Friday, September 30, 2011

புத்தர், ஏசு, காந்தி அப்புறம் நான்!

சிறுவயதில் பளிங்கு அல்லது பம்பரம் அல்லது கிட்டியோ வெளையாடும்போது என்ன தப்பு செய்தேன்னு தெரியவில்லை. ஒரு பெரியவர் வாயிலே விழுந்தேன். எப்படியோ தெரியாமல் அவர் மேலே மோதிட்டனோ, அல்லது நான் வெளையாடும் பொருள் (பந்து அல்லது பம்பரம்) அவர் மேலே பட்டுருச்சோ தெரியலை. ஆனா ஒண்ணும் பெருசா நடக்கவில்லை. அவருக்கு கோபம் வந்து என்னை "உனக்கு எல்லாம் படிப்பே வராது! மாடு மேய்க்கத்தான் போவ" னோ (ஏதோ பெரிய முனிவர் போல!), என்னமோ அடாவடியா திட்டினார். இந்த முனிவர் என்ன படிச்சிருந்தார்னு தெரியலை. ஒரு எஸ் எஸ் எல் சி முடிச்சிருக்க வாய்ப்பிருக்கு! ஆனால் ஒரு பள்ளியில் படிக்கும் வயதில் உள்ள சிறுவன் தெரியாமல் செய்த தவறு என்பதைக்கூட அறியாமல் இதுபோல் தரித்திரமாக சாபம் விடுறாரே இவரெல்லாம் என்ன பெரிய மனுஷன்? னு எனக்கு அப்பவே தோனுச்சு. பெரியவர் சாபம் என்னவோ பலிக்கவில்லை! ஆமா நான் படிச்சு கிழிச்சுட்டேன் இல்லையா? எவனாவது யாரு மேலே உள்ள கடுப்புலயோ எதையாவது சொல்லுவான். அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு "முனிவர் சொல்லிட்டாரே.." னு வீணாப்போயிடாதீங்கனு சொல்ல வர்றேன்.

அதென்னனு தெரியலை, "வாலிபால்" வெளையாடும்போது நெறைய நேரம் என்னுடைய டீம் மேட் களுக்கே எதிரா செயல்பட வேண்டியது வருது. வெளையாடுறது சும்மா பொழுது போக்குக்கு, கொஞ்சம் "காலரிகள்" எரிக்கலாமே என்பதற்காக அல்லது எக்ஸர்சைஸ்க்குத்தான், ஒண்ணும் சாதிக்க இல்லை! மேலும் எங்க டீம்ல யாரும் பெரிய "passer"ரோ "setter"ரோ,"hitter"ரோ "blocker"ரோ கெடையாது. எல்லாரும் எப்படியாவது மூனு தட்டு தட்டி அடுத்த பக்கம் அனுப்பிறதே பெரிய சாதனையா நெனைக்கிறவங்க.. ஆனால் எப்படியாவது, எப்படியாவது ஜெயிச்சே ஆகனும்னுதான் ஆடுவாங்க பாவம். நெறைய நேரத்தில் எதிராளி அடிக்கும் பந்து எங்க பக்கத்தில் "லைன்" ல விழுந்தாலும் அடிச்சு அது வெளியே போனதாக (அவ்ட்) கேவலமாகப் பொய் சொல்லுவாங்க! ரொம்ப பெரிய பெரிய ஆட்கள் இவங்க எல்லாம்! ஏன் இப்படி சிறுபிள்ளைத்தனம்?? எப்படியாவது செயிக்கனும் இல்லையா? ஆனால் நியாயஸ்தன் ஒருத்தன் இருக்கேன் இல்ல? நான் இல்லை "இன்"னு சொல்லி என் டீம் மெம்பர்களிடம் கெட்ட பேர் வாங்கி என் எதிராளிகளிடம் நல்ல பேர் வாங்கவேண்டி வரும். ஒவ்வொரு சமயம் எல்லாரும் ஒரு மாதிரியாப் பார்ப்பாங்க! இவனுக்கு வெளையாடவும் தெரியவில்லை, இப்படியும் நியாயம் பேசி உபத்திரவம் பண்ணுறான் இவன்னு! னு சொல்ற மாதிரி இருக்கும். ஒருவேளை எல்லாருமா சேர்ந்து நம்மள அனுப்பிட்டா? இருக்கவே இருக்கு டென்னிஸ்! ஒரு செக்ஸி பார்ட்னெர் கெடச்சு இருக்கார்! :-))) ஆனால் இது அவுட்டோர் வெளையாட்டு என்பதால் ஒரு 4-5 மாதம்தான் வெளையாடமுடியும்! :(. என்ன பார்க்குறீங்க? வாலிபால் இண்டோர் வெளையாட்டுதாங்க, இங்கே எல்லாம்!

அதென்ன புத்தர், ஏசு, காந்தினு என்ன அவங்களோட உன்னையும் சேர்த்துக்கிட்டேன்னு கேக்கிற/பாக்கிற மாதிரி தெரியுது?

புத்தர் புத்தமதத்தை ஆரம்பிச்சு, தன் பொண்டாட்டி பிள்ளையெல்லாம் விட்டுப்புட்டு வந்து எவ்வளவு மக்களைக்கவர்ந்து, இந்தியா சைனானு புத்த மதத்தை வளர்த்து..அப்புறம் ஜீஸஸ்.. அவருக்கு எம்மாம்பெரிய மக்களைக் கவரும் சக்தி இருந்துச்சு? தன் போதனைகளை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை எத்தனை மக்கள்.. அப்புறம் நம்ம காந்தி, அஹிம்ஷா முறையில் போராட்டம்னு ஒரு கண்சப்ட்டை உருவாக்கி உலகலவில் மஹாத்மானு பாராட்டுப்பெற்றவர்.. ஆமா எப்படிங்க இவங்க எல்லாம் இது மாதிரி மத்தவங்கள தான் நினைப்பதை, தன் கருத்தை சரி என்று நம்ப வைக்கிறாங்க? ஏன்னா நான் சொல்றதையெல்லாம் ஒரு பயகூட கேக்க மாட்டேன்கிறான். :-( ஆனால் இவங்க சொல்றத கோடிக்கணக்கானவர்கள் நம்பினாங்க, நம்புறாங்க! ஒருவேளை இது ஒரு மாதிரியான தொத்து வியாதியா? அதாவது ஒரு ஆளு நம்பினால், அதைத்தொடர்ந்து எல்லாருக்கும் அந்த "நம்பிக்கை" தொத்திக்குமா? ஆனா ஒண்ணுங்க, புத்தர் கருத்தை இந்துக்கள் ஏத்துக்க மாட்டாங்க. ஏசு கருத்தை, போதனைகளை இந்துக்களும், முஸ்லிம்களும், யூதர்களும் ஏத்துக்க மாட்டாங்க. காந்தியை இந்து மத வெறியர்களே நெறையப் பேரு ஏத்துக்கலை, அப்புறம் எப்படி கிருத்தவர்களும், இஸ்லாமியர்களும் ஏத்துக்குவாங்க? என்னதான் இவங்களுக்கு நெறைய பின்பற்றுவர்கள் இருந்து..இவங்க நெறைய சாதிச்சு இருந்தாலும் நம்ம லெவெலுக்கு இவங்க எப்படிங்க வரமுடியும்? நெனச்சதை பேசி, உணர்ச்சிகளை வார்த்தைகளாக்கி அள்ளி எறிய இவங்களுக்கு ஒரு இணையதளம் எல்லாம் இல்லையே? அப்புறம் நம்ம ப்ளாக் followers மாதிரி அவங்களுக்கு 200 followers ம் கெடையாது பாருங்க! :) இப்போ சொல்லுங்க! யாரு பெரிய ஆளு? :-)))

Wednesday, September 28, 2011

ஜானகிராமனின் சாக்கடையில் சந்தனம்

ஜானகிராமனின் சிறுகதை ஒன்று.. ஒரு கல்யாணம் ஆகாதவன், மணமான இன்னொருத்தி மேல் காதல் கொண்டு காமம் கொள்ள ஆசைப்படும் ஆபாசமான ஒரு கருவைக்கொண்ட கதை. இப்படிப்பட்ட ஒரு கதையில் வரும் சில அழகான விசயங்கள்.


“டெல்லியில் படித்தமடையர்கள் எத்தனை லக்ஷம் பேர் இருக்கிறார்கள் என்று கணக்குப் பண்ணிக்கொண்டே வருகிறேன்” என்றான் திடீரென்று.

“என்னது!”

“ஆமாம், ஒரு மணி நேரமாக பஸ், டாக்சி ஏதும் கெடைக்காமல் நின்றேன். ஒரு சீக்கியன் ஸ்கூட்டரை நிறுத்தி “போறபோது நின்றீர்கள், வரும்போதும் நிற்கிறீர்கள்”னு என்னை ஏற்றிக்கொண்டான். உள்ளே அவன் பெண்டாட்டி, குழந்தைகள் பெட்டிகள் பிரசவத்திற்குப் போய் திரும்புகிறவளை ரயிலடியிலிருந்து அழைத்து வருகிறான். அவள் பக்கத்திலேயே என்னை உக்கார்த்தி என்னைக் கொண்டு விட்டுவிட்டுப் போனான். சீக்கியர்கள் புத்தி இல்லாதவர்கள் விகடத்துணுக்குகிற டெல்லி முட்டாள்களின் ஞாபகம் வந்துகொண்டேயிருக்கிறது. பண்பாடு வளர்ச்சி என்ற பாபங்களை வளர்த்து அதிலே உழல்கிற பன்றி இந்த நகரம்” என்றான் அவன். குரல் உயர்ந்து கொண்டிருந்தது.

“உண்மைதான். டெல்லியில் வேலை குறைச்சல். யாரைக்குறை சொல்லலாம் என்று கண்ணில் எண்ணை போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள். சீக்கியன் தன் வேலையைத்தான் செய்துகொண்டிருப்பான். மற்ற சோம்பேறிகளைப் பார்க்க அவனுக்கு நேரமும் இல்லை, மனசும் இல்லை. அதுதான் அவன் தலையில் மிளகாயை வைத்து அறைக்கிறார்கள். ஆனால் அவன் இவர்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. என் தங்கை ஒரு தடவை பிரேஸ்பூர் போய்க்கொண்டிருந்தாள். சாப்பிட்டுவிட்டு ஒரு பாக்கைக் கடித்தவளுக்கு புரைஏறி, மாரடைப்பு வந்துவிட்டது. மூச்சுமுட்டி, உயிர்போய்விடும் போலாகிவிட்டது. மேலே படுத்திருந்த சீக்கியன் குதித்து தலையைத் தட்டி, மார்பைத் தடவி, எப்படியோ மூச்சை சுய நிலைக்குக் கொண்டுவந்துவிட்டான். அவளுக்கு மேலெல்லாம் வியர்த்துக்கொட்டி, களைத்துவிட்டது. இரண்டுமணி நேரம் அவளுக்கு பணிவிடை செய்து தைரியப்படுத்தினானாம் அவன். அவர்கள் நிஜமான மனிதர்கள்” என்றாள் மாலி.

ஜானகிராமனின் "மனநாக்கு" நீங்க படிக்கலைனா கட்டாயம் படிங்க!

Tuesday, September 20, 2011

எஸ் பி பி சரண் சோணாவை கற்பழிக்க முயன்றாரா?!

மங்காத்தா வெற்றிவிழா பார்ட்டில எஸ் பி சரண் தன்னிடம் தப்பா நடந்துக்கிட்டாருனு நடிகை, அதுவும் கவர்ச்சி நடிகை சோனா தைரியமாப் போயி போலிஸ்ல ரிப்போர்ட் பண்ணியிருக்கார். நம்மாளுகளுக்கு கவர்ச்சி நடிகைனா தேவடியாள்னு நெனப்பு! நம்ம மூடஉலகம் பூராம் அப்படி நெனைக்கும்போது, இவன் ஏன் கையை வைக்க மாட்டான்? சோனாவின் இந்த செயல் நெஜம்மாவே பாராட்டக்கூடிய செயல். பொதுவா சினிமா உலகில் இது மாதிரி நடந்துக்கிட்டா "நடிகைதானே?" அதுவும் "கவர்ச்சி நடிகை" என்பதால் பொறுக்கித்தனம் செய்றதையெல்லாம் யாரும் பெருசாக்கிறது இல்லை! இதை வெளியே சொன்னால் இந்த ஆம்பளைங்க உலகத்தில் நமக்குத்தான் அசிங்கம். உடனே " நீ என்ன பெரிய பத்தினியா?" னு கேப்பானுக! இது அசிங்கமான ஆம்பளைங்க நெறைஞ்ச உலகம்னு தட்டிவிட்டுட்டு போயிடுவாங்க. ஆனா நடிகை சோனா வித்தியாசமாப் போயி ரிப்போர்ட் பண்ணியிருக்காரு.

எஸ் பி பி பேரைக்கெடுக்க வந்து பொறந்திருக்குபோல இந்தத் தறுதலை! If he had jerked off before going to the party he would have kept his hands off another woman. Poor bastard, now he is all fucked up! Now that it has been brought up to public, next time this idiot will learn how to behave in a party!

இப்போ எஸ் பி பி சரண் என்கிற இந்த இந்த யோக்கியன் சொல்றாருனா, அவரு எதுவும் தப்பாவே நடக்கலையாம்! இந்தம்மா சோனா சொல்றதெல்லாமே பொய்யாம்! ஏன் கொஞ்சம் மப்பு அதிகமாயிடுச்சு என்ன செஞ்சேன்னு தெரியலை, சாரி னு சொன்னால் என்ன?

கூடியசீக்கிரம் நடிகை சோனாவுக்கு தெரியும்! நண்பன் எவன், உதவுவான் னு நம்புனவன் எல்லாம் கழுத்தை அறுத்துட்டானுகனு. ஒருவேளை யாரும் "கேமரா" வச்சு படம் எடுத்து இருந்தாலேயொழிய இந்த "சரண் லீலைகளையெல்லாம்" சோனாவால் நிரூபிக்கிறது கஷ்டம்.

நடிகை சோனாவுக்காக சில பாடல் வரிகள்!

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்!

Never ever trust any man! They are all bastards!

உனக்கென்ன தெரியும்? நீ என்ன அந்த பார்ட்டிலயா இருந்த? எப்படி எஸ் பி பி சரண் மேலே தப்புனு சொல்லாம்?னு நீங்க கேக்கலாம்தான்.

எல்லாம் இந்த ஆம்பளைங்க பத்தி ஒரு யூகம்தான்! எனக்கென்னவோ, அந்த ஆளு, எஸ் பி பி சரண் தான் பொய் சொல்றான்னு தோனுது. தண்ணியடிச்சுட்டு நிச்சயம் சோணாவிடம் வரம்பு மீறி இருப்பான்! ஒண்ணுமில்லாததுக்கு எல்லாம், அதுவும் ஒருவன் பலர் முன்னால என்னிடம் தப்பா நடந்தான்னு போய் போஸிஸ் ஸ்டேஷனல சொல்லுவாங்களா என்ன? இவ்ளோ பெரிய கூட்டத்திலே பண்ணியதுக்கே இல்லைனு சொறான். இவனிடம் தனியா மாட்டியிருந்தால் என்ன சொல்லுவான்? நான் அங்கேயே போகலை, சோணானா யாரு? னு சொல்லுவான்.

அவனாவா சொல்றான்? அவன் "லாயர்" சொல்லியிருப்பான். "நான் எதுவுமே பண்ணலைனு சொல்லு! மற்றதை நான் பார்த்துக்கிறேன்"னு! உடனே லாயர் சொன்னதை அப்படியே இந்த முண்டம் வந்து சொல்லுது!

இந்த கேஸு எப்படி முடிஞ்சாலும், அட் லீஸ்ட் இனிமேல் கண்டவன், கண்டவ மேலே, கண்ட இடத்தில் கை வைக்கக் கொஞ்சம் பயப்படுவான்னு நம்புவோம்!

Saturday, September 17, 2011

மரண தண்டனையும் உலக மகா ஒற்றர்களும்! (1)

நீங்க அமெரிக்கக் குடிமகன்/ள் ஆகும்போது, உங்களிடம் நீங்க எப்போவாவது "கம்யூனிஸ்ட் பார்ட்டி" ல இருந்து இருக்கீங்களா? னு கேட்கப்படும். ஏன் இப்படி ரஷ்யானா இவங்க எல்லாரும் கரிச்சுக் கொட்டுறானுக?னு நமக்கு தோனும். சினிமாலகூட"ரஷ்யன் ஸ்பை" னு வச்சு படம் எடுக்கலைனா ஹாலிவுட் படங்களுக்குப் பொழைப்பு ஓடாது அப்படி இப்படினு நெனைக்கலாம். ஆனால் உண்மை என்னனா, அமெரிக்காவில் நெறைய ரஷ்யன்ஸ் "ஸ்பை" பண்ணியிருக்காங்க! பிடிபட்டும் இருக்காங்க! அதுக்காக நான் அமெரிக்கன்ஸ் ரஷ்யால ஸ்பை பண்ணலை, எல்லாம் யோக்கியர்கள்னு சொல்லல!

கீழே உள்ள படங்கள் சில பிரபல ஒற்றர்களின் படங்கள்!

இவருடைய பேரு Mata Hari (Born: 1876; Died: 1917) . ஒரு நடனக்காரியாம். டச்சு நாட்டில் பிறந்த இவர் ஜெர்மனிக்காக முதல் உலகப்போர் சமயத்தில் ஒற்றுவேலை செய்தாராம். கண்டுபிடிச்சு என்ன செஞ்சாங்கனு தெரியுமா? இவர் "கில்ட்டி"னு ஊர்ஜிதம் ஆனதும், சுட்டு கொன்னுட்டாங்களாம்! அப்போ இவருக்கு வயது 41!

Julius and Ethel Rosenberg!இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து ரஷ்யாவிற்காக அமெரிக்காவிலே இருந்துகொண்டு ஒற்றுவேலை செஞ்சாங்களாம்! கண்டுபிடிச்சு, கில்ட்டினு தெரிந்தவுடன், மின்சார நாற்காலில வச்சு எக்ஸெக்யூட் பண்ணியிருக்காங்க!

Born:

September 28, 1915 1915-09-28 (Ethel)
May 12, 1918, 1918-05-12 (Julius)

Died (Executed):

June 19, 1953(1953-06-19) (aged 37) Ethel
June 19, 1953(1953-06-19) (aged 35) Julius

Aldrich Hazen Ames (born May 26, 1941):

இவரு அமெரிக்காவில் சி ஐ எக்கு வேலை பண்ணிக்கிட்டு இருந்தாராம். எப்படியோ இவர் கே ஜி பி (ரஷ்யா) க்கு தகவல் கொடுப்பதை கண்டுபிடிச்சுட்டாங்க. அப்புறம் விசாரிச்சு இவரு குட்டு அம்பலம் ஆனதும் பிடிச்சு உள்ள போட்டுட்டாங்களாம். இன்னும் ஆயுள்தண்டனை கைதியா அமெரிக்கால இருக்காராம்!

4. Giacomo Casanova Born: 1725; Died: 1798:

இத்தாலியைச் சேர்ந்தவராம் இவர். பார்த்தா ஞானப்பழம் மாதிரி இருக்க இவரு, அந்தக்காலத்துல பெரிய காதல் மன்னனாம். ஸ்பை பண்ணினாரோ என்னவோ ரொம்ப பொண்ணுங்களை மயக்கி அவங்களோட வாழ்ந்தாராம்! இவர் வாழ்க்கை பற்றி ஒரு புத்தகம் வேற எழுதி இருக்காராம். இவரு உலகத்தில் க்ரேடஸ்ட் லவர்னு பேர் போனவராம்! ஒற்றுவேலை செஞ்சதாலே இவரைப் பிடிச்சு மரணதண்டனை கொடுக்காமல் நாடுகடத்திவிட்டாங்களாம். கடைசியில் ஒரு நூலகத்தில் வேலை செய்து பொழைப்பை ஓட்டினாராம்.

-தொடரும்Monday, September 12, 2011

திருடிய காதல் கவிதைகள்..

இதைப் படிச்சுட்டு சிரிக்கக்கூட செய்யலாம்.. ஆனால் எல்லாரும் சிரிக்கிறது இல்லை! "love quotes" எல்லாம் தோண்டி எடுத்து அதை கவிதைமாதிரி எழுதித்தந்து இருக்கேன்.

If I never met you, I wouldn't like you.
If I didn't like you, I wouldn't love you.
If I didn't love you, I wouldn't miss you.
But I did, I do, and I will.

When I saw you, I was afraid to meet you...
When I met you, I was afraid to kiss you...
When I kissed you, I was afraid to love you...
Now that I love you, I'm afraid to lose you.

When you smiled you had my undivided attention.
When you laughed you had my urge to laugh with you.
When you cried you had my urge to hold you.

It hurts to love someone and not be loved in return..
But what is the most painful is to love someone and never find the courage to let the person know how you feel.

I'm not supposed to love you..
I'm not supposed to care..
I'm not supposed to live my life wishing you were there..
I'm not supposed to wonder where you are or what you do..
I'm sorry I can't help myself, I'm in love with you...

ஆமா எதுக்கு இதெல்லாம்? இந்த தளத்தின் பெயர்..timeforsomelove இல்லையா? :) அதுக்காக இப்படி திருடியா கொடுக்கிறது?னு கேக்காதீங்க! ஒரு சில நம்ம மக்கள் மாதிரி இதை தமிழாக்கம் செய்து இது என் கவிதைனு சொல்லி நான் "க்ரிடிட்" எடுக்காமல் இருக்கதுக்கு என்னை நீங்க பாராட்டனும்! :)


Thursday, September 8, 2011

செக்ஸ் டார்ச்சர்! பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இந்த காஜல் அகர்வாலு காசுக்காகவோ, புகழுக்காகவோ வந்து டாப்லெஸா போஸ் கொடுத்துப்புட்டு, நான் அப்படி எதுவும் போஸ் கொடுக்கலைனு பொய் சொல்லிக்கிட்டுத் திரிறார். கொஞ்சக் காலத்துக்கு முன்னாலே ஐஸ்வர்யா ராய் பச்சன் சி பி எஸ்ல 60 மினுட்ஸ்ல வந்து "லிவிங் டுகெதெர்" சினிமால கிஸ் பண்ணுறதெல்லாம் ரொம்ப ரொம்ப தப்புனு சொல்லி காமெடி பண்ணினார். நடிகர் நடிகைகள் இப்படி ஒரு "பத்தினி வேஷம்" போட்டுக்கிட்டு ஒரு பக்கம் இருக்க, சமீபத்தித்தில் நக்கீரனில் வந்த செய்திகளில் பாதிக்கு மேலே எல்லாம் செக்ஸ் டார்ச்சராத்தான் இருக்கு!

* அடைந்தே தீருவேன்: தோழியின் கணவரை காதலிக்கும் பெண் போலீஸ்: பாதிக்கப்பட்ட இளம்பெண் கணவருடன் புகார்.

ஒரு திருமணமான பெண் இன்னொரு தம்பதிகளின் குடியைக்கெடுக்கும் வேடிக்கையான கதை இது!


* செக்ஸ் டார்ச்சர்: அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி

தலைமை ஆசிரியர். என்னத்தை சொல்ல?
* பள்ளி மாணவியை கடத்திய ஆசிரியர் கைது!

இந்தாளூ படமும் போட்டு இருக்காங்க. நெத்தியிலே குங்குமம். பெரிய கடவுள் பக்தர் போல இந்தப் பொறுக்கி! இந்தப் பொறுக்கிக்கு ஏற்கனவே ரெண்டு மனைவிகளாம். இந்த மாதிரி டீனேஜரை அப்யூஸ் பண்ணுறவனையெல்லாம் தூக்கிலே போடனும்.* காப்பகத்தில் செக்ஸ் கொடுமை! மாணவர்கள் அதிர்ச்சி தகவல்!
* காதலியின் முகத்தை பார்க்க ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடித்து கல்லூரிக்கு சென்ற வாலிபர் கைது.

யாரோ ஒரு அண்ணே ரொம்ப ரொமாண்டிக்கா ஏதோ பண்ணியிருக்கு. :))))

* கள்ளக்காதலி கொலை: கள்ளக்காதலன் தற்கொலை முயற்சி.

இவரையும் கொன்னுபுடுவானுகனு பயமோ?

இப்போ செக்ஸ் செக்ஸுனு வரும்போது உணர்வுகளை மூடி மறைக்காமல் கலாச்சாரம், பண்பாடு எல்லாத்தையும் தூக்கி எறிந்துவிட்டு உடல், மனம்போகும் போக்குப்படி போனால் நம்ம நாடு முன்னேறிவிடுவோம்னு ஒரு சிலர் விவாதிக்கிறாங்க. இன்னொருபக்கம் அது உண்மை இல்லப்பூ.. நம்ம நாட்டுக்கு இதெல்லாம் ஒத்துவராதுனு அடிச்சுச்சொல்லி கட்டுப்பாடு முக்கியம்னு கலாச்சாரக் காவலர்கள் சொல்றாங்க. ஒரு சில கன்செர்வேட்டிவ்ஸ் குஷ்பு, சுஹாஷினியையெல்லாம் விட்டுத்தள்ளி கல்யாணத்துக்கு அப்புறம் செக்ஸ்னு வச்சிக்கிறதுதான் நல்லதுனு இன்னும் தன் பெண் குழந்தைகளை பொத்திப் பொத்தி வளர்த்து அவள் மேஜர் ஆகுமுன்பே கல்யாணம் பண்ணி வச்சிடுறாங்க.

பொதுவாக ப்ரிமாரிட்டல் செக்ஸ் அவசியம், தவிர்க்க முடியாதது..அதைக் கட்டுப்படுத்துவதாலதான் நம்மாளு அலைகிறான்னு சொல்றதும் சரியா என்னனு தெரியலை. சரி, இந்த இந்த ப்ரிமாரிட்டல் செக்ஸ் விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

செக்ஸ் சம்மந்தப்பட்ட கெட்ட நடத்தை மேட்டர்களில் பெருந்தவறு செய்றவங்க எல்லாம் இந்த பள்ளி ஆசிரியர், மற்றும் அந்த போஸிஸ்காரம்மா மாதிரி கல்யாணம் ஆன நடுவயதில் உள்ளவர்கள்தான். இவங்களுக்கு எப்படி "பாடம் நடத்தி" நல்வழியில் கொண்டு வருவது?
பொதுவாக செக்ஸ்க்காக மற்றவர்களை டார்ச்சர் பண்ணுறவங்க, டீனேஜர்களை அப்யூஸ் பண்ணுறவங்கள எல்லாம் வெளிக்கொண்டுவந்து சட்டப்படி அவங்களை தண்டிக்கனும்னு எந்த ஆம்பளையும் போராடமாட்டான். நம்ம அன்னா ஹாசரேயையும் சேர்த்துத்தான்!

அதனால நம்ம தாய்க்குலங்க என்ன செய்யனும்னா ..

ஜெயலலிதா முதல்வராக உள்ள இந்தப்பொன்னான காலத்தில் பொங்கி எழுந்து முக்கியமாக தவறு செய்றவன் தன் மகனாகவோ, கணவனாகவோ, தந்தையாகவோ, நல்ல நண்பனாக இருந்தாலும்கூட இரக்கமே இல்லாமல் அந்தக்குற்றவாளி தண்டிக்கப்படனும்னு நெனைக்கும் நல்ல மனப்பக்குவம் வரனும்! அப்படி வந்தாலேபொழிய இந்த நாய்கள் ஒருபோதிலும் ஒழியாது என்பது என் நம்பிக்கை! மேலும் மிடில் ஈஸ்ட்ல மாதிரி இதுபோல பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் கொடூரமாக கொண்டுவரனும். அப்படி தண்டனைகள் கொடூரமாக இருந்தால்தான் இதை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த முடியும்!

Monday, September 5, 2011

ஆத்தாவை உச்சநீதிமன்றம் அன்புடன் அழைக்கிறது!

எம்ஜிஆர் பாதி சொத்து கொடுத்தாரு, அப்புறம் அவரு ஆவி பாதி கொடுத்த்துச்சு, அப்புறம் அஹோரிகள் வந்து பலகோடிகள் கொடுத்தாங்க னு சொல்ற கதையெல்லாம் உச்சநீதி மன்றத்தில் வந்து ஆங்கிலத்தில் சொல்லுங்கோ ஆத்தானு உச்ச நீதிமன்றம் ஆத்தாவை அழைக்கிறது!

--------------
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்: உச்சநீதிமன்றம்

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும். வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மனு செய்துள்ளார் ஜெயலலிதா. வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் கோர்டில் நடந்துவருகிறது. இந்த வழக்கிலிருந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஏற்கனவே ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் பெங்களூர் கோர்ட் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.


இத‌னை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர் கோர்ட்டில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கூறுவது வழக்கை தாமதப்படுத்தும் செயல். விலக்கு அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதுநக்கீரன்ல பொய் செய்தியாத்தான் வரும்னு பிதற்றும் ஆத்தா ஜால்ராக்களுக்காக!

Wealth case: SC asks Jaya to appear in court


On a day when Supreme Court rejected Jayalalithaa's plea for exemption from personal appearance before a court in Bangalore in a wealth case, she declared her assets inside the Tamil Nadu assembly, though only to satisfy the curiosity of a member. "While filing my nomination for the
Assembly elections I had in April declared all my assets which were a total of Rs 51.40 crores. After this I have not acquired any property," she said in reply to a question posed by Republican Party of India MLA CK Thamilarsan.

Thamilarasan, who had contested as part of the AIADMK alliance, cited a newspaper report on declaration of assets by union ministers and wondered whether Jayalalithaa, "who answered only to her conscience', would follow suit. The media reports had suggested that the chief minister had not declared her assets.

Ridiculing the media reports, the chief minister said "there was nothing new in it as I had already declared my assets while contesting the assembly elections as per the Election Commission rules and this had been reported widely in the media."

In an affidavit filed with the Election Commission along with nomination papers for contesting assembly polls from Srirangam constituency, Jayalalithaa declared her assets that include Rs 13.03 crore in movable assets and Rs 38.37 rore in immovable assets comprising 14.5 acres of grapeyards in Andhra Pradesh and Rs one crore in a tea estate in Kodanad in Nilgiris district.

"After assuming charge as the chief minister, I have not bought any property," she declared.

In the Supreme Court, Jayalalithaa lost a legal tussle when the apex court rejected her plea for allowing video conferencing with an observation that it seemed like a move to delay proceedings and gave her counsel, Harish Salve, a week's time to inform the court of a date suitable to hold proceedings in the Bangalore court.

"If you want we can direct the trial court to provide you with adequate security and allow the proceedings on the day of your choice," the bench told Salve.

The wealth case against Jayalalithaa dates back to 1997 and was shifted out of Tamil Nadu after DMK apprehended that the trial would proceed fairly in the state after she came back to power in 2001. Allegations are that Jayalalithaa had acquired assets disproportionate to her known sources of income - with Jayalalithaa, her friend Sasikala and three of her relatives accumulating assets totaling Rs 62 crore between 1991 and 1996.
-----------

நன்றி: நக்கீரன், ஹிந்துஸ்தான் டைம்ஸ்!

Friday, September 2, 2011

அன்னா ஹாசாரேயும் விஜயும்!

அன்னா: "வாங்க விஜய்ஜி! எளிமையான என் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு கொடுக்கிறதுக்காக இப்படி ஏரோப்ளேன்ல ஏறி இவ்ளோ காசு செலவழிச்சு அதும் 4 ரசிகர்களையும் இழுத்துட்டு வந்திருக்கீங்க? அங்கேயே இருந்து ஆதரவு கொடுத்து இருக்கலாமே?"

விசய்: "தல" தப்பா நெனச்சுக்கதீங்க. நம்ம அப்புச்சிதான் என்னை எப்படியாவது முதல்வராக்கனும்னு ஒரு முடிவோட இருக்கு. இப்படி ஏதாவது டெல்லிக்கு வந்து உங்களை பாராட்டுறாப்பில செஞ்சாத்தானே நாளைக்கு நம்ம அப்புச்சி கனவு நனவாகும்? அங்கேயே எல்லா நடிகரோட நடிகரா நானும் நின்னா எப்படி என் மக்களை கவர்றது?"

அன்னா: "உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டதில் சந்தோசம். ஆமா, நீங்க வாங்கிற சம்பளம் 20 கோடினு சொல்றாங்க. எல்லாம் வெள்ளையாத்தானே வாங்குறீங்க?"

விசய்: இல்ல தல, வெக்கத்தை விட்டு சொல்லுறேன் பாதிக்குமேலே கறுப்பாதான் தருவேங்கிறான். நான் கறுப்பு வேண்டாம் வேண்டாம் அன்னா கோவிச்சுக்குவாருனு சொன்னால் எவன் கேக்கிறான்? அப்போ வெள்ளையா ரெண்டு கோடி மட்டும் தர்றேன், அதை வச்சு நடிச்சுட்டுப் போங்கிறான்.அதை வச்சு என்ன பண்றது தல? நீங்க இப்படி ஏதாவது "மசோதாவை" அமல்ப்படுத்தினால்தான் எல்லாத்தையும் வெள்ளையா வாங்க முடியும்."

அன்னா: " Jan Lokpal Bill பத்தி, லோக்பால் பில் பத்தியெல்லாம் உங்களுக்கு எல்லாம் தெரியும்தானே?"

விசய்: அய்யோ தல, லோக்பாலாவது, பில்லாவது! நண்பன், வேலாயுதம்னு ரொம்ப பிஸியாயிருக்கேன் தல. அதான் பல்லு பில்லெல்லாம் கரைத்துக்குடித்த நீங்க "லஞ்சம், ஊழல் ஒழிப்பு"னு என்ன செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும், தல.

அன்னா: "உங்களை அனுப்பி வச்ச உங்கப்பாவுக்காவது தெரியுமா?"

விசய்: நம்ம அப்புச்சியோட ஒரே மூச்சு என்னை எப்படியாவது முதல்வராக்கிப்புடனும்." Jan Lokpal Bill பத்தி அதுக்கென்ன தெரியப்போவுது? அப்புறம் வேலாயுதம் கட்டாயம் பாருங்க. அதுவும் லஞ்சம் ஊழல் ஒழிப்பு சம்மந்தமான படம்தான். வரட்டா தல!

அன்னா: பார்க்கலாம் விஜய்ஜீ!