Friday, December 23, 2016

சசிகலா முதல்வரானால் அப்படி என்ன பெரிய அபச்சாரம்?

நான் பலமுறை திரும்பத் திரும்ப சொல்ல்லிக்கொண்டு இருக்கிறேன். வெள்ளைக்காரனும், பார்ப்பனர்களும் நம்மை ஆள யார் காரணம் என்றால்.. இந்த மூளையில்லாத திராவிட இனம்தான்.

80 ஆரம்பத்தில் ஜெயலலிதா கொ ப செ ஆனபோது அவர் முதல்வராவர்னு யாருமே நினைக்கவில்லை. ஜெயலலிதான் என்றால் "அர்ரொகண்ஸ்". படித்த கலக்டரை மதிப்பதில்லை. என்ன திமிர் இந்த நடிகைக்குனுதான் நம்மாளு சொல்லிக்கொண்டு அலைந்தான். இன்னைக்கு "அம்மா அம்மா" னு இவனுக ஒரு பக்கம். "ஈழத்தாய்"னு இன்னொரு பக்கம். ஆளாளுக்கு இவர் இல்லைனா தமிழ்நாடே அழிஞ்சிடும் என்பதுபோல் வெக்கமே இல்லாமல் ஒப்பாரி வச்சுக்கிட்டு அலைகிறானுக திர்ராவிட அன்னக்காவடிகள்.

 நடிகையாக இருந்தால் என்ன? காலேஜ் டிக்ரிகூட வாங்கவில்லைனா என்ன? அவர் பார்ப்பனர். வெள்ளையா இருக்கார்? நம்மள மாதிரியா? நம்ம அம்மா அக்கா தங்கை. மனைவி போல் கருப்பாவா இருக்காரு? ஆங்கிலம் என்னமாப் பேசுறாரு? இதுதான் இந்ந்த திராவிட கைக்கூலிகளின் சிந்தனை ஓட்டம்.

அவரு எப்படி அரசியல் பண்ணினாரு? பணம் கொடுத்து ஓட்டு வாங்கித்தானே? இல்லையா? பொய் சொல்லாதீங்கடா நாய்களா! பார்ப்பனர் ஜெயலலிதா உங்களை எல்லாம் பிச்சை எடுக்க வைத்தார். டாஸ்மாக்கை திறந்து போட்டு அதில் வரும் பாவப் பணத்தை, அரசாங்க வருமானத்தை வச்சு உங்களுக்கு பிச்சை போட்டார். தமிழ்நாட்டையோ தமிழர்களையோ சுயமரியாதையுடன் வாழ வைக்க ஒண்ணும் கிழிக்கவில்லை. முட்டாள்களுக்கு என்ன தேவையோ அதை வழங்கினார்! அம்புட்டுத்தான்.

சசிகலா வளர்வதில் என்ன பிரச்சினை. முதல்வரானால்? ஆத்தாடீ! அவர் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர். முக்குலத்தோர்கள் ஆண்ட பரம்பரைனு சொல்லிக்கொண்டு மற்றவர்களை மதிக்காதவர்கள். அதனால் தலித்கள். வன்னியர்கள், மேலும் பல சாதியினர் அவரை முதல்வராகவோ தலைவராகவோ ஏத்துக்க மாட்டோம். யாராவது பார்ப்பனர்னா பரவாயில்லை. இல்லை ஒரு மலையாளி, இல்லைனா ஒரு ஆந்திராக் காரன் இப்படி யாராவது ஆண்டால் பரவாயில்லை. நம்ம திராவிட இனம், அதுவும் ஆதிக்க சாதியினர் ஆளக் கூடாது என்பதுதான் பிரச்சினை.

ஒண்ணு தெரிந்து கொள்ளுங்கள். சசிகலா முதல்வராகி, அவர் பதவி நீடிக்கணும்னா, எல்லா சாதிக்காரனையும் ஒழுங்காக தன் சாதிபோல் நடத்தவில்லை என்றால் அவர் ஆட்சி நாளு நாள்க் கூட நிலைக்காதுனு அவருக்கு இன்னுமா தெரியாது? முக்குலத்தோரை மட்டும் வளரவிட்டு மற்ற திராவிடர்களை ஒழித்தால் சசிகலா ஆட்சி நாளு நாள்க் கூட தாக்குப் பிடிக்காது.

ஒரு பார்ப்பான்ரல்லாத தமிழச்சி, தமிழரை ஆளட்டுமே? அதென்ன அப்படி ஒரு அபச்சாரம்?

அவர் படிக்கவில்லை! ஆங்கிலம் தெரியாது? வெள்ளையாக இல்லை? சாத்சாத் எங்க்ளைப் போலவே இருககாரு?

அவரை எப்படி நாங்க ஒரு தலைவராக.. இதானே உங்க பிரச்சினை, காட்டுமிராண்டிகளா!


Friday, December 9, 2016

பார்ப்பனர்களுக்குப் பேரிழப்பு! கண்ணீர் அஞ்சலிகள்

பாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தமிழர்கள் எதையெல்லாம் வெட்டி முறிச்சாங்க என் பேசுவதில் என்றுமே குறை வைப்பதில்லை இந்த வக்கற்ற தமிழர்கள். இவர்களுக்கு தன்னை வெள்ளைக்காரன் ஆண்டால் பெருமை. அப்படி இல்லைனா ஒரு பார்ப்பனராவது ஆளணும்! அப்போத்தான் இந்த பாமரத் தமிழர்கள் மனம், பதை பதைக்காமல் நிம்மதியாக இருக்கும். அப்படித் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதி ஊழல் செய்தாலும் சரி, ஊரெல்லாம் டாஸ்மாக்கை திறந்துவிட்டாலும் சரி, அன்னவரை தெய்வமாக வணங்கும் அடிமை ஜென்மங்கள்தான் "மற(ர)த் தமிழன்" என்று மார்தட்டித் திரியும் தமிலன்கள்.

முதல்வர் ஜெயலலிதா மறைவால் இன்று உண்மையிலேயே அவருக்காக வருத்தப் படுவது யாருனு கேட்டீங்கன்னா... யாரு செத்தாலும் ஒப்பாரி வைக்கும் பாமரத்தமிழர்கள் அல்ல! தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனரும்தான் மனம் நொந்து சோறு சாப்பிடாமல், ஜலம் அருந்தாமல்  இருப்பது. ஏன் என்றால் தன் சாதி, தன் இனம் என்கிற உணர்வு  இவர்களிடன் இவர்களே அறியாமல் என்றுமே வாழ்கிறது. என்றுமே மனநிம்மதியில்லாமல் "இன்செக்குரிட்டி"யுடன் வாழும் பார்ப்பனர்களுக்குத்தெரியும், நாம் திராவிடர்கள் அல்ல என்று! தமிழ்நாட்டில் நாம் வாழ்ந்தாலும் நாம் வேறு "உயர்" வெரைய்ட்டி என்று!. அதேபோல் ஜெயலலிதா போன்ற பார்ப்பனத் தலைவர்கள் ஆள்வதினால் மன நிம்மதியுடனும், பெருமையுடனும் வாழ்ந்தவர்கள்தான் தமிழ்நாட்டில் வாழும் அத்தனை பார்ப்பன்ர்களும். இன்று அவர் மறைவால், தலையில் இடி விழுந்ததுபோல்  துக்கத்தில் அழுதழுது கிடக்கிறார்கள். இப்படியொரு பரிதாப நிலையில் இருக்கும் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். என்ன செய்றது? எல்லாம் பகவான் செயல்தானே?

ரெண்டாவது, மறைந்த பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமசாமியின் மறைவு! இந்த பார்ப்பனரின் மறைவு, பார்ப்பனர்களுக்கு இன்னும் ஒரு பேரிழப்பு.  தான் ஒரு பார்ப்பனர், தான் ஹிந்து என்று நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுமாக மார்தட்டி சொல்லிக்கொண்டு  "எங்கே பிராமனன்"னு தேடிக்கொண்டு திரிந்த தரமற்ற, சந்தர்ப்பவாத பத்திரிக்கையாளர்தான் மறைந்த "அமரர்" சோ  ராமசாமி அவர்கள். இவரு ஒரு மகா யோக்கியன்னு சொல்றவனையெல்லாம் செருப்பால அடிக்கணும். சங்கராச்சார்யா (அதான் பெரியவா) முதலில் கொலைக் குற்றத்திற்காக மாட்டியபோது, இந்தாளு பேசிய வியாக்யாணமும், பின்னால் அதை அப்படியே அமுக்கி, அவர் அக்யுட்டெட் ஆகி வெளி வந்தபோது இவன் மூடிக் கொண்டு இருந்ந்தலில் இருந்து தெரியும் இவன் ஒரு ஈனப் பத்திரிக்கைக்காரன்  என்று. ஆமா பிரபாகரன் குற்றவாளி என்றால் சங்கர் ராமனை போட்டுத் தள்ளியவர்கள் என்ன? பார்ப்பன தர்மம் நியாயம் எல்லாம் சுயநலம் பூசியது என்பது  பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல காட்டுமிராண்டி திராவிடர்களுக்கும் விளங்காது. பெண்ணடிமைத் தனத்தை போற்றும் இந்துவான இதே ஆள், ஒரு பார்ப்பனப் பெண்மணி தமிழ்நாட்டை ஆண்டால் அதைப் பெண்ணாகப் பார்க்காமல் பார்பனராக பார்த்த சந்தர்ப்பவாதி இவர் என்பது  குருட்டுத் திராவிடக் காட்டு மிராண்டிகளால் உணர முடியாத உண்மை. சாதாரண அரசியல்வாதியைவிட பல மடங்கு கேவலமான சந்தர்ப்பவாதிதான் ஒரு பத்திரிக்கையாளன் என்பதற்கு சிறப்பான உதாரணம், மறைந்த அமரர் சோ  ராமசாமி அவர்கள். சோ ராமசாமி அவர்களின் மறைவு பார்ப்பனர்களுக்கு இன்னொரு பேரிழப்பு. மறுபடியும் பார்ப்பனர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் .

மற்றபடி ஒரு ஈனப் பத்திரிக்கையாளன், ஒரு மத வெறிபிடித்த பார்ப்பனர் இறப்பதால் சுத்தமான திராவிடனுக்கு எவ்விழப்பும் இல்லை!

இலையுதிர்காலத்தில் இலைகள உதிர்வது இயற்கை!

எழவுமேல் எழவு விழுந்து கண்ணீருடன், இதயம் சுக்கு நூறாகி புத்தி பேதலிக்கும் நிலையில் உள்ள பார்ப்பனர்களுக்காக கண்ணீர் அஞ்சலி அளிக்கும் நேரம் இது.  படிப்பறிவில்லாத பாமர திராவிடர்கள் எதற்கெடுத்தாலும் தொடர் ஒப்பாரி வைப்பதை நிறுத்திவிட்டு  கவனிக்கவும். நம்முடனேயே , நம்மைச் சுற்றி, நம்மிடம் கலக்காமல், கவனமாக ஒதுங்கி வாழும்  பார்ப்பனர்களின் பேரிழப்புகளுக்காக பாமர திராவிடர்களான் நீங்கள் அனைவரும் ஒரு நிமிடம் மவுனமாக இருக்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.