எக்ஸைல் னு சாருநிவேதிதா ஒரு நாவல் எழுதி வெளியிட்டு இருக்காருனு பல இடங்களில் படிச்சேன். என்னப்பா தலைப்பு இது எக்ஸைல்? ஆங்கில வார்த்தை எக்ஸைல்தானா இது? இல்லை போஸ்ட் மாடர்ன் தமிழா?? சரி, எதைப்பத்தி இந்தக் கதைனு ஒரு ஆர்வத்தில் அது பத்தி எதுவும் புக் ரிவியூ இருக்குமானு தேடிப் பார்த்தேன். ஆனால் சாரு கதைக்கு ரிவியூ ஒண்ணும் மாட்டல.. சரினு ஆங்கிலத்தில் exile னு போட்டுத் தேடிப்பார்த்தால் ஒண்ணு மாட்டுச்சு!
ஆனால் இந்த எக்ஸைல் நம்ம சாருவுடைய நாவல் அல்ல. ரிச்சேர்ட் பேட்டர்சன் னு ஒரு ஆளு எழுதிய த்ரில்லர். சரி என்னதான் இருக்குனு பார்ப்போம்னு வாசிச்சுப் பார்த்தால் கொஞ்சம் இண்டெரெஸ்டிங்காத்தான் இருக்கு.
அதாவது ஒரு அமெரிக்கன் யூத வழக்கறிஞர், ஒர் பாலஸ்தினிய பெண்ணோட ஒரு அஃபையர் வச்சிருந்து இருக்காரு. அதுவும் 13 வருடங்களுக்கு முன்னால.
இப்போ இவரு அமெரிக்காவில் பெரிய வழக்கறிஞராக பழசையெல்லாம் மறந்து நிம்மதியா வாழ்ந்துகொண்டு இருக்காரு. அந்த அம்மா (இவரோட எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்டுதான்) கணவருடன் அமெரிக்கா விசிட் செய்ய வருகிறதாக் சொல்லி இவரை தொடர்பு கொண்டு இருக்கிறார். இவர் அமெரிக்கா வரும் காரணம் இஸ்ரேல் ப்ரைம் மினிஸ்டர் அமெரிக்காவில் கொடுக்கும் ஒரு மேடைப் பேச்சு கேடகவோ அல்லது அது சம்மந்தமாக.
அந்த மேடைப்பேச்சு நடக்கும்போது இரண்டு தீவிரவாதிகளால் இஸ்ரேல் ப்ரைம் மினிஸ்டர் படுகொலை செய்யப்படுகிறார்!!
அந்த நேரத்தில் தன் கணவருடன் அமெரிக்கா வந்திருந்த இந்த பாலஸ்தீன பெண்மணி, ஒரு மர்டர் சஸ்பெக்ட் ஆகி, அமெரிக்காவில் இவரை அரெஸ்ட் பண்ணி விசாரனைக் கைதியாக வைத்துள்ளார்கள். இந்த ஒரு சூழ்நிலையில் தனக்கு நல்லாத் தெரிந்த தன்னுடைய மாஜி காதலனை இவரு தன் தரப்பில் வாதாடச்சொல்லி வேண்டிக்கிக்கிறார்.
தீவிர யோசனைக்குப் பிறகு, இவரும் அந்த கேஸை எடுத்துக்கொண்டு வாதாடுகிறார். அப்போது விசாரணையின்போது பல உண்மைகள் வெளியே வருகிறது..
நான் இங்கே எழுதியுள்ளது கீழே கொடுத்துள்ள ஒரிஜினல் ரிவ்யூவின் அரைகுறை தமிழாக்கம்தான். ஆனால் இதைப் படிச்சபோது எனக்கே இந்தக் கதையை படிக்கனும்னு ஆவல் வந்தது! தேடி எடுத்து படிச்சால் நான் விமர்சன்ம் கொடுக்கிறேன். உங்களுக்குப் பிடிச்சால், நீங்களும் எடுத்துப் படிச்சுப் பாருங்க!
Author: Edwen Davis — Published: Jan 21, 2007 at 7:32 pm
Richard North Patterson continues to show his mastery of the legal thriller in Exile, his latest journey into the world of crime, and the courts of America. In Exile we meet David Wolfe, a Jewish attorney, who while in Harvard law school had an affair with a Palestinian woman from the West Bank. Some 13 years later Hana Arif, the one true love of his life, contacts him again while on a trip with her husband to counter the speeches given by the Israeli prime minister, who is seeking to broker peace between Israel and the Palestinians. After a speech in San Francisco two Palestinian suicide bombers assassinate the prime minster and thus this enlightening journey into the morass of the Middle East begins.
During the investigation Hana Arif and her husband become persons of interest and have their passports confiscated by the FBI. She contacts David, a former US Prosecutor with a promising political career ahead of him, to ask that he represent her in this process. This is one of the most important decisions of David's life, because he knows how damaging it could be to his future prospects in politics. Following his heart, and ideals, he agrees to represent her at the meeting between her and the FBI. The meeting takes place on the day of the mourning for the Israeli Prime Minister, which he had planned on attending with his fiance, the daughter of a Holocaust survivor. This begins the tension that leads to the end of that relationship, adding to the stress of representing Hana.
In the course of the investigation the FBI charges Hana with being the handler of the two suicide bombers, due to the testimony of the one who survived. This leads to David appearing in a court case that is followed around the world. It takes him to Israel, the West Bank and deep into the heart of the tension between Israel and the Palestinian. The personal upheaval includes the end of the relationship with his fiance, he loss of friends, and the end of his political hopes. During the course of the pretrial actions there are discoveries that shake David to core of his identity and change his very outlook on life.
Read more: http://blogcritics.org/books/article/book-review-exile-by-richard-north/#ixzz1fDS83ZvL