Thursday, October 22, 2015

உங்களுக்கு பதிவுலகம் போர் அடிக்கிறதா?

ரொம்ப நாள் சென்று உஷா அன்பரசு ஒரு பதிவு எழுதி இருந்தாங்க. "என்னங்க உயிரோடதான் இருக்கீங்களா?'னு கேட்டால் ஒரு உண்மையைச் சொன்னாங்க. எனக்குத் தெரியப் பலர் இவர்களைப் போல் உண்மையைச் சொல்வதில்லை! அதாவது வலையுலகில் பதிவெழுத ஆர்வம் குறைந்துவிட்டது என்று சொன்னாங்க. ரொம்ப நாள் பதிவுலகை வேடிக்கை பார்க்கும் நான் இதேபோல் பலர் ஆர்வக் குறைவினால் பதிவெழுதுவதை நிறுத்தி விட்டதைப் பார்க்கிறேன்.

இதற்கு காரணம் என்ன? நாம் இப்படி செய்வது தமிழ்ப் பதிவு உலகிற்கு நாம் செய்யும் தீங்கா? எல்லாரும் இப்படியே ஒதுங்கிவிட்டால் தமிழ்ப் பதிவுலகம் செத்து விடாதா? என்றெல்லாம் நான் யோசிப்பதுண்டு. யோசிச்சு என்ன செய்ய? நடக்கிறதுதான் நடக்கும். ஆனால் பதிவுலகில் ஏகப்பட்ட மாற்றங்கள்.

முன்னாளில் எல்லாம் எதிர் பதிவு, தொடர் பதிவு, பழிக்குப் பழிப் ப்பதிவுனு ஒரே அடிதடி வெட்டுக்குத்தா இருக்கும். இப்போ எல்லாம் தமிழாவலர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள்னு பதிவெழுதுறவங்க தரம் உயர்ந்து காணப்படுகிறது. இன்றையப் பதிவர்களின் படைப்புகள் உயர் தரமாக இருக்கிறதுனு என்னால் அடித்துச் சொல்ல முடியாவிட்டாலும்,  இன்றைய சூழலில் தரமான பதிவர்கள் பலர்  (விதி விலக்கு உண்டு) ஆர்வமாகப் பதிவெழுதுறாங்கனு சொல்லுவேன்.

பதிவுகளின் எண்ணிக்கை, அடி தடிப் பதிவுகள், தன்னை அடையாளம் காட்டாமல் என்னைப்போல் பதிவர்கள்  போன்றவை குறைந்தாலும், பதிவுலகத் தரம் என்னமோ உயர்ந்துதானுள்ளது. ஆனால் பதிவுலகில் எதிர்காலம் சிறக்கணும்னா சிறுவர்கள், சிறுமிகள், முக்கியமாக பக்குவமடையாதவர்கள்  ஆர்வத்துடன் பதிவெழுதணும். இளங்கன்றுகள்தான் பயமறியாது உண்மையைச் சொல்லுவார்கள். அதுபோல் பக்குவமற்ற, ஆவலுடன் பதிவெழுதும் பதிவர்களின் பதிவுகள் மிகவும் குறைந்து விட்டது. இது நிச்சயம் எதிர் காலப் ப்பதிவுலகை பாதிக்கும் என்பதென்னவோ  கசப்பான உண்மை.

ஆமாம், எனக்கும்தான் பதிவுலகம் போர் அடிச்சிருச்சு. அதை ஒரு பதிவெழுதி அகற்றலாம்னுதான் இப்படி ஒரு பதிவு! பதிவெழுதிட்டு ஓடிடலாம்னு இல்லை? :)

அப்போ என்னதான் "இண்டெரெஸ்டிங்" ஆ இருக்கு? எப்படி பொழுது போக்கிற? னு நீங்க கேக்க நினைக்கிறது தெரிகிறது. நாளுக்கு நாள் அறிவியல் வளருகிறது. இன்றைய அறிவியல் புத்தகங்களில் ஏகப்பட்ட விசயங்கள் அழகாக விளக்கப் பட்டு உள்ளது. நாம் படிக்கும்போது நுனிப்புல் மேய்ந்தவற்றையெல்லாம் இப்போது தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இங்கே வெட்டிச் சண்டை வருவதில்லை. 100 பின்னூட்டங்கள் எழுதி யாரையும் மாற்ற முடியாமல் போக வேண்டிய ஒரு அவல சூழல் இல்லை. நேற்று வரை சரியாகப் புரியாத ஒன்று இன்று தெளிவாகிய ஒரு நல்ல உணர்வு வருகிறது. இதுபோல் ஒரு உணர்வு எனக்கு பதிவுலகில் வருவதில்லை! தேவையில்லாமல் வாதாடி நம் கருத்தோட நாம் போவதுபோல்தான் பெரும்பாலும் வரும் உணர்வு. கவனம்! நான் என்னைப் பற்றிதான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு வேறு மாதிரி அனுபவமாக இருக்கலாம்! அதனால்தான் நீங்கள் இன்னும் ஆர்வமாகப் பதிவெழுதுறீங்க!

Misunderstanding, misjudgment, misinterpretation etc etc is all I get out of spending my time in the tamil blog world. That's my reason for losing my interest here. Moreover, I don't think I ever made any constructive contribution in Tamil blog world. Wait!  This is my own assessment about myself. So, it wont be a great loss if people like me leave from here.They can only make this place better by being absent rather.  That's my justification! :) Trust me, I am being extremely honest here! Don't cry please. I am around! Not dead yet! Take it easy folks!


Monday, October 19, 2015

பாண்டவர் அணி வெற்றி! பதிவுலக மேதை ஒருவர்..

தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர் பதவி எல்லாம் ஒரு முறைதான்னு கொண்டு வந்தால் என்ன?னு தெரியலை. நான் பார்த்தவரைக்கும் அமரிக்காவில் ஒரு மாநிலத் தமிழ் சங்கப் பதவியிலிருப்பவர்கள்கூட.. இருக்கிறவரைக்கும் "ஏன்டா இந்தப் பதவிக்கு வந்தோம்னு தெரியலை?. ஏகப்பட்ட வேலையாயிருக்கு?" னு புலம்புவார்கள்.ஆனால்  ரெண்டு வருடம் சென்று பதிவியிலிருந்து இறங்கும் (இறக்கப்படும்)போது ஒரே "டிப்ரெஷன்"தான் இவர்களுக்கு. பதவி என்பது எப்படியெல்லாம் ஒருவரை ஆட்டிப் படைக்கிது னு இவர்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

சரத்குமாரும், ராதா ரவியும் எத்தனைகாலம் இருந்தாலும் இறங்க மாட்டேன்னு அடம் பிடிச்சு ஒருவழியா இறக்கப் பட்டுவிட்டார்கள். ஆனால் ஒண்ணு பதவிக்கு வந்திருக்கிற நாசர் அணி ஒண்ணும் பெருசா சாதிக்கப் போவதில்லை என்றுதான் தோனுது. ஏதாவது உருப்படியா செய்யணும்னா அன்னையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடணும் (ஆள்ற வரைக்கும்)! அப்படி எதுவும் செய்யத் தவறினால் ஒண்ணும் கிழிக்க முடியாது! எங்கே என் கூற்றை தவறாக்கிறாங்களானு பார்க்கலாம்.

 நம்ம கமலஹாசன் அவர்கள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் பங்குகொள்ளும் ஒரு குழுவை, இந்திய திரைப்பட கழகம்னு மாத்தணும்னு சொல்றாரு. அதாவது சென்னையில் உள்ள இந்த குழுவை மட்டும் அப்படி மாத்தணுமா? இல்லை வட இந்தியா, மற்ற மாநிலங்களில் உள்ள எல்லாக் குழுவையும் ஒரே குழுவாக மாற்றணும்னு சொல்றாரா?னு எனக்கு விளங்கவில்லை!

ஆமா,  "உலக நாயகன்" ஏன் இந்தியாவோட நிறுத்திக்கிட்டாரு? னு தெரியலை, உலகத் திரைப்பட கலைஞர்கள்னு மாத்த வேண்டியதாக சொல்லியிருக்கலாம்.

ஏன் கமல் இப்படி ஒரு டிஸ்க்ரிமினேஷன்? உங்க பார்வை குறுகிய வட்டத்திலேயே நிக்கிதுனு தெரியலை.

"நாம் தமிழர்" சீமானுக்கு இது பிடிக்கவில்லை போலும்! தமிழ் தமிழர்னு பொங்கி எழுகிறார்..

--------------------

உங்களுக்கு எப்படினு தெரியலை, எனக்கு ஒரு சில பதிவர்களை சுத்தமாக ஆகாது. எனக்கு ஆகாதுனா உடனே அவர்கள் கெட்டவர்கள்னு நெனச்சுப் புடாதீங்க. ஒருவேளை நான் "வில்லன்" னாவும், பிடிக்காத பதிவர்கள் "கீரோ"வாகக் கூட இருக்கலாம். 

அப்படிப்பட்ட ஒரு "கீரோ" ரொம்ப நாள் சென்று ஒரு பதிவெழுதினார். பதிவு, நடிகர் சங்கம் தேர்தல் பற்றியது. இந்தப் பதிவின் இடையில் ஏதோ வருண் பற்றி விமர்சனம். எனக்கும் இவருக்கும் எப்போவுமே சுத்தமாக ஆகாது. ஏன்? அவரு ஏனோ என்னை அவர்  "நண்பன்"னு நெனச்சுக்குவாரா என்னனு தெரியலை. என்னைப் பொருத்தவரையில் நான் அவர் நண்பனா இருக்க எப்போவுமே எனக்குத் தகுதி கெடையாது. இவர் எப்படினா எப்போவுமே தன்னை ஒரு படி மேலே வைத்துக்கொண்டு, மேதாவிபோலதான் பேசுவார்- பதிவா இருக்கட்டும் பின்னூட்டமா இருக்கட்டும் எல்லாவற்றிலும் இதே இழவுதான். அந்த "ஆட்டிட்டூட்" எனக்கு நண்பர்களிடம் சுத்தமாகப் பிடிக்காது.

இன்னும் புரியலையா?

இவர் சமீபத்திய பதிவில் "சங்கிலி முருகன்" னு "பூச்சி முருகனை" மனதில் கொண்டு தவறாக எழுதிவிட்டார். சரியா? இது ஒரு சாதாரணத் தவறுதான். எல்லாரும் செய்றதுதான். இதை வாசிச்ச ஒரு பின்னூட்டதாரர், அதை பின்னூட்டத்தில் சரி செய்யச் சொல்லி  சொல்ல முயல்கிறார்.

உடனே இவர்  என்ன செய்யணும்? "சாரிங்க, தப்பா எழுதிட்டேன். திருத்திடுறேன். நன்றி"னு சொல்லணும். ஒண்ணு தவறை சரி செய்யணும். இல்லைனா  நான் சொன்னது சரினு விளக்கம் கொடுக்கணும்.

என்னதான் சொன்னாரு?னா..  

எனக்கு ரொம்ப டச் விட்டுடுச்சு, அதனால் தவறா எழுதிட்டேன் போல. சரி செய்ய வந்த நீங்களாவது அதை சரியாச் சரிசெய்யாமல் அதில் தவறு செய்து இருக்கீங்களே?!!  னு சரி செய்ய வந்தவன் செய்ததுதான் தவறு. நான் செய்தால் அது தவறில்லை! எனக்கு டச் விட்டுப் போயிடுச்சுனு ஒரு கேவலமான சமாளிப்பு.

பதிவில் இவரு சொன்னது (சங்கிலி முருகன்)..
அரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிறது எனலாம்.சங்கிலி முருகன் யாரென்றும், அவர் வழக்கு தொடர்ந்து காலம் தொட்டு சுமார் 5 வருடங்களுக்கும் மேலாகியும்,குமரிமுத்து,எஸ்.வி.சேகர் போன்றவர்களை வெளியேற்றிய கால கட்டங்களில் புகைய துவங்கி இன்று கோபக்கனல்கள்,எதிர் மறுப்பு என பொது வெளிக்கு வந்து விட்டதால் கருத்துரிமை பங்காளியாகிறேன்.


பின்னூட்டத்தில் சரி செய்ய வந்தவர் பாவம்..
ராஜேஷ், திருச்சி said... Sangili Murugan???????? yepaaa adhu "poochi" Murugan.. October 12, 2015 at 10:15 AM

தப்பை சரி செய்யாமல் ஒரு சமாளிப்பு! (இன்னும் அந்தப் பதிவில் சங்கிலி முருகன் னுதான் இருக்கு)

ராஜ நடராஜன் said... திருச்சி ராஜேஸ்/நாந்தான் டச் விட்டுப்போய் தப்பா சொல்றேன்னா நீங்களாவது சொல்றதை ஒழுங்கா சொல்லக்கூடாதா:)
சங்கிலி முருகன்


Poochi Murugan lodges complaint on Radharavi
பூச்சி முருகன்

எனக்குத் தெரிய சங்கிலி முருகனுக்கும் இந்தப் பிரச்சினைக்கும் சம்மந்தமே இல்லை. அதை பின்னூட்டத்தில் சரி செய்யச் சொன்னதுக்கு எதுக்கு விதண்டாவாதம்? ஏன் இப்படி இருக்காங்கனு தெரியலை!

இந்தியர்கள் மனநிலை ஏன் இப்படி இருக்கு? "சாரி, தவறுதலா எழுதிட்டேன்..சரி செய்துவிடுகிறேன்" னு சொல்றது ஏன் அவ்வளவு பெரிய கஷ்டம்??.

இன்னும் அப்படியே அதை விட்டுவிட்டு புரியாதமாதிரி நடிக்கிறது. நீங்க அதைச் சொன்னீங்களா நான் இதை நெனச்சேன்னு எதையாவது சொல்றது..ஆனால்;

போடுறதெல்லாம் பெரிய மனுஷன் வேடம். உண்மையில் இருப்பது வெறும் வரட்டு கவுரவம்!

ஆமா, மேன்மை தாங்கிய பதிவுலகக் கண்மணிகள் நீங்க என்ன சொல்ல வர்ரீங்க?

ஆமா, உங்களுக்கு இது எல்லாம் ஒரு சாதாரண விசயம்தான். எனக்கு அப்படி இல்லை! அதனால் உங்க அறிவுரையை இங்கே பின்னூட்டத்தில் வைக்க வேணாம்! புரிதலுக்கு நன்றி!

*****************

Wednesday, October 7, 2015

இணையதளம் என்கிற தரமற்ற இடம்! போத்தீஸ், புலி!

போன வாரம் க ம ல ஹா ச ன் நடிச்ச போத்தீஸ் விளம்பரம் வெளிவந்தது. இதுபோல் ஒரு கமர்ஷியல் வரப்போவதாக முன்பே சொல்லீட்டாங்க என்பதால் விளம்பரம் ஒண்ணும் ஆச்சரியமாக இல்லை.

இதற்கிடையில் பல தளங்களில்  க ம ல ஹா ச ன் அவர்களின் அபிமானிகள், மற்றும் அவர் "பக்தர்கள்" இதில் வரப்போகிற வருமானத்தில் ஒரு பகுதியை எய்ட்ஸ் (உயிர்க்கொல்லி ?) நோயாளிகளுக்கு வழங்கப் போவதாக பேசிக்கொண்டார்கள். உடல் தானம் செய்தவர் இவர் என்பதால் இவருடைய பொதுநோக்குப் பார்வை, மற்றும் மக்கள் நல சேவைகள் என்றுமே சிறப்பாகவே இருக்கும்.

இவ்விளம்பரத்திற்காக க ம ல ஹா ச ன் எவ்வளவு பணம் வாங்கினார் என்பதும் யாருக்கும் தெரியாது.

இதெல்லாம் வெளியே சொல்லணுமா என்ன? ஆனால் எவனோ ஒரு மட்டமான ஆள்,   பொய்ச்சான்றிதழ் ஒண்ணை  உருவாக்கி, இந்த கமர்ஷியலுக்கு "க ம ல ஹா ச ன் 16 கோடி வாங்கியதாகவும், அந்தத் தொகையை அப்படியே "பெற்றால்தான் பிள்ளையா?" என்கிற ஒரு பொதுநல இயக்கத்துக்கு அளித்துவிட்டதாகவும் இணையதளம் எல்லாம் பரப்பிவிட்டுவிட்டான்!

 அந்தச் ச்செய்தி உண்மை இல்லைனு அந்த ஆர்கனைஷேசன் அறிவித்துவிட்டது! (கீழே பார்க்கவும்)


 Some of you have read tweet regarding a donation by Mr.Kamal Haasan to the Petralthan Pillaiya Trust ( PTP Trust). This is false. Spreading this info gives false hope to our children. Please share and retweet this msg. Please avoid spreading inaccurate information. - Msg from Mr.Rajeev Nambiar (Founder Trustee) #kamalhaasan #ptptrust

இந்தப் பொய் செய்தியை இணையதளத்தில் வெளியிட்டவன்  க ம ல ஹா ச ன் ரசிகரோ இல்லை க ம ல ஹா ச னை அவமானப் படுத்தணும்னு கிளம்பிய வேறொரு நடிகனின் ரசிகனோ தெரியவில்லை. என்ன ஒரு அநியாயம் இது?

சைபர் க்ரைம் போலீஸ் இவர்களை எல்லாம் ஏன் சும்மா விட்டு வைக்கிறதுனு தெரியலை. பிடிச்சு உள்ள போடுறதை விட்டுட்டு..


--------------------------------

 நம்ம விஜயண்ணாவுடைய புலிப் படம் வெளி வரும்போது, அரசியல்வாதி  யாரு வேலைனு தெரியலை, முந்திய நாள் வீட்டில் ஐ டி ரெய்ட்! படம் ரிலீஸ் ஆக தாமதமாகி பெரிய பிரச்சினை ஆயிடுச்சு. இது போதாதுனு சிறுவர்களுக்குனு சொல்லப் படும் இப்படத்திற்கு, யூ சான்றிதழ் வழங்கப்பட்டாலும், கவர்ச்சியாக, வல்கராக இருக்குனு சொல்லி தமிழ்நாடு அரசு வரிச்சலுகை தருவதை மறுத்துவிட்டது.
ஏன்னு தெரியலை நம்ம  விஜயண்ணா எங்கேயோ பார்த்துக்கிட்டு நிக்கிறாரு!

இதையும் புலினுதான் சொல்றாங்க- கூகுல் பண்ணிப் பாருங்க


படத்துக்கு ரிவியூ எல்லாம் ஒட்டு மொத்தமாக நல்லா வரவில்லை என்பது இன்னொரு சோகம்.  முக்கியமாக விஜய் ரசிகர்களை இப்படம் திருப்திப் படுத்த முடியவில்லை. அரைப்பரிச்சை லீவில் வெளிவந்ததால் குழந்தைகளையும், பெண்களையும் திருப்திப் படுத்தியதாக தோன்றுகிறது.

ஆனால் பட பட்ஜெட் 118 கோடினு சொல்றாங்க. அது உண்மை என்றால் போட்ட காசை எடுப்பதே கஷ்டம் என்கிற நிலையில் இந்தப் ப்புலி இருக்கிறது. நம்ம ர ஜி னி இந்தப்படம் பாத்துட்டு நல்லாயிருக்குனு ஒரு "கமர்ஷியல்" கொடுத்ததும்  இப்படத்தின் தோல்வியைக் கொண்டாட காத்துக்கிட்டு இருக்க அஜீத் விசிறிகளெல்லாம் கடுப்பாகிட்டாங்க போல.  ட்விட்டரில் ஆளாளுக்கு ரசினியைத் திட்டி தீக்குறாணுக!

தமிழர்களின் தரம் மட்டமானதுனு இப்போ ட்விட்டர்கள் மூலம் உலகம் தெரிந்து கொள்கிறது.

விஜயண்ணாவை, ஆயுதங்கள் (துப்பாக்கி, கத்தி) காப்பாத்திய அளவுக்கு, மிருகங்களும் பறவைகளும் (சுறா, குருவி, இப்போ புலி) காப்பாத்தவில்லைனு சொல்லி இனிமேல் விலங்குகள் பறவைகளிடமிருந்து "அண்ணாவை" தள்ளி இருக்கச் சொல்லி எல்லாரும் கேட்டுக்கிறாங்களாம்!

இதிலே கொடுமை என்னனா, ஐ டி ரெய்டின் விளைவால்  யு எஸ்ல படம் சரியான நேரத்தில் வெளி வரவில்லை என்பதால் எல்லாருக்கும்  "free pass" கொடுக்க வேண்டிய கட்டாயம் . யு எஸ் பட விநியோகஸ்தர்களுக்கு "இந்தப் புலியால்" பெரு நஷ்டம்!