Tuesday, January 31, 2012

சினேஹிதுடு, மங்காத்தா, ஏழாம் அறிவு!


நண்பன் ஆடி அடங்கும் நேரம் நெருங்கியாச்சு! தல அஜீத் விசிறிகளெல்லாம் "அப்பா ஒரு வழியா முடிஞ்சதுடா!" னு நிம்மதிப் பெருமூச்சு விடுற அளவுக்கு வந்து நிக்கிது இந்த வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்! என்ன ஆச்சு?

என்னனு தெரியலை திடீர்னு சென்னையில் வசூல் ரொம்ப கொறைந்து போச்சு போல. இந்த வாரம் வாரக்கடைசியிலே 50% மக்கள்தான் நண்பன் திரையரங்கில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனாலென்ன? 50% நல்ல கூட்டம்தானே?

நண்பன் நிச்சய்மாக விஜயின் பெரிய வெற்றிப் படம்! ஷங்கரின் வெற்றிப் படம் அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்!

* வேட்டையுடன் போட்டினு எடுத்துக்கிட்டா வேட்டை நண்பனில் பாதி வசூல்தான் பெற்றிருக்கிறது. வேட்டை வெற்றியா என்பது இன்னும் கேள்விக்குறிதான்! இருந்தாலும் வெற்ரினு சொல்லிக்கிறாங்க!

* சரி, விழுந்துவிட்டதாக சொல்லப் பட்ட ஏழாம் அறிவு, மிகப்பெரிய வெற்றி பெற்றதாக சொல்லப்பட்ட மங்காத்தா, இவைகளுடன் நண்பனை கம்ப்பேர் செய்தால் என்ன ஆகும்?

சென்னையில் 2 வார வசூலில், சூர்யாவின் ஏழாம் அறிவும், அஜீத்தின் மங்காத்தா, நண்பனைவிட கொஞ்சம் முன்னால நிக்கிது!!! அதெப்படி சாத்தியம்? தெரியலைங்க!

சரி விடுங்க, இதெல்லாம் பெரிய மேட்டரா? நிச்சயம் ஒரு சிலருக்கு இல்லை பலருக்கு பெரிய மேட்டர்தான்.

விஜய், சூர்யா மற்றும் அஜீத் ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய விசயம்தான்.

Nov 11th 2011 to Nov 13th 2011

7aum Arivu


Cast: Suriya, Shruthi Hassan
Direction: A.R.Murugadoss
Music: Harris Jeyaraj
Production: Udhayanidhi Stalin (Red Giant Movies)
Trailer
Gallery
Review

Murugadoss’s sci-fi thriller attempts to bring back Bodhidharma to life and traces his roots to Tamil Nadu. But other than that, 7aum Arivu is an attempt that needed extensive research.

Trade Talk:
First two weeks have been good with collections, thanks to spectacular advance bookings.

Public Talk:
Suriya’s Matraan.

No. Weeks Completed: 2
No. Shows in Chennai over this weekend: 378
Average Theatre Occupancy over this weekend: 75%
Collection over this weekend in Chennai: Rs. 7,672,207
Total collections in Chennai: Rs. 6.43 Crore

Verdict: Very Good Opening
Sep 16th 2011 to Sep 18th 2011

Vengayam


Cast: Ajith Kumar, Trisha, Arjun, Andrea Jeremiah, Lakshmi Rai, Premji, Anjali, Vaibhav
Direction: Venkat Prabhu
Music: Yuvan Shankar Raja
Production: Dayanidhi Azhagiri

Trailer
Gallery
Review

Thala Ajith is back in full form with the fun ride of gambling and double crossing with Mankatha. Trisha, Arjun and the regular Venkat Prabhu gang keep him company while Yuvan spices it up with his music.

Trade Talk:
Trade has never been happier. Mankatha is making sparks fly with its collection results.

Public Talk:
Ajith’s salt and pepper look is likely to set off another fashion statement.

No. Weeks Completed: 2
No. Shows in Chennai over this weekend: 315
Average Theatre Occupancy over this weekend: 70%
Collection over this weekend in Chennai: Rs. 6,087,900
Total collections in Chennai: Rs. 6.28 Crore

Verdict: Grand Opening

Jan 27th 2012 to Jan 29th 2012

Nanban


Cast: Vijay , Jiiva, Ileana, Sathyaraj, Srikanth
Direction: Shankar
Music: Harris Jeyaraj
Production: Gemini Film Circuit
Trailer
Gallery
Review

Vijay's Nanban act for Shankar's remake of Three Idiots has been received really well among his fans and movie going public. The Pongal release is raking in the proverbial moolah by running to packed houses all over.

Trade Talk:
Vijay seems to have recovered his vasool mannan title!

Public Talk:
Sathyan proved to be a revelation with his comic antics, totally under explored and underrated so far!

No. Weeks Completed: 2
No. Shows in Chennai over this weekend: 399
Average Theatre Occupancy over this weekend: 50%
Collection over this weekend in Chennai: Rs. 5,113,635
Total collections in Chennai: Rs. 6.22 Crore
Verdict: Very Good Openingஎன்னங்க இது அநியாயம், நண்பன் எல்லாருக்குமே பிடிச்ச படம். ஏழாம் அறிவு அப்படி கெடையாதே? மங்காத்தாவும் ஒரு மாதிரி "எ" படம் வேற?? அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. இதுதான் இன்னைக்கு நிலவரம்!

மற்றபடி தமிழ்நாட்டில் எல்லா ஊர்களையும் எடுத்தால் எப்படினு தெரியலை. சென்னையில் இதுதான் நிலவரம்னு சொல்லப்படுது!

அதென்ன சினேஹிதுடு??

தெலுகுல நம்ம நண்பனை வெளிவிட்டுயிருக்காரு ஷங்கர்!! ஷங்கருக்கு ஆந்திராவில் ரசிகர்கள் ஜாஸ்தி. ஆனால் விஜய்க்கு ஆந்திராவில் விக்ரம், சூர்யா அளவுக்குக்கூட மார்க்கட் கெடையாது என்பதே உண்மை. தெலுகு ரீ மேக் படமா நடிப்பதால் இந்தப் பிரச்சினைனு சொல்லலாம்!

ஆந்திராவிலும் கொடிகட்டிப் பறக்கனும்னு எவனுக்குத்தான் ஆசையிருக்காது? இந்த சினேகிதுடு அதை மாற்றியமைத்துவிடுமா என்கிற நப்பாசையில்தான் விஜய் தரப்பு மக்கள், அவரு அப்பா எல்லாம் இருந்து இருப்பாங்க!

என்ன பண்ணுறதுங்க?

சினேஹிதுடு ஆந்திராவில் ஏழாம் அறிவு அளவுக்குக்கூட எடுபடவில்லை! காரணம்? 3 இடியட்ஸ் படம் ஆந்திராவில் எல்லாரும் பாத்திருப்பாங்க, நம்மள மாரி இல்லை, அவங்க! அதனாலதான் இந்த விளைவு!

ஆந்திராக்காரன் நிச்சயம் 3 -இட்யட்ஸைவிட சினேஹிதுடு நல்லாயிருக்குனு சொல்லவே மாட்டான்! பாவம், ஷங்கரிடம் "புதுச் சரக்கு" எதிர்பார்த்து ஏமாந்து விட்டார்கள்! இதை தெலுகுல விட்டு கொஞ்சம் சில்லரை பார்க்கிறதுக்கு பேசாமல் தமிழோட நிறுத்தியிருக்கலாம்!


Monday, January 30, 2012

திருவாளர் எஸ் எ சந்திரசேகரா!!


தப்புனு சொல்லல! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ரொம்ப அவசியமான ஒரு சங்கம்தான், சரி! திரைப்பட தொழிலாளர்கள், ஏழை என்பதால் அவர்கள் கிளப்பும் பிரச்சினை எல்லாம் நியாய மானது, ஏழைகள் பக்கம் நியாயம் இருக்கும்னு சொல்லவெல்லாம் முடியாது, அதுவும் சரிதான்! பொறம்போக்கு நெலத்தை ஆக்கிரமிக்கிரவங்களும் ஏழைகள்தான், அது ஏழை செய்வதால் நியாயம்னு சொல்ல முடியுமா? அதனால் ஏழை, பணக்காரன் என்பதை எல்லாம் விட்டுப்புடுவோம். உண்மையான பிரச்சினை உங்களமாரி ஆளுக்குத்தான் தெரியும், ஒத்துக்கிறோம்! ஆனால்..

பெரிய நட்சத்திரங்கள் படம் எல்லாம் பொங்கல், தீவாளி, வருடப்பிறப்பு போன்ற தேதிகளில்தான் வெளியாகனும்னு என்ன சட்டம் அப்படி ஒரு விவஸ்தை கெட்ட சட்டம் வேண்டிக்கெடக்கு? இது என்ன நீங்க எல்லாம் சின்னத் தயாரிப்பாளர்களுக்கு செய்ற உதவியா? இல்லைனா "பெரிய ஆட்கள்" படமெல்லாம் போட்டியில்லாமல் கல்லாக்கட்டனும்னு முயற்சியா?

தெரியாமல்தான் கேக்கிறேன் இது மாதிரி சட்டம் எல்லாம் கேணத்தனமா இல்லையா? நேத்து வந்த கார்த்தி, சின்னப்பசங்க தனுஷ் மற்றும் சிம்பு, உங்க மகரு விஜய்யி, அஜீத், சூர்யா, விக்ரம் எல்லாம் பெரிய ஸ்டார்னு எதை வைத்து முடிவு செய்றீங்க? ஆமா என்ன அளவுகோல் இதுக்கெல்லாம்?

சரி, ஒரு சுமாரான பணக்காரன் பெரிய ஸ்டாரை வச்சு கடனை உடன வாங்கி கையப்பிடிச்சு, காலைப்பிடிச்சு, ஒரு பட்ம் எடுத்து ஜனவரி 15ல் முடிச்சுட்டு, அப்புறம் 3 மாதம் சும்மா உக்காந்து இருக்கனுமா கந்த வட்டி கெட்டிக்கிட்டு? அப்படி உக்காந்து இருந்துட்டு ஏப்ரல் 14 ல ரிலீஸ் பண்ணி படம் ஃப்ளாப் ஆச்சுனா, நஷ்டத்துக்கு மேலே நஷ்டம் ஆகும்! சரி, அதையும் தயாரிப்பாளர் யோசித்துப் பார்த்து படம் எடுக்கனும்னு நீங்க வியாக்யானம் பேசலாம்தான்.

சரி, என்னுடைய கேள்வி இதுதான்..

* ரஜினி மற்றும் கமல் படங்கள் மட்டும் ஏன் இதற்கு விதிவிலக்கா அமையுது?

* இதேபோல் முன்னால் இருந்த தலைவர் இந்த சட்டத்தை அமலில் வைத்து இருக்கும்போதுதான் எந்திரன் மற்றும் மன்மதன் அம்பு படங்கள் வெளிவந்தன.

* அவங்க படம்னா அதுக்குனு தனி சட்டமா? இதெல்லாம் நல்லாவேயில்லை.

Sreedhar Pillai
Somebody is sure 2 break the new TFPC rule 4 big film releases. Wait and Watch! It is not practical in the long run.
28 Jan


* மேலே சொல்லியிருப்பதுபோல் இந்த சட்டத்தை ஒரு சிலர் விரைவில் உடைக்கத்தான் போறாங்க! உங்க மூக்கு உடையத்தான் போகுது!

Thursday, January 26, 2012

நண்பன் கடல்கடந்து பெற்ற வெற்றி! சிவாஜியை மிஞ்சுமா?


சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்ல நண்பன் சுமார் பத்து நாள் வசூல் 4.9 கோடிகள் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்ந்து 12 கோடியைக் கடந்து போயி நிற்குமா இல்லை 16 கோடியைக் கடக்குமா என்கிற நிலவரம் இன்னும் சிலவாரங்களில் தெளிவாகும்.

ஆனால் கடல்கடந்த நண்பனின் வெற்றி எம்பூட்டுனு ஓரளவுக்கு இன்னைக்கே சொல்லி விடலாம். ஏன் என்றால் யூ கே போன்ற நாடுகளில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு வரும் வசூல் அபப்டி ஒண்ணும் பெருசா இருக்காது. ஏற்கனவே இரண்டு வாரங்களை நண்பன் கடந்துவிட்டதால் இப்போவே யு கே நிலவரத்தை தெளிவாக சொல்லிப்புடலாம்!

ஒரு படம் அமோக வெற்றி பெற்றால் அதன் பட்ஜெட்டை பார்க்க வேண்டியதில்லை. அதைப் பார்க்காமலே இதற்கு முன்னால் பெரிய வெற்றியடைந்த படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்!

ஷங்கரின் நண்பன் அமோக வெற்றி பெற்றதாக சொல்லப்படுவதால் இந்த கம்பாரிஷன்!

இப்போ நம்ம நண்பனை, மங்காத்தா, வேலாயுதம், எந்திரன், தசாவதாரம், சிவாஜி போன்ற படங்களுடன் ஒப்பிடலாம்!


13 Nanban n/a $47,060 -72.9% 13 -11 $3,620 $290,894


Mankatha Ayngaran $268,533 9/2
Velayudham Ayngaran $107,843 10/28


Endhiran Ayngaran $785,837 10/1


Endhiran (Hindi) n/a $191,357 10/1


Dasavatharam Ayngaran $492,006 6/13

Sivaji Ayngaran $792,659 6/15


இந்த பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் சரியானதா? ஓரளவுக்கு சரியானதுனு நம்புறேன். முக்கியமா * வேலாயுதம் வசுலில் கொஞ்சம் பிரச்சினை இருக்கலாம். எப்படி இருந்தாலும் வேலாயுதம், நண்பனுக்கு கீழேதான்!

இன்றுவரை எந்திரந்தான் #1 (ஹிந்தி + தமிழ் சேர்த்தால்), சிவாஜி # 2!

இனி வரும் காலங்களில் இந்த சாதனைகள் நிச்சயம் உடைக்கப்படும். ஆனால் இன்று நிலவரப்படி, யூ கே யில் நண்பன், 5 வருடங்கள் முன்பு வந்த சிவாஜியை இன்னும் மிஞ்சவில்லை!

Monday, January 23, 2012

உலகமெங்கும் ஒரே மதம்னு ஆனால் மதவாதிகள் பொழைப்பு?

எங்கே பார்த்தாலும் தன் மதம்தான், தன் மார்க்கம்தான் உயர்ந்ததுனு பதிவுலகில் எல்லாரும் வந்து சொல்லித் தன் மதத்தின் உயர்ந்த நிலையை உலகுக்கு (முக்கியமா பிறமதத்தினருக்கு) எடுத்துக்காட்டுறாங்க!

இவர்கள் ஆசைப்படுவதுபோல் உலகமெங்கும் ஒரே மதம்னு இவங்க மதமே ஆக்கிரமித்து விட்டால்? சும்மா ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம். அப்படி எல்லாரும் இவங்க மதத்துக்கு மாறிவிட்டால் உலகில் எல்லாப் பிரச்சினைகளும் மறைந்து இந்த உலகம் சொர்க்க பூமியாகிடுமா? ஆகாதா? ஆகுமா?

எல்லாருமே இவர்கள் மதத்திற்கு தாவிவிட்டால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவிரவாதம், போர்னோக்ராஃபி, பேராசை, தாந்தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் அகங்காரம், தாந்தான் அழகுனு நெனைக்கிற சின்னப்புத்தி, ஏழை-பணக்காரன் என்கிற ஏற்றதாழ்வு எல்லாமே இல்லாமல்ப் போயிடுமா?

உலகில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எல்லோரும் சமாதானமாக, மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வார்களா? எல்லாரும் திருந்தி, நல்லவர்களாயிட்டா அப்புறம் கடவுள் எதுக்கு? தூக்கி எறிஞ்சிடலாமே?

கொஞ்சமாவது மூளையைக் கசக்கி யோசிங்கப்பா!

ஒரே மதத்தை சேர்ந்தவர்களிடம் (உங்க மதத்தில்தான்! ஆமா உன் மதத்திலதான்!), பதவிக்காக, புகழுக்காக, பெருமைக்காக மெலிந்தவரை, வலியவர் ஏறி மிதிப்பது காலங்காலமாகவும், இன்றும் நடக்கவில்லையா? உங்க பகல்க்கனவு நனவாகி பிறமதத்தவரே இல்லாமல் போயிட்டாலும், நீங்க இதே மாதிரி எழவை உங்க மதத்துக்குள்ளேயே கூட்டத்தான் போறீங்க!

ஒண்ணு மட்டும் நல்லாத் தெரிஞ்சுக்கோங்க! உங்களுக்கு பிரச்சினை, பிறமதத்தவரல்ல! உங்களை, உங்க மதத்தை, மற்றவர்கள் உயர்வா நினைக்கனும்னா உங்க மதத்தில் உள்ள ஒவ்வொருவரும் (ஆமா, ஒவ்வொருவரும்), யாருக்கும் எந்தத் தீமையும் செய்யாமல் எல்லோரும் வணங்குமளவுக்கு மாறுங்கள் (உங்க மதநூல்கள் சொல்வதுபோல)! ஆமா உங்க மதத்தில் உள்ள அனைவரும்!

நன்னடத்தை இல்லாதவங்க உங்க மதத்தில் இருக்காங்களா? அப்போ மொதல்ல உங்க மதத்தில் உள்ள நன்னடத்தை இல்லாதவர்களிடம் போய் உங்க பிரசங்கத்தை வச்சுக்கோங்க! அவங்களை மொதல்ல திருத்துங்க. எல்லாரும் திருந்திட்டாங்களா? இல்லையா? அதெல்லாம் உங்களால முடியாதா? அப்படிலாம் நீங்க சொல்லப்படாது!

அதை செய்றதை விட்டுப்புட்டு போற வாரவன், தெரிந்தவன் தெரியாதவன் எல்லார்ட்டயும் போயி என் மதம்தான், என் மார்க்கம்தான் உலகிலேயே உயர்ந்ததுனு எதுக்கு பீத்திக்கிட்டு? பிறமதத்தினரே அதை சொல்லுமளவுக்கு நடந்து காட்டுங்களேன்?! மொதல்ல இப்போதைக்கு உங்க மதத்தில் இருக்கிறவன் எல்லாத்தையும் நல்லவனாக்குங்க! அப்புறம் மத்தவனையும் உங்க மதத்துக்கு மாற்றுவதை கவனிக்கலாம்.

Friday, January 20, 2012

நண்பன், வேட்டை வசூல் நிலவரம் என்ன?


பிஹைண்ட்வுட்ஸ் வர வர ஒரு வியாபாரத்தளமாகிக்கொண்டு போகுது. இதனால இவர்கள் பாக்ஸ் ஆஃபிஸ் விசயத்தில் கொஞ்சம் பாலிடிக்ஸ் செய்வதுபோலவும் தோனுது. இவர்கள் தளத்தில் வேட்டை சம்மந்தமான"போட்டி" அது இதுனு கமெர்ஷியல் நடந்து கொண்டு இருந்ததால், இவர்களால் பாக்ஸ் ஆஃபில்ஸ் நிலவரத்தை உடனே கொடுக்க முடியலை. அது வேட்டையை பாதித்துவிடுமோ என்ற பயத்தில் வேண்டுமென்றே நிதானித்து வெளியிட்டு உள்ளார்கள் என்பேன் நான்!

முதல் வாரத்தில் சென்னையில் நண்பன் அமோக வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. 1.37 கோடிகள் சென்னையில் கலக்சன் (4 நாட்கள், அதிகமான காட்சிகள்) ஆனதாக கடைசியில் வெளியிட்டார்கள்.

வேட்டை, 63 லட்சம் போல் சென்னையில் வசூல் பெற்றுள்ளது . நண்பன் கலக்சனில் பாதிதான் வசூலாகியிருக்கு! இதற்கு முக்கியக்காரணம் வேட்டை, 2 நாள் கலக்சன் என்பது. வேட்டையை 13 தேதியே ஏன் வெளிவிடவில்லைனு தெரியலை! முதல் வாரத்தில் நண்பன் வேட்டையைவிட சுமார் இரண்டு மடங்கு வசூல் பெற்றுள்ளது. இரண்டு மடங்கு காட்சிகளும் ஓடியுள்ளது என்பதால் ஒண்ணும் தெளிவாக விளங்கவில்லை!

அதேபோல் யு கே பாக்ஸ் ஆபிஸில நணபன் ~ 112000 ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் வசூல் அள்ளியுள்ளது (நாலு நாட்கள் கலக்சன்னு நெனைக்கிறேன்). யூ கேயில் வேட்டை பற்றி நிலவரம் எதுவும் தெரியவில்லை! தெரிந்தாலும் யூ கே ல வேட்டை அப்படி எதுவும் பெருசா கலக்ஷன் வராதென்பது என் நம்பிக்கை!

ஆனால், இன்னும் இந்த இரண்டு படங்கள் வெற்றி தோல்வி பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. நண்பன் பி அண்ட் சி செண்டரகளில் உள்ள் விஜய் ரசிகர்களிடம் எப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பது இன்னும் தெளிவாக விளங்கவில்லை. வேட்டை பி அண்ட் சி செண்டர்களில் நன்றாகப் போகும் (நண்பனை விட) என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதெல்லாம் சும்மா "ப்ரஜெக்சன்"தான் உண்மை நிலவரம் அடுத்த இரண்டு வாரங்களில் தெளிவாகத் தெரியும்.

பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை யாரும் மூடி மறைக்க முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம், நண்பனா இல்லை வேட்டையா? இல்லை இரண்டு படங்களுமேவா வெற்றி பெற்றதென்று!

Wednesday, January 18, 2012

தலைப்பில் பதினெட்டு பிளஸை தவிர்க்கும் யோக்கியர்கள்!

பதிவுலகுல பலவிதமான யோக்கியர்களை பார்க்கலாம்! ஒரு சிலர் எவ்வளவுதான் பிரபலமானாலும் அவங்க சின்னப்புத்தி போறதில்லை! பேசுறதெல்லாம் பெரிய யோக்கியன் ஜெண்டில்மேன் மாதிரிப் பேசுவானுக! ஆனால் கொஞ்சம் கவனிச்சுப் பார்த்தால் இவனுக வண்டாளம் தண்டவாளத்தில் ஏறிடும்.

அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர் வருகிற பதிவின் தலைப்பில் 18+ போடுவது நாகரிகம்! இதை ஒழுங்கா போட்டுக்கிட்டுத்தான் இருந்தார்கள்.

தமிழ்மணம் ஒரு மாற்றம் கொண்டு வந்தது! அதாவது 18+ பதிவை சூடாக்கி முகப்பில் தெரிய வைப்பதில்லை என்பது அது.

18 அல்லது 18+ தலைப்பில் இருந்தால் அது முகப்பில் சூடாக ஆகி நிற்காது! சூடான இடுகைகளில் மறைந்து நிற்கும்! இதை உணர்ந்த சில நரிகள், தங்கள் பேராசையால் நியாயமாக 18+ போடவேண்டிய பதிவுக்கும் போடுவதில்லை.

இதிலே வேடிக்கை என்னனா 18 நம்பர் போட்டாலே அந்தப் பதிவு முகப்பில் தெரியும் 10 சூடான இடுகையில் வராது! இன்னைக்கு இந்த மேதாவியின் அடல்ட்ஸ் ஒன்லி பதிவில் வருகிற தேதி 18 ஆகிப்போனதால அது முகப்பில் வரலை!!!

அடுத்த முறை தேதியை மாத்தி 19 னு போடுங்கப்பூ! உங்க பச்சைப் பதிவு முகப்பில் வந்து அம்மனமாக ஆடும்!

நாத்திகர்களின் பெயரில் மறையாத மதச்சாயம்!

வர வர பதிவுலகில் நாத்திகர்களுக்கு ஒரே பஞ்சமாப் போச்சு! பேசிப் பேசி தளர்ந்துட்டாங்களா? இல்லைனா இவர்களை நம்ம எதுவுமே செய்ய முடியாது, இவர்களே தன் மதம்தான் உயர்ந்ததுனு இன்னொரு மதத்தினரிடம் சண்டைபோட்டு அடிச்சுக்கிட்டு நாறட்டும்! நம்ம சும்மா ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்ப்போம்னு இருக்காங்களானு தெரியலை!

நாத்திகம் என்பது கடவுள் நம்பிக்கை இல்லாமை! கடவுள்னு ஒரு ஆளு இருந்து எல்லாத்தையும் படச்சுவிட்டாருனு நம்பாதவர்கள். இப்படி படச்சுவிட்டு மனித விலங்குகள் ஆடும் ஆட்டத்தை சிரிக்காமல், அழுகாமல், கேலி செய்யாமல் வேடிக்கை பார்க்கும் உணர்ச்சியில்லாத ஒரு மாதிரியான ஜந்து இந்த ஆளு னு நம்பாதவர்கள்! என்ன இப்படி சொல்லிப்புட்ட? ஜந்தா? வேறெப்படி சொல்றது? கடவுளுக்கு உணர்ச்சிகள் உண்டு, மூளை உண்டுனு யார் சொன்னா? சொன்னாலும் எப்படித்தெரியும் அந்த மேதைக்கு?

இப்படி நாத்திகர்கள் பலவிதமாக வியாக்யாணம் பேசலாம்தான். ஆனால், நம்ம ஊரிலே ஒரு பெரிய பிரச்சினை இருக்கு! உங்க பேரு இருக்குல? அதாங்க, வருண் னு சொல்லிக்கிறீங்கள்ல அது வந்து ஒரு இந்து பேரு! ஏன் சமஸ்கிரதத்தில் இருந்து வந்ததுனு சொல்லலாம். பார்ப்பனர்கள்தான் இப்படி பேரெல்லாம் வச்சுக்குவாங்கனுகூட சொல்லலாம்.

ஆக, நீங்க நாத்திகரா இருக்கலாம், இருந்தாலும் நீங்க "ஒரு இந்து நாத்திகர்"னுதான் எல்லாரும் உங்களை நெனைப்பாங்க! நீங்க என்னதான் கடவுள் நம்பிக்கை இல்லாமல், கடவுள் என்பதே அர்த்தமில்லாத ஒண்ணுனு நெனச்சாலும், உணர்ந்தாலும், உங்க மதம் இன்னும் உங்க பேருல ஒட்டிக்கிட்டு இருக்குனு மறந்துவிடாதீர்கள்! அதனாலென்ன? அதனலென்னனா பேசாமல் இந்து மதத்தையும், இந்து மதத்தை என்னைக்குமே விட்டுக்கொடுக்காத பார்ப்பனர்களையும், இந்துக்கடவுள்களையும் மட்டும் திட்டிப்புட்டு, இந்துத்தவாக்களை கேலி பண்ணிப்புட்டு போனீங்கனா உங்களுக்கு பிரச்சினை இல்லை! ஆனால் நம்மதான் மதநம்பிக்கையில்லா நாத்திகராச்சே எம்மதமும் நமக்கு "சமமதம்"தானே?னு நெனச்சுக்கிட்டு பிற மதத்தவரை நீங்க என்ன சொன்னாலும், உங்களை "இந்து" என்றுதான் உலகம் சொல்லும். நாத்திகர் என்றல்ல! இது யாரு தப்பு? நீங்களே சொல்லுங்க! யாரு தப்பு? உங்க தப்பு இல்லைனும் சொல்ல முடியாது!

உங்க பேரு ஏன் இந்துப் பேரா இருக்கு? ஏன் ரகுமான் அலல்து ஜான் னு இல்லை? வருண் னு இருக்கு? நீங்க நாத்திகர்தான், எனக்குப் புரியுது! ஆனால் இந்து அடையாளம் இன்னும் போகாத நாத்திகர் நீங்கள் என்பதை நீங்க மறுக்க முடியாது! நீங்க பிற மதத்தவரை விமர்சிக்கும்போது அதன் விளைவுகளை நீங்க சந்தித்தே ஆகனும்!

Sunday, January 15, 2012

கோவியாரு ரம்ஷான், பக்ரித் எல்லாம் கொண்டாடுவாரா?

இஸ்லாமிய நாட்டில் குடிகொண்டுள்ள இந்துத் தமிழர்களுக்கெல்லாம் ஏதோ ஒரு மாதிரியான காம்ப்ளெக்ஸ் வந்துடுது. இவங்களுக்கு மட்டும் வரும் இது என்ன வியாதினு தெரியலை! பொங்கல், திராவிடர்களான தமிழ் இந்துக்கள் திருநாள்தான். தமிழர் திருநாள்னு சொல்லி பிற மதத்தவரை குற்றம் சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்?

பொங்கல் கொண்டாடப்பட்ட அந்தப் பண்டிகை முதன்முதலில் ஆரம்பிச்சபோது நம்ம திராவிட இனத்தில் இந்துக்கள் மட்டும்தான் இருந்து இருப்பாங்க. இன்றைய நிலையில் பொங்கல் தமிழர் திருநாள்னு சொல்வதே ஒரு வகையில் பார்த்தால் அபத்தம். நம்மளா அப்படி சொல்லிக்கிட்டோம்! சரி, பொங்கல்தான் தமிழ்ப்புத்தாண்டுனு ஆக்கியதை பிறமதத்தவரா தடுத்தாங்க?? யாரு அதை நடக்கவிடாமல் செய்வது??

தமிழ்ப் பார்ப்பணர்கள் கூட பொங்கலை அப்படி ஒண்ணும் பெருசா கொண்டாடுவதில்லை! பொங்கலை தமிழ்ப்புத்தாண்டா ஏற்றுக்கொள்ள-மனதளவில்- மறுப்பவர்கள் பார்ப்பணர்கள்தான்! இவர் வணங்கும் அன்னை ஜெயா முதல்க்கொண்டு!

தேவரும், தலித்துகளும் விவசாயக்குடும்பங்கள்தான்,! தமிழர்கள்தான்! தலித்துகளுடன் தேவர்கள் சேர்ந்து பொங்கல் கொண்டாடுறாங்களா என்ன? இது மாதிரி இந்து திராவிட மதம் இன்னைக்கும் நாறிக்கிட்டு இருக்கு. இவரு பிறமதத்தவரை பொங்கல் என்னும் தமிழர் திருநாள் கொண்டாடுங்கனு அதுபத்தி கவலைப்பட ஆரம்பிச்சுட்டாரு! மொதல்ல தலித்தும் தேவரையும், பார்ப்பணரையும் சேர்ந்து பொங்கல் கொண்டாட வைங்க! அப்புறம் பிற மதத்தவரைப் பார்ப்போம்!

பார்ப்பணர்களே பொங்கல் “ஊருக்காக”தான் கொண்டாடுறாங்கனு தெரியாதா என்ன கோவியாருக்கு? சங்க்ராந்தினு தெலுங்குக்காரன் கொண்டாடுறான். “தமிழர் திருநாள்”னா அவன் கொண்டாடுறான்? ஆனால் இன்னைக்கும், இஸ்லாமனவர்களும், கிருத்தவர்களும் பொங்கல் கொண்டாடுவதைப் பார்த்து எரிச்சலோ கோபமோ அடைவதில்லை! பொங்கல் கொண்டாடுவது எந்த மதத்தினரையும் பாதிப்பதே இல்லை! பொங்கல்னா சினிமா பார்ப்பார்கள். பிற மதத்தைனரும் தமிழர்களோட தமிழர்களா இருப்பாங்க. தமிழ்லதான் தங்களுடன் உறவாடிக்கிறாங்க. சும்மா தேவையில்லாமல் எதுக்கெடுதாலும் பிறமதத்தவரை தமிழ் உணர்வு இல்லைனு சொல்லி தாக்குதல் தேவையா?னு தெரியலை.

Friday, January 13, 2012

சீரியஸா கேக்கிறேன்! சாருநிவேதிதா தமிழனில்லையா?

நான் என்ன நைட்ரஸ் ஆக்ஸைடை நுகர்ந்துவிட்டேனா என்னனு தெரியலை. இல்லை நெஜம்மாவே சாரு எழுதியிருக்கது ரொம்ப "funny" யா இருக்கா? நீங்கதான் சொல்லனும்!

சாருநிவேதிதா தளத்துக்குப் போயி எக்ஸைல் பத்தி புது "கமர்சியல்" ஏதாவது எழுதி இருக்காரானு பார்க்கலாம்னு போனேன். ஆனால் அந்த மாதிரி பெருசா எதுவும் இல்லை.

சும்மா புத்தகவிழாக்கு போனது பத்தி எதையோ எழுதி இருந்தார். படிச்சுப் பார்த்தால் பயங்கர சிரிப்பு சிரிப்பா வந்தது. நீங்களும் படிங்க!


புத்தக விழா (2)

நேற்று புத்தகத் திருவிழாவுக்குச் சென்றிருந்தேன். ரொம்ப நேரம் இருந்தேன். அடையாளம், கிழக்கு, உயிர்மை, கருப்புப் பிரதிகள், க்ரியா, ஞாநபானு பதிப்பக ஸ்டால்களைப் பார்த்தேன். ஞாநியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். கீதா பிரஸ், கோரக்பூர் எனக்கு மிகவும் பிடித்த பதிப்பகங்களில் ஒன்று. அந்த ஸ்டாலில் வால்மீகி ராமாயணம் ஃபுல் செட் இருந்தது. 700 ரூ. விலை. கிட்டத்தட்ட இனாமாகக் கொடுப்பது போன்ற விலை. ஆனாலும் என் கையில் அவ்வளவு காசு இல்லை. அதனால் 70 ரூபாய்க்கு ஸ்ரீமந் நாராயணீயம் என்ற புத்தகத்தை மட்டும் வாங்கினேன்.

மீண்டும் கிழக்குக்கே வந்தேன். யாருக்கும் என்னை அடையாளம் தெரியாததால் கிளம்பி விட்டேன். அப்போது ஒரு 70 வயது முதியவர் எக்ஸைலில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். புத்தக விழாவை விட்டு வெளியே வந்த போது ஹரன் பிரஸன்னா (கிழக்கு) உள்ளே வந்து கொண்டிருந்தார். எக்ஸைல் விற்பனை பற்றி உற்சாகமாகப் பேசினார். வெளியே வழக்கம் போல் புத்தக விழாவுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. த்மிழில் இல்லாதது எதுவுமே இல்லை; உலகில் தோன்றிய முதல் மனித இனமே தமிழ் இனம்தான் என்று ஒருவர் கரகர குரலில் பேசிக் கொண்டிருந்தார். பார்வையாளர்களும் உற்சாகமாகக் கைதட்டி மகிழ்ந்தனர். தமிழர்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.

புத்தக விழாவின் கழிப்பறையை நினைத்து பயந்து அன்றைய தினம் மதியத்திலிருந்தே தண்ணீர் குடிக்காமல் இருந்ததால் சிறுநீர் பிரச்சினை இல்லை. ஆனால் தாகத்தில் தொண்டை வறண்டு கொண்டிருந்தது.


என்னதான் எழுதி இருக்காருனு பார்த்தால்

* 1) எக்ஸைல ஒரு வயதானவர் படிச்சுட்டு இம்ப்ரஸ் ஆகி இவருட்ட ஆட்டோ க்ராஃப் வாங்கினது அவருக்கே அவரு கொடுத்துக்கிற ஒரு சீரியஸ் கமர்ஸியல். அவருடைய பாணியிலே எழுதி இருக்காரு. அது நல்லாத்தான் இருக்கு.


அது தவிர

* 2) அந்த ஸ்டாலில் வால்மீகி ராமாயணம் ஃபுல் செட் இருந்தது. 700 ரூ. விலை. கிட்டத்தட்ட இனாமாகக் கொடுப்பது போன்ற விலை. ஆனாலும் என் கையில் அவ்வளவு காசு இல்லை. அதனால் 70 ரூபாய்க்கு ஸ்ரீமந் நாராயணீயம் என்ற புத்தகத்தை மட்டும் வாங்கினேன்.

வால்மீகி ராமாயணம் ரூ 700 என்பது ரொம்ப அதிகமான விலையா? அதைத்தான் இப்படி நக்கலடிக்கிறாரா? அப்படித்தான் இருக்கனும். எனக்கு என்ன புரியலைனா, Why is he pretending like he is poor? He does not have a credit card???

Here is the best part of this write-up!

* 3) வெளியே வழக்கம் போல் புத்தக விழாவுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. த்மிழில் இல்லாதது எதுவுமே இல்லை; உலகில் தோன்றிய முதல் மனித இனமே தமிழ் இனம்தான் என்று ஒருவர் கரகர குரலில் பேசிக் கொண்டிருந்தார். பார்வையாளர்களும் உற்சாகமாகக் கைதட்டி மகிழ்ந்தனர். தமிழர்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.

This part is hilarious and he is very sarcastic and funny and he is very honest as well! தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லைனு சொல்லி அந்த சொற்பொழிவு ஆற்றும் "தமிழ் விரும்பி"யை இவரு லந்தக்கொடுக்கிறாரு. ஆனால் இதுல மறைந்து இருக்கும் உண்மை என்ன தெரியுமா? அதாங்க இதுபோல் லந்தடிக்கும் தமிழன் சாருவுடைய இந்த நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணை ஏதுங்க?

ஒருவேளை சாரு தன்னை தமிழன் னு நினைப்பதில்லையா? மலையாளீயா இவரு? இல்லைனா வடநாட்டவரா? தமிழ் எழுத்தாளர்கள் யாருமே தன்னை தமிழனா நெனைக்கிறதில்லையா? ஒரே குழப்பமா இருக்கு எனக்கு!

Thursday, January 12, 2012

நண்பன் பார்த்த ஒரு நண்பரின் நேர்மையான விமர்சனம்!


"நீங்க பெரிய கமல் விசிறியாச்சே அதுக்குள்ள விஜய் படம் நண்பன் பார்த்தாச்சா?"

"ஆமா எஃப் டி எஃப் எஸ் ஷோவே பார்த்தாச்சு!"

"கூட்டம் எப்படி?"

"வீக்டே" லயே 65 பேர் போல வந்திருந்தாங்க. நல்ல கூட்டம்னுதான் சொல்லனும்!"

"படம் எப்படிங்க? ஷங்கர் படம் மாதிரி இருக்கா?"

"ஷங்கர் படம்னா? பாடல் காட்சிகள் மட்டும்தான் ஷங்கர் படம் மாதிரி..மற்றபடி ஷங்கரை காணோம்!"

"சத்யராஜி?"

"நல்ல ரோல் கொடுத்திருக்காங்க. ஆனா அவரு சுமாராத்தான் பண்ணியிருக்காரு. அவரு பேசுற அந்த வசன உச்சரிப்புதான் எரிச்சலை கிளப்புது"

"நம்ம கீரோ விசை எப்படிங்க?"

"விஜய் நடிக்க மாட்டேன்கீறாருனு ஒரே அக்கப்போரா ஊட்டுவீங்களே? உங்க வாயை அடைக்கத்தானோ என்னவோ இதில் அடக்கமா நல்லாவே பண்ணியிருக்காரு. நடிக்க நெறையவே வாய்ப்பு. ஓரளவுக்கு தெறமையை வெளிப்படுத்தி நடிச்சு இருக்காரு!"

"அப்படியா!"

"ஆமா, ஆனா குத்துப்பாட்டு ரசிக்கும் விஜய் விசிறிகளுக்கு கொஞ்சம் தீணி கம்மிதான்!"

"அப்புறம் அந்த இல்லீனாவா இல்லியானாவா? அந்தப் பொண்ணு?"

"நல்லா இடுப்பை இடுப்பை ஆட்டுதுங்க! நடிப்பெல்லாம் எதுக்கு?"

"ஜீவா, ஸ்ரீகாந்த்?"

"நல்லாவே பண்ணியிருக்காங்க! குறை எதுவும் சொல்ல முடியாதுங்க!"

"அப்புறம் சத்யன்னு யாரோ நடிச்சி இருக்காராமே?"

"யாரோவா? சத்யன் தெரியாதா? அவரு கெளப்பிட்டாரு போங்க!"

"லேடீஸை கவருமா?"

"அடிக்கடி ஆளாளுக்கு பேண்ட் சிப்பை கழட்டி காட்டுறாங்க! அவங்களுக்கு எரிச்சலா இருக்கும்னு நெனைக்கிறேன். "

"ரிப்பீட் ஆடியண்ஸ் வருவாங்களா?"

"ரிப்பீட் பத்தி தெரியலை. ஒரு தர நிச்சயம் பார்க்கலாம்!"

"என்னங்க ஸ்ரிதர் பிள்ளை 3.5/5 கொடுத்து இருக்காரு? ரிப்பீட் ஆடியண்ஸ்ல சந்தேகமா சொல்றீங்க?"

"அதனாலென்ன? ஒரு தரப் பார்க்கலாம். ஆஹா ஓஹோனு என்னத்தை சொல்ல இருக்கு, ஆஃப்டரால் இது ஒரு ரிமேக் படம்தானே?"

credit: should go to my friend :-)

Wednesday, January 11, 2012

மோகமுள் பிடிக்கலை!! நான் ஒரு ரசனையில்லாதவனா??

ஜானகிராமனுடைய மாஸ்டர் பீஸ் னு உயர்தர க்ரிட்டிஸ் எல்லாம் பாராட்டுகிற முழு நீள நாவல்தான் மோகமுள்! இந்தக் கதையை படிக்க ஒரு காலத்திலே புத்தகம் கிடைத்தும், நேரமிருந்தும் அந்த சூழலில் என்னால இந்தக்கதையை ரசித்து, சகித்துப் படிக்க முடியவில்லை! முதல்க்கோணல் முற்றிலும் கோணல்னு சொல்றது மாதிரி, இனிமேலும், இன்றும் இந்தக்கதையை என்னால படிச்சு ரசிக்க முடியுமானு சந்தேகம்தான்! ஆமாங்க, பெரிய பெரிய மேதைகள் எல்லாம் மோகமுள்தான் #1 படைப்பு, மாஸ்டர் பீஸ்னுதான் சொல்றாங்க! நான் இல்லைனு சொல்லல! ஜானகிராமன் எழுத்து எனக்குப் பிடிக்கும்தான். Personally மோகமுள் is kind of "different" for my taste! எனக்குப் பிடிக்கலை அம்புட்டுத்தான்!


தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து!

மோகமுள் தி. ஜானகிராமன் எழுதிய புகழ்பெற்ற ஒரு புதினம். இது தமிழ்த் திரைப்படமாக வெளிவந்தது. கர்நாடக இசையோடு தொடர்புடைய புதினம்.

அந்தணர் குலத்தில் பிறந்த பாபு மற்றும் மராட்டிய வம்சாவழித் தோன்றலாக, காலவோட்டத்தில் தஞ்சை பூமியில் தங்கி விட்ட இனத்தைச் சார்ந்த யமுனா ஆகியோரின் வாழ்வினையும், பாபு அவள் மீது கொள்ளும் சற்றே மரபு மீறிய காதலையும் பற்றியதான இப்புதினம், ஜானகிராமனின் இதர பல புதினங்களைப் போலவே, கும்பகோணச் சூழலில், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் புனையப்பட்டு, அக்கால கட்டத்திய நடைமுறைகளையும், சமுதாயச் சட்டங்களையும், நம்பிக்கைகளையும் விரித்துரைத்து அக்காலத்தினை ஆவணப்படுத்தும் ஒரு இலக்கியமாகவே திகழ்கிறது. இதன் அடிநாதமாக கருநாடக இசை மற்றும் அதனைப் பழகுவோர் பற்றிய ஒரு விமர்சன நூலாகவும் இருப்பது இதன் சிறப்பு. இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றோடொன்று முரண்படாது, ஒன்றையொன்று தாங்கிப் பிடித்ததாக அமைத்திருப்பது தி.ஜானகிராமனின் நுண்ணிய கருத்தாற்றலையும், தாம் எழுதும் விடயங்கள் பற்றி அவருக்கு இருந்த ஆளுமையையும் பறையறிவிக்கிறது.

தி.ஜானகிராமனின் மிக அற்புதமான படைப்பு என இது இன்றளவும் போற்றப்படுகிறது.

மோகமுள்ளைப் பார்ப்போம்!

பாபு-யமுனா(பாபுவின் மூத்த சகோதரி ஸ்தானத்தில் உள்ளவள்) வின் உறவு, அக்கா-தம்பி போல் அந்த உறவு ஒழுங்காப் போயிக்கிட்டு இருக்கும். திடீர்னு ஒருநாள் பாபுவுக்கு ஜுரம் அடிக்கும்போது எல்லாம் அலங்கோலமாக மாறிவிடும்! பாபுவை விடுங்க! யமுனாவுக்கு இது நிச்சயம் மிகப்பெரிய அதிர்ச்சியான நிகழ்வுதான். நான் கதை படிக்க ஆரம்பிக்கும்போதே முந்திரிக்கொட்டை நண்பன் ஒருவன் "இந்தத் திருப்பத்தை"ச் சொல்லிவிட்டான்! That's it! அதுக்கப்புறம் இந்தக்கதையை படிக்க எந்த ஆவலும் இல்லாமல்ப் போயிடுச்சு. நான் கொடுத்து வச்சது அம்புட்டுத்தான்! பாபு என்கிற கேரக்டர்மேலே அலாதி வெறுப்பு! எரிச்சல்! மேலும் எனக்கு கர்னாடக இசைபத்தியெல்லாம் ஒரு மண்ணும் தெரியாது. அதுகூட இன்னும் ஒரு காரணமாக இருக்கலாம்.


ஆமா எனக்கு என்னதான் இந்த நாவல்ல பிரச்சினைனு நான் இன்னொரு கோணத்தில் யோசிச்சுப் பார்த்தால் தி ஜா ராவின் இந்தக்கதையில்மட்டும்தான் ஒரு "ஆண்" கேரக்டர் "முறை தவறி" நடக்கிறாப்பிலே எழுதி இருக்காரு.

May be I am a male chauvinist pig? இருக்கலாம்! Women and children can be careless but not men! - Don Veto in The Godfather! :) இல்லையா? :)

இதெல்லாம் வெட்டிப்பேச்சு, தவறுனாலே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்றதுதான். ஆனால், நம்ம கோபாலி "மரப்பசு"வில் ஹீரோ கெடையாது! அம்மணிதான் எல்லாம். அதேபோல் அம்மா வந்தாளில் அலங்காரம்தான் ஹீரோயின். அம்பைனு ஒருவர் எழுதியதுபோல பொதுவா அலங்காரம், அம்மணி, ரங்கமணி இதுபோல் முக்கியமான "ஹீரோயின்கள்"தான் தகாத உறவில் "இன்வால்வ்" ஆவதுபோல தி ஜா ர மற்ற புதினங்களில் எல்லாம் எழுதியிருப்பாரு! பாபு போல் ஒரு ஹீரோவை அதுபோல் சித்தரித்தது ரொம்ப கம்மி. செம்பருத்தியில் வரும் சட்டநாதன் மேலே ஒரு குறையும் சொல்ல முடியாது. ஒருவேளை என் பிரச்சினை, அதான் எனக்கு இந்தக்கதை பிடிக்காததுக்கு காரணம் அதானானு என்னனு தெரியலை. For some reason, it is something so "bizzare" and this story is completely unacceptable for me, I think.
அப்புறம் ம சிவகுமார்னு ஒருத்தர் ஆஹா ஓஹோனு புகழ்ந்து ஒரு விமர்சனம் கொடுத்து இருக்காரு அதையும் பாருங்க!

தமிழுக்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் தனது குறிக்கோள் என்று கவிஞர் வைரமுத்து சொல்வார். தமிழில் நோபல் பரிசு வாங்கும் தகுதியோடு எழுதப்பட்ட எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் ஜானகிராமன். அத்தகைய படைப்புகளில் முதல் இடம் மோகமுள்ளுக்கு நிச்சயமாக உண்டு.

-ம சிவகுமாரின் கருத்து

சிங்கம் இருக்குல, அதாங்க காட்டுக்கு ராஜா! அதுல ஒரு ஆண் சிங்கம் பெண்சிங்கத்தோட உடலுறவு செய்து, நெறையா குட்டிகள் போட்டு ஒரே குடும்பமா தன் குகைக்குள் வளர்க்குமாம்! அப்போ, குட்டிகளோட அப்பா மேலும் தன் கணவனான அந்த ஆண்சிங்கத்தை இன்னொரு பலமான இளம் ஆண்சிங்கம் வந்து சண்டைபோட்டு அடிச்சு கொன்னுபோட்டுடுமாம்! கொன்னுட்டு, அதோட அந்த ஆண்சிங்கத்துக்கு பிறந்த குட்டிகளை எல்லாத்தையுமே கொன்னுடுமாம்! பெண்சிங்கத்தை மட்டும்தான் உயிரோட விடுமாம்! அப்புறம், இந்த புது ஆண்சிங்கம், விதவையாக்கப்பட்ட பெண் சிங்கத்தோட அன்பா பழகி, உடலுறவு கொண்டு, தனக்குனு குட்டிகள் உண்டாக்கி, பெற்று வளர்க்குமாம். இந்த பெண் சிங்கம் இருக்குல்ல, அது இதை எல்லாத்தையும் சகித்துக்கொண்டு, தன் கணவனைக்கொன்ற இந்த ஆண் சிங்கத்தின் குட்டிகளை (தன் குட்டிகளை) பால்கொடுத்து, வளர்த்து ஆளாக்குமாம். இந்த விதவை பெண் சிங்கம் வேற வழிதெரியாமல் புது ஆண் சிங்கத்துடன் சந்தோஷமா வாழுமாம்!

என்ன ஒரு பரிதாபம்? ஆண் (பாபு) இச்சைக்கு ஒரு நாள் எதிர்பாராமல் பலியான நம்ம யமுனா கேரக்டர் போல வாழும் பெண்கள், இந்தப் பெண் சிங்கத்தைத்தான் எனக்கு நினைவுபடுத்துவாங்க! I could never ever understand this lioness!

Monday, January 9, 2012

நளபாகம் எழுதிய ஜானகிராமன் ஒரு அசிங்கமான எழுத்தாளரா?!

எனக்கு ஜானகிராமன் எழுத்து பிடிக்கும்! இதை சொல்லீட்டு நளபாகம் நாவல் பத்தி பச்சையாக "அனலைஸ்" பண்ணப்போறேன். ஆமா, என்ன ப்ளாட் இந்தக் கதையில்? ஒரு வரில ..அசிங்கமா சொல்லலாம், "மாமியாரே மருமகளை இன்னொருவனுக்கு கூட்டிக்கொடுக்கிறாப்பிலே எழுதியிருக்காரு" மரை கழண்டு போயி இந்த ஆளு னு!

மாமியார், ரங்கமணிக்கு (வீட்டு எஜமானி) குழந்தை பாக்கியம் கெடையாது, கொஞ்ச வயதிலேயே விதவையானவள்! சிறுவயதிலேயே ஏதோ கலயாணம்னு பண்ணி வச்சு, ஒரு காம சுகமும் அனுபவிக்காமல் வாழ்ந்தவள், வாழ்ந்துகொண்டு இருப்பவள். இப்போ கதையில் மாமியார் ரங்கமணி ஒரு நடுவயது விதவை!

அந்த வீட்டுக்கு ஏதோ சாபம். அந்த வீட்டில் குழந்தை பொறந்து 100 ஆண்டுகளுக்கு மேலாகுது! ரங்கமணிக்கு தான் பெற்ற குழந்தை இல்லை என்பதால் ஒரே ஒரு வளர்ப்பு மகன் (சுவீகார புத்திரன்) மட்டும்தான் இப்போ அந்த வீட்டில் உண்டு! ஆனால் அந்த வீட்டில் ரங்கமணிதான் மஹாராணி! ரங்கமணி பேச்சை எதிர்த்துப் பேசுமளவுக்கு வளர்ப்பு மகனுக்கு தைரியமோ சுயமரியாதையோ கெடையாது.

ரங்கமணிக்கு ஒரே பெரிய பிரச்சினை என்னனா குழந்தை இல்லாதது! சரி தனக்குத்தான் குழந்தை பாக்கியம் இல்லாமப்போச்சு! வளர்ப்பு மகனுக்காவது குழந்தை பிறக்கனும்னு ஒரு அழகான மருமகளை பங்கஜத்தை (மாட்டுப்பெண்ணை) கட்டி வைத்து அந்த வீட்டில் ஒரு பேரப்பிள்ளையைப் பார்க்கனும்னு ஆவலுடன் இருப்பாள்! இருவருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் கோயில் குளம்னு போய்க்கொண்டு தன்னாலான உதவி செய்து ஒரு அழகான குழந்தையை மருமகள் பங்கஜம் பெத்துத் தருவாள்னு ஏங்கிக்கிட்டு இருப்பாள் ரங்கமணி!

ஆனால் வளர்ப்பு மகனுக்கும் குழந்தை பிறக்காது! மேலும் வளர்ப்பு மகன் ஒரு வினயமில்லாத அப்பாவி! காதலிலும் சரி, காமத்திலும் சரி, சுவீகார புத்திரன் "சரியில்லை" என நம்புவார் அம்மா ரங்கமணி.

இப்படி "போர்" அடிச்சுப் போயி, பேரக்குழந்தை பிறக்காத விரக்தியுடன் "யாத்திரை" ஒண்ணு போவாள் ரங்கமணி. அங்கே இளம் வயதில் உள்ள ஒரு வித்தியாசமான ஒரு நபரான, சமையல்க்காரன் "காமேஸ்வரனை" சந்திப்பாரு! காமேஸ்வரனை, ரங்கமணிக்கு ரொம்ப பிடிச்சுப் போயிடும்! காமேஸ்வரனை எல்லோருக்குமே பிடிக்குமளவுக்கு ஜானகி ராமன் எழுதி இருப்பாரு!

அதே யாத்திரை போகும்போது, குழந்தையில்லாத மருமகள் பங்கஜம், மகன் (துரை?) இருவருடைய ஜாதகத்தையும் ஒரு பிரபல ஜோஸ்யர்ட்ட கொடுத்து அலசி ஆராயச்சொல்லுவாள் ரங்கமணி..

அந்த பிரபல ஜோஸியர் ரங்கமணி வாயில் சர்க்கரை அள்ளிப்போடுவார்!

* பங்கஜத்துக்கு குழந்தை பாக்கியம் உண்டு!!!

ஆனால் அடுத்து வளர்ப்பு மகனுடைய ஜாதகத்தைப் பார்த்து, ஒரு பெரிய குண்டையும் தூக்கிப் போடுவாரு!

* மகன் துரை (? பெயர் சரியா என்னனு தெரியலை) க்கு குழந்தை பாக்கியம் இல்லவே இல்லை!

சந்தேகமே இல்லாமல் ஜோஸ்யர் சொல்லிப்புடுவாரு!

ஆனால் இந்த மாமியார், ரங்கமணி, இந்தக்கதையின் நாயகி, ஒரு மாதிரியான "sick woman"! மருமகளுக்கு புத்திர பாக்கியம் இருப்பதால் எப்படியாவது அந்த வீட்டில் ஒரு குழந்தை பிறந்தே ஆகனும்னு ஒரு முடிவுக்கு வந்துவிடுவார். அதுக்காக மாமியார் ரங்கமணி என்ன பூஜைனாலும், எதுவேணுமானாலும் செய்யத் தயார்! ஆமா! எதுவேணுமானாலும்!

தான் சந்தித்த காமேஸ்வரனை தன் மகன் ஸ்தானத்துக்கு கொண்டுவர முடிவெடுத்து விடுவார், ரங்கமணி. " தன் வீட்டில் வந்து பூஜை, மற்றும் சமையல் செய்ய வருகிறாயா?" என கேட்டு அழைப்பாள். காமேஸ்வரன் கொஞ்சம் யோசித்துவிட்டு பிறகு சரி என்றவுடன் அவனை வீட்டுக்கு அழைச்சுண்டு வந்திடுவார்.

காமேஸ்வரன் ஒரு பிரம்மச்சாரி! நல்ல கவர்ச்சியான ஆண்மகன்! அவனைத் தன் வீட்டுக்கு அழைச்சிட்டு வருவாள், ரங்கமணி! அத்துடன் தன் மாட்டுப்பெண் பங்கஜத்துடன் காமேஸ்வரனை நெருங்கி பழக விடுவார். காமேஸ்வரனைப் பற்றி பலவாறு நல்லவிதமாகச் சொல்லி அவன் மேல் மருமகளுக்கு ஆசையை தூண்டுவார், மாமியார் ரங்கமணி!

"இவர் பூஜை புஷ்ங்கரியம் எல்லாம் செய்பவர். இவர் சமையலுடன் பூஜை செய்தால், தன் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்னு அழச்சிண்டு வந்திருக்கேன்"- இது வந்து ஊருக்காக!

ஆனால் உண்மையில், இந்த "சிக் மாமியாரின்" முயற்சி என்னனு கதையை நடத்திச்செல்லும்போது அதில் மாமியார் (அம்மா), மருமகள் (மாட்டுப்பெண்) இருவரும் பேசிக்கொள்ளும்போது வாசகர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்!

இந்த உதவாக்கரை மகனால் இந்த வீட்டில் குழந்தை பிறக்காது! அதனால் காமேஸ்வரன் உதவியுடன் குழந்தை பாக்கியம் உள்ள அழகான "மாட்டுப்பெண்" பங்கஜத்தை ஒரு குழந்தை பெற்றுக் கொடுக்க வைக்க வழி செய்வாள் ரங்கமணி!

மருமகள் பங்கஜத்திடம் முதலில் ஜாடை மாடையாக, காமேஸ்வரனுடன் பூஜையில் கலந்துகொண்டு, "நல் உறவு" வைத்துக்கொண்டு, அவன் உதவியுடன் குழந்தை பெற்றுக்கச் சொல்லிப்பார்ப்பார். ஆனால் பங்கஜம் அதுபத்தி யோசிக்கும்போது பலமுறை அதில் தப்பில்லை என்பதுபோல "இன்சிஸ்ட்" பண்ணுவார் மாமியார் ரங்கமணி. இந்த மாதிரி மாமியார் யாருக்கு கெடைப்பாங்க? :) பங்கஜம் கொடுத்து வச்சவள்! :)

பாவம் பங்கஜம், அவள் ஒரு இளம் பெண்! காம உணர்ச்சிகள் பொங்கி வழியும் வயது அவளுக்கு! அவள் கணவனுக்கு காமத்தில் ரொம்ப ஆர்வமும் இருக்க மாதிரி ஜானைகிராமன் எழுதி இருக்க மாட்டார். ஆனால் பங்ஜதத்தை நல்லபடியா அவங்க பெற்றோர்கள் வளர்த்துவிட்டுருப்பாங்க! ரங்கமணியின் தூண்டுதலாலும், தன்னிச்சையாகவும் காமேஸ்வரன் சட்டைபோடாமல் பூஜை செய்யும்போது, பங்கஜம் அவனைப் பார்த்து ரசிக்கத்தான் செய்வாள், தனியாக இருக்கும்போது அவனை நினைத்து "ஃபேண்டஸைஸ்" கூட பண்ணுவாள். ஆனால், அவளால் அவனோட தகாத உறவு வைத்துக்கொள்ள முடியாது! அவள் மாரல்ஸ் அவளை தடுக்கும்! அது போல் உறவு வைத்துக்கொள்வது தப்புனு அவளுக்கு தெளிவாக்த் தெரியும். அதனால ரங்கமணி செய்யச் சொல்வதுபோல அவளால் செய்ய முடியாது!

பங்கஜம், இப்படி பட்டும் படாமலும் காமேஸ்வரனுடன் பழகுவதைப் பார்த்த ரங்கமணி, ஒருமுறாஈ அவளிடம், "நீ இப்படியே இருந்தால், நான் (ரங்கமணி) காமேஸ்வரனுடன் உறவு வைத்து குழந்தை பெற்றுக்கக்கூட தயங்க மாட்டேன்" என்பதுபோல் சொல்வதாக எழுதியிருப்பார் நம்ம தி ஜா ரா.

ரங்கமணி certainly has some kind of psychological problems as she never had a normal sex life or enough sex or whatsoever.

வளர்ப்பு பையன் துரை (? பெயர் சரியா என்னனு தெரியலை) ஒரு பரிதாபத்துக்குரிய கேரக்டர். "sexual desire" "sex drive" "jealousy" "possessiveness" எல்லாம் தலை விரித்தாடும் சாதாரண ஆண்களுக்கு இந்த "வளர்ப்பு ம்கன்" கேரக்ட்டர் புரியாது. Janakiraman purposely made this character as very WEAK!

காமேஸ்வரனும் இந்த செக்ஸ் விசயத்தில் இன்னொரு மாதிரி "தர்த்தி" தான். ரங்கமணியுன் (ஆமா ரங்கமணியும்தான்), பங்கஜமும் அவனைப் பார்க்கும்போது அவன் மேல் "காம இச்சையுடன்" பார்க்கிறார்கள் என்பதை உணராமல், அதை பொருட்படுத்தாமல், பூஜை, பூஜை, சமையல்னு வாழ்கிற நல்லவனான இவன், பார்க்கிற பெண்களை எல்லாம் நினைத்து சுய இன்பம் செய்து வாழும் சாதாரண ஆம்பளை கேரக்டர் இல்லை! செக்ஸ்தான் உலகத்திலேயே பெரிய விசயம்னு நெனச்சுக்கிட்டு வாழ்கிற, பார்க்கிற பெண்களை எல்லாம் படுக்கை அறையில் வைத்து நினைத்துப் பார்க்கும் "சாதாரண ஆம்பளை"களுக்கு காமேஸ்வரன் போல எளிதாக காம உணர்ச்சிக்கு அடிமையாகாத "பெரிய மனுஷன்கள்" பத்தி புரியுமா என்பது சந்தேகம்தான்.

காமேஸ்வரனை நினைத்து "ஃபேண்டஸைஸ்" செய்த அன்று இரவு பங்கஜம், அவள் கணவனுடன் உடலுறவு கொள்ளுவாள். கொண்ட பிறகு.. அன்னைக்கு மட்டும் அவளுக்கு உடலுறவின்போது 8 ஆர்கசம் வந்ததாக இதிலே எழுதியிருப்பாரு..அன்று இரவு உடலுறவு கொண்ட பிறகு பங்கஜம் அசை போடுகிறாள்... 6 மணிக்கு கடையை அடச்சுட்டு வந்தாரு .. ஒண்ணு ரெண்டு மூனு .. எட்டு! எட்டா? எப்படி? எப்படி என்னைக்குமில்லாம்ல இன்னைக்கு மட்டும் எட்டு வந்தது?னு அவள் யோசிப்பதாக. அன்னைக்குத்தான் பங்கஜம் குழந்தை உண்டாவாள்!!

கடைசியில் ஜோஸ்யர் சொன்னதை ஒரு மாதிரியாக உண்மையாக ஆக்கிவிடுவார்.. அதாவது ஒரு மாதிரி பங்கஜம் குழந்தை பெற்றுக்க காமேஸ்வரன் ஒரு "catalyst " மாதிரி இருந்ததாகக் காட்டிவிடுவார்.

இந்தக்கதையை நான் படிக்கக்கூடாத வயதில் படிச்சு பயந்து போயிட்டேன்! முதலில் ஜானகி ராமனை "பர்வேர்ட்" அது இது திட்டி தீர்த்து, விவாதிச்சு, பேசிப் பேசி.. யப்பா!

அதைவிட காமெடி என்னனா என் ஃப்ரெண்டு ஒருத்தன் இந்தக் கதையைப் படிச்சிட்டு, பங்கஜம் தனக்கு அன்று "8 முறை ஆர்கசம் அடைந்ததை நினைத்து" அசை போடுவதை, " அவள் கணவனுடன் அன்று எட்டு முறை உடலுறவு கொண்டதாக" ஜானகிராமன் எழுதி இருக்கதாக தவறுதலாகப் புரிந்து கொண்டான்!! :-))

ஆர் வி யுடைய இந்த விமர்சனத்தையும் கட்டாயம் படிங்க!

Saturday, January 7, 2012

கருத்துச்சுதந்திரம் கதறி அழும் ஜெயாவின் அராஜக ஆட்சி!

தமிழ்நாட்டின் பொற்காலம் ஆரம்பிக்கப்போதுனு ஆத்தாக்கு ஓட்டுப்போட்டவனுக் கெல்லாம் தொடர்ந்து செம ஆப்பு! " மாடு திங்கும் மாமி நான்" னு நக்கீரன் எழுதிய கட்டுரை விவகாரமான ஒண்ணுதான். ஆனால் அதிமுக அதை சட்டப்படி அனுகாமல் இப்படி "அடி தடி"ல இறங்கினால் சட்டம் ஒழுங்கை காப்பாத்த வேண்டிய ஜெயா குண்டர்களை வச்சு ஆட்சி நடத்துறப்பிலே ஆயிப்போச்சு!

சசிகலா இருந்தவரை ஜெயா முக்குலதோர் சகோதரியாக காட்டிக்கொள்ள முடிஞ்சது. ஆனால் இப்போ?

நக்கீரனின் இந்தக் கட்டுரை ப்லவிசயங்களை தெளிவுபடுத்தப்போகிறது! அதைவிட இந்த "அடிதடி" மேட்டர் பல "நடுநிலை" பத்திரிக்கைகள்னு சொல்லிக்கிட்டு திரிகிற விஷப்பாப்பான்களின் பார்ப்பண சாயத்தை காட்டப்போகுது!

அம்பிகள் எல்லாம் சட்டம் ஒழுங்கு கதறி அழும் பார்ப்பணத்தலைவியின் அடிதடி அராஜக ஆட்சியை எப்படி பூசிமொழுகுறானுகள்னு சும்மா வேடிக்கை பாருங்க மாப்பூ!

ஆமா, இந்த் சோ ராமசாமி இதையெல்லாம் கண்டுக்கிறது இல்லையா? அதெப்படி கண்டுக்குவான்? என்னவாவது அன்னா ஹாசரே கார்ட்டூன் போட்டே பொழைப்பை ஓட்டுறான்!

Wednesday, January 4, 2012

புத்தாண்டு 2012! சில எண்ணங்கள்!

2012! "இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்"னு எல்லாரையும் வாழ்த்துறோம்! எதிர்த்தாப்பிலே பார்க்கிறவங்களை தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, நண்பர்கள் எல்லாருக்கும் "ஹாப்பி நியு இயர்" சொல்றோம், அவங்களும் "சேம் டு யு"னு வாழ்த்துறாங்க. ஒரு சிலருடன் "ஹாப்பி நியு இயர்" இ-மெயில்ல போனவருடம் சொன்னதுக்கப்புறம் அடுத்த கரஸ்பாண்டெண்ஸ் இந்த வருடம் நியு இயருக்கு இன்னொரு வாழ்த்து!!! நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன்னு சொல்றதத் தவிர இந்த நியு இயர் விஷ் மெசேஜ்ல என்ன இருக்குனு எனக்குத் தெரியலை?

கடந்த வருடங்கள் போலவே, 2012 ஆரம்பிச்சாலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு தேதியில் வருடம் போடும்போது 2011னு போட்டுட்டு அடிச்சு 2012னு மாத்தி எழுதுறவங்கள்ல நானும் ஒருவன். இன்னும் கொஞ்ச நாள் ஆகும் தவறில்லாமல் தேதி போட! ஒரு வேளை புத்தாண்டு வாழ்த்துக்கள்னு வாழ்த்துறது தேதியை (வருடத்தை) சரிவரப்போடுனு ஞாபகப்படுத்தத்தானோ என்னவோ!

கடந்த வருடம் மோசமான வருடமாகப் போயிருந்தால் புதிய வருடம் இனியதாக அமைய கனவுகளுடன் ஆரம்பிக்கிறோம். கடந்தவருடம் நல்லாப் போயிருந்தால் இந்த வருடமும் அதைவிட நல்லாப் போகனும்னு பேராசைதான் நமக்கு. 2012னா என்ன 2021னா என்ன? உண்மையில் பொதுவா செய்யும் சிறு சிறு தவறுகளை திரும்பத்திரும்ப செஞ்சுக்கிட்டேதான் இருக்கோம், இருக்கிறோம், இருப்போம். ஒரு சில தவறுகளை விட்டுவிட்டாலும் புதுசா ஏதாவது தப்பு செய்ய ஆரம்பிக்கிறோம்.

கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் புதுசு புதுசா துரோகங்களையும், ஏமாற்றங்களையும், சந்தர்ப்பவாதிகளையும், சுயநலவாதிகளையும், இரக்கமில்லாதவர்களையும் சந்திக்கத்தான் போறோம்! எவ்வளவு கவனமாக இருந்தாலும் ஏமாறாமல், வஞ்சிக்கப்படாமல் இருக்கப்போவதில்லை!

"ஆண்டவனே! எங்களால் எந்தச் சுமையை தாங்க முடியாதோ அதை எங்களுக்குத் தந்துவிடாதே! நாங்கள் வலுவிழந்த மனிதர்கள்" னு ஆத்திகர்கள் கடவுள்ட்ட கெஞ்சி கூத்தாடிக்கேட்டுக் கொண்டாலும் வர்றது வரத்தான் போகுது. நடக்கிறதுதானே நடக்கும்? எந்த வருடம் நம்ம ஆண்டவன் எல்லாரையும் ஒட்டு மொத்தமாக (ஐ மீன் எல்லாரையும்) துன்பத்திலேயே ஆழ்த்தாமல் இருந்து இருக்காரு? இந்த வருடம் மட்டும் அப்படி செய்யப்போறாரா என்ன?

ஆண்டவன் என்னதான் அருள் புரிஞ்சாலும் கடந்த வருடங்கள் போலவே வெற்றி, சந்தோஷங்களுடன் தோல்வியும் இழப்புகளும் வரத்தான் போகுது. ஒவ்வொரு ஆண்டும் பல தோல்விகள், சில இழப்புகள் வந்துக்கிட்டேதான் இருக்கு! இந்த ஆண்டும் அப்படித்தான். ஒருவேளை நமக்கு பெரிய இழப்பு எதுவும் வராமல் போனாலும், வெற்றிமேல் வெற்றி நமக்கு வந்தாலும் நாம் வாழ்த்துகிற நம்மைச்சுற்றி வாழ்கிற நண்பர்களுக்கு அப்படி இருக்கனும்னு இல்லையே? அதெப்படிங்க எல்லாருக்கும் இந்தப் புத்தாண்டு இனிதாக அமையும்? Let us not fool ourselves and think that everything and everybody is going to have wonderful 2012. I am not pessimistic! I am rather practical and ready to face the reality in 2012!

ஆமா, நாம் தைரியமாக வரும் ஆண்டை, வரும் நாட்களை எதிர்கொள்ளுவோம்! வரும் வெற்றி தோல்விகளை நல்ல அனுபவமாக எடுத்துக்கொண்டு வாழக்கையை எதிர்கொள்ளுவோம்!

ஆமா ஏன் புத்தாண்டுக்கு எல்லாரும் குடிச்சுத் தொலையிறாங்க?னு தெரியலை. நான்லாம் குடிக்கிறது இல்லைங்க ! ஆமா புத்தாண்டுக்குக் குடிப்பதில்லை!