Tuesday, November 22, 2016

கலிஃபோர்னியாவில் கஞ்சா புகைக்கலாம்!

உலகம் எப்படி தோன்றியது? மனிதன் எப்படி தோன்றினான்? சிவன், விஷ்ணு, அல்லா, ஜீசஸ் லார்ட் கிருஷ்ணா எல்லாரும் சேர்ந்து மனிதனை உருவாக்கி, அப்புறம் காடு, கடல், தாவரங்கள், சூரியன், சந்திரன், மிருகங்கள் பறவைகள் எல்லாவற்றையும் உருவாக்கினாங்கனு எவனாவது சொன்னால்  யாருடா இந்த கிறுக்கன் அல்லது கிறுக்கச்சினு நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது இன்றைய மனநிலை. மனிதனின் மனவியாதிக்குக்கு கடவுள் என்னும் கற்பனை ஒரு மருந்து. அவ்வளவே!

ஒருபக்கம் சிகரட் குடித்தால் நுரையீரல் புற்று நோய் வரும் என்றும், அல்கஹால் குடித்தால் கல்லீஈரல் பழுதாகும் என்று வியாக்யாணம் பேசிக்கொண்டு அலைகிறார்கள். இன்னொரு பக்கம் கஞ்சாவை லீகல் ஆக்கிக் கொண்டு வருகிறார்கள். கலிஃபோர்னியாவில் கடந்த நவம்பர் எல்கசனில் கஞ்சா பயன்படுத்துவது லீகல் ஆக்கப் பட்டது!

என்ன காரணம்?

பணம் தான். வேறென்ன?

நல்ல வகையில் சம்பாரிப்பது கஷ்டம். கெட்ட வழியில் சம்பாரிப்பது எளிது. இதை மக்கள் செய்தால் தவறு. அரசாங்கம் மக்களுக்காக, மக்களை சீரழித்து (உடல் நலத்திற்கு தீங்கானது என்கிற எச்சரிக்கையுடன்)  செய்தால் தவறில்லை! கடவுள் மன்னித்து விடுவார். Because in God we Trust!

டாஸ்மாக் வருமானம்தான் இன்னைக்கு தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை காப்பாத்தி வருகிறது. அதேபோல்தான் அமெரிக்காவிலும், அல்கஹால், சிகரட், போர்னோக்ராஃபி, சூதாட்டம், லாட்டரி, இப்போ கஞ்சா இவைகளில் வரும் வருமானம் அரசாங்கத்திற்கு முக்கியமானதாகி விடுகிறது.

இன்று கலிஃபோர்னியா! பிறகு பல மாநிலங்களில்! பிறகு அமெரிக்காவில் எல்லா மாநிலங்களிலும்.

இந்தியாவில் எப்போது கஞ்சா கடையில் கிடைக்கும்?

இன்னும் ஒரு 20 வருடங்கள் பின்னால், கஞ்சா லீகல் ஆகும். கஞ்சா அடிக்காமல்தான் நாளுக்கு நாள் நம்ம ஊரில் மெண்டல்கள் அதிகமாகிக்கொண்டு போகிறான். கஞ்சாவில் தன்னை மறந்தால் மனநிம்மதி கிடைக்கும்னு ஒரு தியரி அறிவியல் பூர்வமாக்வே வெளியிடலாம்.

ஆக, மனிதன்னா என்ன? சும்மா கடவுள், காதல்னு எதையாவது கற்பனைகளை உருவாக்கி தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து சாகும் மடஜன்மங்கள்!

விலங்குகள் தவறுகள் செய்யும். அதை நியாயப் படுத்தாது. ஆனால் ஆறிவுள்ள மனிதர்கள் தவறுகள் செய்தால் அதை வெட்கமே இல்லாமல் கேவலமாக நியாயப்படுத்துவான்.

கடவுள் என்பான், மன்னிப்பார் என்பான், பாவி என்பான், பாவ மன்னிப்பு என்பான்! இப்படி அவனையும் ஏமாற்றி ஊரையும் ஏமாற்றி இவன் வாழும் வாழ்க்கை பரிதாபத்துக்குரியது!

இன்னுமா வாழ்க்கை பற்றி, மனிதன் பற்றி புரியவில்லை உங்களுக்கு? மூளையை சரியாக பயன்படுத்துங்கள்! முடியவில்லையா? கொஞ்சம் கஞ்சா புகைத்துவிட்டு ட்ரைப் பண்ணுங்க! கடவுள் உதவவில்லையென்றாலும் கஞ்சா உதவலாம்!


Tuesday, November 15, 2016

ரஜினி க்கு அமீரின் கேள்விகள்!

நேத்து வந்த கபாலி முதல் இவர் படம் வெளிவரும்போது, இவர் படத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட 10 மடங்கு அதிகமாக்கி கள்ளத்தனமாக டிக்கட் விக்கிறானுகனு பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். பாவம் இவருக்குத் தெரியாது போல இருக்கு?! தெரிந்தாலும் அதையெல்லாம் இவரு கண்டுக்கிறதே இல்லை. ஏன்னா, அதெல்லாம் தப்பே இல்லை! இதுக்குப் பேருதான் பக்கா சுயநலம்! 

மேலும் பணம் சேர்ந்தவுடன் பழசையெல்லாம் மறந்துட்டாரு இவரு. பங்களூர் கண்டக்டாரா இருக்கும்போது இவர் டிக்கட்டே கொடுக்காமல் டிக்கட் விலையில் பாதிக் காசை மட்டும் வாங்கி தன்  பைக்குள்ளே போட்டுக்கிட்டு செய்த சட்டவிரோதங்கள் எல்லாமும் மறந்துபோச்சு. சரி அது போகட்டும்.

இன்னைக்கு  இவர் படம் வெளிவரும்போது நடக்கும் தேச துரோகச் செயல்களை எல்லாம் டிவிட்டர் ஹாண்டில் ஒண்ணை வச்சுக்கிட்டு கண்டுக்காமல் விட்டுவிட்டு, இப்போ  வந்து மோடியின் இந்தப் பெரிய சாதனையை வரவேற்கேறாராம். மேலும் தான் பெரிய யோக்கியன்னு சொல்லிக்கிறாராம்பா!

இவர் மோடியை பாராட்டியவுடனே, எனக்கே அமீர் கேட்கும் அத்தனை கேள்விகளும் எழுந்தன. இதேபோல் நம் மக்கள் அனைவருக்குமே இதே கேள்விகள் மனதில் தோன்றி இருக்கும்!

 இவர் படத்துக்கு அநியாய விலையில் டிக்கட் விக்கும்போது இவருக்கு கண்ணில் படுவது இவரை வைத்து படம் எடுத்தவன் நஷ்டமாகக்கூடாது என்கிற ஒரே குறிக்கோள்தான். அந்தப் பணம் கறுப்பாக வந்தாலும் சரி, சிவப்பாக வந்தாலும் சரி, இவருக்கு கவலையே இல்லை. அப்படி  ஒரு சுயநலம்!!!

இதுபோல் அநியாய விலை டிக்கட் விற்பனைகள் நடக்கும்போது,   இவர் பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்டாரே ஒழிய மோடிட்டப்போயி இவர் படம் வெளியாகும்போது நடக்கும் கொள்ளைகள்/அநியாயத்தை யெல்லாம் தட்டிக் கேட்கும்படி சட்டம் கொண்டுவரச்சொல்லி ஒருபோதும் சொல்லவில்லை!

ஆக, இவருக்கு ஒரு நியாயம் ஊரில் உள்ளவனுக்கு இன்னொரு நியாயம். அப்படித் தானே?

இவர் படம் வெளிவரும்போது, இவர்  படத்துக்கு சட்டப்படி அரசாங்கம் நிர்ணயித்த விலையில் டிக்கட் என்னைக்கு விற்கப்படுதோ அன்னைக்கே நம்ம நாடு திருந்திவிடும்.

இந்த ஒரு சின்ன விசயம்கூடப் புரியாமல், மோடியை பாராட்டுறேன், ஜெய்ஹிந்த்னு இவர் செய்ற காமடியை அமீர் விமர்சிப்பதில் எந்தத் தப்பும் இல்லை!

சில நியாயமான கேள்விகளை எழுப்பி ரஜினியை விமர்சித்த அமீருக்கு என் வாழ்த்துக்கள்!

Tuesday, November 8, 2016

கம்யூனிசமும் இவனுக தாலி யும்!

சீனாப் புரட்சினா என்ன? பணக்காரனை எல்லாம் கொன்னு, அவன் சொத்துக்களை எல்லாம் அபகரிச்சு ஏழைகளுக்குக் கொடுத்து எல்லாரும் சமமான அளவு சொத்து பணம் வச்சிருக்கணும்னு ஒரு பெரிய கொள்கை. இதான் சீனப் புரட்சியின் விளைவு!

ஆண்டுகள் கடந்தன.. இன்னைக்கு என்ன நிலைமை??

இன்னைக்கு சீனாவில் கம்யூனிசம் செத்து நாறுது. சைனால பில்லியனர்களும் உண்டு அடிமைபோல் தினந்தோரும் வேலைக்குப் போயி வந்து ஏழையாக வாழும் பாட்டாளிகளும் உண்டு.

அமெரிக்காவில் உள்ள எ எம் சி தியேட்டர்களை வாங்கி நடத்துவது சைனீஸ் பில்லியனர்கள்!!

அதேபோல் அலிபாபா என்னும் இண்டெர்னெட் பிசினெஸ் நடத்துவது இன்னொரு சைனீஸ் பில்லியனர்.

கம்யூனிஸ்ட் நாட்டில் பில்லிய்னர்களா?  என்னடா சொல்றீங்க?

கம்யூனிசமும் இவனுக தாலியும்!

ஆக இப்போத் தேவையானது இன்னொரு சீனப் புரச்சி!

இன்னைக்கு உள்ள சைனீஸ் பில்லியனரை எல்லாம் அடிச்சு அவனுக சொத்தைப் பறிச்சு பாட்டாளிகளுக்கு கொடுக்க வேண்டியதுதான் கம்யூனிஸ்ட்கள் செய்ய வேண்டியது.

இல்லையா?

Wednesday, November 2, 2016

கமலு அவர்களே! கல்யாணம் மட்டுமா உடையுது?

உலகநாயகன் விசிறிகள் மன்னிக்கவும். சில வருடங்கள் முன்னால "திருமணங்கள் உடைகின்றன! அதனால் என்னைப் போல் சேர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிதாக இருக்கும். கம்மிட்மெண்ட் இல்லாத உறவுகள் உடையாது. பலப்படும்"  என்பதுபோல் எடுத்துவிட்டார் நம்மாளு.

இப்போ இவருக்கும் கவுதமிக்கும் ஏதோ பிரச்சினையால் பிரிய வேண்டிய கட்டாயம். இவர் கல்யாணம் செய்து ரெண்டு பேரிடம் இருந்து பிரிந்ததுக்கும், சேர்ந்து வாழ்ந்து பிரிந்ததுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இப்போ?

சேர்ந்து வாழ்வதும் திருமணம் செய்து வாழ்வதுபோல்தான். பிரியும்போது ரெண்டிலுமே ஏற்படும் வலி சமமானதுதான். என்ன இவரோட பணம் சொத்து எதையும் சேர்ந்து வாழ்ந்தவர் பெற முடியாது. அந்த வசதிக்காகத்தான் இவரு (அவரும்தான்) சேர்ந்து வாழ்ந்தது. அதைப் பச்சையாக சொல்வதை விட்டுப்புட்டு என்னவோ எனக்குத்தான் வாழத் தெரியும்னு சும்மா எதையாவது சொல்லக்கூடாது.

இந்தக்காலத்தில் நட்பே எளிதாக உடையுது. இதில் கல்யாணம் என்ன? லிவிங்க் இன் டுகெதெர் என்ன?  எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்!

எதற்க்கெடுத்தாலும் எனக்குத்தான் எல்லாம் நல்லாப் புரியுது, எனக்குத்தான் வாழத் தெரியும் என்பதுபோல்  எதையாவது உளறாமல் வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ளுங்கப்பா!