Saturday, June 20, 2015

திரு பசி பரமசிவம் அவர்களுக்கு!

நீங்க நிறையக் கேள்விகள் கேட்கிறீர்கள். ஆனால் பதில் சொல்லப் பின்னூட்ட வசதி தருவதில்லை. அதனால் உங்க கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த பதிலைத் தரமுடிவதில்லை. தமிழ்மணம் பற்றி தொடர்ந்து ஒரு சில விமர்சனங்கள் வைக்கிறீர்கள்..எனக்குத் தெரிந்த விளக்கம் சொல்ல இப்பதிவு..

தமிழ்மணத் தலைப்பில் அல்லது முதல் 5 வரிகளில், கவர்ச்சி, கற்பழிப்பு போன்ற வார்த்தைகள் வந்தால், உள்ளே என்ன நல்ல விடயங்கள் இருந்தாலும் அப்பதிவுகள் சூடான இடுகைகளில் முகப்பில் தெரியாது. அதைப் பிரபலப்படுத்துவது தவிர்க்கப்படும். இதை தமிழ்மண நிர்வாகிகள் கவனித்து செய்யவில்லை. தானியங்கியாக இயங்கும் தமிழ்மணம் இப்படி வார்த்தைகள் தலைப்பில் வந்தால், அவற்றை "ஷ்பெஷலாக" கவனித்து மட்டுறுத்துவதுபோல் தமிழ்மணத் தளம் "டிஷைன்" செய்யப்பட்டுள்ளது. அதனால் உங்களுடைய ஒரு சில பதிவுகள் முகப்பில் தெரிவதில்லை என்பது என் கணிப்பு.

இதுபோல் எனக்கும் அனுபவம் உண்டு. பலவாறு குழம்பி பிறகு புரிந்து கொண்டேன். தலைப்பில் கவர்ச்சி போன்ற வார்த்தைகள் நீங்கள் தவிர்த்தால் முகப்பில் தெரியும்.

தமிழ்மணத்தை மாற்ற முயல்வதைவிட, நம் தலைப்பை கொஞ்சம் மாற்றி அவ்வார்த்தைகளை தவிர்த்து எழுதுவது எளிது. புரிதலுக்கு நன்றி சார்!

Friday, June 19, 2015

பட்டுப்புடவை கட்டுவது உன்னை சிறுமைப்படுத்துவது பெண்ணே!

ஊரைப்பத்தி விமர்சிக்க முன்னாலே வீட்டைப் பார்ப்போம் எங்க வீட்டில், சொந்தத்தில்,  கல்யாணப்பட்டுப் புடவைனு எடுக்கும்போது என்ன செய்கிறார்கள்னு சொல்லிடுறேன். இப்போலாம் 30,000, 50,000 ரூபாய்னு கொடுத்து ஒரிஜினல் பட்டு எடுக்கிறதாத்தான் வாட்ஸப் முகநூலிலெல்லாம் எழுதுறாங்க. ஆனால் இந்தப் பட்டுப்புடவை எத்தனை பட்டுப் பூச்சிக்களை கொன்னு தயாரிக்கப் பட்டதுனு தெரிந்ந்தால் அதுக்கு ஒரு பைசா கொடுக்கக்கூட மனம் வராது. அறியாமை! அறியாமை! வேறென்னத்தைச் சொல்ல?

ஒரு பட்டுப்புடவை தயாரிக்க சுமார் 10 ஆயிரம் பட்டுப்பூச்சிக் குழந்தைகளை ஈவு இரக்கமில்லாமல்  கொல்கிறாங்களாம்ப்பா!

வாழு, வாழ விடு!  என்பது மனிதர்கள் பேசும் வியாக்யாணம்.  நீங்க கவனிச்சுப் பார்த்தால்  மனிதன் தன் இனம் தவிர மற்ற உயிர்கள் எதையும்  வாழ விடுவதில்லை!

மனிதனைப் பொருத்தவரையில் உலகில் வாழும் மற்ற உயிர்கள் எல்லாம் நாசமாகப் போகணும்! இவனுக மட்டும் வாழணும்!  இவனுகள் சந்தோஷமாக வாழ யாரை வேணா,  எந்த உயிரை வேணா கொல்லலாம். யாரை வேணா காவு கொடுக்கலாம். அதில் தப்பே இல்லை!! இதுதான் மனிதனுடைய வாழ்க்கைத் தத்துவம்!

இன்னும் கொஞ்சம் யோசிச்சா மனிதனைவிட கேவலமான ஒரு ஜன்மம் உலகில் இல்லை என்பது தெளிவுபடும்! இதில் மானிடனாகப் பிறப்பது அரிது..மனிதம் மண்ணாங்கட்டினு அப்பப்போ இவனுகளுக்குள்ளேயே தத்துவம் பேசிக்கொண்டு இவனுகளையே ஏமாத்திக்குவானுக! ஒரு பூச்சி, புழுவைக்கூட நிம்மதியாக வாழவிடாமல் தன் தேவைக்காக யாரை வேண்டுமானாலும் கொல்லுவார்கள், துன்புறுத்துவார்கள்! இவர்கள்தான் மனிதர்கள்!  இவனுக ஒரு பட்டுப்பூச்சியைக்கூட வாழ விடமாட்டானுகன்னா வேற யாரை வாழ விடுவானுக?

கடவுளைக்கூட மனிதன்  தன் வசதிக்குத்தான் படைச்சிக் கொண்டு வந்து. விலங்குகளை கொல்வதிலோ, அல்லது பலி கொடுப்பதில் எதுவும் பாவம் இல்லைனு கடவுளையே சொல்ல வச்சிடுவாணுக! மற்ற உயிர்களை தன்னைப்போல் மதிக்காமல் வாழும் மனிதனையும் அவன் சிந்தனைகளையும் அவன் நியாயப்படுத்தலையும் கவனித்துப் பார்த்தாலே அவன் படைத்த "கடவுள்" அவனுக்காக அவனே உருவாக்கிய ஒரு கற்பனை  என்பதையும் அழகாகப் புரிந்து கொள்ளலாம்!

தீபிகா! பட்டுப்புடவை கட்டுவது உன்னை சிறுமைப்படுத்துவது பெண்ணே! இருந்தாலும் அந்த "ஸ்மைல்" அடேங்கப்பா!Friday, June 12, 2015

மாகி நூடுல்ஸ் மோனோ சோடியம் க்ளூட்டமேட்!

புரோட்டா சாப்பிட்டால் டயபெட்டிஸ் வரும்! மாகி நூடுல்ஸில் உள்ள மோனோ சோடியம் க்ளுட்டமேட் உடல் நலத்திற்கு தீங்கானது! இதெல்லாம் நம்ம ஊரில் ஹாட் டாப்பிக்!  இதில் என்ன அரசியலோ என்னவோ. இதில் கோடி கோடியாக சம்பாரிக்கும்  நெஸ்லேக்கு நான் வக்காலத்தெல்லாம் வாங்க வரலை. சொல்லப்போனா  எனக்கு மாகி நூடுல்ஸ் சுத்தமாகப் பிடிக்காது. அதைப் பார்த்தாலே வாம்மிட்தான் வரும்.

என்ன காமெடினா நம்ம நாடு நாசமாகப்போயிக்கொண்டு இருக்கு. காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுவது, மக்கள் தொகை பிரச்சினை, கழிப்பறை பிரச்சினை, டாஸ்மாக் பிரச்சினை, திருட்டு வி சி டி பிரச்சினை, பஸ்ல வச்சு பெண்களை கதறக் கதற கற்பழிக்கிற அவலநிலை என்று முக்கியமான பிரச்சினைகளைப் பத்தி எவனும் கவலைப் படுவதில்லை. சும்மா மோனோ சோடியம் க்ளுட்டமேட் கெடுதினு என்னைத்தையாவது பெரிய மேதாவித்தனமா ஒளறிக்கிட்டு திரிகிறார்கள்!

மாகி நூடுல்ஸை வளர்த்துவிட்டது யாரு?

நவீன தாய்மார்களெல்லாம் முகநூலில் யாரும் லைக் போடலையேனு கவலையிலேயே எதுவும் சமைக்க மூட் இல்லாமல் சீரியல், மேகி நூடுல்ஸ்னுதான் எதாவது "ஜங்க் உணவை"க் குறைந்த நேரத்தில் சமைத்து பிழைப்பை ஓட்டுறாங்க. சாதாரணமாகப் புறக்கணிக்கப்பட வேண்டுகிற இந்த உணவை இப்படி வளர்த்துவிட்டது நம் உயர்தரத் தாய்க்குலம்தான். எதையாவது அவசர அவசரமாகப் பண்ணிப் போட்டுட்டு வேலைக்கு போகணும் இல்லையா?  மாகி நூடுல்ஸ், சீரியல் எல்லாம் வளந்ததுக்கு இவர்கள்தான் காரணம்.

***********************

மாகி நூடுல்ஸ்ல உள்ள மோனோ சோடியம் க்ளுட்டமேட் னா என்ன? 

புரதம்னா என்ன? அதுக்கு இதுக்கும் என்ன சம்மந்தம்? ப்ரோட்டீன்னு சொல்லுவாங்க இல்ல? அவைகள் நம் உடம்பில் இருக்கு இல்லை?

கொஞ்சம் கெமிஸ்ட்ரி பேசுவோமா?

நம் உடம்பில் அல்மோஸ்ட் எல்லா வேலைகளையும் செய்வது ப்ரோட்டீன்கள்தான். உதாரணமாக  ஹீமோக்ளோபின்கூட  ஒரு ப்ரோட்டீன் தான். அதுதான் நம் லங்ஸ் வரும் ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டுபோயி நம் உடம்பில் உள்ள எல்லா செல்களுக்கும் கொடுப்பது. இதுபோல் ப்ரோட்டீன்கள்தான் நம் உடலில் நாம் உயிர் வாழ்த் தேவையான எல்லா வேலைகளும் செய்வது. நீங்க படு சோம்பேறியாக இருக்கலாம் உங்க உடலில் உள்ள ப்ரோட்டின்கள் கடும் உழைப்பாளிகள்! எனிவே ப்ரோட்டீன்கள் நமக்கு உயிர்வாழ மிக மிக முக்கியம்.

ப்ரோட்டீன்கள் அமை(மி)னோ ஆசிட்களால் ஆனது. 

அப்படினா? 

ப்ரோட்டீன் ஒரு சுவர்னா, அதில் உள்ள செங்கல், சிமெண்ட் எல்லாம் அமைனோ ஆசிட்கள்தான். முக்கியமாக 20 அமினோ ஆசிட்களால் ஆனதுதான் நம் உடம்பில் உள்ள லட்சக்கணக்கான ப்ரோட்டின்கள். ஆக ப்ரோட்டீன்ல இருந்து இப்போ அமைனோ ஆசிட்க்கு தாவிவிடுவோம். 
தாவியாச்சா?

அப்படிப்பட்ட அடிப்படை கற்களான  ஒரு அமினோ ஆசிட்தான் இந்த சோடியம் உப்பாக்கப் பட்ட க்ளுட்டமிக் அமிலம் (எம் எஸ் ஜி). க்ளூட்டமிலக் ஆசிட் ஒரு அமிலத்தன்மை பெற்ற அமைனோ அமிலம்.ஏற்கனவே ஒரு ஆசிட் அது. அதென்ன அமித்தன்மை பெற்ற மைனோ அமிலம்? சரி அமித்தன்மை, கார்த்தன்மை உள்ள அமினோ அமிலம் எல்லாம் அப்புறமாப் பார்க்கலாம்.

எம் எஸ் ஜி னா? 

இது  இந்த  க்ளூட்டமிக் அமைனோ அமிலத்தின் சோடியம் சால்ட்! 

சோடியம் சால்ட்டா? அப்படினா? 

சோடியம் க்ளோரைட் தெரியுமா? அதாங்க சாதாரண உப்பு? NaCl???

தெரியும்!

அதுவும் ஒரு அமிலத்தின் உப்புதான்!

 அப்படியா??? ரியல்லி?????

ஆமாங்க!

என்ன அமிலம் அது?

ஹைட்ரோ க்ளோரிக் அமிலம்!  (HCl)

நெஜம்மாவா? 

ஆமா!

புரியலையே?

ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தில் இருந்து எப்படி சோடியம் க்ளோரைட் தயாரிக்கிறது?

 ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தையும் சோடியும் பைகார்பனேட்  (சோடாப்பூ) அல்லது சோடியம் கார்பனேட்டையும் சேர்த்தால், சோடியம் க்ளோரைட் கிடைக்கும்!

2 HCl + Na2CO3 -> 2NaCl + H2O + CO2

  HCl + NaHCO3 -> NaCl + H2O + CO2

ஆசிட் + பேஸ் -> சால்ட்  + வாட்டர் + கார்பன் டைஆக்ஸைட்

அப்போ க்ளூட்டமிக் அமிலமும்  சோடியம் கார்பனேட்டும் சேர்த்தால் எம் எஸ் ஜி கிடைக்குமா?

ஆமா!

 


 வருண்!!! இதெல்லாம் அநியாயம்!

நீங்க மட்டும் எங்களுக்கு புரியாத தமிழ்க் கவிதை எழுதி எங்களை புரிஞ்சிக்க வைக்க முயற்சிக்கலாம். நாங்க உங்களுக்கு உங்க உடம்பில் உள்ள ஒரு அமிலத்தையும், நீங்க சாப்பிடுகிற ஒரு உப்பையும் விளக்கினால்அநியாயம்! என்னங்க (அ)நியாயம் இது?

சரி எம் எஸ் ஜி எப்படி தயாரிக்கிறாங்க..

MSG is produced through fermentation of molasses-sugar (molasses) by the bacteria (Brevibacterium lactofermentum). In this fermentation process, will first produce Glutamic Acid. Glutamic acid as a result of this fermentation process, then add soda (Sodium Carbonate), so that will be formed Monosodium Glutamate (MSG). MSG this happens, then purified and crystallized, so it is a crystal-pure powders, ready to be sold in the market.

Before the bacteria were used for fermentation production of MSG, the first such bacteria must be reproduced (in terms of microbiology: cultured or cultured) in a medium called Bactosoytone. This process is known as the breeding process of bacteria, and separate at all (both space and time) with the process above. After the bacteria grow and multiply, then the bacteria were taken for use as biological agents in the fermentation process to make MSG.

Bactosoytone as a medium for bacterial growth, made separate (by Difco Company in the U.S.), by the way-enzymatic hydrolysis of soy protein (Soyprotein). In simple language, soy protein is broken down with the help of enzymes that produce short-chain peptides (peptone) Bactosoytone called it. The enzyme used in hydrolysis process is called porcine, and this enzyme was isolated from the pancreas-pig.


மொலாசஸ் னா என்ன? நம்ம சுகர், சர்க்கரை கரும்பிலிருந்து தயாரிக்கும்போது வரும் ஒரு விஸ்கஸ் லிக்விட்தான்,  மொலாஸஸ். இதிலுருந்து சாராயமும் தயாரிக்கலாம்.

---------------------------

*க்ளூட்டமிக் அமிலம் அல்லது எம் எஸ் ஜி ஒரு அத்தியாவிசய அமினோ அமிலமா?? 

அப்படினா?

நம் உடலில் உள்ள ப்ரோட்டீங்களில் முக்கியமாக 20 அமினோ அமிலங்கள் உண்டு. அவைகளை 9 அமினோ அமிலங்களை நம் உடலில் உள்ள செல்களால் தயாரிக்க முடியாது. இவைகளை நாம் அத்தியாவிசய (essential amino acid) அமினோ அமிலம் என்கிறோம். 

 நாம் பிற உயர்களை நம்பித்தான் இருக்கிறோம். தாவரம் அல்லது விலங்குகளை கொன்னு, அல்லது பறித்துத் தான் இவைகளை நாம் பெற முடியும்!

இந்த க்ளுட்டமிக் அமிலம், அல்லது மோனோ சோடியம் க்ளுட்டமேட் ஒரு அத்தியாவிசய அமைனோ அமிலமா?

இல்லை!!!

Is this an essential amino acid?  Glutamic acid or MSG is NOT an essential amino acid! Our body can make this amino acid!

----------------------------

* எம் எஸ் ஜி உடல் நலத்திற்கு தீங்கானதா?

அப்படி எதுவும் நிரூபிக்கப் படவில்லை. ஆனால் அது போல் ஒரு நம்பிக்கை (மூட நம்பிக்கை) உலவுகிறது என்பேன் நான்.

பல படித்தவர்களும் விஞ்ஞானிகளும் டாக்டர்களும் எம் எஸ் ஜி கெடுதினுதான் சொல்றாங்க. ஆனால் அதுவும் அவர்கள் நம்பிக்கை. நிரூபிக்கப் படவில்லை!

 ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், சர்க்கரை, ஊறுகாய்கூட விஷம்தான். எம் எஸ் ஜி அந்தளவுக்கு மாகி நூடுலில் சேர்க்க மாட்டாங்க, முடியாது!

பின் குறிப்பு: எனக்கு நேரமில்லைனால இது ஒரு அவசரமாக அரைகுறையாக எழுதிய பதிவு. கருத்துப் பிழை இருக்காது. ஆனால் எழுத்துப் பிழை நிறையவே இருக்கும். முடிந்தால் மன்னிக்க! முடியலைனாலும் மன்னிக்க! :)))

Monday, June 1, 2015

ர-ஞ்-சி-த்-னி கூட்டணி முடிவானது!

பதிவர் செந்தழல் சேது பயந்தது போலவே இயக்குனர் ரஞ்சித் தான் அடுத்த ரசினி படத்தை இயக்குகிறார்னு அதிகாரப் பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். பாவம் அவர் இப்போவே ரஞ்சித்தை நெனச்சு கவலைப் பட்டு கண்ணீர் விட ஆரம்பிச்சுட்டாரு! இந்தப் பதிவை வாசிக்கும் ரஞ்சித் செந்தழல் சேதுவை மனதில் கொண்டு படம் இயக்கவும்!

Embedded image permalink
ரஞ்சித்னினு இதுக்கு பேரு வச்சாச்சு!இப்போலாம் தமிழ் படம் பார்க்கிறேன்னு நான் 2-3 வருடத்துக்கு ஒரு தரதான் ஒரு 20 டாலர் செலவழிப்பது. நெஜம்மாத்தாங்க சொல்றேன்! ரஜினி படங்கள் மட்டும்தான் தியேட்டர்ல போயி பார்க்கிறது. எல்லாரும் 20 டாலர் டிக்கட்னு வச்சு கொள்ளையடிக்கிறானுகனு படம் பார்க்காமலே, செலவழிச்சமாதிரி திட்டும்போது, எனக்கு ரெண்டு வருடத்துக்கு ஒரு தரத்தானே 20 டாலர்? தமிழ் சினிமாவுக்காக ரெண்டு வருடத்துக்கு ஒரு  20 டாலர் செலவழிச்சா அது என்ன அத்தனை பெரிய செலவா? னு தோனும். முறைக்காதீங்கப்பா! :)))

எதுக்குப் பிடிக்காத நடிகர்கள்  படத்தை மெனக்கெட்டுப் போயி, முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டு வந்து படம் நல்லாவேயில்லைனு சொல்லணும்? எதுக்கு அப்படி மாஞ்சுக்கிட்டு முதல் விமர்சனமே படம் மொக்கை னு எழுதணும்னு தெரியலை? நான் வேற மாதிரி ஒரு தனி வழியிலே போக ஆரம்பிச்சுட்டேன். அடுத்த 20 டாலர் செலவு இன்னும் ஒரு வருடத்தில் வந்திடும். இப்போவே டைம்மும் நிக்கலுமா குருவி சேர்க்கிற மாதிரி 20 டாலர் சேர்க்கணும்! :))

 ரஞ்சித்னு  சொன்னதும் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்ல அட்டக்கத்தி ரஞ்சித்துக்கு பதிலா ஒரு மலையாளப் பட இயக்குனர் படத்தை போட்டுட்டானுகப்பா  படுபாவிகள்!Image result for rajini ranjith movie
சத்தியமா இந்த ரஞ்சித் ரஜினி படத்தை இயக்கவில்லை!

Image result for rajini ranjith
இந்த மாதிரி ஒரு மொட்டை கெட் அப் ல ரஜினி நடிச்சா நல்லா எதார்த்தமாயிருக்கும்