட்ட வார்த்தைகளை ஏதோ படிக்காத பாமரர்கள்தான், மிக அடித்தட்டு மக்கள்தான் பயன்படுத்தி ஒருத்தருக்கொருத்தர் வசைமாரிப் பொழிவாங்கன்னு நினைச்சிருந்தேன். ஆனா, கெட்ட வார்த்தையைப் பயன்படுத்திப் பண்பாடு இல்லாம திட்டுறவங்க நல்லாப் படிச்ச, இணைய தளத்தைப் பயன்படுத்திப் பின்னூட்டம் இடத் தெரிஞ்ச அறிவுஜீவிகளிலும் உண்டுங்கிறதைப் புரிய வெச்சுது என்னோட இந்தப் பதிவு!

கருத்துக்கு எதிர்க் கருத்து சொல்லலாம்; கடுமையாவும் சொல்லலாம். ரோஷ்மா போல ‘முட்டாள்’னுகூடச் சொல்லலாம். தப்பில்லை. அது கொஞ்சம் கடுமையான விமர்சனம். அவ்வளவுதான்! ஆனா, மட்டரகமான வார்த்தைகளைப் போடுறது எந்த விதத்தில் எதிர்ப்பாகும்னு புரியலை.

ஸாரி! ரொம்ப வருத்தமா இருக்கு!////


******************************* 

இந்தப் பின்னூட்டத்தை எழுதிய கிருபாநந்தினி (க்ளிக் செய்யவும்) பதிவரும் எழுதுவதை நிறுத்திட்டார். 

இவரை துரத்தி துரத்தி மிரட்டியவர்களையும் காணோம்! இதுதான் தமிழ்ப் பதிவுலகம்! :-)))


Friday, April 11, 2014

ஒரு வழியாக ரசினிக்கு மேலே போன ஒலகனாயகன்!

தீபிகா படகோன் மற்றும் சோனாக்ஷி சின்ஹா இருவரும் விஸ்வரூபம் ஸ்க்ரிப்ட் பிடிக்காதனால ஒலகனாயகன் படத்தில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுங்கிவிட்டார்கள். என்ன காரணம்னு தெரியல, என்னதான் ரஜினி தன்னை ஒரு ஹிந்துத்தவாபோல அப்பப்போ காட்டிகொண்டாலும், பால் தாக்கரே தந்தைக்கு சமமானவர்னுகூட சொன்னாலும் சரி, பாலிவுட் மக்கள் அவர் மேல் வைத்திருக்கும் அன்பு குறையாமல் எப்படியோ பார்த்துக் கொள்கிறார்.

இன்றும் அமிதாப் குடும்பம், மற்றும் சாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் போன்றோர் ரஜினியுடன் நட்பு பாராட்டத் தயங்க மாட்டேன்கிறாங்க. சமீபத்தில் சாருக் மற்றும் அமிதாப் கோச்சடையான் ப்ரமோஷன்ல கலந்து கொண்டார்கள்.
தீபிகா

ராணா நின்ற பிறகும் கோச்சடையான் படத்தில் தீபீகா படகோன் மனமுவந்து நடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

அனுஷ்கா


இப்போது இவரை விட வயதில் இளையவர் ஷோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா இருவருமே கே எஸ் ரவிக்குமார்- ரஜினி மறுபடியும் இணையும் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒத்துக்கொண்டதாக வதந்திகள் உலவுது.
சோனாக்ஷி ஷினா



இந்தப் படம் எடுக்கப் போகிறார்களா? இல்லைனா இதுபற்றி வருகிற  எல்லா செய்திகளுமேமே வதந்தியா? என்னனு தெரியலை. எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும். ஆனால் ஒண்ணு பாலிவுட் நடிக நடிகைகள் எல்லாருமே ரஜினியை ஒரு மரியாதைக்குரிய ஸ்தானத்தில் வைத்திருப்பதுபோலத்தான் தோணுது. இவ்வளவுக்கும் பாலிவுட் இஸ்லாமியா ஆக்டர்களின் கோட்டைனு சொல்லலாம். ரஜினிகாந்த் ஒரு இந்துத்தவா னு கூட மிகைப் படுத்தி சொல்லலாம்.

ஒரு முறை, கமல் ரஜினியைப் பற்றி விமர்சிக்கும்போது, ரஜினியின் "வளைந்து போகும் தன்மை" உண்மையிலேயே பாராட்டத்தக்கதா என்னனு தெரியலை. ஒரு வேளை அப்படி அவர் நடந்துகொள்வது அவருடைய " "cleverness" சா என்னனு தெரியவில்லைனு சொன்னார்.

எது எப்படியோ, நேற்று நடிகர்களில் யாருக்கு எவ்ளோ சொத்து இருக்குனு சும்மா தேடிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். "Celebrity net worth" னு ஏதோ ஒரு தளத்தில் போய் பார்த்தால்...

ரஜினி $ 50 மில்லியன்  "நெட் வொர்த்" என்று போட்டிருந்தது. 

சரி நம்ம ஏழை, சினிமாவிலேயே காசை விட்டுவிட்டு எல்லாத்தையும் துறந்து நிக்கும் அப்பாவி உலக நாயகன் எப்படினு பார்த்தால்..

கமஹாசன் $100 மில்லியன் (யு எஸ் டாலர்கள்) "நெட் வொர்த்"னு போட்டிருந்தது!

ஆக ரஜினியைவிட கமல் இரண்டு மடங்கு பணம் வைத்திருப்பதாக இந்த தளத்தில் சொல்றாங்க. இது உண்மையோ இல்லைனா பொய்யோ, அது ஒரு புறமிருக்கட்டும்.

ரஜினியை விட கமல் இரட்டிப்பு பணபலமுள்ளவர் என்று நம்ம சண்டியர் கரன் ஒரு பதிவு போடலாம்னுதான்.. :-)))

Wednesday, April 9, 2014

ப்ளாக் எழுதி லட்ச லட்சமா சம்பாரிக்க ரகசிய வழி இங்கே!

பொய்த் தகவல் கொடுப்பது எனக்குப் பிடிக்காது. சும்மா உங்க ஆசையை கிளப்பி மோசம் செய்வதும் தப்புனு நம்புறவன் நான். மொதல்ல உங்க ஸ்கில்ஸ் என்னனு நீங்க தெரிஞ்சுக்கோங்க! உங்களுக்கு என்ன ரொம்ப நல்லாத் தெரியும்?

தயவு செய்து சாப்பிடத் தெரியும், யோகா தெரியும், ஆன்மீகம் தெரியும்னு சொல்லாதீங்க.

நான் கேட்பது உங்களுக்குள்ள திறமை!

சமைக்கத் தெரியுமா? உழைப்பாளியா நீங்க? என்ன வேலைனாலும் கூச்சப்படாமல் செய்வீங்களா? இல்லை இந்த வேலையெல்லாம் கவுரவ குறைச்சல்னு நெனைப்பீங்களா?

சரி, வள வளனு எழுதாமல் விசயத்துக்கு வர்ரேன்.

மொதல்ல திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கொடுத்திருக்கும் அருமையான பதிவுகளை வாசிச்சு ஒரு ப்ளாக் ஆரம்பிங்க!

ஆரம்பிச்சுட்டீங்களா? சரி, இப்போ இந்த ப்ளாக்ல வாரம் ஒரு முறை, ஒரு அரைமணி நேரம் செலவழிச்சு ஏதாவது மொக்கைப் பதிவு போடுங்க.

சரியா? போட்டாச்சா?

 இப்போத்தான் சம்பாரிக்கிற வழி சொல்லப் போறேன். கவனமாகக் கேளுங்க.

காதைக் கொடுங்க!  இந்த நாசமாப் போன ப்ளாக் எழுதி எல்லாம் நீங்க சம்பாரிக்க முடியாது. அதுக்கு பதிலா வீக்-எண்ட் இல்லை இரவு நேரங்களில் பேசாமல் ஏதாவது பார்ட்-டைம் வேலை பாருங்க!

என்ன வேலை ஹோட்டல்ல வேலை பார்க்கலாம், ஆட்டோ ஓட்டலாம், மளிகைக் கடையில் வேலைபார்க்கலாம், ட்யூஷன் சொல்லிக் கொடுக்கலாம்.

இந்த மாதிரி வேலைகள் நீங்க ப்ளாக் எழுதி வேஸ்ட் பண்ணுகிற நேரத்தில் செய்தீங்கன்னா அட் லீஸ்ட் ஒரு ஆயிரமோ, ரெண்டாயிரமோ வாரம் அதிக வருமானம் வரும்.

மற்றவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியதாக (பணத்துக்குத்தான்) ஒரு திருப்தி இருக்கும். அதை விட்டுப்புட்டு ப்ளாக் எழுதி அதில் "விளம்பர இடத்தை" வச்சுக்கிட்டு உக்காந்து இருந்தால் வாரத்துக்கு ஒரு நூறு எரநூறுகூட நீங்க தேத்த முடியாது.

புரிஞ்சுக்கோங்க! :)

Tuesday, April 8, 2014

முட்டை பொரோட்டாவும் வான்கோழி பிரியாணியும்!

வைரமுத்து ஒரு பெண்ணை, கனிமரம்னு உருவகப்படுத்தி சினிமாக் கவிதை எழுதினார். அப்படி விமர்சிப்பதை "பெண்களை ஒரு செக்ஸ் ஆப்ஜெக்ட் போல் இழிவுபடுத்தி எழுதியுள்ளார் வைரமுத்து!"  என்று பெண்ணியவாதிகளால் ஒருபோதும் விவாதிக்கப்படுவதில்லை, விமர்சிக்கப்படுவதில்லை! பெண்களுக்கு இதெல்லாம் ஏன் அஃபென்ஸிவாகத் தோண மாட்டேன்கிதுனு எனக்குத் தெரியவில்லை!

துப்பாக்கி படத்தில், ஒரு தீவிரவாதியிடம் விசய் ஒரு வசனம் சொல்லுவாரு..

"நீயா தற்கொலை பண்ணி செத்துரு! இல்லைனா நீ செத்தபிறகு உன் மனைவி வேசியாகி தெருவில் பிச்சை எடுப்பாள்" .

இது ஒரு கேவலமான வசனம்னு விஜய் அம்மாவுக்கும், அவர் மனைவி சங்கீதாவுக்குமாவது தோணி இருக்கும். அதென்னப்பா இது?  புருசன்  ஊர் மேய்றவன்னா அது எப்போதுமே பெண்டாட்டி தப்பா? அப்படித்தான் இருக்கணும்னு இல்லையே! புருஷன் தீவிரவாதியானா, அதுக்கு அவன் பொண்டாட்டியை இப்படி இழிவுபடுத்தி திட்டி வசனம் பேச யார் இந்த மயிறு (விஜயின் பாத்திரம்)? என்றெல்லாம் பெண்ணியவாதிகள் பொங்குவதில்லை! அதுவும் ஏன்னு எனக்குத் தெரியவில்லை!

எதுக்கு இதையெல்லாம் எழுத ஆரம்பிச்சேன்னா.. நம்ம வருங்கால இல்லை நிகழ்கால இயக்குனர் , அடல்ட் டாய்லெட் ல இப்படி ஒரு சோக்கு  எழுதி இருக்காரு. ஆமா இது சோக்காம். இவரு ஒரு தொரைமகன், இவரு தளத்துக்கு வர்ர தொரைமகனுக எல்லாருக்கும் தமிழு தெரியாதாம். ஆனா ஆங்கிலம் எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரியுமாம்.

 அடல்ட் கார்னர்
It is easy to be a breast but hard to be a tit. You got ta be big to be one of those.

இது சொந்த சரக்கெல்லாம் கெடையாது. எங்கேயாவது அடல்ட் சைட் ல திருடியதா இருக்கணும்.

எனக்கு என்ன புரியலைனா, தன்மானமுள்ள ஒரு பெண்ணியவாதிகூட இந்தமாரி அஃபென்ஸிவ்  அடல்ட் டாய்லெட்க்கு எதிர்வினை எதுவுமே எழுதுவதில்லை, எதுவுமே சொல்வதில்லை. மாறாக இவருடைய தோழிப்பெண்கள்  எல்லாம் இவைகளை  ரசிப்பதாக சிலாகிக்கிறார் இவர்.

சரி நம்மளே ஒரு பெண்ணியவாதியா மாறி இதுக்கு ஒரு எதிர்வினை ஜோக் சொல்வோமா?

 Here comes எதிர்வினை "the men-offensive joke!"

Yeah, It is also easy to be a dick but hard to be a dickhead like you, டைரக்டர் சார்!

என்ன டைரக்டர் அடியாட்கள் எல்லாம் மொறைக்கிறீங்க? சிரிங்கப்பா! :) இதுவும் சோக்குதான்!

Sunday, April 6, 2014

உன் நண்பன் துரோகியானால் நீ காலிடா மகனே!

இதைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கேனா என்னனு தெரியவில்லை.எழுதி இருக்கேன் னுதான் தோணுது. பதிவுலகில் ஜ்யாவரம் சுந்தர் மற்றும் பைத்தியக்காரன் சிவராமன் என்கிற பதிவர்கள் பற்றி  ரொம்ப நாள் குப்பை கொட்டுபவர்களுக்குத் தெரியும். இவர்கள் நல்ல பதிவர்கள் மற்றும் நண்பர்களாக ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தவர்கள் . ஆனால் ஒருமுறை இவர்கள் இடையில் ஏற்பட்ட ஒரு சின்ன மனக்கசப்பால், நண்பர்களாக இருந்த இவ்விருவரும் எதிர் எதிர் தரப்புக்கு போய்விட்டார்கள்.  அப்படிப் போனாலும் பரவாயில்லை! எதிரியான பிறகு  டாஸ்மாக்கில் போயி உக்காந்துக்கிட்டு ஒருவரை ஒருவர் கெட்டவார்த்தை சொல்லி  திட்டியிருந்தாலாவது அது "அல்கஹால்"போலவே  எளிதாக "எவாப்பரேட்" ஆகிப் போயிருக்கும். அப்படிச்செய்யாமல் அவர்கள் சண்டை பதிவுலகிலும் அரங்கேறியது. அப்பொழுது ஒரு நண்பரால்  இன்னொருவருடைய தாக்குதலை சமாளிக்கவே முடியவில்லை! ஒரு நண்பன் உன் எதிரியாகும்போது அவன் பலம் ஆயிரம் மடங்காகிறது. ஆதலால்தான் "இந்த புது எதிரி"க்கு அந்நண்பனால் "துரோகி" என்கிற பட்டம் கொடுக்கப் படுகிறது. உன்னுடைய வீக்னெஸ் எல்லாவற்றையும் தெரிந்த எதிரி உன் பழைய நண்பன் என்பதால் அவன்  பலம் பலமடங்காகிறது. எனிவே மறுபடியும் இந்த முன்னால் நண்பர்கள் சுந்தர் மற்றும் சிவராமன் இப்போது பழசையெல்லாம் மறந்து நண்பர்களாகி இருக்கலாம். எனக்கு இது பற்றிய "அப்டேட்" தெரியவில்லை! ஆனால்  அவர்களுக்குள் அந்தப் பதிவுலக உரசல் நடந்தபோது பதிவான பதிவுகள், அந்நினைவுகள் என் மனதில் இருந்து இன்னும் அகலவில்லை!

இதெல்லாம் நமக்குப் புதிதல்ல! புராணங்களிலும், இதிகாசங்களிலும்கூட இவைகள் இருக்கலாம்தான். இருந்தாலும் இப்பாடத்தை நான் திரும்பத் திரும்ப படிக்கத்தான் செய்கிறோம். கெளரவம்  சினிமாவில்கூட வளர்ப்பு மகன் "கண்ணன்", "பாரிஸ்டர் ரஜினிகாந்த் " நட்பிலிருந்து விலகி அவரின்  எதிரியாகும்போது பச்சை துரோகியாகிறான். ரஜினிகாந்தை எளிதில் வீழ்த்தக் கூடிய சகதியுள்ள மிகப்பெரிய பலசாலியாகவும் ஆகிறான்.

கெளரவம் பெரியப்பா ரஜினிகாந்த்,  வளர்ப்புமகன் கண்ணன்
பாசமான பெரியம்மா, பாரிஸ்டர் பெரியப்பா (கெளரவம்)


இதேபோல், ஈழவிடுதலைப் புலிகள் தளபதியாக இருந்த கர்ணா என்பவர், புலிகள் தலைவரான பிரபாபாகரனிடம்  ஏற்பட்ட மனக்கசப்பால் இருந்த நட்பை உடைத்துக்கொண்டு  வெளியேறியதால் ஏற்பட்ட விளைவுகள் நம் அனைவருக்கும் தெரியும். கர்ணாவை தமிழர்கள் அனைவருமே துரோகி என்றுதான் கூசாமல் சொல்கிறோம். ஆனால் கர்ணா தன்தரப்பில் உள்ள "நியாத்தையும்" எடுத்து வைத்து "நியாயப்படுத்த" முயலத்தான் செய்தார். கர்ணாவின் "கதைகளில்" உண்மையே ஓரளவுக்கு இருந்தாலும் அவர் செய்த இச்செயலால் ஏற்பட்ட அகோர விளைவுகளால், அவரை தமிழின துரோகி என்றுதான் வரலாறு சொல்லப்போகிறது.

So, why do you respect your friend? (நண்பனை ஏன் மதிக்கணும்?)

Why do you have to respect "friendship"?  (நட்பு ஏன் உயர்தரமானது?).

 If you rationally analyze this, it is not sentiments as people claim, It is strictly business! Because you are a dead meat when your close friend becomes your enemy! So, treat him fairly ALWAYS!

 அதாவது உன் நண்பன் துரோகியானால்/எதிரியானால் அவன் உன்னைவிட பலமடங்கு சக்திவாய்ந்தவானகிவிடுவாதால் உன் கதி அதோ கதிதான்! தயவு செய்து நட்பு பாராட்டுங்கள்- இது உங்களுக்கு நீங்களே செய்யும் சுயநலச் சேவை. வேறொன்றும் இல்லை! :-)

பகவானின் விளையாட்டா எம் எச் 370 விமான மறைவு?!

வெந்த புண்ணில் வேலைப் பாச்சுவதுபோல இந்த விமான மறைவு பற்றி  ஏதாவது ஒரு அதிரடித் தலைப்புடன் (பொய் பொய்யா தலைப்புகளுடன்) ஒரு சில தமிழ் வலைதளங்கள் பதிவெழுதிக்கொண்டு தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டன. விமர்சகர்கள், மீடியாக்கள் தரமற்றவர்களாவதற்குக் காரணம் எதைவச்சு பொழைப்பு நடத்துறதுனே தெரியாமல்ப் போய்விடும் இந்த முண்டங்களுக்கு!

விமானம் மறைந்து 29 நாட்களுக்கு மேலாச்சு! ஆஸ்திரேலியன், மற்றும் யு கே சாட்லைலட்ல ஏதோ தெரிகிறதுனு செய்தி வந்தது. உடனே கப்பல் எடுத்துக்கொண்டு போயி, விமானத்தில் போயி, கடலில் தேடினாலும் இதுவரை எந்தவிதமான உடைந்த விமானப் பகுதிகள் எதுவும் மாட்டவில்லை!
இனிமேலும் இந்தத் தேடுதல்களில் வெற்றியடைவார்களா?  என்னவென்று தெரியவில்லை.

மனிதன் எவ்வளவுதான் அறிவியலில், தொழில் நுட்பத்தில்  வளர்ச்சியடைந்தாலும் இதுபோல் நிகழ்வுகள் "பகவானின் கிருபையால்" நடக்கத்தான் செய்யுது.

பகவான் விளையாட்டில் சிக்கிய பாவி மனிதர்கள்


இறைவன் எதைச் செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும். அது மனிதனுக்குப் புரியாது. இதுவும் நம்ம பகவான் செயலே என இறை பக்தர்கள் நம்புவார்கள் என்றே நானும் நம்புகிறேன்.
பகவானின் விளையாட்டு

 "இறைவனின் விளையாட்டே விளையாட்டு!" னு கடவுளை மெச்சிப் பாராட்டும் கடவுள் பக்தகோடிகள்  எல்லாரும் சேர்ந்து, விஞ்ஞானிகளை எல்லாம் ஓரமாக உக்கார வச்சுட்டு, காணாமல்ப் போன அந்த விமானத்தை, பகவான் துணையுடன் ஆன்மீக முறையிலோ, யாகம் கீகம் வளர்த்தோ, இல்லைனா முழு நேரம் பூஜை செய்தோ விரைவில் தேடிக் கண்டுபிடித்தால் ரொம்ப நல்லாயிருக்கும்.

ஆனால் எவனாவது எப்படியோ தேடி கண்டுபுடிச்ச பிறகு "பகவாந்தான் வழிகாட்டி" கண்டுபிடிக்க வச்சாருனு பகவான் விளையாட்டுக்கு க்ரிடிட் கொடுத்து பகவானிடம் நல்ல பேர் வாங்கமட்டும் தயங்கமாட்டாங்க, இந்த பகவான் அடிவருடிகள்!

இவ்வளவு நாட்கள் கடந்துவிட்டதால், பயணித்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றாலும், பயணிகள் மறைந்துவிட்டதாக  அவர்கள் தாய் தந்தையர், கணவன் மனைவி மற்றும் உறவினர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

அதில் நம்முடைய குடும்பத்தவர் (அக்கா, தங்கை, அம்மா போன்றோர்) பயணித்து இருந்தால், நம் நிலைப்பாடும் அதை ஒத்தே இருக்கும். இல்லையா?

மனிதன் வாழ்க்கையில் இப்படி விளையாடும் மூளையோ, உணர்ச்சிகளோ இல்லாத "உயர்தர பகவானை" தொடர்ந்து கட்டி அழுங்கள்!

"பகவான் விளையாட்டே விளையாட்டு!"என்று இதையும் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் பகவான் அடிவருடிகள்  அவர் கோபத்தை தணிக்க தொடர்ந்து பஜனை பூஜை எல்லாம் செய்யுங்கள்!


Friday, April 4, 2014

தமிழ் இளங்கோ அவர்கட்கு அடாவடி வருணின் நன்றி!

நான் ஏற்கனவே சொன்னதுபோல் என்னை விமர்சிச்சு திரு தமிழ் இளங்கோ அவர்கள் எழுதிய எதிர்வினைப் பதிவில் பின்னூட்டமிட இஷ்டமில்லை!  அது அவரு வீடு அவர் அதில் எப்படி வேணா வாழலாம்! அப்புறம் அவருக்கு நான் நன்றி எப்படி சொல்வது? என் தளம் அதுக்குத்தானே இருக்கு? 
ஒரு வீட்டின் வரவேற்பறையில் இன்ன இன்ன இருக்க வேண்டும் என்று அந்த வீட்டின் சொந்தக்காரன் வைத்து இருப்பான். அந்த வீட்டில் நுழைந்து கொண்டு அதனை அங்கு வைக்காதே ,இதனை  இங்கு வைக்காதே என்று மற்றவர்கள் அதிகாரம் செய்ய முடியுமா?. வேண்டுமானால் யோசனை சொல்லலாம். அதைப்  போலவே வலைப்பதிவும். 
இதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை! ஆனால், வாழ்த்த வந்த இடத்திலே "நாத்திகன் எல்லாரும் ஆடு மாடுகள்" னு ஒரு பெரிய மனிதர் சத்தமாகப் பேசினால், அவரை "பேசாமால் இருக்கச்" சொல்லாமல் "அவர் உன்னையா சொன்னார்? நீ ஏன் கோவிச்சுக்கிற?"னு நீங்க பேசும் உங்கள் நியாயம் எனக்கு இன்னும் புரியவில்லை. சரி அதை விடுங்க!
 நீங்கள்தான் ரொம்ப அறிவாளிபோல் அடுத்தவர்களை கடுமையான வார்த்தைகளால் தாக்குகிறீர்கள். இது சரியா.? 
எங்களை "ஆடு மாடுகள்"னு சொல்லவிட்டு வேடிக்கை பார்த்தால், நாங்களும் ஆறறிவுள்ளவங்கதான்னு சொல்லத்தான் செய்வோம். ஆடு மாடுகளா இருந்து இருந்தால் எதுவும் பேசி இருக்க மாட்டோம்! நாங்கள் ஆடு மாடுகள் இல்லை! தயவு செய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள்!
நான் பதிலுக்கு உங்களை மெண்டல் என்றும்  லூசு என்றும் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா? பதிலுக்கு பதில் எழுதி லாவணி பாட வேண்டாம். “ரிலாக்ஸ் ப்ளீஸ்”   
இப்போ நீங்க உங்க பதிவில் வருண் ஒரு மெண்டல், லூசு னு சொல்லவே இல்லைனு சொல்றீங்களா? :))) சரி விடுங்க! :)

உங்கள் பிறந்த நாள் பதிவில் "என்ன நடந்தது?" "ஏன் வருண் 'அடாவடித்தனமாக' திரு தமிழ் இளங்கோவை விமர்சித்தான்?" என்பதற்கு விளக்கங்கள் இருக்கு. அவைகளை அப்படியே கொடுத்து இருப்பதால் உங்க பதிவுக்கு நானும் ஒரு மதிப்பெண் போட்டு பலரையும் அடைய உதவப்போறேன். என்னால் முடிந்தது அவ்ளோதான்! :)

Thursday, April 3, 2014

புத்தரை வாங்கிய இந்துமதம் அல்லா ஜீசஸையும் வாங்கிடலாமே?

பெரியவர் தமிழ் இளங்கோ ஒரு பின்னூட்டத்தில் தன்னுடைய இந்துமதப் பெருமையை அடக்கமாகவும் பெருமையாகவும் இப்படிச் சொல்லியுள்ளார்.

நாத்திகமதம் எனப்படும் புத்தமததையே உள்வாங்கிக் கொண்டு புத்தரையும் ஒரு அவதாரமாக்கிய பெருமை இந்து மதத்திற்கு உண்டு.
இதிலே என்ன பெருமை இருக்குனு எனக்குத் தெரியலை. ஒரு சின்ன கம்பெணி நல்லா முன்ன்னேறியதென்றால் அதை விலை கொடுத்து வாங்கி அந்த கம்பெணியை ஒண்ணுமில்லாமல் செய்யும் ஒரு பணபலம் படைத்த இன்னொரு திமிங்கலம் கம்பெணி செய்வதுபோல் ஒரு  செயல் இது!

புத்தரின் சிந்தனைகள் அனைத்தும் இந்துமதத்தில் உள்ள குறைகளப் பார்த்தே தலை தூக்கின. அது இந்துமதம்போல அல்லாமல், சீனா, ஜப்பான் என்று பல நாடுகளில் போற்றப்பட்டன. புத்தரின் தனிப்பட்ட சிந்தனைகளை புத்தருக்கு கொடுக்காமல் அவரை இந்துவாக அவர் அனுமதியில்லாமல் மாற்றியது தவறு என்றுகூட நான்தான் சொல்லணுமா? இந்து மதம் தன் சொத்து என்று நினைத்துக் கொண்டு திரியும் பார்ப்பனர்கள் எவருமே புத்தரின் சிந்தைனைகளை புகழ்வதில்லையே? அதெல்லாம் தெரியாதா இவருக்கு?

அப்படியே அல்லா, ஜீசஸ், மோசஸ், பெரியார் எல்லாரையும் இந்து அவதார புருஷராக ஆக்கிப்புட்டீங்கனா, அட் லீஸ்ட் சிலர் இந்து மதப்பெருமை பேசுவதுபோல் ஒவ்வொருவரும் தன் மதப்பெருமை பேசி, மற்றவர் மதத்தை இறக்கி பக்தர்கள் உங்களுக்குள்ளேயே அடிச்சுக்கிட்டு நாறாமலாவது ஒற்றுமையாக இருப்பீங்க. என்ன பண்ணுறது? புத்தரை வாங்கியதுபோல் "அல்லா" "ஜீசஸை" "மோசஸை" இந்து மத கிருஷ்ணர் அவதாரமாக ஆக்கி எல்லோரையும் இந்துவாக ஆக்க முடியாது பாருங்க! :)

பெரியவருக்குப்  பொறந்தநாள் வாழ்த்துச் சொல்லப் போன இடத்தில், சில அதிகப்பிரசங்கி ஆத்திகர்களின் வாய்திமிருடன் வந்த பின்னூட்டங்கள் சம்மந்தமாக அவருடன் விவாதிக்கும்போது பெரியவரின்  "நேர்மை" என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

என்னதான் அவர்,  நாத்திகன் எல்லாம் போலி, ஒரு வயதில் பகவான் காலடியில் வந்து விழுந்துடுவானுகனு சொல்லாமல் சொன்னாலும், "நல்லா இருக்கட்டும்"னு  அவர் பதிவை  கண்டுக்காமல் விட்டாச்சு.

இருந்தாலும் இந்த இந்து மதப் பெருமை என்னை இப்படிப் பேச வச்சிருச்சு! :)

Wednesday, April 2, 2014

ஆன்மீகம் பேசுவதும் ஃபேஷன் தான்!

கண்ணதாசன் குடிகாரரா? இல்லை நல்ல ஆன்மீகவாதியா? இன்னைக்கு திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டுவதைவிட, கண்ணதாசன் கவிதைகளை மேற்கோள் காட்டுபவர்கள்தான் அதிகம்னு சொல்லலாம். ஆத்திகன், நாத்திகன், பகுத்தறிவுவாதினு தன்னை சொல்லிக்கொள்பவன், தான் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்துகொண்டதாகவும் தன்னை நல்ல ஆன்மிகவாதினு தானே நினைத்துக் கொள்பவன் எல்லாருமே குடிகாரர் மற்றும் ஆன்மிகவாதி கவியரசர் கண்ணதாசன் கவிதையை தன் வசதிக்காக பயன்படுத்திக்கொள்வதைப் பார்க்கலாம்.

நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறியவர் கண்ணதாசன்! அர்த்தமுள்ள இந்து மதம்னு ஒரு புத்தகம் எழுதி இந்து மதத்தில் உள்ள சில மூடப் பழக்க வழக்கங்களை "அர்த்தமுள்ளதாக" இருப்பதாக்ச் சொல்லி தெளிவு படுத்த முயன்றவர் இவர். ஆனால் ஒருத்தன் நாத்திகனா இருந்து ஆத்திகனாயிட்டான்னு மட்டும் வச்சுக்கோங்க, அவன் குடிகாரனா இருந்தாலும் சரி பொம்பளைப் பொறுக்கியாக இருந்தாலும் சரி, அவனை ஆஹா ஓஹோனு புகழ்ந்து பேசுவது ஆத்திக்க அறிவீனர்களின்  வழக்கம்!

கவியரசருக்கு பல மனைவிகள், இவர் ஒரு முழுக் குடிகாரராக வாழ்ந்து இந்து மதப்புகழ் பாடி, ஆன்மிகத்தில் இறங்கினாலும், அதனால் முழுப்பயன் அடைய முடியாமல் குடி உடலைக் கெடுத்து உடல்ந்லம் பாதிக்கப்பட்டு நம்மை விட்டு கொஞ்ச வயதிலேயே மறைந்தவர் இந்த இதுமதப்பற்றாளர் மற்றும் ஆன்மீகவாதி மற்றும் கவியரசர் என்று எல்லாராலும் பாராட்டப் படும் இவர்! இவருடைய அரைவேக்காட்டுத்தனமான ஆன்மிகமோ, அந்த  வழியோ, அல்லது இந்துமதப்பற்றோ இவரை காப்பாற்றவில்லை. எத்தில் ஆல்கஹால் அடிக்ஷன் இவரை பலியாக்கிவிட்டது என்பதை மனசாட்சி உள்ள எவனும் மறுக்க முடியாது.

நண்பர் ஒருவர் பகுத்தறிவு பேசுவது ஃபேஷன் என்கிறார்! என்னைப் பொறுத்தவரையில் பகுத்தறிவு பேசுவது தந்தை பெரியார் காலத்தை சேர்ந்த ஃபேஷன். அது ஓல்ட் ஃபேஷன்.

இப்போ அரைவேக்காடுகளும், ஆத்திக சண்டியர்களும் பேசும் ஆன்மீகம் தான் இப்போதைய ஃபேஷன்!

* ஆன்மிகம் பேசுபவர்கள் குடிப்பதில்லையா?

* யோகா செய்பவர்கள் சரக்கு எதுவும் அடிப்பதில்லையா? என்பது என் கேள்வி.

எனக்குத் தெரிய அமெரிக்காவில் யோகா, தியானம்  செய்யும் வெள்ளைக்காரர்கள்  குடிப்பழக்கமும் உள்ளவர்கள்தாம். நம்ம ஊரில் ஆன்மீகம் பேசுறவா எல்லாம் (முக்கியமாக ஆண்கள்) எப்படினு எனக்குத் தெரியவில்லை!

ஆன்மீக வழி, யோகா செய்வது குடிகாரர்களை குறைக்கிறது, அடியோடு ஒழிக்கிறது என்றால் குடியை மறக்க ஒரு வழி கண்டுபிடித்து அதை செயல்படுத்தும் ஆன்மிக வழி செல்பவர்களை ஏன் நானும் பாராட்டுகிறேன். நல்லதை நம்ம பாராட்டத் தயங்ககூடாது!

 ஒரு பக்கம் வீக் எண்ட், பார்ட்டி ஃபங்க்ஷன்ல எல்லாம் அப்பப்போ  குடிச்சுக்கிட்டே ஆன்மீகம் பேசுவேன்! ஆத்திக சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு ஆன்மீகம் பேசுவேன்னா நீ முழு அயோக்கியன்!  ஆமா நான் அயோக்கிய்ந்தான், கண்ணதாசன் மாதிரி அரைக்கிணறுதான் தாண்டுகிறேன்னு மனசாட்சிக்கு பயந்து உண்மையைச் சொன்னால், உங்களை நான் பாராட்டினாலும், ஊர் உலகம் உங்களைப் பார்த்து சிரிக்கும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். சாதாரண ஒரு குடிப்பழக்கத்தை  நிறுத்த முடியாத ஆன்மிக வழி எனக்கு என்னவோ நல்வழியாகத் தோணவில்லை! உங்களுக்கு எப்படியோ???

நெறையாப் பேருக்கு மனச்சாட்சி வந்து சப்பு சப்புனு அறையும்!  அதனால் இங்கே வந்து நான் யோக்கியன் என்று பின்னூட்டம்கூட இட முடியாது! அதனால் என்ன இப்போ? நம்ம பகவானைப் போயி வழிபட்டால் எல்லாம் சரியாயிடும். அதுக்குத்தானே நம்ம பகவானை உருவாக்கி வச்சிருக்கோம். இல்லையா? :)