Thursday, August 20, 2015

திமு காரன் கழகம் வெட்டிப்பேச்சு மேலே கேஸ் போடாதா?

தி மு காரனிடம் இருந்து சொத்தை மீட்ட கதைனு ஒரு பதிவர் விஷப் பதிவெழுதிக்கொண்டு இருக்கிறார். அதாவது எவனோ ஒரு அரசியல்ப்பொறுக்கி  செய்த அடாவடித்தனத்தை அவன் தி மு காரன் என்கிற முத்திரை கொடுத்து கழகத்தை ஒட்டுமொத்தமாக  இழிவுபடுத்தும் ஒரு கதை இது.

எனக்குத் தெரிய நேத்து தி மு கவில் இருந்தவன் இன்னைக்கு அதிமுகவுக்கு மாறுவான். நாளைக்கு காங்கிரஸ் போவான். ஒருவனை இந்தக் கட்சிக்காரன் என்று முத்திரை குத்துவதைவிட அவன் ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதி என்கிற முத்திரையே சரி.

எம் சி ஆரே ஒரு காலத்தில் திமுக காரந்தான்.

அடிதடி தாமரைக்கனி அதிமு காரந்தான்.

இதுபோல் விஷம் கலந்து தி மு கழகத்தை இழிவுபடுத்தும் ஒரே எண்ணத்துடன் இந்தக் கதை எழுதுபவரை தி மு க கண்டுகொள்ளாமல் விடுவதும், சட்டப்படி அனுகாததும் எனக்கு  அதிசயமாக இருக்கிறது. இதுபோல் விஷம் கலந்து எழுதும் பதிவர்களை சட்டப்படி துரிதமாக சந்திக்காமல் வளரவிடுவது திமு கழகத்திற்கு நல்லதன்று!

Wednesday, August 19, 2015

என்ன?!! ஒரு ஹாண்டா சிவிக் ஐந்து மில்லியன் டாலரா??!

பொதுவாக அமெரிக்காவில் இந்தியர்கள் விரும்பி வாங்கும் கார், ப்ராண்ட் டொயோட்டாதான். ஒரு டொயோட்டா கேம்ரி இல்லைனா கரோல்லா  வாங்கினாதான் இவர்களுக்கு நல்ல கார் வாங்கிய திருப்தி. லக்ஸுரி கார்னு வேணும்னா லெக்சஸ்- டொயோட்டா மேக்தான். சைனீஸும் இதே வகைதான்.

அமெரிக்கர்கள் ஹாண்டாதான் பெட்டர் கார் என்று நம்பி அதைத்தான் பலர் விரும்பி வாங்குவாங்க. என்னையும் ஒரு ஹாண்டா கைனுதான் சொல்லணும். என்ன ஹாண்டா விலை டொயோட்டாவைவிட கொஞ்சம் அதிகமா இருக்கும். பார்கெய்ன் பண்ணும்போது ஹாண்டா டீலர்  ரொம்ப இறங்கி வரமாட்டாங்கனு சொல்லலாம். அதனால நல்ல கார், கேம்ரி அல்லது கரோல்லா வாங்குறதுக்கு பதிலா எதுக்கு இந்த வீணாப்போன ஹாண்டாக்காரன் விக்கிற அக்காட் அல்லது சிவிக் கு இவ்வளோ காசு கொடுக்கணும் என்பதுதான் இந்தியர்கள் லாஜிக்.

நீங்க பெண்ஸ், பி எம் டபுள்யு கார் வச்சிருக்க வகையராவா? அப்போ கீழே தொடர்ந்து படிங்க!

ஹாண்டா சிவிக் ப்ரைவேட் ஜெட் ஒண்ணு வெளியிட்டு இருக்காங்கலாம்!! ஆமாங்க கார் இல்லை "ஜெட் ப்ளேன்"!!

விலை ரொம்ப ச்சீப்னு சொல்றாங்க!!

சும்மா 4.5 மில்லியன் டாலர் தானாம்!!!





 






அதெல்லாம் அஃபோட் பண்ண  முடியுமா?

மைக்ரோ சாஃப்ட் சி இ ஒ, நம்ம கூகுள் சி இ ஒ சுந்தர் பிச்சை, கமலஹாசன் ரஜினி காந்த் எல்லாம்  வாங்க முடியும்தானே??

Wednesday, August 12, 2015

பார்த்தது ரசித்தது ஹாட்டஸ்ட் லாரா ப்ரெப்பான்!

ஹாலிவுட் படங்களில் ஏகப்பட்ட ஹைப்புடன் வர்ர படங்கள் எதுவும் பார்ப்பதில்லை. ஏதாவது சாதாரணப் படம் பார்ப்பது. சமீபத்தில்பார்த்த படம்,போன வாரம் வெளிவந்த "த கிஃப்ட்". இது ஒரு ஆஸ்திரேலியன் இயக்குனர் இயக்கிய சைக்கலாஜிக்கல் த்ரில்லர். ரொம்ப சிம்ப்பிள் ப்ளாட். ஆனால் படம் ரொம்ப நல்லாயிருந்தது. உங்க ஊரில் திரையில் வரும்போது முடிந்தால் பாருங்க!

The Gift 2015 Film Poster1.png
மேலே உள்ளவர்தான் இயக்குனரும்


 *************************

நெட்ஃப்ளிக்ஸ் பார்க்க எல்லாம் நேரமில்லாததால் உக்காந்து பார்ப்பதில்லை. திடீர்னு என்னதான் படம் இருக்குனு பார்த்தால் சென்னை எக்ஸ்ப்ரெஸ் (ஹிந்தி) இருந்தது. பார்த்தேன். படம் ரொம்ப சுமார்தான். ஆனால் முழுப் படமும் உக்காந்து பார்க்க முடிந்தது. ரொம்ப எதிர்பார்த்துட்டேனா என்னனு தெரியலை.

சென்னை எக்ஸ்ப்ரெஸ்

***************************

வேற என்ன இருக்குனு பார்த்தால் "ஆரஞ் இஸ் த நியு ப்ளாக்" னு ஒரு நெட் ஃபளிக்ஸ் ஒரிஜினல் சீரியலை க்ளிக் பண்ணிட்டேன். நல்லவேளை க்ளிக் பண்ணினேன். ஒவ்வொரு சீசனுக்கும் 13 எப்பிசோட் கொண்ட சீரியல் இது. தொடர்ந்து இரண்டு வாரமாக மூனு சீசன் (39 எபிசோட் களையும்) பார்த்து முடிச்சுட்டேன்.

நியூடிட்டி, லெஸ்பியன் செக்ஸ், வயலண்ஸ்னு எல்லாமே அதிகம்தான். இருந்தாலும் சலிப்புத்தட்டாமல் ரெண்டு சீசன் போனது. மூனாவது சீசன் சுமார்தான். இருந்தாலும் பார்த்து முடிச்சாச்சு.

இதை க்ரியேட் செய்தவர் ஒரு பெண். இது பெண்கள் ஜெயில் வாழக்கையைப் பற்றியது.

யாரு நடிச்சு இருக்கா?

Laura Prepon as Alex Vause! OMG she is the hottest!

Loved her!!

ஆக்சுவல் ஹீரோயின் Taylor Schilling ஓ கே ரகம்தான்!

டெய்லர் சில்லிங் as Piper Chapman

உங்க ஊரில் நெட்ஃப்ளிக்ஸ் கிடைத்தால் நீங்க வயது வந்தவரானால் முடிந்தால் பார்த்து ரசிங்க!

எச்சரிக்கை!!!

அலெக்ஸ் வாஸ் அண்ட் பைப்பர் ச்சாப்மேன்


இதில் கன்னா பின்னானு நியூடிட்டி, லெஸ்பியன் செக்ஸ் சீன்ஸ் இருக்கும்! அதெல்லாம் டிஸ்கஸ்டிங்கா இருக்கும்னா பார்க்காதீங்க!!

What do we learn?

அதாவது நீங்க என்னதான் "டீசண்ட்"டான ஆளாக இருந்தாலும், ஜெயில் போன்ற இடத்துக்குப் போனீங்கனா உங்க "டீசண்ஸி" எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உங்களிடம் இருந்து பறந்து போயிடும். அந்த சூழலில் "சர்வைவல்" க்காக நீங்க ரொம்பவே மாறிடுவீங்க என்பதைப் புரிந்து கொள்ளலாம்.


Tuesday, August 11, 2015

கூகுள் சி இ ஒ வாக ஒரு தமிழன் சுந்தர் பிச்சை!!

பெப்சி சி இ ஒ, மைக்ரோ சாஃப்ட் சி இ ஒ க்கு அப்புறம் இப்போ கூகுள் சி இ ஒ வாக ஒரு இந்திய அமெரிக்கர் ஆகியிருக்காரு. சுந்தர் பிச்சை, தமிழ் நாட்டில் பொறந்து வளர்ந்த தமிழன் என்பது அதிகப் படியான செய்தி!

இந்தியா சூப்பர் பவர் ஆகுதோ இல்லையோ. நாடு விட்டு நாடு வந்து சாதிக்கிறார்கள் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் என்பதென்னவோ உண்மைதான்!


Image result for sundar pichai
கூகுள் சி இ ஒ சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துக்கள்!

Monday, August 3, 2015

அப்துல் கலாம் பற்றி இரங்கல் கவிதையும் ட்வீட்டும்!

நடிகர் ரஜனிகாந்த், கலாம் மறைவு பற்றி தன்னுடைய ட்விட்டரில் ஆங்கிலத்தில் ஒரு நாலு வாக்கியங்கள் எழுதி இருக்கிறார். கலாமை, காந்தி, காமராஜர், பாரதியார் போன்றவர்களுடன் ஒப்பிட்டு உயர்த்திப் பேசியுள்ளார்.
From humble beginnings Abdul Kalam ji rose to great heights but continued to live humble and simple. He lived to inspire millions of people. He endeared himself to student community motivating them at all levels. God has embraced him silently with love. May his soul rest in peace. I did not have the privilege of seeing our mahatma Gandhiji, Kamaraj or Barathiyaar but was blessed enough to live admist mahatma Kalamji.  -ரஜினிகாந்த்


 இந்த ட்வீட்டுக்கு அப்புறம் ரஜனிகாந்த்க்கு ஒரு 50, 000 followers அதிகமாகி இருக்காங்க! இந்த ட்வீட்கள் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . "இவன் மற்றவனைப் புகழ்ந்தே இவனும் மேலே போயிடுறான்" னு ஒரு சில வயித்தெரிச்சல் கோஷ்டிகள், இதற்கும் நொள்ளை சொல்லாமல் இல்லை!


*****************************X***************************X***********************

நடிகர் மற்றும் கவிஞர் கமலஹாசன், கலாம் மறைவைப் பற்றி ஒரு இரங்கல் கவிதை எழுதி வெளியிட்டு உள்ளார்..


கலாம்களும் கமால்களும்
கமல்களும்
இலாதுபோகும்
நாள்வரும்
இருந்தபோது
செய்தவை
அனைத்துமே
கணிப்பது
ஹெவன்என்று
ஒருவனும்
பரம் என்று ஒருவனும்
ஜன்னத்தென்று ஒருவனும்
மாறி மாறிச் சொல்லினும்
இகத்திலேயவன்
நடந்த பாதையே
புகழ் பெறும்
நிரந்தரம் தேடுகின்ற
செருக்கணிந்த
மானுடர்
தொண்டருக்கடிப்பொடி
அம்மெய்யுணர்ந்த நாளிது
புகழைத் தலையிலேந்திடாது
பாதரட்சையாக்கிய
கலாம் சாஹெப்
என்பவர்க்கு
சலாம் கூறும் நாளிது
 வழக்கம்போல எனக்கு கவிமனம் இல்லாததால், இந்தக் கவிதையும் சரியாகப் புரியவில்லை! 

 ஆக வருண்! ஆங்கிலம் புரியுது, தமிழ் புரியலை!! தமிழின துரோகி!!னு நீங்கள் எல்லாம் என்னைத் திட்டுறது கேக்குது. இருந்தாலும் நான் பொய் சொல்லப் போவதில்லை! :)

இக்விதையை யாராவது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால் இந்தியாவில் வாழும் தமிழறியாத மக்களையும் கமலின் இவ்விரங்கல் கவிதை சென்றடையும் என்பது என் தாழ்மையான எண்ணம்.