Sunday, February 14, 2016

ஹார்வேட் ஒலகநாயகனுக்கு ப்ரீடம் ஆப் ஸ்பீச் கேள்விகள்!!

நான் நாத்திகன்! எனக்கு ப்ரீடம் ஆப் ஸ்பீச் இல்லை! என்றெல்லாம் ஹார்வேட்ல போயி கூவும் ஒலகநாயகன் தெரிந்து கொள்ள வேண்டியவை. எந்த ஒரு சுதந்திரத்திற்கும் ஒரு வரையறை உண்டு. அந்த வரையறையை பகுத்தறிந்து சரி, தவறென்றெல்லாம் சொல்ல முடியாது.

 அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் வாழ்ந்த ஒருவர் தன் குழந்தைகளுக்கு அடால்ஃப் ஹிட்லர், ஆர்யன் நேசன் என்று பெயர் வைத்ததால் அவர் குழந்தகளை அவரிடமிருந்து பறித்துச் சென்றுவிட்டார்கள்.


Parents who named their children Adolf Hitler and Aryan Nation will not get them back, judge rules

 

A self-proclaimed Nazi dad and his wife cannot have back their four children, three of whom have Nazi-inspired names, a court has ruled.
Adolf Hitler Campbell, six, and his younger sisters Joycelynn Aryan Nation, five, and Honszlynn Hinler, four, were taken into custody in January 2009.
State officials also took another son, Hons Campbell, from his parents Heath and Deborah Campbell just hours after he was born in November.
இந்த ரெஸ்பான்ஸ்களையும் வாசிக்கவும்!!!

So let me get that right, you have to name your children government approved names and raise them only in a government approved way, or they get taken away? Last time I looked a family was free to do and teach what they like to their own offspring. After all no kids are taken away from fanatic religious types, which in my opinion is worse. If children are happy, fed and safe and they do not get abused or tortured, in my opinion you can teach them what you like, they are YOUR children not the authority's, even if others don't like it. That is the beauty of being free.


Liz, Devon, UK, 01/6/2012 12:19-------------------------------------------------------------------------------------------------------------- Unfortunately that is not the case, when you register their birth you are handing them over to the state, they just let you feed them, clothe them, send them to indoctrination classes (school) etc. Until such time as they decide you are not doing it how they want, then they come and take them away. Go look into what registering births actually is.

இப்போ உங்களுக்கு கேள்வி!!

இது சரியா? இல்லை, தவறா?

சரியென்றால் ஏன்?

தவறென்றால் ஏன்?

ராமசாமினு பெயர் வைத்தவன் எல்லாம் கடவுள் பக்தனாக வரவில்லை. கடவுள் எதிர்ப்புக் கொள்கை உள்ளவனாக தந்தை பெரியாராக தலை எடுத்துள்ளார். அப்படி இருக்கும்போது இதுபோல் பெயர் பெற்ற குழந்தைகள் கொடூரனாக வளருவார்கள்னு எதுவும் சொல்ல முடியாது. இதைப் பற்றி ஹார்வேட் பல்கலைகழகத்தில்  விமர்சித்து இருக்கலாமே? அப்படி செய்திருந்தால் உங்களையும் பிடிச்சு உள்ளே போட்டு விடுவார்கள்?னு பயமா?

எதையும் பகுத்தறிவேன் என்றும் பிதற்றும் தாங்களும் பகுத்தறியாமல் அன்றாட வாழ்வில்செய்யும் காரியங்கள் ஆயிரம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் பேச்சுச் சுதந்திரம் வேணும்னு நீங்க ஏன் போயி ஹார்வேட்ல  சொல்வதால் எதுவும் ஆகப் போவதில்லை. அமெரிக்காவில் நடந்த இதுபோல் நிகழ்வைப் பற்றியும் பேசி இருக்கலாமே?? உங்களுக்கு "கருத்துச் சுதந்திரம்" தேவையான இடத்தில் அதைப் பத்தி பேசி இன்னொரு பெரியாராக ஆக முயலுங்கள்!

 ****************************************

ட்விட்டரில் வலம் வரும் நீங்கள் உங்கள் ரசிகப் பொறுக்கிகள்,

 https://twitter.com/SandiyarKaran

https://twitter.com/mrpaluvets

சண்டியர் கரன் மற்றும் மிஸ்டர் பழுவேட்டரையர்னு  ட்வீட் ஹான்டில் வைத்துக்கொண்டு உங்க துதி பாடிக்கொண்டு, மற்றவர் முகத்தில் காறி உமிழ்ந்து கொண்டு திரியும் இந்த திராபைகளுக்கு கிடைத்துள்ள ப்ரீடம் ஆப் ஸ்பீச் பத்தியும் ஹார்வேட்ல விமர்சிக்க வேண்டியதுதானே?

*****************************************

என்ன சார் நீங்க? நீங்க எந்த நாட்டில் இருக்கீங்களோ, அந்த நாட்டில் உள்ள நிலவரப்படிதான் கருத்துச் சுதந்திரம் அமையும் னு ஒரு சின்ன விசயம்கூட உங்களுக்குப் புரியவில்லை.

தமிழ்நாட்டில் ஒருவர தன் குழந்தைக்கு "அடால்ஃப் ஹிட்லர்" அல்லது "ஆர்யன் நேசன்" என்கிற பெயர் வைத்தால் எவனும் அவன் குழந்தைகளை பறிக்கப் போவதில்லை! என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்!

ஏன் சார் சும்மா போட்டுக்கிட்டு..





 தொடர்புடைய பதிவுகள்

 பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் பற்றி தவறான பு...





Friday, February 5, 2016

செரீனாவாக தீபிகா படுகோன்! செய்திகள் வாசிப்பது வருண்-2

ஒண்ணு! 

புதுசா ஒரு வைரஸ்த் தொல்லை! இது கொசுக்கள் மூலம் பரவுதாம். கர்ப்பம் தரித்துள்ள  பெண்களை இந்த வைரஸைக் கொண்ட கொசுக்கள் கடித்தால், அவர்கள் வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தையைப் போய் இந்த வைரஸ் தாக்கி, பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்குமாம்!

  Zika virus னு சொல்றாங்க!

Image result for zika virus
வைரஸை நம் உடலில் செலுத்தும் கொசு!




Zika EM CDC 280116.tiff
zika virus



Image result for zika infected children
Zika வைரஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்!

கொசுக் கடிக்கும்போது அது நம்ம ரத்தத்தைத்தானே உறிஞ்சி எடுத்துக்குது ? எப்படி அது உடலில் உள்ள வைரஸ் நமக்கு வருது? புரியலையே?னு உங்களுக்கு சந்தேகம் எதுவும் இருக்கா?

என்ன சொல்றாங்கனா, கொசு கடிக்கும்போது நம் உடலில் உள்ள ரத்தத்தை உறிஞ்சி எடுக்குமுன்னே, அதனுடைய எச்சிலை கடிக்கும் இடத்தில் உள்ளே செலுத்துமாம். அப்போது அதன் மூலமாக நம் உடலில் அதன் எச்சிலில் உள்ள வைரஸும் உள்ளே போய்விடுமாம். அதன் பிறகுதான் ரத்தத்தை உறிஞ்சுமாம்! இப்படித்தான் நம் உடலில் கொசுக்கள் மூலம் வைரஸ் அல்லது வேறு நுன்னுயிரிகள் செலுத்தப்படுகிறதாம்.

இதில் என்ன வேடிக்கை என்றால் கொசுக்களுக்கு இந்த வைரஸை எப்படி தங்களை கொல்லாமல் தடுப்பதுனு தெரியும். அப்படினா?

ஃபேஜஸ் என்பார்கள்!

சரி, வைரஸ்களுக்கு உயிரில்லை என்பார்கள். உயிரில்லையா? அது ஏன் என்றால் வைரஸ்களால் மற்ற உயிரிகள் உடலில் நுழைந்து அவ்வுயிரிகளின் டி என் எ வில் தன் டி என் எ வை கோர்த்துவிட்டுத்தான் தான் இனவிருத்தி செய்ய முடியும். தானாக இனவிருத்தி செய்ய இயலாது இதனால் வைரஸ்களுக்கு உயிரில்லை என்பார்கள்.

 ஸோ, வைரஸ்கள் சில பாக்டீரியா மற்றும் விலங்குகள் பறவைகள் உடலில் சென்றுதான் "மல்ட்டிப்ளை" ஆகமுடியும். அப்படி பாக்டீரியா உடலில் சென்று இனவிருத்தி செய்யும் வைரஸ்களுக்கு பாக்டீரிய ஃபேஜஸ் என்பது பெயர்.

இந்த பாக்டீரியாக்கள் மனிதர்கள் விலங்குகளை விட "ஸ்மார்ட்". அதாவது  தன்னை அழிக்க வரும் இந்த வைரஸ்களை எப்படி அழிப்பதுனு அதற்கு தேவையான ஒரு "ஜெனட்டிக் கோட்" ரெடிமேட் ஆக பாக்ட்டீரியா வைத்திருக்கும். அந்த ஜெனட்டிக் கோட், இவ்வைரஸ்களை அழிக்கத் தேவையான எதிர்ப்பு சக்தி உருவாக்கி இவ்வைரஸ்களை அழிக்க முடியும்.

அதேபோல் இந்த "ஸீக்கோ" வைரஸையும் கொசுக்கள் எளிதாக அழித்துவிடும். ஆனால் கொசுக்களை அவைகளை கொல்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். அந்த நேரத்தில் வைரஸுடன் போராடிக்கொண்டிருக்கும் கொசு நம்மைக் கடித்தால், கொல்லப்படாத அந்த "ஸீக்கோ" வைரஸ் நம் உடலில் வந்துவிடும். வந்து கருவில் உள்ள குழந்தையை தாக்கி விடும்.

இன்னும் கொஞ்சம் குழப்பவா?

"CRISPR"னு ஒரு புது முறையில் இப்போ ஆராய்ச்சி ச்செய்து புது மாதிரியாக இவ்வைரஸ்களை, பாக்டீரியாக்களில் "ஜெனட்டிக் கோட்" டை கற்றுக்கொண்டு, அதை பயன்படுத்தி நாமும் பாக்டீரியாவைப் போலவே இவ்வைரஸ்களை அழிக்கலாம் என்று விஞஞானிகள் இப்போது ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இப்போதைக்கு அந்த ஆராய்ச்சி பாதியில்தான் இருக்கிறது.

CRISPR


அறிவியல் பத்தி பேச ஆரம்பித்தால் எங்கே முடிக்கிறது தெரியாமல் முழிக்க வேண்டிய சூழல் இது. இங்கேயே நிறுத்திக்கிறேன்.

இன்னொண்ணு ஒவ்வொரு முறையும் ஏதாவது படிக்க உக்காந்தால், எனக்கு தெரிந்ந்ததும் கைமண்ல ஒண்ணு ரெண்டு மண் அளவுதான்னு தோனுது! :( நல்லா நான் படிச்சு பாடையிலே போனேன் போங்க! :(


********************************
ரெண்டு!

"துக்ளக்! 

சோ ராமசாமி! 

இது துக்ளக்கிலிருந்து வெட்டி ஒட்டியது! 

சோ ராமசாமி சொல்லீட்டாரு! " னு

ஒரு ஆள் உளறிக்கிட்டே அலைகிறார்!

ஒரு சாமானியன் (நம்ம சாம் இல்லை): உங்க பெயர் என்னங்க? ஏன் எப்போப் பார்த்தாலும் துக்ளக், சோ ராமசாமி!  துக்ளக்" ல இப்படி எழுதியிருக்காரு, சோ ராம சாமி தூங்கினாரு, சோ ராமசாமி சிரிச்சாரு, சோ ராமசாமியை ஏன் எனக்குப் பிடிக்கும்னா.. னு எதையாவது இருபத்து நாலுமணி நேரமும்  புலம்பிக்கிட்டே அலையிறீங்க?

உளறுபவர்: அது வந்து என் பேரு காவி மைந்தன்! நான் ஒரு பக்காத் திராவிடன்! எனக்குப் பார்ப்பனர்களை வழிபடலைனா தூக்கம் வராது!

சாமானியன்: இதென்ன ஒரு மாதிரியான வியாதியா? ஆனால் பெயர்ப் பொருத்தம் பிரமாதம்!

 உளறுபவர்:

 துகளக் ல இப்படி ஒரு செய்தி! 

துக்ளக் படிங்கோ! 

சோ ராமசாமி உச்சாப் போனாரு!

*****************************

 மூனு!

பதிவுலகில் எனக்கு என்ன பெரிய குறைபாடுனா..அமெரிக்கன் ஃபுட் பால் பத்தி பேச மருந்துக்குக் கூட ஆளில்லை என்பது.

கடைசில அங்க சுத்தி இங்க சுத்தி ஒரு அமெரிக்கன் ஃபுட்பால் ரசிகக் குடும்பத்தையே சந்திச்சாச்சு!

அதான் நம்ம விவாசமும் அவரும் அவர் பொண்ணுங்களும் ஃபுட் பால் விரும்பிப் பார்ப்பார்களாம்.

விசுவுடைய ராசாத்திகள் இருவரும்  டாம் ப்ரேடி விசிறிகளாம்!

இனிமேல் நானும் டாம் ப்ரேடியையும். ச்சீட்ரியாட்ஸையும், பெல்லிச்சிக்கையும் மதிக்க ரசிக்கக் கத்துக்கணும்! :(

Anybody is willing to pick the winner of super bowl 50?!

Cam Newton vs Peyton manning super bowl 50




Image result for peyton manning vs cam newton
Cam Newton vs Peyton manning super bowl 50


**************************

 நாலு

அடுத்து  நம்ம தீபிகா ஹாலிவுட் படத்தில் நடிக்கிறாராம்! உங்களுக்கு எல்லாம் தெரியுமா என்னனு தெரியலை. எனக்குத் தெரியும்  தீபி எங்கேயே போகப்போதுனு! :)

https://pbs.twimg.com/media/Caa3HLsUAAAZ-ne.jpg

#XanderCageReturns







https://pbs.twimg.com/media/Caa3RM3UkAAdclW.jpg

#XanderCageReturns

Next bond-girl?!! :)))

  ******************************








ஐந்து!

எனக்கு பயமே கிடையாது! நம்ம  "ஒலகம்" சொல்லியிருக்காரு!நான் கேள்விப்பட்ட வரைக்கும் கமல் கேன்ஸர் அவேர்னஸ், எச் ஐ வி அவேர்னெஸ்னு நல்ல நல்ல விசயங்கள் எல்லாம் செய்கிறார். ஆனால் இவர் ஏன் இப்படி எதையாவது இப்படி ஆணித்தனமாகச் சொல்றார்னு தெரியலை. இவர் பேசுறதெல்லாம் பலருக்கும் கோபம் வரும்படிதான் இருக்கு! :(

விகடனில் இவர் கொடுத்த பேட்டியில் நியூ யார்க் தண்ணீர் பத்தியும், தனக்கு பயமே இல்லை னு எதையையோ சொல்லப்போக, பலரும் இவரை விமர்சிக்க கிளம்பிட்டாங்க!


 Proud IndoCanadian
Total BS. Please do a google of Flint, Michigan and you'll see what is happening due to lead based pipes there. The Governor of Michigan had declared a state of emergency. I live 6 hours away from Newyork and we drink "Kirkland" brand bottled water from Costco. Just because he is a star he cannot take us for an intellectual ride.

AR  
KH is doing good things, good. But he should try to be more humble, rather than acting humble. His ego is  still inflated at 60.

 Murali  60 வயது ஆனபின்னரும் வயதுக்கேற்ற பக்குவம் வந்த மாதிரி தெரியவில்லையே
***********************