Sunday, December 25, 2022

என்னடி எப்படி இருக்க? மீ டூ காலம்! (59)

நிலையாமை னு சொல்லுவாங்க. அதாவது எல்லாமே கொஞ்ச நாளைக்குத் தான். அன்பு, காதல், நட்பு, பாசம், பணம், புகழ், ஹெல்த் எல்லாமே. ஆமா அப்பப்போ இது புரிஞ்சு தத்துவம்லாம் பேசுவானுக. 

அமெரிக்க வாழ்க்கை ஒரு மாதிரிசுய நல வாழ்க்கை. இப்போ இந்தியாவிலும் அதேபோல் ஆகி இருக்கும். அமெரிக்காவில் ஏன் எல்லோரும் சுயநலம் ஆகிடுறாங்கக? 

இந்த சிஸ்டம் அப்படி இருக்கு. வேலையில் எப்போவும் டெட் லைன் இருக்கும். அடுத்தவர்கள்க்கு உதவ நினைத்தாலும் முடியாதபடி இருக்கும். நீ உன்னை நெனச்சு அழவே நேரம் இருக்காது. இதில அடுத்தவனுக்கு எங்கே ஒப்பாரி வைக்க? இப்படி ஆக்கிவிடும் இந்த சிஸ்டம். நான் வேல பார்க்கிற இடத்தில் இப்போ நெறையா இந்தியர்கள். இதுபோல் நான் ஒரு சூழலில் இருந்ததில்லை. எனக்கு அமெரிக்காவில் வாழும் இம்மிக்ரண்ட் இந்தியர்களோட பழகிறது கொஞ்சம் கஷ்டம். ஆமா, நானும் இந்தியந்தான் இப்போ யாரு இல்லைனு சொன்னா? என்ன பிரச்சின. பொதுவா அவங்களுக்கு பேசத் தெரியாது. அமெரிக்கானா என்னனே தெரியாது. பொதுவாக இந்தியா சைனா ல இருந்து வர்ர இம்மிக்ரன்ட் எல்லாருமே நல்லா படிச்சு க்ரீமி லேயர்தான் இங்கே வர்ராங்க. மும்பை ஸ்லம்ல இருந்தோ, ஏழைகளோ வருவதில்லை. அதனால் இவங்க ஃபைனானிசியல் ஸ்டேடஸ் ஆவெரேஜ் அமெரிக்கனைவிட உயர்வா இருக்கும். மற்றபடி இவங்களுக்கு அமெரிக்கானா என்னனே தெரியாது. நம்ம ஊரில் பார்ப்பணர்கள் எப்படி எதைப் பத்தியும் கவலைப் படாமல் வாழ்வதுபோல்தான் இங்கே இம்மிக்ரேட் ஆகிற எல்லா இந்தியர்கள் வாழ்றாங்க. 

 

சாதாரணமா பேசத் தெரியாது. பர்சனல் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாதுனு தெரியாது. வீடு வாங்கினோம்னு சொன்னால்.. 

 

இவர்கள் கேட்கும் கேள்விகள் 

வீட்டு விலை என்ன? 

எவ்ளோ டவுன் பே மெண்ட்? 

15-இயர் மார்ட்கேஜா இல்லை 30-இயரா?

 இண்டெரெஸ்ட் ரேட் என்ன? 

மந்த்லி பேமெண்ட் என்ன? 

இதெல்லாம் எதுக்கு இவர்களுக்கு? இது உங்க பிரச்சினை. இவர்கள் பிரச்சினை இல்லை. அதாவது உங்க பணபலம் என்னனு பார்க்கிறாங்க. எதுக்காக? அவங்கள விட நீங்க மேலேயா இல்லை கீழேயா னு பார்க்க! வேற எதுக்கு? நீங்க கீழேனா அவங்க பேசும் தொணியில் கொஞ்சம் மரியாதை குறையும். கொஞ்சம் அதிகம்னா உங்க மேலே பொறாமையாகும் அதனால் உங்க குறைகளை கோடிட்டு காட்டி தன்னை உயர்வாக்கிக்குவாங்க.

  Here is my problem. They (one who wants to know all these) are NOT going to help you if you lose your job and not able to make your mortgage payment. Some people will be happy and some others will go away from you. So, IT IS YOUR LIFE and YOUR PROBLEM. They dont need to worry about it. That is the reality. If that is the case, Why the fuck these idiots care avout all these?!! I never understand. Talk about movies, sports, something which is not personal. When are you going to learn? 

 நம்ம ஊர் பெட்டர் எல்லாம் இல்லை. எனக்குத் தெரிய சென்னையில் நண்பர் ஃப்ளாட்ல வசிப்பவர் ஒருவர் ஒரு இடத்தில் ரெகுலரா பார்க் பண்ணுவாராம்- பல வருடங்களாக. கொஞ்ச நாள் கார் ரிப்பேர் ஆயிடுச்சுனு மெக்கானிக் இடத்தில் விட்டுட்டாங்கலாம். கார் ரிப்பேர் பண்ணி எடுத்து வந்தால் அதே ஃப்ளாட்டில் வாழும் இன்னொருவர ந்த இடத்தை எடுத்துக்கிட்டாராம். இப்போ இது அவர் இடமாம். என்னடா சொல்ற?னு கேட்டால், இல்லடா அப்படித்தான் இருக்காங்க இங்கே. 

யு எஸ் ல பொதுவா இதெல்லாம் நடக்காது. பார்க்கிங் ஸ்பாட் மொதல்க்கொண்டு சட்டப்படி எழுதிடுவானுக டாக்குமெண்ட்ல. உலக்மே இப்படித்தான் போயிட்டு இருக்கு. தப்பு சரி எல்லாம் என்னனே தெரியாம அசிங்கமா வாழ்றாங்க. நியாயம் அநியாயம் புரிந்து இது தப்பு சரினு மனசாட்சிக்கு பயந்து வாழ்றவங்க எல்லாம் மிகவும் குறைவாயிட்டாங்க. ஏதாவது திடீர்னு எழவு விழுந்தால் கொஞ்ச நாளைக்கு திருந்துவானுக. கொஞ்ச நாளைக்குத் தான். மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும்.

 தப்பிக்க ஒரே வழிதான். நம்ம சாகணும். இவனுக செத்தால்? இவனை மாதிரியே இன்னொருத்தன் வந்து நிப்பான். நம்ம செத்தால் தப்பிச்சுடலாம். :) 

 -தொடரும்

Sunday, December 11, 2022

என்னடி எப்படி இருக்க? மீ டூ காலம் (58)

தமிழ்மணம் எல்லாம் செத்து ப்ளாகர் சாகக் கிடக்கும் காலம் இது. எவ்ளோதான் பாடம் கற்றுக்கொண்டாலும் திரும்பத் திரும்ப அதே தவறுகளை செய்வதுதான் மனித இயல்பு. அதே பெண்கள்தான் வேற வேற வடிவில், அதே ஆண்கள்தான் வேற வேற வடிவில். அதே பிரச்சினைகள்தான் வேறு வேறு வடிவில். 

புதுசா என்ன கத்துக்கப் போறீங்க? ஏன் இப்படி வாழத் துடிக்கிறோம்? எனக்குப் பறவைகள் ரொம்பப் பிடிக்கும். அப்போ சிக்கன் சாப்பிட மாட்டீங்களா?னு அறிவுப் பூர்வமா எல்லாம் கேள்வி கேக்காதீங்க! எனக்கு நியாயப் படுத்துதல் எல்லாம் பிடிக்காது. பறவைகளும் பிடிக்கும் சிக்கனும் சாப்பிடுவேன். ஒரு நிமிசம் இருங்க." கொன்றால் பாவம் திண்றால் போச்சு" னு சொல்வற்கெல்லாம் எனக்கு அர்த்தம் தெரியாது.

நீங்க விளக்கினாலும் எனக்கு புரியப் போறதில்லை. என்னத்தை புதுசா சொல்லப் போறீங்க? இதுவரை கேட்ட எழவைத்தான் நீங்களும் சொல்லி அழப்போறீங்க. இங்கேதான் பிரச்சினை. யாரு சொல்ற வெளக்கத்தையும் கேட்கிற மனநிலை எல்லாம் போயி பல வருடங்கள் ஆயிடுச்சு. 

ஒரு சில நிகழ்வுகள் நம் வாழ்வில் வருவதே இல்லை. ஒரு சில அனுபவங்கள் நாம் அனுபவிப்பதே இல்லை. எந்த ஒரு இரு நபரும் வேற வேறதான். என்ன மாதிரி? இதுவரை ட்ரைவ் பண்ணும்போத் எதுவும் மேஜர் ஆக்சிடென்ட் ஆனதே இல்லை. உடனே நான் நல்ல ட்ரைவர் னு எனக்கு நானே சான்றிதழ் கொடுத்துக்கொள்ளும் அறிவீணர் இல்லை நான். என்ன சொல்லலாம்? நான் லக்கி- இது வரைக்கும். கொஞ்ச நேரத்தில் ட்ரைவ்ப் பண்ணுபோது என்ன ஆகும்னு தெரியலை. நான் ட்ரைவ் பண்ணும்போது கவனக்குறைவா தவறு செய்து இருக்கேன். இருந்தாலும் அந்த தவறுகள் சீரியஸ் ஆக்சிடென்ட்ல முடிந்தது இல்லை. நான் லக்கி. ஸ்மார்ட் ஆஸ் இல்லை. 

என் நண்பர் ஒருத்தர் இருக்காரு. இப்போ எதுக்கு அவரு? அவரெல்லாம் ட்ரைவிங்கல தப்பே பண்ண மாட்டாரு. அப்படித்தான் அவரு சொல்லிக்கிறாரு. நினைத்துக் கொள்றாரு. அவர் திறமையாக ட்ரைவ் பண்ணுவதால் அவருக்கு ஆக்சிடெண்ட் ஆவதில்லை. இது அவரோட பர்ஸ்பக்டிவ். ரெண்டு ட்ரைவர்/ ரெண்டு பேருக்குமே ஆக்சிடெண்ட் ஆனதில்லை. ஒருத்தன் சொல்றான் அவன் லக்கி னு. இன்னொருத்தன் சொல்றான், அவன் திறமையான ட்ரைவர். எப்போதுமே கவனக்குறைவா ட்ரைவ் பண்ணுவதில்லைனு. பிரச்சினை என்னனா, நான் என் நண்பர் தியரியை நம்புவதில்லை. சும்மா உளறுறான் இந்தாளுனு நெனச்சுக்குவேன். அவர்ட்ட சொன்னதில்லை. வயதில் கொஞ்சம் மூத்தவர். நேரிடையா உளறாதீங்கனு எப்படி சொல்ல முடியும்? 

அதுக்குத்தான் ப்ளாகர் எல்லாம் இருக்கு? வேலை நெறையா இருக்கு. அப்புறம் பார்க்கலாம். 

 தொடரும்