Tuesday, December 15, 2015

மூத்த பதிவர் நம்பள்கிக்கு என்ன வேணும்?! இதோ!

பதிவர் நம்பள்கி சிம்புவுக்கு சொம்பு தூக்குகிறார். அடிக்கடி சன்னி லியோனுக்கு கூஜா தூக்குவார். யாரு மேலேயும் இவருக்கு கரிசனம் கிடையாது! பதிவெழுதுறேன்னு எதையாவது விதண்டாவாதம் செய்ய வேண்டியது! அவ்வளவுதான்! சரி,  அவருக்கென்றுள்ள கருத்துச் சுதந்திரம். அதை கேக்க எவனுக்கும் உரிமை இல்லை!

இப்போ என்ன சொல்றார்னா சிம்புவின் பாடலுக்கு எதிராக பின்னூட்டமிடுறவங்க, சிம்புவின் பாடலை கடுமையாக விமர்சிப்பவர்களைப் பற்றி  விமர்சிக்கிறார்.

மொதல்ல, இதே ஆளுதான்,  சிம்பு சொன்ன வார்த்தை புண்ணாக்குதான்னு வியாக்யாணம் பேசி ஒரு பதிவு எழுதினார்.

இப்போ ரெண்டு நாளு முன்னால் கொட்டிய குப்பையை மறந்துட்டு..சிம்பு சொன்னது "புண்ணாக்கு" இல்லை, அதிலென்ன தப்பு? என்பதுபோல் சிம்புவிற்கு வக்காலத்து வாங்கி ஒரு பதிவு.

அடுத்தடுத்து முரணாக எழுதும் இவர்  பதிவிலிருந்து  இவர் தரம், மேலும் வேலை வெட்டியில்லாத ஆளு இவரை எல்லாம் கண்டுக்கக்கூடாதுனு இவர் தன்னைப் பற்றித்தெளிவுபடுத்தினாலும். இவரைப் பற்றி வரும் சிந்ந்தனைகள் சில..

இவருக்கு என்ன வயசுனு தெரியலை. பார்த்தால் ஒரு ரிட்டைர்ட் ஆகி, சோஸியல் செக்குரிட்டி வாங்கிக்கொண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் போயி வந்துகொண்டு இருப்பவர்போல தோனுது . சரி இருந்துட்டுப் போகட்டும்.

இவர் தன் பதிவில் தனக்குத்தானே இட்டுக்கொண்ட பின்னூட்டம் இது.


சிம்புவை எதிர்த்து போராடிய கலாசாரக் காவலர்களே....இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சிம்பு beep செய்த so and so அப்படிப் படங்கள் அதுக்கும் மேலே இருக்கு! சிம்புவிர்ற்கு எதிராக கூவின பதிவர்கள், பின்னூட்டமிட்டவர்கள், நாம் போற்றும் பெண்மை வீடியோவில் வேர்வை சிந்த உழைப்பதை எதிர்த்து ஒரு பதிவாவது தமிழ்மணத்தில் போடுவார்களா?


இதிலிருந்து என்ன தெளிவு படுகிறது என்றால்..இவருக்கு எவனோடையாவது சண்டை போடணும் இப்போ! அதாவது இவரு  ஏதாவது குப்பையை அள்ளிக்கொண்டு வந்து கொட்டுவாரு. உடனே அவன் அவன் இவரு "டாக்டரு" அமெரிக்காவில வாழ்ந்து கிழி கிழினு கிழிச்சவருனு மதிச்சு, அந்தக் குப்பையை விமர்சிச்சு நம்ம பதிவெழுதணுமாம்! அதான் இவர் எதிர்பார்ப்பு!

சரி எழுதிப்புடுவாம்!!

********************

நம்பள்கி!

நான் கலாச்சாரக் காவலன் எல்லாம் இல்லை. ஆனால் உங்களைவிட தரத்தில் ஒருபடி மேலேனு என்னை நானே நிறுத்திக்கிற ஒரு பொறுக்கிதான். நீங்க அப்போ என்னைவிட மட்டமான ஒரு பொறுக்கினு புரிஞ்சுக்கோங்க!

ஆமா, நான் சிம்பு பாடலுக்கு எதிராத்தான் கருத்துச் சொல்லிக்கொண்டு இருக்கேன். நான் மட்டும் இல்லை, சிம்பு அம்மாகூட "சிம்பு அப்படி பாடி இருக்க மாட்டான்" னுதான் சொல்லுவாரு. ஆக, உங்களுக்கு எதிரா இங்கே நிக்கிறது சிம்பு அம்மாவும்தான்.

ஆமா, உங்களுக்கு என்ன வேணும் இப்போ?

சாருநிவேதிதானு ஒரு தரங்கெட்ட எழுத்தாளர், இதை விமர்சிக்கிறேன்னு இதைப்பத்தி விளாவரியா எழுதி அவன் அரிப்பை தீர்த்துக்கிறான். இப்போ நீங்க உங்க திறமையைக் காட்டுறீங்களாக்கும்..

நீங்க வாசிக்கிற போர்ன் ஸ்டோரியெல்லாம் இங்கே சிம்புக்கு எதிரா கருத்துச் சொன்ன எல்லாரும் வாசிச்சாங்கனு எதுவும் "டேட்டா" உங்களிடம் இருக்கா?  அதை இங்கே பகிர முடியுமா?

மேலும் பதிவுனு நீங்க எழுதுற குப்பைகளையும் ஒரு பயலுகளும்  வாசிக்கிறது இல்லை! அப்படியே  வாசிச்சாலும், வாசிச்சுட்டுட்டு "இவனுக்கு மரை கழண்டு போயிடுச்சு!" னுதான் சொல்லிட்டுப் போயிடுறாங்க! அதெல்லாம் உங்க காதுக்கு விழாது!

நீங்க பார்த்து ரசிக்கிற "சன்னி லியோன்" வீடியோவும் ஒரு சிலருக்கு குப்பையாக இருக்கலாம். உங்களைப் போலவே  எல்லாரும் சன்னி லியோன் வீடியோ பார்க்கிறாங்கனு எதுவும் உங்களிடம் டேட்டா இருக்கா? அதையும் பகிர முடியுமா?

அப்படிப் பகிர வக்கில்லைனா.. ஊருல  உள்ளவன் எல்லாம் உங்களைப் போல வேலை வெட்டியில்லாமல் முழு நேரம் போர்ன் பார்க்கிறவன்னு நினைப்பதை நிறுத்தும்!

உங்க ரசனை ஒரு மாதிரியாத்தான் இருக்கு. இருந்துட்டுப் போகட்டும். அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை.

அதேபோல் மற்றவர்கள்  ரசனையை நீங்க புரிந்துகொண்டால் போதும். இல்லை நீயும்/உலகமும் நம்பள்கி  மாதிரித்தான், உலகில் உள்ள அனைவரும் நம்பள்கி  போல வேலை வெட்டி இல்லாதவன்தான்.. "சன்னி லியோன் விசிறி"தான் னு   நீங்க அடித்துச் சொன்னால் உங்களுக்கு புத்தி இல்லைனுதான் ஆகும்.

உங்க கருத்துச் சுதந்திரத்தை மற்றவர் மதிப்பதுபோல் நீங்களும் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் கருத்துச் சுதந்திரத்தை மதிங்க.

உங்களுக்கு சிம்பு மேலும், சன்னி லியோன் மேலும் மரியாதை இருக்கா?

அவங்கல்லாம் உங்க "ரோல் மாடலா?" தப்பே இல்லை!

--------------

பின்னூட்டத்தில் பலர், தனிநபர் தாக்குதல் தவறென்று வன்மையாக கண்டனங்கள் (மஸ்தான் ஒலி மற்றும் சக பயணி )தெரிவித்ததால் இப்பகுதி அகற்றப்பட்டது- டிசம்பர் 20, 2015.

---------------------------

அது உங்க தனிப்பட்ட விசயம். அதைக் கேக்க  எனக்கு உரிமை இல்லை. அதை நான் அசிங்கமாக விமர்சிக்கப் போவதும் இல்லை.

அதே சமயத்தில் சிம்புக்கு எதிரா பின்னூட்டமிட்டவனையெல்லாம் விமர்சிச்சா அப்புறம் நானும் இப்படித்தான் விமர்சிப்பேன்.

அப்புறம் உங்களை எதுக்கு தமிழ்மணத்தில் இன்னும் வச்சிருக்காங்கனு தெரியலை.  ஒரே குப்பையா, எடுத்த வாந்தியையே இன்னும் திரும்பத் திரும்ப எடுத்துக்கொண்டு இருக்கீங்க. உங்களைத் தமிழ்மணத்திலிருந்து தூக்கினால் நல்லதுனு தோனுது!  அதுக்கு ஏதாவது வழி செய்யணும்!

நீங்க மாஞ்சி மாஞ்சி எதிர்பார்த்த பதிவை எழுதியாச்சு. இப்போ திருப்தியா?!

Monday, December 14, 2015

டி ராஜேந்தர்! நல்ல அப்பன்டா இந்தாளு!

சிறுவயதில் என்னுடைய மாமா பசங்களோட விளையாடும்போது அடிக்கடி ஏதாவது சண்டை வரும். எனக்குத்தான் கை நீளும். மாமா மகன் போயி அம்மாட்ட பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு "வருண் அடிச்சுட்டான்!" னு  சொல்லிட்டுப் போயிடுவான்.

வீட்டுக்குப் போனால் எங்கம்மா எனக்குப் "பொறந்த நாள்" கொண்டாடுவாங்க!

தெருவில் உள்ள பசங்களோட ஏதாவது பிரச்சினைனாலும் என் மேல் தப்பே இல்லைனாலும் அம்மா எனக்குத்தான் "பொறந்த நாள்" கொண்டாடுவாங்க! எவனாவது என்னைப் பத்தி போட்டுக் கொடுத்தால், எனக்குத்தான் செம அடி விழும்!

அடிக்கிறது வலிக்கிதோ இல்லையோ அழுகை வரும். எல்லாம் கொஞச நேரம்தான். மறுபடியும் விளையாட ஓடிவிடுவேன். அடுத்த பொறந்தாள் கொண்டாட்டத்துக்கு ரெடி ஆகனுமில்லை?

ஆக வருடத்தில் ஒரு 10 நாளாவது எனக்கு பொறந்த நாள் கொண்டாடப்படும்!
எவன் தப்பு செய்தாலும், "அவன் என் பிள்ளை இல்லை, நீதான் ஒழுங்கா நடந்துக்கணும். நீ எதுக்கு அங்கே போற?" இதுதான் அம்மா சொல்வது எனக்கு.

இப்போ சிம்பு பிரச்சினைக்கு வருவோம். தரக்குறைவான பாடல் ஒன்றை இவனும், பொடியன் அநிருத்தும் (இவன் ரஜினியோட மச்சினன் பையனாம்ப்பா!) வெளியிட்டு, தங்கள் தரத்தை பாதாளத்தில் தள்ளிக் கொண்டார்கள்!

அப்பன், ராஜேந்தர் என்ன செய்யணும்?

தறுதலை மகனை, ஊரறிய கண்டிக்கணும்! இப்படி ஒரு மட்டமான பாட்டை அவன் பாடியதற்காக வெட்கப்படுகிறேன்னு சொல்லி எல்லாரிடமும் மன்னிப்புக் கேக்கணும்! அப்படி செய்தால் அவன் உண்மையான ஒரு பொறுப்புள்ள தந்தையார்!

மகன் என்ன பண்ணினாலும் சரி, ஊருப்பய பண்ணியதுதான் தப்புனு சொல்லிக்கிட்டு அலையிறானே? என்ன ஒரு கேவலமான அப்பன் இவன்?!

சிம்புவைச் சொல்லி குற்றமில்லை! அவனோட அப்பன் இப்படி வளத்துவிட்டு இருக்கான்! தப்பை தப்புனு சொன்னால்தானே, சிம்பு திருந்த வழியிருக்கு? என் மகன் எப்போவுமே யோக்கியன்னு சொல்லி வளர்த்தால் பிள்ளை இப்படிதான் ஊருப்பயளுகள்ட்ட அடிபட்டு சாவும்!

Thursday, December 10, 2015

குழப்பத்தில் ஒலகநாயகர் ர சி கா மணிகள்!

வெள்ளம் கரை புரண்டு ஓடி மக்கள் எல்லாம் உயிரை இழந்து உடமையை இழந்து நிற்கும்போது நிதானம் தேவை. மற்ற அரசியல்வாதிகள் வெள்ளத்தை வைத்து ஆட்சியை இறக்க முயல்வதும், ஆளுங்கட்சி வெள்ள உதவி வழங்கி தம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயல்வதையும் தவிர்க்க முடியாது. ஏன் னா அவர்கள் தொழில் அரசியல்!

நம்ம உலகநாயகனுக்கும் ஆளும் ராணிக்கும் விஸ்வரூபம் தொடர்ந்து பிரச்சினைகள். தூங்காவனம் பாக்ஸ் ஆபிஸ் பாதிப்புகூட அதோட வெளிவந்த வேதாளம் ஆளுங்கட்சி சினேகிதர்களால் வெளியிட்டப்பட்டதே என்கிற தியரியை நம்புகிற நிலையில் இருக்கிறார் ஒலகநாயகர்.

இப்போ வெள்ளம். அதனால் பாதிப்புனு வரும்போது, பெருந்தலைகள் என்ன செய்யணும்? பண, பொருள் உதவி செய்யணும்!  இல்லைனா சும்மா இருக்கணும். இந்த சமயத்தில் நான் நெறையா வரிகட்டுறேன், அரசாங்கம்தான் ஏழைகளை காப்பாத்தணும். "சிஸ்ட்மே கொல்லாப்ஸ்" ஆயி இருக்குனு சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் அது  தவறாகப் பார்க்கப்படும். ஆளுங்கட்சியால்  மட்டுமல்ல! பாதிக்கப் பட்ட பொதுமக்களாலும்தான் இது தவறாகப் பார்க்கப்படும்.

ஆனால் உலக நாயகர் உதவி எதுவும் செய்யமுடியலையேனு குற்ற உணர்வுடன் வெட்கப்பட்டதோட நின்னு இருக்கலாம். இந்த ஒரு சூழலில் ஆளுங்கட்சியை விமர்சித்தல் மற்றும் நான் வரி கட்டுறேன், நல்ல குடிமகன் என்று சொல்வதெல்லாம் (அப்படி சொல்லியிருந்ந்தால்) அது புத்திசாலித் தனம் அல்ல!

இன்னைக்கு உள்ள சோஷியல் மீடியாவில் சொன்னதையும் உண்மை மாரி கொஞ்சம் சேர்த்துவிட்டு எழுதுவான்! சொல்லாததையும் சொன்னதாக எழுதுவான்!

உலகநாயகன் ஏதோ "அப்படி" மேற்கூறியபடி சொன்னதாக செய்தி வெளிவர. உடனே அவருக்கு முழுநேரமும் (என்ன எழவைச் சொன்னாலும் சரி சரினு ,)  கால்வருடும் அவர் விசிறிகளும்... ஆஹா ஓஹோ, ஒலக நாயகர் வீரத்தை காட்டிப்புட்டாரு, உண்மையைச் சொல்லிப்புட்டாரு னு மார்தட்ட..

உடனே அமைச்சர் பன்னீர் செல்வம் இவருக்கு எதிரா, இவர் சொன்னதாக சொல்லப்பட்டதுக்கு எதிராக  ஒரு பெரிய ஸ்டேட்மெண்ட் விட..

உடனே அரசியல் ஆதாயம் தேட டாக்குட்டரு ராமதாஸ் கமலுக்கு கைகொடுக்க வர..

கமலஹாசன் நான் அப்படி எதுவும் ஆளுங்கட்சியை விமர்சிக்கவில்லை னு மறுத்துச் சொல்ல!

 எல்லாம் நாசமாப்போச்சு!

கமல் என்ன சொன்னாலும் சரி சரினு கால் அமுக்கிவிடுப்வன்  நிலைமை அதோகதியாயிடுச்சு!!

ஒரு பக்கம் கமலஹாசன் குழப்புறார்னா.. இம்முறை குழம்பியது அவர் சொல்வதெல்லாம் புரிந்தமாரி நடிக்கும் "ரசிகாமணிகள்"தான்!

பி ஆர் வோ நிகில் முருகனுக்கு வேலை போய்விட்டதா ஒரு வதந்தி உலவுது!

இந்தப் பாழாப்போன வெள்ளம்தான் எல்லாத்துக்கும் காரணம்!

இந்நிலையிலும் புன்னகைக்கிறார் நம் பகவான்! இந்தாளுக்கு நேரங்காலம் தெரியாது! கொஞ்சம் சோகமாக இருக்கலாமே? கூறுகெட்ட மனுஷன்! :(

Saturday, December 5, 2015

வெள்ளத்தில் மூழ்கி செத்தவர்கள் மேல் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுங்கப்பா!

நம்ம ஊரு அரசியல்வாதிகள் எத்தனை கீழ்த்தரமான ஆட்கள் என்பதற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட் பசியில் வாடும் மக்களுக்கு கொடுக்கப்படும் பொருட்களில் எல்லாம் "அம்மா ஸ்டிக்கர்" ஒட்டிவிடப்படுகிறதாம்.


  200 பேருக்கு மேலே செத்துப்போயிட்டாங்களாம்ப்பா, அவனுக பிணத்தின் மேலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுங்கப்பா!

உங்க அப்பன் வீட்டு சொத்தை கொடுக்கிறதுக்கு க்ரிடிட் எடுக்கிற நீங்க உங்க கவனக்குறைவால் பலிகொடுத்ததுக்கும். அதனால் பிணமானதுக்கும்  க்ரிடிட் எடுத்துக்க மாட்டேன்னா எப்படி?

 என்ன ஒரு கேவலமான பார்ப்பன அரசியல் இது!

அம்மா ஸ்டிக்கர் ஒட்டுறவன் எல்லாம்  யாரு? திராவிட கைக்கூலிகள்தான்!! வேற யாரு?


Friday, December 4, 2015

மழை நிற்க வேண்டி வருண பகவானுக்கு பாலாபிஷேகம்!

என்னடா ஒரே வெள்ளக்காடா இருக்கு! பக்தர்கள் எல்லாம் பகவானிடம் எதுவும் போயி வேண்டாமல் இருக்காளே?னு யோசிச்சுண்டு இருந்தேன்..எதிர்பார்த்த செய்தி நக்கீரனில் வந்துடுச்சு.! வருண பகவானுக்கு பூஜை, பாலாபிஷேகம்! பகவானுக்கு இதை எல்லாம் செய்து அவரைக் குளிரவைத்து மழையை நிறுத்தச் சொல்லி வேண்டிக்கொண்டார்கள் பெரியவா னு!  ஆனால் ஒண்ணு அட் லீஸ்ட் இவர்கள் நேர்மையைப் பாராட்டணும். பாலையும் தயிரையும் வீணாக்கினாலும்..இது எல்லாம் நம்ம  "பாவி பகவான்" னோட செயல்தான்னு ஒத்துக்கிட்டாளே !!! அந்தப் பெரிய மனசைப் பாராட்டணுங்காணும்!!


மழை நிற்க வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் 

மழை நிற்க வேண்டி தஞ்சாவூர் பெரியகோவிலில் வருண பகாவனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. இது குறித்து நம்மிடம்  பேசிய குருமூர்த்தி சுவாமிகள், “ பெருவுடையார், பெரியநாயகி உடனுறையான பெரியகோவிலில்தான் இந்தியாவிலேயே வருண பகவான்  தனி சன்னதியில் மேற்கு புறத்தில் வீற்றிருக்கிறார். வேறு எங்கும் இதுபோல் தனி சன்னதியில் வருண பகவான் இருப்பது இல்லை. 

சென்னையில் பெய்யும் தொடர் மழை நிற்க வேண்டியும், மக்களை துன்பங்களில் இருந்து காக்கவும், அவர்கள் குடும்பத்தினருடன் நலமாக வாழவும், சிறப்பு பூஜைகள் நடத்தினோம்.  1500 ஆண்டுகளுக்கு முன்னால் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் மழை வேண்டியும்,  மழை நிற்பதற்கும் பாடபெற்ற திருபதிகம் செய்யப்பட்ட பாடலை ஓதுவார் மூர்த்திகள் கொண்டு வருண பகவான் சன்னதியில் பாடப்பெற்றது. எண்ணெய், பால், மஞ்சள், திரவியம், தயிர், சந்தனம் இன்னும் பல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது’’என்றார்.

     - இரா.பகத்சிங்


பக்தர்களில் ஒரு  சிலர் இந்த நேரத்தில் பகவானை ஓரமா  ஒரு பக்கம் உக்கார வச்சுட்டு "இயற்கை" யின் சீற்றம்ணு சொல்வார்கள்.  "நம்ம வில்லன் பகவானை" விட்டுப்புட்டு  "இயற்கை" யை வில்லனாக்கி ஒரு பாவமும் அறியாத பகவானை காப்பாத்திடுவா!. ஆனால் பரிணாம வளர்ச்சியில்  இல்லை, சத்தியமா உன்னையும் என்னையும் பகவாந்தான் படைச்சாரானு சொல்லுவா.. இங்கே மட்டும் "இயற்கை", நம்ம பகவானை காப்பாத்தப்  பயன்படுத்தும் "பலி கடா" . அவ்வளவுதான்!

எது எப்படியோ பாலையும் தயிரையும் பகவானுக்கு ஊத்தி அவரைக் குளிப்பாட்டி "சரிக் கட்டினால்" வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பசியில் வாடி அலையும் ஏழைகள் வயிறு ஆறும் என்கிற நம்பிக்கை  என்னவோ அபூர்வமானதுதான்.

----------------

ஆமா, வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவாளுக்கு நீ என்ன பண்ணின வருண்? நான் ஒரு மண்ணாங்கட்டியும் பண்ணலை! ஆனால் பகவானுக்கு பெரிய அளவில் இன்னொரு பாலாபிஷேகம் செய்து பகவானைக் குளிர வைக்கலாம்னு ஒரு ப்ளான் இருக்கு. ஆனால் ஒண்ணு பகவானுக்கு நான் இந்த முறை ஏற்பாடு செய்வது  எருமைப் பாலாபிஷேகம்தான்!  அப்போத்தான் பகவானுக்குப் புத்தி வந்து அடுத்த முறை மழையே வராமல் பூமி வறண்டு பஞ்சம் வருவதற்கு உதவுவார், பகவான்!

பக்தர்களுக்கு நான் சொல்வது ஒண்ணே ஒண்ணுதான்!  

எல்லாம் பகவான் செயல்! அவன் என்ன செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்!