Friday, March 28, 2014

பாவிகளே! ஏசு உங்கள் பாவத்தை கழுவுவார்!

காலையில் அவன் பொண்ணு வித்யா மல்லிகைப்பூ பறிக்கிறேன் என்று வெளியே போனவள், கேவிக் கேவி அழுதுகொண்டே வந்தாள். அந்தக் குளவிக் கூட்டிலிருந்து வந்த குளவியிடம் கொட்டு வாங்கிக்கொண்டு வந்து வலி தாங்க முடியவில்லனு ஏங்கி ஏங்கி அழுதாள். அவள் அழுகையை அவனால தாங்க முடியவில்லை! கொளவிக்கு என்ன தெரியும் இவள் சிறுமி, தனக்கு தீங்கெதுவும் செய்யப் போவதில்லை என்று?

பகலில் அந்தக் கொளவியிடம் வம்பு வைத்துக் கொள்ளாமல்,  இரவு ஆனபிறகு வீட்டுமுன் இருந்த இரண்டு சிறு துளைகளையும் சிமெண்ட் வைத்து அடைத்தான், ராமன்.  "இனிமேல் இந்த கொளவிச்சனியன் என் குழந்தையை கொட்டாது" என்கிற நிம்மதி அவனுக்கு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இப்படி அதன் கூட்டை அடைத்துவிட்டால்.. அந்த துளைகளுக்குள்ளே கொளவியின் குழந்தை குட்டிகள் எல்லாம் வெளியே வரமுடியாமல் குடும்பத்துடன் பசியில் வாடிச் சாகுமோ? என்ற மறு எண்ணம் ஒன்று அவன் உள் நெஞ்சில் அவனைக் கொட்டியது. அவனுக்கு வேறு வழி தெரியவில்லை! "நீ வேற எங்காவது போய் கூடு கட்டி வாழ்ந்துக்கோ!"னு சொன்னால் அதென்ன போகவா போகுது? ஆறறிவு உள்ள மனுஷனுக்கே கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் படித்துப் படித்துச் சொன்னாலும், கேட்காமல் முரண்டு பிடித்து செருப்படி வாங்கிக் கட்டிக்கிறான். பாவம் கொளவி, அதுக்கென்ன தெரியும்?

"வாழு! வாழ விடு!" என்றெல்லாம் மனிதர்களுக்குள் தத்துவம் பேசிக்கிறோம். ஆனால் விலங்குகளையும், பறவைகளையும், பூச்சிகளையும், துன்புறுத்தி, எமாற்றி, கொன்று, தின்றுதான் மனிதனால் வாழமுடிகிறது. தன் இனத்தைத் தவிர யாரை நிம்மதியாக வாழவிட்டான் மனிதன்? "வாழு! வாழவிடு!"னு எதற்கு தன்னைத்தானே ஏமாற்றிக்கணும்? மனிதனைவிட அடிமுட்டாள் எவனுமே இல்லை! என்னவோ கடவுள்ங்கிறவன் இவனுக்காகத்தான் இருக்கமாரி ஒரு எண்ணத்துடன் வாழ்ந்து, கடவுளைக் கட்டி அழுது சாகிறான்.

சிமெண்ட் வைத்து அடைத்துவிட்டு வீட்டின் உள் நுழையப் போகும்போது பக்கத்துவீட்டில் வாழும் ஜேம்ஸ், காரிலிருந்து இறங்கி  ராமனுக்கு  ஹாய் சொல்லிவிட்டு அவருடைய வீட்டிற்குள் அவர் கேர்ள் ஃப்ரண்டுடன் நுழைந்தார். அந்த அம்மாவுக்கு ஒரு 40 வயதுபோல் இருக்கலாம். ஜேம்ஸ்க்கு வயது அறுபத்து ரெண்டு. பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அவர் வயதை ஒத்த மனைவியை சமீபத்தில்தான் டைவோர்ஸ் செய்திருந்தார், ஜேம்ஸ். என்ன பிரச்சினையோ எவனுக்குத் தெரியும்? அவர் மாஜி மனைவி வேறு வீட்டில் வாழ்கிறார் இப்போது.  தன் புது கேர்ள் ஃப்ரண்டுடன் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார் ஜேம்ஸ். இதிலென்ன தப்பு? எனக்கு "காமம்" தேவைப்படுகிறது, அதற்கானதை நான் செய்வேன் என்ற வெள்ளைக்காரர்களின் வெளிப்படையான தத்துவம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு! ஆனால் ஜேம்ஸ் வளர்க்கும் இரண்டு ஆண் நாய்களுக்கும் அவர் கவனமாக காயடித்து விட்டார்!  அவைகள் பருவ வயதையடையும் போதே! அதில்தான் நியாயம் எங்கே இருக்கிறது என்று விளங்கவில்லை, அவனுக்கு!

மதுரை டவுன்ஹால் ரோட்டிலிருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் ஒரு சில கிருஸ்தவ மத போதகர்கள், "பாவிகளே!" னு கூச்சல்போட்டு எல்லாரையும் கத்தும்போது ஹிந்துவான ராமனுக்கு எரிச்சல்தான் வந்திருக்கு. ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை அவனால் இன்று யோசிக்கும்போது உணர முடிந்தது.


இதுவும் ஒரு மீள்பதிவுதான்!

Thursday, March 27, 2014

ஆன்மீகம் என்பது மனநோயாளிக்கு தேவையானது!

நம்ம ஜோதிஜி அவர்கள் ஆன்மீகம் என்பதென்ன? னு ஒரு பதிவு போட்டு இருக்காரு. கடவுள்னா என்ன? அப்படினு நம்ம கேட்டோம்னு வச்சுக்கோங்க. நீ யாரு? பகவானைப் பத்தி நிந்திக்க? நாந்தான் கடவுளுக்கு சொந்தம். நாந்தான் டெய்லி அவரை பாடி ஆடி சந்தோஷ்ப்படுத்துறேன். நீ என்னடா அபிஷ்ட்டு பகவானைப் பத்தி பேசுறது?  நீதான் நாத்திகனாச்சே? நோக்கென்ன எங்க பகவான் மேலே அக்கறை? இப்படிப் பல பண்டாரங்கள் கால் காலுனு கத்துறதைப் பார்க்கலாம்.

பகுத்தறிவுனா என்னனு தெரியுமாடாப் பண்டாரம்?

எதையும் ஆராய்வது! கடவுளையும் உன்னைமாரி கபோதிகளையும்தான்!  நீ ஏன் இப்படிப் பண்டாரமா அலையிற??என்பதையும்தான். புரியுதாடா பண்டாரம்?

சரி ஆன்மீகத்துக்கு வருவோம். ஆன்மீகம்னா என்னனு ஆரம்பிச்சு அதில் சில பல கேள்விகளை எழுப்பி அவைகளுக்கு பதில் சொல்லச் சொல்லிட்டு அவரும் பதில் சொல்ல முயல்கிறார் நம்ம ஜோதிஜி. இவர் ஒரு சுமாரான ஆத்திகர்னு நெனைக்கிறேன். :)

கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்றது கஷ்டம். ஏன் கஷ்டம்? ஏன்னா நீங்க மரமண்டை பண்டாரங்களுக்கு பதில் சொல்றீங்க. 

பண்டாரங்களுக்கு யோசிக்கத் தெரியாது. பண்டாரங்களுக்குப் புரியலைனா, புரியலைனு சொல்லக்கூடத் தெரியாது. "உனக்கு புரியுறாப்பிலே சொல்லத்தெரியலை" னு சொல்லுங்க பண்டாரங்கள்!

பண்டாரத்துட்ட விவரிப்போம்..

இனிப்புனா என்ன?

அது "சுகர்" கலந்தது?

சுகர்னா?

அது ஒரு கார்போஹைட்ரேட்!

கார்போ ஹைட்ரேட்னா?

கார்பன் ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் கலந்ந்த ஒரு வேதிப்பொருள்.

என்ன வேதிப்பொருளா?

எல்லாமே வேதிப்பொருள்தான் முண்டம்!! நீயும்தான்! அதில் நெறையா ஹைட்ராக்ஸில் க்ரூப் இருக்கும் அதனால தண்ணீரில் எளிதில் கரையும்.

ஆக, ஒரு பண்டாரத்திடம் ஒரு சாதாரண  சர்க்கரையை இப்படி புரியாதமாரி  பதில் சொல்லீட்டே போகலாம். பண்டாரத்துக்கு அப்படி  இதெல்லாம் புரியும்?

கொஞ்சம் புரியிறாப்பிலே சொல்லுய்யா?

சரி இந்தா இதுதான் சுகர்! பார்த்து ரசி!
இப்போ புரிஞ்சிருச்சா?  பேசாமல் போவியா?

இப்போ ரொம்பவே புரியாது பண்டாரத்துக்கு..

ஆத்திகப் பண்டாரம்! நீ ரொம்ப மண்டாயிருக்க! இங்கே வா! இந்தா இருக்கு பாரு. திருப்பதி லட்டு,  இதை டேஸ்ட் பண்ணிப்பாருனு கொடுத்தால்..


பண்டாரத்துக்கு லட்டு


பண்டாரம் அதை திண்ணுபுட்டு

இப்போ புரியுது.அட  இதுதானா? னு சொல்லும.

இப்படி சில சாதாரண கேள்விகளுக்குக் கூட பதில் கடினமானதாக பண்டாரங்களுக்குப் புரியாத மாதிரி உண்மையான பதில் சொல்லலாம்.

ஆனால் நமக்கு சுகர் என்பது, இனிப்பு என்பது என்னனு எல்லாருக்கும் தெரியும்!  ஒவ்வொருவருடைய புரிதலும் வேற வேற லெவல் சரியா?

இப்போ ஆன்மீகம்னா என்ன?

இதையும் அப்படி எளிதாக விளக்கிச் சொல்லிவிட முடியாது. ஏன்? ஏன் என்றால் இது மனிதமனம் சம்மந்த்தப்பட்டது. மனிதமனம் விசித்திரமான ஒண்ணு. பண்டாரத்தின் மண்டையில் இருப்பது வேறமாரி வேலை செய்யும், பகுத்தறிபவன் மூளை/மனது வேறமாரி வேலை செய்யும். ஆன்மீகத்தை பண்டாரத்துக்கு இதுதான்னு லட்டுவைக் காட்டிவிட்டதுபோல காட்டிவிட முடியாது.

சரியா?

சரி பதில் சொல்லப் பார்ப்போம். ஆன்மீகம்னா பெருசா ஒண்ணுமில்லைங்க. இப்போ நம்ம வாழ்நாளில் முதல் நாளில் இருந்து கடைசிநாள் வரை (சாகிறவரைக்கும்) , செத்த பிறகு இவ்வுலகம்னு யோசிக்கும்போது. யோசிக்கும்போது? அதுக்கப்புறம் நமக்கப்புறம் என்ன ஆகும்  இவ்வுலகம்னு யோசிக்கும்போது..யோசிக்கும்போது?

அப்படி உக்காந்து யோசித்தால் இன்னைக்கு சின்னவிசயத்துகெல்லாம் அடிச்சுக்கிட்டு இருக்கிற நம்ம வாழ்க்கையில் வெறுமைதான் தெரியும்.

பகவானை வாழ்க்கையில் சேர்த்துட்டா "முழுமை" அடைந்துவிடும்னு சொல்றது பண்டாரங்களின் பச்சைப் பொய்! 

அப்புறம் ஏன் பகவானை விட்டுப்புட்டு ஆன்மீகக்கடலில் மூழ்கிறான் பண்டாரம்???

இப்போ மறுபடியும் யோசனிகளுக்குப் போவோம்..

பணக்காரன் பரதேசியாவது! தகுதியே இல்லாதவன் எல்லாம் மேன்மேலும் மேலே போறது! காமத்தில் ராஜானு நெனச்சவனுக்கு வயாகராவும் வேலை செய்யாமல் போயி நிக்கிற நிலைமை..

இதுபோல் நிகழ்வுகளை எல்லாம் நம்ம பார்த்து வாழ்க்கைனா என்னனு புரிந்துகொண்டு வாழ முயலவது.

இப்போ இதையெல்லாம் யோசிச்ச நம்ம பண்டாரம், ஆன்மீகப் பாதையில் காலெடுத்து வைப்பான்.. 

எப்போ??

ஒண்ணு கவனிங்க, இளம்வயதில் யாரும் ஆன்மீகதத்தை நாடுவதில்லை. குறைகள் இல்லாதாவர், வாழ்க்கையில் இன்னும் பெருந்தோல்வி அடையாதவர்கள் ஆன்மீகத்துக்கு போறதில்லை..ஏன்? அயோக்கியத்தனம் செய்ய செய்யத்தான் ஆன்மீகத் தேடல் அதிகமாகும். இவன் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யலை, எவனைப்பார்த்தும் வயிறு எரியலை, எல்லாரும் நல்லா வாழட்டும் நெனச்சால் இவனுக்கு எதுக்கு ஆன்மீகம் அல்லது பகவான்?

யாரு ஆன்மீகத்துக்குப் போறா? வாழ்க்கையில் தன்னுடைய "கண்ட்ரோலை" இழப்பவர்கள்.

என்ன? பகவான் பகவான்னு கோயிலுக்கு அலையலாம்- நெறையாப் பேரு குடும்பப் பிரச்சினையை சமாளிக்கமுடியாமல் இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிறது கோயில்தான்.

அப்புறம் எவ்ளோ நேரம்தான் கோயில்லபோயி பகவானை கட்டி அழறது? அதுவும் போரடிச்சு சுயதேடல், ஆன்மீகம்னு தியானம் அது இதுனு இறங்கிடுறது.

மறுபடியும் ஆன்மீகம்னா என்னனு சொல்லலையே..

இருடா பண்டாரம்!

ஆக ஆன்மீகமென்பது யாதெனில், உங்கள் மன வியாதிக்கு நீங்களே மருத்துவராகி, உங்கள் மூளையை நீங்களே ஒரு நிதானத்துக்குக் கொண்டு வருவது. அதை எப்படி செய்வது? சிந்திக்காமல் இருப்பது மூளைக்கு நல்லதுனு நெனைக்கிறேன். அதான் தியானம் பண்ணுனு ஆன்மீகவாதி யெல்லாம் சொல்லிக்கிட்டு அலையுதுகள். மூளையை சிந்திக்கவிடாமல் தவிர்ப்பது எல்லாம் உதவுது. ஆக ஆன்மீகம் என்பது உன் மனவியாதிக்கு நீயே ஒரு மருத்துவம் பெற்று க்கொள்வது- மூளையை சிந்திக்கவிடாமல் தடுத்து. புரியுதா?

கொஞ்சம் இரு! ஆன்மீகவாதியிலும் ஒரு ஸ்பெக்ட்ரம் (பலவகைகள்) இருக்குனு நெனைக்கிறேன். அதாவது ஆன்மீகம்னு சொல்லிட்டு அலையிற எல்லாப் பண்டாரமும் ஒண்ணு கெடையாது.  புத்தர்போல எல்லாம் எல்லாரும் ஆகமுடியாது. காந்திமாதிரி அரைகுறை ஆன்மீகவாதியாகி வாழ்ந்து சாகிறவந்தான் அதிகம்.

 அப்புறம்.. இதுபோல் ஆன்மீகம்னா என்ன?  கடவுள்னா என்ன?  கற்புனா என்னனு எல்லாம் யோசிக்க மூளை ஒழுங்கா வேலைசெய்தால் போதும். அதற்கு நீ ஒரு ஆத்திகப்பண்டாரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இப்போலாம் ஆத்திகப் பண்டாரங்கள்தான் ஆன்மீகம்னு வந்துட்டா முந்திரிக் கொட்டை மாரி எதையாவது நாத்திகனை திட்டிக்கிட்டு ஒளறிக்கிட்டு திரிகிதுகள்..பகவான் பேரைக் கெடுத்துக்கிட்டு..

இந்தப் பண்டாரங்கள் என்ன ஒளறுச்சுனு அதுகளுக்கே புரியாது. அதுக பகவானுகளுக்கும்தான்!

Tuesday, March 25, 2014

கம்யூனிஸ்ட்களுக்கு ஏன் இவ்ளோ பெரிய வாய்?!!

இந்த கம்யூனிட்டுகள் ஆதியிலேயே ஜெயலலிதாவுடன் கூட்டு என்பதே இல்லைனு இவர்கள் நெஞ்சைதூக்கிக் கொண்டு பாராளுமன்றதேர்தலில் நின்று இருந்தால் இவர்களை பாராட்டி இருக்கலாம். அந்தம்மாட்டப்போயி நின்னு அது  தூக்கி எறிந்த பிறகு வந்து பெருசா வீரம் பேசிக்கிட்டு திரிகிறார்கள்

ஜெயலலிதாவுக்கு நன்றி னு கீழே விழுந்து மூஞ்செல்லாம் மண்ணுடன் ஒரு தீராத பக்கங்கள் பதிவு! பயங்கரமான நகைச்சுவை பதிவு இது!!

அப்புறம் வெல்லூர் ராமன் ஒரு சிவப்புக்கொடி வீரர் இருக்காரு. ஆத்தா தூக்கி எறிந்தவுடன் ரொம்பத்தான் துள்ளித் துள்ளி பதிவழுதி கிழி கிழினு கிழிக்கிறாரு.

அட அட அடா! எந்தவிதமான மான ஈனமில்லாமல் இஷ்டத்துக்கு அரசியல் பேசுவதற்கு பதிவுலகிலே மஹா மட்டமான அரசியல் வாதிகள் இருக்காங்கப்பா!

Monday, March 24, 2014

கமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது!

தமிழ் சினிமானு வந்துட்டா, கமல்தான் முதன்மையானவர்னு பெரிய பெரிய மேதாவி எல்லாம் ரிசேர்ச் பண்ணி சொல்லி இருக்காங்க. பார்ப்பான் பார்ப்பான்னு எதுக்கெடுத்தாலும் ப்ராமின்ஸை திட்டுறவன்கூட கமலஹாசன்னு வந்துட்டா அவரை நாத்திகவாதியாக்கி கமலஹாசனை ரசிக்கவோ, புகழ்பாடவோ தயங்குவதில்லை. இவர் நடித்த தசாவாதாரத்தில் இந்து மதவெறியர்களை உருவாக்கி, முகுந்தா முகுந்தானு அய்யங்காராத்து புராணம் பாடி, பார்ப்பன விமர்சகர்களை எல்லாம் சந்தோஷத்தில் இவர் ஆழ்த்தினாலும் சரி, உன்னைப்போல் ஒருவனில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரித்தாலும் சரி, "அதெல்லாம் அவருடைய மனயெண்ணங்கள் அல்ல! இதெல்லாம் சும்மா அவருடைய க்ரியேஸன்ஸ்!" என்பதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளனும்னு சொல்லி அவரைக் காப்பாத்தி, அப்பப்போ கமல் புகழ் பாடாமல் சில திராவிடக்கண்மணிகள் பிழைப்பு ஓடாது!

சரி, ஏன்யா பாப்பானை நீயும் துதி பாடுற, மதிக்கிற? னு  வீம்புக்குக் கேட்டால்,
 
உடனே கமலஹாசன் பிறப்பால்தான் பிராமணன். இப்போ அவர் திராவிடரா மாறிட்டாரு, அவரு ஒரு சுத்தமான தமிழர், மேலும் நாத்திகவாதி, தேசியவாதி, சினிமாவுக்காக தன்னையே அர்ப்பனம் செய்த தியாகி, நவீன பாரதி என்கிற பல முத்திரைகளுடன் இருப்பவர் என்று பிதற்றலுக்க்கு மேலே பிதற்றல்கள் இவர்களிடம் இருந்து வரும். அதுக்கப்புறம் அவரு உடல் தானம் செய்து விட்டார் இல்லையா? அதனால ஒரு நல்ல "ரோலு மாடலு"னு சொல்வாங்க.

மொத்தத்திலே இவர்களால் கமலஹாசனை பிராமணராகப் பார்க்க முடியாததற்கு காரணம் என்னனு யோசிச்சுப் பார்த்தால் நெறைய விசயம் புரிந்த மாதிரியும் இருக்கும் புரியாத மாதிரியும் இருக்கும். அதனால எந்த ஒரு சந்தர்ப்பவாதியும் தன் சுயநலத்திற்காக (திராவிட பொண நக்கி நாய்களும்தான்) கமலஹாசனை சாண்ஸ் கெடைக்கும்போது புகழ்றதுதான் புத்திசாலித்தனம்னு நம்பி அதை செய்வதை நீங்க பார்க்கலாம்.

உங்களுக்கு கமல் நடிப்பு, வாழக்கை முறை எதுவுமே பிடிக்காதா? 

என்ன ஆளு நீங்க? ரசனை இல்லாதவரா நல்லதை பாராட்டத் தெரியாதவரா இருக்கீங்களே!

அடுத்து தமிழ் எழுத்தாளர்கள்னு வந்துட்டா அமரர் சுஜாதாவைப் போல எழுத்தாளர் உலகிலேயே இல்லைனு இப்போ எல்லா நவீன எழுத்து மேதைகள் சொல்றாங்க! இலக்கிய ஞானிகள் என்றும் போஸ்ட்-மாடர்ன் எழுத்தாளர் என்றும் தன்னைத்தானே பீத்திக்கொள்ளும் இளம் அமெச்சூர் எழுத்தாளர்கள் எல்லோருமே சுஜாதா விசிறினுதான் பெருமையாகச் சொல்லிக்கிறானுக.

இங்கேயும் ஏன்யா பார்ப்பான் துதி பாடுற அப்படினு சொன்னா, அதுக்கும் ஏதாவது பிதற்றல்கள் வரும்.

இப்போ ஒருத்தர் எனக்கு சுஜாதா எழுத்தும் பிடிக்காதுங்க, என்னங்க அவரு ஒரு மாதிரி சயண்ஸ் ஃபிக்சன், சஸ்பெண்ஸ், அப்புறம் ரத்தம் ஒரே நிறம்னு ஏதோ வரலாற்றுக்கதையும் எழுதினாருங்க அதெல்லாம் எனக்குப் பிடிக்கலை. சுஜாதா, மனித உணர்வுகளை அடிப்படையா வச்சு பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்து எழுதத் தெரியாதவர்ங்க. சும்மா பேரை மட்டும் சுஜாதானு வச்சுக்கிட்ட் எம் சி பி ங்க அவரு அப்புறம் காதல் என்கிற உணர்வை புரியாமலே வாழ்ந்து மறைந்து விட்ட ஒருத்தர்ங்கனு சொன்னால்? காதல்னு ஒண்ணே இல்லைனு சொல்லுவார்கள். அப்போ காதல் இல்லை, கடவுள் இருக்காரா? சுஜாதா ஆத்திகர் தானுங்களே? என்னவோ போங்கப்பா!
அதனால, சரித்திர நாவல்களில் தலை சிறந்தது இரத்தம் ஒரே நிறம்தான்னு சொல்லுங்க! சாண்டில்யன், கல்கி எல்லாம் என்னத்தை எழுதினாங்க?
 

சமூக நாவலுக்கும் அவர்தாங்கனு சொல்லுங்க! ஜானகிராமனா? அகிலனா? ஜெயகாந்தனா? பாலகுமாரனா? யார் அவங்க எல்லாம்? சுஜாதா மட்டும்தான் எழுத்தாளர் னு சொல்லுங்க!

சுஜாதா எழுத்துப் பிடிக்காதா? ரசனை இல்லாத, இலக்கியம் தெரியாத முண்டம் நீங்க!


என்ன எழவத்தான் நீ சொல்ல வர்றப்பானு எரிச்சலா இருக்கா?

ரசனைனு வந்துட்டா அது திராவிடன், ஆரியன், பார்ப்பான் என்பவைக்கு அப்பாற்ப்பட்டது என்பது அழிக்கமுடியாத உண்மை. எனக்குத் தெரிந்த ஒரு ஐயங்கார் ஆத்து நண்பருக்கு இவர்கள் இருவரையுமே சுத்தமாக ரசிக்க முடியாது. ஆனால் திராவிடப்பாரம்பரியம் பேசுபவர் பலர் கமலஹாசன், சுஜாதாவை புகழாமல் பொழைப்பு ஓட்டுவது கடினம். Never judge anybody based their taste! Neither do judge anybody's intelligence based on their taste!

இது ஒரு மீள் பதிவு!

Friday, March 21, 2014

கவிதாவின் தகாத உறவு!

கவிதாவுக்கு, அவளுக்கு மணமான பிறகு அவனிடம் இருந்த நட்பை எப்படி தொடர்வதென்று தெரியவில்லை. சிங்கிளாக இருந்தபோது மணமான அவனிடம் விளையாடுவாள், கேலி செய்வாள், ஏன் அதற்கு மேலுமே நடந்துகொள்வாள். அவனுடைய  மனைவி இந்த நாட்டிலேயே இல்லை என்பதால் இது ஒரு மாதிரியான உறவுதான் என்றும் ஊர் உலகம் சொல்லும். இருவரும் நண்பர்கள், நல்ல நண்பர்கள் அவ்வளவுதான் என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொள்வாள் -ஆனால் அரை நம்பிக்கையுடன்தான். அவனுடன் படுக்கைக்கு போகவில்லை என்றால் சுத்தமான உறவா? என்கிற கேள்விக்கெல்லாம் அவள் பதில் சொல்வது கடினம். கசப்பான அப்பகுதியைப் பத்தி யோசித்ததில்லை அவள்.

கவிதாவுக்கு இன்று யோசிக்க வேண்டிய கட்டாயம். அவளுக்கு மணமாகிவிட்டது இப்போது. அவளுக்கு அன்பு செலுத்த, அவள் அன்பை முழுமையாக பரிமாறிக்கொள்ள ஒரு நம்பிக்கையான அழகான ஆண்மகன் கிடைத்துவிட்டான். இந்த ஒரு சூழலில் அவனிடம் அவள் முன்புபோல் விளையாடுவது தவறு என்று அவளுக்குத் தெளிவாக உணர முடிந்தது. இருந்தாலும் நன்கு பழகிவிட்ட  அவனை முழுமையாக அவளால் தவிர்க்க முடியவில்லை. அவனைத் தூக்கி எறியவும் முடியவில்லை. அது ஏனோ தன் கணவனைப் பத்தி அவனிடம் பேசவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. கணவனை உயர்வாகவும், அவன் நற்பண்புகளையும் அவனிடம் சொன்னால் அவனுக்கு "போர்" அடிக்கும் என்று உணர்ந்தாள்- அவன் அவளுடைய  நலம் விரும்பியாக இருந்தும்கூட. பலவிதமான குழப்பம் அவளுக்கு.

கடைசியில் ஒரு தெரப்பிஸ்ட்டை அணுகினாள். தெரப்பிஸ்ட் தெளிவாக சொல்லிவிட்டாள், நீ உன் நட்பை கழட்டிவிடுவதுதான் சரி என்று. அதெப்படி என்னால் முடியும்? இவ்வளவு நாள் அவன் மணவானவன் என்று தெரிந்தும் அவனிடம் அளவுக்கு மீறி நடந்துள்ளேன், இன்று என் கணவன் கிடைத்தவுடன் அவனை, அவன் நட்பை தூக்கி எறிவது என்று. தெரப்பிஸ்ட் தெளிவாக சொல்லிவிட்டாள் " யு மஸ்ட் ச்சூஸ் ஒன்" என்று. அவளுக்கு ஒரே குழப்பம் என்ன செய்வதென்று தெளிவாகத் தெரியவில்ல.

அன்று காலையில் ஆபிஸ் காண்டீனில் அவனைப் பார்த்தாள்.

"Hey, I am moving to Denver. Found a new job there. Will have to take up the job next week" என்றான் விடாமல் தொடர்ந்து.

"ரியல்லி?" என்றாள் வருத்தத்துடன். வாழ்த்தக்கூடத் தோணவில்லை அவளுக்கு.

"புது இடம். புதுமையான சேலஞ்ச்கள். I am excited! I need to make new friends and move on. Life goes on kavitha!" என்றான் செயற்கைப் புன்னகையுடன். He did not even say, he will miss her! He abruptly left pretending that he has an "appointment now"!

ஒருமுறை அவன் அவளிடம் யாரையோ அவனுடைய இன்னொரு நண்பன்  பற்றி சொல்லும்போது, "என்னிடம் இருந்து அவன் நாலு அடி ஒதுங்கணும்னு நினைத்தால் நான் அவனிடம் இருந்து  நூறு அடி தள்ளிப் போயிடுவேன், கவிதா.  வாழ்க்கையில் நம்ம யாருக்கும் தொந்தரவா இருக்கக்கூடாது. முடிந்தால் ஒருவருக்கு ஒருவர் உதவணும். அந்த உதவி தொந்தரவாக எதிர்முனையில் எடுக்கப்பட்டால், அது எனக்குப் புரிந்துவிட்டால்,  நான் ரொம்ப சிம்ப்பிள்,  சுத்தமாக ஒதுங்கிவிடுவேன். அதுதான் மனிதாபமுள்ள மனிதன் இன்னொரு மனிதனக்கு செய்யும் தன்னலமற்ற சிறு உதவி என்று நம்புபவன் நான்" என்று. அன்று அவன் சொன்னபோது அவளுக்கு அவன் என்ன சொல்றான், ஏதோ உளறுவதுபோல  இருக்கே என்றுதான் தோன்றியது. ஆனால் இன்று அதை நினைத்து அசைபோடும்போது அப்படித் தோணவில்லை.

அதன் பிறகு ஃபார்மலாக "செண்ட் ஆஃப்" கூட அவனுக்கு அவளால் கொடுக்க முடியவில்லை. அதற்கு சந்தர்ப்பம் வாய்க்க முடியாதபடி அவன் நடந்து கொண்டான். பல வருடங்களாகிவிட்டது இப்போது.  அவனிடம் இருந்து இ-மெயில் கெடையாது, ஃபோன் கால் கெடையாது. ஏன் அவன் உயிருடன் இருக்கானா என்றே கவிதாவுக்குத் தெரியாது.

Thursday, March 20, 2014

தமிழ்ல ஆஃபிஸ்! கார்திக், ராஜி மேலும் உன் தாலி!

என்னப்பா இது!! எனக்கு நெஜம்மாவே புரியலை. சீரியல்ல நடிக்க நடிகைகளுக்காப்பா பஞ்சம்? ஏன்ப்பா இப்படி உள்ள எழவு பத்தாதுனு ஒரே நடிகையையே பல சீரியல்களில் ஒரே நேரத்தில் போட்டுக் கொல்லுறாணுக?

மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா? உன்னை எவண்டா சீரியல் பார்க்கச் சொன்னான்? பார்த்துட்டு வந்து பதிவெழுதுறேன்னு எழவைக் கூட்டுற? (இது நீங்க எல்லாரும் கொடுக்கும் "அர்ச்சனை" ! )

அதான்ப்பா விஜய் டி வி சீரியல் ஆஃபிஸ்ல வர்ர ஆண்ட்டி  "ராஜி", தென்றல்னு இன்னொரு சன் டி வி சீரியல்ல வர்ர "துளசி"தான் இல்லையா? எனக்கு எவ்ளோ தமிழ் சீரியல் "நாலட்ஜ்"  இருக்கு பாருங்க!  ஏன் ஒரு சீரியல் முடிஞ்சதும் இன்னொண்ணுல கம்மிட் பண்ணினால் என்னவாம்? சன் டி வி ல அந்த சீரியல்ல பலகாலமா வருது,  இந்த "ஆண்ட்டி". இப்போ  விசைல வர்ர ஆஃபிஸ்லயும் "கீரோயினா" வருது.  சரி,  இந்த சீரியல் கொஞ்சம் ஐ டி ரிலேட்டெட்டா வேற மாதிரி கதையா இருக்கேனு பார்த்தால், கடந்த சில எபிசோட்கள்ல தாலி, அப்பா, அம்மா  செண்டிமெண்ட்னு  போட்டு கொல்லு கொல்லுனு கொல்லுறாணுகப்பா.

என்னதான் கார்திக்க்கு தாடியை வளர்த்து முதிர்ச்சியான இளைஞனாக்க இவனுக மெனக்கெட்டாலும், அந்தம்மா ராஜி ஒரு "ஆண்ட்டி" மாதிரியும் இவன் ஒரு "பங்க்" மாதிரியும்தான் இருக்கு.

இந்த ராஜி ஆண்ட்டிக்கு கார்திக் மேலே லவ்வாம்! ஆனால், முக்கியமான நேரத்தில் வீட்டை விட்டு வெளிய வரமாட்டேன்னு அடம் பிடிப்பாளாம்!  வீட்டிலேயே உக்காந்து ஒப்பாரி வைப்பாளாம்!


ஆண்ட்டிக்கும்  சின்னப் பையனுக்கும் கண்ணாலம்

உடனே இவரு நண்பர்கள் எல்லாம் "ஏஞ்சலை" அழைத்துவந்து இவதான் காதலினு பொய் மேலே பொய் சொல்லி மாலை மாத்தி தாலியை அறுக்க இல்லை இல்ல தாலியைக் கெட்டப் போகும்போது ராஜி வந்து நிப்பாளாம்!

சீரியல்னா, "ட்விஸ்ட்" எல்லாம் இருக்கத்தான் செய்யணும். அதுக்காக "ட்விஸ்ட்டு பண்ணுறேன்"னு எல்லாரையும் கேணப்பயளுகளா ஆக்கித்தான் ஆகணுமா என்ன?

அப்பா அம்மா செண்டிமெண்ட், அவனுக வைக்கிற ஒப்பாரி, கல்யாண செண்டிமெண்ட், காதல் செண்டிமெண்ட், இப்படி ட்ராமா மேலே ட்ராமாப் போட்டு கொல்லு கொல்லுனு கொல்றாணுக!

----------------------

புதுக்கவிதைனு ஒரு புதுசா ஒரு புது  எழவை ஆரம்பிச்சு இருக்காணுக. ஆமா விசய் டி வி ல!  இருவர் உள்ளம் அல்லது  மெளனராகம் போல கதையைக் கொண்டுபோகலாம்னு இருக்காணுகனு நெனைக்கிறேன்..

தாயுமானவன்னு வர்ர எழவு ல வர்ர ஒரு "கீரோயின்" அக்காவையேதான் இங்கேயும் காவியாவோ என்னவோ ஒரு  எழவுனு சொல்லிக் கொண்டு  வந்து "கீரோயினாக்கி " மறுபடியும் கொல்றாணுக!

என்னப்பா எந்த ஒரு கேரக்டரிலும் ஒரு "கண்சிஸ்டன்ஸி"யே இருக்க மாட்டேன்கிது. நெனச்சா புதுசா ஒரு வில்லனை கொண்டு வந்து கொஞ்ச நாள் கொல்லுறாணுக. அப்புறம் அவனை அனுப்பி வச்சுட்டு "கீரோவை" வில்லனாக்கி, வில்லனை நல்லவனாக்கி மாத்தி மாத்திப் போட்டு அரைச்சு கொல்லுறாணுக. அப்புறம் இந்த "தாயுமானவனுக்கு" தினமும் ஒரு புதுப் புது மகளாத் தேடித் தேடிக் கொண்டு வர்ராணுக! அப்புறம் "தாயுமானவனு"வுக்கும் அந்த டாக்டருக்கும் லவ்வு மாதிரி ஏதோவாம்!

நீ பதிவெழுதுற நேரம் போக முழு நேரமும் சீரியல் பார்த்து க்கிட்டு இருந்துட்டு வெக்கமே இல்லாமல் எல்லாரையும் திட்டிக்கிட்டு திரிகிற! கேவலமா இல்லை? அந்த சீரியல் எடுக்கிறவன் எவ்வளவோ பரவாயில்லை, உனக்கு! மூடுடா வருண்! (இது நீங்க எல்லாரும்தான்! :) )

Wednesday, March 19, 2014

அமெரிக்காவில் பகவத்கீதை மேல் சத்ய பிரமாணம்!

கடவுள் ஒருவரே என்று நம்பும் இந்துக் கண்மணிகளின் பார்வைக்கு. முதல் அமெரிக்க காங்கிரஸ் பெண்மணி தன் சத்ய பிரமாணத்தை பைபிளின் மேல் எடுக்காமல் தன் மத நூலான பகவத்கீதையில் எடுத்தார். இதை கிருத்தவர்கள் பெரும்பாண்மையாக வாழும் அமெரிக்கா அனுமதித்தது. இது ரொம்ப பழைய ஒரு செய்திதான். ஆனால் இதை இப்போ ஞாபகப்படுத்த ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது!

கடவுள் ஒருவரே, எல்லா மதத்தவரும் ஒரே கடவுளைத்தான் பார்க்க, பேச, பழக விரும்புகிறோம் என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு   தன் மதம்தான் உயர்வு என்கிற நினைப்பில் பல இந்து வெறியர்கள் வாழுகிறார்கள்.

இதில் மதவெறி என்றுமே குறையாத "அப்பாவி வேடமிடும்" பார்ப்பனர்கள் மற்றும் "உயர்சாதி என்று தன்னை முன்பே உயர்த்திக்கொண்டு" தன்னை தனித்துவமாக எண்ணும் பார்ப்பனர்களுடன் கைகோர்த்துக்  கொண்டு தன் திராவிட சகோதரர்களை ஏறி மிதித்து மேல் வந்த உயர்சாதி திராவிட துரோகிகள் எல்லாம் தன்னிடம் உள்ள  "இந்து மத வெறி"யை மறைத்து ஊரை ஏமாற்றிக்கொண்டு திரிகிதுகள்.

இந்தவகையில் கிருத்தவர்களும் இஸ்லாமியர்களும் எவ்வளவோ பரவாயில்லை. தன் மதம், தன் கடவுள்தான் தனக்கு முதன்மையானவர்கள் னு வெளிப்படையாக சொல்லி இந்த "யோக்கியர்களிடம்" கெட்ட பெயர் வாங்கிக்கொள்ளும் வெகுளிகள். இந்த இந்துக்கள் இருக்காங்களே, அடேங்கப்பா! இவனுக போடுற நாடகத்தைப் பார்த்து இவனுக கட்டி அழுகிற கடவுளே ஓடி ஒளிஞ்சுடுவாரு!

கடவுள் ஒருவனே, மதமெல்லாம் ஒரு பெரிய விடமே இல்லை என வாதிட்டு ஊரை ஏமாற்றும் இந்துக்களை நீங்கள் கவனமாகப் பார்க்கவேண்டும்.

* சரி, கடவுள் ஒருவனே,  மதம் ஒண்ணும் பெரிய விடயமில்லை என்று நீ சொன்னால் அதை நீ முழுமனதுடன் நம்பினால்.. ஒருவன் மதம் மாறுவது அல்லது ஒருவனை மதம் மாற்றுவது, அல்லது மாற்ற முயல்வது (அது சரியோ தவறோ என்பது வேறு விடயம்)  உன்னை  ஏன் பாதிக்கிது?

* மதம் மாறினாலும் அவன் இன்னும் கடவுள் பத்தனாகத்தானே? ஆத்திகனாகத்தானே இன்னொரு மதத்திலும் இருக்கிறான்?

* நீ ஏன்  சாதி என்னும் கூவம் கலந்து அதை பிரிக்கவே முடியாத இந்துமதத்தை  அவன் விருப்பத்துடன் துறப்பதை ப்பார்த்து, ஒருவன்  மதம் மாறுவதை பெரிது படுத்தி அவனை இழிவு படுத்த முறபடுகிறாய்?

* மதம் மாறினாலும் அவன் உன்னுடைய ஒரே கடவுளைத்தானே வழிபடுகிறான், முண்டம்? அது ஏன் உனக்குப் புரியமாட்டேன் என்கிறது?

இங்கே கவனி முண்டம்! ஒருவன் மதம் மாறுவது உன்னை பாதித்தால் உன்னைப் பற்றி நீ புரிந்துகொள்.

* நீ ஒரு மத வெறியன்!

 * கடவுள் எல்லாம் உனக்கு ரெண்டாவதுதான்!

* உன் மதம்தான் உனக்கு முதன்மையானது என்று நம்பும் விஷப் பார்ப்பனர் வகையைச் சேர்ந்தவன் நீ!

* உனக்கு உன் சாதி முக்கியம், உன் மதம்தான் முக்கியம், கடவுள் எல்லாம் உனக்கு அப்புறம்தான். இதைப்புரிந்துகொள்!

இதைப் புரிந்துகொள்ளாமல் ஊரை ஏய்த்துக்கொண்டு திரியாதே!

போயி உன் சாதியைக் கட்டி அழு!

உன் மதத்தை கட்டி அழு!

மதம் மாறுபவன், மாற்றப்படுபவனை விட்டுவிட்டு ஏதாவது ஹிந்து மஹாஜன சங்கக்கூட்டம் நடத்து!

உன்னை மாதிரி எத்தனை பேரை நாங்க பார்த்து இருக்கோம் தெரியுமா?
சும்மா "முட்டை"க் கதை சொல்லி சீன் போடாதே! 

நீ யாரு?  உனக்கு என்ன முக்கியம்? என்பதெல்லாம் உன்னைவிட எங்களுக்குத் தெரியும். புரியுதா?

போயி உன் கடவுளை ஏமாத்து! பகுத்தறியத் தெரிந்த எங்களுக்கு உன்னையும் தெரியும் உன் கடவுளையும் பிச்சுப் பிச்சுப் போட்டு ஆராயத் தெரியும்!

Tulsi Gabbard from Hawaii has created history by not only becoming the first Hindu ever to be sworn in as a member of the US House of Representatives, but also being the first ever US lawmaker to have taken oath of office on the sacred Bhagavad Gita. Tulsi, 31, was administered the oath of office by the John Boehner, Speaker of the House of Representatives. "I chose to take the oath of office with my personal copy of the Bhagavad-Gita because its teachings have inspired me to strive to be a servant-leader, dedicating my life in the service of others and to my country," Gabbard said after the swearing in ceremony yesterday. "My Gita has been a tremendous source of inner peace and strength through many tough challenges in life, including being in the midst of death and turmoil while serving our country in the Middle East," she said explaining the reasons for taking the oath of office on Gita. "I was raised in a multi-racial, multi-cultural, multi-faith family.
Democratic Congresswoman from Hawaii, Tulsi Gabbard, being administered the oath of office by the Speaker of the US House of Representatives John Boehner in Washington on Friday. Gabbard took the oath on a personal copy of her Bhagavad Gita. PTI Photo
பகவத்கீதை மேல் சத்யபிரமாணம்


My mother is Hindu; my father is a Catholic lector in his church who also practices mantra meditation. I began to grapple with questions of spirituality as a teenager," Gabbard said. "Over time, I came to believe that, at its essence, religion gives us a deeper purpose in life than just living for ourselves. Since I was a teenager, I have embraced this spiritual journey through the teachings of the Bhagavad-Gita. "..In so doing, have been blessed with the motivation and strength to dedicate my life in service others in a variety of ways," she said. Proud of her Hindu religion, she is not Indian or of Indian heritage. Her father Mike Gabbard, is currently Hawaii State Senator and mother Carol Porter Gabbard is an educator and business owner. At 21, she became the youngest person elected to the Hawaii Legislature. At 23, she was the state's first elected official to voluntarily resign to go to war. At 28, she was the first woman to be presented with an award by the Kuwait Army National Guard. Early during the Democratic National Convention, Gabbard spoke from stage along with Nancy Pelosi, the Democratic Party leader in the US House of Representatives. Currently, a Company Commander with the Hawaii Army National Guard, who has volunteered to serve on two deployments to the Middle East, Gabbard served as Hawaii's youngest state representative in 2002 and is the youngest woman in the USA to be elected into such a position. She was endorsed by the US President Barack Obama during the election campaign. Having never visited India so far, Tulsi says she is looking to make her first trip to India as an elected member of the House of Representatives. "As a Vaishnava, I especially look forward to visiting the holy sites of Vrindavan," she had told PTI in an earlier interview. Tulsi's spiritual lineage is the Brahma Madhva Gaudiya Sampradaya. She is a disciple of Jagad Guru Siddhaswarupananda Paramahamsa who is disciple of AC Bhaktivedanta Swami. Jagad Guru Siddhaswarupananda Paramahamsa is a co-founder of the World Vaishnava Association, an umbrella organization of over 30 India-based and world-wide missions adhering to and promoting Vaishnava teachings. Notably Hawaii is comprised of a majority of Christians with a significant number of Buddhists (10-15 per cent of the population). The number of Hindus living in Hawaii is relatively small, with only two Hindu temples in the entire state, the Iskcon Temple on Oahu and the Aadheenam Temple on Kauai. Her religion, Tulsi said was not an issue for the election, neither it has been a negative factor in her electoral campaign, she noted. Tulsi was born in 1981 in Leloaloa, American Samoa, the fourth of five children born to a Hindu mother and a Christian (Catholic) father. At the age of two, the family moved to Hawai'i, the 50th state of the US, also known as the "Aloha State"; which is also the birth place of the US President Barack Obama.

Monday, March 17, 2014

இந்துமதம் வளர்க்கும் புனிதமான பன்னிக்குட்டி!

தான் இந்துவாக இருந்து கொண்டு, தன் மதம்தான்  உயர்ந்தது, தாந்தான் உலகில் மிகப்பெரிய யோக்கியன் என்பதுபோலவும்,  கிருத்தவ மிஷனரிகள் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக தன் அனுபவத்தைச் சொல்லி,  கிருத்துவ மதத்தை இழிவுபடுத்தி பதிவெழுதிய ஒரு இந்துமதப் பன்னிக்குட்டி, ஏதோ மதப்பற்றெல்லாம் தனக்கில்லை என்பதுபோலவும். தனக்கு எம்மதமும் சம்மதம் என்பது போலவும், ஒரே கடவுள்தான், மதமாற்றம் என்பதெல்லாம் அவசியமில்லை என்றும் பிதற்றியது.

உடனே அன்னாருடைய  மதத்தையும் அன்னாரின் "கொலைகார மதகுருக்களையும்"  அவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தையும் விமர்சிக்க தவிர்ப்பதேன் என்று மற்றவர்கள் பின்னூட்டங்கள் வாயிலாக விமர்சிக்க வந்தவுடனே எதிர் விவாதம்  செய்ய வக்கில்லாமல்..

இது என் தளம், நான் யாரை வேணா "பன்னி" என்று விளித்துவிட்டு என் விவாதத்தை முடிப்பேன் என்று விவாதத்தை கீழ்வருமாறு முடித்திருக்கிறது  இந்த  இந்து மதம் வளர்க்கும் புனிதமான பன்னிக்குட்டி!


நல்ல வாதம்.. ஒருத்தனை குறை சொன்னா இன்னொருத்தனை குறை சொல்வது சூப்பர் டெக்னிக்.. கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை என்று சொல்லும் போதே உங்கள் அறிவாளித்தனம் பளிச்சிடுகிறது.. வாழ்த்துக்கள்..

பெர்னாட் ஷா சொன்ன ஒன்று தான் ஞாபகம் வருகிறது, “Never wrestle with pigs. You both get dirty and the pig likes it.”.. இனி உங்களிடம் வீண் வம்பு பேச எனக்கு விருப்பமில்லை.. உங்கள் குப்பைகளையும், மரியாதைக்குறைவான வார்த்தைகளையும் கொட்டுவதென்றால் கொட்டுங்கள்.. என் பக்கம் பதில் லேது நைனா.. ஆல் தி பெஸ்ட்..

தன் தளம் என்பதால்  தன் வசதிபோல் மற்றவர்களை பன்றி என்று விளிக்கும் இந்து மத வெறியனுக்கு அவன் தளத்தில் பதில் சொல்ல முடியவில்லை! இல்லை சொல்லப்பட்ட பதில்கள் எதிர்விவாதம் செய்ய வக்கில்லாததால் அகற்றப்பட்டது!

அதனாலென்ன இப்போ?

நமக்குனு ஒரு தளமிருக்கு இல்லையா? இந்த மதவெறிபிடித்து யோக்கியன் வேடமிட்டும் அலையும் பன்றிகளையும் அவைகளின் கேவலமான மட்டுறுத்தலையும் விமர்சிக்க நம் தளத்தில் முடியாதா என்ன??!

Thursday, March 13, 2014

பழங்கள்! சாப்பிட்டவையும், சாப்பிடுபவைகளும்!

பழங்கள்! பழங்களில் நெறையா வைட்டமின்கள் உண்டுனு பொதுவாக பாமரர்களுக்கும் தெரியும். பழங்களின் சுவை எல்லோருக்கும் பிடிக்கும் இருந்தாலும் நம்ம ஊரில் எல்லாப் பழங்களையும் சாதாரண (என்னை மாதிரி) மிடில் க்ளாஸ் மக்கள் நினைத்த நேரம் வாங்கி சாப்பிட முடியாது! 

சாதம், கறிகாய்கள்,  பால், முட்டை,கீரைகள், பயறுகள் எல்லாம் ஓரளவுக்கு "affordable" னு சொல்லலாம். ஏழைகள் அவைகளில் இருந்து வைட்டமின்களை எடுத்துக்க வேண்டியதுதான்.

வைட்டமின்களுடன் பொட்டாஸியம் நிறைந்த வாழைப்பழம், வைட்டமின் சி நிறைந்த சாத்துகுட்டி (?), மாம்பழம் (சீசன் போது), கொய்யாப் பழம், தக்காளிப் பழம் (காயா?), நவாப் பழம், இழந்தைப் பழம், பலாப் பழம் போன்றவை நமக்கு மலிவாகக் கிடைக்கும்னு சொல்லலாம்.


https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQNBsWYHaMgNMp05GGu7D2lCtZHTpoj8uM2gSm4PUX7yLvqGeYs
கொய்யாப் பழம் பிடிக்காது. காய்தான் சுவை என்பது என் கருத்து

சுவையான மாம்பழம்னா அது நம்ம ஊர்லதான் கிடைக்கும்

 ஆப்பில் திராட்சை போன்றவை வேறு இடங்களில் இருந்து கொண்டு வருவதால் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

சப்போட்டா பழம், சீதா பழம், மாதுளம்பழம், போன்றவை ஓரளவுக்கு மலிவாகக் கிடைக்கும்னு சொல்லலாம்.

சீதாப் பழக்காய்http://www.icrisat.org/what-we-do/satrends/02aug/custard%20apples.jpg
சீதாப் பழம் (சாப்பிட்டு பலவருடங்களாச்சு)பப்பாளி, முந்திரிப் பழமெல்லாம் ஏனோ ஒரு மாதிரியான, எனக்கு  பழங்கள்னு சொல்லுவேன். சாப்பிட்டால் வம்புதான்,

நவாப் பழம் இங்கே கிடைப்பதில்லை! நல்ல நவாப் பழம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு!

நவாப் பழம்அப்புறம் இந்த கொடுக்காய்ப்புளினு ஒண்ணு சாப்பிடுவோமே அது பழமா?

கொடிக்காய்ப்புளி

 சாப்பிடும்போது ஏனோ தொண்டையெல்லாம் அடைக்கும்..ஏன்னு தெரியவில்லை! சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு! :(

சப்போட்டா, சீதா பழங்களை காய்களாக எங்கேயாவது "திருடிட்டு" வந்து பழுக்க வைத்தால் பழுக்காமல் ஏதோ ஒரு மாதிரியா காய்ந்து போயிடும். ஒவ்வொரு சமயம் வைக்களோட சேர்த்து வைத்தால் பழுக்கும். என்ன காரணம்னு அப்போத் தெரியாது.இப்போத்தான் இதெல்லாம் புரியுது!

பழங்கள் என்றால் நம்ம ஊரில் கிடைப்பவைகள் இவைகள்தான் எனக்கு ஞாபகம் வருது. இவைகளில் எனக்குப் பிடிக்காதவைகள் என்றால் பப்பாளி, முந்திரிப் பழம்.

நம்மூரில் இருக்கும்போது சாப்பிடாமல் இப்போ இங்கே விரும்பி சாப்பிடும் பழங்கள்னா. ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பீச்னு சொல்லலாம்.

Strawberries
CherriesPeach

Wednesday, March 12, 2014

நீயா நானா? இளம்பெண்கள் என்னமா லவ் பண்ணுறாங்க!

நம்ம ஊர் முன்னேறிவிட்டதா? இல்லையா பின்னே? அந்தக் காலம் போலில்லாமல் ஒரு பெண் தாய்மையடைலை, அல்லது அவருக்கு கர்ப்பப் பையில் அல்லது கர்ப்பம் அடைவதில் ஏதோ சிறு குறை என்பதால் குழந்தை பிறக்கலைனா டாக்டரிடம் போயி என்னனென்னவோ செய்து ஒரு பிள்ளையைப் பெத்து எடுத்துட்டு வந்துடுறாங்கப்பா! என் சொந்தத்திலேயே பலருக்கு இப்படி குழந்தை பிறந்து  கொண்டு இருக்கிறது.  அப்படியும் முடியலைனா யாராவது ஒரு வாடகைத் தாயை பணம் கொடுத்து வாங்கிட்டு வந்து குழந்தை பெத்துக்கிறாங்க.  என்னுடைய சித்தி, அம்மாவின் கஸின் (தங்கை) ஒருவருக்கு குழந்தை பிறக்கவே இல்லை. இன்று (55 வயதுக்கு மேலான பிறகு) குறையுள்ள பலருக்கும் "இந்த நவீன வழியில்" குழந்தை பிறப்பதைப் பார்த்து, "அப்போ, என் காலத்தில் இதுபோல் வைத்திய வசதியெல்லாம் இல்லாமல்ப் போய்விட்டதே"  என்று இப்போ வயதான காலத்தில் அழுதழுது கிடக்கிறார்.

பை பாஸ் சர்ஜரி, ஆஞ்சியோப்ளாஸ்ட்  சர்ஜெரி எல்லாம் சாதாரணமாப் பண்ணுறாங்க.

ஹெல்த் காண்சியஸ்னெஸ் வந்து வாக்கிங், ஜாகிங்னு கிராமங்களில்கூட ஆளாளுக்கு காலையில் எழுந்து குடும்ப சகிதமாக நடக்க ஆரம்பிச்சுட்டாணுக!

கிட்னி பழுதடைந்தால், யாராவது ஒரு ஏழையிடம் ஒரு விலை கொடுத்து கிட்னி வாங்கிட்டு வந்து பொழைச்சுக்கிறாங்க.

இதெல்லாம் நம்ம ஊரில் மெடிக்கல் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றங்கள்தானே?

சரி, தலைப்புக்கு வருவோம்..

எதார்த்தமாக நீயா நானா பார்த்தால் ..

பொண்ணுங்க, சிறுமிகள்  எல்லாம்  "லவ் லவ்"னு  காதல், தன் காதலன், அவர் கொடுக்கிற முத்தம்னு எல்லாவற்றையும் ஊரறியப் பேச வந்துட்டாங்கப்பா!

இதில் ரெண்டு க்ரூப்பா உக்காந்து இருந்தாங்க. மொதல்ல எனக்கு சரியாப் புரியலை, காதல் சரினு ஒத்துக்கொள்ளும் இந்த  இரண்டு குழுவும் எப்படிப்பா எதிர் எதிரணி என்று.

அப்புறம் நான் புரிந்துகொண்டது..

* காதலனுக்காக எதை வேணா விட்டுக் கொடுப்பேன், என்னை எப்படிவேணா மாத்டிக்குவேன்னு ஒரு அணி (உணர்ச்சி வசப்படும் காதலிகள் அணி போல)!

* காதலன்னா என்ன? என்னுடைய  தனித்துவத்தை, சுயமரியாதையை, தனி விருப்பங்களை, ("கணக்கு கணக்கா இருக்கணும்") எல்லாவற்றையும் எல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது னு கொஞ்சம் பகுத்தறிதலுடன் காதலிக்கும் பெண்கள் இன்னொரு பக்கம் போல!

அட அட அட என்னமா லவ் பண்ணுறாங்க! ஓரக்கண்ணில் பார்க்கிறதிலே இருந்து, கட்டிப் பிடிக்கிறது, முத்தம் கொடுப்பது எல்லாத்தையும் "பச்சை பச்சையா"ப் பப்ளிக்காப் பேசுறாங்கப்பா!!!

பொதுவாக காதல், இளம்பெண்கள் காதலில் விழுவது  என்பதெல்லாம் நம்ம சமுதாயத்தில் காலங்காலமா இருந்துகொண்டுதான் இருக்கிறது. பாட்டி பாட்டன் காலத்திலிருந்தே காதல், காதலிப்பது என்பது இருக்கத்தான் செய்யுது. அந்தக்காலத்துப் பாட்டிகள்கூட யாரையாவது காதலிச்சுத்தான் இருப்பாங்க! 99% காதல் கைகூடாமல் போயி, யாரையாவது படிச்சவர், பசையுள்ளவர், நம்ம சாதிக்காரர்னு  ஜாதகம் பார்த்து ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கொண்டு, பழசை மறந்து கற்பு வாழ்க்கை வாழ்ந்து இருப்பாங்க. ஆனால் அதைப் பத்தி ஊரெல்லாம் பார்க்கிறாப்பிலே, கேக்கிறாப்பிலே என்றுமே பேசமாட்டாங்க.

"மறைத்தல்"தான்  காதலுக்கு தனி அழகு என்று காலங்காலமாக நம்ம சமுதாயத்தில் நம்பப்பட்டது. ஒரு பெண் நிர்வாணமாக தன் அழகைக்காட்டி அலைவதைவிட, அவளுடைய வளைவு, சுழிவுகளை, கவர்ச்சியான உடலை மறைத்தால்தான் அதற்கு  "இன்னும் கவர்ச்சி" "மேலும் அழகு" என்று இன்றும் நம்புவதுபோல்,  காதலையும், காமத்தையும் அந்தரங்கமாகவோ, மனதுக்குள் புதைத்தோ, அல்லது நாலு சுவர்க்குள்ளே வைத்தோப் பேசுவதுதான் அழகு என்றுதான் நம்பினார்கள்.

அப்படி  மறைப்பதுதான், தம் காதலை, காதலனை தமக்குள்ளேயே வைத்திருப்பதுதான்  காதலுக்கும், காமத்திற்கும் அழகு என்று நம்பி இவைகளை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டாடிக் கொள்வார்கள், கொண்டார்கள். ஊரறிய இதைப் பத்தி ஒருபோதும் பேசமாட்டார்கள்!

ஆனால் இன்று?

அடேங்கப்பா!!!

Honestly, naked women never look attractive to me. So are the girls who come forward and talk about their personal matters like "love" and "lovers"  "sex" and "intimacy" to the world.

It was kind of ticklish to me! For some reason I did not like that at all. May be like-minded women, enjoyed such an episode?  I dont know!


Tuesday, March 11, 2014

மேதாவி வே மதிமாறன் ஒரு சீக்காளியா?!

ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஆகிப் போனது. ராணா படப்பிடிப்பு நின்றது. ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக மாற்றி கடைசியில் சிங்கப்பூரில் ஏதோ மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் நுரையீறல் போன்றவை பழுதுபட்டுவிட்டதுனு அதற்கு தேவையான ட்ரீட்மெண்ட் எடுத்து வந்து சேர்ந்தார் மனுஷன். உடல் நலக்குறைவால் பலவீனமாக இருப்பதால் முற்றுமாக ராணா நின்றுவிட்டது.

இப்போது தன் உடல்நிலை கருதி  கோச்சடையான் என்னும் கார்ட்டூன் படத்தை வெளியிடுகிறார்.

அதை எந்த நாயும் போயி யு ட்யூபில் மோப்பம்விடணும்னு எவனும் எதிர்பார்க்கவில்லை!

ஒருவன் நோய்வாய்ப்படுவது என்பது எல்லோருக்கும் நடப்பதுதான். நோய்வாய்பட்டு திரும்ப வந்தவனை "சீக்காளி"னு எழுதி பொழைப்பு நடத்துபவன் ஒரு ஈனத்தமிழன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை!

வே மதிமாறன்னு ஒரு பதிவர் எம் ஜி ஆர் பேரைச் சொல்லி  "தடி" அடி அது இதுனு தலைப்பு  வச்சு நாலு பதிவு போட்டு பதிவுலகில் சில பதிவுகளை சூடாக்கினார்.

  இப்போ புதுசா ரஜினியின் உடல்நலக் குறைவை கேவலமான முறையில் "சீக்காளி"னு அடை மொழி கொடுத்து அசிங்கமாக விளித்து ஈனப்பொழைப்பு நடத்துக்கிறார்.

தெரியாமல்த்தான் கேக்கிறேன்.. இவனுக ஆத்தா அப்பன் நோய்வாய்பட்டு இருந்து உயிருக்குப் போராடி திரும்பி வந்தால், சீக்காளி அப்பன், சீக்காளி ஆத்தானு சொல்லிப் பதிவு எழுதுவானுகளா?
 நோய்வாய்பட்டபோது ரஜினிக்காக அவர் ரசிகர்கள், தன் உயிரையும் உடலையும் தருகிற அளவிற்கு தயாராக இருந்தார்கள்.

ஆனால் இவரோ ஒரே ஒரு ‘குஸ்கா’ பொட்டலம் கொடுப்பதற்குக்கூட தயாராக இல்லை.

ரஜினி தன் ரசிகர்களுக்கு, ‘உடல் பொருள் ஆவி’ எல்லாம் தரத் தேவையில்லை.

ஆமா, கண்ட நாய்களும் ரஜினி தன் ரசிகர்களுக்கு என்ன செய்யணும்னு ஏன் குரைத்துக்கொண்டு திரிகினறன?? இது ரஜினிக்கும் அவர் ரசிகர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினை. நீங்க ஏண்டா இடையில் புகுத்து சும்மா ஒப்பாரி வைக்கிறீங்க?.


 அதனால், ரஜினியின் பாபா, நாட்டுக்கொரு நல்லவன் படங்களின் வசூலை ‘கோச்சடையான்’ முறியடிக்கும் என்று நினைத்தேன்.

 ரசிகர்களை ‘கூமுட்டை’ யாக நினைக்கும் இவர்களை, ரசிகர்கள் ‘நீங்க தாண்டா கூமுட்டை’ என்று நிச்சயம் தீர்ப்பளிப்பார்கள்.

அதான் படம் ஃப்ளாப் ஆகப்போதுனு சொல்லிட்ட  இல்ல முண்டம்? அப்புறம் ஏன் போட்டு பினாத்திக்கிட்டு இருக்க?


உண்மையில் யார் சீக்காளி? 

என் பார்வையில்.. எம் ஜி ஆர் சடலத்தையும் உடல்நலக்குறைவு இல்லாமல் இருந்த ரஜினியை வச்சும் பதிவுலகில் ஈனப் பொழைப்பு நடத்தும் வே மதிமாறன்தான் மரைகழண்டுபோன ஒரு மன நோயாளி! ஒரு சீக்காளி! இவன் ஊரில் உள்ளவனையெல்லாம் சீக்காளினு சொல்லிட்டுத் திரிகிறான்!!