Monday, March 4, 2013

அமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி !!

மகன் ஆக்ஸிடெண்ட்ல இருந்துட்டான்! மகனுக்கு  புற்று நோய்! மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான்! மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு! னு உலகறிய டி வியில் வந்து அழும் அம்மாமார்களை நம் தாயைப்போல் மதிக்கவும் அவங்களுக்காக கண்ணீர் விடவும் தோன்றுவது மனித இயல்பு. அவர்கள் பட்ட துயரம் நம் வாழ்க்கையிலும் ஒரு சின்ன தடுமாற்றத்தை சில நிமிடங்களோ, சில மணிநேரங்களோ, சில நாட்களோ ஏற்படுத்துவதுண்டு. நாமெல்லாம் நல்லவர்களோ இல்லை கெட்டவர்களோ ஆனால் இதயம் இல்லாதவர்கள் அல்ல!

ஆனால், "என் தேசம் என் மக்கள்" ல மகன்களை எவ்ளோவோ காசைச் செலவழிச்சு படிக்கவச்சு பெருமைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துவிட்டு பணம் பகட்டுனு   மகன் கிழிக்கிற கிழிப்பைப் பார்த்து ரசித்துக்கொண்டு, திமிருடனும், பெருமையுடன் வாழும் ஒரு தாய் வந்து, "என் மகன் அமெரிக்காவுக்கு பரதேசம் போயிட்டான், ரொம்ப மிஸ் பண்ணுறேன்" னு கோபிநாத்துடன் சேர்ந்து ஒப்பாரி வைப்பதை எல்லாம் சகிக்க முடியாது! கேவலமாயிருக்கு அதுபோல் ஒரு தாய்வந்து ஏதோ சினிமா நடிகைமாரி நீலிக்கண்ணீர் விட்டு அழுவது!

You and your son chose this ****ing life! Why are you coming in TV and crying about it as if someone forced you to do so, IDIOT?!

என் தேசம் என் மக்கள்னு இதுபோல் பணக்கார, பகட்டுடன் வாழும் அரைவேக்காடுகளை வைத்து பொழைப்பு நடத்தும் கோபிநாத், இனிமேல் மரியாதையாக அந்தம்மா வீட்டுக்குப்போயி சேர்ந்து ஒப்பாரி வைத்துவிட்டு, ஆறுதல் சொல்லிவிட்டு வருவது நல்லது!

TV ல வந்து இதுபோல் நீலிக்கண்ணீர்விடும் அம்மாக்களை ஒதுக்கிவிட்டு வேற ஏதாவது சமுதாயத்துக்கு தேவையான பிரச்சினைகளை இனிமேல் பேசலைனா, கோபிநாத்க்கு இனிமேல் பலவிதமான அர்ச்சனைகள் நடக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

27 comments:

பாண்டியன் said...

நீர் எதுக்கு எப்ப பார்த்தாலும் ஒப்பாரி வைக்கிறிர்.

வருண் said...

தம்பி!

இது ஒப்பாரி இல்லை! அர்ச்சனை!

SathyaPriyan said...

சமீபத்தில் அமெரிக்க வாழ்க்கை பற்றிய ஒரு குறும் படம் பார்த்தேன். இதை பற்றி கொஞ்சம் விவரமாகவே எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

இந்த ஆண்களும் ஆண்களை பெற்றவர்களும் தான் பெற்றோர்களை பிரிந்து இருக்க முடியவில்லை என்றும், பிள்ளைகளை பிரிந்து இருக்க முடியவில்லை என்றும் ஒப்பாரி வைக்கிறார்கள்.

காலம் காலமாக நமது பெண்கள் திருமணத்துக்கு பின்னர் பெற்றோர்களை பிரிந்து தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த பெண்களை பெற்றவர்களும் தங்கள் குழந்தைகளை பிரிந்து தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாரம் விளக்கமாக எழுத முடியுமா என்று பார்க்கிறேன்.

டிஸ்கி: அந்த நீயா நானா நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை.

வருண் said...

வாங்க சத்யப்பிரியன்!

அந்த ஷோ "என் தேசம் என் மக்கள்"னு நெனைக்கிறேன். அந்தம்மாவிடும் கண்னீர்கூட ஏதோ பெருமையடிப்பதுபோலதான் தோனுது.

சமுதாயத்தில் எவ்வளவோ பிரச்சினை இருக்கு. எனக்குத் தெரிய என் நண்பன் தாய்க்காக பெங்களூரில் வேலை எடுத்துக்கொண்டு போயிட்டான். சந்தோசமாத்தான் இருக்கான். அதுபோல் மகனை வாடானு கூப்பிட்டு வச்சுக்க வேண்டியதுதானே? எதுக்கு உலக்றிய ஒப்பாரி??

நண்பா said...

Hi Varun,

I felt almost the same thing. That particular Example, Gopi took on that topic and the way she explained doesn't make me anything to feel.
As you rightly said that's what they choose. Seems like they can always bring them back. She can go any time she wants?? Thats a very big thing for anybody having Son in US. Most of the US People has to save the whole year for even a single trip to india.:(
The way that mom explained is more like a showing off than sharing her pain.
Good Post

வருண் said...

Siva:

She was only showing off and bragging that how great they are! Must be a RICH IDIOT! If she has not learned about life even now, when is she going to learn? I don't blame her for being an idiot, this Vijay TV guys could have completely "edited" her BS! Cant they see she is ANNOYING the viewers?!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

விஜய் டிவி செண்டிமெண்ட் செட்அப் செய்வது வழக்கம்தான்.கோபிநாத் இப்போது அதில் கைதேர்ந்தவர் ஆகி விட்டார்.

பால கணேஷ் said...

ஹா.. ஹா... செம வருண்! அந்த அம்மாவின் மனசாட்சியிடம் கேளுங்கள்... அமெரிக்காவிலிருந்து மகன் அனுப்பிவரும் டாலர்கள் இனிக்கும். வசதி வாய்பபுகளை விட்டுத்தர மனம் சம்மதிக்காது. பின் எதற்கு இப்படி ஒரு சென்டிமென்ட் சீன்? இந்த கோபிநாத் மெல்ல மெல்ல நடிகை லட்சுமி மாதிரி ஆயிட்டிருக்காரோன்னு எனக்கு மைல்டா ஒரு டவுட்டு!

Unknown said...

அம்மாக்கள் தங்கள் குழைந்தைகள் ரொம்ப மோசம், ரொம்ப சேட்டை பண்ணுவதாக மற்ற ஆட்களிடம் குறைபட்டு கொள்வார்கள். இதில் இருக்கும் அரசியல் என்னவோ அதுதான் இதுவும்.

Unknown said...

சரியாக சொன்னீர்கள

NSK said...

மக்கள் சுயமா சிந்திப்பதற்கு கூட சோம்பல் படுகிறார்கள் போலும், அதனாலதான் தொலைகாட்சியினர் தங்கள் கருத்தை மக்கள் மீது எளிதாக திணிக்கிறார்கள்.

வெகு சிலரே உங்கள மாதிரி, அப்படியே எடுத்துக்காம ஆராய்ந்து சரி, தவறை பிரித்து பார்க்கிறார்கள், மற்றவர்கள் அந்த அம்மா அழும்போது கண்ணிர் விட்டிருப்பார்கள்.

வேண்டிய பதிவு, வாழ்த்துக்கள்

வருண் said...

***T.N.MURALIDHARAN said...

விஜய் டிவி செண்டிமெண்ட் செட்அப் செய்வது வழக்கம்தான்.கோபிநாத் இப்போது அதில் கைதேர்ந்தவர் ஆகி விட்டார்.***

என்னவோ போங்க!

குடியால் கெட்டவங்களைப் பத்தின எப்பிசோட் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு.

மகன அமெரிக்கா போயிட்டான் மிஸ் பண்ணுறேன் என்பதெல்லாம் ஒரு பிரச்சினையா?

வருண் said...

****பால கணேஷ் said...

ஹா.. ஹா... செம வருண்! அந்த அம்மாவின் மனசாட்சியிடம் கேளுங்கள்... அமெரிக்காவிலிருந்து மகன் அனுப்பிவரும் டாலர்கள் இனிக்கும். வசதி வாய்பபுகளை விட்டுத்தர மனம் சம்மதிக்காது. பின் எதற்கு இப்படி ஒரு சென்டிமென்ட் சீன்? இந்த கோபிநாத் மெல்ல மெல்ல நடிகை லட்சுமி மாதிரி ஆயிட்டிருக்காரோன்னு எனக்கு மைல்டா ஒரு டவுட்டு!***

அமெரிக்க வாழ்க்கை எல்லாம் அவ்ளோ எளிதான ஒன்று இல்லைங்க. பல ஆண்டுகள் இருந்து, பிரச்சினைகளை சந்தித்து வாழ்ந்து பார்த்தால் தெரியும் அமெரிக்க வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள்!

நடிகை லட்சுமி பத்தி எதுவும் தெரியாது!

வருண் said...

***kannaimambathey y said...

அம்மாக்கள் தங்கள் குழைந்தைகள் ரொம்ப மோசம், ரொம்ப சேட்டை பண்ணுவதாக மற்ற ஆட்களிடம் குறைபட்டு கொள்வார்கள். இதில் இருக்கும் அரசியல் என்னவோ அதுதான் இதுவும்.***

ஏதோ சர்காஸ்டிக்கா சொல்றீங்க. என்னனு புரியலை!

வருண் said...

***Gnanam Sekar said...

சரியாக சொன்னீர்கள **

வாங்க, ஞானம் சேகர்! :)

வருண் said...

*** NSK said...

மக்கள் சுயமா சிந்திப்பதற்கு கூட சோம்பல் படுகிறார்கள் போலும், அதனாலதான் தொலைகாட்சியினர் தங்கள் கருத்தை மக்கள் மீது எளிதாக திணிக்கிறார்கள்.

வெகு சிலரே உங்கள மாதிரி, அப்படியே எடுத்துக்காம ஆராய்ந்து சரி, தவறை பிரித்து பார்க்கிறார்கள், மற்றவர்கள் அந்த அம்மா அழும்போது கண்ணிர் விட்டிருப்பார்கள்.***

நானே இதே பதிவை, "அமெரிக்க மகன் - அம்மா பாசம்" பத்தி இந்தியால இருந்து எழுதினேன்னு வச்சுக்கோங்க..இவனுக்கு வயித்தெரிச்சல் அதுல எதுதுறான்னு சொல்லுவானுக.

இப்போ என்ன சொல்றானுகனு தெரியலை!:)))

உஷா அன்பரசு said...

எல்லா சேனல்லயும் எதாவது ஒப்பாரிதான்.. சொல்வதெல்லாம் நிஜம்னு வீட்டு மானத்தை உலகம் முழுக்க வாங்கறாங்க. அதெல்லாம் கேமிராவுக்காக சொல்லி கொடுத்து நடிக்கிற மாதிரிதான் இருக்கு. ரொம்ப மோசமாத்தான் ஐடியா பண்றாங்க...

துளசி கோபால் said...

ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும்போதும், 'பேசாம இங்கேயே வந்துருங்க'ன்னு உறவினர் சொல்லுவாங்க.

எல்லாம் ஒரு ஃபார்மாலிட்டிக்குன்னு நினைக்கிறேன்.

உண்மையா இங்கே வேலையை (இந்தவயசுலே)விட்டுட்டு ஊருக்குப்போயிட்டா அவுங்க நம்மை வச்சுக் காப்பாத்துவாங்களா?

சரி சரின்னு தலையாட்டிக்கிட்டே இருந்துருவோம். (இப்போ கழுத்து வலி!)

டாலர்கள்.... யாரு வேணாமுன்னுவாங்க:(

Good citizen said...

Well said Varun,,அந்த நிகழ்ச்சியை பார்த்த போது அவங்க மூஞ்சி மேலே ரெண்டு போடனும் போல இருந்தது(யார்ரா இது பழைய டாகல்டி மாதிரி தெரியுதுன்னு நீங்க கேட்கறது எனக்கு கேட்குது,why this come backன்னு கேட்டீங்கன்னா பதில் சுஜாதா சொன்னது தான், வாசிப்புங்கிறது அபின் மாதி அதை அவ்வளவு சீக்கிரத்தில் விட முடியாது)
பணத்திற்கும் பதிவிக்கும் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிவிட்டு,, வெக்கமே இல்லாமல் டீவி முன் ஒப்பாரி வைக்கும் இவர்கள் நிகழ்ச்சியில் இன்னொருவர் சொன்னது போல் எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்து மனநிறைவு அடையலாம்,,Very good judgement, Varun.Sorry for my Harsh reply for Sujatha's article,,இந்தியாவில எதையும் புடுங்க முடியலேன்னு தான் நான் பிரான்சுக்கு ஓடி வந்தேன்,, நாளை என் பிள்ளைகள் கண்டிப்பாக இதியாவுக்கு வந்து வாழமாட்டார்கள் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயமும் இல்லை,, ஆனால் என்க்கான வாழ்க்கை என் மனதில் இருக்கிறது ,, அதனால் இந்த போலி ஒப்பாரிகெல்லாம் வேலையில்லை

Anonymous said...

//You and your son chose this ****ing life! Why are you coming in TV and crying about it as if someone forced you to do so, IDIOT?!//

I liked this sentence. It's true.

வருண் said...

***உஷா அன்பரசு said...

எல்லா சேனல்லயும் எதாவது ஒப்பாரிதான்.. சொல்வதெல்லாம் நிஜம்னு வீட்டு மானத்தை உலகம் முழுக்க வாங்கறாங்க. அதெல்லாம் கேமிராவுக்காக சொல்லி கொடுத்து நடிக்கிற மாதிரிதான் இருக்கு. ரொம்ப மோசமாத்தான் ஐடியா பண்றாங்க...***

என்னவோ போங்க!

தன் பிரச்சினைக்கு தானே தன் கையில் தீர்வை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் ஒப்பாரி வைக்கிறாங்க!

வருண் said...

***துளசி கோபால் said...

ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும்போதும், 'பேசாம இங்கேயே வந்துருங்க'ன்னு உறவினர் சொல்லுவாங்க.

எல்லாம் ஒரு ஃபார்மாலிட்டிக்குன்னு நினைக்கிறேன்.

உண்மையா இங்கே வேலையை (இந்தவயசுலே)விட்டுட்டு ஊருக்குப்போயிட்டா அவுங்க நம்மை வச்சுக் காப்பாத்துவாங்களா?

சரி சரின்னு தலையாட்டிக்கிட்டே இருந்துருவோம். (இப்போ கழுத்து வலி!)

டாலர்கள்.... யாரு வேணாமுன்னுவாங்க:(***

இங்கேயும் அதே கதைதான், டீச்சர். ஏதோ அவங்க நம்ம மேலே உள்ள பிரியத்தை வெளிப்படுத்துறாங்க. :)

வருண் said...

***Good citizen said...

Well said Varun,,அந்த நிகழ்ச்சியை பார்த்த போது அவங்க மூஞ்சி மேலே ரெண்டு போடனும் போல இருந்தது(யார்ரா இது பழைய டாகல்டி மாதிரி தெரியுதுன்னு நீங்க கேட்கறது எனக்கு கேட்குது,why this come backன்னு கேட்டீங்கன்னா பதில் சுஜாதா சொன்னது தான், வாசிப்புங்கிறது அபின் மாதி அதை அவ்வளவு சீக்கிரத்தில் விட முடியாது)
பணத்திற்கும் பதிவிக்கும் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிவிட்டு,, வெக்கமே இல்லாமல் டீவி முன் ஒப்பாரி வைக்கும் இவர்கள் நிகழ்ச்சியில் இன்னொருவர் சொன்னது போல் எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்து மனநிறைவு அடையலாம்,,Very good judgement, Varun.Sorry for my Harsh reply for Sujatha's article,,இந்தியாவில எதையும் புடுங்க முடியலேன்னு தான் நான் பிரான்சுக்கு ஓடி வந்தேன்,, நாளை என் பிள்ளைகள் கண்டிப்பாக இதியாவுக்கு வந்து வாழமாட்டார்கள் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயமும் இல்லை,, ஆனால் என்க்கான வாழ்க்கை என் மனதில் இருக்கிறது ,, அதனால் இந்த போலி ஒப்பாரிகெல்லாம் வேலையில்லை***

வாங்க நல்ல குடிமகன்! உங்க கருத்துக்கு நன்றி. :)

வருண் said...

***Alien A said...

//You and your son chose this ****ing life! Why are you coming in TV and crying about it as if someone forced you to do so, IDIOT?!//

I liked this sentence. It's true.***

வாங்க, ஏலியன். உங்க கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. :)

Nanjil said...

நான் நினைத்தேன் நீர் எழுதிவிட்டீர் ... இவ்வாறு அடிக்கடி நினைப்பதுண்டு.

Paramasivam said...

I also felt that there is over.acting and stage managed. Gopinath used to present good programmes earlier. Of late it is not so.
N.Paramasivam

சேக்காளி said...

//அரைவேக்காடுகளை வைத்து பொழைப்பு நடத்தும் கோபிநாத்//
நம்ம சேக்காளி ஒருத்தரு நைட்டு பரோட்டா கடை நடத்திட்டு இருக்காரு.அவருகிட்ட "யாவாரமெல்லாம் எப்படி இருக்கு" னு கேட்டேன். அதுக்கு "Half Boil யாவாரம்அமோகமா நடக்குது" ன்னாரு.