Friday, June 24, 2016

வளர்ந்து தேயும் கவிதையில் வராத பின்னூட்டம்!

அரவிந்தசாமி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நல்லாத்தான் போயிட்டு இருக்கு. சமீபத்தில் ஒரு வாத்தியாரு ரசினி ர சி க ர்னு தன் தனிப்பட்ட ரசனையை சொல்லாதாவரைக்கும்! இன்னொரு ஹெட்மாஸ்ட்டர் அவரை தான் ஒரு ஒலகநாயகன் ரசிகர்னு சொல்லியிருந்தால் வளரும் கவிதையில் "நீ வெ ஒ கோ" சம்மந்தப்பட்ட இந்தப் பதிவே வந்து இருக்காது.அப்பா-மகள் போலனு வியாக்யாணம் கொடுக்க வேணாம்! எனக்குத் தெரிந்த தமிழ் கலாச்சாரத்தில் வயது வந்த மகளுக்கு தந்தைகூட முத்தம் கொடுப்பதில்லை!
அறிவு சம்மந்தப்பட்ட போட்டியில் இதுபோல் தன் அபிமான நடிகன் அசிங்கம் பண்ணினாலும் தப்பாவே தெரியாது!

ஆனால் ஒருத்தர் தன்னை ரஜனி விசிறினு சொல்லிட்டாபோதும்! அது கேவலம்! அவமானம்! வெக்கக்கேடு!

தெரியாமல்த்தான் கேக்கிறேன் மேலே உள்ள படத்துல நடக்கிற  அசிங்கத்தைவிட அந்தாளு என்ன பெரிய தப்புப் பண்ணீட்டான்??

இதையெல்லாம் விமர்சிக்க வக்கில்லை!!! இப்போ மட்டும் பெருசா அறிவு மண்ணாங்கட்டினு விமர்சனம் வேண்டிக் கெடக்கு??

-----------------------------------------

இன்னொரு வாத்தியாரு இன்னொரு அவருடைய அபிமான நடிகனுக்கு (திட்டுவதுபோல் கொஞ்சி) அவர் வலைதளத்தில் ஆராதனை  செய்கிறார். 

இதுல மட்டும் பெருமை!!!

 ****http://valarumkavithai.blogspot.com/2014/11/60.html****

ரொம்ப அவசியமான பதிவு பாருங்க!!! ஹா ஹா ஹா!


----------------------------------------------------
சினிமாக்காக இவரு செலவழிச்சு ஏழையாகிவிட்டாருனு வேற அப்பப்போ கொறை அழுகை அழுவார்கள்!!

Kamal Haasan Net Worth

    TheRichest
   
 • Richest Actors

Kamal Haasan Net Worth : $100 Million

-----------------------------------

இந்த மில்லியனருக்கு இதுபோல் ஆராதனை செய்கிற நேரத்தில் நாலு ஏழை மாணவர்களுக்கு ஏதாவது பாடம் சொல்லிக்கொடுக்கலாமே? ஒரு நடிகன், கமல் பெருமை மட்டும் என்ன பீத்த வேண்டியிருக்கு?

அதானே?  நமக்குனா ஒரு நியாயம் ஊரில் உள்ளவர்களுக்கு இன்னொரு நியாயம்! இதுதானே நம்ம  ஊரு பெரிய மனிதர்கள் பேசும் வியாக்யாணம்?

ஆக,  ஒன்னு, இந்த ரசினி விசிறிக்கு மட்டுமல்ல நடிகனை ஆராதனை செய்யும் எந்த வாத்தியார்க்ளுக்கும் கூறு கெடையாதுனு சொல்லலாம். 

இல்லைனா  வாத்தியார்களும் மனிதர்கள்தான். அவர்களும் இதுபோல் நடந்துக்காத்தான் செய்வாங்கனு ரெண்டு பேரையும் மன்னிக்கலாம். 

எது எப்படியானாலும் இருவரையும் ஒரே தராசில்தான் நிறுக்கணும்!

வாத்தியார் வேலை பார்ப்பது ஒருவர் தொழில்! பாடம் நடத்துவது சம்பளம் வாங்கத்தான். மாதாமாதம் சம்பளம் கொடுக்கலைனா மாணவர்களைப் பத்தி வாத்தியார்கள் கவலைப்படாமல் வேற வயித்துப் பொழைப்பைப் பார்ப்பார்கள்!

ஆனால் அப்பவும்கூட மில்லியனர் கமல் ஆராதனை மட்டும் தொடரும்!! அது ஒருவர் தனிப்பட்ட விசயம். ஆனால் அவர் ரசினி விசிறியாக இருந்தால் விமர்சிக்கிறது, தன்னைப் போல் கமல் விசிறியாக இருந்தால் பம்முறதெல்லாம் சரியல்ல! ரசனைனு வந்துவிட்டால் வாத்தியார்களும் சிறுபிள்ளைத்தனமாகவும் நடந்துக்குத்தான் செய்வாங்கனு 62 வயதான முதியவருக்கு  நம்ம பாடம் நடத்த வேண்டியிருக்கு!

உங்களை நீங்க முதலில் நடிகன் பெருமை பேசுவதை நிறுத்தி உங்களைத் திருத்திக்கோங்க. அது முடியாதா? மற்றவர்களையும் அவர்கள் விரும்பும் நடிகர்களை ஆராதிக்க விடுங்க.

சும்மா, அறிவு மண்ணாங்கட்டினு விளக்கம் எல்லாம் எதுக்கு?

---------------------------

பின் குறிப்பு: நான் நேரம் செலழிச்சு எழுதிய பின்னூட்டம் ஒண்ணு வளரும் கவிதையில் வெளியிடப்படவில்லை! அதெல்லாம் தப்பே இல்லை! நான் எழூதிய பின்னூட்டத்தின் சாரம் இங்கே பதிவாகா வந்து நிக்கிது.

நடிகன்னு வந்தூவிட்டால் எம் சி ஆரு, சிவாஜி, கமலு, ரசினி  எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என்பதை எப்போ புரிந்து கொள்ளப்போறாங்கனு தெரியலை! தன் அபிமான நடிகனுக்கு ஒரு மாதிரியும் தனக்குப்பிடிக்காத நடிகனுக்கு இன்னொரு  மாதிரியும் பேசுவதெல்லாம் பேச்சுச் சுதந்திரம் உள்ள உலகில் விமர்சிக்கப் படத்தான் செய்யும்!


6 comments:

'பரிவை' சே.குமார் said...

வளரும் கவிதையில் எழுதியிருப்பது பொதுவான கட்டுரை போல்தான் இருக்கிறது... தங்கள் பின்னூட்டத்தின் சாரமும் பொதுவாய்த்தான் இருக்கிறது... பின்னர் ஏன் போடப்படவில்லை என்று தெரியவில்லை...

எது எப்படியோ நடிகர்களின் பின்னால் அலைவதை நிறுத்தினால் நாம் வளரலாம்... இல்லையேல் அவர்கள் வளர்ந்து கொண்டே போக, நாம் கொடி பிடித்து பாலாபிஷேகம் பண்ணி வேல் போட்டு மொட்டை அடித்து.... வாழ்ந்து மறைய வேண்டியதுதான்....

G.M Balasubramaniam said...

நடிப்பு என்பது ஒரு தொழில். எல்லாத்தொழில் செய்பவனையும் நாம் ஆராதிக்கிறோமா என்ன. இன்னாரைப் போல் நாமில்லையே என்னும் ஆழ்மனத்தின் புற வெளிப்பாடே ஆராதனைகள் விருப்பப்படாத பின்னூட்டங்களைத் தவிர்க்கத்தானே மட்டறுத்தல் ?

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

ரஜினியை பற்றி எல்லாம் தெரிந்த இந்த கணித மேதைக்கு salt ல் இருக்கும் வேதி பொருள் என்ன என்று சொல்ல தெரியாமல் life line போனார்.

வருண் said...

**பரிவை சே.குமார் said...

வளரும் கவிதையில் எழுதியிருப்பது பொதுவான கட்டுரை போல்தான் இருக்கிறது... தங்கள் பின்னூட்டத்தின் சாரமும் பொதுவாய்த்தான் இருக்கிறது... பின்னர் ஏன் போடப்படவில்லை என்று தெரியவில்லை...

எது எப்படியோ நடிகர்களின் பின்னால் அலைவதை நிறுத்தினால் நாம் வளரலாம்... இல்லையேல் அவர்கள் வளர்ந்து கொண்டே போக, நாம் கொடி பிடித்து பாலாபிஷேகம் பண்ணி வேல் போட்டு மொட்டை அடித்து.... வாழ்ந்து மறைய வேண்டியதுதான்....***

வாங்க குமார். அவர் தளம் அது. பின்னூட்டத்தை வெளியிடாமல் இருப்பது அவர் இஷ்டம். என் நேரம் எனக்கு முக்கியம். நான் செலவழித்து எழுதிய என் கருத்தை இங்கே வெளியுட்டுள்ளேன். இதையெல்லாம் அவர் "மட்டுறுத்த" முடியாது பாருங்க. :)

வருண் said...

***விருப்பப்படாத பின்னூட்டங்களைத் தவிர்க்கத்தானே மட்டறுத்தல்? **

உண்மைதான் சார். நாம் விருப்பபட்ட நம் கருத்தை வெளியிடத்தானே நம் தளம் கூட? அதைத்தான் நானும் என் தளத்தில் செய்துள்ளேன். :)

வருண் said...

***Ponniyinselvan/karthikeyan said...

ரஜினியை பற்றி எல்லாம் தெரிந்த இந்த கணித மேதைக்கு salt ல் இருக்கும் வேதி பொருள் என்ன என்று சொல்ல தெரியாமல் life line போனார்.***

வாங்க கார்த்திக் அம்மா!

அப்படியா? கெமிஸ்ட்ரிக்கும் அவருக்கும் ரொம்ப தூரம் போலும். :)