Wednesday, August 13, 2014

வருணின் சுமாரான உளறல்கள் (2)

* மிஸஸ் டஃப்ட் ஃபயர் புகழ் (அதான் அவ்வை ஷண்முகி) ராபின் வில்லியம்ஸ் இறந்துவிட்டாராம்!!!  வாழப்பிடிக்கவில்லைனு தன்னைத்தானே அழித்துக் கொண்டாராம்! ஆமாம், தற்கொலையாம்! அவர் வாழ்க்கை, அவர் அதை என்ன வேணா செய்யலாம்! இதில் நான் சொல்ல என்ன இருக்கு?

 

இருந்தாலும்..

இவர் ஒரு "எண்டர்டெய்னராக" வாழ்ந்தவர். எல்லோரையும் தன் நடிப்பால் ரசிக்கவைத்தவர்!  சிரிக்க வைத்தவர்!  ஆனால் அவருடைய வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லையாம். யாருதான் இவ்வுலகில் சந்தோஷமாக இருக்காங்க? வாழ்வில்  தன்னைத்தானே ஏமாற்றி சிரித்து, உலகைப் புரிந்து  வாழத் தெரியாத ஒரு அப்பாவி போல இவரு...இவருக்கென்ன பிரச்சினைனு தெரியலை. இவரு  என்ன ஃபிஸிக்கல்லி சேலஞ்சிடா? இல்லை மெண்டல்லி சேலஞ்சிடா? காசுக்கு பிரச்சினையா? பொண்டாட்டிக்கு பஞ்சமா? (மூனுதர கல்யாணம் பண்ணி இருக்காரு). தன் மனதை மனச்சலவை செய்து தன்னையே ஏமாற்றி  சந்தோசமாக வாழத் தெரியாதவர் பாவம்! யாருதான் பிரச்சினைகளால் குழம்பவில்லை? எல்லோரும்தான் குழம்புகிறோம். வாழவேண்டுமென்றால் குழப்பத்தில் இருந்து வெளிவர கற்றுக்க வேண்டும். மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். இவரு மட்டும்தான் குழம்பினாரா? Buddha was confused too. He did not commit suicide! He realized what human mind is all about! அதுக்கப்புறம் புத்தர் குழம்பவே இல்லை!

அதனால நான் என்ன சொல்றேன்னா..Don't THINK too much about life! If you are a sensible person, I am sure you can not find any beautiful meaning in the life we live! You should just know how to fool yourself to live happily.That's all. Just LIVE! :-))

**************************

* படம் வந்து ஒரு வருடத்திற்குப்பிறகு பலராலும் பலவாறு புகழப்பட்ட  தங்கமீன்கள்.. கடைசியா பார்த்தாச்சு.

 

செல்லம்மா மாதிரி ஏகப்பட்ட குழந்தைகளைப் பார்த்தாச்சு.ஆனால் "கல்யாணி' மாதிரி ஒரு அப்பாவை இங்கேதான் பார்க்க முடிஞ்சது.

 நான்கூட  செல்லம்மா மாதிரித்தான் படிச்சேன். மக்காத்தான் இருந்தேன். ஆமா அரசு பள்ளியில்தான். ஆமா தமிலு மீடியம்தான்! கடைசியா செல்லம்மா போயி "செட்டில்" ஆகும் அரசினர் பள்ளியைவிட பலமடங்கு  மட்டமான பள்ளிதான் நான் "ஐந்தாங் கிளாஸ்" வரை படிச்சது! நெஜம்மாத்தான் சொல்றேன்..ஆமா, யார் சொன்னா சிறுவயதில் சுமாராப் படிச்சா பின்னால நல்லாப் படிச்சு வெற்றியடைய முடியாதுனு? என்ன முகத்தை சுழிக்கிறீங்க? இந்தப் படத்தை வைத்து நான் சுயதம்பட்டம் அடிக்கிறேன்னா? :)

சரி, படத்துக்கு உள்ளே இறங்குவோம்..

உங்க குழந்தை, "போட்டிமனப்பான்மை" இல்லாமல் வித்தியாசமான சிந்தனைகளுடன் இருந்தால்... அவளு(னு)டைய "learning style" வேறு மாதிரியாக இருந்தால் அவள் மனநிலைக்கேற்ப சரியான பள்ளியில் சேர்க்க வேண்டியதுதான் சரி.

இதை இவ்வளவு மிகைப்படுத்தாமல் செய்கிற தாய் தந்தையர்லாம் "ரியல் லைஃப்"ல இருக்கத்தான் செய்றாங்க. I don't have to go and search anywhere to find such parents! நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம். ராம், அப்படிப்பட்ட சாதாரணமான ஒரு தந்தை ரோலை ரொம்ப கஷ்டப்பட்டு,  மிகைப்படுத்தி செய்றாரு, பாவம்.

சப்போஸ் +2 ல கெமிஸ்ட்ரில 200/200  வாங்கிய மாணவ/மாணவிகளுக்கு அந்த புத்தகத்தில் இருக்க கெமிஸ்ட்ரி எல்லாம் அழகா புரிஞ்சி இருக்கும்னு நெனச்சீங்கனா, நீங்களும் மக்குதான்! அந்த 200 வாங்கிய  பையனோ, பொண்ணோ "ஸ்மார்ட் ஸ்டூடண்ட்" அவ்ளோதான். அதுக்காக 200 வாங்கியவன்/ள் நல்ல "கெமிஸ்ட்" வருங்காலத்தில் நோபல்பரிசு பெறுவார் என்றெல்லாம் சும்மா ஒளற முடியாது. Scoring high marks has nothing to do with your deep understanding in that subject. அப்படி உண்மையிலேயே ஆழமாகப் படிக்கணும் புரியணும்னு நெனைக்கிற மாணவர்கள் இருநூறெல்லாம் வாங்க முடியாது. They get stuck somewhere- trying to understand something deeply as they dont have enough time. நல்லாப் படித்து மதிப்பெண் எடுத்தலும், புரிதலும் வேற வேற!

சரி படத்துக்கு வருவோம்.

எனக்கு இது புரியலை..ஒரு சீன்ல செல்லம்மா  தன் தோழியிடம் பேசும்போது  அந்த வீட்டு ஜன்னலை காட்டினார்கள். அதான் அந்த ஜன்னல் மூலமாக அவள் தன் தோழியிடம் பேசுவதை..

அந்தத்தோழி உண்மையானவளா?  இல்லைனா கற்பனை கேரக்டரா???

ஏன் கேக்கிறேன்னா. அந்த ஜன்னல்..

அந்த ஜன்னல் இருக்குல்ல.. அதென்ன அது.. அந்த ஜன்னலை வெளியே இருந்து திறக்க முடியுமாம், மூட முடியுமாம். உள்ளே இருந்து எதுவும் செய்ய முடியாதாம்!!!

தெரியாமல்த்தான் கேக்கிறேன்..ஒரு வீட்டில் ஜன்னல் எதுக்கு வைக்கிறோம்? வீட்டில் உள்ளவர்கள் தன் "ப்ரைவசி"க்காக! தேவையான போது  அதை "அட்ஜஸ்ட்" செய்வதுக்காகத்தான்னு நான் ஒரு லெக்ச்சர் கொடுக்கணுமா என்ன?. இது ஏன் இப்படி முட்டாள்த்தனமான ஒரு"ஜன்னல் கட்டமைப்பு" அதுவும் ஒரு சிறிய வீட்டில்? எனக்குப் புரியலை! புரிஞ்சவங்க தெளிவு படுத்தலாம்- என் அறியாமையைப் போக்கலாம்!!! இயக்குனர் ராம், தன்னை ஜீனியஸாகக் காட்டணும்னு எல்லாரையும் முட்டாளாக்கி இருக்காரா? இல்லை எங்க வீட்டில் மட்டும் முட்டாள்த்தனமா  ஜன்னலை மாத்தி வச்சுட்டாங்களா? Am I missing something here? படத்தை இன்னொருதர பார்க்கவா? அதெல்லாம் முடியாது. தங்கமீன்களில் பாராட்ட எவ்ளோவோ விடயம் இருக்கு? ஏன் வருண் இப்படி?னு யாரோ தலையில் அடிச்சுக்குவதுபோல் ஒரு உணர்வு.

*********************

*  சொந்தக்கதை..

"டேய் மாப்ளே!  இவன் என்னடா சொல்றான்? பறவைகள் இவன் வீட்டுக்கு கூட்டம்கூட்டமா வருதாம்! இரை போட்டானாம். எல்லாத்தையும் காலி பண்ணிட்டு திரும்ப வருதாம்! ஆனால் இவன் சொல்ற கதைக்கு ஒரு ஃபோட்டோவையும் காணோம். ஏதோ கூகில் இமேஜில் இருந்து நாலு படத்தை வெட்டி ஒட்டியிருக்கான், நாதாரி. ஆத்தாடி! என்னமா கதை விடுறானுக! நாங்களும்தான் சொல்லலாம் எங்க வீட்டில் மானாடுது, மயிலாடுதுனு, குயில் கூவுதுனு" ..

யாரு இப்படி பேசிக்கிறது? இதுமாதிரித்தான்  எங்க ஊரில் ஒருத்தன் இல்லாதபோது அவன் "நண்பர்கள்" எல்லாம்  அவனைப் பற்றி புறம் பேசிக்குவானுக!

அதனால எதுக்கு வம்பு?  எங்க வீட்டில் வந்து செல்லும்  விருந்தாளிகளை காட்டிடுவோம்..நாலு சுமாரான படத்தை கொடுத்துடுவோம்!இரை நெறையா இருக்கா?

அணில் வந்து கொட்டிவிட்டுடுச்சு பாருங்க. இரை எல்லாம் கீழே விழுந்து கெடக்குஆமா, என் பங்கு எங்கே? னு புறாவோட இன்னொருத்தரு போட்டிக்கு

எல்லாம் காலி! come on Varun! ரிஃபில் டைம்!!னு குருவி கத்துது..உளறல்கள் தொடரும்...Friday, August 8, 2014

வருணின் சுமாரான உளறல்கள் (1)

* நண்பர் கிரி, நரேந்திர மோடிக்கு ஓட்டுப் போடச் சொல்லி சிபாரிசு செய்த ஞாபகம் இன்னும் இருக்கு. தற்போது மோடி மேல் பல விமர்சனங்கள் வர ஆரம்பித்துவிட்டதும், அதை "சமாளிக்க" பொறுப்பாக ஒருபதிவு போட்டு இருந்தார். என்னடா சொல்றார் நண்பர் கிரினு னு போயிப் பார்த்தால்..

பொதுமக்கள் எவரும் தான் கெட்டுப் போக வேண்டும் என்று நினைத்து வாக்களிப்பதில்லை. அனைத்து மக்களின் எண்ணமும் நாடு முன்னேற வேண்டும், மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும், அனைத்து மக்களும் அடிப்படை வசதிகளைப் பெற வேண்டும் என்பது மட்டுமே!

 கடந்த எலக்சன் நடந்து முடிந்த போது என் தந்தையிடம்  தொலைபேசியில் பேசும்போது ஓட்டுப் போடும் பொது மக்கள் மனநிலை பத்தி விசாரித்தேன். "வீட்டிற்கு வந்து ரூ 1000 கொடுத்து ஏழைகள் ஓட்டை வாங்கி விடுகிறார்கள்" என்றார். சரி, பணத்தை "வாங்கிட்டு வேற யாருக்காவது ஓட்டுப் போட்டால் எப்படித் தெரியும்?" னு நான் குதற்கமாகக் கேட்டேன். அதற்கு அவர், "அந்தமாதிரி காசு வாங்கியவர்கள் யாரும் வஞ்சகம் செய்வதில்லை! "என்றார். ஏழைகள் ஓட்டு இப்படித்தான்அவர்கள் சம்மதத்துடன் ஒரு விலை கொடுத்து  வாங்கப் படுகிறது.. இப்போ மேலே போயி கிரி சொல்றதை வாசிச்சுப் பாருங்க!

ஆமா நண்பர் கிரி, பொதுமக்கள் னு யாரைப்பற்றிச் சொல்லுகிறார்??? :))) 1000 ரூபாய் வாங்கிவிட்டு அதை வைத்து  யார் நல்லவர்கள்னு பகுத்தறிந்துதான் ஓட்டுப் போடுறாங்களே இவர்களையா??!!! :)))

BTW, I am not judging, Mr. Giri from this.  ஒரு சில விசயத்தை நியாயப்படுத்த முற்படும்போது, ஒரு சில முக்கியமான காரணிகளை "ஓவர் லுக்" செய்வதுதான் மனித இயல்பு போலும். அதைத்தான் கிரி இங்கே செய்கிறார்.

********************

* இது சொந்தக்கதை..எங்க வீட்டில் "பேக் யாட்"ல ஒரு "பறவைகளுக்கு இரை வைக்கும்"  bird feeder  ஒண்ணு வைத்து இருக்கோம். உடனே "உங்க அட்ரஸ் என்ன, வருண்? பசியால் வாடும் பறவைகளை அனுப்பி வைக்கிறேன்" னு சொல்லாதீங்க! :) மேலே படிங்க!

 
 


These photos are from the WEB!! Not mine!!!

மொதல்ல அதில் தானியங்களை போட்டு வைத்தால் ஒண்ணு ரெண்டு குருவிகள், ராபின், கார்டினல்ஸ் போன்றவை  வந்தன. பறவைகள் எங்கவீட்டு விருந்தினராக வந்து சாப்பிட்டுவிட்டு சென்றன. வாரம் ஒரு முறை சுமார் ஒரு 500 கிராம் எடையுள்ள தானியங்கள் நிறைத்து வைத்தால், வருகிற விருந்தினருக்கு  சரியா வருவது போலிருந்தது. எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு.

இப்போ திடீர்னு என்னடானா, இவைகள் போக, புதிதாக மணிப்புறாக்கள், மேலும் பல பலப் பறவைகளும் வருகின்றன. அழகழகான பறவைகளாக பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்.

இதற்கு இடையில், அணில்கள் எப்படியாவது ஏறிப் போயி அந்த "bird feeder" வைத்திருக்கும் தானியங்களை கொட்டிவிட்டு, கொட்டிக்கிடக்கும் தானியங்களை  அவைகளின் பங்குக்கு, சாப்பிடும். அப்படி கொட்டியதை முயல்கள் மற்றும்  புறாக்கள் போன்ற "பெரியவர்கள்" சாப்பிடுவாங்க.

இப்படியே ஒரே அணில், முயல், புறா, குருவினு ஒரே கூட்டம் கூடிடுது!

கூட்டம் அதிகமாகிவிட்டதால் இப்போ ஒரு நாளைக்கு ஒரு கிலோ தானியம் வைத்தாலும் அவர்களுக்கு போதவில்லை! நெஜம்மாத்தான் சொல்றேங்க! :)
 


மேலே உள்ளது  தானியம் உள்ள பாக்கட்தான். $ 8 க்கு வாங்கலாம். (20 பவுண்ட்ஸ்)! இந்த "பேக்" ஒரு வாரத்துக்கு வர மாட்டேன்கிறது!! போற போக்கைப் பார்த்தால் இனிமேல் இந்த "பாக்"  ரெண்டு நாளைக்குக்கூட வராதோ என்னவோனு பயம்மா இருக்கு!

ஆக இந்த பறவைகளுக்கு இரை போட்டு "பேங்க்ரப்ட்" ஆன முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்னு நினைக்கிறேன். :=))))

இதிலே ஒரு நல்ல விசயம் என்னனா.

எங்க தக்காளி தோட்டத்தில் (ஏதோ நாலு ஏக்கர்ல தோட்டம் இருக்குனு நெஅன்ச்சுக்காதீங்க! சும்மா தொட்டியிலேதான் இருக்கும்) வருகிற தக்காளிகளை நம்ம அணிகள் எப்போவுமே விட்டு வைப்பதில்லை. இப்போ இந்த தானியங்களை சாப்பிட்டுவிடுவதால் எங்க வீட்டருகில் உள்ள அணில்கள் தக்காளிப் பழங்களை நாங்க பறிக்கிறதுக்கு முன்னாலயே தட்டிப் பறிப்பதில்லை!


  

 

 These photos are also from the WEB!! Not mine!!!


 எங்க வீட்டில் திரியும் அணில்கள் எல்லாம் இந்த பறவைகளுக்கு இடும் தானியங்களை சாப்பிட்டுவிட்டு  வயிறு ரொம்பி, தக்காளியை தொடாமல் விட்டு விட்டு போய் விடுகின்றன!!

Now, accidentally we have found a solution for protecting the tomatoes from our Squirrels!! :))) 

ஆக,  "வயிறு நெறைய எனக்கு சாப்பாடு போட்டால், நான் ஏன் உன் தக்காளியை திருடுறேன்?"  என்கிறார், அணிலார்! :))

Wednesday, August 6, 2014

சர்ச்சைக்குரிய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கட்டுரை: முழு உரை

இது சர்ச்சைக்குரிய கட்டுரை இது அதற்கான அங்கீகாரம் இன்றி வெளியாகியுள்ளன மற்றும் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக இல்லை என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கை நிபந்தனையற்ற மன்னிப்பு ஒப்பந்த இது இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் வெளியான இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் அரசு முதல் நீக்கப்பட்டுள்ளது.

'எப்படி அர்த்தமுள்ள மோடி ஜெயலலிதாவின் காதல் கடிதங்கள் உள்ளன?'

ஹெல் ஒரு பெண் போன்ற எந்த கோபத்திலிருந்து அவர்கள் கூறுகிறார்கள் என்று பொருத்தமாக இலங்கையை நோக்கி சூழலில் ஜெயலலிதா உணர்வுகளை வைக்கிறது தாழ்ந்த நடக்கிறது. ஆனால், சர்வதேச ஆய்வுகள் சமீபத்தில் தமிழ்நாடு இந்திய இலங்கை உறவுகள் இடையே வர முடியாது என்று வெளிப்படையாக தெளிவுபடுத்தியுள்ளார் பண்டாரநாயக்க மையம் அழைப்பின் பேரில் இலங்கை வந்து இலங்கை ஜனாதிபதி நன்றி டாக்டர் சுப்ரமணியம் சுவாமி தலைமையிலான பாஜக அதிக இயங்கும் குழு கைது ஆனால் படகுகள் பறிமுதல் போது இந்திய மீனவர்கள் விடுவிப்பு. இது இந்திய தரப்பில் எந்த மீன் ஏனெனில் இலங்கை கடற்பரப்புக்குள் இழுக்க இந்திய மீனவர்கள் கட்டாயம் என்று படகு உரிமையாளர்கள் இருந்தது. இந்த தமிழ்நாடு முதலமைச்சர் புறக்கணிக்க முடியாது மற்றும் அவரது சண்டித்தனம் மோடி தலைமையிலான பாஜக அரசு இல்லையெனில் நேர்மறையான dampening என்று சில உண்மைகளை உள்ளன. அவள் கொடுமைகளை நிறுத்த இந்திய கடல் மீன் மீன்கள் இருந்தால் இந்திய மீனவர்கள் வாழ்வாதாரத்தை ஒரு புதிய பாதை உறிஞ்சப்பட்டு எப்படி பார்த்து தொடங்க ஆலோசனை வேண்டும். சர்வதேச கடல் எல்லை கோடு 1974 ல் வரையப்பட்டு 1976 இருதரப்பு ஆகும் இந்தியா மற்றும் இலங்கை மற்றும் தமிழக முதல்வர் இடையே உடன்பாடு அழ மற்றும் கூப்பாடு போடு ஆனால் அவர் 2 ஏகாதிபத்ய நாடுகள் கவுரவித்தது இந்த ஒப்பந்தத்தின் சட்டப்பூர்வ மாற்ற முடியாது. Katchchetivu செய்யப்பட்டது சர்வதேச கடல் எல்லைக் கோட்டினை மற்றும் Katchchaitivu இலங்கை கூற்று இலங்கையில் அதிகார வரம்பின் கீழ் வந்தது 1924 ல் இதுவரை திரும்பி 1876 என தீவின் கூட காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களால். இலங்கைக்கு சொந்தமான தீவில் கருதப்படுகிறது இலங்கைக்கு சொந்தமான என குறிப்பிடப்படுகிறது இது தமிழக மீனவர்கள் யார் சர்வதேச கடல் எல்லைக் கோட்டினை மீறியதற்காக மற்றும் இடத்தில் ஒரு இருதரப்பு ஒப்பந்தம், இவ்வாறு இலங்கை கடற்பரப்புக்குள் வேட்டை மீனவர்கள் கைது இலங்கை மீது faulted. நாம் கையில் பிரச்சினையை சர்வதேச தடை கீழே trawling விளைவாக பாதிக்கப்படும் கடல் படுக்கையில் இந்திய தரப்பில் விளைவாக என்று உணர. வணிக மீன்பிடி தமிழ்நாடு கடற்கரை இந்திய கடல் மீன்கள் உள்ளன என்று பணம் எதில் இருந்து மூல பார்த்து புறக்கணித்து, ஏனெனில் இது. இந்திய கடல் மீன்கள் உள்ளன, ஏனெனில் இலங்கையில் குற்றம். தமிழ்நாடு அரசு சர்வதேச அளவில் தடை கீழே படகொன்று செயல்பட அனுமதிப்பது பழி எடுக்க வேண்டும். இந்தியா வெறுமனே மீனவர்கள் சேர்ந்தவை என்று இறால்கள், இறால்களின் மற்றும் மீன் கீழே படகொன்று பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் வேட்டை மற்றும் திருடி இருந்து மில்லியன் கணக்கான செய்து விட்டது என்று நன்றாக தெரியும் இலங்கை. ஆண்டுகள் கொண்டு கணக்கிடப்படுகிறது இந்த வேட்டையாடப்பட்ட மீன் இலங்கைக்கு திருட்டு மற்றும் வருவாய் மில்லியன் இழப்பு பங்களிக்கிறது. இந்தியா சேர்ந்தவர்கள் இல்லை ஆனால் இன்னும் முக்கியமாக மீன்பிடி முறையில் முற்றிலும் கடல் சூழல் அழித்து கடல் வாழ்க்கை அழித்து முடிவடையும் மற்றும் இறுதியில் எந்த மீன் வழிவகுக்கும் என்று பிராந்திய மனித உரிமை மீறல், மீன் திருட்டு அல்ல, ஏனெனில் இந்த போக முடியாது இலங்கை கடற்பரப்பிற்குள் அதே. கடல் வாழ்க்கை சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் எதிர்கால எந்த இராஜதந்திர விவாதங்களில் முக்கியத்துவம் எடுக்க வேண்டும், என்ன ஆகின்றன.


  • தமிழ்நாடு அரசு மற்றும் அதன் முதலமைச்சர் பல கோணங்களில் தவறு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • இந்தியா மற்றும் இலங்கை இடையே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச கடல் எல்லைக் கோட்டினை மற்றும் இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி தமிழக மீனவர்கள்
  • சர்வதேச அளவில் தடை என்று கீழே படகொன்று பயன்படுத்தி தமிழக மீனவர்கள்
  • தமிழ் நாட்டுக்கான கடல் படுக்கையில் ஏனெனில் மீன் இந்திய மீனவர்கள் கீழே trawling மற்றும் அதனால் எந்த மீன் அழித்து
இந்திய கடலோர கடல் வாழ்க்கை அழித்து இந்திய மீனவர்கள் விளைவாக மீன்கள் என்றால், தமிழ்நாடு அதிகாரிகள் இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் வாழ்வது எப்படி பார்க்க நடவடிக்கைகளை? தீர்வு மற்ற நாடுகள் சேர்ந்தவை என்று கடல் இழுக்க அல்ல. இது ஒரு நீண்ட நேரம் தீர்வு அல்லது ஒரு சாத்தியமான தீர்வு அல்ல. தமிழ்நாடு அதிகாரிகள் தங்களது மீனவர்கள் வாழ்வாதாரத்தை ஒரு இக்கட்டான எதிர்கொள்ளும் இலங்கை இந்த குற்றம் முடியாது என்று இந்த யதார்த்தங்களை கணக்கில் எடுத்து விளைவாக உள்ளது. இந்திய மீனவர்கள் மற்ற நாடுகள் சேர்ந்தவை என்று கடற்பகுதியில் இழுக்க அனுமதி வெறும் தமிழக முதல்வர் வலது கொடுத்து காரணங்களை பட்டியல் வெளியே வரும்? பாஜக அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்து பாராட்டப்பட மற்றும் கைது இந்திய மீனவர்கள் விடுதலை ஆனால் படகுகள் பறிமுதல் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் ஒப்புதல் பாராட்டப்படுகிறது. தமிழ்நாடு ஜீவனோபாயத்தை இலங்கை கடல் வேட்டை தமிழக மீனவர்கள் விளைவாக பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மீனவர்கள் என்பதை மறந்து தெரிகிறது. அதன் சொந்த மீனவர்கள் மீட்பு வந்து இலங்கை மீனவர்கள் மறுத்தார் வாழ்வாதார குறைகளை கொண்டு வருகிறது இலங்கை அரசு தவறு கண்டுபிடிக்க கூட்டமைப்பு எப்போதும் தயாராக இந்த அதன் சொந்த மக்கள் மீது கூட்டமைப்பு நேர்மையும் தொகுதிகளை மிகவும் பேசுகிறார். தமிழக முதல்வர் சமீபத்திய கடிதத்தில் நாம் ஆனால் இந்த சில அவரது அல்லது அவரது ஆதரவாளர்கள்! சேர்ந்தவை வியக்கிறேன் முடியும், படகுகள் விடுவிக்க கோரி இயக்கிய தமிழக முதல்வர் தமிழக மீனவர்கள் சர்வதேச மீறியதற்காக என்று தெரியும் போது எல்லைகளை நிர்ணயித்துள்ளனர் கடல் மற்றும் வேட்டையாடிய சர்வதேச தடை கீழே படகொன்று பயன்படுத்தி போது, அது இலங்கையின் எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய பிரதமர் கேட்க நியாயமற்றது ஆகும். வெளிப்படையாக அவர் இரு நாடுகள் இடையே கட்டப்பட்டது என்று நல்லெண்ணம் தொந்தரவு போது இந்திய பிரதமர் புகழ் பள்ளம் முயல்கிறது. அவரது நடவடிக்கைகள் வெளிப்படையாக தொடர்ச்சியாக வரும் தமிழ்நாட்டின் அரசாங்கங்கள், இந்திய மத்திய அரசு கிட்டத்தட்ட கொலை வைத்து அங்கு சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு தொடர்ந்து இராஜதந்திர நெறி இல்லாத மற்றும் நேர்மையற்ற கொள்கைகள் மற்றும் ஒரு கண்ணி மீது சீரமைக்கப்பட்டது, உள்ளன. தமிழக முதல்வர் பின்னர் அந்த விட விரைவில் கற்று இருக்கலாம் நரேந்திர மோடி தனது சண்டித்தனம் அச்சுறுத்தல்கள் அல்லது ஆட ஒரு கைப்பாவை அல்ல. அவள் நியாயமற்ற வெடிப்புக்களில் மோடி தர்மசங்கடத்தில் முயற்சிக்க கூடாது. அவர் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டினை கடக்க அனுமதி வேண்டும் என்று கோரி இருந்தன என்றால் அது புதிய இந்திய பிரதமர் நன்றாக இருக்காது ... இது? ஜெயலலிதா வரை என்று குழப்பம் . சிறந்த மற்றும் நடைமுறை ஆட்சி நோக்கி இயக்கிய மோடி மந்திரம் மூலம் அதை தமிழக முதல்வர் இந்திய கடல் மீன் மீன்கள் யார் இந்திய மீனவர்கள் வாழ்வாதாரத்தை சவால்களை சந்திக்க எப்படி தனது கவனத்தை என்ற சிறந்த உள்ளது. வேட்டையாடிய தீர்வு அல்ல.

Source (auto translation by google) :

http://www.outlookindia.com/news/article/Lankas-Article-of-Jayalalitha-Full-Text/852631

 --------------------------------

உண்மைதான்! The translation sucks!!! 

நான் மொழிபெயர்ப்பு செய்யலைப்பா! நம்ம கூகில் செய்த "தமிழ்க் கொலை" இது! என்னை விட்டுடுங்க! இது ஒரு செண்ஸிடிவ் மேட்டர் என்பதால் நான் மொழிபெயர்ப்பு செய்ய முயலவில்லைனு சொல்லலாம்தான். ஆனால் எனக்கு நேரமும் இல்லை என்பதே உண்மை!Read the original in English!This is the controversial article on Prime Minister Narendra Modi and Tamil Nadu Chief Minister Jayalalithaa published on the Sri Lankan Defence Ministry website for which Sri Lanka has tendered an unqualified apology, saying it had been published without appropriate authorisation and did not reflect the official position of the Government of Sri Lanka or Ministry of Defence and Urban Development and has since been removed.

'How meaningful are Jayalalitha’s love letters to Narendra Modi?'

Hell hath no fury like a woman scorned they say and that aptly puts to context the feelings of Jayalalitha towards Sri Lanka. But, the BJP high powered delegation led by Dr. Subramaniam Swamy who arrived in Sri Lanka at the invitation of the Bandaranaike Centre for International Studies recently made explicitly clear that Tamil Nadu would not come between Indo-Lanka relations and also thanked the Sri Lankan President for arresting but releasing the Indian fishermen while confiscating the boats. It was the boat owners that forced the Indian fishermen to poach into Sri Lankan waters because the Indian side had no fish. These are some realities that the Chief Minister of Tamil Nadu cannot ignore and her tantrums are dampening the otherwise positive outlook of the Modi-led BJP Government. She should be advised to stop her tantrums and start looking at how the Indian fishermen can be absorbed into a new avenue of livelihood if there are no fish to fish in Indian waters.

The International Maritime Border Line drawn up in 1974 and 1976 is a bilateral agreement between India and Sri Lanka and Tamil Nadu Chief Minister can cry and hoot but she cannot change the legality of this agreement honored by the 2 sovereign nations.

Katchchetivu came under the jurisdiction of Sri Lanka following the IMBL and Sri Lanka’s claim to Katchchaitivu was made in 1924 while as far back as 1876 the island was referred to as belonging to Sri Lanka even the colonial invaders regarded the island as belonging to Sri Lanka.

Thus, with a bilateral agreement in place it is Tamil Nadu fishermen who are violating the IMBL and the arrest of fishermen poaching into Sri Lankan waters cannot be faulted on Sri Lanka.

We realize that the issue at hand is as a result of the Indian side of the marine bed affected as a result of internationally banned bottom trawling. It is because commercial fishing has ignored to look after the source from which it makes money that there are no fish on Indian waters along the Tamil Nadu coast. Sri Lanka is not to be blamed because there are no fish in the Indian waters. The Tamil Nadu Government must take blame for allowing internationally banned bottom trawlers to operate.

We are well aware that India had been making millions from poaching into Sri Lankan waters using bottom trawlers and stealing the shrimps, prawns and fish that ideally belong to the fishermen of Sri Lanka. These poached fish calculated into years would account for theft and loss of millions of revenue to Sri Lanka. This cannot go on not just because it is a violation of territorial rights, theft of fish that do not belong to India but more importantly the manner of fishing will end up totally ruining the marine environment and destroying marine life and eventually lead to no fish on Sri Lankan waters as well.

The environmental impact and future of marine life is what should take prominence in any diplomatic discussions.

  • The Tamil Nadu Government and its Chief Minister should accept fault on several angles.
  • Tamil Nadu fishermen violating internationally recognized IMBL and bilateral agreement between India and Sri Lanka
  • Tamil Nadu fishermen using bottom trawlers that are internationally banned
  • Tamil Nadu coast marine bed destroyed because of bottom trawling and so no fish for the Indian fishermen to fish
If the Indian coast had no fish as a result of the Indian fishermen destroying the marine life, should the Tamil Nadu authorities have taken measures to look into how the Indian fishermen and their families would survive? The solution is not to poach on waters that belong to other nations. It is not a long time solution or a viable solution. It is as a result of Tamil Nadu authorities not taking to account these realities that their fishermen are facing a predicament of no livelihood and Sri Lanka cannot be blamed for this.

Would Indian fishermen be allowed to poach in territorial waters that belong to other nations just because the Tamil Nadu Chief Minister comes out with a list of reasons giving them right to?

The BJP Government is commended for taking a stand and appreciated for approving the measures taken by Sri Lanka in arresting and releasing the Indian fishermen but confiscating the boats. Tamil Nadu seem to have forgotten that it is the Sri Lankan Tamil fishermen whose livelihood was affected as a result of Tamil Nadu fishermen poaching on Sri Lankan waters. The TNA ever ready to find fault with the Sri Lankan Government has not come to the rescue of its own fishermen or brought up the grievance of the Sri Lankan fishermen denied livelihood and this speaks volumes of the sincerity of the TNA towards its own people too.

With the latest letter of the Tamil Nadu Chief Minister directed at demanding the release of the boats, we can but wonder whether some of these may belong to her or her supporters!

When Tamil Nadu Chief Minister is aware that the Tamil Nadu fishermen are violating internationally demarcated waters and poaching while also using internationally banned bottom trawlers, it is unjustified to ask the Indian Prime Minister to take action against Sri Lanka. Obviously she is attempting to dent the popularity of the Indian Prime Minister while also disturb the amity that is being built between the two nations. Her actions are obviously aligned to the undiplomatic and unscrupulous policies followed by the Sonia-led Congress Government where the Central Government of India was virtually kept strangulated and on a noose by successive Tamil Nadu Governments.

Tamil Nadu Chief Minister may learn sooner than later that Narendra Modi is not a puppet to dance to her tantrums or threats. She should not attempt to embarrass Mr. Modi by her unjustified outbursts. It will not look good on the new Indian Prime Minister if he were to demand that Indian fishermen be allowed to cross the IMBL into Sri Lankan waters….is this the mischief that Jayalalitha is upto?

With the Modi mantra directed towards better and practical governance it is best that Tamil Nadu Chief Minister directs her attention at how to meet the livelihood challenges of Indian fishermen who have no fish to fish on Indian waters. Poaching is not the solution.

Tuesday, August 5, 2014

வைரஸ் அட்டாக்! தமிழ் பதிவுலகம் சாகிறது! தமிழும் விரைவில் சாகும்!

தமிழ்மணத்திற்குள் நுழைந்தால் , "கல்லாப்பட்டி" "ஐ கிறுக்கன்" " அஞ்சனா, எம்" "சேகர் எஸ்" "ஈசன் ஈ" என்கிற வைரஸ்களின்   நூறு குப்பைகள்தான் நிறைந்து வழிகிறது. கமர்ஷியல் தளம் நடத்தும்  இந்த குப்பைப் பதிவர்கள் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல்  சுத்தமான வியாபார நோக்கில் எழுதும் குப்பைகளை ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அள்ளிக்கொட்டுகிறார்கள்.

திரைமணம் பற்றிக் கேக்கவே வேண்டாம்!

தமிழ் பதிவுலகில் நுழைந்த வைரஸ்களான  இவர்கள் ஆக்கிரமிப்பால் சமீபத்தில் தமிழ்மணம் திரட்டியின் தரம் பல மடங்கு குறைந்துள்ளது.

தமிழ்மண நிர்வாகிகளுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை,  இதுபோல் பதிவர்களை கொஞ்சம்கூட வடிகட்டுவதே இல்லை!

எந்தவித கட்டுப்பாடுமில்லாமல் மேற்படியார்கள் பதிவெழுதுகிறேன் என்று சொல்லி குப்பைகளை அள்ளிக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

நிறைந்து வழியும் இப்பதிவர்களின் குப்பைப் பதிவுகளைப் பார்த்து தமிழ்மணத்திற்குள் நுழையவே பயம்மாக இருக்கிறது.

* தமிழ்மணம் இந்த வைரஸ்கள் தாக்குதலால் மிகவும் தரம் தாழ்ந்துள்ளது.

* பொறுப்பற்ற நிர்வாகத்தால் தமிழ்ப் பதிவுலகம் இப்போதே வேகமாகச் சாவதுபோல் ஒரு பிரமை உண்டாகிறது.

* பாவம், தமிழ்  இன்னும் கோடானுகோடி ஆண்டுகள் வாழும் என்று ஒரு சிலர் கனவு கண்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இதேபோல்,  தமிழ்த் திரட்டி நடத்துபவர்கள்  பொறுப்பின்மை தொடர்ந்தால், இந்த வைரஸ்களின் அட்டாக்கினால் தமிழ் நம் கண் முன்னாலேயே சாவதை நாம் பார்க்க முடியும்.

தமிழைக் கொன்ற பாவம் பொறுப்பற்ற தமிழ்மண நிர்வாகிகளையும் நிச்சயம் சேரும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கா?


Sunday, August 3, 2014

இதயத்துடிப்புடன் வாழும் பிணங்கள்!

ரூபாவா? அவளா இவள்! அவளேதான்! இல்லையே அவள்தான் பிணமாகிவிட்டாளே! ஆமாம், பழைய நண்பன் கார்திக்கும்தான்!  நண்பன் ரவி செத்து ஐந்து வருடமாகிறது! நண்பன் பாலு செத்து சுமார் பத்து வருடங்கள் இருக்கும்.

கீறல்ப்பட்ட கண்ணாடியை என்னதான் சரி செய்தாலும் அது பழைய கண்ணாடி ஆவதில்லை! ராமகிருஷ்ணனுடன் அந்த மனக்கசப்புக்குப் பிறகு, மறுபடியும் என்னதான் அந்த நட்பை ஒட்டவைத்தாலும் அது ஒட்டவே இல்லை! மறுபடியும் கருத்து வேறுபாடு உள்ள அந்த விசயம் இருவருக்கும் இடையில் தோன்றியது. மறுபடியும் அந்த கீறல் பெரிதாகியது. இதே போல் எத்தனை முறை...

அப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தான் அஷோக். இனிமேல் இதை ஒட்டவைப்பதில் அர்த்தமில்லை என்று. எதற்கு இப்படி மாய்ந்து மாய்ந்து சரிக்கட்டி வாழவேண்டும்? இது மிகப்பெரிய உலகம். எடுத்த முடிவை மாற்றாமல் ராமகிருஷ்ணனைப் பிணமாக்கி அவனுக்கு கடைசி சடங்குகள் எல்லாம் செய்துவிட்டு அவனைத் தலைமுழுகினான். அஷோக் அவனைக் கொன்று பிணமாக்கிய பிறகும் ராமகிருஷ்ணன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான்! அவன் உலகில்! மிகவும் சந்தோஷமாக!

"நட்பு என்பது உயர்தரமானது. அது காலத்தால் அழியாதது" என்பதெல்லாம் எத்தனை விழுக்காடுகள் உண்மை கலந்தது? ஒவ்வொரு மனிதனும் அரசியல்வாதிதான். ஒவ்வொரு மனிதனும் சுயநலவாதிதான். அதுவும் ஒருவனுக்கு வயது அதிகம் ஆக ஆக சுயநலம்தான் மென்மேலும் தலை தூக்கும்! காலப்போக்கில், அன்று போற்றப்பட்ட நட்பு காணாமல்ப் போவதுதான் இயற்கை! அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது! நிதர்சனம் அதுதான்! அதை இல்லை என்று வாதிடுவது, நட்பு காலத்தால் அழியாதது என்று நிரூபிப்பதாக நடிப்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் நாடகம். நம்மை நாமே ஏமாற்றி, நம் மனதை நாமே மனச்சலவை செய்து வாழும் போலி வாழ்க்கை!

  அவனைக் கவனிக்காமல் இந்தியா செல்லும் அந்த விமானத்தில் முதல் வகுப்பில், இரண்டாவது வரிசையில் அமர்ந்து இருந்த ரூபாவை இன்னொரு முறை  பின்னால் இருந்து பார்த்தான், அஷோக்.  பக்கத்தில் அவள் குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தது. அவள்தான் எத்தனை அழகு! அவளைவிட அழகு அந்தக்குழந்தை. ரூபா சந்தோஷமாகத்தான் இருந்தாள். ஹாய் சொல்லலாமா என ஒரு நொடி வந்த நினைப்பை தூக்கி எறிந்தான். அஷோக்கைப் பொறுத்தவரையில் இன்று அவள்  ஒரு நாட்கடந்து போன பயணச்சீட்டு! ஆமாம் ஒரு காலத்தில் அவள் உயிருக்குயிரான தோழிதான்! ஆனால் இன்று?  உயிருடன் வாழும் ஒரு அழகான பிணம்! நட்பு இறந்த பிறகு நண்பி பிணம்தானே? இந்த உண்மையைத்  திரும்பத் திரும்பச் சொல்லணுமா என்ன?

*************************

படிச்சாச்சா? அப்போ இதையும் படிங்க!!!

 மறந்து வாழ வேண்டும்!

---------------------------

இது ஒரு மீள்பதிவே!

 இதயத்துடிப்புடன் வாழும் பிணங்கள்!

Saturday, August 2, 2014

இந்த ஆம்பளைங்களே மஹா மட்டமானவங்கதான் - ஒன்பது

 "எதுக்குடி இப்போ அடிச்ச?" னு சிரித்துக்கொண்டே கேட்டான் மோகன்.

"அவளோட போயி கொஞ்சியதை எல்லாம் என்னிடம் சொன்னால் உனக்கு அறை விழத்தான் செய்யும்!"

"அதான் நான் கூப்பிட்டப்போ நீ வரலைனு சொல்லிட்ட இல்ல? அப்புறம் என்ன?"

"ஆமா. அதுக்காக நீ என்ன வேணாப் பண்ணுவியா? யாரைனாலும் இழுத்துட்டுப் போவியா? "

  "ஆமா!  நான் எவளோட போனா உனக்கென்ன? விட்டுத் தொலைய வேண்டியதுதானே?"

"அப்படியெல்லாம் உன்னை கோயில்மாடு மாதிரி மேயவிட முடியாது!"

"அப்படி என்ன என் மேல் அக்கறை?"

"ரொம்ப நாள் உன்னோட பழகிட்டேன் இல்ல?"

"இவ்ளோ நாள் பழகியும் இன்னும் என்னைப் பத்தி தெரியாமல் மக்காத்தான் இருக்க?"

"நான் மக்கா? இல்லை நீ பொறுக்கியா?"

"நான் பிக்னிக்கு போகவே இல்லைடி மக்கு. சும்மா உன்னை சீண்டிப் பார்த்தேன்"னு அவளை கட்டி அணைத்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் கொடுத்தான். பிறகு அவன் உதடுகள் இடம்பெயர்ந்து அவள் கழுத்தில் பதிந்தன..
 


"நெஜம்மாவே பொய்யா?" என்றாள் அவன் அனைப்பில் இருந்து கொண்டே

"நெஜம்மாவே நெஜம் இல்லை!  பொய்தான்! அதென்ன ஒரு முத்தம் கொடுத்ததும் உன் குரலே மாறிடுத்து?"னு அவளை "பின்னால்" மெதுவாக கிள்ளினான்.

"சரி, ஐஸ் வச்சது போதும்! ஏன் போகலைனு சொல்லு?"னு கொஞ்சுவதுபோல் கேட்டாள், விஜி.

"போகலாம்னுதான் புறப்பட்டேன்.  திடீர்னு கார்ல ஃப்ளாட் டயராயிடுச்சு. அதுக்கப்புறம்  "ஃப்ரீ ரைட்" எதுவும்  கெடைக்கல. அதான் வீட்டிலேயே இருந்துட்டேன்."

"ஏய் இங்கே நான் வீட்டிலேதானே இருந்தேன். என்னைக் கூப்பிட்டு இருக்கலாம் இல்ல?"

"இப்போல்லாம் பி எம் எஸ் ல இருக்கமாதிரி எப்போவுமே ரொம்ப"moody" யா இருக்க. உன்னைக்கூப்பிட பயம்மா இருந்துச்சு."

"உனக்கு என்னிடம் பயமா? ச்சும்மா நடிக்காதே"

"ஆமா எதுக்கு உன்னைக் கூப்பிட?  "ரைட்" க்குத்தானே?"

"ஒரு "ரைட்"க்குத்தான் ஆனால் பிக்னிக்கு இல்லை!"னு இழுத்தாள்

"புரியலை?"

"என்ன புரியலை? It is more than few weeks now! ரைட் என் வீட்டுக்குத்தான்"

"எதுக்கு?"

"அதுக்குத்தான்"

"ஆக, இங்கே கூட்டி வந்து பகல்லயே என்னை பலவந்தமா புணரலாம்னு பார்த்தியா?"

"ஹா ஹா ஹா. புணரவா? அதென்ன சுத்தமான தமிழா?"

"நாந்தான் துரோகியாயிட்டேனே? இதுக்கு மட்டும் வேணுமாக்கும்? யாரும் புதுசா பாய்ஃப்ரெண்ட் பிடிக்கலையா? இல்லை யாரும் மாட்டலையா?"

"No, I still like you for that."

"For WHAT?!"

" நீயும் சும்மாதானே தனியா இருக்க?"

"For fucking? நீங்க "ஹார்னி"யா இருந்தா நாங்க வேணும்?"

"என்னவோ பிடிக்காத மாரித்தான்..சும்மா  நடிக்காதே!"

"உனக்கு இந்த அச்சம் மடம் நாணம் எல்லாம் கெடையாதா?"

"ஹாஹாஹா. எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு. இந்த ரேச்சல் சனியன் எப்போ வந்தாளோ அதிலிருந்துதான் எல்லாமே போச்சு."

"விஜி, நான் சொல்றதைக் கொஞ்சம் கேக்றியா?"

"என்ன?"

"கொஞ்சம் ஒரு மாதிரியா சொல்லவா?"

"சொல்லு!"

"இல்ல..ரேச்சல் இருக்கா இல்ல?"

"ஆமா..செத்தா போயிட்டா? இருக்கா?"

"அவளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும்போது.. அதான் கெமிஸ்ட்ரி..ஒரு சிலவற்றை எக்ஸ்ப்ளைய்ன் பண்ணி, அவ புரிந்து அதை அப்ரிசியேட் பண்ணும்போது. ஒரு பொண்ணுக்கு "ஆர்கஸம்" வர வச்சு சந்தோஷப்படுத்தியதைவிட 10 மடங்கு எனக்கு திருப்தியா இருக்கு!"

"இருக்கும் இருக்கும். வெள்ளைக்காரி! ஆளும் அழகா இருக்கா, அதானே?"

"அவ அழகுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை!"

"அவ மேலே எனக்குப் பொறாமையா இருக்கு"

அவள் உதட்டில் தன் இதழ்களைப் பொருத்தி அவளை பேசவிடவில்லை, அவன்.

 

-தொடரும்


அத்தியாயம் எட்டு, படிக்கணும்னா கீழே க்ளிக் செய்யவும்!


 ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்- எட்டு


இன்னொரு விசயம்...தயவுசெய்து இந்தக் கதையை நீங்க படிச்சீங்கனு யாரிடமும் சொல்லாதீங்க. உங்களை ஒரு மாதிரியாக "அவர்கள்" நினைக்க வாய்ப்பிருக்கு. :)Friday, August 1, 2014

கவிதை எழுதப்போயி காமெடியனானேன்!

 கவிதைப் போட்டி நடைபெறப் போகிறதாம்
கவிதை எழுத முயலலாமென்றால்
தமிழ்  இலக்கணம் தெரியாது
தமிழ் இலக்கியமும் படிக்கவில்லை
 எப்படியும் வென்றே ஆகவேண்டுமென்று 
கவிதை என்று மடக்கி மடக்கி
கவி நான் எழுதியது நாலு வரிகள்
அதில் நான் காணாத எழுத்துப் பிழைகளோ நாற்பது
கவிதைப்போட்டியில் வெல்ல வாய்ப்பில்லை
என் காமெடியை மெச்சி ஆறுதல் பரிசெதுவும் தந்தாலேயொழிய!

ஆக்கம்:   கவிதை எழுத முயன்ற காமெடியன் வருண்!