மேலே உள்ளவர்தான் இயக்குனரும் |
*************************
நெட்ஃப்ளிக்ஸ் பார்க்க எல்லாம் நேரமில்லாததால் உக்காந்து பார்ப்பதில்லை. திடீர்னு என்னதான் படம் இருக்குனு பார்த்தால் சென்னை எக்ஸ்ப்ரெஸ் (ஹிந்தி) இருந்தது. பார்த்தேன். படம் ரொம்ப சுமார்தான். ஆனால் முழுப் படமும் உக்காந்து பார்க்க முடிந்தது. ரொம்ப எதிர்பார்த்துட்டேனா என்னனு தெரியலை.
சென்னை எக்ஸ்ப்ரெஸ் |
***************************
வேற என்ன இருக்குனு பார்த்தால் "ஆரஞ் இஸ் த நியு ப்ளாக்" னு ஒரு நெட் ஃபளிக்ஸ் ஒரிஜினல் சீரியலை க்ளிக் பண்ணிட்டேன். நல்லவேளை க்ளிக் பண்ணினேன். ஒவ்வொரு சீசனுக்கும் 13 எப்பிசோட் கொண்ட சீரியல் இது. தொடர்ந்து இரண்டு வாரமாக மூனு சீசன் (39 எபிசோட் களையும்) பார்த்து முடிச்சுட்டேன்.
நியூடிட்டி, லெஸ்பியன் செக்ஸ், வயலண்ஸ்னு எல்லாமே அதிகம்தான். இருந்தாலும் சலிப்புத்தட்டாமல் ரெண்டு சீசன் போனது. மூனாவது சீசன் சுமார்தான். இருந்தாலும் பார்த்து முடிச்சாச்சு.
இதை க்ரியேட் செய்தவர் ஒரு பெண். இது பெண்கள் ஜெயில் வாழக்கையைப் பற்றியது.
யாரு நடிச்சு இருக்கா?
Laura Prepon as Alex Vause! OMG she is the hottest! |
Loved her!! |
ஆக்சுவல் ஹீரோயின் Taylor Schilling ஓ கே ரகம்தான்!
டெய்லர் சில்லிங் as Piper Chapman |
உங்க ஊரில் நெட்ஃப்ளிக்ஸ் கிடைத்தால் நீங்க வயது வந்தவரானால் முடிந்தால் பார்த்து ரசிங்க!
எச்சரிக்கை!!!
அலெக்ஸ் வாஸ் அண்ட் பைப்பர் ச்சாப்மேன் |
இதில் கன்னா பின்னானு நியூடிட்டி, லெஸ்பியன் செக்ஸ் சீன்ஸ் இருக்கும்! அதெல்லாம் டிஸ்கஸ்டிங்கா இருக்கும்னா பார்க்காதீங்க!!
What do we learn?
அதாவது நீங்க என்னதான் "டீசண்ட்"டான ஆளாக இருந்தாலும், ஜெயில் போன்ற இடத்துக்குப் போனீங்கனா உங்க "டீசண்ஸி" எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உங்களிடம் இருந்து பறந்து போயிடும். அந்த சூழலில் "சர்வைவல்" க்காக நீங்க ரொம்பவே மாறிடுவீங்க என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
4 comments:
அமெரிக்க நாட்டில் உள்ள ஜெயிலுக்கு போவதற்கு பதில் நாம் தற்கொலை செய்து கொள்வது மேல் என்பது என் கருத்து காரணம் அங்கு சென்றால் நம்மை ஒரினச்சேர்க்கை ஆளராக மாற்றிவிடுவார்கள்.
அதுனாலேயே இங்கு தப்பு செய்ய மிகவும் பயப்பட வேண்டி இருக்கிறது... கார் ஒட்டும் போது கூட ஏதாவது தப்பு நடந்து ஆக்ஸிடண் ஆகி ஜெயிலுக்கு போய்விடுவோமோ என்று நினைத்து பயந்து போய் பாதுகாப்பாக ஒட்ட வேண்டி இருக்கிறது...
***Avargal Unmaigal said...
அமெரிக்க நாட்டில் உள்ள ஜெயிலுக்கு போவதற்கு பதில் நாம் தற்கொலை செய்து கொள்வது மேல் என்பது என் கருத்து காரணம் அங்கு சென்றால் நம்மை ஒரினச்சேர்க்கை ஆளராக மாற்றிவிடுவார்கள்.
அதுனாலேயே இங்கு தப்பு செய்ய மிகவும் பயப்பட வேண்டி இருக்கிறது... கார் ஒட்டும் போது கூட ஏதாவது தப்பு நடந்து ஆக்ஸிடண் ஆகி ஜெயிலுக்கு போய்விடுவோமோ என்று நினைத்து பயந்து போய் பாதுகாப்பாக ஒட்ட வேண்டி இருக்கிறது..***
நியாயமான பயம்தான்.
The Shawshank Redemption (1994) - IMDb படம் பார்த்து இருக்கீங்களா? முடிந்தால் பாருங்க.
We can only try not to get into trouble but things can go wrong and there are some probability that we may end up in jail and get raped by someone there. Let us be optimistic for now and careful of course! :)
கடுமையான சட்டங்கள் மட்டும் இருந்தால் போதாது, அவை செயல்படுத்தப்படவும் வேண்டும். அதனால் தான் மேலை நாடுகளில் குற்றங்கள் குறைவாக நடக்கின்றன. அமெரிக்காவில் சிறைக்கு சென்றால் யாரோ ஒருவரின் "மனைவியாக" காலம் தள்ள வேண்டிய நிலை தான் ஏற்படும். மதுரை தமிழன் அண்ணாச்சியின் கருத்துடன் உடன்படுகிறேன். பயம் இருப்பது நல்லது தான்.
எனக்கு சிறைச்சாலை படங்கள் ரொம்பப் பிடிக்கும். நீங்கள் இந்த சீரீஸ் பற்றி எழுதி இருந்ததால், பார்த்தேன். நன்றாக இருக்கிறது. முதல் இரண்டு நன்றாக இருந்தது. மூன்றாவது நன்றாக இல்லை.
இதைப் பார்த்து நண்பனிடம் கூறி அவன் ஒரு சீரிஸ் சொன்னான்.. அதைப் பார்த்து நான் "சீரியஸ்" ஆகுற நிலை ஆகிட்டேன்.. விரைவில் எழுதுகிறேன் :-)
BTW பரிந்துரைக்கு நன்றி.
Post a Comment