Sunday, October 31, 2010

நான் ஏன் ஒரு நாய் வளர்க்கிறேன் தெரியுமா?

“நீங்க பெரிய தப்பு பண்றீங்கப்பா! பணத்தோட மதிப்பு ஒவ்வொரு நாளும் கொறையுது. இந்த நிலத்தை இன்னைக்கு 25 லட்சத்துக்கு விக்கிறதும், ரெண்டு வருசம் சென்று 30 லட்சத்துக்கு விக்கிறதும் ஒண்ணுதான். வித்துத் தொலைங்க!”னு ஃபோன்ல கோபமா கத்தினான், ரவி.

“ஏன்ப்பா ரவி, இப்படி கோபமா பேசுற? அப்பா உனக்கு நல்லதுதானே செய்வேன்?”

“அப்ப வித்துத் தொலைங்க! வித்த அந்தப் பணத்தை எனக்கு அனுப்ப வேணாம்! பேங்க்ல போட்டு வைங்க! திடீர்னு ஏதாவது பெரிய மருத்துவசெலவு உங்களுக்கோ, அம்மாவுக்கோ வரலாம், அப்போ நீங்க அதை எடுத்து செலவழிக்கலாம்னுதான் சொல்லுறேன். இல்லைனா யாருக்கும் உபயோகப்படாம வீணாப் போயிடும்ப்பா!”

“நீ என்னப்பா இந்தியா திரும்பி வரப்போறதே இல்லையா?”

“நான் என்னைப்பத்தி பேசலை. உங்க நன்மைக்குத்தான் விக்கச் சொல்றேன். அமெரிக்கால எல்லாம் அப்படித்தான்ப்பா எல்லோரும் செய்றாங்க! அதனாலதான் 100 வயதுவரை இருக்காங்க!”

“சரி, உன் அம்மாட்ட பேசுறியா?”

“ஆக, இதை விக்க மாட்டீங்க?”

“நல்ல வெலைக்கு வந்தா விக்கிறேன்ப்பா. நல்ல வெலை வரும்னு சொல்றாங்க!”

“எப்போ? நீங்க போய் சேர்ந்தப்புறமா? உங்க பணம் எனக்கெதுக்குப்பா? என்னை நான் பார்த்துக்குவேன். உங்களுக்குத்தான் உங்க பணம் பயன்படனும்! அதான் படிச்சுப்படிச்சு சொல்றேன். கேட்டுத் தொலைங்களேன்”

“அம்மாட்ட பேசுப்பா!”

"எப்படிப்பா இருக்க, ரவி?"

“ஏன்ம்மா வயசானகாலத்திலே ரெண்டு பேரும் உயிரை வாங்குறீங்க? சொல்ற எதையுமே கேக்க மாட்டீங்களா?”

“அந்த வயக்காட்டை அடிமாட்டு வெலைக்கு கேக்கிறானுகப்பா. நீதான் ஒழுங்கா எங்களுக்கு பணம் அனுப்புற இல்ல. அப்புறம் என்னப்பா இப்போ அவசரம்?”

“அடிமாட்டு வெலையெல்லாம் இல்லம்மா. 25 லட்சத்துக்கு கேக்கிறதா என் ·ப்ரெண்டு சொல்றான். விக்க மாட்டீங்க? நான் சொல்றதை எதயுமே கேக்க மாட்டீங்க? ஏன் னா நீங்க பெரியவங்க, இல்ல?”

“ஏன்ப்பா இப்படி கோபமா பேசுற?”

“இந்த மாதிரி அறிவுகெட்ட அம்மா அப்பா இருக்கதாலதான்ம்மா?”

ரவியோட அம்மா அழ ரம்பிச்சுட்டாங்க.

“சரி ஃபோனை வச்சிறவாம்மா?”

“நீங்க எல்லாரும் நல்லாயிருக்கீங்களா?”

“நல்லா உயிரோடதான் இருக்கோம்.”

“ ”

“சரிம்மா, உடம்பை நல்லாப் பார்த்துக்கோங்க. அடுத்த வாரம் கூப்பிடுறேன்.”

“சரிப்பா, ரவி.”

************
“How do I look, dad?”

“You look beautiful, Swathy! Going out?”

“Yes, I need to get my nails done. Can I ask you something?"

"Sure."

"Why do you always fight with grandpa and grandma? Yelling at them?”

“Bcos they dont listen anything I say, just like you do!”

“You are very rude to them, dad. You dont know how to talk!”

“Yeah right. But I know how to make money to support you and them!”

“I will certainly make more money than you do now! I get straight "A" s”

“Good for you! My problem is nobody listens to me”

“I dont listen because you don’t understand anything, dad!”

“Yeah, right. How old are you? A teenager judging me!”

“You don’t let me date. All my classmates date!”

“You are too young to go on a date, Swathy. That is why.”

“My classmates are all younger than me. They are all allowed to date.”

“They are Americans!”

“So am I.”

“But, REMEMBER! unfortunately you are born to stupid Indian parents!”

“That is correct!”

“What if you get pregnant when you go out with a boy and get carried away?”

“You don’t understand, what is dating means. dad. And you never dated anybody. You did do a stupid arranged marriage!”

“Let me ask you this! Are you going to marry the guy you would date now?”

“Of course not!”

“Why cant you wait till you find a dependable guy?”

“How long? OK fine. You think I don’t know about birth control?”

“I don’t want to discuss about this, Swathy!”

“Neither do I. Bye, love you, dad. I have got to go now”

************************

“So, How was your weekend, Raavi?”

“Don’t ask me, Bob!”

“That bad? Watched any football?”

“The Cowboys suck!”

“Yes, they do! You should become a Giants fan now!”

“Yeah, if I were a Giants fan, and if I had parents and daughter who listen to me, I would have been happy.”

“Nobody listens to anybody, Raavi. Why do you think I have a dog? He is the only one who listens to me!”

“Let me at least enjoy working. I love Mondays!”

-------------------------

Thursday, October 28, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே! (2)

* ஏன் நீங்களே கேள்வியும் கேட்டுக்கிட்டு பதிலும் சொல்லிக்கிறீங்க? நீங்க என்ன லூசா?

ஒரு சில உண்மைகளை பகிர இது ஒரு சின்ன முயற்சி அம்புட்டுத்தான்.

* ஆமா அந்த ஆளு சாகிற போது அவருடன் ஒரு கோடி உயிர்கள் செத்துடுச்சாமே? அவர் என்ன அவ்ளோ பெரிய ஆளா? கதை விடுறானுகப்பா!

அவர் சாகும்போது அவர் உடம்பில் அவரையே நம்பி வாழ்ந்துகொண்டிருந்த கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் எல்லாம் செத்துப் போனதைத்தான் இப்படி பெருமையா சொல்லிக்கிறாங்களாம். (When we die, we dont die alone)

* இன்னைக்கு பதிவுலகில் சரக்குள்ள பதிவர்னா யாருங்க?

சுமார் ஒரு வருடம் அல்லது ஒன்னரை வருடம் முன்னால, சூடான பதிவில் தன் பதிவை, தன் திறமையான எழுத்துத்திறனால் கொண்டுவந்தவங்க எல்லாம் சரக்குள்ள பதிவர்கள்னு நெனச்சுக்கிட்டு இருந்தாங்க. ஏன் அப்பப்போ அதை சொல்லிக்கிட்டும் திரிஞ்சாங்க. ஆனால் இப்போ அதை தூக்கியவுடன், அதிகம் பேரால் பரிந்துரைக்கப் படுகிற அளவுக்கு எழுதத் தெரிந்தவங்கதான் சரக்குள்ளவர்கள்னு சொல்லலாம்! இதெதுக்கு நமக்கு? "சரக்கை" வச்சுட்டு இருக்கிற பெரிய "பிரபலப் பதிவர்கள்" மேட்டர் இது!

* எந்திரன் அலை ஓய்ந்ததா?

சென்னை, பெங்களூரு, மும்பை, கேரளா, ஹைதராபாத் போன்ற இடங்களில் எந்திரன் இல்லைனா ரோபாட் படத்துக்கு ஈஸியா டிக்கட் கெடைக்கும் நிலை வந்துருச்சு. வீக் டேஸ்ல 40-50% போல தான் தியேட்டர் ஃபுள் ஆகுது. வீக் எண்ட்லயும் முக்கிய திரையரங்குகள் மட்டும் ஹவுஸ் ஃபுல் ஆகுது. அதனால் அநியாய டிக்கெட் வெலைனு பொலம்பினவங்க எல்லாம் இப்போ எந்திரன் படம் பார்க்கலாம்.

இல்ல நான் ஒரு லட்ச ரூபாய் செலவழிச்சு எடுக்கிற சின்ன கலைஞர்களையும், அதுபோல் தியாகிகளையும்தான் வாழ வைப்பேன்னு அடம்பிடிச்சா.. அது அவங்க இஷ்டம்!

ஆமா எந்திரன் அலை ஒரு வழியாக ஓய்ந்துவிட்டதுதான். தீபாவளிக்கு வேணா மறுபடியும் பெரிய கூட்டம் சேரலாம் (பெரிய தலைகள் படம் எதுவும் வர்ற மாதிரி தெரியலையே, அதனால). மத்தபடி பொழுதுபோக்குக்காக சினிமாப் பார்க்கிற எல்லாரும் ஒரு வழியா பார்த்து முடிச்சுட்டாங்களாம்.

* உங்கள் தளத்தில் உள்ள ஒரு பழைய பதிவை, புதிதாக வந்தவர்களுக்கும் போய் செல்ல, தமிழ்மணத்தில் மீள் பதிவு செய்றது எப்படி?

தெரியலை. இந்த வலைதளத்தில் இருந்து மறுபடியும் அனுப்பினால் தமிழ்மணத்திற்கு போய் சேர மாட்டேன்கிது. ஆனால் அது ஒரு சினிமாப் பதிவு என்பதால் புரியலை. யாராவது மீள்பதிவு செய்ற எக்ஸ்பர்ட்தான் சொல்லனும்

* நண்பர் நசரேயனுக்கும், நண்பர் குடுகுடுப்பைக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

ஒருத்தர் கமல்னா இன்னொருத்தர் ரஜினி மாதிரி.

* அமெரிக்கா-வாழ் பதிவர்களில், கவிதை எழுதும் திறனுடன், உங்கள மாதிரி இல்லாம,நல்லா எழுத்துப்பிழையில்லாமல் தமிழ்ல எழுதத் தெரிந்தவரும், மேலும் பொது நோக்குடன் நாகரிகமா பதிவு செய்யும் மிஸ்டர் டீஸண்ட் யாருனு தெரியுமா உங்களுக்கு?

பழமை பேசி என்கிற மணியண்ணாவா? :)

* ஆமா அந்த கீழே உள்ள ரெண்டு படத்துக்கும் என்ன சம்மந்தம்?

அந்த மலருக்கு மணம் தருவது இந்த மூலக்கூறுதானாம்! :)

Sunday, October 24, 2010

எந்திரன், மருதநாயகத்துக்கு வழிகாட்டி?கமல், ரஜினியை தொழிலில் போட்டியாளராக, ரைவலாக நினைப்பது என்றுமே (இன்றும்) மறுக்கமுடியாத உண்மை. ஏன் ரஜினி, கமலை நினைப்பதில்லையா? னு கேக்காதீங்க. ரெண்டும் ஒண்ணுதான்! கமல், படையப்பா இருநூறாவது நாள் வெற்றிவிழாவில் பேசும்போது சொன்னார். ரஜினிக்கும் எனக்கும் நட்பும் உண்டு, அதே சமயத்தில் போட்டியும் உண்டு! என்று . ஆமா சொன்னார்! தொழிலில் போட்டி இருந்தாலும் எங்களுடைய போட்டி, ஒரு ஹெல்த்தியான ஒண்ணு என்றும் அதே விழாவில் தெளிவு படுத்தினார். அதுக்கப்புறம் கே எஸ் ரவிக்குமாருடன் சேர்ந்து தெனாலியுடன் வந்து வெற்றியடைந்தார், கமல்.

அந்தப் போட்டி மனப்பாங்கு, கமலிடம் எப்போவுமே, அதாவது இன்றும் இருக்குனு நான் நம்புகிறேன். அதெப்படிப் போகும்? கூடவே பிறந்ததாச்சே! இதை மூடிமறைக்காமல் தெளிவாக கமல் ஒத்துக் கொளவது பாராட்டுக்குரியது.

கடந்த 2007 லில் எ வி எம் மின் சிவாஜி த பாஸ், மிகப்பெரிய பொருட்செலவில் (70 கோடியில்) தயாரித்து முதல் முறையாக, புது மாதிரியாக ஒரே சமயத்தில் நூற்றுக் கணக்கான பிரதிகள் (படப் பொட்டிகள்) வெளியிடப் பட்டது. அந்த ஃபார்முலாவில் முதல்முறையாக சிவாஜி மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது.

கமல், சும்மா இருப்பாரா? அடுத்த வருடமே (2008 ல்) , சிவாஜிக்குப் போட்டியாக, கமல் உயிரைக்கொடுத்து நடித்து, ஆஸ்கர் ரவி தயாரிக்க மிகப் பெரிய பொருட்செலவில் தசாவதாரம் படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் எடுத்தார். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தசாவதாரம், 70 கோடி தயாரிப்பில் தயாரிக்கப்பட்டு வெளி வந்தது. 1000 பிரதிகள் ஒரே நேரத்தில் வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது. இந்த முறையும் இந்த ஹெல்த்தியான போட்டியில் கமலும் வெற்றிதான் அடைந்தார்!

இப்போ, சிவாஜி, தசாவதாரம் எல்லாவற்றையும் சாப்பிடும் அளவுக்கு, ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் 150 கோடி செலவில் எடுக்கப்பட்டு, எந்திரன் த ரோபாட், இரெண்டாயிரம் பிரதிகளுடன் உலகளவில் வெளியிடப்பட்டு, மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. எந்திரன் படத்தின் வெற்றி பற்றி மற்றவர்கள் எப்படியோ, கமல் நிச்சயம் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டுதான் இருப்பார். ஏன் என்றால் மருதநாயகத்துக்கும் இதே போல் பெரிய இன்ஸ்வெஸ்ட்மெண்ட் மற்றும் வெற்றியும் தேவை! நிச்சயமாக எந்திரனுக்கு பயன்படுத்திய இதே வியாபாரத் தந்திரம் செய்து (அவர் எந்திரன் வழிநடந்துதான் ஆக வேண்டும்) மருதநாயகம் எடுத்து வெளியிட்டால் - போட்ட காசை எடுக்க முடியும். மேலும் ஒரு லாண்ட் மார்க் தமிழ்ப் படத்தையும் தரமுடியும்.

இதுபோல் பணத்தைக்கொட்டி படம் தயாரிக்கும்போது திரைப்படம் ஒரு கலை, சினிமா என்பது வியாபாரம்னு கமல் நெனைக்கக்கூடாது, அது இதுனு பிதற்றும் மேதாவிகளை எல்லாம் கமல் திருப்திப்படுத்த நெனச்சுக்கூடப் பார்க்கக் கூடாது!

எந்திரன், மூன்று மொழியில் வெளிவந்தாலும், ஹிந்தியில் வெளியான ரோபாட் ஒண்ணும் மிகப்பெரிய வெற்றியல்ல! சுமார் 25 கோடிபோல் ஹிந்தியில் மொத்தக் கலக்சன் வரும் என்கிறார்கள். ஆனால், தமிழ், தெலுகு மற்றும் ஓவெர் சீஸ் கலக்சனே எந்திரன் வெற்றிக்கு போதுமானதாகிவிட்டது.

அதேபோல் மருதநாயகம் மும்மொழியில் வெளிவந்தால் ஹிந்தியில் வெற்றியடையாவிட்டாலும் (வெற்றியடைந்தால் இன்னும் நல்லது), தமிழ் , தெலுகு பிரதிகளே வெற்றிக்குப் போதுமானது. ஹிந்தியில் பெருசா சாதிச்சுத்தான் பணத்தை எடுக்கனும்னு இல்லை, என்பது ஒரு நல்ல விசயம்.

கமல், மருதநாயகத்தையோ அல்லது மர்மயோகியையோ விரைவில் ஆரம்பிப்பாரா? ஆஸ்கர் ரவிச்சந்திரனுடனோ அல்லது சன் நெட்வொர்க் உடனோ சேர்ந்து மருதநாயகத்துடன் விரைவில் வருவார் என நம்புவோம்! If he follows endhiran/robot business strategy I dont see him failing!

Thursday, October 21, 2010

எந்திரன் விவாதம்: ஞாநி நெறைய பொய் சொல்லுகிறார்.

விவாதம்னு வரும்போது நிச்சயம் விதண்டாவாதம் பேசலாம். ஆனால் உண்மை பேசனும் என்பது தெரியாதா இந்த ஞானிக்கு? நேஷனல் டி வி யில் தன் வாதத்தை நியாயப்படுத்த நெறையா பொய் சொல்லுகிறார்!

· ரஜினி தன் காசைக் கொடுத்து பால், பீர் அபிஷேகம் செய்ய சொல்றதா சொல்றார். இதெல்லாம் இவருக்கே டு மச் தெரியலை? அப்போ நம்ம ரசிகர்களை ஏன் திட்டனும்? காசு வாங்கித்தான் வேலை செய்றானுக என்றால்?

· இதைவிட பச்சைப் பொய் என்னனா, உலகம் சுற்றும் வாலிபன் வந்த போது எம் ஜி ஆர்க்கு 62 வயதாம். எம் ஜி ஆர் பிறந்தது 1917னு தான் எல்லா எடத்திலும் போட்டிருக்கு. அப்போ 55-56 தானே ஆகியிருக்கும்? எனக்கே கூட்டக் கழிக்கத் தெரியுது. இவருக்கு? இப்படிப் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல¨! இல்லை இவர் பொய் சொல்றாருனு இவருக்கே தெரியலையா?

· ஜப்பான்ல முத்து ஓடக்காரணம் மீனாவாம்! அப்புறம் ஏன் வீரா ஓடலையாம்? ஜப்பான்ல இருந்து ரசிகர் ரசிகைகள் எல்லாம் வந்தாங்களே, ரஜினியைப் பார்க்க! தெரியாதா இவருக்கு? ஒரு படம்னா எல்லாருடைய காண்ட்ரிப்யூஷன் இருப்பது உண்மைதான் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் இவரு முத்து மீனாக்கு விழுந்துட்டாரு போல இருக்கு!

· எம் கே டி யுடைய கடைசி காலம், அவர் கொலை வழக்கில் மாட்டியதெல்லாம், அப்புறம் ஜெயிலுக்குப் போய் வந்ததெல்லாம் இவருக்கு தெரியாது போல. சும்மா எம் கே டி எம் கே டினு உளறுகிறார். எம் கே டி பத்தி கொஞ்சம் இவர் படிக்கனும்.

· அப்புறம் என்னனு தெரியல எதுக்கெடுத்தாலும் எம் ஜி ரை இழுத்து வந்துடுறார். எம் ஜி ஆரை கொண்டுவராமல் இவரால் பேசமுடியாதா? எம் ஜி ஆர் ஒரு ஆக்டரை கொன்னு ஸ்டார் ஆகலையா? கொஞ்ச வயது ஹீரோயின் பார்முலா கொண்டுவந்ததே எம் ஜி ஆர் தான். எம் ஜி ஆருக்கு இஅவர் அடிக்கும் ஜால்ராதான் இவரை ரொம்பக் கீழே இறக்குது!

· ஒரு 3 கோடி கொடுத்தால் யாரை வேணா சூப்பர் ஸ்டாராக்கிடுவாராம், இந்த ஞானி. இதெப்படி இருக்கு? சரி ஆக்கலாம்னே வச்சுக்குவோம். ஆனால், சூப்பர் ஸ்டார் ஸ்டேட்டஸ்லயே நிலைத்து நிக்கனும்! எவனால நிலைத்து நிக்க முடியும்? ரஜினிகாந்துக்கு ஒரு கோடி இல்லை ஒருலட்சம் கூட இல்லை மெட்ராஸ் வந்தபோது. தெரியாதா இவருக்கு?

Gnani’s debating ability was not that impressive as he does not want to accept some facts about Rajni’ charishma and star power!

சாதங்கன், ரஜினி வில்லன் மற்றும் ஹீரோவா நடிச்ச மாதிரி எம் ஜி ஆர் நீரும் நெருப்பில் பண்ணியிருக்கார்னு சொன்னாரு. உண்மைதான். ஆனால் எந்திரன் மிகப் பெரிய வெற்றிப்படம். நீரும் நெருப்பும் எம் ஜி ஆர் படங்களிலேயே படு தோல்விப்படம். இது தெரியுமா சாதங்கனுக்கு? தெரிந்திருந்தால் இந்த உதாரணத்தை தனக்கு சாதகமா சொல்லியிருக்க மாட்டார்.

Anyway, I believe, it is the combined effect, both star power and marketing strategy played a role. It is not just the star power or just the marketing muscle power!

Monday, October 18, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே!

* கடவுள் ஏன் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை?

ஒரு வேளை பார்க்க ரொம்ப அசிங்கமா, அருவருக்கத்தக்க இருப்பாராக்கும்! அதான் மறைந்திருந்து பார்க்கிறாரோ? கடவுள்கூட ஆள் பார்க்க நல்லாயில்லைனா நம்ம ஆளு மதிக்க மாட்டான்!

* எறும்பு கடிச்சா வலிப்பதுக்குக் காரணம் எதுவும் விஷமா?

அது இன்ஞெக்ட் செய்யும் ஃபார்மிக் அமிலம்தான் இந்தற்கு காரணம். இது பெரிய விஷமல்ல!

* உங்க அந்தரங்கத்தை எல்லாம் உங்க மனைவியிடம் சொல்வது சரியா தப்பா?

இண்டிமேட் ரிலேஷன்ஷிப் ஆச்சே, தப்பே இல்லை, நீங்க அவரை ஒருபோதும் விவாகரத்து செய்யாதவரை.

* டாக்டர்! இன்னும் என் ப்ளட் கொலெஸ்டிரால் லெவெல் 225 லயே நிக்குது. என்னுடைய கொலெஸ்டிரால் லெவெலை சீரோவுக்கு கொண்டு வர ஏதாவது மருந்து இருக்கா, டாகடர்?

உங்க கொலெஸ்டிரால் லெவலை சீரோவுக்கு கொண்டுபோனா நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க!

(Cholesterol plays a vital role in our body, moron!)


* நீங்க ரொம்ப அழகு, மேடம்! உங்களுக்கு நோபல் பரிசு கெடச்சா சந்தோஷப்படுவீங்களா இல்லைனா மிஸ் யுனிவேர்ஸ் கெடச்சா சந்தோஷப்படுவீங்களா?

பணமா முக்கியம்? அது வரும் போகும்! மிஸ் யுனிவேர்ஸ்தான்!

(What a bimbo!)

* உங்களுக்கு எதிரிகள் உண்டா?

தெரியலை. எனக்குப் பிடிக்காதவர்களும், என்னைப்பிடிக்காதவர்களும் நிச்சயம் இருக்காங்க!


Sunday, October 17, 2010

“பரத்தைக்கூற்று” -ஆம்பளைகளின் அசிங்கக்கூத்து!

பரத்தைக்கூற்று பற்றி சில அசிங்கக்கவிதைகளுடன் மாதவராஜின் விமர்சனம் படிக்கும்போது எரிச்சலும் கோபமும் அருவருப்பும்தான் வந்தது. கவிதைகளை ரசிக்கவோ அதைப்படித்து உருகவோ முடியவில்லை! ஒரு பின்னூட்டம் போட்டேன். இன்னும் திருப்தியில்லை!

“பரத்தைக்கூற்று” என்றதும் அதைப்பற்றி எழுதியது லீனா மணிமேகலையா? இல்லை ஒரு தமிழச்சியா? இல்லை இன்னொரு தமிழ்ப் பெண்ணா? இல்லைனா ஆண்களால் வஞ்சிக்கப் பட்ட இன்னொரு பரத்தையா கண்ணீர் வடிக்கிறாள்? நு பார்த்தால் ஏமாற்றம்தான்!

“பரத்தைக்கூற்று” என்று பரத்தைகளின் உணர்வுகளை உள்ளப்பூர்வமாக உணர்ந்து அவர்களுக்கு கண்ணீர் வடிப்பவன் போல கவிதை எழுதுபவர்களும் பரத்தையை உருவாக்கி, பரத்தையிடம் படுத்து எந்திரிக்கும், பரத்தையை கூட்டிக்கொடுக்கும் அதே ஆண்கள்தான்.

“பிரசவ வலி” பத்தி தாய்தான் சொல்லனும்! “பீரியேட்ஸ்” வலி பத்தி பெண்தான் பேசனும்! “பரத்தைக்கூற்று” பற்றி பேசவேண்டியது பெண் இனம்! கசக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று கசக்கப்பட்டவள் சொல்லனும். கசக்குகிறவர்கள் சொல்லக்கூடாது! பரத்தையை உருவாக்கி பரத்தையை அனுபவிக்கும் அசிங்கமான ஆண்கள் இனம் அல்ல இங்கே கவிதை பாட வேண்டியது!

ஒரு ஆண் பரத்தையின் உணர்வைப்பற்றி கற்பனையில் கவிதை என்கிற தமிழ் நயத்துடன் உருகி, உணர்வுகளைக்கொட்டி எழுதும்போது ஆண்களின் “பர்வேர்ஷன்”தான் எனக்குத் தெரிகிறது. அந்த ஆணின் கண்ணீர் தெரியவில்லை! கசக்கி எறியப்பட்டவள் பெண்! இங்கே பரத்தைக் கூற்று அசிங்கக் கவிதையிலும் ஆண்களால் இன்னும் தமிழ்நயத்துடன் கவிதை வளத்துடன் கசக்கப்படுகிறாள்- கவிஞர்களின் வற்றாத நீலிக்கண்ணீருடன்!

எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்று சொல்லட்டும்! யார்? பரத்தையை உடலால் மற்றும் எழுத்தால் கசக்கும் ஆண்கள் அல்ல! இந்தக்கவிதைகளில் கசக்கப்பட்டிருக்கிற, இந்தக் கவிதை அவர்கள் கண்ணீரை துடைப்பதாகச் சொல்லும் சில பரத்தைகள்! சொல்வார்களா?

Friday, October 15, 2010

பிரகாஷ்ராஜ் கற்பழிச்சு இருக்காரா?

சமீபத்தில் பிரகாஷ்ராஜ் வுடைய வீடியோ ஒண்ணு பார்த்தேன். ஒரு விவாதக் களத்தில் தமிழ் சினிமாவை எப்படி வெட்டி முறிக்கலாம் னு இவரு, பாண்டியராசன் அப்புறம் ந்ம்ம சீமான் போன்றவர்களெல்லாம் எப்படி எப்படி கிழிக்கலாம்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. சும்மா சொல்லக்கூடாது, பிரகாஷ்ராஜ் வாய்கிழிய பேசி இருக்கிறார். எப்ப இருந்து இந்த ஆளுக்கு இவ்ளோ திமிரு வந்ததுனு தெரியல! நேஷனல ஆவர்ட் வாங்கியதும் தாந்தான் பெரிய பருப்புனு நெனப்பு வந்திருமா என்ன? தன்னுடைய பழசெல்லாம் (சினிமாவில் கடந்த காலம்) மறந்திடுமா என்ன? எங்களுக்கு மறக்கலையே!

இவர் சொல்றாரு கேட்டுக்கோங்கப்பா! சினிமா ஒரு புனிதமான தொழிலாம். அதை வச்சு கேவலமாப் படம் எடுக்கக் கூடாதாம். இவரு நடிச்ச வில்லன் ரோலெல்லாம் பெரிய தமிழ் கலைத்தொண்டாம்! ஏன் தமிழ் சமுதாயத்தை திருத்தும் சிறந்த ரோல் கெடைக்கிறவரை இவர் கொஞ்சம் தாமதிச்சு இருக்கலாமே? ஏன் தெருப்பொறுக்கி ரோல்ல எல்லாம் நடிச்சாரு? வயித்து பொழைப்புக்குத்தானே நடிக்க வந்தாரு!

அதை விடுங்க, இவருக்கு சினிமாவில் ஜாக்கிச் சான் சண்டை மட்டும்தான் பிடிக்குமாம்! ஏன் னா அவருக்கு உண்மையிலேயே சண்டை போடத் தெரியுமாம்! அதாவது இவரு என்ன சொல்ல வர்றார்னா இயற்கையாகவே ஒருவனுக்கு தெரிந்ததைத்தான் நடிப்பில் காட்டினால் இவரால ரசிக்க முடியுமாம்! ஜாக்கிச் சான் உண்மையிலேயே சண்டை கற்றவராம். அதனால இவரால அவர் சண்டையை மட்டும் ரசிக்க முடியுதாம். ஜேம்ஸ் பாண்டு ரோஜர் மூர் ப்ளேன் இருந்து பாராச்சூட்ல குதிக்கும்போது டூப் போட்டா இவருக்குப் பிடிக்காதாம்! டூப் எல்லாம் போட்டு நடிக்க வைக்கிறதெல்லாம் கேவலமான விசயமாம். சரி, அப்படியே இருந்துட்டுப் போகட்டும்.

அதுக்கு அடுத்த ஸ்டெப் எடுத்துப் போனால் இவர் தான் பழக்கப்பட்ட ஒண்ணைத்தான் தன் நடிப்பில் காட்டுவாராம்னு சொல்லலாமா? ஏன் கூடாது?
சரி, முன் அனுபவம் இல்லாத ஒரு "நடிப்பை" இவரால மக்கள் ரசிக்க, சிறப்பா கொடுக்க முடியாதாம். அப்போ இவருக்கு இவர் நடிப்பில் செய்த ரோல்களி லெல்லாம் முன் அனுபவம் இருக்கா?

இல்லாமல போகும்? இல்லாமல் இப்படி வாய் கிழிய பேசுவாரு மனுஷன்?

* ஆசை படத்தில் இவர் கொளுந்தியாளிடம் தகாத முறைல நடந்து, தன் மனைவியையே கொலை செய்யும் ஒரு ரோலா ஒரு கேவலமான வில்லனாக வந்தார். அப்போ இதில் இவருக்கு முன் அனுபவம் உண்டோ? இல்லைனா இவருக்கு எப்படி இந்த ரோல் செய்ய தகுதி வந்துச்சு?

அண்ணா பிரகாஷ் ராசூ!

கேமரா முன்னால நிக்கவச்சு மைக்கை கொடுத்தா ஒழுங்கா பேசனும்! சும்மா மைக்கு கெடச்சிருச்சேனு பெரிய இவனாட்டம் எல்லாம் பேசக்கூடாது! அர்த்தா ஆயித்தா?!

இப்போ எதுக்கு இந்தாளு சாக்கி சானுக்குத் தாவுறார்னு பார்க்கிறீங்களா? எல்லாத்துக்கும் காரணம் எந்திரன் ரிலீஸும் அதன் வெற்றியும்தான்னுகூட சொல்லலாம். சிவாஜி வந்தபோது மொழி விழாவில் எதையோ ஒளறிக் கொட்டினார்கள். இப்போ எந்திரன் வந்ததும் டென்ஷனாகிட்டாரு மனுஷன். உளறிக்கொட்டுறார்!

ஏன் இப்படி ஒரு காண்டு? வயித்தெரிச்சல்! இவரும்தான் வில்லனா அறிமுகமானாரு! ஒண்ணும் பெருசா சாதிக்க முடியலைல.

கால்ஷீட் கொடுத்தா ஒழுங்கா போய் நடிச்சுக் கொடுக்கிறதில்லனு உலகமே இவரைப் பத்தி சொல்லுச்சு. இவர் தொழில் தர்மம் பத்தி பேசுறாரு!

ஆமா, இன்னைக்கு இவரை ஹீரோவா வச்சு ஷங்கர் இயக்க சன் டி வி ஒரு 200 கோடியிலே படம் எடுக்க முன் வந்தால் இவரு வேணாம்னு சொல்லிடுவாராம். ஏன் னா அது கலைச்சேவை இல்லையாம்.

வந்துட்டானுக கர்நாடகால இருந்து பெரிய இவனாட்டம்! என்ன பார்க்குறீங்க? ஆமா, இவரும் கன்னடிகாதான்!

Wednesday, October 13, 2010

எந்திரன் வசூல் சாதனை! நன்றி இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்!


நூத்தியம்பது கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட ஒரு தமிழ்ப் படம் இது! இந்தியாவிலேயே இவ்வளவு பொருட்செலவில் இதுவரை யாரும் படம் எடுத்ததில்லை! நூத்தம்பது கோடியா? போட்ட காசை எடுக்க முடியுமா? என்கிற கேள்விகள் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் எழாமல் இல்லை.

ரஜினியை வைத்து படம் எடுத்தால் ஓடும். சன் டி வி மீடியாவை வைத்து சாதிக்கலாம் என்பதெல்லாம் ஓரளவுக்குத்தான் உண்மை என்பது பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்து ஆண்டியான தயாரிப்பாளர்களுக்குத் தெரியும்.

ஏன் ப்ரமீட் சாய்மீரா குசேலன் ரைட்ஸ் 60 கோடிக்கு வாங்கி வம்பில் மாட்டியது நமெக்கெல்லாம் தெரியாதா?.

ஒரு படம் வெற்றியடையனும்னா படம் பொதுஜனங்களுக்குப் பிடிக்கனும்! சந்திரமுகியின் வெற்றிக்குக் காரணம் படத்தை குடும்பத்தோட போய்ப் பார்த்தார்கள்! அதுபோல் குடும்பம் குடும்பமாக போய் பார்ப்பதுபோல பொதுஜனங்களுக்கு பிடிப்பதுபோல படம் வந்தாத்தான் போட்ட காசை எடுக்கமுடியும். இல்லனா ஒரு வாரத்தில் தியேட்டர்பக்கம் ஆளே இருக்காது!

சரி, எந்திரனின் உண்மையான நிலைமை என்ன? கலக்சன் கீழே கொடுத்துள்ளேன்

North America - $2,400,000 (10 Days): 12 கோடி

United Kingdom - $780,000 (10 Days) : 3.5 கோடி

Malaysia -$2,900,000 (17 days) : 13 கோடி

வட இந்தியாவில் கலக்சன்: 15 கோடிகள்

கேரளாவில் கலக்சன்: 5 கோடிகள்

கர்நாடகாவில் கலக்சன்: 10 கோடிகள்

ஆந்திராவில் கலக்சன்: 30 கோடிகள்

தமிழ்நாடு கலக்சன் (குறைந்தது): 60 கோடி

UAE: 2 கோடி

ஆக மொத்தத்தில் 150 கோடியை 10 நாட்களில் எடுத்துட்டாங்க!

இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்ல ஒரு ஆர்ட்டிக்கிள் வந்திருக்கு அதையும் பாருங்க!

Endhiran: Biggest hit in the history of Indian cinema


Namita Nivas


It is Rajinikant’s charisma that works in his favour. Moreover it is an out-and-out masala film, with Aishwarya to add to the glamour quotient.

In two weeks, the film has collected a never-before Rs 200 crore.

Rajinikant may not have been a big favourite earlier other than in Tamil Nadu, but the success of Robot has proved that the superstar is a big craze even in other centres and especially in the North.

Endhiran (the Tamil version) and Robot (the dubbed version in Hindi), starring Rajinikant-Aishwarya Rai Bachchan, has surpassed all box-office collections thus making it the biggest -ever grosser in the history of Indian cinema, according to trade analyst N.P. Yadav. He asserts that 3 Idiots was the last film to net Rs.150 crores while Endhiran/ Robot has had a net collection of Rs 200-225 crore worldwide since its release on October 1, which is nearly double of Dabangg and is still going strong.

The film made at the whopping budget of Rs.170 crore, had screening starting as early as 5 a.m. in certain places of Tamil Nadu, and in this state alone, it collected Rs. 150 crore with an approximate Rs 50 crore in other South centres while the dubbed version has made Rs 15 crore in India. “It is Rajinikant’s charisma that works in his favour. Moreover it is an out-and-out masala film, with Aishwarya to add to the glamour quotient, the lavish locations and extravagant special effects,” he states.

According to trade analyst Amod Mehra, the opening week of Robot was “good” while the second week was “much better” and it is still growing. “It has broken all the norms of a dubbed film. There has never been any dubbed film that has crossed even the one crore mark. There was Shankar’s earlier film Jeans with Aishwarya, but that did not do all that well,” he recalls adding that the release of the Shankar-directed Sun Pictures’ venture has cast a shadow on all the recent releases. However, he points out that it was possible because there was no competition whatsoever “with Crook flopping and Do Dooni Char also not faring too well at the b-o. Endhiran, that opened in 2,200 screens all over as compared to 1,400 for Dabangg and crossed the two-week net collection of the Salman Khan- starrer in its first week itself. However, Dabanng has managed to rake in its moolah during its five weeks of release and the DVD of the film will be out soon. Moreover, it is being telecast on TV some time later this month.” says Mehra.

Rajinikant has done many Hindi films earlier, but the reason Mehra attributes for this mad craze for his recent release, is the new generation of movie lovers which has rediscovered a new 61-year old star. “His fan following is unbelievable and the film is sure to affect other films at least till Diwali,” he asserts.

--------------------

நன்றி: இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்!

Friday, October 8, 2010

ரொம்ப செக்ஸியா இருக்கு! கடலை கார்னர் 62

"இந்த போர்டை தூக்கி வர இவ்ளோ நேரமா, கண்ணன்?"

"கொஞ்சம் கவனமா தூக்கி வந்தேன். ஏதாவது டேபிள் இருக்கா இதை அதுமேலே வச்சு விளையாட?"

"இந்த டீ டேபில் சரியா வருமா?"

"தட் வில் பி பெர்ஃபெக்ட்!"

"சரி கேர்ரம் போர்டை வச்சுட்டு வந்து காஃபியக் குடிங்க, கண்ணன்."

"நெஜம்மாவே உனக்கு விளையாடத் தெரியுமா?"

"நெஜம்மாத்தான். இதோட பத்துத்தர கேட்டுட்டுட்டீங்க, இதே கேள்வியை!!காஃபி நல்லாயிருக்கா?"

"யு டேஸ்ட் பெட்டெர் தான் யுவர் காஃபி!"

"அப்படியா? நான் எல்லா இடத்திலும் ஒரே டேஸ்டா? இல்லைனா வேற வேறயா?"

"அதெப்படி ஒரே டேஸ்டா இருப்ப?"

"காஃபி நல்லாயில்லையா?"

"ரொம்ப நல்லாயிருக்குடா!சரி வெளையாடுவோமா? எந்த ஸ்ட்ரைக்கர் வேணும் உனக்கு? ப்ளாஸ்டிக்கா? இல்லைனா ஐவெரி ஸ்ட்ரைக்கரா? பிக் ஒன்!"

"ப்ளாஸ்டிக்லதான் நான் வெளையாண்டு இருக்கேன். இதென்ன இத்தனை ஹெவியா இருக்கு?'

"இது ஐவெரி ஸ்ட்ரைக்கர்னு சொல்லுவாங்க. உண்மையிலேயே ஐவெரியானு தெரியலை."

"ஆமா, ரெண்டு பேரு வெளையாட ஒரு ஸ்ட்ரைக்கர் போதாதா?"

"டோர்னமெண்ட்ல எல்லாம், யு வில் ஜுஸ்ட் ப்ளே வித் யுவர் ஸ்ட்ரைக்கர். அவன் அவன் ஸ்டரைக்கரை அடுத்தவனை தொடக்கூட விடமாட்டானுக!"

"என்ன டோர்னமெண்ட் அது இதுனு சொல்றீங்க? நீங்க என்ன பெரிய சேம்பியனா?"

"நான் இல்லைடா. ஒரு சிலர் ஆடும்போது பார்த்து இருக்கேன். நான் இந்த ஐவெரி ஸ்ட்ரைக்கர்ல நான் வெளையாடுறேன்."

"சரி, அடுக்குங்க! இதெதுக்கு இவ்ளோ பவ்டெர் போடுறீங்க?"

"அப்போத்தான் ஃப்ரிக்ஷன் இல்லாம ஸ்மூத்தா இருக்கும்."

"சரி அடுத்து எப்போ பெட் ரூம், கண்ணன்? ரொம்ப நாளாச்சு தெரியுமா?"

"ஏன் மறந்தா போயிடப்போது?"

"ஹா ஹா ஹா. நீங்க மறந்தாலும் அதிசயப்பட ஒண்னுமில்லை!"

"எப்போப் பார்த்தாலும் இதானா?"

"எப்போப் பார்த்தாலுமா? ஆமா ஒரு நாளைக்கு அஞ்சுதர என்னை சொர்க்கத்து அழச்சுண்டு போறீங்களாக்கும்? எவ்ளோ நாளாச்சு!!"

"யு ஜஸ்ட் ஹாட் யுவர் பீரியேட்ஸ்?"

"சோ வாட்?"

"வாட்!!!"

"ஹா ஹா ஹா!"

"சரி, கேரம் வெளையாடலாமா?!"

"சரி, ரூல்ஸ் என்னனு சொல்லுங்க?"

"ரெண்டு விதமா ஆடலாம். ஒண்ணு நம்ம பக்கத்தில் உள்ள ஆர்ரோல உள்ளதெல்லாம் டைரெக்ட் டச் பண்ணக்கூடாது. பக்கத்தில் உள்ள பாக்கட்ல உள்ளதை ரிவேர்ஸ்ல வெளையாடி "சிங்க்" பண்ணனும்"

"அதானே யுஸுவல் ரூல்ஸ்?"

"இப்போ எல்லாம் ரூல்ஸ் மாத்தீட்டாங்கடா. ஆர்ரோ ல உள்ளதையும் எல்லாம் அடிக்கலாம். அப்புறம் உன் பக்கத்தில் உள்ள "பாக்கட்"லயும் காயினை உன் தம்ப் வச்சு இப்படி, இங்கே பாரு, இப்படி ஆடி "சிங்க்" பண்ணலாம்!"

"தம்ப் லயா? அதெல்லாம் கெடையாது. பழைய ரூல்ஸ்தான் எனக்குத் தெரியும்!"

"இல்லைடா! இப்போ எல்லாம் தம்ப்ஸ்னு வேற மாதிரி ஆடுவாங்க!'

"அதெல்லாம் எனக்குத் தெரியாது! உங்க பக்கத்தில் உள்ள ஆர்ரோவிலே உள்ளதை டைரெக்ட்டா அடிக்கக்கூடாது! ஆர் யு "ச்சீட்டிங்" மி, கண்ணன்?"

"ஏமாத்தலாம் இல்லடா! போய் ஆண்லைன்ல லேட்டெஸ்ட் ரூல்ஸ் படிச்சுப்பாரு!"

"எனக்கு தம்ப் ல ஆடத்தெரியாது!'

"சரி, ஓல்ட் ஃபேஷன்ட் கேம் ஆடுவோம்!"

"நான் ஸ்டார்ட் பண்ணவா?"

"யாரு மைனஸ் போடுறாங்களோ அவங்கதான் ஆரம்பிக்கனும்."

----

----

"யு மிஸ்ட் இட்..இந்தாங்க "மைனெஸ்" போட்டாச்சு!"

"யு ஹாவ் குட் கண்ட்ரோல்டா! சரி, ஆடு!"

"நீங்களே ஆரம்பிங்க!"

"சரி! எனக்கு வைட் தான் பிடிக்கும்"

---

---

"என்ன இது கண்ணன்!! முதல் அடியிலேயே நாலு வைட் காணோம்?"

"அதான் இந்த ஐவெர்ரி ஸ்ட்ரைக்கர் ஸ்பெஷாலிட்டி! சரி. ஆடு!"

"இருங்க. கொஞ்சம் யோசிக்க வேணாமா?"

"இதென்ன செஸ்ஸா யோசிக்க?"

"ஸ்ஸ்ஸ்! கொஞ்சம் சும்மா இருங்க, கண்ணன்!"

"உதட்டை அப்ப்டிக் குவிக்காதே!"

"ஏன்?"

"ரொம்ப செக்ஸியா இருக்கு. என்னால கேரம் வெளையாட முடியாது"

"ரியல்லி? இப்படி பண்ணினால், கிஸ் பண்ணனும் போல இருக்கா?"

"ஆமா! ரொம்ப செக்ஸியா இருக்கு! சரி வெளையாடுடா!"

"சரி, முகத்தை சிடு சிடுனு வச்சு ஆடுறேன்"

"இப்போவும் அழகாத்தான் இருக்க!"

"சரி, வெளையாட விடுங்க!"

"சரி, ஆடு!"

-----
------

"ஏய் நெஜம்மவே நல்லா ஆடுறடா!"

"சரி யார் வின் பண்ணுறானு பார்ப்போம்!"

---

--

"இதென்ன என் காய்ன் எல்லாம் இப்படி உங்க காய்னை முன்னால வச்சு ப்ளாக் பண்ணுறீங்க?'

"கஷ்டமா இருந்தா, நீ போட்டுத்தா!"

"கொழுப்பா? இருங்க நான் என்ன பண்ணுறேன் பாருங்க!"

"என்ன பண்ணுவ?"

"வெய்ட், வெளையாடுங்க!'

---

---

"வெளையாண்டாச்சு!'

"ரெண்டு வைட் தான் மிச்சமா? எனக்கு இன்னும் 4 காய்ன் இருக்கு"

"திறமையைக் காட்டு!'

---

----

"சரி, ஆடுங்க! இங்கே பாருங்க!"

"ஏய் ஏன் எழுந்துரிக்கிற?! என்ன பண்ணுறடா?"

"தெரியலையா? டாண்ஸ்! உங்கள காண்ஸெண்ட்ரேஷனை டிஸ்ட்ராக்ட் பண்ண!"

"இதெல்லாம் அநியாயம்!'

"இஸ் தட் செக்ஸி?"

"ஓ மை காட்!"

"சரி, ஆடுங்க!"

"ஐ வில் மிஸ், நவ்!'

---

--

"சீ, ஐ மிஸ்ட் இட். இட் இஸ் ஆல் பிகாஸ் ஆப் யுவர் ****! "

"ஹா ஹா ஹா. ஸ்ட்ரைட்டா உள்ள காயின்கூட போக மாட்டேங்கிது!"

"வை டு யு ஷேக் யுவர் பட் லைக் தட்? இட் டேர்ன்ஸ் மி ஆண்!'

"இதுதான் பூட்டி டாண்ஸ்!'

"ஜீசஸ்!'

"லைக்ட் இட்?'

"லவ்ட் இட் டார்லிங்!'

"சரி சரி வெளையாடுங்க!"

-தொடரும்

Thursday, October 7, 2010

வாழ்க்கை என்பது வியாபாரம்!

மனநலம சரியில்லாதவர்கள், குழந்தைகள் தவிர சாதாரண மனிதர்கள் எல்லாமே வியாபாரிகள்தான். வியாபாரினா? பண அடிப்படையில் மட்டும் இல்லை! எல்லா விசயங்களிலும் தனக்கு "இலாபம்" கிடைக்குமா என்று பார்ப்பதுதான் மனித இயல்பு. "இலாபம்" என்பது பணமாக இருக்கனும்னு இல்லை! எதைச் செய்தால் நமக்கு நிம்மதி கிடைக்கும்? எதை செய்தால் நமக்கு நல்லது கிடைக்கும்? என்பதை "intuitive" ஆக உணர்ந்து நடக்கும் வியாபாரிகள்தாம் சாதாரண மனிதர்கள்.

வியாபாரி, சுயநலம் என்கிற மேட்டரெல்லாம் ரொம்ப கெட்டவார்த்தைனு நம்ம எல்லாமே நெனச்சுக்கிறோம். நம்மனு சொலவதைவிட, நான் நினைப்பதுண்டு! ஆனா இது ரெண்டும் இல்லைனா நாம் வாழ்வதே கடினம்.

எல்லா வியாபாரிகளும் மட்டமானவர்களா இருக்கனும்னு இல்லையே! ஒரு சில நல்ல வியாபாரியும் இருக்காங்க! தொழில் தர்மம் என்பதை மனதில் கொண்டு நடக்கும் நல்ல வியாபாரிகளும் இருக்காங்க. One can make fair deals also or not? ஆனால் இரக்கமே இல்லாத மோசமான வியாபாரியும் இருக்காங்க! The "loser" usually feels, "life is not fair" when it happens to him/her. உங்களை நல்ல வியாபாரினு நெனச்சுக்கோங்க!

இதிகாசங்களில் வரும் வியாபாரிகள்!

* இராமாயாணத்தில் இராமர் வாலியை மறைந்திருந்து தாக்கி கொல்வதை சொல்லலாம்! இராமருக்கு தேவை சீதை! அவரை எப்படியாவது திருப்பிப் பெறுவது. அதற்காக அவர் சுக்ரீவன் ஹனுமான் உதவி தேவை. இந்த "நட்பு" என்பதே ஒர் "வியாபார" நோக்கத்தில் தன்னுடைய சுநலத்தால் உருவாவ்துதான். It was more like a deal. இது கதைதான் என்றாலும் இன்றை உலகமும் இதேபோலதான் இயங்குது

* மஹாபாரதத்தில், கண்ணன், கர்ணனிடம் உயிரை யாசிப்பது! நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேலே பயன்படுத்தக் கூடாது என்று அவன் அன்னையின் மூலம் சத்தியம் செய்ய வைப்பது! இதெல்லாம் என்ன? Different kinds of deals made to achieve what they want!

இல்லை, இது கதையல்ல! இராமரும் கண்ணனும் கடவுள் அப்படினா. அப்ப கடவுளே ஒரு வியாபாரிதான்!

In movies!

In Sabrina *ing Harrison Ford!

She (Julia Ormond) : "Did not you say, everything is Business?"

He (Ford): "Not me, but it sounds like me!"

I would say it is very very TRUE. Even in relationships it is a "deals" made between two people. People like Kamal are not good "businessman" and so they fail in their life and relationship!

Read somewhere,

"He is loyal but his loyalty changes from one person to another depending on the situation!"

Well, when his loyalty changes, he is not becoming disloyal to the former one? That is debatable. Actually he does become sort of disloyal to the former one! Now we need to define carefully what is loyal and disloyal? It is individual's opinion and changes person to person as well.

நம் சித்தரிக்கும் கற்பனைக் கதைகளில்கூட!

இது உண்மைதான். அகிலனின் பாவை விளக்கு கதையில் வரும் கதாநாயகன் தணிகாசலம் ஒரு சுயநலக்காரன் என்பதை அகிலன் பலமுறை அந்தக் கதையில் சொல்லியிருப்பார்! அதனால் "சுயநலம்" என்பது ஒரு அசிங்கமான ஒண்ணுனு நினைக்க வேண்டியதில்லை. அப்படியேயிருந்தாலும், அது இல்லாமல் மனிதன் வாழ முடியாது!

கடைசியா, நம்ம புத்தர்கூட

தன் மனைவியின் நிலைமையை யோசிக்காமல், தனக்கு எது முக்கியம்னுதான் போயிட்டாரு! இதில் சுயநலம் இல்லையா? நிச்சயம் அவர், அவர் செய்கையால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றி கவ்லைப் படலைனு சொல்லலாம்! புத்தரும் மனுஷன் தானே?

வாழக்கை என்பது வியாபாரம் தான். அதில் மனிதர்கள் எல்லாமே வியாபாரிகள், சுயநலக்காரர்கள் என்பது உண்மை! இதில் விதிவிலக்குனு யாருமில்லை! ஆனால் நிச்சயம் நல்ல வியாபாரிகளும் இருக்காங்க! மட்டமான வியாபாரிகளும் இருக்காங்க!

Wednesday, October 6, 2010

தேச துரோகி சாரு! மலிவு விலையில் எந்திரன் டிக்கட்!


என்னங்க, திருவாளர் சாரு நிவேதிதாவை, தேச துரோகியாக்கிவிடீங்கனு என்னோட சண்டைக்கு வராதீங்க! நான் இல்லைங்க, அவருடைய அரைகுறை எந்திரன் விமர்சனத்தில் எந்திரன் அவரை தேசதுரோகியாக மாற்றி விட்டதாக அவரேதான் சொல்லியிருக்காரு. அவரே அவருக்குக் கொடுத்துக் கொண்ட பட்டம்தான் இந்த தேச துரோகி! விபரம், அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்! இப்படியெல்லாம் "எந்திரனை" வைத்து பொழைப்பு நடத்துனுமானு கேட்டுறாதீங்க!

அதென்னங்க அது? ரஜினிகாந்த் படம் ரிலீஸ் பண்ணும்போது மட்டும்தான் இவர்களுக்கு சாமி வருது! என்னமோ சினிமாவை வச்சுதான் இவர்கள் உலகத்தையும் சமுதாயத்தையும் திருத்தப் போற மாதிரியும், அதுக்கு ரஜினிதான் குறுக்கே நிக்கிற மாதிரி ஒரே நாடகமா இருக்கு! என் நண்பன் சுரேஷூ சுரேஷுனு ஒருத்தன் இருக்கான், ரஜினி படம் வந்தா அவனுக்கு தூக்கம் வராது! ரத்தக்கொதிப்பு தொடர்ந்து 180/110 லயே நிக்கும்! ஏன் ன்னா என் நண்பர் தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு கொண்டு செய்ய முயற்சி செய்கிறவர் அது இதுனு னு ஏதோ ஒளறிக்கிட்டு திரிவாரு! சாருநிவேதிதாவும் இவரும்தான் தமிழ் சினிமாவை உலக சினிமாவாக்கி தமிழ் சமுதாயத்தை உயர்த்தப் போறாங்களாம்! இப்படி எதையாவது உளறிக்கிட்டு எதையாவது எந்திரன் பத்தி எழுதிக்கிட்டு திரிவார்கள்!

சரி, மலிவு விலையில் எப்படி எந்திரன் பார்க்கிறதுனு பார்ப்போம்! அமெரிக்காவில் முதல் நாள் முதல் ஷோ டிக்கட் $30 டாலர். அப்புறம் அந்த வீக் எண்ட் டிக்கட் $20 டாலர்! ஓரளவுக்கு போட்ட காசை எடுத்துவிட்டார்கள் பணத்தைப் போட்டு படப்பொட்டி எடுத்தவங்க! தியேட்டர் ஹவ்ஸ் ஃபுல் ஆகுதோ இல்லையோ, டிக்கட் விலையை குறைக்கவில்லை! அந்தா இந்தானு நெறைய ஷோக்களைப் போட்டு 2 .1 மில்லியன் டாலர்களை அள்ளிட்டாங்க. முதல் வாரம் முடிந்த பிறகு இப்போ வீக் டேஸ் டிக்கெட் விலை 10 டாலர் னு மலிவுவிலையில் எந்திரன் பார்க்கிறவங்க பார்க்கலாம்னு சொல்றாங்க! "என்னங்க இப்படி அநியாயத்துக்கு டிக்கட் வெலையை ஏத்தி வச்சிருக்காங்க?" னு திட்டுறவங்க எல்லாருக்கும் தேவையானது கொஞ்சம் பொறுமை! ரெண்டு வாரம் இல்லை நாலு வாரம், இல்லைனா தீபாவளி வரை பொறுமையாக இருந்தால் "நியாயமான" விலையில் டிக்கட் வாங்கிப் படம் பார்க்கலாம்! நீங்க ரொம்ப கோவப்படாம கொஞ்சம் பொறுமையாக இருங்கப்பா! அவனுக ரெண்டு பேரு இல்லை நாலுபேரை வச்சு ஓட்டிட்டுப் போகட்டும்! ந்ல்லதுதானே? இதுக்குப் போயி ஏன் அலட்டிக்கிறீங்க?

சும்மா நான் வெற்றிவேல் தியேட்டர் போனேன், விலை அநியாயமா இருந்தது ஒரு பயலும் சீந்தவில்லை, அதனால நான் படம் பார்க்கலை னு சும்மா ஒரு பதிவைப்போட்டு பொழப்பை ஓட்டக்கூடாது! சென்னையிலே 3 நாளு வசூல் 2 கோடினு படிக்கலையா? நீங்க படம் பார்க்கலைனு எவன் வருத்தப்பட்டான்? தியேட்டருக்கு உள்ளே ஒருத்தருமே இல்லை னு சின்னப்பிள்ள்ளைத்தனமா பிரச்சாரம்லாம் எதுக்கு? உங்க தகுதிக்கு ஏற்ப என்ன படத்துக்கு போய் படம் பார்த்தீங்களோ அந்தப் படத்தை பத்திப் பேசுங்கோ! என்ன புரியுதா? சும்மா கரைச்சல் பண்ணப்படாது! பெரியமனுசன் மாதிரி நடந்துக்கனும்!

ஸ்டேடியத்திலே ஃபுட்பால் அல்லது பேஸ் பால் கேம் பார்க்கப் போகும்போது போய் ஒரு பாட்டில் பியர் வாங்கினால் அதன் விலை எட்டு டாலர்! அதே பியரை வெளியே வால்மார்ட் ல வாங்கினால் 75 செண்ட்ஸ் தான். இல்லை எனக்கு ஸ்டேடியத்தில் 75 செண்ட்க்கு கொடுக்கனும்னு நம்ம ஊர் அம்பி போய் சண்டைபோட்டால் கழுத்தைப் பிடிச்சு வெளியதான் தள்ளுவானுக! அவன் செலவழிச்ச காசை எடுக்கனும்! எட்டு டாலருக்கு வாங்க ஆள் இருக்கு! நீ எட்டுடாலருக்கு வாங்கியேதான் ஆகனும்னு சொன்னாத்தான் தப்பு! அதேபோல் எந்திரன் டிக்கட்டை நீங்க 150 ரூபாய்க்கு வாங்கித்தான் ஆகனும்னு வெற்றிவேல் தியேட்டர்ல சொன்னா அவனை நானே அறைவேன்!

அப்புறம் தினமணியில் ஒரு வீணாப்போன ஆர்ட்டிக்கிள் ஒண்ணு வந்திருக்கு! ரஜினி பெரிய ஸ்டாராம் அதனால அவர் நடிச்ச எந்திரனை தீபாவளி இல்லை பொங்கலுக்குத்தான் வெளியிடனுமாம்! இப்படி ஒரு லூசுத்தனமான ஆலோசனை! ரஜினி நடிக்கிறதே 3 வருசத்துக்கு ஒரு படம்! இதிலே தீபாவளிக்குத்தான் ரிலீஸ் பண்ணனும், பொங்கலுக்குத்தான் ரிலீஸ் பண்ணனும்னு னு பேசுறது கேணத்தனமா இல்லை? இதையெல்லாம் ஒரு ஆர்ட்டிக்கிள்னு ஏதோ ஆளாளுக்கு "காப்பி- பேஸ்ட்" பண்ணிக்கிட்டு திரிகிறார்கள். என்னவோ தினமணி உலகத்திலே இல்லாத தத்துவத்தை சொன்னதுபோல!

வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு!


மூன்று கரிம வேதியியல் பேராசிரியர்கள் வேதியலுக்கான நோபல் பரிசு வென்றிருக்கிறார்கள்.

முதலில் இருப்பவர். Ei-ichi Negishi, (ஜப்பானிஸ் சிட்டிசன், ஆனால் பர்டியூ யுனிவிவேர்சிட்டியில் இன்னும் பணியில் உள்ளார். அமெரிக்கன் ரெசிடெண்ட் னு சொல்றாங்க))

இரண்டாவது படத்தில் உள்ளவர், Akira Suzuki (இவரும் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்).

கடைசியில் உள்ளவர் Richard F. Heck , இவர் ஒரு அமெரிக்கர், முதலில் ஒரு சின்ன கம்பெணியில் வேலை பார்க்கும்போது "ஹெக் ரியாக்சன்" இண்வெண்ட் பண்ணினார். அந்த ரியாக்சனை மேலும் பலவிதங்களில் "இம்ப்ரூவ்" செய்தவர்கள் சுஷுக்கியும், நெகிஷியும் ஆவார்கள்!

Monday, October 4, 2010

என்னங்க எந்திரன் இப்படி ஆகிப் போச்சு?!


எந்திரன் படம் வருவதற்கு முன்பே அதற்கெதிராக பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டு திரிந்த பதிவர்களின் முகத்தில் அறைவதுபோல் படம் வந்து இருக்கு! ஆமாங்க நானும் படம் பார்த்துவிட்டேன்! எந்திரனை கரிச்சு க் கொட்டியவர்களுக்கெல்லாம் செம ஆப்புதான் போங்கோ!

குறை சொல்லனும்னு எந்திரன் எந்திரன்னு தூக்கமில்லாமல் திரியும் சில வயித்தெரிச்சல் கோஷ்டிகளும் தேடித் தேடி கஷ்டப் பட்டு எதையாவது பிடிச்சுத்தான் குறை சொல்ல முடியும்! அதிலும் ரஜினியைக் குறை சொல்வது ரொம்ப ரொம்ப கஷ்டம்!

எந்திரன் படத்தைப் பற்றி சில சிறப்பம்சங்களை மட்டும் இங்கே தருகிறேன்.

* ஏர் ஆர் ரகுமானின் இசை ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா வந்து இருக்கு! பாடல்களிலும் சரி, பேக்-க்ரவுண்ட் இசையும் சரி! ஸ்லம் டாக் மில்லியனருக்கு பதிலா இதுக்கு ஆஸ்கர் கொடுத்து இருக்கலாம்! ரசூல் பூக்குட்டிக்கும் பாராட்டுக்கள்!

* சங்கர், ஒரு சயண்ஸ்-ஃபிக்ஷன் கதையை சாதாரண மக்களுக்குக் கூட புரியும்படி அழகா எடுத்து இருக்கிறார்.

* இந்தப் படத்தில் ரஜினிக்கு பஞ்ச் டயலாக் கெடையாது!

* ரஜினி சிகரெட் குடிக்கலை, தண்ணி அடிக்கலை!

* நெசமாவே ரஜினி, "ரஜினி"யாகவே வ்ரவில்லை! ஒரு நடிகனாக, அந்தக் கேரக்டர்களாக்த்தான் வந்து அழகா நடித்துவிட்டுப் போகிறர்ர். அதாவது முள்ளும் மலரும் காளி போலதான் இங்கே வருகிற வசீகரனும், சிட்டியும்! [உலகநாயகனே! னு நம்ம கமல் கதைக்கு சம்மந்தம் இல்லாத சுயசொறிதல் பாட்டு வரிகள் வருவதுபோல பாடல்கள் எதுவும் இதில் இல்லை!.]

* ரஜினி, மூன்று வேடங்களிலும் (விஞ்ஞானி, ரோபாட்-ஹீரோ, ரோபாட்- வில்லன்) தன்னை வித்தியாசப் படுத்தி அம்சமாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரோபோ ரஜினி நடிப்பை பாராட்டாதவன் மனசாட்சியே இல்லாத கேவலமான ஒருவன் னு அடிச்சு சொல்லலாம்!

* இன்னொன்னு, ரஜினியைவிட எந்தக்கொம்பனும் இந்த கேரக்டரை இவ்வளவு சிறப்பா செய்து இருக்க முடியாது என்று நான் சொல்லல, எல்லா விமர்சகர்களும் சொல்லியிருக்காங்க!

*இணையதளத்தில் இதுவரை வந்த விமர்சனங்கள் எல்லாமே "பாசிட்டிவா"தான் வந்திருக்கு (>90%). குறைந்தது மூன்று ஸ்டார்களாவது கொடுத்துள்ளார்கள்.

* இன்னொரு விசேஷம், சிறுவர்/சிறுமியர் பெண்கள் எல்லோரும் சேர்ந்து உக்காந்து ரசித்துப் பார்க்க முடியும் என்பதுபோல் "அசிங்கமில்லாமல்" படம் வந்திருக்கு.

* தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை, இந்திய சினிமாவில் இதுபோல் ஒரு டெக்லிக்கல் எக்ஸலென்ஸ் இதுவரை வந்ததில்லை!

* ரத்னவேலுவின் ஒளிப்பதிவு பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகளில் நல்லா வந்திருக்கு!

* தேவை இல்லாத வயலெண்ஸ் எதுவும் இல்லைங்க இந்தப் படத்தில்!

* ஐஸ்வர்யா ராய் வரும் எல்லாப்பாடல்களிலும் நடனத்தையும். இவர் நடிப்பையுமே ரசிக்க முடியுது. ஓவராக்ஷன் இல்லாமல் அழகா வந்து நடித்துவிட்டுப் போகிறார். She is certainly hot!

* ஹிந்தி, தமிழ், தெலுகு எல்லாவற்றிலும் வந்த விமர்சனங்கள் எல்லாமே ரஜினியை வானலாவ புகழ்ந்து இருக்கிறது.

* அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் கலக்சன் 2.1 மில்லியன் டாலராம்! இந்த கலக்சன் சாருக் கானுடைய மை நேம் இஸ் கானின் சாதனையை முறியடிக்கிறது

* மலேசியாவில் முதல் மூனு நாட்கள் கலக்சன் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களாம்! இதுவும் புதிய சாதனை!

* இங்கிலாந்து நாட்டில் முதல் நாள் கலக்சன் மட்டும் 50,000 ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ். வீக் எண்ட் கலக்சன் இன்னும் வரவில்லை!

* ஹிந்தியில் ரோபோ முதல் 3 நாள் கலக்சன் 8 கோடியாம்! இது பெரிய சாதனை இல்லையென்றாலும், பரவாயில்லைனு சொல்றாங்க!

* சென்னையில் முதல் 3 நாள் கலக்சன் 2 கோடிக்கு மேலே! இதுவும் புதிய சாதனை!

* ஆந்திராவில், ஹைதராபாத் ஏரியாவில் மட்டும் (64 திரையரங்குகளில் அரங்குநிறைந்த காட்சியாக ஓடி) 4 கோடி கலக்சன், முதல் மூனு நாட்கள் கலக்சன். இந்தப் படம் தெலுகு மொழியில் சந்தேகமே இல்லாமல் ஒரு ப்ளாக் பஸ்டர்தான்!

படத்தில் குறைகள் இல்லாமல் எப்படி இருக்கும்? குறைனு சொல்லப் போனா, உங்களுக்கு பிடிக்காத அனிமேசன் மற்றும் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்! ஆனால் உங்களுக்குப் பிடிக்காத இவைகள், உங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கும்! ஒரு சில காட்சிகளில் விஞ்ஞானி ரஜினியை குறைத்த தாடியுடன் காட்டி இருக்கலாம்!

மற்றபடி ஒரு தமிழ்ப் படம் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்தைப் பாராட்டலைனாலும் பரவாயில்லை, கரிச்சுக் கொட்டிக்கிட்டு இன்னும் லூசாவே எதையாவது ஒளறிக்கிட்டுத் திரிகிறார்கள் ஒரு சிலர்! அது அவன் தலையெழுத்துனு போக வேண்டியதுதான்!

எந்திரன் சாதனைகளை இன்னும் கொஞ்ச நாட்களில் மறுபடியும் பார்ப்போம்! :)